IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
Post No. 10,776
Date uploaded in London – – 24 MARCH 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
குதிரை (Horse) என்று எல்லோராலும் அழைக்கப்படும் மிருகத்துக்கு சங்க காலத்திலும் பின்னரும் பரி (Mare) , புரவி, இவுளி (Equs) முதலிய தமிழ்ச் சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. சமீப காலத்தில் சேனம் , லகான் போன்ற சொற்களும் சேர்ந்துள்ளன. குதிரை (Turaga, Kurra) , தமிழ் நாட்டில் தோன்றிய பிராணி அல்ல. வெளிநாட்டிலிருந்து, குறிப்பாக கப்பல் மூலம், வந்திறங்கியதை சங்க இலக்கியப் பாடல்களும் பிற்கால திருவாசகமும் நமக்குக் காட்டுகின்றன. இந்தச் சொற்களில் சம்ஸ்க்ருதத்தின் பங்கு, தமிழின் பங்கு, பாரசீக மொழியின் பங்கு என்ன , எவ்வளவு என்று ஆராய்வோம் :–
நீரின் வந்த நிமிர்புரிப் புரவியும் – பட்டினப்பாலை, வரி 185
சேணம் – பாரசீக மொழி ZIN
லகான் – பாரசீக மொழி LAGAA M
சவுக்கு – பாரசீக மொழி CHAA BUK
சூடாமணி நிகண்டு குதிரைக்கு 30 சொற்களைத் தருகிறது
கோரம், பரி என்பன சில. பாரசீக மொழியில் குர்ர KURRA இருக்கிறது .
தெலுங்கு மொழியில் குர்ரமு என்று குதிரைக்குப் பெயர்.
துருக்கி, பாரசீக கோராசன் (Khorasan in Iran) பகுதி குதிரைகள் புகழ்பெற்றவை. ஆகையால் கோரசான் பகுதி குதிரைகள் குர்ரம் ஆனதாக சிலர் கருதுவர்.
பாரசீக மொழியில் ‘பரி’ என்பது பரஸ் F ARAS என்று உள்ளது.
பரி என்ற சொல் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய சங்க இலக்கியத்தில் இருக்கிறது.
அப்படியானால் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே ஈரான் /பாரசீக- தமிழ்நாடு தொடர்பு இருந்ததா ?
கப்பலில் குதிரை வந்த செய்திகள் பட்டினப்பாலை என்னும் சங்க நூலிலும் உளது. மாணிக்கவாசகர் கதைகளிலும் உளது. ஆகையால் 500 முதல் 1000 ஆண்டுவரை குதிரை வியாபாரம் நடந்திருக்கிறது.
ஆனால் மேர் MARE என்ற சொல் ஆங்கிலத்தில் உண்டு.
Etymology. The word mare, meaning “female horse”, took several forms before A.D. 900. In Old English the form was mīere, mere or mȳre, the feminine forms for mearh (horse). The Old German form of the word was Mähre.
உண்மையில் இது பரி என்ற தமிழ்ச் சொல்லின் மருவு ; அது பாரசீக மொழியிலும் உளது
ப = ம= வ மாற்றங்களை எல்லா மொழிகளிலும் காணலாம்.
மானம் = வானம்; முழி = விழி ; பூமி = புவி ; மிருக = விருக; மேளா = விழா ; மூல்ய / VALU E = விலை
ஆங்கிலமும் தமிழும் ஸம்ஸ்க்ருத்ச் சொல்லை ஒரே மாதிரியாக மாற்றும். ஒன்னு= one ஓன் ; எட்டு= eight எயிட் ; வால்யூ = விலை /மூல்ய ; இதே போல பரி = மரி mare ( faras in Persian) p/f= m
குர்ரம் என்பதற்கு கோராசன் (ஈரான்) பகுதியைக் காரணம் காட்ட வேண்டியதில்லை. குதிக்கும் மிருகம் குதிரை. பேச்சு வழக்கில் அது குர் ரை / குருதை ஆகும்
இன்னுமொரு விளக்கமும் பொருந்தும் ; மதுரை= மருதை ஆவது போல, குதிரை= குருதை ஆவதுபோல துரக = கதிர/ /கதிரை ஆக முடியும்.
குதிரை என்பது சம்ஸ்க்ருதத்தில் துரக என்று பொருள் ; துருக்கி நாட்டில் இப்படிப்பட்ட நல்ல குதிரைகள் கிடைத்ததால் அந்த நாட்டுக்கு துரக / குதிரை நாடு என்று பெயர். கி.மு 1400ல் சம்ஸ்க்ருத மொழி கொண்டு குதிரைகளை பயிற்றுவித்த கிக்குலியின் அஸ்வ சாஸ்திர நூல் நமக்குக் கிடைத்துள்ளது. (Kikkuli’s Horse Manual with Sanskrit instructions in Turkey)அதைத் தாண்டியுள்ள ஈரானில் அவஸ்தன் மொழியில் அஸ்வ என்பதை அஸ்ப என்றனர்.
உலகில் சோம ரசம், தீ வழிபாடு, வருண /மித்ர வழிபாடு கிமு 1000ல் எங்கும் இல்லை அப்படி இருந்தால் ஈரானில் ஜராதுஷ்டிரா மதம்/ ஜொராஸ்டர் மதம்/ பார்ஸீ மதம் ஒன்றில் மட்டுமே காணலாம். அதை பார்ஸீக்களே கி.மு 600ல்தான் வைக்கின்றனர்.
மாக்ஸ்முல்லர் கும்பலை மிதித்துத் துவைத்துப் புரட்டி அடிக்கும் கேள்விகள்:-
ஏ ன உலகில் அஸ்வமேத யாகம் இல்லை? 2000 ஆண்டுக்கு முன்னர் பாண்டியன் செய்ததாக காளிதாசன் ரகு வம்சத்தில் சொல்கிறானே! முது குடுமிப் பெருவழுதி நாணயம் குதிரை உருவத்துடன் கிடைத்துள்ளதே.
ஏன் சோழ மன்னர் போல ராஜ சூய யாகம் எங்கும் இல்லை?
ஏன் அம்பா, அம்பிகா அம்பாலிகா சுயம்வரம் , திரவுபதி சுயம்வரம் , தமயந்தி சுயம்வரம் , அஜன் இந்துமதி சுயம்வரம் வரம் போல ஐரோப்பாவில் இல்லை? ஏன் பெண்களுக்கு மனுவும் தொல் காப்பியரும் சொல்லுவது போல 8 வகைத் திருமணம் இல்லை ?
ஏன் ராஜ வம்ச பெண்களுக்கு மஹாபாரதம், ராமாயணம் போல சுதந்திரம் கொடுக்கவில்லை?
ஏன் தமிழ் ஸம்ஸ்க்ருத பெண் கவிஞர்கள் போல 60 கவிஞர்கள் இல்லை?
என் சோமரசம், ஈரான் தவற வேறு எங்கும் இல்லை?
100 இந்தோ ஐரோப்பிய சொற்களைக் காட்டிய வில்லியம் ஜோன்ஸ் 10,000 பொருத்தமில்லாத சொற்களை ஏன் காட்டவில்லை?
ரிக் வேதத்தில் உள்ளது போல ஸபா, கமிட்டி (சமிதி) ஏன் இல்லை?
ஹோமர் எழுதுவதற்கு முன்னால் இலக்கணம், சொற்பிறப்பியல், ஜோதிடம், யாப்பிலக்கணம் , உச்சகரிப்பு இயல் ஆகியன சம்ஸ்க்ருதத்தில் உள்ளதே . ஏன் ஐரோப்பியர்கள் கோமணத்துடன், அம்மணத்துடன் அதே காலத்தில் திரிந்தனர்?
மாக்ஸ்முல்லர் கும்பலும், கால்ட்வெல் கும்பலும் விடும் கப்ஸாக்களை சங்கத் தமிழ் சொற்களே வேட்டு வைத்து தகர்த்துவிடுகின்றன.
இதோ “பரி” வரும் இடங்கள் ; இது எப்படி பாரசீக மொழியில் FARS பர்ஸ் என்றும் ஐரோப்பிய மொழிகளில் MARE மரி என்றும் மாறின?
சங்க இலக்கியத்தில் அறுபதுக்கும் மேலான இடங்களில் பரி உளது
புறம் 141, 146, 368, 377, 378
பரிப் புரவி 10 இடங்களில் உள்ளது –புறம் 301
புரவி 70 இடங்களுக்கு மேல் உள்ளது — புறம் . 2, 16, 63, 178, 205, 240, 299, 301, 304, 352, 368, 369, 373
இது தவிர பாய்மா, கலி மா என்று வேறு பல சொற்களும் உள்ளன.
இவுளி என்ற சொல் எட்டு இடங்களில் வருகிறது .
புறம் 4, 197, 382
மாணிக்க வாசகரும் இந்தச் சொல்லைக் கையாளுகிறார்.
இது லத்தீன் மொழிச் சொல்லுக்கு நெருக்கமாக உள்ளது
லத்தீன் மொழியில் Eqwa எக்வோ என்பது குதிரை. இது இவுளியுடன் தொடரபுடைய சொல்.
ஆக அஸ்வ, வாஜ , ஹய , பரி , இவுளி , குர்ர , துரக என்ற சம்ஸ்க்ருத, தமிழ் சொற்களே ஏனைய மொழி சொற்களைத் தந்தது.
2000 ஆண்டுக்கு முன்னர் ஒரு கோடு போட்டு தமிழ் ஸம்ஸ்க்ருதச் சொற்களை மட்டும் எடுத்துக் கொண்டால் ஏனைய சொற்கள் நம்மிடமிருதே சென்றன என்பது விளங்கும்.
கிரேக்க மொழியில் குதிரைக்கு ஏன் ஹிப்போஸ் HIPPOS என்று கேட்டால் விளக்கமே இராது.
அஸ்/வ என்பது அவஸ்தனில் அஸ்/ப என்று மாறி கிரேக்கத்தில் ஹிப்பஸ் HIPPOS ஆனது.
ஹிப்போஸ் = அவ்வாஸ் = அஸ்வஸ்
எக்வோஸ் = இவுளி
மொக்கனி , கொள்ளு போன்ற சொற்களை ஆராய்ந்தால் இன்னும் பல விந்தைகள் வெளியாகலாம்.
–subham–
tags- பரி , இவுளி , குதிரை , கோரம் , குர்ரம் , அஸ்வ, வாஜ, பாரசீக மொழி,