உப்பு வேண்டுமா? வேண்டாமா? (Post No.11,050)- Part 1

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,050

Date uploaded in London – –    25 JUNE 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

‘உப்பில்லாப் பண்டம் குப்பையிலே’ , ‘உப்பிட்டவரை உள்ளளவும் நினை’ என்பன போல குறைந்தது உப்பு பற்றிய 30 பழமொழிகளை , பழமொழி புஸ்தகங்களில் காணலாம். இதைச் சொன்னவுடன்  உடலுக்கு உப்பு தேவையா, இல்லையா? என்ற கேள்வி எழும். உப்பு என்பதன் விஞ்ஞானப் பெயர் சோடியம் குளோரைட் (SODIUM CHLORIDE). அதாவது சோடியம், குளோரின் என்ற மூலகங்களால் (தனிமங்களால்) உண்டான கூட்டுப்பொருள் (COMPOUND).

இன்று சோடியம் என்ற தனிமம் குறித்து விரிவாகக் காண்போம்.

முதலில் சோடியம் குளோரைடு (உப்பு) பற்றி சுவையான செய்திகளைக் காண்போம்.உப்பு சாப்பிட்டால் உடலுக்கு கெடுதி என்று கருதி நியூயார்க் நகரிலுள்ள எந்த உணவு விடுதியிலும் சாப்பாடு  மேஜையில் (டைனிங் டேபிள் ) உணவு, மிளகுப் பொடி பாட்டில்களை வைக்கக்கூடாது என்று அந்த நகர மேயர் உத்தரவிட்ட செய்தியைப் படித்திருப்பீர்கள். இது பத்து ஆண்டுகளுக்கு முன்னர் வந்த செய்தி.

அமெரிக்காவிலுள்ள நியூயார்க் நகரில் 15 லட்சம் பேருக்கு உயர் ரத்த அழுத்த நோய் இருப்பதால் மேயர் ப்ளூம்பெர்க் (MAYOR BLOOMBERG)  இந்த உத்தரவைப் பிறப்பித்ததாகவும் சோடியம் குறைந்த உணவு உடலுக்கு நல்லது என்று அவர் சொன்னதாகவும் பத்திரிகைகள் எழுதின.ஆயினும் லண்டன் போன்ற நகரங்களில் உணவு விடுதிகளில் இன்றும் சாப்பாட்டு மேஜைகளில் உப்பு குப்பியும் மிளகுப்பொடி குப்பியும் (salt and Pepper Cellars) உள்ளன.

உணவில் உப்பு இருப்பது பற்றி எதிரும் புதிருமாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பரவிய கோவிட் வைரஸ் உலகையே தலைகீழாக மாற்றிவிட்டது உப்பு சாப்பிடாத நியூயார்க்கில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கோவிட் வைரஸ் தாக்கி இறந்தனர். இதற்கு அவர்களுடைய ரத்த அழுத்தம் (High Blood Pressure) காரணமா, போதை பொருள் உபயோகம் காரணமா அல்லது உப்பு குறைந்த உணவு காரணமா என்ற கேள்விகள் எழும். இனிமேல்தான் பல ஆராய்ச்சிக் கட்டுரைகள் வரும். வழக்கம்போல உப்புக்கு ஆதரவாகவும் எதிராகவும் பல கட்டுரைகளை எதிர்பார்க்கலாம்.

இதை விட சுவையான செய்தியைக் காண்போம். உலகில் அதிகமான வயதான மக்கள் (old people) வசிப்பது ஜப்பான் நாட்டில்தான். நீண்ட வாழ்க்கை  வாழும்(Longest Life span)  மக்கள் உடைய நாடும் ஜப்பான்தான். அவர்கள்தான் அதிகமாக உப்பு உபயோகிக்கின்றனர் . அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் கடந்த 20 ஆண்டுகளில் எடுத்த சர்வே முடிவுகளும் எதிரும் புதிருமாகவே உள்ளன. உப்பினால்  மரணம் குறையும் என்றும், உப்பினால் சாவுகள் அதிகரிக்கும் என்றும் அவை காட்டின.

அப்படியானால் என்னதான் முடிவு?

ஒவ்வொருவரின் உடல்வாகு, பிறந்தது முதல் அவர்கள் சாப்பிடும் பொருட்கள் , மற்றும் அப்போதுள்ள நோயின் வீரியம் ஆகிய எல்லா அம்சங்களையும் கருத்தில் கொண்டால் சரியான முடிவு கிடைக்கும்.

உதாரணமாக உங்களுக்கு ரத்த அழுத்த நோய் இருந்து, மருத்துவர்கள் அதற்கான ரத்த பரிசோதனை செய்து, உப்பைக் குறையுங்கள் என்று சொன்னால் அவர் சொல்லுவதைக் கேட்க வேண்டும். அவருடன் விதண்டாவாதத்தில் இறங்கக்கூடாது.

எங்கள் வீட்டிலும் ஒரு வாக்கு வாதம் நடந்தது. ஒரு முறை விருந்தினர்கள் வந்தபோது ‘சாப்பாட்டில் உப்பு’ என்பது பற்றி பேச்சு திரும்பியது. “ஆமாம், ஆமாம், காய்கறிகளிலேயே உப்பு இருக்கிறது. தனியாகச் சேர்க்க வேண்டியது இல்லை” என்று ஒருவர் வாதாட, சாப்பிட வந்த விருந்தினர் சொன்னார், “நீங்கள் ஒன்று ! என் தாத்தா கைப்பிடி உப்பை அள்ளி சாப்பாட்டில் போட்டுக் கொள்வார். இன்றுவரை ஒரு வியாதியும் இல்லை. மருந்தும் சாப்பிட்டுவதில்லை” என்றார் . (அவர் பூர்வ ஜென்மத்தில் ஜப்பானில் பிறந்தவர் போலும்!)

உலகம் முழுதும் இயற்கை ஆர்வலர்கள் குரல் எழுப்பி, (Ban on Whale Hunting) திமிங்கில வேட்டைக்குத் தடை அல்லது கட்டுபாடு விதித்தும் கூட இன்றும் ஆராய்ச்சிக்காக திமிங்கிலம் பிடிப்பதாகச் சொல்லி ஜப்பானியர்கள் திமிங்கிலத்தைப் பிடித்து சாப்பிட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். அந்த உப்புக் கண்ட கடல் உணவுதான் அவர்களுக்கு நீண்ட ஆயுளைக் கொடுக்கிறது போலும் !

xxx

நிற்க . சோடியம் குளோரைடை (உப்பை) ஒதுக்கிவிட்டு சோடியத்துக்கு வருவோம். நாம் கண்டறிந்த 118 மூலகங்களில் சோடியம் (Sodium) என்பது உடலுக்கு இன்றியமையாத ஒரு (element) தனிமம். முதலில் உயிரினங்கள் உப்பு நீர்க் கடலில் தோன்றின என்பதை நினைத்தால் இதன் பயன் எப்படிப்பட்டது என்பது புரியும்.. நமது உடலில் சுமார் 100 கிராம் சோடியம் உள்ளது. இதுவும் பொட்டாசியமும் ரத்த அழுத்தத்தையும் செல் களுக்கு இடையேயான அழுத்தத்தையும் (Blood Pressure and Osmotic pressure) கட்டுப்படுத்துகின்றன. நரம்புகள் வழியாக மின்சார துடிப்புகளை எடுத்துச் செல்கின்றன (movement of electrical impulses along nerve fibres) . இந்தப் பணியை சோடியமும் பொட்டாசியமும் செய்கின்றன. சோடியம் அணுக்கள் செல்களுக்குள் சென்றவுடன் வெளியே தள்ளப்படும் பின்னர் பொட்டாசியம் தன் வேலையைச் செய்யும். இதை சோடியம் பம்ப் (sodium Pump)  என்பர். நமது உடலில் உள்ள சக்தியில் 40 சதவிகிதம் இந்த சோடியம் பம்ப் வேலைக்குப் போய்விடுகிறது!

வேர்வை, சிறுநீர் முதலியன வழியாக நிறைய சோடியம் வெளியேறுவதால் நமக்கு உடலில் சோடியம் தேவைப்படுகிறது.  ஆனால் நிறைய உப்பு சாப்பிட்டால் வாந்தி முதலியன ஏற்படும்.

ஒருவர் வாழும் பண்பாடு, மற்றும் தனி நபரின் ருசியைப் பொறுத்து சோடியத்தின் தேவை 2 கிராம் முதல் 20 கிராம் வரை மாறுபடுகிறது. காய்கறி முதலிய இயற்கை உணவுகளில் இருந்து 3 கிராம் கிடைக்கிறது. அதற்கு மேல் நாமாக உணவில் போடும் உப்பு மூலமும் சோடியம் கிடைக்கிறது. சிலவகை கடல் வாழ் மீன்கள் (Tuna Sardines) , முட்டை, ஊறுகாய்  மூலம் அதிகம் கிடைக்கும். ஜப்பானியர்கள், கடல் வாழ் உயிரினங்களை அதிகம் சாப்பிடுவதால் அவைகளை பதப்படுத்த சேர்த்த உப்பும் சேர்ந்து மற்ற இன  மக்களை விட  இரு மடங்கு சோடியம் பெறுகிறார்கள் 

மனிதர்களுக்கு உப்பு ருசி தேவைப்படுவது போல காட்டில் வாழும் மிருகங்களுக்கும் கூட உப்பு ருசி தேவைப்படுகிறது. இதனால் அவை உப்புள்ள பாறைகளை நக்கி, இன்பம் பெறும். வனப் பாதுகாவலர்கள் பிராணிகளுக்கு உப்பு கலந்த மண்ணைப் போடுவதும் உண்டு

கடல் உப்பு போல நிலத்தில் இருந்தும் உப்பு கிடைக்கிறது

மருத்துவத்தில் சோடியம்

சோடியம் குறைந்தால் நரம்புப் பிடிப்பு, சதை பிடிப்பு ( cramps, muscular spasms) ஏற்படும். உடலில் சென்ற விஷம் முதலியவற்றை வெளியே (emetic) கக்க வைக்க உப்பு நீர் பயன்படுகிறது. ஆயினும் சிறுநீரக நோய்கள், இருதய நோய்கள் இருந்தால் சோடியம் உள்ள (குறிப்பாக உப்பு) உணவு வகைகளை சாப் பிடாதீர்கள் என்று டாக்டர் ஆலோசனை கூறுவார் .உப்பை வெளியேற்ற முடியாமல் உடல் திணறுகையில் ரத்த அழுத்தம் அதிகரிக்கும். இது பிற நோய்களுக்கு வழிவகுக்கும்.. அவரவர் நோயின் தன்மையைப் பொறுத்து டாக்டர் ஆலோசனை வழங்குவார் . இதில் 3 வகை உண்டு. (Low salt, No salt, Salt free) உப்பே கூடாது, இயற்கையில் காய்கறிகளில் உள்ள உப்பு மட்டும் போதும், அல்லது டேபிள் சால்ட் போன்றவற்றையோ உப்புள்ள பிஸ்கட் , வறுவல் ஆகியவற்றையோ சாப்பிடக் கூடாதென்று டாக்டர் சொல்லுவார். அதை அப்படியே பின்பற்றுவது நோய் குறைய உதவும்.

உயிர் காக்க உதவும் ஒரு அமிர்தம் உப்பு என்றும் சொல்லலாம். வெப்ப மண்டல நாடுகளில் வயிற்று ப் போக்கு ஏற்பட்டு லட்சக் கணக்கான குழந்தைகள் இறக்கின்றன. தொடர்ந்து வயிற்று ப் போக்கு ஏற்பட்டால், உடலில் இருந்த நீர் எல்லாம் வெளியேறி உடலில் நீரற்ற வறட்சி (dehydration) ஏற்படும். அந்த நேரத்தில் உப்பு கலந்த குளுக்கோஸ்(Glucose)  ஏற்றி உயிரைக் காப்பாற் றுகிறார்கள் . அப்போது உடலில் ஏற்றும் திரவத்தில் பொதுவாக 20 கிராம் குளுக்கோஸ், 2 கிராம் உப்பு, 3 கிராம் சோடியம் சிட்ரேட், 1-5 கிராம் பொட்டாசியம் குளோரைடு இருக்கும்.

தொடரும்…..

tags-உப்பு, சோடியம், சோடியம் குளோரைடு, மருத்துவப் பயன், குளுக்கோஸ்

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: