மேதை ஆக ஏழு படிகள்! (Post No.11,123)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,123

Date uploaded in London – –    20 JULY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

மேதை ஆக ஏழு படிகள்!

ச.நாகராஜன்

உலகின் மிகப் புகழ் பெற்ற கலைஞர் லியனார்டோ டா வின்சி இத்தாலி நாட்டில் வின்சி என்ற நகரில் பிறந்தவர். அவரைப் பற்றிக் கேள்விப்படாதவர் இருக்க முடியாது. (தோற்றம் 1452, ஏப்ரல் 15, மறைவு : 1519, மே, 2).

அவர் ஒரு பல்துறை நிபுணர். ஓவியர், சிற்பி. கட்டிடக் கலைஞர், உடல்கூறு இயல் நிபுணர், கணித மேதை, பல கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்த கண்டுபிடிப்பாளர், ஒரு விஞ்ஞானி, வானவியல் நிபுணர், தாவர இயல் நிபுணர். வரலாற்று ஆசிரியர், எழுத்தாளர், இசைக் கலைஞர் என்று இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

அவரது மோனா லிஸா, கடைசி விருந்து ஆகிய ஓவியங்கள் காலத்தை வென்றவை.

அவரது பெருமை காலம் செல்லச் செல்ல கூடிக் கொண்டே போகிறது.

அனைவரும் மேதையாக ஆக அவர் ஏழு படிகளைக் காட்டியுள்ளார்.

அந்தப் படிகளில் ஏறினால் மேதைத் தன்மை என்ற உச்சியை அடையலாம்.

அவற்றைச் சுருக்கமாகக் கீழே காணலாம்.

  • CURIOSITÀ (CURIOSITY) –  எதையும் அறிய வேண்டும் என்னும் ஆர்வம்
  • DIMONSTRATZIONE (INDEPENDENT THINKING) – சுதந்திரமாக எண்ணுதல்
  • SENSAZIONE (REFINE YOUR SENSES) – புலன்களைக் கூர்மையாக்கல்
  • SFUMATO (EMBRACE UNCERTAINTY) – நிலையற்ற தன்மையை ஏற்றுக் கொள்ளல்
  • ARTE/SCIENZA (ART & SCIENCE, WHOLE-BRAIN THINKING) – கலை, அறிவியல் மற்றும் முழு மூளை ஆற்றலைப் பயன்படுத்தல்
  • CORPORALITA (MIND-BODY CARE) –  உடல் மனம் ஆகியவற்றைப் பேணல்
  • CONNESSIONE (INTERCONNECTEDNESS) – ஒருங்கிணைந்த தன்மை

எதையும் அறிய வேண்டும் என்னும் ஆர்வம்

மனிதனாகப் பிறந்தவன் இறக்கும் வரை தொடர்ந்து கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். இதற்கு எதைப் பற்றியும் அறிய வேண்டும் என்ற தணியாத ஆர்வம் இன்றியமையாதது. இந்த ஒரு குணத்தாலேயே உலகின் ஆகப் பெரும் மேதைகள் உலகோரால் புகழப் படும் அரிய சாதனைகளைச் செய்துள்ளனர். சில கேள்விகளைக் கேட்டு இந்த அரிய குணத்தை வளர்த்துக் கொள்ளலாம். ஏன் இப்படி இருக்கிறது? இது இல்லாமல் இன்னொரு விதம் இருக்க முடியுமா? அது எப்படி? என்பன போன்ற ஆர்வம் உந்தும் கேள்விகள் அவற்றிற்கான விடைகளைக் காண வழி வகுக்கும்.

சுதந்திரமாக எண்ணுதல்

கருத்துக்கள் பல மனதில் உதிக்கின்றன. அவற்றை ஒவ்வொன்றாக சோதனை செய்து பார்த்து அனுபவித்து உண்மையைக் காண வேண்டும்.

இது இப்படி இருக்குமானால்…. பின்னர்…. என்று இப்படி ஒவ்வொன்றைப் பற்றியும் சிந்தித்துப் பழகலாம்.

 புலன்களைக் கூர்மையாக்கல்

ஐம்புலன்களையும் கூர்மையாக எப்போதும் வைத்திருந்தால் அது தானாகவே மேதைத் தன்மையை உருவாக்கும்.

கண்களால் பார்க்கும் காட்சியை வர்ணித்தல், காதுகளால் கேட்கும் கீதத்தில் லயித்தல், பூவின் நறுமணத்தில் மெய்மறத்தல், தோலின் தொடும் உணர்ச்சி மூலம் இன்பம் அடைதல், உணவை ரசித்து ருசித்து உண்ணல் என்று இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். நிகழ் காலத்தில் வாழ்ந்து புலன்கள் தரும் உணர்வை உணர்வு பூர்வமாக அறிய ஆரம்பித்தால் மேதைத் தன்மை தானே மிளிரும்.

நிலையற்ற தன்மையை ஏற்றுக் கொள்ளல்

உலகில் நாம் பார்க்கும் பல விஷயங்களிலும் இருக்கும் நிலையற்ற தன்மையை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஒரு கொள்கை பற்றி இரு விதமான ஒன்றுக்கொன்று எதிரான நிலைகள், முரண்பாடுகள் இவற்றை சற்று உற்றுக் கவனித்தால் வாழ்க்கையின் நிலையை நன்கு புரிந்து கொள்ளலாம்.

கலை, அறிவியல் மற்றும் முழு மூளை ஆற்றலைப் பயன்படுத்தல்

மனித மூளை அதிசயமான ஒன்று. அதை முழுதுமாகப் பயன்படுத்த முயல வேண்டும். கலை, அறிவியல், தர்க்கம், மனக் கண்ணில் பார்த்தல், கற்பனை என இப்படி நூற்றுக் கணக்கான வழிகளில் நமது மூளை இயங்க முடியும். உள்ளுணர்வு ஒரு புறம் இருக்க, ஒவ்வொன்றைப் பற்றிய நுணுக்கமான விவரங்களை அறிய ஆர்வம் கொண்டிருந்தால், மூளை ஆற்றலை  முழுமையாகப் பயன்படுத்தினால், மேதைத் தன்மை தானே ஒளிரும்.

உடல் மனம் ஆகியவற்றைப் பேணல்

மனம், உடல் ஆகிய இரண்டையும் பேணுதல் ஆரோக்கியமான வாழ்வையும் ஆரோக்கியமான சிந்தனை ஆற்றலையும் நல்கும். யோகா போன்ற மனப்பயிற்சி மற்றும் உடல்பயிற்சி தரும் கலையை நன்கு கற்று நம்மை நாமே பேணிக் காத்துக் கொண்டால் வாழ்நாளில் பல சாதனைகளைச் சாதிக்க முடியும் அல்லவா?

ஒருங்கிணைந்த தன்மை

ஏராளமான விஷயங்களைப் படிக்கிறோம். பலருடன் பழகுகிறோம். பல இடங்களில் பல காட்சிகளைக் காண்கிறோம். இவற்றை எல்லாம் இணைக்கும் ஏதோ ஒன்று இருக்கிறதே. அந்த ஒருங்கிணைந்த தன்மையை அவ்வப்பொழுது சிந்தித்து அதிலிருந்து உண்மைகளைப் பெற வேண்டும்.  இந்த இணையும் தன்மையால் தானே பிரபஞ்சமே இயங்குகிறது!

இப்படி இந்த ஏழு படிகளை முன்னேறுவதற்காக வகுத்தார் லியனார்டோ டாவின்சி.

அதன் மூலம் அவர் முன்னேறினார்.

பெரும் மேதையாக ஆனார்.

அவர் சுட்டிக் காட்டும் படிகளில் ஒவ்வொன்றாக ஏறினால் அனைவரும் மேதையாக ஆகலாம்.

ஐயமில்லை!

***

tailed with post on 20th july 2022

புத்தக அறிமுகம் – 4

உலக வலத்தில் ஒன்பது நாடுகள்!

ச.நாகராஜன்

பொருளடக்கம்

என்னுரை

அத்தியாயங்கள்

1. பூலோக சொர்க்கம் ஸ்விட்ஸர்லாந்து!

2. சூரியன் முதலில் உதிக்கும் நாடு!

3. அனுபவித்து மகிழ அமெரிக்க நகரங்கள்!

4. லேக் டாஹோ, டைம் ஸ்குயர், க்ராண்ட் கான்யான் – அமெரிக்க டூர்!

5. அந்தமானைப் பாருங்கள் அழகு!

6. வெல்ல முடியாத நகரம் லண்டன்!

7. உலகின் தூய்மைத் தலை நகரம் சிங்கப்பூர்!

8. குழந்தைகள் விரும்பும் நாடு, பெல்ஜியம்!

9. பொன் கொண்டு இழைத்த மாட மாளிகை ஸ்ரீ லங்கா

10. உலகின் உயரமான நாடு – நேபாளம்!

11. அலோஹா, ஹவாய், அலோஹா!

முடிவுரை

நூலில் எனது உரையாகத் தந்திருப்பது இது:

என்னுரை

நீங்கள் எந்த நாடுகளுக்கு எல்லாம் போயிருக்கிறீர்கள், ஒரு பத்துப் பதினோரு வாரங்கள் எழுதுங்களேன், கொரானா பிடியிலிருந்து விடுபட்டு மக்கள் நல்ல இடங்களுக்குப் பயணம் மேற்கொள்ள ஆவலாய் இருக்கிறார்கள் என்று மாலைமலர் சி.இ.ஓ திரு ரவீந்திரன் அவர்கள் போனில் கூற, சிரமேற்கொண்டு அந்தப் பணியில் ஈடுபட்டேன்.

ஸ்விட்ஸர்லாந்து, ஜப்பான், அந்தமான் (இந்தியா), அமெரிக்கா, சிங்கப்பூர், பெல்ஜியம், ஶ்ரீலங்கா, லண்டன் (இங்கிலாந்து), நேபாளம் ஆகிய நாடுகளின் அழகிய இடங்களையும், காட்சிகளையும், வரலாறையும் சற்று விளக்க முடிந்தது.

இந்தக் கட்டுரைகள் ஒவ்வொரு செவ்வாய்கிழமையும் 22-3-2022இல் ஆரம்பித்து 31-5-2022 முடிய மாலமலர் இதழில் வெளிவந்தன.

இந்த நல் வாய்ப்பை அளித்த திரு பாலசுப்ரமண்யன் ஆதித்தன் அவர்களுக்கும், திரு ரவீந்திரன் அவர்களுக்கும், வாசகர்கள் எதை 

எதிர்பார்க்கிறார்கள் என்பதைக் கூறி என்னை ஊக்குவித்த திரு வசந்த்ராஜ் உள்ளிட்ட மாலைமலர் ஆசிரியக் குழுவினருக்கும் எனது மனமார்ந்த நன்றி.

கட்டுரைகளைப் படித்து உடனுக்குடன் இன்னும் தொடர ஊக்குவித்த அனைத்து வாசகப் பெருமக்களுக்கும் எனது நன்றி.

இந்தக் கட்டுரைகளை நூலாக வெளியிட முன் வந்த Pustaka Digital Mediaவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக.

எங்கு பயணம் மேற்கொண்டாலும் உங்கள் பயணம் சிறப்பாக அமைய எமது உளங் கனிந்த வாழ்த்துக்கள்!

சான்பிரான்ஸிஸ்கோ.                                                                      ச.நாகராஜன்
1-6-2022

நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.

இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.

சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in

என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்

தொடர்புக்கான தொலைபேசி எண் :   9980387852  

***

Tags– மேதை, ஏழு படிகள்!

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: