விண்வெளிச் சாலை ,சந்திரன் பற்றிய திரைப்படங்கள்! – 4 (Post.11201)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,201

Date uploaded in London – –    17 AUGUST 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

விண்வெளிச் சாலை மற்றும் சந்திரன் பற்றிய திரைப்படங்கள்! – 4

ச.நாகராஜன்

விண்வெளிச் சாலை பற்றிய மேலும் சில திரைப்படங்களைப் பற்றிப் பார்ப்போம்:

சால்வேஜ் -1 (Salvage – 1) 1979ஆம் ஆண்டு வெளியான தொலைக்காட்சித் தொடர் இது. ஒரு சிறிய நகரில் பழைய சாமான்களின் பட்டறை வைத்திருக்கும் ஆண்டி கிரிப்பித்திற்கு திடீரென சந்திரனுக்குச் செல்லும் ஆசை வருகிறது. அங்குள்ள அபல்லோ கலத்தின் மிச்ச மீதங்களை கலைப்படைப்பாக எண்ணி எடுத்து வருவதே அவரது நோக்கம். விண்கலத்தின் பழைய பாகங்கள் கூட எவ்வளவு மதிப்பு வாய்ந்தவை என்பதைச் சித்தரிக்கும் படமாக இது அமைந்தது.

தி ஷேப் ஆஃப் திங்ஸ் டு கம் (The Shape of Things to Come):- 1933ஆம் ஆண்டு ஹெச்.ஜி.வெல்ஸால் எழுதப்பட்ட பிரபலமான நாவல் இது. 1979ஆம் ஆண்டு திரைப்படமாக வெளிவந்தது. நாவலில் உலகில் 2106ஆம் ஆண்டு வரை நிகழப் போவதை கற்பனையால் படம் பிடித்துக் காட்டுகிறார் வெல்ஸ். மனித இனத்தின் பிரச்சினைகளுக்கு தீர்வாக உலக சாம்ராஜ்யம் ஒன்று அமைக்கப்படுகிறது. சர்வாதிகாரிகள் உலகில் அனைவரையும் அடக்கி ஆள நினைக்க, நல்லவர்களோ அவர்களை எதிர்த்துப் போராடுகின்றனர். உலகில் அமைதி மீண்டும் நிலவுகிறது/

ஏர்ப்ளேன் 2: தி சீக்வல் (Airplane 2: The Sequel) :- 1982ஆம் ஆண்டு வெளியான படம் இது. சந்திரனில் உள்ள தளமான ஆல்பா பீட்டாவிற்கு மேற்கொள்ளும் பயணத்தை சித்தரிக்கும் படம். வில்லியம் ஷாட்னர் என்ற காப்டன் அனைவரின் உள்ளத்தையும் கொள்ளை கொள்கிறார்.

ஜெனரேஷன் எக்ஸ்

உலகில் ஏராளமான மாற்றங்கள் காலப்போக்கில் ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது. அமெரிக்க ஜனாதிபதி நிக்ஸன் பெரும் தோல்வியை அடைந்தார். வியட்நாம் போர் முடிவுக்கு வந்தது. ஸ்கைலாப் என்ற முதல் ஸ்பேஸ் ஸ்டேஷன் தோல்வியில் முடிந்தது. மாறுதலைத் தர ரீகன் வந்தார். விண்கலங்கள் புதிய பாணியில் வெற்றிகரமாக உருவாக ஆரம்பித்தன. இதைத் தொடர்ந்த காலம் ஜெனரேஷன் எக்ஸ் என அழைக்கப்படுகிறது. இதில் உருவான படங்கள் இன்னும் சிறப்பாக அமையலாயின.

ஸ்பேஸ் கேம்ப் (SpaceCamp):- 1986ஆம் ஆண்டு வெளியான படம் இது. விண்வெளிப் பயணத்தின்  ஒத்திகையின் போது நிஜமாகவே ஒரு விண்கலம் விண்வெளியில் பறந்து விடுகிறது. அபல்லோ விண்கல ரசிகர்களுக்கு உற்சாகத்தைத் தர இந்தப் படம் எடுக்கப்பட்ட்து.

ஸ்டார் கேப்ஸ் (Star Caps) :- 1987ஆம் ஆண்டு வெளி வந்த தொலைக்காட்சித் தொடர் இது. சந்திரனில் கிரிமினல் குற்றங்கள் நிகழ்கின்றன. அவற்றைத் துப்புத் துலக்கும் கதையாக இந்தத் தொடர் எடுக்கப்பட்டது. முதல் தொடரின் அடுத்த சீஸனாக இது அமைந்தது. ஆனால் தொலைக்காட்சித் தொடர்களுக்கே உரித்தாக அமையும் மிக மிக மெதுவாகச் செல்லும் கதைப் போக்கு ரசிகர்களைச் சற்று சோதித்தது. என்றாலும் கூட சந்திரனைப் பற்றிய அரிய தகவல்கள் தரப்பட்டதால் இதற்கென ஒரு ரசிகர் பட்டாளம் உருவானது..

விங்ஸ் ஆஃப் ஹனியமைஸ்:ராயல் ஸ்பேஸ் ஃபோர்ஸ் (Wings of Honneamise: Royal Space Force) :- 1987 ஆம் வெளியான படம் இது. பூமி போன்ற இன்னொரு பூமியில் நிகழும் கதை இது. பெயர் தெரியாத ஒரு ஆசிய தேசம் (ஜப்பானை மனதில் வைத்து புனையப்பட்ட கதை) ஒரு ராக்கெட்டைத் தயாரிக்கிறது. இதனால் அடுத்த நாட்டிற்கும் (சீனா என நாம் புரிந்து கொள்வோம்) அதற்கும் பகை ஏற்படுகிறது. இரண்டிற்கும் போர் உருவாகும் சூழ்நிலை உருவாகிறது. கதையின் பின்னணி புது மாதிரியாக இருந்ததால் இப்படத்தை ரசிகர்கள் ரசித்தார்கள்.

மர்டர் பை மூன்லைட் (Murder by Moonlight): 1989ஆம் ஆண்டு வெளி வந்த படம் இது. சோவியத் ரஷியாவும் அமெரிக்காவும் இணைந்து சந்திரனில் ஒரு தளத்தை அமைக்க அங்கே குவியலாக இறந்த உடல்கள் காணப்படுகின்றன. இதைத் துப்புத் துலக்க ஒரு ரஷிய டிடெக்டிவும் ஒரு அமெரிக்க டிடெக்டிவும் களத்தில் இறங்குகின்றனர். ஒரு பைத்தியக்ககார கொலைகாரனைக் கண்டுபிடித்து அவனது கொலைகார முயற்சியைத் தடுத்து நிறுத்துகின்றனர். வேடிக்கையும் திரில்லும் சேர்த்து ஃபன் – த்ரில்லராக அமையவே படம் வெற்றி பெற்றது.

மூன் ட்ரேப் (Moontrap) :-1989ஆம் ஆண்டில் வெளியான படம் இது. சந்திரனிலிருந்து கிடைத்த ஒரு அபூர்வப் படைப்பு பூமிக்கு வருகிறது. அந்த உயிரியல்-இயந்திர (bio-mechanical) உயிரினம் பூமியையே பயமுறுத்துகிறது. விளைவு என்ன என்பதைப் படம் நன்கு சித்தரிக்கிறது.

பியாண்ட் தி ஸ்டார்ஸ் (Beyond the Stars) :- 1989 ஆம் ஆண்டு வெளியான படம் இது. ஒரு இள வயதுச் சிறுவன் அபல்லோ கலத்தினால் கிளர்ச்சியூட்டப்படுகிறான். ராக்கெட்டை அவன் தவறாகப் பயன்படுத்த, மூன்வாக்கர் ஒருவரைச் சந்திக்கிறான் அபூர்வ ரகசியத்தை கற்றுக் கொள்கிறான். இளைஞர்களுக்கு உத்வேகம் ஊட்டும் வகையில் எடுக்கப்பட்ட படம் இது.

தி டார்க் சைட் ஆஃப் தி மூன் (The Dark Side of the Moon) :- 1990 ஆம் ஆண்டு வெளி வந்த படம் இது. ஒரு சாத்தான் கப்பல்களையும் விமானங்களையும் விண்வெளியில் ஒரு பகுதியிலிருந்து ஒரு விண்கலத்தையும் கடத்துகிறது.பூமியில் பெர்முடா ட்ரை ஆங்கிள் பகுதியில் செல்லும் கப்பல்கள் அந்தப் பகுதியில் பறக்கும் விமானங்கள் ஆகியவை மர்மமாய் மறைந்து போவதைப் போலவே இந்த மர்ம சம்பவங்களும் அமைகின்றன. சந்திரனில் வெகு தூரத்திற்கு அப்பால் உள்ள ஒரு பகுதியில் இவை அனைத்தும் நிகழ்கின்றன. சாத்தான் சித்தரிக்கப்பட்ட விதத்தை ரசிகர்கள் வெகுவாக வரவேற்றனர். சந்திரனின் இருளான பக்கம் ரசிகர்களால் வரவேற்கப்பட படம் வெற்றியைப் பெற்றது.

ப்ளிமவுத் (Plymouth) :- 1991 ஆம் ஆண்டு வெளி வந்த இது பின்னால் எடுக்கப்பட இருக்கும் பெரிய தொலைக்காட்சித் தொடரின் முன்னோடியாக அமைக்கப்பட்டு எடுக்கப்பட்ட ஒன்று. சுரங்கம் உள்ள ஒரு சிறிய நகரம்.  அதை ஒரு தீயவன் சுயநலம் காரணமாக அழிக்கிறான் அங்குள்ள மக்கள் அனைவருக்கும் மறுவாழ்க்கை அமைத்துக் கொள்வதற்காக சந்திரனில் புலம் பெயர்ந்து வாழ வாய்ப்பு வழங்கப்படுகிறது. நல்ல படமாக அமைந்த இதை விண்வெளி மாநாடுகளில் அடிக்கடி குறிப்பிடுவர்.

டெஸ்டினேஷன் மூன்/ எக்ஸ்ப்ளோரர்ஸ் ஆன் தி மூன் (Destination Moon/Explorers on the Moon):- 1992ஆம் ஆண்டு வெளி வந்த படம் இது. ஹெர்ஜ் என்பவர் 1953ஆம் ஆண்டு துப்பறியும் சிறுவனை கதாநாயகனாக வைத்துப் பல நாவல்களை எழுதினார். இந்தச் சிறுவன் சந்திரனுக்குப் பயணப்படுகிறான். இளைஞர்களை வெகுவாகக் கவர்ந்த கதை என்பதால் இது திரைப்படமாக எடுக்கப்பட்டது. மூலக் கதை சிறிதும் மாற்றாமல் எடுக்கப்பட்டதால் இளைஞர்கள் உள்ளிட்ட அனைத்து வயதினரும் இந்தப் படத்தை வெகுவாக ரசித்து மகிழ்ந்தனர்.

***************  (தொடரும்)

புத்தக அறிமுகம் – 31

Saints, Wonderful Temples, Scriptures And God’s Ways!

INDEX OF CONTENTS

Part I SAINTS

1) Miracles of Shirdi Sai Baba

2) Avathar of Miracles – Sri Sathya Sai Baba

3) Indian Scientist and Sri Sathya Sai Baba, Avathar of Miracles – Part I

4) Indian Scientist and Sri Sathya Sai Baba, Avathar of Miracles – Part II

5) How Paul Brunton was directed to go to Bhagavan Ramana Maharishi – Part I

6) How Paul Brunton was directed to go to Bhagavan Ramana Maharishi – Part II

7. Yogic Powers – Part I: Great Yogi Paramahansa Yogananda’s body was fresh even after 20 days after death!

7) Yogic Powers – Part II: Bhagavan Ramana Maharishi

8) Ah! It was a wonderful phenomenon – Swami Vivekananda!

9) MILLIONS OF VIVEKANANDAS WILL APPEAR!

10) Wonderful Divine Saint Vadalur Vallalar and Some of His Miracles

11) Inspiring Anecdotes in the Life of Swami Chinmayananda Saraswati

Part II WONDERFUL TEMPLES

12) The One and Only Big Temple at Tanjore, an Architectural Wonder of the World!

13) Marvelous Musical Pillars in Hindu Temples

14) Wonderful Episodes of Temples That Were Protected and Saved During Muslim Invasion

15) Four Wonderful Major Sri Chakra Temples Near Chennai in India to Visit and Get All Types of Benefits

16) Pigeons in Amarnath and Eagles at Thirukkazukkundram – A Miracle That Happens Even Today!

17) Thousand Pillar Hall – An Acoustic Marvel in Madurai Meenakshi Temple

Part III SCRIPTURES

18) Hindu Vedas, Vedangas and the Great Sages Associated With Vedas – Part I

19) Hindu Vedas, Vedangas and the Great Sages Associated With Vedas – Part II

20) The Glory of Bhagavat Gita – Part I

21) The Glory of Bhagavat Gita – Part II

22) Thousand Secret Names of Goddess Shakthi: Lalitha Sahasranama – Part I

23) Thousand Secret Names of Goddess Shakthi: Lalitha Sahasranama – Part II

24) Efficacy of Vishnu Sahasranamam

25) Gayatri Rahasya By His Holiness Shri Prabhu Ashrit Swamiji

26) The True Friend Who Comes Along With You After Your Death

27) Hinduism and Modernity by David Smith

28) The Greatness of Mahabharata – Part I

29) The Greatness of Mahabharata – Part II

30) Great Secret from Mahabharata: Bharatha Savitri – the four slokas one should read daily!

31) Mahabharata: Great Warrior Arjuna’s Glorious Ten Names and Their Meanings

32) Memory Queen Draupadi of Mahabharata

33) This is Heaven! Beautiful Description in Mahabharata!!

34) Disadvantages in Heaven! Mahabharata Description!!

Part IV GOD’S WAYS

36) What Will You Get Through Prayer?

37) Can Prayer Bend the Time?

38) Silent Prayer is the Best Prayer: Vinoba Bhave

39) 50 reasons people give for believing in a God by Guy P.Harrison

40) God Is Not Dead

41) How God Changes Your Brain

42) Be Always on God’s Side or Pray for God to Come to Your Side

43) Baffling Questions and Beautiful Answers in Spirituality

About the Author

Dedication by Santhanam Nagarajan

This book is dedicated to my parents

Sri V.Santhanam

and

Srimathi Rajalakshmi Santhanam

*

நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.

இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.

சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in

என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்

தொடர்புக்கான தொலைபேசி எண் :   9980387852  

**

Leave a comment

Leave a comment