மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 67 (Post No.11379)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,379

Date uploaded in London – –    21 OCTOBER 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 67
ச.நாகராஜன்

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் மற்றும் கட்டுரைகள் தொடரில் நாம் இங்கு பார்க்க இருப்பது ஒரு முக்கியமான கட்டுரை.

தமிழ்த் தாத்தா என்றும் உ.வே.சா என்றும் சிறப்பாக அழைக்கப்படும் உத்தமதானபுரம் வேங்கடசுப்பையரின் மகனான சாமிநாதன் அவர்களைத் தெரியாத தமிழர் இருக்க முடியாது. (தோற்றம் 19-2-1855 மறைவு: 28-4-1942).

மஹாகவி பாரதியா அவரைப் பற்றிப் போற்றிப் புகழ்ந்துள்ள கவிதை குறிப்பிடத் தகுந்த ஒன்று.

“பொதியமலைப் பிறந்தமொழி வாழ்வறியும்
காலமெல்லாம் புலவோர் வாயில்
துதியறிவாய்! அவர்நெஞ்சின் வாழ்த்தறிவாய்!
இறப்பின்றித் துலங்கு வாயே!”

என்று மஹாகவி பாரதியார் இறப்பின்றித் துலங்குவாயே என்று போற்றிப் புகழ்ந்த மேதை திரு உ.வே.சா அவர்கள்.

பாரதியாரைப் பற்றிய அவரது ஒரு முக்கியமான சொற்பொழிவு  உண்டு.

1936ஆம் ஆண்டில் அகில இந்திய காங்கிரஸின் பொன் விழாவில் சென்னை காங்கிரஸ் மண்டபத்தில் பாரதியாருடைய படம் திறக்கப்பட்டது.

அப்போது அந்த விழாவில் கலந்து கொண்டார் உ.வே.சா. அப்போது அவருக்கு வயது 81.

அதில் அவர் பேசிய பேச்சு அருமையான ஒன்றாகும்.

அதில் அவர் கூறுகின்ற சில கருத்துக்களை அவர் பேசியபடியே இங்கு பார்க்கலாம்.

“தெய்வத்தினிடத்திலும் தேசத்தினிடத்திலும் பாஷையினிடத்திலும்

அன்பில்லாதவர்களைக் கண்டு இவர் மிக வருந்தினார். முயற்சியும் சுறுசுறுப்பும் இல்லாமல் வீணாகக் காலத்தைப் போக்குபவர்களை வெறுத்தார். புதிய புதிய கருத்துக்களை எளிய நடையில் அமைத்துப் பாட வேண்டுமென்ற உணர்ச்சி இவருக்கு வளர்ந்து கொண்டே இருந்தது….

சென்னையில் இவர் இருந்த காலத்தில் நான் இவரோடு பலமுறை பழகியிருக்கிறேன். பிரசிசென்ஸி காலேஜில் வாரந்தோறும் நடைபெறும் தமிழ்ச்சங்கக் கூட்டத்துக்கு வருவார். பேசுவார்; புதிய பாட்டுக்களைப் பாடுவார். வருஷ பூர்த்திக் கொண்டாட்டங்களில் புதிய செய்யுட்கள் செய்து வாசிப்பார்….

பாரதியார் தேசீயப் பாட்டுக்களைப் பாடியதோடு வேறு பல துறைகளிலும் பாடியிருக்கிறார். இசைப் பாட்டுக்கள் பலவற்றைப் பாடியிருக்கிறார். இவர் சங்கீதத்திலும் பழக்கம் உள்ளவர்….

பாரதியாருடைய பாட்டுக்களில் தெய்வ பக்தியும் தேச பக்தியும் ததும்புகின்றன. தனித்தனியாக உள்ள பாட்டுக்கள் இயற்கைப் பொருள்களின் அழகை விரித்தும் நீதிகளைப் புகட்டியும், உயர்ந்த கருத்துக்களைப் புலப்படுத்தியும் விளங்குகின்றன…..

இவருடைய வசனத்தைப் பற்றிச் சில சொல்ல விரும்புகிறேன்….

பாரதியாருடைய பாட்டும் எளிய நடையுடையது; வசனமும் எளிய நடையுடையது. வருத்தமின்றிப் பொருளைப் புலப்படுத்தும் நடைதான் சிறந்தது. பாரதியாருடைய வசனம் சிறு வாக்கியங்களால் அமைந்தது; அருத்த புஷ்டியுடையது. வீர ரசம், சிருங்கார ரசம் ஆகிய இரண்டும் இவருடைய பாட்டுக்களில் அதிகமாகக் காணப்படுகின்றன். பாரதியார் அழகாகப் பேசும் ஆற்றல் வாய்ந்தவர்….

இவருடைய பாட்டுக்கள் எல்லோருக்கும் உணர்ச்சியை உண்டாக்குவன; தமிநாட்டில் இவருடைய பாட்டை யாவரும் பாடி மகிழ்வதனாலேயே இதனை அறிந்து கொள்ளலாம். கடல் கடந்த தேசங்களாகிய இலங்கை, பர்மா, ஜாவா முதலிய இடங்களிலும் இவருடைய பாட்டுக்கள் பரவியிருக்கின்றன. அங்கே உள்ளவர்களில் சிலர் இவரைப் பற்றி எழுத வேண்டுமென எனக்குக் கடிதங்கள் எழுதியதுண்டு.

பாரதியார் தாம் எவ்வளவு கஷ்டப்பட்டாலும், ஜனங்களுக்கு நன்மை உண்டாக வேண்டுமென்ற கொள்கையையுடையவர். தைரியமுடையவர். இவருடைய புகழ் தமிழ்நாட்டின் புகழாகும்.

அற்புதமான உ.வே.சா அவர்களின் உரையில் ஒரு பகுதி மேலே தரப்பட்டுள்ளது.

முழுவதையும் பாரதி ஆர்வலர்கள் படிப்பது இன்றியமையாதது.

***

 புத்தக அறிமுகம் – 93

மாயாலோகம் (பாகம் 3)

பொருளடக்கம்

நூலில் உள்ள அத்தியாயங்கள்

 1. பார்வையற்றவர் மலையேறி உலக சாதனை படைக்கும் அதிசயம்! 

 2. அதிசய மாயாஜால நிபுணர் டேவிட் ப்ளெய்ன்!

 3. 65 வருடங்களாக உணவு உட்கொள்ளாத யோகி பற்றிய திரைப்படம்  

   கேன்ஸ் விழாவில்!    

 4. புலன் கடந்த பார்வையாளர் – குடா பக்ஸ்   

 5. மஹாவதாரம் பாபாஜி – 1   

 6. மஹாவதாரம் பாபாஜி – 2   

 7. மஹாவதாரம் பாபாஜி – 3   

 8. மஹாவதாரம் பாபாஜி – 4   

 9. உலகின் அதிர்ஷ்டக்கார பெண்மணி!   

10. சோகுஷின்புட்சு – மம்மி ஆவதற்காக புத்தபிட்சுக்கள் செய்து

   கொள்ளும் தற்கொலை!

11. மரணப் பள்ளத்தாக்கு – 1    

12. மரணப் பள்ளத்தாக்கு – 2    

13. கிரகம் விட்டு கிரகம் செல்லும் விண்கலம் வருகிறது!  

14. இன்னொரு பூமி கண்டுபிடிப்பு!    

15. பெல்மெஸ் முகங்கள் 

16. கடலடியில் ஆறு ஓடுகிறதா? மெக்ஸிகோ அதிசயம்!    

17. அரசை எதிர்க்காதீர்கள், ஆபத்து! – (இந்தியாவில் அல்ல!!)

18. தொலைதூரத்தில் நடப்பதைக் காணலாம்! – 1

19. தொலைதூரத்தில் நடப்பதைக் காணலாம்! – 2

20. தொலைதூரத்தில் நடப்பதைக் காணலாம்! – 3

21. தொலைதூரத்தில் நடப்பதைக் காணலாம்! – 4

22. தொலைதூரத்தில் நடப்பதைக் காணலாம்! – 5

23. தொலைதூரத்தில் நடப்பதைக் காணலாம்! – 6

24. தீவிரவாதிகளைக் கண்டறிய புதிய சாதனங்கள் தயார்!!  

25. உலக மக்களை இணைக்கும் பேஸ்புக் 

26. செவ்வாய் பயணத்திற்கான அதிசய சோதனை!    

27. முடிவுரை       

*

நூலைப் பற்றிய சிறு குறிப்பு இது:

This book serves as a perfect gift for children at home. Originated from a series of articles in a tamil weekly called Bhagya, the last part of the collection is called Mayalogam. It talks about religious perspective, nature of human beings and amazing astronomical facts.

‘பாக்யா’ வார இதழின் வாசகர்களால் பெரிதும் பாராட்டப்பெற்ற ‘மாயாலோகம்’ தொடரின் கடைசிப் பாகம்! ஆன்மிக அவதாரங்கள், மனிதர்களின் விசித்திர குணாதிசயங்கள், அதிசயமான பிரதேசங்கள், விண்வெளியின் வியப்பூட்டும் விந்தைகள் எனப் பல சுவையான கட்டுரைகளைக் கொண்ட இந்நூலைப் படித்துப் பாருங்கள்! சிறுவர்களுக்கும் பரிசளியுங்கள்!

*

இந்த நூல் திருமதி நிர்மலா ராஜூ அவர்களால் அவரது www.nilacharal.com மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இதை (EBOOK) டிஜிடல் வடிவமாகப் பெற விரும்புவோர் www.nilacharal.com இணையதளத்தில் EBOOKS என்ற பகுதியில் AUTHOR-ஐ தேர்ந்தெடுத்தால் எழுத்தாளர் பகுதியில் ச.நாகராஜன் (61) என்ற பெயரைக் காணலாம்.

அங்கு சொடுக்கினால் ச.நாகராஜன் எழுதிய 61 புத்தகங்களின் விவரத்தைக் காண முடியும். ‘ மாயா லோகம்’ -பாகம் 3’ நூலைப் பற்றிய  சிறுகுறிப்பு, விலை விவரத்தைக் காணலாம்; அதை வாங்கலாம்.

Singapore, National Library இல் நிலாச்சாரல் வெளியீடுகள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

** 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: