படிக்காசுப் புலவரை வாதில் வென்ற கொங்குமண்டலப் புலவர்கள்! (Post No.11,494)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,494

Date uploaded in London – 2 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

கொங்குமண்டல சதகம் பாடல் 85

படிக்காசுப் புலவரை வாதில் வென்ற கொங்குமண்டலப் புலவர்கள்!

,நாகராஜன்

தமிழகப் புலவர்களில் தனி இடத்தைப் பெறுபவர் படிக்காசுப் புலவர். அவர் ராமநாதபுர சமஸ்தானத்தில் இரகுநாத சேதுபதியின் சமஸ்தான வித்வானாக இருந்து பெரும் புகழ் பெற்றார்.

ஒரு சமயம் தல யாத்திரையை  மேற்கொண்ட அவர் கொங்கு மண்டலம் வந்தார்.

அந்தக் காலத்தில் கவசை ஆறை நாட்டில் கவசை நகரில் கல்வி கேள்விகளில் வல்லவராயும் வள்ளன்மையில் சிறந்தவராயும் இருந்த மசக்காளி மன்றாடி என்பவர் புகழுடன் வாழ்ந்து வந்தார்.

அவரது சமூகத்தில் தமிழ்ப் புலவர் சபை ஒன்று கூடிற்று.

அதில் வண்ணப் பாக்கள் சொல்வது பற்றிய வாதம் ஒன்று நடந்தது.

அதில் படிக்காசுப் புலவர் எடுத்துக் கொடுத்தபடி முடிக்கவில்லை என்று சொல்லி அவர் கொண்டு வந்த பல்லக்கு முதலியவற்றை கொங்கு மண்டலப் புலவர்கள் எடுத்துக் கொண்டனர்.

படிக்காசுப் புலவர் தனது ஆடை முதலியவற்றைச் சுமந்து கொண்டு,

“அஞ்சாலி மக்களுஞ் சாணாகும் பாணரு மம்பட்டருஞ்

செஞ்சாயக் காரரும் வேசையர் மக்களுஞ் செந்தமிழைப்

பஞ்சாகப் பன்னி யொருகாசுக் கோர்வண்ணம் பாடலுற்றார்

நஞ்சாகப் போச்சுதை யோவென் றமிழ்கொங்கு நாடெங்குமே”

என்று மனம் நொந்து மிக்க வருத்தத்துடன் பாடினார். பிறகு மனதைச் சமாதானம் செய்து கொண்டு மெதுவாக நடக்க ஆரம்பித்தார்.

கவசையில் நடந்த கவி வாத சம்பந்தமான பகைமையால் கொங்குப் புலவர்கள் வைத்த சூனிய வித்தைத் தீமையில் வருந்தி, திருச்செங்கோட்டுக்கு அவர் வந்து சேர்ந்தார். ஶ்ரீ அர்த்த நாரீஸ்வரர் மீது வருகைப் பதிகம் பாடி, பின்னர் தேக சுகத்தை அடைந்து உமைபாகப் பதிகம் பாடினார். பின்னர் சமீபத்தில் உள்ள மோரூர்க்குச் சென்று பாம்பலங்காரர் மீது வருக்கக் கோவை பாடி அரங்கேற்றினார்.

அதற்காகக் குமாரசாமிக் காங்கேயன் சன்மானம் தர அதை ஏற்றார்.

அந்திப் பிறைச் சடையரா வாசல ராலயத்திற்

கந்தப் பிரான்கதை கற்சிலை யாலமை காங்கெயரில்

விந்தைப் புயக்கும ரேந்திர வேந்து வியந்தெமக்குத்

தந்தச் சிவிகை கொடுத்தான் பெரும்புகழ் தாங்கினனே

எனப் புகழ்ந்து சோழநாட்டை அடைந்தார்.

வேலைசூழ்பணி மாமலை வேலரும் விமலரு மகிழ்வெய்தச்

சீலமாகியோ ரைம்படி யரிசியுஞ் சிலகறி பருப்போடே

மாலை காவிரி மஞ்சனந் தீபமும் மனமிகு தயவாகிப்

பாலை சேர்மசக் காளிசெங் கோடரைப் பணிந்திவை யளித்தானே

–    திருச்செங்கோட்டுப் புராணம் திருப்பணி மாலை

இனி குமார காங்கேயன் பற்றிப் பார்ப்போம்.

இவன் இம்முடிப் பட்டம் பெற்றவன் என்பதை அடியிற்கண்ட
செய்யுள் வலியுறுத்துகின்றது.

முன்னா ளுறைந்தைவரு மரசர்பெரு மானுலகில்
                          முடிமன்னரிட தம்பிரான்
முதுமொழி குலோத்துங்க சோழனருள் செய்தனன்
                            முத்தமிழ்க் கம்பநாடன்
அந்நாளி லேபொன்னி கரைகள்கட வாதுள் ளடங்கவிசை
                                      பாடலுக்கா
ஆதித்த னுள்ளளவு மழியாத வதுவைவரி யளித்தனர்க
                                   ளன்றுமுதலாப்
பன்னாத நிலைமைசெறி கொங்குநாட் டினின் மேவு படிகார
                                       வித்வச்சனர்
பங்கென நடந்துவரு படிதனக் கிடரதாய்ப் படித்தசிலர்
                                  கைக்கொண்டதை
இந்நாளி லேகீர்த்தி நிலையாக விடுவித்தவ் வியல்வாண
                                     ருக்களித்தான்
இங்கிதம தாகவரு கவசைநகர் வாழ்வுற்ற இம்முடி
                                      மசக்காளியே(தனிப்பாடல்)

கொங்குமண்டல சதகத்தில் வருகின்ற     54, 64-ஆம் செய்யுட்கள் குறித்த
மோரூர்க் காங்கேயர்களுக்கும், 69-ஆம் செய்யுட் கூறும் கோபண
மன்றாடிக்கும், 75-ஆம் பாட்டுக் குறிப்பிடும் காடையூர்க் காங்கேயர்க்கும், 76ஆம் செய்யுள் விளக்கும் அல்லாளனிளை யானுக்கும் இம்முடி என்ற பட்டப்பெயருண்டு.

இம்மடி என்று கூறுவதையுங் காணலாம். தேச மன்னர்
குறுநில மன்னர், நாடு, ஊர் அதிகாரிகள், சில குருக்கள்களும் இம்முடி
என்று பெயர்கொண்டு இருந்திருக்கிறார்கள். அப்பெயரை மிகு
மேன்மையாகப் பாராட்டுகிறார்கள். இம்மடி (இம்முடி) என்பதன் பொருள் இரட்டை அதாவது இரண்டாவதான். எனவே, இம்முடிக் குமார காங்கேயன் என்றால் குமார காங்கேயன் என்பவன் ஒருவன் இருக்க, அவனுக்குப் பின் மற்றொரு குமார காங்கேயன் வந்தால் அவன் இம்மடி (இரண்டாவது) குமார காங்கேயனாகிறான். இன்னுமொருவன் தோன்றினால் மும்மடி (மூன்றாம்) குமார காங்கேயனாகிறான்.

இந்த வரலாறை கொங்குமண்டல சதகம் தனது 85ஆம் பாடலில் பதிவு செய்கிறது.

நல்லார் புகழ்மசக் காளி கவசையி னாவினிசை

யெல்லாஞ் சொலிநிலை நிலாமற் பல்லக் கிரவைபற்றிச்

சொல்லா லுயர்ந்த படிக்காசன் கட்டிச் சுமக்கக்கவி

வல்லா ரடித்துத் துறத்திய துங்கொங்கு மண்டலமே

பாடலின் பொருள் :

மசக்காளி மன்றாடியின் கவசை (ஆறை நாட்டில் உள்ள சர்க்கார் சாமக்குளம் அதாவது கோவில்பாளையம்) நகரில் நடந்த பா இயற்று வாதப் போரில் நிற்கவில்லை என்று பல்லக்கும் சன்மானப் பொருள்களையும் பற்றிக் கொண்டு, மற்ற எல்லாவற்றையும் மூட்டை கட்டிக் கொண்டு படிக்காசுப் புலவர் நடந்து போகும்படி ஊரை விட்டு அகற்றிய கவி சொல்லும் திறமை உடையவர் இருப்பதும் கொங்கு மண்டலமே என்பதாம்.

***

 புத்தக அறிமுகம் 129

இலக்கிய உலகில் கம்பரின் காட்சிவில்லியின் மாட்சி,

சங்கப் புலவர்களின் ஆட்சி!

பொருளடக்கம்

முன்னுரை

அத்தியாயங்கள்

1. எது கவிதை?                                                     2. காவியத்தின் நோக்கம்                                              3. கவிதையை ரஸிப்போமா?                                                 4. கம்பன் காட்டும் புதிய கவிதை உத்தி!                                   5. கவிதையில் சித்திரங்களைக் காண்பிக்கும் கம்பன்!                 6. இந்திரன் இராமனைத் துதித்தல்! – கம்பன் தரும் அதிசயம்!          7. கவிகள் திலகம் கம்பன் கண்ட திலகம்!                               8. வர பலம் தவறினாலும் சர பலம் தவறாது!                          9. இலங்கை மங்கையின் லிப்ஸ்டிக்! அயோத்தி மங்கையின் ஸ்டிரா!! –     

   கம்பன் தரும் வியப்பூட்டும் சித்திரங்கள்!                            10. எது வினை? இடர் இலை?                                      11. மாளிகைக் கவியை விலைமகளிர்க்கும் பொருந்த அமைத்த    சிலேடை சிரேஷ்டன் கம்பன்!                                         12. கம்பன் தரும் சித்திரம்: இந்திரஜித்தின் வீட்டைக் காவல் காத்த லட்சணம்!                                                         13. இராவணனின் சிறப்பு பற்றிக் கம்பர் கூறும் ஒரு பாடலின் இரு வடிவங்கள்! – அவன் தரும் அரிய செய்தி!                             14. இராவணனை வென்றவனை வென்றவனை வென்றவன்: கம்பர் காட்டும் இரகசிய குறிப்பு                                         15. கம்பனை முழுதும் காண முயன்ற கே.என்.சிவராஜ பிள்ளை! – 1.  16. கம்பனை முழுதும் காண முயன்ற கே.என்.சிவராஜ பிள்ளை! – 2  17. கம்பனை முழுதும் காண முயன்ற கே.என்.சிவராஜ பிள்ளை! – 3   18. கம்பனை முழுதும் காண முயன்ற கே.என்.சிவராஜ பிள்ளை! – 4.  19. உவமைகளை அடுக்கும் உன்னதக் கவிஞர்!                         20. கவிஞன் தன் குறிப்பைச் சொல்லும் தற்குறிப்பேற்ற அணி!         21. வில்லிப்புத்தூராரின் மடக்கணி பாடல்! – 1                                                      22. வில்லிப்புத்தூராரின் மடக்கணி பாடல்! – 2                             23. இரண்டு பாடல்களில் மட்டுமே வரும் ஒரு அபூர்வ அணி –    ஒற்றைமணி மாலை அணி!                                      24. தங்கத் தமிழாம் சங்கத் தமிழ் தெய்வத் தமிழே!    25. ஒப்பற்ற தமிழின் உயர்வு!                                    26. தமிழில் அலங்காரம்!                                              27. தமிழில் உள்ள யமகப் பாடல்கள்!                                  28. யமகவந்தாதியின் பட்டியல்!                                      29. புலவர்களின் தமிழைப் பார்த்தார்கள்; ஜாதியைப் பார்க்கவில்லை!   30. ஜாதி பேதமற்ற சங்க இலக்கியப் புலவர்களுள் நால்வர்!          31. எந்தப் புலவருக்கு என்ன சிறப்பு! இதோ பட்டியல்!                32. தனிப்பாடல்களில் புலவர்கள், புலவர்கள் பல விதம்!               33. ஒவ்வொரு தமிழனும் படிக்க வேண்டிய பாடல்கள்! – 1            34. ஒவ்வொரு தமிழனும் படிக்க வேண்டிய பாடல்கள்! – 2

*

நூலில் இடம் பெறும் முன்னுரை இது:

முன்னுரை

உலகில் உள்ள மொழிகளில் எல்லாம் பழமையானதும்அழகியதும்இலக்கிய வளம் வாய்ந்ததும்இறைவனால் உருவாக்கப்பட்டு புலவர்களின் தலைவனாக அவனே அமர்ந்து வளர்த்த மொழி ஒன்றே. அது தமிழ் தான்!

இதைப் பற்றி எத்தனை ஆயிரம் நூல்கள் வேண்டுமானாலும் எழுதலாம். எழுதினாலும் தமிழின் சிறப்பை முற்றிலுமாக ஒருவர் சொல்லி விட்டதாக ஆகாது.

தமிழின் புதுப் புது பரிமாணங்களையும்வடிவங்களையும்ஆழத்தையும்அகலத்தையும் காட்டுவதற்கென்றே உதித்த தெய்வப் புலவர்கள் பலர்.

தெய்வப் புலவர் திருவள்ளுவர்சங்க காலப் புலவர்கள்திரு ஞான சம்பந்தர்திருநாவுக்கரசர்சுந்தரர்மாணிக்க வாசகர், 12 ஆழ்வார்கள்கவிச் சக்கரவர்த்தி கம்பன்வில்லிப்புத்தூரார்மஹாகவி பாரதியார் என்ற கவிஞர்களின் இந்தப் பட்டியல் மிக நீண்ட ஒன்று.

இந்தக் கவிஞர்களில் கம்பன் காட்டும் வண்ணக் காட்சிகள் பல. மகாபாரதத்தைத் தமிழில் தந்த வில்லிப்புத்தூராரின்  மாட்சியோ தனி.

சங்க காலத்தில் தமிழ்ப் புலவர்களின் ஆட்சியோ அதிசயிக்கத் தக்க ஒன்று.

இவை பற்றி அவ்வப்பொழுது எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இது.

இதை தமிழ் நெஞ்சங்களிடம் நூல் வடிவில் தருவதைப் பெரும் பேறாகக் கருதுகிறேன்.

நிலாச்சாரல் மின்னிதழ்www.tamilandvedas.com ப்ளாக் உள்ளிட்டவற்றில் வெளியான கட்டுரைகள் இவை.

இதை வெளியிட்ட திருமதி நிர்மலா ராஜு மற்றும் லண்டன் திரு ச.சுவாமிநாதன் ஆகியோருக்கு எனது உளம் கனிந்த நன்றி உரித்தாகுக்.

அழகிய முறையில்இதை நூலாக வெளியிட முன் வந்த Pustaka Digital Mediaவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக.

நன்றி.

சான்பிரான்ஸிஸ்கோ                                        . நாகராஜன்                                               1510-2022

*

நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.

இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.

சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in

என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்

தொடர்புக்கான தொலைபேசி எண் :   9980387852  

**

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: