போலந்து நாட்டின் பெயரில் பொலோனியம் Polonium Murder in London (Post No.11,571)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,571

Date uploaded in London – 21 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

இந்த பிளாக்கில்  வெளிவரும் 45ஆவது மூலகக்  கட்டுரை இது.

பொலோனியம் Polonium என்னும் மூலகத்துக்கு இரண்டு சிறப்புகள் உண்டு ; போலந்து Poland என்னும் நாட்டின் பெயரைத் தாங்கிய மூலகம் – தனிமம்- element– என்ற சிறப்பு. ஒன்று. இதனை முதலில் பிரித்துக்காட்டிய மேரி கியூரி என்ற பெண்மணி பிறந்த நாடு போலந்து .

இரண்டாவது சிறப்பு –மிக அதிகமான கதிவீச்சுடைய (radio active) மூலகம்; இதனால் மனித உயிருக்கு விஷம் (highly toxic)  போன்றது. அதாவது சயனைட்(Cyanide Poison) விஷத்தைவிட சக்தி வாய்ந்தது.

இந்தத் தனிமத்துக்கு (element) மனித உடலில் ஒரு பங்கும் இல்லை. மேலும் புறச் சூழலிலும் ஒரு கெடுதியும் செய்வதில்லை. ஏனெனில் வேகமாக அழிந்துவிடும் மூலகம் .

அணு சக்தி உலைகளிலும் சோதனைச் சாலைகளிலும் மட்டுமே இதற்கு வேலை.

 XXX

மேரி கியூரி (Marie Curie) ஆராய்ச்சி

கதிரியக்கம் உடலில் பட்டால் புற்று நோய் ஏற்பாட்டு உயிழக்க நேரிடும். அப்படி உயிரிழந்தவர் மேரி கியூரி .அவருக்கு நோபல் பரிசு கிடைத்தது. அவர் பெயரை கியூரியம் என்ற தனிமத்துக்கும் சூட்டினர்.

மேரி கியூரி 1934-ம் ஆண்டில் லூகேமியா (Leukaemia)  என்னும் ரத்தப் புற்றுநோயால் இறந்தார். இதற்கு காரணம் அவர் ரேடியம் (radium) என்னும் கதிரியக்க மூலகத்தில் நீண்ட ஆண்டுகள் ஆராய்ச்சி  செய்ததாகும் .அவருடைய மகளுடைய பெயர் ஐரீன் ஜுலியோட் கியூரி (Irene Joliot Curies) . அவரும் ரத்தப் புற்றுநோயால்தான் 1956ல் இறந்தார். அதற்குக் காரணம் பொலோனியம்.. அவர் ஆராய்ச்சி செய்த சோதனைச் சாலையில் 15 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பொலோனியம் குடுவை வெடித்ததால் நோய் ஏற்பட்டது .அவருக்கும் ஒரு நோபல் பரிசு கிடைத்தது.

மனித உடலில் 7 பைகோ கிராமுக்கு (Pico gram) மேல் பொலோனியம் சேர்ந்தால் மரணம் சம்பவிக்கும்..அதாவது இதே எடை நைட்ரஜன் சயனைடை விட ட்ரில்லியன் (Trillion) மடங்கு விஷம் வாய்ந்தது.

PICO GRAM : A unit of mass equal to 0.000 000 000 001 grams. Symbol: pg

TRILLION: a million million (1,000,000,000,000 or 1012).

கதிரியக்கம் உடைய ரேடான் வாயு , நாம் சுவாசிக்கும் காற்றில் இருப்பதால் நம் உடலிலும் பொலோனியம் இருக்கும் . அது ஆபத்தில்லாத அளவுதான்.

பொலோனியத்துக்கு  பல ஐசடோப்புகள் உண்டு .அதிக காலம்  கதிரியக்கம் உடையது பொலோனியம் 209. அதன் அரை வாழ்வு (Half Life)  102 ஆண்டுகள். அதாவது அதன் அளவு 102 ஆண்டுகளில் பாதியாகக் குறைந்துவிடும் .

பொலோனியம் 208 ன் அரை வாழ்வு –  3 ஆண்டுகள்

பொலோனியம் 210.ன் அரை வாழ்வு –  138 நாட்கள் .

இவை தவிர 30 ஐசடோப்புகள் இருக்கின்றன . அவைகளுக்கு அரை வாழ்வு வினாடிகள் முதல் நாட்கள் வரை ஆகும்.

தற்காலத்தில் ஈயம் அல்லது பிஸ்மத் மீது புரோட்டான், ட்யூட் றான் , ஆல்பா பார்ட்டிக்கிள்ஸை (Proton, Deuteron , a-paricles)  பாய்ச்சி பொலோனியத்தை உற்பத்தி செய்கின்றனர்.

xxx

ரசாயன குணங்கள் Chemical Properties)

ரசாயனக் குறியீடு – Po

அணு எண் -84

உருகு நிலை – 254 டிகிரி C

கொதி நிலை –962 டிகிரி C

வெள்ளியும் சாம்பலும் கலந்த நிறம் உடையது . இதை பாதி உலோகம் (SEMI METAL ) என்பர்.

நீர்த்த அமிலங்களில் கரையும்போது இளம் சிவப்பு திரவம் போல இருக்கும். ஆக்சிஜனுடன் கிரியை செய்வதனால்  விரைவில் மஞ்சள் நிறமாகிவிடும். பொலோனியத்தை அதற்குரிய பெட்டியில் அடைத்து வைக்காவிடில் மூன்றே நாட்களில் பாதியாகக் குறைந்து விடும்.

பயன்கள்

ஒருகாலத்தில் பொலோனியத்தை போட்டோகிராபிக் பிளேட்டுகள் செய்யவும், ஜவுளி, பஞ்சாலைகளிலும் பயன்படுத்தி வந்தனர். இப்போது கதிர்வீச்சு  தேவைப்படும் ஆராய்ச்சி நிறுவனங்களில், ஆல்பா ரேடியேஷன், நியூட்ரான் வீச்சு தேவைப்படும் இடங்களில் பயன்படுத்தப்படுகிறது.

XXX

கிடைக்கும் இடம்

ஒரு டன் யுரேனியம் தாதுவில் 100 மைக்ரோ கிராம் அளவே பொலோனியம் இருக்கும்.1898ல் பாரிஸ் நகரில் கணவர் பியர் கியூரியுடன் சேர்ந்து அரும்பாடுபட்டு மேரி கியூரி , பொலோனியத்தைப் பிரித்தெடுத்தார் .பிட்ச் பிளேன்ட் என்னும் யுரேனியம் தாதுவை வாங்குவதற்கு அவர்களுக்கு ஆஸ்திரிய அரசு உதவியது .1891-ம் ஆண்டிலேயே இப்படி ஒரு தனிமம் இருக்கவேண்டும் என்று (Periodic Table) பிரியாடிக் டேபிளை உருவாக்கிய மெண்டலியேவ் அறிவித்துவிட்டார். .

இப்போது கதிர் வீச்சு மூலம் 100 கிராம் மட்டுமே இது தயாரிக்கப்படுகிறது ஒரு கிராம் பொலோனியம்  உடைய சிறிய குப்பி, 500 டிகிரி C  வெப்பத்தை உருவாக்கும்.அந்த அளவுக்கு அதில் கதிர்வீச்சு இருக்கும் . இதன் காரணமாக தற்காலத்தில் இதை விண்கலங்களில் பயன்படுத்துகின்றனர்

–சுபம்–

TAGS -பொலோனியம் ,போலந்து , கதிர்வீச்சு , மேரி கியூரி, POLONIUM

Murder by Polonium -210 (BBC Report)

Newsnight’s Richard Watson tells the inside story of a perplexing murder.

Wednesday, 1 November 2006 – a crisp, autumn day in London. The capital was heading for a beautiful weekend.

Security cameras captured Alexander Litvinenko on his way to meet two former colleagues from the murky world of Russian intelligence. The grainy black-and-white images show him walking out of frame as he entered the upmarket Millennium Hotel in Grosvenor Square in the heart of Mayfair.

He drank tea that day laced with a lethal dose of radioactive polonium.

Twenty-two days later, he was dead.

Alexander Litvinenko was taken ill just hours after his meeting at the Millennium Hotel’s Pine Bar with Andrei Lugovoi and Dmitry Kovtun, the two former Russian spies he counted as business contacts, even friends. He was admitted to his local hospital in north London on 3 November, vomiting and in great pain.

Xxxx

When the mystery deepened

As a last resort, it was decided to send small blood and urine samples to Britain’s top-secret nuclear research site at Aldermaston in Berkshire.

Scientists at Aldermaston are more accustomed to working with nuclear weapons, but they used their expertise to search for radioactive poison. They first used a technique called gamma spectroscopy. This advanced analytical technique involves passing energy through the sample in a vacuum to search for radioactive elements emitting gamma rays. Each element has a unique signal at a particular energy level.

The results looked negative. However, they noticed a small spike in the read-out, barely above background levels, at an energy of 803 Kilo electron volts (KeV).

By pure chance another Aldermaston scientist, who’d worked on Britain’s early atomic bomb programme decades ago, happened to overhear his colleagues discussing this small spike in the trace. He recognised it immediately as the small gamma ray signal from polonium-210. He knew this because polonium-210 was a vital component of early nuclear bombs.

Xxx

What is polonium-210?

  • Naturally occurring radioactive material that emits highly hazardous alpha (positively charged) particles
  • First discovered by Marie Curie at the end of the 19th Century
  • There are very small amounts of polonium-210 in the soil and in the atmosphere, and everyone has a small amount of it in their body
  • At high doses, it damages tissues and organs
  • It cannot pass through the skin, and must be ingested or inhaled into the body to cause damage
  • Historically called radium F, is very hard for doctors to identify

Xxx

Alexander Litvinenko had drunk contaminated tea at his meeting at the Millennium Hotel. He was being killed from the inside.

100 British detectives and 20 scientists solved the mystery.

When the polonium was discovered, his wife Marina Litvinenko was told it was not safe to stay at her home. “I lost everything. I had only 15-20 minutes to get some things with me, and be out of the house.” She said

Xxx

Polonium Trail

The polonium trail started on 16 October 2006 when Litvinenko met Lugovoi and Kovtun in London. The sushi bar where they had lunch was contaminated. This is thought to be the day of a first murder attempt.

They spent the night at the Best Western Hotel in Shaftesbury Avenue. Heavy contamination was later found in both their rooms.

Lugovoi was back in London on 25 October. His room at the Sheraton, Park Lane, was contaminated.

Three days later he flew from Moscow to London. Polonium was found on his British Airways flight.

And Kovtun flew from Moscow to Hamburg on 1 November. Again polonium was found at locations he visited in the city.

This was the day when both Kovtun and Lugovoi met Litvinenko in the Pine Bar at the Millennium Hotel – the place with some of the most heavily contaminated locations of all.

Hotel security cameras captured Lugovoi, and then Kovtun, visiting the bathroom opposite the Business Centre before Litvinenko arrived. Lugovoi has his hand deeply buried in his pocket. Was he carrying the poison?

He says not, but sinks and a hand-dryer were later found to have been heavily contaminated with polonium-210, as was one toilet cubicle door.

When Lugovoi and Kovtun’s movements were mapped against the sites of polonium contamination, there was an exact match. The evidence of guilt was strong. In May 2007, the then Director of Public Prosecutions Ken Macdonald announced that Andrei Lugovoi was to be charged with murder and his extradition would be sought from Russia. Kovtun was charged in 2010.

Xxx

Russia denies

Officially, Russia continues to deny any involvement in the murder. Andrei Lugovoi was made a member of Russia’s parliament in 2007 – giving him immunity from prosecution – and just this year Putin awarded him a medal for services to the motherland. He now has his own TV show called Traitors. He organised a lie detector test in Russia to prove his innocence.

The other prime suspect, Dmitry Kovtun, is now a business consultant in Russia. He was due to give evidence to the public inquiry this week, but – at the last minute – pulled out. He said he had been unable to get permission from Russian authorities.

— subham—

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: