அம்பலவாணரும் அப்பரும் செப்பியது ஒன்றே (Post No.11,675)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,675

Date uploaded in London – –  16 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

அம்பலவாணரும் அப்பரும் செப்பியது ஒன்றே ! 

உடலிலுள்ள ஒவ்வொரு அங்கமும் இறைவனைத் தொழுவதற்குத்தான் உள்ளது என்ற விஷயம் அப்பர் பாடிய தேவாரத்தில்   திரு அங்கமாலை என்னும் பதிகத்தில் உள்ளது. அதர்வண வேதத்திலும் இதே  கருத்து இருக்கிறது அம்பலவாணரும் அதே கருத்தை இறைவனின் அடியார்களிடத்தில் எதிரொலிக்கிறார்.

ஹஸ்தெள  ச பாதெள நயனே ப்ரஸன்னே

கர்ணெள சுதீக்ஷ்ணெள  வதனம் ச காந்தம் 

நாஸா சு ரம்யா மனநாய சித்தம்

ஈ சேன  தத்தம் ததிதம் ஸமக்ரம்

— என்று ஸம்ஸ்க்ருதத்தில் ஒரு ஸுபாஷிதம் / பொன்மொழிப்பாடல் – உள்ளது.

இதன் பொருள்

இரண்டு கைகள், கால்கள், கண்கள் , காதுகள், அழகிய முகம் , மூக்கு, சிந்திப்பதற்காக ஒரு மனம் — இவையாவும் நல்வழியில் செயல்படவே இறைவனால் கொடுக்கப்பட்டுள்ளன .

ஆதி  சங்கரரும் பஜ கோவிந்தத்தில் சத் சங்க மஹிமையை ஸத்சங்கத்வே நிஸ்ஸங்கத்வம் — என்ற பாடலில் எடுத்துரைக்கிறார் .

ஆயினும் தமிழில் மிக எளிமையாகச் சொன்னது அவ்வையார்தான்

நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க

நல்லார்சொல் கேட்பதுவும் நன்றே – நல்லார்

குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோ(டு)

இணங்கி இருப்பதுவும் நன்று— அவ்வையார்

Xxxx

அப்பர் பாடிய திரு அங்க மாலை பதிகத்தில் இருந்து பாடல் முதல் வரிகளை மட்டும் காண்போம்

தலையே நீ வணங்காய் – தலை மாலை தலைக்கணிந்து

தலையாலே பலி தேரும் தலைவனைத்

தலையே நீ வணங்காய்

கண்காள் காண்மின்களோ – கடல்

நஞ்சுண்ட கண்டன்றன்னை…………

செவிகாள் கேண்மின்களோ – சிவன்

எம்மிறை செம்பவள……………………………

மூக்கே நீமுரலாய் – முது

காடுறை முக்கணனை………………………….

வாயே வாழ்த்துகண்டாய் – மத

யானை யுரிபோர்த்துப்……………………………….

நெஞ்சே நீநினையாய் – நிமிர்

புன்சடை நின்மலனை……………………………

கைகாள் கூப்பித்தொழீர் – கடி

மாமலர் தூவிநின்று……………………………………..

ஆக்கை யாற்பயனென் – அரன்

கோயில் வலம்வந்து

பூக்கையா லட்டிப் போற்றியென் னாதஇவ்

ஆக்கை யாற்பயனென்.

கால்க ளாற்பயனென் – கறைக்

கண்ட னுறைகோயில்……………………………

என்று ஒவ்வொரு பாட்டும் ஒரு அங்கத்தின் பயன், இறைவனைத் தொழுவதற்கானதே என்று சொல்கிறார்.

XXXX

இதோ இறைவனின் அடியார்கள் பற்றி சதகத்தின் பாடலும் பொருளும்:–

              76. நற்சார்பு

காணரிய பெரியோர்கள் தரிசனம் லபிப்பதே

     கண்ணிணைகள் செய்புண் ணியம்;

  கருணையாய் அவர்சொல்மொழி கேட்டிட லபிப்பதுஇரு

     காதுசெய் திடுபுண் ணியம்;

பேணிஅவர் புகழையே துதிசெய லபித்திடுதல்

     பேசில்வாய் செய்புண் ணியம்;

  பிழையாமல் அவர்தமைத் தொழுதிட லபிப்பதுகை

     பெரிதுசெய் திடுபுண் ணியம்;

வீணெறிசெ லாமலவர் பணிவிடை லபிப்பதுதன்

     மேனிசெய் திடுபுண் ணியம்;

  விழைவொடவர் சொற்படி நடந்திட லபிப்பதே

     மிக்கபூ ருவபுண்ணியம்;

ஆணவம் எனுங்களை களைந்தறி வினைத்தந்த

     அண்ணலே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

     (இ-ள்.) ஆணவம்எனும் களைகளைந்து அறிவினைத் தந்த அண்ணலே

– நான் என்னும் களையை யெடுத்து, அறிவையருளிய பெரியோனே!, அருமை

….. தேவனே!, காண்அரிய பெரியோர்கள் தரிசனம் லபிப்பது

கண்இணைகள்செய் புண்ணியம் – பார்த்தற்கரிய பெரியோர்களின் தரிசனம் கிடைப்பது இருவிழிகளின் நல்வினையாகும்கருணையாய் அவர் சொல்மொழி

கேட்டிட லபிப்பது இரு காது செய்திடு புண்ணியம் – அவர்கள் அருளுடன் கூறும்மொழியைக் கேட்கக் கிடைப்பது இரு காதுகளும் செய்த நல்வினையாகும்,

அவர் புகழையே பேணித் துதிசெய லபித்திடுதல் பேசில்வாய் செய்புண்ணியம்

– அவர்களுடைய புகழையே விரும்பிப் போற்றிடக் கிடைப்பது கூறினால் வாய்செய்த நல்வினை ஆகும், அவர்தமைப் பிழையாமல் தொழுதிட லபிப்பது

கைபெரிது செய்திடு புண்ணியம் – அவர்களைத் தவறாமல் வணங்கக்

கிடைப்பது கைகள் பெரிதும் செய்து நல்வினையாகும், வீண்நெறி செலாமல்

அவர் பணிவிடை லபிப்பது தன்மேனி செய்திடு புண்ணியம் – பயனற்ற

வழிகளிற் செல்லாமல் அவர்களுக்குத் தொண்டு செயக் கிடைப்பது தன்மெய் செய்திட்ட நல்வினை ஆகும். விழைவொடு அவர் சொற்படி நடந்திட

லபிப்பது மிக்க பூருவ புண்ணியம் – விருப்பத்துடன் அவர் கூறியவாறு

நடந்திடும் பேறு கிடைப்பது முற்பிறப்பிற் செய்த பெரிய வினையாகும்.

 —SUBHAM—-

 tags-  நல்லோர், சத் சங்கம், அம்பலவாணர் , சான்றோர் , ஒளவையார் ,அப்பர், அங்க மாலை 

மயூர கவியின் சூர்ய சதகத்தில் ஒரு அற்புதமான ஸ்லோகம்! (Post.11,674)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,674

Date uploaded in London –  16 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com 

மயூர கவியின் சூர்ய சதகத்தில் ஒரு அற்புதமான ஸ்லோகம்!

ச.நாகராஜன்

மயூர கவி இயற்றிய சூரிய சதகத்தில் 36, 70, 94 ஆகிய மூன்று ஸ்லோகங்களில் அவர் ஒரே அக்ஷரத்தைப் பல முறை பயன்படுத்தி இருக்கிறார், அதனால் அந்த அக்ஷரம் வலூவூட்டப்பட்டு ஒரு வித மந்திரசக்தியை ஏற்படுத்துகிறது என்பதை சென்ற கட்டுரையில் குறிப்பிட்டோம்.

எடுத்துக்காட்டாக 36வது ஸ்லோகத்தை விரிவாகப் பார்த்தோம்.

அடுத்து இங்கு 70வது ஸ்லோகத்தைப் பார்ப்போம்.

நி: ஸ்பந்தானாம் விமாந வஸி

  விததிவாம் தேவவ்ருந்தாரகாணாம்

வ்ருந்தை: ஆனந்த – ஸாத்ரோத்யமமபி

  வஹதாம் விந்ததாம் வந்திதும் நோ |

மந்தாகின்யாம் – அமந்த: புலிநப்ருதி

  மருதுர்மந்தரே  மந்திராபே

மந்தாரை: மண்டிதாரம் தததரி

   திநக்ருத் ஸ்யந்தந: ஸ்தான்முதே வ: ||

மயூர கவி இந்த அற்புதமான ஸ்லோகத்தில் சூரிய ரதத்தின் வேகத்தைக் குறிப்பிடுகிறார்.

பாடலின் திரண்ட பொருள் :-

பெரிய மாடங்களைக் கொண்டு அதில் வாழும் தேவர்கள் மகிழ்ச்சி பொங்க சூரியனைக் கண்டு வணங்க விமானங்களில் செல்கினறனர்.  ஆயினும் அவர்களால் வணங்க முடியாதபடி மிகவும் தூரத்தில் சூரியன் இருக்கிறான். காரணம் சூரியனின் உத்வேகமே. சூரிய ரதத்தைத் தொடர்ந்து தேவ விமானங்கள் செல்ல முடியாமல் அவை ஆங்காங்கே நிற்கின்றன.

இவ்வளவு வேகமுடன் செல்கின்ற ரதம் ஆகாய கங்கையான மந்தாகினி மணற்பரப்பில் வேகம் குறையாமல் செல்லும் போதே, நகரம் போலக் காணப்படும் மந்தா மலைக் குன்றின் முகடுகளிலும் , குகைகளிலும் மெல்ல மெல்லச் செல்கின்றது. இத்தகைய சிறப்புடையதும் மந்தார மலர்களால் அலங்கரிக்கப்பட்டதுமான சூரியனின் ரதம் உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கட்டும்.

இங்கு நாம் ரசிக்க வேண்டியது சூரியனின் ரதம் செல்லும் பாணியையே. பொதுவாக ஜனசந்தடி அதிகமுள்ள ஒரு நகரத்தில் ரதம் செல்லும் போது அது மெதுவாகவே செல்ல வேண்டி வரும். ஆனால் ஜன நடமாட்டமே இல்லாத இடத்தில் அதன் வேகம் கூடுதலாகும்.

இங்கு மாடமாளிகை போல உள்ள மந்தார மலைக் குன்றுகளில் மெதுவாகவும் ஜன சஞ்சாரமற்ற மந்தாகினி மணற் பரப்பில் வேகமாகவும் சூரிய ரதம் செல்கிறது. இதை மெல்ல மெல்லச் செல்லும் சூரிய ரதம் என மயூர கவி அழகுறக் குறிப்பிடுகிறார்.

இந்த ஸ்லோகத்தில் ‘ந்த’ என்னும் அக்ஷரம் 12 முறைகளுக்கும் மேலாக வருவதைக் காணலாம்.

உரை நூல்கள்

சூரிய சதகத்திற்கு  15 உரை நூல்கள் உள்ளன.

அவையாவன:

1)  மதுசூதனர் இயற்றிய பாவபோதினீ  என்னும் உரைநூல்

2)  ஜகன்நாதர் இயற்றிய உரை நூல்

3)  வல்லபதேவர் இயற்றிய ஸூர்யானுவாதினீ என்னும் உரை நூல்

4)  யக்ஞேஸ்வர சாஸ்திரி இயற்றிய உரை நூல்

5)  திரிபுவநபாலர் இயற்றிய உரை நூல்

6)  ஜயமங்களர் இயற்றிய உரை நூல்

7)  ரங்கதேவர் இயற்றிய உரை நூல்

8)  கங்காதரர் இயற்றிய உரை நூல்

9)  பாலமபட்டர் இயற்றிய உரை நூல்

10)ஹரிவம்சர் இயற்றிய உரை நூல்

11) கோபிநாதசூரி இயற்றிய ப்ரபாவளீ என்னும் உரை நூல்

12) ராமபட்டர் இயற்றிய உரை நூல்

13) அன்வயமுகர் இயற்றிய உரை நூல்

14)ராமச்சந்திரர் இயற்றிய உரை நூல்

15) லிங்கையர் இயற்றிய உரை நூல்

இவற்றில் பல நூல்கள் இன்னும் அச்சிடப்படவில்லை.

சுவடியில் இருந்த மயூர பட்டரின் சூர்ய சதகம் நூலை சரஸ்வதி மஹால் ஆராய்ந்து வெளியிட்டுள்ளது.

மேலே உள்ள தமிழ் அர்த்தம் சிறந்த ஆய்வை மேற்கொண்ட வேதாந்த சிரோம்ணி, தமிழ் வித்வான் திரு என்.சீனிவாசன், ஸம்ஸ்கிருத பண்டிதர், சரஸ்வதி மஹால், தஞ்சாவூர் அவர்களால் ஆய்ந்து எழுதப்பட்டு 1998ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

நன்றி : திரு என். சீனிவாசன்

   சரஸ்வதி மஹால் நூல் நிலையம்

***

Interesting Titbits from Valmiki Ramayana (Post No.11,673)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,673

Date uploaded in London – –  15 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Sita using old proverb to avoid suicidal thoughts:-

Sundara kanda 5-33- 10/11 (Hanuman says)

रोदनादतिनिश्श्वासाद्भूमिसंस्पर्शनादपि।।5.33.10।।

न त्वां देवीमहं मन्ये राज्ञ स्सर्वज्ञावधारणात्।

“From your weeping, your sighing and your touching the earth (gods do not touch the earth) and your signs of sovereignty, I do not think you are a goddess (meaning otherwise she possessed divine grace).

व्यञ्जनानि च ते यानि लक्षणानि च लक्षये।।5.33.11।।

महिषी भूमिपालस्य राजकन्या च मे मता।

I do not think you can be a divine creature, for I see you weep, breathe heavily; also that your feet touch ground. I also think that you might be Sita herself because I hear you say Rama, Rama. Certainly I must be right in guess. Then she reveals her identity and at the end days,

xxxx

V-33-31/32 (Sita speaks)

द्वौ मासौ तेन मे कालो जीवितानुग्रहः कृतः।।5.33.31।।

ऊर्ध्वं द्वाभ्यां तु मासाभ्यां ततस्तक्ष्यामि जीवितम्।

“That awful being has given me two months respite. If during these two months I be not rescued, then the only alternative is for me to take my life.

Then Sita says, slowly making up her mind that this is Hanuman. I have heard of the famous proverb which has come down to us from all time.

V -34-6

Provided only life is granted to us, we need not at anytime give up hope. After a time at least , prosperity must return to everybody. I thought I was not going to live, but now you come here, sent by Sri Rama

कल्याणी बत गाथेयं लौकिकी प्रतिभाति मा।

एति जीवन्तमानन्दो नरं वर्षशतादपि।।5.34.6।।

“The adage that ‘joy comes to a living being even though it be at the end of a hundred years’ is popular. It appears true in my case”.

Xxx

73 TIMES ‘kaschit

Then to comfort herself , she puts a series of questions to hanuman , all in the style in which in the Ayodhya Kanda Rama puts questions about the kingdom to Bharata in that famous ‘kaschit, kaschit’ repeated 73 times in 76 slokas.

Kaścit (कश्चित्).—ind. Some boby, some one, a certain one:

Sita addresses to hanuman twenty two questions about her husband and Lakshmana and others, then she says

V -36-30/31

“My lord and husband Rama has none on earth so dear as myself.  A dearer person there cannot be, not his mother, not his father, not his brothers, no one. Nor is there one who is of the same degree. I shall live only so long as I hear about him and his movements”.

 The poet cleverly uses Rama four times.

न चास्य माता न पिता च नान्यः स्नेहाद्विशिष्टोऽस्ति मया समो वा।

तावत्त्वहं दूत जिजीविषेयं यावत्प्रवृत्तिं शृणुयां प्रियस्य।।5.36.30।।

इतीव देवी वचनं महार्थं तं वानरेन्द्रं मधुरार्थमुक्त्वा।

श्रोतुं पुनस्तस्य वचोऽभिरामं रामार्थयुक्तं विरराम रामा।।5.36.31।।


Then Hanuman replies in tender slokas. Of course Hanuman makes his gesture always when he addresses Rama or Lakshmana

Shirasya anjalim aadhaaya

Keeping his hands over his head , to do namaste.

–From Lectures on The Ramayana by The Rt. Honourable V S Srinivasa Sastri

tags- Titbits, Valmiki, Ramayana, Hanuman, Sita

மயூர கவியின் சூர்ய சதகம்! (Post No.11,672)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,672

Date uploaded in London –  15 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஜனவரி 15,2024 மகர சங்கராந்தி நன்னாள். சூரியனை வழிபடுவோம்; உயர்வோமாக!

மயூர கவியின் சூர்ய சதகம்!

ச.நாகராஜன்

1

ஹர்ஷ சக்ரவர்த்தியின் அவையில் அவைப் புலவராக இருந்தவர் மாபெரும் கவிஞர் மயூர கவி.

அவருக்கு கொடிய நோயான குஷ்ட ரோகம் பிடித்தது.

இதனால் அவர் அரசவையிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

இதனால் மனம் நொந்து போன மயூர கவி சூரியனை உபாசிக்கலானார்.

சூரியனின் வழிபாட்டால் அவன் அருள் அவருக்குக் கிடைக்க அவரது கொடிய குஷ்டம் நீங்கியது.

2

அற்புதமான நூலான சூரிய சதகத்தில் சதகம் என்ற சொல்லின் பொருளுக்கு ஏற்ப நூறு ஸ்லோகங்கள் உள்ளன.

சொற்சுவையும் பொருள் சுவையும் கொண்ட இந்த ஸ்லோகங்கள் மந்திர சக்தியைக் கொண்டிருப்பதால் சூரியனின் அருளையும் பெற்றுத் தர வழி வகுப்பவை.

இதில் இன்றைய அறிவியல் கூறி நிரூபிக்கும் ஏராளமான கருத்துக்கள் உள்ளன.

தன் யோக சக்தியாலும், தவ மகிமையாலும், சூரியனின் அருளாலும் இந்தப் பேருண்மைகள் அவருக்குக் கிடைக்க அதை அவர் அப்படியே ஸ்லோகங்களில் பதித்தார்.

இந்த ஸ்லோகங்கள் மந்திர சக்தி உடையவை என்பதற்குப் பல ஆதாரங்கள் உள்ளன.

ஒரே அக்ஷரத்தை சில ஸ்லோகங்களில் அவர் பயன்படுத்துகிறார்.

இதன் மூலம் அந்த அக்ஷரத்திற்கான சக்தியை வலுவூட்டி மந்திர சக்தியையும் வலுப்படுத்தி, இதைப் பாராயணம் செய்வோருக்கு சூரிய அருள் கிடைத்து அதனால் ஏராளமான நலன்களும் பலன்களாகக் கிடைக்க அவர் வழி வகை செய்திருக்கிறார்.

குறிப்பாக மூன்று ஸ்லோகங்களைச் சொல்லலாம்.

ஸ்லோகம் 36இல் ‘த்ய’ என்ற அக்ஷரம் பல முறை வருகிறது.

ஸ்லோகம் 70இல் ‘ந்த’ என்னும் அக்ஷரம் பல முறை வருகிறது.

ஸ்லோகம் 94இல் ‘ச’ என்னும் அக்ஷரம் பல முறை வருகிறது.

3

ஸ்லோகம் 36ஐ இங்கு காண்போம்:

கந்தர்வை: கத்ய பத்ய

    வ்யதிகரித்வகோ ஹ்ருத்யமாதோ த்யவாத்யை:

ஆத்யைர்யோ நாரதாத்யை:

    முநிபிரப்பிநுதோ வேதவேத்யைர் விபித்ய |

ஆஸாத்யாபத்யதே யம்

   புநரபி ச ஜகத்யௌவநம் ஸத்ய உத்யந்

உத்யோதோ த்யோதிதத்யௌ: த்யது

    திவஸக்ருதோ (அ) ஸாவவத்யாநி வோத்ய ||

த்ய என்ற அக்ஷரம் இந்த ஸ்லோகத்தில் குறைந்த பட்சம் 18க்கும் மேற்பட்ட தடவைகள் வருவதைக் காணலாம்.

சூரியனின் புதிய ஒளியைக் காண்கின்றனர் கந்தர்வர்கள். அவர்களுக்கு மகிழ்ச்சி ஏற்பட சூரியனை வணங்கித் துதித்து வாத்தியங்களுடன் அவனது புகழிசை பாடுகின்றனர் என்கிறார் கவிஞர்.

எவனுடைய ஒளி பெற்று உலகம் அன்றாடம் உற்சாகம் மிக்க யௌவனப் பருவத்தை அடைகின்றதோ அவன், இனிமையான சொற்களைக் கொண்டு புனைந்த உரைநடையாலும், செய்யுள்களாலும், இன்னிசைக் கருவிகளுடன் கந்தர்வர்களால் துதிக்கப் படுகின்றான். வேதங்களில் வல்லவர்களான தும்புரு நாரதர் உள்ளிட்ட முனிவர்களால் துதிக்கப்படுகின்றவனும், ஆகாயத்தில் பிரகாசிக்கின்றவனுமாகிய சூரியனின் புத்தம் புதிய, அப்போதே தோன்றிய ஒளியானது உலகைப் புதிய யௌவனப் பூரிப்புடன் விளங்கச் செய்கிறது.

அது உங்களுடைய பாவங்களை அழிக்கட்டும்.

இந்த ஸ்லோகத்தில் ‘ஆதோத்ய வாத்யை’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

‘ஆதோத்ய வாத்யம்’ என்பவை விரல்களால் இயக்கப்படுபவை ஆகும்.

இவை நான்கு வகைப்படும்.

அவையாவன : 1) ததம் – தந்தி வாத்தியங்கள் – வீணை, தம்பூர் முதலியன.

2) வித்தம் – ஜாலர், சதங்கை முதலியன (உலோக வாத்தியங்கள்.

3) ஆனந்தம் – முரசு, மத்தளம் போன்ற தோல் கருவிகள்.

4) சுஷிரம் – புல்லாங்குழல், நாதஸ்வரம் போன்ற துளைக் கருவிகள்.

இப்படி இந்த நூலுக்கு உரை எழுதியுள்ள த்ரிபுவனபாலர் குறிப்பிட்டுள்ளார்.

4

அற்புதமான இந்த மகர சங்கராந்தி நாளில் சூரியனை வழிபடுவோம். மயூர பட்டர் இயற்றிய சூரிய சதகத்தைச் சொல்லி சூரியனைத் துதிப்போம்; அவன் அருளைப் பெறுவோம்.

நோயில்லா அருள் வாழ்வைப் பெற்று, செல்வச் செழிப்புடன் வாழ்ந்து அனைவருக்கும் உதவி, சேவை புரிந்து நீண்ட நாள் வாழ்வோமாக!

சூர்யாய நம:

***

சூர்ய சதகம் – Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › ச…

5 Jan 2018 — மயூர பட்டர் துக்கத்தினால் அழ, அவரது நிலையைக் 

என்ன இலையில் சாப்பிடலாம் ? கவிஞன் யார் ? (Post.11,671)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,671

Date uploaded in London – –  15 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

அறப்பளீசுர சதகத்தில் மேலும் 3 பாடல்களை எடுத்துக் கொள்வோம். ஒன்று, என்ன இலையில் சாப்பிட வேண்டும் என்று கூறுகிறது. இரண்டு பாடல்கள் கவிஞர்கள் பற்றியவை..

வாழை இலையில் சாப்பிட்டால் நல்லது என்பது எல்லோரும் அறிந்ததே, நிறைய பேர்,  தாமரை இலையில் சாப்பிடுகின்றனர். கிராமப்  புறத்தில் மந்தாரை முதலிய இலையில் சாப்பிடுவார்கள்; பல இலைகளை ஒன்றாகச் சேர்த்து தையல் இலை என்று பயன்படுத்துவார்கள்.

நான் மந்த்ராலயத்தில் உள்ள ராகவேந்திரர் சமாதிக்குச் சென்றபோது தையல் இலையில்தான் சாப்பாடு போட்டார்கள்.

அந்தக் காலத்தில் பல ரயில்வே ஸ்டேஷன்களில்  வடை, இட்லி, போண்டா  முதலியவற்றை இலையில் மடித்துத்தாஹ்ன் விற்றார்கள். இப்பொழுது மேற்கு நாடுகளில் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்து சிறிது சிறிதாக அகற்றி வருகிறார்கள்.. இபொழுது சணல் பைகள் விற்பனையாகின்றன. இன்னும் கொஞ்ச்ம காலத்துக்குப்பின்னர் தையல் இலைகள், தொன்னை ஆகியன மேலை நாடுகளில் உபயோகத்துக்கு வரலாம்..

தையல் இலை (Patravali or Pattal or Vistaraku or Vistar or Khali ) என்பது உணவு உண்ண உலர்ந்த இலைகளைக் கொண்டு செய்யப்படும் உண்கலமாகும். இது பெரும்பாலும் குங்கிலிய இலை, மந்தார இலை ஆகியவற்றைக் கொண்டு செய்யப்படுகிறது. ஆலிலையும் இதற்குப் பயன்படுத்தப்படுகிறது என்று விக்கிபீடியா கூறுகிறது கர் நாடகத்தில் உள்ள தர்மஸ்தலாவில் உள்ள மஞ்சுநாதர் சுவாமி கோயிலில்  அன்னதானத்திற்கு இப்போதும் இந்த தையல் இலைகளே பயன்படுத்தப்படுகின்றன.

(மதுரையில் தேர்முட்டி / கீழ மாசிவீதியில் உள்ள பல சரக்குக்கடைகளில் 50 ஆண்டுகளுக்கு முன்னர் நானே தையல் இல்லை, தொன்னை ஆகியவற்றை வாங்கியது நினைவுக்கு வருகிறது.)

xxxx

வாழையிலைபுன்னைபுரசு,குருக்கத்திமாபலாதெங்குபன்னீர் இலைகள் நல்லவை.

அடுத்த பாடலில் கஞ்சனை கர்ணன் என்றும்,அவலட்சணமானவனை மன்மதன் என்றும்,ஆண்மையற்றவனை அர்ஜுனன் என்றும் பொய்யனை அரிச்சந்திரன் என்றும் ,புகழாதீர்கள் என்கிறார்.

Xxx

அடுத்த பாடலில் கவிஞன் என்பவனுக்கு என்ன தெரிந்திருக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு கடல் மடை திறந் தாற்போல சொற்பொழிவு ஆற்றும் திறன் வேண்டும் என்கிறார். இதைப் படிக்கும்போது பாரதியின் வரிகள் நமக்கு நினைவுக்கு வரும்

உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின்

வாக்கினிலே ஒளி உண்டாகும்

வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும்

கவிப்பெருக்கும் மேவுமாயின்

பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்

விழிபெற்றுப் பதவி கொள்வார்

தெள்ளுற்ற தமிழமுதின் சுவை கண்டார்

இங்கமரர்  சிறப்புக்  கண்டார்– பாரதி 

xxxxx

வெங்கடேச ரெட்டப்ப பூபதி க்கு பாரதி  எழுதியது :

ராஜமகா ராஜேந்த்ர  ராஜகுல ……..

புவியனைத்தும் போற்றிடவான் புகழ்படைத்துத்

தமிழ்மொழியைப் புகழி லேற்றும்

கவியரசர் தமிழ்நாட்டுக் கில்லையெனும்

வசையென்னாற் கழிந்த தன்றே!

சுவைபுதிதுபொருள்புதிதுவளம்புதிது,

சொற்புதிது சோதி மிக்க

நவகவிதைஎந்நாளும் அழியாத

மகாகவிதை” என்று நன்கு. —— பாரதி 

இந்த வரிகள் பாரதியாருக்குத்தான் அதிகம் பொருந்தும்

Xxxx

MY OLD ARTICLES ON THE SAME TOPIC

வாழை இலை – Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › வ…

·

சாப்பிடக் கூடாத இலைகள் எவை? சதகம் என்றால் 100 பாடல்களின் தொகுப்பு என்று அர்த்தம்.

பரிமாறும் முறை, வாழை இலை, தையலலிலை

https://tamilandvedas.com › tag › பர…

15 Dec 2015 — வாழை இலை கிடைக்காத பட்சத்தில் ஆல், பலா அல்லது மந்தாரை இலைகளைக் கொண்டு …

73. உண்டியிலையும் முறையும்

வாழையிலை புன்னைபுர சுடன்நற் குருக்கத்தி

     மாப்பலாத் தெங்கு பன்னீர்

  மாசிலமு துண்ணலாம்; உண்ணாத வோ அரசு

     வனசம் செழும்பா டலம்

தாழையிலை அத்திஆல் ஏரண்டபத்திரம்

     சகதேவம் முள்மு ருக்குச்

  சாருமிவை அன்றி, வெண் பாலெருக் கிச்சில்இலை

     தனினும்உண் டிடவொ ணாதால்;

தாழ்விலாச் சிற்றுண்டி நீரடிக் கடிபருகல்

     சாதங்கள் பலஅ ருந்தல்

  சற்றுண்டல் மெத்தவூண் இத்தனையும் மெய்ப்பிணி

     தனக்கிடம் எனப்ப ருகிடார்;

ஆழிபுடை சூழுலகில் வேளாளர் குலதிலகன்

     ஆகும்எம தருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே.

     (இ-ள்.) ஆழிபுடை சூழ்உலகில் வேளாளர் குலதிலகன் ஆகும் –

நாற்புறமும் கடல்சூழ்ந்த உலகில் வேளாளர் மரபிற் சிறப்புற்றவன் ஆகிய,

எமது அருமை ….. தேவனே!, வாழையிலைபுன்னைபுரசுடன்,

நல்குருக்கத்திமாபலாதெங்குபன்னீர் (ஆகிய இலைகளில்) மாசுஇல் அமுது உண்ணலாம் – குற்றமற்ற உணவை உண்ணலாம், உண்ணாதவோ – உண்ணத்தகாதனவோ எனில், அரசுவனசம்செழும்பாடலம்தாழையிலை,அத்திஆல்ஏரண்ட பத்திரம்சகதேவம் முள்முருக்கு, சாரும் இவை அன்றி – பொருந்திய இவற்றிலே அன்றி, வெண்பால் எருக்கு இச்சில் இலைதனிலும் உண்டிட ஒணாதுஆம் – வெண்மையான பாலையுடைய

எருக்கிலைஇச்சில் இலைகளிலும் உண்பது தகாது ஆகும், தாழ்வுஇலாச்

சிற்றுண்டி நீர் அடிக்கடி பருகல், சாதங்கள் பல அருந்தல் – இடைவிடாத

சிற்றுண்டியும் அடிக்கடி நீர் பருகலும் பலவகைச் சோறுண்டலும்,

சற்றுஉண்டல் மெத்தவூண் இத்தனையும் மெய்ப்பிணிதனக்கு இடம்எனப்

பருகிடார் – சிறிதாக உண்பதும் மிகுதியாக உண்பதும் இவ்வளவும்

உடல்நோய்க்கு இடமாகும் என (இம்முறையில்) உண்ணார்.

XXXXX

வி-ரை.) வனசம் – தாமரையிலை. செழும்பாடலம் – வளமிக்க பாதிரி.

ஏரண்ட பத்திரம் – ஆமணக்கு இலை. இச்சில் இலை – இத்தியிலை.

சாதங்கள் பல : தயிர்ச்சோறுபுளிச்சோறுசரக்கரைப்பொங்கல்,

வெண்பொங்கல் முதலானவை. பருகுதல் : நீர் முதலிய குடிவகைகளுக்கே வரும்; கெடுதி யென்றார்.

இச் செய்யுளில் இந்நூலாசிரியரை ஆதரவுசெய்த

மதவேளின் குலம் ‘வேளாளர் குலும்’ என அறியப்படுகிறது.

XXXXXXXXXXXXXX

        74. கவிஞர் வறுமை

எழுதப் படிக்கவகை தெரியாத மூடனை

     இணையிலாச் சேடன் என்றும்,

  ஈவதில் லாதகன லோபியைச் சபையதனில்

     இணையிலாக் கர்ணன் என்றும்,

அழகற்ற வெகுகோர ரூபத்தை யுடையோனை

     அதிவடி மாரன் என்றும்,

  ஆயுதம் எடுக்கவுந் தெரியாத பேடிதனை

     ஆண்மைமிகு விசயன் என்றும்,

முழுவதும் பொய்சொல்லி அலைகின்ற வஞ்சகனை

     மொழிஅரிச் சந்த்ர னென்றும்,

  மூதுலகில் இவ்வணம் சொல்லியே கவிராசர்

     முறையின்றி ஏற்ப தென்னோ?

அழல்என உதித்துவரு விடம்உண்ட கண்டனே!

     அமலனே! அருமை மதவேள்!

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

     (இ-ள்.) அழல்என உதித்துவரு விடம்உண்ட கண்டனே

-நெருப்பைப்போலத் தோன்றி வந்த நஞ்சுண்ட கழுத்தையுடையவனே!,

அமலனே – குற்றம் அற்றவனே!, அருமை …….. தேவனே!, எழுதப்படிக்க

வகைதெரியாதமூடனை இணைஇலாச் சேடன் என்றும் – எழுதவும் படிக்கவும் வழியறியாத

பேதையை ஒப்பற்ற ஆதிசேடன் என்றும், ஈவது இல்லாத கனலோபியைச்

சபையதனில் இணைஇலாக் கர்ணன் என்றும் – கொடுத்தறியாத பெரிய

அழுக்கனை அவையிலே ஒப்பற்ற கொடையிற் சிறந்த கர்ணன் என்றும், அழகு அற்ற வெகு கோரரூபத்தை உடையோனை அதிவடிவ மாரன் என்றும் – அழகு இல்லாத மிகுந்த அருவருப்பான உருவமுடையவனைப் பேரழகுடைய காமன் என்றும், ஆயுதம் எடுக்கவும் தெரியாத பேடிதனை

ஆண்மைமிகு விசயன் என்றும் – படையேந்தவும் பழகாத

ஆண்மையற்றவனை வீரத்திற் சிற்ந்த விசயன் என்றும், முழுவதும்

பொய்சொல்லி அலைகின்ற வஞ்சகனை மொழி அரிச்சந்திரன் என்றும் –

முற்றிலும் பொய்புகன்று திரியும் வஞ்சகனைச் சொல்லில் அரிச்சந்திரன்

என்றும், இவ்வணம் மூதுலகில் கவிராசர் சொல்லியே முறையின்றி ஏற்பது

என்னோ – இவ்வாறு பழைமையான இந்த உலகத்திற் பாவலர்கள் புகன்று

தகுதியின்றி இரப்பது என்ன காரணமோ?

XXXXXXXXXXXXXXXX

           75. கவிஞன்

தெள்ளமிர்த தாரையென மதுரம் கதித்தபைந்

     தேன்மடை திறந்த தெனவே

  செப்புமுத் தமிழினொடு நாற்கவிதை நாற்பொருள்

     தெரிந்துரைசெய் திறமை யுடனே

விள்ளரிய காவியத் துட்பொருள் அலங்காரம்

     விரிவிலக் கணவி கற்பம்

  வேறுமுள தொன்னூல் வழக்கும்உல கத்தியல்பும்

     மிக்கப்ர பந்த வண்மைஉள்ளவெல் லாமறிந் தலையடங் குங்கடலை

     யொத்ததிக சபைகண் டபோ

  தோங்கலை யொலிக்கின்ற கடல்போற்ப்ர சங்கம

     துரைப்பவன் கவிஞ னாகும்!

அள்ளிவிடம் உண்டகனி வாயனே! நேயனே!

     அமலனே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

     (இ-ள்.) விடம்அள்ளி உண்ட கனி வாயனே – நஞ்சை

அள்ளிப்பருகிய கனிபோலுஞ் சிவந்த வாயனே!, நேயனே – (உயிர்களிடம்)

அன்புடையவனே!, அமலனே – தூயவனே!, அருமை ……. தேவனே!,

தெள்அமிர்த தாரையென மதுரம் கதித்த பைந்தேன் மடைதிறந்தது என –

தெளிந்த அமுதவொழுக்குப் போலவும்; இனிமை மிகுந்த புதிய தேன்

மடைதிறந்தது போலவும்; செப்பும் முத்தமிழினொடு – சொல்லப்படும்

முத்தமிழுடன், நாற்கவிதை நாற்பொருள் தெரிந்து – நால்வகைக்

கவிகளையும் நால்வகைப் பொருளையும் அறிந்துஉரைசெய் திறமையுடனே

– கூறும் ஆற்றலோடும், விள்அரிய காவியத்து உட்பொருள், அலங்காரம்,

விரிவு இலக்கண விகற்பம் – கூறுதற்கரிய காவியத்தின் உட்பொருளையும் அணியையும் விரிவான ஐவகை யிலக்கணத்தையும், வேறும்உள தொன்னூல்

வழக்கும் உலகத்து இயல்பும் மிக்கப் பிரபந்த வன்மை உள்ள எல்லாம்

அறிந்து – மற்றும் இருக்கின்ற பழைமையான நூல்வழக்கையும்

உலகவழக்கையும் மிகுந்த பிரபந்தங்களின் சிறப்பையும் மேலும் உள்ள யாவற்றையும் அறிந்து, அலைஒடுங்கும் கடலைஒத்து – அலை அடங்கிய

கடலைப்போல விருந்து, அதிகசபை கண்டபோது – பேரவையைப் பார்த்த

காலத்தில், ஓங்குஅலை ஒலிக்கின்ற கடல்போல் பிரசங்க மது உரைப்பவன்

கவிஞன் ஆகும் – பேரலை முழங்கும் கடலைப்போலச் சொற்பொழிவு செய்பவன் கவிஞன் ஆவான்.

XXXX

(வி-ரை.) முத்தமிழ் : இயல், இசை, நாடகம்.

நாற்கவிதை : ஆசு,மதுரம், சித்திரம், வித்தாரம்.

நாற்பொருள் : அறம், பொருள், இன்பம், வீடு,

ஐவகை இலக்கண விகற்பம் : எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி, பிரபந்தம் :

சிறு நூல்கள்:: பிள்ளைத்தமிழ். பரணி, கலம்பகம் முதலியன.

—subham—

Tags– கவிஞன்,வறுமை, இலை,  சாப்பிட வேண்டும், ஐவகை இலக்கணம்

அருள்வாயே! – 11 (Post No.11,670)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,670

Date uploaded in London –  15 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

அருள்வாயே! – 11

(95 முதல் 104 முடிய)

ச.நாகராஜன்

அருணகிரிநாதர் ‘அருள்’ என்ற சொல்லைத் திருப்புகழில் ஆண்ட இடங்கள் ஏராளம்.

அவர் அருள்வாயே என்று கூறும் இடங்களின் நீண்ட தொகுப்பு இது:

படித்து மகிழ்வோம்; பாடிப் பரவுவோம்!

95) கயிலை மலை 

புமியதனிற் ப்ரபுவான

   புகலியில்வித் தகர்போல

 அமிர்த கவித் தொடைபாட

   அடிமைதனக் கருள்வாயே

பாடல் எண் 521 –   ‘புமி அதனில் ‘ எனத் தொடங்கும் பாடல்

பொருள் : இந்த பூமண்டலத்தில் தனிப்பெரும் தலைவரும், சீர்காழிப் பதியில் அவதரித்தவருமான திருஞான சம்பந்த மூர்த்தியைப் போல. இறப்பை நீக்கி மரணமிலா வாழ்வைத் தரவல்ல தேவாரப் பாடல்களைப் போன்று பாடுதற்கு இந்த அடிமைக்கும் திருவருள் தந்தருள்வாயாக!

96) திருவேங்கடம் 

தமிழினி லுருகிய வடியவ ரிடமுறு

 சனனம ரணமதை யொழிவுற சிவமுற

   தருபிணி துளவர மெமதுயிர் சுகமுற வருள்வாயே

பாடல் எண் 525 –   ‘சரவணபவ நிதி‘ எனத் தொடங்கும் பாடல்

பொருள் : (சரவணபவ நிதி அறுமுக குருபர என) பலமுறை தமிழினில் ஓதிப் புகழ்ந்து உள்ளம் உருகுகின்ற உன் அடியார்களுக்கு உற்ற, பிறப்பு, இறப்பு என்பவை நீங்கவும், சிவப்பேறு அடையவும், வினைகள் தருகின்ற நோய்கள் துள்ளி ஓடவும், வரத்தினை நீ எங்கள் உயிர் இன்பம் அடையுமாறு தந்தருள்வாயாக!

97) திருவேங்கடம் 

துணைப்பத

மலரல திலைநிலை யெனமொழி தழிய மெய்

   வழிபட லொழிவனை யருள்வாயே

பாடல் எண் 526 –   ‘நெச்சுப் பிச்சி‘ எனத் தொடங்கும் பாடல்

பொருள் : உற்ற துணையான பாத மலர் அல்லாமல் நிலையான பொருள் வேறு இல்லை என்னும் சாஸ்திரம் தழுவிய உண்மையான வழிபாடு செய்யாத எனக்கு அருள் புரிவாயாக!

98) திருவேங்கடம் 

மலமாங்கடு மோகவி காரமு

  மிவை நீங்கிட வேயிரு தாளினை யருள்வாயே

பாடல் எண் 529 –   ‘வரி சேர்ந்திடு‘ எனத் தொடங்கும் பாடல்

பொருள் : மும்மலங்களினால் உண்டாகும் காம விகாரங்கள் அனைத்தும் அகன்றிடவும், உன் திருவடிகளைத் தந்த்ருள்வாயாக!

99) வள்ளிமலை 

ஒளிதிக ழருவுரு வெனுமறை யிறுதியி

  லுள்ளத்தை நோக்க  அருள்வாயே

பாடல் எண் 536 –   ‘ககனமும் அநிலமும்‘ எனத் தொடங்கும் பாடல்

பொருள் : ஒளிமயமானதும், அருவமானது என்றும், உருவமானது என்றும் கூறுகின்ற வேதங்களின் முடிவில் நிற்பதாய் உள்ள அந்தப் பொருளாகிய உன்னை யான் காண நீ அருள் புரிவாயாக!

100) வள்ளிமலை 

வினையொன்று மின்றிநன் றியலொன்றி நின்பதம்

 வினவென்று அன்புதந் தருள்வாயே

பாடல் எண் 539 –   ‘சிரம் அங்கம் அம் கை‘ எனத் தொடங்கும் பாடல்

பொருள் : தீவினை யாவும் தொலைந்து நல்ல வினைகளே சேர, உனது திருவடியை ஆய்ந்தறிய வேண்டும் என்கின்ற அன்பை எனக்குத் தந்து அருள் புரிவாயாக!

101) மயிலம்

உறுதண்ட பாசமொ டாரா வாரா

 எனையண்டி யேநம னார்தூ தானோர்

   உயிர்கொண்டு போய்விடு நாள்நீ மீதா ளருள்வாயே

பாடல் எண் 546 –   ‘கொலை கொண்ட‘ எனத் தொடங்கும் பாடல்

பொருள் : கையில் உள்ள தண்டம், பாசக் கயிறு ஆகியவற்றுடன் ஆரவாரம் செய்து வந்து என்னை நெருங்கி, யமனுடைய தூதர்கள் என் உயிரைக் கொண்டு போய்விடும் அந்த நாளில் நீ உன்னுடைய மேன்மையான திருவடியைத் தந்து அருள்வாயாக!

102) திருசிராப்பள்ளி

பார்வதி

   பங்கர் போற்றிய பத்மத் தாள்தொழ அருள்வாயே

பாடல் எண் 547 –   ‘அங்கை நீட்டி‘ எனத் தொடங்கும் பாடல்

பொருள் : பார்வதி பாகராகிய சிவ பெருமான் போற்றித் துதித்த உனது தாமரைத் திருவடியைத் தொழும்படி அருள்வாயாக!

103) திருசிராப்பள்ளி

அறிவிலி சற்றும் பொறையிலி பெற்றுண்

 டலைதலொ ழித்தென் றருள்வாயே

பாடல் எண் 552 –   ‘பகலவன் ஒக்கும்‘ எனத் தொடங்கும் பாடல்

பொருள் : மூடன், கொஞ்சமும் பொறுமை இல்லாதவன். பொருள் தேடிப் பெற்றும், உண்டும் அவ்வாறு நான் அலைதலை ஒழித்து எப்போது அருள்வாய்? அருள்வாயாக!

104) இரத்னகிரி

பல

சித்துவிளை யாடுவினை சீசியிது நாறவுடல்

தத்திமுடி வாகிவிடு வேனொமுடி யாத பத மருள்வாயே

பாடல் எண் 566 –   ‘சுற்ற கபடோடு‘ எனத் தொடங்கும் பாடல்

பொருள் : பல (காம) மாய வித்தைகளை விளையாடும் தொழில், சீசீ இது என்று பலரும் வெறுப்புடன் கூறத்தக்கதாய்த் தோன்ற (என்னுடைய) உடல் நைந்து போய் இறுதியில் நான் இறந்து படுவேனோ? அதற்குள் உனது அழிவில்லாத திருவடியைத் தந்தருள்வாயாக!

குறிப்பு நன்றி : https://www.kaumaram.com தளத்தில் உள்ளபடி பாடல் எண் தரப்பட்டுள்ளது. முழுத் திருப்புகழ்ப் பாடலையும் அதன்  விளக்கத்தையும் இதில் காணலாம்

***

ஆளுக்கு ஒரு மயிர் பிடுங்கினால் அடியேன் தலை மொட்டை- பிரதமர் கதறல் (Post.11,669)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,669

Date uploaded in London – –  14 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

கோஹினூர் வைரத்தை இந்தியாவுக்கு உடனே திருப்பி அனுப்புங்கள் என்ற கோரிக்கை வலுத்தது.  அப்போது பிரிட்டனின் பிரதமராக  இருந்தவர் டேவிட் காமெரோன் (2010 –2016 பிரிட்டிஷ் பிரதமர் ). அவர் சொன்னார் : நீங்கள் கோஹினூரை திருப்பி அனுப்பினால் பிரிட்டிஷ் மியூஸியம் காலியாகி விடும். இதைத் தமிழில்  சொல்ல வேண்டுமானால் ஆளுக்கு ஒரு மயிர் பிடுங்கினால் அடியேன் தலை மொட்டை- என்பதாகும். ஏனெனில் பிரிட்டனிலுள்ள புகழ் பெற்ற மியூசியங்களில் உள்ள  பெரும்பாலான  காட்சிப் பொருட்கள் உலகம் முழுவதிலிருந்தும் கொள்ளை அடிக்கப்பட்ட பொருட்களாகும்  .

லண்டனில் உள்ள பிரிட்டிஷ் மியூசியத்தில் எல்லோரும் விரும்பிப்  பார்க்கும் பொருட்கள் அனைத்தும் வெளிநாட்டிலிருந்து கொள்ளை அடிக்கப்பட்ட பொருட்கள்தான். இதனால் தான் டேவிட் காமெரோன் அப்படிச் சொன்னார். ஒரு பொருளை– அதுவும் மஹாராணியின் தலையிலுள்ள கிரீட (Kohinoor diamond) வைரத்தையே திருப்பிக் கொடுத்தால் என்ன ஆகும்? எல்லாம் போய்விடும். !

ஏற்கனவே கிரீஸ் நாட்டுக்குச் சொந்தமான எல்ஜின் மார்பிள் (Elgin Marbles) என்ற சலவைக்கல் தூண்கள் நைஜீரியாவுக்குச் சொந்தமான பெனின் உலோக விக்ரகங்கள் (Benin Bronzes) ஆகியவற்றை அந்தந்த நாடுகள் திருப்பிக் கேட்டு வருகின்றன.

நான் கிரேக்க நாட்டின்(Athens)  தலைநகருக்குச் சென்ற பொழுது ஒரு பெண் கைடு (Guide)  புலம்பிய புலம்பலை ஏற்கனவே ஏதென்ஸ் விஜய கட்டுரையில் எழுதி இருக்கிறேன். ‘நாங்கள் அனைவரும் லண்டனிலிருந்து வந்திருக்கிறோம்’ என்று சொன்னவுடன் அவர் மிகவும் கோபத்துடன் பிரிட்டனைத் திட்டத் துவங்கினார் . என்ன இது! எல்ஜின் மார்பிள் என்ற போலியான, பொய்யான பெயரை நீங்கள் சொல்கிறீர்கள்? எல்ஜின் பிரபு கொள்ளை அடித்தவன் அல்லவா? அதை கிரீக் மார்பிள் Greek Marble என்றல்லவா உண்மை விளம்பிகள் சொல்லுவார்கள் : கொள்ளை அடித்ததை மறைப்பதற்காக நீங்கள் எல்ஜின் பெயரை அதற்குச் சூட்டினீர்களா? என்று பொறிந்து தள்ளினாள் அந்தப் பெண்மணி. நாங்கள் ஒரே வரியில் பதில் சொல்லி அவளை உற்சாகப்  படுத்தினோம்.

“தாயே நீங்கள் சொல்லுவது நூற்றுக்கு நூறு உண்மை ; நாங்களும் உங்கள் கட்சிதான். நாங்கள் கோஹினூர் வைரம் முதல், ஆயிரக்கணக்கான பொருள்களை இழந்துவிட்டோம்” என்றோம் . பின்னர் அவர் எக்ட்ஸ்ரா extra உற்சாகத்துடன் ஏதென்ஸை சுற்றிக் காண்பித்தார்.

வரலாற்று விஷயங்களைக் காட்டுவதற்காக, லண்டனில் இரண்டு புகழ்பெற்ற மியூசியங்கள் இருக்கின்றன ; ஒன்று உலகப் புகழ் பெற்ற பிரிட்டிஷ் மியூசியம். மற்றொன்று விக்டோரியா (V&A) ஆல்பெர்ட் மியூசியம்,  இது தவிர ஆக்ஸ்போர்ட் நகரில் ஒரு மியூஸியத்திலும் அதை ஒட்டியுள்ள லைப்ரரியிலும் (Bodleian Library) கொள்ளை அடித்த பொருட்களைக் காட்சிக்கு வைத்துள்ளனர் . இவை மட்டும்தான் என்று நினைத்துவிடாதீர்கள் . பிரிட்டன் முழுதும் ஆயிரத்துக்கும் மேலான  காட்சி சாலைகள் இருக்கலாம். எல்லாம் கொள்ளை அடித்த பொருட்களே .

வேல்ஸ் மாகாணத்தில் கொள்ளைக்காரன் ராபர்ட் கிளைவ் மியூசியம் உள்ளது ; அவன் கொள்ளை அடித்ததால் இறுதியில் தொண்டையை வெட்டிக்கொண்டு தற்கொலை செய்து கொண்டான். பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை அவன்தான் இந்தியாவில் ஸ்தாபித்தான் என்று சொல்லி, அவனுக்கு லண்டன் உள்பட பல இடங்களில் சிலை வேறு வைத்த்துள்ளனர் . அவனைப் பற்றி பிரிட்டிஷாரே திட்டுவார்கள்; அவன் இந்தியாவுக்கு வரும் முன்னர்,  மஹா ரவுடி; அவன் இறந்த பின்னர் புகழ் பெற்ற ஆங்கிலே எழுத்தாளர் , ஆங்கில அகராதியின் தந்தை சாமுவேல் ஜான்சன் (Samuel Johnson) சொன்னார் ; அவன் செய்த அக்கிரமங்களால் அவனுடைய மனச்  சாட்சியே அவனைத்  தற்கொலை செய்ய வைத்தது என்று . நீங்கள் , “எங்கள் பொருட்களைத் திருப்பித்தாருங்கள்” என்று எந்த மியூசியத்துக்கு கடிதம் எழுதினாலும் அவர்கள், போட்டோ காப்பி செய்த ஒரு கடிதம் வைத்துள்ளனர். 1963-ம் ஆண்டு பிரிட்டிஷ் சட்டப்படி திருப்பி அனுப்புதல் முடியாது என்று எழுதி விடுவார்கள்.

இந்த விஷயங்களை இப்பொழுது நான் எழுதக்காரணம் லண்டனிலுள்ள புகழ் பெற்ற ஆங்கிலப் பத்திரிகையில் கட்டுரைகள் எழுதும் சத்னம் சங்கேரா (Sathnam Sanghera) என்பவர் எம்பையர் லாண்ட் (Empireland)  என்ற புஸ்தகத்தை 2012ம் ஆண்டில் வெளியிட்டுள்ளார் ; உலகம் முழுதும் பிரிட்டிஷார் செய்த படுகொலைகள், கற்பழிப்புகள் , கொள்ளைகள் பற்றி நூற்றுக்கணக்கான புஸ்தகங்கள் இருக்கின்றன. ஆயினும் சத்னம் சங்கேரா புஸ்தகத்தின் சிறப்பு என்னவென்றால் 200 புஸ்தகங்களை ஆராய்ந்து பிரிட்டிஸ்காரர்களே கக்கிய உண்மைகளைத் தொகுத்து தந்துள்ளார்.

xxx

என்னிடம் தமிழ் படித்த ஒரு ஆங்கிலப் பெண்மணியிடமிருந்து நானும் ஒரு உண்மையை அறிந்தேன். அதாவது பிரபல ஏல நிறுவனங்கள் (famous Auction Houses in Western countries) பெரிய , அரிய விலை மதிப்புள்ள பொருட்களை மட்டுமே கேட்டலாக் மூலமாக  ஏலம் விட்டு விற்பனை செய்கின்றன. சிறிய, அதிக விலை மதிப்பில்லாத பொருட்களைத் திரைக்குப் பின்னால் சட்ட விரோதமாக (Underhand Dealing) கை மாற்றி விடுகின்றன. இதற்கு இந்தியாவிலுள்ள தேச விரோதிகளும் , பேராசை பிடித்தவர்களும் காரணம். ஒரு கோவிலில் இருந்து விக்ரகம் களவு போவதும் சரஸ்வதி மஹால் போன்ற நூலகங்களில் இருந்து அரிய நூல்கள், சுவடிகள் மறைவதும் உட்கைகளின் உதவி இல்லாமல் நடைபெறவில்லை.

நான் குறிப்பிட்ட அப்பெண்மணி, நிறைய நாணயங்களை கொள்முதல் செய்தார். எத்தனை சட்ட விரோத முறையில் வந்தனவோ, இறைவனுக்கே வெளிச்சம். இந்திய உணவுகளை விரும்பிச் சாப்பிடும், இந்தியா மீது பற்று கொண்ட, வெள்ளையர்கள் வீடுகளில் நிறைய இந்தியக் கலைப் பொருட்கள்  ஷோ கேஸ்களில் (Show Cases) இருக்கும். இவை எல்லாம் கலைப் பொருட்களை விற்கும் கடையிலிருந்து  வாங்கியதாகச் சொல்லுவார்கள்;  அது  பாதி உண்மை; பாதிப் பொய் கலந்தது  ; எல்லாம் நம்ம ஊர் லஞ்ச ஊழல் அதிகாரிகள் மூலம் கிடைத்தவையே. இப்போது தினமும் வரும்  சிலைக் கடத்தல் செய்திகளைப்  படித்து வருவோருக்கு நான் சொல்லுவது நன்கு விளங்கும்..

xxx

மைசூரிலும் திபெத்திலும் அடித்த கொள்ளை

அந்தக் காலத்தில் கலைப் பொருட்களைக் கொள்முதல் செய்வதற்காக மியூசியங்களே பண உதவியும் செய்தன ; ஆராய்ச்சியாளர்கள் எப்படிக் கொள்முதல் செய்கிறார்கள் என்பதை அவர்கள் கண்டும் காணாதது போல இருந்துவிடுவார்கள். திபெத்தில் (Younghusband Expedition)  யங் ஹஸ்பண்ட் என்பவர் நடத்திய படைஎடுப்பில் 3000 திபெத்தியர்கள் கொல்லப்பட்டனர். அ வர் அடித்த கொள்ளைப் பொருட்கள் இப்பொழுது அடிக்கடி டெலிவிஷனில் காட்டப்படும் ஆன்ட்டிக் (Antique Shows) ஷோக்களில் வருகின்றன

எங்கிருந்து இந்த அரிய பொருள் உங்களுக்குக் கிடைத்த து?  என்று கேட்டால், என் கொள்ளுத் தாத்தாபிரிட்டிஷ் ஆர்மியில் இந்தியாவில் பணியாற்றினார். அவர் இமய மலையில் பனிக்கட்டியில் கண்டு எடுத்த பொருள் என்பார். அல்லது வேறு ஒரு கலைப் பொருள் கடையில் வாங்கியது என்பார்.அதாவது உண்மை மறைக்கப்படும். பின்னர் அவை ஏல விற்பனை நிறுவனங்கள் மூலம் இரண்டு லட்சம் பவுன்களுக்கு விற்கப்படும்.

சுருங்கச் சொன்னால், கொள்ளை அடித்த பொருட்களை அங்கீகாரம் பெற்ற ஏல நிறுவன சர்ட்டிபிகேட்டோடு விற்பார்கள். அதாவது நம்ம ஊர் பணக்காரர்கள் கறுப்புப் பணத்தை பல்வேறு வழிகளில் வெள்ளைப்பணமாக மாற்றுவது போல.

மைசூரில் திப்பு சுல்தானை வெள்ளையர்கள் தோற்கடித்த பின்னர் அந்த ஊர் முழுதும் கொள்ளை அடிக்கப்பட்டது. வெள்ளைக்கார சிப்பாய்கள் வீடு வீடாகச் சென்று கிடைத்ததை எல்லாம் சுருட்டினர். இதை வெள்ளைக்காரரே அவர் அம்மாவுக்கு எழுதிய கடித்தல் குறிப்பிடுகிறார்:

1782 முதல் 1799 வரை மைசூரை ஆண்ட திப்புவை கிழக்கிந்திய கம்பெனிப் படைகள் தோற்கடித்தன; அவருடைய தலைநகர் ஸ்ரீரங்கப்பட்டினம் கொள்ளை அடிக்கப்பட்டது அப்போது ராணுவ அதிகாரியாகவும் பின்னர் வெல்லிங்டன் பிரபுவாகவும் , இரு முறை பிரிட்டிஷ் பிரதமராகவும் இருந்த ஆர்தர் வெல்லஸ்லி (Arthur Wellesley)  அவருடைய அம்மாவுக்கு கடிதம் எழுதுகிறார் ” அம்மா, அன்று அந்த ஊரில் கொள்ளை அ டிக்கப்படாத வீடே இல்லை அம்மா. பின்னர் ஆர்மி/ ராணுவ  பஜாரில் மிக விலை மதிப்புடைய நகைகளும், தங்கக் கட்டிகளும் விலைக்கு வந்தன.

இதன் பிறகு அரண்மனையில் மிஞ்சிய பொருட்களை அதிகார பூர்வமாகப் பட்டியலிட்டு கொள்முதல் செய்தனர். ஏராளமான தங்கக்கட்டிகள், தட்டுகள், ரத்தினக் கற்கள், பல்லக்குகள், பட்டாடைகள் என்று நீண்ட பட்டியல் அது. ஒரு வெள்ளைக்காரனைக் கொல்லும் செயற்கை புலி (Tippu’s Tiger)  பொம்மையை மட்டும் இப்பொழுது விக்டோரியா ஆல்பெர்ட் மியூஸியத்தில் (V&A Museum in London)  காட்சிக்கு வைத்துள்ளனர்.

பிபிசி BBC நடத்திய ஒரு சர்வேயில் 90 சதவிகித கலைப் பொருட்கள் கிடங்கில் இருப்பதாவதும், காட்சிக்கு வைக்கப்பட்ட பொருட்கள் மிகவும் குறைவே என்ற செய்தியும் அம்பலமானது .

இன்னொரு ரகசிய கடிதமும்  அம்பலத்துக்கு வந்தது. அண்மையில்  பிரிட்டிஷ்  கலாசார அமைச்சராக  இருந்தவர் Oliver Dowden ஆலிவர் டவ்டன். மியூசியங்களுக்கு அவர் எழுதிய ரகசிய கடிதம் அது.

“நீங்கள் காட்சிக்கு வைத்த பொருட்களைத் திருப்பிக் கொடுத்தீர்களானால் உங்களுக்கு நாங்கள் வழங்கும் நிதி உதவியை நிறுத்தும் அபாயம் இருப்பதை அறிவீர்களாகுக”. என்ற கடிதம் பத்திரிகைகளுக்கு எப்படியோ கிடைத்துவிட்டது.

ஆக, அரசாங்க அல்லது பெரிய மியூசிய பண உதவியுடன்தான் இந்தக் கலைக் கொள்ளை நடைபெற்றுவருகிறது . தெரிந்தே செய்யப்படும் அக்கிரமம் இது. உலகில் நியாயமும் தர்மமும் நிலைபெற்றால் , பெரும்பாலான நாடுகளில் உள்ள — குறிப்பாக, அமெரிக்கா , பிரிட்டன், பிரான்ஸ் , ஆஸ்திரேலியா , ஜெர்மனி , ஸ்பெயின், போர்ச்சுகல் முதலிய நாடுகளில் உள்ள மியூசியங்கள் காலியாகி, மூடப்பட்டுவிடும்.

–சுபம் —

 Tags- ஆளுக்கு ஒரு மயிர், கோஹினூர் , வைரம், பிரிட்டிஷ் , கொள்ளை, மியூசியம்

பூமியிலுள்ள 7 கடல்களும் 7 தீவுகளும் —-அம்பலவாணர் பாடல் (Post.11,668)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,668

Date uploaded in London – –  14 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

 Xxx

புராணங்களில் பூகோளம் / புவியியல் GEOGRAPHY IN PURANAS

 இந்துக்களின் விஞ்ஞான அறிவை விளங்கிக்கொள்ள கொஞ்சமாவது சம்ஸ்க்ருத அறிவு தேவை. கிரஹம் என்று விண்ணிலுள்ள சந்திரன் ,சூரியன், செவ்வாய், புதன், வியாழன் , வெள்ளி , சனி முதலியவற்றுக்குப் பெயர் சூட்டினர் ; கிரஹ என்றால் ஈர்ப்பு விசை GRAVITATIONAL FORCE உடையது என்று பொருள் ; இதிலிருந்துதான் GRIP கிரிப், GRAB க்ராப் , GRAVITY கிராவிடி என்ற சொற்கள் உதித்தன; கல்யாணத்தை ‘கை ப்பிடித்தல்’= ‘பாணி கிரஹணம்’  என்பர் ; பிடிப்பது= ஈர்ப்பு உடையது . தமிழர்களும் அதை அப்படியே மொழிபெயர்த்து ‘கோள்’ என்றனர் ; இதன் வினைச் சொல் – கொள்  (கொள்முதல் செய்தல், கொள்ளை , கொள்ளுவன கொண்டு தள்ளுவன தள்ளுக என்ற சொற்களில் இருந்து கொள் /கோள் முதலியவற்றின் பொருள் = கிரஹ= பிடி என்பதை அறியலாம் ).

அடுத்த மகத்தான  விஞ்ஞான கண்டுபிடிப்பு பிரபஞ்சத்திலுள்ள அத்தனை பொருட்களும் வட்ட வடிவமானவை CIRCULAR, GLOBULAR. சங்கத் தமிழ் நூல்களானாலும் சரி, சம்ஸ்க்ருத  நூல்களானாலும் சரி எல்லாவாற்றையும் மண்டலம், வட்டம், கோளம்/GLOBE என்றே சொல்லுவார்கள். கோளம் என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லே க்ளோப் GLOBE என்று மருவியது .

இதே போல உலகில் உயரமான இடம் EVEREST என்று ஜார்ஜ் எவரெஸ்ட் கண்டுபிடிக்கவில்லை. மேரு என்னும் இமய சிகரம்தான் உலகில் உயர்ந்தது என்பது இந்துக்களுக்குத் தெரிந்து இருந்ததால் அதை மையமாக வைத்து உலக வரைபடத்தை வட்டத்துக்குள் வட்டமாக CONCENTRIC CIRCLES வரைந்தனர்.

புராணங்களில் சொல்லும் 7 த்வீபங்களை இப்படி நோக்கினால் 7 கண்டங்களும் 7 துவீபங்களாக வரையப்பட்டிருப்பதை மனக் கண் மூலம் காணலாம்  இதைச் சொல்பவர் புவியியல் நிபுணரான பேராசிரியர் கே எஸ் வால்டியா GEOLOGIST PROFESSOR K S VALDIYA ஆவார்.

இன்னொரு விளக்கமும் உண்டு. வட துருவத்தையும் மேரு என்று புராணங்கள் வருணிக்கின்றன அங்கிருந்து ஒருவர் எந்தப்பக்கம் திரும்பி நடந்தாலும் அவர் தென் திசையை நோக்கி நடப்பதாகவே அர்த்தம். அப்படியே 9000 மைல்கள்  நடந்தால் தென் துருவத்துக்கு வந்து விடுவார். இவை எல்லாம் நமது ரிஷிகளுக்கு நன்கு தெரியும்; ஏனெனில்  அவர்கள்  யூரி ககாரினுக்கும்(RUSSIAN ASTRONAUT YURI GAGARIN) முன்னரே விண்வெளியில் பறந்தார்கள் . இந்தக் கண்ணோட்டத்தில் புராணங்களில் உள்ள , வால்மீகி ராமாயணத்தில்  கிஷ்கிந்தா காண்ட வருணனைகளைப் படித்தால் அவர்கள் விஞ்ஞானிகள் என்பது விளங்கும்.

XXX

ஏ என் சிவராமன் அட்வைஸ்  A N Sivaraman’s Advice

நாங்கள் பத்து உதவி ஆசிரியர்கள் (DINAMANI SUB EDITORS) , மதுரை தினமணி டெஸ்கில் உட் கார்ந்து எழுதிக்கொண்டே இருப்போம்; ஆசிரியர் ஏ என் சிவராமன்  யாராவது ஒருவர் பின்னால் நின்று கொண்டு உபன்யாசம் செய்யத் துவங்கி விடுவார்.

“ஏய் , இந்த தூரக்கிழக்கு FAR EAST , மையக் கிழக்கு MIDDLE EAST , NEAR EAST அருகிலுள்ள கிழக்கு நாடுகள்  என்றெல்லாம் எழுதுகிறீர்களே; அதற்கு அர்த்தம் தெயுமா ? இதெல்லாம் வெள்ளைக்காரன்,  அவன் வாழும் இடத்தை மனதில் வைத்துக்கொண்டு, கற்பித்த சொற்கள் என்று விளக்கம் தருவார். நம் சிந்தனையையும் தூண்டி விடுவார்.

முதலில் புத்தாண்டு உதிப்பது ஜப்பான், கொரியா ஆஸ்திரேலியா , இந்தியா, இங்கிலாந்து என்பதெல்லாம் நாமாக கிழக்கு திசை என்று வைத்த புள்ளிதான். வட்டத்தில் எந்தப் புள்ளியையும் முதல் புள்ளி என்று சொல்ல சின்னக் குழந்தைக்கும் கூட உரிமை உண்டு. நாம் கற்பித்த அட்ச ரேகை தீர்க்க ரேகைப்படி நேரத்தையும் இடத்தையும் பெயரிடுகிறோம்

இந்தக் கொள்கையை புரிந்து கொண்டால், ஏன் நம்முடைய புராணங்கள் நாடுகளை, த்வீபங்களை வெவ்வேறு விதமாக வருணிக்கின்றன என்று புரிந்து கொள்ளலாம். இந்தியர்களான நாம் கூட காலை 4 மணிக்கே சூரியன் உதிக்கும் அருணாசல பிரதேசத்துக்கு சூரிய மலை(அருணாசலம்) என்று பெயரிட்டுள்ளோம். ஏனெனில் பாரத வாசிகளுக்கு அதுதான் தூரக்கிழக்கு.

காளிதாசனும் சங்கப்புலவர்களும் உலகிலேயே உயர்ந்த மலை இமயம் என்று தெரிந்து கொண்டதால் மன்னர்களை இமயம் போல வாழ்க என்றுதான் வாழ்த்துகின்றனர்

2200 ஆண்டுகளுக்கு முன்னர்– சங்கப்புலவர்களுக்கு முன்னால் — வாழ்ந்த காளிதாசன்,  இமயத்தை பூமியின் அளவு கோல்  என்று வருணிக்கிறான் . அவன் விண்வெளியிலிருந்து பார்த்தால்தான் இப்படிப்  பாட  முடியும்..

இதே போல கீழ்கண்ட பாடலில்,  அம்பலவாணர் பாற் கடல் , நெய்க்கடல், கரும்புச் சார் கடல்  எ ன்று  பாடுவ பதை அப்படியே எடுத்துக்கொள்ளாமல் அதன் தோற்றம் எப்படி இருந்தது என்று பார்க்க வேண்டும்.

2012-ல் புராண பூகோளம் பற்றி நூல் எழுதிய புவி இயல் நிபுணர் கே எஸ் வால்டியா  ஒரு விஞ்ஞானி. புராண உபன்யாசகர் அல்ல. அவர் 18 புராணங்களிலிருந்தும், கிஷ்கிந்தா காண்டத்திலிருந்தும் நூற்றுக் கணக்கான ஸ்லோகங்களைக் கொடுத்து விளக்குகிறார். அதற்கு முன்னரும் புராண பூகோளம் பற்றிப் பலர் புஸ்தகங்கள் எழுதியுள்ளனர்

Geography Peoples and Geo Dynamics of India in Puranas and epics- A Geologit’s Interpretations, K S Valdiya, Aryan Books, International, New Delhi, 2012

xxxx

புராணங்களில் உள்ள தீவுகளின் வருணனையை அம்பலவாணர் அப்படியே தந்துள்ளார் .

நமக்குத் தெரிந்தவரை உலகில் எல்லா நாடுகளைச் சுற்றியுள்ள கடலும் உப்புக் கரிக்கும் கடல்தான் ; அதிலுள்ள உப்பின் சதவிகிதம் மட்டும் கடலுக்கு கடல் சிறிது மாறுபடும்.

கங்கை,சிந்து, அமேசான், நைல் போன்ற நதிகள் கலக்குமிடத்தில் மட்டும் நூற்றுக் கணக்கான மைல்களுக்கு உப்பு இருக்காது.

ஆயினும் புராணங்கள் இப்படிச் சொல்வதாற்கு கடல்களின் APPEARANCE தோற்றம் காரணமாக இருக்கலாம்.

எடுத்துக் காட்டாக துருவப் பகுதிகளுக்குச் சென்றால் வெள்ளை  நிற ஐஸ் கட்டிப்  பாறைகள் மிதக்கும் இடம் பாற்கடல் MILKY WHITE OCEAN போலத்  தோன்றும். பனிக்கட்டி நீரும் உப்புக் கரிக்காது  ; அம்பலவாணர்  பட்டியல்  இதோ:

நாவல், — கருங்கடல்,

இலவு, — கழைச்சாற்றுக் கடல்

குசம், — , கட்கடல் (மது – கள்),

கிரவுஞ்சம், —நெய்க்கடல்,

சாகம், — பாற்கடல்,

சான்மலி, – தயிர்க்கடல்

புட்கரம் : நறுநீர்க் கடல்  என ஏழு கடல்கள்

அடுத்த பாடலில் மாணிக்கம் போன்ற மனிதர்கள் யார் யாரென விளக்குகிறார்

நெற்றியில் சுழிகளுடன் உள்ள குதிரை;

அறிவுடைய தலைவன்;

படித்தஅடக்கமான பாவலன்;

கற்புஉடைய பாவை;

செல்வம் படைத்த  கொடையாளி;

மெய்ஞ்ஞானம் பெற்றவன் ஆகியோர் மனிதருள் மாணிக்கங்கள்.

XXX

 71. தீவும் கடலும்

நாவலந் தீவினைச் சூழ்தரும் கடலளவு

     லட்சம்யோ சனை;இ தனையே

  நாள்தொறும் சூழ்வதில வந்தீவு; அதைச்சூழ்தல்

     நற்கழைச் சாற்றின் கடல்;

மேவுமிது சூழ்வது குசத்தீவ தைச்சூழ்தல்

     மிகுமதுக் கடல்;அ தனையே

  விழைவொடும் சூழ்தல்கிர வுஞ்சதீ வம்இதனின்

     மேற்சூழ்தல் நெய்க்க டலதாம்;

பூவில்இது சூழ்தல்சா கத்தீவம்; இங்கிதைப்

     போர்ப்பது திருப்பாற் கடல்;

  போவதது சூழ்தல்சான் மலிதீவம் ஆம்; தயிர்ப்

     புணரிஅப் பாலும் அப்பால்

ஆவலுறு புட்கரத் தீவாம் இதைச்சூழ்வ

     தரும்புனற் றருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

     (இ-ள்.) அருமை …… தேவனே!, நாவல்அம் தீவினைச் சூழ் கருங்கடல்

அளவு லட்சம் யோசனை – நாவலந் தீவாகிய இதனைச் சூழ்ந்த கருங்கடலின் பரப்பு இலட்சம் யோசனை, இதனையே நாள்தொறும் சூழ்வது இலவம்தீவு – இந்தக் கடலை எப்போதும் சூழ்ந்திருப்பது இலவந்தீவு, அதைச் சூழ்தல் நல்கழைச் சாற்றின் கடல் – அதனைச் சூழ்ந்திருப்பது இனிய கருப்பஞ்சாற்றுக்

கடல்மேவும் இது சூழ்வது குசத்தீவு – பொருந்திய இதனைச் சூழ இருப்பது

குசத்தீவு, அதைச் சூழ்தல் மிகும் மதுக்கடல் – குசத்தீவைச் சூழ்வது மிகுந்த மதுவின் கடல், அதனை விழைவுடன் சூழ்தல் கிரவுஞ்ச தீவம் – மதுக்கடலை

விருப்பத்துடன் சூழ்ந்திருப்பது கிரவுஞ்ச தீவு, இதனின்மேற் சூழ்தல்

நெய்க்கடலது ஆம் – கிரவுஞ்சத் தீவினைச் சூழ்ந்திருப்பது நெய்க்கடல் ஆகும், பூவில்இது சூழ்தல் சாகத்தீவம் – உலகில் இதனைச் சூழ்வது சாகத்தீவுஇங்கு இதைப் போர்ப்பது திருப்பாற் கடல் – இவ்வுலகில் சாகத்தீவை வளைவது திருப்பாற் கடல், போத அதுசூழ்தல் சான்மலி

தீவம்ஆம் – நன்றாக அதனைச் சூழ்வது சான்மலித் தீவு, அப்பாலும்

தயிர்ப்புணரி – அதற்கப்புறம் (சூழ்வது) தயிர்க்கடல், அப்பால் ஆவல்உறு

புட்கரத்தீவு ஆம் – அதற்கப்புறம் (சூழ்வது) விருப்பம் ஊட்டும் புட்கரத்தீவுஇதைச் சூழ்வது அரும்புனற்று – இதனைச் சூழ்வது அரிய நன்னீர்க்கடல்.

     (வி-ரை.) நாவல்அம் தீவு – நாவல் மரங்கள் நிறைந்த தீவு. இலவுஅம்

தீவு – இலவ மரங்கள் நிறைவான தீவு. குசம் – தர்ப்பை; தர்ப்பைத் தீவு.

கிரவுஞ்சம் – அன்றில் (ஒருவகைப் பறவை) : கிரவுஞ்சப் பறவையையுடைய தீவு. சாகம் – தேக்கு : தேக்குமரத் தீவு. சான்மலி என்பதும் இலவமரமே. புட்கரம் – பருந்து. நாவல், இலவு, குசம், கிரவுஞ்சம், சாகம், சான்மலி, புட்கரம் : இவற்றை மிகுதியாகவோ சிறப்பாகவோ உடைய ஏழுதீவுகள்.அவ்வாறே கருங்கடல், கழைச்சாற்றுக் கடல், கட்கடல் (மது – கள்),நெய்க்கடல், பாற்கடல், தயிர்க்கடல், நறுநீர்க் கடல் என ஏழு கடல்கள்

இவ்வாறு புராணம் கூறும்.

Xxxx

         72. மாணிக்கங்கள்

சுழிசுத்த மாயிருந்ததிலும் படைக்கான

     துரகம்ஓர் மாணிக் கம்ஆம்;

  சூழ்புவிக் கரசனாய் அதிலேவி வேகமுள

     துரையுமோர் மாணிக் கம்ஆம்;

பழுதற்ற அதிரூப வதியுமாய்க் கற்புடைய

     பாவையோர் மாணிக் கம்ஆம்;

  பலகலைகள் கற்றறி அடக்கமுள பாவலன்

     பார்க்கிலோர் மாணிக் கம்ஆம்;

ஒழிவற்ற செல்வனாய் அதிலே விவேகியாம்

     உசிதனோர் மாணிக் கம்ஆம்;

  உத்தம குலத்துதித் ததிலுமோ மெய்ஞ்ஞானம்

     உடையனோர் மாணிக் கம்ஆம்; அழிவற்ற வேதாக மத்தின்வடி வாய்விளங்

     கமலனே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

     (இ-ள்.) அழிவுஅற்ற வேதஆகமத்தின் வடிவாய் விளங்கு அமலனே

– கெடுதல் இல்லாத மறைவடிவாயும் ஆகம வடிவாயும் விளங்கும் தூயவனே!,

அருமை ……. தேவனே!, சுழி சுத்தமாய் இருந்து, அதிலும் படைக்கு ஆன

துரகம் ஓர் மாணிக்கம் ஆம் – தூய சுழிகளுடன் போருக்கும் பயன்படும் குதிரை ஒரு மாணிக்கம் போன்றது, சூழ்புவிக்கு அரசனாய் அதிலே விவேகம் உளதுரையும் ஓர் மாணிக்கம் ஆம் – சூழும் உலகிற்கு மன்னனாகி மேலும் அறிவும் உடைய தலைவன் ஒரு மாணிக்கம் போன்றவன், பழுதுஅற்ற அதிரூப வதியுமாய்க் கற்புஉடைய பாவை ஓர் மாணிக்கம் ஆம் – குற்றமற்ற சிறந்த அழகும் கற்பும் உடைய மங்கை ஒரு மாணிக்கம் போன்றவள், பல

கலைகள் கற்றுஅறி அடக்கம்உள பாவலன் பார்க்கில் ஓர் மாணிக்கம் ஆம்

– பலவகையான கலைகளைப் படித்தறிந்துஅடக்கமாயிருக்கும் பாவலன் ஆராயின் ஒரு மாணிக்கம் போன்றவன், ஒழிவுஅற்ற செல்வனாய் அதிலே தியாகியாம் உசிதன் ஓர் மாணிக்கம் ஆம் – அளவில்லாத செல்வத்துடன் மேலுங் கொடையாளியுமான உயர்ந்தோன் ஒரு மாணிக்கம் போன்றவன்,

உத்தம குலத்து உதித்து அதிலும் மெய்ஞ்ஞானம் உடையன் ஓர் மாணிக்கம்

ஆம் – நல்ல குடியிற் பிறந்து மேலும் மெய்யறிவும் உடையவன் ஒரு

மாணிக்கம் போன்றவன். 

–subham—

tags- 7 தீவுகள்,  ஏழு,  கடல்கள் , ஜம்புத்வீபம், புராண, பூகோளம் , பாற்கடல் , சதகம் , மாணிக்கங்கள்

லண்டன் டாக்டர் நாராயணனின் மார்கழிக் கவிதைகள்- 8 (Post.11,543-part 8)

WRITTEN BY Dr A. Narayanan Ph.D., London

Post No. 11,543- Part 8

Date uploaded in London – 14 January 2023              

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com 

மார்கழித்திங்கள் 28 

பசுக்களை கானகத்தே மேய விட்டு நல்லுணவு

புசித்து உடலைப் பேணுவதின்றி தேவை வேறறியா

பாமரராய் அறிவிலா ஆய்குலத்தோரிடையே

பேதம் காணாப் பழகிய போதனான கோவிந்தா!

பிரியாத உன் உறவின் பெருமையும் கீர்த்தியும்

தெரியாதுன்னை அன்று சிறு பேரழைத்ததில்

சினம் கொள்ளா மன்னித்துப் பறை தருவாயோ

என்று ஆய்ச்சியர் குலத்தோரிலொருத்தி போல்

முறையிட்ட கோதை வாழியே

 நாராயணன்

கூடாரை வெல் பவனும் கூடியவருடன்

குளிர்ந்து நீராடுபவனும் நாடு புகழும்

கோவிந்தனைத் தேடி அலைந்து கிட்டாத

கோவலனைக் கட்டிவிட்ட பாமாலையில்

புரியாத சொற்களுக்கவன் பொருள் கேட்க

புதிரான நீயே அவைகளின் பொருளென்றாளே

XXXX

மார்கழித்திங்கள் 29 

பொழுது விடியும் முன் கோயில் படி வாயில் நின்றுன்

பொற்றாமரையடி போற்றி யாம் கோரும் பலனோ

உற்ற உறவினனாய் ஆய்ச்சியர் குலம் தோன்றிக்

கற்றுக்கறவைகள் பல கறந்துப் பாலும் தயிரும்

சற்றும் தயங்காமல் எம்முடன் பகிர்ந்த கோவிந்தா!

ஏற்றுக் கொள்வீரே ஏழேழ் பிறவி எங்கள் குலமுதிக்க

பற்றறுத்து யாமுன் திருவடி பற்றிப் பணி புரிவதற்று

வேறின்பம் எப் பறை பொருளும் தர இயலாவென

ஆய்ச்சியாக பாவித்துரைத்த பாவை வாழியே

நாராயணன்

வேதியருக்கெல்லாம் வேதியன்

வேதனை விளைப்போர்க்கு விருத்தன்

வேண்டுவோர்க்கு விருந்தினன்

விசயனுக்கு சாரத்யன்

ஏற்றோர் எளியோரெனறியான்

வெற்றிடம் வேறிடமறியான்

பற்றுமிடமோ அவனையே பற்றுவோரை

உற்றவரவரென உறவு கொண்டாடுவானே

நாராயணன்

XXXX

மார்கழித்திங்கள் 30

கலங்களுடைய திருப்பாற்கடலை மாதவனே கேசவனுமாய்

கடைந்தமுதமெடுக்கத் தனை ஆட்படுத்திக் கொண்டோனை

கண் கவருமாடையணிகலன் அணிந்த மதிமுக ஆய்ச்சியர்கள்

கனிமொழியில் போற்றிப் பாட வேதியர் கோன் விட்ணுசித்தன்

கன்னிமகள் பூங்கோதை வாய் பொழிந்த பாமலையே போதுமென

பாரோரனைவரும் பரகதியடைய பாசுரங்கள் முப்பதும் திராவிட

வேதமாயோதிட திரண்ட தோள்களும் செந்தாமரைக் கண்களும்

கொண்ட திருமாலின் நீ ங்கா நிறை செல்வம் நிலைத்திடுமென

வாக்குறு தியளித்த வனிதை கோதை வாழியே 

போற்றுவோம் போற்றுவோம் கோதையைப் போற்றுவோம்

கோதையைப் பற்றிய கோவிந்தனைப் போற்றுவோம்

போற்றுவோம் போற்றுவோம் கோவிந்தனைப் போற்றுவோம்

கோவிந்தனைப் பற்றியத் திருப்பாவையைப் போற்றுவோம்

நாராயணன்

 —SUBHAM—

உணவு உங்கள் உடலுக்கு எப்படி சக்தியூட்டுகிறது?- 2 (Post.11,667)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,667

Date uploaded in London –  14 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஹெல்த்கேர் 2023 ஜனவரி இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

How Food Powers Your Body

உணவு உங்கள் உடலுக்கு எப்படி சக்தியூட்டுகிறது? – 2

ஆங்கில மூலம் : ஜேம்ஸ் சாமர்ஸ் (James Somers)

தமிழில் : ச.நாகராஜன்

அறிந்து கொள்ளுங்கள் : க்ரெப்ஸ் சுழற்சி பற்றி!

இது எப்படி நடைபெறுகிறது என்பதை நன்கு தெரிந்து கொள்ள இன்னும் பல நூற்றாண்டுகள் பிடித்தன. கடைசி கடைசியாக ஆயிரத்தி தொள்ளாயிரத்து முப்பதுகளில்  ஹங்கேரியைச் சேர்ந்த இரசாயன இயல் வல்லுநரான ஆல்பர்ட் ஜெண்ட் கையோர்கி (Albert Szent-Györgyi) புறாக்களின் மார்பு தசைகளை ஆராய்ந்த போது வெற்றி கிடைத்தது.

அந்த தசையானது பறவைகளைப் பறக்கும் போது மிக வலிமையாக இருக்கும்படி அமைந்திருந்தது; அது தூள்தூளாக்கப்பட்ட பின்னரும் கூட வளர்சிதைமாற்றதில் அதிக இயக்கத்தைக் கொண்டிருந்தது. ஜெண்ட் கையோர்கி சில திசுக்களை ஒரு சிறிய பாத்திரத்தில் போட்டார். பின்னர் மிகுந்த கவனத்துடன் வெவ்வேறு இரசாயனங்களை அதில் போடும் போது வெளிப்படும் வெப்பம் மற்றும் வாயுவின் அளவுகளைக் குறித்தார். சில அமிலங்கள் தசை வளர்சிதை மாற்றத்தின் விகிதத்தை  ஐந்து மடங்குக்கும் அதிகமாக அதிகரிப்பதை அவர் கண்டார். அதிசயிக்கத்தக்க வகையில், இந்த அமிலங்கள் எதிர் வினைகளில் தாமாக உட்கொள்ளப்படவில்லை.  ஜெண்ட் கையோர்கி சிறிய பாத்திரத்தில் எவ்வளவு போட்டாரோ அந்த அளவை வெளியே எடுக்க முடிந்தது. அமிலங்கள் ஒரு விதமான ரசாயன விளைவில் வேகமாகவோ அல்லது ஊக்குவிகளாக இருந்தோ வளர்சிதை மாற்றத்தைச் செய்து நிலையாக உடைபடுவதும் பிறகு மறுபடி திரும்பி உருப்பெறுவதுமாக இருந்ததை அவர் உணர்ந்தார்.

சில வருடங்கள் கழிந்த பிறகு ஜெர்மனியைச் சேர்ந்த உயிரியல் இரசாயன நிபுணரான ஹான்ஸ் க்ரெப்ஸ் ழ் ( Hans Krebs) இந்த இரசாயன சுழற்சியை இன்னும் அதிகமாக விவரித்தார். அது தான் நம்மால் இன்று அறியப்படும் க்ரெப்ஸ் சுழற்சியாகும். (Krebs cycle)

உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது உயிரியல் வகுப்பில் க்ரெப்ஸ் சுழற்சி பற்றிப் படித்தது உங்களுக்கு சிறிது ஞாபகத்தில் இருக்கலாம் அல்லது ஒருவேளை பரிட்சை முடிந்த பிறகு அதை மறந்திருக்கலாம். நீண்ட நெடுங்காலம் பள்ளியில் எனக்குப் பிடிக்காத ஒரே விஷயம் க்ரெப்ஸ் சுழற்சி தான். அது எனக்கு ஒரு போராகவும் திகைப்பைத் தரும் ஒன்றாகவும் அப்போது இருந்தது.

வரிசையாக உள்ள டெஸ்குகளில் அமர்ந்து இவற்றின் ராக்ஷஸ பாகங்களை – சசினேட், பைருவேட், அசிடில் சிஓஏ, சைடோக்ரோம் சி (succinate, pyruvate, Acetyl-CoA, cytochrome c) என்று சொல்லக் கேட்டோம். கரும்பலகையில் எழுதப்படுவதைப் பார்த்தோம்.  நாங்கள் என் ஏ டி மற்றும் எஃப் ஏ  ஹெச்2எச் (NAD+s and FADH2s) ஆகியவற்றை எண்ணினோம். பின்னர் ரிடாக்ஸ் எதிர்வினைகளை அவை ஆக்ஸிடைஸ் ஆகி குறைந்த மூலகங்களாக ஆவது பற்றிக் கேட்டோம்.( “redox” reactions as they “oxidized” or “reduced” elements.)

பாடபுத்தகத்தில் இருந்த படங்களை நான் மனப்பாடமாக நினைவில் வைத்துக் கொண்டேன். அம்புக் குறிகள், சிறிய எழுத்துக்கள், ப்ளஸ் மற்றும் மைனஸ் குறிகள் – ஆகிய இவை அனைத்தையும் எதற்காக இந்த சுழற்சி இருக்கிறது என்பதை அறியாமலேயே  நினைவில் வைத்துக் கொண்டேன். இதை உணராமலேயே அனைவரும் இருந்தோம். 38 வருட காலம் ஓடிய பெரிய நவீன இடர்ப்பாடில் இது பற்றி ஆறே ஆறு முறை தான் இது பற்றிக் கேட்கப்பட்டது. மூன்று பேரை இது மேடையில் திணற அடித்தது!

கரிம வேதியலில் ஏராளமான அழகிய விஷயங்கள் இருக்கும் போது, இப்படிப்பட்ட திடுக்கிடும் தொடர்புகள் இருப்பது வெட்கக்கேடான ஒரு விஷயம். உயிரியல் வேதியல் நிபுணரான நிக் லேன் (Nick Lane) தனது புத்தகமான ‘ட்ரான்ஸ்ஃபார்மர் : தி டீப் கெமிஸ்ட்ரி ஆஃப் லைஃப் அண்ட் டெத்’ (Transformer: The Deep Chemistry of Life and Death) என்ற புத்தகத்தில்  எழுதுகையில் க்ரெப்ஸ் சுழற்சி குறிப்பாக மாயாஜாலமான ஒன்று – அது வளர்சிதை மாற்றத்தின் அஸ்திவாரம் மட்டுமல்ல பூமியில் உள்ள சிக்கலான வாழ்க்கையின் அனைத்திற்குமே ஆதாரமானது என்று எழுதுகிறார். மேலும் அது ஒன்றும் புரிந்து கொள்வதற்கு அவ்வளவு சிரமமான ஒரு விஷயம் அல்ல!

இன்றைய நாட்களில், ஏ.பி. உயிரியலை (A.P. Bio) படிக்காமல் விட்டவர்கள் கூட மரபணுக்களைப் பற்றி நன்கு தெரிந்தவர்களாக இருக்கிறார்கள். பெருந்தொற்று நோய் வந்தாலும் வந்தது, அதற்கு நன்றி தான் சொல்ல வேண்டும், நாம் அனைவரும் பேசும் போது புரோடீன், எம் ஆர் என் ஏ (mRNA) என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தும் போது என்ன பேசுகிறோம் என்பதைத் தெரிந்து கொண்டே பேசுகிறோம். லேன் இது பற்றி விவாதிக்கும் போது டி என் ஏ அறிவானது ஒருவகையிலான மரபணு பாரபட்ச நோக்கு தான் என்கிறார்.

வாழ்க்கையின் ரகசியம் முழுவதுமாக முற்றிலும் நமது மரபணுக்களில் எழுதப்படவில்லை. அது நாம் உலகில் எப்படி ஆற்றலை இழுத்துக் கொள்கிறோம் – எப்படி வாழ்க்கை முழுவதும் நடக்கும் போது மெதுவாக எரித்துக் கொண்டிருக்கிறோம் என்பதையும் பொறுத்தே இருக்கிறது. க்ரெப்ஸ் சுழற்சியைப் புரிந்து கொள்வதானது பயன் தரக்கூடிய ஒன்று. ஏனெனில் அது உயிருடன் இருப்பதன் அர்த்தத்தை இன்னும் நன்றாகப் புரிந்து கொள்ள உதவுகிறது.

              ***                  தொடரும்