Third Edition of 1891 Book
Compiled by London swaminathan
Date: 15 December 2015
Post No. 2394
Time uploaded in London :– 13-22
( Thanks for the Pictures )
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
பிரிட்டிஷ் லைப்ரரியில் ஒரு அருமையான சமையல் புத்தகத்தைக் கண்டேன். சுமார் 350 பக்கங்களுக்கு ராமச்சந்திர ராவ் என்பவர் எல்லா தென்னிந்திய வகை உணவுகளையும், அவற்றின் செய்முறைகளையும், பாத்திரம், அடுப்பு வகைகளையும் அருமையாக விளக்கி எழுத்யுள்ளார். 300 உணவுப் பதார்த்தங்களின் பட்டியலைப் போட்டு அவற்றில் எவை சாத்வீகமானவை, எவை ராஜஸ உணவு, எவை தாமஸ உணவு என்ற பட்டியலும் கொடுத்து இருக்கிறார். இது ஒரு தமிழ் உணவு என்சைக்ளோபீடியா, அதாவது கலைக் களஞ்சியம்.
இதில் சிறப்பு என்னவென்றால் 1891-ஆம் ஆண்டிலேயே இந்த தமிழ்ப் புத்தகம் வெளியிடப்பட்டுவிட்டது. என் கையில் தவழ்ந்த பதிப்பு, மூன்றாம் பதிப்பு. அது அச்சிடப்பட்டு வெளியான ஆண்டு 1912.
பிராமண கல்யாணங்களில் இலையில் எந்த இடத்தில் என்ன உணவுப் பொருட்களை வைக்கவேண்டும், அதை எந்த வரிசையில் பரிமாற வேண்டும் என்பதை படம்போட்டு 1891 ஆம் ஆண்டிலேயே எழுதிவிட்டார். வாழை இலை கிடைக்காத பட்சத்தில் ஆல், பலா அல்லது மந்தாரை இலைகளைக் கொண்டு தைக்கப்பட்ட தையல் இலை பற்றியும், வாழை இலை தொன்னைகள் பற்றியும் சொல்லியுள்ளார்.
இந்தக் கட்டுரையில் சுப நாட்களிலும், அசுப கர்மாக்களிலும் உணவு பரிமாறுவது எப்படி என்பதைக் காண்போம். இன்னொரு கட்டுரையில் 300-க்கும் மேலான சத்வ, ராஜச, தாமச உணவுவகைகளின் பட்டியலைக் காண்போம்.
வாழை இலையில் தொன்னை செய்யும் முறை.
–சுபம்–
You must be logged in to post a comment.