
Post No. 11,932
Date uploaded in London – – 24 APRIL 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
ஞாயிறு , திங்கள், செவ்வாய், புதன் , வியாழன், வெள்ளி , சனி என்ற ஏழு கிழமைகளும் சின்னக் குழந்தைகளுக்கும் தெரியும்.
யார் இதைக் கண்டுபிடித்தார்கள் ?
இந்துக்களே இதைக் கண்டு பிடித்தார்கள்;
தமிழில் மட்டுமே அதற்கான பழைய ஆதாரங்கள் உள்ளன.
லண்டலிலிருந்து வெளியான மேகம் பத்திரிக்கையில் 1990ம் ஆண்டுகளில் நான் எழுதிவந்த கட்டுரைத் தொடர் –தமிழ் இலக்கியத்தில் அதிசயச் செய்திகள்.. அதில் ஒரு கட்டுரை-
நாள், கிழமையைக் கண்டுபிடித்தது யார் ? தமிழனா? எகிப்தியனா ? என்பதாகும் .
இந்தக் கட்டுரைத்தொடர் அடங்கிய புஸ்தகம் 2009ல் நாகப்பா பதிப்பகம் மூலமும் இபோது புஸ்தக .கோ .இன் வழியாகவும் வெளியிடப்பட்டுள்ளது .
இப்போது மேலும் பல புதிய செய்திகள் கிடைத்திருப்பதால் இந்தத் தலைப்பை மேலும் அலச ஆசை.
பள்ளிகளிலும், என்சைக்ளோபீடியா என்னும் கலைக்களஞ்சியங்களிலும் தவறான தகவல் தரப்படுகிறது
நாள் கிழமைகளைக் கண்டுபிடித்தது எகிப்தியானா ? இல்லை
பாபிலோனியர்களா ? இல்லை
கிரேக்கர்களா? இல்லை
ரோமானியர்களா ? இல்லை
ஆங்கிலோ சாக்ஸன் இனத்தினரா ? இல்லை
இந்துக்களா ? ஆமாம், ஆமாம், ஆமாம்
இந்துக்களே! எதை எடுத்தாலும் நாங்கள்தான் முதலில் கண்டுபிடித்தோம் என்று பெருமை பேசுகிறீர்களே ! ஒரு பல்கலைக்கழகக் கூட்டத்தில் வந்து பேசினால், மாணவர்களே உங்கள் முகத்திரையைக் கிழித்து விடுவார்களே என்று எதிர்க்குரல் எழுப்புவோருக்கு இதோ பதில்கள்:
பொதுவாக எழுதப்படும் விஷயம் : எகிப்தியர்கள்தான் வாரத்துக்கு ஏழு நாள் என்பதை முதல் முதலில் குறிப்பிடுகிறார்கள். அதற்கு அடுத்தபடியாக பாபிலோனியர்களின் எழுத்துக்களில் இது உள்ளது. பின்னர் கிரேக்கர்கள் மூலம் இது இந்தியாவுக்கு வந்தது என்பது புஸ்தங்களில் காணப்படும் தவறான தகவல்.
இதை மறுத்து நன் எழுதிய 1990ம் ஆண்டுக் கட்டுரையில் எழுதிய இரண்டு விஷயங்கள் :
ஞாயிறு , திங்கள் , செவ்வாய், புதன் வியாழன்
வெள்ளி சனி பாம்பும் இரண்டும் உடனே
— கோளறு திருப்பதிகம், தேவாரம்
இதைப் பாடிய திருஞான சம்பந்தர் வாழ்ந்தது மஹேந்திர பல்லவன் காலத்தில்- நின்ற சீர் நெடுமாறன் என்னும் பாண்டியன் காலத்தில்; அதாவது கிபி (பொது ஆண்டு) 600.
ஆனால் கிரேக்க , ரோமானிய, பாபிலோனிய, எகிப்திய நாகரீகக் குறிப்புகள் சம்பந்தரைவிடக் காலத்தால் முந்தியவை என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
ஆயினும் ரிக்வேதத்திலேயே ஆண்டுக்கு 360+ 5 நாட்கள் போன்ற குறிப்புகள் காணக்கிடக்கின்றன ; வாரத்துக்கு 7 நாள் என்ற குறிப்பு இல்லை .
வியாழனையும் அதை அடுத்து வெள்ளியையும் இணைத்துப்பேசுவது இந்துமதத்தில் தேவ குரு , அசுரர் குரு என்ற கச்ச தேவயானிக் கதைகளிலும், திருப்பாவையிலும் காணப்படுகிறது .
xxxx
புதிய ஆதாரங்கள்

இப்போது நான் சொல்லும் புதிய ஆதாரங்களைக் கேளுங்கள்
ஞாயிறு என்னும் கிழமையில் வாரத்தினைத் துவக்கியதும் அவைகளுக்கு கிரகத்தின் பெயர்களை வைத்ததும் இந்துக்களே.
அது எப்படி ?
திருஞான சம்பந்தர் சொன்ன அதே வரிசையை நாம் இன்று பயன்படுத்துகிறோம்.
அதற்கு முன்னர் எழுந்த தமிழ்க் காப்பியமான சிலப்பதிகாரத்தில் ஆடி மாத வெள்ளிக்கிழமை என்ற குறிப்பு வருகிறது. அதன் காலம் கி பி 132 என்பது கடல் சூழ் இலங்ககைக் கயவாகு வேந்தனும் என்ற குறிப்பால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அது ரோமானியர் காலம்.
கிரேக்க நாட்டிலிருந்து இறக்குமதியான சரக்கை, இளங்கோவோ சம்ப ந்த்ரோ உடனே பாட்டில் பயன்படுத்தினர் என்பது நகைப்பை ஏற்படுத்தும். ஏனெனில் மக்களுக்குப் புரியாத, தெரியாத விஷயங்களை அவர்கள் பேசமாட்டார்கள்.
மேலும் ஆர்ய தேவ என்ற புத்தமத அறிஞர் எழுதிய நூல்களிலும் கிழமைகள் வருகின்றன .
xxxxx
கிழமைகளின் பெயர்கள்
இதையெல்லாம் ஒருபுறம் ஒதுக்கிவைத்துவிட்டு ஞாயிறு முதல் சனி வரையுள்ள பெயர்களைக் காண்போம்.
இந்துக்கள் மட்டுமே இன்றுவரை கிழமைகளுக்கு கிரகங்களின் பெயர்களை பயன்படுத்துகின்றனர். ஏனெனில் ஆங்கிலத்திலுள்ள ஏழு பெயர்களில் நான்கு கிரகங்கள் இல்லை. ட்யூஸ் டே Tuesday , வெட்னஸ் டே Wednesday, Thursday தர்ஸ் டே, Friday ப்ரை டே என்ற நான்கு கிழமைகளில் உள்ள டிர் , வோதன் , தோர் , பிறைக் என்பன நார்டிக் இன மக்களின் கடவுளர் ; கிரகங்கள் இல்லை. இவைகளை கிழமைகளின் பெயர்களில் நுழைத்தது ஆங்கிலோ சாக்ஸன் Anglo- Saxon இனத்தினர். இதை ரோமானிய (லத்தீன் மொழி) இலக்கியங்களில் காண்பது இரண்டாம் நூற்றாண்டில்தான்! ஆனால் நம் சிலப்பதிகாரத்திலும், ஒரு கல்வெட்டிலும் அதற்கு முன்னரே கிழமைகள் வந்துவிடுகின்றன .
மேலும் அவர்கள், கிரேக்க நாட்டிலிருந்து இதை பெற்றதாகவும், அ வர்களுக்கு பாபிலோனியர்கள் சொன்னதாகவும் அரை வேக்காட்டுப் பேர்வழிகள் ஆங்கிலத்தில் பிதற்றி வைத்துள்ளார். அதுவும் தவறு.
கிரேக்கர்களின் முதல் நாள் சனிக்கிழமை. அடுத்துவருவது வியாழன் , பின்னர் புதன் , சூரியன் …..
ஆக அவர்கள் கிரகங்களின் பெயர்களை இட்டாலும் வரிசை பிறண்டுள்ளதைக் காண்கிறோம் . அது மட்டுமல்ல மேலை உலகம் முழுதும் இன்று வரை இந்தக் குழப்பம் நீடிக்கிறது.
நங்கள் எல்லோரும் லண்டலில் பேசிக்கொள்ளும்போது வீக் எண்டில் Week end சந்திப்போம் என்போம் . அது என்ன வீக் எண்ட்?
வீக் எண்ட் WEEK END (வார இறுதி நாட்கள் ) என்றால் சனி ஞாயிறு ! ஆனால் மேலை நாட்டுக் காலண்டர்களில் சண்டே முதல் துவங்குவர் அல்லது பழைய கால கிரேக்க நாட்டில் சனிக்கிழமை முதல் நாள்.
நாம் ஒருவர்தான் ஞாயிறு துவங்கி சனியில் முடிக்கிறோம். நாம் ஒருவர்தான் வானில் உலவும் கிரகங்கள் பெயர்களை வைத்து இருக்கிறோம். ஆங்கிலப் பெயர்களில் நான்கு, கிரகங்கள் இல்லை .
(முன்னர் எழுதிய மற்றும் ஒரு விஷயத்தையும் நினைவு படுத்துகிறேன். கிரகங்கள் என்றால் பிளாணட்ஸ் Planets என்று அகராதிகள் கூறும். அப்படியானால் நாம் சொல்லும் சூரியனும் சந்திரனும் கிரகங்கள் இல்லையே, ராகுவும் கேதுவும் கிரகங்கள் இல்லையே என்று சிலர் கேள்வி எழுப்பலாம் ; கிரஹ என்றால் ஈர்ப்பு விசை= பிடிமானம்- கவ் வுதல் ; ஐசக் நியூயூட்டனுக்கும் முன்னரே நாம் ஈர்ப்பு விசையைக் கண்டுபிடித்ததால் வானில் உலவும் சூரியன் சந்திரன் முதலிய அனைத்துக்கும் நவ கிரஹங்கள் என்று பெயர் சூட்டினோம்; இதனால் தான் GRIP. GRAB கிரிப் , கிராப் , கிராவிடி Gravity என்ற ஆங்கிலச் சொற்களும் பாணிக்கிரஹணம் சந்திர, சூர்ய கிரஹணம் என்ற ஸம்ஸ்க்ருத்ச் சொற்களும் புழக்கத்தில் உள்ளன )
மீண்டும் கிழமைகளுக்கு வருவோம் .
ரோமானிய (லத்தீன்) கால காலத்திலிருந்து வந்தது பிரெஞ்சு மொழி. அங்கு இன்றும் கூட ஆறு கிரகங்களின் பெயர்களைச் சொல்லிவிட்டு ஞாயிற்றுக் கிழமைக்கு திமான்ஸ் Dimanche என்பர். அது சூரியன் தினம் இல்லையாம். கடவுள் தினமாம். அதாவது அவர் ஓய்வெடுக்கிறார் . நாமும் ஓய்வெடுத்து ‘சர்ச்’ Church சுக்குப் போவோம்.
சொல்லப்போனால் மேலை உலகம் முழுதும் ஒரே குழப்பம். ஆயினும் இவர்கள் கிரேக்க, ரோமானிய ஆங்கிலோ சக்ஸன் உருவாக்கிய கிழமைகளை இன்று நாம் பயன்படுத்துகிறோம் என்று பெருமை பேசுவார்கள்.
கடைசியாக ஒரு கேள்வி எழும் / இவ்வளவு சொல்கிறீர்களே; ஒரு தேவா ரக் குறிப்பு, சிலப்பதிகாரக் குறிப்பு, கல்வெட்டுக் குறிப்பு, ஆர்யவேதக் குறிப்பு தவி வேறு எங்கும் கிழமைகள் ஏன் குறிப்பிடப்படவில்லை ?
அதற்கும் இதோ பதில்
கடிகாரங்களும் மணிக்கூண்டுகளும் இல்லாத கிராமவாசிகள் சந்திரனை வைத்தே நேரம் அறிவர். நாளையும் அறிவர். ஒரு மாதத்தை அமாவாசை முதல் 14 நாட்கள் பெளர்ணமி முதல் 14 நாட்கள் என்று பிரித்து எளிதில் நாளையும் (திதி), நேரத்தையும் அறிந்தனர். இதனால்தான் இன்றும் இந்துக்களின் பெரும்பாலான பண்டிகைகள் திதிக்கணக்கில் பெயரிடப்பட்டுள்ளன . ராம நவமி, ஜன்மாஷ்டமி , நாக பஞ்சமி , நரக சதுர்த்தசி (தீபாவளி), ஏகாதசி உபவாசம் என்று.
இந்துக்களின் 12 பெளர்ணமி நாட்களிலும் நாடு முழுதும் திருவிழாக்கள் நடக்கும். காலண்டர் இல்லாமல் இவைகளை மக்கள் அறிவர். ஆகையால் நமக்கு நாள், கிழமை தெரிந்தும், திதிகளையே வழக்கத்தில் பின்பற்றினோம்.
முடிவுரை : 7 நாட்களுக்கு கிரகங்களின் பெயர்களை சூட்டியது இந்துக்களே; அதைப் பின்பற்றுவதும் இந்துக்களே . மற்ற எல்லாப் பண்பாடுகளிலும் இது முழு அளவில் இல்லை. அப்படி இருந்தாலும் நமக்குப் பின்வந்தவர்களாக இருப்பார்கள் .
நமக்கு அருமையான ஆதாரம் நல்கிய இளங்கோ அடிகளுக்கும் , சம்பந்தருக்கும் நாம் என்றும் நன்றிக் கடன்பட்டுள்ளோம்.
–SUBHAM—
TAGS -கிழமை, பெயர்கள், கோளறு திருப்பதிகம், சிலப்பதிகாரம், ஆடி வெள்ளி, ஞாயிறு திங்கள் , வாரத்துக்கு 7 நாட்கள்