குறையுள்ள வைரங்களை வாங்காதீர்கள்; ஆபத்து ! (Post No.13,113)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,113

Date uploaded in London – –   21 March 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

குறையுள்ள வைரங்களை வாங்காதீர்கள்; ஆபத்து !

வைரங்கள் பற்றி சுமார் 25 கட்டுரைகளை எழுதினேன் . அவைகளில் பல, என்னுடைய சகோதரர் மீனாட்சி சுந்தரம் சென்னையிலிருந்து வெளியிட்ட ஜெம்மாலஜி GEMMOLOGY பத்திரிகையில் வெளியாகின . சில புதிய விஷயங்களை சேர்ப்பதே இந்தக் கட்டுரையின் நோக்கம் .

1500 ஆண்டுகளுக்கு முன்னர் வராஹமிஹிரர் எழுதிய ரத்ன பரீக்ஷை அதிகாரத்தைப் படிக்கையில் அந்தக் காலத்தில் இந்தியா முழுதும் – குறிப்பாக வட இந்தியா முழுதும் –வைரம் கிடைத்தது தெரிகிறது . இப்பொழுதோ மத்திய பிரதேசத்திலுள்ள பன்னா (PANNA, MADHYA PRADESH ) என்னுமிடத்தில் மட்டும் வைரம் கிடைக்கிறது.

रत्नेन शुभेन शुभं भवति नृपाणामनिष्टमशुभेन ।

यस्मादतः परीक्ष्यं दैवं रत्नाश्रितं तज्ज्ञैः ॥ ७९.०१॥

ரத்னேன சுபேன சுபம் பவதி  ந்ருபாணாமநிஷ்டமசுபேன

யஸ்மாத்ததஹ பரீக்ஷ்யம்  தைவம் ரத்நாஸ்ரிதம் தஜ்ஜனைஹி

பொருள் : நல்ல தரமுள்ள ரத்தினைக் கற்கள் அரசர்களுக்கு அதிர்ஷடத்தைக் கொணர்கிறது ; கெட்ட தரமுள்ள கற்களோ அழிவைக் கொண்டுவருகிறது. நகைகளை ஆராய்ந்தே அதிர்ஷ்டத்தை நிபுணர்கள் அறிய முடியும் .

கிரக தோஷம் உடையவர்கள் கூட , தகுந்த ரத்தினைக் கற்களை அணிந்து அந்த கிரகத்தின் தீய பார்வையிலிருந்து தப்பிக்கலாம் . ஆயினும் குறையுடைய ரத்தினைக் கற்களை அணியக்கூடாது ..

ரத்தினம் என்பதை அந்தந்தத் துறையிலுள்ள சிறந்தவர்களுக்கும் பயன்படுத்துவது மரபு

அவை  யானைகள், குதிரைகள், பெண்கள் முதலியன; அவர்களுள் சிறந்த குணங்கள் இருப்பதால் இப்படிப் பகர்வர். இந்த அதிகாரத்தில் அவை வைரங்களைக் குறிக்கிறது :-

द्विपघयवनिताआदीनां स्वगुणविशेषेण रत्नशब्दोऽस्ति ।

इह तूपलरत्नानामधिकारो वज्रपूर्वाणाम् ॥ ७९.०२॥ பிருஹத் சம்ஹிதா

த்விப ஹய வனிதாதீனாம் ஸ்வ குண விசேஷேண ரத்ன சப்தோஸ்தி

இஹ தூ பல ரத்னானாமதிகாரோ வஜ்ர பூர்வாணாம் 

xxxx

குறையுள்ள வைரங்கள் எவை ?

காகம், நகம் போன்ற கீறல்கள் தேனீ, மயிர் போன்ற வடிவங்கள் கல் உண்டாக்கிய துளைகள், பிற வர்ண தாதுப்பொருளால் பாதிக்கப்யட்டவை இரட்டை முகமுள்ளவை, தீயினால் எரிக்கப்பட்டன, நிறமோ ஒளியோ இல்லாதவை, துளை உள்ளவை — இவை அனைத்தும் கெட்ட வைரங்கள் .

(பூதக் கண்ணாடி அல்லது இதற்கான நவீன உபகரணங்களைக் கொண்டு இவைகளை எளிதில் பார்க்கலாம். சில குறைகள் வெறும் கண்களுக்குத் தெரியாது)

நீர்க்குமிழி உள்ள வைரங்கள்  பிளவு பட்டவை , தட்டையானவை , வாசி பழம்  போல கோள வடிவானவை, ஆகியனவும் குறை உடையனவே . நல்ல வைரங்களின் விலையை விட எட்டில் ஒரு பங்கு விலையே இவைகளுக்கு கொடுக்க வேண்டும்

(இந்தக் காலத்திலும் இண்டஸ்ட்ரியல் வைரங்கள் INDUSTRIAL DIAMONDS  என்பனவற்றை சில கருவிகளில் மட்டும் பயன்படுத்துவார்கள்; விலை குறைவு; அவைகளை நகைகளில் பயன்படுத்த மாட்டார்கள் )

काकपदमक्षिकाकेशधातुयुक्तानि शर्करैर्  विद्धम् । (K.शर्करा)

द्विगुणाश्रि दध ग्कलुषत्रस्तविशीर्णानि न शुभानि ॥ ७९.१५॥ (K.दिग्ध)

यानि च बुद्बुददलिताग्रचिपिटवासीफलप्रदीर्घाणि ।

सर्वेषां चैतेषां मूल्याद्भागोऽष्टमो हानिः ॥ ७९.१६॥

காகபதமக்ஷிகா காகேசதாது யுக்தானி சர்கரைர் வித்தம்

த்வி குணா ஸ் ரி தக்தகலு த்ரஸ்தஷ விசோ ர்ணானி  ந சுபானி

யானி  ச புத புத தலித்தாக்ரசிபிட வாஸி பல ப்ரதீர்காணி

ஸர்வேஷாம் சைதேஷாம்  மூல்யாத் பாகோஷ்டமோ ஹானி ஹி

XXXX

வைரம் பற்றி சுமார் பத்தாண்டுகளுக்கு முன்னர் நான் இதே பிளாக்கில் எழுதிய கட்டுரை இதோ:

பெண்கள் வைரங்களை அணியலாமா வராஹமிகிரர் கருத்து என்ன?

ஆய்வுக்கட்டுரை எழுதுபவர்- லண்டன் சுவாமிநாதன்

ஆய்வுக்கட்டுரை எண்:–1642; தேதி 11 பிப்ரவரி 2015

கடந்த சில நாட்களில் எழுதிய கட்டுரையில் 1500 ஆண்டுகளுக்கு முன் வராகமிகிரர் என்ற மாமேதை யாத்த பிருஹத் சம்ஹிதா என்னும் அற்புத நூல் பற்றிக் கண்டோம். இது சம்ஸ்கிருதத்தில் உள்ள ஒரு கலைக் களஞ்சியம் என்றும் அவர் பேசும் 106 தலைப்புகள் பற்றியும் கண்டோம். இன்று வைரங்கள், ரத்தினக் கற்கள் பற்றி அவர் சொன்ன சில சுவையான விஷயங்களைக் காண்போம்.

22 வகை ரத்தினக் கற்கள்

மனிதருள் மாணிக்கம் என்று சிலரைப் போற்றுகிறோம்; ஆங்கிலத்தில் அவன் ஒரு ரத்தினம் என்று நல்லோரைப் போற்றும் மரபுச் சொற்றொடர் உண்டு. மாமன்னன் விக்ரமாதித்தன் அரசவையில் உலக மஹா கவிஞன் காளிதாசன் உள்பட ஒன்பது  அறிஞர்கள் இருந்ததை நவரத்தினங்கள் என்று அழைக்கிறோம். இதே போல பெண்கள், குதிரை, யானையில் சிறந்த ஜாதிகளை ரத்தினம் என்பர். சிறந்த பெண்ணை நாரீரத்னம் என்பர். இதை வராகமிகிரரும் அமரகோசம் நிகண்டு எழுதிய அமரசிம்மனும் பகர்வர்:

ரத்னம் ஸ்வ ஜாதி ஷ்ரேஷ்டேயி – என்று செப்புகிறது அமரம்.

ரத்னக் கற்கள் எங்கே தோன்றுகின்றன?

இது குறித்து தனது காலத்துக்கு முன் ஆயிரக்கணக்கான, ஆண்டுகளாக இருந்து வரும் நம்பிக்கைகளை எழுதிவிட்டு தனது அறிவியல் பூர்வ கருத்தையும் மொழிகிறார் வராகமிகிரர்:

பலன் என்னும் அசுரனின் எலும்புகளில் இருந்து ரத்தினக் கற்கள் உற்பத்தியானதாகச் சிலரும், ததீசி முனிவர் இடமிருந்து உற்பத்தியானதாகச் சிலரும், பூமியின் குணங்கள் மூலம் உற்பத்தியானதாகச் சிலரும் கூறுவர். இதற்கு வியாக்கியானம் எழுதிய உத்பலர் என்பவர் சில புராண ஸ்லோகங்களை முன்வைத்து பூமியின் நிலையே காரணம் என்பார். தற்கால அறிவியலும் பூகர்ப்ப இயலின் ஒரு பகுதியாகவே ஜெம்மாலஜி (ரத்ன பரீக்ஷா) சாஸ்திரத்தை வைத்துள்ளது.

22 வகை ரத்தினக் கற்களை இரு ஸ்லோகங்களில் தருகிறார் வராக மிகிரர்:

वज्रेन्द्रनीलमरकतकर्केतरपद्मरागरुधिराख्याः ।

वैदूर्य ग्पुलकविमलकराजमणिस्फतिकशशिकान्ताः ॥ ७९.०४॥ (K.वैडूर्य)

सौगन्धिकगोमेदकशङ्खमहानीलपुष्परागाख्याः ।

ब्रह्ममणिग्ज्योतीरससस्यकमुक्ताप्रवालानि ॥ ७९.०५॥

வஜ்ரேந்திர நீலசரகதககர்தே பத்மராகருதிராக்யா:

வைடூர்யபுலகவிமலக ராஜமணிஸ்படிக ஸஸிகாந்தா:

சௌகந்திககோமேதகசங்ரவ மஹாநீல புஷ்பராகாக்யா:

ப்ரஹ்மணிஜ்யோதிரஸஸஸ்யகமுக்தாப்ராவாலானி

(இந்த சம்ஸ்கிருத ஸ்லோகங்களைச் சந்தி பிரித்துப் படித்தால் பல ரத்னக் கற்கள் நமக்கு முன்னரே தெரிந்தவை என்பதை உணர்வீர்கள்)

வைரம், நீலம், மரகதம், பச்சைக்கல் (அகேட்), மாணிக்கம், சிவப்புக்கல் (பிளட் ஸ்டோன்),வைடூர்யம், அமெதிஸ்ட், விமலக, ராஜமணி (க்வார்ட்ஸ்), ஸ்படிகம், சந்திரகாந்தம், சௌகந்திகம், ஓபல், சங்கு, நீலநிறக் கல், புஷ்பராகம், பிரம மணி, ஜோதிரஸ, சஸ்யக, முத்து, பவளம்

ஒவ்வொரு ரத்தினக் கல்லுக்கும் யார் அதி தேவதை என்றும் வராஹமிகிரரின் பிருஹத் சம்ஹிதா சொல்கிறது:

ऐन्द्रं षडश्रि शुक्लं याम्यं सर्पास्यग्रूपमसितं च ।

कदलीग्काण्डनिकाशं वैष्णवमिति सर्वसंस्थानम् ॥ ७९.०८॥

वारुणमबलागुह्योपमं भवेत् कर्णिकारपुष्पनिभम् ।

श‍ृङ्गाटकसंस्थानं व्याघ्राक्षिनिभं च हौतभुजम् ॥ ७९.०९॥

वायव्यं च यवोपममशोककुसुमप्रभं समुद्दिष्टम् ।

स्रोतः खनिः प्रकीर्णकमित्याकरसम्भवस्त्रिविधः ॥ ७९.१०॥

வெள்ளை நிற அறுகோண வைரம்= இந்திரன்

பாம்பின் வாய் போன்ற கறுப்புநிற வைரம்=யமன்

வாழைத் தண்டு நிறம்= விஷ்ணு

கர்ணிகார பூவின் நிறம்=வருணன்

நீலம்,சிவப்பு கலந்தது= அக்னி

அசோக மலர் வர்ணம்= வாயு

வைரம் கிடைக்கும் இடங்களை இன்னும் ஒரு ஸ்லோகத்தில் சொல்கிறார்:

वेणाग्तटे विशुद्धं शिरीषकुसुम*प्रभं  च कौशलकम् । (K.उपमं)

सौराष्ट्रकमाताम्रं कृष्णं सौर्पारकं वज्रम् ॥ ७९.०६॥

ईषत्ग्ताम्रं हिमवति मतङ्गजं वल्लपुष्पसङ्काशम् ।

आपीतं च कलिङ्गे श्यामं पौण्ड्रेषु सम्भूतम् ॥ ७९.०७॥

வேணா நதிக் கரை, கோசலம், சௌராஷ்ட்ரம்,சௌர்பார தேசம், இமயமலை, மதங்க, கலிங்க, பௌண்டிர தேசங்கள்.

ஜாதியும் வைரமும்

रक्तं पीतं च शुभं राजन्यानां सितं द्विजातीनाम् ।

शैरीषं वैश्यानां शूद्राणां शस्यतेऽसिनिभम् ॥ ७९.११॥

பிராமணர்கள் வெள்ளை நிற வைரங்களை அணியலாம்; சிவப்பு, மஞ்சள் நிறம் க்ஷத்ரியர்களுக்கும், வெள்ளை-மஞ்சள் (சீரிச மலர்) வைரம் வைஸ்யர்களுக்கும், வாளின் நிறம் உடைய வைரம் சூத்திரர்களுக்கும் நன்மை பயக்கும் என்று ஒரு ஸ்லோகத்தில் சொல்லுவார்.

வைரங்களின் எடை, அதன் விலைகள் ஆகியவற்றையும் பட்டியல் இடுகிறார் (என் ஆங்கிலக் கட்டுரையில் விவரம் காண்க)

பெண்கள் வைரம் அணிவது பற்றி அவர் சொல்கிறார்:

वज्रं न किञ् चिदपि धारयितव्यमेके

पुत्रार्थिनीभिरबलाभिरुशन्ति तज्ज्ञाः ।

श‍ृङ्गाटकत्रिपुटधान्यकवत् स्थितं यच्

श्रोणीनिभं च शुभदं तनयार्थिनीनाम् ॥ ७९.१७॥

குழந்தைகளை வேண்டும் பெண்கள் வைரங்களை அணியக்கூடாது என்று சிலர் சொல்லுவர். ஆனால் என் கருத்து, ஆண் குழந்தைகளை விரும்பும் பெண்கள் முக்கோண வடிவுள்ள அல்லது, கொத்தமல்லி விதை வடிவமுள்ள வைரங்களை அணியலாம்.

இன்னும் ஒரு ஸ்லோகத்தில் வராஹமிகிரர் செப்புவது யாதெனில்: குறையுள்ள வைரங்களை அணிவது வாழ்க்கையையே பாதிக்கும்; செல்வம், குழந்தை, குடும்பத்தையே பாதிக்கும்; நல்ல வைரங்களோவெனில் எதிரிகளை அழித்து வெற்றிக்கொடி நாட்டவைக்கும்; விஷம், இடி, மின்னல் கூட அவர்களைப் பாதிக்காது. மன்னர்கள் அணிந்தால் கூடுதல் சுகபோகங்கள் கிட்டும்.

MY OLD ARTICLES ON DIAMONDS

ஆர்டிக் பிரதேச பனிக்கட்டிக்கு அடியில் வைரக்கற்கள்! (Post No 2561) Date: 21 February 2016

பெண்கள் வைரங்களை அணியலாமா வராஹமிகிரர் கருத்து என்ன? ஆய்வுக்கட்டுரை எண்:–1642; தேதி 11 பிப்ரவரி 2015

பூமியில் புதைந்துள்ள தங்கமும் வைரமும் தருக : புலவன் வேண்டுகோள் (Post 10,624)   3 FEBRUARY   2022     

கரி என்னும் அற்புத மூலகம்- Part 1 (Post No.9517) 21 APRIL  2021    

வைரம் பற்றிய 4 பழமொழிகள் கட்டத்தில் கண்டுபிடி (Post.8603) –31 August 2020

வைரங்களின் அளவுதரம்விலை (my 11th article in  Gemmology Tamil magazine, – Post No.7493, Date – 25 January 2020

ஜெம்மாலஜி பத்திரிகையில் 15 கட்டுரைகள் உள்ளன

xxxx

ஆயிரம் கோடி ரூபாய் ரத்தின பூமி …

1.        

4 May 2012 – இந்தியா விலை மதிக்க முடியாத செல்வச் செழிப்புள்ள நாடு. இன்றும் இந்தியாதான் உலகிலேயே பணக்கார நாடு. இது பற்றி …

வேதத்தில் | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/வேதத்தில்

புத்தர் வட இந்தியா முழுதும் பிரசாரம் செய்தார். ….. உலகிலேயே மிகப் பெரிய பணக்கார நாடு இந்தியா” — என்ற தலைப்பிட்ட ஐந்து ஆங்கிலக் …

ரிக் வேதத்தில் தங்க நகைகள்தங்கக் …

26 Sep 2017 – மெகஸ்தனிசும், ஸ்டிராபோவும் இந்தியாவின் தங்க வளத்தைப் … இன்றும் உலகிலேயே பணக்கார நாடு இந்தியாதான் என்றும் ஐந்து …

1.INDIAN ORIGIN OF DAMONDS! (Post No.9516) –21 APRIL  2021     

2.Surprise! Surprise!! Sri Rangam Temple Diamond is in Russian Sceptre (Post No.7499) , 26 January 2020

3.Diamond hunting in Anantapur, Kurnool regions on in monsoon season (Post.12,097)  7 June , 2023          

 4.If you return Kohinoor , British Museum will be Empty – British P M (Post No.11,665)   13 JANUARY 2023       

5.Krishna’s Diamond in USA ? April 23, 2012

6.Gemmology in Brhat Samhita No 1634; dated 8th February 2015

7.Kohinoor Diamond: Interesting Anecdote by Hallam Murray (Post No.2864) Date: 3 June 2016

—SUBHAM—

Tags- குறையுள்ள வைரம், பிருஹத் சம்ஹிதை, வராஹமிஹிரர், நல்ல வைரங்கள், கேட்ட வைரம் , ஆபத்து

Leave a comment

Leave a comment