QUIZ சங்குப் பத்து QUIZ (Post No.13,076)

QUIZ சங்குப் பத்து QUIZ (Post No.13,076)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,076

Date uploaded in London – –   9 March 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

 QUIZ சங்குப் பத்து QUIZ (Post No.13,076)

Quiz Serial Number- 116

1.கிருஷ்ணன் கையிலுள்ள சங்கின் பெயர் என்ன ?

XXXX

2. எந்த சங்கினைக் கொண்டு இறைவனுக்கு அபிஷேகம் செய்வார்கள் ?

XXXX

3. எந்த ஊரில்12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குளத்தில் சங்கு தோன்றுகிறது ?

XXXX

4. பஞ்ச பாண்டவர் கைகளிலுள்ள சங்குகள் பெயர்களை பகவத் கீதையில் காணலாம். அவை யாவை?

xxxx

5. எந்த மாதத்தில் சிவபெருமானுக்கு 1008  சங்குகளைக் கொண்டு அபிஷேகம் செய்வார்கள்?

xxxx

6. வலம்புரிச் சங்கு என்றால் என்ன ?

xxxx

7. சங்கு பற்றி பட்டினத்தார் என்ன சொல்கிறார் ?

xxxx

8. சங்கு என்பதிலிருந்து உருவான ஆங்கிலச்  சொல் என்ன ?

XXXX

9. தமிழ்க் கல்யாணங்களில் சங்கு ஊதி தாலி   கட்டும்  வழக்கம் பற்றி ஆண்டாள் என்ன சொல்கிறாள் ? இப்போதும் திருமணங்களில் சங்கு ஊதி தாலி கட்டும் வழக்கத்தைக் கடைப்பிடிப்பவர்கள் யார்?

XXXX

10. கோவிலில் தீபாராதனை காலத்தில் சங்கு ஊதுவது ஏன் ?

XXXX


விடைகள்

1.பாஞ்சஜன்யம்

XXXX

2. வலம்புரிச் சங்கினைக் கொண்டு இறைவனுக்கு அபிஷேகம் செய்வார்கள்

XXXX

3. திருக்கழுகுக்குன்றம் வேதபுரீஸ்வரர் கோவில் குளத்தில் ௧௨ ஆண்டுகளுக்கு ஒரு முறை சங்கு தோன்றும். இவ்வாறு தோன்றிய சங்குகளைக் கோவிலில் யாரும் காணலாம் ; செங்கல்பட்டுக்கு அருகில் இந்த ஆலயம் இருக்கிறது .

XXXX

4. பஞ்ச பாண்டவர்களின் சங்குகளின் பெயர்கள் பின்வருமாறு: தர்மன்- ‘அநந்த விஜயம்’ ,பீமன்- ‘பௌண்டரம்’ , அர்ஜுனன்-‘தேவதத்தம்’, நகுலன்- ‘சுகோஷம்’ , சகாதேவன்- ‘மணிபுஷ்பகம்’.

xxxx

5. கார்த்திகை மாத சோமவாரங்களில் (திங்கட்கிழமை) பெரும்பாலான கோவில்களில் சிவ பெருமானுக்கு சங்காபிஷேகம் நடக்கும் .

xxxx

6. சங்குகளில் இரண்டு வகைகள் உண்டு. இடப்பக்கம் சுழிந்து செல்லும் சங்குகள் உலகில் எளிதாகக் கிடைக்கும். வலது பக்கம் சுழியுடைய வலம்புரிச் சங்குகள் (clock wise whorls) அபூர்வமாகவே கிடைக்கும். வலம்புரிச் சங்குகளை இந்துக்கள் மிகவும் புனிதமாகக் கருதுகின்றனர்.

xxxx

7. முதல் சங்கு அமுதூட்டு மொய்குழலாராசை

நடுச் சங்கு நல் விலங்கு பூட்டும் – கடைச் சங்கம்

ஆம்போது அது ஊதும் அம்மட்டோ விம்மட்டோ

நாம் பூமி வாழ்ந்த நலம்.

முதல் சங்கில் நமக்கு நம் தாய் பால் ஊட்டுவாள்.

இரண்டாவது சங்கு திருமணத்தில் ஒலிக்கும் சங்கு. அந்தக் காலத்தில் எல்லார் வீட்டு திருமணங்களிலும் சங்கு ஊதி தாலி கட்டுவர்.

மூன்றாவது சங்கு? அது நம் காதிலேயே விழாது. ஏனெனில் அது நமது இறுதி ஊர்வலச் சங்கு.

xxxx

8. காஞ்ச் CONCH என்று சொல்லுவர். இது உண்மையில் சங்க என்ற ஸம்ஸ்க்ருதச் சொல். பின்னர் தமிழில் சங்கு ஆனது . தொல்காப்பியச் சூத்திரப்படி தமிழில் ‘ச’ எழுத்தில் சொற்களே துவங்க முடியாது ஆகையால் சங்கம், சங்கு என்பதெல்லாம் சம்ஸ்க்ருதம் தான். சங்க என்பதே சரியான உச்சரிப்பு. சி/C என்ற ஆங்கில எழுத்தை ச என்றும் க என்றும் உச்சரிக்கும் வழக்கம் இருப்பதால் ஆங்கிலத்தில் காஞ்ச் CONCH என்கின்றனர் .

xxxx

9. ஆண்டாள் ,வாரணம் ஆயிரத்தில் தாம் திருமாலைத் திருமணம் செய்யும் கனவுக் காட்சியை வருணிக்கையில் சங்கு ஊதுவதைக் குறிப்பிடுகிறார்.:—

மத்தளம் கொட்டவரி சங்கம் நின்று ஊத,

முத்து உடைத் தாமம் நிரை தாழ்ந்த பந்தல் கீழ்

மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து என்னைக்

கைத்தலம் பற்றக் கனாக் கண்டேதோழீ! நான்.

–ஆண்டாள் நாச்சியார் திருமொழி

வங்காளி இந்துக்கள் இப்போதும் சங்கு ஊதி கல்யாணம் செய்கின்றனர்

XXXX

Temple Tank Shanka Wonder from Tiru Kazuku Kundram

10. சங்கு ஒலி ஓம்கார ஒலியைக் குறிக்கும். வைதீக சைவர்கள் ஆத்மார்த்தமாகவோ பரமார்த்தமாகவோ செய்யும் பூஜைகளில் சங்கு பூஜை முக்கிய இடத்தைப் பெறுகிறது. நத்தார்படையின் மகிமை சொல்லுதற்கரியது. சங்குப் படைக்கு மத்தியில் அதன் அதி தேவதைகளான கங்கா தேவியும் வருணனும் வசிக்கின்றனர். சங்கின் முன்பாகத்தில் கங்கை, சரஸ்வதியும் பின்பாகத்தில் பிரஜாபதியும் வசிக்கின்றனர்.

“ பாஞ்சஜன்யமே ! நீ முன்னர் திருப்பாற் கடலில் உதித்தனை. மஹாவிஷ்ணுவினால் கையில் தரிக்கப்பட்டு எல்லா தேவர்களாலும் பூஜிக்கப்பட்டனை. தேவர் தம் பகைவராகிய அசுரர்களின் மனைவியரின் கருக்களை எல்லாம் உன் பேரொலியினால் ஆயிரம் தூள் தூளாகினை. உனக்கு வணக்கம் “

என்ற மந்திரத்தினால் சங்கில் தீர்த்தத்தை நிரப்பவேண்டும்.சங்கு, ஹரியின் இருப்பிடம். பணத்தைக் கொண்டுவரும். சங்கு தீர்த்தம் பற்றி பத்ம புராணம் விரிவாகக் கூறுகிறது. சங்கில் பாலை நிரப்பி இறைவனை நீராட்டினால் ஆயிரம் யாகங்கள் செய்த பலனை அடையலாம். கங்கை நீரை நிரப்பி அபிஷேகம் செய்தால் பிறவிப் பிணியை அறுக்கலாம் என்றும் புராணங்கள் கூறும்.”

தட்சிணாவர்த்த (வலம்புரிச் சங்கு) சங்கு கொண்டு அர்ச்சிப்போன் ஏழு பிறவிகளில் செய்த வினைகளயும் நீக்கலாம் என்று ஸ்காந்தம் கூறும்.

–SUBHAM—

TAGS- வலம்புரிச் சங்கு, சங்கு ஊதுவது ஏன், பட்டினத்தார், சங்குப் பத்து QUIZ, திருமணம் , கல்யாணம் , ஆண்டாள், வங்காளி

யே ஜிந்தகி உஸீ கி ஹை,  ஜீவிதமே சபலமோ, என் சிந்தை நோயும் தீருமா (Post.13,075)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.075

Date uploaded in London – — 9 March 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

யே ஜிந்தகி உஸீ கி ஹை,  ஜீவிதமே சபலமோ,, என் சிந்தை நோயும் தீருமா,

 ச. நாகராஜன்

ஒரே ஹிந்தி மெட்டில் மலர்ந்த இரு தமிழ் திரைப்படப் பாடல்கள்!

1953-ம் ஆண்டு வெளியான ஹிந்தி திரைப்படம் அனார்கலி.

இது அனைவரும் அறிந்த ஒரு காதல் கதை. ப்ரதீப் குமார்(சலீமாக நடித்தார்) , பினா ராய் (அனார்கலியாக நடித்தார்) , குல்திக் கௌர், நூர்ஜஹான் ஆகியோர் நடித்த் இந்தப் படத்திற்கு இசை அமைத்தவர் சி.ராமச்சந்திரா.

12 பாடல்கள் இந்தப் படத்தில் இடம் பெற்றன.

பாடல்கள் அனைத்தும் ஹிட்!

இந்தப் படத்தை இயக்கியவர் : நந்தலால் ஜஸ்வந்த்லால்.

இதில் இடம் பெற்ற ஒரு பாடல் அனைவரையும் கவர்ந்தது. பாடலைப் பாடியவர் லதா மங்கேஷ்கர்.

பாடலை யூ டியூபில் என்றும் கேட்கலாம். பாட்டின் நேரம் 4 நிமிடம் 11 வினாடிகள்

யே ஜிந்தகி உஸீ கி ஹை ஜோ கிஸீ கா ஹோ கயா

என்ற அந்தப் பாடலைக் கீழே பார்க்கலாம்:

yeh zindagi usi ki hai jo kisi ka ho gaya
pyaar hi mein kho gaya
yeh zindagi usi ki hai jo kisi ka ho gaya
pyaar hi mein kho gaya
yeh zindagi usi ki hain …

yeh bahaar yeh sama keh raha pyaar kar
kisiki aarzoo mein apne dil ko beqarar kar
zindagi hai bewafa loot pyaar ka mazaa
yeh zindagi usi ki hai …

dhadak raha hain dil to kya dil ki dhadkane na gin
phir kahaan yeh phursatein phir kahaan yeh raat din
aa rahi hain yeh sada mastiyon mein doob jaa
yeh zindagi usi ki hain …

do dil yahaan na mila sake, milenge us jahaan mein
khilenge hasaraton ke phul, maut ke aasman mein
ye zindagii chali gai jo pyar mein to kya huaa
ye zindagii …

sunaa rahii hai daastaan, shamaa mere mazaar kii
fizaa mein bhii khil rahii, ye kalii anaara kii
ise mazaar mata kaho, ye mahal hai pyaara kaa
ye zindagii …

ai zindagii ki shaama aa, tujhe gale lagaauun main
tujhii mein Dub jaauun main
jahaan ko bhuula jaauun main
basa ek nazar mere sanam, alvidaa, alvidaa
alvidaa …
alvidaa …
alvidaa …

ஜீவிதமே சபலமோ

இதே அனார்கலி கதை தெலுங்கிலும், தமிழிலும் 1955-ல் எடுக்கப்பட்டது.

அனார்கலியாக அஞ்சலிதேவியும், சலீமாக நாகேஸ்வரராவும் நடித்து அனைவரது பாராட்டையும் பெற்றனர். இசை அமைத்தவர் பி.ஆதிநாராயண ராவ். தெலுங்கில் பாடலை எழுதியவர் சமுத்ரலா. தமிழில் எழுதியவர் தஞ்சை ராமையாதாஸ்.

பாடலைப் பாடியவர் ஜிக்கி.

பாடல் இது தான்:

ஆ…. ஆ… ஆ…. ஆ…
ஜீவிதமே சபலமோ ஜீவிதமே சபலமோ என்
ஜீவிதமே சபலமோ தென்றல் சுகம் மலருமோ
ப்ரேமை என்றால் மதுரமோ?
ஜீவிதமே சபலமோ தென்றல் சுகம் மலருமோ
ப்ரேமை என்றால் மதுரமோ?
ஜீவிதமே சபலமோ

ஆசையாய்த் தேடுதே ஆர்வமோடு பாடுதே
ஆசையாய்த் தேடுதே ஆர்வமோடு பாடுதே
வண்டாக சூடும் காதல் மதுர மனமும் சுகமாய் மலர்ந்ததே
வண்டாக சூடும் காதல் மதுர மனமும் சுகமாய் மலர்ந்ததே
அனாரு பூவின் சொலையில் ஆ..ஆ..ஆ.
அனாரு பூவின் சொலையில் ஆசைக் கனவு காணுதே

ஜீவிதமே சபலமோ தென்றல் சுகம் மலருமோ
ப்ரேமை என்றால் மதுரமோ?

வசந்த மதுர தேன்மலர் மன்றாடி ஏங்கும் வேளையே
வசந்த மதுர தேன்மலர் மன்றாடி ஏங்கும் வேளையே
காவின் தென்றல் வீசுதே யாவும் ப்ரேமை லீலையே
காவின் தென்றல் வீசுதே யாவும் ப்ரேமை லீலையே
விண்ணோடு பேசும் உறவிலே கண்ணோடு பேசும் ஆவலால்
விண்ணோடு பேசும் உறவிலே கண்ணோடு பேசும் ஆவலால்

ஜீவிதமே சபலமோ தென்றல் சுகம் மலருமோ
ப்ரேமை என்றால் மதுரமோ?
ஜீவிதமே சபலமோ என் ஜீவிதமே சபலமோ

என் சிந்தை நோயும் தீருமா?

இதே ஹிந்தி மெட்டு மீண்டும் ஒரு தமிழ்ப் படத்தில் இடம் பெற்றது.

அற்புதமான இசையுடன் கூடிய இந்த சோகமயமான பாடலை 1955-ல் வெளியான காவேரி படத்தில் ஜிக்கி பாடினார். D. யோகானந்த் இயக்கிய இந்தப் படத்தில் சிவாஜி கணேசனும் பத்மினியும் நடித்தனர். இதே படம் தெலுங்கில் விஜயகௌரி என்று படமாக்கப்பட்டது.

இசை அமைத்தவர் ஜி.ராமநாதன், விஸ்வநாதன் ராமமூர்த்தி மற்றும் சிதம்பரம் ஜெயராமன்.

இந்தப் பாடலை எழுதியவர் கவிஞர் உடுமலை நாராயணகவி

என் சிந்தை நோயுந் தீருமா?

தீயன் சூழ்ச்சி மாறுமா?

ஸ்நேகம் ஒன்று சேருமா   (என்)

தாயில்லா ஏழை நான்

தரணிமீது வாழ்வெனோ?

சகாயம் தானில்லாது பெருமை

தாழ வீணில் மாள்வெனோ?

தந்தை அன்பைக் காண்பெனோ?

சாந்தி தேடிப் போவேனொ..?    (என்)

மனம் பெறாத மல்லிகை

மாண்பு குறைதல் போலவே

மாதும் நானும் சீரிலாப் பேதையாதல் ஞாயமோ?

மாசிலாத தெய்வமே

தேவியே கண் பாரம்மா!  (என்)

ஒரே ஹிந்தி மெட்டில் இரு தமிழ்ப் பாடல்கள். அனைவரும் ரசித்தனர்.

மூன்று பாடல்களுமே ஹிட் தான்.

காரணம் அதில் இருந்த இசை மெட்டு தான்!

உற்சாகமும் உத்வேகமும் அந்தக் காலத்தில் பல மொழிகளிலும் இருந்து பெறப் பட்டதை இந்த யூ டியூப் காலத்தில் பார்த்து வியக்க முடிகிறது.

பக்கத்திலேயே ஹிந்திப் பாடலையும் தமிழ்ப் பாடலையும் பார்க்கும் ஒரு அமைப்பு உருவாகும் என்று 1955-ல் சொல்லி இருந்தால் யார் தான் நம்பி இருப்பார்கள்?

இப்போதோ நூற்றுக் கணக்கான ஹிந்திப் பாடல்களையும் அதே மெட்டில் உள்ள தமிழ்ப் பாடல்களையும் ஒரு சேரக் கேட்க முடிகிறது!

ஆங்கிலத்திலிருந்து ஹிந்திக்கும், ஹிந்தியிலிருந்து ஆங்கிலம் மற்றும் தமிழுக்கும், தமிழிலிருந்து ஹிந்திக்குமாக இப்படி பல மொழி சஞ்சாரங்களைக் கொண்ட மெட்டுக்களை இந்த நவீன தொழில்நுட்ப காலத்தில் கேட்டு, கண்டு பிரமிக்க முடிகிறது!

கேளுங்கள், மகிழுங்கள், திரைப்படப் பாடல் சரித்திரத்தை தெரிந்து கொள்ளுங்கள்!

**

இந்து மதத்தில் இருதலைப் பறவை (Post No.13,074)

Karnataka Govt. emblem

இந்து மதத்தில் இருதலைப் பறவை (Post No.13,074)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,074

Date uploaded in London – –   8 March 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

இருதலைப் பறவை பற்றி 2011  டிசம்பரில் ஒரு கட்டுரை எழுதினேன். அது பற்றிய மேல் விவரங்களை அளிப்பதே இந்தக் கட்டுரையின் நோக்கம் .

கண்ட பேரண்ட பக்ஷி , பாரண்ட பட்சி (भारण्ड) (गण्डभेरुण्ड), என்று இதை சம்ஸ்க்ருதத்தில் அழைப்பர். சுமேரியா முதல் விஜய நகர பேரரசு வரை இருந்த இந்த சிற்பங்களை இன்றும் ரஷ்ய நாணயங்களிலும் , கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் கொடிகள் சின்னங்களிலும் பயன்படுத்துகின்றனர் . இந்தியாவைப் பொறுத்த மட்டில் கர்நாடக அரசு,  மைசூர் ராஜாங்க  சின்னங்களில் இன்றும் இருக்கிறது . சங்கத் தமிழ் நூல்களிலும் இந்தப் பறவை வருகிறது. ஆயினும் இன்றுவரை யாரும் இதை உயிருடன் பார்த்ததில்லை . பாமர மக்கள் இதை அண்டரண்ட பக்ஷி என்பர்

கண்ட பேரண்ட என்றால் சக்தி வாய்ந்த கழுத்து (கண்டம்) என்று பொருள்.

இந்து மத புராணங்களில் இது பற்றிய கதை ஒன்று உள்ளது .

Mysore Royal Emblem

புராணக் கதை

ஹிரண்ய கசிபு என்னும் அரக்கனைக் கொன்று அவனது மகன் பிரஹ்லாதனைக் காப்பாற்ற விஷ்ணு எடுத்த அவதாரம் நரசிம்மாவதாரம். இது தசாவதாரங்களில் ஒன்று. இந்தக் கதையில் ஒரு இடைச் சொருகலாக   வரும் கதைதான் கண்டபேரண்ட பட்சி கதை .

நரசிம்மத்தின் உக்கிரத்தைக் கண்டு அஞ்சிய தேவர்கள் சிவபெருமானை வேண்டிக்கொண்டனர். உடனே அவர் சரபம் என்னும்  மிருகமாக வந்து நரசிம்மத்தை அடக்குவதற்கு முயன்றார்.  ஆனால் விஷ்ணு,  கண்ட பேரண்டப் பறவையாக மாறி சரபத்தை விரட்டினார். பின்னர் இருவரும் விஷ்ணு, சிவன் என்ற சுய ரூபத்தில் அவரவர் இருப்பிடத்தை அடைந்தனர் . இந்தக் கதையின் உட்கருத்து இருதலைப் பறவை  மிகவும் சக்தி  வாய்ந்தது ; வெல்லமுடியாதது என்பதாகும் . சக்திவாய்ந்த என்ற பொருளின் காரணத்தினாலேயே கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் ரஷ்யாவும் இன்றும் இதைப் போற்றுகின்றன.

யோக வாசிஷ்ட நூலில் ஒரு ரிஷியின் பெயராகவும் பாராண்ட வருகிறது ; ஆனால் இதில் வியப்பு எதுவும் இல்லை ; கெளசிக பரத்வாஜ, சாண்டில்ய , ஜடாயு முதலிய பெயர்கள் பறவைகளின் பெயர்களே!

சமண மதத்தில் மூன்றுகால் பறவையாக இது வர்ணிக்கப்படுகிறது 2000 ஆண்டுப் பழமையான பஞ்ச தந்திரக் கதையிலும் தமிழ் சங்க நூல்களிலும் இது பற்றி காண்கிறோம்.

XXXXX

Double-Headed bird found in Alaja Huyuk, Turkey, 14th C BC

கீழ்கண்ட கட்டுரை (25-12-2011-ல் வெளியிடப்பட்டது)
சுமேரியாவில் தமிழ் பறவை
ச.சுவாமிநாதன்


சங்கத் தமிழ் இலக்கியமான அகநானூற்றில் ஒரு அரிய செய்தி வருகிறது. அது ஒரு இரண்டு தலைப் பறவை பற்றிய செய்தி. இந்தப் பறவை சுமேரியாவில் கி.மு 3800 சிலிண்டர் முத்திரை ஒன்றிலும் இருக்கிறது. அதுமட்டுமல்ல, பஞ்ச தந்திரக் கதைகளிலும் அச்யுத ராயரின் தங்கக் காசுகளிலும் இதே இரு தலைப் புள் கண்டரண்ட பறவை என்ற பெயரில் உள்ளது. அல்பேனியாவின் தேசியக் கொடியிலும் ரஷ்யாவின் காசு, கரன்சி நோட்டுகளிலும் தமிழ்நாடு,ஆந்திர,கர்நாடக கோவில்களிலும் இந்தப் பறவையின் ஓவியங்களையும் சிலைகளையும் பார்க்கலாம். எப்படி ஒரு தமிழ் பறவை இப்படி உலகெங்கும் பறந்து சென்று வெற்றிக் கொடி நாட்டியது என்பது ஒரு சுவையான செய்தி.

இதோ அகநானூறு கூறுவதைக் கேளுங்கள்:
“யாமே,பிரிவு இன்று இயைந்த துவரா நட்பின்
இருதலைப் புள்ளின் ஓர் உயிரம்மே”
–கபிலர் (பாடல் எண் 12)

இதன் பொருள்: இனி யாங்களோ ஒரு பொழுதும் பிரிதல் இல்லாது கூடிய வெறுத்தல் இல்லாத நட்பினால் இரண்டு தலைகளுடைய ஒரு பறவையின் உடம்பில் உள்ள ஓர் உயிர் போல் உள்ளோம்.
இரண்டு தலைப் பறவைக்கு தலைகள் மட்டுமே இரண்டு.ஆனால் வயிறு ஒன்றுதான். கபிலர் பாடிய பாடலில் இருவர் இருந்தாலும் உயிர் ஒன்றுதான் எனப் பாடியுள்ளார். அந்தக் காலத்தில் இந்தியா முழுதும் இப்பறவை பற்றி தெரிந்திருக்கிறது. ஆகையால் 2000 ஆண்டுகளுக்கு முன் எழுதப் பட்ட வடமொழி நூலான பஞ்ச தந்திரக் கதையிம் இப்பறவை வருகிறது. புறாக்கள் அனைத்தும் வேடனின் வலையில் சிக்கி அவை அனைத்தும் ஒன்றாகப் பறந்து சென்று வேடனை ஏமாற்றிய கதையை அனைவரும் அறிவோம். அந்தக் கதையில் ஒரு துணைக் கதையாக கண்ட பேரண்ட பட்சி கதை வருகிறது. இரு தலை பறவையின் இரண்டு தலைகளும் ஒன்றுக்கொன்று சண்டை யிடும் கதை. ஒரு தலை தனக்கு அம்ருதம் வேண்டும் என்றும் இன்னொரு தலை தனக்கு விஷம் வேண்டும் என்றும் சண்டை போடுகின்றன. இறுதியில் ஒரு தலை விஷம் அருந்தவே அப்பறவை இறக்கிறது. ஒற்றுமையின்மையால் இருதலைப் பறவை இறக்கும் கதை இது.

சங்கத் தமிழ் நூல்களான பரிபாடல் (8-72), கலித்தொகை (89), பிற்கால நூலான தகடூர் யாத்திரை ஆகியவற்றிலும் இருதலைப் பறவை உவமை வருகிறது.அந்த அளவுக்குப் பிரபலமான கதை. சேர மன்னனும் அதியமானும் ஒரே குலத்தவராயிருந்தும் சண்டை போட்டதற்கு உவமையாக தகடூர் யாத்திரை இதைக் காட்டுகிறது.

xxxx

துருக்கியில் இரு தலைப் புள்கி.மு 1400

சுமேரியாவில் இது லகாஷ் நகர தெய்வம் நினூர்தாவின் சின்னமாகக் கருதப் பட்டது.

துருக்கியில் ஹட்டுசா முதலிய நகர்களில் இது இரண்டு தலைகளாலும் இரண்டு முயல்களைத் தூக்குவது போல பெரிய உருவங்கள் செதுக்கப் பட்டுள்ளன. இது கி. மு 1400ல் செதுக்கப் பட்டது. துருக்கியின் வரலாற்றில் பின்னிப் பிணைந்துவிட்ட இப்பறவைக்கு வானத்தில் விண்கலத்திலிருந்து பார்க்கும் அளவுக்கு பிரம்மாண்டமான ஒரு வடிவத்தை எர்சூரும் மாகாணத்தில் இப்போது கட்டிவருகிறார்கள்.

நாயக்க மன்னர் காலத்தில் இப்பறவை மிகப் பலம் வாய்ந்த டினோசர் பறவை போல சித்தரிக்கப்பட்டுள்ளது. அச்யுத ராயர் (1530-1542) வெளியிட்ட தங்க நாணயத்தில் இரண்டு யானைகளைத் தூக்குவது போல படம் உள்ளது. அவ்ருக்கு முந்திய மன்னன் நாகரி எழுத்தில் பெயரை மட்டும் பொறித்தான்.

தமிழ்நாட்டில் ஆவுடையார் கோவில் ஒவியத்தில் இது பல யானைகளைத் தூக்குவது போல சித்தரிக்கப்பட்டுள்ளது. கர்னாடகத்தில் கேலடி கோவில் சிற்பத்திலும்,தட்சசீலத்தில் சமணர் கோவில் சிற்பங்களிலும் இப்பறவை உண்டு. ஸ்ரீசைலம்,பேலுர்,கோரமங்கலா கோவில்களிலும் இதைக் காணலாம்.

மைசூர் மன்னர் உடையார், இதை 500 ஆண்டுக் காலமாக ராஜவம்ச சின்னமாக பயன்படுதுகின்றனர். இன்றும் அரண்மனையில் இதைக் காணலாம். கர்நாடக அரசும் இதை தனது சின்னத்தில் பொறித்துள்ளது.
இப்பறவை ரஷ்ய நாணயங்கள், கரன்சி நோடுக்கள், அல்பேனியா,பல்கேரியா தபால் தலைகள், தேசியக் கொடி எல்லாவற்றிலும் இருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால் இரு தலைப் பறவை இல்லாத இடமே இல்லை. 2000 ஆண்டுகளுக்கு முன் கபிலர் பாடிய இப்பறவை எங்கெல்லாம் பறந்து செண்றுவிட்டது!!

குறுந்தொகையில் இருதலைக் குழந்தை

சங்க இலக்கிய நூல்களில் ஒன்றான குறுந்தொகையில் ஒரு இரு தலைக் குழந்தை Siamese Twins பற்றிய சுவையான செய்தி வருகிறது. பாடல் எண் 324 ஐ எழுதியவர் பெயரே கவைமகன்.அதாவது இருதலை உடையோன். கவட்டை, ஆங்கிலச் சொல் gap ஆகியவை இதனுடன் தொடர்புடைய சொற்களாக இருக்கலாம்.

ரிக் வேதத்தில் பெயர் தெரியாத மிகப் பழைய புலவர்களுக்கு அவர்கள் பயன் படுத்தும் சொற்றொடர்களைக் கொண்டு பெயரிடப் பட்டதாக அறிஞர் பெருமக்கள் எழுதியுள்ளனர். ஐந்தாம் நூற்றாண்டில் தமில் இலக்கியத்தைப் பகுத்து வைத்தோரும் அதே நடை முறையைப் பயன் படுத்தி ஏறத்தாழ 20 புலவர்களுக்கு இப்படி காரணப் பெயர்களை இட்டுள்ளனர்.

கவைமகன் (twins or Siamese Twins) எழுதிய குறுந்தொகை 324 ல் இருதலைப் புள் போலவே கருத்து கூறியுள்ளார்.


கவை மக நஞ்சு உண்டா அங்கு,
அஞ்சுவல் பெரும! என் நெஞ்சத்தானே.
— கவை மகனார்

பொருள்: இத்தலைவியோ தன் அறியாமையினால் வருந்துகின்றாள். யான் என் மனத்தினுள்ளே இரட்டைப் பிள்ளைகள் நஞ்சுண்டால் இருவர் திறத்தும் ஒரு தாய் வருந்துவதைப் போல நீ அங்கனம் வருதலை எண்ணி அஞ்சுவேன்.

ஒட்டிப் பிறக்கும் இருதலை குழந்தை மிகவும் அபூர்வம்.ஒரு லட்சத்தில் ஒர்ன்றுதான் இப்படிப் பிறக்கும்.அக் குழந்தைகளை ஆபரேஷன் செய்து தனியே பிரிக்க 18 மணி நேரம் கூட ஆகும்.இப்படிப் பட்ட நீண்ட நேர அறுவைச் சிகிச்சைகள் அண்மையில் நடந்தன.
மேற்கூறிய கவை மகன் உவமையில் ஒரு தலை விஷம் உண்டால் மறு தலையும் இறக்கும் என்பது விளக்கப் பட்டுள்ளது.

XXXXX

Russian Coin, Year 2009

சுமேரியாவில் கருடன் கதை

சுமேரியாவில் கிஷ் என்னும் நகரத்துக்கு முதல் மன்னன் ஏதனன். அவனுக்குக் குழந்தைகள் இல்லை. ஷாமாஷ் என்னும் சூரியக் கடவுளிடம் முறை இடுகிறான். குழந்தை பிறப்பதற்கான மர்ம மூலிகையின் பெயரைச் சொல்லுமாறு வேண்டுகிறான். மலைக்குச் செல்லும் படி சூரியதேவன் உத்தரவிடுகிறான். இதற்கிடையில் மலையில் பாம்புகளுக்கும் கருடன்களுக்கும் இடையில் சண்டை. எல்லா பாம்புகளையும் கருடன் பிடித்துத் தின்பதாக புகார். உடனே பாம்புகள் கடவுளிடம் முறையிட்டன. கருடனைப் பிடிக்க கடவுள் ஒரு திட்டம் தருகிறார். கருடனும் அகப்பட்டுக் கொள்கிறான். அந்த நேரத்தில்தான் ஏதனன் அங்கு செல்கிறான்.

கருடனை ஏதனன் காப்பாற்றுகிறான். நன்றிக்கடனாக அவனை தேவலோகத்துக்கு அது அழைத்துச் செல்கிறது. ஏதனன் உயரத்தைக் கண்டு பயப்படவே திரும்பிவிடுகின்றனர். பின்னர் பூவுகத்துக்கு வந்தவுடன் ஒரு கனவு வருகிறது. .மீண்டும் தேவ லோகம் செல்லுகின்றனர். இந்த
இடத்தில் களிமண் பலகை உடைந்திருக்கிறது.

அச்யுத ராயரின் தங்கக் காசு

இருந்தபோதிலும் பிற்கால களிமண் பலகைகளில் ஏதனனின் மகன் பலி அரசாண்டதாக வருவதால் தேவ லோக மூலிகை பெற்று குழந்தை பெற்றிருப்பான் என்றே ஆராய்ச்சியாளர்கள் எண்ணுகின்றனர். இந்தக் கதையிலும் இந்துமத கருடன் கதையிலும் கருடன்- நாகர் சண்டை வருவதும், அமிர்தம் அல்லது அற்புதக் குளிகை கொண்டுவர தேவலோகம் செல்லுவதும் ஒரே மாதிரியாக உள்ளன.

ஏதனன் மீண்டும் மீண்டும் முயற்சி செய்ததால் அவனை யத்னன் என்று அழைத்திருக்கலாம். யத்ன என்ற சம்ஸ்கிருதச் சொல்லுக்கு விடாமுயற்சி என்று பொருள். யத்னன் உடன் சென்றவன் பெயர் சுமுகன். அவனுடைய மக்ன் பெயர் பலி. அதுவும் சம்ஸ்கிருத சொல். சுமுகன், சுமேரு மற்றும் அதர்வ வேதத்தில் வரும் தியமத், அலிகி, விலிகி ஆகிய சம்ஸ்கிருத சொற்கள் சுமேரியாவில் காணப்படுகின்றன. இவை எதற்கும் மேலை நாட்டினர் விளக்கம் சொல்ல முடியவில்லை.


ரிக்வேதத்தில் கருடனை சுபர்ணன், ஸ்யேனன் என்று அழைக்கின்றனர்.
சுமுகன், சுமேரு. அலிகி, விலிகி பற்றி தனியாகக் காண்போம்.

–SUBHAM—

இருதலைப் பறவை , கண்டபேரண்ட பட்சி, பாராண்ட பட்சி, சங்கத் தமிழ் நூல்கள் , ரஷ்ய நாணயம், சுமேரியா, இந்து மதத்தில் ,

பேராற்றல் மிக்க பெண்கள் உலகம்! – 2 (Post No.13,073)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.073

Date uploaded in London – — 8 March 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

8-3-2024 உலக மகளிர் தினம்த்தையொட்டி மாலைமலர் 6-3-2024 இதழில் பிரசுரிக்கப்பட்டுள்ள சிறப்புக் கட்டுரை! இரு பகுதிகளாக இங்கு பிரசுரிக்கப்படுகிறது, 

பேராற்றல் மிக்க பெண்கள் உலகம்! – 2 

ச. நாகராஜன் 

இதிஹாஸத்திலும் இலக்கியத்திலும் பெண்கள்

ராமாயண மஹாபாரத இதிஹாஸங்களில் வரும் அறிவு சால் பெண்மணிகளைப் பற்றி எழுதப் புகுந்தால் ஒரு கலைக்களஞ்சியமே உருவாகும்.

திரௌபதி தினமும் பத்தாயிரம் பேர்களுக்கு பெயரைக் குறிப்பிட்டு அன்றாடப் பணிகளைத் தானே நேரில் தருவது வழக்கம்.. மெமரி க்வீன் – நினவாற்றல் ராணி என்றே அவருக்குப் பெயர்.

தமயந்தியோ காதலன் நளனைப் போலவே அதே உருவில் வந்த தேவர்களை தன் கூரிய அறிவு கூர்மையால் இனம் கண்டாள். கண் இமைத்தலால் (தேவர்களுக்கு கண் இமைக்காது; மனிதனான நளனுக்கு இமைக்கும்). அடிகள் காசினியில் தோய்தலால் – தேவர்களுக்கு கால் பூமியில் படாது. நளனுக்கு (பூமியில் கால் ஊன்றி நிற்கும்) வண்ண மலர் மாலை வாடுதலால் (தேவர்களுக்கு சூட்டப்பட்ட மாலை வாடவே வாடாது. மனிதனான நளனுக்கு சூட்டப்பட்ட மாலை வாடி இருக்கும்). இத்தகைய அறிவு கூர்மையால் நளனை இனம் கண்டு அவனுக்கு மாலை சூடிய அற்புத அறிவு சால் பெண் தமயந்தி.

சாவித்திரியோ யமனிடம் வாதாடி சத்தியவானின் உயிரை மீட்டாள்.

இப்படி அறத்தின் அடிப்படையிலான நூற்றுக் கணக்கான பெண்மணிகளை நமது இதிஹாஸங்களும் இலக்கியமும் சுட்டிக் காட்டுகின்றன.

தமிழ் இலக்கியத்தை மட்டும் எடுத்துக் கொண்டோமானால் சங்க இலக்கியத்தில் நாம் காணும் பெண் புலவர்கள் ஏராளமானோர்.

அஞ்சில் ஆந்தைமகள் நாகையார், அள்ளூர் நன்முல்லையார், ஒக்கூர் மாசாத்தியார், ஔவையார், கழார்க் கீரனெயிற்றியார், குமிழிஞாழார் நப்பசலையார், நக்கண்ணையார், போந்தைப் பசலையார், மதுரை நல்வெள்ளியார், முள்ளியூர்ப் பூதியார், வெள்ளிவீதியார் என்று இந்தப் பட்டியல் நீளும். ஔவையாரைப் போல இன்னொரு பெண் புலவர் இலக்கிய உலகில் உண்டா, என்ன?

பெண்களுக்கு இன்று இருக்கும் பிரச்சினைகள்

“ஆண்களோடு பெண்களும் சரி நிகர் சமானமாக வாழ்வம் இந்த நாட்டிலே” என்று மகாகவி பாரதியாரின் முழக்கம் முழங்கி நூறு ஆண்டுகள் கடந்து விட்டன. என்றாலும் நம் நாட்டைப் பொறுத்த வரையில்

1)   அரசியலுக்குத் தேவையான அளவு தலைமைப் பண்புள்ள பெண்மணிகள் இன்னும் தேவை.

2)   வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள, கல்வியறிவில்லாப் பெண்மணிகள் ஏற்றம் பெற உரிய நடவடிக்கை தேவை.

3)   பாலியல் கொடுமைகளும், இல்லத்தில் ஏற்படும் வன்கொடுமைகளும் முற்றிலுமாக நீக்கப்பட வேண்டும்.

4)   நீதித் துறை, விளையாட்டு, அறிவியல், கல்வி, விண்வெளி, பாதுகாப்பு, மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் பெண்களுக்கு இருக்கும் தடைகள் இனம் காணப்பட்டு அகற்றப்பட வேண்டும்.

ஆணுக்கு அறிவு அதிகமா பெண்ணுக்கு அதிகமா?

பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்

   பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்

எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண்

   இளைப்பில்லை காண் என்று கும்மியடி என்று மகாகவி பாரதியார் கூற்றை மெய்ப்பிக்கும் சம்பவத்தை சுட்டிக் காட்டுகிறது கொங்கு மண்டல சதகத்தில் உள்ள பாடல் எண் 65.

தக்கையிசை ராமாயணம் என்ற நூலை இயற்றிய சிறந்த கவிஞரான எம்பிரான் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சங்ககிரியில் வாழ்ந்து வந்தார்.

ஒரு நாள் கவிஞர் வெளியில் சென்றிருந்த போது அவருடன் அளவளாவி மகிழ சில வித்துவான்கள் அவர் வீட்டிற்கு வந்தனர்.

அறிவில் சிறந்த அவரது மனைவி பூங்கோதையார் அவர்களை வரவேற்று உபசரித்து கவிராயர் வெளியில் சென்றிருப்பதையும் சற்று நேரத்தில் வந்து விடுவார் என்பதையும் கூறினார்.

திண்ணையில் அமர்ந்த வித்துவான்கள் தங்களுக்குள் பல்வேறு விஷயங்களைப் பற்றிப் பேச ஆரம்பித்தனர்.

அவர்களுள் ஒருவர் எவ்வளவு தான் கற்றாலும் ஆணுக்கு முன்னால் பெண்ணின் அறிவு குறைவு தான் என்ற தன் கருத்தை முன் வைத்தார். அதை அனைவரும் சந்தோஷமாக ஆதரித்து பெண்களை இழித்துச் பேச ஆரம்பித்தனர்.

வீட்டின் உள்ளேயிருந்து இதைக் கேட்டுக் கொண்டிருந்த பூங்கோதையாரால் ஒரு அளவுக்கு மேல் பொறுக்க முடியவில்லை.

ஒரு சிறிய துண்டுச் சீட்டில் ஒரு பாடலை எழுதி ஒரு சிறுமி மூலம் புலவர்களிடம் அனுப்பினார். அந்தப் பாடல்:

அறிவில் இளைஞரே ஆண்மக்கள்; மாதர்

அறிவில் முதிஞரே ஆவர் – அறிகரியோ

தான் கொண்ட சூல் அறிவர் தத்தையர்; ஆண்மக்கள்

தான் கொண்ட சூல் அறியார் தான்

இதைப் படித்துப் பார்த்த புலவர்கள் திகைத்துப் போனார்கள். அந்த நேரத்தில் வெளியில் சென்றிருந்த கவிராயர் திரும்பி வந்தார். நடந்ததை அறிந்து கொண்ட கவிராயர் தன் மனைவியிடம் அதற்கான விளக்கத்தைக் கேட்டார்.

ஆண்மக்களை இழித்துக் கூறலாமா என்ற அவர் கேள்விக்கு அம்மையார், “நான் இழித்துக் கூறவில்லையே ஆண், பெண் இருவரும் அறிவைக் கொண்டிருந்தாலும் அறிவில் சிறந்தவர்கள் பெண் மக்களே என்றல்லவா கூறி இருக்கிறேன். ஆன்மாவானது நீர்த்துளி வழியே பூமியில் சேர்ந்து உணவு வழியாக புருஷ கர்ப்பத்தில் தங்கி பின்னர் பெண்ணின் கருப்பையை அடைந்து கர்பமுற்று சிசு பிறக்கிறது. ஆகவே தங்கள் கர்ப்பத்தைத் தெரிந்து கொள்ளாத ஆண்களை விட அதை அறிந்திருக்கும் பெண்களே அறிவில் சிறந்தவர்கள் என்கிறேன்” என்றார்.

மேல் உலகம் சென்ற ஒரு உயிரானது, பூமிக்குத் திரும்பும் போது முறையே துறக்கம், மேக மண்டலம், நிலம், தந்தை, தாய் ஆகிய ஐந்து இடத்துப் புகுந்து வருவதை தியானித்தலே பஞ்சாக்கினி வித்தை என்று அறநூல்கள் கூறுகின்றன.

சொர்க்கம் சென்ற ஆன்மா, மேகத்தை அடைந்து மழைத்துளி மூலம் நிலத்தை அடைந்து உணவுப் பொருளாய் புருஷ தேகத்தை அடைந்து பின்னர் இந்திரிய மயமாக பெண்ணின் கருப்பையை அடைந்து சிசுவாகப் பிறக்கிறது. புருஷ கர்ப்பத்தில் இரண்டு மாதம் தங்கி இருப்பதை ஆண்கள் அறிவதில்லை. ஆனால் கருவுற்ற உடனேயே பெண் மக்கள் அதை அறிந்து போற்றிப் பாதுகாத்து குழந்தையைப் பிரசவிக்கின்றனர்.

அறிவில் சிறந்தவர் ஆணா, பெண்ணா? பெண்ணே தான் என்று அடித்துக் கூறினார் பூங்கோதையார்.

விக்கித்துப் போன புலவர்கள் அதை ஒப்புக் கொண்டனர்.

விஷயம் கொங்கு மண்டலம் வழியே தமிழகமெங்கும் பரவியது. அனைவரும் பூங்கோதையாரைப் பாராட்டி மகிழ்ந்தனர். தாய்க்குலத்தின் மகிழ்ச்சியைச் சொல்லவும் வேண்டுமோ!

சிக்கலான கேள்விக்கு சரியான பதிலை அளித்த அறிவில் சிறந்த பெண்மணியான பூங்கோதையைப் பெற்ற மணியான பூமி கொங்கு மண்டலமே என்று கொங்கு மண்டல சதகத்தில் கார்மேகக் கவிஞர் பாடியுள்ளார்.

குறுமுனி நேர் தமிழ் ஆழி உண் வாணர் குழாம் வியப்ப

அறிவில் இளைஞரே ஆண் மக்கள் என்ன அறுதியிட்ட
சிறிய விடைச்சி எம்பெருமான் மனைவி சிறந்து வளர்

மறுவறு சங்ககிரி சேர்வது கொங்கு மண்டலமே

பொருள்: தமிழ்க் கடலை உண்ட அகத்திய முனி போன்ற பல புலவர்கள் வியக்குமாறு, அறிவில் இளைஞர் ஆண் மக்களே என்று முடிவு கூறிய எம்பெருமான் கவிராயரது மனையாட்டியார் வாழும் சங்க கிரியும் கொங்கு மண்டலமே!

தமிழ் மங்கையர் பொறுப்பு

இப்படி உலகிற்கே அரிய உண்மையை உணர்த்திய பெருமை தமிழ் மங்கையையே சாரும். பெண்களின் சம உரிமையை நிலை நாட்டி உலகெங்கும் அவர்களை மேல் நிலைக்குக் கொண்டு செல்ல தமிழ் மங்கையரை விட தகுதி வேறு யாருக்கு உண்டு. உலக மகளிர் தினத்தில் சிந்திப்போம். செய்வார்களா?

***

முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள் — 15 (Post No.13,072)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,072

Date uploaded in London – –   7 March 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

நூலின் பெயர் — மூலிகை மர்மம்

வெளியிட்ட ஆண்டு 1899

 By முனிசாமி முதலியார்

இந்த நூலில் அகரவரிசைப்படி மூலிகைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

சென்ற பகுதியில் 140  வரை பார்த்தோம் ;இதோ தொடர்ச்சி………

PART 15

xxxxx

முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள்—15

XXXXX

xxxxx

141.நாதம் உண்டாக

ஒட்டை நெய்யை  உண்டியுடன் உபயோகித்து வருவதாலும்  மேற்படி நெய்யினால் பலகாரங்கள் செய்து தின்றுவருவதாலும்  அபரிமிதமான இக் …யத்தை யுண்டாக்கும்

xxxx

142. வீக்கத்திற்கு

ஒட்டை லத்தியை சுரத்தால் கண்ட கால் வீக்கத்திற்கு மேற்படி லத்தியும் கொண்டுவந்து புதுச்சட்டியில் போட்டு வெதுப்பி  கால்களில் கனமாய் அப்பிவைத்து துணிக்கந்தையால் அழுத்திக்கட்டிவைத்து மறுதினம் காலையில் அவிழ்த்து விடவும்.  இப்படி மூன்று காட்டுக்கு காட்டவும் தீரும்.

xxxxx

143. காது குத்தலுக்கு

ஒருதலைப்பூண்டை வெதுப்பி காதில் இரண்டோரு துளிகள் பிழியவும் தீரும். இப்படி 2-3 வேளை செய்யவேண்டும்.

xxxx

144. பிரமியத்திற்கு

ஓரிலைத் தாமரையைஇடித்து சாறு பிழிந்து கொஞ்ச்ம சீனி சக்கரை கலந்து ஒரு வேளைக்கு அரைக்கால் படி வீதம் மூன்று நாள் கொடுக்கவும். சாந்தியாகும். இச்சாபத்தியம் .

xxxx

145. சுக்கில பிரமியத்திற்கு

ஓரிலைத்தாமரையும் நற் சீரகமும் சமனாய்க் கூட்டி அறைத்து ஒருவேளைக்குக் கொட்டைப்பாக்குப் பிரமாணம் கொடுக்கவும். இப்படி ஆறு வேளை கொடுக்க சாந்தியாகும். இச்சாபத்தியம்

xxxx

146. புள்ளின் தோஷத்திற்கு

ஓரிலைத்தாமரை வெந்தியம் விடத்தலை வேர் சுக்கு வால் மிளகு  ஓரளவாயிடித்து  கிஷாயம் செய்து கொடுத்துவரத் தீரும்.

xxxxx

147. உஷ்ணம் நீங்க

ஓணான்கொடி அல்லது கொழுந்து கொண்டுவந்து பாலில் அறைத்துக் கலக்கி உண்டுவந்தால் வெப்பம் தணியும் . வெள்ளை விழுதலும் நீங்கும்.

xxxx

148. அக்கினிமந்தத்திற்கு

ஓமம் சுக்கு சித்திர மூல வேரின் பட்டை இவைகள் சரியிடையாய் எடுத்து பொடித்து அதற்குச் சரியிடை கடுக்காய்ப்பொடி கூட்டி வஸ்திரகாயம் செய்து வேளைக்குத் திருகடிப் பிரமாணம்  எடுத்து மோரில் கலக்கிப் புசித்து வந்தால் அக்கினி மந்தம் தீரும். பசியுண்டாகும்.

xxxx

149. புகையிருமலுக்கு

ஓமம் கடுக்காய் தோல் சுக்கு திப்பிலி மிளகு அரத்தை அக்கிராகாரம்  தேசா வரம் இவைகள் சமநிடை கொண்டு சூரணித்து அதில் பாதி சக்கரை கூட்டி திருகடியளவு இருவேளையும்  புசித்துவந்தால் நிவர்த்தியாகும்.

xxxx

150. வயிற்றுக் கடுப்பு கழிச்சலுக்கு

ஓமம் மிளகு வகைக்கு பலம் ஒன்று சட்டியிலிட்டு வெதுப்பிக்கொண்டு வெல்லம் ஒரு பலம் கூட்டி அறைத்து திருகடிப் பிரமாணம் பத்து நாள் கொடுக்க நிவர்த்தியாகும்.

—subham—

Tags- வயிற்றுக் கடுப்பு, திருகடிப் பிரமாணம், முனிசாமி முதலியார் , மூலிகை அதிசயங்கள் 15

Double Headed Bird in Hinduism (Post No.13,071)

Mysore Emblem

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,071

Date uploaded in London – –   7 March 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

Double headed bird is called Bharanda, Gaṇḍabheruṇḍa,  Bhāraṇḍa  (भारण्ड) in Hinduism. It is a Sanskrit word. From Sumerian Civilization to Vijayanagara Samrajya of 14th century we see this bird in art and architecture. The strange thing about this bird is still the East European countries and Russia use this bird in their national emblems or Flags or coins.

The Gaṇḍabheruṇḍa (गण्डभेरुण्ड), a double-headed eagle, has been the State symbol of many royal dynasties especially in South India. According to the archaeologists and historians, the bird signifies peace, progress and power. The Purāṇas indicate that Viṣṇu as Gaṇḍabheruṇḍa subdued Śiva as Śarabha after Narasiṃha was conquered by Śarabha.

Hindus used it in many places. A rishi was named Bharanda in Yoga Vasistha. It is not unusual to see a bird name for a seer. Many of our Rishis/ Seers have bird names such as Kausika, Bharadwaja, Chandilya etc.

Bharaṇḍa (भरण्ड) is another name for Bheruṇḍa or Garuḍa, as mentioned in the foreword to volume 7 of the translation of the Kathāsaritsāgara.

Probably Panchatantra which is 2000 year old is the earliest Sanskrit book that used this bird .

Bhāraṇḍa (भारण्ड).—A kind of fabulous bird. (Also bhāruṇḍa); एकोदराः पृथग्ग्रीवा अन्योन्यफलभक्षिणः । असंहता विनश्यन्ति भारण्डा इव पक्षिणः (ekodarāḥ pṛthaggrīvā anyonyaphalabhakṣiṇaḥ | asaṃhatā vinaśyanti bhāraṇḍā iva pakṣiṇaḥ) Pañcatantra (Bombay) 5.11.

xxxx

Russian Coin 2009

Wikipedia adds more details,

Gandaberunda (Sanskrit: गण्डभेरुण्ड, lit. ’the powerful-necked one’, IASTGaṇḍabheruṇḍa) is a two-headed bird and he is a form of the Hindu god Vishnu as Narasimha and he has enormous powers in Hindu mythology. In Hinduism, Gandaberunda is a form of Vishnu as Narasimha who fought and disemboweled and killed Sharabha, a form of Shiva and Hiranyakashipu at the same time in Hindu mythology.

The two headed eagle is holding two elephants in his claws and beaks, revealing his enormous powers. In a coin found in Madurai, he is holding a snake in his beak.

 All 2-dimensional depictions show a symmetrical image in which he is a double-headed eagle while other images show his long tail feathers like a peafowl. In the Chennakeshava TempleBeluruKarnataka, Gandaberunda as a two headed eagle is carved in a scene of chain of destruction, which results in the destruction of the universe.

 Gandaberunda is a form of Narasimha, the fourth incarnation of Vishnu in the Dashavatara of Vishnu and he disemboweled and killed both Sharabha and Hiranyakashipu at the same time. He is present in many Hindu scriptures.

Karnataka Emblem

 Gandaberunda is emblem of Kingdom of Mysuru of Vadiyar rulers, and after India was united, it was kept by Mysuru State as its emblem. The Mysuru State was enlarged in 1956 CE and renamed as Karnataka in 1973 CE, and Gandabherunda is official state emblem of Karnataka. It is used as official emblem of Government of Karnataka. It is enormous powers destroying forces of destruction. It is a statue motif in Hindu temples.

A statue showing Gandaberunda is found on a roof of the Rameshvara temple in the temple town of Keladi in Shimoga District, the capital of the Keladi Nayakas. Gandaberunda is used by Vadiyar rulers of Mysuru as Royal emblem. Goverment of Karnataka has Gandaberunda as state symbol and is found on bus terminals and tickets issued by Karnataka State Road Transport Corporation. Gold Coins from reign of Achyuta Deva Raya is first to use Gandaberunda on coins.[7] The crest of the Indian navy ship INS Mysuru (D60) shows Gandaberunda.

xxxx

In Jainism

Bhāraṇḍa (भारण्ड) refers to “fabulous three-legged birds”, as mentioned in chapter 1.5 [ādīśvara-caritra] of Hemacandra’s 11th century Triṣaṣṭiśalākāpuruṣacaritra: an ancient Sanskrit epic poem narrating the history and legends of sixty-three illustrious persons in Jainism

xxxx

MY OLD ARTICLE POSTED HERE IN YEAR 2011

Double Headed Eagle: Sumerian-Indian Connection

By S Swaminathan, Posted on 18th December 2011.

 
Double-Headed bird found in Alaja Huyuk, Turkey, 14th C BC

There are striking similarities between the Indian and Sumerian civilizations. One of them is the use of the Double Headed Eagle as a royal symbol. From 3800 BC until today this mythical bird is used as a symbol of royalty. Russia and other Eastern European countries use it on their currency notes and national flags. Tamil Nadu, Karnataka and Andhra Pradesh praise the mighty strength of this bird in coins, sculptures and literature. The Panchatantra used the story of double headed bird, also known as Ganda Berunda bird, to emphasize unity.

Ancient Cankam (Sangam) Tamil literature used this bird in their love poetry. Devotional poets of India like Ekanath also used this bird as a simile.

Sumerians considered this bird the symbol of God Ninurta of Lagash. They thought it had divine power. We can trace the history of this mythical bird from the Sumerian days. A cylindrical seal shows the double headed eagle from 3800 BC. Later, the Hittite empire which had its capital in Bogazkoy (in Modern Turkey) used it in several monuments. Even today we can see the monuments displaying this symbol in huge sculptures in Hattusa and Yazilikaya. Bogazkoy was the place where a tablet with the names of the Vedic Gods: Indra, Mitra, Nasatya and Varuna was discovered. The tablet was dated 1380 BC. This establishes the Indian connection of the region.

Even the Holy Roman Empire and the Byzantine Empire used this symbol. This Hindu symbol was used by the Christians.

In Sanskrit literature – the Panchatantra (book of fables) has a story about Ganda Berunda bird. It says that the bird had two heads but one stomach. In the story, one head wanted to drink Amrita (ambrosia) but the other head went for poison. Ultimately, the head that drank the poison made the bird die. The moral of the story is that disunity is dangerous.

 
Sculpture in Keladi Temple, Karnataka

Tamil literature, dated two thousand years old, mentions it in three places. In Akananuru, poet Kapilar (verse 12) compares this double-headed, single-bellied bird to two people in love. Though there were two physical bodies, they have one life. Nallanthuvanar also used this simile in Paripatal (Verse 8-72). But another Tamil poet Maruthan Ilanagan in Kalithokai (verse 89) used this bird in the form of two fighting heads, like the Panchatantra story. It shows that Indians from one end of the land to the other knew this bird very well. Thakadur Yaththirai is a lost Tamil book, but excerpts are available as quotes in other works. These quotes compared the fight between two kings Athiyaman and Peruncheral Irumporai to the double headed bird fighting with itself. (Ref. Purath thirattu verse 785).

The Bird that lifts elephants

The most imaginative story of the bird comes from the Vijayanagar Empire. Gold Coins issued by Achyuta Raya (1530-1542) show the Ganda Berunda bird lifting an elephant in each of its beaks. Its power is legendary. Other coins show each head holding a snake. Before Achyuta Raya Devaraya II (1422-1446) issued coins with the bird’s name in Deva Nagari script.

Jain Stupa at Sirkap, Taxila is the most ancient Ganda Berunda monument in India. We can see this mythical bird sculptures in Srisailam, Keladi, Koramangala, Belur and the medieval art of Sri Lanka.

A close-up of a gold coin

Description automatically generated 
Achyuta Gold coin with the bird

Recently even dances were choreographed showing the magical strength of the bird. Dasara Flower Show in Mysore had a 10 foot flower decoration of the bird to commemorate the 500th anniversary of the bird symbol in Karnataka.

The Wodeyar family of Mysore use this as their royal emblem. Later the Government of Karnataka used it as the emblem of the state. There are stories connecting this bird with the Narasimha (Man-Lion) avatara of Vishnu.

Eastern European country Albania has this bird in its national flag. Several countries issued stamps and coins as well. Russian Roubles and Kopeks had this bird.

A black eagle on a red background

Description automatically generated 
National flag of Albania

In the Eastern Province Erzurum of Turkey, a huge double headed eagle is being erected in 2011 which is visible from space. Turkey gives so much importance to this legendary bird.

An ancient monument of Turkey shows this bird lifting two hares on its beaks. But the imagination of Indians made it a dinosaur lifting two elephants on its beaks!

Please visit my blogs: swamiindology.blogspot.com and tamilandvedas.wordpress.com.—subham—

Tags- Double headed bird, Gandabhrunda, Bharanda, Eagle, Russia, Mysore, emblem

பேராற்றல் மிக்க பெண்கள் உலகம்! – 1 (Post No.13,070)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.070

Date uploaded in London – — 7 March 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

8-3-2024 உலக மகளிர் தினம்த்தையொட்டி மாலைமலர் 6-3-2024 இதழில் பிரசுரிக்கப்பட்டுள்ள சிறப்புக் கட்டுரை! இரு பகுதிகளாக இங்கு பிரசுரிக்கப்படுகிறது,

பேராற்றல் மிக்க பெண்கள் உலகம்! – 1

ச. நாகராஜன்

உலக மகளிர் தினம்

மார்ச் 8ம் நாள் உலக மகளிர் தினம்.

2024ஆம் ஆண்டின் கோஷமாக முன்னிலைப்படுத்தப்படுவது : பெண்கள் முன்னேற்றத்தில் முதலீடு செய்யுங்கள்; முன்னேற்றத்தை துரிதப் படுத்துங்கள்.(Invest in women; Accelerate progress)

உலக ஜனத்தொகை 810 கோடி என்ற எண்ணிக்கையை 2024இல் எட்டி விட்டது. இதில் மகளிரின் எண்ணிக்கை 49%

பெண்களின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்துவதாக அனைவரும் கூறி வந்த போதிலும் உலகில் சுமார் 8 சதவிகித பெண்கள் அன்றாட உணவிற்கே அல்லல் படும் நிலையில் இருக்கின்றனர்.

ஆகவே சுருக்கமாகச் சொல்லப் போனால், “போகுமிடம் வெகு தூரம் ; போக வேண்டும் நெடு நேரம்” என்பதே பெண்களின் சம உரிமைப் போராட்டத்தின் இன்றைய நிலை.

பெண்கள் இன்றிருக்கும் நிலையைக் கூடத் தாமாகப் பெறவில்லை. அதற்கென ஆங்காங்கே உரிமைப் போர்கள் நடைபெற்றே வந்தன.

பெண்கள் போராடிப் பெற்ற ஓட்டுரிமை

பெண்கள் சாதாரணமாகப் பெறவில்லை ஓட்டுரிமையை! மிகுந்த போராட்டம் அதற்காகவே பிரிட்டனில் வெடித்தது. பெண்கள் ஓட்டுரிமை வேண்டும் என்று கேட்ட போது “பைத்தியக்காரத்தனமான, சூழ்ச்சி நிறைந்த முட்டாள் பெண்கள் கேட்கும் உரிமை இது” என்று கூறிய விக்டோரியா மகாராணியார் ஒரு பெண்ணிற்கு சாட்டையால் அடித்து தண்டனை தர ஆணையிட்டார்.

ஆனால் பெண்கள் அசரவில்லை. 1901ஆம் ஆண்டு ஏழாம் எட்வர்ட் பட்டம் சூட்டிய போது எமிலின் பங்கர்ஸ்ட் என்ற பெண்மணியின் தலைமையில் கூட்டம் கூட்டமாகப் பெண்களின் அணி திரண்டது. ஆண்கள் கூட்டம் போடும் இடங்களிலெல்லாம் அவர்கள் திடீரென வந்து குதித்தனர்.  மேடை மீது ஏறி மெகா போன் வாயிலாக எங்களுக்கும் ஓட்டுரிமை வேண்டும் என்று கோஷமிட்டனர். உண்ணாவிரதம் இருந்தனர். சிறைக்கும் சென்றனர்.

இந்தியாவில் வைசிராயாக இருந்த லார்ட் கர்ஸான் பெண்கள் தாழ்ந்தவர்கள் என்பதற்காக பதினைந்து காரணங்களைப் பட்டியலிட்டார். ராயல் கமிஷனோ ‘ ஒரு பெண்ணின் மூளை எதையும் சமாளித்து ஈடு கொடுக்க வல்லதா” என்று ஆராய முற்பட்டது.

ஆனால் பெண்கள் அயர்ந்து போகவில்லை.

முதலாம் உலக மகாயுத்தம் 1914இல் ஆரம்பிக்கவே ஆண்கள் போர்க்களம் செல்லவே, அனைத்து வேலைகளையும் பெண்கள் மேற்கொண்டு தங்கள் திறனைக் காண்பித்தனர்.  டிராம் விடுவது, கார்களை ஓட்டுவது, மெகானிக்குகளாக அனைத்து வாகனங்களையும் பழுதுபார்ப்பது உள்ளிட்ட வேலைகளை அவர்கள் செய்து காட்டவே உலகமே பிரமித்தது. 1918இல் யுத்தம் முடிந்தது. பிரதம மந்திரி ஜார்ஜ் 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்கினார்.

போராட்டம் உலகெங்கும் வலுக்கவே இன்னும் 28 நாடுகள் பெண்களுக்கு உரிமையை வழங்கின. 1952இல் களமிறங்கிய ஐ.நா. உலகெங்கும் ஆண்களுக்கும் இருக்கும் அனைத்து உரிமைகளையும் பெண்களுக்குக் கொடுக்கும் தீர்மானத்தை நிறைவேற்றியது.

முன்னோடிகள்

பெண்களின் உரிமைக்காகப் போராடிய ஏராளமான அதிசயப் பெண்மணிகள் உள்ளனர். எடுத்துக்காட்டிற்கு எலினார் ரூஸ்வெல்டைச் சொல்லலாம். அமெரிக்க ஜனாதிபதியாக நான்கு முறை பதவி வகித்து சாதனை புரிந்த ப்ராங்ளின் ரூஸ்வெல்டின் மனைவியான இவர், அவரது வெற்றிக்குக் காரணமாகத் திகழ்ந்தவர்.

அத்தோடு வெள்ளை மாளிகையில் குடியேறியவுடன் அவர் அடிக்கடி நிருபர்களைச் சந்திக்கப் போகிறேன் என்றார். அனைவரும் மகிழ்ந்த அந்த வேளையில் அற்புதமான அடுத்த வரியை அவர் கூறினார்: “ஆனால் அவர்கள் எல்லோரும் பெண்களாகவே இருக்க வேண்டும்!”

அனைவரும் பிரமித்தனர். எல்லா பத்திரிகைகளும் போட்டி போட்டுக் கொண்டு பெண் நிருபர்களை வேலைக்கு அமர்த்தின. பத்திரிகை உலகம் புதிய அழகைப் பெற்றது. செய்திகளின் தரமும் கூடியது.

அதே போல உலக அரங்கில் பெண்களின் தாக்கம் அதிகமானது. இதுவரை அறிவிக்கப்பட்ட 864 நோபல் பரிசுகளில் 64 பரிசுகளை பெண்மணிகள் இலக்கியம், மருத்துவம், அமைதி, இரசாயனம், இயற்பியல், பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் பெற்றுள்ளனர்.

பாரத ரத்னா

பாரதத்தின் உயரிய விருதான பாரத் ரத்னா இதுவரை ஐந்து பெண்மணிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்திரா காந்தி, மதர் தெரஸா, அருணா ஆஸப் அலி, இசையரசி எம்.எஸ். சுப்பலக்ஷ்மி, லதா மங்கேஷ்கர் ஆகியோர் இந்த உயரிய விருதைப் பெற்றுள்ளனர்.

விண்வெளி வீராங்கனைகள்

1963இல் முதல்முறையாக வாலெண்டினா தெரஷ்கோவா என்ற ரஷிய பெண்மணி தனது 26ம் வயதிலேயே விண்ணில் பறந்து சாதனை நிகழ்த்திக் காட்டினார். தொடர்ந்து விண்வெளிக்குச் சென்ற சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட விண்வெளிப் பயணிகளில் வீராங்கனைகள் ஏராளமானோரும் இந்தச் சாதனையில் ஈடுபட்டனர். ஸ்வெட்லேனா சாவிட்ஸ்கி, சாலி ரைட், கிறிஸ்டா மக்லிப், மே ஜெமிஸன், ஐலீன் காலின்ஸ், இந்திய வீராங்கனையான கல்பனா சாவ்லா, பெக்கி விட்ஸன், கிறிஸ்டினா கோச், ரெஸிகா மெய்ர், கேட் ரூபின்ஸ் செய்த சாதனைகள் வியப்பூட்டுபவை; பிரமிக்க வைப்பவை.

உத்வேகமூட்டும் பெண்மணிகள்

உலகளாவிய விதத்தில் உத்வேகமூட்டும் பெண்மணிகள் பட்டியலைத் தயாரிக்கும் பத்திரிகைகளும், சர்வே நிபுணர்களும் தரும் தகவல்கள்  சுமார் பத்தாயிரம் பேரைச் சுட்டிக் காட்டுகின்றன.

அரசியலில் நியூஜிலாந்து பிரதம மந்திரி, ஜேஸிந்தா ஆர்டன், அமெரிக்காவின் கமலா ஹாரிஸ் மற்றும் ஹில்லாரி க்ளிண்டன், இந்தியாவின் நிர்மலா சீதாராமன், அழகிகள் மற்றும் திரைப்படத் துறையில் ஐஸ்வர்யா ராய், சீன நடிகை யாங் மி, ப்ரியங்கா சோப்ரா, பாடகிகளில் டெய்லர் ஸ்விப்ட் உள்ளிட்டோர் முன்னணியில் இடம் பெறுகின்றனர்.

இன்ஃபோஸிஸ் பவுண்டேஷனை நிறுவிய சுதா மூர்த்தி சிறந்த எழுத்தாளர். சேவை மனப்பான்மை கொண்டவர். கோவிட் காலத்தில் அவர் ஆற்றிய சேவையை அனைவரும் பாராட்டினர்.

உலகத்தில் மீடியா துறையில் ஒரு கலக்கு கலக்கி முன்னணியில் நிற்பவர் ஓப்ரா வின்ஃப்ரே. சிறு வயதில் பல கொடுமைகளுக்கு ஆளாகி சுயமாக முன்னுக்கு வந்த இவர் பெண்களுக்காக குரல் கொடுப்பது நியாயமானதே.

நீண்ட இந்த பட்டியலில் அன்றாடம் சேரத் துடிக்கும் பெண்மணிகளால், இது ஆயிரம் ஆயிரமாகப் பெருகும் என்பதில் ஐயமில்லை.

விளையாட்டுத் துறையிலும் அறிவியலிலும் சாதனை படைக்கத் துடிக்கும் பெண்மணிகள் எங்களுக்கு இங்கு சில இடைஞ்சல்கள் இருக்கின்றன என்று சொல்வது கவனிக்கப்பட வேண்டிய ஒரு அம்சம்!

பிரபலம் வேண்டாம்சாதனையே முக்கியம்!

எங்களுக்குப் பெயர் வேண்டாம், புகழ் வேண்டாம், காசுபணம் வேண்டாம் என்று சொல்லும் அபூர்வப் பெண்மணிகளும் இல்லாமல் இல்லை.

எடுத்துக்காட்டிற்கு திம்மக்காவைக் கூறலாம். இவருக்கு இப்போது வயது 112. கர்நாடகத்தில் பழைய மைசூர் ராஜ்யத்தில் குப்பி தாலுக்காவில் (இப்போது தும்கூர்) 1911, ஜூலை 8ஆம் நாள் பிறந்த இவர் ஏராளமான மரக்கன்றுகளை சிறு வயதிலிருந்தே நட்டு வந்திருக்கிறார். இவர் நட்டு வைத்த ஆலமரங்கள் மட்டும் 400. பத்ம ஶ்ரீ விருது இவருக்கு வழங்கப்பட்டது.

**    தொடரும்

பதஞ்சலி முனிவர் கண்ட கழுகு அதிசயம்- Part 2 (Post No.13,069)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,069

Date uploaded in London – –   6 March 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

ரிக் வேதத்தில் பறவை

ரிக் வேதம்தான் உலகிலேயே பழமையான நூல். கி.மு.2000 முதல் கி.மு 6000 வரை வெவ்வேறு அறிஞர்கள் வெவ்வேறு காலத்தைக் குறித்துள்ளனர் ; மாக்ஸ்முல்லரோ இது கி.மு 1500 அல்லது அதற்கு முந்தையது; இதன் காலத்தை யாருமே கணிக்கமுடியாது என்று சொல்லிவிட்டார் ; அதில் கழுகு, பருந்து, ஸ்யேன, சுபர்ண, மஹா சுபர்ண என்ற பலபெயர்களில் பறவை வருகிறது 3 விஷயங்களை அதனுடன் தொடர்பு படுத்துகின்றனர்.

அவை ,

1.சூரியன்

2.ஆன்மா

3.சோமம் என்னும் அற்புத மூலிகையைக் கொண்டுவரும் பறவை .

கழுகு பற்றிய ஆராய்ச்சி ஆரிய -திராவிட வாதம் பேசும் அயோக்கியர் களுக்கு செமை அடி கொடுக்கிறது ; சோம மூலிகை பற்றி ‘அது, இது’ என்று உளறிக்கொட்டிய வெளிநாட்டினர் அனைவரும் கழுகு தான் சோம மூலிகையைக் கொண்டுவருகிறது என்று சொல்லும் நூற்றுக்கணக்கான மந்திரங்களுக்கு விளக்கமே சொல்ல முடியவில்லை; அது மட்டுமல்ல சோம மூலிகையோ – கழுகு-சோமம் தொடர்போ உலகில் வேறு எங்கும் இல்லை; ஆகவே இந்துக்கள், வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்குள் குடியேறவில்லை என்பதை கழுகு காட்டிவிட்டது!

முன்னரே எழுதிய விஷயங்கள் கீழே உள்ளன ; ஆக புதிய விஷயங்கள் இரண்டை முதலில் காண்போம் :

ரிக்வேதத்தில் பறவை – ஆன்மா விஷயம்

1-163-6

குதிரையை பறவைக்கு ஒப்பிட்டு அதன் வேகத்தைப் புகழும் மந்திரம் இது .நான் தூரத்தில் இருக்கும் உன் ஆன்மாவை பறவை போல

என் மனத்தால் காண்கிறேன்நீ பூமியிலிருந்து வானின் வழியாக சூரியனிடம் செல்கிறாய் புழுதியால் பாதிக்கப்படாமல்தடைபடாமல் உயரத்தில் செல்லும் உன்னுடைய தலையைக் காண்கிறேன் .

இந்த மந்திரத்தில் ஆன்மா = பறவை = உயரத்தில் பறப்பது = சூரியனை நோக்கிச் செல்லுவது ஆகிய கருத்துக்கள் உள்ளன ..

 Thyself from far I recognized in spirit,–a Bird that from below flew through the heaven.

     I saw thy head still soaring, striving upward by paths unsoiled by dust, pleasant to travel. Rig Veda 1-163-6

எகிப்தில் கருடன் = பா

எகிப்தில் ‘பா’ என்ற பெயருடைய பறவை இதே கருத்துடன் வணங்கப்படுகிறது.

இதை படித்தால் கருட புராணத்தை ஏன் இறந்தோர் வீடுகளில் 13 நாட்களுக்குள் படிக்கிறார்கள் என்பது விளங்கும். கருட புராணத்தின் பூர்வ பாகத்தில் ஏராளமான பொது, நீதி மற்றும் அறிவியல் விஷயங்கள் உள்ளன; இரண்டாவது பகுதியில் இறந்த பின்னர் செய்ய வேண்டிய சடங்குகள் எம லோகம், நரகம் முதலிய விஷயங்கள் உள்ளன. ஆயினும் அதற்கு கருட புராணம் என்று பெயர்வைத்ததற்கு கருடன்= ஆன்மா தொடர்பே காரணம் என்பது என் கருத்து

கருடன் பறவை அமிர்த கலசத்துடன் நடைபோடும் படத்தை வெளியிட்டுள்ள்ளேன்.

மேலும் கருடன் அமிர்தம் கொண்டுவந்த கதையின் வித்து ரிக் வேதத்திலேயே உள்ளது. அது மட்டுமல்ல கருடன்  = இந்திரன் என்ற பாடலும் ரிக் வேதத்திலேயே உள்ளது. இதை மகாபாரதம் , சிலப்பதிகாரம், புறநானூற்றில் வரும் சிபிச் சக்கரவர்த்தி கதையிலும் காண்கிறோம் அதில் கழுகு வாடிவில் இந்திரன் வருவதாக வருகிறது ; இவைகளை எகிப்திய பா = ஆன்மா = பேரவையுடன் ஓ ப்பிடுவோம்

Ba

ஆன்மாவுடன் க , பா, அக் ஆகிய மூன்று தெய்வங்களும் பழங்கால எகிப்தில்  தொடர்பு படுத்தப்படுகின்றன. கி.மு. 1500 ஆண்டு முதல் எகித்தில் இந்து மத செல்வாக்கு இருப்பதை அங்கு கிடைத்த தசரதன் கடிதங்கள் (அமர்நா லெட்டர்ஸ்) , மிட்டன்னி மன்னர்களின் புதல்விகளுடன் திருமண உறவு ஆகியவை நிரூபிக்கின்றன . துருக்கி – இராக் பகுதியில் கி.மு 1600ம் ஆண்டில் நிலவிய மிட்டன்னி நாகரீகம் இந்துக்கள் நாகரீகம் என்பதில் எவருக்கும் சந்தேகமில்லை.

பா என்பதை முதலில் கொக்கு  போன்ற பறவை வடிவத்தில் எழுதினார்கள். பிறகு இப்போது நாம் இந்துக் கோவில் கருட வாகனத்தில் காணும் மனித முகம் — பறவை உடல் கொண்ட கருடன்போலவே வரைந்தனர். .

மேலும்  பிரமிடுகளுக்குள்  இறந்த மன்னனர்களின் உடல் மீது அது வட்டமிடுவது போல படமும் வரைந்தார்கள் . அதாவது அது மன்னரின் ஆவி.   பறவை வடிவத்தில் ஆன்மா இருப்பது ரிக் வேதம்,  குறள், கல்லாடர் பாடலை நமக்கு நினைவுபடுத்தும்.

பா என்பது பெயர் சொல்லப்படாத கடவுள்கள், சக்திகள் ஆகிய வற்றையும் குறிக்கின்றன என்பது எகிப்திய ஆராய்ச்சியாளர்களின் கருத்து . அவை சூரியனை வரவேற்பதையும் இரவில் நதியைக் கடந்து மறு  உலகம் செல்லும் படகுக்கு வழிகாட்டுவதையும் எகிப்திய மரணப் புஸ்தகம் விளக்குகிறது

The ba could also represent anonymous gods or powers. They are shown greeting the sun or traveling with it in its barque. In some illustrations of the Book of the Dead, ba birds are shown towing the barque of the sun during its nightly journey through the underworld

xxxxx

முன்னர் எழுதிய விஷயங்கள்

கட்டுரையின் முதல் பகுதியில் தாய்க்   கழுகுகள் அதனுடைய குஞ்சுகளுக்குப் பறக்கக்  கற்றுக்கொடுப்பது எப்படி என்பதை 2200  ஆண்டுகளுக்கு முன்னரே பதஞ்சலி முனிவர் மஹாபாஷ்ய நூலில் செப்பியதைக் கண்டோம். கழுகைக்  கொண்டு மற்ற பிராணிகளை வேட்டையாடுவதை மங்கோலிய இன மக்கள் இன்றும் செய்து வருவதையும் கண்டோம். மத்தியக் கிழக்கு நாடுகளிலும் இதைக் காணலாம் . இதையும் பதஞ்சலி முன்ரே சொல்லிவிட்டார்!

எகிப்தில் இறந்த மன்னன், கழுகு வடிவில் வான மண்டலத்துக்குச் செல்லுவதாக எகிப்திய பிரமிடு  இலக்கியம் சொல்லும். ‘க’ என்பது மனிதனின் ஆத்மா என்றும் சொல்லும். இந்தியாவிலும் மன்னர்  பறவை வடிவத்தில் மேலுலகம் செல்லுவதாக சம்ஸ்கிருத ஸ்லோகம் உள்ளது. ஆக ‘க’ என்பது கடவுள், ‘க’ என்பது ஆன்மா; க’’ என்பது படைப்புக் கடவுளான பிரஜாபதி/பி ரம்மா. ‘க’ என்பது பறவை வடிவில் காட்டப்படும்.

ரோமானிய மன்னர்

ரோமானிய மன்னர்களின் சடலத்தைத் தகனம் செய்யும்போது சிதைத்தீக்கு மேலே ஒரு கழுகைப் பறக்கவிடுவர். மன்னரின் ஆவி சொர்க்கத்துக்கு/ வானுலகத்துக்குச் செல்லுகிறது என்பது இதன் பொருள். இது இந்துக்களின் நம்பிக்கை. மனித உடலில் உள்ள ஆன்மா கூட்டைவிட்டுச் செல்லும் பறவை போல மேலே பறந்துவிடும் என்பது இந்துமத நூல்களில் காணப்படுகிறது.

xxxx

திருக்குறளில், அகநானூற்றில்

தமிழ் வேதமாகிய திருக்குறளிலும் சங்க இலக்கியத்திலும் இதே கருத்தைக் காண்க:-

குடம்பை தனித்து ஒழியப் புள்பறந்தற்றே

உடம்போடு உயிரிடை நட்பு (338)

xxxxx

அழாஅம் உறைதலும் உரியம் – பராரை

அலங்கல் அம் சினைக் குடம்பைப் புல்லெனப்

புலம் பெயர் மருங்கில் புள் எழுந்தாங்கு (கல்லாடனார், அகம்.113)

xxxx

கீதை 2-22 இதே கருத்தை வேறு உவமையுடன் (நைந்த உடை) சொல்லும்.

1.ஹோரஸ் HORUS (சூரிய என்பதன் திரிபுச் சொல் H=S as in Hindu= Sindhu) என்ற இறைவனின் வடிவம்தாம் மன்னன் என்று சொல்லும் எகிப்திய கல்வெட்டுகளும் காகிதங்களும் அந்த ஹோரஸை ஒரு பருந்தாகவே FALCON காட்டியுள்ளன.

2.கி.மு.3000 முதல் வழிபடப்படும் ஹோரஸ் என்னும் சூரிய தெய்வத்தை இந்துக்கள் கருட வாஹனத்தைச் சித்தரிப்பதுபோல, பருந்து முகத்துடனும் , மனித உடலுடனுமே வரைவர்.

xxxxx

Garuda in Sumeria with Amrit Pot

My Old Articles in this blog:

Ka

Tamil and Vedas

https://tamilandvedas.com › tag

·Translate this page

29 Aug 2012 — ‘க’ என்பது மனிதனின் ஆத்மா என்றும் சொல்லும். இந்தியாவிலும் மனர் பறவை வடிவத்தில் மேலுலகம் செல்லுவதாக சம்ஸ்கிருத ஸ்லோகம் …


ஹோரஸ் | Tamil and Vedas

Tamil and Vedas

https://tamilandvedas.com › tag

·Translate this page

2 Mar 2017 — Thanks for your great pictures. tamilandvedas.com, swamiindology.blogspot.com … மனித உடலில் உள்ள ஆன்மா கூட்டைவிட்டுச் செல்லும் பறவை …


பருந்து

Tamil and Vedas

https://tamilandvedas.com › tag

·Translate this page

Thanks for your great pictures. tamilandvedas.com, swamiindology.blogspot.com … மனித உடலில் உள்ள ஆன்மா கூட்டைவிட்டுச் செல்லும் பறவை …


வேதக் கழுகும், எகிப்தியக் கழுகும்- எகிப்திய …

Tamil and Vedas

https://tamilandvedas.com › வ…

·Translate this page

2 Mar 2017 — மனித உடலில் உள்ள ஆன்மா கூட்டைவிட்டுச் செல்லும் பறவை போல மேலே பறதுவிடும் …


கருடன்

Tamil and Vedas

https://tamilandvedas.com › tag

·Translate this page

2 Mar 2017 — Thanks for your great pictures. tamilandvedas.com, swamiindology.blogspot.com … மனித உடலில் உள்ள ஆன்மா கூட்டைவிட்டுச் செல்லும் பறவை …


Prajapati

Tamil and Vedas

https://tamilandvedas.com › tag

·Translate this page

இந்தியாவிலும் மனர் பறவை … ஆக ‘க’ என்பது கடவுள், ‘க’ என்பது ஆன்மா; க” என்பது படைப்புக் கடவுளான பிரஜாபதி/பிரம்மா.

–subham—

Tags- ஆன்மா, பறவைக்கூடு, கருட புராணம், , கூட்டைவிட்டுச் செல்லும் பறவை, எகிப்து , பா பறவை

Eagle in Hinduism – 2; New Explanation to Garuda Purana Reading (Post No.13,068)

Ba= Garuda in Egypt

Eagle in Hinduism — 2; New Explanation to Garuda Purana Reading (Post No.13,068)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,068

Date uploaded in London – –   6 March 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

 Thyself from far I recognized in spirit,–a Bird that from below flew through the heaven.

     I saw thy head still soaring, striving upward by paths unsoiled by dust, pleasant to travel. Rig Veda 1-163-6

Throughout the Rig Veda, the oldest book in the world, Eagle (Garuda, Syena, Suparna, Grdhra= falcon, hawk, vulture, osprey etc) is associated with three things:

Soul

Mysterious healthy tonic giving Soma Plant

The Sun

Half baked foreigners who translated the Vedas in European languages could not understand the word Eagle and not translated uniformly. The Eagle bringing Soma Plant which is found in hundreds of Vedic hymns could not be explained any foreigner who did a blunder of identifying Soma with some plants. The eagle and Soma connection gives biggest blow to Aryan Migration Theory; because Soma plant which is found throughout the Four Vedas is not found anywhere in any culture or literature outside India . Eagle in Rig Veda is used in symbolic meaning as well. Eagle research in the Vedas will reveal many secrets.

Eagle stood for speed, courage, power, and victory as well. Eagle bringing Amrita which is found in later epics and Puranas has its seed in Rig Veda.

Eagle is compared with Indra in the Rig Veda and later Sibi Chakravarthy Story.

Hindus used to wonder why we read Garuda Purana after someone dies in a family. Within the 13 day mourning period, a priest or a religious lecturer used to read a few chapters from Garuda (Eagle) purana .

After death, the dead person’s the soul goes up is in all Hindu scriptures. Sangam Tamil poets, who were great Hindus , also put it in a few poems. Like Hindus all ancient cultures believed in life after death and rebirth. But Hindus were the one who explained it in detail with Karma theory. Sangam Tamil poets talk about Good Karma and Bad karma and rebirth in umpteen poems. We have women praying that they should have the same husband in next birth as well in Tamil and Sanskrit books

Hindu thoughts largely influenced Egypt at least from 1500 BCE. We have proof of Hindu links in Dasaratha Letters (Amarna letters) in Egypt and marital links with Mitanni (Hindu) Civilization of Middle East.

If we go deeper into Egyptian Funerary books we find more similarities with Vedic Funerary Mantras.

Ba = Soul = Garuda in Egypt

Our Soul flies like Eagle

Garuda is called Ba in Egypt. The appearance is also same- human head with the body of a bird.

xxxxx

Ba

Ba, in ancient Egyptian religion, with the ka and the akh, a principal aspect of the soul; the ba appears in bird form, thus expressing the mobility of the soul after death. Originally written with the sign of the jabiru bird and thought to be an attribute of only the god-king, the ba was later represented by a man-headed hawk, often depicted hovering over the mummies of kings and commoners alike.

Appearance: The ba was always portrayed as a human-headed bird, usually a human-headed falcon. The ba bird was often shown hovering over the deceased’s mummy or leaving or entering the tomb at will.

Meaning: The word ba is usually translated as “soul” or “spirit”. However, ba is probably better translated as “spiritual manifestation.”

The ba is one of the specific components of the human being as understood in Egyptian thought. In the New Kingdom, the ba was a spiritual aspect of the human being which survived – or came into being – at death. It was endowed with the person’s individuality and personality. The ba occasionally revisited the tomb of the deceased, for the dead body was its rightful home.

Animals were sometimes thought to be the bau (plural of ba) of deities. At Heliopolis, the bennu bird was called the “ba of Re.” At Memphis the Apis bull was worshipped as the ba of Ptah or Osiris. At times, Osiris himself was called the “ba of Re”.

The ba could also represent anonymous gods or powers. As such, they are occasionally represented in various mythological contexts. They are shown greeting the sun or traveling with it in its barque. In some illustrations of the Book of the Dead, ba birds are shown towing the barque of the sun during its nightly journey through the underworld. These ba birds may represent deities, whether or not they are shown with the curved beards of gods.

The Book of the Dead, which was placed in the coffin or burial chamber of the deceased, was part of a tradition of funerary texts which includes the earlier Pyramid Texts and Coffin Texts, which were painted onto objects

The concept of the soul and the parts which encompass it has varied from the Old Kingdom to the New Kingdom, at times changing from one dynasty to another, from five parts to more. Most ancient Egyptian funerary texts reference numerous parts of the soul:

·         Khet or the “physical body”

·         Sah or the “spiritual body”

·         Ren or the “name, identity”

·         Ba or the “personality”

·         Ka or the “double” or “vital essence”

·         Ib or the “heart”

·         Shut or the “shadow”

·         Sekhem or the “power, form”

Collectively, these spirits of a dead person were called the Akh after that person had successfully completed its transition to the afterlife.

xxxx

Sangam Tamil Literature and Garuda Purana

Tamil poet Kalladanar says in Akam 113:

“Oh, my friend! I won’t cry if my soul (life) leaves my body and goes to the place where my lover is working, like the bird that deserts its desolate nest and flies away”- said by a woman to her friend.

 Kallatanar compares the soul departing from the body to a bird that leaves its nest in a tree and migrates to another in a distant place. This is what Tamil Hindus believed 2000 years ago.

So, this is a Hindu concept of soul which is seen in many Hindu scriptures including Manu smrti and Bhagavad Gita with different similes.

Tamil Veda Tirukkural

Tamil Veda Tirukkural confirms it with a couplet:

The affinity of the body and the soul is like that of the nest and a bird in it. The soul departs from the body even as the chick deserts the nest – Tirukkural 338.

Garuda (Eagle Purana)  Purana has two sections; Purva Khanda and Uttara Khanda. Only Uttara Khanda, also known as Pretakhanda   deals primarily with rituals associated with death and cremation

  GARUDA/EAGLE PURANA BY S V SUBRAHMANYAMPAGE.
CH. 1.The Miseries of the Sinful in this World and the Other1
2.The Way of Yama10
3.The Torments of Yama21
4.The Kinds of Sins which lead to Hell30
5.The Signs of Sins38
6.The Miseries of Birth of the Sinful46
7.Babhruvâhana’s Sacrament for the Departed One52
8.The Gifts for the Dying61
9.The Rites for the Dying76
10.The Collecting of the Bones from the Fire83
11.The Ten-Days’ Ceremonies97
12.The Eleventh-Day Rite103
13.The Ceremony for all the Ancestors114
14.The City of the King of Justice130
15The Coming to Birth of People who have done Good141
16.The Law for Liberation154

In Rome

When Roman emperors were cremated ritually, an eagle was released above the funeral pyre to indicate that the soul has gone to dwell among the gods. One old Babylonian text tells us of the ascension of King Etana borne into the heavens by an eagle.

 In fact, it is a Hindu belief. Hindus read the Garuda (Eagle) Purana during the 13 day mourning period after the death of a near and dear relative. Of the 18 major Puranas (Hindu Mythology), Garuda Purana is the only one that has got a special funeral liturgy called Pretakanda. Garuda (eagle) was the one who brought Amrita according to a Hindu story and so it symbolised immortality. Bird is always associated with the soul in Hindu literature.

 xxxxx 

Eagle is associated with Sun God in several cultures. In Palmyra in Syria, the eagle was associated with the Sun God. It is already in the Rig Veda dated earlier than 2000 BCE.

References:

Wikipedia, Brittanica, Hindu website, Rig Veda, Sangam Poems, Tirukkural, Egypt Myths

Garuda in Sumeria

A Hindu Story in Sumerian Civilization

Tamil and Vedas

https://tamilandvedas.com › 2014/05/11 › a-hindu-stor…

11 May 2014 — The story of Garuda (eagle) and Amrita is in Hindu mythology and Sumerian civilization. My research shows that the entire human beings were …

—subham—

Tags- Death, Garuda Purana, Eagle, in Vedas, Rome, Egypt, Soul, Ba, bird , Nest, Tirukkural, Sangam Poems, Rebirth

ஒரு ஆன்மீகப் பாட்டும் ஒரு அகப் பாட்டும்! (Post No.13,067)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.067

Date uploaded in London – — 6 March 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ஒரு ஆன்மீகப் பாட்டும் ஒரு அகப் பாட்டும்!

ச. நாகராஜன்

சொக்கநாதப் புலவர்

சொக்கநாதப் புலவர் தமிழின் தலை சிறந்த புலவர்களுள் ஒருவர். பல தனிப்பாடல்களைப் பாடியவர் அவர்.

அவற்றில் ஒரு ஆன்மீகப் பாடலையும் ஒரு அகப் பாடலையும் இங்கு பார்ப்போம்.

பலசரக்குப் பாட்டில் ஆன்மீகம்!

வெங்காயஞ் சுக்கானால் வெந்தயத்தா லாவதென்ன

இங்கார் சுமந்திருப்பா ரிச்சரக்கை – மங்காத

சீரகத்தைத் தந்தீரேற் றேடேன் பெருங்காயம்

ஏரகத்துச் செட்டியா ரே.

பாடலைப் பார்த்தவுடன் வெங்காயம், சுக்கு, வெந்தயம், சீரகம், பெருங்காயம் ஆகிய சொற்களைப் பார்த்து புன்சிரிப்பு வரும் நமக்கு.

இந்த சமையல் சரக்குகளை வைத்து என்ன ஒரு பாட்டு இருக்க முடியும் என்ற கருத்து இருந்தால் அது தவறான கருத்து.

பெரும் ஆன்மீகக் கருத்தை வலியுறுத்துகிறார் புலவர் இங்கு.

பாடலின் பொருளைப் பார்ப்போம்:

ஏரகத்துச் செட்டியாரே – திருவேரகத்தில் எழுந்தருளியுள்ள முருகக் கடவுளே!

வெம்  – கொடிதாகிய

காயம் – இந்த உடம்பு

சுக்கு ஆனால் – சுக்குப் போல உலர்ந்தால்

வெந்தயத்தால் – வெந்தை + அத்தால் என்று பிரித்துப் படித்துப் பொருள் கொள்ள வேண்டும். – வெப்பமாகிய வினையினால்

ஆவதென்ன – ஆவது தான் என்ன?

இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை – உடம்பாகிய இந்த சரக்கை இங்கு யார் தான் சுமந்திருப்பார்?

மங்காத சீரகத்தைத் தந்தீரேல் தேடேன் பெருங்காயம் –  குறையாத சீரகத்தைத் தந்தீர்கள் என்றால் பெருங்காயத்தைத் தேடமாட்டேன்.

அழியாத சிறப்புள்ள இடமாகிய (சீர் + அகத்தை) மோக்ஷத்தைக் கொடுத்தீர் என்றால் (பெரும் +காயம்)_மிகுதியாக உடம்புகளைத் தேடி எதற்குப் போகப் போகிறேன் என்று ஒரு அர்த்தமும் உண்டு.

செட்டியார் என்றால் முருகன்!

பலசரக்குப் பொருள்களைத் தரும் செட்டியாரை வைத்து முருகனையே பாடி ஒரு ஆன்மீகக் கருத்தை விதைக்கிறார் சொக்கநாதப் புலவர்!

மார்பகப் பாட்டில் அகப் பொருள்!

பெண்களின் மார்பகத்தை – முலையை – வைத்து அகப்பொருளில் சுவை தோன்ற ஒரு பாடலைத் தருகிறார் சொக்கநாதப் புலவர்.

முன்னே யிரண்டு முலை முற்றியபின் னாலுமுலை

எந்நேர மென்மதலைக் கெட்டுமுலை – எந்நாளும்

பைந்நாகஞ் சூழ்மதுரைப் பாணாநின் பாகனுக்கீங்

கென்னாக மென்னா மினி

இது என்ன இரண்டு முலை,  நாலு முலை, எட்டு முலை – ஒரு பெண்ணுக்கு இரு முலைகள் தானே,  நாலு முலைகளும் எட்டு முலைகளும் எப்படி வந்தது – கேட்கத் தோன்றுகிறதல்லவா?

பாடலின் பொருளைப் பார்ப்போம்:

முன்னே இரண்டு முலை – முற்காலத்தில் இரண்டு முலைகளாய் இருந்தன

முற்றிய பின் நாலு முலை – நாலு என்றால் தொங்கிய என்று பொருள். முதிர்ந்த பிறகு தொங்கிய முலைகள் ஆயின.

எந்நேரம் – எப்பொழுதும்

என் மதலைக்கு – என் குழந்தையின் பொருட்டு

எட்டு முலை – எட்டுகின்ற முலைகள் ஆயின

எந்நாளும் – எக்காலமும்

பைநாகம் சூழ் – படத்தை உடைய பாம்பினால் வளைக்கப்பட்ட

மதுரை – மதுரை மாநகரில் உள்ள

பாணா – பாணனே

நின் பாகனுக்கு – உனது தோழனுக்கு

என் ஆகம் – எனது உடம்பு

இங்கு இனி என் ஆம் – இவ்விடத்தில் இனி என்ன பயன்?

சொற்களை வைத்து தமிழ் விளையாட்டு விளையாடுவதில் தேர்ந்தவர்கள் புலவர்கள்! அவர்கள் பாடலைக் கேட்டு ஆனந்திப்பது பெரும் சுகம் அல்லவா!

**