செய்தியில் அடிபடும் மேலும் ஒரு புளியமரம் ! (Post No.14,597)

Written by London Swaminathan

Post No. 14,597

Date uploaded in London –  6 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

 இதுவரை பல புளியமரக் கதைகளை சொல்லிவிட்டேன் ; நம்மாழ்வார் புளியமரம்,  சுந்தரம் ராமசாமியின் கதையில் வரும் புளியமரம், தான்ஸேனை இசை மேதை ஆக்கிய புளியமரம், கோரக்நாத் புளியமரம், கட்டபொம்மன் தூக்கில் தொங்கவிடப்பட்ட புளியமரம் , உறங்காப் புளிய மரங்கள், பேய்கள் வாழும் புளியமரம் ஆகிய கட்டுரைகளை எழுதினேன். அது நூலாகவும் வெளிவந்துவிட்டது.

இப்போது ஒரு புனித புளிய மரம் பற்றிய செய்தி பத்திரிகைகளில் அடிபடுகிறது . அமிர்தசரஸ் நகரிலுள்ள சீக்கியர்களின் புனிதக் கோவிலில் ஒளிந்துகொண்டிருந்த  சீக்கிய பயங்கரவாதிகளைத் தீர்த்துக்கட்ட அப்போதைய பிரதமர் திருமதி இந்திராகாந்தி ஆபரேஷன் ப்ளூஸ்டார் OPERATION BLUE STAR என்ற நடவடிக்கை எடுத்தார் ; அதில் பயங்கரவாதிகளுடன் ஒரு புளியமரமும் அழிந்தது  . அதை மீண்டும் வளர்க்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன ; அவை அனைத்தும் தோல்வியில் முடிந்தன ; கடைசியாக செய்த முயற்சி வெற்றி பெற்று இப்போது அந்தப் புளியமரத்தின் இளம் கன்று பத்திரிக்கைகளில் படமாக வெளிவந்துள்ளது . அந்தப் புளிய மரத்துக்கு ஏன் அவ்வளவு முயற்சி எடுத்து வளர்த்தனர் என்றால் அது ஒரு புனித புளிய மரம் ; இதோ அதன் கதை:–

அகால் தக்ட் AKAL TAKHT என்னும்  இடத்தில் இந்தப் புளிய மரம் இருக்கிறது; ஒரு காலத்தில் இப்போது பொற்கோவில் இருக்கும் இடம் புளிய மரக்காடாக இருந்தது . அகால் தக்ட் என்னும் அமைப்பு நிறுவப்பட்ட  காலத்திலிருந்து அதற்கு சாட்சியாக நின்றது பழைய புளிய மரம். சீக்கிய மதத்தின் ஆறாவது குருவான ஹரிகோவிந்த சிங் தார்மீக , லோகாயுத விஷயங்களை முடிவு செய்வதற்காக கோவில் வளாகத்திலேயே இந்த அமைப்பினை நிறுவினார்; நானூறு ஆண்டுக்கால சீக்கிய வரலாற்றுக்கு சாட்சி பூதமாக இருந்த அந்த மரம் 1984-ம் ஆண்டு ராணுவ நடவடிக்கையில் அழிந்தது. இப்போது மீண்டும் புளிக் கன்று வைக்கப்பட்டு , அதைக் கவனமாக பாதுகாத்து வருகின்றனர் .இந்தப்  புளியமரம் சீக்கிய நூல்களிலும்  இடம்பெற்றுள்ளது மோரன் என்ற நடனக்காரியுடன் வைத்திருந்த தொடர்பைக் கண்டித்து, மஹாராஜா ரஞ்சித் சிங்கை, அகாலி ஜாதேதார் பூலா சிங் இந்த மரத்தில் கட்டிவைத்தார்

சீக்கிய வரலாற்று ஆசிரியர் கியானி சிங்கும் இந்த மரத்தினைக் குறி ப்பிட்டுள்ளார் . பிரிட்டிஷ் யுத்த ஓவியர் வில்லியம் சிம்சன் முதல் சுமார் இருபது ஓவியர்கள் வரை, இந்த வளாகத்தை படமாக வரைந்த பொது புளிய மரத்தையும் வரைவதற்கு மறக்கவில்லை; அப்போது அந்த மரம் 25 அடி வரை வளர்ந்ததை ஓவியங்கள் காட்டுகின்றன.

சீக்கிய சம்பிரதாயத்தில் மரங்களை சப்ஜ மந்திர் — பச்சை வண்ண ஆலயங்கள் — என்று சொல்லி வணங்குவர்; ஆகவே அழிந்து போன பழைய புளியமரம் ஒரு ஆலயம் போன்றதே என்று எண்ணி புதிய புளியமரத்தினை வைத்துள்ளனர் . பழைய முயற்சிகள் தோற்றதற்கு காரணம் குளிர்கால பனியாகும் ; இந்தப் புதிய மரம் வரப்போகும் குளிர்காலத்தைத் தாங்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கவேண்டும் .

My Old Articles:—

புளியமரத்தின் கதை மரங்களைப் பற்றிய புதிய செய்திகள் (Post No.11,904)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,904

Date uploaded in London – –  15 APRIL 2023                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

****

ஒரு புளிய மரத்தின் கதை என்ற தலைப்பில் சுந்தரம் ராமசாமி எழுதிய நாவல் உலகின் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு தமிழ் கூறும் நல்லுலகிற்கு பெருமை சேர்த்ததை நாம் அறிவோம்.

உலகப்புகழ்பெற்ற வடஇந்திய பாடகர் தான்சேன், ஒரு புளியமரத்தின் இலைகளை சுவைத்து நல்ல சாரீரம் பெற்ற குவாலியர் நகர் புளியமரத்தின் கதையையும் நாம் அறிவோம்.16 ஆண்டுக்காலம் தவம் செய்து புளிய மரத்துக்கு அடியில் ஞானம் பெற்ற நம்மாழ்வாரால் புகழ்பெற்ற ஆழ்வார்திருநகரி உறங்காப்புளிய (Never Sleepinng Tamarind Tree) மரத்தின் கதையையும் நாம் அறிவோம்.

புத்தருடைய விக்கிரகத்தைத் திருடி, அதிலுள்ள தங்கத்தை புளியமரத்துக்கு அடியில் புதைத்து விட்டு  நீண்ட நேரம் தூங்கிப்போன, திருமங்கை ஆழ்வாரை இலைகளை உதிர்த்து எழுப்பிய புளியமரத்தின் கதையையும் நாம் அறிவோம்.

புகழ்பெற்ற சேங்காலிபுரம் அனந்தராம தீட்சிதர் அவர்கள் வெளியிட்ட ஜய மங்கள ஸ்தோத்திரம் எட்டாவது பாகத்திலுள்ள பிராமணப் பேயின் கதையும் அது சொன்னபடி ஒருநாள் இரவில் புளியமரக்கிளையை ஒடித்து பரலோகம் சென்ற கதையையும் நாம் அறிவோம்.

இவை எல்லாம் என்னுடைய 2016-ம் ஆண்டுக் கட்டுரையிலும் தமிழர்கள் மரங்களை வழிபடுவது ஏன் ? என்ற நூலிலும் வெளியான விஷயங்கள் . மேலும் சில புளிய மரங்களைக் காண்போம்.

கோரக்நாத் புளிய மரம் Tamarind (Tamarindus indica)

மஹாராஷ்டிரா மாநிலத்தில் சிராலா (Sirala) என்ற கிராமம் உள்ளது. இங்கு ஒரு பெரிய பூதாகார புளியமரம் இருக்கிறது. அதனுடைய அடிமரத்தில் விரிசல்களும் குழிகளும் உண்டு. அருகில் கோரக் நாத் (Gorakhnatha Shrine)  கோவில் இருக்கிறது. அவர் ஒரு குச்சியை பூமியில் ஊன்றியவுடன்  அது புளிய மரமாகி கிளைவிட்டுப் பெருகியதாம் இந்த ஊர்,  பத்திரிக்கைச் செய்தியில் மிகவும் அடிபட்ட இடம். ஆண்டுதோறும் நாக பஞ்சமி அன்று பாம்புகளைப்ப பிடித்து வழிபட்ட பின்னர் அதை மீண்டும் புதருக்குள் விடுவது வழக்கம் . பாம்புகளைத் துன்புறுத்தக்கூடாது என்று ஒரு இந்து விரோதக் கும்பல் கும்பல், கோர்ட்டுக்குப் போகவே பம்பாய் ஹைக்கோர்ட்டும் பாம்பு பிடி விழாவுக்குத் தடை விதித்தது . இப்போது ஆண்டு  தோறும் ட்ரோன்களை Drones இயக்கி பாம்புப்  பிடாரர்களை கண்காணிக்கிறது அரசு.கோரக்நாதர் நட்ட புளியமரத்தில் வாசிக்க முடியாத, புரியாத எழுத்துக்கள் இருப்பதாக ஒரு ஐதீகம்  ; இது அங்கு வரும் பக்தர்களின் பெயர் என்ற

நம்பிக்கை இருப்பதை மஹாராஷ்டிர அரசு கெஜட் செய்தி கூறுகிறது.

இதே ஊரில் இன்னும் ஒரு கதையும் உள்ளது. சிரால செட்டி என்பவர் ஒன்னேகால் மணி நேரத்துக்கு அரசனாக இருந்தாராம். அவர் நினைவாக ஆண்டுகோரும் ஆவணி மாத சுக்கில பட்ச சஷ்டி யன்று ஒரு விழா நடக்கிறது. . அவருடைய உருவத்தை மண்ணால் செய்து அதைச் சுற்றி பெண்கள் நடனம் ஆடுவர். பின்னர் மண் பொம்மையை ஆற்றில் கரைத்து விடுவார்கள்.

ஒரு காலத்தில் இது பெரிய புளியம் தோப்பாக இருந்தது. அங்கு ஏராளமான மயில்கள் வரும். அதற்கு கோரக்நாத மடத்திலுள்ளோர் தானியங்களைப் போட்டு அதைப் புனிதப் பறவைகளாக கருதுவர். மேலும் அந்தப் புளியமரத்தின் ஒவ்வொரு சுழிவும் நெளிவும் , விரிசலும் அங்கு வரும் பக்தர்களின் பெயர்கள் என்றும் அது மக்களுக்குப் புரியாத ஒரு எழுத்தில் எழுதப்படுகிறது என்றும் சொல்லுவார்கள். கோரக்நாத் , சிவனின் உருவம் என்று மக்கள் நம்புவதால் லிங்ககாயத் பிரிவினர் இங்கு பெருமளவில் வருவார்கள்

*****

இன்னும் ஒரு புளிய மரக்கதையைக் காண்போம்

ஒரு பெண்மணியின் கணவன், திரை கடல் ஓடியும் திரவியம் தேடு என்ற பழமொழியை மனதிற்கொண்டு நீண்ட காலம் வெளிநாட்டுக்குப் போக திட்டமிட்டான். அன்பு மனைவியிடமும் அதைச் சொன்னான். மனைவிக்கு அவனை, நீண்ட காலம் பிரிந்துவாழ இஷ்டமில்லை . உடனே ஒரு ஜோதிடரைப் போய்ப் பார்த்தாள் . அந்தக் காலத்தில் ஜோதிடர்கள் மருத்துவ விஷயங்களையும் கதைப்பார்கள். அவர் சொன்னார்- உன் கணவனை அன்புடன் வழி  அனுப்பி வை. ஆனால் ஒரு கண்டிஷன் Condition  போடு; அன்பே , ஆருயிரே; போகும்போது புளிய மரத்துக்கு அடியிலும் வரும்போது வேப்ப மரத்துக்கு அடியிலும் நீங்கள் உறங்க வேண்டும். அது ஒன்றே என் நிபந்தனை என்று சொல் என்றார்  . அவளும் அப்படியே கண வனிடம் பகர்ந்தாள் ; கணவனும் புறப்பட்டான்;, அவள் சொன்னபடியே இரவில் புளிய மரத்துக்கு அடியில் உறங் குவதை வழக்கமாகக் கொண்டான். சில வாரங்களுக்குள் அவன் உ டல் நலம் குன்றவே பாதியில் பயணத்தைக் கைவிட்டு வீட்டுக்குத் திரும்பினான். கணவனின் விரைவான திரும்புதலுக்கு உதவிய புளிய மரத்தை அவளும் மனதார வாழ்த்தினாள். இந்த நாட்டுப்புற கதை , புளிய மரத்துக்கு அடியில் உறங்காதே என்பதை விளக்குகிறது .

xxxx

பேய்க்கு வாக்குப்பட்டால் புளிய மரத்தில் ஏறித்தான் ஆக வேண்டும் என்ற பழமொழியால், புளிய மரத்துக்கு பெரிய அவப்பெயர் ஏற்பட்டுவிட்டது . உண்மையில் மரங்கள் இரவு நேரத்தில் கார்பன் டை ஆக்சைட்  வாயுவை வெளியிடுகிறது. அது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும்  மேலும் புளிய மரத்தின் இலைகள் இரவு நேரத்தில் மூடிக்கொள்ளும். இதைத் தூங்குகிறது என்று சொல்லுவார்கள். இந்த குணமும் இதற்குப் பேயின் பெயரைக் கொடுத்துவிட்டது போலும்!

இன்னும் எங்கெங்கோ எத்தனை புளிய மரங்கள் இப்படிக் கதைகளுடன் உள்ளனவோ!  யார் அறிவார்?

புதிய கதை ஏதேனும் இருந்தால், உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்; அது எதிர்கால மரத்தடியர்களுக்கு , மர மண்டைகளுக்கு உதவும்.

மரத்தடியர் = மரங்களின்பால் பேரன்பு  கொண்ட அடியார்

மர  மண்டை= மரங்களைப் பாதுகாப்பதே கடமை என்ற சிந்தனையில் ஊன்றி நிற்போர்..

–subham—

புளியமரத்தில் பேய்கள் வசிப்பது ஏன்? ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை (Post No.2667

)Research Article by london swaminathan

Date: 27 March 2016

Post No. 2667

Research Article by london swaminathan

Date: 27 March 2016

Post No. 2667

தமிழர்களுக்கு பேய் என்றால் நிறையப் பிடிக்கும். “பேயாட்சி செய்தால், பிணம் தின்னும் சாத்திரங்கள்” — என்ற பாரதியின் வரிதான் நினைவுக்கு வருகிறது. புளிய மரத்துக்கும் பேய்க்கும் என்ன சம்பந்தம் என்று ஆராயப் புகுந்தபோது புளியமரம், பேய்கள் பற்றி மேலும் சில சுவையான விஷயங்கள் கிடைத்தன.

1.புளியமரத்துக்கும் பேய்க்குமுள்ள தொடர்பு புகழ்மிகு சேங்காலிபுரம் ஸ்ரீ அனந்தராம தீட்சிதர் எழுதிய நூல் முகவுரையில் உளது. இதுவரை என் பிளாக்கில், அது தொடர்பான கட்டுரையைப் படிக்கவில்லையானால் இந்தக் கட்டுரையின் இறுதியில் உள்ள *தகவலைப் பார்க்கவும்.

2. மத்தியப் பிரதேச குவாலியர் நகரில், மொகலாய சாம்ராஜ்யத்தின் மாபெரும் இசை மேதை தான்சேனின் சமாதி/கல்லறை உள்ளது. அங்குள்ள ஒரு புளிய மரம் மிகவும் புகழ்பெற்றது. காரணம் – தன் இலைகளைச் சுவைத்தால் நல்ல குரல் வளம் எற்படும் என்ற நம்பிக்கை உள்ளது. இதனால் இப்போது இந்த மரம் மொட்டையாக இருக்கிறது. “ஆளுக்கு ஒரு மயிர் பிடுங்கினால் அடியேன் தலை மொட்டை” – என்ற சாமியார் பழமொழி நினைவுக்கு வருகிறது.

3.புளியமரத்துக்கும் பேயுக்குமுள்ள தொடர்புக்கு விஞ்ஞான விளக்கம் கிடைக்கவில்லை. ஆனால் புளிய இலைகளிலுள்ள அமிலச் சத்தானது அதன் கீழே வேறு தாவரங்களை வளரவிடுவதில்லை என்ற ஒரு விளக்கம் இருக்கிறது. அரசமரம் போன்றவை அதிக ஆக்சிஜனை வெளியிடுவதால், அதைச் சுற்றி வருவது நல்லது என்று எண்ணிய இந்துக்கள் அதனடியில் கோவில்களை அமைத்தனர். பறவைகளும் அத்தகைய ஆரோக்கிய மரங்களில்தான் பெரும்பாலும் கூடு கட்டுகின்றன.

4.தான்சேன் புளியமரம், வட நாட்டில் எவ்வளவு புகழ்படைத்ததோ அது போல தமிழ் நாட்டில் புகழ்படைத்தது திருக்குருகூர்/ ஆழ்வார் திருநகரி புளியமரம்தான். 16 ஆண்டுக் காலம் ஊமையாகக் கிடந்த மாறன் சடகோபனைப் பாட வைத்து, நம்மாழ்வார் என்று புகழ் ஈட்டித்தந்தது ஒரு புளிய மரமே! புத்தனுக்கு அரச மரத்தயில் ஞானம் கிடைத்தது; நம்மாழ்வாருக்குப் புளியமரத்தடியில் ஞானம் கிடைத்தது! வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபன் வாழ்க!

5.திருமங்கை ஆழ்வாருக்கும் உதவியது ஒரு புளியமரமே! திருவரங்கப் பெருமானுக்குப் பெரிய கோவில் கட்ட ஆசை கொண்ட திருமங்கை மன்னனுக்கு பணம் தேவைப்பட்டது. மாணிக்க வாசகர், பாண்டிய மன்னனின் பணத்தை எடுத்துக் கோவில் கட்டினார்; கஷ்டப்பட்டார். திருமங்கை ஆழ்வாரோ நாகப்பட்டிண தங்க புத்தர் சிலையை ஒரு பாடலின் மூலம் உருக்கி, அதை ஈயச் சிலையாக வைத்துவிட்டு தங்கத்தை எடுத்துவந்தார் என்று வைணவப் பெரியோர்கள் சொல்லுவர். அப்படி வரும் வழியில் களைப்பு தீர உறங்கச் சென்ற அவர், தங்கத்தை மண்ணுக்கு அடியில் மறைத்துவிட்டு ஒரு புளியமரத்தடியில் படுத்தார். ஏ புளியமராமே! நீ தூங்காமலிருந்து என் செல்வத்தைக் காப்பாற்று என்று கட்டளையிட்டுவிட்டுத் தூங்கினார். பொழுதும் விடிந்தது; உழவர்களும் வயல் வேலைகளுக்கு வந்துவிட்டனர். புளியமரம் பார்த்தது. இந்த ஆளை எப்படி எழுப்புவது என்று யோசித்தது. தன் இலைகளையெல்லாம் அவர் மீது கொட்டவே அவர் விழித்தெழுந்தார். இது திருக்கண்ணன்குடியில் நடந்தது. உறங்காப்புளி வாழ்க!

6. தமிழ்நாட்டில் பல கோவில்களில் உறங்காப்புளிய மரங்கள் உள்ளன. அதாவது எல்லாப் புளிய மரங்களும் இரவில் இலைகளை மூடிக் குவித்து தூங்கும். சில புளிய மரங்கள் இப்படித் தூங்காததற்கு, அந்தந்த ஊர்க் கோவில்களில் பல கதைகள் உண்டு. இதற்கு விளக்கம் கூறுவோர், இருவகையில் இதை நோக்குவர்.1) உறங்காப்புளி என்பதே ஒரு வகை மரமாகும். அவைகள் , மற்ற வகை மரங்களைப் போல இலைகளை மூடா என்பர் 2) மற்றொரு விளக்கம், எல்லாம் இறைவனின் அற்புதத் திருவிளையாடல் என்பர். இது மேலும் ஆராயப்பட வேண்டிய விஷயம்.

7.ஸ்ரீ ராமனுஜரும், காஞ்சீபுரப் பேயும் என்று ஒரு சம்பவமும் உள்ளது. அதை வேறு ஒரு கட்டுரையில் காண்போம். ஒவ்வொரு பண்பாட்டிலும் மரங்களைப் பற்றி பல நம்பிக்கைகள் உள. இவையனைத்தும் முன்னோரின் அனுபவ அடிப்படையில் அமைந்தவை. எளிதில் அறிவியல் விளக்கம் பெறக்கூடியவை.

மரங்கள் வாழ்க! புளிய மரமும் வாழ்க!

—-SUBHAM—–

TAGS- புளிய மரம்,

இமயமலை புனிதத் தலங்கள், உத்தரகண்ட்! – 1 (Post No.14,596)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,596

Date uploaded in London – –6 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

31-5-2025 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை! இரு பகுதிகளாக இங்கு பிரசுரிக்கப்படுகிறது

இமயமலையில் எழில்காட்சிகள்புனிதத் தலங்கள்காட்சியகங்கள் : உத்தரகண்ட்! – 1 

ச. நாகராஜன்

உத்தரகாண்ட் மாநிலம் இந்தியாவின் வடபகுதியில் இமயமலையில் அமைந்துள்ள மாநிலமாகும். எழில் கொஞ்சும் இயற்கைக் காட்சிகள், பரவசமூட்டும் பனிமலை, ஏராளமான புனிதத் தலங்கள் என அனைவரையும் வரவேற்கும் அற்புதங்களைக் கொண்டுள்ளது இந்த மாநிலம். வடக்கில் திபெத், கிழக்கில் நேபாளம், தெற்கில் உத்தரபிரதேசம், மேற்கிலும் வடமேற்கிலும் புனிதமான இமயமலை என எல்லைகளைக் கொண்டுள்ள இதை தேவபூமி என்றே மக்கள் அழைக்கின்றனர். (இது 2007 முடிய உத்தராஞ்சல் என்று அழைக்கப்பட்டு வந்தது)

இங்கு பார்க்கவேண்டிய இடங்கள் ஏராளம் உள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.

டேராடூன் உயிரியல் பூங்கா 

உத்தரகண்ட் மாநிலத்தில் தலைநகர் டேராடூன். இங்கு  நகர மையத்தில் உள்ள இந்த விலங்கியல் பூங்காவில் புலியில் ஆரம்பித்து மயில்கள் வரை அனைத்து விலங்கினம் மற்றும் பறவை வகைகளைக் காணலாம்.

 காந்தா கர்

பழைய கால மணிக்கூண்டு நகரத்தின் மையத்தில் அமைந்துள்ளது. எந்தப் பகுதியிலிருந்து பார்த்தாலும் மணியைப் பார்க்கும் வகையில் அமைந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க சின்னம் இது.

 ஷிகர் நீர்வீழ்ச்சி.

டேராடூனின் அழகிய நீர்வீழ்ச்சிகளில் இதுவும் ஒன்று. மலையின் மீது அமைந்துள்ளது இது. மலை ஏறுவதில் விருப்பமுள்ளவர்கள் ஒரு கிலோமீட்டர் நடந்து சென்று இந்த நீர்வீழ்ச்சியை அடையலாம்.

 புலிகளை நெருக்கமாகப் பார்க்க உள்ள இடம் டைகர் வியூ ஜங்கிள் கேம்ப். காட்டில் சஃபாரி வசதியும் உண்டு.

 கொள்ளையர்  (ராபர்ஸ்) குகை

சிவபெருமானின் உறைவிடம் இதுவே. கொள்ளையர் பதுங்கி வாழ வசதியாக இது பயன்படுத்தப்பட்டதால் இது கொள்ளையரின் குகை என்று அழைக்கப்படலாயிற்று. இங்குள்ள அதிசயம் என்னவெனில் குகையின் நடுவிலிருந்து ஆறு பாய்கிறது.

 சஜஸ்த்ர தாரா

இது ஒரு சிறிய நீர்வீழ்ச்சித் தொடர். கந்தகம் உள்ள நீர். சில சிகிச்சைக்கு உகந்த இடமாகும் இது. இங்கு ரோப் வே உண்டு. இந்த வான்வழிப் பாதை வழியே டூன் பள்ளத்தாக்கு முழுவதையும் பார்க்கலாம். ஒரு மணி நேரம் இந்த வான்வழி சவாரி நீடிக்கும். அற்புதமான இயற்கைக் காட்சிகளை வானிலிருந்து பார்ப்பது ஒரு தனி அனுபவம் தான்!

 மைண்ட் ரோலிங் மடாலயம் : பௌத்த மடாலயமான இது மிக்க பழமையானது. இங்குள்ள ஸ்தூபி மிக்க உயரமானது.

 கேதார் கந்தா

இந்தச் சிகரம் டேராடூனிலிருந்து 80 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. மலையேறத் துடிப்பவர்களுக்கான இடம் இது. டன்ஸ் நதி பள்ளத்தாக்கில் உள்ள இந்த சிகரம் எப்போதும் பனியால் மூடப்பட்டிருக்கும். 

ஹரித்வார்ரிஷிகேஷ் 

ரிஷிகேசம் டேராடூனிலிருந்து 10 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. \. நவம்பர் முதல் மே வரை கடும் குளிர் காலம் என்பதால் யாத்ரீகர்கள் மே முதல் வரத் தொடங்குகின்றனர். 

இராமாயணத்துடன் தொடர்பு கொண்டுள்ள இந்தத் தலத்தில் தான், ராமரும் லட்சுமணரும், ராவணனை வதம் செய்த பின்னர் வந்து தவம் செய்து தங்கள் பிரம்மஹத்தி தோஷத்தை நீக்கிக் கொண்டனர்.

 அத்துடன் பரதரும், சத்ருக்னரும் கூட இங்கு தான் வந்து தவம் செய்தனர்.

 ரிஷிகேசத்தில் உள்ள பரதர் ஆலயம் மிகவும் புகழ் பெற்றது. இது ரிஷிகேஷ் நகரின் மையத்தில் அமைந்துள்ளது. சத்ருக்னர் ஆலயம், 1986ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட ராமர் பாலத்தின் அருகில், உள்ளது. ஹரித்வாரிலிருந்து இறங்கி ரிஷிகேசம் வரும் போது கூடவே கங்கையும் துணைக்கு வருவாள். சலசலத்து ஓடும் கங்கை நதியைக் கடந்து செல்ல இங்கு அற்புதமான ஒரு பாலம் அமைந்துள்ளது.

 அதன் பெயர் லட்சுமண ஜூலா. ஜூலா என்றால் ஊஞ்சல் என்று பொருள்.

இலேசாக அசைந்து ஆடும் இந்தப் பாலத்தில் நடந்து மட்டும் போகலாம்; அக்கரை சேரலாம். கீழே பொங்கிப் பிரவாகித்து ஓடும் கங்கை நதியை ஆச்சரியத்துடனும் பக்தியுடனும் பயத்துடனும் தரிசித்து அக்கரை செல்வோர், படகில் மீண்டும் இக்கரை வருவது வழக்கம். இந்தப் பகுதியில் தான் லட்சுமணர் தவம் செய்தார். 

 லட்சுமணருக்காகத் தனிக் கோவில் அமைந்துள்ள இடம் இது ஒன்று தான். லட்சுமண்ஜூலாவைக் கடந்து சென்றவுடன் அமைந்து இருப்பது கைலாச நாதர் ஆலயம்.

 இந்த ஆலயத்தில் திரிபுரசுந்தரி, மஹிஷாசுரமர்த்தனி, காயத்ரிதேவி ஆகிய மூன்று தேவியரின் சந்நிதிகள் உள்ளன. தத்தாத்ரேயர், விநாயகர் சந்நிதிகளும் இங்கு உள்ளன.

 இந்த ஆலயத்தை அடுத்துள்ள சுவர்க்கநிவாஸ் மந்திரில் உள்ள பத்ரிநாதரை வழிபட்டால் சுவர்க்க பதவி உண்டு என அனைவரும் நம்புகின்றனர்.

 சுற்றிலும் அழகிய சாந்தி தவழும் மலைப் பகுதி; பிரவாகம் எடுத்து ஓடும் தெய்வீக கங்கை நதி; தியானத்திற்கும் யோகப் பயிற்சிகளுக்கும், ஆன்மீக முன்னேற்றத்திற்கும் உகந்த இடம் இதுவே!

 ரிஷிகேசம் யோகாவின் உலகத் தலைநகரம்  என்று  கொண்டாடப்படுகிறது.

to be continued

Pictures of 2500 Indian Stamps!- Part 52 (Post No.14,595)

Written by London Swaminathan

Post No. 14,595

Date uploaded in London –  5 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

PART 52


Stamps posted today include YEAR 1997, YEAR 1998, STAMPS,

Pictures of 2500 Indian Stamps, PART 52, 

BHAI KANHIAJI, JANA NETA IRAWAT SIGH, EMPOWERED GIRL, ROSE, HERBS,  PHARMACEUTICAL CONGRESS, SANT GADGE BABA

INS DELHI SHIP, DAVID SASSOON LIBRARY, CONNEMARA LIBRARY,  CULCUTTA SANSKRIT COLLEGE, FOUR MUSICAL INSTRUMENTS, FOUR SEA SHELLS, WOMEN IN AVIATION, FLUTE, SAROD, MRIDAND, PAKAVAJYA, POSTAL SERVICES CENTRE, RAJPUT BATTALION, ACHARYA TULSIJI, 
INTERNATIONAL PHYSICS CONGRESS, EINSTEIN, BABA RAGHAVDAS, SOONERATIA ALBA PLANT, TIRUMALA GOLDEN TOWER, WATER FALLS, NETAJI, FOUR MADHUBANI MITHILA PAINTINGS, OLYMPICS, WEIGHT LIFTING, TENNIS, YEAR 2000 CHILDREN S DAY

BHAI KANHIAJI

—SUBHAM—

TAGS-Pictures of 2500 Indian Stamps, PART 52, BHAI KANHIAJI, JANA NETA IRAWAT SIGH, EMPOWERED GIRL, ROSE, HERBS,  PHARMACEUTICAL CONGRESS, SANT GADGE BABA, INS DELHI SHIP, DAVID SASSOON LIBRARY, CONNEMARA LIBRARY,  CULCUTTA SANSKRIT COLLEGE, FOUR MUSICAL INSTRUMENTS, FOUR SEA SHELLS, WOMEN IN AVIATION, FLUTE, SAROD, MRIDAND, PAKAVAJYA, POSTAL SERVICES CENTRE, RAJPUT BATTALION, ACHARYA TULSIJI, 
INTERNATIONAL PHYSICS CONGRESS, EINSTEIN, BABA RAGHAVDAS, SOONERATIA ALBA PLANT, TIRUMALA GOLDEN TOWER, WATER FALLS, NETAJI, FOUR MADHUBANI MITHILA PAINTINGS, OLYMPICS, WEIGHT LIFTING, TENNIS, YEAR 2000 CHILDREN S DAY, VEERA SIVAJI, PATEL, NATAJI, WRESTLING 

Carrot Halwa and Hindu Swan doll go to Space in American Rocket! (Post No.14,594)

Written by London Swaminathan

Post No. 14,594

Date uploaded in London –  5 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Why Indian astronaut Shubhanshu Shukla carrying swan doll to space?

Reveals if he’ll talk to Modi as Rakesh Sharma spoke to ex-PM Indira Gandhi in 1984

Aksheev Thakur

Tribune News Service

New Delhi, Updated At : 07:41 AM Jun 04, 2025 IST

Astronaut Group Captain Shubhanshu Shukla, who will pilot the Axiom-4 mission that has been rescheduled for June 10, said he would carry the hopes and dreams of 1.4 billion Indians into space.

Urging people to pray for the mission’s success, he said, “This mission is a milestone for India’s space programme and I request India to pray for its success. Even stars are attainable, Jai Hind! We will do amazing things for 14 days in orbit.”

Speaking during the crew’s media interaction from the quarantine centre in Florida, Shukla called the preparation for the human space programme a journey of growth and discovery. “I reflect on the path that has brought me here. From diverse systems to advanced platforms, this training has been intense but fruitful. Your (India) strength and support has been my anchor HE SAID.

Shukla is carrying along souvenirs crafted by the National Institute of Design. “From the orbit, I will be speaking live with students and members of India’s space industry. I hope to ignite curiosity in young minds,” he said.

Responding to a query whether he would speak to Prime Minister Narendra Modi from space the way Wing Commander Rakesh Sharma (retd) interacted with them PM Indira Gandhi, Shukla said there would be an interaction with VIPs. He, however, did not name any VIP.

Sharma flew to space in 1984 and Shukla said he was in constant touch with him. “Rakesh Sharma was like a mentor and has been a guide to me right from the selection process. He very well understands the challenges we face. I speak to him regularly. I am carrying something for him to space, which will be a surprise,” he said.

Shukla said observing the earth from a vantage point and floating in microgravity excited him.

The Indian astronaut will carry delicacies such as mango nectar, moong dal halwa and carrot halwa to space. “The food will be shared with colleagues. Going to space will be a mixed bag of emotions. I will miss my family and friends,” he said.

The crew will spend 14 days in orbit and carry a swan doll as a sign of zero gravity indicator. Zero-G indicators serve as a visual confirmation for astronauts and observers on earth that the spacecraft has reached space and is experiencing a state of weightlessness.

Swan holds religious significance for Indians. “Swan is believed to have the rare ability to separate milk from water, representing purity, wisdom and grace. Carrying this symbol reminds me of the delicate balance between knowledge and pressure, and it keeps me grounded in the values I hold dear. I feel inspired, fully prepared and confident as I embark on this journey,” Shukla said.

Peggy Whitson, a veteran NASA astronaut who is the commander of the space programme, said the mission would focus on science, technology and outreach activities. “These experiments will benefit people on earth. Our crew underwent rigorous training. We have trained for every scenario bonded as a team. We will be engaging with students around the world. Every mission is different and every crew make the difference. We want to see the impact of scientific experiments,” she said.

The mission crew also includes specialists Slawosz Uznanski-Wisniewski from Poland and Tibor Kapu from Hungary. The crew will lift off aboard Dragon on a SpaceX Falcon 9 rocket from Launch Complex 39A at NASA’s Kennedy Space Centre in Florida.

The launch was earlier scheduled for June 8. In a statement, NASA said, “This shift allows teams to account for predicted inclement weather during the SpaceX Falcon 9 rocket and Dragon spacecraft transport in addition to completing final processing of the spacecraft ahead of launch.

****

11 YEARS AGO, I WROTE IN MY BLOGS:

Mystery about Swan: Can it separate Milk from Water?

Why Saints are called Paramahamsa?

Research paper written by London Swaminathan
Post No.1153; Dated 6th July 2014.

From the days of the Rig Veda and Chandogya Upanishad, swan is always associated with the bright sun and saints.

All the water birds close to swan are grouped under the Anatidae family. Hindu mythology understood the unity pervading the family. Their approach was very scientific when they dealt with swans, geese and ducks.

Hamsa Gayatri
Om Hamsaaya Vidmahe
Paramahamsaaya Dhimahi
Tanno Hamsha Pracodayaat

“May we realise Hamsa that is our own Self as Swan. Let us meditate on that Paramahamsa, the Supreme Self. May Hamsa illumine us.”

This one of the several popular Gayatri mantras.

Great saints are called Parama hamsa. It means Supreme Swan. We have great saints like Ramakrishna Paramahamsa (1836-1856) and Paramahamsa Yogananda (1893-1952) within the last two hundred years. Sadasiva Brahmendra composed short and sweet kritis in Sanskrit and had the ‘mudra’/signature “paramahmasa” in all his compositions.

When it used in the context of great Yogis (ascetics) it does not mean the bird Swan (Hamsa in Sanskrit). It is the combination of two words Aham + Sa= Hamsa. I am He. It is the essence of Advaita philosophy. God and Man are one at the highest level. All the famous Upanishads have this philosophy: Aham Brahmasmi/ I am Brahman, Tat Tvam Asi/ You are That etc.

When saints who are well versed in the Yogic techniques breathe in and out it sounds ‘Ham…… Sa…… ‘Ham…… Sa….’ leading to Soham+ He is I.

Chandogya Upanishad (4-7) included an instruction (advice) from a swan. Dattatreya learnt something good from everything in nature including a bird. Hindus used everything in nature for the spiritual advancement of man.

Is it true that swans can separate milk from water and drink only milk?
Another meaning at a different level:-

Hamsa is the vehicle of God Brahma and his consort Sarasvati. All are white in colour symbolising purity and knowledge. Hamsa is associated with Holy Ganges and holy lake Manasa Sarovar. It is one of the purest birds. Hamsa Gayatri confers the power of discretion on the person who recites it. Like that Hamsa separates the good things from the bad things, Water birds separate good water from the bad water. It has got a sieve like structure (lamellae) in its mouth which separates water from mud. Probably this is what lead to the belief that Swans can separate milk from water and drink only milk. In Sanskrit Ksheera means milk and pure water.

Hamsa in the Vedas

Hamsa in the RIg Veda (1-65-5; 1-163-10;2-34-5;3-8-9;;AV 6-12-1 etc) and later literature denotes the bird gander. These birds are described as dark in colour on the back( RV 7-59-7), they fly in troops ((RV 3-8-9), swim in the water (RV 1-65-5), make loud noises (3-53-10), and are wakeful at night (AV 6-12-1) according to Vedic Index.

The Hamsa is credited with the power of separating Soma from water (as later milk from water) in the Yajur Veda (Kataka, Maitrayani, Vajasneyi Samhitas and Taitriya Brahmana).
The soma plant when crushed exudes the juice with a hissing sound. This is compared to the hissing of a swan when disturbed on the water (RV 1-65-5)

The Asvins are invited to the soma sacrifice like a pair of swans hastening to the water (RV 5-78-1).
It is also sacrificed in the Asvamedha Yajna along with two hundred other animals, birds, plants and other grains.

Sun and Paramahmsa
The sun and the spiritually elevated man are compared with the wise swan in the Shivapurana (2-15-10).
The Mute Swans are known to go about in pairs and they are greatly devoted to each other. Even Buddhacharita of Asvagosha mentioned this in the context of appealing to Gautam Siddhartha to come back to his wife.
Ramayana described swan as god Varuna’s bird (7-18-28)

Nala Damayanti and Swan
The golden coloured swan (whooper) caught by Nala was mentioned in the Mahabharata (3-54-19). The bird promised to plead Nala’s cause with Damayanti and was thereupon released. He flew with his party to her place and allowed himself to be caught by her and then performed his mission.

Hamsavatara
One of the incarnations/Avatars of Lord Vishnu is Hamsavatar in the form of a swan. Apart from Dasavatar (ten incarnations) we have 11 more Avatars.

Kalidasa & Sangam Tamil Literature
I have already written about the Bird Migration in Kalidasa and Sangam Literature.
Kalidasa referred to the strange habit of swan ‘separating milk from water’ in Sakuntalam drama (Act 6-33). A Gatha Sapta Sati poet copied it. Naladiyar in Tamil also copied Kalidasa.
Paranar, a Brahmin poet of Sangam period used lot of similes from Kalidasa along with his colleague Kabilar. Paranar in his poem– Natrinai 356 — sang about a swan flying to the golden peaked Himalayas after feeding itself with fishes in the Southern Seas. Pisiranthaiyar said the same thing in Purananuru verse 67. All these are just echo Kalidasa’s poems.

Kalidasa’s Raghuvamsa and Meghaduta have got too many references to water birds such as swan and cranes, geese and ducks.

Pillows were stuffed with the feathers of swan in ancient India.

A woman’s gait is compared to the gait of a swan in Tamil (Aka.279) and Sanskrit literature.

The swans are remarkable for their stately flight very high in the sky and they seem to approach the sun, says Mankudi Kizar of Madurai Kanchi (385-38).

Different types of swans such as Raja Hamsa, Kala Hamsa, Maththa Hamsa, Maha Hamsa, Kshuta Hamsa and Kadamba Hamsa are found in Sanskrit literature.

Ramayana and Mahabharata have interesting stories about swans. One of them is about the white colour of the swan (7-18-29/31). Varuna avoided Ravana by transforming himself to a swan and later gave a boon to the bird for his help and made him permanently white! Since Brahma has it as his Vahana the bird is also called Surapriya (Friend of the Devas). Swan is always associated with glory, purity, affection, love, majesty and divinity!!

Contact swami_48@yahoo.com

–subham—

Tags- swan, mystery, milk and water, Hindu literature, Paramahamsa, Indian astronaut, swan doll, carrot halwa, space , Shukla,

விண்கலத்தில் செல்லும் தமிழ், சம்ஸ்க்ருத அன்னப்பறவை! (Post No.14,593)

Written by London Swaminathan

Post No. 14,593

Date uploaded in London –  5 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

 இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா ஒரு அன்னப் பறவையின் பொம்மையை விண்வெளிக்கு எடுத்துச் செல்லப்போகிறார் . அவர் சொன்ன காரணம் ஏற்கனவே தமிழ், சம்ஸ்க்ருத நூல்களில் உள்ளது!

ஜூன் பத்தாம் தேதி அமெரிக்காவின் விண்வெளி ஏவுதளத்திலிருந்து ஆக்ஸ்யம் மிஷன்-4 விண்கலம் வானத்தில் பறக்கப்போகிறது. அதன் கேப்டன் சுபான்ஷு சுக்லா. அவர் 140 கோடி இந்தியர்களின் கனவை நனவாக்கப்போகிறார் இதற்கு முன்னர் ராகேஷ் சர்மா விண்கலத்தில் சென்றதை நாம் அறிவோம் . ஆனால் இவர் 14 நாட்கள் விண்கலத்தில் தங்கி புதிய சாதனை செய்யப்போகிறார் 

Why Indian astronaut Shubhanshu Shukla carrying swan doll to space?

Astronaut Group Captain Shubhanshu Shukla, who will pilot the Axiom-4 mission that has been rescheduled for June 10, said he would carry the hopes and dreams of 1.4 billion Indians into space.

தன்னுடைய பயணம் வெற்றியடைய இந்தியர்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார் .

அமெரிக்காவின் ப்ளோரிடா மாநில விண்கல  ஏவுதளத்திலிருந்து அவர் பேசினார்

நாம் நட்சத்திரங்களைக்கூட அடைய முடியும் ஜெய் ஹிந்த் என்று அவர் கூறினார் . நாங்கள் 14 நாட்களில் பல சாதனைகளை செய்யப்போகிறோம் என்றார்

இந்தியாவின் தேசீய வடிவமைப்புக் கழகம் செய்துள்ள பல பரிசுப் பொருட்களை சுக்லா, விண்வெளிக்கு கொண்டு செல்லப்போகிறார். அதில் ஒன்று அன்னப் பறவையின் பொம்மை . ஏன் அன்னப்பறவையின் பொம்மையை கொண்டு செல்கிறீர்கள்? என்று கேட்டதற்கு அவர் சொன்ன பதில்:

அன்னப்பறவை மத ரீதியில் முக்கியம் வாய்ந்தது. பாலையும்,  தண்ணீரையும் பிரித்து பாலினை மட்டும் சாப்பிடும் அபூர்வ சக்தி இதற்குண்டு என்று நம்புகிறோம். இதன் பொருள் தூய்மை, விவேகம், அருள் ஆகியவற்றை நாம் பிரித்து எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதாகும் அறிவு விஷயத்தில் இது சம நிலையை உண்டாக உதவுகிறது இது எனக்குப் பிடித்த கருத்து . எனக்கு இப்பொழுது முழு உத்வேகம் வந்துவிட்டது ; பறக்கத்தயாராகி விட்டோம்” .

“நான் கொண்டு செல்லும் அன்னப்பறவை, நாங்கள் எடையற்ற தன்மையை அடைந்து விட்டோமா என்பதைக் காட்டும் அடையாளம்”  (விண்வெளியில் பூமியிலிருக்கும் ஈர்ப்புவிசை இல்லாததால் ராக்கெட்டுக்குள் எல்லோரும் மிதப்பார்கள்; அது ஒரு தனி அனுபவம். அப்படி பறப்பதற்கு நீண்ட கால பயிற்சி பெற வேண்டும் )

1984- ம் ஆண்டில் ரஷ்ய விண்கலத்தில் சென்ற முதல் இந்திய விண்வெளி வீரர் ராகேஷ் சர்மா அப்போதைய பிரதமர் திருமதி இந்திராகாந்தியுடன் உரையாடினார் அதே போல பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசும் திட்டம் உண்டா என்று வினவியபோது பல முக்கியப்புள்ளிக்களு டன் தொடர்புகொள்ளும் திட்டம் உண்டு என்றி மழுப்பாலாக விடை தந்தார். விண்வெளி ஆராய்சசியுடன் தொடர்புடைய மாணவர்கள் அறிஞர்களுடன் பேசப்போவதாக அவர் தெரிவித்தபோது இந்தக் கேள்வி கேட்கப்பட்டது .

முதலில் விண்வெளியில் பயணம் செய்த ராகேஷ் சர்மாவுடன்,  தான் தொடர்ந்து பேசி வருவதாகவும் அவர்தான் எனக்கு முன் உதாரணமாக விளங்கும் மனிதர் என்றும் அவருக்காக விண்கலத்தில் நான் ஒன்றைக் கொண்டுபோகப்  போகிறேன் சர்ப்ரைஸ்! சர்ப்ரைஸ்! என்றார்.

மாம் பழ ரசம் , கேரட் ஹல்வா , பாசிப்பயறு ஹல்வா ஆகியவற்றையும் கொண்டு செல்வேன். இதை மற்ற வீரகளுடன் பகிர்ந்து கொள்வேன் என்றும் சொன்னார்

இவருடன் செல்லும் குழுவினர் இரண்டு வாரங்களுக்கு விண்கலத்தில் தங்கி பல ஆராய்ச்சிகளை செய்யப்போகிறார்கள்

நாசா  NASA  என்னும் அமெரிக்க விண்வெளி அமைப்பின் வீராங்கனை Peggy Whitson, பெக்கி விட்சன் இந்த பயணத்தின் கமாண்டர் ஆவார்

நாங்கள் நடத்தப்போகும் ஆராய்ச்சிகள்  மனித குலத்துக்குப் பயனுள்ள ஆராய்ச்சிகள் ஆகும் என்கிறார் பெக்கி . இந்தக் குழுவில் போலந்து, ஹங்கேரி நாட்டவர்களும் இருக்கிறார்கள் . ப்ளோரிடாவிலுள்ள கென்னடி ராக்கெட் தளத்திலிருந்து பால்கன் FALCON ராக்கெட் மூலம் இந்த விண்கலம் விண்வெளியில் மிதக்க விடப்படும் .  The crew will lift off aboard Dragon on a SpaceX Falcon 9 rocket from Launch Complex 39A at NASA’s Kennedy Space Centre in Florida.

11 YEARS AGO I WROTE:

ஆய்வுக் கட்டுரை எழுதியவர் :- லண்டன் சுவாமிநாதன்

கட்டுரை எண்:–1155; தேதி:– ஜூலை 7, 2014.

பாலையும் தண்ணீரையும் கலந்து வைத்தால், அன்னப் பறவை பாலை மட்டும் பிரித்துக் குடிக்கும் என்பது உண்மையா?

பெரிய ஞானிகளை பரம ஹம்ச — (பெருமைமிகு அன்னம்)— என்று அழைப்பது ஏன்?

அன்னப் பறவையை பரணர், பிசிராந்தையார் முதலிய தமிழ் புலவர்களும், நள தமயந்தி போன்றோரும் தூது விட்டது ஏன்?

பெண்களின் நடையை அன்ன நடை என்று வருணிப்பது ஏனோ?

அதிசயச் செய்தி ஒன்று

கல்வி கரையில கற்பவர் நாள் சில

மெல்ல நினக்கிற் பிணி பல – தெள்ளிதின்

ஆராய்ந்து அமைவுடைய கற்பவே நீர் ஒழிய

பால் உண் குருகின் தெரிந்து — (நாலடியார்)

பொருள்:– கற்கவேண்டிய விஷயம் கடல் போலப் பரந்தது. நம்முடைய வாழ்நாளோ சிறியது. போதாக் குறைக்கு நோய்கள் வேறு நம்மைப் பிடித்து ஆட்டுகின்றன. இதனால்தான் சான்றோர்கள் அன்னப் பறவை எப்படி தண்ணீரை விட்டுவிட்டு பாலை மட்டும் பிரித்து எடுத்துக் கொள்கிறதோ அப்படியே நல்ல நூல்களை மட்டும் எடுத்துப் படிப்பார்கள்.

Translation:– Learning has no bounds; the learners’ days are few and if they would calmly reflect, diseases are also many. Let them therefore carefully investigate and learn what is essential, making a good choice like the swan which drinks the milk separating it from the water.

பாலையும் தண்ணீரையும் கலந்து வைத்தால் பாலை மட்டும் எடுத்துக் கொள்ளும் அதிசய சக்தி அன்னப் பறவைக்கு உண்டு என்பது வேத காலத்தில் இருந்து வழங்கும் ஒரு நம்பிக்கை. இதுவரை விஞ்ஞானிகள் ஒத்துக் கொள்வதில்லை. ஆயினும் இதற்கு ஒரு விஞ்ஞான விளக்கம் உண்டு!

உலகப் புகழ்பெற்ற காளிதாசனின் சாகுந்தலத்திலும் — ( காட்சி 6- செய்யுள் 33)– இந்தச் செய்தி வருகிறது. அதற்கு முன் யஜூர் வேதத்தில் — (காடக, மைத்ராயணி, வாஜஸ்நேயி சம்ஹிதை) — சோம ரசத்தைப் பருகிவிட்டு தண்ணீரை ஒதுக்கிவிடும் பறவை என்ற செய்தி இருக்கிறது. வடமொழிச் சொல்லான க்ஷீர என்பது பாலையும் தூய தண்ணீரையும் குறிக்கும் என்பர் வடமொழி அறிந்தோர்.

அன்னம், குள்ள வாத்து, நாரை போன்ற பறவைகள் ஒரே இனத்தை சேர்ந்தவை. இதில் வாத்து போன்ற பறவைகளின் வாயில் சல்லடை போன்ற அமைப்பு உள்ளது விலங்கியல் படித்தோர் அறிந்த உண்மை. ஆக சகதியை ஒதுக்கிவிட்டு நீரையும், தனக்கு வேண்டிய புழுப் பூச்சிகளையும் வாத்துகள் உண்ணும். ஒருவேளை நமது முன்னோர்கள் இந்த விலங்கியல் புதுமையைக் குறிக்க இப்படி – பால்/தண்ணீர்—கதை சொல்லி இருக்கலாம். அல்லது அழிந்து போய்விட்ட, நமக்குத் தெரியாத வேறு வகை அன்னப் பறவை பற்றியும் சொல்லி இருக்கலாம்.

அன்னப் பறவைகளில் ராஜ ஹம்சம், கால ஹம்சம், க்ஷுத ஹம்சம், மஹா ஹம்சம், காதம்ப ஹம்சம், மத்த ஹம்சம் என்று பல வகைகளை வடமொழி நூல்கள் பாடுகின்றன.

அதிசயச் செய்தி இரண்டு

பரமஹம்ச என்று முனிவர்களை அழைப்பது ஏன்?

உயர் அன்னம் (பரம ஹம்ச) என்று ராமகிருஷ்ண பரமஹம்சர், ‘ஒரு யோகியின் சுயசரிதை’ என்ற புகழ்பெற்ற நூல் எழுதிய பரமஹம்ச யோகானந்தா ஆகியோர் அழைக்கப்படுகின்றனர். ஒரு முஸ்லீம் படைத் தளபதிக்கு சங்கேத மொழியில் உபதேசம் வழங்கிய சதாசிவ பிரம்மேந்திரர் ( என்னுடைய ஒரு கட்டுரையில் இவரது அற்புதச் செயல்கள் உள்ளன.) எழுதிய அருமையான, இனிமையான வடமொழிப் பாடல்களில் அவரது முத்திரை ‘’பரமஹம்ச’’ என்ற சொல் ஆகும்.

ஞானிகளுக்கும் அன்னப் பறவைக்கும் நேரடி தொடர்பு எதுவும் இல்லை. காயத்ரீ மந்திர வகைகளில் ஒன்று ஹம்ச காயத்ரீ:–

ஓம் ஹம்சாய வித்மஹே

பரமஹம்சாய தீமஹி

தன்னோ ஹம்சப் ப்ரசோதயாத்

–என்பது ஹம்ச காயத்ரீ. நம் ஆத்மனில் உறையும் ஹம்சத்தை நாம் உணர்வோமாக. அந்தப் பரமஹம்சத்தை ( பரமாத்மா ) தியானிப்போம். அந்த ஹம்சம் நமது அறிவைத் தூண்டட்டும் என்பது மந்திரத்தின் பொருள்.

ஞானிகள் மூச்சை உள்ளே இழுக்கும் போது ‘’அஹம்’’ என்றும் வெளியே விடும்போது ‘’ ச: ’’ என்றும் சப்தம் கேட்கும். “நானே அவன், அவனே நான்” என்ற அத்வைதப் பேருண்மையை உணர்த்தும் சொற்கள் இவை. ‘’தத்வம் அஸி’’, ‘’அஹம் பிரம்மாஸ்மி’’ போன்ற பெரிய மந்திரங்கள் மனிதனும் இறைவனும் ஒன்றும் நிலையை உணர்த்துவன. ‘’ஒன்றாகக் காண்பதே காட்சி புலன் ஐந்தும் வென்றான் தன் வீரமே வீரம்’’ — என்ற அவ்வைப் பெருமாட்டியின் அற்புத மந்திரமும் இதுவே.

‘’ஹம்………ச………ஹம்……..ச………..’’ என்ற மூச்சை அறிவோர் பரம ஹம்சர்கள் ஆவர். தேவி துர்க்கையை நினைத்த மாத்திரத்தில் சமாதியில் மூழ்கிவிட்ட ராமகிருஷ்ண பரமஹம்சரின் வாழ்க்கையைப் படித்தோருக்கு இதெல்லாம் தெள்ளிதின் விளங்கும்.

சாந்தோக்ய உபநிஷதத்தில் அன்னப் பறவை கற்பிக்கும் பாடம் வருகிறது. தத்தாத்ரேயர் என்ற முனிவர், இயற்கையில் உள்ள ஒவ்வொரு பிராணி, பறவை, பூச்சி ஆகியவற்றிலிருந்து பாடம் கற்றது பாகவதத்தில் வருகிறது.

அதிசயச் செய்தி மூன்று

இன்னொரு விளக்கமும் சொல்லலாம்:–

அன்னப் பறவை தூய வெண்ணிறப் பறவை. இந்திய இலக்கியங்களில் வெள்ளை நிறம் என்பது தூய்மையயும், புகழையும் குறிக்கும். மேலும் அன்னப் பறவைகள் புனித இமயத்தில் மானசஸரோவர் என்ற நிர்மலமான ஏரியில் வசிப்பதைப் புற நானூற்றுப் புலவர்களும் காளிதாசனும் பாடுகின்றனர். அவை சூரியனை நோக்கிப் போவது போல உயரமாகப் பறப்பது, ஞானிகள் இறைவனை நாடிச் செல்வதைப் போன்றதே என்றும் புலவர்கள் புகழ்கின்றனர்.

அன்னப் பறவைகள் ஏகபத்னி (ஒருவனுக்கு ஒருத்தி) விரதம் கொண்ட பறவைகள் என்பதாலும் இந்துக்கள் விரும்புவர். பிரம்மாவுக்கும் சரஸ்வதிக்கும் வாஹனம்!! விஷ்ணுவின் பல அவதாரங்களில் ஒன்று ஹம்சாவதாரம். குட்டிகள் இடத்திலும், மனைவி இடத்திலும் பாசம் உடைய பறவை என்பதால் இந்திய இலக்கியங்கள் இவற்றை உவமைகளாகப் பயன்படுத்தும்.

வீட்டைவிட்டு ஓடிப்போன சித்தார்த்தனை (கௌதம புத்தர்), அன்னப் பறவை போல வந்துவிடு என்று புத்தசரிதம் சொல்லும்.

வேதத்தில் அன்னப் பறவைகள்

உலகின் மிகப் பழைய நூல் ரிக் வேதம். அதிலும் அதற்குப் பின் வந்த 3 வேதங்களிலும் நிறைய குறிப்புகள் உள்ளன:–

ரிக் வேதத்தில் (1-65-5; 1-163-10;2-34-5;3-8-9;; அதர்வணம் AV 6-12-1 etc)  கூட்டமாகப் பறப்பவை, பின்புறத்தில் கருப்பு வண்ணம் உடையவை, அதிக இரைச்சல் செய்பவை, இரவில் முழித்திருப்பவை என்று புலவர்கள் பாடுவர்.

இரட்டையர்களான அஸ்வினி தேவர்களை சோமயாகத்துக்கு அன்னப் பறவை போல ஜோடியாக வரவேண்டும் என்று ரிக்வேத ரிஷி பாடுகிறார் (RV 5-78-1).

சூரியனையும் உயர் நிலையிலுள்ள ஞானியையும் அன்னத்துக்கு ஒப்பிடுகிறது சிவ புராணம் (2-15-10)

மாங்குடிக் கிழாரும் சூரியனை நோக்கிப் பறக்கும் அன்னப்பறவை பற்றிச் சொல்கிறார் — (மதுரைக் காஞ்சி 385-386)

“ஒள்கதிர் ஞாயிறு ஊறு அளவா திரிதரும் செங் கால் அன்னத்துச் சேவல் அன்ன குரூஉ மயிர் புரவி”

ஆய்தூவி அன்னம் தன் அணி நடைப் பெடையொடு மேகம் திரிதரும் – கலித்தொகை 69

இது ரிக்வேதத்தில் 1-163-10 வரும் வெள்ளைக் குதிரை பற்றிய பாடலின் எதிரொலி!!!அதிசயச் செய்தி நான்கு

மஹாபாரதத்தில் நள தமயந்தி கதையில் நளன், அன்னப் பறவையை தூது அனுப்புகிறான். தமயந்தி அதைப் பிடித்து விஷயத்தை அறிகிறாள். பரணரும் (நற்றிணை 356), பிசிராந்தையாரும் (புறம் 67) தென்கடலில் மீன்களைச் சாப்பிட்டுவிட்டு, அன்னங்கள் பொன் நிறம் பிரகாசிக்கும் இமயமலையை நோக்கிப் பறப்பதைப் பாடுகின்றனர். அவைகளை தூது விடுகின்றனர்.

அன்னச் சேவல் அன்னச் சேவல்

……………………

குமரியம் பெருந்துறை அயிரை மாந்தி

வடமலைப் பெயர்குவை ஆயின் (புறம்.67)

நிலம்தாழ் மருங்கின் தென்கடல் மேய்ந்த

இலங்குமென் தூவி செங்கால் அன்னம்

பொன்படு நெடுங்கோட்டு இமயத்து உச்சி

வானர மகளிர்க்கு மேவல் ஆகும் — (நற்றிணை 356)

காளிதாசன் படைத்த ரகுவம்ச, மேகதூத காவியங்களில் எண்ணற்ற குறிப்புகள் இருக்கின்றன.

எல்லாப் புலவர்களும் பெண்ணின் நடையை அன்னத்தின் நடைக்கு ஒப்பிடுவர் (அகம் 279)

படுக்கைத் தலையணைகளில் அன்னத் தூவி (சிறகு) வைத்துப் பயன்படுத்தினர்.

அதிசயச் செய்தி ஐந்து

ராமாயணத்தில் ஒரு கதை

ராமாயண, மஹாபாரதத்தில் நிறைய இடங்களில் அன்னம் பற்றிய உவமைகள் வருகின்றன. ஒரு சுவையான கதையும் உண்டு. அணிலுக்கு ஏன் முதுகில் மூன்று கோடுகள்?, காகத்துக்கு ஏன் ஒரு கண் குருடு? போன்ற பல கதைகளைக் கேட்டிருப்பீர்கள். ஆனால் அன்னத்துக்கு ஏன் தூய வெண்ணிறம் என்று தெரியுமா?

ராவணன் கண்டு பிடிக்காமல் இருப்பதற்காக வருண பகவான் அன்னப் பறவையாக மாறினாராம். பின்னர் நன்றிக் கடனாக அன்னத்துக்கு என்றும் தூய வெண்ணிறத்தை அளித்தாராம் வருண பகவான்:–

வர்ணோ மனோரம: சௌப்ய சந்த்ரமண்டல சந்நிப:

பவிஷ்யதி தவோதக்ர: சுத்தனேண சமப்ரப: — 7-18-29

ஹம்சானாம் ஹி புரா ராம ந வர்ண: சர்வ பாண்டுர:

பக்ஷா நீலாக்ர சம்வீதா: க்ரோடா: சஸ்பாக்ர நிர்மலா: – 7-18-31

இதே போல மஹாபாரதத்திலும் அன்னப் பறவை பற்றி சில கதைகள் இருக்கின்றன.

ஆகவே அன்னம் என்பதை புகழ், தூய்மை, உயர்வு, ஞானம், தெய்வீகம், அன்பு, பாசம், ஏகபத்னி விரதம், அழகிய நடை, கிண்கிணி ஓசை என்னும் பல பொருள் தொனிக்க நயம்படப் பாடினர் நம் முன்னோர்கள்!! Posted 7th July 2014 by Swaminathan 

-சுபம்-

அன்னம், பால், தண்ணீர், உவமை, தமிழ் ,சம்ஸ்க்ருத நூல்கள், சுக்லா, விண்வெளிப் பயணம், அன்னம் பொம்மை, கேரட்டை ஹல்வா, காளிதாசன், சங்கப் புலவர்கள், ரிக் வேதம், ஐந்து அதிசயச் செய்திகள்

London Swaminathan’s Articles in May 2025; Index No.150 (Post No.14,592)

Kamala hasan :Super hero in acting, Dirty in politics; London Swaminathan with the actor in Indian High Commission in London.

Written by London Swaminathan

Post No. 14,592

Date uploaded in London –  5 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

London Swaminathan in 1993

Avestan- Sanskrit Relationship! Latest View (Post No.14,497)10/5

Hindu Festival Akshaya Trtyai in Bullet Points (Post No.14,468)3/5

June 2025 Calendar with Quotations on Vedic God Varuna (Post No.14,568)30/5

Kali killing Shiva; Why? (Post No.14,547)23/5

Is Hell Real or Not?  List of 21 Hells from Manu Smriti-1 (Post No.14,479)6/5

London Swaminathan Again! 142 Book Wrappers; Batch 4 ;  Thirty more Books!26/5

Maha Rudra Japa Yajnam in London (Post No.14,553)25/5

Non -Vegetarians go to Hell says Tamil Poet Valluvar (Post.14,472)4/5

Ramayana Quiz: Some difficult Questions! (Post No.14,464)2/5

Rare Pictures from Times Group, Bombay- 1 (Post.14,480)6/5

Thiruppugaz Festival in London (Post No.14,528)18/5

Torture of Human beings in the Hell according to Buddha! (Post No.14,489)8/5

Translating Poetry is Difficult, Why? (Post No.14,511)13/5

Vedic Gods in Europe : Latest List from Nicholas Kazanas (Post No.14,505)12/5

Vedic Scholar jailed for explaining Atharvana Veda (Post No.14,536)21/5

Voltaire of Kashmir – Poet Kshemendra (Post No.14,441)27/4

Women and Flowers: Bhartruhari (Post No.14,517)15/5

Rare Pictures from Times Group, Bombay- 2(Post 14,485)7/5

Hits two Crores 1/5

Pictures of 2500 Indian Stamps!- Part 26 (Post No.14,463) 2/5

To

Pictures of 2500 Indian Stamps!- Part 49 (Post No.14,574) 31/5

 Dravidachariyar Ramakrishna Swami in London (Post No.14,527) 18/5

Fourth Kumbabishekam of London’s Famous Tamil Temple! (Post No.14,455)30/4

4,11, 18,GNANAMAYAM 4TH MAY, 2025 SUNDAY BROADCAST PROGRAMME  (no Broadcast on 25/5)

Gnanamayam News 4, 11, 18 May

Hindu  Crossword  31525 (Post No.14,575) 27, 28, 30, 31/5,

******

london swaminathan in 2023

TAMIL ARTICLES

சம்ஸ்க்ருத மழை பொழிந்த அறுபது கவிஞர்கள் – PART 7 (1/5)

லண்டன் தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி29, 30, 31/5

பரஞ்சோதி முனிவரின் சொற்சிலம்பம்-2 (Post No.14,513)14/5

ஒரு படி தானியத்துக்கு ஒரு படி முத்து! பரஞ்சோதி முனிவர் தகவல்-3 (Post.14,516) 15/5

தமிழ் மொழியின் மந்திர சக்தி -4 (Post No.14,523)17/5

உடல்நலத்தைப் பேணுவது எப்படி? குமரேச சதகம் ஆராய்ச்சிக் கட்டுரை-5 (Post No.14,466) 3/5

யாக குண்டத்தில் தோன்றிய மீனாட்சியும் திரவுபதியும்-5 (Post.14,526)18/5

மலைகளில் மேரு, மனிதர்களில் பிராமணர் உயர்வு: பரஞ்சோதி முனிவர்-6 (Post.14,539)21/5

சிவனுக்கு எதைக் கொடுத்தால் நமக்கு என்ன தருவார் ?- Part 7 (Post.14,456) 23/5

முகம் விளக்குவது நகை;புத்தியை விளக்குவது நூல்- குமரேச சதகம்-8 ( Post.14,492) 9/5

குமரேச சதகம் ஆராய்ச்சிக் கட்டுரை-9; குரு கோவிந்த சிம்மன் கதை (Post No.14,499)11/5

யாரையும் வெறுக்காதே: குருபாததாசர் அறிவுரை -10 (Post No.14,540) 21/5

QUIZ அக்ஷய திருதியை பத்து QUIZ (Post No.14,462)2/5

ஆதிசங்கரரை காப்பி அடித்த கபிலரும் தொல்காப்பியரும்! (Post No.14,561) 28/5

எகிப்தில் உயிர்விட்ட மருத்துவ நிபுணர் வாக்பட்டர்; சுவையான 2 கதைகள்!   (Post.14,535)20/5

காளிதாசனின் வியப்பூட்டும் உவமைப் பட்டியல்! (Post No.14,569) 30/5

நரகத்துக்குப் போவோர் யார்? யார் ? குமரேச சதகம் ஆராய்ச்சிக் கட்டுரை-6 (Post No.14,470) 4/5

சங்க இலக்கியத்தில் நரகம்; புத்த மதத்தில் கொடிய நரகம் (Post.14,488) 8/5

உ. வே. சா. செய்த தப்பு? சங்க இலக்கியத்தில் மல்லிகா, நில்லிகா வினோதம்! (Post No.14,543)22/5

தமிழும் சம்ஸ்க்ருதமும் ஒன்னு! அதை அறியாதவன் வாயில மண்ணு!(Post.14,508)13/5

துறவிக்கு, வேந்தனுக்கு, வீரனுக்கு எவர் துரும்புக்குச் சமம்- part 1 (Post No.14,478) 6/5

தொல்காப்பியத்தில் துர்கா தேவி: தெ.பொ.மீ. தகவல் (Post No.14,458) 27/5

பாரதியார் சொன்ன ஐந்து ஆடுகள் கதை;  குரு கோவிந்தர் (Post No.14,509) 13/5

பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை உலுக்கிய அதர்வண வேதம்! வேத அறிஞருக்கு சிறை! (Post.14,531) 19/5

பிள்ளையாரை முதலில் வணங்குவது ஏன்? (Post No.14,573)31/5

பெண்களை இந்துக்கள் பூஜிப்பது ஏன்? அனந்தராம தீட்சிதர் விளக்கம் (Post.14,552) 25/5

மருத்துவ நூல் அஷ்டாங்க ஹ்ருதயம் (Post No.14,450) 24/5

ராம ரத்தினத்தின் விலை என்ன ? (Post No.14,520) 16/5

வருணன் பற்றிய பொன்மொழிகள்- ஜூன் 2025  காலண்டர் 29/5

விட்ட எழுத்து எது? விடாத எழுத்து எது? திருமூலர் விடுகதை! (Post No.14,556)26/5

ஷேக்ஸ்பியர் மீது தாகூர் எழுதிய கவிதை! (Post No.14,495) 15/5 

77 yer old london swaminathan , May 2025.

–SUBHAM—TAGS- London Swaminathan’s Articles in May 2025

க்ரேட் பேரியர் ரீஃப் – பவளப் பாறை (Post No.14.591)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,591

Date uploaded in London – –5 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

கல்கிஆன்லைன் இதழில் 14-4-25 அன்று வெளியான கட்டுரை!

உலகின் அதிசய இடங்கள்!

 பசிபிக் முனையில் உள்ள க்ரேட் பேரியர் ரீஃப் – பவளப் பாறைத் தோட்டங்கள்!

(Great Barrier Reef – Coral Gardens at the edge of the Pacific) 

ச. நாகராஜன் 

பிரிட்டிஷ் அரசாங்கத்தால் புதிய நாடுகள் காண பணிக்கப்பட்ட காப்டன் ஜேம்ஸ் குக் (Captain James Cook –1728-17779) தனது நாற்பதாம் வயதில் பசிபிக் தீவுகளை நோக்கிப் பயணமானார். 

தென் பசிபிக் கடலில் க்வீன்ஸ்லாந்து அருகே கடலுக்கு அடியில் உள்ள பெருந்தடுப்பு பவளத்திட்டிற்குள் (Great Barrier Reef) நேராக உள்ளே நுழைந்தார். அவரது 368 டன் எடை உடைய எண்டவர் (Endeavour) என்னும் கப்பல் 1770ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19ம் தேதியன்று கடலுக்கடியில் இருந்த ஒரு பெரும் பவள வளத்திற்குள் நுழைந்தது. அங்கு தான் கண்ட காட்சியைக் கண்டு அவர் அதிசயித்தார். 

அவரது கப்பல் ஒரு பவளத்தில் மோதி, சிக்க பயணம் தடைப்பட்டது. அவரது ஊழியர்கள் இரண்டு மாதம் கப்பலைப் பழுது பார்த்தனர். ஆனால் கப்பலைச் சீராக்க முடியவில்லை. ஒரு வழியாக மெதுவாகக் கப்பலை செலுத்திய குக் பவளப்பாறைகளுக்கு நடுவில் ஒரு இடுக்கைக் கண்டார். அதன் வழியே கப்பலைச் செலுத்தினார். அந்த இடைவெளிக்கு ப்ராவிடன்ஷியல் சானல் (Providential Channel) என்ற பெயரையும் கொடுத்தார்.

 அவர் தனது டயரியில் இப்படி எழுதினார்: “ஆழம் காண முடியாத கடலின் அடியிலிருந்து செங்குத்தாக எழுந்து நிற்கும் இந்தப் பவளத் திட்டுகள், பிரம்மாண்டமாக எழுந்து வரும் அலைகளைத் திடீரென்று தடுக்கின்றன!.”

இந்த பெருந்தடுப்பு பவளத்திட்டு ஆஸ்திரேலியாவின் வடகிழக்குக் கடற்கரையிலிருந்து 1250 மைல் நீளத்திற்கு  நீண்டிருந்தது. நியூசவுத்வேல்ஸின் பரப்பளவான ஒரு லட்சம் சதுர மைல் பரப்பை இது கொண்டிருந்தது.  இதிலிருந்த பவள வகைகள் விதம் விதமாக அழகாக இருந்தன. 350 வகையான பவளங்களை அவர் கண்டார். 90 சதவிகித பவளங்கள் நீருக்கடியிலேயே இருந்தன.

2900 தனித் திட்டுகளுடன் 900 தீவுகளை இந்தப் பரப்பளவு கொண்டிருந்தது.

 இந்த இடத்தில் 1400 வகையான மீன் வகைகளும் இதர கடல் வாழ் உயிரினங்களும் வாழ்ந்து வந்தன. ட்ரிக்கி ஸ்நாப்பர் என்ற ஒரு வகை மீன் மட்டும் 9 கிலோ எடை கொண்டதாக இருந்தது.

 க்வீன்ஸ்லாந்தின் கடற்கரையிலிருந்து 44 மைலில் இருந்த ஹெரான் தீவு அற்புதமாக அமைந்திருந்தது. இங்கு ஆய்வு செய்ய ஆரம்பித்தனர் விஞ்ஞானிகள்.

 இந்தப் பகுதியை விண்வெளியிலிருந்தும் காணமுடியும். சி என் என் தொலைக்காட்சி இதை உலகின் ஏழு அதிசய இயற்கை இடங்களில் ஒன்றாக அறிவித்தது. க்வீன்ஸ்லாந்தின் தேசிய நம்பிக்கை நிறுவனம் இதை மாநிலத்தில் அடையாளச் சின்னமாக அறிவித்தது.

 ஆனால் அதிசயம் என்னவென்றால், வெளி உலகம் அறிவதற்கு முன்பேயே ஆஸ்திரேலியப் பழங்குடி மக்கள் இதை அறிந்திருந்ததோடு பயன்படுத்தியும் வந்துள்ளனர்.

 இப்போது ஆயிரக்கணக்கில் பயணிகளை ஈர்க்கும் இடமாகத் திகழும் இது பல்லாயிரம் பில்லியன் டாலர்களை ஈட்டித் தரும் இடமாக மாறி விட்டது.

 நீருக்கடியில் இயற்கையாக அமைந்திருக்கும் நீர்த் தோட்டங்கள் உலகின் மாபெரும் அதிசயம் தான்!

***

காஷ்மீரே சிறந்த இடம்! குருபாததாசர் கண்டுபிடிப்பு! —11 (Post No.14,590)

Written by London Swaminathan

Post No. 14,590

Date uploaded in London –  4 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

குமரேச சதகம் ஆராய்ச்சிக் கட்டுரை-11

24. இனத்தில் உயர்ந்தவை

தாருவில் சந்தனம் நதியினில் கங்கைவிர

      தத்தினில் சோமவாரம்

தகைபெறு நிலத்தினில் காஷ்மீர கண்டம்

      தலத்தினில்சி தம்பரதலம்

சீருலவு ரிஷிகளில் வசிட்டர்பசு விற்காம

      தேனுமுனி வரில்நாரதன்

செல்வநவ மணிகளில் திகழ்பதும ராகமணி

      தேமலரில் அம்போருகம்

பேருலவு கற்பினில் அருந்ததி கதித்திடு

      பெலத்தில்மா ருதம்யானையில்

பேசில்ஐ ராவதம் தமிழினில் அகத்தியம்

      பிரணவம் மந்திரத்தில்

வாரிதியி லேதிருப் பாற்கடல் குவட்டினில்

      மாமேரு ஆகும் அன்றோ

மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு

      மலைமேவு குமரேசனே.- குமரேச சதகம்- குருபாததாசர்

மரங்களில் சந்தனம்

மரங்ககளில் உயர்ந்தது சந்தானம் என்பதை எல்லோரும் ஒப்புக்கொள்வார்கள். ஏனெனில் ஊதுபத்தி தன்னையே எரித்து தியாகம் செய்து நமக்கு மணம் தருவது போல, சந்தனமும்  தன்னையே அரைத்து தியாகம் செய்து நமக்கு மணம் தருகிறது அதனால்தான் அதை பெரியோரின் குணத்துக்கு ஒப்பிட்டனர் .

அடினும் ஆவின்பால் தன் கவை குன்றாது.23

சுடினும் செம் பொன் தன் ஒளி கெடாது.24

அரைக்கினும் சந்தனம் தன் மணம் அறாது.25

புகைக்கினும் கார் அகில் பொல்லாங்கு கமழாது.26

கலக்கினும் தண் கடல் சேறாகாது.27

அடினும் பால் பெய்து, கைப்பு அறாது என்று வெற்றி வேற்கை (அதிவீரராம பாண்டியர்) கூறுகிறது .

அம்பலவாணரும் இதையே சொன்னார்

குறைந்தாலும் பயன்படல்

Arappalisura satakam Verse 23

தறிபட்ட சந்தனக் கட்டைபழு தாயினும்

     சார்மணம் பழுதா குமோ!

  தக்கபால் சுவறிடக் காய்ச்சினும் அதுகொண்டு

     சாரமது ரங்கு றையுமோ?

நிறைபட்ட கதிர்மணி அழுக்கடைந் தாலும் அதின்

     நீள்குணம் மழுங்கி விடுமோ?

  நெருப்பிடை உருக்கினும் அடுக்கினும் தங்கத்தின்

     நிறையுமாற் றுக்கு றையுமோ?

கறைபட்ட பைம்புயல் மறைத்தாலும் அதுகொண்டு

     கதிர்மதி கனம்போ குமோ?

  கற்றபெரி யோர்மகிமை அற்பர் அறிகிலரேனும்

     காசினி தனிற்போ குமோ?

அறிவுற்ற பேரைவிட் டகலாத மூர்த்தியே!

     ஐயனே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

—அறப்பளீசுர சதகம் by  அம்பலவாணர்

****

•             ஆறுகளில் கங்கை

கங்கை நீர், பிருந்தாவனத்துத் தூள் , பூரி ஜகந்நாத க்ஷேத்திரத்தின்  மஹா பிரசாதம் இவை மூன்றையும் சாதாரணமாகக் கருதாதே.  இம்மூன்றும் பரப் பிரும்மத்தின் சொரூபங்களேயாம்- கங்கை பற்றி ராமகிருஷ்ண பரமஹம்சர் .

மேலும் தினமும் பல்லாயிரம்பேர் புனித நீராடுவதாலும்   கும்பமேளாவில் கோடிக் கணக்காணோர் நீராடுவதாலும்  கங்கையே புனிதம் மிக்கது என்று  தெரிகிறது

விரதத்தில் சோமவாரம்

விரதங்களில் சிறந்தது திங்கட்கிழமை விரதம் (சோமவாரம்)

என்று பரஞ்சோதி முனிவர் திருவிளையாடல் புராணத்தில் புகழ்கிறார்

•             நிலத்தில் காஷ்மீரம் !!!!

ஆனால் நிலத்தில் சிறந்தது காஷ்மீர் என்று குருபாத தாசர் சொல்வது புதுமையாக இருக்கிறது காஷ்மீரின் இயற்கை அழகு உலகப் பிரசித்தி பெற்றது தற் காலத்தில் அதை இந்தியாவின் சுவிட்சர்லாந்து என்றெல்லாம் அழைக்கிறார்கள் ஆதிசங்கரர் நிறுவிய ஸ்ரீ நகர், அமர்நாத் குகைக்கோயில் , வைஷ்ணவிதேவி குகைக்கோயில் முதலிய பல புனித இடங்கள் அங்கே உள்ளன ஆனால் குருபாததாசர் நிலங்களில் சிறந்தது என்று சொல்வைத்து வேறு எங்குமில்லாத புதுமையோ புதுமை!

காஷ்மீர் என்றால்  காஸ்யப ரிஷியால் உருவாக்கப்பட்ட ஏரி அல்லது கடல் எனப் பொருள்படும் இது முதலில் நீர்ப்பரப்பாக இருந்ததை நீல மத புராணமும் கல்ஹணர் எழுதிய ராஜ தரங்கிணியும் பாடுகிறது நவீன புவியியல் ஆராய்ச்சியும் இதை உறுதி செய்கிறது; காஷ்மீர் பற்றி வேதத்தில் சொல்லாவிட்டாலும் விதஸ்தா நதியை ரிக் வேதம் குறிப்பிடுவதால்   இது வேத கால வரலாறு உடையது பின்னர் 2700 ஆண்டுகளுக்கு முன்னர் பாணினியும் அவருக்குப் பின்னால் வந்த பதஞ்சலியும் குறிப்பிடுகின்றனர் மஹாபாரத,  ராமாயணத்தில் காஷ்மீர் பிரதேசம் குறிப்பிடப்படுகிறது  இதனால்தான் குருபாத தாசரும் குறிப்பிட்டார் போலும்.  இந்து மன்னர்கள் ஆண்ட இந்த பூமியை முஸ்லீம்கள் 1200  CE வாக்கில் கைப்பற்றினர், காஷ்மீரில் ஆதிசங்கரர் அம்பாளின் பெயரில் ஸ்ரீநகரை உண்டாக்கியதோடு காஷ்மீர் குங்குமப்பூவினையும் ஹர்ஷ மாமன்னனும் ரத்னாவளி நூலில் குறிப்பிடுகிறார்  பின்னர் வராஹமிஹிரர் ப்ருஹத் ஸம்ஹிதாவில் போற்றுகிறார்.

காஷ்மீர் குங்குமப்பூ என்று சம்ஸ்க்ருத நூல்கள் பின்னவருமாறு வருணிக்கின்றன அதன் பெயரிலேயே காஷ்மீர் இருக்கிறது

Kaśmīraja (कश्मीरज).—m., n. saffron; कश्मीरजस्य कटुताऽपि नितान्तरम्या (kaśmīrajasya kaṭutā’pi nitāntaramyā) Bv.1.71. v. l.Derivable forms: kaśmīrajaḥ (कश्मीरजः), kaśmīrajam (कश्मीरजम्).

காஷ்மீரஜா is a Sanskrit compound consisting of the terms kaśmīra and ja (ज). See also (synonyms): காஷ்மீரஜன்மன்

 .

•             தலத்தில் சிதம்பரம்

சைவர்களுக்கு கோவிலென்றால் அது சிதம்பரமே!

பொன்னம்பலத்தில் நடராஜர் ஆடுவதாலும் மூவாயிரம் தீட்சிதர்கள் வாழ்வதாலும் சிதம்பரம் தனி மகிமை பெற்றது இதைப்பாடாத சைவ அடியார்கள் கிடையாது. நந்தனார்,  மாணிக்கவாசகர் அம்பலத்து  ஜோதியில் கலந்த இடம்.

கோயில்புராணம் என்றாலே  சிதம்பரம் பற்றியது என்று பொருள்

நந்தனார் சரித்திரம்

ஒவ்வொருநாளும் நந்தனார் ‘நாளைப் போவோம்’, ‘நாளைப் போவோம்’ என்று சொல்லிக் கொண்டிருந்தனர். இதனால் அவர்க்கு

‘நாளைப்போவார்’ என்றொரு நாமம் உண்டாயிற்று. நந்தனார் பிறகு ஒருநாள் மனத்துணிவோடு தில்லை சென்றனர்.. அப்பொழுது

சிவபெருமான் கோவில் தீட்சதர்கள் கனவில் தோன்றி, ‘பறையர் குலத்துதித்த நமது பக்தன் நந்தன் என்பான் ஒருவன் தன் பிறப்பை நினைந்து வருந்திக் கோபுர வாயிலருகே நிற்கின்றான். அவனை நீங்கள் தீயில் முழுகச் செய்து பிறப்பின் தூசைப் போக்கி, புனித

பிராமணனாக ஏற்றுக்கொள்ளுங்கள்’ என்று கட்டளையிட்டருளினார். .நந்தனார் அதற்கு மிகவும் மனமகிழ்ச்சியோடு ஒப்பித் தீக்குழிவெட்டி அதிற்குளித்தார். அவர் அதினின்றும் எழுந்தபோது முப்புரிநூல் முதலிய பிராமணச் சின்னங்களோடு கூடிய வேதிய வடிவாயிருந்தனர். அதைக் கண்டாரனைவரும் அதிசயித்து

நிற்க, நந்தனார் நடராஜர் திருநடனச் சபையை நாடிச் சென்றார். மற்றோரும் அவரைப் பின் தொடர்ந்து சென்றனர். ஆனால் சிறிதுதூரம் சென்றதும் நந்தனார் அவர்கள் கண்ணுக்கு மறைந்துவிட்டார் என்பது பெரிய புராண செய்தி .

•             ரிஷிகளில் வசிட்டர்

ரிஷிகளில் சிறந்தவர் வசிஷ்டர் என்பதால் அவர் வாயினால் பிரம்மரிஷி பட்டம் பெற க்ஷ்த்திரிய மன்னனான விசுவாமித்திரன் காத்திருந்து பின்னர் வசிஷட்டர்  சொன்னவுடன் பிரம்மா ரிஷி/ பிராமண ரிஷி  பட்டம் பெற்றதை   நாம் அறிவோம் இவர் இயற்றிய அல்லது பாடிய துதிகளும் ரிக்வேதத்தில் உள்ளன.

•             பசுவில் காமதேனு

பசு மாடு புனிதமானது; அதிலும் காமதேனு என்பது விரும்பியது எல்லாவற்றையும் கொடுக்கும். தேவர்களும், அசுரர்களும் அமிர்தம் பெறுவதற்காக பாற்கடலைக் கடைந்தனர். அப்போது பல பொருட்கள் வெளிவந்தன. அவற்றுள் ஒன்றுதான் காமதேனு என்னும் பசு.

•             முனிவரில் நாரதர் 

பக்திக்கு இலக்கணம் நாரதர்; அவர் எழுதிய நாரத பக்தி சூத்திரம் பக்தி பற்றி  விளக்குகிறது. நாரதர் கலகம் நன்மையில் முடியும் என்பது பழமொழி•  

மணிகளில் பதுமராகம்

நவரத்தினங்களில் ஒன்று

•             மலர்களில் தாமரை

தமிழில் மலர் என்னால் தாமரை என்று பொருள். எல்லா இந்துப் பெண் தெய்வங்களுடனும் இணைந்த இந்த மலரை இந்தியா, தேசீய  மலர் ஆக்கியது இன்று நாட்டினை ஆளும் பாரதீய ஜனதாக் கட்சியின் சின்னம்!

•             கற்பினில் அருந்ததி

“அம்மி மிதித்தல், அருந்ததி பார்த்தல்” என்பது தமிழர்களின் திருமணச் சடங்கின் ஒரு பகுதி. இதில் அருந்ததி பார்த்தல் என்பது என்ன?

ஒவ்வொரு மணமக்களும் கல்யாணம் நடந்த அன்று இரவு சாந்தி முஹூர்த்த (முதல் இரவு) அறைக்குள் நுழைவதற்கு முன் கற்புக்கரசி அருந்ததி நட்சத்திரத்தைக் காணவேண்டும். எதற்காக?

“அருந்ததி போல கற்புக்கரசியாக வாழ்” என்று மணமகளுக்குச் சொல்வதற்காக இந்தச் சடங்கு. அது என்ன? பெண்களுக்கு மட்டும்தானா கற்பு? ஆண்களுக்குக் கிடையாதா? என்ற கேள்வி பலர் மனதில் எழும்.

ஆண்களுக்கும் இராம பிரான் போல

“இந்த இப்பிறவியில் சிந்தையாலும் இருமாதரைத் தொடேன்” –

என்ற கற்பு நெறியைத்தான் சான்றோர் வழங்கினர்.

யார் இந்த அருந்ததி?

வடக்கு வானத்தில் ஏழு நட்சத்திரங்களைக் காணலாம். எதிலும் கடவுளைக் காணும் இந்துக்கள் மட்டும் இதை சப்தரிஷி மண்டலம் என்று அழைத்தனர். சப்த என்றால் ஏழு என்று பொருள். அத்ரி, ப்ருகு, குத்ச, வசிஷ்ட, கௌதம, காஸ்யப, ஆங்கிரசர் ஆகிய 7 ரிஷிகள் உலக மக்கள் இனத்தைத் தோற்றுவித்த முதல் எழுவர் ஆவர்.

பிராமணர்கள் நாள்தோறும் மும்முறை செய்யும் அந்திப் பொழுது நீர்க்கடனில் (ஸந்தியா வந்தனம்) இந்த எழுவரையும் தொழுவர். இதை சங்க இலக்கிய நூலான நற்றிணைப் பாடலும் உறுதி செய்யும். தமிழர்கள் அனைவரும் இந்த ஏழு நட்சத்திரங்களையும் தொழுததை நற்றிணை 231 பாடல் வரியில் காணலாம்:–

கைதொழும் மரபின் எழுமீன் போல – (இளநாகனார் பாடியது). பாணினியின் அஷ்டாத்யாயியும் இதே வரிசையில் ஏழு ரிஷிகளை கூறுகிறார்

அருந்ததி என்பவள் கர்தம ரிஷியின் மகள். ஏழு ரிஷிகளில் ஒருவரான வசிட்டனின் மனைவி– உலக மஹா உத்தமி– கற்புக்கு அரசி–

உலகின் முதல் சட்ட நிபுணன் மனு வேறு ஒரு செய்தி சொல்கிறார். “கீழ்ஜாதியில் பிறந்த அக்ஷமாலா வசிஷ்டரின் மனைவியாக ஆகவில்லையா?” — ( மனு ஸ்மிருதி 9-23 ) என்று கூறுகிறார் (கணவன் அந்தஸ்து மூலம் மனைவியும் பெயர் வாங்க முடியும் என்ற தொனியில் கூறியது இது ). மஹாபாரதம் (1-224-27/29) இந்தக் கதையை உறுதி செய்கிறது. எது எப்படியானாலும் அவள் கற்புத் தெய்வம் என்பதில் எல்லோருக்கும் உடன் பாடே.

சங்கத் தமிழ் இலக்கிய நூல்கள் அவர்தம் புகழ் பாடுகின்றன. அதைத் தொடர்ந்து எழுந்த சிலப்பதிகாரம், திரிகடுகம் போன்ற நூல்களும் அருந்ததியின்ன் புகழை விதந்து ஓதுகின்றன. .

சிலப்பதிகாரம் வானளாவப் புகழும் கற்புக்கரசியான கண்ணகியின் பெயர் சங்கத் தமிழ் நூல்களில்  உண்டு.

இதோ தமிழர்கள் வணங்கிய வடக்கத்திப் பெண் அருந்ததி:—

1)“வடமீன் புரையும் கற்பின் மடமொழி அரிவை” (புறநானூறு 122)

மலையமான் திருமுடிக்காரியின் மனைவி பற்றி கபிலர் பாடிய பாடல் இது. உனது மனைவி வடமீன் (அருந்ததி) போன்று (புரையும்) கற்பிற் சிறந்தவள். (மடமொழி அரிவை= இனிய சொற்களை உடைய பெண்).

2)“அருந்ததி அனைய கற்பின் “(ஐங்குறுநூறு 442, பேயனார் பாடிய பாடல்)

3)விசும்பு வழங்கும் மளிருள்ளும் சிறந்த செம்மீன் அனையள் (பதிற்றுப்பத்து 31—27/28)

பொருள்:– வான உலகத்தில் திரியும் தெய்வப் பெண்களில் சிறந்தவளான புகழ்மிகு விண்மீன் அருந்ததிக்கு நிகரானவள்.

எந்தக் கற்புக்கரசியைப் புகழ்ந்தாலும் அவளை இப்படி அருந்ததியோடு ஒப்பிடுதல் தமிழர்தம் மரபு.

4)பெருநல் வானத்து வடவயின் விளங்கும்

சிறுமீன் புரையின் கற்பின் நறுநுதல் (பெரும்பாணாற்றுப்படை 302-303)

5)வடமீன் போல் தொழுதேத்த வயங்கிய கற்பினாள் (கலித்தொகை 2—21)

6)கடவுள் ஒருமீன் சாலினி (பரிபாடல் 5).

7)தீதிலா வடமீனின் திறம் இவள் திறம் (சிலப்பதிகாரம் 1-27)

8)சாலி ஒருமீன் தகையாளை — (சிலப்பதிகாரம்)

9)அங்கண் விசும்பின் அருந்ததி அன்னாளை (சிலப்பதிகாரம்)

சிலப்பதிகாரத்தில் கண்ணகியை வருணிக்கும் இளங்கோ அடிகள், அவளை அருந்ததிக்கு ஒப்பீட்டுப் பாடிய வரிகள் இவை.கம்பனும் வானளாவப் புகழ்ந்துள்ளான்

•             வலிமையில் தென்றல்

•             யானைகளில் ஐராவதம்

இது இந்திரனுடைய யானை

•             தமிழில் அகத்தியம்

தொல்காப்பியத்துக்கும்  முந்திய நூல் அகத்தியம்; நமக்கு அந்த நூல் கிடைக்கவில்லை ஆனால் மேற்கோள்கள் கிடைத்துள்ளன

•             மந்திரத்தில் பிரணவம்

ஓம் என்ற எழுத்தை ஓரெழுத்து, ஊமைஎழுத்து ,பிரணவம் என்றெல்லாம் சொல்லுவார்கள்

இவ்வுலகிற்கு தகப்பனும் தாயும்  தாங்குபவனும் பாட்டனும், கற்றுணரத்தக்கவனும் பரிசுத்தமளிப்பவனும், ஓம்காரப்பொருளும் அவ்வறே ருக், யஜுர், சாம வேதங்களும் நானே- பகவத் கீதை 9-17

குந்தீபுத்ரனே!நான் நீரில் சுவையும் சந்திர சூரியர்களிடத்தில் ஒளியும் வேதங்களனைத்துள்ளும் ப்ரணவமாகவும்(ஓம்), ஆகாயத்தில் சப்தமும், மனிதர்களுள் ஆண்மையும் ஆகின்றேன் -பகவத் கீதை 7-8

****

 ஊமையெழுத்தே உடலாச்சு – மற்றும்

ஓமென்றெழுத்தே உயிராச்சு

ஆமிந்தெழுத்தை யறிந்துகொண்டு விளை

யாடிக் கும்மியடியுங்கடி–கொங்கண நாயனார்

****

ஓம்கார ஒலியிலிருந்துதான் உலகமே தோன்றியது என்பதை திருமூலரும் திருமந்திரத்தில் பா டுகிறார்

ஓம்காரத்து உள்ளே உதித்த ஐம்பூதங்கள்

ஓம்காரத்து உள்ளே உதித்த சராசரம்

ஓம்கார தீதத்து உயிர் மூன்றும் உற்றன

ஓம்கார சீவ பரசிவ ரூபமே –திருமந்திரம் 2628

•             கடலில் பாற்கடல்

பாற்கடலைக் கடைந்ததால் அமிர்தம் கிடைத்தது; மைத்ததை உண்டதால்தான் தேவர்கள் சாகா வரம் பெற்றனர் இன்றும் எந்தப்பொருள் ருசியாக இருந்தாலும் அமிர்தம் போல இருக்கிறது என்று நாம் சொல்கிறோம்

பாற்கடலைக் கடைந்தபோது ௧௪ ரத்தினங்களை வந்தன 14 “ரத்தினங்கள்:

சந்திரன் (சோம, நிலவு)

வாருணி ( கள், சுரா பானத்தின் அதிபதி)

உச்சைஸ்ரவஸ் என்னும் குதிரை

ஐராவதம் என்னும் யானை

காம தேனு என்னும் பசு/சுரபி

பாரிஜாதம் – மரம்

கற்பக விருக்ஷம் – மரம்

கௌஸ்துப மணி

குடை

காதுகளுக்கான தோடு

அப்சரஸ் – தேவலோக அழகிகள்

சங்கு

லெட்சுமி – செல்வத்தின் அதி தேவதை

ஜ்யேஷ்டா- மூதேவி; நித்திரை, சோம்பேறித்தனம் ஆகியவற்றின் கடவுள்

தன்வந்திரி – டாக்டர்

காலகூட விஷம்

அமிர்தம்

எந்த ஒரு செயலிலும் நல்லதோடு கெட்டதும் வரும்; நாம் நல்லதை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதே இது புகட்டும் நீதி.

•             மலைகளில் மேருமலை

மலைகளில் உயர்ந்தது மட்டுமல்ல மேரு அங்குதான் தேவி வசிக்கிறாள் பிராமர்களும் புரோகிதர்களும் பூஜைகளைத்துவங்கும் முன்னாள் சொல்லும் சங்கல்ப மந்திரத்தில் மேரு மலைக்கு எந்தப்பக்கம் இருந்து அதைச் செய்கிறோம் என்று இன்றும் சொல்கிர்சர்கள் கிறார்  

ஆகியவை தன் இனத்தில் தான் உயர்வு.

—SUBHAM—

Tags- இனத்தில் உயர்வு., காஷ்மீர் , குமரேச சதகம் , குருபாததாசர், காமதேனு, மேரு, பாற்கடல், அருந்ததி, வசிட்டர், நாரதர் , பிரணவம், ஓம்காரம் குங்குமப்பூசிதம்பரம், கங்கை, சந்தனம்

S Nagarajan Article Index May 2025 (Post No.14,589)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,589

Date uploaded in London – –4 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

1—5-25 14457 துக்காராம் மஹராஜ் – 2 (ஞானமயம் 27-4-25 ஒளிபரப்பு

             உரை)

2-5-25 14461 இகிகை! வாழ்வாங்கு வாழ உதவும் கை! (kalkionline 26-3-25

             கட்டுரை)

3-5-25 14465 உலகின் அதிசய இடங்கள்! கோரோங்கோரோ எரிமலை

           வாய்!

4-5-25 14469 அவர்கள் நடந்து வந்த பாதை; சொல்லும் கீதை!

5-5-25 14473 S Nagarajan Article Index April 2025

5-5-25 14474 4-5-2025 ஆலயம் அறிவோம்! – திருக்கோகர்ணம் (4-5-25

             ஞானமயம் உரை)

6-5-25 14477 யூனிபார்மில் சிவப்புக் கறைகள் இருக்கலாமா? (kalkionline 27-3-

           25 சிறுகதை)

7-5-25 14482 இலந்தை உடலுக்குத் தரும் நன்மைகள்! (kalkionline 28-3-

           25 சிறுகதை)

8-5-25 14487 வெற்றி பெற மோடிவேஷன்! (உணர்வூக்கம்!)  தேவை 

             (kalkionline 26-3-25 கட்டுரை)

9-5-25 14491 சூஃபி துறவி வசாலி! ராமரின் பக்தர்!(kalkionline 29-3-25

                          கட்டுரை).                                                                                                             10-5-25 14494 காலத்தை ஊடுருவி ஒரு பயணம் போகலாமா, சார்?!! 

11-5-25 14498 ட்ரோன் ஃபைட்! (kalkionline 31-3-25 சிறுகதை)

12-5-25 14502 கச்சியப்ப சிவாசாரிய சுவாமிகள் – 1 (ஞானமயம் 11-5-25

            உரை)

12-5-25 14503 ஆலயம் அறிவோம் – திருச்சிராப்பள்ளி (ஞானமயம் 11-5-25

           உரை)

13-5-25 14507 கச்சியப்ப சிவாசாரிய சுவாமிகள் – 2 (ஞானமயம் 11-5-25

            உரை)

14-5-25 14512 வித்தியாசமான நடிகை மரிலு ஹென்னர்! (kalkionline 2-4-25

             கட்டுரை)

15-5-25 14515 கோலாகலமான கோவள குதூகலம்!   (12-4-25 மாலைமலர்

              கட்டுரை)

16-5-25 14519 மனதை மயக்கும் மைசூர் (மாலைமலர் 19-4-25 கட்டுரை)

17-5-25 14522 வியப்பில் ஆழ்த்தும் விசாகப்பட்டினம் (மாலைமலர் 26-4-25

            கட்டுரை)

18-5-25 1452ஒடிஸாவில் காணலாம் இந்திய பொக்கிஷம்! (மாலைமலர்  

                                 3-5-25 கட்டுரை)

19-5-25 14529 அஸ்ஸாமின் எழில்மிகு பாரம்பரிய\ 

             இடங்கள்!   (மாலைமலர் 10-5-25 கட்டுரை)

19-5-25 14530 ஆலயம் அறிவோம் – திருநாகைக்காரோணம் (ஞானமயம்

            18-5-25 உரை)

20-5-25 14534 அமைதியின் உறைவிடம் பீஹார்! மாலைமலர்  

                                 17-5-25 கட்டுரை)

21-5-25 14538 அமெரிக்க டாக்டர்களை வியக்க வைத்த தலாய்லாமாவின்

            பிரத்யேக வைத்தியர்! (kalkionline 2-4-25 கட்டுரை)

22-5-25 14542 சர்ட்ஸீ: கடலிலிருந்து வெடித்த எரிமலையால் உண்டான   

           தீவு! (Surtsey island)  (கல்கிஆன் லைன் கட்டுரை)

23-5-25 14545  ஆயுர்வேதத்தை அங்கீகரிக்கும் ஆய்வு! (மே 2025

                             ஹெல்த்கேர் இதழில் வெளியாகியள்ள கட்டுரை!)

24-5-25 14549 ராம ரஹஸ்ய உபநிஷத் கூறும் ஶ்ரீ ராமரின் ரகசியம்! 

                              (kalkionline 5-4-25 கட்டுரை)

25-5-25 14551 எப்படி சாப்பிட வேண்டும்? ஆயுர்வேதம் தரும் அறி உரை

            (kalkionline 5-4-25 கட்டுரை)

26-5-25 14555 அதிசயிக்க வைக்கும் ஐஸ் மனிதன் விம் ஹாஃப்

              (kalkionline 6-4-25 கட்டுரை)

27-5-25 14557 உலகின் கூரிய விழியாள் வெரோனிகா.

                             செய்டர்!     (kalkionline 7-4-25 கட்டுரை)

28-5-25 14560 மன அழுத்த பாதிப்பா? சமாளிப்பது எப்படி? ! (kalkionline 10-4-25

                            கட்டுரை)

29-5-25 14563 நாரதரை நாராயணர் கேட்ட கேள்வி! ! (kalkionline 11-4-25

                             கட்டுரை)

30-5-25 145667உடும்புப் பிடி பிடிக்கலாமே   உபுண்டு                        

               (Ubuntu) கொள்கையை(kalkionline 11-4-25 கட்டுரை)

31-5-25 14572 பாம்பிடமிருந்து பக்தரைக் காத்த ஷீர்டி

                            சாயிபாபா!          (kalkionline 11-4-25 கட்டுரை)

**

Pictures of 2500 Indian Stamps!- Part 51 (Post No.14,588)

Written by London Swaminathan

Post No. 14,588

Date uploaded in London –  3 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

PART 51

Stamps posted today include YEAR 1997, YEAR 1998 STAMPS,

Pictures of 2500 Indian Stamps, PART 51, 

ARUNA ASAF ALI, SAVITRIBAI  PHULE, DR ZAHIR HUSSAIN, M A KHAN, SHIVPUJAN SAHAI, VIJAYARAGAVACHARIAR, LOKANAYAK OMEO KUMAR DAS,  BHAGAWAN GOPINATH JI, SRI RAMANA MAHARISHI, GODREJ CENTENARY, SARDAR VEDARATNAM, N G GORAY, GOSTHA PAUL, FOOT BALL STAMP,  MA SAHIB, 

MARTYR DAY, DEFENCE OLLEGE, OWL SYMBOL, GOLDEN JUBILEE OF INTERNATIONAL FLIGHT, KONKAN RAILWAY, RADIOLOGY CONGRESS, GLOBAL ENVIRONMENT QUALITY, FOURTH BATTALION BRIGADE, HOMAGE TO MARTYRS,YOUTH HOSTELS ASSOCIATION, NATIONAL SAVINGS, HUMAN RIGHTS DECLARATION, 

–subham—

Tags- Stamps posted today include YEAR 1997, YEAR 1998 STAMPS,

Pictures of 2500 Indian Stamps, PART 51, ARUNA ASAF ALI, SAVITRIBAI  PHULE, DR ZAHIR HUSSAIN, M A KHAN, SHIVPUJAN SAHAI, VIJAYARAGAVACHARIAR, LOKANAYAK OMEO KUMAR DAS,  BHAGAWAN GOPINATH JI, SRI RAMANA MAHARISHI, GODREJ CENTENARY, SARDAR VEDARATNAM, N G GORAY, GOSTHA PAUL, FOOT BALL STAMP,  MA SAHIB, 

MARTYR DAY, DEFENCE OLLEGE, OWL SYMBOL, GOLDEN JUBILEE OF INTERNATIONAL FLIGHT, KONKAN RAILWAY, RADIOLOGY CONGRESS, GLOBAL ENVIRONMENT QUALITY, FOURTH BATTALION BRIGADE, HOMAGE TO MARTYRS,YOUTH HOSTELS ASSOCIATION, NATIONAL SAVINGS, HUMAN RIGHTS DECLARATION.