London Swaminathan’s Article Index for December 2025 Index No.157 (Post No.15,330)



London Swaminathan in 10 Downing Street, London

Written by London Swaminathan

Post No. 15,330

Date uploaded in London –  1 January 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Ancient Tamil Encyclopaedia -Part 37; One Thousand Interesting Facts -Part 37 (Post No.15,232) 1/12/25

To

Ancient Tamil Encyclopaedia -Part 40; One Thousand Interesting Facts -Part 40  (Post.15,256) 9/12

***

Purananuru (Tamil Sangam Book) Wonders- 1 (Post No.15,270) 13/12

Purananuru (Tamil Sangam Book) wonders -2; Upanishad and Kalidasa in verse Two! (Post.15,278) 16/12

Purananuru (Tamil Sangam Book) wonders -3 (Post No.15,291) 20/12

Purananuru Wonders 4- Ancient Tamil EncyclopaediaPart 44 (Post.15,300) 23/12

Purananuru Wonders 5- Ancient Tamil Encyclopaedia Part 45 (Post No.15,314)27/12

***

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL-22; இந்துமத கலைச்சொல் அகராதி-22 (Post No.15,235)

To

23,24, 25, 26, 27

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL-28; இந்துமத கலைச்சொல் அகராதி-28  (Post No.15,317) 28/12

***

Hinduism through 500 Pictures in Tamil and English-29; படங்கள் மூலம் இந்து மதம் கற்போம்- 29 (2/12)

To

30,31,32, 33, 34,35,36

Hinduism through 500 Pictures in Tamil and English-37; படங்கள் மூலம் இந்து மதம் கற்போம்-36 (Post.15,324) 30/12

***

Music is a universal language: Alvar and Nayanmar proved it! (Post No.15,241) 4/12

Tamil Writer Jeyamohan plans Two Conferences in the West to bring together South Indian Writers (Post.15,250)7/12

Beautiful Names for Girls from Lalitha Sahasranamam (Post No.15,275) 15/12

Vaishnavite Saint’s Warning about Naming Children!(Post No.15,269) 13/12

Who coined the words, Bhava Sagaram? and Samsara Sagaram? (Post No.15,260) 10/12

Tamil Poet Arunagirinathar used History sheeter in his poems! (Post No.15,282) 17/12

List of Eleven Gundas/ Rowdies who fall into Hell: Arunagirinathar (Post.15,263) 11/12

London Swaminathan’s Article Index for November 2025 Index No.156  (Post No.15,237) 3/12

GNANAMAYAM 7 December 2025 BROADCAST PROGRAMME

7,14,21,28/12

January 2026 Calendar- Adi Shankara’s Q and A (Last Part ) – Post No.15,310 (26/12)

***

NEWSPAPER ITEMS

Hindu God of Environment 8/12

Who is Vedamurti Devavrat Mahesh Rekhe? 19-Year-Old Vedic Scholar whom PM Modi praised for… 2/12

***

TAMIL ARTICLES

London Swaminathan in Stonehenge, England, UK

‘அகர முதல் 51 அக்ஷரம்’ :அருணகிரி தரும் சுவையான செய்திகள் (Post.15,303) 24/12

ஆண்டாளைத் தோற்கடித்த சம்பந்தர்!  தாவர இயலில் முதல் பரிசு யாருக்கு? (Post.15,290)20/12

கடவுளிடம் அருணகிரிநாதர், பாரதி வள்ளலார் கேட்டது என்ன,என்ன?(Post.15,287)19/12

கண்ட பெயர்களை குழந்தைகளுக்குச் சூட்டாதீர்கள்: பெரியாழ்வார் எச்சரிக்கை (Post.15,268) 13/12
பகவத் கீதையிலிருந்து உத்வேகம் பெற்ற வள்ளுவர்! பிறவிப் பெருங்கடல்/சம்சார சாகரம்!! (Post.15,259) 10/12

தந்த உலக்கையும், உரலில் ரத்தினைக் கற்களும்! அருணகிரிநாதர் காட்டும் காட்சி!! (Post.15,272) 14/12

திருப்புகழில் தொல்காப்பிய பொருள் அதிகாரம்? (Post No.15,306)25/12

திருப்புகழில் மெட்றாஸ்காரன் வசவு- கஸ்மாலம் (Post No.15,257)9/12

திருப்புகழ் பாடலில் ரிஷி, முனிவர்கள்!

ஒரே பாட்டில் ஐந்து பெரியோர்கள்!! (Post.15238)3/12

நாயாகப் பிறக்கும் 11 துஷ்டர்கள்; திருப்புகழ் சொல்லும் அதிசய விஷயம்! (Post.15,281)17/12

பதினோரு குண்டர்கள் யார்? அருணகிரி நாதர் பட்டியல் !! (Post .15,265) 12/12

பாரதியும், லலிதா சஹஸ்ர நாமமும்! (Post No.15,262) 11/12

பெரியாழ்வார் கோபமும் கிண்டலும் (Post.15,249) 7/12

மனு நீதி சாஸ்திரம் பற்றி அருணகிரிநாதர் தரும் புதிய தகவல்! (Post No.15,301) 21/12

மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் திருவள்ளுவன்! (Post No.15,293) 21/12

மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்: பெரியாழ்வார், எம் ஜி ஆர் , அருணகிரிநாதர் பாடல்கள்! (Post.15,277)16/12

மந்திரத் தகடுகள் பற்றி அருணகிரி எச்சரிக்கை (Post No.15,311) 26/12

ஜனவரி காலண்டர் 2026- ஆதி சங்கரரின் பொன்மொழிகள் (Post.15,309) 26/12/2025

வள்ளுவரைத் தோற்கடித்தார் அருணகிரி! தமிழிலேயே பெரிய எண் நூறு லக்ஷம்கோடி! (Post.15,313) 27/12

திருப்புகழில் பத்திரிகை பெயர்கள்: தினமணி , தினகரன்,  குமுதம்,  தந்தி, மலர்! (Post No.15,316) 28/12

சம்ஸ்க்ருதத்தில் ‘ழ’ கரம் உண்டு -பெளழியம் (Post 15,323) 30/12

திருப்புகழில் இலக்கணம், இலக்கியம், அகத்தியர் ! (Post No.15,326) 31/12/25

Gnanamayam 28-12-2025 Picture

—subham—

Tags- London Swaminathan’s Article Index for December 2025 Index No.157 

S Nagarajan Articles index for DECEMBER 2025 (Post No.15,329)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,329

Date uploaded in London – 1 January 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

S Nagarajan Articles index DECEMBER 2025

1-12-25 15231 S Nagarajan Articles index NOVEMBER 2025 

2-12-25 15233 அபாயமான தீவிரவாதிகளின்  கூட்டம்! ஹிந்துக்களுக்கு

                                விழிப்புணர்வு தேவை – 2

3-12-25 15236 அபாயமான தீவிரவாதிகளின்  கூட்டம்! ஹிந்துக்களுக்கு

                                விழிப்புணர்வு தேவை – 2

4-12-25 15239 விண்வெளிப் பயணத்தில் ஒரு புதிய புரட்சி! ஆர்டிபிஷியல்

            அஸ்ட்ரானட்ஸ் இனி பறப்பார்கள்!! (கல்கிஆன்லைன்

            கட்டுரை)

5-12-25 15242 அபாயமான தீவிரவாதிகளின்  கூட்டம்! ஹிந்துக்களுக்கு

                                விழிப்புணர்வு தேவை – 3

6-12-25 15245 மூளை இயக்கம் ஊக்கம் பெற சில சின்ன வழிகள் (16-9-25

            கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை)

7-12-25 15248 வாகரேவாரேவா!   (WHAKAREWAREWA) – உலகின் அதிசய

              வெந்நீர் ஊற்றுக்களும், புவி வெப்ப ஊற்றுக்களும்!  

              (கல்கி ஆன் லைன் 18-9-25 கட்டுரை)

8-12-25 15251 மூளைக்கும் பிரார்த்தனைக்கும் உள்ள தொடர்பை

            நிரூபித்து பிரசாரம் செய்யும் அதிசய டாக்டர் ஆர்லீன்

            டெய்லர்!  (கல்கி ஆன் லைன் 22-9-25 கட்டுரை)

8-12-25 15252 ஆலயம் அறிவோம்! கீழ் வேளூர் தலம்!! (ஞானமயம்

            7-12-25 ஒளிபரப்பு உரை)

9-12-25 15255 சித்தர்களின் அஷ்டமா சித்திகள்! நிஜமாகவே

           சாத்தியமா? பிரெஞ்சுக்காரர் நேரில் கண்ட அற்புதம்! (3-10-25

           கல்கிஆன்லைன் கட்டுரை)

10-12-25 15258 அமரர் திரு சந்தானம் சீனிவாசன் அவர்களுக்கு அஞ்சலி!

11-12-25 15261 மகாகவி பாரதியார் – சில கருத்துக்கள்!

12-12-25 15265 உடலையும் உள்ளத்தையும் சுத்தமாக்க மிஸோகி (24-9-25

              கல்கிஆன்லைன் இதழ் கட்டுரை)

13-12-25 15267 சமீபத்திலே ஏதாவது டீ கேட்டயா? க்ளாக் இட்! (19-9-25

             கல்கிஆன்லைன் இதழ் கட்டுரை)

14-12-25 15271 விண்வெளி அதிர்ச்சியும் ஆச்சரியமும்! (27-9-25

             கல்கிஆன்லைன் இதழ் கட்டுரை)

15-12-25 15272 ஊத்துக்காடு வேங்கடகவி! (14-12-25 ஞானமயம்

             நிகழ்ச்சியில் ஒளிபரப்பான உரை)

15-12-25 15273 ஆலயம் அறிவோம்! மதுரை கூடலழகர் பெருமாள்

             கோவில் (14-12-25 ஞானமயம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பான

              உரை)

16-12-25 15276 AI -இந்த வார ட்ரெண்டிங் டாபிக்ஸ் என்ன? (25-9-25

              கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை!)

17-12-25 15279 ரிஷியின் விலை மதிப்பு எவ்வளவு? ஶ்ரீ சத்யசாயிபாபா

            கூறிய. கதை (810-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான

            கட்டுரை!)

18-12-25 15283 டைட்டானிக் விபத்தும் அது பற்றி எடுக்கப்பட்ட

             படத்திற்கு ஏற்பட்ட விபத்தும்! (249-25 கல்கிஆன்லைன்

             இதழில் வெளியான கட்டுரை!)

19-12-25 15286 சுனேய் பூலோ (SUNGEI BULOH WETLAND RESERVE)  சதுப்பு

             நிலம்  – சிங்கப்பூர் அதிசயம்! (7-10-25 கல்கிஆன்லைன்

            இதழில் வெளியான கட்டுரை!)

20-12-25 15289 ஜாக்கிரதை! பரபரப்பு செய்யும் மாய வேலைகள்!!

21-12-25 15292 மேலை நாடுகளின் புரட்டு வாதங்கள் – 1

21-12-25 15295 ஆலயம் அறிவோம் – திருவல்லம் (ஞானமயம் 21-12-25

            ஒளிபரப்பு உரை)

22-12-25 15296 மேலை நாடுகளின் புரட்டு வாதங்கள் – 2

23-12-25 15299 ஷீர்டி சாயிபாபாவுக்கு வந்த கோர்ட் சம்மன்! (4-10-25

             கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை!)

24-12-25 15302 வெற்றிக்கான இருபது குணங்களைக் காட்டும்

            சிங்கம், கொக்கு, சேவல்,காக்கை, நாய், கழுதை!

25-12-25 15305 ஒரு காலை இழந்த மங்கை எவரெஸ்ட் சிகரம் ஏறிப்

             படைத்த சாதனை! (6-10-25 கல்கிஆன்லைன் இதழ்

             கட்டுரை)

26-12-25 15308 தமிழர் நிச்சயம் படிக்க வேண்டிய நூல் (31-10-25 

             கல்கிஆன்லைன் இதழ் கட்டுரை)

27-12-25 15312 விண்வெளி ஆதிக்கத்தில் சீனா முந்துகிறதா? (9-10-25 

             கல்கிஆன்லைன் இதழ் கட்டுரை)

28-12-25 15315 இதய வியாதிகளைப் போக்கும் பாமுக்கலே வெந்நீர்

              ஊற்றுக்கள்!           (PAMUKKALE SPRINGS) (14-10-25           

             கல்கிஆன்லைன் இதழ் கட்டுரை)

29-12-25 15318 ஆலயம் அறிவோம் – திருநீர்மலை (ஞானமயம் 28-12-25

            நிகழ்ச்சியில் ஒளிபரப்பான உரை)

29-12-25 15319 பரமஹம்ஸ யோகானந்தா (ஞானமயம் 28-12-25 அன்று

             இடம் பெற்ற உரை)

30-12-25 15322 ஒரு கடிதம் புதுப்பித்த மூளை (டிசம்பர் 2025 ஹெல்த்கேர்

             இதழில் வெளியான கட்டுரை)

31-12-25 15325 மலேரியாவுக்கான மருந்து குயினைன் ஒரு தற்செயல்

             கண்டுபிடிப்பு தான்! (14-10-25 கல்கிஆன்லைன் இதழ்

              கட்டுரை)

***

தலையைச் சிரைக்கும் தண்டனைகள்: ஆழ்வார் தரும் சுவையான செய்தி (Post.15,328)

Written by London Swaminathan

Post No. 15,328

Date uploaded in London –  1 January 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

ஆண்களிடம் பெண்கள் சேட்டை செய்தால் மூக்கினை அறுத்து விடுவார்கள் ; எடுத்துக் காட்டு- சூர்ப்பனகை கதை.. பெண்களிடம் ஆண்கள் , சேட்டை செய்தால் உடம்பு முழுதும் அசிங்கமான குறிகளை பச்சை குத்தி விடுவார்கள்; உதாரணம் – இந்திரன் உடம்பில் ஆயிரம் கண்கள் – கண்ணாயிரம் .

பொதுவான சேட்டைகளுக்கு தலையைச் சிரைத்து மொட்டையடித்து எண்ணெய் தடவி கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி கழுத்தை மீது வைத்து ஊர்வலம் விடுவார்கள்; எடுத்துக்காட்டு  – சேர மன்னன், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், யவனர்களைப்பிடித்து மொட்டையடித்து கைகளைப் பின்னால் கட்டி எண்ணெய் தடவினான் ; இது பதிற்றுப்பத்து என்னும் சங்க நூலில் உளது

****

3.9.3 உருப்பிணி நங்கையைத் தேர்

உருப்பிணி நங்கையைத் தேர் ஏற்றிக் கொண்டு,

விருப்புற்று அங்கே விரைந்து எதிர் வந்து,

 செருக்குற்றான் வீரம் சிதைய தலையைச்

சிரைத்திட்டான் வன்மையைப் பாடிப்பற

தேவகி சிங்கத்தைப் பாடிப்பற.

பெரியாழ்வார் திருமொழி 3.9.3

ருக்மிணிப்பிராட்டியை தேரிலே ஏற்றிக்கொண்டு போகும்பொது, எதிர் நின்ற ருக்மனுடைய வீரியம் அழியும்படி தலையைச் சிரைத்து விட்டவனுடைய வன்மையை பாடிப்பற, தேவகி வயிற்றில் பிறந்து சிங்கம் போன்ற வீரம்   உடையவனை பாடிப்பற

விதர்ப்ப தேசத்தில் குண்டினி என்கிற பட்டணத்தில் பீஷ்மகன் என்கிற ஒரு அரசனுக்கு ருக்மன் முதலிய ஐந்து பிள்ளைகளும் ருக்மிணி என்கிற ஒரு பெண்ணும் இருந்தனர். அந்த ருக்மிணி ஸ்ரீமஹாலக்ஷ்மியின் அவதாரம்; அவள் திருமண வயது வந்தவுடன், கண்ணன் அங்கு சென்று இந்த பெண்ணை எனக்குத் திருமணம் செய்து கொடுங்கள் என்று கேட்டான்; ருக்மன் என்ற அவளது சகோதரன் அவளைச் சிசுபாலனுக்குக் கொடுக்க நினைத்துக் கண்ணனுக்குக் கொடுக்க முடியாதென்று சொன்னான். சிலநாள் கழிந்தபின் ருக்மிணியின் கல்யாணத்துக்காக சுயம்வரம் என்று முடிவு செய்து எல்லா தேசத்து அரசர்களையும் வரவழைத்தான்.

இதன் இடையில் ருக்மிணி “தன்னை எவ்வகையினாலும் மணந்து செல்லும்படி கண்ணனிடத்து ஒர் அந்தணனைத் தூது விட்டிருந்தாள். கண்ணனும் அப்படியே பலராமன் முதலியோரைக் கூட்டிக் கொண்டு அந்த பட்டணத்திற்கு எழுந்தருளினான். கல்யாண முஹுர்த்த தினத்துக்கு முதல்நாள் ருக்மிணியைத் எடுத்துத் தேரில் ஏற்றிக் கொண்டு ஊர் நோக்கிப் புறப்பட்டான். சிசுபாலன் முதலிய சில அரசர்கள் கண்ணனை எதிர்த்துப் போர் செய்ய முயல பலராமனும் தானுமாக அவர்களை அடக்கி வென்று ஓட்டி விட்டான்.

பின்பு ருக்மிணியின் தமையனான ருக்மன் மிகவும் ஆத்திரப்பட்டு கண்ணனைக் கொல்ல வந்தபோது, அவனைக் கண்ணன் ருக்மினியின் வேண்டுதலின் படி உயிர்க் கொலை செய்யாமல் அவனது மீசையையும், குடுமியையும் சிரைத்து  அவமானப் படுத்திவிட்டான்

My Old Article

மொட்டையும் குடுமியும்

எழுதியவர் லண்டன் சுவாமிநாதன்

கட்டுரை எண். 835 தேதி 12-02-14

ஆதி காலத்தில் இந்து, புத்த, சமண மதத்தில் மிகுந்த ஈடுபாடுடையோர் வெளிச் சின்னங்கள் மூலம் அதைக் காட்டினர். காவி உடை, மஞ்சள் உடை, வெள்ளாடை இப்படி வெளிப்புறத்திலும் நெற்றியில் விபூதி, குங்குமம், சந்தனம், கோபி, நாமம் இப்படிப் பல சின்னங்களாலும் யார் என்பதைக் காட்டினர். இது போலவே தலை முடி விஷயத்திலும் பல பாணிகள் (ஸ்டைல்) நிலவின. முன் குடுமி, பின் குடுமி, மொட்டை (பௌத்தர்), மயிர் ஒவ்வொன்றாக பறித்து மொட்டையாகுதல் (சமணர்) என்று பல வகைகள் இருந்தன. முற்றிலும் உணர்ந்த ஞானிகள் இந்த வெளி வேஷத்தைப் பொருட்படுத்தாமல் தத்துவங்களில் மட்டுமே நம்பிக்கை வைத்தனர். ஏனெனில் காலப்போக்கில் இது எல்லாம் ஏமாற்றும் பேர்வழிகளுக்கு வசதியாகப் போயின.

வள்ளுவர், ஆதிசங்கரர், புத்தர், திருமூலர் ஆகிய எல்லோரும் இதில் ஒருமித்த கருத்து வைத்திருப்பது வியப்பளிக்கிறது.இவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு காலகட்டங்களில், இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் வசித்தவர்கள்.

***

1400 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தை ஆண்ட மஹேந்திர பல்லவ மன்னன் சம்ஸ்கிருதத்தில் ஒரு நகைச்சுவை நாடகம் எழுதி இருக்கிறான். மத்தவிலாசப்ரஹசனம் என்ற அந்த நாடகத்தில் இந்து, புத்த, ஜைன (சமண) மத போலி சந்யாசிகளைக் கிண்டல் செய்துள்ளான். சங்க்ரரின் பஜகோவிந்தத்தில் சொல்லும் விஷயம், மஹேந்திர வர்மன் நேரில் கண்ட காட்சியுடன் இணைகிறது!

முடி விஷயத்தில் பல வகையான ‘ஸ்டைல்கள்’ வேத காலம் முதலே இருந்திருக்கின்றன. ஏதோ இந்தக் காலத்தில் ரவிவர்மா வரைந்த படங்களில்தான் சிவனுக்கு மீசை, விஷ்ணுவுக்கு மீசை இல்லை என்று நினைத்துவிட வேண்டாம். சிவபெருமானை வருணிக்கும் யஜூர் வேத ருத்ரம்/சமகத்தில் சிவனை மொட்டையன் என்றும் நீண்ட சடையன் என்றும் போற்றுகின்றனர்.

நீண்ட சடையன் (கபர்தீன்)

வ்யுப்தகேச (முண்டம்/ மழித்த) – ருத்ரம் (யஜூர் வேதம்)

வைத்தால் குடுமி சிரைத்தால் மொட்டை என்ற தமிழ்ப் பழமொழி இந்த ருத்ர மந்திரத்தில் இருந்துதான் வந்ததோ என்னவோ!

***

வள்ளுவர் கூறுகிறார்:

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்

பழித்தது ஒழித்துவிடின் – (குறள் 280)

பொருள்: தவம் செய்வாருக்கு மொட்டை அடித்துக் கொள்வதும் சடை முடி வளர்த்தலும் தேவை இல்லை உலகத்தார் எதையெல்லாம் பழிக்கிறார்களோ அத்தகைய தீய வழக்கங்களை விட்டாலே போதும்.

***

சங்கரரும் சாடுகிறார் 

தத்துவ வித்தகர் ஆதி சங்கரர் பஜ கோவிந்தம் என்ற அருமையான துதிப்பாடலில் இதை அழகாக வருணிக்கிறார். இந்தப் பாட்டை அவரது சீடர் தோடகர் பாடியதாகச் சொல்லுவர்.:

“ஜடிலோ முண்டி லுஞ்சித கேச :

காஷாயாம்(அ)ம்பர பஹுக்ருத வேஷ :

பஸ்யன் அபி ச ந பஸ்யதி மூட:

ஹ்யுதரநிமித்தம் பஹுக்ருத வேஷ :”

—பஜகோவிந்தம்

( : இவ்வாறு இரண்டு புள்ளி இருக்கும் இடத்தில் ஹ என்று உச்சரிக்கவும்.எ.கா. வேஷஹ, கேசஹ, மூடஹ).

பொருள்: ஒருவன் சடை முடியுடன் இருக்கிறான். மற்றொருவனோ மொட்டைத் தலையன். இன்னும் ஒருவன் ஒவ்வொரு முடியாகப் பிடுங்கிவிட்டான். இன்னொருவன் காவி உடையில் வலம் வருகிறான். இந்த மூடர்கள் கண் இருந்தும் குருடர்கள். இந்த வெளி வேஷம் எல்லாம் வயிற்றுப் பிழைப்புக்குத்தான்.

எவ்வளவு பெரிய உண்மையை எவ்வளவு அழகாகச் சொல்லிவிட்டார் தோடகர்.

***

திருமூலரின் திருமந்திரம் 

நூலும் சிகையும் நுவலில் பிரமமோ

நூலது கார்ப்பாசம் நுண்சிகை கேசமாம்

நூலது வேதாந்தம் நுண்சிகை ஞானமாம்

நூலது அந்தணர் காணும் நுவலிலே

பூணூலும் உச்சுக்குடுமியும் தரித்திருக்கும் எல்லா பிராமணர்களையும் பிரம்மத்தை அறிந்தவர்கள் என்று எண்ண முடியுமா? நூல் என்பது வெறும் பருத்தி நூல்தானே, சிகை என்பது வெறும் முடிதானே. உண்மையில் நூல் என்பது வேதாந்த நூலறிவு. நுண் சிகை ஞானம் என்பது இடகலை, பிங்கலை, சுழுமுனை ஆகிய 3 நாடிகளின் தன்மை அறிந்து, பிரம நாடி சிறக்க தலை உச்சியில் ஞானம் உண்டாவதே. இதுவே அந்தணர் கடைப்பிடிக்க வேண்டிய முறை—என்பார் திருமூலர்.

புத்தர் பேருரை

நீண்ட முடியும் சிகையும் வைத்திருப்பதாலோ, பிராமண குடும்பத்தில் பிறந்ததாலோ ஒருவன் பிராமணன் ஆகிவிடமாட்டான். எவனிடத்தில் சத்யமும் புனிதமும் இருக்கிறதோ அவனே பிராமணன். அவன் ஆனந்தக் கடலில் மிதப்பான் என்று தம்மபதத்தில் (393) புத்தபிரானும் கூறுகிறார்.

புத்தரும் தனது மதத்தினரின் வெளி வேஷங்களை அபோழுதே கண்டித்துள்ளார். அவரது மதம் எப்படித் தேய்ந்துபோகும் என்பதை அவர் பிரதம சீடரான ஆனந்தனுடன் நடத்திய சம்பாஷணையில் கூறினார். அவர் இறந்தவுடன் நடந்த மூன்று மஹா நாடுகளில் வாதப் பிரதிவாதங்கள் விண்ணைப் பிளந்தன. பெண்களைக் கட்டாயம் புத்த மதத்தில் சேர்க்கவேண்டும் என்று ஆனந்தன் மன்றாடியபோது, 1000 ஆண்டுகள் நிலைக்கக்கூடிய என்னுடைய மதம், பெண்களை (புத்த பிட்சுணிகளாக) அனுமதித்தால், 500 ஆண்டுகளே இருக்கும் என்றார் புத்த பிரான்

—Subham—

Tags- தலை, சிரைக்கும், தண்டனைகள், ஆழ்வார் தரும் சுவையான செய்தி

அபூர்வ தீபாவளி மகான் ஸ்வாமி ராமதீர்த்தர்! (Post.15,327)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,327

Date uploaded in London – 1 January 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

20-10-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை! 

அபூர்வ தீபாவளி மகான் ஸ்வாமி ராமதீர்த்தர்! 

ச. நாகராஜன்

1

ஒரு தீபாவளி தினத்தன்று தோன்றி இன்னொரு தீபாவளி தினத்தில் சந்யாசம் ஏற்று இன்னும் ஒரு தீபாவளி தினத்தில் ஜல சமாதி எய்திய அபூர்வ வேதாந்த மகான் ஸ்வாமி ராமதீர்த்தர்.

இவர் வாழ்க்கை முழுவதும் ஏராளமான அபூர்வ சம்பவங்கள் நிறைந்துள்ளன. இவரது உபதேச மொழிகள் தனித்தன்மை வாய்ந்தவை.

லாகூரில் அரசுக் கல்லூரியில் கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற அவர் ஃபோர்மன் கிறிஸ்துவக் கல்லூரியில் கணிதப் பேராசிரியர் ஆனார் ஆதலால் இவரது உபதேசங்களில் கணிதம் ஆங்காங்கே மின்னி தன் இறைத்தன்மையைக் காட்டும்.

ஸ்வாமி விவேகானந்தரால் உத்வேகம் பெற்று இவரும் அமெரிக்கா சென்று அந்த நாட்டையே பிரமிக்க வைத்தார்.

இவரது உபதேச உரைகள் இன் வுட்ஸ் ஆஃப் காட் ரியலைசேஷன் (IN WOODS OF GOD REALISATION) என்று எட்டுத் தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளன.

இதை ஆழ்ந்து படிப்பவர்கள் வேதாந்தத்தை நன்கு அறிந்து கொள்ள முடியும்.

2

இவரது வாழ்க்கைத் துளிகள் சில இதோ:

ஸ்வாமி விவேகானந்தர் 1897ம் ஆண்டு லாகூருக்குச் சென்று ஒரு வாரம் அங்கு தங்கி இருந்தார். அவரது சொற்பொழிவுகள் லாகூரையே கவர்ந்தது. ஸ்வாமி ராமதீர்த்தர் அவரைத் தனது இல்லத்திற்கு அழைத்தார். ஸ்வாமிஜி அவரது இல்லத்தில் இருந்த புத்தகங்களைக் கண்டு ஆனந்தம் கொண்டு அதைப் படிக்கலானார்.

அவரது அற்புதமான உரைகளைக் கேட்ட தீர்த்த ராம் – ஆம் அது தான் அவரது இயற் பெயர், சந்யாசம் ஏற்ற பின்னர் அவர் ஸ்வாமி ராமதீர்த்தர் என்று அறியப்படலானார்  – ஹிமாலய மலைக் காடுகளின் உள்ளே சென்று தியானம் செய்யலானார்.

பின்னர் சந்யாசம் ஏற்றார். அது ஒரு தீபாவளி தினம். குடும்பத்தை விட்டுப் பிரிந்த அவர் 1902ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28ம் தேதி கப்பலில் ஜப்பானுக்குப் பயணமானார். அங்கு நடந்த ஹிந்து மத மாநாட்டில் கலந்து கொண்டார். டோக்கியோ கல்லூரியில் வெற்றிக்கான வழி என்ற அவரது உரை அனைவரையும் கவர்ந்தது.

பின்னர் விவேகானந்தர் வழியில் அவர் அமெரிக்காவுக்குப் பயணமானார். கப்பலில் பார்த்தவர் மீதெல்லாம் அவர் அன்பு மழை பொழிந்தார்.

அவர் சான்பிரான்ஸிஸ்கோ அடைந்த போது அவரையே கவனித்து வந்த ஒரு சக பயணி அவரிடம் வந்தார். அவர் ஒரு அமெரிக்கர்.

“சார்! உங்கள் பயண லக்கேஜ் எங்கே?  என்று அவர் கேட்டார்.

“நான் எப்போதுமே லக்கேஜ் கொண்டு செல்வதில்லை” என்றார் ஸ்வாமி ராமதீர்த்தர். உண்மையும் அது தான்.

ஆச்சரியம் அடைந்த அந்த அமெரிக்கர், “அப்படியானால் உங்கள் பணத்தை எல்லாம் எங்கே வைப்பீர்கள்?” என்று கேட்டார்.

“நான் பணமே வைத்திருப்பதில்லை” – இப்படி பதில் வந்தது.

“அப்படியானால் எப்படி நீங்கள் வாழ்கிறீர்கள்?”

“நாந்ன் எல்லோர் மீதும் அன்பு செலுத்தி வாழ்ந்து வருகிறேன். எனக்கு தாகம் எடுக்கும் போது எனக்குத் தண்ணீர் தர எப்போதுமே ஒருவர் தயாராக் இருக்கிறார். எனக்குப் பசிக்கும் போதெல்லாம் ரொட்டி தர ஒருவர் தயாராக இருக்கிறார்.”

“அப்படியானால் அமெரிக்காவில் உங்களுக்கு நண்பர்கள் யாரேனும் இருக்கிறார்களா?”

“ஆஹா! இருக்கிறாரே! எனக்கு ஒரு அமெரிக்கரைத் தெரியும். அது நீங்கள் தான்!” இப்படிச் சொல்லியவாறே அவரது தோளைத் தொட்டார் ராமதீர்த்தர்.

அந்த அமெரிக்கர் அயர்ந்து போனார். அந்தக் கணமே அவரது அணுக்கத் தொண்டரானார்.

அவர் பின்னால் எழுதினார் இப்படி:” இமயமலையிலிருந்து வந்த விளக்கு அவர். அது அவரை எரிக்காது. இரும்பு அவரை வெட்டாது. அவரது கண்களிலிருந்து அன்பு வெள்ளம் பெருகும். அவர் எங்கு இருக்கிறாரோ அங்கு புது வாழ்வைத் தரும்.”

சென்ற இடமெல்லாம் உற்சாக வரவேற்பைப் பெற்ற அவர் வேதாந்தத்தை நன்கு விளக்கினார்.

அவருடன் நாத்திகம் பேச வந்த பெண்மணி அவரைப் பார்த்த மாத்திரத்தில் மாறி ஆத்திகரானார்.

அமெரிக்காவில் உள்ள 14444 அடி உயரமுள்ள சாஸ்தா மலையில் அவர் தங்கி இருந்த போது உழைத்துத் தான் சாப்பிடுவேன் என்றார்.

அங்கு மரங்களை வெட்டி அதில் பெற்ற வருமானத்தைக் கொண்டு வாழ்ந்து வந்தார்; பிறரை அதிசயிக்க வைத்தார்.

3

1873ம் ஆண்டு அக்டோபர் மாதம் 22ம் தேதியன்று தீபாவளியன்று அவர் பிறந்தார்.

1906ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17ம் நாள் தீபாவளி வந்தது.

கங்கை ஆற்றிலே குளிக்கக் கிளம்பினார் அவர்.

குளிக்கச் செல்லும் முன்னர் ஒரு துண்டுச் சீட்டில் இப்படி எழுதி வைத்தார்:

“ஓ! மரணமே! நிச்சயமாக இந்த உடலைச் சிதற விடு. எனக்குப் பயன்படுத்த ஏராளமான உடல்கள் உள்ளன! அந்த சந்திர ஒளிக்கற்றையின்  வெள்ளி இழைகளை நான் அணிந்து கொள்வேன்.

நான்  தெய்வீக இசைவாணனாக மலை ஒடைகளிலும் நீரோடைகளிலும் அலைந்து திரிவேன்.”

கங்கையில் இறங்கிய அவர் ஆழத்தில் சென்று அமிழ்ந்தார். ஜல சமாதி எய்தினார்.

வாழ்க்கை முழுவதும் வேதாந்தத்தைப் பரப்பிய அவரது உரைகளைப் படிப்பது ஒருவரது பாக்கியவசத்தினால் தான் என்று உறுதியாகச் சொல்ல முடியும்!

**

HAPPY NEW YEAR -TIRUKKURAL ENGLISH CALENDAR FROM SRI LANKA


 MRS TIRUNAVUKKARASU OF JAFFNA, SRILANKA RELEASED A TIRUKKURAL CALENDAR IN 1915. IT IS AVAILABLE IN BRITISH LIBRARY, LONDON. IT WAS PRINTED IN COLOMBO IN 1915.

POSTED BY LONDON SWAMINATHAN ON 31-12-2025

HAPPY  PONGAL 

HAPPY PONGAL

–SUBHAM—

TAGS- TIRUKKURAL ENGLISH CALENDAR, SRI LANKA 

திருப்புகழில் இலக்கணம்,  இலக்கியம், அகத்தியர் ! (Post No.15,326)

Written by London Swaminathan

Post No. 15,326

Date uploaded in London –  31 December 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

இலக்கண, இலக்கியம் என்ற சொற்றொடரை நாம் இன்று பயன்படுத்துகிறோம் ; இதை அருணகிரிநாதரும் 500 ஆண்டுகளுக்கு முன்னர் பயன்படுத்தியிருக்கிறார்  ; இலக்கியம் இன்றேல் இலக்கணம் இல்லை என்றும் ஆன்றோர்கள் சொன்னார்கள் ; ஆகவே இந்தச் சொற்றொடர் நீண்ட காலமாகப் புழக்கத்தில் இருப்பதை அறிய முடிகிறது .

மேலும் அகத்தியருக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பை அருணகிரிநாதர் முதல் பாரதியார் வரை பாடியுள்ளனர்; அதற்கு முன்னர் உரைகாரர்களும் எடுத்துரைத்துள்ளார். 2200  ஆண்டுகளுக்கு முன்னர் ரகுவம்ச காவியத்தில் காளிதாசன் பாண்டியர்களையும் அகஸ்தியரையும் தொடர்புபடுத்திப் பாடியதோடு ஆலவாய் என்பதை உரகபுரம் என்றும் குறிப்பிட்டுள்ளான். முதல் முதலில் மதுரை- பாண்டியர் – அகஸ்தியர் தொடர்பினைப் பாடிய பெருமை  காளிதாசனுக்கே உரித்தாகும்.

***

இனி அருணகிரிநாதரின் திருப்புகழைக் காண்போம்

  இலைச்சுருட் கொடுத்தணைத் தலத்திருத் திமட்டைகட்

     கிதத்தபுட் குரற்கள்விட் …… டநுராகம்

எழுப்பிமைக் கயற்கணைக் கழுத்தைமுத் தமிட்டணைத்

     தெடுத்திதழ்க் கடித்துரத் …… திடைதாவி

அலைச்சலுற் றிலச்சையற் றரைப்பைதொட் டுழைத்துழைத்

     தலக்கணுற் றுயிர்க்களைத் …… திடவேதான்

அறத்தவித் திளைத்துறத் தனத்தினிற் புணர்ச்சிபட்

     டயர்க்குமிப் பிறப்பினித் …… தவிராதோ

கொலைச்செருக் கரக்கரைக் கலக்குமிக் ககுக்குடக்

     கொடித்திருக் கரத்தபொற் …… பதிபாடுங்

குறித்தநற் றிருப்புகழ்ப் ப்ரபுத்துவக் கவித்துவக்

     குருத்துவத் தெனைப்பணித் …… தருள்வோனே

தலைச்சுமைச் சடைச்சிவற் கிலக்கணத் திலக்கியத்

     தமிழ்த்ரயத் தகத்தியற் …… கறிவோதுஞ்

சமர்த்தரிற் சமர்த்தபச் சிமத்திசைக் குளுத்தமத்

     தனிச்சயத் தினிற்பிளைப் …… பெருமாளே.

……… சொல் விளக்கம் ………

இலைச் சுருள் கொடுத்து அணைத்தலத்து இருத்தி

மட்டைகட்கு இதத்த புள் குரல்கள் விட்டு அநுராகம் எழுப்பி …

சுருட்டிய வெற்றிலையைப் (பாக்குடன்) கொடுத்து படுக்கையில் இருக்க வைத்து, பயனற்ற முட்டாள்களுக்கு இன்பம் தரக்கூடிய பறவைகளின் குரல்களை தொண்டையிலிருந்து வெளிவிட்டு காமப் பற்றை எழுப்பியும்,

மைக் கயல் கணை கழுத்தை முத்தம் இட்டு அணைத்து

எடுத்து இதழ்க் கடித்து உரத்து இடை தாவி … மை பூசப்படும்

கயல் மீன் போன்ற கண்ணிலும் கழுத்திலும் முத்தம் தந்து அணைத்தும், எடுத்தும், வாயிதழைக் கடித்தும், மார்பிடத்தே தாவியும்,

அலைச்சல் உற்று இலச்சை அற்று அரைப் பை தொட்டு

உழைத்து உழைத்து அலக்கண் உற்று உயிர்க் களைத்திடவே

தான் … அலைச்சல் உற்று நாணம் இல்லாமல், தொட்டு, மிக உழைத்து, துன்பம் அடைந்து, உயிர் களைத்துப் போகும் அளவுக்கு,

அறத் தவித்து இளைத்து உறத் தனத்தினில் புணர்ச்சி பட்டு

அயர்க்கும் இப் பிறப்பு இனித் தவிராதோ … மிகவும் தவிப்பு

அடைந்து, உடல் இளைத்து, மார்பகங்களை மிகத்தழுவி, அலுத்துப்

போகும் இந்த பிறப்பு இனியாவது நீங்காதோ?

கொலைச் செருக்கு அரக்கரைக் கலக்கும் மிக்க குக்குடக்

கொடித் திருக் கரத்த … கொலை செய்வதில் பெருமை கொள்ளும்

அரக்கர்களை கலங்கச் செய்தவனே, சேவல் கொடியைக் கையில்

ஏந்தியவனே,

பொன் பதி பாடும் குறித்த நல் திருப்புகழ் ப்ரபுத்துவக்

கவித்துவக் குருத்துவத்து எனைப் பணித்து அருள்வோனே …

அழகிய தலங்கள் தோறும் உன்னைப் பாடும் நோக்கத்தைக் கொண்ட

நல்ல திருப்புகழில் மிக மேம்பட்ட கவி பாடும் குருஸ்தானத்தில் என்னை நிலைக்க வைத்துக் கட்டளை இட்டு அருள் புரிந்தவனே,

தலைச் சுமைச் சடைச் சிவற்கு இலக்கணத்து இலக்கியத் தமிழ்

த்ரயத்து அகத்தியற்கு அறிவு ஓதும் சமர்த்தரில் சமர்த்த …

தலையில் சுமை போல் பாரமான சடையைக் கொண்ட சிவபெருமானுக்கும்,இலக்கணம், இலக்கியம், நாடகம் என்னும் முத்தமிழில் வல்லவரான அகத்திய முனிவர்க்கும் ஞானபோதகனே, சாமர்த்தியத்தில் முதல் இடத்தில் இருப்பவனே,

பச்சிமத் திசைக்கு உள உத்தமத் தனிச்சயத்தினில்

பி(ள்)ளைப் பெருமாளே. … மேற்குத் திசைக்குள் உள்ள உத்தமமான

தனிச்சயம்* என்னும் தலத்தில் வீற்றிருக்கும் (சிவனாரின்) பிள்ளைப்

பெருமாளே.

****

* தனிச்சயம் மதுரைக்கு மேற்கே சோழவந்தான் வட்டத்தில் உள்ளது.

பாண்டியன் இந்திரனுடன் தனித்து நின்று போராடி ஜயம் பெற்ற தலமானதால் தனிச்சயம் என்ற பெயர் பெற்றது..

Meaning given by Sri Gopalasundaram in kaumaram.com

–subham—

Tags- திருப்புகழில் இலக்கணம், இலக்கியம், அகத்தியர்

மலேரியாவுக்கான மருந்து குயினைன் ஒரு தற்செயல் கண்டுபிடிப்பு தான்! (Post.15,325)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,325

Date uploaded in London –   31  December 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

14-10-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை! 

மலேரியாவுக்கான மருந்து குயினைன் ஒரு தற்செயல் கண்டுபிடிப்பு தான்! 

ச. நாகராஜன்

உலகையே ஒரு காலத்தில் பயமுறுத்திய மலேரியா வியாதிக்கு குயினைன் ஒரு அருமருந்தாகக் கண்டுபிடிக்கப்பட்டது. 

இதைப் பற்றி ஐரோப்பாவில் வழிவழியாக வழங்கி வரும் கதை இது: 

பெருவின் வைசிராயின் மனைவிக்குப் பெயர் கவுண்டஸ் சின்சோன் (Countes Chinchon). அவர் கடுமையான மலேரியா வியாதியால் பாதிக்கப்பட்டார். பயந்து நடுங்கிய அவருக்கு மலேரியா வியாதி குணமானது பெருவிலுள்ள ஒரு மரத்தின் அடிப்பட்டையின் சாறை மருந்தாகக் கொடுத்ததால் தான்!

இதனால் மனம் மிக மகிழ்ந்த அவர் 1638ம் ஆண்டில் அந்த மருந்தை ஐரோப்பாவிற்குத் தன்னுடன் கொண்டு சென்றார். அது தான் குயினைன்.

1742ம் ஆண்டு ஸ்பெயினைச் சேர்ந்த தாவர இயல் வல்லுநரான லினாஸ் (Linanaeus) அந்த மரத்திற்கு சின்சோனா(Chinchona) என்று பெயரிட்டார்.  இந்தப் பெயரை கவுண்டஸ் சின்சோன் – ஐ கௌரவிக்கும் விதமாகப் பெயரிட்டார். ஆனால் இதில் இரண்டு தவறுகள் ஏற்பட்டு விட்டன. முதல் தவறு அவர் தனது பெயரில் ஒரு ஸ்பெல்லிங் தவறைச் செய்தார் அதாவது ஒரு ‘h’ – ஐ விட்டு விட்டார். இரண்டாவது கவுண்டஸ் சின்சோனுக்கு மலேரியா வியாதியே இல்லை. அவர் ஸ்பெயினுக்கு மரப்பட்டைச் சாறைக் கொண்டுபோகவும் இல்லை. செல்லும் வழியிலேயே கொலம்பியாவில் கட்டஜினா என்ற இடத்தில் இறந்து விட்டார்.

உண்மை என்னவென்று பார்ப்போம்!

லினஸுக்கு நூறு வருடங்கள் முன்பாகவே ஜெஸுயிட் பாதிரியார்கள் அந்த மரத்திற்கு ஜெஸுயிட் அடிப்பட்டை என்ற பெயரை வழங்கி இருந்தனர்.

தென்னாப்பிரிக்காவில் உள்ள ஆண்டஸ் காடுகளில் வாழ்ந்து வந்த பூர்வீக இந்தியர்களில் ஒருவருக்கு மலேரியா ஜுரம் வந்து விட்டது. அவர் தற்செயலாக கொய்னா மரம் வளர்ந்திருந்த இடத்திற்கு அருகில் தாகத்தைத் தணிக்க தண்ணீர் அருந்தப் போனார். அந்தத் தண்ணீரோ கசப்பாய் கசந்தது. கொய்னா மரத்தில் ஊறியதால் தான் தண்ணீர் கசக்கிறது என்பதை உணர்ந்த அவர் அது விஷ மரம் ஆயிற்றே, ஆகவே விஷத் தண்ணீரை அருந்தியதால் தான் இறக்கப் போவது உறுதி என்று பயந்தார். ஆனால் ஆச்சரியப்படும் விதமாக மலேரியா வியாதியிலிருது குணமானார். அவர்கள் தங்கள் பாஷையில் இந்த மரத்தை கொய்னா-கொய்னா என்று அழைத்து வந்தனர். ஆகவே இந்த மருந்திற்கு கொய்னா மருந்து என்ற பெயர் புழக்கத்தில் வந்தது.

ஆக, மலேரியாவுக்கான மருந்து தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட் விதம் இது தான்!

1820ம் ஆண்டு இது பற்றிய ஆய்வு தொடங்கப்பட்டது. 1908ம் ஆண்டில் கூட லாபரட்டரி சோதனையில் இதற்கான ‘கெமிகல் ஃபார்முலா” கண்டுபிடிக்கப்படவில்லை. 1944ம் ஆண்டு தான் இதைப் பற்றிய முழு அறிவியல் தகவலும் உறுதி செய்யப்பட்டது. 

கொசுக்களின் தொல்லை உலகில் எல்லா இடத்திலும் இருந்ததால் மலேரியாவும் எல்லா இடங்களிலும் பரவி இருந்து உயிரக்ளை பலி வாங்கிக் கொண்டே இருந்தது. 

ஆகவே குயினைன் மரத்தின் முக்கியம் உலகெங்கும் உணரப்பட்டது.

 ஆனால் முதல் உலகப்போரின் போது ஜெர்மனிக்கு குயினைன் மருந்து கிடைக்கவில்லை. உடனடியாக மாற்று மருந்து ஆராய்ச்சியை ஜெர்மனி முடுக்கி விட்டது. எல்லா நாடுகளும் இந்த மரத்தை போட்டி போட்டுக் கொண்டு வளர்க்க ஆரம்பித்தன.

இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்கப் படைகள் மலேரியாவைப் பரப்பும் கொசுக்கள் இருந்த இடத்தில் தங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. அப்போது அவர்கள் இத்தாலிய வீரர்களை சிறைப்பிடித்தனர். அவர்கள் கையிலிருந்த க்ளோரோக்யின் (Chloroquine) மாத்திரையை அமெரிக்கா கொண்டு சென்று ஆய்வுக்கு உட்படுத்தினர்.

அமெரிக்க ஆய்வில் க்ளோரோக்யின் அற்புதமான ஒரு மருந்து என்பது கண்டுபிடிக்கப்படவே அதை அவர்கள் உற்பத்தி செய்து பயன்படுத்த முடிவு செய்தனர்.

இப்படி உலகில் ஒரு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி தொடர் ஆய்வுகளைச் செய்ய வைத்து மலேரியா வியாதியை அநேகமாக எல்லா நாடுகளும் ஒழித்துக் கட்ட வழி வகுத்தது ஒரு தற்செயல் கண்டுபிடிப்பு தான். இதை ஆங்கிலத்தைல் செரிண்டிபிடி (Serendipity) என்று கூறுவர்.

பல தற்செயல் கண்டுபிடிப்புகள் உலக வரலாற்றையே மாற்றி உள்ளன.

அதில் முக்கியமாக அமைவது குயினைன் மருந்து தான்!

**

Hinduism through 500 Pictures in Tamil and English-37; படங்கள் மூலம் இந்து மதம் கற்போம்-37 (Post.15,324)

கிருஷ்ண அவதாரம் 

Written by London Swaminathan

Post No. 15,324

Date uploaded in London –  30 December 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

மத்ஸ்ய – மீன் –அவதாரம் 

English version of Avatar was posted yesterday; following is the Tamil version

அவதாரம்

இந்தச் சொல்லுக்குப் பொருள் கீழே இறங்குதல் ; இறைவன் பூமிக்கு வந்து துஷ்டர்களை அழித்து நல்லோரைக் காப்பதற்கு  இப்படி வருவார்; குறிப்பாக விஷ்ணுவைப் பொருத்தமட்டில் இந்தச் சொல் பயன்படுத்தப்படும்; பாகவதத்தில் இருபதுக்கும் மேலான அவதாரங்கள் பேசப்பட்டாலும் தச அவதாரம் = தசாவதாரம் என்ற பத்து அவதாரங்கள் முக்கியமாகப் போற்றப்படுகின்றன சங்க இலக்கியமான கலித்தொகை, பரிபாடல் முதலிய நூல்களில் பெரும்பாலான அவதாரங்கள் பாடப்படுவதால் 2000  ஆண்டுகளுக்கு முன்னரே இமயம் முதல் குமரி வரை இந்துக்கள் இவைகளைப்  போற்றி வணங்கித் துதிபாடியது தெரிகிறது .

சங்க இலக்கிய நூலான அகநானூற்றில், யமுனை நதிக்கரையில் கிருஷ்ண பரமாத்மா கோபிகைகளுடன் விளையாடியது பற்றிக்கூட புலவர் பாடியுள்ளார்; வால்மீகி பாடாத ராமாயணக் கதைகள், சங்க இலக்கியத்திலும் ஆழ்வார் பாடல்களிலும் காணக்கிடக்கின்றன

ஜெயதேவர் என்ற ஒரிஸ்ஸா மாநில மகான் கீதா கோவிந்தம் நூலில் ஒரு அஷ்டபதியில் பலராம அவதாரத்தை நீக்கிவிட்டு புத்தர் பெயரைச் சேர்த்தார் ஆனால் அதற்க்கு முந்திய திவ்யப் பிரபந்தப்பாடல்களில் புத்தரைக் காண முடியாது இன்று வரை எந்த இந்துவும் புத்தரை இந்துக்கோவிலில் வணங்குவதும் இல்லை ; சிலை வைத்ததும் இல்லை.

***

வராக அவதாரம் 

நரசிம்ம அவதாரம் 

பரசுராம அவதாரம் 

கருடவாகனத்தில் விஷ்ணு ; வரதராஜப் பெருமாள் 

முதல் அவதாரம் மத்ஸ்ய/ மீன் அவதாரம்

இது பூமியை வெள்ளம் மூழ்கடித்த கதை; உலகின் எல்லா கலாச்சாரங்களில் இந்த பிரளயம் பற்றிய கதையைக் காணலாம் ; மனு என்பவர் சந்தியாவந்தனம் செய்ய தண்ணீரெடுத்தபோது ஆதில் ஒரு மீன் குஞ்சைக் கண்டார்; நாளடைவில் அது பெரிதாக வளரவே கடலில் விட்டார். அப்போது அந்த மீன் பிரளயம் வரப்போவதைச் சொல்லி ஒரு கப்பலுடன் வருமாறு உத்தரவிட்டது; அது விஷ்ணுவின் முதல் அவதாரம். பிரளயம் வந்தபோது பிரம்மாண்டமான மீனின் கொம்பில் கப்பலை மாட்டினார் மனு; அது பாதுகாப்பான இடத்துக்கு அனைவரையும் கூட்டிச் சென்றது. பின்னர் பிரளயம் வற்றியது.

இரண்டாவது கூர்ம/ ஆமை அவதாரம்

தேவர்களும் அசுரர்களும் சாவா மருந்தான அமிர்தத்தை  எடுக்க கடலினைக் கடைந்தபோது , விஷ்ணு , ஆமை வடிவில் தோன்றி மந்தர மலையை தனது முதுகில் தாங்கிக் கொண்டார்; வாசுகி என்னும் பாம்பினை மலையில்  சுற்றி கடலினைக் கடைந்தபோது அமிர்தம் உளப்பட 14  பொருள்கள் வந்தன ; பாம்பின் வாயிலிருந்து வெளியேறிய விஷத்தை சிவபெருமான் அருந்தவே அதை பார்வதி, கழுத்துகுக் கீழே போகாமல் தடுத்தார்; இதனால் சிவனுக்கு நீல கண்டன் என்று பெயர் ; அதுவும் கூட சங்கத் தமிழ் இலக்கியத்தில் இருக்கிறது.

***

மூன்றாவது வராக அவதாரம்; அது  பற்றி முன்னரே கண்டோம்

நாலாவது நரசிம்மாவதாரம் 

மனித உடலும்  சிங்க முகமும் உடைய நரசிம்மாவதாரம்  ஹிரண்யகசிபு என்ற அசுரனை வதைக்க உருவானது; அவருடைய மகன் பிரஹலாதன் என்ற சிறுவன் விஷ்ணுவை அனுதினமும் வணங்கவே கோபம் கொண்ட ஹிரண்யகசிபு, உன்னுடைய விஷ்ணு சர்வ வியாபி என்றால் இந்த தூணில்  இருக்கிறானா?  காட்டு பார்ப் போம்! என்று  சவால் விட்டான் ; தூணினை உதைக்கவே விஷ்ணு மனித சிங்க உருவில் தோன்றி ஹிரண்ய கசிபுவைக் கிழித்தெறிந்தார்.

அவர் உக்ர நரசிம்மர், லட்சுமி நரசிம்மர், யோக நரசிம்மர் என்ற வடிவங்களில் அகோபிலம், சிங்கப்பெருமாள் கோவில், ஹம்பி, மகாபலிபுரம் , மதுரைக்கு அருகிலுள்ள நரசிம்மம் முதலிய இடங்களில் காட்சி தருகிறார்.

***

வாமனர், த்ரிவிக்ரமர் உலகளந்த பெருமாள்

ஹிரண்ய கசிபு வம்சத்தில் வந்த அசுரர் குல மன்னன்  பெயர் மகா பலி; தர்ம நெறிப்படி ஆட்சி செய்தாலும் இந்திரனையே பதவி இழக்க வைத்தார்; இதனால் உஷாரான தேவர்கள்,விஷ்ணுவை வேண்டவே அவர் பூமிக்கு வந்து குள்ள பிராமண பிரம்மச்சாரி வேஷம் போட்டார். அப்போது யாகம் நடத்திய மஹாபலி, யார் என்ன கேட்டாலும் தருவதாக அறிவித்தான். வாமன என்ற பெயரில் வந்த பிரம்மச்சாரி மூன்றடி மட்டுமே கேட்டார்.

தந்தேன் என்றான் அசுரர் மன்னன். ஆனால் குள்ள வாமன வடிவமோ நீண்டு நெடிது  வளர்ந்து முதல் அடியில் உலகத்தையும் இரண்டாவது அடியில் பிரபஞ்சத்தையும் அளந்ததுவிட்டு மூன்றாவது அடியை எங்கே வைப்பது? என்று கேட்டபோது மகாபலி தலையைக் காட்டினான்; அதில் விஷ்ணு காலினை வைத்து அழுத்தி அவனைப் பாதாள உலகத்துக்கு அனுப்பினார்; ஆனால் அவன் தரும நெறிப்படி ஆட்சி செய்து மக்களின் நன்மதிப்பினைப் பெற்றதால் ஆண்டுதோறும் ஓணம் பண்டிகையின்போது,   மக்களைச்  சந்திக்க அனுமதி கொடுத்தார் இபோதும் ஓணம் பண்டிகை மிகப்பெரிய ளவில் கேரளத்தில் நடத்தப்படுகிறது சங்கத் தமிழ் இலக்கியத்திலும் தேவாரம் திவ்யபிரபந்தத்திலும் ஓணம் பண்டிகை சிறப்பிடம் பெறுகிறது ; வாமனன்  வளர்ந்த உருவத்தை த்ரிவிக்ரமன் என்றும் ஓங்கி உலகளந்த பெருமாள் என்றும் கோவில்களில் காணலாம்.

ரிக் வேதத்திலேயே மூன்று அடி அளந்த கதை வருகிறது எமுஷா என்ற பெயரில் வராக அவதாரமும் உள்ளது; ஏனைய அவதாரங்கள் சதபத பிராமண நூலில் உள்ளது 

***

பரசுராம அவதாரம்

அவதாரங்களில் மூன்று ராமன்கள்  உண்டு ; தசரத ராமன், கிருஷ்ணனின் சகோதரன் பலராமன், க்ஷத்ரியர்கள் எதிரியான பிராமண பரசுராமன் ; ஜமதக்கினி மஹரிஷியின் மகனான பரசுராமன் க்ஷத்ரியர்களைப் பழிவாங்குவதற்காக அவர்களது 21  தலை முறையினைஅழித்தார் என்று புராணங்கள் விளம்பும்; ஆயினும் ராமன் என்னும் க்ஷத்ரியரிடம் தோற்று, தனது பலம் அனைத்தையும் அவரிடம் விட்டுச் சென்றார் .

***

கல்கி அவதாரம்

இன்னும் ஒரு அவதாரம் — கல்கி என்ற வடிவத்தில் — இனிமேல் வரப்போகிறது; விஷ்ணு பகவான் வெள்ளை குதிரை மீது ஏறி கத்தியுடன் வலம் வந்து தர்ம விரோதிகளான மிலேச்சர்கள் அனைவரையும் அழித்து பூமியில் தர்மத்தை நிலை நாட்டுவார்; . அவர் எப்போது வருவார் என்பது காலப்போக்கில் தெரியும்

***.

ராமரும் சீதையும் 

கஜேந்திர மோட்சம் 

ராமர், கிருஷ்ணர் அவதாரங்கள்

அவதாரங்களில் இமயம் முதல் குமரி வரை அல்லது இலங்கை வரை அல்லது இந்தோனேஷியா- கம்போடியா வரை சித்திரங்களிலும் சிற்பங்களிலும் இலக்கியங்களிலும் இடம்பெற்ற இரண்டு அவதாரங்கள் ராமரும் கிருஷ்ணரும் தான் ;அவர்கள் கதைகளைப்  படியாதவர்கள்/ அறியாதவர்கள் மக்கட்பதர்களே ; தேவாரம் திருவாசகம், திவ்யப்பிரபந்தம் அருணகிரி நாதரின் திருப் புகழ்  முதலிய நூல்களில் அவர்களுடைய குறிப்புகள் வருகின்றன. பகவத் கீதை என்னும் நூல் மூலம் மஹா பாரதக் கதை உலகிலுள்ள எல்லா மொழிகளுக்கும் போய்விட்டது ஆகையால் இங்கு விளக்கத் தேவை இல்லை.

-subham—

Tags- அவதாரங்கள், கல்கி, படங்கள், சிற்பங்கள் பரசுராமன், சங்க இலக்கியம் , கதைகள், 37 Hinduism through 500 Pictures in Tamil and English-37; படங்கள் மூலம் இந்து மதம் கற்போம்-37

சம்ஸ்க்ருதத்தில் ‘ழ’ கரம் உண்டு -பெளழியம் (Post 15,323)

Written by London Swaminathan

Post No. 15,323

Date uploaded in London –  30 December 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

சென்னை ஸர்வகலாசாலைத்‌ தமிழ்‌ ஆராப்ச்சித்துறைத்‌ தலைவர்‌ 1930-1046  பேராசிரியர்‌ எஸ்‌. வையாபுரிப்‌ பின்னை 

இலக்கிய உதயம்‌ (இரண்டாம்‌ பகுதி) நூலில் கூறுவதாவது :

* பெரிய திருமொழியில்‌,

சந்தோகா பெளழியா தைத்திரியா

சாம வேதியனே நெடுமாலே

என வந்துள்ளது. நச்‌சினர்க்கினியரும்‌ தொல்காப்பியப்‌ பாயிர

உரையில்‌, ‘நான்கு கூறுமாய்‌ மறைந்த பொருளுமுடைமையால்‌

நான்மறை என்றார்‌. அவை, தைத்திரியமும்‌, பெளடியமும்‌, தலவ

காரமூம்‌, சாம வேதமுமாம்‌, இனி, இருக்கும்‌, யசுவும்‌, சாமமும்‌,

அதர்வணமும்‌ என்பாரும்‌ உளர்‌; அது பொருந்தாது. இவர்‌ இந்‌

நூல்‌ செய்த மின்னர்‌ வேத வியாசர்‌ சில்வாழ்‌ காட்‌ சிற்றறிவினோர்‌

உணர்தற்கு நான்கு கூறுச்‌ செய்தாராகலின்‌’ என்று எழுதி

யுள்ளார்‌.

சந்தோகம்‌ சாம வேதத்தின்‌ ஒரு சாகையையும்‌, பெளழியம்‌

ரிக்‌ வேதத்தையும்‌, தலவகாரம்‌ சாமவேதத்தின்‌ ஜைமினீய சாகை

யையும்‌, தைத்திரீயம்‌ கிருஷ்ண எஜுர்‌ வேதத்தையும்‌ குறிக்‌

இன்றன. பெளழியத்தைக்‌ குறித்து ஆசிரியர்‌ வின்டர்நிட்ஸ்‌

கூறுவது இங்கு மனங்கொளத்தக்கது.

***

1609 பந்து ஆர் மெல் விரல் நல் வளைத் தோளி *

பாவை பூ மகள் தன்னொடும் உடனே

வந்தாய் * என் மனத்தே மன்னி நின்றாய் *

மால் வண்ணா மழைபோல் ஒளி வண்ணா **

சந்தோகா பௌழியா தைத்திரியா *

சாம வேதியனே நெடுமாலே *

அந்தோ நின் அடி அன்றி மற்று அறியேன் *

அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே

திருமங்கையாழ்வார். பெரிய திருமொழி. 7.7.2.

***

பெளழியம்

Tamil dictionary

— Pauliyacaranam in Tamil glossary

Pauḻiyacaraṇam (பௌழியசரணம்) [pauḻiya-caraṇam] noun < பௌழியம் [pauzhiyam] +. See பௌடியம்¹. [paudiyam¹.] (inscription)

பவிழியம் –  இருக்குவேதம் என்று 1935-ஆம் ஆண்டு ஆனந்த விகடன் அகராதியும் கூறுகிறது 

****

காஞ்சி சங்கராசார்யார் சுவாமிகளும் இதை தனது உரையில் எடுத்துக் காட்டியுள்ளார்

தமிழ் தவிர, மலையாளம், சீன மொழியில் மாண்டரின் பிரிவு ஆகியவற்றில் இந்த ஒலி உள்ளது; பிரெஞ்சு மொழியில் R ஆர் என்னும் எழுத்தினை இது போல உச்சரிக்கிறார்கள் .

நான் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக லண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி கற்பித்தபோது நான் பழம்  என்று எழுதச் சொன்னால் அவர்கள் பற்ற்ம் என்றுதான் எழுதுவார்கள் . நம்முடைய  – காரத்துக்கு இணையான– அல்லது மிக நெருங்கிய ஒலி –அந்த ரோலிங் ஆர் ROLLING R  என்பது புரிகிறது.  

***

திருமங்கை ஆழ்வார் சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்னர் இதை ரிக் வேதத்திற்குப் பயன்படுத்தியதும் பின்னர் கல்வெட்டுகளில்  காணப்படுவதும் இது பழமையானது என்பதைக் காட்டுகிறது.

இன்னொரு பாசுரத்திலும் திருமங்கை ஆழ்வார், ரிக்வேதத்தைப்  படுகிறார், இதனாலும் நால் வேதத்திற்கு ஒவ்வொரு பாடலிலும் அவர் கொடுக்கும் சிறப்பு அடை  மொழியாலும் அவருக்கு வேதங்கள் பற்றிய தெள்ளிய அறிவு இருந்தது புலப்படுகிறது

1453    உருக்கு உறு நறு நெய் கொண்டு ஆர் அழலில்

இருக்கு உறும் அந்தணர் சந்தியின்வாய்

பெருக்கமொடு அமரர்கள் அமர நல்கும்

இருக்கினில் இன் இசை ஆனவனே

ஆண்டாய் உனைக் காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல்

வேண்டேன் மனைவாழ்க்கையை-விண்ணகர் மேயவனே 

***

இருக்கினில் இன் இசை ஆனவனே – என்பது மிகவும் முக்கியமான வரி; ஏனெனில் சாம வேதம் என்பது பெரும்பாலும் ரிக்வேதத்தின் பகுதியே; அதை இன்னிசை வடிவில் இசைக்கும்போது அது சாமவேதம் எனப்பெயர் பெறுகிறது. இந்த அரிய தகவலையும் அவர் நமக்கு அளிக்கிறார் ; தெய்வத்தின் குரலில் ரிக் வேதமே சாம  வேதம் என்பதை காஞ்சிப் பெரியவரும் எடுத்துரைக்கிறார்.

—subham—

Tags– சம்ஸ்க்ருத்தில் ‘ழ’ கரம், பெளழியம், திருமங்கை ஆழ்வார், சாந்தோகா, பெளழியா

ஒரு கடிதம் புதுப்பித்த மூளை! (Post No.15,322)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,322

Date uploaded in London –   30  December 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

டிசம்பர் 2025 ஹெல்த்கேர் இதழில் வெளியான கட்டுரை! 

ஒரு கடிதம் புதுப்பித்த மூளை! 

ச. நாகராஜன் 

பிரபல ஆங்கில உளவியல் பத்திரிகையான சைக்காலஜி டு டே இதழில் செப்டம்பர் 2025 இதழில் ஆன்டி சாலெஃப் (Andy Chaleff ) எழுதியுள்ள கட்டுரை அனைவரும் படிக்க வேண்டிய ஒரு கட்டுரை.

 மூளை எப்படி உற்சாகத்துடன் புதுப்பிக்கப்பட்டது – ஒரே ஒரு கடிதத்தினால் என்பதை அவர் உருக்கமாகக் குறிப்பிட்டிருக்கிறார். 

அவர் தனது தாயாருக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் எப்படி அவர் தாய் அவருக்கு மிக முக்கியமானவராக இருந்தார் என்பதை ஆழ்ந்த அன்புடன் குறிப்பிட்டிருந்தார். அவார் தாயார் அவருக்குக் கொடுத்த உற்சாகம், அவரால் எதையும் செய்ய முடியும் என்று அவர் கொடுத்த நம்பிக்கை,, அடிக்கடி அவர் அடிக்கும் ஜோக்குகள் எல்லாம் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தன.

அந்தக் கடிதத்தைப் படித்த சில மணி நேரங்களுக்குள் ஒரு குடி போதை டிரைவரினால் அவர் ஒரு விபத்தில் இறந்தார். அந்தக் கடிதம் தான் அவரது தாயார் அவரிடமிருந்து பெற்ற கடைசிச் சொற்கள்!

அந்தக் கடிதத்தை எழுதி அனுப்பியவுடன் அவரது மூளையில் ஒரு  மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டது. நன்றியைத் தெரிவிக்கும் ஒருவருக்கு, மூளையில் உள்ள புரிந்துணர்வு, உணர்வுக் கட்டுப்பாடு, சமூகத் தொடர்பு உள்ளிட்ட பகுதிகள் ஊக்குவிக்கப்படுவதாக மூளையியல் நிபுணர்கள் தங்கள் ஆய்வின் மூலமாகக் கண்டுபிடித்திருக்கின்றனர். (விவரங்களுக்கு FOX, KAPLNA, DAMSADIO, & DAMASIO, 2015 பார்க்கவும்)

இப்படி நன்றி தெரிவித்து எழுதியவர்கள் நன்கு உறங்குகிறார்கள். அவர்கள் டாக்டரைப் பார்க்கச் செல்வது அபூர்வமாகவே நடக்கும். எப்போதும் இனம் புரியாத குதூகலத்துடன் இருப்பர்.

மார்டின் செலிக்மேன் என்ற ஆய்வாளரும் அவரது சகாக்களும் சேர்ந்து (Martin Seligman and colleagues) ஒரு ஆய்வை மேற்கொண்டனர். யாரெல்லாம் தங்கள் நன்றியைக் கடிதம் மூலம் தெரிவித்து அனுப்பி இருக்கிறார்களோ அவர்கள் எல்லாம் மிகுந்த சந்தோஷத்துடன் வாழ்கின்றனர் என்பதே அவர்களின் கண்டுபிடிப்பு!

தாயாரை இழந்த துக்கத்தால் தவித்தாலும் அதனால் அவர் பெற்ற உத்வேகத்தால் ஆன்டி சாலெஃப் 90 நாட்களில் 60 குழுவினரைச் சந்தித்து குழுவில் உள்ள அனைவரையும் அவர்களுக்குப் பிடித்த ஒருவருக்கு நன்றி தெரிவிக்கும் கடிதத்தை உடனே அனுப்பச் சொன்னார்.

ஆரேகானில் குழுவில் இருந்த ஒரு பெண்மணியான மார்கரெட் தனது சகோதரிக்கு எழுதிய கடிதத்தை உணர்ச்சி வசப்பட்டு கண்ணீருடன் படிக்க ஆரம்பித்தார். அதில் தாயை இழந்த போது அந்த சகோதரி தனக்கு எப்படி தலைமுடியை அழகுற சிங்காரித்தார், கூடவே பள்ளி வரை வந்து தன்னை உற்சாகப்படுத்தினார் உள்ளிட்ட எல்லா விவரங்களும் இருந்தது. கடந்த 43 வருடங்களில் இந்த விஷயங்களைத் தான் ஒரு போதும் பேசியதில்லை என்பதை அவர் ஒப்புக் கொண்டார்.

அவர் முடித்த போது குழுவில் இருந்த அனைவரும் உணர்ச்சிவசப்பட்டு பேசமுடியாமல் திகைத்திருந்தனர்.

கடிதத்தை முடித்த மார்கரெட், “எனது வாழ்நாள் முழுவதும் என் தலையில் சுமந்த ஒரு கனமான சூட்கேஸை கீழே இறக்கி வைத்து விட்டது போல உணர்கிறேன்” என்றார்.

மறுநாள் காலை மார்கரெட் தனது சகோதரியிடம் பேசினார் – மூன்று மணி நேரம் பேச்சு தொடர்ந்தது! 

இப்படிப்பட்ட நன்றிக் கடிதங்கள் அதை அனுப்புபவர், அதைப் பெறுபவர் ஆகிய இருவருக்கும் புதிய உணர்வைத் தருகிறது. 

பேசப்படாத அன்பின் மொழிகள் “முடிக்கப்படாத ஒரு வணிகம்” போலத்தான். 

ஆய்வுகள் தெரிவிக்கும் ஒரு முக்கிய விஷயம் – இப்படிப்பட்ட நன்றிக் கடிதங்கள் மன அழுத்தத்தைக் குறைக்கிறது, இரத்த அழுத்தத்தைச் சீராக்குகிறது என்பதைத் தான்! (விவரங்களுக்கு Witvliet, Ludwig, & Vander Laan, 2001 பார்க்கவும்)

 சிறியதாக ஒரு நன்றிக் கடிதத்தை எழுதிப் பாருங்கள். உங்களின் ஆசிரியர் எப்படி உங்களை ஊக்கப்படுத்தினார் என்பதை நினைத்துப் பாருங்கள்.

அவர்கள் உங்களுக்கு என்ன செய்தார்கள், நீங்கள் அதனால் எப்படி உற்சாகம் அடைந்து மாறினீர்கள், அவரால் இன்று எந்த உயர்நிலையில் நீங்கள் இருக்கிறீர்கள் என்பதைச் சொன்னால் போதும்.

 ஆன்டி சாலெஃப் இது போன்ற பல கட்டுரைகளை எழுதி வருபவர் என்பது குறிப்பிடத் தகுந்தது!

 அடடா, என்ன பேனாவையும் பேப்பரையும் எடுத்து விட்டீர்களா, ஒரு நன்றிக் கடிதத்தை எழுத!

வாழ்த்துக்கள்!

**