Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
22-10-26 கல்கி இதழில் வெளியாகியுள்ள கட்டுரை!
ஒரு பிஸ்கட்டின் கதை!
ச. நாகராஜன்
மனித வாழ்க்கையில் தான் எத்தனை விதமான அறுசுவை உண்டிகள்! விதவிதமான உணவு வகைகளை ருசித்து அனுபவித்துச் சாப்பிடுகிறோம்.
ஆனால் அவற்றின் மதிப்பை என்றேனும் எண்ணிப் பார்த்திருக்கிறோமா?
ஒரு பிஸ்கட்டைக் கொடுத்தால் ‘பூ’ இவ்வளவு தானா என்று எள்ளி நகையாடுவோம்.
ஆனால் ஒரு பிஸ்கட்டின் மதிப்பு எவ்வளவு தெரியுமா?
ஒரு பிஸ்கட்டின் கதையைப் பார்ப்போம்.
1909ம் ஆண்டு. ஜனவரி மாதம். அண்டார்டிகாவில் உறைபனியில் எர்னஸ்ட் ஷாகில்டன் (Ernest Shakleton) தனது மூன்று சகாக்களுடன் தங்கள் ஸ்லெட்ஜ் வண்டிகளில் பயணப்பட்டுக் கொண்டிருந்தார். தென் துருவத்தை அடையும் முயற்சியில் தோல்வியுற்று கையிலிருந்த அனைத்து உணவுப் பொருள்களும் தீர்ந்து விட பசி தாளாமல் கையிலிருந்த பிஸ்கட்டுகளை ரேஷன் முறையில் அனைவரும் பகிர்ந்து கொண்டனர்.
அந்தக் குழுவில் இருந்த ஃப்ராங்க் வைல்ட் (Frank Wild) என்பவர் இனியும் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது என்ற நிலையை அடைந்தார்.
ஷாகில்டன் எந்த வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் தன் கையிலிருந்த கடைசி பிஸ்கட்டை எடுத்து அவரிடம் தந்தார்.
வைல்ட் அதை வாங்க மறுத்தார். உடனே ஷாகில்டன் வைல்டிடம் அதை அவர் வாங்க மறுத்தால் அந்த பிஸ்கட்டை தான் உறைபனியில் புதைத்து விடுவேன் என்றார். உடனே வைல்ட் அதை வாங்க ஒப்புக் கொண்டார்.
வைல்ட் பின்னால் எழுதினார் இப்படி: “உலகத்தில் அச்சடிக்கப்பட்ட எல்லாப் பணமும் கொடுத்தாலும் கூட அந்த பிஸ்கட்டை வாங்க முடியாது.”
பசியால் வருந்தும் ஒருவரே அந்த பிஸ்கட்டின் உண்மையான விலையைப் புரிந்து கொள்ள முடியும் என்றார் அவர்.
அந்தக் கணத்தில் ஷாகில்டன் ஒரு குழுவின் தலைவர் எப்படிப்பட்ட தியாகத்தை தனது உயர் நிலைமையையும். அதிகாரத்தையும் கருதாமல் செய்ய வேண்டும் என்பதை நிரூபித்தார்.
தனது சகாக்கள் துன்பப்படும் போது அவர்களை அவர் துன்பப்பட விடவில்லை. அவர்களுடன் அதே ஸ்லெட்ஜ் வண்டிகளில் தான் அவர் சென்றார். அவர்கள் சாப்பிட்ட அதே உணவைத் தான் அதே ரேஷன் அளவில் தான் உண்டார். ஒரே டெண்டில் தான் அவரும் அவர்களுடன் உறங்கினார். சேர்ந்து பகிர்ந்து கொண்ட அந்த கடுமையான துன்பமே அவரது தலைமைக்கான மதிப்பையும் அடையாளத்தையும் அளித்தது.
தன்னுடன் கூட வரும் சகாவின் துன்பத்தைப் போக்க தன்னிடம் இருப்பதை தியாகம் செய்யும் ஒரு பண்பே அவரது உண்மையான தலைமைப் பொறுப்பின் மகத்துவத்தை உணர்த்தியது. அத்துடன் அந்த தியாகமானது ஷாகில்டனின் உண்மையான தேவையைத் தியாகம் செய்ததை உணர்த்துகிறது. அந்தக் கணத்தில் அந்த இடத்தில் ஒவ்வொரு கலோரி உணவும் விலை மதிப்பே இல்லாததாகும். தன்னிடம் இருந்த ஒரே ஒரு பிஸ்கட்டை அவர் கொடுத்தது அவரது உயிரைத் தக்க வைப்பதையும் இழந்த ஒன்றாகும்.
பெயருக்குத் தியாகம் செய்வது என்பதற்கும் உண்மையான தியாகம் என்பதற்கும் உள்ள வேறுபாடு இது தான்!
இன்றைய பல தலைவர்கள் பெயருக்குப் பல விஷயங்களைத் தியாகம் செய்கின்றனர். அந்த தியாகத்தினால் அவர்களுக்கு ஒரு நஷ்டமும் ஏற்படப்போவதில்லை.
இன்னொரு விஷயம் யாருக்குமே தெரியாமல் அந்தரங்கமாய் அவர் செய்த செயலானது, அவருக்குப் புகழைப் பெற்றுத் தரப்போவதில்லை என்பதையும் அவர் அறிந்ததே தான்.
தலைமை தாங்கும் போது உருவாகும் சின்னச் சின்ன கணங்களும் கூட குழுவின் நெருக்கத்தை அதிகமாக்க உதவும். அவை யாராலும் பார்க்கப்படாமல் கூட இருக்கலாம். அந்தச் சிறிய கணங்கள் தாம் வாழ்நாள் முழுவதும் அதை அனுபவித்தவருக்கு நினைவில் இருக்கும்.
பின்னால் வைல்டின் எழுத்துக்கள் இதை நிரூபித்தன.
ஷாகில்டனுக்கோ இது வழக்கமான ஒரு செயலாகத் தான் இருந்தது. குழுவினருடன் அனைத்தையும் பகிர்வது, ஒரே டெண்டில் உறங்குவது இவையெல்லாம் அண்டார்டிகா பனிச்சறுக்கு சாகஸத்தின் ஒரு அங்கமாகவே இருந்தது.
இந்த பிஸ்கட் சம்பவம் அனைவருக்குமான ஒரு உதாரணமாகவும், குறிப்பாகத் தலைமைப் பொறுப்பை ஏற்பவர்களுக்கான சிறப்பான செயலாகவும் திகழ்கிறது.
தன் சகாவுக்காக தன்னையே இழக்கக்கூடத் தயாராக இருக்கும் இந்த பிஸ்கட் சம்பவம் ஒவ்வொரு தலைவரும் கடைப்பிடிக்க வேண்டிய உன்னத வழிமுறையாகும், இல்லையா?!
Pictures are taken from various sources for spreading knowledge.
This is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Please take it in a lighter vein!
Old classification of Tamil Brahmins is given at the bottom; Now let me give the real, modern classification:
When I looked for some suitable girls and boys for my relatives or friends for the purpose of marriage, I found out the real classification of Brahmins in Tamil Nadu from matrimonial websites. Apart from the matrimonial websites, my casual talks with other Brahmins also revealed amazing pictures!
***
There are Chicken only eating brahmins; they are very honest (!!) and they say they never touch red meat (!!).
Girls are very honest! They declare themselves Eggetarians!
There are also Chinese brahmins! Understood?
That means any thing that moves is tasty!
Most of the Brahmins are “socialising brahmins”! Understood? They will drink in parties, and they will “socialise” with men and women!
About Smoking? That is absolutely a stupid Question!
I used to photocopy 100 ++ year old novels from the British Library in London. I was surprised by some dialogues:
“Oh, No, don’t give your daughter to that boy; he is a Steam Engine ! “(in my early days I used to travel in trains with steam engines from Madurai to Madras; they emit more smoke than steam!)
“Oh, No, Don’t give your girl to that boy! He is foreign returned!” (That means he might have drunk).
Now a days Smoking is not all considered a factor;
About drinking they say” OK, Ok, If he drinks within the limits Ok, Ok. Who is there without drinking now a days. So that’s all alright!”
About foreign Trips?
Manu smritis banned Brahmins from going abroad.
Oldest Tamil book Tolkappiam banned women going abroad even with their husbands.
Now they are considered “past expiry date food products”. According to Maan und Tolkappian none in my family abroad are Brahmins!
***
According Shankaracharyas of great Mutts, Brahmins are the ones who do Tri Kala Sandhyavandana; that is you do the water oblation with Gayatri mantra three times a day. I will be very honest; I don’t even see it among priests!. They say their “practical work schedule “ don’t allow it. I myself do it twice a day after retirement in 2014. Before that I was doing only once.
To cut it short, do a survey to find out who does Tri Kaala Sandhyaa Vandana. You will get one or two percent brahmins saying “Yes”.
Leave alone Sandhyaa Vandana! Ask them whether do Ekakadasi fasting; ask them whether they do at least 12 or 14 monthly Tarpanas for the departed souls. Ask them whether they do Titis (annual Memorial Day ceremony). Again you will get 30 to 40 percent “Yes”.
***
Do you wear Punul (sacred thread)? Yes I do wear it says 90 Percent! That shows they are Rudraksha Cats (Cheating fellows)! Proud o be imitation Gold; proud to be Eversilver/stainless steel in instead of real gold or silvler.
About Onion Garlic eating?
If you ask any Brahmin, who was born after 1940s, They will retort What is this stupid question? Are you coming from Mars or Venus?
(Once I was surprised when my Sri Lankan friend in London Hanumar temple Garlic Vada from the idol of Anjaneya; another time I was fooled by my own Tamil priest; he orderd Vadais for Griha Pravesa Homan in my London house. The onion Vadais came! He cut a sorry face and apologised and blamed the Sri Lankan who forgetting his instructions made this mess)
Another time I organised big public Homa for the welfare of the world! 150 people came; the food never arrived; I made frantic phone calls. Food arrived one hour late with garlic and onion. He used to supply Pukka Vegetarian food. That time because of some electrical fault he got our dishes from “Somewhere”. God alone knows whether it was a vegetarian restaurant or Non vegetarian restaurant!
***
I will finish after giving a few interesting real anecdotes:
A distant brahmin relative used to visit us very often during his Europe trips and dine with us. He is very strict about Saturday fasting. Amazing it is not even a snack till sunset. I praised him like anything. During one trip we happened to be in the city area of London. “Oh, it will be too late when we go home for dinner; let us go into Mac Donald. I ordered Veggy sandwich carefully instructing Please don’t put Mayonnaise etc”.
To my surprise he ordered Chicken; I got angry and shouted t him forgetting that we are inside Mc Donald. All the white men were looking at us! Nowadays you won’t see white men in London.
Immediately he said unapologetically “what is wrong in it? Even Agastya ate non veg!” Now I became Rudra and shouted more!
Some white men even tried to pacify us! Then I recomposed myself said to him in a feeble voice: “Oh my God, any one can say Indra raped Ahalya; so nothing wrong in raping others’ wives!”
Then he also slowly cut down his visits to my house.
***
I am going to bore you with a few more!
I used to entertain one Tamil Ayyangar from Vellore in the BBC Canteen in Bush House in London when I worked there as a BBC broadcaster. During two or three occasional visits he ate Veggy food that I ordered! At one time he said that he wanted to pay for his own food. I said fair enough!Go ahead. He took chicken dish and paid for it.
I asked him: What is this? He told me he would never touch red meat !! but liked Chicken; his lame excuse was that when he came to London decades before me there were no Veggy dishes!
I came to Britain in 1987. He came in the 1970s.
***
Another anecdote
We were looking for a suitable girl for my son 15 or 20 years ago. Most of the girls we looked at matrimonial sites said they don’t know cooking, they take eggs, they are good at this or they are good at that. At last ,we came across one girl who was his university mate! We did not want to approach the family directly and so we sounded a common friend. Immediately that lady said “No way; that girl is not suitable”. When you hear something negative in such matters, you take it as a bad omen; so we did not ask her Why. Later enquiries found out that she was a chicken eating girl! Then we thanked God for that bad omen!
***
Cross marriages are very common among Brahmins in Britain and America. One orthodox Ayyangar woman got her daughter married to a white man. She praised him as a great supporter of Hindus etc. Years passed; I made casual enquiries about her family when I met her in one of the events; when the subject came about her children born to the girl and white man, she cut me halfway through our conversation, saying “Forget it”. Immediately I switched over to another topic seeing her disappointment.
Same thing happened with another London woman who went to settle down in Tamil Nadu. When she made a trip to London, I asked her How are the Tamil Brahmins there? And what difference she finds out between here and there? Immediately she cut me half way through our conversation “Never Ask it! Women are going out alone after leaving her children at someone’s care!”
I understood what she meant! Immediately I changed the topic.
I know you will also say hundreds of things like this. Let me give some interesting titbits from 1400 years old history. I went though 30 Pallava Inscriptions. Most of them are 1400 years old. Abou 1000 Brahmin names, their Gotras and their Sutras and their towns are given. No mention about sub divisions of Brahmins like Vadama, Brahacharanam, Ashtasahasram etc!
Sangam Tamil literature is 2000 years old. There also no subdivisions of Ayyar or Ayyangar.
About 60,000 Tamil inscriptions are available now. Most of them are about Donations to Brahmins called BRAHMADEYAM and Donations to Temples called DEVADAANAM. There also we don’t find subgroups. As far as I could remember only Chidambaram Dikshitars are mentioned in Saivite Hymns and Choza Inscriptions. May be Nambbodiris in Kerala inscriptions.
***
My friends on Facebook quote only Thurston Book! Those half baked friends have never gone through inscriptions or 2000-year-old Sangam literature or the commentaries.
We have thousands and thousands of references about Tamil brahmins. No Vadama, No vaththima, No Dosai ma, No Vadai ma, No Adai ma!
So, one must start one’s research from ancient Tamil books and ancient Tamil Nadu inscriptions.
Even such research is irrelevant because we have more drinking, smoking, chicken, egg, meat eating Brahmins and we have more Non Sandhayavandana Brahmins!
***
Now to the Sub groups from AI overview:
Tamil Brahmins are broadly divided into two main denominational groups: Iyers and Iyengars, alongside specialized priesthood castes.
Iyers (Smartha Brahmins):
Follow the Advaita philosophy associated with Adi Shankara.
Traditionally worship both Shiva and Vishnu, though many are primary devotees of Shiva.
Sub-divided based on regional origins and migration patterns (such as Vadama, Ashtasahasram, Brahacharanam, Kaniyalar, and Dikshitars). [
Iyengars (Sri Vaishnava Brahmins):
Follow Vishishtadvaita philosophy associated with Ramanuja.
Worship Lord Vishnu and his consort Lakshmi as primary deities.
Divided into two major theological sub-sects: Vadakalai (northern school) and Tenkalai (southern school).
Priesthood and Agamic Castes
Gurukkals / Adi Saivas / Sivacharyas:
Temple priests who follow Shaiva Siddhanta and the Shiva Agamas rather than traditional Vedic-only ritual paths.
Dikshitars:
A distinct community of Smartha/Shaivite priests traditionally serving at the Nataraja Temple in Chidambaram.
Classification by Veda and Sutra
Tamil Brahmin sub-sects are also categorized by the specific Veda and Grihya Sutra they follow for household and temple rituals:
Krishna Yajur Veda: Followers of the Apastamba Sutra and Bodhayana Sutra (the largest group).
Shukla Yajur Veda: Followers of the Kanva Sutra.
Rig Veda: Followers of the Aswalayana and Kathyayana Sutra.
Sama Veda: Followers of the Drahyana and Ranananyani Sutra.
Long Live Rudraksha Cats! Long Live Fake Brahmins!
–Subham—
Tags- Tamil Brahmins, Types, Groups, How many, what, FAKE, RUDRAKSHA CATS
Pictures are taken from various sources for spreading knowledge.
This is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
வால்மீகி என்ன சொன்னார் ?
சீதா தேவியிடம் இந்தக் கோட்டைத் தாண்டாதீர்கள் என்று லெட்சுமணன் பர்ணசாலைக்கு வெளியே கோடு போட்டதாகவும் அதற்கு லட்சுமண ரேகா என்று பெயர் என்றும் வால்மீகி சொன்னாரா ? அது ஏன் கம்பனில் இல்லை?
கையைப்பிடித்து சீதையை ராவணன் இழுத்ததாக வால்மீகி என்ன சொன்னாரா ? அதை ஏன் கம்பன் மாற்றினான் ?
ஒரே பாட்டில் சீதையை அசோக வனத்தில் சிறையில் வைத்தான் ராவணன் என்று கம்பன் சொன்னது போல வால்மீகியும் சொல்லிவிட்டு அடுத்த காட்சிக்குப் போய்விட்டாரா ? இவைகளை ஒப்பிட்டுப்பார்ப்பது அவசியம் (பின்னர் எழுதுகிறேன்).
ராவணனுக்கு பத்து தலையா ஒரு தலையா ? ரவி வர்மா படத்தில் ஒரு தலை உள்ளதே!
***
கம்ப ராமாயணம் முழுக்க படிக்க வேண்டாம்;ரொம்ப போர் அடிக்கும்! சுவையான பகுதிகளை மட்டும் படியுங்க!!
கம்பன் ஒவ்வொரு விஷயத்துக்கும் 10 அல்லது 15 பாடல்களை சொல்வதால் 10,000 பாடல்கள் கிடைக்கின்றன;அவைகளைப் படிக்க முடியாதோருக்கு சுவையான பகுதிகளை மட்டும் கேள்வி -பதில் வடிவில் தருகிறேன்;எப்போதும் என் பிளாக்குகளில் இலவசமாகக் கிடைக்கும்;தொடர்ந்து படியுங்கள்:
இதற்கு முன்னர் வெளியிட்ட 190 கேள்விகளும், விடைகளும் எனது பிளாக்குகளில் எப்போதும் கிடைக்கும்.
xxxx
191
ராவணனை துணிச்சலாக நில்லடா, எங்கடா போகிறாய் என்று ஏகவசனத்தில் பேசியது யார் ?
192
புலியைக் கண்ட மான் போல இந்திரனும் யமனும் யாரைக் கண்டால் நடுங்குவார்களாம்?
193
ராவணனை ஜடாயு எப்படித் தாக்கினான்?
194
ஜடாயு – ராவணன் போரினை ஏராளமான பாடல்களில் வருணிக்கும் கம்பன் இறுதியில் என்ன சொன்னான்?
195
ஜடாயு விழுந்தவுடன் தர்மம் தோற்குமா? வேதம் பொய்க்குமா? நரகம் வெல்லுமா? என்று சீதை புலம்பியதை கம்பன் எப்படி வருணித்தான் ?
196
ராவணன் சென்ற விமானம் பறவை தாக்கியதால் சேதம் அடைந்தது; பின்னர் ராவணன் சீதையை எப்படித் தூக்கிச் சென்றான் ?
197
அசோக வனத்தில் சீதையைச் சிறை வைத்தான் ராவணன் என்று ஒரே பாட்டில் சொல்லிவிட்டு, ஒரே தாவு தாவும் கம்பன் ,நம் மனத்தில் எழுப்பும் சந்தேகங்கள் என்ன ?
198
திரைப்பட டைரக்டர் கம்பன் நம்மை மீண்டும் இலங்கையிலிருந்து கோதாவரி நதி தீர காட்டுக்கு அழைத்துச் சென்றது எப்படி?
199
தம்பி நீ எப்படி இங்கு வந்த ?என்று சொல்லி மார்பில் இருந்த பூணூல் இறுகும்படி லெட்சுமணனனை ராமன் கட்டித் தழுவியது எங்ஙனம் ?
200
லெட்சுமணன் சொன்ன பதிலைக்கேட்டு ராமன் தன்னுடைய குற்றம் இது என்று ஒப்புக்கொண்டது எவ்வாறு?
XXXXXXXXXXXXX
விடைகள்
191.சானகியைக் கவர்ந்து செல்லும் இராவணனைச் சடாயு எதிர்த்தல்
என்னும் அவ் வேலையின்கண், ‘எங்கு
அடா போவது?’என்னா,
‘நில் நில்‘என்று,இடித்த சொல்லன்,
நெருப்பு இடைப் பரப்பும்கண்ணன்;
மின் என விளங்கும் வீரத்
துண்டத்தன்;மேரு என்னும்
பொன் நெடுங் குன்றம் வானில் வருவதே
பொருவும் மெய்யான்;
என்று (சீதை) சொல்லிய அந்தச் சமயத்தில்;எங்கே அடா
(என்னையும் மீறி) போவது;நில்நில் என்று
இடியோசை போல் ஒலிக்கும்
உரத்த சொற்களை உடையவனும்;
–சினத் தீ கண்களை உடையவனும்;
மின்னலைப் போல் (பளபளக்கும் அலகை உடையவனும்; பொன்னால் ஆகிய மேரு மலையே வருவது போல பெரிய உடலை உடையவனும் வானத்தில் பறந்து வருவது போன்ற (பேருடம்பினை) உடையவனும் – ஆகிய “எருவையின் மன்னன்”
வந்தனன்”
*****
மான்கள் புலியைக் கண்டது போல்
192.’எல்லா உலகங்களும்,இந்திரனும்,
அல்லாதவர் மூவரும்,அந்தகனும்,
புல்வாய் புலி கண்டதுபோல்வர் அலால்;
வில்லாளனை வெல்லும் மிடுக்கு உளரோ?
கழுகு மன்னன் ஜடாயு சொல்கிறான் : மூவுலகில் உள்ளவர் அனைவரும் இந்திரனும், மும்மூர்த்திகளும், (இந்த இராமலக்குவரைக் கண்டபோது) மான்கள் புலியைக் கண்டது போல் (அஞ்சி நடுக்கம் அடைவர் ) வில்தொழில் வித்தகனாகிய இராமனை வெல்லுதற்கு உரிய வலிமை உடையர் ஆவரோ? ஆகார்.
****
193.சண்டப் பிறை வாள்
எயிற்றான் சர தாரை மாரி
மண்ட,சிறகால் அடித்தான் சில;
வள் உகீரால்
கண்டப்படுத்தான் சில;
காலனும் காண உட்கும்
துண்டப் படையால்,சிலை துண்ட
துண்டங்கள் கண்டான்.
பிறை நிலவு போன்ற வளைந்த பற்களைக்கொண்ட ராவணனின் அம்புகள் தாக்கவே அவைகளை கழுகு அரசன் தன் சிறகுகளால் அடித்து வீழ்த்தினான்; சிலவற்றைத் தன் கூர்மையான (கால்) நகங்களால் துண்டாக்கினான்; – வில்லை யமனும் காண அஞ்சும் (தன்) மூக்காகிய படைக் கலத்தால் துண்டு துண்டுகளாக ஆக்கினான்.
****
194.ராவணன் வாளுக்கு யாரும் தப்பமுடியாது;இரண்டாவதாக ஜடாயுவுக்கு நிர்ணயிக்கப்பட்ட ஆயுளும் முடிவடைகிறது; மூன்றாவது இந்திரனின் வஜ்ராயுதம் தாக்கினால் எப்படி ஒருவர் வீழ்வாரோ அப்படி ஜடாயு நிலத்தில் விழுந்தான்.
வலியின்தலை தோற்றிலன்;மாற்ற
அருந் தெய்வ வாளால்
நலியும் தலை என்றது அன்றியும்,
வாழ்க்கை நாளும்
மெலியும் கடை சென்றுளது;ஆகலின்,
விண்ணின் வேந்தன்
குலிசம் எறியச் சிறை அற்றது ஒர்
குன்றின்,வீழ்ந்தான்.
இராவணன் வீசிய தெய்வ வாள் தப்பாமல் எதையும் அழிக்கும் தன்மை உடையது ஆதலாலும், சடாயுவின் வயது எண்ணரும் பருவங்கள் கடந்து முதிர்ந்து முடியும் காலம் நெருங்கி விட்டதாலும் யாரிடமும் தோற்காதவன் வச்சிரப் படை சிறகு அறுத்த மலை போல் விழுந்தான். (பறந்து வந்த மலைகளின் சிறகுகளை இந்திரன் அறுத்ததாக புராணங்கள் கூறும்).
***
195சீதையின் புலம்பல்
‘பின்னவன் உரையினை மறுத்து,பேதையேன்,
அன்னவன்தனைக் கடிது அகற்றினேன்;பொரு
மன்னவன் சிறை அற மயங்கினேன்;விதி
இன்னமும் எவ் வினை இயற்றுமோ?’எனா,
நான் ஒரு இடியட்/ முட்டாள் ! லெட்சுமணன் சொன்னதைக் கேட்காமல் அவனை விரட்டினேனே; விதியின் விளையாட்டு இது. இன்னும் என்ன என்ன ஆபத்து வரப்போகிறதோ?
அல்லல் உற்றேனை,வந்து, “அஞ்சல்” என்ற,இந்
நல்லவன் தோற்பதே? நரகன் வெல்வதே?
வெல்வதும் பாவமோ? வேதம் பொய்க்குமோ?
இல்லையோ அறம்?’என, இரங்கி ஏங்கினாள்.
பெருந்துன்பம் அடைந்தவளாகிய என்னை (காக்க) வந்து அஞ்சாதே (என்று ஆறுதல் கூறிய) இந்த நல்ல அறப் பண்புகள் உடையவன் ஆகிய (சடாயு) தோல்வி அடைவதா?; நரகைச் சேர்தற்கு உரியான் ஆகிய (இராவணன்) வெல்வதா?; பாவந்தானோ வெற்றி பெறுவது; வேதம் விளக்கும் (அறம்) பொய்த்து விடுமோ?; (இவ்வுலகில்) தருமம் இல்லாமல் போய்விட்டதோ என்று மனம் கலங்கிப் புலம்பினாள் சீதை.
***
196.ராவணன் சென்ற விமானத்தில்16குதிரைகள் (பொம்மைக் குதிரை?) இருந்தன ; அவைகளையும் விமானத்தையும் கழுகு அரசன் ஜடாயு சேதப்படுத்தினான் ; உடனே அதை நிறுத்தி விட்டு ராவணன் சீதையைத் தோளில் தூக்கிச் சென்றான்; அப்போதும் அவன் உடலில் படாமல் இருக்க நிலத்தோடு தூக்கித் தோளில் வைத்துக் கொண்டானாம் ராவணன் ( கொஞ்சம் நம்புவதற்குக் கஷ்டமான பாடல் !)
ஏங்குவாள் தனிமையும்,இறகு இழந்தவன்
ஆங்குறு நிலைமையும்,அரக்கன் நோக்கினான்;
வாங்கினன்,தேரிடை வைத்த மண்ணொடும்,
வீங்கு தோள்மீக் கொடு,விண்ணின் ஏகினான்.
சீதையினது தனிமையையும், சிறகு இழந்தவ சடாயு அடைந்த நிலைமையையும், அரக்கனாகிய இராவணன் பார்த்து (இனித் தடுப்பார் இல்லை என எண்ணி) தேரின் மேல் பெயர்த்து எடுத்து வைத்த நிலத்தோடு சீதையை எடுத்து(தன்) பருத்த தோள்களின் மேல் வைத்துக் கொண்டு ஆகாய வழியில் (இலங்கையை நோக்கிச்) சென்றான்.
சடாயு தேர்க் குதிரைகளைக் கொன்று (3438) தேர்ப் பாகனையும் அழித்தமை (3436) யால் இராவணன் சீதையைத் தேரில் கொண்டு செல்ல முடியாமையால் நிலத்தொடு பருத்த தோள் மீது ஏந்தி இலங்கையை நோக்கிச் சென்றான் என இப்பாடலில் கவிஞர் கூறியுள்ளார்.
MY COMMENTS
(இதில் வரும் புதிய விஷயங்களுக்கு விளக்கம் தேவைப்படுகிறது! முன்னொரு பாடலில் தேரில் (விமானத்தில்) 16 குதிரைகள் இருந்ததாகக் கம்பர் சொல்கிறார் ; அவை பொம்மைகளா ? இப்போது உரைகாரர் , தேர்ப்பாகன் அழிந்ததாகச் சொல்கிறார்; அப்படியானால் ராவணன் தேர்ப்ப்பாகனுடன் ( ஏர் பிளேன் பைலட்) வந்தனா ?)
***
197.வஞ்சியை அரக்கனும் வல்லை கொண்டுபோய்,
செஞ்செவே திரு உருத் தீண்ட அஞ்சுவான்,
நஞ்சு இயல் அரக்கியர் நடுவண்,ஆயிடை,
சிஞ்சுப வனத்திடைச் சிறைவைத்தான் அரோ.
அரக்கன் ஆகிய இராவணனும் வஞ்சிக் கொடி போன்ற சீதையை விரைவாக எடுத்துக் கொண்டு போய் சீதையை நேராகத் தொடுதற்கு அஞ்சியவனாய் அசோக வனத்தின் இடையில், நஞ்சின் தன்மை பொருந்திய கொடிய அரக்கியர்களுக்கு நடுவில் (சிறைக் காவலில் வைத்தான்.( சிஞ்சுபவனம் – அசோக வனம்)
கோதாவரி தீரத்தில் சீதை கடத்தப்பட்டாள்; அவளே கோதாவரியே! குயிலே! மயிலே! நீங்கள் எல்லாம் உதவக்க்கூடாதா என்று அலறியதைக் கம்பன் கூறினான் ; இப்பொழுது திடீரென்று ஒரே பாட்டில் இலங்கைக்கு காட்சியை மாற்றிவிட்டான் : எவ்வளவு தூரம் விமானத்தில் பறந்தனர் ? எவ்வளவு நேரம் ஆயிற்று ? என்பது நம் மனத்தில் எழும் சந்தேகங்கள் ; பின்னர் ஒரே பாட்டில் காட்சியை மீண்டும் கோதாவரி நதி தீர காட்டுக்கு மாற்றிவிடுகிறான்!
***
198.கம்பனே நான் காட்சியை மாற்றுகிறேன் என்று சொல்லி விடுகிறான்!
இந் நிலை இனையவன் செயல் இயம்பினாம்;
‘பொன் நிலை மானின்பின் தொடர்ந்து போகிய
மன் நிலை அறிக‘ என,மங்கை ஏவிய
பின் இளையவன் நிலை பேசுவாம் அரோ.
இராவணனது செயலை இவ்வாறாக எடுத்துக் கூறினோம்; அடுத்ததாக பொன் மானின் பின் போனவனைத் தொடர்ந்து சீதையின் கட்டளைப் படி போன இலக்குவனின் செயலைக் கூறுவோம்.
SIGNATURE AND STYLE OF KAMBAN:
(கம்பன் பாடல்களைக் கண்டுபிடிக்க உதவும் முத்திரை , பல பாடல்களை அரோ என்று முடிப்பான் ; அதற்கு பொருள் எதுவும் இல்லை ; செய்யுள் இலக்கணத்துக்கு உதவும் ஒரு சொல் ; இது கம்பனின் ஸ்டைல்!)
***
199.கம்பன் இந்தப்பாடலில் ராமன் பூணூல் பற்றி வலிய செப்புவது நோக்கற்பாலது;அத்தோடு சீதை,ஜடாயு,ராமன் வாயிலாக விதியின் வலிமை பற்றி அவ்வப்பொழுது கம்பன் பேசுவதும் குறிப்பிடத்தக்கது:
என்று உன்னி, ‘என்னை விதியார் முடிப்பது?’
என எண்ணி நின்ற இறையை,
பொன் துன்னும் வில் கை இள வீரன்
வந்து புனை தாள் இறைஞ்சு பொழுதில்,
மின்துன்னு நூலின் மணி மார்பு
அழுந்த,விரைவோடு புல்லி,உருகா-
நின்று, ‘உன்னி வந்த நிலை என்கொல்?’
என்று,நெடியோன் விளம்ப,நொடிவான்:
ஊழ்வினையால் என்ன கேடு வர இருக்கிறதோ? என்று எண்ணி நின்ற இராமன், தன் காலில் விழுந்த அழகிய வில் பிடித்த இலக்குவனைத்தன் முப்புரி நூல் அணிந்த மார்பில் இறுகத் தழுவி, நீ வந்த காரணம் என்ன என்று கேட்க, அதற்கு இலக்குவன் விடை கூறலானான்
***
200.அண்ணா! உன் பெண்டாட்டி சீதை, “நீ இப்பொழுது ராமனைத் தேடிக் கண்டுபிடிக்காவிடில் நான் தீயில் விழுந்து சாவேன் என்று காட்டுக்குள் ஒடத் துவங்கினாள்”- அதனால் வந்தேன் என்று இலக்குவன் சொன்னவுடன் “தம்பி உன் குற்றமும் அல்ல ; சீதை குற்றமும் அல்ல; இது எல்லாம் என் குற்றம்” என்று ராமன் சொன்னான்.
“ஏகாது நிற்றிஎனின்,யான் நெருப்பினிடை
வீழ்வென்” என்று,முடுகா,
மா கானகத்தினிடை ஓடலோடும்,மனம்
அஞ்சி,வஞ்ச வினையேன்,
போகாது இருக்கின்,இறவாதிருக்கை
புணராள் எனக்கொடு உணரா,
ஆகாது இறக்கை;அறன் அன்று;எனக்கொடு,
இவண் வந்தது‘என்ன,அமலன்,
‘நீ இராமனைத் தேடிச் செல்லா விட்டால் நான் நெருப்பில் விழுந்து உயிரை மாய்த்துக் கொள்வேன்’ என்று காட்டில் ஓடத் தொடங்கியதால், அஞ்சிப் போகாமல் இருந்தால் பிராட்டி இறந்து படுவார், அது தர்மம் ஆகாது என்று எண்ணி, உன்னைத் தேடி வந்தேன்’ என இலக்குவன் இராமனிடம் கூறினான்
ராமன் குற்றத்தை ஒப்புக்கொண்ட பாடல்
வந்தாய் திறத்தில் உளதன்று,குற்றம்;
மடவாள் மறுக்கம் உறுவாள்,
சிந்தாகுலத்தொடு உரைசெய்த செய்கை
அது தீரும் என்று தெளிவாய்;
முந்தே தடுக்க,ஒழியாது,எடுத்த
வினையேன் முடித்த முடிவால்,
அந்தோ கெடுத்தது‘என,உன்னி உன்னி
அழியாத உள்ளம் அழிவான்.
(சீதையைத் தனியே விட்டு விட்டு) வந்த உன்னனிடம்
குற்றம் எதுவும் இல்லை; பேதைமைப் பண்புள்ள சீதை, மனத் தடுமாற்றம் உடையவளாய் மனத்தில் தோன்றிய பெரும் துயரத்தோடு சொல்லியதும் ,அவள் சொல்லால் தோன்றிய வருத்தம் தீரும் என்று நினைத்து நீ இங்கு வந்ததும் எனக்குப் புரிகிறது ; (வந்தது மாயவல் அரக்கன் கொண்ட பொன் மான் உரு என்று) தெளிந்து கொண்டு (நீ) முன்பே என்னைத் தடுத்தாய் ;
அதையும் கேட்காமல் நான் எடுத்த முடிவு ஐயோ என்னைக் கெடுத்து விட்டது என்று எண்ணி எண்ணி; என்றும் அழிந்து வருந்தாத (தன்) மனம் வருத்தம் அடைந்தது
( ‘சீதை மனத்தில் பெருந்துயர் கொண்டு சொல்லிய சொல்லை ஏற்று அவளைத் தனியே விட்டு விட்டு வந்தது உன் குற்றம் அன்று. அவளும் மாய மானின் குரலை என் குரல் என்று எண்ணி உன்னிடம் கூறியதால் அவளிடமும் எக்குற்றமும் இல்லை. நீ தடுத்தும் அதை ஏற்காது மாய மானைத் தொடர்ந்து சென்று உங்கள் இருவரின் செயல்களுக்கும் காரணமான என்னால் தான் இத் துன்பம் ஏற்பட்டது’ என இராமன்இலக்குவனிடம் கூறினான். )
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
லலிதா சஹஸ்ர நாம பாராயணத்தால் ஏற்படும் பலன்கள் என்ன? – 5
ச. நாகராஜன்
ஸ்லோகம் 69
லௌகிகமான வசனங்களை (உலோகாயத பேச்சுக்களை) விட விஷ்ணு நாமானுகீர்த்தனமானது முக்கியமானது.
ஸ்லோகம் 70
விஷ்ணு நாமங்கள் ஆயிரத்தை விட சிவ நாமம் ஒன்று உத்தமமானது. ஆயிரம் சிவ நாமங்களை விட தேவியினுடைய ஒரு நாமம் மேலானது.
ஸ்லோகம் 71
அந்தக் கோடிக்கணக்கான சஹஸ்ர நாமங்களில் பத்து விதமான நாம சஹஸ்ரமானது முக்கியமாகச் சொல்லப்படுகிறது. அந்தப் பத்துக்குள் இந்த ரஹஸ்ய நாம சாஹஸ்ரம் சிலாக்கியமானது.
(பத்து முக்கிமான சஹஸ்ர நாமங்களாவன:
கங்கா பவானி காயத்ரீ காளீ லக்ஷ்மீ சரஸ்வதி |
ராஜராஜேஸ்வரி பாலா ச்யாமளா லலிதா தச: || )
ஸ்லோகம் 72
ஆகையால், கலியினால் ஏற்படும் தோஷத்தைப் போக்குவதற்காக இதை தினமும் கீர்த்தனம் செய்ய வேண்டும். மோகமடைந்த பக்தியை உடையவர்கள் அம்பாளுடைய நாமம் தான் முக்கியம் என்று அறிவதில்லை.
ஸ்லோகம் 73
சிலர் விஷ்ணு நாம பரர்களாயும், பிறர் சிவ நாம பரர்களாயும் இருக்கிறார்கள். லலிதாம்பாளுடைய நாம தத்பரர்களாக லோகங்களில் ஒருவர் கூட இல்லை.
ஸ்லோகம் 74
எவனால் கோடிக் கணக்கான ஜன்மங்களில் இதர தேவதைகளின் நாமங்கள் கீர்த்தனம் செய்யப்பட்டனவோ, அவனுக்கு மட்டுமே தான் ஶ்ரீ தேவியின் நாமகீர்த்தனத்தில் சிரத்தை உண்டாகிறது.
ஸ்லோகம் 75
எப்படி ஒருவன் கடைசி ஜன்மத்தில் ஶ்ரீ வித்யோபாஸகனாக ஆவானோ, அதே போல நாம சாஹஸ்ர பாடமும் கடைசி ஜன்மத்தில் ஏற்படும்.
ஸ்லோகம் 76
எப்படி உலகத்தில் ஶ்ரீ வித்யையின் ஆசாரத்தை அறிந்தவர்கள் மிகக் குறைவாக இருக்கிறார்களோ, அதேவிதமாக ரஹஸ்ய நாம சாஹஸ்ரத்தை படனம் செய்கின்றவர்களும் மிகக் குறைவாக இருக்கிறார்கள்.
இந்த நாம சாஹஸ்ரத்தைப் படனம் செய்யாமல் அம்பாளை சந்தோஷப்படச் செய்பவன் கண்ணில்லாமல் ரூபத்தைப் பார்க்கும் முட்டாளைப் போன்றவன்.
ஸ்லோகம் 79
எவன் இந்த ரஹஸ்ய நாமஸாஹஸ்ரத்தை விட்டுவிட்டு சித்தியை அடைய ஆசைப்படுகிறானோ, அவன் போஜனமில்லாமல் பசியைத் தீர்க்க விரும்புகின்றவன் என்பதில் சந்தேகமில்லை.
ஸ்லோகம் 80
எவன் லலிதாதேவியின் பக்தனோ அவன் இதை தினமும் கீர்த்தனம் செய்ய வேண்டும். நூற்றுக்கணக்கான கல்பகோடிகளிலும் வேறு விதமாக அம்பாள் ப்ரீதி அடைவதில்லை.
ஸ்லோகம் 81
ஆகையால் ஶ்ரீ மாதாவினுடைய ரஹஸ்ய நாமங்களை அடக்கத்துடன் படனம் செய்ய வேண்டும்.
ஹே, அகத்திய! இவ்விதம் இந்த ரஹஸ்யமான ஸ்தோத்ரமானது உனக்குச் சொல்லப்பட்டது.
ஸ்லோகம் 82
வித்யையை தெரியாதவனுக்கும், பக்தி இல்லாதவனுக்கும், ஒரு போதும் இதை சொல்லக்கூடாது. ஹே, முனே! எப்படி ஶ்ரீ வித்யையானது (ரகசியமாக வைத்து) காப்பாற்றப்பட வேண்டுமோ, அதேபோல இதுவும் காப்பாற்றப்பட வேண்டும்.
ஸ்லோகம் 83, 84
பசுவுக்குச் சமமான ஜனங்களிடத்தில் இந்த உத்தமமான ஸ்தோத்ரத்தைச் சொல்லக்கூடாது.
எந்த மூடாத்மாவானவன் ஶ்ரீ வித்யை இல்லாதவனிடத்தில் இதைக் கொடுக்கிறானோ, அவனிடத்தில் யோகினிகள் கோபிக்கிறார்கள். அது மிகவும் பெரியதான அனர்த்தம் என்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறாது.
ஆகையால் இந்த ரஹஸ்யநாம ஸாஹஸ்ரத்தை நன்றாக (ரகசியமாக வைத்து) காப்பாற்ற வேண்டும்.
ஸ்லோகம் 85
ஹே, அகத்திய! உனக்கும் கூட நான் இதை சுதந்திரமாய் (தானாக)
சொல்லவில்லை. இந்த உத்தமமான ஸ்தோத்ரத்தை லலிதாம்பாளின் தூண்டுதலின் (கட்டளையின்) பேரில் இது என்னால் சொல்லப்பட்டது.
ஸ்லோகம் 86
ஆகையால் இந்த நாம ஸாஹஸ்ரமானது, ஹே, அகத்திய! (உன்னால்) பக்தியுடன் இடைவிடாமல் கீர்த்தனம் செய்யப்பட வேண்டும். அதனால் மஹாதேவியானவள் சந்தோஷமடைந்தவளாய் உன்னுடைய அபீஷ்டத்தை நிரம்பக் கொடுப்பாள்.
ஸ்லோகம் 87
ஸூதர் சொல்கிறார்:-
ஶ்ரீ ஹயக்ரீவரானவர் இவ்விதம் சொல்லிவிட்டு, ஶ்ரீ லலிதாம்பிகையை தியானம் செய்து, ஆனந்தத்தில் முழுகிய மனதையுடையவராய் உடனே மயிர்க்கூச்சலை உடையவராக ஆனார்.
Pictures are taken from various sources for spreading knowledge.
This is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Points to Ponder
In Kural 501,note Dharma Artha Kama Moksha in the same order as we find in all Hindu scriptures!
The first Kural 501 is from Kautilya’s Arthaashastra book (1-10);one commentator who lived before Parimel Azakar himself said it 800 years ago. HA Popley also mentioned it. He quoted it from Dr K Krishnaswami Aiyangar’s book Some Contributions of South India to Indian Culture 1923 (page 127).
Kural 505 is the teaching in Bhagavad Gita, i.e. Karma Theory
Kural 510 is also an echo of Bhagavad Gita where Krishna said Samsayaatmaa Vinsyati= Doubting Thomasses perish
Valluvar did not hesitate to use Sanskrit words Kuti, Gunam, Karma.
***
H A Popley –Year 1931 in his book saya “this stanza (Kural 501) is certainly reminiscent of Arthasastra chapter 6 where four tests are given in a similar form. All other stanzas (Kurals) in this chapter are closely connected with chapter 4 of the H A Popley .
In short many scholars have noted the indebtedness of Valluvar to Chanakya.
****
Chapter 51- Selecting Trustworthy Ministers
***
Go to Project Madurai website for all Tamil books; it is free and trouble free. No advertisements; no cookies!
****
Following Translations are used:
1.A Aranganatha Mudaliyar – ANM+2 ( B.L. Aranganatha iyer and R. Srinivasa Desikan), Year 1933
2.S M Diaz, I G of Police- SMD, Year 2000
3.Rev.Dr.GU Pope – GUP, Year 1886
4.Suddhananda Bharathiyar- SB
5.EVS Publishers, Singapore- EVS, Year 1986
6.H A Popley – HAP (not full book; only selected couplets) Year 1931
7.Tamil Original
****
Part 69; Chapter 51 in Tirukkural Book. ON CHOSING THE RIGHT MEN; தெரிந்து தெளிதல்–Testing of men for confidence
***
501.Let a king watch whether a minister has love of right conduct, love of money, love of women and love of life and then choose him- A Aranganatha Mudaliyar – ANM+2 ( B.L. Aranganatha iyer and R. Srinivasa Desikan), Year 1933
***
501.The choice of the right executives should be decided on by the way they react to the
Fourfold tests concerning Virtue Wealth, Love and Fear of Death -S M Diaz, I G of Police- SMD, Year 2000
***
501 How treats he virtue, wealth and pleasure? How, when life’s at stake, Comports himself? This four-fold test of man will full assurance make. Let (a minister) be chosen, after he has been tried by means of these four things, viz,-his virtue, (love of) money, (love of) sexual pleasure, and tear of (losing) life.-Rev.Dr.GU Pope – GUP, Year 1886
***
501.Pleasure, gold, fear of life Virtue- Test by these four and trust the true. Suddhananda Bharathiyar- SB
***
501.Apply four tests in choosing genuine officers: virtue, wealth, pleasure and fear of death- EVS Publishers, Singapore- EVS, Year 1986
***
501.Choose your man well, after the fourfold test:
By dharma, riches, love and fear of death- H A Popley – HAP (not full book; only selected couplets) Year 1931
***
501. அறம்பொருள் இன்பம் உயிரெச்சம் நான்கின் திறந்தெரிந்து தேறப் படும்
XXXXXXXXXXXXXXXXXXXXX
502.The king’s choice should fall on him who has come of able lineage is blameless, and is afraid of sullying his fair name– ANM+2
***
502.A man of good family background, free of faults and sensitive to public censure,
Will be the right man to chose– SMD
***
502 Of noble race, of faultless worth, of generous pride That shrinks from shame or stain; in him may king confide. (The king’s) choice should (fall) on him, who is of good family, who is free from faults, and who has the modesty which fears the wounds (of sin).– GUP
***
502.Spotless name of noble birth Shamed of stain-that choice is worth. – SB
*** 502.The choice should only be of him who, born of good
Family, is free from faults and dreads dishonour -EVS Publishers
503.Put a man of vast learning and of unblemished character to a sever test. He too will display ignorance– ANM+2
***
503.Even among men of rare learning and virtue, on close scrutiny,
Some patches of ignorance could be spotted– SMD
***
503 Though deeply learned, unflecked by fault, ’tis rare to see, When closely scanned, a man from all unwisdom free. When even men, who have studied the most difficult works, and who are free from faults, are (carefully) examined, it is a rare thing to find them without ignorance.– GUP
***
503.Though deep scholars of stainless sense Rare is freedom from ignorance. – SB
***
503.Even among deep scholars of spotless hearts, it is difficult to find one perfectly free from ignorance-EVS Publishers
504.In the tangled obscurities of life, weigh the good and the evil of men and judge them according to their leanings– ANM+2
***
504.In the selection process, a person’s worth and his failings should be fairly weighed,
And choice should be made, if the good prevails– SMD
***
504 Weigh well the good of each, his failings closely scan, As these or those prevail, so estimate the man. Let (a king) consider (a man’s) good qualities, as well as his faults, and then judge (of his character) by that which prevails.– GUP
***
504.Good and evil in man weigh well Judge him by virtues which prevail. – SB
***
504.Consider the merits and also the faults; see which weigh more and choose the one with greater merit-EVS Publishers
***
504.Weigh well a man’s good traits and then his faults;
And value him on seeing which prevails –HAP
***
504. குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல் XXXXXXXXXXXXXXXXXXXXX
505.Men’s deeds ae the touchstone of their greatness or their littleness– ANM+2
***
505.One’s own deeds and behaviour will be the touchstone,
Which determines greatness or littleness– SMD
***
505 Of greatness and of meanness too, The deeds of each are touchstone true. A man’s deeds are the touchstone of his greatness and littleness.– GUP
***
505.By the touchstone of deeds is seen If any one is great or mean. – SB
***
505.A man’s deeds are the touchstone of his greatness and littleness-EVS Publishers
** *
505.For each man’s conduct is the touchtone sure
Both to his greatness and his smallness too- HAP
***
505. பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல்
XXXXXXXXXXXXXXXXXXXXX
506.Choose not ministers who knows no ties of kinship. Such men are hard of heart and devoid of shame– ANM+2
***
506.Persons of no background or kindred are unsuitable for ministerial positions,
For, being unattached, they will be impervious to shame– SMD
***
506 Beware of trusting men who have no kith of kin; No bonds restrain such men, no shame deters from sin. Let (a king) avoid choosing men who have no relations; such men have no attachment, and therefore have no fear of crime.– GUP
***
506.Choose not those men without kinsmen Without affine or shame of sin. – SB
***
506.Select not men without kinsmen and good tradition.
They have no affinity, no shame of sin-EVS Publishers
507.It is the height of folly to choose, through nepotism fools as your ministers– ANM+2
***
507.Making a foolish choice because of fond affection ,
Opens the way to all kinds of disaster– SMD
***
507 By fond affection led who trusts in men of unwise soul, Yields all his being up to folly’s blind control. To choose ignorant men, through partiality, is the height of folly.– GUP
***
507.On favour leaning fools you choose; Folly in all its forms ensues. – SB
***
507.If the leader chooses a favourite fool as an adviser, he will have to pay heavily for his folly-EVS Publishers
***
507. காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல் பேதைமை யெல்லாம் தரும் XXXXXXXXXXXXXXXXXXXXX
508.Reposing confidence in a minister without studying him, breeds millions of mischiefs even to generations of kings yet unborn– ANM+2
***
508.A king, who choses an untried stranger for executive positions
In in for endless trouble, for all posterity– SMD
***
508 Who trusts an untried stranger, brings disgrace, Remediless, on all his race. Sorrow that will not leave even his posterity will come upon him chooses a stranger whose character he has not known.– GUP
***
508.To trust an untried stranger brings Endless troubles on all our kins. – SB
***
508.The leader and his dynasty will suffer endless troubles if he trusts in a stranger without test-EVS Publishers
***
508. தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை தீரா இடும்பை தரும்
XXXXXXXXXXXXXXXXXXXXX
509.Weigh the merits of a minister and choose him and then assign him his proper sphere of work– ANM+2
***
509.Without appropriate test, no person should be chosen,
Once choice is made, entrustment of work should follow– SMD
***
509 Trust no man whom you have not fully tried, When tested, in his prudence proved confide. Let (a king) choose no one without previous consideration; after he has made his choice, let him unhesitatingly select for each such duties as are appropriate.– GUP
***
509.Trust not without testing and then Find proper work for trusted men– SB
***
509.Never trust a man without testing him; when the test is over decide what you can entrust him with-EVS Publishers
***
509. Trust no man whom you have not tried;
When tried, then trust with fitting task-HAP
*** 509. தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின் தேறுக தேறும் பொருள் XXXXXXXXXXXXXXXXXXXXX
510.He becomes a prey to a multitude of evils who has not exercised his choice of his ministers and ever suspicious of his chosen men– ANM+2
***
510.Trusting untried persons and doubting tested aides,
Will both lead to endless ills– SMD
*** 510 Trust where you have not tried, doubt of a friend to feel, Once trusted, wounds inflict that nought can heal. To make choice of one who has not been examined, and to entertain doubts respecting one who has been chosen, will produce irremediable sorrow.– GUP
***
510.Trust without test; The trusted doubt; Both entail troubles in and out. – SB
***
510.To trust a man without a test and to suspect a man after he has satisfied the test will cause endless misery-EVS Publishers
Pictures are taken from various sources for spreading knowledge.
This is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
கம்ப ராமாயணம் முழுக்க படிக்க வேண்டாம்;ரொம்ப போர் அடிக்கும்! சுவையான பகுதிகளை மட்டும் படியுங்க!!
கம்பன் ஒவ்வொரு விஷயத்துக்கும் 10 அல்லது 15 பாடல்களை சொல்வதால் 10,000 பாடல்கள் கிடைக்கின்றன;அவைகளைப் படிக்க முடியாதோருக்கு சுவையான பகுதிகளை மட்டும் கேள்வி -பதில் வடிவில் தருகிறேன்;எப்போதும் என் பிளாக்குகளில் இலவசமாகக் கிடைக்கும்;தொடர்ந்து படியுங்கள்:
இதற்கு முன்னர் வெளியிட்ட 180 கேள்விகளும்,விடைகளும் எனது பிளாக்குகளில் எப்போதும் கிடைக்கும்.
xxxxxxxxxxxxxxxxxxx
SITA AND GOLDEN DEER- VALMIKI RAMAYANA PICTURE
181. ராமனின் அபயக்குரல் கேட்டும் நீ போகாமல் இருப்பது ஏன் என்று சீதை கேட்டபோது ராமனுக்கு பூவுலகில் யாரும் தீங்கிழைக்கமுடியாது என்று லெட்சுமணன் பதில் சொன்னான் ;நீ போகாவிடில் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று எப்படி மிரட்டினாள் சீதை ?
182
லெட்சுமணன் ராமனைத் தேடிச் சென்ற பின்னர் ராவணன் எந்த உருவத்தில் சீதை இருக்கும் இடத்துக்கு வந்தான் ?
183
ராவணன் கிழவன் போல நடித்ததை கம்பன் எப்படி வருணிக்கிறான்?
184
ராவணனை துறவி என்று எண்ணி சீதை எப்படி உபசரித்தாள்?
185
ராவணன் சீதையிடம் ஒரு முறை கங்கை நதிக்குப் போயிருக்கிறேன் என்று ஏன் சொன்னான்?
186
சீதை நீங்கள் யார் என்று கேட்டதற்கு ராவணன் சொன்ன பதில் என்ன ?
187
சீதை- ராவணனின் உரையாடலில் அரக்கர்களை ராம பிரான் கொன்றுவிடுவான் என்று சொன்னவுடன் ராவணன் ஆத்திரம் அடைந்தது எவ்வாறு ?
சீதை ராவணன் செய்த மாயங்களை பட்டியலிட்டு “நீ சரியான ஆண்மகன் என்றால் என் கணவருடன் போர் செய்;தேரை நிறுத்து” என்று சொன்னபோது ராவணன் சிரித்துக்கொண்டே சொன்ன பதில் என்ன ?
RAMA’S FIGHT WITH DEMONS- VALMIKI RAMAYANA PICTURES.
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
விடைகள்
181.ஒரு பகல் பழகினார்
உயிரை ஈவரால்;
பெருமகன் உலைவுறு பெற்றி
கேட்டும்,நீ
வெருவலை நின்றனை;வேறு என்?
யான்,இனி,
எரியிடைக் கடிது வீழ்ந்து இறப்பென்,
ஈண்டு’எனா,
ஒரு நாள் மட்டும் பழகின வராயினும் அன்புடையோர் தாம் பழகியவர்க்காகத் தம் உயிரையும் கொடுத்து உதவி புரிவர்; (மாறாக) நீயோ ராமனின் அபயக்குரல் கேட்டும் அஞ்சாமல் நின்றாய்; இனி எனக்கு வேறு வழி யாது? இனிமேல் நான் தீயில் விரைந்து விழுந்து சாவேன் இவ்விடத்தே என்று மிரட்டினாள் சீதை.
**********************************
182.ராவணனின் தோற்றம்
இளையவன் ஏகலும்,
இறவு பார்க்கின்ற
வளை எயிற்று இராவணன்,
வஞ்சம் முற்றுவான்,
முளை வரித் தண்டு ஒரு
மூன்றும்,முப் பகைத்
தளை அரி தவத்தவர்
வடிவம்,தாங்கினான்.
இலக்குவன் அவ்வாறு சென்றதும் ,வளைந்த பற்களையுடைய இராவணன் தான் கருதிய வஞ்சகச் செயலைச் செய்து
முடிப்பதற்காக வரிந்து கட்டிய மூங்கில் தண்டுகள் ஒரு மூன்றையும் , (முக்கோல் அல்லது திரிதண்டம்) காமம் வெகுளி மயக்கம் எனும் மூன்று உட்பகையாம் கட்டுகளை அறுத்த தவ வடிவையும் ஏற்றுக் கொண்டான்.
காமம், வெகுளி மயக்கம் ஆகியவற்றை அடக்கியவர் என்பதை
இத் திரிதண்டம் குறிக்கும். ‘துறவிகளை முக்கோற் பகவர்’ என்பர்
நடப்பவனாகவும் காக்க இயலாமல் நடுக்கங் கொண்ட கால்களையும் கைகளையும் உடையவனாகவும் முதுமைப் பருவமும் பிறர் கண்டு வெறுக்கும் வகையில் முதியவனாகவும் ஆனான் (இராவணன்).
*************************
184.ஏத்தினள்;எய்தலும் “இருத்திர் ஈண்டு ” என
வேத்திரத்து ஆசனம் விதியின் நல்கினாள்;
மாத் திரி தண்டு அயல் வைத்த வஞ்சனும்
பூத் தொடர் சாலையின் இருந்த போழ்தினே.
இராவண சன்னியாசியை ‘இங்கு அமர்வீராக’ என்று கூறிப் பிரம்பு இருக்கையை அளித்தாள்; முக்கோலை அருகே வைத்த வஞ்சகனாம் இராவணனும் பூக்கள் படர்ந்து அழகுடன் விளங்கி யபர்ண சாலையில் உட்கார்ந்தான்
*****************
185.சீதையை யார் என்று கேட்டவுடன் அவள் தன்னைப்பற்றியும் தசரதன் மற்றும் ராமபிரானின் பெருமையையும் சொல்லவே,ஓஹோ நான் கூட ஒரு முறை கங்கை நதிக்குப் போயிருக்கிறேன் என்றான் ராவண சன்யாசி !
‘கேட்டனென்,கண்டிலென்;
கெழுவு கங்கை நீர்
நாட்டிடை ஒருமுறை
நண்ணினேன்;மலர்
வாள் தடங் கண்ணி! நீர்
யாவர் மா மகள்,
காட்டிடை அரும் பகல்
கழிக்கின்றீர்?’என்றான்.
நீர் கூறிய செய்திகளை நான் முன்னரே கேள்விப்பட்டுள்ளேன்; (ஆனால் அவரை = தசரதன்) நேரில் பார்த்ததில்லை; கங்கை பாயும் நாட்டுக்கு ஒரு தடவை போயிருந்தேன்; தாமரை மலர் போன்றும் வாள் போலும் நீண்டகண்ணையுடையவளே!; நீவிர் யாருடையபெருமைக்குரிய மகள்? இக் கொடிய காட்டில் நாட்களைக் கழிக்கின்றீர் எனக் கேட்டான்.
ஒரு முறை நண்ணினேன் என்பது முன்னர் இராவணன் திக் விசயம் செய்த போது அயோத்தியை ஆண்ட அனரணியன் என்ற மன்னனைப் போரில் வீழ்த்தி நிந்தித்ததான்; அவன் எங்கள் வம்சத்தில் வரப்போகும் ஒரு மன்னன் உன்னைக் கொல்வான் என்று சபித்த வரலாறு இங்கு சுட்டிக்காட்டப்படுகிறது.
*************************
186.ராவணனின் தற்பெருமைப் பேச்சு
‘இந்திரற்கு இந்திரன்;
எழுதல் ஆகலாச்
சுந்தரன்;நான்முகன்
மரபில் தோன்றினான்;
அந்தரத்தோடும் எவ்
உலகும் ஆள்கின்றான்;
மந்திரத்து அரு மறை
வைகும் நாவினான்.
தேவர் தலைவனாம் இந்திரனுக்கே தலைவன்; ஓவியத்தில் தீட்டற்கு அரிய அழகுடையவன் பிரமனின் குல வழியில் பிறந்தவன் ; வானில் உள்ள உலகத்தோடு எல்லா உலகங்களையும் ஆள்கின்றவன் ; மந்திரங்களைத் தம் இடமாகக் கொண்ட அரிய வேதங்கள் தங்கியுள்ள நாவை உடையவன்…..
சீதையின் கேள்விக்கு விடையாக இராவணன் பெருமை இது முதல் கூறப்பெறுகிறது.
‘ஈசன் ஆண்டு இருந்த பேர்
இலங்கு மால் வரை
ஊசி-வேரொடும் பறித்து
எடுக்கும் ஊற்றத்தான்;
ஆசைகள் சுமந்த பேர்
அளவில் யானைகள்
பூசல் செய் மருப்பினைப்
பொடிசெய் தோளினான்.
சிவபிரான் எழுந்தருளியுள்ள மிகப் பெரிய கயிலை மலையை
அக்காலத்தில் ஆணிவேருடன் அடியோடு பறித்து எடுக்கின்ற
வலிமையுடையவன்; திசைகளைத் தாங்கும் பெருமையில் அளவில்லாத யானைகளின் போர் புரியும் கொம்புகளைப் பொடி செய்யும் வலிய தோள்களை உடையவன்.
இதனால் இராவணன் பேராற்றல் விளங்கும்.
*********************
187.தீயாரைச் சேர்ந்தவரும் தீயவர்கள் —சீதை
ராவணன் தன்பெருமையெல்லாம் சொல்லி அரக்கன் என்று சொன்னபோது அய்யய்யோ! கெட்டவருடன் இருக்கும் யாரும் கெட்டவர்கள் என்ற பொன்மொழியை உதிர்த்தாள் சீதை!
சேயிழை-அன்ன சொல்ல,- ‘தீயவர்ச்
சேர்தல் செய்தார்
தூயவர் அல்லர்,சொல்லின்,தொல் நெறி
தொடர்ந்தோர்’என்றாள்;
‘மாய வல் அரக்கர் வல்லர்,வேண்டு
உரு வரிக்க’என்பது,
ஆயவள் அறிதல் தேற்றாள்;ஆதலின்,
அயல் ஒன்று எண்ணாள்.
(இராவணன் அத்தகைய சொற்களைக் கூற;
சீதை, கொடியவரை நட்பாகச் சேர்ந்தவர்கள்
தூயவர் ஆகார் என்றாள்.
‘தீயவர்ச் சேர்தல் செய்தார் தூயவர் அல்லர்’ என்ற கருத்து
‘மனந் தூய்மை செய்வினை தூய்மை இரண்டும் இனந்தூய்மை தூவா
வரும்’ (குறள். 455) என்ற கருத்துடன் ஒப்புடைத்து. அதற்கேற்பச்
சிற்றினம் சேர்ந்தவர் சிற்றினத்தாரே எனச் சீதை முடிவு செய்கிறாள்.
அரக்கன் மாயையால் துறவி வேடம் பூண்டு வந்தனன் என்பதைத்
தெளியாள். காரணம் அரக்கர்க்குத் தாம் வேண்டிய வடிவெடுக்கும்
ஆற்றல் உள்ளது என்பதை அறியா நிலையாகும். ‘அயல் ஒன்று
எண்ணாள்’ என்பது சீதையின் தூய மன நிலையைக் காட்டும்.
மனிதர்கள் புழுவுக்குச் சமன் என்று கூறி ராவணன் சீறினான்
‘விண்ணவர் ஏவல் செய்ய,வென்ற
என் வீரம் பாராய்;
மண்ணிடைப் புழுவின் வாழும்
மானிடர் வலியர் என்றாய்;
பெண் எனப் பிழைத்தாய் அன்றேல்;உன்னை
யான் பிசைந்து தின்ன
எண்ணுவென் என்னின்,பின்னை என்
உயிர் இழப்பென் என்றான்.
தேவர்கள் யான் ஏவிய குற்றேவல் செய்ய அவர்களை வென்ற என் வீரத்தை நீ கருதாமல், இவ்வுலகில் இழிந்த புழுப் போல் வாழும் மனிதரை வலிமை உடையவர் எனக் கூறினாய்; ஒரு பெண் என்ற காரணத்தால் நீ உயிர் பிழைத்துள்ளாய்; அல்லாவிடில் உன்னை என் கைகளால் பிசைந்து உண்ண நினைப்பேன்; அவ்வாறு எண்ணிச்
செயல்பட்டேனென்றால் (உன்னை அடைய முடியாததால்) பின்னர் என் உயிரைப் போக்கிக் கொள்வேன் என்று கூறினான் இராவணன்.
*******************
188.இராவணன் பன்னசாலையோடு சீதையை எடுத்தல்
ஆண்டு,ஆயிடை,தீயவன் ஆயிழையைத்
தீண்டான்,அயன் மேல் உரை சிந்தைசெயா;
தூண்தான் எனல் ஆம் உயர் தோள் வலியால்,
கீண்டான் நிலம்;யோசனை கீழொடு மேல்.
அப்பொழுது தீயவனாம் இராவணன் பிரமன் முன்னரிட்ட சாபத்தை மனத்தில் எண்ணி அணிகலன்கள் அணிந்த சீதையின் திருமேனியைத் தொடாமல் கல்தூண்கள் போன்ற தோள்களின் வலிமையால், சீதை இருந்த பூமியின் கீழேயும் பக்கங்களிலும் ஆக ஒரு யோசனை அளவு பெயர்த்தெடுத்தான்.
பிரம்மா கொடுத்த சாபம் பின்னர்ச் சடாயு உயிர் நீத்த படலத்தில் வருகிறது ; இது தவிர இராவணனுக்கு வேதவதி, அரம்பை, நரி கூபரன், புஞ்சிகத்தலை
ஆகியோராலும் சாபங்கள் உண்டு. நிலத்தொடு பெயர்த்தெடுத்த செய்தி கம்பரின் படைப்பு. இவ்வாறு படைத்தது மட்டுமின்றி நூலில் பல இடங்களில் இதனைக் கூறியுள்ளார்.
குபேரனின் அளகாபுரியில் அரம்பையை இராவணன் கற்பழித்த போது அவள் இட்ட சாபம் ‘வலிய ஒரு பெண்ணைத் தீண்டின் அவள் கற்புக் கனலால் எரிவாய் என்பதாம் ; இவ்வாறே நளகூபனும் புஞ்சிகத்தலையும் சாபம் இட்டனர் என்பர். இவ்வாறு இராவணன் பெற்ற சாபம்பற்றிப் பல கதைகள் உள.
(அவ்வாறு பெயர்த்த நிலத்தை) உயர்ந்த தன் தேர் மேல் வைத்துக் கொண்டான்;அச் செயலை அழகிய வளையணிந்த சீதை பார்த்தாள்; தன்னுடைய அரிய உயிரைக் காணவில்லை; தனக்குரிய நிலமாம் மேகத்தை விட்டுத் தரையில் விழுந்த ஒரு மின்னற் கொடி போலக் கலங்கினாள் (அப்போது இராவணன்); ஆகாய வழியாக விரைவிற்செல்லக் கருதினான்.
*****
190.அரக்கன் மறுமொழியும் சீதையின் எதிர்மொழியும்
என்று,இன்ன பலவும் பன்னி,
இரியலுற்று அரற்றுவாளை,
‘பொன் துன்னும் புணர் மென் கொங்கைப்
பொலன்குழாய்! போரில் என்னைக்
கொன்று,உன்னை மீட்பர்கொல்,அம்
மானிடர்?கொள்க’என்னா,
வன் திண்கை எறிந்து நக்கான்-
வாழ்க்கைநாள் வறிது வீழ்ப்பான்.
இவ்விதம் பல சொற்களைச் சொல்லி வாய் விட்டுப்புலம்பி அழும் சீதையை, (நோக்கி இராவணன்; பொற்கலன்கள் அணிந்த நெருங்கிய மார்புகளை உடைய அழகிய குண்டலமணிந்த பெண்ணே!; அந்த மனிதர்கள் சண்டையில் என்னைக் கொன்று உன்னை மீட்டு விடுவார்களோ?; முடிந்தால் மீட்டுக் கொள்ளட்டும்; என்று கூறி வலிய திண்ணிய கைகளைப் புடைத்துச் சிரித்தான்.
மொழிதரும் அளவில், ‘நங்கை! கேள் இது;
முரண் இல் யாக்கை
இழிதரு மனிதரோடே யான் செரு
ஏற்பன் என்றால்,
விழி தரு நெற்றியான்தன் வெள்ளி
வெற்பு எடுத்த தோட்குப்
பழி தரும்;அதனின் சாலப் பயன் தரும்,
வஞ்சம்’என்றான்.
பெண்ணே!; இதனைக் கேட்பாயாக; வலியற்ற உடலை உடைய இழிவான மனிதர்களுடன் நான் போர் செய்ய முனைந்தால் நெற்றியில் கண்ணுடைய சிவபெருமானின் கயிலை மலையை எடுத்த தோள்களுக்கு அவமானம் உண்டாக்கும்; அதைக் காட்டிலும் இது போன்ற வஞ்சகச் செயல்களுக்கு பலன் அதிகம் !
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
லலிதா சஹஸ்ர நாம பாராயணத்தால் ஏற்படும் பலன்கள் என்ன? – 4
ச. நாகராஜன்
ஸ்லோகம் 51
சமஸ்தமான தந்த்ரங்களிலும் இதற்கு சமானமான (இதைப் போன்ற) ஸ்தோத்திரம் கிடையாது. ஆகையால் உபாஸகனானவன் இதை சிரத்தையுடன் தினந்தோறும் (உயிருள்ள வரையில்) கீர்த்தனம் செய்ய வேண்டும்.
ஸ்லோகம் 52
இந்த ஆயிரம் நாமங்களால் ( இனி, மேலே சொல்லப்படும்) புஷ்பங்களைக் கொண்டு) ஶ்ரீ சக்ரத்தை எவன் ஒருவன் ஒரு தடவையாவது அர்ச்சிக்கிறானோ,
ஸ்லோகம் 53. 54
தாமரைப் புஷ்பங்கள் அல்லது துளஸியின் புஷ்பங்கள் அல்லது செங்கழுநீர் புஷ்பங்கள் அல்லது நானாவிதமான கதம்ப புஷ்பங்கள் அல்லது சம்பக புஷ்பங்கள் அல்லது ஜாதி புஷ்பங்கள் அல்லது மல்லிகை புஷ்பங்கள் அல்லது அரளிப் புஷ்பங்கள் அல்லது நெய்தல் புஷ்பங்கள் அல்லது பில்வ பத்ரங்கள் அல்லது முல்லைப் புஷ்பங்கள் அல்லது குங்குமப் பூக்கள் அல்லது பாடலீ புஷ்பங்கள் அல்லது தாழம்பூ, வாஸந்தி முதலான நல்ல மணமுள்ள வேறு புஷ்பங்களால் (எவன் ஒருவன் ஶ்ரீ சக்ரத்தை இந்த ஆயிரம் நாமங்களைச் சொல்லி ஒரு தடவையாவது அர்ச்சிக்கிறானோ)
அதனால் ஏற்படும் புண்ய பலனைச் சொல்வதற்கு மஹேஸ்வரனால் கூட முடியாது.
ஸ்லோகம் 55
தன்னுடைய சக்ரத்தை அர்ச்சனம் பண்ணுவதினால் ஏற்படும் பலன் எவ்வளவென்று லலிதாதேவிக்குத்தான் தெரியும். (அப்படி இருக்கும்போது) ஸ்வல்பமான புத்தியையுடைய ப்ரம்ஹாதிகள் அதை எப்படி அறிவார்கள்?!
ஸ்லோகம் 56
ஒவ்வொரு மாதமும் பௌர்ணமியில் ராத்திரியில் ஶ்ரீ சக்ரத்திலிருக்கும்படியான பரதேவதையை எவன் ஒருவன் மேலே சொன்ன புஷ்பங்களைக் கொண்டு இந்த ஆயிரம் நாமங்களால் அர்ச்சனை செய்கிறானோ,
எந்த பக்தன் ஒருவன் மஹாநவமி தினத்தில் ஶ்ரீ சக்ரத்தின் மத்தியில் இருப்பவளான ஶ்ரீ தேவியை (இந்த) ஆயிரம் நாமங்களால் அர்ச்சிக்கிறானோ அவனுக்கு முக்தியானது கையிலிருக்கிறது.
(நவராத்திரியின் கடைசி இரு தினங்கள் மஹாநவமி என்று சொல்லப்படும்)
ஸ்லோகம் 59
எவன் ஒருவன் வெள்ளிக்கிழமையில் மஹாதேவியை ஶ்ரீ சக்ரத்தில் இந்த நாம சஹஸ்ரத்தால் நன்றாக அர்ச்சனம் பண்ணுகிறானோ அவனுடைய புண்யபலனை (சொல்கிறேன்) கேள்.
ஸ்லோகம் 60
இங்கேயே தன்னுடைய விருப்பங்கள் யாவற்றையும் அடைந்து, சகலவிதமான ஸௌபாக்யத்தை உடையவனாய், புத்ர, பௌத்ராதிகளோடு கூடியவனாய், தான் இஷ்டப்பட்ட போகங்களை அனுபவித்து விட்டு,
ஸ்லோகம் 61
கடைசியாக, சாமான்யமாய்க் கிடைக்கக்கூடாததும், சிவன் முதலிய தேவர்களாலும் வேண்டப்படுவதுமான ஶ்ரீ லலிதாம்பாளுடைய சாயுஜ்யத்தை அடைகிறான். அதில் சந்தேகம் இல்லை.
ஸ்லோகம் 62
எவன் ஒருவன் பக்தியோடு ஆயிரம் ப்ராம்ஹணர்களை இந்த சஹஸ்ர நாமங்களால் நன்றாகப் பூஜித்து, பாயசம், அபூபம் முதலிய ஷட்ரஸோபேதமான வஸ்துக்களால் போஜனம் செய்விக்கிறானோ,
ஸ்லோகம் 63
அவனிடம் ஶ்ரீ லலிதாம்பாளானவள் ப்ரீதியடைந்து தன்னுடைய சாம்ராஜ்யத்தை அவனுக்குக் கொடுக்கிறாள். அவனுக்குக் கிடைப்பதற்கரிதான வஸ்து இந்த மூன்று லோகத்திலும் யாதொன்றுமில்லை.
ஸ்லோகம் 64
நிஷ்காமனாக எவன் ஒருவன் இந்த உத்தமமான நாம சஹஸ்ரத்தைக் கீர்த்தனம் செய்கிறானோ அவன் பந்தங்களிலிருந்து விடுவிப்பதான ப்ரஹ்மஞானத்தை அடைகிறான்.
ஸ்லோகம் 65
இந்த நாம சஹஸ்ரத்தைக் கீர்த்தனம் செய்வதினால் தனத்தை விரும்புகின்றவன் தனத்தை அடைகிறான். யசஸ்ஸை விரும்புகிறவன் யசஸ்ஸை அதிகமாக அடைகிறான். வித்யையை விரும்புகிறவன் வித்யையை அடைகிறான்.
ஸ்லோகம் 66
ஹே, முனே! போகம், மொக்ஷம் இவை இரண்டையும் கொடுக்கக்கூடிய ஸ்தோத்ரம் இதற்கு சமானமானது ஒன்றுமில்லை. ஆகையினால் போக மோக்ஷங்களை விரும்பும் நரர்கள் அதை கீர்த்தனம் செய்ய வேண்டும்.
ஸ்லோகம் 67
நான்கு வர்ணத்திலிருப்பவர்களாலும் தங்கள் தர்மத்தை சரிவர அனுஷ்டிப்பதில் ஏற்படக்கூடிய குறைவுகளைப் பூர்த்தி செய்வதற்காக இந்த நாம சஹஸ்ரமானது எப்போதும் கீர்த்தனம் செய்யப்பட வேண்டும்.
ஸ்லோகம் 68
பாவமே மேலிட்டிருப்பதும், தர்மானுஷ்டானமில்லாததுமான கலியுகத்தில் நரர்களுக்கு நாமகீர்த்தனத்தை விட்டால் வேறு
Pictures are taken from various sources for spreading knowledge.
This is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
கம்ப ராமாயணம் ரொம்ப – போர் அடிக்கும் ! முழுக்க படிக்க வேண்டாம்;சுவையான பகுதிகளை மட்டும் படியுங்க!!
இப்பொழுது மூன்றாவது முறையாக கம்ப ராமாயணத்தைப் படிக்கிறேன்;முதல் தடவை 25 ஆண்டுகளுக்கு முன்னர்;இரண்டாம் தடவை பிரிட்டனிலுள்ள என் நண்பர்களுக்கு ஞாயிறு காலைதோறும் ஆன் லைன் கிளாஸ்ON LINE CLASSஎடுத்த போது;அப்போதும் கூட என் நோட்ஸிலிருந்து சுவையான பகுதிகளை மட்டுமே பகிர்ந்து கொண்டேன்;கம்பன் ஒவ்வொரு விஷயத்துக்கும் 10 அல்லது 15 பாடல்களை சொல்வதால் 10,000 பாடல்கள் கிடைக்கின்றன;அவைகளைப் படிக்க முடியாதோருக்கு சுவையான பகுதிகளை மட்டும் கேள்வி -பதில் வடிவில் தருகிறேன்;எப்போதும் என் பிளாக்குகளில் இலவசமாகக் கிடைக்கும்;தொடர்ந்து படியுங்கள்:
இதற்கு முன்னர் வெளியிட்ட 170 கேள்விகளும்,விடைகளும் எனது பிளாக்குகளில் எப்போதும் கிடைக்கும்.
xxxxxxxxxxxxxxxxxxx
171
RAVANA TRAVELLING BY CHARTERED FLIGHT ALL ALONE
ராவணன் சீதையைப் பிடிக்க எண்ணி மந்திரிமார்களைக் கலந்து ஆலோசித்தான் ; அவர்கள் சொன்ன சொல் அவன் மனதில் பதியவில்லை ; பின்னர்
ராவணன் தனி விமாமனத்தில் CHARTERED FLIGHTசார்ட்டர்ட் பிளைட்டில்எங்குசென்றான் என்று கம்பர் மொழிகிறார் ?
172
மன்னர் மன்னா ! என்னைக் காண வந்த காரணம் யாதோ என்றும் மாரீசன் வினவ,சீதையைக் கவர்ந்து வர உன் உதவியை நாடி வந்தேன் என்று உரைத்தனன் ராவணன் . உடனே தாய்மாமன் மாரீசன் என்ன சொன்னான் ?
173
நன்மையும் தீமை அன்றே,நாசம்
வந்து உற்ற போது?-விநாச காலே விபரீத புத்தி- என்று மாரீசன் சொன்னது என்ன ?
174
தங்க வர்ண மான் வடிவில் வந்த மாரீசனை மான் என்று கருதி ராமனிடம் சீதை செப்பியது என்ன ?
175
LAKSHMANA! THIS WORLD IS FULL OF MILLION NATURAL WONDERS- RAMA
உலகில் பல கோடி இயற்கை அதிசயங்கள் இருப்பதாக ராமன் வாயால் கம்பன் பாடியது எப்படி?
176
மாய மான் பற்றி மீண்டும் லெட்சுமணன் என்ன எச்சரிக்கை விடுத்தான்?
177
லெட்சுமணன் மாய மான் மாரீசன் என்று கண்டுபிடித்தது எப்படி ?
178
அடக் கடவுளே ;என் தம்பி சொன்னது சரியாப்போச்சே – என்று ராமன் உணர்ந்தது எப்போது ?
179
மாய மான் என்று தெரிந்து ராம பிரான் அம்பு எய்தியவுடன் மாரீசன் செய்த தந்திரம் என்ன ?
180
மாரீசன் செய்கையால் ராமபிரானுக்கு மனதில் எழுந்த அச்சம் என்ன ?
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
விடைகள்
171.வந்த மந்திரிகளோடு மாசு அற
மனத்தின் எண்ணி,
சிந்தையில் நினைந்த செய்யும் செய்கையன்,
தெளிவு இல் நெஞ்சன்,
அந்தரம் செல்வது ஆண்டு ஓர்
விமானத்தில்,ஆரும் இன்றி,
இந்தியம் அடக்கி நின்ற மாரீசன்
இருக்கை சேர்ந்தான்.
அங்கு வந்து சேர்ந்த அமைச்சர்களுடன் ஆலோசனை செய்தபின், தெளிவு பிறக்காத நெஞ்சம் உடையவனாய், (இறுதியில் தான்) மனத்தில் கருதியதையே செய்யும் எண்ணத்துடன் இராவணன் எவர் துணையும் இல்லாமல் ,விண்ணில் செல்லும் ஒரு
விமானத்தில் ஏறி, புலன்களை அடக்கித் தவம் செய்கின்ற, மாரீசன் என்பானது இருப்பிடத்தை அடைந்தான்.
மாரீசன்
இராவணனுக்குத் தாய் வழி மாமன் ஆவான். விசுவாமித்திரர் செய்த வேள்வியைக் காக்கச் சென்ற இராமபிரானது கணைக்குத் தப்பி ஓடிப் பிழைத்தவன் இவன். இராமபாண தீட்சையால் பழி நெறி மாறித் தவநெறி மேற்கொண்டவன் இவன். ஆதலால், ‘இந்தியம் அடக்கி நின்ற மாரீசன்’ என்றார்.
*******************************
172. ராவணன் பேச்சைக்கேட்டு மாரீசன் சீச் சீ என்று சொல்லிக் காதை மூடிக்கொண்டு நிறைய அறிவுரைகளை வழங்கினான் ; அதில் ஒன்று :
‘மாண்டார்,மாண்டார்;நீ இனி
மாள்வார் தொழில் செய்ய
வேண்டா,வேண்டா;செய்திடின்,
உய்வான் விதி உண்டோ?
ஆண்டார் ஆண்டார் எத்தனை
என்கேன்?அறம் நோனார்,
ஈண்டார்;ஈண்டு ஆர் நின்றவர்?
எல்லாம் இலர் அன்றோ?
ஏற்கெனவே இறந்தவர்கள் இறந்து போயினர்; இனிமேல் நீ மரணமுறப் போகின்றவர்கள் செயத் தக்க செயலைச் செய்ய
வாழ்ந்ததில்லை ;இவ்வுலகில் அழியாது நிலைத்தாரும் யாரும் இல்லை . எல்லாரும் இல்லாமல் மறைந்தவர்கள் தானே?
ராமன் அம்பினால் இறந்த விராதன், கரன் முதலிய பெயர்களை சொல்லிவிட்டு உனக்கும் அதே கத்தி வரும் என்று மாரீசன் எச்சரித்தான்.
********************
173.ராவணன் கோபப்பட்டு பேசியவுடன் மீண்டும் மாரீசன் அறிவுரை வழங்கியும் கேளாது போகவே விநாச காலே விபரீத புத்தி; நான் என்ன செய்யவேண்டும் சொல்லித் தொலை என்றான்
உன்வயின் உறுதி நோக்கி,உண்மையின்
உணர்த்தினேன்;மற்று,
என்வயின் இறுதி நோக்கி,அச்சத்தால்
இசைத்தேன் அல்லேன்;
நன்மையும் தீமை அன்றே,நாசம்
வந்து உற்ற போது?
புன்மையின் நின்ற நீராய்!
செய்வது புகல்தி’என்றான்.
(இராவணனாகிய) உன் நலத்தினை நாடி, உண்மையைச் சொன்னேன்
எனக்கு அழிவு நேரும் என்று பயம் காரணமாக சொல்லவில்லை;
அழிவு நெருங்கி வரும் நேரத்தில் நல்லது சொன்னாலும் அது தீமையாகவே கருதப்படும் அல்லவா? கெட்ட பயலே ! நான் என்ன செய்ய வேண்டும் ; செப்புடா செப்பு
*********************
174.போர் செய்து சீதையை எடுத்துக்கொள் என்று மாரீசன் சொன்ன யோசனையை ஏற்காது ஏமாற்றித்தான் சீதையைப்பிடிக்க வேண்டும் என்று ராவணன் சொன்னவுடன் விதியை யாரே தடுக்கவல்லார் என்று நொந்து அவன் சொன்னபடி தங்க நிற மான் போல மாரீசன் சென்றான்
ஆணிப் பொனின் ஆகியது;
ஆய் கதிரால்
சேணில் சுடர்கின்றது;திண்
செவி,கால்,
மாணிக்க மயத்து ஒரு
மான் உளதால்;
காணத் தகும்’என்றனள்,
கை தொழுவாள்.
(இராமனிடம் சென்று சீதை); மாற்றுயர்ந்த பொன்னால் ஆனதும்,
பளபளக்கின்றதும், வலிய காதுகளும் கால்களும் சிவந்த
மாணிக்கங்களால் ஆகியதுமான ஒரு மான் வந்திருக்கிறது காண்பதற்கு இனிதானது என்று கூறி கையால் வணங்கி நின்றாள்;
அம் மான் வேண்டுமென வாயால் கூறாது உணர்த்திக் காட்டினாள்.
************************************
175.லெட்சுமணன் இது மாய மான் என்றவுடன் ராமன் சொல்கிறான்:
மாய மானக் கண்டு முதலில் ஏமாந்த ராமன் உலகம் பல கோடி அதிசயங்களை உடையது லெட்சுமணா ! நீ சின்னப் பையன் உனக்குத் தெரியாது – என்றான்
நில்லா உலகின் நிலை,நேர்மையினால்
வல்லாரும் உணர்ந்திலர்;மன் உயிர்தாம்
பல் ஆயிரம்கோடி பரந்துளதால்;
இல்லாதன இல்லை-இளங்குமரா!
தம்பி! பெரிய பெரிய அறிவாளிகளும் நிலையில்லா உலகின் தன்மை முற்றும் அறிந்ததில்லை; இந்த உலகில் வாழும் உயிரினங்கள் எண்ணிலாக் கோடிகளாய் விரிந்து பரந்து உள்ளன; இவ்வுலகில் இல்லாதவை என்று (நம் அறிவை மட்டும் வைத்து) எவற்றையும் விலக்கிக் கூற முடியாது’ (என்றான் இராமன்).
உயிரினங்களின் வகைகள் 84 லட்சம் என்று பிற்காலப் பக்திப் பாடல்களில் வருகிறது ; விஞ்ஞானிகளும் அதையே கூறுகின்றனர்!
*************************
176.மாய மான் பற்றி மீண்டும் லெட்சுமணன் எச்சரிக்கை விடுத்தான்: தங்க மான் என்றாலும் நமக்கு என்ன பயன்? என்று கேட்டான்
‘பின் நின்றார் இனையர் என்றும்
உணர்கிலம்;பிடித்த மாயம்
என் என்றும் தெளிதல்
தேற்றாம்;யாவது ஈது என்றும் ஓராம்;
முன் நின்ற முறையின்
நின்றார் முனிந்துள வேட்டம் முற்றல்,
பொன் நின்ற வயிரத் தோளாய்! புகழ்
உடைத்தாம் அன்று’என்றான்.
பொன் போல் அழகிய வைரம் பாய்ந்த தோள்களை உடையவனே; இம் மாயமானை ஏவிப் பின்னே நிற்பவர் யாவர் என்றும் தெரியவில்லை; அவர்கள் கைக்கொண்டுள்ள மாயை எத்தகையது என்றும் உணர இயலவில்லை; இம் மான் தான் எத்தகையது என்றும் எண்ணிப் பார்க்க முடியவில்லை (அதனால்); நமக்கு
முன்னே நீதி நெறியில் நின்ற பெரியோர்கள் வெறுத்து ஒதுக்கிய வேட்டைத் தொழிலில் ஈடுபடுதல்புகழ் தரும் செயல் அன்று
என்று (இலக்குவன்) கூறினான்.
(வேறு காரணங்களுக்கு இசையாத இராமனிடம் முன்னோர்வெறுத்தவேட்டைத் தொழில் வேண்டாம் என்று புதிய உத்தியைஇலக்குவன் கையாளுகின்றான். சாது விலங்குகளை வேட்டையாடுதல் பெரியோர்களால் விலக்கப்பட்டது; ஆதலின் இலக்குவன் இம்மானுக்கு இடர் செய்ய வேண்டா என்று பேசிப் பார்க்கிறான்.)
விசுவாமித்திர முனிவனது யாகத்தில் முன்னர் வந்த மூன்று
அரக்கருள் ஒருவன் ஆகிய மாரீசன் தப்பிப் போனான் ;அந்த மாரீசனாக (இம்மான்) இருத்தல் கூடுமோ என்று ஐயம் கொண்டேன்; (அதனால்) என் ஐயா, மேலும் சிந்தித்துப் பாராய்; செல்வாயாக; (தீங்கு நேராது) வாழ்க; என்று இரண்டு கரங்களையும் எடுத்து வணங்கி;
திருமகளான சீதை புகுந்த பர்ண சாலையை வாசலில் நின்றவாறு காவல் காக்கத் தொடங்கினான்.
************************************
178.மான் போல ஒடாது வளைந்தும்,நெளிந்தும் போனதைக் கண்டவுடன் ராமனுக்குப் புரிந்து விட்டது:
‘காயம் வேறு ஆகி,செய்யும் கருமம்
வேறு ஆகிற்று அன்றே?
ஏயுமே;என்னின் முன்னம்
எண்ணமே இளவற்கு உண்டே;
ஆயுமேல் உறுதல் செல்லாம்;
ஆதலால்,அரக்கர் செய்த
மாயமே ஆயதே;நான் வருந்தியது’
என்றான் – வள்ளல்.
இந்த மானின் செயல்களோ மானின் இயல்பிலிருந்து மாறுபட்டதாய்த் தோன்றுகின்றன; எனக்கு முன்னே; தம்பி இலக்குவனுக்கு இது குறித்த சிந்தனை தோன்றியதில் நியாயம் உண்டு – (அவன் எண்ணம்) சரிதான் . நானும்நன்றாக ஆராய்ந்திருந்தால் இங்கு வந்திருக்க மாட்டேன்; எனக்கு இப்போது தெரிகிறது இது இராக்கதர் மாயம் தான் என்பது ; இவ்வாறு வள்ளலாகிய இராமன் எண்ணினான்.
***********************
179.மாரீசன் குரலை மாற்றி ராமன் கூப்பிடுவது லெட்சுமணா,லெட்சுமணா அலறினான் :
நெட்டிலைச் சரம் வஞ்சனை நெஞ்சுறப்
பட்டது;அப்பொழுதே,பகு வாயினால்,
அட்ட திக்கினும்,அப்புறமும் புக
விட்டு அழைத்து,ஒரு குன்று என வீழ்ந்தனன்.
நெடிய இலை வடிவம் கொண்ட அவ்வம்பு, வஞ்சகம் நிரம்பிய (மாரீசன்) நெஞ்சில் சென்று தாக்கியது. அந்தக் கணமே,
பிளவுபட்ட வாயினால் எட்டுத் திசைகளிலும், அதற்கு அப்பாலும் செல்லும்படி (சீதா லட்சுமணா) என்று இராமன் குரலில் கூவி
மலை விழுவது போல (தன் இயற்கை வடிவம் கொண்டு) வீழ்ந்தான்.
தன் குரலை இராமன் குரலாக மாற்றி அழைத்து மடிந்தான்.
***************************************
180. மாரீசன் செய்கையால் ராமபிரானுக்கு மனதில் எழுந்த அச்சம்
புழைத்த வாளி உரம்
புக, புல்லியோன்,
இழைத்த மாயையின், என்
குரலால் இசைத்து
அழைத்தது உண்டு; அது கேட்டு
அயர்வு எய்துமால்,
மழைக் கண் ஏழை’ என்று,
உள்ளம் வருந்தினான்.
ஊடுருவிச் செல்லும் அம்பு தன் மார்பில் பட்டதும், புல்லியோன் – இழிந்தவனாகிய மாரீசன் செய்த மாயத்தினால் என் குரலால்
என் குரல் போன்ற குரலால் (சீதையையும்
இலக்குவனையும்) கூவி அழைத்துள்ளான் அல்லவா?; அக்குரலைப் பிறழ உணர்ந்து மழை போல் குளிர்ந்த கண்களை உடைய
பேதை ஆகிய சீதை துன்பம் உறுவாள்’ என்று மனம் நொந்தான் இராமன்.
–SUBHAM—
TAGS- கம்ப ராமாயணத்தில் 180 கேள்விகள் , மாரீசன் வாதம் , மாய மான், லெட்சுமணன் எச்சரிக்கை
Pictures are taken from various sources for spreading knowledge.
This is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
POINTS TO PONDER
Like the previous chapter, Valluvar used Pancha Tantra stories again in this chapter. The crocodile, elephant in marsh etc are in the Sanskrit book.
Valluvar, when use such stories, use them together; that means he has already taken some notes (on his palm leaves) and use them at one go.
Elsewhere I have given the list where he used Panchatantra stories in Kurals:
Pancha tantra stories in Tiruk Kural:-
273 (Cow clothed in Tiger’s Skin);
274 (Hunter seeking birds hiding in bush);
277 (Red berry Abrus with Black in tip);
481 (Crow defeating Owl in day time);
490 (waiting Heron striking Fish at right time);
495 (Crocodile in Water more powerful);
500 (Elephant trapped by cunning Fox);
565 (Ghost with Seven Jars of Gold -Story told by Ramakrishna Paramahamsar);
890 (Living with Serpent in a hut).
Valluvar used such stories together; see the number sequence of Kurals;
xxxxxxx
Chapter 50- On the choice of Right Arena; Choosing the Right Place;இடனறிதல்
***
Go to Project Madurai website for all Tamil books; it is free and trouble free. No advertisements; no cookies!
****
Following Translations are used:
1.A Aranganatha Mudaliyar – ANM+2 ( B.L. Aranganatha iyer and R. Srinivasa Desikan), Year 1933
2.S M Diaz, I G of Police- SMD, Year 2000
3.Rev.Dr.GU Pope – GUP, Year 1886
4.Suddhananda Bharathiyar- SB
5.EVS Publishers, Singapore- EVS, Year 1986
6.H A Popley – HAP (not full book; only selected couplets) Year 1931
7.Tamil Original
****
Part 68; Chapter 50 in Tirukkural Book.
491.Declare no war, despise not the enemy, until you have got the vantage ground -A Aranganatha Mudaliyar – ANM+2 ( B.L. Aranganatha iyer and R. Srinivasa Desikan), Year 1933
***
491.It is unwise to start an operation without deciding a suitable arena for it,
It will further be foolish to under-estimate the enemy- S M Diaz, I G of Police – SMD, Year 2000
***
491 Begin no work of war, depise no foe, Till place where you can wholly circumvent you know. Let not (a king) despise (an enemy), nor undertake any thing (against him), until he has obtained (a suitable) place for besieging him.-Rev.Dr.GU Pope – GUP, Year 1886
***
491.No action take, no foe despise Until you have surveyed the place. Suddhananda Bharathiyar – SB
***
491.Begin no military action; do not totally despise the enemy until you survey the right field for action- EVS Publishers, Singapore- EVS, Year 1986
492.It is a great advantage even to mighty and brave warriors to give battle from impregnable mountain fortresses – ANM+2
***
492.Even if your force is of diverse nature, motivated and strong,
Defensive fortification does give added strength– SMD, Year 2000
***
492 Though skill in war combine with courage tried on battle-field, The added gain of fort doth great advantage yield. Even to those who are men of power and expedients, an attack in connection with a fortification will yield many advantages.GUP, Year 1886
***
492.Many are gains of fortresses Ev’n to kings of power and prowess. – SB
***
492.A strong fortress is of strong advantage even to leaders of mighty power and prowess- EVS, Year 1986
***
492. முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம் ஆக்கம் பலவுந் தரும்
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
493.Even the weak can maintain their strength and triumph over the enemy, if they spy out a suitable field of action– ANM+2
***
493.Even with a weaker force you will still prevail against a stronger army,
If you chose the right place and operate with care– SMD, Year 2000
***
493 E’en weak ones mightily prevail, if place of strong defence, They find, protect themselves, and work their foes offence. Even the powerless will become powerful and conquer, if they select a proper field (of action), and guard themselves, while they make war on their enemies.GUP, Year 1886
***
493.Weaklings too withstand foe’s offence In proper fields of strong defence. – SB
***
493.Even the weak can withstand a mighty enemy and conquer in a suitable field strong in defence- EVS, Year 1986
494.All the stratagems of the enemy will be baffled, of the king fortifies himself in a well-built stronghold– ANM+2
***
494.Yor enemy will not achieve his planned victory over you,
If you give battle from a well-protected place of vantage– SMD, Year 2000
*** 494 The foes who thought to triumph, find their thoughts were vain, If hosts advance, seize vantage ground, and thence the fight maintain. If they who draw near (to fight) choose a suitable place to approach (their enemy), the latter, will have to relinquish the thought which they once entertained, of conquering them.GUP, Year 1886
***
494.If fighters fight in vantage field The plans of foes shall be baffled. – SB
***
494.The plans of presumptuous enemies shall be baffled if the vantage ground is chosen by the fighter -EVS, Year 1986
***
494. எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து துன்னியார் துன்னிச் செயின்
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
495.In the depths of a mighty river, the crocodile is all powerful; on the shore it is a plaything in the hands of its foes– ANM+2
***
495.In the deep waters of a river the crocodile will beat all,
But out of those waters, it will be absolutely helpless– SMD, Year 2000
***
495 The crocodile prevails in its own flow of water wide, If this it leaves, ’tis slain by anything beside. In deep water, a crocodile will conquer (all other animals); but if it leave the water, other animals will conquer it.GUP, Year 1886
***
495.In water crocodile prevails In land before others it fails. – SB
***
495.In deep water the crocodile overpowers all; out of water , others overpower it -EVS, Year 1986
***
495. நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின் நீங்கின் அதனைப் பிற.
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
496.The mighty car, that thunders its huge wheels on the stony pavement, sails not on ocean streams, nor does the ship that cleaves the waters sail on dry land– ANM+2
***
496.The strong wheeled chariot cannot be driven on the high seas,
So too, the swift sailing ship cannot be propelled on ground– SMD, Year 2000
***
496 The lofty car, with mighty wheel, sails not o’er watery main, The boat that skims the sea, runs not on earth’s hard plain. Wide chariots, with mighty wheels, will not run on the ocean; neither will ships that the traverse ocean, move on the earth.GUP, Year 1886
***
496.Sea-going ship goes not on shore Nor on sea the strong-wheeled car. – SB
***
496.The sea-sailing ship cannot move on land. The strong wheeled high chariot cannot run on water–EVS, Year 1986
***
The strong wheeled lofty chariot rides not upon the sea;
The ocean- going vessel goes not upon the land- H A Popley – HAP (not full book; only selected couplets) Year 1931
497.Behold the prince who makes his stand on a well garrisoned fortress. Does he need any other aid than his own fearless valour to quell the foe? – ANM+2
***
497.If your operations in battle are planned, considering every single enemy design,
With no other aid but fearlessness, you will prevail– SMD, Year 2000
*** 497 Save their own fearless might they need no other aid, If in right place they fight, all due provision made. You will need no other aid than fearlessness, if you thoroughly reflect (on what you are to do), and select (a suitable) place for your operations.GUP, Year 1886
***
497.No aid but daring dash they need When field is chosen right for deed. – SB
***
497.Only daring dash is needed to aid a hero to victory, when he choses the right field for action–EVS, Year 1986
***
497. அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை எண்ணி இடத்தால் செயின்
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
498.A weak army in a safe retreat brings to nought the glory of even a mighty phalanx– ANM+2
***
498.If a large army is constrained to operate in an area, meant for a small force,
They will have no place for manoeuvre, and so get demoralised– SMD, Year 2000
*** 498 If lord of army vast the safe retreat assail Of him whose host is small, his mightiest efforts fail. The power of one who has a large army will perish, if he goes into ground where only a small army can act.GUP, Year 1886
***
498.Though force is small, if place is right One quells a foe of well-armed might. – SB 498
*** 498.The army may be small; but in the right place, even a strong-armed enemy can be quelled–EVS, Year 1986
*** 498. சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான் ஊக்கம் அழிந்து விடும்
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
499.It is hazardous to measure your strength with the enemy on his own ground, however feeble he may be without even the vestige of a good fortress– ANM+2
***
499.Although they may lack fortresses and armies it will not be easy,
To attack and dislodge people in their own homesteads– SMD, Year 2000
***
499 Though fort be none, and store of wealth they lack, ‘Tis hard a people’s homesteads to attack! It is a hazardous thing to attack men in their own country, although they may neither have power nor a good fortress.GUP, Year 1886
***
499.To face a foe at home is vain Though fort and status are not fine. – SB
***
499.Though the foe has no advantage of fort or strength, hard it is to attack him on his own ground- EVS, Year 1986
500.Even a jackal will vanquish an unruly elephant that has born the brunt of many a lance and transfixed the armed men, when he gets stuck up into a treacherous marshy swamp– ANM+2
***
500.On marshy ground, where the foot sinks, even a fox can beat a mighty elephant,
With fearless eyes on his majestic face, and two spears too of ivory– SMD, Year 2000
*** 500 The jackal slays, in miry paths of foot-betraying fen, The elephant of fearless eye and tusks transfixing armed men. A fox can kill a fearless, warrior-faced elephant, if it go into mud in which its legs sink down.GUP, Year 1886
***
500.A fox can kill a war tusker Fearless with feet in deep quagmire. – SB
***
500.A fierce elephant that has faced lancers, can be foiled by a fox, if it is stuck in a marshy ground –EVS, Year 1986
***
500.The jackal ,when in miry soil, in which the feet sink deep,
Will kill the fearless elephant that goreth armed men- H A Popley – HAP (not full book; only selected couplets) Year 1931
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxx
லலிதா சஹஸ்ர நாம பாராயணத்தால் ஏற்படும் பலன்கள் என்ன? – 3
ச. நாகராஜன்
ஸ்லோகம் 33
இந்த ரகசிய நாம சாஹஸ்ரத்தை எவன் ஒருவன் தினந்தோறும் கீர்த்தனம் செய்கிறானோ அவனுடைய முகத்தைப் பார்த்தவுடனேயே மூன்று லோகங்களும் மயங்கி விடுகின்றன.
ஸ்லோகம் 34
எவன் ஒருவன் இந்த நாம சஹஸ்ரத்தை பக்தியோடு ஒரு தடவை
கீர்த்தனம் செய்கிறானோ, அவனுக்கு யார் எதிரிகளோ அவர்களை சரபேஸ்வரர் நாசம் செய்கிறார்.
(சரபேஸ்வரர் என்பவர் சிவனுடைய அவதாரங்களில் ஒருவர்.)
ஸ்லோகம் 35
எவன் ஒருவன் இந்த நாம சஹஸ்ரத்தைக் கீர்த்தனம் செய்கிறவனைக் குறித்து அபிசார கர்மாவைச் செய்கிறானோ, அந்த கர்மாவை ப்ரத்யங்கிராதேவியானவள் தானாகவே திருப்பிவிட்டு அவனையும் கொன்று விடுகிறாள்.
(அபிசார கர்மா என்பது தெரியாத விதமாக எதிரியினுடைய மரணத்தை விளைவிக்கச் செய்யும் கர்மாவாகும்.)
ஸ்லோகம் 36
எவர்கள் இந்த நாம சஹஸ்ர கீர்த்தனம் செய்கிறவனை கொடூரமான பார்வையுடன் பார்க்கிறார்களோ, அவர்களை மார்த்தாண்ட பைரவரானவர் தானாகவே வெகு சீக்கிரத்தில் குருடர்களாகச் செய்து விடுகிறார்.
ஸ்லோகம் 37
இந்த நாம சஹஸ்ர கீர்த்தனம் செய்கின்றவனுடைய செல்வத்தை எவன் ஒருவன் திருடர்கள் மூலமாக அபகரிக்கிறானோ அவன் எங்கேயிருந்தாலும் அவனை க்ஷேத்ரபாலர் கொல்கிறார்.
(சிவனுடைய ஒரு அவதாரமே க்ஷேத்ரபாலர்)
ஸ்லோகம் 38
எந்த வித்வானானவன் இந்த நாம சஹஸ்ர கீர்த்தனம் செய்கின்றவனோடு வித்யைகளில் வாதம் செய்கின்றானோ, அவனுடைய வாக்கை நகுலீச்வரியானவள் உடனே ஸ்தம்பனம் செய்து விடுகிறாள்.
எந்த ராஜாவானவன் இந்த நாம சஹஸ்ர கீர்த்தனம் பண்ணுகிறவனிடம் பகை கொள்கிறானோ, அவனுடைய சதுரங்க சைன்யத்தையும் தண்டினியானவள் தானாகவே சம்ஹாரம் செய்கிறாள்.
(தண்டினீ தேவி அம்பாளுடைய சதுரங்க சைன்யத்திற்கு நாயகியாக இருப்பவள்)
ஸ்லோகம் 40
எவன் ஒருவன் இந்த நாம சஹஸ்ரத்தை ஆறு மாதம் பக்தியுடன் கீர்த்தனம் செய்கிறானோ, அவனுடைய வீட்டில் லக்ஷ்மியானவள் இடைவிடாமல் எப்போதும் இருப்பாள்.
ஸ்லோகம் 41
தினம் மூன்று முறையாக ஒரு மாத காலம் இந்த நாம சஹஸ்ரத்தை எவன் ஒருவன் கீர்த்தனம் செய்கிறானோ, அவனுடைய நாக்கின் நுனியாகிற ரங்கஸ்தலத்தில் சரஸ்வதி தேவியானவள் எப்போதும் நர்த்தனம் செய்து கொண்டிருக்கிறாள்.
(ரங்கம் என்றால் நாட்டிய மேடை)
ஸ்லோகம் 42
எவன் ஒருவன் சோம்பல் இல்லாமல் இந்த நாம சஹஸ்ரத்தை தினம் ஒருமுறையாக ஒரு பக்ஷம் கீர்த்தனம் செய்கிறானோ அவனுடைய பார்வையாலேயே சகல பெண்களும் காமத்தின் வசப்பட்டு மோகம் அடைகிறார்கள்.
ஸ்லோகம் 43
எவன் ஒருவன் தன்னுடைய ஜன்மாவில் இந்த நாம சஹஸ்ரத்தை ஒரு முறை கீர்த்தனம் செய்கிறானோ, அவனுடைய கண்ணுக்குத் தென்படும் சகல பிராணிகளும் தங்களுடைய சமஸ்தமான பாவங்களிலிருந்தும் விடுவிக்கப்படுகிறார்கள்.
ஸ்லோகம் 44
எவன் ஒருவன் இந்த நாம சஹஸ்ரத்தை அறிந்திருக்கிறானோ, அந்த பிராமணனுக்குத் தான் அன்னம், வஸ்த்ரம், தனம், தான்யம் இவைகளைக் கொடுக்க வேண்டும். மற்றவர்களுக்கு ஒருபோதும் கொடுக்கவே கூடாது.
ஸ்லோகம் 45
எவன் ஶ்ரீவித்யையை அறிந்திருக்கிறானோ, எவன் ஶ்ரீசக்ரத்தை நன்றாக அர்ச்சிக்கிறானோ, எவன் இந்த நாம சஹஸ்ரத்தை கீர்த்தனம் செய்கிறானோ, அவனைத் தான் நல்ல பாத்ரமானவன் என்று அறிஞர்கள் தெரிந்து கொள்கிறார்கள் (சொல்வார்கள்).
ஸ்லோகம் 46
ஆகவே, ஶ்ரீ தேவியின் ப்ரியத்தை அடைய விரும்புகிறவன் பாடுபட்டாவது அம்மாதிரியான சத்பாத்ரனுக்கு தானம் செய்ய வேண்டும்,
ஸ்லோகம் 47
எவன் ஒருவன் இந்த நாமங்களைச் சொல்லாமலும், மந்த்ர ராஜத்தை அறியாமலும் இருக்கிறானோ, அவன் பசுவுக்குச் சமமானவன் என்று அறியத் தகுந்தவன். அவனுக்குக் கொடுத்தது அர்த்தமில்லாதது (பயனற்றது).
ஆகவே, புத்திமானாக இருப்பவன் வித்யை தெரிந்தவர்களை பரீக்ஷித்து (சீர்தூக்கி, தாரதம்யத்தைத் தெரிந்துகொண்டு) அவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.
(மந்த்ரராஜம் என்பது ஶ்ரீ வித்யை)
ஸ்லோகம் 48, 49
ஶ்ரீ மந்த்ரராஜத்திற்கு சமானமான மந்த்ரம் எப்படி இல்லையோ, லலிதாம்பாளுக்கு சமானமான தேவதை எப்படி இல்லையோ, அதே மாதிரி, ஹே, கடோத்பவ, ரஹஸ்ய நாம சாஹஸ்ரத்திற்கு சமானமான ஸ்தோத்திரமும் கிடையாது.
ஸ்லோகம் 50
எவன் ஒருவன் இந்த உத்தமமான நாம சஹஸ்ரத்தை புத்தகத்தில் எழுதி, அதை எப்போதும் பக்தியுடன் பூஜிக்கிறானோ அவனிடத்தில் ஶ்ரீ சுந்தரியானவள் சந்தோஷம் அடைகிறாள்.
இதைப் பற்றி அதிகமாகச் சொல்லி என்ன, ஹே, கும்பஸம்பவ, கேள்!