Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
அருள்வாயே! – 9
(75 முதல் 84 முடிய)
ச.நாகராஜன்
அருணகிரிநாதர் ‘அருள்’ என்ற சொல்லைத் திருப்புகழில் ஆண்ட இடங்கள் ஏராளம்.
அவர் அருள்வாயே என்று கூறும் இடங்களின் நீண்ட தொகுப்பு இது:
படித்து மகிழ்வோம்; பாடிப் பரவுவோம்!
75) திருவருணை
கனக மியற்றித் திரிந்து துவளு மெனைச்சற் றறிந்து
கவலை யொழித்தற் கிரங்கி யருள்வாயே
பாடல் எண் 428 – ‘தலையை மழித்து‘ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : பொன் வேண்டி இரச வாதத்தால் பொன்னை ஆக்கித் திரிந்து சோர்வடையும் என்னைக் கொஞ்சம் கவனித்து என் கவலையை ஒழிக்க வேண்டி என் மேல் இரக்கம் கொண்டு அருள்வாயாக.
76) திருவருணை
நினது தாளை நாடோறு மனதி லாசை வீடாமல்
நினையு மாறு நீமேவி யருள்வாயே
பாடல் எண் 435 – ‘புலையனான‘ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : உன் திருவடிகளையே தினமும் மனதில் ஆசை அழியாமல் நினைக்கும் வண்ணம் நீ என் உள்ளத்திலிருந்து அருள்வாயாக
77) திருவருணை
சிவமார்தி ருப்புகழை எனுநாவி னிற்புகழ
சிவஞான சித்திதனை யருள்வாயே
பாடல் எண் 441 – ‘வலி வாத பித்தமொடு‘ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : மங்கலம் நிறைந்த உனது திருப்புகழை என் நாவாறப் புகழ்வதற்கு சிவஞான சித்தியைத் தந்தருள்வாயாக
78) திருவருணை
முறைமை யாகநி னடிகள் மேவவே
முனிவு தீரவந் தருள்வாயே
பாடல் எண் 443 – ‘விதி அதாகவே‘ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : முறைமைப் படி உனது திருவடிகளை அடையுமாறு, உனது கோபம் தீர்ந்து வந்து அருள்வாயாக
79) திருவருணை
உறவாடி
நாடியது வேகதியெ னாசுழலு மோடனைநின்
ஞானசிவ மானபத மருள்வாயே
பாடல் எண் 445 – ‘வீறு புகழான பனி‘ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : (அந்த வேசையர்களுடன்) உறவாடி அவர்களுடன் ஆடுவதே கதி என்று சுழல்கின்ற மூடனாகிய எனக்கு உனது சிவஞான மயமான திருவடியைத் தந்தருள்வாயாக
80) திருவருணை
கூறுமடி யார்கள்வினை நீறுபட வே அரிய
கோலமயி லானபத மருள்வோனே
பாடல் எண் 445 – ‘வீறு புகழான பனி‘ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : உன்னைப் போற்றும் அடியார்களின் வினை தூளாகிப் போக, அருமையான அழகிய மயிலான பதவியை அருள்பவனே!
81) சிதம்பரம்
பரமகுரு அருள்நி னைந்திட் டுணர்வாலே
பரவுதரி சனையை யென்றெற் கருள்வாயே
பாடல் எண் 428 – ‘இருவினையின் மதி‘ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : சிறந்த குருவாகிய உன் அருளை நினைவில் வைத்து, ஞானத் தெளிவு பெற்று, போற்றுதற்குரிய உன் தரிசனக் காட்சியை என்றைக்கு எனக்கு அருளப் போகிறாய்?
82) சிதம்பரம்
தொடைசிந்திட மொழிகொஞ்சிச அளகஞ்சுழ லாட
விழிதுஞ்சிட இடைதொய்ஞ்சிட மயல்கொண்டணை கீனும்
சுகசந்திர முகமும்பத அழகுந்தமி யேனுக் கருள்வாயே
பாடல் எண் 467 – ‘முகசந்திர புருவம்‘ எனத் தொடங்கும் பாடல்
பொருள் :- மாலை சிதறவும், பேச்சு கொஞ்சவும், கூந்தல் சுழன்று அசையவும், கண்கள் சோர்வு அடையவும், இடை தளரவும், காம மயக்கம் கொண்டு நான் விலைமாதர்களைத் தழுவிய போதிலும், அழகிய சந்திரன் போன்ற உனது முக தரிசனத்தையும், திருவாயால் கூறும் உபதேச மொழியையும் அடியேனுக்குத் தந்தருள்வாயாக!
83) சிதம்பரம்
அங்கமிக மெலியாதே
அன்புருக அருள்வாயே
பாடல் எண் 473 – ‘செம் கலச‘ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : என்னுடல் மிகவும் மெலிவு அடையாமல், உன் அன்பால் என் உள்ளம் உருகும் படி அருள்வாயாக
84) சிதம்பரம்
துக்கத் தேபர வாமல்ச தாசிவ
முத்திக் கேசுக மாகப ராபர
சொர்க்கப் பூமியில் லேறிட வேபத மருள்வாயே
பாடல் எண் 480 – ‘அக்குப் பீளை‘ எனத் தொடங்கும் பாடல்
பொருள் ; துக்கம் பெருகி வேதனைப்படாமல், எப்பொழுதும் மங்களகரமாயுள்ள முக்தி நிலையில் சுகமாக எவற்றிலும் மேம்பட்ட சொர்க்க நாட்டில் நான் கரை ஏறும்படி உன் திருவடியைத் தந்தருள்வாயாக!
குறிப்பு & நன்றி : https://www.kaumaram.comதளத்தில் உள்ளபடி பாடல் எண் தரப்பட்டுள்ளது. முழுத் திருப்புகழ்ப் பாடலையும் அதன் விளக்கத்தையும் இதில் காணலாம்.
சாந்தோக்ய உபநிஷத் முக்கியமான ஒரு உபநிஷத். மொத்தம் 108 முதல் 120 வரை உபநிஷத்துக்களின் பட்டியல் நீண்டாலும் காலத்தால் பழமையான பிருஹத் ஆரண்யக (பெருங் காட்டு) உபநிஷத்துக்கு அடுத்த நிலையில் நிற்பது சாந்தோக்யம்தான் ; சந்தஸ் என்றால் செய்யுள்; அந்த நடையில் இருப்பதாலும் சாமவேதத்தில் சந்தோகா என்ற பாடல் பாடப்படுவதாலும் பெயர் கிடைத்த நூல் இது. ஆதி சங்கரரால் உரை எழுதப்பட்ட முக்கிய உபநிஷத்துகளில் இதுவும் ஒன்று.
பசி வந்தால் பத்தும் போம் என்ற பாடலை நாம் அனைவரும் அறிவோம் . பல அவ்வையார்களில் , தற்கால அவ்வையார் பாடிய பாட்டு அது . சில நூறு ஆண்டுகளே பழமை உடைத்து. ஆனால் 3000 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய இந்த உபநிஷத்தில் பட்டினியால் உடலில் ஏற்படும் மாறுதலை வருணித்திருப்பது நமக்கு வியப்பை ஏற்படுத்தும்
உபநிஷத் முழுவதும் விஞ்ஞான வகுப்பில் நடக்கும் பரிசோதனைகள் (Practical Experiments in Science Lab.s) போல பல விஷயங்கள் வரும். ஆலம் விதையைக் கொண்டுவரச் சொல்லி. இந்த கடுகுக்கும் மேல் சிறிதான விதையிலிருந்து எப்படி பிரம்மாண்டமான மரம் வந்தது என்று ஒரு ரிஷி வினவுவார். அதன் மூலம் பிரம்மத்தின் பெருமையை விளக்குவார். மற்றும் ஒரு ரிஷி மகனே ஒரு கோப்பையில் தண்ணீர் கொண்டுவா; இன்னொரு கையில் ஒரு பிடி உப்பையும் கொண்டு வா என்பார். அதை நீரில் போடச்சொல்லி நீர் என் வழியவில்லை, அந்த உப்பு எங்கே சென்றது என்று வினவி இறைவன் பற்றிய உணமையைச் சொல்லுவார். பிற்கலத்தில் சாக்ரடீஸ் இதே முறையைப் பின்பற்றினார். இந்து மதம் பற்றி அறியாத வெள்ளைக்காரர்கள், அதற்கு சாக்ரடீஸ் முறை SOCRATIC METHOD என்று நாமகரணம் செய்தனர்.
அது போல சுவேத கேது என்ற ரிஷி ஒரு எக்ஸ்பெரிமெண்ட் / Experiment பரிசோதனை செய்கிறார். மகனுக்கு உணவே கொடுக்காமல் தண்ணீர் மட்டும் 15 நாட்களுக்குக் கொடுத்துவந்தார் . உணவு இல்லாவிடில் எல்லா அறிவும் ஒடுங்கிவிடும் என்பதை நிரூபித்துக் காட்டுவதற்கே அப்படிச் செய்தார் என்று சாந்தோக்ய உபநிஷத் கூறுகிறது .
15 நாட்களுக்கு தண்ணீர் மட்டுமே சாப்பிட்டு வந்த மகன் உத்தாலகனை, வேதத்தை ஓதும்படி சுவேதகேது கூறுகிறார் . அவனால் முடியவில்லை.. பின்னர் சாப்பிட்டுவரும்படி சொல்கிறார். அப்போது அவனால் வேதத்தை ஒப்புவிக்க முடிந்தது. பசி வந்தால் பத்தும் பறந்தும் போம் என்பதை பிராக்டிகல் எக்ஸ்பெரிமென்ட Practical Experiment மூலம் 3000 ஆண்டுகளுக்கு முன்னமே காட்டியது சாந்தோக்ய உபநிஷத்.
பசியினால் இவ்வளவு அவத்தைகளும் தோன்றுவது சீவர்களுக்கெல்லாம் பொதுவாகவேயிருக்கின்றது.
இவ்வளவு அவத்தைகளும் ஆகாரங் கிடைத்தபோது உண்டு பசி நீங்க நீங்குகின்றன. அப்போது தத்துவங்களெல்லாம் தழைத்து உள்ளங் குளிர்ந்து அறிவு விளங்கி அகத்திலும் முகத்திலும் சீவர்களையும் கடவுள்களையுந் துளும்பி ஒப்பில்லாத திருப்தியின்பம் உண்டாகின்றது. இப்படிப்பட்ட இன்பத்தை உண்டுபண்ணுகின்ற புண்ணியத்துக்கு எந்தப் புண்ணியத்தை இணையென்று சொல்லலாம்? இந்தப் புண்ணியத்தைச் செய்கின்ற புண்ணியர்களை எந்தத் தெய்வத்துக்குச் சரியென்று சொல்லலாம்? எல்லாத் தெய்வங்களுக்கும் மேலாகிய கடவுளம்சமென்றே சத்தியமாக அறியவேண்டும். இதனால் நரக வேதனை சனனவேதனை மரண வேதனை என்கின்ற மூன்று வேதனைகளுங் கூடி முடிந்த வேதனையே பசிவேதனைஎன்றும், அகம் புறம் நடு கீழ் மேல் பக்கம் என்கிற எவ்விடத்தும் நிறைந்து எக்காலத்தும் வேறுபடாத மோக்ஷ இன்பமே ஆகாரத்தினாலுண்டாகும் திருப்தியின்பம் என்றும் அறியப்படும்.
உணவு பற்றி ஏ கே செட்டியார் தொகுத்து, டிவிஎஸ் நிறுவனத்தார் 1967ம் ஆண்டில் வெளியிட்,ட புஸ்தகத்திருந்து எடுக்கப்பட்ட விஷயம் இது
Xxx
பசி வந்திடப் பத்தும் பறந்து போம்:
இதை பசி வந்திட பத்தும் பறந்து போம் என்ற அவ்வையாரின் நல்வழிப் பாடலுடம் ஒப்பிடுவோம்:
மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவர் உயர்ச்சி தாளாண்மை – தேனின்
கசி வந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும்
பசி வந்திடப் பத்தும்பறந்து போம் — நல் வழி
மானம், குலம், கல்வி, வலிமை, அறிவு, தானம், தவம், உயர்வு, தாளாண்மை/முயற்சி, காமம்– பறந்து போகும்
Starvation destroys these ten: honour, dignity,learning, honesty, knowledge liberality, nobility, penance, application to business, and the love of women, whose tongue utters words as sweet as honey.
சுக்கிலம் மிகுதியானால் ஆணாகவும் , சுரோணிதம் மிகுதியானால் பெண் ணாகவும்,
சுக்கில சுரோணிதம் சமமாகக் கலந்து பொருந்தினால் அலியாகவும் , சுக்கிலம் அளவுமீறி அதிகமானால்
பூமண்டலம் முழுதும் ஆளுகின்ற சக்ரவர்த்தியாகவும் ஆகும்; சுக்கிலம் மிகக்குறைந்து சுரோணிதம் அதிகமானால் கரு உற்பத்தியாகமாட்டாது.
Xxxx
I have found the following from another book-
(வேறு ஒரு பொழிப்புரையை கீழே காண்க:–
திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழகம் வெளியிட்ட திருமந்திர உரையில் காணப்படும் பொழிப்புரை :
காதலரிருவரும் மருவிப் பொருந்துங்கால் ஆண் ஆகிய வலப்பால் மூச்சு மிகுந்து சென்றால் கருவுற்றுப் பிறக்குமுயிர் ஆணாகப் பிறக்கும். இடப்பால் மூச்சு மிகுந்து சென்றால் பிறக்குமுயிர் பெண் ணாகப் பிறக்கும்.இரண்டு மூக்கின் வழியாகவும் வரும் மூச்சு ஒத்திருந்தால் பிறக்குமுயிர் அலியாகப் பிறக்கும். ஆள்வினை முயற்சியில் கருத்து மிகுதியாகவிருந்தால் பிறக்குமுயிர் சிறப்பாகப் பிறக்கும். அச்சிறப்புடன் பிறந்த உயிர் ‘உழையார் புவனம் ஒரு மூன்று’மொருங்குடன் ஆளும் அகப்பயிற்சியால் விந்து கட்டுப்பட்டு திண்மை ஏற்படின் மருவி இன்புறினும் விந்து வெளிச் செல்லு வதில்லை ஆதலால் பாய்ந்ததும் இல்லை என்றனர். பண்ணவம் (திண்மை) என்பதன் திரிபு பாணவம்) இந்தப்பதிப்பில் கடைசி வரி – பாணவமிக்கிடில் பாய்ந்ததும் இல்லையே என்று உள்ளது.
Xxxx
ஸ்த்ரீகள் ஒவ்வொரு முறையும் ருதுவாகும்போது (மாதவிலக்கு), அவர்களுக்கு ஆர்தவம் வெளியானது முதல் பனிரெண்டு நாட்களும் ருது காலமாம்.. அவற்றுள் முதலி ல் மூன்று நாட்களும் , பிறகு பதினோராவது தினமும் அதற்குப் பிறகும் கூட்டுவதற்குத் தகாதவைகள்.ஏனைய நாட்களில் சேருவதால் பயனுண்டாகும்
5,7, 9, 11 இந்த ஒற்றைப்பட்ட நாட்களில் கூடுவதால் அவர்கட்கு இயற்கையிலேயே சுரோணிதம் , அந்த நாட்களில் அதிகரித்திருக்கிறது ஆதலால் பெண் குழந்தையும் 4,6,8,10, 12 இந்த நாட்களில் சுரோணிதம் குறைவதால் சுக்கிலாதிக்கியத்தால் ஆண் குழந்தையும் பிறக்கும்- —-அஷ்டாங்க ஹிருதயம்.
மாளிகைகள் சிறந்துள்ளதாய், சற்சனர் சேரும் இடம் ஆகும் ஓர் ஊர்
கிடைத்து – நல்லோர் உறையும் இடமுடைய ஒரு நகரம் வாய்த்து, அதில்
அதிக சீவனமும் கிடைத்தால் – அங்கு நன்றாக வாழ்க்கைக்கு வழியும் பொருந்திவிட்டால் ஆவலோடு இருந்திடுவதே சொர்க்கவாசம் என்று அறியலாம் – விருப்பத்துடன் இருப்பதே சுவர்க்க வாழ்வு என்று இயம்பலாம்.
xxxx
ஒப்பிடுக
நாடு என்ற தலைப்பில் திருக்குறளிலும் நல்ல தேசம் எப்படி இருக்கும் என்று வள்ளுவன் காட்டுகிறான்
4. உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு
It is country which is free from
Fierce famine, plague and foemen’s harm. 734
பசி, நோய், பகை இல்லாமல் ஆளப்படும் இடமே நல்ல நாடு
8. பிணியின்மை செல்வம் விளைவுஇன்பம் ஏமம்
அணியென்ப நாட்டிற்கிவ் வைந்து.
Rich yield, delight, defence and wealth
Are jewels of lands with blooming health. 738
நோயின்மை, நல்ல செல்வம், விளைச்சல், மக்களின் மகிழ்ச்சி, நல்ல பாதுகாப்பு ஆகிய ஐந்தும் இருந்தால் அது நல்ல நாடு.
Xxx
மகாகவி பாரதியார்,
காணி நிலம் வேண்டும் – பராசக்தி காணி நிலம் வேண்டும், – அங்கு தூணில் அழகியதாய் – நன்மாடங்கள் துய்ய நிறத்தினதாய் – அந்தக் காணி நிலத்தினிடையே – ஓர்மாளிகை கட்டித் தரவேண்டும் – அங்கு கேணியருகினிலே – தென்னைமரம் கீற்று மிளநீரும்.
பத்துப் பன்னிரண்டு – தென்னைமரம் பக்கத்திலே வேணும் – நல்ல முத்துச் சுடர்போலே – நிலாவொளி முன்பு வரவேணும், அங்கு கத்துங் குயிலோசை – சற்றே வந்து காதிற் படவேணும், – என்றன் சித்தம் மகிழ்ந்திடவே – நன்றாயிளந் தென்றல் வரவேணும்.— : மகாகவி பாரதியார்.
Xxxx
வந்தே மாதரம்!
வங்காள மொழியில் ,பங்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய வந்தேமாதரம் கீதத்தை பாரதியார் இரு முறை தமிழில் மொழிபெயர்த்தார். அதில் பாரதத்தின் இயற்கை வளம் அருமையாக வருணிக்கப்பட்டுள்ளது
ஸுஜலாம் ஸுபலாம் மலயஜ ஸீதளாம்
ஸஸ்ய ஸ்யாமளாம் மாதரம்!
வந்தே மாதரம்!
1.இனிய நீர்ப் பெருக்கினை! இன்கனி வளத்தினை!
தனி நறு மலயத் தண் காற் சிறப்பினை!
பைந்நிறப் பழனம் பரவிய வடிவினை!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!
1.நளிர்மணி நீரும், நயம்படு கனிகளும்
குளிர்பூந்தென்றலும் கொழும்பொழிற் பசுமையும்
வாய்ந்து நன்கிலகுவை வாழிய அன்னை!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!
***
ஸுப்ர ஜ்யோத்ஸ்னாம் புலகித யாமினீம்
புல்லகுஸுமித த்ருமதள சோபினீம்
ஸுஹாசினீம் ஸுமதுர பாஷினீம்
ஸுகதாம் வரதாம் மாதரம்!
வந்தே மாதரம்!
2.வெண்ணிலாக் கதிர் மகிழ் விரித்திடும் இரவினை!
மலர்மணிப் பூத் திகழ் மரன் பல செறிந்தனை!
குறுநகை இன்சொலார் குலவிய மாண்பினை!
நல்குவை இன்பம், வரம் பல நல்குவை!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!
2.தெண்ணிலவதனில் சிலிர்த்திடும் இரவும்
தண்ணியல் விரிமலர் தாங்கிய தருக்களும்
புன்னகை ஒளிரும் தேமொழிப் பொலிவும்
வாய்ந்தனை, இன்பமும் வரங்களும் நல்குவை.
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!
xxx
கோபுர தரிசனம் கோடி புண்ணியம்
கோவில் இல்லாவூரில் குடியிருக்க வேண்டாம்
xxxxxxxxxxxxxxxxxxxxxx
அறப்பளீசுர சதகம் 49. தீநகர்
ஈனசா திகள்குடி யிருப்பதாய், முள்வேலி
இல்லில் லினுக்கு முளதாய்,
இணைமுலை திறந்துதம் தலைவிரித் திடுமாதர்
எங்கும்நட மாட்டம் உளதாய்க்,
கானமொடு பக்கமாய் மலையோர மாய் முறைக்
காய்ச்சல்தப் பாத இடமாய்,
கள்ளர்பயமாய், நெடிய கயிறிட் டிறைக்கின்ற
கற்கேணி நீருண் பதாய்.
மானமில் லாக்கொடிய துர்ச்சனர் தமக்கேற்ற
மணியம்ஒன் றுண்டா னதாய்,
மாநிலத் தோர்தலம் இருந்ததனில் வெகுவாழ்வு
வாழ்வதிலும், அருக ரகிலே
ஆனநெடு நாள்கிடந்தமிழ்தலே சுகமாகும்
அமலனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
(இ-ள்.) அமலனே – குற்றம் அற்றவனே!, அருமை ………. தேவனே!,
நடமாட்டம் உளதாய் – மார்பிலே துணி விலகியவாறு தலைவிரித்துத் திரியும் பெண்கள் எங்கும் உலாவும் நிலையினதாய், ஒருபக்கம் கானமாய் –
ஒருபக்கம் காடுடையதாய், மலைஓரமாய் – மலையோரமானதாய்,
முறைக்காய்ச்சல் தப்பாத இடமாய் – முறைக்காய்ச்சல் எப்போதும்
வருமிடமாய், கள்ளர் பயமாய் – திருடரால் அச்சமாய், நெடிய கயிறு இட்டுஇறைக்கின்ற கல்கேணி நீர் உண்பதாய் – நீண்ட கயிற்றைக் கட்டி
இறைக்கப்படும் கல்லால் அமைந்த கிணற்றுநீர் உண்ணு மிடமாய், மானம்இலாக் கொடிய துர்ச்சனர் தமக்கு ஏற்றம் மணியம் ஒன்று உண்டானதாய் –
மானம் அற்ற மிகக் கொடியவருக்குத் தக்க தலைவனையுடையதாய், ஓர்தலம் மாநிலத்து இருந்து அதனில் வெகுவாழ்வு வாழ்வதினும் – ஓர் ஊர்
இப் பெரிய உலகில் இருந்து, அவ்வூரிலே பெருக வாழ்வதினும்,
அருநரகிலே ஆன நெடுநாள் கிடந்து அமிழ்தலே சுகம் ஆகும் – கொடிய
நரகத்தில் உண்டான நீண்டகாலம் கிடந்து அதனில் முழுகிப்போதலே இன்பம் ஆகும்.
(வி-ரை.) ஒருபக்கம் கானும் தீய விலங்குகளும் திருடர்களும்
வாழ்வதால் ஊரில் வாழ்வோர்க்குக் கலக்கமுண்டாகும். மலைஓரம்,
வெப்பமும் முறைக்காய்ச்சலும் தரும். ‘கொடுங்கோல்’ மன்னர் வாழும்
நாட்டின் – கடும்புலி வாழும் காடு நன்றே’ என்பதால், ‘துர்ச்சனர் தமக்கு
ஏற்ற மணியம்’ உடைய நகர் நரகத்தினுங் கொடியது ஆயிற்று.
நெடிய……..கற்கேணி – நீர்வளம் அற்றதைக் குறிக்கும். முள்வேலியும்
தலைவிரித்திடும் மாதர் நடமாட்டமும் நகரின் அழகைக் கெடுப்பன.
(க-து.) இத்தகைய நகரில் வாழ்வு கூடாது.
இதற்கு மும்பை நகரிலுள்ள தாராவி சேரிப்பகுதி , இத்தாலிய மபியா நகரங்கள் முதலியவற்றை ஒப்பிடலாம்.
ஆயினும் மொத்தத்தில் இந்தியாவை சொர்க்கபூமியாக — குறிப்பாக குப்தர் கால இந்தியாவை சொர்க்க பூமியாகவே பாஹியான் போன்ற யாத்ரீகர்கள் வருணித்துள்ளனர். தேவர்களும் பாரத போமியில் பிறக்க ஆசைப்படுவதாக புராணங்கள் புகலும் ; புகழும் . அதை பாரதியார் அழகாக மொழி பெயர்த்துள்ளார் :
பாரத நாடு பார்க்கெலாம் திலகம்; நீரதன் புதல்வர், இந் நினைவகற் றாதீர்! வானக முட்டும் இமயமால் வரையும் ஏனைய திசைகளில் இருந்திரைக் கடலும் காத்திடு நாடு! கங்கையும் சிந்துவும் 30
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ராமாயண வழிகாட்டி
ராமாயணத்தில் வரும் வரங்களும் சாபங்களும் – 1
ச.நாகராஜன்
இந்திய இதிஹாஸ புராணங்களில் கதையோட்டத்திற்கு முக்கியமாக அமைவதாக நாம் காண்பவற்றுள் முக்கியமானவை வரங்களும் சாபங்களுமே!
கதையோட்டத்தில் திருப்பமாக அமைவதாக நாம் பார்க்கும் இன்னொன்று, ஒரு முக்கிய மஹரிஷி வந்து அடுத்து என்ன செய்யவேண்டும் என்று வழி காட்டுவார்.
கதையோட்டத்திற்கு இன்னொரு முக்கிய காரணமாக அமைவது ஆகாயவாணி மற்றும் அசரீரி ஆகும்.
கர்மபலன், புனர்ஜென்மம், இறைவனின் திருவருள், பிரபஞ்ச இயக்கம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பற்றிய ரகசியங்களை அறிய ராமாயண, மஹாபாரதம் நல்ல துணை.
இவற்றைத் தொகுத்துப் பார்த்தால் விதி, மதி, பெரியோர்களின் ஆசி, மஹரிஷிகளின் வழி காட்டுதல், இறைவனின் அருள் உள்ளிட்ட பல விஷயங்கள் நமக்குப் புலனாகும்.
வால்மீகி ராமாயணத்தில்
82 வரங்கள்
7 சபதங்கள்
61 சாபங்கள்
7 ஆசீர்வாதங்களைப் பார்க்கிறோம்.
இவை ஏராளமான உண்மைகளை நமக்குத் தெரிவிக்கின்றன.
சாபம் கொடுக்கப்பட்ட போது சாபத்தை வாங்கியவர் வருந்தும் போது அது எப்போது எப்படி தீரும் என்பதும் தெரிவிக்கப்படுகிறது.
ராமாயணத்தில் வரும் முக்கிய வரங்களையும், சாபங்களையும் இந்த நீண்ட தொடரில் பார்க்கப் போகிறோம்.
1. தசரத மஹாராஜன் – கைகேயி
இராமாயணத்தின் முக்கிய ஆரம்பமே கைகேயி, தசரதன் தந்த இரண்டு வரங்களைக் கேட்டதால் தான்!
சம்பராசுரன் என்ற அசுரனுடன் போர் தொடுத்த தசரதனுக்கு கைகேயி மிக லாகவமாக சாரத்தியம் செய்து அவனது உயிரைக் காப்பாற்றியதோடு அசுரனை வதைக்கவும் உதவினாள்.
இதனால் அசுரன் போரில் மடிந்தவுடன் தசரதன் கைகேயிக்கு இரு வரங்களைத் தந்தான். அவற்றை அவள் உடனே கேட்கவில்லை.
தசரதன் ராமனுக்கு முடிசூட்ட எண்ணியதும் மந்தரைக்குக் கோபம் பொங்கியது. சூழ்ச்சி ஒன்றை மேற்கொண்டு கைகேயிக்கு துர்போதனை செய்தாள். ‘பரதனுக்கு ஆட்சி, ராமனுக்கு வனம்’ என்ற திட்டத்துடன் அவள் கைகேயியைப் பார்த்துக் கூறினாள்:
இரு வரத்தினில் ஒன்றினால் அரசு கொண்டு இராமன்
பெரு வனத்திடை ஏழ் இரு பருவங்கள் பெயர்ந்து
திரிதரச் செய்வதொன்றினால் செழு நிலம் எல்லாம்
ஒருவழிப்படும் உன் மகற்கு உபாயம் ஈது என்றாள்
(மந்தரை சூழ்ச்சிப் படலம் பாடல் 82)
“ஒரு வரத்தினால் பரதனுக்கு அரசைக் கேள்; இன்னொரு வரத்தினால் ராமனை 14 ஆண்டுகள் வனம் ஏகச் செய்”.
மந்தரையின் இந்த துர்போதனையை மனத்தில் ஏற்றிக் கொண்ட கைகேயி அப்படியே இரு வரங்களை தசரதனிடம் கேட்டாள்:
“ஏய வரங்கள் இரண்டின் ஒன்றினால் என்
சேய் உலகாள்வது சீதை கேள்வன் ஒன்றால்
போய் வனம் ஆள்வது எனப் புகன்று நின்றாள்
தீயவை யாவையினும் சிறந்த தீயாள்
கைகேசி சூழ்வினைப்படலம் பாடல் 10
வால்மீகி ராமாயணத்தில் வால்மீகி நாரதரைப் பார்த்து சிறந்த உத்தம புருஷன் யார் என்று பல கேள்விகள் கேட்க நாரதர் ராமரைப் பற்றிக் கூற ஆரம்பிக்கிறார்.
பால காண்டத்தில் முதல் சர்க்கத்தில் 21ஆம் ஸ்லோகத்தில் இந்த வரங்கள் பற்றிய தகவலை நாரதர் தருகிறார்.
தஸ்யாபிஷேகம்சபாராந்தத்ருஷ்ட்வா பார்யார்த கைகேயி |
பூர்வ தத்தவரா தேவி வரமேனமயாசத ||
விவாசனம் ச ராமஸ்ய பரதஸ்யாபிஷேசனம் ||
அப்போது அபிஷேகத்திற்குரிய உபகரணங்களைப் பார்த்து முன்னமே கொடுக்கப்பட்ட வரமுடையவளான அவரது மனைவியான கைகேயி தேவி, தசரதரை, ஶ்ரீராமருக்கு சுயதேசத்தை விட்டு நீங்கலையும் பரதருக்கு பட்டாபிஷெகத்தையும் வரமாகக் கேட்டாள்.
தசரதன் அழுது புரண்டதும், ஒரு வரம் தருகிறேன் – பரதனுக்கு அரசாட்சி, ஆனால் அடுத்த வரத்தைக் கேட்காதே என்று மன்றாடியதும், பின்னர் வருத்தத்தால் உயிர் நீத்ததும் விரிவாக வால்மீகி மற்றும் கம்ப ராமாயணத்தில் காணலாம்.
ஆக ராமாயணத்தின் முக்கிய நிகழ்வு கைகேயி தனது இரு வரங்களைத் தருமாறு தசரதனிடம் கேட்டதே என்பது தெளிவாகிறது.
Bhagavad Gita, Tamil Veda Tirukkural, Saint Tirumular’s Tirumanthiram and Adi Shankaras Bhagavad Gita Bhashyam (Commentary) – all advise us to avoid the extremes in Food consumption. It is not only to keep your body healthy but also to keep your mind pure. If anyone wants to succeed in spiritual matters whether it is Yoga or Dhyana/meditation t is essential that they avoid the excesses.
Here is the Bhagavad-Gita Sloka 6-16
नात्यश्नतस्तु योगोऽस्ति न चैकान्तमनश्नत: |
न चाति स्वप्नशीलस्य जाग्रतो नैव चार्जुन || 6-16||
nātyaśhnatastu yogo ’sti na chaikāntam anaśhnataḥ
na chāti-svapna-śhīlasya jāgrato naiva chārjuna
BG 6.16: O Arjun, those who eat too much or too little, sleep too much or too little, cannot attain success in Yoga .
Commenting on it, Dr Radhakrishnan (previously President of India and world renowned Philosopher) says,
“We must be free from animal cravings. We must avoid excess in all things. Compare with this the middle path of the Buddhists and the golden mean of Aristotle “.
MIDDLE WAY OF BUDDHISTS:
The Middle Way as well as “teaching the Dharma by the middle” are common Buddhist terms used to refer to two major aspects of the Dharma, that is, the teaching of the Buddha. The first phrasing, refers to a spiritual practice that steers clear of both extreme asceticism and sensual indulgence
Xxx
GOLDEN MEAN OF ARISTOTLE
Moral behaviour is the mean between two extremes – at one end is excess, at the other deficiency. Find a moderate position between those two extremes, and you will be acting morally.
Xxx
Adi Shankara quotes a similar saying from the Satapata Brahmana and adds one more Subhasita from the Yoga Shastra, “ one must eat to fill in half of one’s stomach and drink water to fill in quarter and leave the rest of space for air.”
Xxx
Sri Ramakrishna Paramahamsa says
That food alone should be taken by the devotee which does not heat the system or unsettle the mind.
Swami Chidbhavananda adds,
The body is like Venna. If you tighten the strings too much while tuning it, it would not give good Svara. If you let them very loose, music would not come. It is similar to taking too much or too little food.
Xxx
Tiru manthiram also repeated what is said in Bhagavad Gita. Tiru valluvar who wrote Tamil Veda known as Tirukkural says,
If one’s food and work are excessive or deficient, the three things enumerated by those learned in medical science, flatulence, biliousness and phlegm will cause one disease–Kural couplet 941
Another translation of the above couplet is as follows,
Authorities on medicine hold that undue strain, and food , excessive or deficient , upset the three humours – flatulence, bile and phlegm of the body and bring about disease.
—Subham—
Tags – too much, too little, food, Bhagavad Gita, Tirukkural, Tirumanthiram,
அதிகமாகச் சாப்பிடுவோனுக்கும் மிகவும் குறைவாகச் சாப்பிடுவோனுக்கும் மனத்தை ஒருமைப்படுத்தி தியானம் (யோகம்) செய்வது இயலாது . இதே போலத்தான் உறக்கமும். அதிக நேரம் தூங்காதே; குறைந்த நேரம் தூங்காதே.
இது பற்றி ஆதி சங்கரர், ராம கிருஷ்ண பரமஹம்சர் ,டாக்டர் ராதா கிருஷ்ணன், சுவாமி சித்பவாநந்தர் ஆகியோர் சொல்வதைக் காண்பதற்கு முன்னர் வள்ளுவர், திருமூலர் ஆகியோர் செப்பியதை மனதிற்கொள்வோம்..
xxx
மேவிய அன்னத்தால் விளங்கியது இச்சடம்
பாவியே கொன்று பழியுறும் அன்னத்தான்
ஆவின் மிதந் தப்பிலை யுற்று நோயாகும்
காவில்லிவையெல்லாங் கண்டுகொளன்னமே
–திருமந்திரம் , திருமூலர் இயற்றியது
பொழிப்புரை
அன்னத்தினாலே இச்சரீரம் நிலை பெற்றிருக்கிறது பழியைச் செய்கின்ற அன்னமானது , அளவு மீறினால் பாவியைப் போல சரீரத்தில் நோய்களை உண்டாக்கிக் கொல்லும். அளவுக்கு மீறி அதிகமாகச் சாப்பிட்டால் கபநீர் முதலிய பல நோய்களை உண்டாக்கும் . அன்னத்தால் ரக்ஷிப்பும் பக்ஷிப்பும் உண்டாகும் என்று தெரிந்து கொள்வாயாக.
(திருப்புகழ் தா. ப. வேங்கட சுப்பிரமணியன் உரை, திரு மந்திரம் வைத்தியப் பகுதி, திருவாவடுதுறை ஆதீனம், 1957)
Xxxx
வள்ளுவர் மருந்து என்னும் அதிகாரத்தில் பத்து குறள்களில் பத்து கட்டளைகள் இடுகிறார் . மேற்கூறிய விஷயத்தைச் சுருக்கமாக விளம்புகிறார்.
மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று –குறள் 941
மணக்குடவர் உரை
உணவும் உறக்கமும் இணைவிழைச்சும் தன்னுடம்பின் அளவிற்கு மிகினும் குறையினும், நூலோரால் எண்ணப்பட்ட வாதமும் பித்தமும் சீதமுமாகிய மூன்றும் நோயைச் செய்யும்.
இதற்கு இரண்டுவித விளக்கங்களை உரைகாரர்கள் தருகின்றனர்.
ஆயுர்வேத நூல்களில் சொல்லப்பட்ட வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றில் எது கூடினாலும் குறைந்தாலும் நோய்களை உண்டாக்கும்.
மற்றோர் விளக்கம் : உணவு அதிகமாகச் சாப்பிட்டாலும் குறைவாகச் சாப்பிட்டாலும் வாதம் , பித்தம், கபம் சம நிலை தவறி உடலில் நோய்களை உண்டாக்கும் .
இதை நாம் கண்கூடாகவும் காண்கிறோம். ஐஸ்க்ரீமையோ, குளிர்ந்த பானங்களையோ தவறான காலத்தில், தவறான அளவில் சாப்பிட்டால் தடுமன் பிடிக்கும்; இருமல் வரலாம் . எதை அதிகம் சாப்பிட்டாலும் அஜீரணம் வரும் ; அதுவே பல நோய்களுக்கு அஸ்திவாரம் போடும்.
Xxx
பகவத் கீதைக்கு (6-16) ஆதிசங்கரர் பாஷ்யம் :
“உணவைத் தன் அளவிற்கு ஏற்ற அளவைக் கடந்து உண்பவனுக்கு , “எது தன் அளவிற்கு ஏற்றதோ , அந்த அன்னம் காப்பாற்றுகிறது ; அது கெடுப்பதில்லை ; அதிகமானது கெடுக்கின்றது ; குறைந்தது காப்பாற்றுவதில்லை” (சதபத பிராஹ்மணம்) என்னும் சுருதியினால் உணவின் ஒழுங்கைக் கண்டுகொள்க. ஆதலால் யோகியானவன் தன் அளவிற்கேற்ற அன்னத்தைக் காட்டினும் அதிகமாக, குறைவாக உண்ணக்கூடாது ; அல்லது வேறு விதமாக உரையிடலாம் . யோகியானவன் யோக சாஸ்திரத்தத்திற் கூறிய அந்த அளவைக் காட்டிலும் அதிகமாக உண்பவனுக்கு யோகம் இல்லை.
“அன்னத்திற்கும் கறி முதலானவற்றுக்கும் பாதி (வயிறு);
ஜலத்திற்கு மூன்றாவது (கால்பாகம்);
காற்று ஸஞ்சரிப்ப தற்காக நான்காவதை மிச்சப்படுத்தி வைக்கவேண்டும் (யோக சாஸ்திரம் )என்று கூறப்பட்டுள்ளது.
(1905ம் ஆண்டில் பெரியகுளம் த .சுந்தரராஜ சர்மா எழுதிய சங்கர பாஷ்ய மொழிபெயர்ப்பை 1977ம் ஆண்டில், திருக்கோவிலூர் ஞானாநந்த தபோவன சந்நியாசிகள் இரண்டாம் பதிப்பாக வெளியிட்டுள்ளனர் )
மேற் கூறிய சங்கர பாஷ்யத்தில் நமக்கு இரண்டு அற்புதமான விஷயங்கள், ஆதிசங்கரர் வாய்மூலம் கிடைக்கிறது.
(1). கீதையும், குறளும் திருமந்திரமும் சொன்ன கருத்து அதற்கு முன்னரே சதபத பிராஹ்மண நூலில் உள்ளது என்பது ஆதிசங்கரர் சொன்னதால் நமக்குத் தெரிகிறது.
(2).”சாப்பிடும்போது வயிற்றில் பாதி அளவு சாப்பிட்டுவிட்டு கால் பகுதியை தண்ணீருக்கும் மீதி பகுதியை வெற்றிடமாகவும் விட வேண்டும்” என்ற யோக சாஸ்திர கருத்து, ஆதிசங்கரர் காலத்துக்கும் முன்னரே இருந்துள்ளதையும் சங்கரர் நமக்கு காட்டுகிறார்..
அர்ஜுனா ! அளவு கடந்துண்பவனுக்கு யோகம் இல்லை. அறவே உண்ணாதவனுக்கும் அஃதில்லை . மிகைபட உறங்குபவனுக்கும் மிகைபட விழித்திருப்பவனுக்கும் யோகம் இல்லை.(6-16)
வீணையின் தந்தியை அளவுக்கு மீறி இறுக்கினால் அது உடைந்து போம். மிக இளக்கினால் அதில் ஓசை வராது . உடலோ வீணை போன்றது . உணவு, உறக்கம் இவைகளில் மிகைப்படுதலும் குறைபடுதலும் கூடாது அந்தந்த சரீரத்துக்கேற்ற உணவு எது , அளவு எது என்பதை அவரவரே தீர்மானிக்கவேண்டும்
பகற்பொழுதில் திருப்தியாக போஜனம் செய். ஆனால் இரவில் உட்கொள்ளும் உணவு குறைவாகவும் இலேசாயுமிருக்கட்டும்.
சரீரத்துக்கு உஷ்ணத்தையும் மனதுக்கு ஸஞ்சலத்தையும் எந்த உணவு கொடுக்காதோ அந்த உணவைத்தான் சாதகன் உட்கொள்ள வேண்டும் – ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் .
என்று ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர் 6-16 ஸ்லோகத்துக்கான உரையை முடிக்கிறார்.
Xxx
டாக்டர் ராதாகிருஷ்ணன், இந்தியாவின் ஜனாதிபதியாக இருந்தவர். அவர் இந்த 6-16 சுலோகத்துக்கு எழுதிய உரையில் புகல்வது யாதெனில்,
” மிருக உணர்வுகளிலிருந்து நாம் விலகி இருக்கவேண்டும்; எல்லா விஷயங்களிலும் மிக அதிகம் , மிகக் குறைவு என்பதைத் தவிர்க்க வேண்டும். பெளத்தர்களின் மத்திய வழிமுறையையும் அரிஸ்டாட்டில் சொன்ன தங்கம்போன்ற வழி முறையையும் இங்கே ஒப்பிட்டுப்பார்க்கலாம்”.
MIDDLE WAY OF BUDDHISTS:
The Middle Way as well as “teaching the Dharma by the middle” are common Buddhist terms used to refer to two major aspects of the Dharma, that is, the teaching of the Buddha. The first phrasing, refers to a spiritual practice that steers clear of both extreme asceticism and sensual indulgence
Xxx
GOLDEN MEAN OF ARISTOTLE
Moral behaviour is the mean between two extremes – at one end is excess, at the other deficiency. Find a moderate position between those two extremes, and you will be acting morally.
Xxx Subham xxxx
Tags- மித உணவு, அதிகஉணவு, யோகம், தியானம், கீதை 6-16, திருமந்திரம், குறள்
அறப்பளீசுர சதகம் பாடல் 46–ம் 47-ம் புராணக் கதைகளின் பட்டியல் .நல்லது நடக்க, எந்த வழியையும் கடைப்பிடிக்கலாம். தீய செயலைச் செய்வோர் எவ்வளவு வலிமை பெற்றாலும் இறுதியில் அழிவர் என்பது இந்த பாடல்களின் கருத்து.
ரஷ்யப் புரட்சி, பிரெஞ்சுப் புரட்சிகளில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். அப்படியும் அந்தப் புரட்சிகள் பாராட்டப்படுகின்றன. ஜப்பானிலுள்ள அப்பாவி மக்கள் தலையில் 2 அணுகுண்டுகளைப் போட்டு பல லட்சம் மக்களை ஒரு நொடியில் கொன்றுகுவித்தது அமெரிக்கா. ஆனால் ஹிட்லர் ஒழிந்தான் என்ற சந்தோஷத்தில் அமெரிக்காவை யாரும் இதுவரை கண்டிக்கவில்லை. பாகிஸ்தானில் ஒசாமா பின் லாடனை சட்டவிரோதமாக அமெரிக்கா கொன்றது அவன் 3000 பேர் சாவுக்குக் காரணமானதால் அதையும் உலகம் கண்டிக்கவில்லை . இறுதி லட்சியம் நல்லதாக இருந்தால் எந்த அதிரடி வேலையையும் செய்யலாம் என்பது உலகம் ஏற்றுக்கொண்ட நடை முறை. பெரிய புராணத்தில் பல வன்முறைக் காட்சிகள் வருகின்றன. அதன் பின்னாலுள்ள சிவ பக்தி– குருட்டுத் தனமான பக்தியால் அவை பாராட்டப்படுகின்றன. மேலும் அவர்கள் அனைவரும் சிவபதம் அடைவதாகவே கதை முடிகிறது.இதை ஆங்கிலத்தில் END JUSTIFIES MEANS என்று சொல்லுவார்கள்.
வள்ளல் சீதக்காதி பற்றி தமிழர்கள் அனைவரும் அறிவர். செத்தும் கொடுத்தான் சீதக்காதி சம்பவத்தையும் பலரும் கேட்டிருப்பார்கள் . ஒருவர் சீதக்காதி இறந்த பின்னரும் அவர் சமாதிக்குச் சென்று வருத்தமுற்றபோது சமாதியின் உள்ளிருந்து சீதக்காதியின் ஒரு கை வெளியே நீட்டியதாகவும் , அதிலுள்ள விரல் மோதிரத்தை அவர் எடுத்துக்கொண்டதாகவும் ஒரு கதை உண்டு.
(இது பற்றியும் சீதக்காதி யார், அவர் சமாதி எங்குள்ளது என்பது பற்றியும் முன்னரே ஆங்கிலம்,தமிழ் இரண்டிலும் இங்கே பதிவுகள் ஏற்றப்பட்டுள்ளன )
இப்போது அதிகம் அறியாத ஒரு சம்பவத்தைக் காண்போம்.
நம் நாட்டில் ஏற்பட்ட ஒரு கொடிய பஞ்சத்தைப் பற்றி ஜே எஸ் சாண்ட்லர் என்ற மேனாட்டார் பின்வருமாறு எழுதியுள்ளார் :
“மறவர் நாட்டில் (சேதுபதி நாடு) தோன்றிய பஞ்சம் கி.பி. 1678-ம் ஆண்டிலிருந்து 1685-ம் ஆண்டு வரை ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்தது. புலிக் கூட்டங்கள் எங்கும் சுற்றி அலைந்தன. நூறு பேர் உள்ள ஒரு கூட்டத்திலும் ஒரு புலி புகுந்து ஒருவரைத் தாக்கித் தூக்கிக்கொண்டு போய்விடும். ஒரு ஊரில் ஒரு சில நாட்களுக்குள் எண்ணற்ற ஆடுகள் கொல்லப்பட்டதுமல்லாமல் எழுபது மனிதர்களும் மறைந்துவிட்டார்கள் . பீதியால் கலங்கிய மக்கள் இரவு நேரத்தில் தங்கள் வீடுகளை சுற்றி நெருப்பு வளர்த்துக் கொண்டு தூங்கினர். .இரவில் வெளியூர்ப் பயணம் செய்வதில்லை. பகலில் செல்வதும் பாதுகாப்பற்றதாய் இருந்தது.
மதுரை நகரம் பொலிவிழந்து காணப்பட்டது புலிகளும் ஓநாய்களும் நகரில் அச்சமின்றி உலவித் திரிந்தன .வெட்டுக்கிளிகள் பயிர்களை மொய்த்துத் தின்றுவிட்டன .நாடு முழுதும் நச்சுப் பூச்சிகள் பரவின.இறந்துவிட்டவர்கள் புதைக்கப்படாமல் ஆற்றின் கரைகளிலே எறிந்து விடப்பட்டிருந்தனர் .
இப்பஞ்ச காலத்தில் வாழ்ந்த சீதக்காதி வள்ளல், மக்கள் துயரைக் கண்டு மனம் புண்பட்டார். தம் மரக்கலங்களை நெல் விளையும் பிரதேசங்களான கோதாவரி தீரம், வங்காளம் முதலிய பிரதேசங்களுக்கு அனுப்பி, தனியங்களைக் கொள்முதல் செய்து பாண்டி நாட்டில் இறக்குமதி செய்தார். அவருடைய காரியக்காரர் , வந்த நெல்லை நல்ல விலைக்கு விற்று கொள்ளை லாபம் சம்பாதிக்கத் திட்டமிட்டனர். ஆனால் அது பலிக்கவில்லை . களஞ்சியங்களில் குவிந்த நெல்லை வள்ளல், வாரி வாரி ஏழைகளுக்குத் தானமாக வழங்கினார். அவருடைய காரியக்காரர் (Agents) குறுக்கிட்டும், அவர் விற்பனை செய்ய மறுத்துவிட்டார் . மக்களின் துயரைத் துடைத்த சீதக்காதியின் அன்னதானத்தை , படிக்காசுப் புலவர் பாடியுள்ளார்,
ஓர் தட்டிலே பொன்னும் ஓர் தட்டிலே நெல்லும் ஒக்கவிற்கும்
கார்தட்டிய பஞ்ச காலத்திலே தங்கள் காரியப்பேர்
ஆர்தட்டினும் தட்டுவராமலே அன்னதானத்துக்கு
மார்தட்டிய துரைமால் சீதக்காதி வரோதயனே •
பொன்னுக்குப் பதிலாக நெல்லைச் சமமாக விற்கின்ற கொடிய பஞ்ச காலம்; அக்காலத்திலும் கூட இலவசமாக நெல்லை, ஏழைகளுக்கு வழங்கிய சீதக்காதியை தமிழ் கூறு நல்லுலகம் என்றும் மறக்காது
(இந்த சம்பவத்தை தமிழில் உணவு பற்றி புஸ்தகம் எழுதிய ஏ.கே செட்டியார் தந்துள்ளார்.1967-ம் ஆண்டு மதுரை TVS டி .வி. எஸ் . நிறுவனத்தார் வெளியிட்ட நல்ல புஸ்தகம் அது.)
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
சுப்ரக் – மேவார் இளவரசர் கரன் சிங்கின் குதிரை!
ச.நாகராஜன்
அடிமை வம்சத்தின் முதல் அரசனான டெல்லி சுல்தான் குத்புதீன் அய்பக் ஓடுகின்ற குதிரையிலிருந்து கீழே விழுந்து இறந்தான் என்று நாம் கேட்டிருக்கிறோம்.
இது உண்மையில் சாத்தியம் தானா? ஒரு ராணுவ தளகர்த்தர், அதுவும் 11 வயதிலிருந்தே குதிரை மீதிருந்து பல்வேறு போர்களைச் சந்திக்க ஆரம்பித்தவன் ஓடுகின்ற குதிரையிலிருந்து கீழே விழுந்து இறப்பானா?
கேள்வி சரியான கேள்வி தான். விடையைப் பார்ப்போம்.
குத்புதீன் ராஜஸ்தானத்தைக் கொள்ளையடிக்க ஆரம்பித்த போது மேவார் அரசனை அவன் கொன்றான். இளவரசன் கரன் சிங்கை சிறைப்பிடித்தான். கொள்ளையடித்த செல்வத்துடனும், இளவரசருடனும் அவரது குதிரையான சுப்ரக்கையும் தன்னுடன் எடுத்துச் சென்றான்.
லாகூரில் கரன்சிங் குத்புதீன் பிடியிலிருந்து தப்பப் பார்த்தார். ஆனால் அப்போது சிறைப்பிடிக்கப்பட்டார். குத்புதீன் அவரது தலையை வெட்ட ஆணையிட்டான். அது மட்டுமல்ல, இன்னும் அவமானப்படுத்தும் விதத்தில் இளவரசரின் தலையை போலோ விளையாட்டில் விளையாடவும் உத்தரவிட்டான்.
இளவரசரின் தலையை வெட்டும் தினத்தன்று வெட்டும் இடத்திற்கு, குத்புதீன் சுப்ரக் குதிரையின் மீது ஏறி வந்தான். சுப்ரக் தனது எஜமானனான கரன் சிங்கைக் கண்டவுடன் ஆக்ரோஷத்துடன் கட்டுப்பாடின்றி கனைத்து துள்ளிக் குதித்தது.
இதனால் குத்புதீன் குதிரை மேலிருந்து கீழே விழுந்தான். சுப்ரக் குத்புதீனை தனது காலால் உதைத்துத் தள்ளியது.
அதன் நீளமான குளம்புகள் குத்பூதின் மார்பிலும் தலையிலும் பலமாக உதைக்கப்படவே அவன் அந்த இடத்திலேயே இறந்தான்.
அனைவரும் விக்கித்துப் பிரமித்து விட்டனர். சுப்ரக் கரன்சிங்கை நோக்கி ஓடியது. ஒரே குழப்பம். இதைப் பயன்படுத்திய கரன்சிங், சுப்ரக் குதிரை மீது பாய்ந்து ஏறினார். குதிரை பறந்தது.
அதன் வாழ்க்கையின் மிக நீண்ட ஓட்டத்தை சுப்ரக் செய்தது!
மூன்று நாட்கள் நிற்காமல் தொடர்ந்து அது ஓடியது. கடைசியில் மேவார் கோட்டையின் வாயில் கதவருகில் வந்து நின்றது.
கரன் சிங் சுப்ரக் மேலிருந்து கீழிறங்கும் போது அது அசைவற்றுச் சிலை போல நின்றது.
கரன்சிங் அன்போடு தன் கரங்களால் சுப்ரக்கின் தலையைத் தடவிக் கொடுத்தார். ஆனால் சுப்ரக் கீழே விழுந்தது. கரன் சிங் திகைத்துப் போனார்.
தனது எஜமானனைக் காப்பாற்றி அவரை அவரது நாட்டிற்கு பத்திரமாகக் கொண்டுவந்த சுப்ரக் கீழே விழுந்து இறந்து விட்டது.
சுப்ரக்கின் கதை சாதாரணமான எஜமான விசுவாசம் என்பதையும் தாண்டிய ஒன்று.
இந்த உண்மைச் சம்பவங்கள் எல்லாம் நமது புத்தகங்களில் இடம் பெறாதே!
சுப்ரக்கைப் பற்றி நீங்களாவது இதைப் படிக்கும் முன்னர் கேள்விப் பட்டிருக்கிறீர்களா?
ஜெய் ஹிந்த்!
ஆதாரம் : (Courtesy – Commodore Amerendra nath Awasthi)
Thanks to : Truth weekly Vol 90 No 33 dated 9th December 2022