குழந்தை பிறக்காதது ஏன்? (Post No7472)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7472

Date uploaded in London – 19 January 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

பிரிட்டனில் ஆங்கிலப் பத்திரிக்கைகளில் அவ்வப்போது மருத்துவப் பிரச்சினைகள் பற்றி பயனுள்ள கட்டுரைகள் வெளியாகும் .அத்தகைய ஒரு கட்டுரை குழந்தை பிறக்காமல் இருக்க  என்ன  காரணங்கள் என்பதை புல்லட் பாயிண்டுகளில் தருகிறது. குறிப்பாக ஆண்கள் பற்றிய விஷயம் இது.

குழந்தைக்காக ங்குவோர்  எல்லா கலாசாரங்களிலும் , மதங்களிலும், நாடுகளிலும் உள்ளனர். இயற்கையான காரணங்களை வீட நாமாக உண்டாக்கிக் கொள்ளும் செயற்கையான தடைகளும் உண்டு. அவைகளை நாம் தவிர்க்கலாம். மருந்து , சிகிச்சை என்று ஏதேனும் படித்தால் மருத்துவ நிபுணர்களைக் கலந்தாலோசிக்காமல் எதையும் செய்யாதீர்கள்.

1.வயது ஒரு காரணம். 70 வயதுக்குப் பின்னர்கூட குழந்தை பெற்றுக்கொள்ளும் பிரமுகர்கள் பற்றிப் பத்திரிகையில் படிக்கிறோம் . ஆனால் ஆண் விந்து உற்பத்தி 40 வயதுக்குப் பின்னர், 25 வயதுக்காரனை விட,  பாதியாகக் குறைந்துவிடுகிறது.

2.மதுபானம் அருந்துவர்களுக்கும், சராசரி மனிதனைவிட ஆண் விந்து உற்பத்தி குறைவே. அதிகம் குடிப்போருக்கு குழந்தை உற்பத்தி செய்யும் சக்தி மிகவும் குறைந்துவிடும்.

3.சிகரெட் குடிப்போருக்கும் , ஆண் உயிரணுக்களின் உற்பத்தி சரி பாதிதான்.

4.போதை மருந்துக்கு அடிமையானோரின் உயிர் அணு – விந்து – மிக வேகமாக நீந்துவதால் ,பெண்ணிடம் உற்பத்தியாகும் முட்டையை அடைவதற்குள் களைப்படைந்து விடுமாம் .

5.அதிக எடையுடையோர் பிள்ளை பெற்றுக்கொள்வதில் கஷ்டப்படுவார்கள். காரணம் என்னவென்றால் உடலில் சுரக்கும் ஹார்மோன்கள் சமச் சீராக இருப்பதில்லை. உடல் பருத்தவர்கள் உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி மூலம் முதலில் எடையைக் குறைக்கவேண்டும்

6.புறச் சூழல் மாசுபடுவதும் குழந்தை பெரும் விகிதத்தைக் குறைத்துவிட்டது. பிரிட்டனில் மது, புகை பிடித்தல் , புறச் சூழல் கேடு ஆகியன காரணமாக முன்னர் இருந்ததைவிட விந்து  உற்பத்தி பாதியாகக் குறைந்துவிட்டது. 1950களி ல் ஆண்  விந்து உற்பத்தியை தற்கால ஆண்களுடன் ஒப்பிட்டதில் இது தெரியவந்தது.

7..இத்தாலியில் நடந்த ஆராய்ச்சியில் மாலை 5 மணி முதல் 5-30 வரை விந்து உற்பத்தி மிகவும் அதிகமாக இருந்தது 500 ஆண்களைச் சோதித்ததில் கண்டுபிடிக்கப்பட்டது .

8.அடுப்பங்கறையில் அதிக நேரம் செலவழிப்போரும்  , அதிக வெப்பம் வெளியிடும் எந்திரங்களின்  இடையே வேலை செய்வோரும், குழந்தை பெற்றுக்கொள்ள சிரமப்படுவார்கள்.  வெப்பத்தால் விந்து உற்பத்தி பாதிக்கப்படுவதே இதற்குக் காரணம் . ஜக்குஸி (Jacuzzi) ,வெப்ப ஊற்றில் குளிப்பவர்களுக்கும் வெப்பத்தால் ஏற்படும் பாதிப்பு உண்டு.

9.ட்யூனா மீன் , மகேரல் மீன்(Tuna and Mackerel)  வகைகளில் அதிக பாதரச விஷம் (Mercury poisoning) இருப்பதாலும் பாதிப்பு உண்டு.

10.ஈயத்துக்கும் (Lead) விந்து உற்பத்தியைப் பாதிக்கும் குணம் உண்டு .ஈய உபகணரங்களுடன் வேலை செய்வோர் கவனமாக இருக்கவேண்டும்.

11.மொபைல் போன் அதிர்வுகள், கிரணங்கள் பாதிக்குமா என்பதில் இருவேறு கருத்துக்கள் உள்ளதால் ஒன்றும் சொல்வதற்கில்லை .

12.வலி நிவாரணி (Pain Relief) மாத்திரைகளை நீண்ட காலம் பயன்படுத்துவதும் பதிப்பை உண்டாக்கும்.

13.செயற்கை உரம் பயன்படுத்தாத இயற்கை உர தாவரங்கள் காய்கனிகளைச்  சாப்பிடுவோருக்கு குழந்தை பெறுவது எளிது.

14.மாதுளம் பழச் சாறு சாப்பிடுவோருக்கு ஜனன உறுப்புகளில் ரத்தம் பாய்வது அதிகரிக்கிறது என்பதும் ஆராய்ச்சியில் கண்டு பிடிக்கப்பட்டது. நாள்தோறும் ஒரு கோப்பை பழச் சாறு சாப்பிடலாம்.

15.ஆண்கள் உறுப்பை இறுக்கமாகப் பிடிக்கும் ஆடைகளை அணிய கூடாது.

16.ஆஸ்திரேலியாவில் நடந்த ஒரு ஆய்வில் வாரத்துக்கு மூன்று முறை படுக்கை அறைக்கு செல்வது நல்லது என்று காட்டியது. கிணற்றில் தண்ணீர் எடுக்க எடுக்க ஊறுவது போல விந்து உற்பத்தியும் நடைபெறும்.

17.பாலியல் நோய் (STD or VD) வந்தால் உடனே சிகிச்சை பெற வேண்டும். ஏனெனில் அதுவும் குழந்தை பிறப்பதைப் பாதிக்கும்.

18.வாகனங்களில் செல் வோர்  மூக்கில் அசுத்தக் காற்று உள்ளே செல்லாதபடி முகமூடி அணிவதும் நலம் பயக்கும்.

19.மன உளைசல், மனக்கவலை ஆகிய னவும் குழந்தை பெறுவதற்குத் தடையாக நிற்கிறது. ஆகையால் கவலை இல்லாத, மனா நிறைவுடன் வாழ்தல் குழந்தை பெற உதவும். எல்லாம் அவன் செயல் என்று விட்டுவிட்டு நிம்மதியாக வாழவேண்டும்.

20.அந்த விந்துவில் இரண்டு வகை; எக்ஸ் X விந்து என்ற வகை பெண் குழந்தைகளை உருவாக்கும். இவை வலுவானவை. நீண்ட காலம் உயிர்த்துடிப்புடன் இருக்கும். ஒய் Y வகை விந்து ஆன் குழந்தைகளை உருவாக்கும். இவை நீண்ட வால் உடையவை. வேகமாக நீந்த வல்லவை .

21.குழந்தை பெறுவதில் தாமதம் ஏற்பட்டால் உடனே மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. சிலர் குழந்தை பெற முயற்சிக்கும் முன்னர் கூட (Pre-Conception Test)  , சோதனை செய்து கொள்கின்றனர். பிரச்சனை உள்ள குடும்பங்களில் இப்படி முன்கூட்டி சோதனை செய்வது தாமதத்தைத் தவிர்க்க உதவும்.

22.இறுதியாக துத்தநாக (Zinc) உலோக உப்புக்கள் நிறைந்த உணவு விந்து உற்பத்தியை அதிகரிக்கிறது. இதுதான் காரணம் என்று தெரிந்தால் மருத்துவர் ஆலோசனையின் பேரில் நாள்தோறும் பத்து மில்லி கிராம் மாத்திரை எடுக்கலாம். டாக்டர்கள் ஆலோசனையின் பேரில் இதைச் செய்தல் அவசியம்.

Xxxx

லோகாஸ் ஸமஸ்தோ சுகினோ பவந்து

எல்லோரும் இன்புற்றிருப்பதேயன்றி யாமொன்றும் அறியோம் பராபரமே

Xxx subham xxx

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: