Tamil Hindu Encyclopaedia – 16 (Manmatha மன்மதன், காமன்)- Post 11,407

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,407

Date uploaded in London – 2 November 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

‘Tamil Hindu Encyclopaedia – 15’ WAS POSTED ON 21ST OCTOBER 2022.

Tamils living in the southernmost part of India followed the Hindus in other parts of India in describing the God of Love known as Kama or Manmatha.

Manmatha is a beautiful Sanskrit word meaning ‘One who Churns your Mind’. Hindus are great psychologists and showed that sex is an inborn instinct, and one should not avoid it but control it. Hinduism is the only religion in the world that showed sex is holy and necessary. They included in the four values of life Dharma, Artha, KAMA and Moksha. The greatest of the ancient Tamil poets Tiru Valluvar included Kama in his Tiruk Kural as a big chapter and used the Sanskrit word Kaama. Early Christian preachers were afraid to touch that part and refused to translate it. But Hindus even did the world’s first sex book known as Kamasutra (Kaama suutra) 2000 years ago.

 Hindu psychologists showed also that sex can’t be eradicated from earth and said it would survive as an abstract thing but not concrete. When Shiva burnt down the God of Love Manmatha, his wife Rathy, the most beautiful woman in Hindu literature, begged to Lord Shiva to revive him and Shiva told her he would be there for ever on earth as Bodyless (AN+ANGA= Ananga). It shows that whether there are beautiful ladies or not, the inborn sex instinct would be there as abstract feeling in everyone.

All these things are repeated by the poets in ancient Sangam Tamil literature, which is at least 2000 year old.

In addition to the above, Sanskrit poets described that he would fire Five Flower Arrows to induce sexual feelings. Tamils repeated that also in ancient poems. The Five Arrows are the Five Senses. The sexual feelings will pervade through five senses.

In short Tamils never missed anything said in older Sanskrit poems.

I have already given enough information in the following two posts and so I would directly quote the Tamil sources.

Kama deva – Hindu God of Love in Tamil and Sanskrit …

https://tamilandvedas.com › 2016/06/01 › kama-deva-h…

1 Jun 2016 — Tamil and Vedas. A blog exploring themes in Tamil and vedic literature. Kama deva – Hindu God of Love in …

TAMIL KAMAN PANDIKAI/FESTIVAL IN ROME AND GREECE …

https://tamilandvedas.com › 2022/03/08 › tamil-kaman-…

8 Mar 2022 — It is the month of Holi Festival and Tamil Kaman Pandikai. (Pandikai means festival). In Northern India the Hindus celebrate Holi and throw …

 xxx

Tamil References:

1.Kaman (kaaman) is son of Lord Vishnu says Kalittokai 140-7; Pari-1-31

Nediyon makan- நெடியோன் மகன்

Vishnu is the father of Brahma and Manmathan- Pari-1-31 இருவர் தாதை இலங்குபூண் மா அல்

Tamils said that the brother of Kaaman/Manmatha is Saaman- Kali.263/4; 94-33/34 சாமன்.

The interesting thig about them is that they are also as  black as Vishnu.

This gives a severe blow to the Pro Aryan Invasion theorists. Most famous Hindu Gods are Black (Krishna, Draupadi, Vyasa, Vishnu, Manmatha, his brother Saman). Some people even interpret இருவர் தாதை இலங்குபூண் மாஅல் as Father of Kaman and Saman.

xxx

2.Shark flag

Tamils follow Sanskrit poems in describing the Flag of Manmatha as Shark Flag Kali26-3, 26-84; 147-42 (holder).

There is an interesting scene in  Kalittokai. A courtesan puts a shark picture ring in the finger of a boy whose father used to visit that woman. Then his wife becomes angry thinking that the prostitute was bold enough to send me a message that your husband will be a slave to me for ever- Kali 84-22-27

அவற்றுள் நறா இதழ் கண்டன்ன செவ்விரற்கு

சுறா ஏறு எழுதிய மோதிரம் தொட்டாள்

குறி அறிந்தேன் ; காமன் கொடி எழுதி என்றும்

செறியா பரத்தை இவன் தந்தை மார்பில்

பொறி ஒற்றிக்கொண்டு ஆள்வல் என்பது தன்னை

அறீ இயச்  செய்த வினை 

சுறா ஏறு எழுதிய மோதிரம்- -Ring with shark picture on it

காமன் கொடி- Flag of Kaaman/Manmatha

பரத்தை – Prostitute (Para  Stree= Para  ththai= Pros  titute)

xxx

3. Five Flower Arrows

Manmathan holds a Sugarcane bow with which he shoots Five Arrows made up of flowers. This is in at least five of Kalidasa’s works.

In Tamil we it Pari 10-97

அரிபடும் ஐ விரை மாண் பகழி

The five flowers are Lotus, Mango tree, Jasmine, Asoka and Neelotpala

மா, முல்லை, தாமரை, அசோகு, நீலோத்பலம்

To be continued………………….

Tags- ரதி மன்மதன், காமன், சாமன் , மலர் அம்பு, Shark ring, Shark Flag, Manmatha, Kama,Rathy, Rathi, Five Flowers, Arrows

அருணகிரிநாதரும் தமிழும்! – 7 (Post No.11,406)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,406

Date uploaded in London – –    2 November 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

அருணகிரிநாதரும் தமிழும்! – 7 

ச.நாகராஜன் 

அருணகிரிநாதருக்கும் தமிழுக்கும் உள்ள இணைப்பு அதிசயமானது.

முருகனுக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பு எத்தகையதோ அத்தகையது அந்த இணைப்பு.

பல இடங்களில் தமிழ் முருகனைத் தமிழால் போற்றிப் புகழ்ந்த அருணகிரிநாதப் பெருமான் தமிழையும் பல்வேறு விதமாக அழகுறப் போற்றி வணங்குகிறார்.

அவர் தமிழைப் பற்றிக் கூறும் இடங்களை இந்தத் தொடரில் காணலாம்.

61) திருவிடைமருதூர்

மதுர கவியடைவு பாடி வீடறிவு

 முதிர அரியதமி ழோசை யாகவொளி

  வசன முடையவழி பாடு சேருமருள் – தந்திடாதோ


பாடல் எண் 859 :  இலகு குழைகிழிய எனத் தொடங்கும் பாடல்

பொருள் :  இனிமை நிரம்பிய பாடல்கள் எல்லாவற்றையும் பாடி, வீட்டின்ப ஞானம் நிரம்ப உண்டாக, அருமையான தமிழ் இசை பிறக்க,

அறிவு மொழிகள் பொலிகின்ற வழிபாட்டு நெறியில் சேரும்படியான உனது திருவருளைத் தரமாட்டாயோ?

62) திருச்சக்கிரப்பள்ளி

துட்ட நிக்ரக சத்தித ரப்ரப

 லப்ர சித்தச மர்த்தத மிழ்த்ரய

 துட்க ரக்கவி தைப்புக லிக்கர – செனுநாமச்

சொற்க நிற்கசொ லட்சண

பாடல் எண் 878 :   திட்டெனப் பல எனத் தொடங்கும் பாடல்

பொருள் :  துஷ்டர்களை அடக்கும் சக்தி வேலைத் தரிப்பவனே, புகழும் கீர்த்தியும் கொண்ட வல்லமை வாய்ந்தவனே, முத்தமிழில் முடிப்பதற்கு அருமையான (தேவாரப்) பாடல்களை (திருஞானசம்பந்தராக வந்து) சீகாழி அரசு என்னும் புகழ் பெற்று, (அப்பாடல்களைக் கற்றவர்களுக்கு) வீட்டுப் பேறு நிலைத்து நிற்கும்படி சொன்ன அழகை உடையவனே!

63) வயலூர்

மோகன விருப்பைக் காட்டி ஞானமு மெடுத்துக் காட்டி

 மூதமிழ் முனிக்குக் கூட்டு – குருநாதா

பாடல் எண் 915 : மேகலை நெகிழ்த்து எனத் தொடங்கும் பாடல்

பொருள் : அன்பு மிக்க விருப்பத்தைக் காட்டி, ஞான சாஸ்திரங்களை விரித்து எடுத்து உரைத்துக் காட்டி, பழந் தமிழ் வல்ல அகத்திய முனிவருக்கு அந்த ஞானத்தைக் கூட்டுவித்த குருநாதனே!

64) அவிநாசி

அங்கத்தைப் பாவிசெய் தாமென

 சங்கத்துற் றார்தமி ழோதவு

  வந்துக்கிட் டார்கழு வேறிட – வொருகோடிச்

பாடல் எண் 944 : பந்தப்பொற் பார எனத் தொடங்கும் பாடல்

பொருள் : எலும்பிலிருந்து பெண்ணைப் படைக்கின்றோம் என்று சங்க காலத்துப் புலவர்களின் (தேவாரத்) தமிழ்ப் பாடலை நீ ஓதவும், உனது அருமை பெருமை தெரிந்து மகிழ்ந்து உன்னைச் சேராதவர்களாகிய அமணர்கள் கழுமரத்தில் ஏறவும் 

வரலாறு : திருமயிலை சென்ற திருஞானசம்பந்தர் பூம்பாவையை எலும்பிலிருந்து உயிருடன் எழுப்பிய நிகழ்வை இந்தப் பாடல் குறிக்கிறது. (போதியோ பூம்பாவாய் -திருஞானசம்பந்தர் பாடலை அன்பர்கள் படிக்கலாம்)

65) தனிச்சயம்

தலைச்சுமைச் சடைச்சிவற் கிலக்கணத் திலக்கியத்

  தமிழ்த்ரயத் தகத்தியற் – கறிவோதுஞ்

பாடல் எண் 954 : இலைச்சுருட் கொடு எனத் தொடங்கும் பாடல்

பொருள் : தலையில் சுமை போலப் பாரமான சடையைக் கொண்ட சிவபெருமானுக்கும், இலக்கணம், இலக்கியம், நாடகம் என்னும் முத்தமிழில் வல்லவரான அகத்திய முனிவருக்கும் ஞான போதகனே, சாமர்த்தியத்தில் முதல் இடத்தில் இருப்பவனே!


66) மதுரை

வடவெற் பங்கய லன்றணி குசசர

 வணையிற் றங்கிய பங்கய முகதமிழ்

  மதுரைச் சங்கிலி மண்டப இமையவர் – பெருமாளே

பாடல் எண் 961 : புருவச் செஞ்சிலை எனத் தொடங்கும் பாடல்

பொருள் : வடக்கே உள்ள இமயமலைக்கு அருகே சமீபத்தில் உள்ள அழகிய தர்ப்பைகள் வளர்ந்துள்ள சரவணப் பொய்கையில் முன்பு வளர்ந்த தாமரை போன்ற திருமுகத்தை உடையவனே, தமிழ் வளர்ந்த மதுரையில் சங்கிலி என்னும் மண்டபத்தில் வீற்றிருப்பவனே, தேவர்களின் பெருமானே!

குறிப்பு : மதுரையில்சங்கிலி மண்டபம் இப்போது கிளி மண்டபம் என அழைக்கப்படுகிறது.

67) மதுரை 

  தரும நீதி சேர்தத் துவங்கள் – தனி யோகம்

தவறி லாம லாளப் பிறந்த

 தமிழ்செய் மாறர் கூன்வெப் பொடன்று

  தவிர ஆல வாயிற் சிறந்த – பெருமாளே

பாடல் எண் 962 : முகமெலா நெய் எனத் தொடங்கும் பாடல்

பொருள் :  எல்லா வேதங்களிலும் கூறப்பட்ட லட்சணங்கள், ஆறு சமயங்கள், மூன்று உலகங்கள், தரும நீதிகளுடன் சேர்ந்த உண்மைகள், தவம், யோகம் (ஆகிய இவை எல்லாம் சிறந்து ஓங்கும்படி) பிழையின்றி ஆட்சி செய்வதற்கே தோன்றிய தமிழ் வளர்த்த திருஞானசம்பந்தனே, பாண்டியனுடைய சுரத்தோடு கூனும் அன்று நீங்க மதுரையில் (திருநீறு தந்து) சிறந்த பெருமாளே

வரலாறு; இங்கு மதுரையில் கூன் பாண்டியனின் கூன் தீர்ந்த வரலாறு சொல்லப்படுகிறது.


68) இலஞ்சி

  இலங்கு தரதமிழ் விளங்க வருதிரு

   இலஞ்சி மருவிய பெருமாளே

பாடல் எண் 971 : கரம் கமலம் மின் எனத் தொடங்கும் பாடல்

பொருள் : விளக்கம் பூண்டுள்ள தமிழ் விளங்க திருஞானசம்பந்தராக வந்து தமிழ் மொழிந்தவனே, திரு இலஞ்சி நகரில் வீற்றிருக்கும் பெருமாளே!

69 ) ஒடுக்கத்துச் செறிவாய்

அகப்பட் டுத்தமிழ் தேர்த்த வித்தகர்

 சமத்துக் கட்டியி லாத்த முற்றவன்

  அலைக்குட் கட்செவி மேற்ப டுக்கையி லுறைமாயன்

பாடல் எண் 987 : வழக்குச் சொற்பயில் எனத் தொடங்கும் பாடல்

பொருள் : தமிழில் வல்ல அறிஞர்களிடத்தில் வசப்பட்டு சாமர்த்தியமான கவியின் ஈற்றடியிலுள்ள இறுதிப் பொருளில் விருப்பம் கொண்டவனும், கடலில் (ஆதிசேஷன் என்னும்) பாம்பின் மேல் படுக்கை கொண்டிருக்கும் மாயனுமாகிய திருமாலுக்கு – முனிவர் உருவில் வந்த போது ….

வரலாறு : காஞ்சீபுரத்தில் ஆழ்வாரின் சீடனாகிய கனிகண்ணன் வரதராஜப் பெருமாளை நோக்கி ‘கனிகண்ணன் போகின்றான்’ என்று ஆரம்பித்து ‘நீயுமுன்றன் பைந்நாகப் பாய் சுருட்டிக் கொள்’ என்று பாட,   

பெருமாள் அவரது ஈற்றடியில் வசப்பட்டு காஞ்சீபுரத்திலிருந்து கிளம்ப, பின்னர் மீண்டும் குடியேற வேண்ட அவ்வண்ணமே அருள் பாலித்தார்; ஆகவே அவருக்கு சொன்னவண்ணம் செய்த பெருமாள் என்ற திருநாமம் ஏற்பட்டது. இங்கு அந்த வரலாறு சுட்டிக் காட்டப்படுகிறது.

70 ) பொதுப் பாடல்

  சங்கமேறும்

மாத மிழ்த்ரய சேயே நமோநம

   வேத னத்ரய வேளே நமோநம

    வாழ்ஜ கத்ரய வாழ்வே நமோநம – என்று பாத

பாடல் எண் 992 : போத  எனத் தொடங்கும் பாடல்

பொருள் : சங்கப் பலகையில் ஏறி அமர்ந்த முத்தமிழ்ச் செம்மலே, போற்றி, போற்றி. ரிக், யஜுர், சாமம் என்ற மூன்று வேதங்களும் தொழும் தெய்வமே போற்றி போற்றி. வாழ்கின்ற பூலோகம், அந்தரம், சுவர்க்கம் ஆகிய மூவுலகங்களும் போற்றும் செல்வமே போற்றி போற்றி!

குறிப்பு நன்றி : https://www.kaumaram.com தளத்தில் உள்ளபடி பாடல் எண் தரப்பட்டுள்ளது. முழுத் திருப்புகழ்ப் பாடலையும் அதன்  விளக்கத்தையும் இந்த தளத்தில் காணலாம்.

***

 புத்தக அறிமுகம் – 101

அறிவியல் துளிகள் (பாகம்1)

பொருளடக்கம்

நூலில் உள்ள அத்தியாயங்கள்

 1.   கெப்ளர் விண்கலம்  

 2.   உயிர் தரும் ஆக்ஸிஜன் சுழற்சி!

 3.   ஹெலனின் தியாகம்!

 4.   நம்பிக்கை இழக்காதீர்கள்! மனம் தளராதீர்கள்!   

 5.   ஹிப்னாடிஸ யோசனை மூலம் முன்னேற முடியும்!  

 6.  கண்டுபிடிப்புகளைப் பிரபல விஞ்ஞானிகள் கண்டுபிடித்தது எப்படி?

 7.   யுரேகா கண்டுபிடிப்புகள்!  

 8.   பகல் கனவில் பல கண்டுபிடிப்புகள்! 

 9.   சாவுக்கடல் சாகிறதா?

10.  விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதர் யூரி ககாரின் 

11..  ககாரின், விண்ணில் கடவுளைப் பார்த்தீர்களா?  

12.   சைபர்னெடிக்ஸ்!

13  ‘ஐ லவ் யூ’-வில் சைபர்னெடிக்ஸ்!    

14.  பிரச்சினைகளைத் தீர்க்கும் நவீன சாதனங்கள்!  

15.  ஒஸாமா பின் லேடனைப் பிடிக்க உதவிய சாடிலைட்டுகள்!

16.  அதிகார ஆணவம் பற்றிய விநோத ஆராய்ச்சி!  

17.  பெண்களின் எண்ணிக்கையை உலகில் குறைய வைத்த

      அல்ட்ராசானிக்

18.  6 மில்லியன் டாலர் பயோனிக் மூளை!    

19.  நாம் எல்லோருமே ரஜினிகாந்த்தான்! 

20.  சந்தோஷத்தை விலைக்கு வாங்கலாம்!    

21.  சந்திரனில் செக்ஸ்  

22.   நூறு ஆண்டுகள் வாழ ஒரு அதிசய மாத்திரை!  

*

இந்த நூலுக்கு பிரபல விஞ்ஞானியான திரு K.G.நாராயணன் அவர்கள் அளித்த அணிந்துரை இது: 

திரு K.G.நாராயணன்

அற்புதத்   துளிகள் 

தென்னை மரத்திலிருந்து தேங்காய் விழுந்தால்  தலை தப்பியது என்று ஆறுதல் கொள்வது இயற்கை. அதுவே நம்மில் பெரும்பாலோரின் பிரதிக்கிரியை. ஆனால் ஆயிரத்தில் ஒருவர் – ஐசாக் நியூட்டன்  போன்றவர் – தேங்காய் ஏன் தரையை  நோக்கி விழுந்தது,  வானத்தை பார்த்து ஏன் பறக்கவில்லை என்று அண்ணாந்து பார்த்து அதிசயிப்பார். அந்த அற்புதத்தின் காரணத்தை அறிய முயற்சிப்பார். இரவும் பகலும் தன் அறிவின் திறத்தினால் இயற்கை ரகசியத்தின் மேல் கூட்டை உடைத்து  உள்ளிருக்கும் பொருளை  எல்லோருக்கும் தெரியுமாறு வெளியில் கொணர வெறி கொண்டவர் போல் உழைப்பார். சிறிய வெற்றி அடைந்தாலும் அதையே முதல்  படியாகக்    கொண்டு  அடுத்த கேள்விக்கு விடை தேடத் தொடங்குவார். காற்று வெளியில் நடக்கும் இந்த விந்தை கடலுக்கு அடியிலும் நடக்குமா என்று வினவுவார். அவருடைய தேடுதலில் தோல்விகளும் வெற்றிகளே.  

    இயற்கையின் ரகசியங்களை ஆராய்ந்து  அறிவதற்கு உண்டாகும் “கொலை வெறி” சில பேருக்கு மட்டுமே உண்டாகிறதா? அதற்க்கு மூல காரணம் என்ன? இயற்கையை  அன்றாட  வாழ்வுத் தேவைகளுக்குப்  பயன் படுத்திக்கொள்ள வேண்டும் என்ற ஆசையா? அல்லது  நம்மை சூழ்ந்திருக்கும் உலகைப் பற்றி அறிந்துகொள்ளவேண்டும் என்னும் பேராவலா ?  மூளைக் கிளர்ச்சியா?  இரண்டும் தான்.  கடந்த பல நூற்றாண்டுகளாக ஏற்பட்டிருக்கும் கணக்கற்ற அறிவியல் முன்னேற்றங்கள் இவ்விரண்டு காரணங்களாலும் உந்தப் பட்டவையே. இந்த அறிவியல் முன்னேற்றங்களால் மனித வாழ்க்கை மிகவும் – அளவிட முடியாத முறையில் – மாற்றப் பட்டிருக்கிறது. பொறியியல் துறையிலும் மருத்துவத் துறையிலும் வியக்கம் தரும் பெரும் சாதனைகள் மனிதனின் அன்றாட வாழ்வை மிக ஆழமான முறையில் மாற்றியிருக்கின்றன. அதே சமயத்தில்  பிரபஞ்சம் எப்படி உருவாகியது போன்ற   அன்றாட வாழ்விலிருந்து வெகு தூரத்தில் உள்ள கேள்விகளுக்கும் சில சின்ன சின்ன விடைகள் கிடைத்திருக்கின்றன. ஐந்தாயிரம் ஆண்டுகளாக அறிந்து கொண்ட பொருள்களைவிட  பல மடங்குகள் அதிகமாக கடந்த முன்னூறு ஆண்டுகளில் அறிவியல் மூலமாக அறிந்து கொண்டிருக்கிறோம். இந்த மகத்தான முன்னேற்றங்களைப் பற்றி முடிந்தவரை தெரிந்து கொள்வது நாம் எல்லோருக்கும்  தவிர்க்க முடியாத தேவை ஆகி விட்டது.         

    திரு நாகராஜன் அவர்களின் அறிவியல் துளிகள் இந்தத் தேவையை பூர்த்தி செய்யும் முயற்சிகளில் தலையாயதாகத்  திகழ்கிறது. உரேகா தருணம் என்பதென்ன? மனிதனின் மூளைதான்  வருங்கால போர்க்களம்  என்கிறார்களே – எப்படி? சந்திரன் சீனாவுக்கு சொந்தமாகப் போகிறதா?   உலகையே மாற்றி அமைக்கபோகும் 10 பிரம்மாண்டமான கண்டுப்புகள் எவையாக இருக்கும்?  இவை போன்ற நூற்றுக்கணக்கான  அறிவியல் துளிகளை  அனைவரும் அறியக்கூடுமாறு அன்றாட பழக்கத் தமிழில் பகர்ந்து கொண்டிருக்கிறார். தமிழருக்கும்  தமிழுக்கும்  நாகராஜன் செய்திருக்கும்   பாராட்டுக்குரிய பெரும் சேவை இது. 

              மஹா விஞ்ஞானி நியூட்டன் சொல்கிறார்:

” நான் மற்றவர்களுக்கு எப்படித் தெரிகிறேன் என்று தெரியாது. ஆனால் எனக்கு நான் கடற்கரையில் விளையாடிக்  கொண்டிருக்கும் சிறு பையன் போல் தான் தோன்றுகிறேன். பல கோடிக்கணக்கான விந்தைகள் மூழ்கியிருக்கும் பரந்த கடலுக்கு எதிரில் மணலில் கிடக்கும் சில சிப்பிகளையும் வண்ணக் கற்களையும் கண்டு வியப்பு அடைந்து கொண்டிருக்கிறேன் ” .  அதே கருத்தை “கற்றது கை மண்ணளவு; கல்லாதது உலகளவு” என்று ஔவையார் சொன்னார்கள். அறிவியல் துளிகளும் அது போன்ற மற்ற முயற்சிகளும் எல்லோர்க்கும் கை மண் அளவாவது அறிவியல் அளிக்கின்றன. நம் நன்றிக்கும் பாராட்டுகளுக்கும் உரியவர் திரு நாகராஜன். 

பங்களூரு                                              K.G.நாராயணன்

28-8-2012

*

நூலுக்கு எனது முன்னுரை இது:

முன்னுரை

     நாம் வாழும் இன்றைய யுகம் அறிவுப் புரட்சி யுகம் என்று அழைக்கப்படுகிறது. அறிவியலில் முன்னேறியுள்ள மேலை உலகத்தில் இன்று அமெரிக்காவில் மட்டும் வருடத்திற்கு சுமார் 50000 புத்தகங்கள் புதிதாக வெளியிடப்படுகின்றன. உலகெங்கும் சுமார் நான்கு லட்சம் பத்திரிக்கைகள் வெளியிடப்படுவதாக மதிப்பிடப்படுகிறது. அமெரிக்காவில் லைப்ரரி ஆஃப் காங்கிரஸில் பதினோரு கோடியே முப்பது லட்சம் விஷயங்கள் உள்ளன. ஒரு நாளைக்கு சுமார் 20000 புதிய விஷயங்கள் சேர்க்கப்படுகின்றன. இது இரண்டாயிரம் ஆண்டின் துவக்கத்தில் இருந்த நிலை.

        கணினியின் கண்டுபிடிப்பைத் தொடர்ந்து வந்த இன்டர்நெட்டின் வரவு லட்சக்கணக்கான வலைத் தளங்களை நமக்கு அறிமுகப்படுத்தி விட்டது. அவற்றில் கோடிக் கணக்கில் அனைத்து விஷயங்கள் பற்றியும் கோப்புகள் குவிகின்றன.          

        தொலைக்காட்சியை எடுத்துக் கொண்டாலோ ஒரு வாரத்திற்கு உள்ள 168 மணி நேரத்தில் பல்லாயிரம் மணித்துளிகள் நிகழ்ச்சிகளை உலகெங்கிலும் உள்ள ஆயிரக்கணக்கான தொலைக்காட்சி சேனல்கள் அளிக்கின்றன. எதைத் தேர்ந்தெடுத்துப் பார்ப்பது என்று திகைக்க வேண்டியதாக இருக்கிறது!

         தகவல்கள் குவிந்து விட்ட நிலையில் தேவையற்ற தகவல்களும்  ஏராளமாக இருப்பதால் நல்லனவற்றைத் தேர்ந்தெடுக்கும் பெரும் சுமை நம் மீது விழுந்து விட்டது – வைக்கோல்போரில் ஊசியைத் தேடுவது போல!

     மிக அழகாக கவிஞர் டி.எஸ். எலியட் கூறியது தான் நம் நினைவுக்கு வருகிறது:-

Where is the life we have lost in living?

Where is the wisdom we have lost in knowledge?

Where is the knowledge we have lost in information?

    தகவல் புரட்சியில் அற்புதமான அறிவுத் துளிகளைத் தேடிப் படித்தால் நல்லறிவு வளரும். அது ஆக்கபூர்வமான நன்மைகளை நல்கும்.

      இது ஒருபுறம் இருக்க, மேலை உலகில் அதிவேகமாக அறிவியல் வளரும் இன்றைய சூழ்நிலையில் நல்ல விஷயங்களைத் தமிழ் உலகிற்குத் தர வேண்டிய கடமையும் நமக்கு உண்டு.

மிக அருமையாக பாரதியார்,

:பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்

   தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும்

இறவாத புகழுடைய புது நூல்கள்

   தமிழ் மொழியிற் இயற்றல் வேண்டும்

என்று நமக்கு உள்ள கடமையைச் சுட்டிக் காட்டினார்.

     நாளுக்கு நாள் வளர்ந்து வரும் அறிவியல் உலகில் மிக முக்கியமானம் சுவையான விஷயங்களைத் தொகுத்துத் தந்து அறிவியல் துளிகளைச் அறிமுகப்படுத்தும் பணியில்

எனது நண்பரும் சிறந்த கதாசிரியர், இயக்குநர், நடிகர் மற்றும் பத்திரிக்கை ஆசிரியருமான திரு கே.பாக்யராஜ் அவர்கள் என்னை ஊக்குவித்தார். அதனால் வாரம் தோறும் பாக்யா வார இதழில் மலர்ந்தது அறிவியல் துளிகள்!

     அறிவியல் சம்பந்தமான சுவையான விஷயங்களுடன் விஞ்ஞானிகள் வாழ்வில் நடந்த சம்பவங்களையும் வாரம் தோறும் தரலானேன்.வாசகர்கள் ஆதரவோடு தொடர் இன்றும் தொடர்கிறது.

   இந்த அறிவியல் துளிகளுக்கு இந்தியாவின் தலை சிறந்த விஞ்ஞானிகளில் ஒருவரும் எனது சிறந்த நண்பருமான டாக்டர்  கே.ஜி. நாராயணன் அவர்கள் அணிந்துரை அளித்துள்ளது எனது நற்பேறே!. எனது இனிய நண்பரும் விஞ்ஞானியுமான திரு தேசிகன் மூலம் அறிமுகமான அவர் டிஆர் டி ஓ என அழைக்கப்படும் Defene R&D Organisation (DRDO) இல் பல்லாண்டுகள் பணியாற்றியவர். இயக்குநராக இருந்து வழி காட்டியவர். நமது பாரத தேசத்தின் பாதுகாப்பிற்கான முக்கிய சாதனங்கள் உருவாக வழி காட்டியவர். விமான இயலில் குறிப்பிடத் தகுந்த துறையான வான் பயண மின்னணுவியலில் (Avionics)

போர் விமானத்தின் கட்டுப்பாடு சாதனத் துறையில்  தேஜஸ் (Tejas) என்ற இந்திய இலகு ரக போர் விமானத்தின் (Indian Light Combat aircraft) பறத்தல் கட்டுப்பாடுகள் (flight control) மற்றும் பறத்தல் ஒப்புச்செயலாக்கத்தில் (flight simulation) அவரது சாதனை குறிப்பிடத் தகுந்தது. இந்திய விமானப் படையின் முன்னணிப் போர் விமானங்கள் மற்றும் ஆளில்லா வான்வழிக் கலங்களுக்கான (front line fighters of India Air Force and Unmanned Air Vehicles) பறத்தல் கட்டுப்பாடுகள் மற்றும் ஒப்புச் செயலாக்கத்திலும் அவரது பணி மகத்தானது. பெரிய விஞ்ஞானி என்றாலும் கூட இலக்கியத்தில் ஆர்வம் கொண்டு அதற்கும் நேரம் ஒதுக்குபவர். பழகுவதற்கு எளிமையானவர்.அறிவியல் துறையில் இளைஞர்கள் முன்னேறுவ்தை வெகுவாக ஆதரிப்பதோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கு வழிகாட்டியாகவும் உறுதுணையாகவும் இருப்பவர்.  கிராமப்புறங்களில் அறிவியல் கல்வியை ஊக்குவித்து அதனைப் பரப்பும் அகஸ்தியா இண்டர்நேஷனல் பவுண்டேஷனில் ஆலோசகராக இருந்து அறிவியல் வளர்ச்சி முன்னேற்றத்தில் இன்றும் அவர் ஈடுபட்டிருப்பது ஒன்றே அறிவியலைப் பரப்புவதில் அவருக்குள்ள ஆர்வத்தை எடுத்துக் காட்டச் சிறந்த சான்றாகும்.

    அவரை அணுகி அணிந்துரை நல்க வேண்டியபோது மிகவும் மனமுவந்து அற்புதமான உரையை நல்கியுள்ளார். அவருக்கு எனது உளம் கனிந்த நன்றியை உரித்தாக்குகிறேன். பாக்யா இதழில் இந்தத் தொடரை வெளியிட்டு வரும் திரு கே.பாக்யராஜ் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி உரித்தாகுக. தொடரை வாங்கிப் படிக்க எளிதாக அமையுமாறு பகுதி பகுதியாக வெளியிடத் தீர்மானித்து முதல் மற்றும் இரண்டாம் பாகங்கள் வெளி வருகின்றன.

    இந்த நூலை மின்னணு முறையில் மிக அழகிய முறையில் வெளியிட முன் வந்துள்ள லண்டனைச் சேர்ந்த நிலா பப்ளிஷர்ஸ் உரிமையாளர் திருமதி நிர்மலா ராஜு அவர்களுக்கும்  ஆக்கபூர்வமாக அவருக்கு உதவி புரிந்து வரும் திருமதி யஷஸ்வினி மற்றும் திரு கார்த்திகை பாண்டியனுக்கும் எனது நன்றிகள்.

    எல்லாவற்றிற்கும் மேலாக கடந்த பல ஆண்டுகளாக எனது விஞ்ஞானக் கட்டுரைகளை மனமுவந்து வரவேற்றுப் படித்து என்னைப் பெரிதும் ஊக்குவித்து வரும் வாசகப் பெருமக்களுக்கு எனது உளம் கனிந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.

பங்களூரு                                                     ச.நாகராஜன் 

·          

நூலைப் பற்றிய சிறு குறிப்பு இது:

The benefits of ever-growing science to the humanity is countless! The collection of articles about science and its progress, published in ‘Bhagya’ weekly magazine is now in the form of an e-Book in your computer! It is remarkable that every chapter of this book has an ending about incidents in the life of some great scientists. Just the titles of some memorable articles are fascinating such as ‘The 1000 planets explored by Kepler Satellite’, ‘Is the Dead Sea, dying?’ ‘6 Million Dollars Bionic Brain’ and ‘The Secret pill that makes you live for a hundred years’. Then there is no doubt the whole book will be an excitement to the readers! Just read it!

நாளுக்கு நாள் வளர்ந்து வரும் அறிவியல், மனித குலத்திற்குத் தரும் நன்மைகள்தான் எத்தனை! வாரா வாரம் ‘பாக்யா’ இதழில், நவீன கண்டுபிடிப்புகளையும் அறிவியல் முன்னேற்றங்களையும் பற்றி எழுதப்பட்டு வந்த தொடரின் முதல் பாகம் இப்போது மின்னூலாக உங்கள் கணினியில்! ஒவ்வோர் அத்தியாயத்தின் இறுதியிலும் அறிவியல் அறிஞர் ஒருவர் வாழ்வில் நிகழ்ந்த பொருள் பொதிந்த சம்பவம் ஒன்றும் இடம்பெறுவது சிறப்பு! ‘கெப்ளர் விண்கலம் காணும் 1000 கிரகங்கள்’, ‘சாவுக்கடல் சாகிறதா’, ‘6 மில்லியன் டாலர் பயோனிக் மூளை’, ‘நூறு ஆண்டுகள் வாழ ஓர் அதிசய மாத்திரை’ என நூலில் இடம்பெற்றிருக்கும் சில அத்தியாயங்களின் பெயர்களே வியப்பூட்டுகின்றன என்றால் மொத்த நூல்…? படித்துத்தான் பாருங்களேன்!

 இந்த நூல் திருமதி நிர்மலா ராஜூ அவர்களால் அவரது www.nilacharal.com மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இதை (EBOOK) டிஜிடல் வடிவமாகப் பெற விரும்புவோர் www.nilacharal.com இணையதளத்தில் EBOOKS என்ற பகுதியில் AUTHOR-ஐ தேர்ந்தெடுத்தால் எழுத்தாளர் பகுதியில் ச.நாகராஜன் (61) என்ற பெயரைக் காணலாம்.

அங்கு சொடுக்கினால் ச.நாகராஜன் எழுதிய 61 புத்தகங்களின் விவரத்தைக் காண முடியும். ‘ அறிவியல் துளிகள் -பாகம் 1’ நூலைப் பற்றிய  சிறுகுறிப்பு, விலை விவரத்தைக் காணலாம்; அதை வாங்கலாம்.

*

Learn Tamil Verbs ( Open, Forget, Fly, Milk)– Tamil Lesson 17 (Post.11,405)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,405

Date uploaded in London – 1 November 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

Let us continue with more Tamil verbs which are conjugated in the same way. They all belong to same class or they conjugated in the same way.

Lesson 16 was posted on 22nd October 2022 with 8 verbs conjugated in the same way.

We also learnt Imperative Positive and Negative sentences.

Now focus on Past tense.

xxxx

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

Thira- Open திற —-அவன் கதவைத் திறந்தான் / Thirnthaan—He opened (the) door.

Articles A An The are not compulsory. Only when we wanted to specify ONE, we used a or an. The is not used

Mara – Forget மற, —-அவள் பாடத்தை மறந்தாள்—Maranthaal-  She forgot the lesson

Para – Flyபற —அது வேகமாகப் பறந்தது – Paranthathu —That flew very fast or quickly

Kara – Extract or milk a cowகற, —-நான் பால் கறந்தேன் — Karanthen–I milked (the cow)

Pira – Born To be born பிற —நீ பிரிட்டனில் பிறந்தாய்—Piranthaay—  You were born in Britain

Mana – Marry someone மண– பஞ்சபாண்டவர்கள் திரவுபதியை மணந்தார்கள்/ Mananthaarkal– Five Pandavas married Draupathi

Suma – Carry, bear சும –ஏசு கிறிஸ்து சிலுவையைச் சுமந்தார் – Sumanthaar- Jesus Christ carried the Cross.

 To be continued………………………….. 

Tags- Tamil Verbs, Open, Forget, Born, Extract, Fly, Past Tense

வியன்னா நகர ஓவிய மியூசியங்கள் (Post.11,404)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,404

Date uploaded in London – 1 November 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

ஆஸ்திரியாவின் தலை நகரமான வியன்னாவில் பல ஓவிய காட்சியகங்கள் இருந்தாலும் மக்கள் அதிகம் படை எடுப்பது அப்பர் பெல்வெடெர் மியூசியம் (Upper Belvedere Museum) ஆகும். அங்கு புகழ் பெற்ற ஓவியக் கலைஞர்களின் நூற்றுக்கண்ணைக்கான ஓவியங்கள் உள்ளன. அவற்றில் மிகவும் புகழ்பெற்றவை த கிஸ் THE KISS என்னும் முத்தம் கொடுக்கும் ஓவியம் ஆகும். அதற்கு எதிரே நான்கு நிர்வாண அழகிகளின் ஓவியங்கள் இருக்கின்றன.

நாங்கள் தங்கிய ஹோட்டல் தாழ்வாரத்திலேயே ஒரு முழு நிர்வாணப் பெண்ணின் படத்தைத் தொங்கவிட்டிருந்தார்கள். என்னடா இது? குடும்பத்தோடு தங்கும் பகுதியில் இப்படி முழு நிர்வாணப் பெண்ணின் படம்? என்ற கேள்வி என் மனதில் எழுந்தது. பெல்வெடெர்  மியூசியத்துக்குப் போன பின்னர்தான் அது ஆஸ்திரியாவின் மிகப் புகழ்பெற்ற ஓவியர் குஸ்டாவ் கிலிம்ப்ட் Gustav Klimt வரைந்த ஓவியம் என்பது தெரிந்தது.

ஒரு இடத்திற்குப் போவதற்கு முன்னர் அந்த இடத்தைப் பற்றி படித்துவிட்டுப்போவது,  கொடுத்த காசுக்கு முழு பலனையும் தரும். இப்போதெல்லாம் எல்லா சுற்றுலா இடங்களுக்கும் பெரிய நுழைவுக் கட்டணம் வைத்துள்ளனர். மேலும் இந்த பெல்வெடடெர் மியூசியம் மூன்று பிரிவுகளாக உள்ளன. மேல் பெல்வெடெர் , கீழ் பெல்வெடெர்  , பெல்வெடெர் 21 என்ற பெயரில் அவை உள்ளன. மற்ற பிரிவுகளில் கடன் வாங்கிய ஓவியங்களை வைத்து தற்காலிக கண்காட்சி நடத்துகின்றனர். எல்லாவற்றையும் காண கொஞ்சம் பயணம் செய்யவேண்டும். ஓவியக் கலை படிப்பு படிப்பவர்களுக்கு அவை பயனுள்ளவை ஆகும்

ஏனைய பல ஓவியர்களின் பெரிய கான்வாஸ் ஓவியங்களும் இங்கே உள்ளன.

குஸ்டாவ் கிளிம்ட் Gustav  Klimt வரைந்த ஓவியங்களின் பட்டியல்::

1.த கிஸ் The  Kiss முத்தம் — இது உள்ளே நுழைந்தவுடன் இருக்கிறது ;

2.பர்க் ஹீட்டர் Burgheater – வியன்னாவில் பழைய தியேட்டர்

3.ஆடம் அண்ட் ஈவ் Adam and Eve- இதுதான் முழு நிர்வாண ஓவியம் (எனது ஆங்கில கட்டுரை நேற்று வெளியானது. அதில் படத்தைக் காண்க)

4.நுடா வெரிடாஸ் Nuda Veritas  – இதுவும் முழு நிர்வாண ஓவியம் ; இதில் ஜெர்மானிய தத்துவ அறிஞர் பிரெடெரிக் ஷில்லரின் மேற்கோள் உள்ளது

The frame’s upper margin quotes a verse by Schiller, indicating, in its difficult consensus, a distinctive sign of quality: “If you can’t please everyone with your deeds and your art – please only a few. To please many is bad. Schiller.” Aim of this quote is to incite the Vienna Secession to action. Another version of this work exists as an etching for the magazine Ver Sacrum. The mirror held by Veritas is a modern invitation to “Know yourself”, whereas the flowers are symbols of regeneration

கவிஞரும் தத்துவ வித்தகருமான பிரெடெரிக் ஷில்லர் (Schiller) சொன்னார்: உன்னுடைய செயல்களாலும் கலையாலும் எல்லாரையும் திருப்தி செய்ய முடியவில்லையானால்சிலரை மட்டும் திருப்திப்படுத்து. எல்லாரையும் திருப்தி செய்யவேண்டும் என்று நினைப்பது நல்லதல்ல.

5.ஜூடித் , பைபிளில் வரும் பெண்மணி:

The painting depicts the biblical character of Judith holding the severed head of Holofernes. Judith’s face exudes a mixed charge of voluptuousness and perversion. Its traits are transfigured so as to obtain the greatest degree of intensity and seduction, which Klimt achieves by placing the woman on an unattainable plane.

6.மற்றும் பல இயற்கைக் காட்சி ஓவியங்களும் கர்ப்பிணி, குழந்தைகளைச் சித்தரிக்கும் ஓவியங்களும் இருக்கின்றன. இவைகளை நுணுக்கமாகப் பார்க்க மணிக்கணக்கில் நேரத்தைச் செலவிடவேண்டும். மேலும் இவை எல்லாம் 150 ஆண்டுகளுக்கு உட்பட்ட ஓவியங்களே; ஆயினும் ஒவ்வொன்றும் மில்லியன் டாலருக்கு மேல் ஏலத்தில் போகும் மதிப்புடையவை.

தமிழ்நாட்டில் நாயக்கர் காலத்தில் வரைந்த ஓவியங்களைக்கூட நாம் இழந்து விட்டோம். குகையில் இருந்ததால் ஓரளவுக்கு அஜந்தா ஓவியங்கள் தப்பின. ஓவியங்களை எப்படி காட்சிக்கு வைத்து ணம் சம்பாதிக்கலாம் என்பதை வெளிநாட்டினரிடமிருந்து கற்கவேண்டும் . ஒவ்வொரு மியூசியத்துக்கும் வெளியே வருகையில் ஒரு பெரிய கடை வழியாகத்தான் வரவேண்டும். அங்கே ஓவியர் பற்றியும் ஓவியங்கள் பற்றியும் ஏராளமான பொருட்களை விலைக்கு விற்பார்கள். நாங்கள் எங்கே சென்றாலும் அந்த ஊரின் நினைவுச் சின்னமாக சில பிரிட்ஜ் மாக்னெட் Fridge Magnet, கீ செயின் Key Chain , புஸ்தகங்களை Books வாங்குவோம் . இதே போல அரண்மனைக்குச் சென்றபோதும் நினைவுச் சின்னங்கள்(Mementos)  வாங்கினோம்.

xxx

இறுதியாக ஓவியக்களைப் பற்றிக் காண்போம்

குஸ்டாவ் கிளிம்ட் Gustav Klimt 1862-1918 புதிய கலை (Art Nouveau)  இயக்கத்தைச் சேர்ந்தவர் . அவரே கலைஞர்களுக்கு ஒரு அணியை உண்டாக்கி பலரையும் ஒன்று சேர்த்தார். புலன் உணர்ச்சிமிக்க, காம சம்பந்தமான (Sensual and Erotic)  ஓவியங்கள் மூலம் புகழ்பெற்றார். 1909-ம் ஆண்டில் வரைந்த ‘முத்தம் The Kiss’  ஓவியம் புகழ் சேர்த்தது.மொஸைக் தரைபோல ஓவியங்களை வரைவதும். அதில் தங்கத்தைக் குழைத்து வார்ப்பதும் இவருடைய ஓவியங்களின் சிறப்பு  அம்சங்கள்.

1907–1908 – The Kiss (oil on canvas, 180 cm × 180 cm)A perfect square, the canvas depicts a couple embracing, their bodies entwined in elaborate robes decorated in a style influenced by both linear constructs of the contemporary Art Nouveau style and the organic forms of the earlier Arts and Crafts Movement. The work is composed of conventional oil paint with applied layers of gold leaf, an aspect that gives it its strikingly modern, yet evocative appearance. The painting is now in the Österreichische Galerie Belvedere museum in the Belvedere palace, Vienna, and is widely considered a masterpiece of the early modern period. It is a symbol of Vienna Jugendstil—Viennese Art Nouveau—and is considered Klimt’s most popular work.

–subham— tags- குஸ்டாவ் கிளிம்ட் , Gustav Klimt ,முத்தம் ,The Kiss, பெல்வெடெர்,  மியூசியம், வியன்னா, ஓவியம்

RSS Zindabad : Kanchi Shankaracharya (Post No.11,403)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,403

Date uploaded in London – 1 November 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

 Xxx 

One of the greatest ascetics lived amongst us in recent times is Kanchi Paramacharya (1894-1994). I was fortunate enough to have his Darshan and attend his Sadas at Narayanapuram near Madurai. My father V Santanam was also a great devotee of both Kanchi and Sringeri Shankaracharyas. He bought all the books containing their lectures. Acharya’s Call , Vol.II, published by B G Paul company, Madras has all the  news items published in The Hindu in 1950s. Here is one of the articles about the world’s largest volunteer organisation known as Rashtreeya Swayamsevak Sangh (RSS).

Kanchi Parmaachaarya, addressing the youths of RSS asked everyone to “convert” at least one as a swayamsevak. His lecture was delivered within 35 years of RSS’ founding. His wish came true now which has grown like a banyan tree producing great leaders like Atal Behari Vajpayee and Narendra Modi. Apart from politicians, there were other great people like Guruji Madava Sadasiva Golwalkar, Nanaji Deshmuk, Dattopant Thengadi and Eknath Ranade (of Vivekanda Rock Memorial).

Here is the lecture delivered by Kaanchi Aachaaryaa:

DEVELOPMENT OF KSHATRA DHARMA

February 23, 1959

(The following is the gist of the message given to the members of RSS at the rally organised by the Sangh to pay their homage to His Holiness, at Sanskrit College, Mylapore)

Each country or Rashtra has its distinctive culture, which is rooted in its religious traditions. There are, both in the East and in the West, Heads of religious organisations who are the custodians of the country’s culture and traditions. For example, His Holiness Pope is the custodian of Catholic traditions. The Caliphate is the institution which symbolises the Islamic traditions.  So far as South India is concerned, there are four main Schools of Hindu religious thought and there are also four main Mutts to represent these denominations. I regard this evening’s function as a homage paid not only to myself, but to Heads of all Mutts, upholding Hindu Dharma and culture.

The Rashtreeya Swayamsevak Sangh is an organisation, owing no allegiance to any political party, but dedicated to service. They render real service. You should uphold Truth and Dharma, on the one hand, and eschew fear on the other. Fearlessness does not mean violence.  The tradition of true fearlessness is found embodied in Anjaneya, Samartha Ramdas (regarded as an incarnation of Anjaneya) and Shivaji. It is a virtue born out of physical prowess, wedded to Ahimsa, which enables one to rush to the succour of the weak and the oppressed, unmindful of personal consequences. This is signified by the expression Kshatra Dharma ( kshataad kila traayate  ithi kshatram). The quality of a Kshatria is rescuing the oppressed.

But unfortunately, we have developed the trait of fearing the bully and oppressing the meek. This is the sign of fear complex. This weakness of the people is found reflected in the government also. If this weakness is to go, and if we are to hold our heads erect and walk as fearless citizens of a free country, we must once again develop kshatra dharma. This implied, the development of individual strength, disciplined unity, and will to resist evil and oppression.  We should bear in mind the maxim, paropakaaram idam sareeram. The human body should be developed to protect and help others. Our strength is not to be utilised to oppress others- to do himsa. Our aim should be the welfare of all- Loka kshemam. If the individuals in society rise to such a high moral stature, the Government of the country will also rise to a similar stature.

You the members of the RSS, must make use of your organisational unity to develop physical and moral strength and to lead a pure life based on the eternal dharma of the land, as expounded by Hindu religion. Let each member try to convert at least one other person to his point of view. In that way let the message of the Sangh spread throughout the land. Let your dedicated service lead to the prosperity of the country and to purity in administration.

Source :- Acharya’s Call, Kanchi Jagatguru’s Madras Discourses, Volume Two, Pages 256/257, B G Paul & Co, Madras, 1968, Price Rs.3-50

 Tags- RSS, Kanchi Shankaracharya, Paramacharya 

அருணகிரிநாதரும் தமிழும்! – 6 (Post 11,402)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,402

Date uploaded in London – –    1 November 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

அருணகிரிநாதரும் தமிழும்! – 6

 ச.நாகராஜன்

அருணகிரிநாதருக்கும் தமிழுக்கும் உள்ள இணைப்பு அதிசயமானது.

முருகனுக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பு எத்தகையதோ அத்தகையது அந்த இணைப்பு.

பல இடங்களில் தமிழ் முருகனைத் தமிழால் போற்றிப் புகழ்ந்த அருணகிரிநாதப் பெருமான் தமிழையும் பல்வேறு விதமாக அழகுறப் போற்றி வணங்குகிறார்.

அவர் தமிழைப் பற்றிக் கூறும் இடங்களை இந்தத் தொடரில் காணலாம்.

51)  சிறுவை

 பொருவி லாம லருள்பு ரிந்து மயிலி னேறி நொடியில் வந்து

  புளக மேக தமிழ்புனைந்த – முருகோனே

 பாடல் எண் 726 : பிறவியான சடம் எனத் தொடங்கும் பாடல்

 பொருள் : ஒப்பில்லாத அன்பு வழியிலே கிருபை கூர்ந்து உன் மயில் மீது ஏறி ஒரு நொடிப் பொழுதில் வந்து புளகாங்கிதம் கொள்ளுமாறு மிக்க மகிழ்ச்சி கொண்டு (நக்கீரரை குகையிலிருந்து மீட்டு) திருமுருகாற்றுப்படை என்ற தமிழ் மாலையைப் புனைந்த முருகனே!

 வரலாறு: இங்கு குதிரை முகத்தைக் கொண்ட ஒரு பெண் பூதத்திடமிருந்து நக்கீரரை முருகன் காத்த வரலாறு கூறப்படுகிறது.

52)  திருநெல்வாயில்

 நெறியி லாதவர் சூதினாற் கவர்ந்து

 பொருள்செய் பூரியர் மோகமாய்ப் ப்ரபஞ்ச

  நிலையில் வீழ்தரு மூடர்பாற் சிறந்த தமிழ்கூறி

நினைவு பாழ்பட வாடிநோக் கிழந்து

  வறுமை யாகிய தீயின்மேற் கிடந்து

   நெளியு நீள்புழு வாயினேற் கிரங்கி யருள்வாயே

 பாடல் எண் 749 : அறிவிலாதவர் எனத் தொடங்கும் பாடல்

 பொருள் : (நீதி நூல்களின் பயன் தெரியாது) நன்னெறியில் போகாதவர்கள், மற்றவர்களின் பொருளைக் கவர்ந்து சேகரிக்கும் கீழ்மக்கள், ஆசைப் பெருக்கால் உலக இன்பத்தையே விரும்பும் மூடர்கள் ஆகிய இத்தகையோரிடம் சென்று, நல்ல தமிழ்ப் பாடல்களைக் கூறி நினைவு தேய்ந்து பாழ்பட்டு, வாட்டம் அடைந்து பார்வை மங்கி, வறுமை என்ற நெருப்பின் மேல் கிடந்து, நெளிகின்ற நீண்ட புழுவினைப் போல ஆன என்னை இரக்கத்துடன் ஆண்டு அருள்வாயாக!

53) விருத்தாசலம்

 முடிபவர் வடிவறு சுசிகர முறைதமிழ்

  முதுகிரி வலம்வரு – பெருமாளே

பாடல் எண் 751 : திருமொழி எனத் தொடங்கும் பாடல்

 பொருள் : இங்கு இறப்பவர்கள் மீண்டும் பிறப்பே இல்லாமல் ஆக்கும் தூய்மை உடைய தமிழில் முதுகிரி எனப்படும் விருத்தாசலத்தில் வெற்றியோடு வீற்றிருக்கும் பெருமாளே!

54) நிம்பபுரம் 

 வந்தசர ணார விந்தமது பாட

 வண்டமிழ்வி நோத மருள்வாயே

  பாடல் எண் 754 :அஞ்சு வித பூதமும் எனத் தொடங்கும் பாடல்

 பொருள் : வந்தடைந்த திருவடித் தாமரைகளைப் பாட எனக்கு வண்தமிழில் அற்புதக் கவித்துவத்தை நீ அருள்வாயாக!

55) யாழ்ப்பாணாயன் பட்டினம் 

 ஏத்தா நாளுந் தர்ப்பண செபமொடு

  நீத்தார் ஞானம் பற்றிய குருபர

   யாப்பா ராயுஞ் சொற்றமி ழருள்தரு   முருகோனே

 பாடல் எண் 759 : பூத்தார் சூடுங் கொத்தலர் எனத் தொடங்கும் பாடல்

பொருள் : நாள் தோறும் போற்றி நீர்க்கடன், ஜெபம் ஆகிய இவைகளைச் செய்து, துறவோர் ஞான நிலையில் பற்றிய குருபரனே, யாப்பிலக்கணம் ஆய்ந்தமைந்த சொற்களைக் கொண்ட தமிழ்ப் பாக்களைத் தந்து அருளிய (திருஞானசம்பந்தராக வந்த) முருகனே.

 56) சீகாழி 

 சேனக்குரு  கூடலி லன்று ஞானத்தமிழ் நூல்கள் பகர்ந்து

  சேனைச்சம ணோர்கழு வின்கண் – மிசையேறக்

  பாடல் எண் 766 : ஊனத்தசை தோல்கள் எனத் தொடங்கும் பாடல்

 பொருள் : சேனன் என்னும் பட்டப் பெயர் வைத்திருந்த சமண குருக்களின் முன்னிலையில் மதுரையில் முன்பு (திருஞானசம்பந்தராக வந்து) ஞானத் தமிழ் நூல்களாகிய தேவாரப் பாட்டுக்களைப் பாடி கூட்டமான சமணர்கள் கழுவில் ஏறும்படி செய்து…

57) சீகாழி 

 சருவி யிகழ்ந்து மருண்டு வெகுண்டுறு

 சமயமு மொன்றிலை யென்ற வரும்பறி

  தலையரு நின்று கலங்க விரும்பிய தமிழ்கூறுஞ்

சலிகையும்

 பாடல் எண் 771 : சருவியிகழ்ந்து எனத் தொடங்கும் பாடல்

பொருள் : மதப் போராட்டத்தில் ஒருவரை ஒருவர் இகழ்ந்தும், பயந்தும், கோபித்தும் வருபவரான சமயவாதிகளும், கடவுள் என்ற ஒன்றே இல்லை என்று கூறும் நாத்திகர்களும், பறிதலையரான சமண குருமாரும் ஆகிய இவ்வனைவரும் கலங்க அனைவரும் விரும்பத் தக்க தமிழ்ப் பாடல்களை (திருஞானசம்பந்தராக வந்து) கூறும் செல்வாக்கையும்….

 பாடல் சிறப்புக்கள் : பறிதலை என்ற சொல்லால் சமணர்கள் ‘இப்போது துக்கம் பிற்பாடு சுகம்’ என்ற மந்திரத்தைச் சொல்லி தலைமயிர்களைப் பறிக்கும் வழக்கம் இங்கு சுட்டிக்காட்டப் படுகிறது.

சலிகை என்றால் செல்வாக்கு என்று பொருள். இங்கு செல்வாக்கு தொடங்கி முருகனின் 16 லக்ஷணங்களை அருணகிரிநாதர் விவரிக்கிறார்.

 58) பாகை 

கூட லான்முது கூனன் றோட வாதுயர் வேதங்

 கூறு நாவல மேவுந் – தமிழ்வீரா

 பாடல் எண் 789 : ஆடல் மாமத ராஜன் எனத் தொடங்கும் பாடல்

 பொருள் : மதுரையம்பதியின் அரசனின் (கூன்பாண்டியனின்) கூன் தொலையும்படி (சமணரோடு) வாதம் செது உயர்ந்த வேதப் பொருள் கொண்ட தேவாரப் பாடல்களைப் பாடிய (திருஞானசம்பந்தராகிய) நாவன்மை படைத்த தமிழ் வீரனே!

வரலாறு : இங்கு கூன்பாண்டியன் கூன் நிமிர்த்தப்படும் வரலாறு சொல்லப்படுகிறது.

 59) சிக்கல்

 விலையில்த மிழ்ச்சொற் குன்போலு தாரிகள்

 எவரென மெத்தக் கொண்டாடி வாழ்வெனும்

  வெறிகொளு லுத்தர்க் கென்பாடு கூறிடு – மிடிதீர

  பாடல் எண் 827 : புலவரை ரக்ஷிக்கும் எனத் தொடங்கும் பாடல்

 பொருள் : விலைமதிப்பற்ற தமிழ்ச் சொல்லை ஆதரிப்பதற்கு உன்னைப் போல் சிறந்த கொடையாளிகள் யார் தான் உள்ளார்கள் என்று நிரம்பப் புகழ்ந்து, தமது வாழ்வே பெரிது என்ற தீவிர உணர்ச்சி கொண்ட லோபிகளிடம் என் வருத்தங்களைப் போய் முறையிடும் வறுமை நிலை தீர…

 60) திருப்பந்தணை நல்லூர்

 நிதிபொங் கப்பல தவங்க ளாலுனை

  மொழியும் புத்திகள் தெரிந்து நானுனை

    நிகர்சந் தத்தமிழ் சொரிந்து பாடவு – மருள்தாராய்

பாடல் எண் 856 : மதியஞ் சத்திரு எனத் தொடங்கும் பாடல்

 பொருள் : (அருள்ச்) செல்வம் பொங்க பல தவப் பேற்றின் பயனால் உன்னைப் புகழும்படியான அறிவு புலப்பட்டு, நான் உன்னை ஒளி வீசும் சந்தத் தமிழ்ப் பாக்களை நிரம்பப் பொழிந்து பாடவும் உனது திருவருளைத் தந்தருள்வாயாக!

 குறிப்பு நன்றி : https://www.kaumaram.com தளத்தில் உள்ளபடி பாடல் எண் தரப்பட்டுள்ளது. முழுத் திருப்புகழ்ப் பாடலையும் அதன்  விளக்கத்தையும் இந்த தளத்தில் காணலாம்.

***

புத்தக அறிமுகம் – 100

விண்வெளியில் மனித சாதனைகள் (பாகம்-3) 

பொருளடக்கம்

நூலில் உள்ள அத்தியாயங்கள் 

 1. பெயரில் என்ன இருக்கிறது?

 2. விண்வெளி நிலையத்தில் மின்சக்தி!   

 3. சிவப்பாகும் விண்வெளி!    

 4. விண்வெளி வீராங்கனையின் காதல் களேபரம்!    

 5. புதிய சாதனை படைத்த வீராங்கனை!  

 6. ஹாலிவுட் திரைப்படம் காப்ரிகார்ன் ஒன் – 1 

 7. காப்ரிகார்ன் ஒன்! – 2  

 8. ஸ்டீபன் ஹாகிங்கின் ஜீரோ கிராவிடி பயணம்!    

 9. யூரி ககாரினைத் தேர்ந்தெடுத்த காரணம் என்ன?  

10. ஒரு லட்சம் விண்கற்களைப் பட்டியலிடும் அதிசய முயற்சி! – 1   

11. ஒரு லட்சம் விண்கற்களைப் பட்டியலிடும் அதிசய முயற்சி! – 2   

12. விண்கல்லில் இறங்க ஒரு திட்டம்!

13. நட்சத்திர மர்மங்கள்! – 1

14. நட்சத்திர மர்மங்கள் – 2

15. நட்சத்திர மர்மங்கள் – 3

16. நீர் நிறைந்த புதிய பூமி கண்டுபிடிப்பு!  

17. ஒரு அமெரிக்க கப்பலின் கதை!  

18. மூன்றாவது தொழில் புரட்சி!

19. வீட்டை விட்டு நெடுந்தூரத்தில்!   

20. பாமரனுக்கும் அறிவியல்! – கார்ல் சகன்

21. கார்ல் சகனைக் கவர்ந்த இந்தியா!

22. பிரபஞ்சம் பற்றிய தமிழர் அறிவு! 

23. நடராஜ நடனமும் பிரபஞ்ச ரகசியமும்! 

24. செவ்வாய்க்கு முதலில் செல்ல ஆசையா?   

25. சந்திரனை நோக்கி இந்திய விண்கலம் ஏப்ரல் 2008ல் ஏவப்படும்!   

26. விண்வெளி நிலையத்தில் உயிர்வளி உற்பத்தி!    

27. மூன்று சூரியோதயங்கள் உள்ள உலகங்கள்! 

28. விண்வெளி வீரர்கள் குடிக்கலாமா?

29. பீனிக்ஸ் மார்ஸ் லேண்டர்!  

30. சர்வதேச விண்வெளி நிலையம் சென்ற ஆசிரியை!

31. பறக்கும் தட்டுகள் பற்றிய சர்வதேச மகாநாடு!

32. ரோஸ்வெல் பறக்கும் தட்டு மர்மம்! – 1

33. ரோஸ்வெல் பறக்கும் தட்டு மர்மம்! – 2

34. ரோஸ்வெல் பறக்கும் தட்டு மர்மம்! – 3

35. ரோஸ்வெல் பறக்கும் தட்டு மர்மம்! – 4

36. சாதித்தது ஆயிரம், சாதிக்க வேண்டியதோ கோடி! 

நூலைப் பற்றிய சிறு குறிப்பு இது: 

This is the third and final part of the series that deals with humanity’s expeditions into space and beyond, as published in the weekly “Bhagya”. Continuing from the previous two parts, several facts regarding space missions are explained in detail. The book not only satisfies the intellect of the readers, but also motivates them to read further on this topic. A perfect read for everybody, and a perfect gift to space enthusiasts!

 ஆயிரக்கணக்கான வாசகர்களின் கவனத்தை ஈர்த்த, ச .நாகராஜன் ‘பாக்யா’ இதழில் எழுதி வந்த, தொடரின் மூன்றாம் பாகம் இப்பொழுது நூலாக உங்கள் கைகளில்! முதல் இரண்டு பாகங்களில் விடுபட்ட பல செய்திகள் இதில் உள்ளன. மாணவர்களின் அறிவுக்கு விருந்தாகவும் அவர்களின் படிக்கும் பழக்கத்தைத் தூண்டும் உற்சாக ஊக்கியாகவும் திகழக் கூடியது! படிக்கவும் பரிசளிக்கவும் ஏற்ற நூல்*

இந்த நூல் திருமதி நிர்மலா ராஜூ அவர்களால் அவரது www.nilacharal.com மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இதை (EBOOK) டிஜிடல் வடிவமாகப் பெற விரும்புவோர் www.nilacharal.com இணையதளத்தில் EBOOKS என்ற பகுதியில் AUTHOR-ஐ தேர்ந்தெடுத்தால் எழுத்தாளர் பகுதியில் ச.நாகராஜன் (61) என்ற பெயரைக் காணலாம்.

அங்கு சொடுக்கினால் ச.நாகராஜன் எழுதிய 61 புத்தகங்களின் விவரத்தைக் காண முடியும். ‘ விண்வெளியில் மனித சாதனைகள் -பாகம் 3’ நூலைப் பற்றிய  சிறுகுறிப்பு, விலை விவரத்தைக் காணலாம்; அதை வாங்கலாம்.

நவம்பர் 2022 காலண்டர்: காஞ்சி பரமாசார்யாள் பொன்மொழிகள் (11,401)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,401

Date uploaded in London – 31 OCTOBER 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

பண்டிகை நாட்கள் – 8 குரு நானக் ஜெயந்தி, சந்திர கிரஹணம், ;14- குழந்தைகள் தினம்; 21, 28- சிவன் கோவில்களில் சோமவார சங்காபிஷேகம்; 23-சத்ய சாய் பாபா பிறந்த தினம்;

பெளர்ணமி- 8; அமாவாசை- 23; ஏகாதசி உண்ணாவிரத நாட்கள்- 4, 19; ;

சுப முகூர்த்த நாட்கள்-  11,14, 20

XXXX

Book with 1957-1960 Madras Discourses 

காஞ்சி சங்கராச்சார்யார் (1894-1994) உபன்யாசத்திலிருந்து எடுக்கப்பட்ட பொன்மொழிகள். சென்னை நகரில் 1932-ம் ஆண்டில் செய்த உபந்யாங்கள்; Source Book –நமது தர்மம், ஸ்ரீ காமகோடி கோசஸ்தானம் வெளியீடு , பிப்ரவரி 1950

நவம்பர்  1 செவ்வாய்க் கிழமை

சில மதஸ்தர்கள் முக்கியமான புஸ்தகத்துக்கு கோயில் கட்டி வணங்குகிறார்கள் ஸீக்கியர்கள் அவ்வாறு செய்து வருகிறார்கள். அவர்களுடைய மதப் புஸ்தகத்தை  அவர்கள் கிரந்த ஸாஹேப்  என்று மரியாதையாகச் சொல்லுவார்கள் .

xxx

நவம்பர்  2 புதன்  கிழமை

நம்முடைய மதத்தில், மதத்தைப் பற்றி படிப்பதே கிடையாது  அப்படிப் படிக்காததனால் என்ன பலன் ஏற்பட்டிருக்கிறது? வேறு எந்த மதத்துக்காவது ஆள் வேண்டுமானால் , நம்முடைய மதத்திலிருந்து பிடித்துப் போகிறார்கள் .

xxx

நவம்பர்  3 வியாழக்  கிழமை

நம்முடைய மதக் கிரந்தங்களை நாமே தூஷிக்கிறோம், அழிக்கிறோம் . மற்றவர்கள், பிற மத புஸ்தகங்களை அழிக்கிறார்கள் . நமக்கு புஸ்தகத்தின்  பெயரே தெரியவில்லை படிப்பதால் என்ன பிரயோஜனம் என்றும் கேட்கிறோம் . பிரேமை இருந்தால் காரணம் வேண்டியதில்லை

xxx

நவம்பர்  4 வெள்ளிக்  கிழமை

மத விஷயங்கள் பால்யத்திலேயே தெரிந்திருந்தால் ஸந்தேகமே வராது .மதப் படிப்பை இளம் பருவத்திலே படித்திருந்தால் எல்லோருடைய அபிப்பிராயமும் ஒன்றாக இருக்கும் . ஸந்தேகம் இருக்காது .

xxx

நவம்பர்  5 சனிக்  கிழமை

நமக்குள்ள ஸந்தேகங்களையும் கஷ்டங்களையும் போக்கிக் கொள்வதற்காக நாம் பெரியவர்களிடம் போகிறோம்; புஸ்தகங்களை வாசிக்கிறோம்; நல்லவர்களிடம்  உபதேசம் பெறுகிறோம் ; மஹா க்ஷேத்திரங்களுக்குப் போகிறோம் ; தீர்த்த ஸ்நானம் செய்கிறோம்; அப்படிச் செய்வதால் மனது கொஞ்சம் கொஞ்சமாக சாந்தி அடைகிறது

xxx

நவம்பர்  6 ஞாயிற்றுக்  கிழமை

இன்பத்துக்குப் பொருள் சாதனமாக இருப்பது போல , பொருளுக்கு தர்மம் சாதனமாக இருக்கிறது .தர்மம் அர்த்தத்துக்கு சாதனம் ; அர்த்தம் இன்பத்திற்கு சாதனம் .

xxx

நவம்பர்  7  திங்கட்  கிழமை

எந்தக் காரியம் செய்தால் நல்லதோ அது தர்மம்ன்ன மாதிரி கொடுத்தால் நாம் பின்னால் செளக்கியமாக இருக்கலாமோ அது தர்மம்

xxx

நவம்பர் 8 செவ்வாய்க் கிழமை

ஸங்கீதம் , ஸாஹித்யம் என்னும் இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் — ஸாஹித்தியம் உயர்ந்தது ; மருந்தின் மேலே வெல்லம் தடவிக் கொடுப்பது போல  ஸாஹித்தியத்தை எல்லாரும் கேட்பதற்காக ஸங்கீதம் உபயோகப்படுகிறது என்கிறார் சிவ லீலார்ணவம் கவி.

xxx

நவம்பர் 9 புதன்  கிழமை

கவியினுடைய நல்ல வார்த்தைகள் அமிருதத்தைப் போன்றவை .அமிருதம் சாகாது. கவியின் பாவத்தை இருதயத்தில் வாங்கினால் அது சாகாது. உள்ளுக்குள்ளே இருந்து நினைக்க நினைக்க இன்பத்தைத் தரும்

xxx

நவம்பர் 10 வியாழக்  கிழமை

வேறே உள்ள மதப் புஸ்தகங்களெல்லாம் மனிதன் அடையவேண்டியது பரலோகம் என்று சொல்லுகிறது. மோக்ஷத்தைப் பரலோகம் என்றே  சொல்லுகின்றன. ஆனால் நம்முடைய புஸ்தகங்கங்களில் பரலோகம் என்று வேறு இல்லை . இங்கேயே மோக்ஷத்தை அடையலாம்

xxx

நவம்பர் 11 வெள்ளிக்  கிழமை

தர்மத்தைச் சொல்லும் புஸ்தகங்கள் 14; அவை ஆறு அங்கங்கள், நாலு வேதங்கள்,, மீமாம்ஸை , புராணம், நியாயம்,தர்ம சாஸ்திரம் . வேதமோடாறங்க மாயினானை என்று தேவாரம் சொல்லுகிறது.

xxx

Book with 1932 Madras Discourses 

நவம்பர் 12 சனிக்  கிழமை

ஒரு ஜாமம் 3 மணி ஆகும்; அதாவது ஏழரை நாழிகை; 5 நாழிகை உஷத் காலத்திலும் இரண்டரை நாழிகை பிரதோஷ  காலத்திலும்  போய்விடும்; 30 நாழிகை பகற் காலத்தில்  போய்விடும்; மிச்சம் இருப்பவை 3 ஜாமங்கள் ; அதனால்தான் ராத்திரிக்கு த்ரி யாமா என்ற பெயர் ஏற்பட்டிருக்கிறது

xxxx

நவம்பர் 13 ஞாயிற்றுக்  கிழமை

சிராத்தம் என்பதற்கு சிரத்தையோடு பண்ணுவது என்பது அர்த்தம்; சிரத்தைதான் நமக்கு முக்கியம் ;ஒரு காரியம் என்று பண்ண ஆரம்பித்தால் சட்டப்படிதான் பண்ண வேண்டும்.;  காரியத்துக்குச் சட்டம் வேண்டும்; பக்திக்கும் ஞானத்துக்கும் ஒன்றும் வேண்டாம்.

Xxxx

நவம்பர் 14  திங்கட்  கிழமை

இந்த மாதிரி வேஷ்டி கட்டிக்கொள்வது , ருத்ராக்ஷம் போட்டுக்கொள்வது இவைகளை எப்பொழுது ஆரம்பித்தார்கள்?இங்கிலீஸ்காரர்கள் இன்ன இன்ன காலத்தில்  இன்ன இன்ன உடை இருந்தது ; இன்ன உடை இப்பொழுதிலிருந்து உண்டாயிற்று என்று எழுதிப் படம் போட்டிருக்கிறார்கள. நாம் அந்த மாதிரி செய்யப் பார்த்தால் நமக்கு அகப்படாது .

xxx

நவம்பர்  15 செவ்வாய்க் கிழமை

சாப்பிடுவதற்கு முன் வைச்வதேவ ஹோமம் பண்ணி பலி கொடுக்க வேண்டும். மனிதர்களை உத்தேசித்து ஹந்தா என்று போட வேண்டும்; தேவர்களை உத்தேசித்து ஸ்வாஹா  என்று போட வேண்டும்; பிதுருக்களை உத்தேசித்து ஸ்வதா என்று போட வேண்டும்.

xxx

நவம்பர்  16 புதன்  கிழமை

இந்தப் பிரபஞ்சத்தில் எவ்வளவு பிராணிகள் இருக்கின்றனவோ அவை எல்லாவற்றுக்கும் வைச்வதேவத்தில் பலி உண்டு. நாய், காக்கை, சண்டாளன் இவைகளுக்கெல்லாம் பலி உண்டு.

xxx

நவம்பர் 17 வியாழக்  கிழமை

ஷட்கர்ம நிரதர்களான (அறுதொழில் அந்தணர்) என்று  காகிதம் எழுதுகிற வழக்கம்  உண்டு . யஜனம், யாஜனம் , அத்யயனம் , அத்யாபனம், பிரதானம் , பிரதிக்ரஹம் என்று சொல்லுவது ஒரு வகை .

Xxx

 நவம்பர் 18 வெள்ளிக்  கிழமை

காயத்ரீ மந்திரம் ஆயிரம் ஜபிப்பது உத்தமம் ; நூறு ஜபிப்பது மத்யமம்; பத்து ஜபிப்பது அதமம் .

தைத்திரீய ஆரண்யகம் ” ஸஹஸ்ர பரமா தேவீ சதமத்யமா தசாவரா ” என்று சொல்கிறது .

xxx

நவம்பர் 19 சனிக்  கிழமை

ஒரு சின்ன ஸ்லோகம் இருக்கிறது ; அதில் பிரதிதினமும் பண்ணவேண்டிய ஆறு காரியங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன.

ஸந்த்யா ஸ்நானம் ஜபோ ஹோமோ தேவதானாம் ச பூஜனம்

ஆதித்யம் வைச்வதேவம் ச ஷட் கர்மாணி தினே தினே

xxx

நவம்பர் 20 ஞாயிற்றுக்  கிழமை

நாள்தோறும் செய்யவேண்டிய ஆறு — ஸ்நானம் , ஸந்தியாவந்தனம், ஹோமம் (ஒளபாஸனம்), சிவ பூஜை, ஆதித்யம் (அதிதிக்கு அன்னம் இடுதல்), வைச்வதேவம் .

xxx

நவம்பர்  21 திங்கட்  கிழமை

காந்தி விதவா விவாஹம் தான் பண்ணிக்கொள்ளவேண்டும் என்று சொன்னார் காந்தி படம் அநேகமாக எல்லோருடைய வீட்டிலும் இருக்கிறது ஆனாலும் அவர் சொன்னபடி எவ்வளவு பேர் கேட்டார்கள்?

xxx

நவம்பர் 22 செவ்வாய்க் கிழமை

நான் கிராப் (crop) பை எடுத்துவிட வேண்டும் என்று சொல்லுகிறேன்; எத்தனை பேர் எடுத்தார்கள்? அதையும் கேட்கத் தயாரில்லை;  இதையும் கேட்கத் தயாரில்லை ; ஸங்கடப்படுகிறார்கள்

xxx

Kanchi Shankaracharya in Madurai Dinamani Office

நவம்பர் 23 புதன்  கிழமை

வேத சம்பந்தமான எல்லா கிரியைகளிலும் கோ ப்ராஹ்மணேப்யஹ சுபமஸ்து நித்யம் என்று சொல்லுவது வழக்கம். இந்த வாக்கியத்தில் பசுவைத்தான் முதன்மையாகச் சொல்லப்பட்டிருக்கிறது

xxx

நவம்பர் 24 வியாழக்  கிழமை

‘கோ’ வானது லோகத்திற்கே தாயாக இருக்கிறது கோ- வைத்தவிர பாக்கி பிராணிகள் எல்லாம் அவற்றின் சிசுக்களுக்கு மாத்திரம் பால் கொடுத்து ரக்ஷிக்கின்றன  . பசுவோ ஆயுள் உள்ள வரை எந்த ஜாதிக்கும் பால் கொடுத்து ரக்ஷிக்கிறது .இதையெல்லாம் உத்தேசித்துத்தான் சாஸ்திரங்களில் கோ- வை ரக்ஷிக்க வேண்டுமென்று சொல்லியிருக்கிறது .

xxxx

நவம்பர் 25 வெள்ளிக்  கிழமை

சமணர்களுக்கும் சம்பந்தருக்கும் நடந்த போட்டியில் வைகை ஆற்றில் நீரோட்டத்தை எதிர்த்துச்  செல்லும் ஓலையே வெல்லும் என்றும் அதுதான் உண்மையான மதம் என்றும் தீர்மானித்து எழுதினர் ; அந்த ஓலையில் திரு ஞான சம்பந்தர் எழுதிய வாழ்த்துப் பதிகத்தில் வாழ்க அந்தணர் வானவர் ஆன்  இனம் என்பதே முதல் வரி . அதுதான் நீரோட்டத்தை எதிர்த்துச் சென்று திருவேடகம் என்னும் சிவ ஸ்தலத்தை அடைந்தது .

xxx

நவம்பர் 26 சனிக்  கிழமை

அந்த ஸ்தலத்தில் இருக்கிற பரமேஸ்வரனுக்கு பத்திரிகா பரமேசுவரன் என்று ஸம்ஸ்க்ருதத்தில் பெயர். பத்திரிகை என்றால் ஏடு என்று அர்த்தம். ஏடு அங்கே தங்கியதால் சுவாமிக்கு அப்பெயர் ஏற்பட்டது

xxx 

நவம்பர் 27 ஞாயிற்றுக்  கிழமை

ஈசுவரன் நமக்கு ஐசுவரியத்தைக் கொடுக்கிறார் .அதை வைத்துக்கொண்டு பரோபகாரம் செய்யவேண்டும் . தங்கள் தங்கள் சக்திக்கு ஏற்றபடி ஒரு தர்மத்தைச்  செய்யவேண்டும் ; செய்ய முடிந்தபொழுது உடனே செய்யவேண்டும் ; அப்புறம் செய்துகொள்ளலாம் என்று நினைக்கக்கூடாது .

xxx

நவம்பர் 28  திங்கட்  கிழமை

ஸந்யாஸ ஆச்ரமத்தை உடையவர்கள் அஹிம்சையைப் பூர்ணமாக அனுஷ்டிக்கவேண்டும். ஸந்யாஸம் வாங்கிக் கொள்ளும்போதே  அவர்கள் அஹிம்ஸன் ஸர்வ பூதான் யன்யத்ர தீர்த்தேப்யஹ  (சாந்தோக்யோபனிஷத் ) என்று பிரதிக்ஞை செய்துகொள்கிறார்கள் ‘ ஸகல பிராணிகளுக்கும் என்னால் பயமில்லை என்பது அதன் தாத்பர்யம்

xxx

நவம்பர்  29 செவ்வாய்க் கிழமை

ஸத்தியத்திற்கு லக்ஷணம் (definition)  ஒன்று உண்டு —வாங்மனஸயோரைகரூப்யம்  ஸத்யம்   — மனதும் வாக்கும் ஒரே விஷயத்தைச் செய்வதுதான் ஸத்தியம் .

xxx

நவம்பர்  30 புதன்  கிழமை

அஹிம்ஸா ப்ரதிஷ்டாயாம் தத் ஸன்னிதெள  வைரத்யாகஹ — என்று பாதஞ்ஜல யோக ஸூத்ரம் – 4 சொல்லுகிறது அஹிம்ஸையை  திரிகரணங்களாலும் ஸாதித்து விட்டோமானால் நமக்கு எதிரில் யாவரும் சாந்தம் அடைவார்கள் (கொல்லான் புலாலை மறுத்தானைக் கை கூப்பி எல்லா உயிரும் தொழும் – குறள் 260)

–subham–

Tags- காஞ்சி , பரமாசார்யாள்,  சுவாமிகள் , பொன்மொழிகள், நவம்பர் 2022 காலண்டர் 

அருணகிரிநாதரும் தமிழும்! – 5 (Post No.11,400)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,400

Date uploaded in London – –    31 OCTOBER 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

அருணகிரிநாதரும் தமிழும்! – 5 

ச.நாகராஜன் 

அருணகிரிநாதருக்கும் தமிழுக்கும் உள்ள இணைப்பு அதிசயமானது.

முருகனுக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பு எத்தகையதோ அத்தகையது அந்த இணைப்பு.

பல இடங்களில் தமிழ் முருகனைத் தமிழால் போற்றிப் புகழ்ந்த அருணகிரிநாதப் பெருமான் தமிழையும் பல்வேறு விதமாக அழகுறப் போற்றி வணங்குகிறார்.

அவர் தமிழைப் பற்றிக் கூறும் இடங்களை இந்தத் தொடரில் காணலாம்.

  41) திருவருணை

முதிய மாதமி ழிசைய தாகவே

  மொழிசெய் தேநினைந்  – திடுமாறு

பாடல் எண் 443 : விதியதாகவே எனத் தொடங்கும் பாடல்

 பொருள் : பழமையும் சிறப்பும் வாய்ந்த தமிழ்ப் பாக்களை இசையுடனே சாகித்யப்படுத்திப் பாட நினைந்திடும்படி…..

 42) சிதம்பரம்

தெள்ளுதமிழ் பாடியிட் டாசைகொண் டாடசசி

  வல்லியொடு கூடிதிக் கோர்கள்கொண் டாட இயல்

    தில்லைநகர் கோபுரத் தேமகிழ்ந் தேகுலவு – பெருமாளே

 பாடல் எண் 478 : முல்லை மலர் போலும் எனத் தொடங்கும் பாடல்

 பொருள் : தெளிவான தமிழ்ப் பாடல்களால் (உன்னை) அடியார் புகழ்ந்து பாடவும், ஆடவும், இந்திராணியின் மகளான தேவயானையோடு சேர்ந்து பல திக்குகளில் உள்ளோர்களும் புகழ்ந்து கொண்டாட, தகுதி மிக்க சிதம்பரத்துத் திருக்கோயில் கோபுரத்தே மகிழ்ச்சியுடன் வீற்றிருக்கும்  பெருமாளே!

 43) சிதம்பரம்

மொழிபாகு முத்துநகை மயிலாள் தனக்குருகு

   முருகா தமிழ்ப்புலியூர் – பெருமாளே

பாடல் எண் 513 : மனமே உனக்குறுதி எனத் தொடங்கும் பாடல்

 பொருள் : சர்க்கரைப் பாகு போன்ற மொழியும், முத்துப் போன்ற பற்களையும் உடைய, மயிலை ஒத்த சாயல் கொண்ட வள்ளிக்காக உள்ளம் உருகும் முருகனே, தமிழ் மணம் கமழும் புலியூர் என்ற சிதம்பரத்தில் உறையும் பெருமாளே!

 44) திருக்கழுக்குன்றம் 

வேலெடுத்து நடந்த திவா கராசல

 வேடுவப் பெண் மணந்த புயா சலாதமிழ்

  வேத வெற்பி லமர்ந்த க்ருபா கராசிவ – குமரவேளே

 பாடல் எண் 543 : ஓலமிட்ட  எனத் தொடங்கும் பாடல்

 பொருள் : வேலாயுதத்தை ஏந்தி நடந்த ஞான சூரியனே! வள்ளிமலைக் குறப்பெண்ணாகிய வள்ளியை மணம் புரிந்த மலை போன்ற புயங்களை உடையவனே, தமிழ் முழங்கும் வேதகிரியில் (திருக்கழுக்குன்றத்தில்) வீற்றிருக்கும் அருளாளனே, சிவக் குமாரனாகிய தலைவனே!

 45) திருச்செங்கோடு 

இறுங்காற் கிறுங்கார்க் கிரும்பார்க் குநெஞ்சார்க்

  கிரங்கார்க் கியற்றண் – டமிழ்நூலின்

உடம்பாட் டுடன்பாட் டியம்பாத் தயங்காத்

 துளங்காத் திடப்புன் – கவி பாடி

 பாடல் எண் 589 : இடம் பார்த்து   எனத் தொடங்கும் பாடல்

 பொருள் : அழிந்து போகும் காலத்தில் கூட உள்ளம் நல்ல நிலை பெறாதவரிடம், இரும்பு போன்ற கடின மனத்தவரிடம், இரக்கம் இல்லாதவரிடம், தகுதி பெற்றுள்ள குளிர்ந்த தமிழ் நூல்களில் ஒருமைப்பட்ட  மனத்துடன் பாட்டுக்களை அமைத்து, வாட்டமுற்று மனம் கலங்கி, ஆனாலும் திடத்துடன் புனையப்பட்ட புன்மையான பாடல்களைப் பாடி…

 46) திருச்செங்கோடு 

பழய அடியவ ருடனிமை யவர்கண

 மிருபு டையுமிகு தமிழ்கொடு மறைகொடு

  பரவ வருமதி லருணையி லொருவிசை -வரவேணும்


பாடல் எண் 605 : கொடிய மறலி எனத் தொடங்கும் பாடல்

 பொருள் ; பழமையான அடியார்களுடன் தேவர் கூட்டம் இருபுறமும் மிகுந்த தமிழ்ப் பாடல்களையும் வேத கீதங்களையும் பாடி வணங்க, முன்பொரு முறை திருவண்ணாமலையில் என் முன் வந்தது போல இன்னொரு முறை வந்து அருளல் வேண்டும்.

47) கொல்லிமலை 

பல்ல பல நாதங்கள் அல்கபசு பாசங்கள்

  பல்குதமிழ் தானொன்றி – யிசையாகிப்

பாடல் எண் 607 : தொல்லை  எனத் தொடங்கும் பாடல்

பொருள் ; பலப்பல நாதங்களிடையே தங்குவதாய், உயிர்த்தளைகள் நீங்க பசு, பாசம் ஆகியவற்றில் தங்குவதாய், பெருகி வரும் தமிழ் மொழியில் பொருந்தி, இன்னிசையின் வடிவாகி…

48) புகழிமலை 

புகலரிய தான தமிழ்முநிவ ரோது

   புகழிமலை மேவு பெருமாளே

 பாடல் எண் 619 : மருவுமலர் வாசம்  எனத் தொடங்கும் பாடல்

 பொருள் : சொல்லுதற்கு அரிதான தமிழ் முனிவராகிய அகத்தியர் புகழ்கின்ற புகழிமலையில் வீற்றிருக்கின்ற பெருமாளே!

49) பெருங்குடி  

பெலங்கொடு விலங்கலு நலங்கஅ யில் கொண்டெறி

  ப்ரசண்டக ரதண்டமிழ் – வயலூரா

பாடல் எண் 700 : தலங்களில் வரும்  எனத் தொடங்கும் பாடல்

 பொருள் : பலத்துடன் கிரௌஞ்ச மலையும் தூளாகும்படியாக வேல் கொண்டு எறிந்த மிக்க வீரம் கொண்டவனே, தண்ணிய தமிழ் விளங்கும் வயலூரானே!

 50) உத்தரமேரூர்  

வேத முங்கிரி யைச்சூழ் நித்தமும்

 வேள்வி யும்புவி யிற்றா பித்தருள்

  வேர்வி ழும்படி செய்த்தேர் மெய்த்தமிழ் மறையோர் வாழ் மேரு மங்கையில் அத்தா வித்தக

பாடல் எண் 717 : மாதர் கொங்கையில்  எனத் தொடங்கும் பாடல்

 பொருள் : வேதப் பயிற்சியையும் கிரியை  மார்க்கமாக நாள்தோறும் யாகங்கள் செய்வதையும் பூமியில் நிலை நிறுத்தி, இறைவனது அருள் வேரூன்றி பதியும்படி செய்த அழகிய உண்மையாளராகிய செந்தமிழ் அந்தணர்கள் வாழ்கின்ற உத்தரமேரூர் என்னும் தலத்தில் வீற்றிருக்கும் தலைவனே, அதிசயிக்கத்தக்க அறிவாளனே! 

குறிப்பு நன்றி : https://www.kaumaram.com தளத்தில் உள்ளபடி பாடல் எண் தரப்பட்டுள்ளது. முழுத் திருப்புகழ்ப் பாடலையும் அதன்  விளக்கத்தையும் இந்த தளத்தில் காணலாம்.

***

 புத்தக அறிமுகம் – 99 

விண்வெளியில் மனித சாதனைகள் (பாகம்-2)

பொருளடக்கம்

 நூலில் உள்ள அத்தியாயங்கள்

  1. விண்வெளியில் ஆதிக்கமா? 

 2. விண்வெளியில் விழுந்த புதையலைத் தேடி…

 3. அயல்கிரகவாசிகள் எங்கே? 

 4. நட்சத்திரக் குழந்தைகள்

 5. நிலவில் தேன் நிலவு  

 6. அற்புதமான ஒரு விண்வெளிக் கதை   

 7. நாஸா தேடும் ரகசியம்

 8. சந்திரனில் மட்டுமே கொட்டிக் கிடக்கும் அபூர்வ பொருள்

 9. ரஷ்யா சந்திரனில் அமைக்கும் தளம்   

10. ராக்கட் ரேஸ்    

11. சந்திரனுக்கு உரிமை கோரும் விவசாயி

12. சந்திரனில் பிளாட்டினம் ஒரு அவுன்ஸ் 1000 டாலர்

13. உலகப் பொருளாதாரத்தை மாற்றப் போகும் சந்திரன்    

14. சனியின் துணைநிலவு தரும் அதிசயத் தகவல்கள்

15. பரபரப்பூட்டும் பத்திரிகை தகவல்கள்   

16. நீங்களே ஒரு ஸ்பேஸ் ஸ்டேஷனைக் கட்டலாமே

17. விண்வெளியில் பிழைத்த விண்வெளி வீரர்கள்    

18. விண்வெளி ஆபத்திலிருந்து மீண்டது சோயுஸ் விண்கலம்   

19. வருகிறது தனிநபர் விண்கலம்    

20. நீங்களும் விண்வெளியில் பறக்கலாம்  

21. விண்கலத்தை விட்டு வெளியில் செல்லும் விளையாட்டு    

22. விண்கலத்தை விட்டு வெளியில் சென்று புரியும் ஆனந்த நடனம்  

23. விண்வெளி ஆசிரியர்கள்    

24. விண்வெளிப் பேனாவின் கதை   

25. விண்வெளி யுத்தம்    

26. விண்வெளிப் படை    

27. ராக்கெட் தோல்விக்கு காரணம் ஆவிகளா?   

28. சந்திர மனிதன்   

29. ஹிட்லர் தற்கொலையால்…! 

30. பூமிக்கு வரும் அபாயம் போக்க ஒரு உபாயம்

31. ALH 84001 மனித சாதனைகள்

32. விண்வெளி தூசிகள் பற்றிய ஆராய்ச்சி 

33. ஆகஸ்ட் புரளிகள்

34. இனிமேல் எட்டு கிரகங்கள்தான்  

35. புளூடோவின் இறக்கமும் உலகெங்கும் எழுகின்ற விமர்சனங்களும்

36. ஜப்பானிய தொலைக்காட்சித் தொடர்   

37. பெயரில் என்ன இருக்கிறது?

அணிந்துரை 

இந்த நூலுக்கு திரு வி.தேசிகன் அவர்கள் அளித்துள்ள அணிந்துரையை முதல் பாகத்தில் காணலாம்.

 நூலுக்கு எனது முன்னுரை இது:

முன்னுரை 

     விண்வெளியில் மனித சாதனைகள் என்ற இந்தப் புத்தகம் விண்வெளி ஆர்வலர்களுக்கும் அறிவியலில் ஆர்வம் உடையவர்களுக்கும் ஏராளமான சுவையான செய்திகளை அளிக்கும் என நம்புகிறேன்.

     ஆயிரத்தி தொள்ளாயிரத்து அறுபதுகளிலிருந்தே விண்வெளி பற்றிய சுவாரஸ்யமான விஷயங்களைத் தொகுப்பதில் எனக்கு ஒரு தனி ஆர்வம் உண்டு. பல்வேறு பத்திரிக்கைகளில் விண்வெளி பற்றிய சுவையான செய்திகளையும் விண்வெளியை வெற்றிக் கொள்ளத் துடிக்கும் மனிதனின் பேராவலையும் அவன் பெற்ற வெற்றிகளையும் எழுதி வந்தேன்.

     அகில இந்திய வானொலி நிலையத்திலிருந்து காஸினி விண்கல சாதனை உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் இல்லத்திலிருந்தே நேயர்களுடம் பேசும் அரிய வாய்ப்பும் எனக்குக் கிட்டியது.

      இந்த நிலையில் தான் எனது இனிய நண்பரும் டைரக்டரும் பிரபல கதாசிரியரும் பாக்யா ஆசிரியருமான டைரக்டர் கே.பாக்யராஜ் அவர்கள் என்னை விண்வெளி பற்றிய தொடர் ஒன்று பாக்யா வார இதழில் எழுதப் பணித்தார்.

சுமார் 156 வாரங்கள் இந்தத் தொடர் நீண்டது. இந்திய பத்திரிக்கைகளிலேயே விண்வெளி பற்றிய நீண்ட தொடர் என்ற புகழையும் பெற்றது.

      இதற்குக் காரணம் டைரக்டர் திரு கே.பாக்யராஜ் அவர்களின் தணியாத அறிவியல் தாகமும் அதை அப்படியே பிரதிபலித்த பாக்யா வாசகர்களின் ஆர்வமும் தான்.

       ஏராளமான பாராட்டுக் கடிதங்கள் மூலம் ஊக்கம் பெற்றதால், விண்வெளி பற்றிய  ஒரு கலைக் களஞ்சியத் தொடராக இதை என்னால் அமைக்க முடிந்தது.

        முதலில் சூரிய மண்டலம், அதில் உள்ள கிரகங்களின் விவரம், நட்சத்திர மண்டலங்கள், விண்கற்கள், எல்லையற்ற விண்வெளி, அதில் செல்வதற்கான விண்கலங்கள், விண்வெளி வீரர்களுக்கான உடல் மற்றும் உள்ளத் தகுதிகள், அவர்களுக்கான உடைகள், விண்வெளி செல்வதற்கான ஏராளமான பயிற்சிகள் போன்றவற்றையும் ககாரின், ஆர்ம்ஸ்ட்ராங், கல்பனா சாவ்லா உள்ளிட்ட வீரர்கள், வீராங்கனைகள் பற்றிய விவரங்கள் ஆகிய அனைத்தையும் இந்தத் தொடரில் சொல்ல முடிந்தது.

அடுத்து விண்வெளி பற்றிய படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள், அரிய புத்தகங்கள், செவ்வாய் சங்கம், விண்வெளிக் கொடி போன்ற சுவையான செய்திகள் உள்ளிட்ட அனைத்தையும் தொகுத்துத் தர முடிந்தது,

எதிர்காலத்தில் விண்வெளியில் மனிதன் குடியேற இருப்பது மகத்தான ஒரு பெரிய விஷயம். அதற்கு மனிதனின் ஆயத்தங்களையும் இந்த நூலில் படித்து மகிழலாம்.

        ஒரே ஒரு விஷயத்தை இங்கு தெரிவிப்பது எனது கடமை ஆகிறது. பாக்யா வார இதழில் 2004ஆம் ஆண்டு நவம்பரில் ஆரம்பித்து 2007 நவம்பரில் இந்தத் தொடர் நிறைவு பெற்றது. 2007லிருந்து இன்று  வரை விண்வெளியில் மனிதன் பல்வேறு புதிய சாதனைகளைச் செய்து முடித்துள்ளான். ஆனால் வரலாற்றுப் பதிவு அப்படியே இருக்க வேண்டும் என்பதால் அத்தியாயங்களில் உள்ள விஷயங்கள்  மாற்றப்படாமல் அப்படியே தரப்பட்டுள்ளது. இன்றைய முன்னேற்றங்களை எனது நூல்களான அறிவியல் துளிகள், மாயாலோகம் ஆகியவற்றில் வாசகர்கள் படித்து மகிழலாம்.

   தொடரை முடித்தவுடன் இதை நூலாகக் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்தை நண்பர்களும் வாசகர்களும் விரும்பித் தெரிவித்தனர்.இதை நிறைவேற்ற முடியுமா என்று மலைத்திருந்த போது லண்டனில் உள்ள நிலா பப்ளிஷர்ஸின் உரிமையாளரும் நிலாச்சாரல் ஆசிரியருமான திருமதி நிர்மலா ராஜு இதை மின்னணு முறையில் டிஜிடல் நூலாக வெளியிடும் பெரும் பொறுப்பை ஏற்க முன் வந்தார். அவருக்கு என் மனமார்ந்த நன்றி உரித்தாகுக.

    நிலாச்சாரல் குழு ஒரு அற்புதமான, இனிய, ஆடம்பரமின்றி மறைந்திருந்து மாபெரும் சேவையை திருமதி நிர்மலா தலைமையில் ஆற்றிவரும் அதிசயக் குழு. அதில் ஈடுபட்டுள்ள எண்ணற்ற உறுப்பினர்கள் பல்வேறு நாடுகளில் பல்வேறு நகர்களில் வாழ்பவர்கள். அரசியலுக்காகவும் ஆதாயத்திற்காகவும் பெயர் மற்றும் விருதுகளுக்காகவும் தமிழை உதட்டால் ஓதாமல் உள்ளத்தால் தமிழுக்கென தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்கள், முகம் தெரியாமலும் நேரில் பார்க்காமலும் என்னுடன் மின்னஞ்சல் மூலமாகத் தொடர்பு கொண்ட இவர்களுக்கு எனது நன்றியை உளமார உரித்தாக்குகிறேன். குறிப்பாக திரு கார்த்திகை பாண்டியன், திருமதி யஷஸ்வினி ஆகியோருக்கு என் நன்றி.

    இந்த நூலுக்கு அணிந்துரை பெறுவதற்கான எண்ணம் என் மனதில் எழுந்தவுடன் அதற்கு மிகவும் பொருத்தமான ஒரே ஒருவராக விண்வெளி பற்றி நன்கு அறிந்தவரும் என் இனிய நண்பருமான திரு வி.தேசிகன் தான் நினைவில் வந்தார்.

தேசிகன் சிறந்த விஞ்ஞானி. ஆடம்பரமும் அகந்தையும் இல்லாத எளிமை கொண்ட அதிசய மனிதர்/. மதுரையைச் சேர்ந்த மாபெரும் குடும்பப் பின்னணியைக் கொண்டவர். பெரிய அறிவியல் விஷயங்களை எளிதில் விளக்கும் திறன் பெற்றவர்.  இந்தியாவுக்குப் பெருமை சேர்க்கும் பல்வேறு நவீன சாதனங்களையும் நவீன தொழில் நுட்ப அமைப்புகளையும் நமது விமானப் படை உள்ளிட்ட முப்படைகளுக்கும் வடிவமைக்கும் நிறுவனத்தில் முக்கிய பங்கு ஆற்றியவர். டிபென்ஸ் ரிஸர்ச் அண்ட் டெவலப்மெண்ட் ஆர்கனைசேஷனில் (டி ஆர் டி ஓ- Defence Research and Development Organizations -DRDO)) இருபத்தி எட்டு ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி உயரிய பதவி வகித்தவர். 1983ஆம் ஆண்டுக்கான உயரிய விருதான “ஸயின்டிஸ்ட் ஆப் தி இயர்” என்னும் டிஆர்டிஓ விருதை பாரத பிரதமர் திருமதி இந்திரா காந்தியிடம் பெற்றவர். உயர்ந்த பண்பாளரான இவர் சமூக சேவையிலும் தீவிர ஈடுபாடு கொண்டவர். பங்களூரில்  ரோட்டரி சென்ட்ரல் கிளைக்கு தலைவராக இருந்து சேவை புரிந்தவர். இசையையும் டென்னிஸையும் இரு கண்களாகப் போற்றும் திரு தேசிகன் அவ்வப்பொழுது தனது உயரிய சிந்தனைகளை இணைய ப்ளாக்குகளிலும் உலவ விடுகிறார்.1997லிருந்து ஒரு  அரிய அறிவுரையைத் தரும் தனது ஆலோசனை நிறுவனம் ஒன்றையும் பங்களூரில் நடத்தி வருகிறார்.

திரு தேசிகனிடம் அணிந்துரை தர வேண்டிய போது மனமுவந்து அதை ஏற்றதுடன் அழகிய அணிந்துரை ஒன்றை அளித்து என்னை கௌரவித்துள்ளார். அவருக்கு என் இதய ஆழத்திலிருந்து ஆத்மார்த்தமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

     வாசகர்களே தமிழ் உலகத்தின் ஜீவ நாடி. அவர்களே அறிவுச் செல்வத்தை வரவேற்பவர்கள்; ஆதரிப்பவர்கள்; பரப்புபவர்கள். அவர்கள் இன்றி எந்த ஒரு புத்தக வெளியீடும் இல்லை. புத்தகமும் இல்லை.எழுத்தாளரும் இல்லை. என்னை இடைவிடாது பல வருடங்களாக ஆதரித்து வரும் நேயர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியைக் காணிக்கை ஆக்குகிறேன்.

தொடர்ந்து என் எழுத்துப் பணியில் அக்கறை செலுத்தி பல்வேறு வழிகளிலும் உதவி வரும் என் மனைவி சித்ரா, மகன்கள் சத்யநாராயணன், விஜயகிருஷ்ணன், மருமகள் ப்ரஹன்நாயகி சத்யநாராயணன் ஆகியோருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வாசகர்கள் இந்த நூலைப் பற்றிய தங்கள் கருத்துக்களை எனக்கு அனுப்பி வைக்க வேண்டுகிறேன்.

பங்களூரு                                      ச,நாகராஜன்

15-3-2012

தொடர்புக்கான மின்னஞ்சல் snagarajans@gmail.com

*நூலைப் பற்றிய சிறு குறிப்பு இது:

 This is the second part of the series which deals with humanity’s expeditions into space and beyond, as published in the weekly “Bhagya”. This book not only outlines several expeditions into space, but also explains how science and technology have improved continuously over years. The functioning of space satellites and space stations have also been detailed. This book is a must read for space enthusiasts.

 ‘பாக்யா’ வார இதழில் வெளியான அற்புத அறிவியல் தொடரின் இரண்டாம் பாகம் இப்பொழுது நூலாக! விண்வெளி பற்றிய கலைக்களஞ்சியமாகத் திகழ்வதோடு அறிவியல் முன்னேற்றம் எப்படி விண்ணளாவி உயர்ந்து வருகிறது என்பதையும் விளக்குகிறது. பல்வேறு விண்வெளிப் பயணங்களைப் பற்றியும் விரிவாகப் பேசுகிறது. விண்கலங்களின் பயன்பாடுகளைப் பற்றியும் தெளிவாக எடுத்துரைக்கிறது. அறிவியல் ஆர்வலர்கள் தவறாமல் படிக்க வேண்டிய நூல்! பரிசளிக்கவும் ஏற்ற நூல்!

 *

இந்த நூல் திருமதி நிர்மலா ராஜூ அவர்களால் அவரது www.nilacharal.com மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இதை (EBOOK) டிஜிடல் வடிவமாகப் பெற விரும்புவோர் www.nilacharal.com இணையதளத்தில் EBOOKS என்ற பகுதியில் AUTHOR-ஐ தேர்ந்தெடுத்தால் எழுத்தாளர் பகுதியில் ச.நாகராஜன் (61) என்ற பெயரைக் காணலாம்.

அங்கு சொடுக்கினால் ச.நாகராஜன் எழுதிய 61 புத்தகங்களின் விவரத்தைக் காண முடியும். ‘ விண்வெளியில் மனித சாதனைகள் -பாகம் 2’ நூலைப் பற்றிய  சிறுகுறிப்பு, விலை விவரத்தைக் காணலாம்; அதை வாங்கலாம்.

*

WHAT IS VIENNA FAMOUS FOR ? (Post No.11,399)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,399

Date uploaded in London – 30 OCTOBER 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

 Xxx

 

In my part of India, that is Tamil Nadu, we used to call two cities as Temple Towns- Madurai and Kanchipuram. If I apply the same criteria to Vienna, what I would call Vienna?

Vienna, capital of Austria is a City of Museums. Not only that A City of Music and a City of Architecture. Over 100 museums are there in the city. Those museums are dealing with art, history , music or Psycho analysis! They cater to every taste of human beings. If you like architecture or music or Freudian psycho analysis or Danube river cruise or anything Royal, there is something for you.

Because we stayed there for only five days (actually 5-2= 3 full days; arrival and departure take lot of time when you go with your family), I had a limited plan. I wanted to see mighty River Danube, the Royal Palace, Music Museums and paintings of famous painters in Belvedere.

We went to

Royal Palace (Schonbrunn),Upper Belvedere, House of Music, some parks, City Centre, Hare Krishna Restaurant (Govinda), River Danube.

From Outside:-  we saw City Hall, Parliament Building, Votive Church, St Francis Church, Museums Quartier, Shopping areas

We bought 72 hour tickets and travelled by Tram , Bus and Underground.

I would advise everyone to buy 24 or 48 or 72 hour tickets depending upon the length of your stay.

Upper Belvedere with famous Paintings

We wanted to see the most famous painting of Klimt “The Kiss”  and so we went to Klint Museum in Upper Belvedere. There is a huge garden with lot of Sphinx Statues. Prince Eugene of Savoy, who commissioned the two Baroque palaces as his summer residence, grew up around the court of Louis XIV. While the impeccably sculpted grounds and over-the-top interiors are indeed reminiscent of the famous French chateau, the Upper Belvedere houses a proudly Austrian art collection that includes works by Schiele, Moser and Klimt, whose gilded tableau “The Kiss” mesmerizes visitors. One can explore the tiered gardens that lead to the Lower Belvedere, which hosts temporary exhibitions in opulent halls.

The upper Belvedere honours all the Austrian painters who made history, such as Gustav Klimt, in a fascinating permanent exhibition and  the Lower Belvedere and Belvedere 21, are home to temporary exhibitions, both Baroque and contemporary. There are three sections in total.

Schönbrunn Palace is the most visited monument in Vienna (and in Austria!). Like any Royal Palace it has the magnificent collection of expensive clocks, decorated chairs, Dining tables, weapons, musical instruments, royal dress, and valuable paintings. Queen Sisi was very fond of her unusually long hair and she spent three hours everyday to maintain her beauty. She was considered one of the beautiful queens; but she had a tragic life;  lost her only son who committed suicide along with his lady love. Queen Sisi herself was stabbed to death in a mistaken identity. But yet she was the most travelled queen about 150 years ago. When she lost her son, she lost interest in governing the country and started journeying to get mental peace. As soon as we enter the palace we see her statue, her long hair and her dressing room.

House of Music (Haus der Musik)

Though there are two museums dedicated to Mozart and Beethoven, House of Music has the history of all composers of the Western world. We went to the museum and enjoyed inter active features in the museum.

Across an exhibition space of 54,000 sq. ft., a range of hi-tech interactive and multimedia presentations introduce the world of music, from the earliest human use of instruments to the music of the present day. Holograms of six famous musicians and the Time lines of six famous musicians are displayed.

This interactive sound and music museum dives into the fascinating world of music and sounds on five floors. Visitors not only learn about the history and tradition of Viennese music, they can also experiment with sounds and instruments. Inter active instruments attract lot of youngsters.

With all its interactive displays a truly entertaining place for the whole family! Highlights include the historical archives of the Vienna Philharmonic where you can listen to their famous New Year’s Eve concert and the brand new Sonotopia Universe on the 2nd floor. It´s here where you can create your own sound creature in a VR Lab but also test interactive stations on the physics of sound. If Beethoven, Mozart or the Strauss family are of interest, then head up to the 3rd floor to learn about their lives in the city and the music they created. Grand finale is the virtual conductor exhibit on the 4th floor – test your conducting skills by waving a baton along to a video of Vienna Philharmonic playing. You will even get feedback after having a go! You might want to enrich your visit by downloading the free museum guide on your smartphone.

(Following is from Wikipedia)
“Although many of the most reputable names that Vienna is often associated with did not originate from Vienna, such as Mozart and Beethoven, the city did home-grow many significant composers, including Johann Strauss I and Franz Schubert.

Among the greats, Mozart was one of Vienna’s most influential residents during the classical era. Born in Salzburg in 1756, the prodigy spent a large proportion of his life in Vienna and composed many of his most coveted works in the city. His first visit was in 1762 when he was invited to play a concert at Schonbrunn Palace, for the Habsburg family. During his time in the city, Mozart resided at numerous locations, a few of which can be visited by the public today. He died and was buried in the city’s Cemetery of Karl Marx.

Aside from Mozart, the list of composers who contributed to Vienna gaining a strong reputation as a city of music is long and impressive; Strauss, Beethoven, Haydn and Berg all spent time in Austria’s capital).

Votive Church

Another land mark in Vienna is Votive Church

Votive Church is situated near Vienna University area. Its height is ninety-nine meters. Made in a Neo-Gothic style, the church was built over a long time in twenty-three years. With a structure of Gothic cathedral, the famous Votive church has a facade with twin towers.

The parliament building covers over 13,500 square meters, making it one of the largest structures on Ringstraße. It contains over one hundred rooms. City hall is another land mark. We saw most of the famous buildings from out side.

No tourist could cover all the museums and landmark buildings.

During our stay we went to hare Krishna Restaurant Govinda and enjoyed proper Vegetarian food. Vegan concept is not approved by the Hindu scriptures. All Hindu scriptures insist the use of dairy projects in all rituals. Moreover, the Vegan restaurants in Western Countries use Fish, Crabs and other sea creatures. So we went  mostly to Italian restaurants and had veggy Pasta, Pizza, Noodles and Risotto.

–subham–

Tags- Museums, Royal Palace, Mozart, Beethovem Strass, Schubert, Klimpt, 

சங்கீதத்துக்கும், ஓவியத்துக்கும் பஞ்சமில்லாத வியன்னா நகரம் (Post.11,398)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,398

Date uploaded in London – 30 OCTOBER 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

 Xxx 

கடல் என்பதே என்ன என்று தெரியாத நாடு ஆஸ்திரியா. ஏனெனில் ஐரோப்பாவில் எட்டு நாடுகளுக்கு இடையே சிக்கித் (LAND LOCKED COUNTRY)  தவிக்கும் நாடு அது. ஆயினும் அதன் தலைநகரான ( VIENNA, CAPITAL OF AUSTRIA) வியன்னாவை நோக்கி சுற்றுலாப்பயணிகள் வந்தவண்ணம் உள்ளனர். காரணம் என்ன  தெரியுமா ? ஓவியக் கலைஞர்களுக்கும் இசைக் கலைஞர்களுக்கும் புகழ் பெற்ற நகரம் வியன்னா . மொசார்ட் , பீத்தோவன் , ஷுபர்ட் , ஸ்டிராஸ் (Mozart, Beethoven, Schubert, Strauss)  ஆகிய பலர் அங்கே பிறந்தனர் அல்லது நீண்ட காலம் வாழ்ந்தனர். விமான நிலையத்தில் ட்யூட்டி பிரீ DUTY FREE SHOPS கடைகளுக்குச் சென்றாலும் மொசார்ட் படத்துடன் உள்ள பெரிய சாக்லெட் டப்பாக்களை வாங்கலாம். நாங்கள் தீபாவளி நேரத்தில் 5 நாட்களுக்கு வியன்னாவில் தங்கினோம். எனக்கு மொசார்ட் (MOZART) மியூசியத்துக்கும் பீதோவன் (BEETHOVEN)  மியூசியத்துக்கும் போக ஆசை. ஆனால் அப்படி தனித்தனியே போக நேரம் இல்லாததால் இரண்டு பேரையும் சேர்த்துக்  காட்டும்  ஹவுஸ் ஆப் மியூசிக் HAUS DER MUSIK  (சங்கீத இல்லம்) காட்சி சாலைக்குச் சென்றோம். ஆறு மாடிகளில் அமைந்த கட்டிட மியூசியம் அது.

நிறைய சிறுமிகளை  அம்மாமார்கள் அழைத்து வந்திருந்தனர். இசையில் ஆர்வம் உடைய இளம் சிட்டுகளுக்கான காட்சியகம் அது ; பெரியவர்களும் போகலாம். ஏனெனில் ஆறு புகழ்பெற்ற இசைக்க கலைஞ ர்களின்  வாழ்க்கைப் படங்கள், வரலாறுகள், முக்கிய பாடல்கள் அங்கே காட்சி தருகின்றன. அது மட்டுமல்ல ஒலி /சப்தம் /இசை/Sound என்பதன் விஞ்ஞான பின்னணியும் (Physics of Sound) அறிவியல் ரீதியில் விளக்கப்பட்டுள்ளது இளைஞர்களே Inter Active இயக்கி இன்பம் அடையும் பல உபகரணங்கள் அங்கே உள்ளதால் அவற்றை சிறுவர் சிறுமியர் இயக்கி ஆனந்தம் அடைகின்றனர்.

மொத்தத்தில் இசைப் பிரியர்களுக்கு நல்ல விருந்து கிடைக்கும்

என்ன என்ன, எப்படி என்று விளக்குகிறேன்.

மாடியில் ஏறிச் செல்லும்போது ஒவ்வொரு படியை மிதிக்கும்போதும் ஒரு இசை ஒலி கேட்கும். நம்ம ஊரில் புகழ் மிகு கோவில்களில் இருக்கும்  இசைத் தூண்கள் , இசைப் படிக்கட்டுகள் (Musical Pillars, Musical Steps) போன்றது அவை. நாமும் இப்படி இளம் உள்ளங்களைக் கவர்ந்து இழுக்கும் சங்கீத மியூசியத்தை திருவாரூரில் அமைக்க வேண்டும். மும்மூ ர்த்திகளால் சிறப்பு அடைந்த ஊர் அல்லவா திரு ஆரூர் .படிகளில் ஏறும்போது  ஸ, ரி, க ,ம ப த நி, ஸ வந்தால் இளம் உள்ளங்கள் விடுமா ? இரண்டு கல்லூரி  மாணவிகள் அந்தப் படிகளில் குதித்துக் குதித்து, மாறி மாறி, புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அதற்கும் மேல் மாடிக்குச் சென்றால் பெரிய T V Screen டெலிவிஷன் ஸ்க்ரீன். அதற்கு முன்னால் 4 மரப்படிகள் ; அதில் ஏறி நின்றால் அங்கேயுள்ள சின்ன டெலிவிஷன் திரையில் சூதாட்டத்தில் பயன்படுத்தும் (Dice) பகடைக் காய்கள் இருக்கும். அதைக் கையால் பிடிப்பது போல (திரையிலேயே நம் கைகள் தெரியும்)  பாவனை செய்து அதை வீசி எரிய வேண்டும். உடனே அது உருண்டு ஓடுவதைக் காட்டும் பெரிய திரை அதை சங்கீத நோட்டுகளாக மாற்றி இசைக்கும். நாலு சிறுவர் சிறுமியர் சேர்ந்து செய்யும் போது  இனிமையான ஒலிகள் கிளம்பும் . இப்படி நாமும் இன்டர் ஆக்டிவ் Inter Active Musical Museum சங்கீத மியூசியம் அமைக்க வேண்டும் .

அடுத்த மாடிக்குச் சென்றால் ஒரு கீ போர்டும் Key Board  ஏ , பி சி டி ………….. போன்ற எழுத்துக்களும் இருக்கும். மனம் போன படி அவைகளை அமுத்தி (வாசித்து ) நிறுத்திய அடுத்த நிமிடத்தில் திரையில் நீங்கள்  Compose கம்போஸ் செய்த இசை ஒலிக்கும் . அதாவது ஒரு நிமிடத்தில் நீங்கள் மொசார்ட் அல்லது பீத்தோவன் ஆகிவிடுவீர்கள்.

அதற்கும் மேல் மாடிக்குச்  செனறால் ஒரு இருட்டு அறையில் விரிக்கப்பட்ட கம்பளத்தில் அம்மாக்கள் , அப்பாக்கள் தங்கள் குழந்தைகளுடன் படுத்து மேலே தெரியும் திரையில் உள்ள பிரபஞ்ச இசையைக் (Music of the Universe) கேட்கலாம். நாஸா NASA முதலிய பெரிய விண்வெளி ஆராய்ச்சி சாலைகளில் பணிபுரிவோர் இப்போதும் பிரபஞ்சத்தின் ஒரு கோடியிலிருந்து ஒலிக்கும் அபூர்வ இசையைக் கேட்டு வியப்புறுகின்றனர். இதைக் காட்டும் வகையில் மேல் திரையில் கோலங்கள் போட்டது போல வண்ண வண்ண வரிகள் வரும்போது பிரபஞ்ச இசையைக் கேட்கலாம்.

இன்னொரு அடுக்கிற்கு ஏறிச் சென்றால் நீங்களே Conductor கண்டக்டர் ஆகலாம். வெள்ளைக்கார ஆர்கெஸ்டராவைப் பார்ப்போருக்கு கண்டக்டர் பற்றித் தெரியும். சங்கீத மாஸ்டர் கையில் ஒரு கம்பை வைத்துக்கொண் டு  மேலே, கீழே  என்று ஆட்டுவார். அதைப் பார்த்துக்கொண்டு அவரவர் இசைக்கருவியை இயக்குவார்கள் ; அதைப் போல ஒரு பெரிய திரை முன்னால் நின்றுகொண்டு நீங்களும் ஒரு குச்சியைக் கையில் வைத்துக்கொண்டு ஆபராவை நடத்தலாம். உங்கள் குச்சியின் அசைவுக்கு ஏற்ப திரையில் பெரிய ஆபரா ஒலி கிளம்பும் .

எனக்கு அந்த அளவுக்கு சமங்கீத அறிவு கிடையாது. ஆகையால் அனைத்தையும் வேடிக்கை பார்த்தேன். எனக்கு மிகவும் பிடித்த இரண்டு விஷயங்களைச் சொல்லி முடிக்கிறேன்

1. ஒரு இருட்டு அறையில் ஆறு இசை மேதைகளின் ஹோலோ கிராம் Hologram Images வைத்துள்ளனர். அவை இருக்கும் கண்ணாடிப் பெட்டியில் மட்டும் ஒளி இருக்கும். அவை சுழன்றுகொண்டே இருக்கும். அவைகளைப் பல கோணங்களில் புகைப்படம் எடுத்தேன்.

2.மற்றோர் விஷயம் – ஒவ்வொரு இசை மேதையின் வரலாற்றையும் ஆண்டு வாரியாக (Time line) ஒரு போர்டு காட்டும். அதாவது அவர்கள் வாழ்க்கையில்  முக்கியமான ஆண்டுகளில் என்ன நிகழ்ந்தது என்பதை ஒரு போர்டில் பொறித்து வைத்துள்ள்ளனர் இவ்வாறு ஆறு கலைஞர்களின் வாழ்க்கையும் கிடைக்கும்.

இது தவிர அவர்கள் வாழ்க்கை பற்றிய பெரிய சித்திரங்களும் சுவர்களை அலங்கரிக்கின்றன.

நாமும் ஏன் சங்கீத முமூர்த்திகளான தியாகராஜர் , முத்துசாமி தீட்சிதர் , சாமா சாத்திரிகளுக்குச் செய்யக்கூடாது? அவர்களோடு தமிழ் இசை மன்னர்களையும் கனக தாசர், புரந்தரதாசர் , நாராயண தீர்த்தர், சதாசிவ பிரம்மேந்திரர் , அன்னமாச்சார்யார் ஆகியோரையும் சேர்த்து  ஊருக்கு ஊர் மியூசியம் — இன்டெர் ஆக்டிவ் மியூசியம்– அமைக்கலாமே ! இப்படி இந்து மதத்துக்கும் இளைஞர்களைக் கவர்ந்து இழுக்கும் இன்டர் ஆக்டிவ் மியூசியம் (Inter Active Museum for Hinduism)  அமைக்கலாமே! யாரிடமாவது பணம் இருந்தால் சொல்லுங்கள். நான் இலவச ஆலோசகராக சேவை செய்யத் தயாராக இருக்கிறேன்.

நிர்வாண ஓவியங்கள் (Nude, Semi Nude Paintings) பற்றி  அடுத்த கட்டுரையில் காண்போம்.

TO BE CONTINUED…………………………………….

tags —-.வியன்னா, இசை, ஹோலோக்ராம் , மேதைகள், மியூசிக், மியூஸியம்