LONDON CALLING (TAMILS) 28-2-2021(Post No.9326)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9326

Date uploaded in London – –1 MARCH  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Following Programmes were broadcast on 28-2-2021 in our Gnanamayam Channel via Zoom and Facebook

TAMIL THUNDER /THAMIL MUZAKKAM (Part of Gnanamayam Channel) BROADCAST

SUNDAY 28-2-2021

1 PM LONDON TIME, 6-30 PM IST

OPENING ANNOUNCEMENT & PRAYER -5 MINUTES

SONG BY MRS DEEPTHA MAHADEV- 3 MTS

MRS BRHANNAYAKI SATHYANARAYANAN ON KEDARNATH TEMPLE-8 MTS

Thiruppugaz Amirtham –MRS JAYANTHI SUNDAR AND MRS BANU CHANDRASEKAR-10 mts

XXX

WORLD HINDU NEWS ROUNDUP IN ENGLISH BY SUJATHA RENGANATHAN

WORLD HINDU NEWS ROUNDUP IN TAMIL BY VAISHNAVI ANAND

–20 MINUTES

***

SONG BY MRS UMA PRASAD OF DUBAI  – 5 MTS

LONDON SWAMINATHAN’S ARTICLE- READ BY MRS VAISHNAVI ANAND-4 MTS

SONG BY MR SESHADRI OF BANGALORE -3

SONG BY MRS DAYA NARAYANAN- 4

APPROXIMATELY 60 MINUTES

XXXXXXXXXX

INTRODUCTION TO GNANAMAYAM

WE HAVE LAUNCHED A HINDU BROADCAST IN AUGUST 2020 AND IT IS GOING WELL ON MONDAYS VIA ZOOM AND FACEBOOK.

LATER WE HAVE EXTENDED IT TO ONE MORE DAY, ON SUNDAYS TO SPREAD TAMIL CULTURE.

BOTH OUR BROADCASTS ARE NON- POLITICAL AND NON -COMMERCIAL.

WE DON’T ADVOCATE OR SUPPORT ANY VIOLENCE IN ANY FIELD.

IT IS APPROXIMATELY ONE HOUR BROADCAST FROM LONDON.

TIME OF BROADCAST- ONE PM, LONDON TIME—— 6-30 PM INDIAN TIME;

DAYS- MONDAYS AND SUNDAYS

MONDAYS FOR HINDUISM (UNDER GNANAMAYAM AND GNANA SUDAR)

SUNDAYS  FOR TAMIL CULTURE & LANGUAGE (UNDER THAMIZ MUZAKKAM/ TAMIL THUNDER)

WORLD HINDU NEWS IN TAMIL AND ENGLISH IS ON SUNDAYS

ALL QUESTIONS ON HINDUISM AND TAMIL LANGUAGE ARE ANSWERED ON BOTH SUNDAY AND MONDAY

XXX

 WHO IS THE PRODUCER?

LONDON SWAMINATHAN IS PRODUCING IT ON BEHALF OF ‘GNANAMAYAM’ , LONDON.

FORMER BBC BROADCASTER,

SENIOR SUB EDITOR, DINAMANI,

FORMER TAMIL TUTOR, UNIVERSITY OF LONDON; 3 JOBS FROM 1971- 2014; NOW BLOGGER AND NEWS EDITOR, GNANAMAYAM CHANNEL

PLUS

FORMER MANAGER, TAMIL AND MALAYALEE HEALTH ADVOCACY PROJECT, LONDON;

MANAGER, LONDON TAMIL SANGAM,

HEALTH ADVOCATE , NEWHAM UNIVERSITY HOSPITAL, LONDON;

HINDU CHAPLAIN, HMS PRISONS, GREAT BRITAIN &

CHIEF EXAMINER, TAMIL PAPERS, CAMBRIDGE UNIVERSITY (UNTIL 2019)

***

SRI KALYANA SUNDARA SIVACHARYAR OF WORLD HINDU MAHASANGAM 

IS ANOTHER PRODUCER

AND MRS SUJATHA RENGANATHAN AND MRS VAISHNAVI ANAND ARE CO-PRODUCERS FOR OUR PROGRAMMES

WHERE IS IT?

ON ZOOM AND

FACEBOOK.COM/GNANAMAYAM AT 1 PM LONDON TIME

SUNDAY BRODACAST HAS WORLD HINDU NEWS ROUND UP IN ENGLISH AND TAMIL

IN ADDITION WE ANSWER LISTENERS’ QUESTIONS ON HINDU RELIGION  AND TAMIL CULTURE ON THESE DAYS

XXXX SUBHAM XXXX

tags- – broadcast28221

உலக இந்து சமய செய்தி மடல் 28-2-2021 (Post No. 9325)

Fire Walking at Anamalai Maasaani Amman Temple

Compiled  BY LONDON SWAMINATHAN

Post No. 9325

Date uploaded in London – –1 MARCH  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

உலக இந்து சமய செய்தி மடல் 28-2-2021

இன்று பிப்ரவரி -28 ஆம் தேதி —  ஞாயிற்றுக் கிழமை ,2021

உலக இந்து   சமய செய்தி மடல்

தொகுத்து வழங்குபவர் வைஷ்ணவி ஆனந்த்

 இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,

நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது VAISHNAVI     ANAND 

 எங்கள் நிகழ்ச்சிகளை ஞாயிற்றுக் கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 1 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் நேரடியாகக் கேட்கலாம். உலக இந்து சமய செய்தித் தொகுப்புடன் நேயர்களின் கேள்விகளுக்கு விடைகளும் அளிக்கப்படுகிறது.

எங்களை எந்நேரமும் தொடர்பு கொள்ள Facebook.com / Gnana mayam முகவரியில் அணுகவும்

Xxx

திருப்பதி கோவிலுக்கு ரூ.2 கோடி மதிப்பிலான சங்கு, சக்கரம்; தேனி பக்தர் காணிக்கை

திருப்பதி கோவிலுக்கு, தேனியை சேர்ந்த பக்தர் ஒருவர், ரூ.2 கோடி மதிப்பிலான தங்கத்தினாலான சங்கு, சக்கரத்தை காணிக்கையாக அளித்திருக்கிறார்.

ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவிலுக்கு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்து, தங்கள் காணிக்கைகளை குவித்து வருகின்றனர்.

இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு, தமிழகத்தின் தேனி மாவட்டத்தை சேர்ந்த பக்தர் ஒருவர், தங்கத்தினாலான சங்கு, சக்கரத்தை, காணிக்கையாக அளித்திருக்கிறார். இதன் மதிப்பு ரூ.2 கோடி.

அந்த பக்தரின் பெயர் தங்க துரை . மூன்றரைக் கிலோ எடை கொண்ட தங்க சங்கு, சக்கரத்தை திருப்பதி பெருமாளுக்கு காணிக்கை கொடுத்தது ஏன் என்றும் அவர் விளம்பினார். தான் ‘கோவிட் வைரஸ்’ தாக்குதலில் நோய்வாய்ப்பட்டபோது, தன்னை அவர் காப்பாற்றியதால் இதைச் செய்வதாகவும் செப்பினார்

XXXXX

திருப்பதி கோவிலில் துளசி விதைகளுடன் கூடிய லட்டு பிரசாத பைகள்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ,
சுற்றுச்சூழல் மாசடைவதை தடுக்க, பாலித்தீன் பைகள் நிறுத்தப்பட்டு, துணிப்பைகளில் லட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.  பசுமையை போற்றும் வகையில் துளசி விதைகளுடன் கூடிய பைகளில் லட்டு பிரசாதம் வழங்கும் முறை இப்பொழுது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. காலியான பைகளை மண்ணில் போடும் போது துளசி விதைகள் செடிகளாக முளைக்கின்றன..இதற்கு பல் வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

XXXXX

ராமேசுவரம் கோவிலுக்கு புதிய ஸ்படிக லிங்கம்

.

அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாக விளங்கும் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் தினமும் அதிகாலையில் கோவில் நடை திறந்த பின்பு 5 மணி முதல் 6 மணி வரை ஒரு மணி நேரம் மட்டும் ஸ்படிக லிங்க தரிசனம் நடைபெறும். மற்ற நேரங்களில் இந்த ஸ்படிக லிங்கத்தை தரிசனம் செய்ய முடியாது.

ராமேசுவரம் கோவிலில் உள்ள ஸ்படிக லிங்கம் கடந்த

பிப்ரவரி 22 ஆ ம் தேதி அதிகாலை எதிர்பாராதவிதமாக சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ராமேசுவரம் கோவிலுக்கு புதிய ஸ்படிக லிங்கம் சிருங்கேரி மடத்தின் சார்பில் பிப்ரவரி 24 ஆ ம் தேதி வழங்கப்பட்டது.

கர்நாடக மாநிலம் சிருங்கேரி மடத்தில் இருந்து சுமார் 2 கிலோ எடையில் புதிய ஸ்படிக லிங்கம் கொண்டுவரப்பட்டு ராமேசுவரம் கோவில் அருகே உள்ள சிருங்கேரி மடத்தில் வைக்கப்பட்டு சிறப்பு யாக பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றன.
பின்னர் மடத்தில் இருந்து மேளதாளம் முழங்க ஸ்படிகலிங்கம் கொண்டுவரப்பட்டு கிழக்கு வாசல் வழியாக கோவிலுக்குள் கொண்டு செல்லப்பட்டு விநாயகர், காசி விஸ்வநாதர் சன்னதியில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது.  சிறப்பு யாக பூஜை நடந்த பின்பு கருவறையில் புதிய ஸ்படிக லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

பிப்ரவரி 25-ந்தேதி அதிகாலை முதல் இந்த புதிய ஸ்படிக லிங்கம் தரிசனத்திற்கு வைக்கப்பட்டது.


XXXXX

விராலிமலையில் சுப்பிரமணியசுவாமி கோவில் கும்பாபிஷேகம்

விராலிமலை ஶ்ரீமுருகப்பெருமான் திருக்கோயில் மஹாகும்பாபிஷேகம்

சிவஸ்ரீ அண்ணா தலைமையில் கடந்த 25-ந்தேதி இனிது நிகழ்ந்தது.

சுகாதாரத்துறை அமைச்சர்  விஜயபாஸ்கர் கலந்து கொண்டு தரிசித்தார்.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளது. இங்கு மலைமேல் முருகன் வள்ளி- தெய்வானையுடன் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மேலும் முருகன் அருணகிரிநாதருக்கு காட்சி தந்து அவருக்கு அஷ்டமாசித்தி வழங்கிய இடமாகவும் விளங்கி வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று விக்னேஷ்வர பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.


வியாழக்கிழமை) காலையில் 6-ம் கால யாக சாலை பூஜை நடந்த பின்னர்  சுப்பிரமணிய சுவாமி கோவில் விமான கலசம், ராஜ கோபுர கலசத்திற்கும் புனித நீர் ஊற்றி சிவாச்சாரியார்கள் மகா கும்பாபிஷேகம் செய்தனர்.. பின்னர் சுப்பிரமணிய சுவாமி மூலவருக்கு மகா அபிஷேகமும் நடைபெற்றது.

XXX

ரத யாத்திரைக்கு அனுமதி தாமதம் —மதுரை போலீஸ் அதிகாரிக்கு கோர்ட்உத்தரவு

மதுரையில், ராம ரத யாத்திரையை அனுமதிப்பதில், நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றவில்லை என, அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இதில், போலீஸ் கமிஷனர் ஆஜராக, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

மதுரை, எஸ்.எஸ்.காலனியைச் சேர்ந்த செல்வகுமார் ஏற்கனவே தாக்கல் செய்த மனு:. அயோத்தியில் ராமருக்கு கோவில் கட்டும் பணி நடக்கிறது. இதற்காக, நிதி சேகரிக்க, மதுரையில் ராமர், சீதாதேவி, ஆஞ்சநேயர் விக்ரகங்கள் உள்ள ரதத்தை இயக்க ஏற்பாடு செய்து உள்ளோம். ரத யாத்திரை, 100 வார்டுகளிலும் நடைபெற அனுமதி கோரி, மதுரை போலீஸ் கமிஷனர், திலகர் திடல் உதவி கமிஷனரிடம் மனு அளித்தோம்.

உதவி கமிஷனர், ‘கொரோனா பரவலைத் தடுக்க, ஊரடங்கு அமலில் உள்ளது. சட்டம் – ஒழுங்கு பிரச்னையை கருதி, ரதயாத்திரைக்கு அனுமதி மறுக்கப்படுகிறது’ என, நிராகரித்தார். மதுரையில் அரசியல் நிகழ்ச்சிகள், மீனாட்சி அம்மன் கோவில் தெப்பத் திருவிழாவிற்கு அனுமதிக்கப்பட்டது. உதவி கமிஷனரின் உத்தரவை ரத்து செய்து, அனுமதிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு, செல்வகுமார் குறிப்பிட்டார்.

பிப்., 19ல் நீதிபதி ஆர்.ஹேமலதா விசாரித்து, ‘அனுமதி மறுத்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுவை போலீஸ் கமிஷனர் பரிசீலித்து, நிபந்தனைகளுக்கு உட்பட்டு, வாகனம் சென்று வர, தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ என்றார்.

‘இதை நிறைவேற்றாததால், மதுரை போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’ என, செல்வகுமார் மனு செய்தார்.

நீதிபதி ஆர்.ஹேமலதா விசாரித்தார். ரத யாத்திரையை பாதியில் போலீசார் தடுத்தி நிறுத்தினர்’ என மனுதாரர் தரப்பு தெரிவித்தது. ‘போலீஸ் கமிஷனர் மார்ச், 1-ல் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும்’ என்றார் நீதிபதி,.

XXXXXX

ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் விழா: வீடுகளில் பொங்கல் வைத்த பக்தர்கள்


கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற திருவனந்தபுரம்
ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் பொங்கல் விழா நடைபெறும்.


இந்த ஆண்டுக்கான விழா கடந்த 19-ந் தேதி காப்பு கட்டுடன் தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழாவின் சிகர நிகழ்ச்சியான பொங்கலிடும் விழா நேற்று நடந்தது.


கேரளாவில் கொரோனா பாதிப்பு இன்னும் கட்டுக்குள் வராததால் பொங்கல் நாளான நேற்று அவர்கள் வீடுகளிலேயே பொங்கலிட்டு அம்மனை வழிபடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

அதன்படி  நேற்று காலை கோவிலில் பொங்கல் விழா தொடங்கியது என்ற அறிவிப்பு வெளியானதும் பக்தர்கள் அவரவர் வீடுகளில் பொங்கலிட தொடங்கினர். பொங்கல் நைவேத்திய நிகழ்ச்சி  மாலை 3.40 மணிக்கு நடந்தது .

XXX

மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழா 

கோவை மாவட்டம், ஆனை மலை மாசாணியம்மன் கோவில் மிகவும் பிரசித்திபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் அக்கினி குண்டம் விழா விமரிசையாக நடைபெறும். தை அமாவாசையில் கொடியேற்றத்துடன் அக்கினி குண்டம் விழா தொடங்குவது வழக்கம்.

குண்டம் விழா என்பது எரியும் தீயில் நடந்து செல்லும் தெய்வீக சடங்கு ஆகும் .இவ்வாறு தீயில் பக்தர்கள் நடந்து செல்லும் நிகழ்ச்சியை பூக்குழி இறங்குதல், தீ மிதித்தல் என்றும் சொல்லுவார்கள் .


இந்த ஆண்டு கடந்த 11-ந் தேதி தை அமாவாசையில் குண்டம் விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து புதன்கிழமை நள்ளிரவு மயான பூஜை நடைபெற்றது. 25-ந் தேதி காலை சக்தி கும்பஸ்தாபனம், மகாபூஜை நடைபெற்றது.

சனிக்கிழமை காலை அம்மன் அருளாளிகள் ஆழியாற்றில் நீராடிவிட்டு குண்டம் இறங்குவதற்காக உத்தரவை பெற்றனர். சிலருக்கு அருளாளிகள் உத்தரவு தரவில்லை. அம்மன் அருளாளிகள் உத்தரவு கிடைக்காதவர்கள் குண்டம் இறங்க மாட்டார்கள்.

அருளாளிகளிடம் உத்தரவு பெற்ற பக்தர்கள் குண்டம் இறங்கும் இடத்திற்கு வந்தனர். அப்போது வானில் கருடன் 3 முறை வட்டமிட்டது. அதற்கு பிறகு முறைதாரர்கள் எலுமிச்சை கனி, பூ மாலையால் செய்யப்பட்ட பந்து ஆகியவற்றை குண்டத்தில் உருட்டிவிட்டனர்.

அவைகள் வாடாமல் அப்படியே இருந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கினர். பெண்கள் குண்டம் இறங்க அனுமதி இல்லாததால் கைகளால் பூக்களை 3 முறை எடுத்து குண்டத்தில் மீண்டும் போட்டனர்.

குண்டம் இறங்குதல் நிகழ்ச்சியை பார்க்க பல்லாயிரகணக்கான பக்தர்கள் வந்திருந்ததால், டி.எஸ்.பி. விவேகானந்தன் தலைமையில் 250-க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மருத்துவர் குழு, தீயணைப்பு துறையினர் போன்றவர்கள் தயார் நிலையில் இருந்தனர். ஆனைமலை களைகட்டியிருந்தது.

xxxxxx

கோவில்களை பக்தர்களிடம் கொடுத்துவிடுங்கள்… தமிழக அரசுக்கு சத்குரு ஜக்கி வாசுதேவ் வலியுறுத்தல்

தமிழக கோவில்கள் பக்தர்களால் நிர்வகிக்கப்படவேண்டும் என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் சமீப காலமாக வலியுறுத்தி வருகிறார். அதன் தொடர்ச்சியாக, சத்குரு நேற்று  வெளியிட்டுள்ள அடுத்தடுத்த டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

11,999 கோவில்கள் ஒரு கால பூஜைகூட நிகழாமல் அழிந்து வருகின்றன. 34,000 கோவில்கள் 10,000க்கும் குறைவான வருட வருவாயுடன் போராடுகின்றன. 37,000 கோவில்களில் பூஜை, பராமரிப்பு, பாதுகாப்பிற்கு ஒருவர் மட்டுமே உள்ளார். கோவில்களை பக்தர்களிடம் விடுங்கள். தமிழக கோவில்களை விடுவிக்கும் நேரமிது. கிழக்கிந்திய கம்பெனி நம் நாட்டு செல்வத்தை திருடியதோடு, கோவில்களை கையகப்படுத்தியதால் நம் ஆன்மீகத்தையும் அடக்கி ஒடுக்கினர். 

அரசாங்கம் கோவில்களை நிர்வகிக்க வேண்டுமென்றால், அவர்கள் தாங்கள் செய்வது மக்களாட்சி அல்ல, இறையாட்சி என அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

இந்த பதிவு இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

xxxxx

இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் வைஷ்ணவி ஆனந்த்………………………… நன்றி,

வணக்கம்

 tags- tamil Hindu news, 28221,

WORLD HINDU NEWS ROUNDUP IN ENGLISH 28-2-2021 (Post No.9324)

Compiled  BY LONDON SWAMINATHAN

Post No. 9324

Date uploaded in London – –1 MARCH  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

28-2-2021 WORLD HINDU NEWS ROUNDUP IN ENGLISH

Namaste , Namaskaram to Everyone

This is a weekly ‘HINDU NEWS ROUND UP’ from around the world.

Read by SUJATHA RENGANATHAN .

XXX

This is a broadcast coming through ZOOM and FACEBOOK.COM / GNANA MAYAM live at

ONE pm London Time and 6-30 PM Indian Time Every SUNDAY.

Even if you miss our live broadcast on SUNDAYS

you can always visit us on FACE BOOK.COM – slash- Gnana Mayam 24 hours a day. 

Here is the WEEKLY HINDU NEWS BULLETIN from ‘Aakaasa Dhwani’

– Read by SUJATHA RENGANATHAN .

XXX

 Sankaradeva cultural complex works begin

Union Home Minister Amit Shah ceremonially started the construction work of the Rs 188-crore Sankaradeva cultural complex at Batadrava, the birthplace of the great Assamese Vaishnavite saint Srimanta Sankaradeva, with traditional rituals on February 25.

Addressing a huge public rally at the site of the proposed project, Shah said Sri Sankaradeva was a versatile genius who tied traditions, art, culture and literature of the entire region with the Indian mainstream. “With a greater sense of Indian nationalism, Sri Sankaradeva also tried to bring all communities of the region under a single umbrella of Vaishnavite traditions more than 500 years ago,” he added.

Referring to the State government’s recent initiative of offering ex gratia of Rs 2.5 lakh each to around 8,000 namghars for renovations work, Shah urged the authorities to increase the number of beneficiary namghars to 25,000 in the days to come.

Xxxx

Devotee from Tamil Nadu offers ornaments worth Rs 2 crore to Lord Balaji

A devotee hailing from Tamil Nadu on Wednesday donated gold ornaments worth Rs 2 crore to the Lord Venkateswara temple at Tirumala,  a temple official said.

After offering worship, the devotee Thangadurai belonging to Theni in Tamil Nadu handed over the gold shanku (conch) and chakram (discuss), weighing 3.5 kg, to the temple authorities, the official said.

The main deity of the ancient shrine would be adorned with the donated ornaments, the official told pressmen.

The devotee made the offering as a fulfilment of a vow – he recovered from a serious illness during the COVID-19 lockdown, the official quoted the devotee as saying.

Xxx

Attukal Pongala held on Saturday

 The iconic Attukal Pongala festival, which sees millions of women arrive at the capital city  THIRUVANANTHAPURAM annually to prepare a feast for the goddess, was a low-key affair this year in view of the rise in Covid-19 cases in the state. 

For the first time in its recent history, the festival was held at the Attukal Bhagavathy Temple  in THIRUVANANTHAPURAM without the enormous crowd it is usually associated with, after the Kerala state government and the temple trust decided to conduct the ritual in strict compliance with the Covid protocol.

The main ritual began at 11am on Saturday when the head priest of the temple lit up the ‘pandara aduppu’ (main hearth) near the temple, following which devotees offered the pongala at their households, as per the instructions of the authorities and the temple trust.  

Holiday
On account of Attukal Pongala festival the district collector Navjot Singh Khosa has declared holiday in Thiruvananthapuram for all educational institutions, public/government sector institutions on Saturday.

According to the traders who have set up shop in the vicinity, the bidding on pop-up stalls did not see much participation while permit for the same was carried out on a case-to-case basis by the committee. “The business was dull due to the pandemic.

Business down by 70-80 per cent


According to a Kerala Vyapari Vyavasayi Ekopana Samithi (KVVES) official, the pongala business in the city has come down by 70-80 per cent as compared to the previous year. “Around 20 lakh people used to attend the festival every year. Restricting the pongala offering and cancelling of cultural programmes have affected every trader. It is a huge blow to people who run hotels, light and sound business, decoration and stage business, and many artists. The traders were hopeful of reviving their business this year, but things have worsened,” he said. 
 

XXX

Will stop conversion of Hindu girls with a strict law  says Gujarat Chief Minister

Gujarat Chief Minister Vijay Rupani on Thursday said at an election rally that his government will bring in a law against “love jihad” to stop the “kidnapping” and conversion of Hindu girls.

Speaking at Godhra in Panchmahal district, Rupani reiterated the government’s intention to table the legislation in the coming budget session of the state Assembly.

BJP governments in Madhya Pradesh and Uttar Pradesh have enacted laws to penalize `fraudulent conversions’ to stop what party leaders term as “love Jihad” or an alleged conspiracy to convert Hindu women through marriage.

“Assembly session is starting from March 1 and my government is willing to bring in a strict law against love jihad. We will not tolerate this act of kidnapping of Hindu girls,” Rupani said.

“Women are being lured and converted. This new law is aimed at stopping such activities,” he said.

BJP MLA Shailesh Mehta and the party’s Vadodara MP Ranjanben Bhatt had earlier called for a law on the lines of Uttar Pradesh and Madhya Pradesh.

Xxx

Madurai City Commissioner of Police summoned for disobeying order 

The Madurai Bench of Madras High Court, on Thursday, directed the City Commissioner of Police to appear before the court on Monday.

Justice R Hemalatha gave the direction while hearing a contempt petition filed by Sri Ram Janmbhoomi Teerth Kshetra Trust over non-compliance of an order passed by the court last week, in which the court had directed the commissioner to consider allowing the trust to conduct Ram Ratha Yatra in Madurai with reasonable restrictions.

Despite specific directions to the Commissioner to consider the petitioner’s representation, the Deputy Commissioner had rejected the representation by asking certain queries which are unrelated to the procession, the judge observed. Also noting that the vehicle involved in the yatra was once again restrained by the authorities, the judge instructed the Commissioner to ensure release of the vehicle forthwith. The matter was adjourned to Monday (March 1) for the Commissioner’s appearance.

Xxxxx

Devotees celebrate Magh Purnima

Devotees across Uttar Pradesh and Uttarakhand celebrated Magh Purnima on Friday by taking a holy dip at Triveni Sangam, also known as Sangam Ghat.

Triveni Sangam is the place where three rivers, Ganga, Yamuna and Saraswati meet. Prayagraj District Administration showered flower petals on devotees at Triveni Sangam.

Devotees observe this holy occasion by offering diyas in the water in Prayagraj and Haridwar. Lord Vishnu is worshipped on this day.

XXXXXX

Donation For Ram Temple By DMK Leader Creates Ruffle Among Alliance Parties

In a major embarrassment to the Dravida Munnetra Kazhagam (DMK), party’s minorities wing secretary K S Masthan who is also the Gingee constituency representative in the State Assembly has, last week, donated Rs 11,000 for the construction of Ram Temple in Ayodhya. This has created a ruffle among the alliance parties of DMK. While some welcome the act, some have distanced themselves.

The Viduthalai Siruthaigal Katchi leader and the Member of Parliament from Villupuram constituency, D Ravikumar, calls it a symbolic act of religious harmony. “It should be viewed as a symbolic act of religious harmony though I wouldn’t make such a contribution myself. For that matter, I will not contribute to Babri Masjid construction either, he said.

The state secretary of Communist party of India (Marxist), K Balakrishnan, says this is not right.

Xxxxx

Hindu dharma for Akhand Bharat says RSS chief Mohan Bhagwat

Rashtriya Swayamsevak Sangh chief Mohan Bhagwat on Thursday said Hindu Dharma will establish Akhand Bharat and advised people to not have doubts about the same. Bhagwat was speaking after launching ‘Viswabharatam’, a book in Sanskrit authored by Dr Madugula Nagaphani Sarma in Hyderabad.

“Till six months prior to Partition, no one thought it would happen. When Pandit Jawaharlal Nehru was asked about the creation of Pakistan, he had said it was a dream of the fools. Lord Wavell had said in British Parliament that ‘God has made India one, who is going to divide it?’ But it happened,” Bhagwat said. “More than the need for Khandit Bharat (partition of India), there is a need for Akhand Bharat for those countries which were part of India earlier,” he added. 

xxxxxxxxxxxxx

A chance to win yoga championship

Tamil Nadu Youth Yogasana Sports Association, in affiliation with the National Yogasana Sports Federation (recognised by the Ministry of Youth Affairs and Sports, Government of India), is organising the first ever online Yogasana Sports Championship.

Online Google Applications are invited for Online State Open & Invitational Individual Yogasana Sports Championship. The last date for registering is March 2. The eligibility round of the championship will be held on March 5, 6 and 7; the quarter final round on March 10 and 11; the semi final on March 13; and the final on March 14.

There are six age groups: Sub Junior Girls Junior Girls, Senior Girls, Sub Junior Boys, Junior Boys  and Senior Boys .

Invitational category is for those who have won gold, silver or bronze medals in the past three years in championships conducted by government- recognised bodies. These persons can directly take part in the quarter final round. Enthusiasts who don’t have any medals are welcome to join under the Open Category.

Xxx

THAT IS THE END OF ‘AAKAASA DHWANI ’ HINDU NEWS BULLETIN BROADCAST FROM LONDON –

READ BY SUJATHA RENGANATHAN.

Please Wait for our Tamil News Bulletin

Now I pass it on to VAISHNAVI ANAND

tags–Hindunews28221

ஒருவன் தூக்கத்தில் இருக்கும் போது எழுப்பாதே. அப்போதுதான் அவன் பாவம்………(Post No.9323)

WRITTEN  BY KATTUKKUTY

Post No. 9323

Date uploaded in London – –     1 MARCH  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஞான மொழிகள் – 26

kattukutty

அவன் சொன்ன புளித்துப்போன ஜோக்கினால் என்கையில்

இருந்த பால் கூட புளிச்சுப் போச்சு !!!

யுத்தத்தை மனிதன் அழிக்காவிடில் யுத்தம் மனிதனை அழித்து விடும்!

ஒரு பொய் சொல்வது கடினமல்ல, ஓரே ஒரு பொய் மட்டும்

சொல்வதுந்தான் கடினம்……….

என்  மனைவியால் எந்த ரகசியத்தையும் காப்பாற்றி வைத்துக் கொள்ள முடியும்……..ஆனால் அவள் யாரிடம் சொல்கிறாளோ அவர்களால் தான் முடிவதில்லை???

சீ…….. நீ ஒரு மனிதனா??? நான் என் அம்மா வீட்டிற்கு போறேன்……

என்று சொன்னாள் அந்த இளம் பெண்.

அதற்கு அவன்சொன்னான்

போயேன்! நானும் என் மனைவி வீட்டிற்கே திரும்பி போறேன்……..

xxx

உழவனுக்கு நிலம் வேண்டும். பெரிய மனிதனுக்கு கௌரவம் வேண்டும்.

போர் வீரனுக்கு சண்டை வேண்டும்.

வியாபாரிக்கு பணம் வேண்டும்.

பெண்களுக்கு முழு உலகமும் வேண்டும்!!!

XXXX

ரஷ்ய பழமொழி

பாட்டன் வாங்குகிறான்,

அப்பன் கட்டுகிறான்,

மகன் விற்கிறான்

பேரன் பிச்சை எடுக்கிறான்.

ஸ்காட்லாந்து பழமொழி.

மற்றவர்களை குறை கூறுவது போல் நீ உன்னை குறை கூறிக் கொள்

உன்னை நீ மன்னிப்பது போல மற்றவர்களையும் மன்னித்து விடு.

எகிப்து பழமொழி

ஏழ்மையின் காரணமாக உன்னை நீ தாழ்த்திக் கொள்ளாதே.

செல்வத்தின் காரணமாக உன்னை நீ உயர்த்திக் கொள்ளாதே.

ஸ்பெயின் பழமொழி

ஒருவன் தூக்கத்தில் இருக்கும் போது எழுப்பாதே……..

அப்போதுதான் அவன் பாவம் செய்யாமலிருக்கிறான்!!!

இது என் மொழி!!!

அபூர்வம் எது??? பணிவுடன் கூடிய புலமை

துக்கமற்றவன் யார்??? பைத்தியக்காரன்

ரசிக்கத்தக்க சுவை எது??? “நக” ச்சுவை

விரைந்து பறப்பவை எது??? விடுமுறை நாட்கள்

XXXX

ஓர்  பாடல்

இந்தப் பாடலின் சிறப்பு என்ன கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்!!!

பூவாளை நாறுநீ. பூமேகலோகமே

பூநீறு. நாளை வா. பூ………

(விடை கடைசியில் காண்க).

உலகம் திருந்த வழி என்ன???

உலகம் திருந்த வேண்டுமா? முதலில் உன்னை யோக்கியனாக்கிக்

கொள்.அடுத்த வினாடியே உலகத்தில் ஒரு அயோக்கியன் குறைந்திருப்பதை உணர்வாய்

அவமானம் எது???

தொழில் எத்தனை கீழ்த்தரமானாலும் அதைச் செய்வதில் அவமானம்

இல்லை . சோம்பல் ஒன்றே அவமானம்………

சட்டம் எதைப் போற்றுகிறது ???

சட்டம் ஒரு சிலந்தி வலை போன்றது. அதில் சிறு ஈக்கள் சிக்கிக் கொள்ளும். ஆனால் குளவிகளும், வண்டுகளும், அதை அறுத்துக்

கொண்டு ஓடிவிடும்.

இயற்கையின் அற்புதம் என்ன???

பல வருடங்கள் கழித்து நீங்கள் மூக்குக் கண்ணாடி போடப்போவதை உணர்ந்து காதுகளை கடவுள் வைத்திருக்கிறாரே

அதுதான் அற்புதம்!!!

xxxx subhamxxxx

tags- தூக்கத்தில் , எழுப்பாதே, ஞான மொழிகள் – 26

பிப்ரவரி 2021 வெளியான ச.நாகராஜன் கட்டுரைகள் (Post No.9322)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9322

Date uploaded in London – –  1 MARCH  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பிப்ரவரி 2021 இல் வெளியாகியுள்ள ச.நாகராஜன் கட்டுரைகள் பற்றிய குறிப்பேடு!

2021

February

1-2-21    9211   உதவிக் குறிப்புகள் – 16 (211 – 230)

2-2-21    9215   மஹரிஷி தமனர், சதானந்தர், க்ரது

3-2-21    9219    கடவுளைக் காட்டு, நம்புகிறேன் என்போருக்கு இதோ, பதில்!

4-2-21    9224    தெலங்கானாவில் கோவில், மசூதியாக மாற்றப்பட்ட அநியாயம்!    

            (Truth vol 88 no 26 15-1-21)

5-2-21    9229    ஜனவரி 2021இல் ச.நாகராஜன் எழுதிய கட்டுரைகள்!

6-2-21    9235  நடந்தவை தான் நம்புங்கள் – 6

7-2-21    9237   உதவிக் குறிப்புகள் (231-250)!

8-2-21    9241   ஹிந்துக்களே, விழித்தெழுவீர்களா?

9-2-21    9246    மஹரிஷி அரிஷ்டநேமி – சாவுக்குப் பயமில்லை!          

10-2-21  9248   நடந்தவை தான் நம்புங்கள் – 7

11-2-21  9251   திரைப்படங்களில் பாரதியார் – 2 (ஞானமயம் 8-2-21 உரை)

12-2-21  9253   புனர் ஜென்மம் உண்டா – 1 – ஞானமயம் 8-2-21 உரை         

13-2-21  9257  புனர் ஜென்மம் உண்டா -2 – ஞானமயம் 8-2-21 உரை         

14-2-21  9261   கொரானா- சில அடிப்படை உண்மைகள் (ஹெல்த்கேர் பிப்ரவரி

            2021 கட்டுரை)

15-2-21  9265    ரொபாட் குக்கர், மாஜிக் மிக்ஸி, நவீன சமையலறை சாதனங்கள்- 

             கோகுலம் கதிர் பிப்ரவரி 21 கட்டுரை

16-2-21  9270  ஜோதிடம் உண்மையா – 1 (15-2-21 ஞான மயம் உரை)

17-2-21  9274  ஜோதிடம் உண்மையா – 2 (15-2-21 ஞான மயம் உரை)

18-2-21 9278   பாகவத அபசாரம் கூடாது!

19-2-21 9281   உதவிக் குறிப்புகள் – 18 (251 – 270)

20-2-21  9284  யோகவாசிஷ்டத்தில் வரும் பகீரதன் கதை!  

21-2-21 9287   மஹரிஷி கபிலர் – கங்கை பூமிக்கு வந்த வரலாறு!

22-2-21 9293  புராணத்துளிகள் 3- அத் 4 (10- மனிதர்கள், தேவர்கள் கால அளவு,  

            11- பக்தி தமிழ் தேசத்தில் பிறந்தவள் 12- வியாஸர் எந்த  

            இடத்தில் தவம் புரிந்தார்?)

23-2-21  9298  ஜோதிடம் உண்மையா – 2 (சுவையான சம்பவங்கள் – ஞானமயம்  

            உரை 22-2-21)

24-2-21  9302  நடந்தவை தான் நம்புங்கள்! – 8 (சந்தைக்குப் போன சாக்ரடீஸ்,

            உண்மையான காதலன், அட எருமையே!)

25-2-21  9306  நமது தேசத்தின் அடையாளங்கள்!

26-2-21  9309  நடந்தவை தான் நம்புங்கள்! – 9 (ASP Ayyar)

27-2-21  9314 ஏமாறாதீர்கள், ஏமாற்றாதீர்கள்!

28-2-21  9318  ராகங்கள் கொண்ட துறைப் பாடல், திரைப்படப் பாடல்கள்!

***

 tags- பிப்ரவரி 2021, ச.நாகராஜன், கட்டுரைகள், 

PLEASE JOIN US TODAY MONDAY MARCH 1, 2021

PLEASE JOIN US TODAY MONDAY MARCH 1, 2021

GNANA MAYAM- GNANA SUDAR BROADCAST

1 MARCH 2021 MONDAY

Title song – Maitrim Bhajata by Kanchi Paramacharya sung by MS

OPENING ANNOUNCEMENT & PRAYER -5 MINUTES

PRAYER SONG BY LONDON MRS ANNAPURANI PANCHANTHAN

TALK ON SHIVARATRI MAHIMA BY SRI CHANDRU (CHANDRASEKARA) GURUKKAL OF BIRMINGHAM, UK. – 10 ++ MINUTES

SONG MRS DEEPTHA MAHADEV-4

BENGALURU MR NAGARAJAN’S TALK ON VASTU SASTRA IN TAMIL —  10 MTS

ASHTAPATHI NUMBER -3 BY LONDON SRI BALASUBRAHMANYAM- 8 MTS

CHENNAI DR N KANNAN’S TALK — ALWAR AMUTHAM -6

SONG BY MRS LAKSHMI RAMASWAMI FROM CHENNAI– 5 MINUTES

LONDON HARINI RAGHU’S BHARATI SONG-6

Managalam Song  BY MRS LAKSHMI RAMASWAMI-3

APPR. 60 MINUTES

XXXXX

INTRODUCTION TO GNANAMAYAM

WE HAVE LAUNCHED A HINDU BROADCAST IN AUGUST 2020 AND IT IS GOING WELL ON MONDAYS VIA ZOOM AND FACEBOOK.

LATER WE HAVE EXTENDED IT TO ONE MORE DAY, ON SUNDAYS TO SPREAD TAMIL CULTURE.

BOTH OUR BROADCASTS ARE NON- POLITICAL AND NON -COMMERCIAL.

WE DON’T ADVOCATE OR SUPPORT ANY VIOLENCE IN ANY FIELD.

IT IS APPROXIMATELY ONE HOUR BROADCAST FROM LONDON.

TIME OF BROADCAST- ONE PM, LONDON TIME—— 6-30 PM INDIAN TIME;

DAYS- MONDAYS AND SUNDAYS

MONDAYS FOR HINDUISM (UNDER GNANAMAYAM AND GNANA SUDAR)

SUNDAYS  FOR TAMIL CULTURE & LANGUAGE (UNDER THAMIZ MUZAKKAM/ TAMIL THUNDER)

WORLD HINDU NEWS IN TAMIL AND ENGLISH IS ON SUNDAYS

ALL QUESTIONS ON HINDUISM AND TAMIL LANGUAGE ARE ANSWERED ON BOTH SUNDAY AND MONDAY

XXX

 WHO IS THE PRODUCER?

LONDON SWAMINATHAN IS PRODUCING IT ON BEHALF OF ‘GNANAMAYAM’ , LONDON.

FORMER BBC BROADCASTER,

SENIOR SUB EDITOR, DINAMANI,

FORMER TAMIL TUTOR, UNIVERSITY OF LONDON; 3 JOBS FROM 1971- 2014; NOW BLOGGER AND NEWS EDITOR, GNANAMAYAM CHANNEL

PLUS

FORMER MANAGER, TAMIL AND MALAYALEE HEALTH ADVOCACY PROJECT, LONDON;

MANAGER, LONDON TAMIL SANGAM,

HEALTH ADVOCATE , NEWHAM UNIVERSITY HOSPITAL, LONDON;

HINDU CHAPLAIN, HMS PRISONS, GREAT BRITAIN &

CHIEF EXAMINER, TAMIL PAPERS, CAMBRIDGE UNIVERSITY (UNTIL 2019)

***

SRI KALYANA SUNDARA SIVACHARYAR OF WORLD HINDU MAHASANGAM 

IS ANOTHER PRODUCER

AND MRS SUJATHA RENGANATHAN AND MRS VAISHNAVI ANAND ARE CO-PRODUCERS FOR OUR PROGRAMMES

WHERE IS IT?

ON ZOOM AND

FACEBOOK.COM/GNANAMAYAM AT 1 PM LONDON TIME

SUNDAY BRODACAST HAS WORLD HINDU NEWS ROUND UP IN ENGLISH AND TAMIL

IN ADDITION WE ANSWER LISTENERS’ QUESTIONS ON HINDU RELIGION  AND TAMIL CULTURE ON THESE DAYS

XXXX SUBHAM XXXX

கேதார்நாத் — ஆலயம் அறிவோம் (Post No.9321)

WRITTEN BY BRHANNAYAKI SATHYANARAYANAN

Post No. 9321

Date uploaded in London – –28 FEBRUARY  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

லண்டனிலிருந்து ஞாயிறுதோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் தமிழ்முழக்கம் நிகழ்ச்சியில் 28-2-2021 அன்று ஒளிபரப்பான உரை!

THIS TALK WAS BROADCAST VIA FACEBOOK, YOU TUBE AND ZOOM ON 28-2-2021. IF U WANT TO HEAR IT, PLEASE GO TO FACEBOOK.COM / GNANAMAYAM

“நீறு பூசி நிலத்து உண்டு நீர் மூழ்கி நீள் வரை தன் மேல்

தேறு சிந்தை உடையார்கள் சேரும் இடம் என்பரால்

ஏறி மாவின் கனியும் பலாவின் இருஞ் சுளைகளும்

கீறி நாளும் முசுக் கிளையொடு உண்டு உகளும் கேதாரமே”

திருஞானசம்பந்தர் திருநாமம் போற்றி, போற்றி!

ஆலயம் அறிவோம்! வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது 12 ஜோதிர்லிங்க ஸ்தலங்களில் ஒன்றான கேதார்நாத் ஆகும். 11755 அடி உயரத்தில் இமயமலைத் தொடரில் உத்தராகண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள இந்தத் தலம் ரிஷிகேசத்திலிருந்து 223 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.

காலத்தை வென்று, தொன்று தொட்டு நிலைத்திருக்கும், இந்த சிவ ஸ்தலத்தைப் பற்றி ஏராளமான புராண வரலாறுகள் உண்டு.

கே என்றால் தலை; தாரம் என்றால் தரிப்பது. ஆக கேதாரம் என்றால் சிவபிரான் கங்கையைத் தலையில் தரித்து அருள் புரிந்த தலம் கேதாரமாகும்.

இன்னொரு பொருள் : கே என்றால் இந்திரியம்; தாரம் என்றால் அவைகளை அடக்கி வெல்வது. பொறி புலன்களை வெல்லும் தலம் கேதாரம். இன்னொரு பொருள்: கே என்றால் பிரமரந்திரம் தாரம் என்றால் அதிலிருந்து வடியும் அமிர்த தாரை. இப்படி கேதாரம் பற்றிய விளக்கத்தை திருமுருக கிருபானந்தவாரியார் அவர்கள் தருகிறார். கேதார்நாதர் கோவில்.

தெற்குப் பார்த்த கோவில். எதிரில் பெரிய நந்தி. இரு புறமும் துவாரபாலகர்கள். இறைவன் திரு நாமம் :கேதார நாதர் இறைவி : கேதார கௌரி. கோயிலுக்குள் உள்ள மண்டபத்தில் குந்தி தேவி, தர்மர், பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன், திரௌபதி, கிருஷ்ணர் ஆகியோருடைய சிலாவுருவங்கள் உள்ளன.

பாண்டவர்கள் கடைசியில் மகாபிரஸ்தானம் என்ற விரதத்தை மேற்கொண்டு இங்கு வந்தார்கள். கேதார்நாதரை வழிபட்டு வடகீழ் திசையில் உள்ள ஒரு மலையின் வழியாக சொர்க்கம் புகுந்தார்கள். அந்த மலையை இங்கிருந்தே தரிசிக்கலாம்.

பாண்டவர்களைப் பற்றிய இன்னொரு வரலாற்றை ஸ்கந்த புராணம் விவரிக்கிறது. உற்றார், உறவினரைக் கொன்றதால் ‘கோத்ர ஹத்யா’ என்ற பாவத்திற்குள்ளாகி, மனம் வருந்திய பாண்டவர்கள், சிவபிரானை தரிசித்துத் தங்கள் பாவத்தைப் போக்கிக் கொள்ள இங்கே வர, சிவபிரானோ அவர்களுக்கு அருள் புரிய மனம் இன்றி ஒரு காளையின் வடிவத்தை எடுத்துக் கொண்டு ஓடலானார். அவரைத் துரத்திச் சென்ற பீமன் அவர் வாலைப் பிடிக்க வால் இருந்த இடம் கேதாரமானது. மனம் கனிந்த சிவபிரான் அங்கு தோன்றி பாண்டவர்களுக்கு அருள் பாலித்தார். அவரது உடல்  இன்னும் நான்கு இடங்களில் தோன்றின. இந்த ஐந்து இடங்களும் பஞ்ச கேதார் என்று அழைக்கப்படுகிறது.

இன்னொரு வரலாற்றின் படி கேதார்நாத்தை அடுத்துள்ள பத்ரிநாத்தில் நரனுடன் தவம் புரிய விரும்பிய விஷ்ணு தன் விருப்பத்தை சிவபிரானிடம் தெரிவிக்கவே, அவர் அதற்கு இசைந்து கேதார்நாத் சென்றார். இதனால் மனம் மிக மகிழ்ந்த விஷ்ணு யாரெல்லாம் தன்னை பத்ரிநாத்தில் தரிசிக்க விரும்புகிறார்களோ அவர்கள் முதலில் கேதார்நாத் சென்று கேதாரநாதரைத் தரிசித்த பின்னரே தன்னை தரிசிக்க வரவேண்டும் என்ற நியமத்தை ஏற்படுத்தினார்.

இங்கு க்ஷீ ர கங்கை, மது கங்கை, மந்தாகினி, சொர்க்கதுவார கங்கை, சரஸ்வதி என பஞ்ச கங்கை எனப்படும் ஐந்து நதிகள் ஐந்து புறங்களில் மகாமலைகளில் இருந்து கீழே வந்து ஒன்று படுகின்றன.

பஞ்ச கங்கை போல இங்கு பஞ்ச குண்டங்கள் உண்டு. அமிர்த குண்டம், அம்ச குண்டம், ரேதச குண்டம், ஈசான குண்டம், உதக குண்டம் என்பவையே அந்த ஐந்து குண்டங்கள். ஐந்தாவது குண்டமான உதக குண்டம் மிகவும் புனிதமானது. அது சிறு கோவிலுக்குள் இருக்கிறது. உதகம் என்றால் நீர் என்று பொருள்.

‘கேதாரம் உதகம் பீத்வா, புனர் ஜன்ம ந வித்யதே’ என்ற மொழியால், இங்கு இந்த தீர்த்தத்தைப் பருகியவர்களுக்கு மறு பிறப்பு கிடையாது என்பது ஐதீகம்.

‘ஸ்ரீ சைலம் தர்சனாத் முக்தி, வாரணாஸ்யாம் ம்ருதஸ்யச

கேதாரம் உதகம் பீத்வா, ஸுஷூம்னாடீச தர்சனாத்’ என்ற ஸ்லோகத்தால்    ஸ்ரீ சைலத்தில் தரிசித்தால் முக்தி, காசியில் மரித்தால் முக்தி, கேதாரத்தில் இந்த உதக குண்டத்தில் உள்ள நீரைப் பருகினால் முக்தி, நடுநாடியாகிய ஸுஷூம்னாவை தரிசித்தால் முக்தி என்பது பெறப்படுகிறது.

கேதார்நாதரின் கோவில் தீபாவளியன்று மூடப்படும். பின்னர் வைகாசி பூர்வபட்சம் திருதியை அன்று திறக்கப்படும். குளிர்காலம் என்பதால் பனிக்கட்டியால் கோவில் மூடி இருக்கும். அதை ஆறு மாதம் கழித்து பனிக்கட்டிகளை அகற்றி, திறக்கும் போது, பெருமானுக்குச் சாத்திய மலர் வாடாமலும், ஏற்றி வைத்த தீபம் அணையாமலும் இருக்கும்.

இங்கு தான் ஆதிசங்கரர் இறைவனுடன் இரண்டறக் கலந்தார். அவரது சமாதி, கோயிலுக்கு மேற்கே சிறிது தூரத்தில் உள்ளது.

ஒரு புறம் பொங்கிப் பிரவாகித்துத் துள்ளிக் குதித்து ஓடும் மந்தாகினி நதி, மறுபுறம் நெடிதுயர்ந்த மலைகள் இவற்றின் நடுவே செல்வது புனித யாத்திரை மேற்கொண்டோரை பரவசப்படுத்துகிறது.  கௌரிகுண்டம் என்னும் இடத்திலிருந்து 22 கிலோமீட்டர் தூரம், சிறிய பாதை வழியே நடந்தே சென்று கேதாரநாதர் கோவிலை அடைய வேண்டும். நெடிதுயர்ந்த தேவதாரு மரங்கள், நூற்றுக் கணக்கான அருவிகள், பாய்ந்து ஓடும் மந்தாகினி நதி ஆகியவை, இயற்கை வளத்தின் சிகரமாகத் திகழும் இமயமலைப் பகுதி, இறைவனின் உறைவிடமே தான் என்பதைக் கணம் தோறும் சொல்லிக் கொண்டே இருக்கும்.

இந்த தலத்திற்கு திருஞானசம்பந்தர் ஒரு பதிகமும் சுந்தரர் ஒரு பதிகமும் அருளி உள்ளனர்.

காலம் காலமாக பக்தர்கள் வழிபட்டு வரும் கேதாரநாதரும் பார்வதி தேவியும், அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறொம்.

சுந்தரர் அருள் வாக்கு:-

“பண்ணின் தமிழ் இசைபாடலின் பழ வேய் முழவு அதிரக்

கண்ணின் ஒளி கனகச்சுனை வயிரம் அவை சொரிய

மண் நின்றன மத வேழங்கள் மணி வாரிக்கொண்டு எறியக்

கிண்ணென்று இசை முரலும் திருக்கேதாரம் எனீ ரே”     

நன்றி வணக்கம்!

TAGS- கேதார்நாத்

INDEX 54 FOR LONDON SWAMINATHAN’S MAY 2017 ARTICLES (Post No.9320)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9320

Date uploaded in London – –28 FEBRUARY  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

HOW TO GET ACCESS FOR THESE POSTS?

JUST COPY THE TITLE YOU WANT TO READ AND PASTE IT IN GOOGLE SEARCH AND ADD “FROM tamilandvedas.com or from swamiindology.blogspot.com”

IF YOU HAVE ANY PROBLEM, PLEASE CONTACT US. OUR E MAIL IS IN ALL THE 9300 PLUS POSTS.

XXX

MAY 2017 INDEX 54

Dravidian Magician in Kashmir, 3869;1 May 2017

Kashmir ministers sacrifice saved the king,3872,2 /5

Why did Valmiki name Rama s children Lava Kusha? 3875;3/5

Follow the habits of a Crow Tamil poets Advice,3878;4/5

Women are Cuckoo s : Kalidasa and Tamil poets agree,3881;5/5

Venkai tree is tiger: Kalidasa and Tamil poets imagine, 3884; 6/5

Gold and Touch stone in Kalidasa,3887;7/5

Strange Luta disease in Kashmir,3890;8/5

More Brain s in your Belly than in your Head, 3893;9/5

Women! I like their Beauty, their Delicacy, their Vivacity and I like….3895;10/5

Two Words Please! You Lose, 3898;11/5

Duelling Anecdotes,3902;12/Buddha and Valluvar : great men think alike;3905;13/5

London Capital of the Tamil Speaking World,3907;14/5

Buddha and Vvalluvar on Vegetarianism and Hypocrisy- Great Men think alike, 16/5

Who is right? Ramanan’s or Kanchi Paramacharya? 3917;17/5

Mysterious Number 17 in the Vedas,3916;17/5

Comments on Vedic Women Poets,3923:18/5

Desire and Hatred:Valluvar and Buddha think alike- part 4;20/5

Rig Veda on Friendship and Food for all, 3929;21/5

Go Higher and Higher- Buddha and Valluvar -5

Mahabharata Story is True: Man gives birth to Babies, 3932;22/5

Karma Theory- Buddha and Valluvar -3935; part 6

Introduction Anecdotes, 3937: 24/5

Society Anecdotes, 3940, 25/5

30 Beautiful Quotations from the Yajur veda, 3943;26/5

Kalidasa and Valluvar on Bad Friends and Laughter, 3946: 27/5

Buddha s Encounter with Brahmins,3950:28/4

Drought in Tamil and Sanskrit literature, 3953: 29/5

About Brahmins: Buddha and Valluvar Think Alike-3956; part 7

Mystery and Miracle of Soma plant, Soma Rasa, 3959, 31/5

XXXX

TAMIL ARTICLESIN MAY 2017

வள்ளுவனுக்கு சங்கீதம் தெரியுமா?, 3868, மே 1, 2017

காஷ்மீரில் திராவிட மந்திரவாதி – உண்மைக் கதை 3871, 2/5

காஷ்மீர் அமைச்சரின் தியாகம் , 3874, 3/5

எல்லோருக்கும் இரண்டு மனைவி, இரண்டு மகன்கள், 3877, 4/5

காகத்திடம் கற்க வேண்டிய ஆறு விஷயங்கள் , 3880, 5/5

வாக்கு நயம்,யாக்கை நயம்- காக்கை இசை, குயில் இசை , 3883;6/5

தமிழர் வாழ்வில் வேங்கை மரம்! புலியா, மரமா ?3886, 7/5

சங்கத் தமிழில் தங்கமும் உரைகல்லும், 3889, 8/5

நோயைக் காட்டித் தப்பிய மன்னர்கள், 3892, 9/5

புத்தரும் வள்ளுவரும் செப்பியது ஒன்றே , 3896; 10/5

செய்தக்க அல்ல செயக்கெடும் – புத்தரும் வள்ளுவரும் செப்பியது ஒன்றே -2, 3989, 11/5

தராசு உவமை -புத்தரும் வள்ளுவரும் செப்பியது ஒன்றே -3 , 3901; 12/5

பனை மரத்துக்கு அடியில் நின்று பாலக் குடித்தாலும், 3904; 13/5

பெண்களின் அழகு எப்போது மறையும்? 3908, 14/5

ராமரின் வில் பெரிதா? சீதையின் சொல் பெரிதா? 3910, 15/5

சிறியோர் எல்லாம் சிறி யரும் அல்லர், பெரியோர் எல்லாம்….3911;15/5

பசி ஆற்றல்- புத்தரும் வள்ளுவரும் செப்பியது ஒன்றே 3914, 16/5

வேதங்களில் எண் 17 ஒரு ரஹசிய எண் , 3919, 18/5

யார் உபதேசம், உபன்யாசம் செய்யலாம்? யார் செய்யக் கூடாது? 392219/5

தன மட்டும் உண்பவன் பாவி- ரிக்வேத மந்திரம் , 3926, 20/5

நிழல்  போலத் தொடரும்- புத்தரும் வள்ளுவரும் செப்பியது ஒன்றே-5,  3928, 21/5

மஹாபாரதம் உண்மையே – ஆண்களுக்கும் குழந்தை பிறக்கும் 3934, 23/5

குற்றம் கண்டுபிடிக்காதே – புத்தரும் வள்ளுவரும் செப்பியது ஒன்றே-6, 3938; 24/5

நண்பர்கள் பற்றி காளிதாசனும் வள்ளுவனும், 3941; 25/5

கர்ம வினை பற்றி புத்தரும் வள்ளுவரும் செப்பியது ஒன்றே-பகுதி -7, 3947; 27/5

புத்தரும் பிராமணர்களும்: இரண்டு சுவையான சம்பவங்கள் , 3949; 28/5

முப்பது வெற்றி வேற்கை பொன்மொழிகள் , 3952, 29/5

சங்க இலக்கியத்தில் வறட்சி – 3955, 30/5

பிராமணர்கள் – புத்தரும் வள்ளுவரும் செப்பியது ஒன்றே- 3958; 31/5

—Subham–

tags- May 2017 posts, Index 54

தங்கம் அழுதது ஏன்? (Post No.9319)

WRITTEN  BY KATTUKKUTY

Post No. 9319

Date uploaded in London – –     28 FEBRUARY  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

                                                          Kattukutty

( திரு முருக கிருபானந்த வாரியார் சொற்பொழிவில் கேட்டது)

படைப்புக் கடவுளாகிய பிரம தேவனிடம் உலோகத்திலேயே உயர்ந்த

பொருளாகிய தங்கம் அவர் காலடியில் விழுந்து கதறி அழுதது.

பிரம தேவர்,”எனதருமைத் தங்கமே, நீ ஏன் அழுகிறாய் ? உனக்கு என்ன துன்பம்?

உலகிலேயே எல்லாரும் உன்னைத்தானே அதிகம்

மதிக்கிறார்கள்? உன் அழுகைக்கு காரணம் என்ன?” என்று பரிவுடன் கேட்டார்.

தங்கம், “தந்தையே,என்னை எல்லோரும் போற்றுகின்றார்கள், ஏத்துகின்றார்கள்.

உயர்ந்த உள்ளத்தைக் கூறும்போது தங்கம் போன்ற

உள்ளம் என்று புகழ்கிறார்கள். பொற்கொல்லர்களால் தான்

எனக்கு வேதனை ஏற்படுகிறது” என்றது.

பிரம தேவர் : “தங்கமே, பொற்கொல்லர்கள் உன்னை சுத்தியலினால்

தட்டுகிறார்களே அதனால் உனக்கு துன்பமா?”

தங்கம் :  “அப்பா, பொற்கொல்லர்கள் தட்டுவதினால் எனக்கு துன்பம்

இல்லை……அவர்கள் தட்டுவதினால் தான் நான் தகடு ஆகி சுவாமிக்கு

கவசமாகி எல்லோராலேயும் வணங்கப் பெறுகிறேன்”

பிரம தேவர் :  “உன்னை உருக்குவதினால் உனக்கு துன்பமா?”

தங்கம் : “இல்லை , இல்லை உருக்குவதினால்தான் மாற்றுயர்ந்து, ஒளி பொருந்தி சுடரும்

பொன்போல் மிளிர்கின்றேன்”.

பிரம தேவர் : “ஓஹோ, பொற்கொல்லர்கள் சிறிய துளையிலிட்டு கம்பியாக இழுக்கிறார்களே

அதனால் துன்பமோ”?

தங்கம் : “இல்லையப்பா, பொற்கொல்லர்கள் கம்பியாக இழுப்பதினால்தான்

நான் மணிகளைக் கோர்க்க பயன்படுகிறேன்”.நல்லவர்களைப்

பார்த்து “தங்கக் கம்பி”, எனகிறார்கள். அதனால் எனக்கு புகழ் தான் ஏற்படுகிறது்”.

பிரம தேவர் : “என் அன்புள்ள தங்கமே,அழாதே பொற்கொல்லரகளால்

உனக்கு வேறு என்ன விளைகின்றது, விவரமாகக் கூறு”

தங்கம் :  “ என் பிதாவே, உயர்ந்த ஒருவனிடம் தாழ்ந்தவனைச் சேர்த்துப் பேசுவது

எத்துணை அநியாயம்?பாலுடன் காடி சேர்க்கலாமா? வைரத்துடன் கண்ணாடி துண்டை

சேர்க்கலாமா? பொற்கொல்லர்கள் மாற்றுயர்ந்த என்னை ஒரு தட்டிலிட்டு ஒரு

காசுக்கும் பெறாத குண்டு மணியை அல்லது சாதாரண பித்தளை எடையை இட்டு

தராசில் நிறுக்கிறர்களே? இதை விட எனக்கு வேறு அவமானம் உண்டா? இதனால் தான்

மனம்புண்பட்டு அழுகிறேன்”

இதோ அந்தப் பாடல்

“என்றும் உயர்ந்த எனை எங்குமுள பொற்கொல்லர்

குன்றிமணியுடனே கூட்டுகின்றார், நன்றியிதோ

தந்தையே, தந்தையே, என்றயன்பால் தங்கம்

சிந்தையே நொந்தழுததே” !!!

ஆதலால் உயர்ந்தோரை, தாழ்ந்தோருடன் ஒப்பிடுதல் கூடாது.

                                                                        ****

tags – தங்கம் அழுதது

ராகங்கள் கொண்ட துறைப் பாடல், திரைப்படப் பாடல்கள்! (Post 9318)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9318

Date uploaded in London – –28 FEBRUARY  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ராகங்கள் கொண்ட துறைப் பாடல், திரைப்படப் பாடல்கள்!

ச.நாகராஜன்

1

மாம்பழக்கவிச்சிங்க நாவலர் புகழ் பெற்ற கவிஞர். பழனியில் கி.பி. 1836ஆம் ஆண்டு முத்தையாசாரியாரின் மகனாகப் பிறந்த இவர் 1884ஆம் ஆண்டு சிவபதம் அடைந்தார். எந்தப் பொருளைக் கொடுத்தாலும் உடனுக்குடன் பாடுவதில் வல்லவர் இவர்.

அவர் ஒரு சமயம் வண்ட பொம்மைய நாயக்கர் என்னும் பெரு வள்ளலைச் சந்தித்தார்.

அவரிடம் ராகங்களால் அமைந்த ஒரு துறைக்கவி பாடலை உடனே பாடிக் காட்டினார்.

பாடல் இதோ:-

பூரிகன காம்பரியி னோடுபட மஞ்சரிகாம் போதி தோடி

யாரபிநா மக்கிரியை மோகனம நோகரிகல் யாணி தேசி

சீரியமு காரிமத்தி மாபதிஸ்திரீ ராகவகை தெரிதல் வேண்டுங்

கூரிய பன்னாட்டையுங் கைக்கொண்டவண்ட பொம்மேந்த்ர குணபூமானே

இதில் பூரி, கனகாம்பரி, மஞ்சரி, காம்போதி, தோடி, ஆரபி, நாமக்கிரியை, மோகனம், மனோகரி, கல்யாணி, தேஷ், முகாரி, மத்யமாவதி உள்ளிட்ட ராகங்களின் பெயர்கள் ஒரே பாடலில் இடம் பெற்றதைக் காணலாம்.

2

1958ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி தமிழகமெங்கும் திரையிடப்பட்டு மக்கள் மனதைக் கொள்ளை கொண்ட வெற்றிப் படம் சம்பூர்ண ராமாயணம். எம்.ஏ.வேணு தயாரித்த திரைப்படம் இது. கே.வி.மஹாதேவன் இசை அமைத்திருந்தார்.

அதில் ராவணனை அறிமுகப்படுத்தும் காட்சியே அமர்க்களமாக இருக்கும்.

இசையில் வல்லவனான ராவணனை அறிமுகப்படுத்தும் காட்சியில் பலரும் ராகங்களைப் பற்றிக் கேட்கும் ஒரு காட்சி இடம் பெற்றது.

‘நாரத முனிவர்க்கேற்ப நயம்பட உரைத்த நா’ என்று கம்பரால் புகழப்பட்ட ராவணன் வீணை வாசிப்பதில் வல்லவன். எல்லா ராகங்களிலும் தேர்ந்தவன். இசை நுணுக்கம் அறிந்தவன்.

சபையில் பலரும் ராகங்களைப் பற்றிக் கேட்க அதைப் பாடியே காண்பிக்கிறான் ராவணன்.

கவிஞர் ஏ. மருதகாசி அவர்கள் எழுதிய ‘சங்கீத சௌபாக்யமே என்றும் குன்றாத பெரும் பாக்யமே’ என்ற பாடல் மிகவும் புகழ் பெற்ற பாடலாக அமைந்து படத்திற்கு மெருகூட்டியது.

பல கேள்விகளுக்கும் ராவணன் அளித்த பதில்களில் இடம் பெறும் ராகங்கள் இவை:-

காலையில் பாடும் ராகம் பூபாளம்                                                                                          உச்சியில் பாடும் ராகம் சாரங்கா                                                                                                  மாலையில் பாடும் ராகம் வசந்தா                                                                                 இரக்கத்திற்கான ராகம் நீலாம்பரி                                                     மகிழ்ச்சிக்கான ராகம் தன்யாசி                                                        யுத்தத்திற்கான ராகம் கம்பீர நாட்டை                                                      வெண்பா பாட சங்கராபரணம்                                              அகவல் இசைக்க தோடி                                               தாழிசைக்கு கல்யாணி                                                                 இறுதியில் கயிலை நாதனைக் கானத்தால் கவர்ந்த ராகம் எது என்று மண்டோதரி கேட்க ராவணன் காம்போதி என்று பாடி முடிக்கிறான்.

3                                 

1965ஆம் ஆண்டு வெளியான படம் திருவிளையாடல். ஏ.பி.நாகராஜனின் இயக்கத்தில் வந்த இந்தப் படம் பெரு வெற்றியைப் பெற்றது. அதில் ஹேமநாத பாகவதாரக நடித்த டி.எஸ். பாலையா தன் இசைப் பெருமையை விளக்குவதாக ஒரு பாட்டு அமைந்திருந்தது. பாடலை இயற்றியவர் கவியரசர் கண்ணதாசன். பாடலைப் பாடியவர் பிரபல பாடகரான பாலமுரளிகிருஷ்ணா. இசை அமைத்தவர் கே.வி. மஹாதேவன்.

பாடல் இது தான்:-

ஒரு நாள் போதுமா
இன்றொரு நாள் போதுமா


நான் பாட இன்றொரு நாள்
போதுமா

நாதமா கீதமா
அதை நான் பாட இன்றொரு
நாள் போதுமா

புது ராகமா
சங்கீதமா அதை நான் பாட
இன்றொரு நாள் போதுமா



ராகமா சுக
ராகமா கானமா தேவ
கானமா ராகமா சுக
ராகமா கானமா தேவ
கானமா



என் கலைக்கிந்த
திரு நாடு சமமாகுமா என்
கலைக்கிந்த சிறு நாடு
சமமாகுமா நாதமா கீதமா
அதை நான் பாட இன்றொரு
நாள் போதுமா



குழல் என்றும் யாழ்
என்றும் சிலர் கூறுவார்
என் குரல் கேட்ட பின்னாலே
அவர் மாறுவார்

அழியாத கலை
என்று என்னை பாடுவார்


அழியாத
கலை என்று என்னை பாடுவார்


என்னை அறியாமல் எதிர்ப்போர்கள்
எழுந்தோடுவார்

என்னை அறியாமல்
எதிர்ப்போர்கள் எழுந்தோடுவார்



இசை கேட்க எழுந்தோடி
வருவார் அன்றோ எழுந்தோடி
வருவார் அன்றோ எழுந்தோடி
தோடி ஆஆ ஆஆ ஆஆ இசை
கேட்க எழுந்தோடி வருவார்
அன்றோ



எனக்கு இணையாக
தர்பாரில் எவரும் உண்டோ


தர்பாரில் எவரும் உண்டோ
தர்பாரில் ஆஆ

எனக்கு
இணையாக தர்பாரில்
எவரும் உண்டோ



கலையாத மோகன
சுவை நான் அன்றோ

மோகன
சுவை நான் அன்றோ மோகனம்
ஆஆ ஆஆ

கலையாத மோகன
சுவை நான் அன்றோ



கானடா ஆஆ
ஆஆ ஆஆ என் பாட்டு
தேன் அடா

இசை
தெய்வம் நான் அடா!

இந்தப் பாட்டில் தோடி, தர்பார், மோகனம், கானடா ஆகிய ராகங்களின் பெயர்கள் (இருபொருள் பட) இடத்திற்கேற்ற படி வருவதையும் அந்த ராகங்களிலேயே அவை இசைக்கப்படுவதையும் மக்கள் பெரிதும் ரசித்தனர்.

இப்படி ராகப் பாடல்கள் பல உண்டு.

அனைவரையும் மகிழ்விக்கும் இசை இப்படி புது விதத்தில் தரப்படும் போது ஏற்படுவது, இரட்டிப்பு மகிழ்ச்சி அல்லவா?!

***

tags- ராகங்கள்