Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Food shortage – What is it? Honesty, What is it?
Recently, a worldwide survey was conducted and the only question asked was: “Would you please give your honest opinion about the solution to the food shortage in the rest of the world?”
The survey was, not surprisingly, a huge failure. Because:
In Africa they didn’t know what “food” meant.
In Eastern Europe they didn’t know what “honest” meant.
In Western Europe they didn’t know what “shortage” meant.
In China they didn’t know what “opinion” meant.
In the Middle East they didn’t know what “solution” meant.
In South America they didn’t know what “please” meant.
And, in the USA they didn’t know what “the rest of the world” meant.
Xxxx
Punishment for Englishmen
There have been many definitions of hell, but for the English the best definition is that it is the place where the Germans are the police, the Swedish are the comedians, the Italians are the defense force, Frenchmen dig the roads, the Belgians are the pop singers, the Spanish run the railways, the Turks cook the food, the Irish are the waiters, the Greeks run the government, and the common language is Dutch. – – – David Frost and Anthony Jay
Xxx
Politicians are the same all over. They promise to build a bridge even where there is no river.
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
நடந்தவை தான் நம்புங்கள் – 4 வெளியான தேதி : 25-1-2021; கட்டுரை எண் : 9184
நடந்தவை தான் நம்புங்கள் – 5
ச.நாகராஜன்
1
சமீபத்தில் உலகெங்கும் ஒரு பிரம்மாண்டமான சர்வே எடுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அது எதிர்பார்த்தபடியே மாபெரும் தோல்வியை அடைந்தது. அப்படி என்ன சர்வே என்கிறீர்களா? சர்வேயில் இருந்த கேள்வி ஒன்றே ஒன்று தான். அது இது தான்:- தயவுசெய்து நீங்கள் உலகின் மற்ற பகுதிகளில் உள்ள உணவு பற்றாக்குறைக்கான தீர்வு பற்றிய உங்கள் நேர்மையான கருத்தைத் தருகிறீர்களா?
ஏன் இந்த சர்வே உலகெங்கும் தோல்வி அடைந்தது? காரணம் இது தான்:
ஆப்பிரிக்காவில் அவர்களுக்கு “உணவு” என்றால் என்ன என்று தெரியவில்லை.
கிழக்கு ஐரோப்பாவில் அவர்களுக்கு “நேர்மையான” என்றால் என்ன என்று தெரியவில்லை.
மேற்கு ஐரோப்பாவில் அவர்களுக்கு “பற்றாக்குறை” என்றால் என்ன என்று தெரியவில்லை.
சீனாவில் அவர்களுக்கு “கருத்து” என்றால் என்ன என்று தெரியவில்லை.
மத்திய கிழக்கில் அவர்களுக்கு “தீர்வு” என்றால் என்ன என்று தெரியவில்லை.
தென்னமெரிக்காவில் அவர்களுக்கு “தயவுசெய்து” என்றால் என்ன என்று தெரியவில்லை.
அமெரிக்காவில் அவர்களுக்கு “உலகின் மற்ற பகுதிகள்” என்றால் என்ன என்று தெரியவில்லை.
ஆக மொத்தம், சர்வே மாபெரும் தோல்வியை அடைந்தது.
2
சோவியத் யூனியனின் செல்வாக்கு மிக்க தலைவராகவும் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளராகவும் (1953 முதல் 1964 முடிய) நிகிதா குருஷேவ் (பிறப்பு 15-4-1894 மறைவு 11-9-1971) இருந்த போது அவரிடம் அரசியல்வாதிகள் பற்றிய கருத்து கேட்கப்பட்டது. தயங்காமல் உடனே தன் பதிலை அவர் கூறினார். பதில் இது தான்:-
அரசியல்வாதிகள் உலகெங்கும் ஒரே மாதிரி தான். அவர்கள் நதியே இல்லாத இடத்தில் கூட பாலம் கட்டித் தருவதாக சத்தியம் செய்து கூறுவார்கள்.
3
ஆங்கிலேயர்களை எப்படித் தான் தண்டிப்பது என்பது யாருக்கும் புரியவில்லை. இதற்கு முடிவு கட்ட நினைத்த டேவிட் ஃப்ராஸ்டும் அந்தோணி ஜேயும் இப்படிக் கூறினார்கள் : “நரகம் பற்றிய ஏராளமான வரையறுப்புகள் உள்ளன. ஆனால் நரகம் பற்றிய ஆங்கிலேயர்களுக்கான அருமையான விளக்கம் இது தான் : அங்கே ஜெர்மானியர்கள் தான் போலீஸ். ஸ்வீடன் நாட்டுக்காரர்கள் தான் காமெடியன்கள். இத்தாலியர்கள் தான் பாதுகாப்பு ராணுவம். பிரெஞ்சுக்காரகள் தான் அங்கே சாலையைத் தோண்டுவர். பெல்ஜியக்காரர்கள் தான் அங்கே பாப் பாடல்களைப் பாடுவார்கள். ஸ்பானியர்கள் தான் ரயிலை இயக்குவார்கள். துருக்கியர்கள் தான் உணவைச் சமைப்பார்கள். அயர்லாந்துக்காரர்கள் தான் உணவைப் பரிமாறுவார்கள். கிரேக்கர்கள் அரசை நிர்வகிப்பார்கள். பொதுமொழியோ அங்கு டச்சு மொழி!”
WE HAVE LAUNCHED A HINDU BROADCAST IN AUGUST 2020 AND IT IS GOING WELL ON MONDAYS VIA ZOOM AND FACEBOOK.
LATER WE HAVE EXTENDED IT TO ONE MORE DAY, ON SUNDAYS TO SPREAD TAMIL CULTURE.
BOTH OUR BROADCASTS ARE NON- POLITICAL AND NON -COMMERCIAL.
WE DON’T ADVOCATE OR SUPPORT ANY VIOLENCE IN ANY FIELD.
IT IS APPROXIMATELY ONE HOUR BROADCAST FROM LONDON.
TIME OF BROADCAST- ONE PM, LONDON TIME—— 6-30 PM INDIAN TIME
DAYS- MONDAYS AND SUNDAYS
MONDAYS FOR HINDUISM (UNDER GNANAMAYAM AND GNANA SUDAR)
SUNDAYS FOR TAMIL CULTURE & LANGUAGE (UNDER THAMIZ MUZAKKAM/ TAMIL THUNDER)
(After Pongal 2021, we do Tamil and Hinduism on both days)
XXX
WHO IS THE PRODUCER?
LONDON SWAMINATHAN IS PRODUCING IT ON BEHALF OF ‘GNANAMAYAM’ , LONDON.
(FORMER BBC BROADCASTER, SENIOR SUB EDITOR, DINAMANI, FORMER TAMIL TUTOR, UNIVERSITY OF LONDON; 3 JOBS FROM 1971- 2014; NOW BLOGGER AND NEWS EDITOR, GNANAMAYAM CHANNEL)
SRI KALYANA SUNDARA SIVACHARYAR OF WORLD HINDU MAHASANGAM
IS ANOTHER PRODUCER
AND MRS SUJATHA RENGANATHAN AND MRS VAISHNAVI ANAND ARE CO-PRODUCERS FOR OUR PROGRAMMES
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
சுமேரியாவும் பிராமணர்களும் – Z IGGURAT ஜிக்குராட் மர்மம் !
சுமேரியா என்றால் என்ன?
இராக் நாட்டின் ஒரு பகுதி. டைக்ரிஸ் – யூப்ரடீஸ் என்ற நதிகளின் சமவெளிப் பகுதி.
ஜிக்குராட் ZIGGURAT என்றால் என்ன?
படிப்படியாக அமைந்த சதுர கோபுரம். இந்துக் கோவில் போல இருக்கும்; ஆனால் படிப்படியாக – அதாவது கட்டம் கட்டம் ஆக சிறுத்துக் கொண்டே போகும் . இந்துக் கோவில் முக்கோணம் போல உயரும். ZIGGURAT சிக்குராட் சதுரம், குட்டி சதுரம், குட்டி குட்டி சதுரம் என உயரும் .
இதற்கும் பிராமணர்களுக்கும் என்ன தொடர்பு?
பிராமணர்கள் நாள் தோறும் மூன்று முறை சூரியனை நோக்கி காயத்ரி மந்திரம் சொல்லுவார்கள். அந்த மந்திரம் நாலு வேதத்திலும் உள்ளது. உலகில் 8000 ஆண்டுகளாக பிராமணர்கள் சொல்லும், செய்யும் அற்புதம் இது. ஹெர்மன் ஜாகோபியும், பால கங்காதர திலகரும் ரிக் வேத காலத்தை ‘கி.மு. 6000 வரை’ என்று வான சாஸ்திர வழியில்- அடிப்படையில் நிரூபித்துள்ளனர். தள்ளிப்போன , தகிடுதத்தப் பேர்வழி மாக்ஸ்முல்லர் குத்து மதிப்பாக கி.மு 1200 என்று சொல்லிவிட்டு, பின்னர் வில்சன், விண்டர்நிட்ஸ் முதலிய அறிஞர்கள் கொடுத்த அடியில் அசந்து போய், ரிக்வேதம் கி.மு 1500 அல்லது அதற்கும் முன்னதாக இருக்கலாம்; எவரும் அதன் காலத்தைக் கணிக்க முடியாது என்று சொல்லி ‘ஜகா’ வாங்கினார்.
அப்பேற்பட்ட பெருமை மிகு ரிக்வேத மந்திரத்தில் ZIGGURAT சிக்குராட் வருகிறது.
XXX
ZIGGURAT சிக்குராட் – சிகரம் ஏன் கட்டினார்கள்?
இந்த சதுர கோபுரம் பற்றி பைபிள் முதல் ஹெரோடோட்டஸ் (HERODOTUS) வரை பலரும் பல சுவையான விஷயங்களை நமக்கு விட்டுச் சென்றனர். பைபிளின் முதல்(GENESIS) அதிகாரத்தில் பேபல் கோபுரக் (TOWER OF BABEL) கதை வருகிறது. சொர்கத்துக்குப் போக மக்கள் செங்கல், சுண்ணாம்பு கொண்டு கோபுரம் அமைக்க முயன்றதால், கடவுளுக்கு கோபம் வந்தது. அவர்கள் நீங்கள் எல்லோரும் பல மொழிகளைப்ப பேசுவோராகி உலகெங்கும் ஓடிப்போங்கள் என்று சபித்துவிட்டார். இந்தக் கதையில் வரும் கோபுரம் சதுர சிக்குராட் கோபுரம். அது அழிந்து போகவே பின்னர் நெபொ போலசார் மகன் நெபுகட்னேஸார் ஒரு கோபுரம் கட்டினார்.
இதுதவிர சிக்குராட் பல கட்டப்பட்டு அவற்றினுச்சசியில் — சிகரத்தில் இறைவன் சிலைகள் வைக்கப்பட்டன. நாம் குன்றுதோறும் ஆடிவரும் குமரனை வழிபடுவது போல, பக்தர்கள் படி ஏறிச் சென்று கடவுளை வழிபட்டனர் .
இந்த ஜிக்குராட் ZIGGURAT= SIKHARA என்பது சிகரம் என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லின் சிதைவு ஆகும். ஐயர் தலையிலுள்ள சிகா – சிகை — என்னும் குடுமியும் இதே பொருளுடைத்தே !
ஹெரோடோட்டஸ் (HERODOTUS) என்னும் அறிஞர் சொன்ன விஷயத்துக்கு முன்னர், சுவையான பிராமண விஷயத்தைச் சொல்லிவிடுகிறேன் . பிராமணர்கள் தினமும் ‘காணாமல், கோணாமல், கண்டு’ — என்ற வகையில் மூன்று முறை சூரியனைத் தொழுவர். சூரியனைக் ‘காணாமல்’ – அதாவது சூர்யோதயத்துக்கு முன்னால் – நடுப்பகலில் – நிழல் ‘கோணாத’ நேரத்தில் – ‘கோணாமல்’ ஒரு முறை தொழுகை நடத்துவர். மாலையில் ‘கண்டு’- அதாவது சூரியன் மலைவாயில் விழுந்து மறைவதற்கு முன்னர் அவனைக் ‘கண்டு’ ஒரு முறை தொழுகை நடத்துவர். இது தவிர சமிதா தானம் (பிரம்மச்சாரிகளுக்கு), ஒளபாசனம் முதலிய தீ / அக்னீ சடங்குகள் தனி.
பிராமணர்கள் உலக மஹா அதிசயங்கள்! ஏனெனில் இன்றும் 8000 வருஷமாக ஒரு சடங்கைச் செய்யும் அதிசயங்கள். அது மட்டுமல்ல; அதை வாய் மொழியாகவே பரப்பிவரும் மஹா அதிசயங்கள்!!! அவர்கள் மூன்று முறையும் சூரிய வெளிச்சத்தில் நின்று கொண்டு காயத்ரியை – தேவியை — இருதயத்துக்குள் அமர்த்துவர்- அதாவது ‘ஆவாஹனம்’ செய்வார்கள் . அது எப்படி?
கைகளை மூன்று முறை உடப்பக்கமாக காட்டி (INVOKING) வருக, வருக , வருக என்று மூன்று முறை அழைப்பர். நாம் சினிமா வசனங்களில் கேட்கும் ‘அலை மகள், கலை மகள் , மலை மகளை’ காயத்ரீம் ஆவாஹயாமி , ஸாவித்ரீம் ஆவாஹயாமி, ஸரஸ்வதீம் ஆவாஹயாமி என்று அழைப்பர்.
இதில் சுவையான விஷயம் என்ன தெரியுமா?
அவள் Z ஜிக்குராட்டில் இருந்து — மேரு மலை ‘சிகரத்’தின் உச்சசியில் இருந்து வந்து பிராமணர் இதயத்துக்குள் அமர்வாள் ; பிராமணர்கள் தொழுகை முடித்தவுடன் அவளை திருப்பி அனுப்பும் மந்திரத்தில் ‘Z ஜிக்குராட்’ வருகிறது
தாயே! ரொம்ப THANKS தாங்க்ஸ் . திருப்பியும் சிகர உச்சிக்கே போய் விடு என்று GOOD BYE ‘குட் பை’ சொல்லுவார்கள்.
“உத்தமே சிகரே தேவி பூம்யாம் பர்வத மூர்தனி
பிராம்மணோ ஹ்யணுக்ஞானம்
கச்ச தேவி யதா சுகம்”
என்ற மந்திரத்தைச் சொல்லி வழி அனுப்புவார்கள்.
மந்திரத்தின் பொருள்
“பிரகாசிக்கின்ற காயத்ரீ தேவியே, பூமியில் பிரம்மோபாசனம் செய்கின்ற எங்களுக்கு அனுக்கிரகத்தைச் செய்து , ‘மேரு மலை உச்சியில் உத்தமமான சிகர’த்திலுள்ள உனது ஆலயத்தில் ஆனந்தமாய் எழுந்தருள்வாய் “.
அவள் கடவுள் தானே !
பில்லியன் பிராமணர்கள் ட்ரில்லியன் தடவை கூப்பிட்டாலும் அலுப்பு சலிப்பில்லாமல் ஜிக்குராட் / சிகரத்தில் இருந்து இறங்கி வந்து இதயத்துள் அமர்ந்து அருள் புரியும் அற்புதமே அற்புதம் !!
ஹெரோடோடஸ் என்ற கிரேக்க அறிஞர் 2600 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தார். அவர் பல விஷயங்களை எழுதியதில் Z க்குராட் விஷயமும் வருகிறது எட்டு அடுக்கு கோபுரம் பற்றி வருணிக்கையில் போகப் போக சதுரங்கள் சிறுத்துக் கொண்டே போவதாக எழுதியுள்ளார்.
இந்த சதுர கோபுரம் வானவியல் ஆராய்ச்சிக்கும் பயன்பட்டதாம். இந்துக்களைப் போலவே சுமேரியர்களும் நாள், நட்சத்திரம் பார்த்து விழா க்களைக் கொண்டாடினர்.
என்னுடைய முந்தைய கட்டுரைகளில் சுமேரியாவில் நம்மவர்கள் குடியேறியதைக் காட்டும் 30 சிந்து – ஸரஸ்வதி நதி தீர முத்திரைகள், தேக்கு மரத்துண்டுகள், சம்ஸ்க்ருத மன்னர் பெயர்கள் பற்றி எழுதியுள் ளேன் . சுமேரிய மன்னர்கள் பட்டியல் சுமார் 4500 ஆண்டுகள் பழமையானது
நரம் சின் NARAM SIN , அமர் சின் AMAR SIN முதலிய பெயர்கள் நமக்கு நர சிம்மன் / நர சந்திரன் , அமர சிம்மன்/ அமர சேனன், அமர சந்திரன் முதலிய பெயர்களை நினைவு படுத்தும் . மேல் விவரங்களை 20, 30 தமிழ் ஆங்கிலக் கட்டுரைகளில் தந்து விட்டேன் ; கண்டு கொள்க .
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஹிந்துக்களின் எண்ணிக்கை! – 6
ச.நாகராஜன்
9. இந்தியா:
இந்தியர்கள் பழங்காலத்திலேயே ஹிந்துக்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளனர். இந்த இரண்டு வார்த்தைகளும் ஒரே அர்த்தத்தைத் தருபவையே. என்ற போதிலும் இந்தியாவின் பெரும் பகுதி இஸ்லாமியர்ன் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது; பின்னர் போர்த்துகீசியர், பிரெஞ்சுக்காரர்கள், டச்சுக்காரர்கள், மற்றும் ஆங்கிலேயர் ஆகியோரது ஆளுகைக்கு உட்பட்டது. லட்சக்கணக்கான ஹிந்துக்கள் இஸ்லாமுக்கும் கிறிஸ்தவத்திற்கும் மதம் மாற்றப்பட்டனர். 1947ஆம் ஆண்டு முடிய இந்திய ஜனத்தொகையில் சுமார் 25% இஸ்லாமுக்கும் 1.5% கிறிஸ்தவத்திற்கும் மாற்றப்பட்டனர். ஹிந்துக்கள் இதர மதங்களுக்கு மாற்றப்பட்ட போது அவர்களோ மற்றவர்களை மதம் மாற்றி ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டனர். இப்படியாக, இந்திய முஸ்லீம்கள் மற்றும் இந்திய கிறிஸ்தவர்கள் ஹிந்து மற்றும் புத்த மதத்தைச் சேர்ந்தவர்களையே தங்கள் முன்னோராகக் கொண்டிருந்தனர். ஹிந்துக்கள் இஸ்லாமுக்கும் கிறிஸ்தவத்திற்கும் மதம் மாறியதற்கு கீழே உள்ள காரணங்களைச் சொல்லலாம்:
ஹிந்து மதத்தின் ஜாதி முறை:
ஹிந்து சமூகத்தின் அமைப்பு சில சமூகங்களை/ ஜாதிகளைக் கொண்டிருந்தது உலகியல் சார்ந்த விஷயங்களில் தீவிரமான குறைபாட்டைத் தந்தது. இஸ்லாமும் கிறிஸ்தவமும் இந்த சமூகங்களுக்கு சமூகத்தில் சம அந்தஸ்தைத் தந்தது. ஆகவே கீழ் ஜாதி ஹிந்துக்களும் பழங்குடியினரும் தங்களது பழைய நம்பிக்கைகளை விட்டனர். உதாரணமாக, (இப்போது பாகிஸ்தானில் உள்ள) பெஹாவல்பூரைச் சேர்ந்த, சமூக ரீதியில் கீழாக இருந்த லோஹானா ராஜபுத்திரர்கள் முஸ்லீம் சூபி பரிதால் இஸ்லாமுக்கு மாற சில சலுகைகளைத் தந்த போது, இஸ்லாமுக்கு மாற்றப்பட்டனர். கிறிஸ்தவர்களில் சுமார் 80%, கீழ் ஜாதி பழங்குடியினர் ஆவர்.
1. இங்கு ஒரு விஷயம் குறிப்பிடத்தகுந்த ஒன்று – தேச பிரிவினை ஏற்பட்டு பஞ்சாப் பிரிக்கப்பட்டு பாகிஸ்தான் ஏற்படுத்தப்பட்டவுடன் 10000க்கும் மேற்பட்ட (துப்புரவுத் தொழிலாளர்கள்) மெஹ்தார்கள் தங்கள் தர்மத்தைக் காத்துக் கொள்ளவும் தங்கள் பெண்களின் கௌரவத்தைக் காக்கவும் இந்தியாவிற்கு பத்திரமாக வந்து சேர்ந்தனர். துரதிர்ஷ்டவசமாகஅவர்கள் திருப்பித் திருப்பி வேண்டிய கோரிக்கைகளுக்கு நேரு செவி சாய்க்கவில்லை. இஸ்லாமிற்கு மாற்றப்படுகையில், அவர்களது பெண்மணிகள் தங்கள் தர்மத்தைக் காக்கவும் தங்களது சொந்த நம்பிக்கைகளில் ஊன்றி நிற்கவும்
எதிர்மறை விளைவுகளைத் தொடர்ந்து பொறுத்து வந்தனர். அவர்கள் திருப்பித் திருப்பி வைத்த கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்ட போது கிறிஸ்தவ மிஷனரிகள் முன் வந்து குறுக்கிட்டு, தங்களது உதவிக்கரங்களை நீட்டினர். இதுவே காலகிரமத்தில் கொடுமைக்குள்ளாக்கப்பட்ட மெஹ்தார் ஜனத்தொகை கிறிஸ்தவத்திற்கு மாற்றப்பட்டதில் முடிந்தது. பாகிஸ்தானில் உள்ள ஹிந்துக்கள் படும் அவலமும் துயரங்களும் ஒருபோதும் உணரப்பட்டதில்லை. பாரதத்தை வந்து அடைந்த பின்னரும் சமூக ரீதியாக, தாங்கள் துப்புரவுத் தொழிலாளர்களாகவே தான் நடத்தப்படுவர் என்பதை மெஹ்தார் மக்கள் நன்கு அறிவர். ஆனால் தொடர்ந்து தங்கள் தர்மத்தைக் காப்பாற்றும் முயற்சியில் அப்போது ஆண்டு வந்த போலி செக்குலர்வாதிகளான (ஹிந்து விரோத) அரசினால் இறுதியாக அவர்கள் புறக்கணிக்கப்பட்ட போது தோல்வி அடைந்தனர்.
ஆதாரம், நன்றி : Truth Vol 88 No 21 dated 11-12-2020
{Critical Podium Dewanand writes on March, 25,2009 under the caption ‘Preserving Hinduisam – Sanatan Dharma’ – Preserving Hinduism as a world Religion down the ages. Hindus around the World, as follows (http://www.shopumust.com/hindus) }
இதன் ஆங்கில மூலம் கீழே தரப்படுகிறது:
Preserving Hinduism – Sanatan Dharma
9. India:
Indians were referred to as ‘Hindus’ in ancient times and the two terms were fairly synonymous. However, large parts of the country passed under Islamic rule and subsequently under Portuguese, French, Dutch and British rule. Millions of Hindus were converted to Islam and Christianity till; by 1947 C.E. approximately 25% and 1.5% of the population of the Indian Subcontinent had converted to Islam and Christianity respectively. While Hindus converted to other religions, they themselves refused to accept any converts. Thus, most indigenous Muslims(26) and Christians are descended from Hindu and Buddhist Indian ancestors. We may summarize the following causes for the conversion of Hindus to Islam and Christianity:
a. Hindu Caste System:
The social structure of the Hindu society put some communities/castes at a severe disadvantage in all temporal matters. Islam and Christianity offered these communities social equality and so several Low Caste Hindus and tribals left their ancestral beliefs. For instance, the socially inferior Lohana Rajputs of Bahawalpur (now in Pakistan) converted to Islam when the Muslim Sufi Farid offered them sops for converting to Islam. About 80% Christians in India have Low Caste or Tribal origins.
[1. It deserves mention that after the partition of Punjab and creation of Pakistan, more than 10,000 Mehtars (Sanitary Workers) sought safe passage to India to save their Dharma and honour of their women. Unfortunately Nehru lent a deaf air to their repeated prayers. Their women continued to bear the brunt of the rabid proselytising Moslems, to protect their Dharma and continued to remain anchored to their moorings. After their repeated appeals were ignored, Christian Missionaries came forward and extended their helpful hands to intervene. This ultimately resulted in the conversion of the tormented Mehtar population to Christianity over years. The woes and sorrows of those Hindus in Pakistan was never recognised. The Mehtars knew that socially they will continue to remain sweepers only after reaching Bharat, but failed in their persistent effort to save their Dharma till being finally ignored by the then ruling pseudo-secular (anti-Hindu) ruling dispensation.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
பிப்ரவரி 2021 காலண்டர்
பண்டிகை நாட்கள் -பிப்ரவரி .11- தை அம்மாவாசை ; 14- காதலர் தினம் ; 16- வசந்த பஞ்சமி ; 19 -ரத சப்தமி , சிவாஜி ஐயந்தி ; 27- மாசி மகம் , கேரளத்தில் ஆட்டுக்கல் பொங்கல் விழா , குரு ரவிதாஸ் ஜயந்தி
மடியில் தலை வைத்து உறங்குவோரை வீழ்த்துவது ஆண்மையா – ஹிதோபதேசம்
அங்கமாருஹ்ய ஸுப் தானா ம் வதே கிம் நாம பவுருஷம்
XXX
பிப்ரவரி 11 வியாழக் கிழமை
என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை
முன்நின்று கல்நின் றவர். ( திருக்குறள் – 771)
பகைவரே! என் தலைவனின் முன்னே எதிர்த்து வந்து நில்லாதீர்; அவன் முன்னர் எதிர்த்து வந்து நின்று, களத்தில் வீழ்ந்துபட்டு, நடுகற்களாக (HERO STONES FOR DEAD SOLDIERS) நிற்பவர் மிகப் பலர்
XXXX
பிப்ரவரி 12 வெள்ளிக் கிழமை
விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்
வைக்கும்தன் நாளை எடுத்து. (திருக்குறள் – 776)
கழிந்து போன தன் வாழ்நாட்களைக் கணக்கிட்டுப் பார்த்து, விழுப்புண் படாத நாட்களை எல்லாம், தான் தவறவிட்ட நாட்களுள் சேர்ப்பவனே வீரனாவான்
XXXX
பிப்ரவரி 13 சனிக் கிழமை
இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே
பிழைத்தது ஒறுக்கிற் பவர். ( திருக்குறள் – 779)
தாம் உரைத்த சூளுரையிலிருந்து தப்பாமல் போரினைச் செய்து, சாகிற வீரரை, சூளுரை பிழைத்ததற்காக யாரும் தண்டிக்கமாட்டார்கள்
XXX
பிப்ரவரி 14 ஞாயிற்றுக் கிழமை
புஜே வீ ர்யம் நிவசதி ந வாசி – சம்ஸ்க்ருத பழமொழி
வாய்ச் சொல்லில் வீரம் இல்லை; புஜ பலத்தில் இருக்கிறது.
XXX
பிப்ரவரி 15 திங்கட்கிழமை
பிரதாப சஹாயா ஹி சத்வவன்தஹ- சம்ஸ்க்ருத பழமொழி
விரமுள்ளவனுக்கு ஆண்மையே துணை
XXX
பிப்ரவரி 16 செவ்வாய்க் கிழமை
புவு ருஷேன வினா மூல்யம் புருஷஸ்ய எ கிஞ்சன
வீரமில்லாதவனுக்கு மதிப்பு எதுவுமில்லை – கஹா வத் ரத்னாகர்
மரம் பொய் சொல்வதில்லை,வெட்டுகிறோம்;மந்திரி பொய் சொல்கிறார், மாலை போடுகிறோம்!(Post No.9200)
Compiled BY KATTUKKUTY
Post No. 9200
Date uploaded in London – – 29 January 2021
Contact – swami_48@yahoo.com Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures. tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஞான மொழிகள் -20
BY Kattukutty
உண்மை நிலை உணர்வு+கனவுகள்= லட்சியவாதி உண்மை நிலை உணர்வு-கனவுகள்=மிருகம் உண்மை நிலை உணர்வு+நகைச்சுவை=யதார்த்தவாதி கனவுகள்-நகைச்சுவை= வெறியன் உண்மை நிலை உணர்வு+கனவுகள்+நகைச்சுவை=அறிஞன்
லட்சிய உலகம்எப்படி இருக்க வேண்டும்என்று கனவு காண்கின்ற சக்தி இருக்க வேண்டும். உண்மையில் உலகம் எப்படி இருக்கின்றது என்பதைக் காண்கின்ற தெளிவு வேண்டும். இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை காழ்ப்புணர்ச்சி இல்லாமல் புன்னகையோடு ஏற்றுகொள்கிற மனப்பக்குவம் யாருக்கு இருக்கிறதோ அவனே அறிஞன். XXXX
அதோ நிற்கிறாரே,என் உறவுக்காரர்களிலேயே பரம ஏழை….. அவர் உங்களுக்கு என்ன உறவு??? என் கணவர் !!!
XXXX
மண் பொய் சொல்வதில்லை மிதிக்கிறோம் மரம் பொய் சொல்வதில்லை வெட்டுகிறோம் மந்திரி பொய் சொல்கிறார் மாலை போடுகிறோம்
XXXX
வினோத சட்டம் 1779 -ல் ஒரு வினோதமான சட்டம் பிரிட்டனில் இயற்றப்பட்டது. அதன்படி ஒரு பெண் சென்ட், அழகு சாதனங்கள், பொய்ப்பல், குதிகால் உயர்ந்த பாத அணி ஆகியவற்றை தரித்து ஆண்களை மயக்கி மணந்து கொள்ளக் கூடாது…… இந்த சட்டம் இன்றுவரை ரத்து செய்யப்படவில்லையாம்!!! XXXX
ஒருத்தி- ஆற்றுக்கு மீன் பிடிக்கச் சென்றாரே உன் கணவர் என்ன பிடித்து வந்தார்??? மற்றொருத்தி – ஜல தோஷம் பிடித்து வந்தார்………. XXXX
உண்மை செருப்பைப் போட்டுக் கொண்டு கிளம்புமுன், பொய் உலகை பாதி சுற்றி வந்து விடுகிறது !!! ஜேம்ஸ் கல்லகன் XXXX
ஒரு அனுபவ பழமொழி இருட்டில் வருவதெல்லாம் பேயல்ல.உங்கள் மனைவியாகக் கூட இருக்கலாம்……….. XXXX
ஒரு நல்ல வாக்கியம் இப்படி சிதைந்து கிடக்கிறது……. வால். ஒரு நயம். லக்கி அது என்ன வாக்கியம்??? விடை- “ஒரு நல்ல வாக்கியம்” XXX
மோசமான கை எழுத்துக்கு மற்றொரு பெயர் “ டாக்டர்களின் வியாதி”!!!! XXXX