ஒளிவட்ட(AURA) உண்மைகள்! (Post No.9189)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9189

Date uploaded in London – –26 January  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

திங்கள் தோறும் லண்டனிலிருந்து இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 25-1-2021 அன்று ஒளிபரப்பப்பட்ட உரை இது. இதை யூடியூப் மற்றும் facebook.com/gnanamayam தொடுப்பில் எந்த நாளும், எந்த நேரமும் காணலாம்!

ஒளிவட்ட உண்மைகள்!

ச.நாகராஜன்

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே சந்தானம் நாகராஜன் வணக்கம். இன்று AURA எனப்படும் ஒளிவட்டம் பற்றிய உண்மைகளைப் பற்றிப் பார்ப்போம்.

ஒவ்வொரு மனிதனைச் சுற்றியும் ஒரு ஒளிவட்டம் -அவ்ரா – AURA-  உள்ளது. இது பழங்காலம் தொட்டே இருந்து வரும் ஒரு நம்பிக்கை. எல்லா மதத்தினரும் இதை ஏற்றுக் கொண்டுள்ளனர்.

அனைத்து மத ஸ்தாபகர்கள், மகான்கள், ஞானிகள், பெரியோர்கள் ஆகியோரின் உருவங்களைச் சுற்றி ஒரு ஜோதி வட்டம் எல்லாப் படங்களிலும் போடப்பட்டிருப்பதே இதற்கான சான்று!

அவ்ராவை – ஒளி வட்டத்தை – மனித உடலிலிருந்து உடலைச் சுற்றிலும் நிரந்தரமாக வரும் ஒளிவீச்சு (Permanent Radiation from Human Body) என்று விவரிக்கின்றனர்.

இது நான்கு விதமாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. 1. நிம்பஸ் (Nimbus) 2. ஹாலோ (Halo) 3. அரோலா (Aureola 4)  க்ளோரி (Glory).

நிம்பஸும் ஹாலோவும் தலையிலிருந்து வருபவை.அரோலா முழு உடலிலிருந்தும் வருவது. க்ளோரி தலை மற்றும் உடலிலிருந்து வருவது ஆகும்.

பிரம்மஞானசபையை – Theosophical Society-ஐச் சேர்ந்தோர் இதை ஐந்தாகப் பிரிக்கின்றனர் இப்படி: 1. ஆரோக்கிய ஒளிவட்டம் (Health Aura) 2. முக்கிய ஒளிவட்டம் (Vital Aura) 3. கர்ம ஒளிவட்டம் (Karmic Aura) 4. குணாதிசய ஒளிவட்டம் (The Aura of Character) 5. ஆன்மீக ஒளிவட்டம் (The Aura of Spritual Nature)

 எல்லா ஒளிவட்டங்களிலும் வண்ணங்கள் பல காணப்படுகின்றன.

இந்த வண்ணங்களை வைத்துக் குறிப்பிட்ட மனிதனின் குணாதிசயங்களைக் கண்டுபிடிப்பதோடு அவன் உடலில் ஏற்பட்டுள்ள வியாதிகளையும் கூற முடியும்!

பிரகாசமான சிவப்பு நிறம் கோபம் மற்றும் வன்மையைக் குறிக்கிறது. மங்கலான சிவப்பு நிறம் காமம் மற்றும் அடங்கா இச்சையைக் குறிக்கிறது. பழுப்பு நிறம் பேராசையையும் ரோஸ் நிறம் அன்பையும், மஞ்சள் நிறம் மிக உயரிய அறிவுத் திறனையும், இளஞ்சிவப்பு ஆன்மீகத்தையும் பச்சை ஏமாற்றுதல், பொறாமை ஆகியவற்றையும் அடர்த்தியான பச்சை இரக்கத்தையும் குறிக்கின்றன.கருமை ஒளிவட்டம் எதிர்பாராத மரணம் சம்பவிப்பதைச் சுட்டிக் காட்டுகிறது.

ஒளிவட்டம் உண்மையே என்று அறிவியல் பூர்வமாக முதலில் கண்ட விஞ்ஞானி டாக்டர் வால்டர் ஜே. கில்னர் (Walter J.Kilner) ஆவார். இவர் 1847இல் பிறந்தார். 1920ஆம் ஆண்டு மறைந்தார். லண்டன் செயிண்ட் தாமஸ் மருத்துவ மனையில் மருத்துவராக இவர் பணி புரிந்தார்.

‘Thr Human Aura’ என்ற இவரது நூல் மிகவும் பிரசித்தி பெற்ற நூல். ஏராளமான பரிசோதனை ஆய்வுகளின் முடிவுகளை விளக்கமாகக் கூறும் நூல் இது.

1908ஆம் ஆண்டே மனித ஒளிவட்டம் பற்றிய கருத்து கில்னரின் மனத்தில் ஊன்றி விட்டது. கோல்தர் டை எனப்படும் டிக்யானினை (Coal Tar dye – Dicyanin)

வைத்து அவர் ஒளிவட்டத்தைக் காண வகை செய்தார். நூற்றுக்கணக்கான சோதனைகளைப் பொறுமையாக நடத்திய பின்பே 1911ஆம் ஆண்டில் தாம் கண்ட ஆய்வு முடிவுகளை ‘The Human atmosphere’ என்ற நூலாக எழுதி வெளியிட்டார். ஒளிவட்டம் காணும் முறையை இதில் அவர் விளக்கி எழுதியிருந்தார்.

வழக்கம் போலவே இதை நம்பாதோரின் கடுமையான விமரிசனத்திற்கு இந்த நூல் இலக்காயிற்று. ஆனால் தனது  முயற்சியில் சிறிதும் மனம் தளராத கில்னர் இதை மேலும் தொடர்ந்து ஆராய ஆரம்பித்தார்.

1914இல் பிரபல அறிஞர் சர் ஆலிவர் லாட்ஜ் இவர் சோதனைகளில் அக்கறை செலுத்தினார். 1920இல் திருத்தப்பட்ட பதிப்பாக இவரது நூல் மீண்டும் வெளியிடப்பட்டது. 23-6-1920 அன்று தனது 73ஆம் வயதில் மறைந்த இவர் தனது நூல் வெளியிடப்பட்டதைப் பார்க்க முடியவில்லை. பிரபல அறிவியல் இதழான ‘ஸயிண்டிபிக் அமெரிக்கன்’ இதழ் 1922இல் இவரைப் பாராட்டி ஒரு கட்டுரையை வெளியிட்டது.

உயிர் இருக்கும்  வரை ஒவ்வொரு மனிதனைச் சுற்றியும் இருக்கும் ஒளிவட்டம் உயிர பிரிந்தவுடன் மறைந்து விடுகிறது.

ஒரு மனிதனின் ஒளிவட்டத்தை எப்படிக் காண்பது?

இதற்கு இரண்டு கண்ணாடி ஸ்கிரீன்கள் வேண்டும். இவற்றின்  மீது டிக்யானின் டை உள்ள ஆல்கஹால் கரைசல் தடவப்பட வேண்டும். கண்ணாடியில் ஒன்று அடர்ந்த பூச்சுடனும் மற்றது லேசான பூச்சுடனும் இருத்தல் வேண்டும். இந்த ஸ்கிரீன்களை, உபயோகிக்காதபோது அவற்றை இருட்டில் வைத்துப் பாதுகாக்க வேண்டும். இல்லையேல் கெமிக்கல்கள் அழிந்து அவை பயனற்றுப் போய்விடும்.

இந்த கண்ணாடி வழியே யாரைப் பார்த்தாலும் அவரின் உருவத்தைச் சுற்றிப் பனி போல இன்னொரு உருவச்சுற்று தெரியும். பார்த்துப் பார்த்துப் பழக்கப்பட்டோருக்கு ஸ்கிரீனே தேவை இல்லை. வெறும் கண்ணாலேயே ஒளி வட்டத்தைப் பார்க்க முடியும். ஆனால் ஒளி உருவத்தைப் பார்க்கவே முடியாதவர் அடந்த பூச்சுக் கண்ணாடி வழியே முதலில் பார்த்து விட்டு பிறகு லேசான பூச்சுக் கண்ணாடி வழியே பார்த்தால் ஒளி உருவம் இருப்பது தெளிவாகத் தெரியும்.

ஒளிவட்டத்தை விவரிப்பது என்பது இன்னொரு விஷயம்! அதற்குச் சில நிபந்தனைகள் உண்டு. வெளிச்சம் அதிகப் பிரகாசமாக இருக்கக் கூடாது. ஒவ்வொரு நபரையும் பொறுத்தே ஒளிவட்டத்தின் அளவு நிர்ணயிக்கப்படும். வெளிச்சம் ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்திற்குப் போகும் முறையில் இருப்பதே சிறந்த முறை. அதாவது ஒளிவட்டம் பார்க்கப்பட வேண்டியவர் ஜன்னலுக்கு முதுகைக் காட்டியபடி நிற்க ஒளிவட்டம் பார்ப்பவர் ஜன்னலை நோக்கி நிற்க வேண்டும்.

இந்த ஒளிவட்ட சோதனை மூலம் வியாதிகளை இனம் கண்டு சிகிச்சை செய்ய முடியும் என்பது தான் இதன் சிறப்பு அம்சம்.

நல்ல ஆரோக்கியம் உள்ள மனிதரின் ஒளிவட்ட வண்ணம் நீலம் மற்றும் சாம்பல் கலந்த ஒன்றாக இருக்கும். தலையைச் சுற்றி எட்டு அங்குலம் ஒளிவட்டமும் மற்ற இடங்களில் ஐந்து அங்குலமும் ஒரு பிரபல விளையாட்டு வீரருக்கு இருந்தது. அப்போது அவருக்கு வயது 33. இதே அளவு அவருக்கு முன்னும் பின்னும் ஒளி பரவி இருந்ததையும் பார்க்க முடிந்தது.

அடுத்து ஆரோக்கியம் உள்ள ஒரு பெண்மணிக்கு வெளி ஒளிவட்டம் நாலரை அங்குலமாக இருக்க, கால் அருகே நான்கு அங்குலமாகக் குறைந்து இருந்தது. நீலம் கலந்த சாம்பல் நிற உள் ஒளிவட்டத்தைச் சுலபமாகத் தனியே பார்க்க முடிந்தது. மூன்றரை அங்குலம் முன்பின் அனைத்துப் பக்கமும் இருந்தது. கைகால்களில் மட்டும் அது மூன்று அங்குலமாகக் குறைந்திருந்தது.

ஐலீன் காரட் (Eileen Garrett) என்னும் பெண்மணி ஒளிவட்டத்தைப் பார்ப்பதில் வல்லவர். அவர் ஒரு க்ளர்வாயண்ட் (Clairvoyant). அதாவது கட்புலனுக்குப் புலனாகாமல் உள்ளவற்றை காணும் திறன் கொண்டவர். தமது சுயசரிதையில் தாம் கண்ட காட்சிகளை அவர் விவரிக்கிறார்:

குழந்தையாக இருக்கும் போதே மனிதர்களின் குணாதிசயங்கள் அவர்களின் சுற்று ஒளியை (Surround) பொறுத்தே இருக்கும் என்று தெரிந்து கொண்டேன் என்று அவர் கூறுகிறார்.

“அவர்களின் ஒளியின் தரத்தைப் பொறுத்தும் அதன் வண்ணங்களைப் பொறுத்தும்  அவர்களது பர்ஸனாலிடியை என்னால் நிர்ணயிக்க முடியும் . சிலர் மிளிரும் ஒளியுடன் நடக்கும் போது இன்னும் சிலரோ மங்கலான ஒளியுடன் நடப்பார்கள்.  மிருகங்களுக்கும், தாவரங்களுக்கும் கூட இது உண்டு. அவைகளைச் சுற்றி இருக்கும் ஒளியைப் பொறுத்து மரங்கள் மற்றும் பூக்களுக்கு ஜீவத்தன்மை இருக்கிறது. மிருகங்கள் ஒன்றுக்கு ஒன்று எப்படி நடந்து கொள்கின்றன என்பதைக் கவனித்தேன். அவைகளால் ஏனையவற்றின் சுற்று ஒளியை உணர முடிகிறது என்று என்னால் கூற முடியும். பருந்தைக் கண்டு எலி எப்படி உடனே ரீ-ஆக்ட் ஆகிறது?! அதே போல நண்பர்கள் மற்றும் எதிரிகளை இனம் காண இந்தச் சுற்று ஒளி அவற்றிற்கு உதவி புரிகிறது” என்று இப்படி விளக்கமாகக் கூறுகிறார் அவர்.

இன்னொரு சுவையான சம்பவம். இது ஸ்ரீ சத்ய சாயிபாபாவைப் பற்றிய ஒன்றாகும். உலகின்  மிகப் பிரபலமான விஞ்ஞானி பாரனோவ்ஸ்கி ஒரு முறை புட்டபர்த்திக்கு வந்தார். அவர் வெறும் கண்களாலேயே ஒளிவட்டத்தை நன்கு பார்க்க வல்லவர். ஸ்ரீ சத்ய சாயிபாபாவைப் புட்டபர்த்தியில் பார்த்த பின்னர் அங்கு ஒரு கூட்டத்தில் அவர் பேசினார். அப்போது அவர் கூறினார் : “நான் ஜனாதிபதி ஃபோர்டு, எலிஸபத் மஹாராணி, கிரீஸ் தேசத்து ராணி போன்ற பிரபலமானவர்களுடன் ஒரே மேடையில் பேசியவன். என்றாலும் இன்றைய எனது அனுபவம் விநோதமான ஒன்றாக இருக்கிறது. பாபாவின் ஒளிவட்டம் ஆகாயத்தை எட்டும் இளஞ்சிவப்பு வண்ணமாக இருக்கிறது. இதுவரை நான் இப்படிப்பட்ட ஒரு ஒளிவட்டத்தை -அவ்ராவை – என் வாழ்நாளில் கண்டதே இல்லை. அவர் நடக்கும் போது அந்த பிரம்மாண்டமான இளஞ்சிவப்பும் ஆகாயத்தை ஊடுருவிச் செல்கிறது. அன்பின் உருவான இளஞ்சிவப்பாகவே இவர்  இருப்பதால்

இவரை ‘Love Walking on two feet’ – ‘நடமாடும் அன்பின் உருவம்’ என்றே அழைக்கலாம் என்றார் அவர்.

ஒளி வட்டத்தைக் காண உதவும் காமராக்கள் இப்போது அமெரிக்காவில் தயாரிக்கப்படுகின்றன. சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளிலும் இவை பயன்படுத்தப்படுகின்றன. ஒவ்வொருவரது ஒளிவட்டத்தையும் இந்த காமரா மூலம் படம் எடுத்து அதை பரிசோதித்து அவரவர் பலனை அறிய இப்போது முடிகிறது!

நோயாளிகள் தங்களது நோயை இனம் கண்டு அதற்குரிய சிகிச்சையைப் பெற முடியும்; நோய் வருவதை முன்கூட்டியே அறிய முடியும்; ஆகவே அதிலிருந்து ஒருவர் வரப்போகும் அபாயத்திலிருந்து தன்னை ஒருவர் காத்துக் கொள்ள முடியும்.

ஆன்மீக முன்னேற்றத்தை விரும்பும் ஒருவர் தனது கோபம் போன்ற தீய குணங்களை அறவே அகற்ற இந்த ஒளிவட்டத்தைக் கண்டு தனது முன்னேற்றத்தையும் அறிந்து கொள்ளலாம். இளஞ்சிவப்பு மற்றும் மஞ்சள் கொண்ட ஜோதி ஒளிவட்டத்தை அடையலாம்!

ஒளிவட்டம் பற்றி அறிந்து கொள்வது என்பது அறிவியல் நமக்குத் தந்த பரிசுகளில் முக்கியமான ஒன்றாகும்!

நன்றி, வணக்கம்!

***

tags- ஒளிவட்டம், aura,

LONDON CALLING (HINDUS) 25-1-2021 (Post No.9188)

MRS SINDHUJA CHANDRAMOULI
MRS VAISHNAVI ANAND

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9188

Date uploaded in London – –25 January 2021      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

THE HIGHLIGHT OF GNANAMAYAM BROADCAST ON MONDAY 25TH JANUARY 2021 WAS THE TALK INTERVIEW BY GUEST SPEAKERS:-

1.DR KAUSHIK CHANDRA MALLIK FROM KOLKATA

 
Dr. Kaushik Chandra Mallik 

Dr. Kaushik Chandra Mallik MS,FRCS,Consultant Urologist practising in kolkata, West Bengal.

His association with Shastra Dharma Prachar Sabha, founded by Shrimat Upendramohan has been since his birth, so he has practically grown up within the Sabha.

Jayanti Shastrani,Drabanti dambhika,Hrisyanti shanto, Nipatanti nastikah is his motto. 

He spoke about the concept of India existed even before British came to India. He cited lot of example from the life of great philosopher Adi Shnakara. He told the listeners Shankar’s march from Kaladi in south to Bhadrikashram in the Himalayas and his establishen of Four Mutts in four corers of Bharath showed his concept of India. He wiped out Durmathas and cleanded the Hindu practices

Mr Showan Sengupta

Following him Mr Showan Sengupta of Kolkata rendered an excellent Sanskrit hymn on Krishna.

Mrs Sindhuja Chandramouli from Chennai

2.Second Guest speaker of the day was Mrs Sindhuja Chandramouli from Chennai. She is one of the youngest Upanyasakas of Tamil Nadu. She has lectured on 150 topics. Her approach was to show that patriotism and devotion to gods are like two eyes. So she started covering unconventional subjects such as freedom fighters, social reformers and even shrines and festivals in addition to conventional topics touching Puranas and Itihasas. . She explained with great humour how she was sucked into this field of giving discourses. She became crazy with Tirukkural after memorising the 1330 couplets to win a competition. Her mother forced her to learn them. Later hearing a Bhagavathar’s talk on Kanchi Paramacharya she started lecturing with his blessing on the same stage with songs.

She also demonstrated how the Upanyas began in those days and how she does it in modern days. She gave examples from the life of Ramana Maharishi and Swami Vivekananda to show how even small bytes of information can attract the attention of the devotees. With her traditional knowledge in music, she became a shining example to others. Mrs Vaishnavi Anand introduced her and asked her  relevant questions to elucidate good information within half hour.

WEBSITE HAS HER CONTACT DETAILS

ekambaramsindhuja@gmail.com

www.facebook.com/sindhujaharikataha

Her 150 topics performed so far

KATHA BYTES

WWW.SINDHUJHA.COM

INTRODUCTION BY MRS VAIHNAVI ANAND

ஆடல் பாடல் கதை கவிதை இவற்றின் துணை கொண்டு கதை சொல்லி ஒருவரின் பெருமை மற்றும் அவரது பராக்கிரமங்களை நமக்கு தெரிவிக்க வல்ல கலையே ஹரிகதை அல்லது கதாகலாக்ஷேபம் எண்பதாவது.

இக்கலை பழங்காலம் தொட்டு நம் பழக்கத்தில் இருந்து வருகிறது. லவனும் குசனும் ராமாயண கதையை ஸ்ரீ ராமரு க்கு வர்ணித்தது ஹரிகதைக்கு ஓர் எடுத்துக்காட்டு.

ஸ்ரீமதி  சிந்துஜா சந்திரமௌலி  மஹாபெரியவரினுடைய  தீவிர பக்தி கொண்டவர் . தனது சிறு பிராயம் முதலாக கதாகாலஷேபம்  செய்வதில் அவரின் அருள் கொண்டு தேர்ச்சி பெற்றவர். இவர் ஒரு சைல்ட் prodigy  என கூறினால்  அது மிகை ஆகாது .

ஸ்ரீமதி  சிந்துஜா சந்திரமௌலி  கிட்டத்தட்ட 17 வருடங்களாக ஹரிகதை நிகழ்ச்சிகளை தமது தாயார்  ஸ்ரீமதி  உஷா ஏகாம்பரம் அவர் அவரின் துணை கொண்டு செய்து வருகிறார் .

ஆல் இந்தியா ராடியோ  இவருக்கு ‘ஏ ‘ grade in   ஹரிகதை என அறிவித்திருக்கிறது.

இவர்

   தமிழக அரசின் ‘கலைவளர்மணி”

    திருக்குறளின் 1330 குறளையும் 100 வகையாக  ஒப்புவித்தமைக்காக  வேர்ல்ட்  திருக்குறள் forum வழங்கிய  “திருக்குறள் மாமணி”

   தெய்வ தமிழ் இசை மன்றம் மற்றும் கிருஷ்ண கான  சபா  வழங்கிய “ஹரிகதை வித்தகர் ” போன்ற விருதுகள் பெற்று இருக்கிறார்.

ஸ்ரீமதி சிந்துஜா சந்திரமௌலி அவர்கள்  பிரம்ம கான  சபா , கிருஷ்ண காண சபா, தி மியூசிக் அகாடமி, நாரத கான  சபா போன்ற பல முக்கிய சபைகளில் கதாகாலஷேபம்  செய்ந்திருக்கிறார்.

ஸ்ரீலங்கா,அபுதாபி, துபாய், போன்ற நாடுகளுக்கும் இந்தியாவின் இலக்கிய  பொக்கிஷங்களை ஹரிகதை யின் வாயிலாக கொண்டு சேர்த்திருக்கிறார்.

நந்தனார் சரித்திரம்,  தீர ஆஞ்சநேயர் சமவாதம், மஹாபலி வைபவம், தமிழிசையில் நவபக்தி போன்ற 150கும் மேற்பட்ட தலைப்புகளில் கதாகாலஷேபம்  செய்திருக்கிறார்.

ஆன்மீக பணியில் ஈடுபடுவதையே தனது பாக்கியமாக கருதும் சிந்துஜா அவர்கள் , கடவுள் பக்திக்கு நிகரானது தேச பக்தி என்று வலியுறுத்துகிறார்.  அதோடு நிற்காமல் தனது கதாகாலக்ஷேபத்தை ராமாயண மஹாபாரத கதைகளோடு நிறுத்திக்  கொள்ளாமல் இன்றைய தன்னலமில்லா தேச தலைவர்களின் பெருமைகளையும் ஹரிகதையின் வாயிலாக நமக்கு எடுத்து கூற தவற வில்லை.

இன்று ஞானமயம்  நிகழ்ச்சியில்  நமது சிறப்பு விருந்தினராக தமது அனுபவங்களை நம்மிடையே பகிர்ந்து கொள்ள இணைகிறார்   ஸ்ரீமதி சிந்துஜா சந்திரமௌலி 

 வணக்கம் சிந்துஜா

Gnanamayam promised the guest speakers of the day that they would be  given more time during their next appearance.

Mr S Nagarajan of Bengaluru spoke about the Auras and Dr N Kannan spoke about the Vaishnavites’ fascination with the Tamil language.

Producer Kalayana sundara Sivacharya spoke about the ongoing Tiruppugaz Recitation to celebrate oncoming Thaipusam festival.

Mrs Lakshmi Ramaswami’s disciples sang Tiruppugaz for prayer.

xxx

25-1-21 MONDAY- GNANA MAYAM CHANNEL

ANNOUNCEMENT & PRAYER- 5 mts

XXX

TWO GUEST SPEAKERS :-

1.MRS SINDHUJA CHANDRAMOULI INTERVIEW/TALK –HALF HOUR -25+5 (INTRODUCED BY MRS VAISHNAVI ANAND)

2.TALK BY Dr Kaushik Chandra Mallik from Kolkota and

DEVOTIONAL SANSKRIT SONG BY  MR SHOVAN SENGUPTA- BOTH 15 MINUTES

XXX

MR. S.NAGARAJAN’S TALK- 8 on AURAS

KALYANJI’S announcement ABOUT THAIPUSAM-4

DR KANNAN’S TALK ON ALVARS

APPRX. 70 MINUTES

XXX

INTRODUCTION TO GNANAMAYAM

WE HAVE LAUNCHED A HINDU BROADCAST IN AUGUST 2020 AND IT IS GOING WELL ON MONDAYS VIA ZOOM AND FACEBOOK.

LATER WE HAVE EXTENDED IT TO ONE MORE DAY, ON SUNDAYS TO SPREAD TAMIL CULTURE.

BOTH OUR BROADCASTS ARE NON- POLITICAL AND NON -COMMERCIAL.

WE DON’T ADVOCATE OR SUPPORT ANY VIOLENCE IN ANY FIELD.

IT IS APPROXIMATELY ONE HOUR BROADCAST FROM LONDON.

TIME OF BROADCAST- ONE PM, LONDON TIME—— 6-30 PM INDIAN TIME

DAYS- MONDAYS AND SUNDAYS

MONDAYS FOR HINDUISM (UNDER GNANAMAYAM AND GNANA SUDAR)

SUNDAYS  FOR TAMIL CULTURE & LANGUAGE (UNDER THAMIZ MUZAKKAM/ TAMIL THUNDER)

(After Pongal 2021, we do Tamil and Hinduism on both days)

XXX

 WHO IS THE PRODUCER?

LONDON SWAMINATHAN IS PRODUCING IT ON BEHALF OF  ‘GNANAMAYAM’ , LONDON.

(FORMER BBC BROADCASTER, SENIOR SUB EDITOR, DINAMANI, FORMER TAMIL TUTOR, UNIVERSITY OF LONDON; 3 JOBS FROM 1971- 2014; NOW BLOGGER AND NEWS EDITOR, GNANAMAYAM CHANNEL)

SRI KALYANA SUNDARA SIVACHARYAR OF WORLD HINDU MAHASANGAM 

IS ANOTHER PRODUCER

AND MRS SUJATHA RENGANATHAN AND MRS VAISHNAVI ANAND ARE CO-PRODUCERS FOR OUR PROGRAMMES

WHERE IS IT?

ON ZOOM AND

FACEBOOK.COM/GNANAMAYAM

SUNDAY BRODACAST HAS WORLD HINDU NEWS ROUND UP IN ENGLISH AND TAMIL

IN ADDITION WE ANSWER LISTENERS’ QUESTIONS ON HINDU RELIGION  AND TAMIL CULTURE ON THESE DAYS

XXXX SUBHAM XXXX

tags- showan sengupta, Kaushik Chandra Mallik, Sindhuja, Chandramouli, Upanyas, Vaishnavi

LONDON CALLING (TAMILS) 24-1-2021 (Post No.9187)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9187

Date uploaded in London – –25 January 2021      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

THE TAMIL THUNDER BROADCAST KNOWN AS THAMIL MUZAKKAM BROADCAST THE FOLLOWING PROGRAMMES ON SUNDAY 24TH JANUARY 2021 AS PART OF ITS  WEEKLY TAMIL BROADCAST.

WORLD HINDU NEWS ROUND UP WAS READ BY MRS SUJATHA RENGANATHAN IN ENGLISH AND BY MRS VAISHNAVI ANAND IN TAMIL.

THE SPECIAL FEATURE OF THE BROADCAST WAS THE SONGS OF THE POST PONGAL FESTIVAL KANU PONGAL . IT IS KANU, KANUPPIDI AND KAANUM PONGAL. ALL MAKE SENSE BECAUSE THEY DISPLAY COLOURED RICE FOR THE CROWS AND SPARROWS AND WICH THE FAMILY TO LIVE HAPPILY SHARING EVERYTHING LIKE THE CROWS.

USUAL TEMPLE VIEW – ALAYAM ARIVOM – COVERED THE MOST FAMOUS KRISHNA TEMPLE IN KERALA (GURUVAYUR)..

AS USUAL THIRUPPUGAZ WAS RENDERD BY MRS JAYANTHI SUNDAR AND MISS KEERTHANA RAMALINGAM.

LONDON SWAMINATHAN’S THIRUPPUGAZ RESEAARCH ARTICLE—LIST OF PEOPLE WHO GO TO HELL ACCORDING TO ARUNAGII WAS READ BY MRS VAISHAVI ANAND.

EALIER PRAYER WAS RENDERED BY MASTER KUMARAGURUPARAN THYAGARAJA OF MALAYSIA AND THIRUPPUGAZ WAS RENDERED BY THE DISCIPES OF MRS LAKSHMI RAMASWAMY OF CHENNAI.

KANU SONGS WERE SUG BY MRS ANNAPURANAI PANCHANATHAN, DAYA NARAYANAN AND SWARNALATHA.

KANU SONGS IN TAMIL

கணுப் பண்டிகை பாடல் :

( அனைத்து சகோதரிகளுக்கும் சமர்ப்பணம் )

கணுப் பிடி வெச்சேன்

காக்காப் பிடி வெச்சேன்.

கணுப் பிடியும் 

காக்காப் பிடியும்

கலந்து நானும் வெச்சேன்.

பார்த்து வெச்சேன் பரப்பி வெச்சேன்

பச்சை இலையில் நிரப்பி வெச்சேன்.

மஞ்சள் இலையை விரிச்சு வெச்சேன்

மகிழ்ச்சி பொங்க பிரிச்சு வெச்சேன்.

காக்கைக்கும் குருவிக்கும் 

கல்யாணம்னு சொல்லி வெச்சேன்.

கலர் கலரா சாதம் வெச்சேன்

கரும்புத் துண்டும் கலந்து வெச்சேன்.

வகை வகையா சாதம் வெச்சேன்

வாழைப்பழம் சேர்த்து வெச்சேன்.

அண்ணன் தம்பி குடும்பமெல்லாம்

அமோகமாய் வாழ அழகாய் வெச்சேன்.

இனிப்பு புளிப்பு தேங்காய் சாதம்

இன்பமாய் நானும் எடுத்து வெச்சேன்.

எள் சாதம் எலுமிச்சை சாதம்

ஏகாந்தமாய் நானும் வெச்சேன்.

கூட்டு பொரியல் அவியல் வெச்சேன்

கூட்டுக் குடும்பமாய் வாழ வெச்சேன்.

தூப தீபம் காட்டி வெச்சேன்

தூய மனதோடு நானும் வெச்சேன்.

கற்பூரம் ஏத்தி வெச்சேன்

கடவுளை வணங்கி வெச்சேன்.

ஆரத்தி எடுத்து வெச்சேன்

ஆண்டவனை வேண்டி வெச்சேன்.

கணுப் பிடி வெச்சேன்

காக்காப் பிடி வெச்சேன்.

கணுப் பிடியும் காக்காப் பிடியும்

கலந்து நானும் வெச்சேன்.

காக்கைக் கூட்டம் போல

எங்கள் குடும்பமும் பிரியாதிருக்க வெச்சேன்

 THIRUMATHY SWARNALATHA

XXXXXXXXXXXXXXXXXX

AGENDA

THAMIZ MUZAKKAM/ TAMIL THUNDER (PART OF GNANA MAYAM CHANNEL)

24-1-2021 SUNDAY

PRAYER- MASTER KUMARAGURUPARAN THYGARAJA, MALAYSIA

MRS BRHANNAYAKI SATHYANARAYANAN’S TALK ON TEMPLES- GURUVAYUR

Thiruppugaz  by MRS JAYANTHI SUNDAR & MS KEERTHANA RAMALINGAM

XXX

WORLD HINDU NEWS ROUND UP–

IN ENGLISH BY MRS SUJATHA RENGANATHAN

IN TAMIL BY MRS VAISHNAVI ANAND

XXX

LONDON SWAMINATHAN’S ARTICLE READ BY MRS VAISHNAVI ANAND (LIST OF PEOPLE WHO GO TO THE HELL ACCORDIN TO THIRUPPUGAZ)

KANU SONG BY MRS SWARNALATHA

KANU SONG BY MRS DAYA NARAYANAN

KANUP SONG BY MRS ANNA PANCHANATHAN

XXXX

INTRODUCTION TO GNANAMAYAM

WE HAVE LAUNCHED A HINDU BROADCAST IN AUGUST 2020 AND IT IS GOING WELL ON MONDAYS VIA ZOOM AND FACEBOOK.

LATER WE HAVE EXTENDED IT TO ONE MORE DAY, ON SUNDAYS TO SPREAD TAMIL CULTURE.

BOTH OUR BROADCASTS ARE NON- POLITICAL AND NON -COMMERCIAL.

WE DON’T ADVOCATE OR SUPPORT ANY VIOLENCE IN ANY FIELD.

IT IS APPROXIMATELY ONE HOUR BROADCAST FROM LONDON.

TIME OF BROADCAST- ONE PM, LONDON TIME—— 6-30 PM INDIAN TIME

DAYS- MONDAYS AND SUNDAYS

MONDAYS FOR HINDUISM (UNDER GNANAMAYAM AND GNANA SUDAR)

SUNDAYS  FOR TAMIL CULTURE & LANGUAGE (UNDER THAMIZ MUZAKKAM/ TAMIL THUNDER)

(After Pongal 2021, we do Tamil and Hinduism on both days)

XXX

 WHO IS THE PRODUCER?

LONDON SWAMINATHAN IS PRODUCING IT ON BEHALF OF  ‘GNANAMAYAM’ , LONDON.

(FORMER BBC BROADCASTER, SENIOR SUB EDITOR, DINAMANI, FORMER TAMIL TUTOR, UNIVERSITY OF LONDON; 3 JOBS FROM 1971- 2014; NOW BLOGGER AND NEWS EDITOR, GNANAMAYAM CHANNEL)

SRI KALYANA SUNDARA SIVACHARYAR OF WORLD HINDU MAHASANGAM 

IS ANOTHER PRODUCER

AND MRS SUJATHA RENGANATHAN AND MRS VAISHNAVI ANAND ARE CO-PRODUCERS FOR OUR PROGRAMMES

WHERE IS IT?

ON ZOOM AND

FACEBOOK.COM / GNANAMAYAM

SUNDAY BRODACAST HAS WORLD HINDU NEWS ROUND UP IN ENGLISH AND TAMIL

IN ADDITION WE ANSWER LISTENERS’ QUESTIONS ON HINDU RELIGION  AND TAMIL CULTURE ON THESE DAYS

XXXX SUBHAM XXXX

TAGS – கணுப் பண்டிகை பாடல், KANU SONGS, BROADCAST24121

திருப்பாவை அதிசயம் 3- கம்பனுக்கும் ஆண்டாளுக்கும் பிளாக் ஹோல் எப்படித் தெரியும் ? (Post No.9186)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9186

Date uploaded in London – –25 January 2021      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

திருப்பாவை அதிசயம் 3- கம்பனுக்கும்  ஆண்டாளுக்கும் BLACK HOLE பிளாக் ஹோல் எப்படித் தெரியும் ?

எப்போது பார்த்தாலும் ஐன்ஸ்டைனையே ALBERT EINSTEIN புகழ்வது நியாயமா? ஆல்பர்ட் ஐன்ஸ்டைனுக்கு முன்னரே நம்மவர்தான் எல்லாம் சொல்லி விட்டார்களே! இனி வரப்போகும் கண்டு பிடிப்புகளை நான் முன்னரே எழுதிவிட்டேன். அதாவது ஒளியின் வேகத்தை மிஞ்சசுவது மனோவேகம், வெளி உலகத்தாரின் ஏழு பண்புகள்; அண்டத்திலுள்ளது பிண்டத்திலும் உண்டு என்றும் எழுதிவிட்டேன். பூமி-சந்திர- செவ்வாய் பற்றிய தொடர்புகள் நவ கிரஹ ஸ்தோத்திரத்தில் இருப்பது பற்றியும் சொல்லிவிட்டேன் . மொழி விஷயத்தில் காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் சொல்லியது போல தமிழுக்கும் சம்ஸ்கிருதத்து க்கும் மூலம் ஒன்றுதான் என்றும் உலக மொழிகளுக்கு எல்லாம் நாம்தான் மூலம்  என்றும் எழுதிவிட்டேன்.

ஆயினும் கம்பராமாயணத்தை மூன்றாம் முறையாகப் படித்தபோது flash of thought பிளாஷ்! அமெரிக்காவிலுள்ள நண்பர்களுக்காக ஸ்கைப் கிளாஸ்/

Skype Class நடத்திய போது இந்த எண்ணம் பளிச்சிட்டது ; மறுநாள் திருப்பாவையை 10, 15 அல்லது 100 ஆவது படித்த முறையும் அதே பிளாஷ் FLASH  அடித்தது. இது லண்டன் நண்பர்களுக்கான நடத்திய Skype Class ஸ்கைப் கிளாஸ்.

முன்னர் படித்த பொழுது எல்லாம் தோன்றாத எண்ணம்  இரண்டு தினங்களில் திடீரெனத் தோன்றியதற்குக் காரணம் “அதிகமாகப் படிச்சு படிச்சு கிறுக்குப் பிடிச்சு போச்சு” என்ற சினிமா பாடல் கதைதான்.

இதோ சப்ஜெக்டு-SUBJECT– க்கு வருகிறேன்

ஆண்டாளும் கம்பனும் வானத்தில் உள்ள அதிசய கருந்துளைகள் பற்றிப் பாடியுள்ளனர்

xxx

BLACK HOLE கருந்துளைகள்- பிளாக் ஹோல் என்றால் என்ன?

கருங்குழி (Black Hole) அல்லது கருந்துளை என்பது, இவற்றின் எல்லைக்குட் செல்லும், ஒளி உட்பட்ட எதுவுமே வெளியேற முடியாத அளவு வலுவான ஈர்ப்பு சத்தியைக் கொண்டுள்ள, அண்டவெளியின் ஒரு பகுதியாகும். மேற் குறிப்பிட்ட எல்லை நிகழ்வெல்லை (event horizon) எனப்படும். இந்த நிகழ்வெல்லைக்குள் இருந்து பார்க்கக்கூடிய ஒளி அலைகள் போன்ற மின்காந்த அலைகள் கூடத் தப்பி வெளியேற முடியாது என்பதால் உள்ளே நடப்பவை எவற்றையுமே வெளியில் இருந்து அறிந்து கொள்ள முடியாது. இதனாலேயே இதனைக் கருங்குழி என்கின்றனர். கருங்குழிகள் பெரிய  நட்சத்திரங்களின் பரிணாமத்தின் இறுதிக்கட்டமாகக் கருதப்படுகிறது. இதற்குக் கன அளவோ, மேற்பரப்போ கிடையாது. ஆனால் இதன் பிரம்மாண்டமான திணிவு (mass) காரணமாக இது முடிவில்லாத  அடர்த்தியைக் கொண்டுள்ளது.

ஒளியைக் கூடத் தப்பவிடாத அளவுக்கு வலுவான ஈர்ப்பு சக்தி கொண்ட பொருள் பற்றிய விஷயத்தை  1783 ஆம் ஆண்டில் பிரித்தானிய வானியல்  அறிஞர்  ஜான் மிச்சல் (John Michell) என்பவர் முன்வைத்தார். பின்னர் ஐன்ஸ்டைன் கொள்கைகள்மூலம் இது விளக்கப்பட்டுள்ளது

இதைக் காணமுடியாவிட்டாலும்  இதன் சேஷ்டைகள்/ விஷமங்கள்  மூலம் இதை அறிய முடிகிறது . இதற்குள் இழுக்கப்பட்ட பிரம்மாண்டமான சூரியன்கள்/ நட்சத்திரங்கள் என்ன ஆகின்றன என்பது பற்றி பல்வேறு  ஊகங்கள் உள (இதில் விக்கிபீடியா விளக்கத்தையும் சேர்த்துள்ளேன்).

Xxxx

கம்ப ராமாயணம்

சூழு மாகடல்களும்  திடர்படதுகள் தவழ்ந்து

ஏழு பாரகமும் உற்றுளது  எனற்கு எளிது அரோ

ஆழியான் உலகு அளந்தஅன்று தாள்சென்ற அப்

பூழையோடே  பொடித்து அப்புறம் போயதே

-எதிர்கொள் படலம், பால காண்டம், கம்ப ராமாயணம்

பொருள்

படைகளால் எழுந்த புழுதி, உலகத்தைச் சூழ்ந்துள்ள பெரிய கடல்கள் தூர்ந்து போகும்படி , இந்தப் பூமியில் உள்ள ஏழு தீவுகளுக்கும் சென்றது. இப்படிச் சொல்லுவதுதான் எளிதாக இருக்கிறது. ஏன் தெரியுமா ?

திருமால், வாமன அவதாரம் எடுத்து, த்ரிவிக்ரமனாக மாறி, உலகங்களை அளந்த அந்தக் காலத்தில் அவனது திருவடி ஒன்று மேலே சென்று அண்டத்தின் மேற்பகுதியைத் துளைத்த அந்த வழியே , படைகளின் புழுதி சென்று அண்டத்துக்கு அப்பாலும் பரவியது.

இதிலுள்ள சொற்களை கவனிக்க வேண்டும் . இந்த உரைகள் 1000 ஆண்டுக்கும் மேலாக வழி  வழியாக சொல்லப்படுவது . இதில் ‘அண்டம்’ என்று சொன்னபோதே இந்த யுனிவர்ஸ் universe – பிரபஞ்சம் வட்ட வடிவில் இருப்பதை நாம் அறிந்தோம் என்று சொல்கிறது. ஏழு கண்டங்கள் எப்படி உருவாயின என்பதை சூசகமாகத் தெரிவிக்கிறது. வானத்தில் (sky hole) ஓட்டை இருப்பதாகவும் அதன் வழியாக அண்டத்துக்கு அப்பால் (beyond universe) செல்ல முடியும் என்றும் சொல்கிறது. மேகத்தில் துளை என்று சொல்லி இருந்தால் ஆச்சர்யப்பட்டிருக்க மாட்டோம். அண்டத்தில் துளை, அதன் வழியாக தூசி போதல் என்பது இப்போதைய பிளாக் ஹோல் Black hole வர்ணனையை ஒத்திருக்கிறது. மேலும் மூன்று அடியால் உலகளந்த விஷயம் ரிக் வேதத்திலேயே உள்ளது. அப்போது அர்த்தம் கற்பித்தோருக்கு இன்றைய  விஞ்ஞானம்  தெரியாததால் பலவகையாகப் பொருள் கூறினார்கள்.

ஆக கம்பன் காலத்திலேயே ‘அண்டம்’, ‘துளை’ என்ற வருணனை இருந்திருக்கிறது. இதை பகவத் கீதை விஸ்வரூப தரிசனம் விளக்கமாகக் காட்டுகிறது.

பாரகம் – பூமி, கரை, திரைச் சீ லை, தோணி   ; பூழை — துவாரம் , துளை .

கம்பனுக்கு பல நுறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஆண்டாள், கம்பன் போல விரிவாகச் சொல்லாவிட்டாலும் 17-ஆவது திருப்பாவையில் ‘கருந்துளைகள்’ பற்றிப்   பாடுகிறார்.

அம்பரமே தண்ணீரே சோறே ……

….

……..

அம்பரம் ஊடு அறுத்து ஓங்கி உலகளந்த

உம்பர் கோமானே !

அம்பரம் – ஆடை, ஆகாயம்

ஊடு  – இடம், அம்பரம் ஆகாயம் , அறுத்து – துளையிட்டு

ஆக கம்பனுக்கும் ஆண்டாளுக்கும் ஆகாயத்தில் black hole துளை உண்டு என்பது தெரியும். அதை திருமாலின் அவதாரத்தால் ஏற்பட்டதாகக் கூறினும் அது பிற்கால விளக்கம் என்பது பெறப்படும் என்னை?

எப்படியெனில், ரிக் வேதத்திலேயே ‘மூன்று அடி உலகளந்த வரிகள்’ வருகின்றன !

இந்துக்கள் Time காலம் என்பதை வட்டப்பாதையில் Circular  செல்வதாகக் காண்பர். அதுவே சரி. அதாவது கருந்துளைக்குள் சென்றது மீண்டும் புதுவடிவுபெறும்.  அறிவியல் வளர, வளர நமது பழைய பாட்டுகளுக்கு புது விளக்கம் பெற முடிகிறது. இப்படிச் சமயப் புஸ்தகங்களில் உள்ளதைப் படித்து விளக்கம் காணும் முன்னர், போஜன் போன்ற மாபெரும் அறிஞ ர்கள் 1000 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய சம்ஸ்க்ருத விஞ்ஞான புஸ்தகங்களை விஞ்ஞானிகள் படித்தால் வருங்காலக் கண்டுபிடிப்புகளை இன்றே சொல்லமுடியும்.

–SUBHAM –

Tags-  ஆண்டாள், திருப்பாவை, அதிசயம் 3, கருந்துளை, பிளாக் ஹோல், கம்பன், Black Hole

“போர்” என்பவன் யார்? (Post No.9185)

WRITTEN  BY KATTUKKUTY

Post No. 9185

Date uploaded in London – – 25 January 2021          

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

போர்என்பவன் யார்?

Kattukutty

மூன்றாம் நபரைப்பற்றி ஒருவன் பேசினால் அவன் “அரட்டை”

நம்மைப் பற்றி பேசுபவன் சிறந்த “பேச்சாளன்”.

தன்னை பற்றியே பேசுபவன் “போர்”

ஒரு நிமிஷத்தில் சொல்ல வேண்டிய விஷயத்தை ஒரு மணி

நேரத்தில் சுருக்கமாகச் சொல்பவன்!!!

மணி என்ன என்று கேட்டால், கடிகாரம் தயாரிப்பது எப்படி

என்பது பற்றி பேச ஆரம்பிப்பவன்!!!

ஒரு மணி நேரத்தை ஒரு யுகமாக மாற்றுபவன்…….

மேற்கொண்டு எதுவும் பேசுவதற்கில்லை என்ற பிறகும்

விடாமல் பேசுபவன்!!!

“போய் வருகிறேன்” என்ற இரண்டு வார்த்தையைத் தவிர,

ஆயிரம் வார்த்தைகளைக் கொட்டுபவன் !!!

“சமூகம்” என்பது இரு வகை மனிதர்களைக் கொண்டது்

ஒருவர் “ போரடிப்பவர்”.

மற்றொருவர் “ போரடிக்கப்படுபவர்”.

நாம் நம்மைப் பற்றி பேச விடாமல், தன்னைப் பற்றியே

பேசுபவன்

“போர் மன்னன்” என்ற பட்டத்தை பெறுவது எப்படி????

உங்களுக்குத் தெரிந்ததையெல்லாம் பற்றி மூச்சு

விடாமல் சொல்வது்.

“போர் “ அடிப்பவர்களை இரண்டு வகையாக பிரிக்கலாம்.

முதல் வகை- ஒரு விஷயத்தைப் பிடித்துக் கொண்டு அதைப்

பற்றியே பேசுபவர்கள்

இரண்டாவது வகை – இவர்களுக்கு விஷயமே தேவையில்லை

மணிக்கணக்காக பேசுவதற்கு……..

நீங்கள் சுவையாக ஒரு விஷயத்தை சொல்வதாக நினைத்து

சொல்லிக் கொண்டிருக்கும் போது, மற்றவருக்கு கொட்டாவி

வந்தால், சந்தேகமே இல்லை, நீங்கள் ஒரு “போர்”!!!!

போர் அடிப்பவர்களுக்கு ஒரு சாபம் தாங்கள் ஒரு போர் என்று

உணரவே முடியாதது தான்!!!

நீங்கள் அடிக்கும் “போர்”, உங்களாலேயே தாங்க முடியவில்லை

என்றால் நீங்கள் “உலக மகா போர்”!!!!

***

tags – உலக,  மகா போர், 

நடந்தவை தான் நம்புங்கள் – 4 (Post No.9184)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9184

Date uploaded in London – –25 January  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

நடந்தவை தான் நம்புங்கள் – 3 வெளியான தேதி : 15-1-2021; கட்டுரை எண் : 9145

நடந்தவை தான் நம்புங்கள் – 4

ச.நாகராஜன்

1

பிரபலமான ஒரு உபந்யாசகர் கடவுளைப் பற்றியும் கடவுளைப் போற்றி வணங்க வேண்டியது பற்றியும் அருமையாக உபந்யாசங்கள் செய்து வந்தார். மக்கள் பெரிதும் அவரை மதித்தனர். அவர் உரையைக் கேட்க திரளாகக் கூடுவர்.

அவரை எப்படியாவது மட்டம் தட்ட வேண்டும் என்று நினைத்த நாத்திகக் கும்பல் ஒரு ஆளை தயார் செய்தது. ஒரு கூட்டத்தில் அவர் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த போது கூட்டத்தில் இருந்த அவன் எழுந்து வேகமாகச் சென்று மேடை மீது ஏறினான். மேஜைக்கு முன்னால் இருந்த மைக்கைப் பிடித்துப் பேச ஆரம்பித்தான்.

“கடவுள், கடவுள் என்கிறீர்களே, அவரை உங்களால் எங்களுக்கு இங்கே காட்ட முடியுமா? நான் ஒரு பகுத்தறிவுவாதி. கண்களால் காணப்படுவதைத் தான் என்னால் நம்ப முடியும்? என்று இப்படி ஆர்ப்பாட்டமாகப் பேசி நிறுத்தினான் அவன்.

கூட்டத்தில் இருந்தோர் திகைத்தனர்.

அவனை உபந்யாசகர் புன்முறுவலுடன் கோபப்படாமல் பார்த்தார்.

அவரது சாந்தமான முகத்தைப் பார்த்தவுடன் பகுத்தறிவுவாதி, மிகவும் சத்தமாக, “நான் ஒரு பகுத்தறிவுவாதி” என்று கத்தினான்.

அவனைப் பார்த்த உபந்யாசகர், “சரி, கண்களுக்குப் புலனாகும் எதையும் தான் நீ நம்புவாயா? இதோ இங்கு உன் பகுத்தறிவைக் கொஞ்சம் காண்பியேன். இதோ இந்த மேஜை மீது அதை வைத்துக் காண்பி. அதைக் காண்பித்தால் தானே அதை நான் நம்ப வேண்டும். அது தானே உன் கொள்கை!” என்றார்.

கூட்டத்தினர் ஆரவாரித்துக் கை தட்டினர். பகுத்தறிவு தலை குனிந்து மேடையை விட்டு இறங்கி வெளியே போக ஆரம்பித்தது. அவன் வெளியேறும் வரை கூட்டத்தினர் கை தட்டிக் கொண்டே இருந்தனர்.

2

பேரறிஞர் பெர்னார்ட் ஷா புத்திகூர்மை உள்ளவர் மட்டுமல்ல; உடனுக்குடன் பதில் கொடுப்பதிலும் வல்லவர்.

ஒரு முறை பிரபலமான ஆங்கில வரலாற்றாசிரியர் சர் பேசில் ஹென்றி லிடல் ஹர்ட் (Sir Basil Henry Liddel Hart) பெர்னார்ட் ஷாவை நோக்கி, “உங்களுக்கு ஒன்று தெரியுமா?” என்று ஆரம்பித்தார். Sumac, Sugar ஆகிய இரண்டே இரண்டு வார்த்தைகள் தான் ஆங்கில மொழியிலேயே Su என்று ஆரம்பித்தாலும் Shu என்ற உச்சரிப்பு கொண்டவை” என்று அழுத்தம் திருத்தமாகக் கூறினார்.

உடனே பெர்னார்ட் ஷா, “Sure” என்று சிரித்தவாறே சொன்னார்.

(Sumac என்பது ஒரு விதமான புதர் (is a type of bush). Suவில் ஆரம்பித்தாலும் ஷூர் என்றே Sure உச்சரிக்கப்படுகிறது. பெர்னார்ட் ஷா போட்டார் ஒரு போடு ஷீர் என்று சொல்லி!

 3

பிரபலமான ஏ.எஸ்.பி. ஐயர் வரலாறு படைத்த ஒரு நீதிபதி. அவரது அறிவும், உடனுக்குடன் நகைச்சுவையுடன் பதிலளிக்கும் பாங்கும் என்றும் பேசப்படுபவை.

அவரைப் பற்றி வி.ஆர். கிருஷ்ண ஐயர், 23-1-1999 அன்று தேதியிட்ட ஹிந்து நாளிதழில், A.S.P. Ayyar – A Judicial paradigim’ என்ற தலைப்பில் அருமையான ஒரு கட்டுரையை எழுதினார்.

அது அனைவரையும் கவர்ந்தது. ஏ.எஸ்.பி. ஐயரை அடிக்கடி சந்தித்து அளாவி மகிழ்ந்த சென்னையைச் சேர்ந்த சி.வி.நரசிம்மன் என்பவர் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

ஒரு முறை அவர் நரசிம்மனிடம் ஒரு வக்கீலின் தவறுக்கும் ஒரு டாக்டரின் தவறுக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்று கேட்டார். அவரே அதற்கான பதிலையும் சொன்னார் இப்படி: “ ஒரு வக்கீலின் தவறு தரைக்கு ஆறு அடிக்கு மேலே தொங்கும். ஒரு டாக்டரின் தவறு தரையிலிருந்து ஆறு அடிக்கு கீழே புதைக்கப்படும்” (“A lawyer’s mistakes hangs six feet above the ground. A doctor’s mistake isburied six feet below the ground.”)

இப்படி வாழ்நாள் முழுவதும் அவர் கூறிய நகைச்சுவை வாக்கியங்கள் ஏராளம், ஏராளம்.

(திரு C.V.Narasimhan’s letter appeared in Letters to the Editor Column on 28-1-1999)

***

TAGS – நடந்தவை , நம்புங்கள் – 4 , 

PLEASE JOIN US TODAY 25-1-21 MONDAY

PLEASE JOIN US TODAY 25-1-21 MONDAY

25-1-21 MONDAY- GNANA MAYAM CHANNEL

ANNOUNCEMENT & PRAYER- 5 mts

XXX

TWO GUEST SPEAKERS :-

1.MRS SINDHUJA CHANDRAMOULI INTERVIEW/TALK –HALF HOUR -25+5 (INTRODUCED BY MRS VAISHNAVI ANAND)

2.TALK BY Dr Kaushik Chandra Mallik from Kolkota and

DEVOTIONAL SONG BY  Mrs Shovan Sen- BOTH 15 MINUTES

XXX

MR. S.NAGARAJAN’S TALK- 8 on AURAS

KALYANJI’S announcement ABOUT THAIPUSAM-4

DR KANNAN’S TALK ON ALVARS

APPRX. 70 MINUTES

XXX

INTRODUCTION TO GNANAMAYAM

WE HAVE LAUNCHED A HINDU BROADCAST IN AUGUST 2020 AND IT IS GOING WELL ON MONDAYS VIA ZOOM AND FACEBOOK.

LATER WE HAVE EXTENDED IT TO ONE MORE DAY, ON SUNDAYS TO SPREAD TAMIL CULTURE.

BOTH OUR BROADCASTS ARE NON- POLITICAL AND NON -COMMERCIAL.

WE DON’T ADVOCATE OR SUPPORT ANY VIOLENCE IN ANY FIELD.

IT IS APPROXIMATELY ONE HOUR BROADCAST FROM LONDON.

TIME OF BROADCAST- ONE PM, LONDON TIME—— 6-30 PM INDIAN TIME

DAYS- MONDAYS AND SUNDAYS

MONDAYS FOR HINDUISM (UNDER GNANAMAYAM AND GNANA SUDAR)

SUNDAYS  FOR TAMIL CULTURE & LANGUAGE (UNDER THAMIZ MUZAKKAM/ TAMIL THUNDER)

(After Pongal 2021, we do Tamil and Hinduism on both days)

XXX

 WHO IS THE PRODUCER?

LONDON SWAMINATHAN IS PRODUCING IT ON BEHALF OF  ‘GNANAMAYAM’ , LONDON.

(FORMER BBC BROADCASTER, SENIOR SUB EDITOR, DINAMANI, FORMER TAMIL TUTOR, UNIVERSITY OF LONDON; 3 JOBS FROM 1971- 2014; NOW BLOGGER AND NEWS EDITOR, GNANAMAYAM CHANNEL)

SRI KALYANA SUNDARA SIVACHARYAR OF WORLD HINDU MAHASANGAM 

IS ANOTHER PRODUCER

AND MRS SUJATHA RENGANATHAN AND MRS VAISHNAVI ANAND ARE CO-PRODUCERS FOR OUR PROGRAMMES

WHERE IS IT?

ON ZOOM AND

FACEBOOK.COM / GNANAMAYAM

SUNDAY BRODACAST HAS WORLD HINDU NEWS ROUND UP IN ENGLISH AND TAMIL

IN ADDITION WE ANSWER LISTENERS’ QUESTIONS ON HINDU RELIGION  AND TAMIL CULTURE ON THESE DAYS

XXXX SUBHAM XXXX

TAGS- PUBLICITY25121

குருவாயூர்- ஆலயம் அறிவோம்! (Post No.9183)

WRITTEN BY BRHANNAYAKI SATHYANARAYANAN

Post No. 9183

Date uploaded in London – –24 January 2021      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஆலயம் அறிவோம்!     வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.

“ஸ்வாகதம் கிருஷ்ணா சரணாகதம் கிருஷ்ணா

மதுராபுரி சதனா மிருதுவதனா இஹ ஸ்வாகதம் கிருஷ்ணா!!

இஹ ஸ்வாகதம் கிருஷ்ணா!!

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது 

குரு பகவானும் வாயு பகவானும் குருவாயூரப்பனை பிரதிஷ்டை செய்த அபூர்வ தலமான குருவாயூர் ஆகும். பரசுராமரால் உருவாக்கப்பட்ட கேரள மாநிலத்தில் உள்ள இந்தத் தலம் எர்ணாகுளத்திலிருந்து 84 கிலோமீட்டர் தூரத்திலும் கோழிக்கோடிலிருந்து 111 கிலோமீட்டர் தூரத்திலும் கோயம்புத்தூரிலிருந்து 144 கிலோமீட்டர் தொலவிலும் உள்ளது.

இந்த அதிசயமான தலம் பற்றி ஏராளமான புராணக் கதைகள் உண்டு. மஹாபாரத யுத்தம் முடிவுக்கு வந்தது. தன் அவதார நோக்கத்தை நிறைவேற்றி விட்ட கிருஷ்ணர் உத்தவரை அழைத்து எனது அவதாரம் முடிந்து விட்டது. இதோ இங்கு துவாரகையில் உள்ள ஆலயத்தில் இருக்கும் விக்ரஹத்தை தேவகுருவான பிரஹஸ்பதியிடம் தந்து புண்ணியமான பிரதேசத்தில் பிரதிஷ்டை செய்யச் சொல்” என்று கூறினார்.  காலப்போக்கில்  யாதவ வம்சம் விப்பிர சாபத்தினால் ஒரு முடிவுக்கு வர, உத்தவர், குரு பகவானிடம், கிருஷ்ணர் இட்ட கட்டளையைக் கூறினார். அதை சிரமேற்கொண்ட குரு பகவான் த்வாரகைக்கு வர, அது கடலில் மூழ்கிக் கொண்டிருந்தது. குரு பகவானுக்கு அலை மோதும் கடலில் விக்ரஹத்தைக் கண்டு பிடிக்க முடியவில்லை. உடனே அவர் வாயு பகவானை வேண்டி ஸமுத்திரத்தை சாந்தமடையச் செய்தார். வாயு பகவானின் துணையோடு விக்ரஹத்தைக் கண்டு பிடித்து அதை ஸ்தாபிக்க புண்ய தேசம் தேடி வந்தார். இறைவனின் நாடான கேரளத்தின் மேற்கு எல்லையில் ஒரு தடாகத்தைக் காண அதில் சிவபிரான் க்ரீடை புரிந்து கொண்டிருப்பதைக் கண்டு குருவும் வாயுவும் அவரை வணங்க, உங்கள் வருகை ஏன் என்று எனக்குத் தெரியும். அம்பிகாபுரம் என்ற இந்த இடம் எனக்கு மிகவும் விருப்பமான இடம். இங்கே அந்த விக்ரஹத்தை பிரதிஷ்டை செய்யுங்கள்” என்று கூறி அருளினார்.

குருவும் வாயுவும் அவ்வண்ணமே அங்கே குருவாயூரப்பன் விக்ரஹத்தைப் பிரதிஷ்டை செய்தனர். குரு பகவானும் வாயு பகவானும் விக்ரஹத்தைப் பிரதிஷ்டை செய்த அந்தத் தலம் குருவாயூர் என்று பெயர் பெற்று பிரஸித்தமானது.

குருவாயூரப்பன் இங்கு கிழக்கு முகமாக பக்தர்களுக்குக் காட்சி தருகிறார். ஆகவே கிழக்கே நடை பிரதானமாகும். அதைத் தாண்டினால் ஒரு நடைப்புரை. அதை யானைப்பந்தல் என்றும் சொல்வார்கள். மூலஸ்தானத்திலிருந்து கிழக்குப் புறமாக வந்தால் இதை அடையலாம். உள்ளேயிருந்து வெளி வரும் போது பெரிய பலிபீடத்தைக் காணலாம். இது குருவிற்கும் வாயுவிற்கும் அதிஷ்டானமென்று சொல்லப்படுகிறது. நடைப்புரையின் மேலப் புறங்களில் வர்ணப்படங்கள் உள்ளன. இதன் தென்கிழக்கு மூலையில் கூத்தம்பலம் உள்ளது. இங்கு சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த சிற்பங்கள் உள்ளன. தெற்கே விலை உயர்ந்த ஆபரணங்கள் உள்ள அறை உள்ளது.

ஆதி சங்கரர் ஒரு முறை இங்கு ஆகாய மார்க்கமாக வர அங்கு ஏகாதசி பண்டிகை விமரிசையாக நடந்து கொண்டிருக்க, இது என்ன வீண் கேளிக்கை என்று அவர் நினைத்தார். அப்போது அவர் மேனி தளர்ந்து குருவாயூரப்பன் சந்நிதியின் முன் விழுந்து விட்டார். மூர்ச்சை தெளிந்து பார்க்கையில் அங்கு இருக்கும் அனைத்தும் விஷ்ணுமயமாய் இருப்பதைக் கண்டு வியப்புற்றார் அப்போது ஆகாயத்திலிருந்து தேவர்கள்  மலர்மாரி பொழிந்தனர். இப்படி மலர்மழை பொழிந்த இடத்தையும் நிகழ்ச்சியையும் நினைவூட்டும் வண்ணம் இந்தப் பந்தலின் மேற்புரையில் ஒரு பகுதி திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. மேள தாளங்களுடன் பகவான் இங்கு வரும் சமயங்களில், முன் நிகழ்ந்த நிகழ்ச்சியை நினைவு கூரும் வண்ணம், பகவான் இங்கு சற்று நிறுத்தப்படுவார்! அப்போது மேளதாளங்கள் நிறுத்தப்படும்.

தனது அனுபவத்தால் மிக்க மகிழ்ச்சி அடைந்த ஆதி சங்கரர் சில நாட்கள் குருவாயூரிலேயே வசித்தார். குருவாயூரப்பனை பஜனம் செய்து பூஜாகிரமங்களில் சில விசேஷ முறைகளை நியமித்தார்;

அதன்படியே அவை இன்றும் நடைபெற்று வருகின்றன.

கர்பகிருஹத்திற்கு நான்கு பக்கங்களிலும் உள்ள கட்டிடங்களுக்கு நாலம்பலம் என்று பெயர். நாலம்பலத்தின் தெற்கு மூலயில் பகவானுக்கு உரிய நைவேத்திய பதார்த்தங்கள் பாகம் செய்யப்படும். இங்கு தினமும் கணபதி ஹோமம் நடைபெற்று வருகிறது. இங்கு அக்ஷய திரிதியை, ஜென்மாஷ்டமி, கார்த்திகை முதல் நாள் முதல் நாற்பது நாட்கள் கொண்ட  மண்டல காலம், கார்த்திகை மாதம் சுக்கில ஏகாதசியான குருவாயூர் ஏகாதசி, சித்திரை மாதம் முதல் தேதி அன்று விஷுக்கனி  தரிசனம் உள்ளிட்ட பல உற்சவ தினங்கள் இன்றும் சிறப்புற நடைபெற்று வருகின்றன.

இந்தத் தலத்தில் தான் பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த நாராயண பட்டர் அவர்களால் நாராயணீயம் என்னும் தெய்வீக நூல் இயற்றப்பட்டது. குருவாயூரப்பனை வழிபட்டு தன் வியாதியை போக்கிக் கொண்ட அவர் 1036 ஸ்லோகங்களில் குருவாயூரப்பன் முன் நின்று தினம் பத்து ஸ்லோகங்கள் வீதம் பாடி நாராயணீயத்தை முடித்தார் என்கிறது வரலாறு.. நரசிம்மாவதாரம் பற்றி அவர் பாடிய போது அதை விவரிக்க முடியாது திகைத்த நாராயண பட்டரின் முன் மண்டபத் தூண் ஒன்றிலிருந்து நரசிங்கம் கண் முன்னே தோன்றி அங்கும் இங்கும் நடமாடியது. அதைக் கண்டு அப்படியே பாடினார் பட்டர். இப்படி நாராயணீயத்தில் வரும் பல லீலைகள் பற்றிய பல அற்புதங்கள் உண்டு. ஒவ்வொரு சுலோகமாகப் பார்க்கும் போது, பட்டர் விக்ரஹத்தை நோக்கி, “நீ இப்படிச் செய்தாயாமே’ என்று கேள்வி கேட்பது போல இருக்கும். ஆமாம், அப்படித் தான் செய்தேன் என்று பிம்பம் அங்கீகரித்துத் தலை அசைத்ததாம்.  எல்லையற்ற மஹிமை கொண்டது இந்தத் தலம். அனுபவத்தாலேயே இதை உணரலாம். இங்கு பக்தர்கள் இன்று வரை அடைந்து வரும் உண்மை அனுபவங்கள் மிகவும் ஆச்சரியகரமானவை. எந்த நோய் இருந்தாலும் அதைத் தீர்க்கும் தலம் இது. காலம் காலமாக கோடானு கோடி பக்தர்கள் வழிபடும் குருவாயூரப்பன் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திகிறோம். ஹே! கலியுக வரதா! குருவாயூரப்பா,நின் பாதமே சரணம்! நன்றி வணக்கம்!

tags– குருவாயூர், ஆலயம் அறிவோம், 

உலக இந்து சமய செய்தி மடல் 24-1-2021 ( 9182-B)

Compiled by LONDON SWAMINATHAN

Post No. 9182-B

Date uploaded in London – –24 January 2021      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

இன்று ஜனவரி 24 -ஆம் தேதி —  ஞாயிற்றுக் கிழமை ,2021

உலக இந்து   சமய செய்தி மடல்

தொகுத்து வழங்குபவர் வைஷ்ணவி ஆனந்த்

 இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,

நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது VAISHNAVI     ANAND 

 எங்கள் நிகழ்ச்சிகளை ஞாயிற்றுக் கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 1 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் நேரடியாகக் கேட்கலாம். உலக இந்து சமய செய்தித் தொகுப்புடன் நேயர்களின் கேள்விகளுக்கு விடைகளும் அளிக்கப்படுகிறது.

எங்களை எந்நேரமும் தொடர்பு கொள்ள Facebook.com / Gnana mayam முகவரியில் அணுகவும்

அன்பர்கள் கவனிக்கவும்

முன்பு  திங்கட்கிழமைகளில்   ஒலி பரப்பப்பட்டு வந்த உலக இந்து சமய செய்தி அறிக்கை இனிமேல் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒலி பரப்பாகும் .

Xxxx

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக, நாட்டு மக்கள் பெருமளவில் நன்கொடை கொடுக்கத்  துவங்கியுள்ளனர்

குஜராத் சூரத் நகரில் வைர நகைகள் வியாபாரம் செய்துவருகின்றவரும் ராமபக்தருமான கோவிந்த் பாய் தோலோக்கியா ஸ்ரீராம ஜன்ம பூமி தீர்த்த க்ஷேத்ர அறக்கட்டளைக்கு
ரூ.11 கோடி நன்கொடை அளித்தார்
இவரை போன்றே குஜராத்தில் உள்ள ராம பக்தர்கள் சிலர் கோடி ரூபாய்க்கும் அதிகமாக நன்கொடை அளித்தனர்.

ஸ்ரீ த்ரிதண்டி சின்ன ஜீயர் ஸ்வாமிகள் ரூ.12,34,567க்கான காசோலையை ஆந்திரபிரதேச ஆர்.எஸ்.எஸ். ப்ராந்த ப்ரச்சாரக் பரத்குமாரிடம் அளித்தார்.

கிரிக்கெட் வீரரும், பாரதிய ஜனதாக் கடசியுமான கவுதம் கம்பிர் ஒரு கோடி ரூபாய் நன்கொடை அளித்தார்

Xxxx

ஏழுமலையானுக்கு முஸ்லிம்கள் நன்கொடை

திருப்பதி: திருமலை ஏழுமலையானுக்கு, ஆந்திர மாநிலத்தில் உள்ள இஸ்லாமியர்கள், 3 டன் காய்கறிகளை நன்கொடையாக வழங்கினர்.

திருப்பதி, திருமலை ஏழுமலையான் பெயரில், தேவஸ்தானம் நடத்தி வரும் அன்னதான அறக்கட்டளைக்கு, பல ஊர்களைச் சேர்ந்த விவசாயிகள், வியாபாரிகள், காய்கறிகள், மளிகை பொருட்களை நன்கொடையாக அளித்து வருகின்றனர். இந்நிலையில், சித்துார் மாவட்டம் கேஜி கண்டரிக பகுதியில் காய்கறி வியாபாரம் செய்து வரும் இஸ்லாமியர்கள் இணைந்து, ஏழுமலையானின் அன்னதான அறக்கட்டளைக்கு , மூன்று டன் காய்கறிகளை நன்கொடையாக அனுப்பினர்.

திருமலை ஏழுமலையான் உண்டியலில் செலுத்தப்பட்ட காணிக்கைகள் கணக்கிடப்பட்டன. அதில், மூன்று கோடியே, 11 லட்சம் ரூபாய் தேவஸ்தானத்திற்கு வருமானமாக கிடைத்துள்ளது. கடந்த சில நாட்களாக, சராசரியாக 2 கோடி ரூபாய் வசூலாகி வந்த உண்டியல் காணிக்கை, நேற்று ஒரே நாளில், 3 கோடி ரூபாயை எட்டியுள்ளது.

xxxx

திருப்பதி தேவஸ்தான ஒளிபரப்புக்கு  யூனியன் வங்கி 50 லட்சம் ரூபாய் நன்கொடை

யூனியன் பேங்க் ஆஃ ப் இந்தியா திருப்பதி-திருமலை தேவஸ்தானம் நடத்தும் பக்தி சேனலுக்கு Rs 50,55,120 நன்கொடை வழங்கியுள்ளது . இது ஓராண்டுக்கான ஸ்பான்சர் ஷிப் ஆகும் .

ஆந்திர மாநிலம் திருமலை கோயிலின் சிறப்புகளை எடுத்துரைக்கும் வண்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா

பக்தி சேனல் ட்ரஸ்ட் (SVBC) உருவாக்கப்பட்டுள்ளது.

புவனேஸ்வரைச் சேர்ந்த சிவம் காண்டெவ் பிரைவேட் லிமிடெட், ஜாம்ஷெட்பூரைச் சேர்ந்த சர் லால் எஞ்சினியர் லிமிடெட், நியூடெல்லியைச் சேர்ந்த ராமா சிவில் இந்தியா கன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியவை தலா 10 லட்ச ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளன.
இதையடுத்து ஜனவரி 16  இந்தியன் வங்கி, SVBC ட்ரஸ்டிற்கு 20 லட்ச ரூபாய் நன்கொடை வழங்கியது..

Xxx

கர்நாடகத்தில் பசுவதை தடை சட்டம் அமல் – மாடுகளை கொன்றால் 7 ஆண்டு சிறை

கர்நாடக அரசு, பசுவதை தடை சட்ட மசோதாவை சட்டசபையில் நிறைவேற்றியுள்ளது. மேல்-சபையில் அந்த மசோதாவுக்கு இன்னும் ஒப்புதல் கிடைக்கவில்லை. இந்த நிலையில் பசுவதை தடைக்கு அவசர சட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளது.

இதற்கு கவர்னர் வஜூபாய் வாலா ஒப்புதல் வழங்கியுள்ளார். இந்த நிலையில் இந்த பசுவதை தடை சட்டத்தை ஜனவரி 18 (முதல் அமல்படுத்தப்படும் என்று அரசு கூறியுள்ளது.

இந்த சட்டத்தின்படி மாடுகளை கொல்ல முடியாது. விவசாயிகள் வயதான மாடுகளை வளர்க்க முடியாவிட்டால் அதை கோசாலைகளில் விட்டுவிட வேண்டும். ஆனால் 13 வயதுக்கு மேற்பட்ட எருமை மாடுகளை கொல்ல உரிய முன் அனுமதி பெற்றுக்கொள்ளலாம். மாட்டிறைச்சி சாப்பிட தடை இல்லை.

இந்த சட்டத்தை மீறுபவர்களுக்கு அதிகபட்சமாக 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Xxxxx

மத்திய பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரத்தில் இருந்து வரும் செய்திகளின் சுருக்கம்

அமேசான் ப்ரைம் வீடியோ சீரிஸ் தாண்டவ்நிகழ்ச் சியை எதிர்த்து 6 வழக்குகள் பதிவாகியுள்ளன. தயாரிப்பாளர் ஹிமான்சு கிருஷ்ண மெஹ்ரா மற்றும் டைரக்டர் மீது வழக்குகள் பதிவாகின.

இந்து தெய்வங்களையும் பெண்களையும் மட்டம்தட்டி இகழும் காட்சிகள் இதில் இருப்பதாக பாரதிய ஜனதா கட்ஸி மற்றும் ஹிந்து மஹா ஸபா ஆகியவற்றின் பிரமுகர்கள் வழக்குகளைத் தொடர்ந்தனர்.

பாரதீய ஜனதா கடசி எம் பி மனோஜ்  கோடக்இப்பிரச்சினையை கவனத்துக்கு ஈர்த்து தடை செய்யக் கோரினார் . உடனே நிகழ்ச்ச்சி தயாரிப்பாளர்கள் இரு முறை மன்னிப்பு கோரி, நிகழ்ச்சியை அரசின் பரிந்துரைகளுக்கு   ஏற்ப மாற்றுவதாக அறிவித்தனர். ஆயினும் இது போதாது, நிகழ்ச்சியை ரத்து செய்ய வேண்டும் என்று மனோஜ் கோடக்  வலியுறுத்தி வருகிறார்.

தாண்டவ் நிகழ்ச்சியில் ஒன்பது பகுதிகள் உள்ளன. இதுவரை 4 மாநிலங்களில் ஆறு வழக்குகள் , இதை எதிர்த்துபதிவாகியுள்ளன

xxxxx

ஆந்திர மாநிலத்தில் இருந்து வரும் செய்திகளின் சுருக்கம்

ஆந்திரமாநிலத்தில் விஷமிகளால் தாக்கப்பட்ட ராமதீர்த்தம் கோவிலில் மூன்று கோடி ரூபாய் செலவில் புனருத்தாரணப் பணிகள் நடைபெறும் என்று ஆந்திர அறநிலையத்துறை அமைச்சர் ஸ்ரீனிவாச ராவ் அறிவித்துள்ளார் அர்ச்சகர்களின் சம்பளத்தை ஆந்திர அரசு  பத்தாயிரம் ரூபாயாக உயர்த்துவதாகவும் தெரிவித்தார்.

ஆயினும் கோவில் தாக்குதல் சம்பவங்கள் ஏமாற்றம் தருவதாக பெஜாவர் மடத்தின் சுவாமிகள் உட்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார் . இதனிடையே ஆந்திர மாநில பாரதிய ஜனதா கடசி பிப்ரவரி நாலாம் தேதி முதல் எட்டு நாட்களுக்கு கோவில் பாதுகாப்பு ரத   யாத்திரையை அறிவித்துள்ளது

Xxxx

சபரிமலை அய்யப்பன் கோவில் விழா நிறைவு

சபரிமலை கோவில் மண்டல, மகர விளக்கு சீசன் ஜனவரி 20நிறைவடைந்தது .

அய்யப்பன் கோவிலில் ஜனவரி 18  திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் களபாபிஷேகம் நடைபெற்றது. தந்திரி கண்டரரு ராஜீவரு தலைமையில் நடைபெற்ற களபாபிஷேகத்தில் பந்தளம் ராஜ குடும்ப பிரதிநிதிகள் பிரதீப்குமார் வர்மா, சுரேஷ் வர்மா ஆகியோர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து மன்னர் குடும்ப பிரதிநிதிகள், வழக்கமான பாரம்பரிய முறைப்படி, தந்திரி, மேல்சாந்தி, கீழ்சாந்திகள் ஆகியோருக்கு பண முடிப்புகளை வழங்கினர்.

அய்யப்பன் கோவில் கருவறையின் சாவி முறைப்படி மன்னர் குடும்ப பிரதிநிதிகளிடம் ஒப்படைக்கப்படும். அதனை மீண்டும் கோவில் மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி பெற்றுக் கொள்வார்.

மீண்டும் மாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை பிப்ரவரி மாதம் 12-ந் தேதி திறக்கப்படும்.

xxxx

தைப்பூச திருவிழாவை பொதுவிடுமுறை நாளாக அறிவித்தார் முதலமைச்சர்

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-


தமிழ்க் கடவுளாகிய முருகப்பெருமானைச் சிறப்பித்து தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் மிக முக்கியமானது தைப்பூசத் திருவிழா. இவ்விழா தமிழ்நாட்டில் மட்டுமின்றி, கேரள மாநிலத்திலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரீஷியஸ் மற்றும் இந்தோனேஷியா போன்ற நாடுகளிலும் தைப்பூசத்திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

தைப்பூசத்திருவிழாவிற்கு பொதுவிடுமுறை அளிக்க வேண்டும் என பொதுமக்கள் என்னிடம் கோரிக்கை விடுத்தனர்.

வரும் ஜனவரி 28-ம்நாள் அன்று கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழாவை, பொது விடுமுறை நாளாக அறிவிக்கவும், இனிவரும் ஆண்டுகளிலும் தைப்பூசத்திருவிழா நாளை பொது விடுமுறை பட்டியலில் சேர்க்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  கூறியுள்ளார்.

வடலூர் தைப்பூச தரிசன பெருவிழா

வடலூரில் தைப்பூச திருவிழா நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.

வடலூரில் இந்த ஆண்டு 150-வது ஜோதி தரிசன விழா திருஅருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையம் என்னும் சத்ய ஞானசபையில் நடைபெறுகிறது.

இதையொட்டி வருகிற 27-ந் தேதி தைப்பூச ஜோதி தரிசன திருவிழாவுக்கான கொடியேற்றமும், 28-ந் தேதி தைப்பூச திருவிழாவும் நடைபெற உள்ளது.

28-ந் தேதி காலை 6 மணி முதல் ,  29-ந் தேதி காலை 5.30 மணி வரை ஒவ்வொரு திரையாகத் திறக்கப்பட்டு  7 திரைகள் நீக்கப்பட்டு ஜோதி தரிசனம் காண்பிக்கப்படும்.

வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில் 30-ந் தேதி திருஅறை தரிசனம் நடைபெறுகிறது.

Xxxx

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தைத்தேர் திருவிழா

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தைத்தேர் திருவிழா கடந்த 19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைத்தேரோட்டம் வருகிற 27-ந் தேதி நடைபெறுகிறது.

28-ந் தேதி சப்தாவரணம் நிகழ்ச்சி நடக்கிறது. நிறைவு நாளான 29-ந் தேதி நம்பெருமாள் ஆளும்பல்லக்கில் எழுந்தருளி உள்வீதிகளில் வலம் வருகிறார். அத்துடன் தெப்பத்திருவிழா நிறைவடைகிறது.

Xxxxxx

இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் வைஷ்ணவி ஆனந்த்………………………… நன்றி, வணக்கம்

 TAGS- உலக, இந்து சமய, செய்தி மடல், 24-1-2021,

24-1-2021 WORLD HINDU NEWS ROUNDUP IN ENGLISH (Post 9182-A)

AYODHYA RAM MANDIR MODEL

Compiled by LONDON SWAMINATHAN

Post No. 9182-A

Date uploaded in London – –24 January 2021      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

24-1-2021 WORLD HINDU NEWS ROUNDUP IN ENGLISH

Namaste , Namaskaram to Everyone

This is a weekly ‘HINDU NEWS ROUND UP’ from around the world.

Read by SUJATHA RENGANATHAN .

XXX

This is a broadcast coming through ZOOM and FACEBOOK.COM / GNANA MAYAM live at

ONE pm London Time and 6-30 PM Indian Time Every SUNDAY.

Even if you miss our live broadcast on SUNDAYS

, you can always visit us on FACE BOOK.COM – slash- Gnana Mayam 24 hours a day. 

Here is the WEEKLY HINDU NEWS BULLETIN from ‘Aakaasa Dhwani’

– Read by SUJATHA RENGANATHAN .

XXX

Please Note that

The World Hindu News Roundup is moved to Sundays from LAST week. Here afterwards the WORLD HINDU NEWS ROUNDUP will be broadcast on SUNDAYS.

XXXX

FUNDS ARE POURIG INTO RAM TEMPLE FUND

Govindbhai Dholakia from Surat donates Rs 11 crore for Ram temple construction in Ayodhya

A diamond trader from Surat in Gujarat, Govindbhai Dholakia on Friday has made a contribution of Rs 11 crore for the construction of the Ram temple in Ayodhya, Uttar Pradesh. The diamond trader, Govindbhai Dholakia, made the donation at a Vishva Hindu Parishad (VHP) office.

Govindbhai Dholakia is not alone to support the cause from Gujarat. One Mahesh Kabootarwala of Surat has donated Rs 5 crore, Loveji Badshah has made the contribution of Rs 1 crore for the construction of the Ram temple. There are several traders in Gujarat who have donated Rs 5 to 21 lakh. Bharatiya Janata Party’s Gordhan Zadaphia and treasurer Surendra Patel had recently donated Rs 5 lakh each for the Ram temple.

Gautam Gambhir donates ₹1 crore towards Ram temple

Cricketer-turned-politician Gautam Gambhir has donated ₹1 crore to the Shri Ram Janmabhoomi Teerth Kshetra Trust for the construction of the grand Ram temple in Ayodhya.

“A glorious Ram temple has been the dream of all Indians. Finally this long standing issue has been put to rest. This will pave the way for unity and tranquillity. A small contribution from me and my family has been made in this endeavour,” Gambhir, BJP MP representing East Delhi, said in a statement.

XXXX

OPPOSITION TO TANDAV SERIES GROWING; 6 CASES FILED AGAINST IT

The makers of the Amazon Prime Video series “Tandav” deciding to implement changes to the political drama is only “one step forward”, local BJP MP Manoj Kotak said on Tuesday, adding he will “strive” for the regulation of content on OTT platforms.

The Mumbai North-East seat MP on January 16 wrote to Information and Broadcasting Minister Prakash Javadekar, seeking a ban on “Tandav” alleging it ridiculed Hindu deities.

In their second apology statement in as many days, the show’s team also thanked the Ministry of Information and Broadcasting for its “guidance & support” in the matter.

“Tandav”, a nine-episode political thriller starring Bollywood A-listers Saif Ali Khan, Dimple Kapadia and Mohd Zeeshan Ayyub, started streaming last week but the show landed in a huge controversy over its alleged depiction of Hindu deities.

IN THE MEANTIME,

 The fifth case against the makers of the controversial web series Tandav in the country has been registered in Gwalior district of Madhya Pradesh. This is the second case registered against the makers of Saif Ali Khan-starrer Amazon Prime Video web series in the State, while a complaint by a ruling BJP leader is pending with Indore Police.  

According to the Gwalior district police superintendent Amit Sanghi, the case was registered at the Crime Branch police station on the complaint of Hindu Mahasabha state organization secretary Lalji Mishra on Wednesday evening.  

In the complaint to the Gwalior Crime Branch, it has been alleged that scenes and dialogues in the  first episode and also other episodes of 9-episode web series hurt sentiments of a particular religious community and a caste. In the same complaint, it has also been alleged that women in the series have been shown in an insulting manner.  

Till date, SIX cases have been registered against the makers of the controversial web series across the country, including two in UP two in MP  and one each in Mumbai and Bengaluru.

XXXX

HERE IS A NEWS ITEM FROM TIRUPATI BALAJI TEMPLE

UBI donates Rs 50 lakh for dharmic programmes on SVBC channel

The Union Bank of India  has contributed a sum of Rs 50,55,120 as one year sponsorship of Dharmic programmes on Tirumala Tirupati Devasthanam , run by Sri Venkateswara Bhakti channel.

xxxxx

Over 27,000 people turn up as Puri’s Jagannath temple

Sri Jagannath temple in Puri IN ODISAH opened its doors for devotees on Thursday without the precondition of mandatory production of Covid-19 negative report for entry into the 12th-century shrine.

Hundreds of devotees entered Srimandir in queue through nine rows by observing all the safety protocols and had darshan of the Trinity.

Close to 27,000 devotees turned up on the day. The collection at the hundi went past Rs 2 lakh.

After sanitising their hands and thermal screening, devotees entered the temple gate with chants of chanting ‘Jai Jagannath’ and ‘Haribol’.

They were asked not to touch anything inside the temple complex and exit through the North Gate.

XXXXX

Vandalised temple to be rebuilt at a cost of Rs 3 crore in Andhra

The temple of Lord Rama at Ramatheertham in Vizianagaram district will be reconstructed at a cost of Rs 3 crore, said Endowments Minister Vellampalli Srinivasa Rao.  He said the ancient temple will be reconstructed as per the advice of Vedic scholars and Agama pandits. The construction of the temple will be completed within one year. 

The idol of presiding deity sculpted by the Tirumala Tirupati Devasthanams (TTD) will be installed in the temple in place of the vandalised one. Besides repairing the existing staircase to the temple located on a hillock at a height of 700 foot, another staircase will be constructed and the path leading to the temple will be illuminated.

Mentioning the Antarvedi incident, MINISTER said a new chariot for Sri Lakshmi Narasimha Swamy temple has been constructed in place of the burnt one. The new chariot will be used for Kalyanotsavam of the Lord.

Govt all set to enhance  honorarium of Archakas

The ritual will conclude with the performance of Abhishekam, Purnahuti and Ratha Prathishta.


MINISTER, who participated in Atmiya Samavesam organised by Archaka Samakhya earlier in the day, said the YSRC government OF JAGAN MOHAN REDDYwhich is committed to protecting the interests of Brahmins, had initiated several measures for their welfare.

“The State government has already held a round of talks with the Archaka Samakhya representatives as per the directions of Chief Minister YS Jagan Mohan Reddy. Steps have been taken for implementation of the hereditary Archaka system in temples. Efforts are also being made to enhance the honorarium of Archakas of temples with low income, from Rs 5,000 to Rs 10,000.

Steps will be taken for the effective implementation of Dhoopa Deepa Naivedyam scheme, under which a temple will get Rs 3,600 per month,” the minister added.

Temple attacks in Andhra —Pejavara Mutt’s seer writes to Amit Shah

Pejavara Mutt’s seer Shri Vishva  prasanna Teertha Swamiji has expressed his disappointment over the recent attacks on Hindu temples in Andhra Pradesh and pointed out that more than 120 temples have been attacked in the state over the last one and half years.

Amidst the continued attacks on Hindu temples in Andhra Pradesh, renowned seer Shri Vishvaprasanna Teertha Swamiji, the holy seer of Pejavara Mutt, Udupi, has written a letter to Home Minister Amit Shah seeking his attention over the issue. The seer has sought the home minister’s intervention in the attacks on temples in Andhra Pradesh, especially the shocking desecration of 400-year-old Lord Ram idol in the Ramatheerthan of Vizianagaram district.

NEW STATUES FOR RAMA THEERTHAM

MEANWHILE……………………

BJP announces Rath Yatra from February 4

 Andhra Pradesh BJP  chief Somu Veerraju on Sunday announced that his party will undertake a Rath Yatra from Ramatheertham to Kapila Theertham from February 4 to protest against attacks on temples and other ‘anti-Hindu’ activities in the YSRC regime.

Alleging ‘illegal religious conversions’ in the State, Somu also demanded that the government publish a white paper on the assets owned by churches, Christian institutions and individual trusts, besides the details of ‘salaries’ being paid to pastors by the State.

He demanded Chief Minister YS Jagan Mohan Reddy to sack the Director General of Police or blaming Hindus for the temple attacks. “

XXXX

Eight-day Chaturveda Havanam begins in VIJAYAWADA

Chaturveda Havanam, an eight-day ritual, began on a grand note at Kanaka Durga temple atop Indrakeeladri in Vijayawada last Monday. Vedic scholars started the festivities with a procession of idols of Goddess Durga. The holy ritual was performed at the newly-constructed Yaagashaalaa with an idol of Lord Maha Ganapati.

Hampi seer Virupaksha Swamy was invited as the chief guest at the ritual.

Kanaka Durga temple hundi nets Rs 1.36 crore
Kanaka Durga temple earned an income of `1.36 crore through hundi collections in the last 16 days. A total of 160 grams of gold and 6 kg of silver were also offered by the devotees.

XXX

Bengaluru to host two-day RSS annual meet in March

Karnataka, which has managed the Covid-19 situation quite well, will play host to the Akhil Bharatiya Pratinidhi Sabha (ABPS), the highest decision-making body of Rashtriya Swayamsevak Sangh (RSS), in March.

Top RSS functionaries will now descend on Bengaluru for a two-day brainstorming session from March 19, which will be held at the Janaseva Vidya Kendra.

There is speculation that the election to the top executive post of RSS, the Sarkaryavah (General Secretary), will also take place during the two-day meeting. The election is conducted once in three years. 

Suresh ‘Bhaiyyaji’ Joshi was elected Sarkaryavah in 2018 and the three-year term ends this year. The Sarkaryavah is the only elected post in the RSS. Normally, 1,400 representatives across the country elect or endorse the candidate for general secretary.

However, this year, due to pandemic, the number of delegates will be restricted to 500. The meeting will also discuss various social issues like education and health apart from organisational policies.

XXXX

THAT IS THE END OF ‘AAKAASA DHWANI ’ HINDU NEWS BULLETIN BROADCAST FROM LONDON –

READ BY SUJATHA RENGANATHAN.

Please Wait for our Tamil News Bulletin

Now I pass it on to VAISHNAVI ANAND

tags – tags —  hindu news roundup, 24-1-21