தமிழா! இது திருக்குறளடா ! கோபப்படாதே! (Post.8773)

div class=”separator” style=”clear: both;”>

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8773

Date uploaded in London – –4 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

கட்டத்தில் இரண்டு குறள்கள் உள ; கண்டுபிடியுங்கள் .

விடைகள் கீழே உள்ளன . கூடிய மட்டிலும் சொற்களைப் பிரிக்காமல் கொத்துக் கொத்தாகக் கொடுத்துள்ளேன்.

விடைகள்

தன்னைத்தான் காக்கின் சினங் காக்க காவாக்கால்

தன்னையே கொல்லும் சினம் — திருக்குறள் 305

சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்

ஏமப்  புணையைச் சுடும் — திருக்குறள் 306

பொருள் —

உன்னைப் பாதுகாத்துக் கொள்ள கோபம் வராமல் பார்த்துக் கொள் ; அல்லது அதுவே உன் மரணத்துக்குக் காரணமாகிவிடும் –திருக்குறள் 305

கோபம் என்னும் தீ  ஒரு மரத்துடன் நட்புகொண்டு அதைத் தழுவினால் மரமும் அழியும்; மரத்துக்குப் பக்கத்திலுள்ள காடே அழியும்.

அது போல கோபம் நெருப்பு போல உன்னுடன் சேர்ந்தால் அது உன்னை மட்டும் கொல்லாமல் உனக்கு ‘சப்போர்ட்’ support

கொடுத்த அத்தனை பேரையும் அழிக்கும் — –திருக்குறள் 306

TAGS– திருக்குறள் 306,கோபம், சினம்

–subham–

TAMILS FOLLOWED PANINIAN GRAMMAR (Post No.8772)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8772

Date uploaded in London – –4 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

There are very interesting similarities in Panini’s grammar and Tamil literature. Let us look at some of them today.

(I have already given the Tamil examples in my Tamil article)

Naming women is explained in several sutras of Ashtadhyayi of Panini. It is a common knowledge that feminine names in Sanskrit which are used by all the Hindus from Kanyakumari to Kashmir, end with ‘ee’ or ‘aa’.

Examples :

Savitrii , Gayatrii , Smrtii, Sruthii, Gitaa, Lathaa, Maayaa, Vidhyaa

Numerology and lack of knowledge in Sanskrit changed the spellings in many cases. But the original spellings are intact in our Tamil and Sanskrit literature.

Tamils’ names also ended with ‘e’ or ‘ee’ sounds.

Examples :

Aadhimanthi ,Kannaki ,Madhavi , Punithavathy, Tilkavathy ,Vasuki , Bhagavathy, Angayar kanni( Goddess Minaakshii) , Paandimaadevii (Pandya Queen), Kaamakkannii (Goddess Kamakshii)

Though some of these are Sanskrit names they are attested in the oldest Sangam book Purananuru. Other names were used from second century CE.

Even when Tamils used ‘aa’ ending names, they followed a rule to change them in to ‘ai’ ending names.

Examples :

Giitaa  becomes Gitai; Siataa becomes Siitai,

Even Sangam Tamil literature have Nachellai, Nappasalai, Nappinnai etc.

The ‘E’ ending names do not stop there ; it goes deeper and deeper which shows the deep connection between Tamil and Sanskrit. Here we go with more examples

Panini shows us the way to create feminine names from masculine names; Panini gives us examples:-

Bhava – Bhavaanii

Rudra – Rudraanii

Indra – Indraanii

Shiva – Shivaanii and so on.

Tamils follow the same rule in Sangam Tamil literature which is at least 2000 year old. And Panini is 2700 years old according to Goldstucker.

Kuravan – Kurathi

Kizavan – Kizathi

Maravan – Marachi

Idaiyaan- Idaichi

Aayan – Aaychi

The list goes on and on.

What does it show?

Tamil and Sanskrit came from one source , that is Lord Shiva, and it is attested from 1400 year old Thevaram and the latest  Bharati poems.  It is natural that a language will be influenced by another language spoken in the neighbourhood. But Tamil and Sanskrit do not fall under that category. The connection is deeper. The Sandhi (joining and combining) rules are followed in Tamil and Sanskrit even today. These are the only two ancient languages that follow sandhi rules. More similarities are seen in case suffixes. And I have discovered 30 Tamil words in Pre-Alexander Greek literature. These things torpedo all the theories put forward by our so called linguists.

The very classification of Tamil and its sister languages as Dravidian family is wrong. It is part of Indian languages. If linguistic idiots can argue Brahui and Tamil are related to one another, one can say Tamil and Sanskrit are one and the same.

No scholar can show us more than three Tamil words in Brahui. In all the so called Northern, Middle and Sothern Dravidian languages there are more than 90 percent Sanskrit based words. If there is anything new, that is very minimal. Suppose one decides to remove all Sanskrit based words from these so called Dravidian languages, the languages would disappear. Only Tamil would survive; but like virus affected software or looking  like a severely wounded soldier. No two clocks agree, and similarly no two languages are similar. The differences will always be there. And one can show some similarities between any two languages in the world. That wouldn’t mean that they belong to same group.

I will show more NEW similarities between Tamil and Sanskrit in another article.

-Long Live Tamil–

tags– Panini, naming

பதினெட்டு புராணங்களின் சாரம் இரண்டே வரிகளில்!(Post.8771)

<a href=”https://1.bp.blogspot.com/-

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8771

Date uploaded in London – – 4 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

பதினெட்டு புராணங்களின் சாரம் இரண்டே வரிகளில்!

ச.நாகராஜன்

புராணங்கள் 18. இவற்றைப் படிப்பதென்பது சாதாரணமாக முடியாத காரியம். தக்க ஒருவரிடமிருந்து பாடம் கேட்டால் தான் இந்த 18 புராணங்களின் உட்பொருளை உள்ளது உள்ள படி அறிய முடியும்.

ஆனால் இந்த 18 புராணங்களில் வேத வியாஸர் என்ன சொல்லி இருக்கிறார் என்பதை இரண்டே வரிகளில் சுருக்கமாகச் சொல்லி விடலாம் என்கிறது ஒரு சுபாஷித ஸ்லோகம்.

அஷ்டாதச புராணேஷு வ்யாஸஸ்ய வசனத்வயம் |

பரோபாகார: புண்யாய பாபாய பரபீடனம் ||

பதினெட்டு புராணங்களிலும் வியாசர் சொல்லி இருப்பது இரண்டு வரிகளைத் தான்! பிறருக்கு நல்லது செய்வது புண்யம்; பிறருக்குத் தீமை செய்வது பாவம்.

In the whole of the eighteen Puranas, Vyasa has observed only two sentences – doing good to others is meritorious, and hurting others is sinful.

               -Translation by Dr N.P.Unni

*

ஸ்ரோத்ரம் ஸ்ருதேனைவ ந குண்டலேன தானேன பாணீனம் ச கங்கணேன |

விபாதி காய: குணாபராணாம் பரோபகாரைனம் து சந்தனேன ||

காதுக்கு அழகாவது கற்றலே; குண்டலங்கள் அல்ல. கைக்கு அழகாவது தானம் கொடுத்தலே; கங்கணம் அல்ல! உடலுக்கு அழகூட்டுவது சந்தனம் அல்ல, மற்றவருக்கு செய்யும் பரோபகாரமே!

The ear is embellished by the learning and not by ear rings, the hands by the acts of donation and not by the bangles and the body is serving others and not by sandal pastes  – all this relates to the compassionate one.

Translation by Dr N.P.Unni

ஒத்ததறிவான் உயிர் வாழ்வான் மற்றையான்

செத்தாருள் வைக்கப்படும்

என்றார் வள்ளுவரும்.

இதையே ஸ்வாமி விவேகானந்தர்,

They alone live for others, the rest are more dead than alive

என்றார். (பிறருக்காக உயிர் வாழ்பவனே வாழ்பவன் மற்றவர் எல்லாம் உயிரோடு இருந்தாலும் இறந்ததற்குச் சமமே)

*

பிபந்தி நத்ய: ஸ்வயமேவ நாம்ப: ஸ்வயம் ந காதந்தி பலானி வ்ருக்ஷா: |

பயோமுசாம்ப: கிவசிதஸ்தி பாஸ்யம் பரோபகாராய சதாம் விபூதய: ||

நதிகள் தண்ணீரைத் தானே குடிப்பதில்லை, மரங்கள் தமது பழங்களைத் தாமே உண்ணுவதில்லை, மழைத் தண்ணீர் நீரைத் தனக்குத் தானே அடக்கி வைத்துக் கொள்வதில்லை. நல்லோர்களின் உடைமைகள் மற்றவருக்கு உதவி புரிவதற்காகவே உள்ளன.

Rivers never drink the water themselves, the trees never eat their fruits, the rain water never restrained, the properties of the good are for serving others.

Translation by Dr N.P.Unni

*

பவந்தி நம்ராஸ்தரவ: பலோத்கமைர்நவாம்புபிர்தூரவிலம்பினோ தனா: |

அனுத்ததா: சத்புருஷா: சம்ருத்திபி: ஸ்வபாவ ஏவைஷ பரோபகாரிணாம் ||

மரங்கள் பழுத்தவுடன் கிளைகளைத் தாழ விடுவதைப் பார்க்கிறோம், நீரை ஏந்தி இருக்கும் மேகங்கள் நீரின் கனத்துடன் மெதுவாக நகருகின்றன, நல்ல மனிதர்கள் செல்வத்துடன் இருக்கும் போது கர்வப்படுவதில்லை. இதுவே பிறருக்கு உதவி செய்பவரின் இயல்பாகும்.

Trees are seen bending their boughs when they put forth fruits, rain clouds move slowly with the weight of water, good people are devoid of pride when they are endowed with richness, this is the nature of men who are prone to helping others.

Translation by Dr N.P.Unni

tags — புராணங்களின் சாரம்

***

Swami Crossword 31020 (Post No.8770)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8770

Date uploaded in London – –3 OCTOBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

ACROSS

  1. -6 LETTERS— FLAG IN SANSKRIT
    5.—5—STORY IN SEVERAL INDIAN LANGUAGES
    8.—5—NO ORIGIN, NO BEGINNING
    9.—5— COLOUR; CASTE SYSTEM

DOWN

  1. – 5 LETTERS—INITIATION IN SANSKRIT
  2. – 6–GHOST IN VIKRAMADITYA STORY
  3. 5—WISDOM
  4. –8– ‘I’NESS; EGO, EGOISM
  5. – 6– PERPETUAL, ATTACHMENT
    7– 5—OLDEST RELIGION BASED ON VEDAS

–subham–

கந்தைத் துணி பற்றிய 6 பழமொழிகள் என்ன ? (Post. 8769)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8769

Date uploaded in London – –3 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

1.கந்தை ஆனாலும் கசக்கிக்கட்டு , கூழ் ஆனாலும் குளித்துக்குடி

2.கந்தையைக்  கட்டி வெளியே  வந்தால் கண்ணாட்டி

வெள்ளையைக்  கட்டி வெளியே  வந்தால் வெள்ளாட்டி 

3.கந்தைக்கு ஏற்ற பொந்தை , கழுவுக்கு ஏற்ற கோமுட்டி

4.கந்தைக்குச் சரடு ஒட்டுகிறது எல்லாம் பலம்

5.கந்தைத் துணியும் கரிக்கோலமும் ஆனான்

6.கந்தையை அவிழ்த்தால் குட்டி வெளிச்சம் தெரியும்.

tags- கந்தை

–subham–

பாணினியில் நான் கண்ட தமிழ் அதிசயங்கள் ! (Post No.8768)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8768

Date uploaded in London – –3 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பாணினியில் நான் கண்ட தமிழ் அதிசயங்கள்

2700 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்டு, உலகம் முழுதும் போற்றப்படும் பாணினீயத்தில் தமிழர்கள் மெச்சக் கூடிய பல அதிசய செய்திகள் உள்ளன.

கோழியிலிருந்து முட்டை வந்ததா அல்லது முட்டையிலிருந்து கோழி வந்ததா என்பதை போன்ற ஒரு கேள்வி தமிழில் உண்டு. தொல் காப்பியன் என்பவன் எழுதியதால் அந்தப் புஸ்தகத்துக்கு தொல்காப்பியம் என்ற பெயர் வந்ததா? அல்லது தொன்மையான ஒரு காப்பியத்தைச் செய்ததால் அந்த ஆசிரியருக்கு தொல்காப்பியன் என்ற பெயர் வந்ததா? என்ற ஒரு கேள்வி விவாதிக்கப்படுவதுண்டு. பாணினி ஆசிரியரும் உரைகாரர்களும் தெளிவாகச் சொல்லுகின்றனர். பாணினி எழுதியதால் அந்த நூலுக்கு பாணினீயம் என்று பெயர். அதில் எட்டு அத்தியாயங்கள் இருப்பதால் அதற்கு அஷ்டகம் என்றும் பெயர். ஆகையால் காப்பியக்குடியில் பிறந்த தொல்காப்பியர் என்பவர் எழுதியதால் இந்தப் பெயர் என்பது தெளிவாகிறது.

இப்படித்தான் பெயர் வைக்கவேண்டும் என்று பாணினி ஒரு சூத்திரமும் செய்துவிட்டார்

க்ரிதே க்ரந்தே 4-3-116

2700 ஆண்டுகளுக்கு முன்னர் புஸ்தகம்/கிரந்தம் இருந்ததற்கும் இது ஒரு சான்று பாணினி காலத்திலேயே பல புகழ்மிகு புஸ்தகங்கள் இருந்தன.

வரருசி எழுதிய ஸ்லோகங்கள் தொகுப்பு ‘வாரருசா ஸ்லோகாஹா’ ;

சுபத்ராவின் கதை –‘செளபத்ரா’ ;

யயாதியின் கதை –‘யாயாத’

கண்ணன் என்னும் குழந்தையின் அழு குரல் – ‘சிசுகண்டீய’

யமன் சபை பற்றிய கதை – ‘யம ஸபீய’

இந்திரனின் பிறப்பு பற்றிய கதை- ‘இந்திர ஜனநீய’

நூலின் ஆசிரியர் பெயரில் அமைந்தவை , நூல் சொல்லும் விஷயம் பெயரில் அமைந்தவை, நூலின் அத்தியாயம்/அளவின்  பெயரில் அமைந்தவை என்று நீண்ட பட்டியல் தருகிறார்

காண்க 4-3-68 முதல் 4-3-72 வரை .

காசியில் எழுதப்பட்ட நூல் – காசிகா ; இது மிகவும் புகழ்பெற்ற உரை.

XXXXX

ஐங்குறு நூறு , பதிற்றுப்பத்து , நாலடியார், திருக்குறள்

எட்டு அத்தியாயம் இருப்பதால் பாணினி நூலை அஷ்டகம் என்று அழைத்ததை அவருக்குப்பின்னர் வந்த உரைகாரர்கள் கூறினர். தமிழிலும் பதிகம் (10), சதகம் (100) என்பதை நூல் பெயர்களில் காண்கிறோம். 2000 ஆண்டுகளுக்கு முன்னர் சங்க காலத்திலேயே ஐங்குறு நூறு (5×100) , பதிற்றுப்பத்து (10X10) என்று எண்களின் பெயரில் நூல் செய்தனர். சங்ககாலத்துக்குப் பின்னர், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நாலடியார் (4 LINES) , திருக்குறள் (TWO LINES) என்று செய்யுள் அடிகளின் எண்ணிக்கை பெயரில் நூல்களை யாத்தனர் அல்லது தொகுத்தனர்  . இதற்கெல்லாம் மூலம் பாணினீயத்தில் உள்ளது.

வேதகாலத்திலேயே 100 அத்தியாயங்களைக் கொண்ட நூலை ‘சதபத பிராஹ்மணம்’ என்று அழைத்தனர்.

பாணினி இரண்டு நம்பர் நுல்களைக் குறிப்பிடுகிறார் 5-1-62

30 அத்தியாய நூல் – ‘த்ரைம்ச’

40 அத்தியாய நூல்- ‘சாத்வாரிம்ஸ’.

கௌசீதகி பிராஹ்மண  நூலில் 30 அத்தியாயங்கள் ;

ஐதரேய  பிராஹ்மண  நூலில் 40 அத்தியாயங்கள் ; ஆயினும் நம்பர் மூலமே அதைக் குறிப்பிட்டனர்

100 அத்தியாயங்களைக் கொண்ட சதபத பிராமண நூலிலும் கூட முதல் 60 அத்தியாயங்களை அறுபது என்று – ‘ஷஷ்டிபத’ — என்று அழைத்தனர். அதுமட்டுமல்ல நீ 40 படித்தவனா, அவன் 60 படிக்கும் மாணவன் என்ற பேச்சு வழக்குகளும் உண்டு.

பிற் காலத்தில் நாம் மாணிக்க வாசக சுவாமிகள் போன்றோரும் ‘எட்டும் இரண்டும்’ அறியவில்லையே என்று புலம்புவதை பார்க்கிறோம் .

ஆக எண்களைக் கொண்டு நூலுக்குப் பெயரிடுவது வேத கால வழக்கம். அதைத் தமிழரும் பின்பற்றினர் என்பதைப் பார்க்கையில் இமயம் முதல் குமரி வரை  ஒன்னு; அதை அறியாதவன் வாயிலே மண்ணு  என்று சொல்லத் தோன்றுகிறது.

XXXX

கண்ணகி, ஆதிமந்தி , மாதவி,புனிதவதி, திலகவதி

சம்ஸ்கிருதத்தில் பெண்கள் பெயர்கள் எல்லாம் ‘ஈ’ அல்லது ‘ஆ’- என்ற நெடில் எழுத்துக்களில் முடியும்.

தமிழில் பெண்கள் பெயர்கள் எல்லாம் ‘இ’ அல்லது ‘ஐ’ என்னும் குறிலில்  முடியும்.

சங்க கால ஆதிமந்தி, நப்பசலை, நச்செள்ளை , காமக் கண்ணி என்று அடுக்கிக்கொண்டே போகலாம் . சங்க காலப் பெயர்கள் என்று தமிழர்கள் கருதும்  கண்ணகி, மாதவி, மாதரி, ஐயை, (சிலப்பதிகாரம் கி.பி 132) வாசுகி பெயர்களிலும் இதைக் காணலாம். தேவார காலத்தில் புனிதவதி, திலகவதி என்ற ஸம்ஸ்க்ருதப் பெயர்களிலும் இதைக் காணலாம்.

பாணினி இரண்டு அதிசயங்களை நமக்குச் சொல்கிறார்.

பெண்பால் பெயர்கள் பற்றிச் சொல்கையில் இந்த ‘ஈ’ ஓட்டுக்களை விளக்குகிறார்.

அதிசயமான ஒற்றுமை தமிழிலும் பெண்கள் பெயர்கள் ‘இ’- யில் முடிவது! தமிழும் சம்ஸ்கிருதமும் ஒரே மூலத்தைக் கொண்ட மொழிகள் என்பதற்கு இன்னும் ஒரு சான்று . ஏனைய ‘வேற்றுமை’, ‘சாந்தி விதி’ ஒற்றுமைகளை முன்னமே விளக்கிவிட்டேன்.

இதில் இரண்டாவது அதிசய ஒற்றுமை என்னவென்றால் ஆண்களின் பெயர்களை பெண்களின் பெயராக மாற்றுவது எப்படி என்பதாகும் :-

பவ – பவானி , சிவ – ஷிவானி , ருத்ர- ருத்ராணி, , இந்திர – இந்திராணி , யவன – யவனானி

தமிழர்களும் இதே ‘இ’ முடிவைப் பின்பற்றுகிறார்கள்

குறவன்-குறத்தி, கிழவன் – கிழத்தி, ஆயன்- ஆய்ச்சி , இடையன்- இடைச்சி, உழவர்- உழத்தி, கடையர்- கடைசியர், நுளையன் – நுளைச்சி , மறவன்- மறத்தி

இப்படி  அடுக்கிக்கொண்டே போகலாம்.

பழைய மொழிகளில் தமிழுக்கும்- சம்ஸ்கிருதத்துக்கும் உள்ள ‘வேற்றுமை’, ‘சந்தி /புணர்ச்சி’ விதி, ‘பெயரிடும் ஒற்றுமை’யை உலகில் வேறு எந்த இரண்டு மொழிகளிலும் காண முடியாது. ஆகையால் மீண்டும் எனது ‘தியரி’ theoryயை அடித்துச் சொல்கிறேன் —

தமிழும் சம்ஸ்கிருதமும் இரண்டு வேறு மொழிகள் என்பதில் ஐயமில்லை.

ஆனால் திராவிட மொழிக்குடும்பம் என்பது பெரிய பித்தலாட்டம். இந்திய மொழிக் குடும்பத்தில் தமிழும் சம்ஸ்கிருதமும் இரண்டு கண்கள். ஒரே மூலத்தை உடையவை.

திராவிட மொழிக்குடும்பம் என்று கால்டுவெல்களும் மாக்ஸ்முல்லர்களும் பிதற்றியதை எவனாவது திரும்பிச் சொன்னால் “உடல், (Body parts and numbers)எண்கள், போ, வா சாப்பிடு , தூங்கு முதலிய முக்கிய (verbs) வினைச் சொற்கள் , நிறங்கள், (colours, pronouns) நான், நீ, அவன், அவள்” முதலிய  சொற்களில் 100 ஒற்றுமைகளைக் காட்டச் சொல்லுங்கள். பிராஹுய் (Brahui) என்னும் மொழி தமிழுடன் தொடர்புடையது என்று சொல்லும் ஆட்கள் மூன்று சொற்களுக்கு மேல் காட்ட முடியவில்லை. அதைவிட ஆயிரம் தமிழ்ச் சொற்கள் ஆங்கிலத்தில் உள்ளன.அவர்கள் ஆங்கிலமும் தமிழும் ஒரே குடும்பம் என்று ஏன் சொல்லவில்லை? அலெக்சாண்டர் படை எடுப்புக்கு முன்னரே கிரேக்க மொழியில் உள்ள சுமார் 30 சொற்களை நான் பட்டியலிட்டேனே . கிரேக்கமும் தமிழும் ஒன்றா?

பாணினீயத்தில் தமிழ்ச் சொற்கள் இருக்கின்றன! அதை இன்னும் ஒரு கட்டுரையில் தருகிறேன்.

tags– பாணினி, நான் கண்ட, தமிழ் அதிசயங்கள்,

–சுபம் —

Index of Articles of S.Nagarajan- September 2020 (Post .8767)

MORE PICTURES FROM SIVA PURANA

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8767

Date uploaded in London – – 3 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

Index of Articles of S.Nagarajan -September 2020

 1-9-20    8606  உதவிக் குறிப்புகள் – 13 (151-170)

 2-9-20     8611  பாரத ஸ்தலங்கள் – 11 

 3-9-20     8617 தீபாவளி பற்றி பாரதியார்! – 1 (ஞானமயம் 31-8-20 உரை)

 4-9-20     8623  தீபாவளி பற்றி பாரதியார்! – 2 (ஞானமயம் 31-8-20 உரை)

 5-9-20     8629  அவதூதர் கொண்டிருக்கும் 24 குருக்கள்! – 1

 6-9-20     8634   அவதூதர் கொண்டிருக்கும் 24 குருக்கள்! – 2

 7-9-20     8640  Index of articles of S.Nagarajan – August 2020

 8-9-20     8644  தமிழ் அபிமானி  – மஹாகவி பாரதியாரின் விளக்கம்  – 1

            (ஞானமயம் 7-9-20 உரை)

 9-9-20     8650   தமிழ் அபிமானி  – மஹாகவி பாரதியாரின் விளக்கம்  – 2

            (ஞானமயம் 7-9-20 உரை)

10-9-20    8656  நுண்ணறிவு நான்கு வழிகளில் கிடைக்கும் – சுபாஷிதம்!

11-9-20    8661  பாரதியாருடன் ஒரு சந்திப்பு!

12-9-20    8668  மஹாபாரதம் எத்தனை வருடங்களில் இயற்றப்பட்டது?

13-9-20    8673  அற்புத சிகிச்சை முறை அகுபிரஷர் – 2

14-9-20    8679  புத்தர் வழியில்!

15-9-20    8684  காயத்ரி மந்திர மஹிமை என்ன – 1 (ஞானமயம் 14-9-20 உரை)

16-9-20    8689  காயத்ரி மந்திர மஹிமை என்ன – 2 (ஞானமயம் 14-9-20 உரை)

17-9-20    8694  அழகிய பெண்ணுக்கு எது ஆபரணம்? (சிந்தூர விதவா லலாடே)

18-9-20    8700  காயத்ரி மந்திர மஹிமை – 24 அக்ஷரங்களின் மஹிமை

19-8-20    8705  லட்சம் புதிர்கள் – 12 (201-250 சைவம்)

20-9-20    8710  புனர்வசு நக்ஷத்திர மஹிமை (ஞானமயம் 14-9-20 உரை)

21-9-20    8715  பிரார்த்தனையின் மூலம் கிடைத்த இனிய குரல்

22-9-20    8718  தாஜ்மஹால் தேஜோ மஹாலயமாக இருந்ததா? (ஞானமயம்   

             21-9-20 உரை)

23-9-20    8724  வேதங்கள் எத்தனை? இன்று அவை உள்ளனவா? (ஞானமயம்

             21-9-20 உரை)

24-9-20    8729  திருமூலர் யோகமும், பதஞ்சலி யோகமும்! (ஞானமயம்

             21-9-20 உரை)

25-9-20    8733   போதிசத்வர் – நாணயத்திற்குக் கிடைத்த பரிசு!

26-9-20    8738  தெய்வீகப் பெண்களின் சாமுத்ரிகா லக்ஷணங்கள்!

27-9-20    8742  பழம் நீ அப்பா! (கொங்குமண்டல சதகம் பாடல் 22)

28-9-20    8746 18ஆம் நாள் போர் : சல்ய பர்வம் தரும் துர்நிமித்தங்கள்!

29-9-20    8751  சங்க இலக்கியங்களுக்கு யார் எழுதிய விரிவுரை சரியானது?

            (ஞானமயம் 28-9-20 உரை)

30-9-20    8754   மஹரிஷி ஆபஸ்தம்பர் – 1

TAGS– INDEX NAGARAJAN, SEPTEMBER 2020,

கத்தி பற்றிய 6 பழமொழிகள் என்ன ? (Post No.8766)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8766

Date uploaded in London – –2 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஒரே சொல் பல பழமொழிகளில் வந்தால், ஒரு இடத்தில் மட்டுமே கட்டத்தில் காணப்படும் .

விடைகள் கீழே உள்ளன.

கத்தி பற்றி 6 பழமொழிகள் என்ன?

விடைகள்:–

1.கத்தி இருக்கும் இடத்திற்கு மரை காவுகிறதா?

2.கத்தி எட்டின மட்டும் வெட்டும், பணம் பாதாளம் மட்டும் வெட்டும்.

3.கத்திகட்டிப் பெண்சாதி எப்போதும் கைம்பெண் சாதி

 4.கத்தியும் கடாவும் போல 

5.கத்திபிடிக்கு பிடித்தால் அரிவாள் பிடிக்கு வராதா?

 6.கத்தியைப் பார்க்கிலும் கணக்கோபம் கொலை செய்யும்.

SOURCE BOOK – பக்கம் 130, கழகப் பழமொழி அகரவரிசை , சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், 1970

tag– கத்தி

PANINI AND TAMIL TOLKAPPIAN (Post No.8765)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8765

Date uploaded in London – –2 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Panini , author of the world’s first grammar book Ashtadhyayi, gives lot of interesting information through his 4000 aphorisms (sutras) and the additional woks such as Ganapatha and Dhatupatha. It helps us the understand the life in India 2700 years ago

Tlkappian is the author of 2000 year old Tamil grammar Tolkappiam. Like Panini’s work is called Paniniyam, Tamils called Tolkappian’s work Tolkappiam.

In all cultures we see long names are shortened for day today conversation and it would be almost uniform in that area. For instance, my name is Swaminathan. All Swaminathans in Thanjavur Region are abbreviated as SAMA ( SAAMAA) English names such as Juliette and Samantha will be July , Sam etc.

Throughout Sanskrit grammar books they used Devadatta’s  name for all examples. Devadatta may be used in 11 different ways according to Panini and his commentator Patanjali.

Deva Datta’s name may be shortened in 11  different ways. It should be a Guinness book entry .

Panini says ,

Devadattaka ,Devika, Deviya , Devila, can be used. Patanjali who wrote the greatest and biggest commentary on Panini’s book adds,

Devaka , Dattika, Dattila , Dattiya , Dattaka , Deva , Datta . In total 11 forms are grammatically available.

So it is very interesting. Even if you commit some typographical errors you will be excused!!

(Devika is not feminine; in Sanskrit ‘a’ ending name is masculine. If it ends with ‘aa’ (long sound) then it is feminine. Krishna is one of the Avatars. But Krishnaa is Draupadi.)

***

Plan of a treatise

A book should have a plan. It is not a collection of articles written at different times on different unconnected topics. Like planning, presentation is also important. This plan is called tantra yukti.

The work of Kautilya / Chanakya has 32 tantra yuktis .

Charaka and Susruta also mentioned them, but Charaka added three more to the list .

The ancient Tamil grammar Tolkappiam , based on the tradition of the Aindra school , enumerates in its Porulatikaram section 32 principles of which 22 agree  with those of Kautilya.

The Mimamsakas with their flare for analysis have indicated the principles of a literary composition. Of these they have singled out ‘samgati’ inherent consistency or internal order and ‘mangala’ benedictory opening. These tantra yuktis were known to Panini. The first of these , ADHIKARA  is in three important Tamil works. It is Sanskrit word that is found in

Tirukkural, Silappadikaram and Tolkappiam .

Adhikara means domain heading – treatment of the matter within the purview of a work is referred to in Panini 4-3-87.i.e. A work that is composed in accordance with the principle od ‘adhikara’, or sense of the relevant. Tamil Veda Tirukkural has 133 adhikaras .  Silappadikaram has three major divisions. Tolkappiam has three adhikaras.

Panini’s own work is  model of  Vidhana or the treatment of topics in their inherent order.

***

Charaka

Another interesting detail about Charaka . We know one Charaka associated with the great book Charaka Samhita. Charaka means one who always wander; they are wandering professors going to different places for teaching. Now almost all universities have Charakas i.e. Visiting Professors . There are followers of Vedic Charaka in three different areas. We don’t know whether the medicine man Charaka and Vedic Charaka are one and the same.

–subham–

tags – Panini, Tolkappian, Charaka 

தொல்காப்பியத்தில் வடதிசை பற்றி முதலில் சொன்னது ஏன் ?—2(Post.8764)

HIMALAYAS BY RADHIKA BALAKRISHNAN

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8764

Date uploaded in London – –2 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

தொல்காப்பியத்தில் வடதிசை பற்றி முதலில் சொன்னது ஏன் ?—2(Post.8764)

கட்டுரையின் முதல் பகுதி நேற்று வெளியாகியது . நல்ல காரியங்களை முடிவு செய்யும்போது கிழக்கு அல்லது  வடக்கு திசையை நோக்கி உட்கார்ந்து அல்லது நின்று கொண்டு முடிவு செய்தல் மரபு என்ற அரிய விஷயத்தை நச்சினார்க்கினியர் குறிப்பிட்டதை நேற்று பார்த்தோம்.

உரை எழுதுவதில் மன்னன் நச்சி. .அவரை “உச்சி மேற் புலவர் கொள் நச்சினார்க்கினியர்” என்று ஆய்ந்தவிந்தடங்கிய கொள்கைச் சான்றோர் போற்றுவர். அவர் மேலும் ஒரு அதிசயச் செய்தியை சொல்கிறார்.

தொல்காப்பிய நூல் பாயிரத்தில் ‘வட வேங்கடம் தென் குமரி’ என்று ஏன் வடதிசையை முதலில் வைத்தனர் என்ற விவாதத்தில் நச்சினார்க்கினியர் கூறும் மேலும் ஒரு கருத்து இதோ :–

“தென்புலத்தார்க்கு வேண்டுவன செய்வார் தெற்கும் மேற்கும் நோக்கிக் கருமங்கள் செய்வார் ஆதலின் கூறப்பட்டது” என்கிறார்.

இதில் அதிசயம் என்ன வென்றால் தெற்கு யமனுடைய திசை என்பதும் தென்புலத்தார் என்பவர் இறந்து போன நம்முடைய முன்னோர்கள் என்பதும் வேதங்களிலும் சங்க இலக்கியங்களிலும் அதற்குப்பின் வந்த திருக்குறளிலும் உளது ;ஆனால் மேற்கு பற்றி நச்சினார்க்கினியர் சொல்லும் கருத்து எகிப்திய நாகரீகத்தில்தான் உளது.

சூரியன் மறையும் இருண்ட திசை; அதனால் அதை இறந்தோர்க்கு ஒதுக்கினர் என்று சிலர் விளக்கம் காணக்கூடும்; அது சரியல்ல என்பதற்கு நான் சொல்லும் காரணங்கள் இதோ :-

1. எகிப்திய பெயர்கள்- தமிழ் பெயர்கள் இடையே ஒற்றுமை உளது.

2.எகிப்திய முத்திரைகள் தமிழ் சித்தர்கள் முனிவர்கள் முத்திரை போல உளது.

3. எகிப்திய குள்ளர் தந்தத்தில் கிடைத்தது இந்திய முனிவர் போல உள்ளது

4. மிக முக்கியமாக, சூரியனை வானத்தில் ஓடும் படகு/ ஓடம் என்ற வர்ணனை அகநாநூற்றிலும் (மாமூலனார் பாடல்) எகிப்திலும் உளது. சம்ஸ்க்ருத இலக்கியத்தில் சூரியன் 7 குதிரை பூட்டிய ஒரு சக்கரத் தேரில் ஊர்பவன் என்ற கருத்தே உளது. அதையும் தமிழ் இலக்கியத்தில் காணலாம்.

5. இதைவிட முக்கியமாக ஆத்மாவை கூண்டுப் பறவை (Cage bird) என்ற வர்ணனையை திருக்குறளிலும் எகிப்திலும் காணப்படுகிறது; பகவத் கீதை போன்ற நூல்களில் பழைய உடைகளுக்கே உடல் ஒப்பிடப்படுகிறது. பறவைக்  கூண்டுக்கு அல்ல.

6. திருமூலர் கருத்து எகிப்தில் இருப்பதையும் முன்னர் கட்டுரைகளில் கண்டோம்.

சுருக்கமாகச் சொன்னால் சம்ஸ்கிருத நூல்களில் உள்ள கருத்துக்களோடு, கூடுதல் எகிப்திய – இந்திய ஒற்றுமையைக் காணப்படுகிறது. நச்சி . சொல்லும் இறந்தோர் திசை மேற்கு எனபது புதிய விஷயம்.

யக்ஷர்கள் (Hyksos) எகிப்து மீது படை எடுத்த விஷயம், தசரதன் எழுதிய கடிதங்கள் (Amarna Letters) எகிப்தில் இப்பொழுதும் மியூசியத்தில் உள்ளது என்பதெல்லாம்  நான் முன்னரே எழுதிய விஷயங்கள்தான்.

***

வடக்கு உணர்ந்தே தெற்கு உணரப்படுதலின் பிற்கூறப்பட்டது என்பர் அரசஞ் சண்முகனார்.

இனி தொல்காப்பிய பாயிரத்திலுள்ள பிற சுவையான செய்திகளைக் காண்போம்.

வட வேங்கடம் என்பது திருப்பதி வேங்கடாசலபதி உறையும் புனித மலை ; குமரித் துறையோ புனித நீராடும் துறை. (தேவாரத்திலும் சிலப்பதிகாரத்திலும் காண்கிறோம்). இதனால்தான் — புனிதம் கருதித்தான் —   இதைக் குறிப்பிட்டனர் என்று மிகப் பழைய உரை ஆசிரியரான இளம்பூரணர் எழுதுகிறார். சுருங்கச் சொன்னால் தமிழர்கள் என்பவர் இந்துக்களே ; சம்ஸ்கிருத நூல்களில் உள்ள கருத்துக்களே இமயம் முதல் குமரி வரை உள்ளதும என்று அடித்துப் பேசுகிறார் இளம்பூரணர். அதாவது தமிழையும் இந்துமதத்தையும் பிரிக்க எண்ணுவோருக்கு சாவுமணி அடிக்கிறார்.

நச்சினார்க்கினியர் மேலும் ஒருபடி போகிறார் :-

“நிலங்கடந்த நெடுமுடியண்ணலை நோக்கி உலகந் தவஞ்செய்து வீடு பெற்ற மலையாதலானும் , எல்லாராலும் அறியப்படுதலானும்  வேங்கடத்தை எல்லையாகக் கூறினார் . குமரியும் தீர்த்தமாகலின் எல்லையாகக் கூறினார். இவ்விரண்டும் காலையே ஓதுவார்க்கு நல்வினை (புண்ணியம்) உண்டாம் என்று கருதிக் கூறினார்” .

ஆக, மதுரை நகர பாரத்துவாஜ கோத்ர ப்ராஹ்மணன் நச்சினார்க்கினியர் இங்கே மேலும் ஒரு புதிய செய்தியை நமக்கு அளிக்கிறார். இந்துக்கள் 7 புனித நதிகள், 7 புனித நகரங்கள், 7 சிரஞ்சீ விகள் , 7 புனிதக் காடுகள், 5 புண்ய ஸ்திரீக்கள்/பெண்கள் பெயரை தினமும் காலையில் பிரா த ஸ்மரணத்தில் சொல்லுவார்கள். இன்றும் ஆர் எஸ் எஸ் ஷாகாக்களில் இதைக் கேட்கலாம். பல லட்சம் இந்துக்கள் தினமும் காலையில் சொல்லுவர்; இதில் இல்லாதவை குமரியும் வேங்கடமும். 7 என்பது ஒரு தொடக்கம்தான் . அவற்றைச் சொல்லுகையில் அதுபோன்ற பல்லாயிரம் புனிதம் மிக்க என்ற பொருளும் தொனிக்கும். அதில் குமரி , வேங்கடம் என்ற பெயரைக் காலையில் சொன்னால் புனிதம் என்பதால்தான் தொல்காப்பியத்தில் – பாயிரத்தில் – அது இடம்பெற்றது என்பது நச்சி. தரும் நல்ல செய்தி ; அவரை மெச்சிப்  போற்றுவோம்.

****

இவ்வாசிரியர் ‘அகத்தியனார்க்குத் தமிழை செவியறிவுறுத்திய செந்தமிழ்ப் பரமாசாரியனாகிய  அறுமுகக் கடவுள் வரைப்பென்னும் இயைபு பற்றி என்பது’ எனக்கூறுவர்.

(இவ்வாசிரியர் என்பது தொல்காப்பிய விருத்தி ஆசிரியர் மாதவ சிவஞான யோகிகள்/ முனிவர் என்று நான் நினைக்கிறேன் . முனிவரின் சொற்களுக்கு தண்டபாணி தேசிகர் கூறும் விளக்கப் பகுதியில் இவை உள்ளன )

****

அரசஞ் சண்முகனார் கருத்து :-

“வேங்கட மலையின் வடக்கிலிருந்து இமயமலை வரை ஆரியமும், வேங்கட மலையின் தெற்கிலிருந்தது குமரிமலை வரைத் தமிழும் பரவியிருந்த படியா லும், அக்காலத்து வடதிசைக்கண் கங்கை யாறும் இமயமலையும் போல தென்றிசைக்கண் பஃறு ளி யாறும் குமரி  மலையும் எல்லோரானும் அறியப்பட்டுக் கிடந்தமையின் வடக்கும் தெற்கும் பிறவெல்லையும் உளவாக அவற்றைக் கூறாமல் , எல்லாரும் உணர்தற்பொருட்டு மறைவின்றி நெடுந்தூரந் தோன்றற்பாலவாகிய  மலைகளைக் கூறினார் என்பர் .

****

ZOGILLA PASS IN THE HIMALAYAS BY RADHIKA BALAKRISHNAN

முடிவுரை

இதிலிருந்து நாம் பெறும் கருத்துக்கள் என்ன?

தமிழ் மொழி எக்காலத்தும் வட வேங்கட மலைக்கு அப்பால் — திருப்பதிக்கு அப்பால் வழங்கவில்லை. எமனோ, பர்ரோ , ஐராவதம் மகாதேவன் , அசுகோ பர்போலா சொல்வதெல்லாம் மஹா ‘பேத்தல்- உளறல்’;. வட திராவிட மொழிகள், மத்திய திராவிட மொழிகள்,  தென் திராவிட மொழிகள் என்பனவெல்லாம் மஹா ‘கப்ஸா’ . அங்குள்ள தமிழ் சொற்கள் என்று அவர்கள் கூறுவது போல உலகில் வேறு எந்த இரண்டு பழைய மொழிகளிலும் நான் சொற்களையும் காட்ட முடியும்; இலக்கண விதிகளையும் காட்ட முடியும் . அவையெல்லாம் ஒரு மொழியின் 100 சதவிகிதத்தில் 2 அல்லது 3 விழுக்காடே. ஜப்பானிய, கொரிய , ஆஸ்திரேலிய, ஆப்பிரிக்க செனகல் மொழிகளை ஒப்பிடும் கட்டுரைகளை படிக்கையில் எனக்கு சிரிப்புதான் வரும். உண்மையான நெருக்கம் தமிழுக்கும் சம்ஸ்கிருதத்துக்கும்தான் என்பதை சந்தி / புணர்ச்சி  விதிகள் காட்டுகின்றன. தேவாரமும் திருவிளையாடல் புராணமும் இரு மொழியும் ஒரே இடத்தில் தோன்றியவை என்பதைக் காட்டும்.

இரண்டாவது முக்கிய விஷயம், தமிழை சிவன், முருகன், அகத்தியனிடமிருந்து எவனாலும் பிரிக்க முடியாது. பழைய  உரைகாரர்கள் அனைவரும் இதை ஆதரிக்கின்றனர். தேவாரமும் திருவாசகமும் திவ்வியப்பிரபந்தமும் தெய்வத் தமிழ் என்பதை மீண்டும் மீண்டும் செப்புகின்றன.

மூன்றாவது முக்கிய விஷயம், இமயம் முதல் குமரி வரை புனித பூமி; நச்சி. சொல்லுவது போல ‘வடவேங்கடம் தென்குமரி’ என்று தொல்காப்பியத்தை படிக்கத் துவங்கினாலேயே  புண்ணியம்!!

கட்டுரையை முடிப்பதற்கு முன்பாக ஒரு எச்சரிக்கை. ‘ஆரியம்’ என்ற சொல் தேவாரம் முதல் தொல்காப்பிய விருத்திவரை காணப்படும் . இதன் பொருள் “பண்பட்ட” (மொழி, மக்கள் ) என்பதேயாம் என்பதை சங்க இலக்கிய தேவார உரைகளை படிப்போர் அறிவர் . கால்டு வெல்களும் மாக்ஸ்முல்லர்களும் பயன்படுத்தும் ‘விஷமேற்றிய சொல்’ (Polluted/poisoned) அல்ல. நேற்று வந்த கழிசடைகளை ஒதுக்கி விட்டு பழந்தமிழ் உரைகாரர்களை நம்புவோமாக.

வாழ்க தமிழ் !!

–சுபம்–

tags- வட திசை -2, தொல்காப்பியம் , நச்சினார்க்கினியர்