பாரத ஸ்தலங்கள் – 9; மூர்த்தி தலங்கள், பஞ்ச ஸாதாக்கிய வைப்புத் தலங்கள் (Post No.8424)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8424

Date uploaded in London – – –30  July 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

பாரத ஸ்தலங்கள் – 9

(64 மூர்த்தி தலங்கள் மற்றும் பஞ்ச ஸாதாக்கிய வைப்புத் தலங்கள்)

ச.நாகராஜன்

முக்கிய குறிப்பு : கீழ்க்கண்ட ஸ்தலங்கள் மஹாமஹோபாத்யாய உ.வே.சுவாமிநாதையர் அவர்களால் குறித்து வைக்கப்பட்டுள்ள ஸ்தலங்களாகும். அவரது குறிப்புகள் இங்கு அப்படியே தரப்பட்டுள்ளது.)

29. சிவபிரானின் 64 மூர்த்தி ஸ்தலங்கள்!

சிவபிரானுக்கு அட்டாட்ட மூர்த்த நாமங்கள், அதாவது 64 திருநாமங்கள் உண்டு. இந்த மூர்த்திகளுக்கான 64 ஸ்தலங்களும் உண்டு.

அவை பின்வருமாறு:

1. திருவிடைமருதூர்      இலிங்க மூர்த்தி

2.  அருணாசலம்          லிங்கோத்பவர்

3. கொட்டையூர்          முகலிங்கர் (திருமாணிகுழிக்கு அடுத்ததாக உள்ள  

                         தலம் ஒன்று, கரிவலம் வந்த நல்லூர்)

4. சிதம்பரம்              திருமூலட்டானம், பிரகாரத்தில் ஐந்து பீடங்கள்-

                         சதாசிவம்

5. மஹாஸதாசிவம்      ஸ்ரீ கண்டர் (ரூபம்)

6. கோனேரிராஜபுரம்      மூர்த்தி உண்டு. உமா மஹேஸ்வரர்

7. காழி                   சுகாசனர்

8. இடைமருது (மருதம்)   உமேசர்

9. திருவாரூர்             (தியாகர்) ஸோமாஸ்கந்தர்

10.புகலூர்                 சந்திரசேகரர்

11.திருவாவடுதுறை, ஐயாறு ரிஷபாரூடர்

12. ரிஷபாந்திகர்

13.பெரும்புலியூர்            புஜங்கலலித மூர்த்தி (பாம்பின் மீதாடல்,

                           முயலகன் இல்லை) 

14.களக்காடு                புஜங்கத்திராஸர் (கொள்ளம்புத்தூருக்கு மேற்கே

                           ஒரு மைல்)  

15.கைலாஸம்              4 மர்ம ஸந்தியாந்ருத்தர்

16.சிதம்பரம்                ஸதாந்ருத்தர்

17.குடந்தைக் கீழ்க்கோட்டம் அம்பிகை தாளம் போட ஆடல், அரசிலை

                           தொங்கல்: அம்பிகைதானம்  

18.இமயம்                  கங்காதர மூர்த்தி

19.கேதாரம்                 கங்கா விஸர்ஜனர்

20.அதிகை                  திரிபுராந்தகர்

21.வீழி                     கல்யாணசுந்தரர்,திரைலோக்சி, பனசை

22.செங்கோடு               அர்த்தநாரீஸ்வரர்

23.வழுவூர், பெருஞ்சேரி, செங்காட்டங்குடி    கஜயுத்தர்

24. சாட்டியக்குடி             ஜ்வராபக்கனர்

25. வழுவூர்                  சார்த்தூலஹரமூர்த்தி, கீர்த்திவாஸேஸ்வரர்

26. கொள்ளம்புதூர் முதலிய 64   பாசுபத மூர்த்தி

27. சீகாழி, சிறுபுலியூர்      கங்காளேஸ்வரர்

28. சங்கர நாராயணர் கோவில்   சங்கர நாராயணர் – கேசவார்த்தர்

29. வழுவூர்                பிக்ஷாடனர்

30. திரிபுவனம் (சரப மூர்த்தி)   ஸிஹ்மக்நர்,  தாராசுரம்

31. திருவாப்பாடி            சண்டேசானுக்கிரஹர்

32. ஆலங்குடி முதல்   12 தக்ஷிணாமூர்த்தி

33. குறுக்கை          யோக தக்ஷிணாமூர்த்தி

34. வீணா தக்ஷிணாமூர்த்தி

35. கடவூர்      காலாந்தக மூர்த்தி

36. குறுக்கை     காமதஹனர்

37. திருவானை, சத்தி முத்தம், காஞ்சி       லகுனேஸ்வரர்

38. காசி முதல் 16 பைரவர்

39. காழி    ஆபத்தோத்தாரணர்

40. காழி     வடுகர்

41. க்ஷேத்திரபாலபுரம்    தனி பைரவர்

42. பெருந்துறை    வீரபத்திர மூர்த்தி

43. வெண்காடு அகோராஸ்திர மூர்த்தி

44. பறியல் தக்ஷயக்ஞ ஹத மூர்த்தி

45. திருக்கொள்ளம்பூதூர்   சிநாத மூர்த்தி – திருக்குடந்தை

46. பெருந்துறை, தேரழுந்தூர்     குருமூர்த்தி

47. பெருந்துறை, மதுரை, வீழிமிழலை   அசுவாரூடர்

48. வெண்காடு, கோட்டாறு, மருத்துவக்குடி  கஜாந்திகர்

49. விற்குடி     சலந்தரவத மூர்த்தி

50. இடைமருது    ஏகபாததிரி மூர்த்தி

51. இடைமருது    திரிபாததிரி மூர்த்தி

52. தப்பளாம்புலியூர்   ஏகபாத மூர்த்தி

53. காஞ்சி, இடைமருதூர்   கௌரீவரப்ரத மூர்த்தி

54. வீழிமிழலை   சக்கரதானஸ்வரூப மூர்த்தி

55. பூவனூர், மந்தரம்   கௌரீலீலாசமனுவிதர் – தேரழுந்தூர்

56. கொண்டீசுவரம், நஞ்சுண்டேசுவரம், மண்ணிப் படிக்கரை   விஷபாஹரணர்

57. நாகநாதம், பட்டீசுவரம்    கருடாந்திகர்

58. கண்டியூர்    பிரஹ்ம சிரச்சேதம்

59. கச்சபாலயம் (காஞ்சி)   கூர்ம ஸம்ஹாரம்

60. மச்ச ஸம்ஹார மூர்த்தி

61. பழமலை, காசி    வராஹ ஸம்ஹாரமூர்த்தி

62. உருத்திர கங்கை முதலியன பிரார்த்தனா மூர்த்தி

63. காசி   ரக்தபிக்ஷாப்ரதானர்

64. சாமி மலை, பேணு பெருந்துறை    சிஷ்ய பாவ மூர்த்தி

30. சிவபிரானின் பஞ்ச ஸாதாக்கிய ஸ்தலங்கள்!

1.  சிவ ஸாதாக்கியம்         மஹாகைலாஸம்

2.  அமூர்த்தி ஸாதாக்கியம்   பெருந்துறை

3.  மூர்த்தி ஸாதாக்கியம்     தில்லை நடராஜர்

4.  கர்த்துரு ஸாதாக்கியம்    ஸோம சுந்தரர்

5.  காம ஸாதாக்கியம்        காசி, கேதாரம்

tags- பாரத ஸ்தலங்கள் – 9;,64 மூர்த்தி தலங்கள்,

***

INDEX 25 எஸ்.நாகராஜன் கட்டுரை இன்டெக்ஸ் -25 (Post No.8423)

PICTURE POSTED ON FACE BOOK BY GEETHA SWAMINATHAN TODAY 29720

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8423

Date uploaded in London – – –29 July 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

இந்தப் பட்டியலை பிரிண்ட் செய்து வைத்துக் கொண்டால் உங்களுக்குத் பிடித்த கட்டுரைகளை நேரம் கிடைத்தபோது படிக்கலாம்

கட்டுரைகளை பிளாக்கில் பெறுவது எப்படி?

பிளாக்கிற்குப் போய் தேடுவதை விட கூகுளில் (google) தேடுவது எளிது. கட்டுரையின் தலைப்பை காப்பி copy  செய்து கூகுளில் பேஸ்ட் paste செய்யுங்கள் . அதன் பிறகு ஆங்கிலத்தில் from tamilandvedas.com  என்று எழுதி க்ளிக் (click) செய்யுங்கள்.

 from swamiindologly.blogspot.com

என்று எழுதியும் பெறலாம்.

எடுத்துக்காட்டு:

     இயற்கையின் கணித ரகசியம்- 1 from tamilandvedas.com

  இயற்கையின் கணித ரகசியம்- 1      from swamiindology.blogspot.com

நீங்கள் சிறு பிழை விட்டாலும் நீங்கள் எதிர்பார்த்தது கிடைக்காமல் வேறு விஷயம் வரும். அதில் நேரத்தை வீணடிக்காமல் மீண்டும் ஒரு முறை சரியாக எழுதி முயற்சி செய்யுங்கள். இரண்டு பிளாக்குகளில் ஒன்றில் கிடைத்து விடும்

கட்டுரை பெறுவதில் ஏதேனும் சிக்கல் இருந்தால் எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள் .

 BONALU FESTIVAL IN SECUNDERABAD, ANDHRA EVEN YEARS AGO.

January 2014

    ஜனவரி          ஸ்வர்ண லோகம் – 23 மேலும் சில ஜென் கதைகள் -1

                                சம்ஸ்கிருதச் செல்வம் – 20

            சம்ஸ்கிருதச் செல்வம் – 21

            சம்ஸ்கிருதச் செல்வம் – 22

Februry 2014

                               சம்ஸ்கிருதச் செல்வம் – 23 கண்ணனின் பக்தி அறம் பொருள்

            இன்பம் முக்தி தரும்!  

            ஸ்வர்ண லோகம் – 24 மேலும் சில ஜென் கதைகள் – 2

            சம்ஸ்கிருதச் செல்வம் – 24 சூரிய உதயம், அஸ்தமனம் கண்டு  

            உத்வேகம் பெறலாம்!

  5-2-14    818 ?     ஸ்வர்ண லோகம் – 25 மேலும் சில ஜென் கதைகள் -3

  6-2-14    822        சம்ஸ்கிருதச் செல்வம் – 25 அறிவு வளரும் விதம்!    

  7-2-14    825     ராமாயண வழிகாட்டி- 15      

  9-2-14    829     ஸ்வர்ண லோகம் – 26 மேலும் சில ஜென் கதைகள் – 4

  9-2-14    830     சம்ஸ்கிருதச் செல்வம் – 26 ஐந்து பெயர்களின் பெயரைக்

            கூறாதே! ஐந்து விதமாகப் பேசாதே!

11-2-14    833    ஸ்வர்ண லோகம் – 27 வாழ்வையும் சாவையும் புரிந்து

            கொள்ளுங்கள்!

15-2–14  841     சம்ஸ்கிருதச் செல்வம் – 27 ஐந்து ‘ஜ’காரமும் ஐந்து ‘வ’காரமும்!

15-2–14  842     சம்ஸ்கிருதச் செல்வம் – 28  லலலலல ஐந்து ‘ல’கார மனைவி!

18-2–14  848 ?  சம்ஸ்கிருதச் செல்வம் – 29 மனைவிகளின் பெருமையும், லேக

            தோஷமும்!

19-2–14  851     சம்ஸ்கிருதச் செல்வம் – 30 பசுவும், பாம்பும்!

22-2–14  857     சம்ஸ்கிருதச் செல்வம் – 31 எது அழகு?

24-2–14  861     ராமாயண வழிகாட்டி – 16

26-2–14  867     சம்ஸ்கிருதச் செல்வம் – 32 அஹிம்சையே உயர்ந்த தர்மம்!

INDIAN NAVY

March 2014

  5-3-14    888     ராமாயண வழிகாட்டி- 19      

  6-3-14    889     அடியார்கள் வானில் அரசாள ஆணையிட்ட அற்புதர் சம்பந்தர்!

            (ஞான ஆலயம்  செப்டம்பர் 2013 கட்டுரை)!

13-3-14    904     கடவுளும் கம்ப்யூட்டரும்!

19-3-14    916    ராமாயண வழிகாட்டி- 20

25-3-14    930     கிருஷ்ணார்ஜுனர் – பரமஹம்ஸ விவேகானந்தர் அவதார

            ரகசியம்!

April 2014

   3-4-14    951     அபாய நோயிலிருந்து பிரபஞ்ச ஆற்றலால் மீண்டவர்!           

            (ஞான ஆலயம் ஜூன் 2013 கட்டுரை)

10-4-14    969     ராமாயண வழிகாட்டி- 21 ராமம் ஸத்ய பராக்ரமம்!    

17-4-14    984     ராமாயண வழிகாட்டி- 22 கோசலையின் ஆசீர்வாதம்!

18-4-14    986     ராமாயண வழிகாட்டி- 23 சீதை சொன்ன காகாஸுரன் கதை!

19-4-14    988A   ராமாயண வழிகாட்டி- 24 மண்டோதரியின் மாண்பு!

28-4-14  1007     ராமாயண வழிகாட்டி- 25

OUR SOLDIERS GUARDING US FROM CHINESE ATTACK 

May 2014

   2-5-14   1015  ராமாயண வழிகாட்டி- 26 ராமாயணம் தோன்றியது எப்படி?

 6-5-14   1024     இயற்கையின் கணித ரகசியம்- 1 (பாக்யா 11-4-14 அ.து. 163)

  7-5-14   1026     இயற்கையின் கணித ரகசியம்- 2 (பாக்யா 18-4-14 அ.து. 164)

  8-5-14   1029     இயற்கையின் கணித ரகசியம்- 3 (பாக்யா 25-4-14 அ.து. 165)

  9-5-14   1104     ஹனுமானுக்கும் ராமருக்கும் நடந்த போட்டியில் வென்றது

             யார்? (ஞான ஆலயம் ஏப்ரல் 2014 கட்டுரை)

11-5-14   1035     ஆன்ம ஞானம் பெற அதி சுலபமான வழி! (யோக வாசிஷ்டம்)    

17-5-14   1047     ராமாயண வழிகாட்டி- 27 ராமாயணம் சௌபாக்யம், பாபநாசனம்,

             வேத சமம்!

18-5-14   1049     வித்தியாசமான விஞ்ஞானி யுங் – 1 (பாக்யா கட்டுரை)

20-5-14   1053     வித்தியாசமான விஞ்ஞானி யுங் – 2 (பாக்யா கட்டுரை)

22-5-14   1057     வித்தியாசமான விஞ்ஞானி யுங் – 3 (பாக்யா கட்டுரை)

25-5-14   1063     வித்தியாசமான விஞ்ஞானி யுங் – 4 (பாக்யா கட்டுரை)

28-5-14   1069     வித்தியாசமான விஞ்ஞானி யுங் – 5 (பாக்யா கட்டுரை)

June 2014

   4-6-14   1084  சங்க இலக்கியத்தின் படி –  ஒவ்வொரு தமிழனும் ஒரு

             ஜோதிடனே!

   5-6-14   1086     சங்கத் தமிழ் முழங்கும் ஜோதிட உண்மைகள்!

11-6-14   1098     ஏற்றம் தரும் ஏலாதி – 1 (லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர்

             2014)

 12-6-14   1101     ஏற்றம் தரும் ஏலாதி – 2 (லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர்

             2014)

13-6-14   1104     நேராகப் படித்தால் ராமாயணம்; தலைகீழாகப் படித்தால் மஹா

             பாரதம்!

14-6-14   1106     சரஸ்வதி மஹால் வெளியிட்ட பிரகதீஸ்வர மாஹாத்மியம்!    

19-6-14   1117     ஒளியின் வேகத்தைத் துல்லியமாக உரைக்கும் ரிக்வேதம்!

             (ஞான ஆலயம் மே 2014 கட்டுரை)

INSPIRING TAMIL POET BHARATI ON T SHIRT

TO BE CONTINUED…………………………………………………………………….

TAGS – INDEX 25 ,எஸ்.நாகராஜன் கட்டுரை, இன்டெக்ஸ் -25,

ஆயிரம் இலக்கண நூல்கள்! 2000 வினைச் சொற்கள் !! (Post No.8422)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8422

Date uploaded in London – 29 July 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

சம்ஸ்க்ருத மொழி பற்றிய வியப்பான தகவல்களைக் கேட்டால் இதுதான் உலகிலேயே பழைய மொழி என்று தலையில் அடித்துச் சத்தியம் செய்யலாம் . என்ன  ஐயா, ஆதாரம்? என்று பலரும் வினவலாம் . இதோ விடை பகர்வேன் .

உலகில் ஒரு இனத்தின் பெயர் இல்லாத ஒரே பழைய மொழி சம்ஸ்கிருதம். சீன  தமிழ், லத்தின், கிரேக்க, பாரசீக , எபிரேய மொழிகள் அந்தந்த இனத்தின் பெயரால் அமைந்தவை; அதாவது குறுகிய பூகோள எல்லைக்குட்பட்டவை ; சம்ஸ்கிருதம் உலக மக்கள் அனைவர்க்கும் சொந்தம்.

மேலும் பேச்சு மொழியான , அதாவது கொச்சசையான சம்ஸ்கிருதமான பிராக்ருதத்தில் அசோகர் கல்வெட்டுகளை வெளியிட்டார் . அவருக்கு 400 ஆண்டுகளுக்குப் பின்னர் வந்த ருத்ரதாமன் (RUDRA DAMAN) என்ற மன்னன் துணிச்சலாக , மிக நீண்ட சம்ஸ்கிருத மொழி கல்வெட்டை கி.பி.150ல் வெளியிட்டான். அடுத்த நிமிடத்தில் வியட்நாமில் ஒரு சம்ஸ்கிருத கல்வெட்டு; அடுத்த நொடியில் போர்னியோ காட்டுக்குள் ஒரு சம்ஸ்கிருத கல்வெட்டு. என்ன அதிசயம்!! பல ஆயிரம் மைல்களுக்கு சம்ஸ்கிருதம் எதிரொலித்தது.

அதாவது ருத்ரதாமனின் எழுத்து பல லட்சம் சதுர மைல்களுக்குப் பரவ 150 ஆண்டுகள்தான் பிடித்தன. இந்தப் புதிருக்கு என்ன விடை ? உலகம் முழுதும் எல்லா அறிஞர்களுக்கும் சம்ஸ்க்ருதம் தெரியும் ; உண்மையில் அங்கு எல்லாம் அதற்கும் முன்னரே சம்ஸ்கிருதம் இருந்ததது. ஆனால் கற்களில் பொறிக்கவில்லை .

ஆனால்  இதைவிட அதிசயம் இப்போது துருக்கி நாட்டிலுள்ள , சிரியாவின் எல்லையிலுள்ள போகஸ்கொய (Bogazkoy) என்னும் இடத்தில் கி .மு 1380-ல் கைச் சாத்திடப்பட்ட ஒரு களிமண் கல்வெட்டு கிடைத்துள்ளது. அதில் ரிக்வேத மந்திரத்தில் என்ன வரிசையில் தெய்வங்கள் சொல்லப்பட்டதோ அதே வரிசையில் இந்திரன் மித்ரன் வருணன், நாஸத்யர்கள் (அஸ்வினி தேவர்கள்) எழுதப்பட்டுள்ளன. ஆகையால் இன்று உலகில் பயன்படும் மொழிகளில் சம்ஸ்கிருதக் கல்வெட்டே பழமையானது. இதை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் தசரதன் கடிதங்கள் (Dasaratha or Amarna letters in Egypt) எகிப்தில் கிடைத்தன. கி.மு 1400 முதல் நிறைய சம்ஸ்கிருதப் பெயர்கள் கல்வெட்டில் கிடைத்திருக்கின்றன.

ஆக சம்ஸ்கிருதம் கல்வெட்டில் புகுந்தது கி.மு 1400ல். அப்போது , மோசஸ் சொன்ன பத்து கட்டளைகள்  பிறக்கவில்லை; கிரேக்க மொழி இலக்கியம் பிறக்கவில்லை; தமிழ் மொழி இலக்கியம் பிறக்கவில்லை ;லத்தின் மொழி இலக்கியம்  பிறக்கவில்லை. சீன மொழியில் தனிப்பாடல்கள் கொஞ்சமிருந்தன

இது ஒரு புறமிருக்க, ஒரு  நாட்டின் மொழி வளர்ச்சிக்கு சான்றாக இலக்கண ஆசிரியர்களும்  இலக்கண நூல்களும் இருக்க வேண்டும். நம் தாய் மொழியான தமிழில் தொல்காப்பியருக்கு சம காலத்தவராக 12 பேர் இருந்தனர். அவர்களுடைய நூல்கள் எல்லாம் அழிந்து போயின. ஆயினும் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த தொல்காப்பியர் அவர்களுடைய பெயர்களைச்  சொல்லாமல் 200 இடங்களில் “என்மனார், என்ப, மொழிப , மொழிமனார்” என்று கதைக்கிறார்  அதாவது பழைய இலக்கண ஆசிரியர்களின், குறிப்பாக அகத்தியரின் கூற்று .

பாணினி என்ற உலகப் புகழ் சம்ஸ்கிருத இலக்கண வித்தகர் 2700 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்ததை கோல்ட்ஸ்டக்கர் (Theodor Goldstucker) என்ற யூத மத சம்ஸ்கிருத அறிஞர் நிரூபித்துள்ளார் . அவர் சம காலத்து கிறிஸ்தவ சம்ஸ்கிருத அறிஞரான மாக்ஸ் முல்லரை கிழி கிழி என்று கிழிக்கிறார் . இருவரும் ஜெர்மனியில் பிறந்தவர்களே . லண்டனில் வாழ்ந்தவர்கள்.

பாணினிக்கு முன்னர் 68 சம்ஸ்கிருத ஆசிரியர்கள் இருந்தனர். இவர்களின் பெயர்களை பர்னல் (Burnell) , மாக்ஸ்முல்லர் (Max Muller)  நூல்களில் காண்கிறோம் . பாணினி கூட பல சம்ஸ்கிருத ஆசிரியர் பெயர்களைச் சொல்கிறார். வடக்கத்திய ,கிழக்கத்திய மொழிப் பிரயோகங்களையும் ஆங்காங்கே சுட்டிக்காட்டுகிறார். இன்றுவரை சம்ஸ்கிருத மொழியில் ஆயிரம் இலக்கண நூல்கள் வந்துள்ளன . இவையெல்லாம் சம்ஸ்கிருதம்தான் உலகிலுள்ள மொழிகளில் பழமையானது என்பதைக் காட்டுகின்றன.

அப்படியானால் ரிக்வேதம் என்பது 6000 ஆண்டுகளுக்கு முந்தையது; மாக்ஸ்முல்லர் சொன்னது தவறானது என்று தெரிகிறது. ரிக் வேதத்தை வான சாஸ்திர குறிப்புகளின் அடிப்படையில் கி.மு 4000 முதல் கி.மு 6000 வரை பால கங்காதர திலகரும் (B G Tilak)  ஜெர்மானிய அறிஞர் ஹெர்மன் ஜாகோபியும் (Herman Jacoby)  தேதி குறித்துள்ளனர்

அது போகட்டும் ; சம்ஸ்கிருதத்தில் 2000 வினைச் சொற்கள் இருந்ததை பாணினி கால நூல்கள் காட்டுகின்றன. ஆயினும் சுமார் 700 வருடங்களுக்குப் பின்னர் பாணினியின் புஸ்தகத்துக்கு பேருரை – மஹா  பாஷ்யம் — எழுதிய பதஞ்சலி முனிவர் காலத்தில் (150 BCE) சம்ஸ்கிருதத்தில் 800 வினைச் சொற்களே உபயோகத்தில் இருந்தன . இதைக் குறிப்பிடும் பதஞ்சலி முனிவர் ஏனைய 1200 வினைச் சொற்களை கற்பனை என்று கருதிவிடக்கூடாது என்றும் நம்மை எச்சரிக்கிறார் . அதாவது காலக்கிரமத்தில் நிறைய சொற்கள் வழக்கொழிந்து போகின்றன.

இதற்குத் தமிழிலும் எடுத்துக்காட்டுகள் உள . தமிழில் தொல்காப்பியருக்குப் பின்னர் சுமார் 20 இலக்கண நூல்கள் வந்தன. ஏன் ? மாற்றங்கள் ஏற்பட்டவுடன் அதை விளக்கவும் புது விதிகளை சொல்லவும் அவை உதவுகின்றன.

தொல்காப்பியர் நீண்ட உவமை உருபுப் பட்டியல்  தருகிறார். அதில் ‘போல’, ‘அன்ன’ (மாதிரி) என்ற சில சொற்களையே சங்க இலக்கியப் புலவர்கள் பயன்படுத்தினர். நிறைய உவமை உருபுகள் சங்க இலக்கியத்தின் 30,000 வரிகளில் இல்லை. திருக்குறளின் 2660 வரிகளில் இல்லை. இது எதைக் காட்டுகிறது?

தாங்கள் புதிய இலக்கண நூல்கள் இயற்றினாலும் பழங்காலத்தில் இப்படி எல்லாம் இருந்திருக்கிறது என்று காட்டுவது மரபு என்பதைக் காட்டுகிறது.

உலகில் முதல் முதல் சொற்பிறப்பியல் (Etymology) நூல் எழுதியவர் (Yaska) யாஸ்கர். இவரை வெள்ளைக்காரர்கள் கி.மு.850-ல் வாழ்ந்தவர் என்பர் . அவரே 400 வேத சொற்களுக்கு அர்த்தம் கிடைக்கவில்லை என்கிறார். இதை நமக்கு எடுத்துச் சொன்னவர் மொழியியல் அறிஞரான அரவிந்த மகரிஷி .

ஆக சம்ஸ்கிருதம்தான் உலகின் பழைய மொழி என்பதற்கு உலகின் மிகப்பழைய கல்வெட்டு, பாணிணிக்கு முந்தைய 68 ஆசிரியர்கள், 1000 சம்ஸ்க்ருத இலக்கண நூல்கள் , 2000 வினைச் சொற்கள் , யாஸ்கர் காலத்திலும் பதஞ்சலி காலத்திலும் வழக்கொழிந்து போன சொற்கள் பட்டியல் ஆகியன சான்று பகர்கின்றன.

இதற்கெல்லாம் ஆதாரம் வேறு எங்காவது இருக்கிறதா?

புறநானுற்றிலும் பிருஹத் ஆரண்யக – பெருங்  காட்டு –  உபநிஷத்திலும் இருக்கிறது

இருங்கோ வேள் பற்றிப் பேசும் கபிலர் , “உன்னைத் தெரியுமேடா ? உங்க அப்பனையும் தெரியுமேடா ! நீ 49 தலைமுறைக்கு முன்னர் கண்ணன் ஊரான துவாரகையிலிருந்து வந்தவன்தானேடா” என்று பாடுகிறார் (புறம் 201) . அதியமானைப் பாடிய அவ்வையாரும் “டேய் உன்னையும் தெரியும், உங்க அப்பனுக்கு அப்பனான சுப்பனையும் எனக்குத் தெரியும்டா; கரும்பைக் கொண்டுவந்தவர் உன் மூதாதையர்” என்கிறார்; ராமனின் சூரிய குல முதல் மன்னன் பெயர்  இக்ஷ்வாகு ; தமிழில் ‘கரும்புத் தடியன்’ அல்லது ‘வெல்லப் பாகு’ எனலாம்.

சிந்து -ஸரஸ்வதி நதி தீர  நாகரீகத்தில் சர்க்கரை கிடைத்திருப்பதால் இக்ஷ்வாகு அங்கே இருந்திருப்பார் ; அல்லது அவர்களின் வழிவந்தோர் சிந்துப் பிரதேசத்தை ஆண்டிருப்பர். மஹாபாரத யுத்தத்தில் பங்கு கொண்ட சிந்து தேச ராஜாக்கள் அனைவரும் சம்ஸ்கிருதப் பெயர்கள் உடையோர்தான் .

இதற்கு முந்தைய பெருங்காட்டு — பிருஹத் ஆரண்யக – உபநிஷத்துக்கு வெள்ளைத்தோல் அறிஞர்கள் சுட்டும் காலம் கி.மு 850. அவர்கள் யார் யார் இந்த உபனிஷத் ரகசியத்தை வழி வழியாகச் சொல்லிக் கொடுத்தனர் எனப்தில் சுமார் 60 தலை முறைகளைக் கூறுகின்றனர். அவ்வளவு தலைமுறைகளையும் பெயர் சொல்லி பட்டியல் போட்டுள்ளனர். பல ரிஷிகளின் பெயர்கள் வேறு எந்த இந்துமத நூலிலும் இல்லை ; அவ்வளவு பழமையானது ; ஒரு தலை முறைக்கு 30 ஆண்டுகள் வைத்தாலும் 1800 ஆண்டுகள்; அத்தோடு கி.மு 850ஜக் கூட்டினால் 2650 ஆண்டுகளுக்கு முன்னர் போய்விடுவோம். அதாவது சிந்து-சரஸ்வதி நதிக்கரை நாகரீகத்துக்குப் போய்விடுவோம்.

ஆக இலக்கிய, தொல் பொருட் துறை, வரலாற்றுச் சான்றுகள் (கி.மு 1500 வாக்கில் கடலில் மூழ்கிய துவாரகை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது ) கிடைத்திருப்பதால் சம்ஸ்கிருதமே உலகின் பழைய மொழி என்று எவர் தலை மீது அடித்தும் சத்தியமாகச்  சொல்லலாம்  . காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் (1894-1994) எழுதிய சம்ஸ்கிருதப் பாடல் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் இனிய வாய்ப்பாட்டு மூலம் உலகெங்கும் ஒலித்ததும் டாக்டர் ராகவன் நமது காலத்தில் எழுதிய சம்ஸ்கிருதப் படைப்புகளும் , கர்நாடகத்தில் ஒரு பிரதேசம் முழுதும் சம்ஸ்கிருதத்தில் பேசுவதும். உலகம் முழுதும் சம்ஸ்கிருதத்தை மாணவர்கள் கற்பதும் , சம்ஸ்கிருதத் சொற்களை நீக்கினால் தமிழ் மொழியில் பாதி அல்லது முக்கால்வாசி பழந்  தமிழ் நூல்கள் அழிந்து போகும் , சிதைந்து போகும் என்பதும் சம்ஸ்கிருதம் உயிருள்ள மொழி, உலகின் மிகப்பழைய மொழி என்பதற்கு சான்று பகரும்

தமிழும் சம்ஸ்கிருதமும் இந்தியத் தாயின் இரு கண்கள்.

வாழ்க தமிழ், வளர்க சம்ஸ்கிருதம்

tags — ஆயிரம், இலக்கண நூல்கள்,  வினைச் சொற்கள் ,

வீடு பற்றிய 5 பழமொழிகள் கண்டுபிடியுங்கள் (Post No.8421)

WRITTEN BY LO

NDON SWAMINATHAN

Post No. 8421

Date uploaded in London – 29 July 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஒரே சொல் மீண்டும் மீண்டும் வந்தால் ஓரிரு இடங்களில் மட்டுமே கட்டத்தில் இருக்கும். கொண்டு கூட்டி பொருள் கொள்க . விடை கீழே உள்ளது . சில நேரங்களில் படங்களைப் பார்த்தாலும் விடை காண உதவலாம்.

ANSWER

1.வீட்டுக்கு வீடு  வாசற்படி.

2.கட்டியவனுக்கு ஒரு வீடு , கட்டாதவனுக்கு ஊரெங்கும் வீடு

3.கட்டின வீட்டுக்கு எட்டு வக்கணை

4.வீட்டைக் கட்டிப் பார், கலியாணம் செய்து பார்

5.வீடு பற்றி எரியும்போதா கிணறு வெட்டுவது?

Source book :–

பயன்படுத்திய நூல்- கழகப் பழமொழி அகர  வரிசை, கழக வெளியீடு

Tags- ,  பழமொழிகள், வீடு

கம்ப்யூட்டர் கவசம் (Post No. 8420)

COMPILED  BY LONDON SWAMINATHAN

Post No. 8420

Date uploaded in London – 29 July 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பெரிய கம்பெனிகளில் உள்ள கம்ப்யூட்டர் ஊழியர்கள் , அவர்கள் வாங்கும் சம்பளத்தை நியாயப்  படுத்துவதற்காக சாப்ட்வெர் அப்டேட் (Software Update) செய்து நம்மைத் தொல்லைக்கு உள்ளாக்குகிறார்கள். உடனே அப்டேட் Update செய் என்று நம்மை மிரட்டவும் செய்கிறார்கள். அவர்களுக்கு அடிபணிந்து அப்டேட் செய்தலோ நாம் முன்னர் செய்த வேலை எல்லாம் கண்டபடி மாறும் அல்லது மறையும். இன்னும் சில கம்ப்யூட்டர்களோ எழுதியதை எல்லாம் சேவ் SAVE செய்யாமல் நம்மைக் காராசேவை ஆக்கிவிடும் . மைக்ரோசாப்ட் (MICROSOFT) போன்ற நிறுவனங்களோ ஆண்டுதோறும் வோர்ட் WORD விலைக்கு வாங்குபடி செய்து நம்மைக்கொள்ளை அடிக்கிறார்கள். அவர்கள் கம்பெனிகளை அடிக்கும் கொள்ளையோ கணக்கு வழக்கு இல்லை . எல்லாம் இறுதியில் நம் தலை மீது விழும். ஒவ்வொன்றும் யானை விலை, குதிரை விலை சொல்கிறார்கள்!!

இந்த சூழ்நிலையில் நாம் தினமும் கந்த சஷ்டி கவசத்துடன் கம்ப்யுட்டர் கவசம் படிப்பதும் தேவை ஆகிறது என்று கருதி தேவராய சுவாமிகளுக்குப் போட்டியாக ஒரு நகைச் சுவை கவசம் எழுதி அதை பேஸ்புக்கிலும் வாட்ஸ் அப்பிலும் பரப்பிவருகிறார்கள் . என் அண்ணன் சீனிவாசன் ‘யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்று எனக்கு அனுப்பினார். நானும் ‘மன்னுயிர்க்கெல்லாம் இன்பம் கிடைக்க’ இங்கே பகிர்கிறேன்.; அனைவரும் படித்துப் பயன்பெறுக. எந்தக் கம்ப்யூட்டராவது UPDATE YOUR SOFTWARE NOW ‘அப்டேட் யுவர் சாப்ட் வேர் நவ்’ என்று  மிரட்டினால் மூன்று முறை படியுங்கள்!!!

பில் கேட்ஸ் வாழ்த்து 

துதிப்போர்க்கு தொங்குதல்போம் வைரஸ்போம்-நெஞ்சில்

பதிப்போர்க்கு பிராட்பேண்ட் களிப்பேற்றும்

கீபோர்டு விரைந்தோடும் அனுதினமும் கணினி சிஸ்ட கவசமதனை

பின்னிப்பெடலெடுத்த பில்கேட்ஸ்தனை

உன்னிப்புடன் நெஞ்சே குறி!

சரணம்

காக்க காக்க கம்ப்யூட்டர் காக்க

அடியேன் சிஸ்டம் அழகுவேல் காக்க

வின்டோசைக் காக்க வேலன் வருக

கனெக்ஷன் கொடுத்து கனகவேல் காக்க

இன்டெர்நெட் தன்னை இனியவேல் காக்க

பன்னிருவிழியால் பாஸ்வேர்ட் காக்க

செப்பிய வால்யூம் செவ்வேல் காக்க

வீடியோ ஆடியோ வெற்றி வேல் காக்க

முப்பத்திரு ஃபைல் முனைவேல் காக்க

வைரஸ் வாராமல் வைரவேல் காக்க

சேவிங் தன்னை செந்தில் வேல் காக்க

எக்ஸ்டர்நல் மோடம் எதிர் வேல் காக்க

பில்ட் இன்மோடம் பிரிய வேல் காக்க

ஈமெயில் தன்னை இணையவேல் காக்க

மவுசை மகேசன் மைந்தன் காக்க

எர்ரர் வாராமல் எழில் வேல் காக்க

அடியேன் ப்ரின்டர் அமுதவேல் காக்க

எக்ஸ்ப்ளோரரை ஏரகத்தான் வேல் காக்க

அடியேன் ப்ரௌஸ் செய்கையில் அயில் வேல் காக்க

அல்லல் படுத்தும் அடங்கா எரர்கள்

நில்லாதோட நீ எனக்கருள்வாய் 

ஹாங் ப்ராப்ளமும்

ஹார்ட் டிஸ்க் ப்ராபளமும்

என் பெயர் சொல்லவும்

இடி விழுந்தோடிட

ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை

அலறவே வைத்திடும்

ஃப்ளக்சுவேஷன் பவர் சார்ஜுகளும்

வாட்டம் விளைக்கும் வோல்ட்டேஜுகளும்

அடியேனைக் கண்டால் அலறி கலங்கிட

பிரிண்டர் சற்றும் பிழையாதிருக்க

பேப்பர் ஃபீடிங் சூப்பராய்த் திகழ

மை சப்ளை செய்யும் காட்ரிட்ஜ் தன்னை

மைய நடனம் செய்யும் மயில் வாகனனார் காக்க

மூவாகல் மூர்க்கம் செய்யும்

மவுஸ் என்கை பட்டதும் ஸ்மூத்தாக

நகர நீ எனக்கருள்வாய்

கிர்ரு, கிர்ரு, கிரு, கிரு என

டிஸ்கனெக்ட் ஆகும் டெலிபோன்களை

போட்டதும் கனெக்ட் ஆக புனிதவேல் காக்க

கன்னா பின்னாவென்று வரும்

கமான்ட் இன்டட் ரெப்டுகளை

கந்தன் கைவேல் காக்க

அல்லல் படுத்தும் அடங்கா பசங்களும்

பந்துகள் ஆடும்பாலர் பட்டாளமும்

மானிட்டர் பக்கம் வந்து விடாமல்

என் பெயர் சொல்லவும் எகிறியே ஓட

ரேமும், ரோமும் மெமரியோடிருக்க

அனைத்து ஃபோர்டர்ஸீம்

ஆயுளோடு விளங்க

டௌன்லோடு, அப்லோடு டக்கராய்

விளங்கும் சிஸ்டம் பெற்று அடியேன்

சிறப்புடன் வாழ்க.

அலட்சியம் செய்யும் அலசியஸர்வீஸர்

அழைத்ததும் வந்திட அருள் நீ புரிவாய்

ஷட்டௌன் தடங்கல்

சட்டென்று நீங்க–

ஷண்முகன் நீயும் சடுதியில் வருக

கணினி சிஸ்டம் கவசம் இதனை

சிந்தை கலங்காது கேட்பவர்கள்,

படிப்பவர்கள் எந்நாளும் பாடாய்

படுத்தாத கணினியுடன் வேலை செய்வார்.

வாழ்க கணினி. வளர்க மவுஸ்.

tags –பில் கேட்ஸ், கம்ப்யூட்டர் கவசம்

—-SUBHAM—

WHAT IS THE GOOD LIFE? – 1 (Post No.8419)

WRITTEN BY R. NANJAPPA                        

Post No. 8419

Date uploaded in London – – – 29 July 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

WHAT IS THE GOOD LIFE? – 1

R. Nanjappa


The ancients had a good idea of The Good Life
Every philosophy, religion and even socio-political theory is concerned with this question, and attempts to answer it in its own way. The result has been not only confusion about what constitutes the good life, but also uncertainty about how to attain it. Contending systems compete for the human mind and allegiance. In the resulting conflict, modern man seems to have become indifferent to the question.

Superficially, we may say that the East and the West approached this question from different angles and arrived at different answers. But a more diligent effort would reveal this to be faulty perception. It would be more accurate to say that the real difference is not between the East and West, but between the Ancient and modern attitudes. Mahatma Gandhi was one of the few who truly understood this issue and wrote about it in his “Hind Swaraj” in 1909. It is a pity that his involvement in active politics distracted his mind and diverted his attention and energies to a hundred other subjects. However, he had the economic key to this issue. 

We find the early Greek philosophers exercised over this issue. We generally associate the systematic development of Greek philosophy with Socrates and Plato. Even Roman Cicero said that it was Socrates who brought philosophy from the heavens to earth. However, it is not that philosophical efforts were lacking before, or that even Socrates and Plato systematised it. Philosophical efforts- inquiry about the nature of life and the world- have never been absent from human consciousness; at the same time, no attempt was made to make a ‘system’ out of the old insights or teachings.

Just as we Indians have the tradition of the 7 Rishis, the early Greeks are said to have had 7 sages!  And like in our case, their names vary. (In India, the composition of the 7 varies in each yuga). None of them was a philosopher in the sense of a mere thinker, but were rulers and legislators. Each one of them is associated with a main saying which gives a clue to their idea of the good life.

1. Cleobulus of Lindos. c.600 BC.

“Moderation is the best thing”.
“Seek virtue rather than pleasure”
“Be superior to pleasure”

2.Solon of Athens. 638-558 BC.

“Keep everything in moderation”.

3.Chilon of Sparta. 6th century BC.

“You should not desire the impossible”.
“Do not dislike divination”
“Do not speak evil of the dead”.
“Do not laugh at a person in misfortune”.

4.Bias of Priene.

“Most men are bad.”
“Do not praise an undeserving man because of his riches.”
“Gain your point by persuasion, not by force.”
“Cherish wisdom, as a means  of travelling from youth to old age, for it is more lasting than any other possession”.

5.Thales of Miletus. 624-546 BC

“KNOW THYSELF”. It is this  which was engraved on the front arch of the Oracle at the Temple of Apollo at Delphi

6.Pittacus of Mytilene. 640-568 BC

“You should know which opportunities to choose”.
“Forgiveness is better than revenge.”
“Power shows the man”

7.Periander of Corinth. c.627 BC

“Be farsighted with everything.”

“Pleasures are transient, honour is immortal.”
“Live according to your income.”
“Success brings many to ruin”.
“The soft speeches of the wicked are full of deceit'”

Roman copy from a Greek Original. Vatican Museums.  


It is remarkable that these sages lived around the time of our own Buddha! Their sayings too bear remarkable similarity to the teachings of the Buddha. The Buddha taught the middle way- ie avoidance of extremes, which amounts to moderation.

                                                  **** to be continued

மஹரிஷி கபிலர் : கங்கை நதி பூமிக்கு வந்த காரணம்! (Post No8418)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8418

Date uploaded in London – – –29 July 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

மஹரிஷி கபிலர் : கங்கை நதி பூமிக்கு வந்த காரணம்!

ச.நாகராஜன்

மஹரிஷி கபிலரின் சரித்திரம் சுவையான ஒன்று.

ஸ்ரீமத் பாகவதம், ராமாயணத்தில் பால காண்டம், விஷ்ணு புராணம் உள்ளிட்ட புராண இதிஹாஸங்களில் கபிலரின் சரித்திரத்தை விரிவாகக் காணலாம்.

பகீரதன் தவமும் அதனால் பூமிக்கு கங்கை வந்ததும் கபிலரின் சரித்திரத்தில் ஆரம்பிக்கிறது!

ஸ்ரீ ஹரியானவர் கர்த்தப பிரஜாபதிக்கும் தேவபூதிக்கும் மகனாக கபிலர் என்ற பெயருடன் அவதரித்தார்.

அவர் பாதாள லோகத்தில் தவம் செய்து கொண்டிருந்தார்.

சூரியபகவானிடத்தில் சக்ரதனு என்ற பெயருடன் பிறந்ததாகவும் பின்னால் கபிலர் என்ற பெயர் அவருக்கு ஏற்பட்டது என்ற இன்னொரு விருத்தாந்தமும் உண்டு.

சகர மஹாராஜன் சூரிய வமிசத்து அரசன். அவன் எல்லையற்ற வலிமையால் பூமியை ஒரு குடைக் கீழ் அரசாண்டு வந்தான். அவனுக்கு இரண்டு மனைவிகள். ஒருத்தி சுமதி. இன்னொருத்தி கேசினி.

சுமதிக்கு அறுபதினாயிரம் புத்திரர்கள் பிறந்தனர். அவர்கள் அறுபதினாயிரம் சகரர்கள் என அழைக்கப்பட்டனர்.

கேசினிக்குப் பிறந்தவன் பெயர் அஸமஞ்சன். அஸமஞ்சனின் புத்திரன் பெயர் அம்சுமான். அவன் ஒரு அதிரதன்.

சகரன் ஒரு சமயம் அசுவமேத யாகம் ஒன்றைச் செய்தான்.  யாக குதிரையின் பின்னே தன் பேரனான அம்சுமானை அனுப்பினான்.

அந்த யாகத்தை நடத்த விடக் கூடாது என்று இந்திரன் பொறாமையினால் ஒரு நாள் ராக்ஷச உருவை எடுத்து யாக குதிரையைத் திருடிக் கொண்டு போய் விட்டான்.

யாக தீக்ஷையில் இருந்த சகரனை நோக்கி அவனது குரு குதிரை அபகரிக்கப்பட்ட செய்தியைத் தெரிவித்தார். குதிரை வராமல் யாகம் பூர்த்தியாகாது. ஆகவே குதிரையைக் கொணருமாறு அவர் வேண்டினார்.

சகரன் குதிரையைக் கண்டுபிடித்துக் கொண்டு வருமாறு தனது அறுபதினாயிரம் புத்திரர்களுக்குக் கட்டளையிட்டான். உலகெங்கும் அவர்கள் குதிரையைத் தேட ஆரம்பித்தனர். குதிரை கிடைக்காததால் பூமியை அவர்கள் வெட்ட ஆரம்பித்தனர்.

இதனால் அனைத்து ஜீவன்களும் துன்பம் கொண்டன; மாண்டன.

அறுபதினாயிரம் யோஜனை விஸ்தீரணத்திற்கு பூமி தோண்டப்பட்டது. இதைக் கண்ட தேவர்கள் உள்ளிட்டோர் பிரம்மதேவரிடம் சென்று முறையிட்டனர்.

அவர், பூமிதேவியின் நாதனான விசுவதேவரால் சகரர்களுக்கு நாசம் உண்டாகும் என்றும் கவலைப்பட வேண்டாம் என்றும் அவர்களுக்குத் தைரியம் சொல்லி அவர்களை அனுப்பினார்.

சகரர்கள் பூமியைத் தோண்டி பாதாள லோகத்தை அடைந்தனர். அங்கு கபிலர் தவம் செய்து கொண்டிருந்தார்.

அவருக்குச் சமீபத்தில் குதிரை கட்டப்பட்டிருந்தது. அவர் தான் அந்தக் குதிரையைக் கவர்ந்து வந்ததாக நினைத்த சகரர்கள் அறுபதினாயிரவரும் கோபம் கொண்டு கபிலரை ஆயுதம் கொண்டு தாக்க ஆரம்பித்தனர்.

“நீ தான் எங்கள் யாகக் குதிரையைத் திருடிக் கொண்டு வந்திருக்கிறாய், ஓ. துஷ்டனே, எங்களிடம் இப்போது அகப்பட்டுக் கொண்டாய்” என்று சகரர்கள் கபில முனிவரை நோக்கிச் சொல்ல அவர் வெகுண்டார்.

கண்களைத் திறந்து பார்த்து ஹூம் என்று ஆர்ப்பரித்தார்.

ஒப்பற்ற தவமுடைய மஹாத்மா என்பதால் அவருடைய கோபாக்னி சகரர்கள் அறுபதினாயிரவரையும் எரித்துச் சாம்பலாக்கியது,

வெகு காலம் தன் குமாரர்கள் வராததைக் கண்ட சகரன் தன் பேரனான அம்சுமானை அழைத்து அக்குதிரையைக் கொண்டு வருமாறு கட்டளையிட்டான்.

அம்சுமானும் சகரர்கள் சென்ற வழியே சென்றான். சகரர்கள் பூமியைக் குடைந்து சென்ற வழியைக் கண்ட அவன் அந்த வழியே பாதாள லோகம் சென்றான்; அங்கு கபில முனிவரைக் கண்டான்.

அவரை வணங்கி அம்சுமான் தொழுது துதித்தான்.

கபிலர் அம்சுமானை நோக்கி, “ மகனே! நீ குதிரையைக் கொண்டுபோய் உன் பாட்டனிடம் சேர்ப்பிப்பாயாக! யாகத்தை நிறைவேற்றி வை!  உன் பேரன் மூலம் கங்கா நதியைப் பூலோகத்திற்குக் கொண்டு வரக் கூடியதாகிய வரத்தை உனக்கு அளிக்கிறேன். நீ செல்வாயாக!” என்று அருளுரை கூறினார்.

அம்சுமான் முனிவரை வணங்கிப் பின், “ஓ! ஸ்வாமி! உமது சாபத்தால் எரிந்து சாம்பலாகி விட்ட எனது சிற்றப்பன்மார்கள் சுவர்க்கத்தை அடையும்படியாக ஒரு வரத்தைத் தந்தருள வேண்டும்” என்று விண்ணப்பம் செய்து பிரார்த்தித்தான்.

அதற்கு கபிலர், “உனது பேரனால் கொண்டு வரப்போகும் கங்கா நதியின் தீர்த்தத்தினால் இறந்து போன உன் சிற்றப்பன்மார்களுடைய எலும்பும் சாம்பலும் நனைக்கப்பட்ட மாத்திரத்திலேயே அவர்கள் சுவர்க்கத்தை அடைவார்கள்’ என்று கூறியருளினார்.

அத்துடன் மேலும் அவர் கூறினார்: “பக்தி சிரத்தையுடன்  இம் மஹாநதியில் யார் ஒருவர் தீர்த்தமாடுகிறார்களோ அவர்கள் தங்கள் பாபங்களைக் களைந்து கடைத்தேறுவார்கள். அது மட்டுமல்ல, இறந்தவர்களின் சரீரத்தைச் சார்ந்த , எலும்பு, தோல், நரம்பு, கேசம், சாம்பல் முதலியவற்றில் ஏதாவது ஒன்று இப்புண்ணிய தீர்த்தத்தால்  ஸ்பரிசிக்கப்படுமாயின் அந்த உடலுக்குரியவன் உடனே சுவர்க்கம் புகுவான்.”

அம்சுமான் அவரை வணங்கி விடை பெற்று குதிரையுடன் சகர மஹாராஜாவிடம் வந்து சேர்ந்தான். அதன் பின்னர் சகரனின் அஸ்வமேத யாகம் நிறைவேறியது.

அம்சுமானுடைய பேரனான பகீரதன் அரும் தவம் செய்து கங்கையைப் பூமிக்குக் கொண்டு வந்தான்.

பரிசுத்தமான கங்கை நீர் பாதாள லோகத்திற்குச் சென்று சகர மஹாராஜனின் எரிந்து கிடந்த குமாரர்களின் சாம்பல் குவியல் மேல் படவே அவர்கள் அனைவரும் சுவர்க்கம் அடைந்தனர்.

இதன் மூலம் பாவம் போக்கும் ஜீவ நதியான கங்கா நதி பூவுலகில் என்றும் பாயும் பாக்கியம் பூவுலக மக்களுக்கு ஏற்பட்டது!

***

முக்கிய குறிப்பு : கபிலாரண்யம் என்பது தான் கலிபோர்னியா போன்ற அதிசயச் செய்திகளை காஞ்சி பெரியவாள் ஒரு உரையில் குறிப்பிட்டிருக்கிறார். அன்பர்கள் அவசியம் படிக்க வேண்டிய உரை அது.

படித்து மகிழலாம்!

இதைப் பற்றிய திரு சுவாமிநாதனின் கட்டுரை இந்த பிளாக்கில் நவம்பர் 2011இல் வெளியாகி இருக்கிறது.

கட்டுரை தலைப்பு : ‘Is California, USA – Kapila Aranya – Kanchi Sankaracharya”

Search Results



‘Is California, USA – Kapila Aranya?’ – Kanchi Sankaracharya …

tamilandvedas.com › 2011/11/21

21 Nov 2011 – Tamil and Vedas. A blog exploring themes in Tamil and vedic literature. ‘Is California, USA – Kapila Aranya …

tags –மஹரிஷி கபிலர் , கங்கை நதி, காரணம்

—– subham —-

INDEX 24 எஸ்.நாகராஜன் கட்டுரை இன்டெக்ஸ் -24 (Post No.8417)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8417

Date uploaded in London – – –28 July 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

இந்தப் பட்டியலை பிரிண்ட் செய்து வைத்துக் கொண்டால் உங்களுக்குத் பிடித்த கட்டுரைகளை நேரம் கிடைத்தபோது படிக்கலாம்

கட்டுரைகளை பிளாக்கில் பெறுவது எப்படி?

பிளாக்கிற்குப் போய் தேடுவதை விட கூகுளில் (google) தேடுவது எளிது. கட்டுரையின் தலைப்பை காப்பி copy  செய்து கூகுளில் பேஸ்ட் paste செய்யுங்கள் . அதன் பிறகு ஆங்கிலத்தில் from tamilandvedas.com  என்று எழுதி க்ளிக் (click) செய்யுங்கள்.

 from swamiindologly.blogspot.com

என்று எழுதியும் பெறலாம்.

எடுத்துக்காட்டு:

கர்ம பலன்கள் – சித்திரகுப்தன் கரன்ஸி! from tamilandvedas.com

கர்ம பலன்கள் – சித்திரகுப்தன் கரன்ஸி!      from swamiindology.blogspot.com

நீங்கள் சிறு பிழை விட்டாலும் நீங்கள் எதிர்பார்த்தது கிடைக்காமல் வேறு விஷயம் வரும். அதில் நேரத்தை வீணடிக்காமல் மீண்டும் ஒரு முறை சரியாக எழுதி முயற்சி செய்யுங்கள். இரண்டு பிளாக்குகளில் ஒன்றில் கிடைத்து விடும்

கட்டுரை பெறுவதில் ஏதேனும் சிக்கல் இருந்தால் எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள் .

August 2013

  –    –    இசை தரும் நோயற்ற வாழ்வு – 3 (பாக்யா 21-9-12 அ.து. 83)

  –    –    இசை தரும் நோயற்ற வாழ்வு – 4 (பாக்யா 28-9-12 அ.து. 84)

  –    –    இசை தரும் நோயற்ற வாழ்வு – 5 (பாக்யா  5-10-12 அ.து. 85)

  –    –    இசை தரும் நோயற்ற வாழ்வு – 6 (பாக்யா 12-10-12 அ.து. 86)

September 2013

  –    –    ஸ்வர்ண லோகம் – 1 ஸ்வர்ண புத்தர்!

  –    –    ஸ்வர்ண லோகம் – 2 சர்ச்சிலுக்கு சாந்தி தந்த புத்தர்

  –    –    ஸ்வர்ண லோகம் – 3 தேரவாதம், மஹாயானம் தோன்றிய 

            வரலாறு!

  –    –    ஸ்வர்ண லோகம் – 4 புத்தம் சரணம் கச்சாமி!

  –    –    ஸ்வர்ண லோகம் – 5 உலகப் போரின் போது அனைத்தையும்

            இழந்த துறவி சோகோ!

  –    –    ஸ்வர்ண லோகம் – 6 தோட்டத்தைப் பெருக்கு – முதல் பாடம்!

  –    –    ஸ்வர்ண லோகம் – 7 எல்லோர் முன்னிலையிலும் பேசத்

            தகுதியற்றவன்!

October 2013

      –            –           மஹாத்மா : நடமாடும் நற்பண்புகளின் களஞ்சியம்!

  –    –    ஸ்வர்ண லோகம் – 8 ஆலயத்தை விட்டு வெளியே போ!

  –    –    ஸ்வர்ண லோகம் – 9 ஒரு போதும் இதை நீ அவிழ்க்கக் கூடாது!

  –    –    சம்ஸ்கிருதச் செல்வம் – 16 கருமமே கண்ணாயினார்!

  –    –     ஸ்வர்ண லோகம் – 10  நீ உள்ளே வரலாம்!

  –    –    ராமாயண வழிகாட்டி – 13 மனமே அனைத்துப் புலன்களின்

            இயக்கத்திற்கும் காரணம்!

  –    –    ஸ்வர்ண லோகம் – 11  ஜென் மாஸ்டர் சொன்ன மூன்று

            உண்மைகள்!

     –           –             சம்ஸ்கிருதச் செல்வம் – 17 முன்னேறுவதற்குள்ள ஆறு

            தடைகள்!

November 2013

      –            –           ஸ்வர்ண லோகம் – 12 ஜென் கோயன்கள்!

  –    –    சம்ஸ்கிருதச் செல்வம் – 18 தீரர்கள் நியாயமான வழியை விட்டு

            விலக மாட்டார்கள்!

  –    –    ஆயுர்வேத ஆசாரியர் சரகர் – 1

  –    –    ஆயுர்வேத ஆசாரியர் சரகர் – 2

  –    –     ஸ்வர்ண லோகம் – 13  ஹகுயின் கோயன்கள்!

  –    –    ஸ்வர்ண லோகம் – 14  எது சொர்க்கம்? எது நரகம்?

21-11-13   718  பாபாவின் வாழ்வும் ரமணரின் வாக்கும்!

22-11-13   719   Sri Sathya Sai Baba on Himself!

     –             –          ஸ்வர்ண லோகம் – 15 பாங்கோய் டோயோகு

28-11-13   724   ஸ்வர்ண லோகம் – 16 உள்ளொளி பெற்ற உத்தமர்!

December 2013

  1-12-13   728     சம்ஸ்கிருதச் செல்வம் – 19 யமராஜரின் சகோதரரான

             வைத்யராஜரே நமஸ்காரம்!

  4-12-13    730        அரவிந்த யோகம்!    

      –                –         இன்னொரு பிறவியும் வேண்டுவதே இந்தப் பூவுலகிலே!

11-12-13    740     பாரதி தரிசனம் – 1

12-12-13   743     பாரதி தரிசனம் – 2

18-12-13   750    ஸ்வர்ண லோகம் – 17 – மூ!

24-12-13   757     ஆயுர்வேத ஆசாரியர் சரகர் – 3

    –                  –        ஸ்வர்ண லோகம் – 18 – இதோ ஒரு கோப்பை டீ எடுத்துக்

            கொள்ளுங்கள்!

To be continued…………………………………..

INDEX 24 ,எஸ்.நாகராஜன் ,கட்டுரை இன்டெக்ஸ் -24,

31 QUOTATIONS ON FAME AND HONOUR (Post No.8416)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8416

Date uploaded in London – 28 July 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

AUGUST 2020 ‘GOOD THOUGHTS’ CALENDAR

31+++ quotations are taken from Tamil and  Sanskrit books

Festival Days- August 2- Tamil ‘Adi 18’ Perukku festival; 3 Avani Avittam/ Raksha Bandhan;  Yajur upakarma, 4 Gayathri Japa, Rik upakarma, 11 Gokulashtami, Janmashtami; 15 Independence Day; 22 Ganesh Chaturthy; 31 Onam festival

Full moon day/ Purnima – 3; New moon day/ Amavasya – 18; Ekadasi fasting days 15, 29

Muhurtha days/ auspices days – 21, 23, 24, 28, 30, 31

AUGUST  1 SATURDAY

Fame is held in great esteem in all the worlds, while infamy is censured by the gods-

–Valmiki Ramayana 7-45-13

AUGUST  2 SUNDAY

For a man , his invariably concomitant fame is his chaste wife-

Subhasita ratna khanda manjusa

AUGUST  3 MONDAY

A unique feat, however unknown, brings glory to the doer-

Kumara sambhavam 3-19

AUGUST  4 TUESDAY

Glory is the sole wealth of those wit noble character and conduct –

Ramayana manjari 222

Yajur Upakarma

AUGUST  5 WEDNESDAY

Popularity lasts only till an evil act –

Panchatantra 5-72

AUGUST  6 THURSDAY

How can a teacher ever gain prominence by teaching a bad pupi

-Canakya niti 9-25

AUGUST  7 FRIDAY

Of what use is birth on earth without eminence

Subhasita ratna bhandagaram 3-1038

AUGUST  8  SATURDAY

If one takes birth in this world one should come with qualities which bring fame; if not it is better not to appear at all – Tirukkural 236

AUGUST  9  SUNDAY

There is no greater boon to man than the renown gained by giving the poor – Tirukkural 231

AUGUST  10 MONDAY

All the praise that the learned sing centres on the fame of those who give the needy — Tirukkural 232

Janmashtami 11th August 2020

AUGUST  11 TUESDAY

Poverty which conduces to fame , and death which brings glory , are the lot of none but the wise – Tirukkural 235

AUGUST  12 WEDNESDAY

Those who cannot achieve fame  should blame themselves  and not those who criticize them — Tirukkural 237

AUGUST  13 THURSDAY

Uththishta , Yaso labha – Bhagavad Gita 11-33

Arise , Attain glory

AUGUST  14 FRIDAY

Whence glory without virtue

Rajatarangini 8-2419

August 15 Independence Day

AUGUST  15  SATURDAY

Tremulous are lives like waves; fame lasts till time’s end-

Bharatamanjari

AUGUST  16 SUNDAY

Protect your body with wealth; but safeguard your reputation with both body and wealth  —

–Kahavatratnakar

AUGUST  17 MONDAY

Conciliation leads neither to fame nor glory ––Valmiki Ramayana 6-21-16

AUGUST  18 TUESDAY

Where is honour without daring

Katha sarith sagara – 5-2-225

AUGUST  19 WEDNESDAY

Addiction vice acts like an axe to the creeper of eminence

Harivamsa 14-744

AUGUST  20 THURSDAY

Glory is attained by the virtuous

Subhasita ratna bhandagaram  3-116

AUGUST  21 FRIDAY

Those who regard fame as their wealth have to guard it from  their foes

Raghu vamsa 3-48

AUGUST  22  SATURDAY

If a man cannot acquire fame so that it may live after him such failure is a source of ignominy to him — Tirukkural 238

AUGUST  23 SUNDAY

The land burdened with bodies of flesh and blood without  fame will grow barren of useful products — Tirukkural 239

AUGUST  24 MONDAY

Only those who live without creating a bad reputation, may be said to live, and those who do not earn fame may be counted among the dead — Tirukkural 236

AUGUST  23 TUESDAY

Those who consider fame as their wealth

Raghu vamsa 14-35

AUGUST  26 WEDNESDAY

Glory never perishes —-Kahavatratnakar

AUGUST  27 THURSDAY

Better death than an infamous life –

Vikramacarita

AUGUST  28 FRIDAY

Hair lost, the yak lives not. Honour lost noblemen leave their life

Tirukkural 969

AUGUST  29 SATURDAY

Why hang on men that despise you . it brings no earthly fame , nor heavenly bliss — Tirukkural 966

AUGUST  30 SUNDAY

Noblemen do not outlive loss of honour. The world hails their glory – Tirukkural 970

Onam festival

AUGUST  31 MONDAY

To attain fame, be plucky –

Satopadesaprabandha

Xxx

BONUS QUOTES

By hook or crook, become popular

–Samghadharapaddathi

xxx

To the honoured, infamy is surely worse than death

Bhagavad Gita 2-34

Xxx

Only the pristine glory of the great lasts till the world’s end

-Katha Sarit Sagara

Tags – August 2020, Calendar, Quotations on Fame, Quotes on Honour

–subham–

மாமியார் பற்றிய 5 பழமொழிகளைக் கண்டு பிடியுங்கள் (Post No. 8415)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8415

Date uploaded in London – 28 July 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஒரே சொல் மீண்டும் மீண்டும் வந்தால் ஓரிரு இடங்களில் மட்டுமே கட்டத்தில் இருக்கும். கொண்டு கூட்டி பொருள் கொள்க . விடை கீழே உள்ளது . சில நேரங்களில் படங்களைப் பார்த்தாலும் விடை காண உதவலாம்.

ANSWER

1.மாமியார் உடைத்தால் மண் கலம், மருமகள் உடைத்தால் பொன்கலம்

2.மாமியார் செத்த ஆறாம் மாதம்  மருமகள் கண்ணில் தண்ணீர் வந்ததாம்

3.மாமியார் இல்லாத மருமகள் உத்தமி, மருமகள் இல்லாத  மாமியார் குணவதி

4.வேண்டாத மாமியாருக்கு கைப்பட்டால் குற்றம், கால் பட்டால் குற்றம்

5.மாமியார் மெச்சின  மருமகள்  இல்லை, மருமகள்  மெச்சின மாமியார் இல்லை

Tags – மாமியார், மருமகள், பழமொழி