Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
8-5-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை!
விண்வெளி முழக்கம்!
விண்வெளியில் நடந்த பெண்மணிகள்!
.ச. நாகராஜன்
Anne McClain
2025 மே மாதம், முதல் தேதி. விண்வெளியில் இரு பெண்மணிகள் நடந்து சாகஸம் செய்தனர்.
பெண்கள் மட்டுமே தனித்து விண்வெளியில் ஐந்தாவது முறையாக இப்படி நடந்து வெற்றி பெற்றுள்ளனர்.
இதை நிகழ்த்திக் காட்டியவர்கள் அன்னி மக்ளெய்ன் மற்றும் நிகோல் அயர்ஸ் ஆவர் (Anne McClain and Nichole Ayers) ஐந்து மணி நேரம் 44 நிமிடங்கள் இவர்களது விண்வெளி நடைப் பயணம் நீடித்தது.
எக்ஸ்ட்ரா வெஹிகுலர் ஆக்டிவிடி அல்லது ஸ்பேஸ் வாக் என்று அழைக்கப்படும் இந்த விண்வெளி நடையில் இரு வீராங்கனைகளும் ஒரு ஆண்டெனாவை நகர்த்தி பன்னாட்டு விண்வெளிநிலையத்தை புது வரிசை சோலார் அர்ரேஸ்களை (சூரிய அணிகளை) ஏற்கும் விதமாகத் தயார்ப்படுத்தினர்.
இந்த விண்வெளி நடை ஜிஎம்டி நேரம் 18.49க்கு நடைபெற்றது.
நெடுநேரம் கலத்தை விட்டு வெளியில் இருந்த இவர்கள் இன்னும் சில பணிகளை முடிக்க எண்ணியிருந்தனர். ஆனால் நேரம் போதாமையால் தங்கள் நடையை முடித்து நடையைக் கட்டினர்.
புதிய சூரிய அணிகள் இன்னும் அதிக ஆற்றலுடன் செயல்பட்டு மின்சார சக்தியை உருவாக்கும் திறமையை 30 சதவிகிதம் அதிகப்படுத்தும். அதாவது 160 கிலோவாட் சக்தியை 215 கிலொவாட்டாக உயர்த்தும்.
“இந்த வருடம், மனிதர்கள் விண்வெளியில் தொடர்ந்து இருந்து வரும் 25வது வருடமாக அமைவதால் இந்த விண்வெளி நிலையத்தை 2030 வரை நீடிக்கும்படி செய்தோம். இந்தப் பணியை எங்களுக்குக் கொடுத்து எங்களை கௌரவப்படுத்தியுள்ளனர்” என்று அயர்ஸ் மகிழ்ச்சியுடன் தன் பணியை முடித்தவுடன் கூறினார்.
நாங்கள் செய்த காரியத்தால் நாம் சந்திரனுக்குத் திரும்பும் முயற்சி வெற்றி பெறுவதோடு செவ்வாய் செல்லவும் வழி வகுக்கும். புவியில் நாம் எவ்வாறு வாழ்கிறோம் என்பதையும் தெரியப்படுத்தும்” என்றார் பெருமிதத்துடன் அயர்ஸ்.
அன்னி மக்ளெய்ன் மூன்றாவது முறையாக விண்வெளியில் நடக்கிறார். அவர் விண்வெளியில் நடந்த மொத்த நேரம் 18 மணி 52 நிமிடங்கள். அயர்ஸுக்கு இது தான் முதல் விண்வெளி நடையாகும்.
முதன்முதலாக பெண்மணிகள் விண்ணில் 2019 அக்டோபர் மாதத்தில் நடந்தனர். கிறிஸ்டினா கோச் மற்றும் ஜெஸ்ஸிகா மெய்ர் இந்த சாகஸத்தை நிகழ்த்திக் காட்டினர். இந்த ஜோடி 2020 ஜனவரியில் இன்னும் இரு முறை விண்ணில் நடந்தது. பின்னர் 2023 நவம்பரில் ஜாஸ்மின் மொக்பெல்லும் லாரல் ஓஹராவும் நடந்து காட்டினர்.
“வெள்ளிப் பனிமலையின் மீதுலவுவோம்; அடி மேலைக்கடல் முழுதும் கப்பல் விடுவோம்” என்றார் பாரதியார்.
“விண்வெளியில் நடை பயிலுவோம் செவ்வாய்க்கும் ராக்கெட்டில் செல்வோம்” என்கின்றனர் நவீன யுகத்து நாரீமணிகள்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Kali from Madurai Temple
காளிதாசன் பாடல்களிலும் பிற்காலத் தேவார திருவாசக, திவ்யப்பிரபந்த பாடல்களிலும் உள்ள கடவுள் வர்ணனைகளை, அவர்களுக்கு முன்னரே இளங்கோ பாடியதை சிலப்பதிகாரத்தின் எல்லா காதைகளிலும் காண்கிறோம்.
****
ராவணன் பாடிய சிவ தாண்டவ ஸ்தோத்திர தொனியில் பாரதியார் வீராவேசமாக காளி தேவியின் மீது ஒரு பாடல் பாடியுள்ளார். சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகளும் காளி தேவியின் மீது ஒரு பாடல் பாடியுள்ளார். இரண்டு பாடல்களையும் ஒப்பிட்டு சுவைத்து ரசிப்போம்.
வெடிபடு மண்டலத்திடிபல பாட….. என்ற பாடலிலும் ‘திக்குகள் எட்டும் சிதறி’ என்னும் பாரதியாரின் பாடலிலும் ரிக் வேதத்தில் ‘மருத்’ MARUTS என்னும் காற்று தேவதைகளின் துதிகளின் எதிரொலியைக் காணலாம் பாரதியார் காசியில் தங்கிய காலத்தில் வேதத்தில் புலமை பெற்றிருக்க வேண்டும். மருத் என்ற சொல்லில் இருந்து மாருதி ( வாயுதேவன் மகன் அனுமன் மாருதி) என்ற சொல் வந்தது)
இவ்வாறு காளியின் நடனத்தை மனக்கண் முன் கண்டு, அதை நாமும் காணும் வடிவில் அழகாகப் பாடியுள்ளார் பாரதி .
****
Durga from Ajanta Caves
சிலப்பதிகாரத்தில் வேட்டுவ வரி
“ஐயையின் கோட்டத்தில் ஒரு பக்கத்திலே கோவலன் முதலிய மூவரும் இளைப்பாறி இருத்தல்”
ஆர்யா என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லின் தமிழ் வடிவம் ஐயை.
“சாலினி ஆவேசம் கொண்டு மறக்குடி மக்களுக்கு அறிவுறுத்தல
(கேரளத்தில் பலரும் சாமி ஆடுவதை நாம் இப்போதும் காணலாம் . தமிழ்நாட்டில் இப்போது குறைந்துவிட்டது .
ஷாலினி என்பவள் மீது சாமி அல்லது அம்மன் வரவே அவள் ஆவேசத்துடன் ஆடுகிறாள்.)
வழங்கு வில் தடக்கை மறக் குடித் தாயத்துப்
பழங் கடன் உற்ற முழங்கு வாய்ச் சாலினி
தெய்வம் உற்று, மெய்ம் மயிர் நிறுத்து,
கை எடுத்து ஓச்சி, கானவர் வியப்ப,
இடு முள் வேலி எயினர் கூட்டுண்ணும்
நடு ஊர் மன்றத்து அடி பெயர்த்து ஆடி,
‘கல் என் பேர் ஊர்க் கண நிரை சிறந்தன;
……………………….
கலை அமர் செல்வி கடன் உணின் அல்லது
சிலை அமர் வென்றி கொடுப்போள் அல்லள்;
மட்டு உண் வாழ்க்கை வேண்டுதிர் ஆயின்
கட்டு உண் மாக்கள்! கடம் தரும்’ என-ஆங்கு-
*****
(தேவாரத்திலும் மான் வாகனத்தில் தேவி வருவதை கலையதூர்தி என்ற சொல்லால் வருணிக்கின்றனர். இப்போது இதை அபூர்வமாகவே சித்திரத்தில் அல்லது வாகனத்தில் காண்கிறோம். )
“மறக் குடி மக்கள் குமரி ஒருத்திக்குக் கொற்றவையின் கோலம் புனைவித்து, வழிபடு பொருள்களுடன் ஐயையின் கோட்டம் செல்லுதல் “
பெண்களுக்கு குமரி / குமாரி வடிவம் போட்டு அவளைத் தெய்வமாக வணங்கும் வழக்கம் நேபாளத்தில் பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது . ஒரு பெண்ணை தெய்வத்தின் வடிவமாக வணங்குகிறார்கள் தமிழ்நாட்டில் பிராமணர்கள் செய்யும் சுமங்கலிப் பிரார்த்தனை , சுவாசினி பூஜைகளில் இதை இன்றும் காணலாம்.
புலியை வீரத்தின் சின்னமாக இந்துக்கள் போற்றி வருகின்றனர். நாடு முழுதும் புலித் தோல், புலி நகம், புலிப் பல் பற்றிய கதைகள் உள்ளன. மன்னர்களின் சீற்றத்தை புலியின் சீற்றத்துக்கு தமிழ்ப் புலவர்கள் ஒப்பிடுகின்றனர். அதர்வண வேதத்தில் ‘வையாக்ரோ மணி’ என்ற பெயரில் புலிப் பல் அல்லது புலி நகத் தாலி குறிப்பிடப்பட்டுள்ளதை சிலப்பதிகார, பெரிய புராணக் குறிப்புகளுடன் ஒப்பிடுவோம் .
பல லட்சம் மக்கள் வழிபடும் ஐயப்பன் புலிப் பால் (Tiger Milk) கொண்டு வந்தார்.
துர்க்கைகைக்கும் காளிக்கும் புலி வாகனம் ஆகும்.
ராமாயணத்தில் இராமபிரானை (நர சார்தூல’) மனிதர்களில் புலி’ என்று போற்றும் வால்மீகி மகரிஷியின் வரிகளை நாம் தினமும் வேங்கடேஸ்வ்ர சுப்ரபாதத்தில் பாடி வருகிறோம் (உத்திஷ்ட நர சார்தூல).
பதஞ்சலி , வியாக்ரபாதர் பெயரில் புலி நகம் வருவதை நாம் அறிவோம்.அப்சல்கானை வீர சிவாஜி புலி நகத்தால் கீறிக் கொன்றதை நாம் அறிவோம் .
சிலப்பதிகாரத்திலும், அதர்வண வேதத்திலும் பெரிய புராணத்திலும் புலிப் பல் செய்தி உளது பலருக்கும் தெரியாது !!
தமிழில் பழமையான ‘புலிப்பல் தாலி’ குறிப்பு சிலப்பதிகாரத்தில் உளது.
Bhadra Kali in Minakshi Temple, Madurai
டைகர் TIGER என்ற ஆங்கிலச் சொல் வையாக்ர் VAIYAGR என்ற சொல்லில் இருந்து பிறந்ததும் மொழி இயல் வல்லுனர்களுக்குத் தெரிந்ததே .
புலி பற்றிய வேதக் குறிப்பைக் காண்போம் .
அதர்வண வேதத்தில் இருபதுக்கும் மேலான அதிசய தாயத்துக்கள் உள்ளன . தாயத்துக்களை ‘மணி’ என்று வேத கால முனிவர்கள் அழைத்தனர்.
‘ஒளஷதங்களின் புலி மணியானது பாதுகாக்கட்டும் ; அதை அணிவோனை சாபத்திலிருந்து விடுவிக்கட்டும்; நீசர்களையும் நோய்களையும் வெகு தூரத்துக்கு துரத்தட்டும்’
இந்த மந்திரம் வையாக்ர மணியின் சக்தியைக் காட்டுகிறது.
****
வரியும் புள்ளியும் மயங்கு வான் புறத்து
உரிவை மேகலை உடீஇ; பரிவொடு
கருவில் வாங்கிக் கையகத்துக் கொடுத்துத்
திரிதரு கோட்டுக் கலைமேல் ஏற்றி;
பாவையும், கிளியும், தூவி அம் சிறைக்
கானக்கோழியும், நீல் நிற மஞ்ஞையும்,
பந்தும், கழங்கும், தந்தனர் பரசி;
வண்ணமும், சுண்ணமும், தண் நறுஞ் சாந்தமும்,
புழுக்கலும், நோலையும், விழுக்கு உடை மடையும்,
பூவும், புகையும், மேவிய விரையும்,
ஏவல் எயிற்றியர் ஏந்தினர் பின் வர;
ஆறு எறி பறையும், சூறைச் சின்னமும்,
கோடும், குழலும், பீடு கெழு மணியும்,
கணம் கொண்டு துவைப்ப; அணங்கு முன் நிறீஇ
விலைப்பலி உண்ணும் மலர் பலி – பீடிகை,
கலைப் பரி ஊர்தியைக் கைதொழுது ஏத்தி-
(கலை வாகனம் = மான் வாகனம்)
காளியும் சிவனும் ஆடிய நடனப்போட்டியில் சிவன் வெற்றி பெற்ற கதையை நாம் அறிவோம். இருவர் தோற்றமும் ஒன்றே . எலும்பு அல்லது மனித கபாலங்களை மாலையாக அணிந்தவர்கள் ; இருவரும் பூத பிசாசாங்களுக்குத் தலைவர்கள் ; காளி கோவிலில் பலி இடுவது நள்ளிரவில் நடக்கும் ; நள்ளிரவில் நட்டம் பயின்றாடும் நாதன் என்று மாணிக்க வாசகர் சிவபுராணத்தில் பாடுகிறார் . சிவன் பற்றிய தேவார திருவாசக வரிகளை இளங்கோவின் காவியத்தில் அச்சுப் போல காணலாம்.
****
கொன்றையும் துளசியும் அணிந்து ஆனைத்தோல், புலித்தோல் போர்த்தி சங்கமும் சக்கரமும் ஏந்தி நிற்கிறாள் ; திருமாலையும் அம்மனையும் ஒன்றாகக் காண்பது இந்துக்களின் வழக்கம்; இதை நாராயணீ என்பார்கள் சிவனுக்கு மனைவி; அதே நேரத்தில் திருமாலின் தங்கை என்ற கோணத்திலும் இளங்கோ பார்க்கிறார்
மதுரை மீனாட்சி திருமணக்காட்சியில் இதை இன்றும் காணலாம் திருமா மார்பர் கிளையாள் என்கிறார் இளங்கோ
Durga in Colombo Museum
70
‘பேதுறவு மொழிந்தனள் மூதறிவு ஆட்டி’ என்று,
அரும் பெறல் கணவன் பெரும் புறத்து ஒடுங்கி,
விருந்தின் மூரல் அரும்பினள் நிற்ப-
மதியின் வெண் தோடு சூடும் சென்னி,
நுதல் கிழித்து விழித்த இமையா நாட்டத்து,
பவள வாய்ச்சி; தவள வாள் நகைச்சி;
நஞ்சு உண்டு கறுத்த கண்டி; வெஞ் சினத்து
அரவு நாண் பூட்டி, நெடு மலை வளைத்தோள்;
துளை எயிற்று உரகக் கச்சு உடை முலைச்சி;
வளை உடைக் கையில் சூலம் ஏந்தி;
கரியின் உரிவை போர்த்து, அணங்கு ஆகிய
அரியின் உரிவை மேகலைஆட்டி;
சிலம்பும் கழலும் புலம்பும் சீறடி,
வலம் படு கொற்றத்து வாய் வாள் கொற்றவை;
(வேட்டுவவரி, 54-66)
பிறையாகிய வெள்ளிய இதழைச் சூடும் சென்னியள், நெற்றியைத் திறந்து விழித்த இமையாத கண்ணினள், பவளம் போன்ற வாயை உடையவள், முத்துப் போன்ற ஒளிவீசும் நகையுடையவள், நஞ்சு உண்டதால் கறுத்த கண்டமுடையவள், கொடிய சினமுடைய வாசுகி என்னும் பாம்பாகிய நாணினைப் பூட்டி நீண்ட மேருவாகிய வில்லை வளைத்தவள், துளையமைந்த பொருந்திய பல்லையுடைய நச்சரவினைக் கச்சாக அணிந்த மார்பினள், வளையல் அணிந்த கையில் சூலம் ஏந்தியவள், யானையின் தோலைப் போர்த்து அதன் மேல் சிங்கத்தின் தோலை மேகலையாக அணிந்தவள், இடக்காலிலே சிலம்பும், வலக்காலிலே வீரக் கழலும் ஒலிக்கும் சிற்றடிகளை உடையவள், எருமைத் தலையும் மனித உடலும் கொண்டு திரண்ட தோளுடன் திகழ்ந்த மகிடாசுரனைக் கொன்று அவனது தலைமேல் நிற்பவள் கொற்றவையின் புதிய தோற்றம் சிவனின் தோற்றத்தை ஒத்ததாக வருணிக்கப் பட்டுள்ளது..
(மகிஷாசுரமர்த்தினி வருணனை)
****
இரண்டு வேறு உருவின், திரண்ட தோள் அவுணன்
தலைமிசை நின்ற தையல்; பலர் தொழும்
அமரி, குமரி, கவுரி, சமரி,
சூலி, நீலி, மால்-அவற்கு இளங்கிளை;
ஐயை, செய்யவள், வெய்ய வாள் தடக்கைப்
பாய் கலைப் பாவை; பைந் தொடிப் பாவை;
ஆய் கலைப் பாவை; அருங்கலப் பாவை;
தமர் தொழ வந்த குமரிக் கோலத்து
அமர் இளங் குமரியும் அருளினள்-
வரி உறு செய்கை வாய்ந்ததால் எனவே.
*****
6 கொற்றவை கொண்ட அணி கொண்டு நின்ற இப்
பொன் தொடி மாதர் தவம் என்னைகொல்லோ?
பொன் தொடி மாதர் பிறந்த குடிப் பிறந்த
வில் தொழில் வேடர் குலனே குலனும்!
“முன்னி்லைப் பரவல்”
ஆனைத் கானத்து எருமைக் கருந் தலைமேல் நின்றாயால்-
வானோர் வணங்க, மறைமேல் மறை ஆகி,
ஞானக் கொழுந்து ஆய், நடுக்கு இன்றியே நிற்பாய்!
வரி வளைக் கை வாள் ஏந்தி, மா மயிடன் செற்று,
கரிய திரி கோட்டுக் கலைமிசைமேல் நின்றாயால்-
அரி, அரன், பூமேலோன், அக-மலர்மேல் மன்னும்
விரி கதிர் அம் சோதி விளக்கு ஆகியே நிற்பாய்!
சங்கமும் சக்கரமும் தாமரைக் கை ஏந்தி,
செங் கண் அரிமான் சின விடைமேல் நின்றாயால்–
கங்கை முடிக்கு அணிந்த கண்ணுதலோன் பாகத்து,
மங்கை உரு ஆய், மறை ஏத்தவே நிற்பாய்!
கொன்றையும் துளவமும் குழுமத் தொடுத்த,
துன்று மலர்ப் பிணையல் தோள்மேல் இட்டு-ஆங்கு,
அசுரர் வாட, அமரர்க்கு ஆடிய
குமரிக் கோலத்துக் கூத்து உள்படுமே.
Kali from Madurai Temple
இந்த வரிகளில் திரி மூர்த்திகள் மூவரும் தேவியை வணங்குதல், கங்கையை அணிந்த சிவன் ஆகிய எல்லா புராண விஷயங்களையும் காணலாம். பிரம்மா, விஷ்ணு ,சிவன் ஆகிய மூவரையும் போற்றிய காளிதாசன் ஒவ்வொருவரையும் மும்மூர்த்தி வடிவம் என்கிறான். அதை இளங்கோ அடிகளும் கூறுவதை காண்கிறோம். பல உருவ வழிபாடு இருந்தாலும் தெய்வம் ஒன்றே என்ற ரிக் வேதக் கருத்தினை காளிதாசன் முதல் கம்பன் வரை , ஏன் பாரதி வரை தமிழ் மொழியில் பாடியிருப்பது குறிப்பிடத் தக்கது
*****
சுடரொடு திரிதரு முனிவரும் அமரரும்
இடர் கெட அருளும் நின் இணை அடி தொழுதேம்;
அடல் வலி எயினர் நின் அடி தொடு கடன் இது
மிடறு உகு குருதி; கொள், விறல் தரு விலையே.
சூரியனுடன் சுற்றிவரும் குள்ளமான , கட்டைவிரல் அளவே உள்ள 60,000 முனிவர்களை இங்கே காண்கிறோம் . அவர்களுடைய பெயர்கள் வாலகில்யர்கள் ; இவர்களைப் பற்றி புறநானூறு திருமுருகாற்றுப்படை, அருணகிரிநாதரின் திருப்புகழ் ஆகியவற்றிலுள்ள பாடல்களை 15 ஆண்டுகளுக்கு முன்னர்
(Short but smart Valakhilyas: Ozone layer and Gulliver’s Travel) “
சூரியனுடன் சுற்றிவரும் முனிவர்கள் யார்? என்ற கட்டுரையில் எழுதியுள்ளேன்
****
“ஆவேசமுற்ற சாலினி கண்ணகியைப் புகழ்தல் “
50 இணை மலர்ச் சீறடி இனைந்தனள் வருந்தி,
கணவனோடு இருந்த மணம் மலி கூந்தலை,
‘இவளோ, கொங்கச் செல்வி; குடமலை ஆட்டி;
தென் தமிழ்ப் பாவை; செய்த தவக் கொழுந்து;
ஒரு மா மணி’ ஆய், உலகிற்கு ஓங்கிய
திரு மா மணி’ எனத் தெய்வம் உற்று உரைப்ப
“கண்ணகி நாணமுற்று, புன்முறுவல் பூத்து நிற்றல் “
****
சங்க காலத்தில் இயற்றப்பட்ட பாடல்களில் கண்ணகி பற்றி ஒரே ஒரு நற்றிணைப் பாடலில் (216 ) மட்டுமே வருகிறது
எரி மருள் வேங்கைக் கடவுள் காக்கும்
குருகு ஆர் கழனியின் இதணத்து ஆங்கண்,
ஏதிலாளன் கவலை கவற்ற,
ஒரு முலை அறுத்த திருமாவுண்ணிக்
கேட்டோர் அனையர் ஆயினும்,
வேட்டோர் அல்லது, பிறர் இன்னாரே. – மருதன் இளநாகனார்
5 Jan 2022 — ஒவ்வொரு நாள் நமக்குக் கழிந்தால், யமனுடைய வீட்டுக்குப் போக தயார் ஆகிறோம் என்று பொருள். அதர்வண வேதத்தில் ( அ. வே) சூரியனுடன் சவாரி செய்யும் முனிவர்கள் பற்றிய குறிப்பு வருகிறது . வியாக்கியனக்காரர்கள் அங்கு வாலகில்யர் என்னும் குள்ள முனிவர்கள் பற்றி ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் புறநானூற்று வரி அப்படியே உள்ளது. “சுடரொடு திரிதரும் முனிவரும்” என்பது சிலப்பதிகார வரி. “சுடரொடு கொட்கும் அவிர்சடை முனிவரும்” என்பது புறநானூற்று வரி .
Delhi HC quashes 16 FIRs against 70 Indian Muslims who sheltered foreign Tablighi Jamaat members during Covid-19 outbreak: Read what were the charges and what the court said
July 19, 2025
“Delhi HC quashes 16 FIRs against 70 Indian Muslims who sheltered foreign Tablighi Jamaat members during Covid-19 outbreak: Read what were the charges and what the court said”, Opindia, July 18, 2025:
“On the 18th of July 2025, the Delhi High Court quashed 16 FIRs filed against 70 Indian citizens accused of sheltering 190 foreign members of the Tablighi Jamaat. The foreign nationals came to Delhi to attend the congregation at Nizamuddin Markaz in 2020 during Covid outbreak.
The accused persons were booked under the provisions of the Indian Penal Code (IPC), the Epidemic Diseases Act, the Disaster Management Act and the Foreigners Act. The Tablighi Jamaat congregation was an early epicentre of COVID-19 outbreak in the country, as members from various states had attended the event and returned to their places carrying the virus after they were infected at the event.
Hearing a batch of petitions moved by advocate Ashima Mandla, Justice Neena Bansal Krishna said, “Chargesheets quashed.” The verdict in this case was reserved in April this year, and the same was pronounced on 17th July……”
The new Social Science books for Classes 6 to 8 are truly a delight. The Class 8 book is still not available on their site, but I have read Class 6 and 7 books and really loved them.
Here are some key takeaways
Read and enjoy!
Name of Bharat and Jambu Dweep
Books talk about ancient history of India from Rig Veda and Sapta Sindhu name
Chapter also gives reference of Vishnu Puran for the name Bharat.
Books talk about name of different parts of India came from Mahabharata and ancient history of India.
This part I actually didnt like which talks about origin of Indian civilization from Indus valley civilization 4000 years ago. I think Indian civilization is way older but right now its only established fact and we have to go by facts.
Veda
Book talks about Veda and Vedic Gods. Veda were composed 7000 years to 4000 years ago.
Upanishads
Books also talk about Upanishads and various stories mentioned in Upanishads.
There is a dedicated chapter related to cultural roots of India which talks about Hindu, Bodh and Jain culture.
There’s no mention of LGBTQ or the typical “my life, my rules” narrative. Instead, the book beautifully emphasizes the importance of the family system, even dedicating a separate chapter to it. Reading this chapter was truly a treat, especially with the lovely family photographs included.
What a subtle and thoughtful way to connect ancient Indian heritage with democracy- the chapter on democracy even begins with a quote from the Mahabharata.
Chapter of cities and states start from quote of The great Chanakya and not only in beginning but on many places the quotes of Chanakya and ancient Indian thinkers were given.
No oppressor oppressed Marxist propaganda
There is a chapter on Jati and Varna system and it beautifully talks about how caste system was evolved by paternal profession and how all these groups complimented each other and lived in harmony.
There are three dedicated chapters that talk about Indian Kings ruled from -300 BC to 1000 AD.
They cover almost all great Indian Kings who were always neglected in previous books.
This is truly the best chapter I found.
It beautifully explains the sacredness of the Indian land, emphasizing that India is not just a piece of land but a holy and revered place.
This chapter talks about sacred Teertha of India scattered all over in different parts of India.
This chapter also talks in detail about sacred Kumbha mela.
This chapter talks about how rivers and mountain of India are not just river and mountains, they are sacred places and origin of our culture.
Through out the chapter they presented beautiful shloka from Purans.
My followers know that I’ve always been a critic of the Modi govt when it comes to education, but I must admit, this change feels refreshing and beautiful. So far, I’ve read only Class 6 and 7 books, and I’m eagerly waiting for the Class 8 book, which covers the so-called “Dark Age” of India (the Mughal period).
As I get that book, I will share my review. I congratulate @EduMinOfIndia and @dpradhanbjp for these changes and request that this correction should not stop here and keep going.
(This article has been compiled from the tweet thread posted by @Starboy2079 on July 17, 2025, with minor edits to improve readability and conform to HinduPost style guide)
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
4. அகதிக்குத் தெய்வமே துணை. God Himself is the help of the helpless.
41. அக்கினி தேவனுக்கு அபிஷேகம் செய்தது போல் இருக்கிறான். He is as if a libation had been poured out to the god of fire. Used of one naturally very black, who on hearing the proverb if heunderstands its purport, is of course very angry. When water is poured on burning charcoal the cinders appear exceedingly black. The intended reflection is not the less insulting because of the complimentary way in which it is conveyed.
157. அண்டாத பிடாரி ஆருக்கு அடங்குவாள்? Whom will the unapproachable demoness obey? The term Pidari is generally applied to a village goddess who is regarded as an evil being.
169. அண்ணன் தம்பி வேண்டும் இன்னம் தம்பிரானே. Elder brother and younger brother are still wanted, O God.
173. அண்ணாமலையார் அருளுண்டானால் மன்னார்சாமி மயிரைப் பிடுங்குமா? If the favour of Annamalai (Siva) be obtained, will the god Mannnar pull out a hair? Safe as regards an inferior, if protected by a superior.
249. அம்மைக்கு அமர்க்களம் பொங்கிப் படையுங்கள். The strife of Ammai, (a village goddess) has begun, boil and present (rice.)
261. அய்யன் அளந்தபடி. As God measured.
269. அரசன் அன்று கொல்லும், தெய்வம் நின்று கொல்லும். The king kills at once, God delays and kills.
289. அரன் அருளில்லாமல் அணுவும் அசையாது. Not an atom will move without the permission of God.
290, அரன் அருள் அற்றால், அனைவரும் அற்றார். Should the favour of God fail, every one will come to nought.
361. அவசாரிக்கு ஆணை இல்லை, திருடிக்குத் தெய்வம் இல்லை. The harlot has no oath, the thief has no god. Spoken of one wholly derelict.
368. அவதிக்குடிக்குத் தெய்வமே துணை. God himself is the help of a family in extremities.
393. அவன் அருள் அற்றால் அனைவரும் அற்றார் , அவன் அருள் உற்றால்அனைவரும் உற்றார். Without his favour all are destitute, if he favour, all are prosperous. Said of God’s grace and displeasure.
432. அழிக்கப்படுவானைக் கடவுள் அறிவீனன் ஆக்குவார். God dements him who is to be destroyed.
548. அன்று எழுதினவன் அழித்து எழுதுவானா? Will he who wrote then, erase and write again? Referring to the changeless preordination of God.
782. ஆர் கடன் வைத்தாலும் மாரிகடன் வைக்கக்கூடாது. Whomsoever you delay to pay, the debt of Mari must be at once discharged. Mari is the Goddess who presides over pestilence.
995. இரந்தும் பரத்துக்கு இடு. Though you have to beg them, make your offerings to God.
1040. இருந்த கால் மூதேவி நடந்த கால் சீதேவி. The sluggish foot is Mudevi the goddess of adversity, the active footis Shridevi the goddess of prosperity. These two personages were produced when the milky ocean was churned to obtain ambrosia. They play an important part in the economy of the Hindus.
1133. இனிமேல் ஒரு தெய்வத்தைக் கையெடுக்கிறதா? Hereafter is it to lift up the hands to a god?
1150. ஈசனுக்கு ஒப்பு இங்கு ஒன்றும் இல்லை. Nothing here is equal to God.
1365. உள்ளக்கருத்து வள்ளலுக்குத் தெரியும். Our inmost thoughts are known to God.
1507. எட்டாப் பூ தேவர்க்கு எட்டும் பூ பூதங்களுக்கு. Flowers beyond reach are sacred to God, but those within reach are for themselves.
1657. எளியாரை வலியார் அடித்தால் வலியாரைத் தெய்வம் அடிக்கும். If the powerful oppress the weak, God will punish them in return.
1747. ஏழைப் பிள்ளைக்குத் தெய்வமே துணை. God is the helper of the helpless child.
1786 ஐயனார் கோவில் செங்கல் அத்தனையும் தெய்வம். The bricks of Aiyanar’s temple are so many gods.
1789. ஐயன் அமைப்பை ஆராலும் தள்ளக்கூடாது. No one may dispute the pre-ordination of god.
1817. ஒரு கூடை கல்லும் தெய்வமானால், கும்பிடுகிறது எந்தக்கல்லை ? If all the stones in a basket be gods, which shall I worship?
2595. குடித்தனம் மேலிட வேண்டி பிடாரியைப் பெண்டுவைத்துக் கொண்டான். Wishing to elevate his family he married a Pidari-village goddess.
2741. குழந்தையும் தெய்வமும் கொண்டாடின இடத்திலே. Children and gods best agree with their admirers.
2797. கூண்டிலே குறுணி நெல் இருந்தால் மூலையிலே முக்குறுணித் தெய்வம் கூத்தாடும். When there is a kuruni of paddy in the bin, three kurunies of gods will be dancing in a corner.
Source- Percival Collection of Tamil Proverbs
—From Project Madurai website.
—Subham—
Tags- Tamil Proverbs, on God, Percival, Project Madurai, Part 1.
வருத்தமின்றி வாழ ஒபைடோரி (OUBAITORI) தெரிந்து கொள்ளுங்கள்!
ச. நாகராஜன்
வாழ்க்கையில் நாம் அன்றாடம் செய்யும் ஒரு மாபெரும் தவறு நம்மை மற்றவர்களுடன் அடிக்கடி ஒப்பிட்டுப் பார்ப்பது தான்.
இது நமக்கு அமைதியின்மையையும், பொறாமையையும், கவலையையும் தருகிறது.
‘இது வேண்டாம், ஒபைடோரி வாழ்க்கை முறையைத் தெரிந்து கொள்ளுங்கள்’ என்கிறது ஜப்பானிய வாழ்க்கைத் தத்துவம்.
ஒபைடோரி என்ற ஜப்பானிய வார்த்தை நான்கு மரங்களைச் சுட்டிக் காட்டும் வார்த்தை.
செர்ரி, ப்ளம், பீச், ஆப்ரிகாட் ஆகிய நான்கு மரங்கள் பூத்துக் குலுங்கும் விதத்தையும் அதன் தனித்துவமான பாணியில் அவை நன்கு வளர்ந்து மலர்வதையும் இந்த வார்த்தை சுட்டிக் காட்டுகிறது!
செர்ரி மரம் ப்ளம் மரத்தைக் கண்டு அது சீக்கிரமாக மலர்வதைக் கண்டு பொறாமைப் படுவதில்லை. இதே போல் பீச் மரம் ஆப்ரிகாட்டின் அழகிய நிறத்தைக் கண்டு வருந்தி பொறாமைப்படுவதில்லை.
அந்தந்த மரம் அததற்குரிய பாணியில், அதற்குரிய காலத்தில், வழியில் வளர்ந்து அற்புதமாகப் பெரிதாகிப் பரிணமிக்கின்றன.
இதே போலத்தான் மனிதர் ஒவ்வொருவரும் இருக்க வேண்டும் என்று கூறுகிறது ஒபைடோரி தத்துவம்.
ஒவ்வொருவரும் தனிப்பட்ட குணாதிசயங்களையும், திறமைகளையும், விருப்பங்களையும் கொண்டுள்ளோம்.
இப்படி இருக்கையில் எதற்காக நம்மை அடுத்தவருடன் ஒப்பிட வேண்டும்?
ஒபைடோரியைக் கடைப்பிடிப்பவர்கள் மிக்க மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்கள்.
ஒவ்வொருவருக்கும் ஒரு காலம் உண்டு! மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கை உண்டு!! வெற்றிகளும் உண்டு!!!
அவர்கள் தம்மை மற்றவருடன் ஒரு காலத்திலும் ஒப்பிட்டுப் பார்ப்பதே இல்லை. ஆகவே எதிர்மறை விமரிசனம் என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போகிறது; நிம்மதியான வாழ்க்கை உறுதியாகிறது!
அவர்கள் தங்களின் தனித்தன்மையை உணர்ந்து தங்களை அன்புடன் நடத்திக் கொள்கிறார்கள். அவர்கள் தங்களது பலம் வெற்றிகள், திறமைகள் பற்றி நன்கு அறிவர்.
அவர்கள் தினமும் தங்களுக்குள் இருக்கும் திறமைகளுக்கு நன்றி தெரிவித்து அன்று நடந்த நல்ல விஷயங்களை நினைவுபடுத்திக் கொள்கிறார்கள்; அல்லது டயரியில் எழுதிக் கொள்கிறார்கள்.
அவர்கள் மற்றவர் போல ஆக முயற்சிக்காமல் தங்களுக்குள் இருக்கும் திறமைகளை வளர்ப்பது பற்றிச் சிந்தித்து அவற்றை வளர்த்து அதன் மூலம் வெற்றி பெறுகிறார்கள்.
அவர்கள் மற்றவர்களின் வெற்றியைக் கண்டு காப்பி அடிக்காமல், பொறாமைப் படாமல் அவற்றை ஊக்கமூட்டும் சக்தியாக மட்டும் எடுத்துக் கொண்டு வளர்கிறார்கள்.
செர்ரி, ப்ளம், பீச், ஆப்ரிகாட் ஆகிய நான்கு மரங்களும் அருகருகே பக்கத்தில் வளர்ந்தாலும் அவை பூத்துக் குலுங்கும் காலம் வேறுபட்டது; அவை தரும் பலன்கள் மாறுபட்டது.
ஆனால் அனைவருக்கும் அவை மகிழ்ச்சியைத் தருகின்றன.
பிரம்மாண்டமான சமதளத்தில் அவை வெவ்வேறு காட்சிகளைத் தருவதோடு மனதை மயக்கும் நறுமணத்தையும் பழங்களையும் பூக்களையும் தருகின்றன அல்லவா?
அமெரிக்க ஜனாதிபதியான தியோடர் ரூஸ்வெல்ட், “இன்னொருவருடன் ஒப்பிட்டுப் பார்க்கும் தன்மையானது சந்தோஷத்தைத் திருடும் திருடனே” என்று கூறியிருக்கிறார்.
ஆகவே எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் ‘அடுத்தவருடன் ஒப்பிடும் மனப்பான்மை’ என்ற வியாதிக்கு அருமருந்து ஒபைடோரியே தான்!
ஒபைடோரியை மேற்கொள்வோம்; நம் வழியில் உயர்வோம் – நிம்மதியுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ்வோம்!
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
புராணங்களின் எண்ணிக்கையில் எப்போதும் கருத்து வேறுபாடு இல்லை. ஆனால் ஒரு சில மாற்றங்களை மட்டும் காண்கிறோம்
தேவி பாகவதத்தில் ஒரு ஸ்லோகம் வருகிறது
Devī Bhāgavata (Skanda 1, chapter 3, śloka 21) .
madvayaṃ bhadvayaṃ caiva bratrayaṃ vacanuṣṭayam |
anāpadlliṅga-ku-skāni purāṇāni pṛthaka-pṛthaka ||
மத்வயம் பத்வயம் சைவ ப்ரத்ரயம் வசனுஷ்டயம்
அனாபத்லிங்க- கூ – ஸ்கானி புராணாநி ப்ருதக ப்ருதக
இதன் பொருள் (இதைத்தான் கி.வா.ஜ . தமிழில் கொடுத்தார் )
By ‘ம 2 ’ (Ma) two Purāṇas –Matsya and Mārkaṇḍeya , by ‘பா 2 ’ (Bha) two Purāṇas –Bhāgavata and Bhaviṣya , by ‘ப்ர 3 (Bra) three Purāṇas –Brahma, Brahmavaivarta and Brahmāṇḍa , by ‘வ 4 ’ (Va) four Purāṇas –Vāmana, Viṣṇu , Vāyu and Varāha , by ‘அ 1 ’ (A)–Agni Purāṇa , by ‘ந1 ’ (Na)–Nārada Purāṇa , by பத்1 (Pad)–Padma Purāṇa , by ‘லி 1 ’ (Li)–Liṅga Purāṇa , by ‘க 1 ’ (Ga)–Garuda Purāṇa , by ‘கூ 1 ’ (Ku)–Kūrma Purāṇa and by ‘ஸ்க1 ’ (Ska)–Skanda Purāṇa.
***
பதினெட்டு புராணங்களை நினைவு வைத்துக்கொள்வதற்கு எப்படியும் நீண்ட பாடலை நினைவு வைத்துக்கொள்ளவேண்டும். இதற்கு பிரபல தமிழ் அறிஞர் கி.வா.ஜகந்நாதன் வேறு ஒரு உத்தியைக் கூறுகிறார்.
கீழ்கண்ட எழுத்துக்களை நினைவு வைத்துக்கொள்ளுங்கள் போதும்;
அதை நான் அகர வரிசையில் அமைத்துள்ளேன்; இன்னும் எளிதாக இருக்கும் .
ஆ இ; க, க, கூ;
சி,சூ; நா;
ப, பா, பி, பௌ[
ம , மா; வ, வா; வா, வி
****
அ, ஆ = ஆக்கினேய / அக்கினி புராணம்
இ = இலிங்க புராணம்
க, க , கூ =கந்த புராணம் ,கருட புராணம், கூர்ம புராணம்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas
6-5-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை!
உபரத்தினங்கள் வரிசை!
கண் பார்வைக் குறை நீங்க ஓபல் அணியலாமே!
ச. நாகராஜன்
உபரத்தினக் கற்களில் ஒன்றாக அமையும் ஓபல் ஒரு அற்புதக் கல்லாகும்.
இது சிலிகானும் தண்ணீரும் அதிகம் உடையது. இதன் ஹார்ட்னெஸ் எனப்படும் கடினத்தன்மை 5.5 முதல் 6.5 வரை ஆகும்.
அற்புதமான வண்ணக்கலவைகளை உடையது ஓபல்.
தீ ஓபல் (FIRE OPAL) என்ற கல்லைப் பார்த்தால் கல்லின் உள்ளே ஒரு தீ ஆறு ஓடுவது போலத் தோன்றும்.
வானவில்லின் வர்ணஜாலங்களைத் தன்னுள்ளே காட்டுவதும் இந்த ஓபல் தான்.
பச்சை ஓபல் (GREEN OPAL) என்ற ஒபல் கல்லின் உள்ளே பச்சை நிறத்தை முப்பரிமாண கோணத்தில் காணலாம். பல வண்ண ஓபல் (MULTI COLOUR OPAL) என்பது நிறைய வண்ணங்களை அள்ளி வீசும்.
இது
நெற்றிக் கண் சக்கரத்துடன் தொடர்பு கொண்டதாக இதை யோகா நிபுணர்கள் கூறுவர்.
பார்ப்பதற்கு மிகவும் அழகான இது கண்ணுடன் நெருங்கிய தொடர்பு கொண்டது. கண்களுக்கு பிரகாசத்தை அளித்து இது கண்னை வலுப்படுத்தும். கண் பார்வை ஸ்டோன் என்பதால் இதை அணிந்து கண்களில் உள்ள கோளாறுகளைக் களைந்து நல்ல பார்வையைப் பெற முடியும்.
அது மட்டுமல்ல, நினைவாற்றலை இது நன்கு ஊக்குவித்து வளர்க்கும். நியூரோ டிரான்ஸ்மிட்டர் கோளாறுகளை நீக்கும்.
ஒளிவட்டம் எனப்படும் நமது அவுராவை இது பிரகாசிக்க வைத்து ஆற்றலை வெகுவாக மேம்படுத்தும். இது உடல் மற்றும் ஆன்மீக குணாதிசயங்களைத் தூண்டி உயரிய ஆன்மீக நிலையையும் தரும்.
இதில் பத்து வித வகைகள் உள்ளன. உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து கிடைக்கும் இவற்றின் குணாதிசயங்கள் சற்றே வேறுபட்டவையாக இருக்கும்.
தன்னம்பிக்கையை ஏற்படுத்தும். சந்தோஷம் தரும். பாராட்டுகளை வாங்கித் தரும். நல்ல உணர்வுடன் ஆரோக்கியமாக இருக்கும் மகிழ்ச்சியை இது தரும்.
நமது பாரதத்தின் நவரத்தின சாஸ்திரப்படி இது உபலகம் என்று அழைக்கப்படுகிறது.
ஜோதிட வல்லுநர்கள், லிப்ரா ராசிக்காரர்கள் அணிய வேண்டிய கல் இது என்று கூறுகின்றனர். (செப்டம்பர் 23 முதல் அக்டோ[அர் 22 வரை பிறப்பவர்கள் LIBRA ராசிக்காரர்கள்)
எட்கர் கேஸ் என்ற பிரபல அதீத உளவியல் நிபுணர் இதை உள்ளத்தைத் தூய்மைப் படுத்தும் கல் என்று வர்ணிக்கிறார்.
இதயத்திற்கு சக்தியைத் தரும் இந்தக் கல் சுலபமாக மற்றவர்களைப் புரிந்து கொள்ளும் ஆற்றலையும் தருகிறது.
விஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஓபலை அணிந்தால் அது உடனே தன் பிரகாசத்தை இழக்கும். நல்ல நண்பர்களின் கூட்டுறவில் இது கூடுதலாகப் பிரகாசிக்கும்.
பதினான்காவது நூற்றாண்டில் ஒரு கோர சம்பவம் லண்டனில் நடைபெற்றது. அங்கு ப்ளேக் நோய் தாண்டவமாட பல லட்சம் பேர் மாண்டனர்.
நோயிலிருந்து தப்பித்த அனைவரும் ஓபல் கல்லைத் தன் கைகளில் அணிந்திருந்ததாக லிண்டா க்ளார்க் என்னும் ஜெம்மாலஜிஸ்ட் கூறுகிறார்.
நமக்குத் தெரிந்த நல்ல நிபுணரிடமிருந்தோ அல்லது கடைக்காரரிடமிருந்தோ இதை வாங்கி அணிய வேண்டும்.
இதை அணிந்தோருக்குத்தான் ஓபலின் ஓஹோ என்ற புகழும் சக்தியும் தெரிய வரும்!