தமிழர்கள் சொன்ன அதிசய முனிவர்கள் பற்றி புதிய தகவல் ? TIME TRAVEL காலப் பயணம் செய்யலாம்! (10,528)

THUMB SIZED MEN IN GULLIVER’S TRAVELS OF JONATHAN SWIFT 

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,528

Date uploaded in London – –    5 JANUARY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

புறநானூற்றில் புலவர் நரசிம்மன் !

ஜெயலலிதாவுக்கு ஏன் பரிதாபச் சாவு ?

பிரேமதாசாவின் உடல் சிதறுவது பாபாவுக்குத் தெரியும்!

வாலகில்யர்கள் என்னும் கட்டைவிரல் அளவேயுள்ள முனிவர்கள் 60,000 பேர் சூரியனுடம் வலம் வருவது பற்றி புறநானுறு , சிலப்பதிகாரம், திருப்புகழ் ஆகியன என்ன சொல்கிறது என்பதை பத்து ஆண்டுகளுக்கு முன்னர் “சூரியனுடன் சுற்றிவரும் குள்ள முனிவர்கள் யார் ? “ என்ற தலைப்பில் எழுதினேன் (2011 ம் ஆண்டு கட்டுரை இணைப்பு கீழே உள்ளது )

இப்பொழுது அதர்வண வேதத்தைப் படித்தபொழுது புதிய தகவல் கிடைத்திருக்கிறது 2000 ஆண்டுகளுக்கு முன்னரே இது தமிழர்களுக்கும் தெரியும் என்பது சங்க இலக்கியக் குறிப்புகளால் தெளிவாத் தெரிகிறது. அதர்வண வேதத்தின் ( அ. வே)  கடைசி காண்டங்கள் – அதாவது பத்தொன்பதாவது, இருபதாவது காண்டங்கள் — ரிக் வேத செய்யுட்களை மீண்டும் கூறுகின்றன. அதாவது உலகிலேயே பழைய நூலான ரிக்வேதத்தின் மறு  பதிப்பு !

அதில் உள்ள முக்கிய வரிகளைக் குறிப்பிட்ட பின்னர் எனது வியாக்கியானத்தைத் தருகிறேன்:–

பத்தொன்பதாவது காண்டம், பாடல் 53, 54 ( சூக்தங்கள் 569 , 570 ; தலைப்பு-காலன் )

தமிழில் காலன் என்றால் யமன்; காலம் என்றால் நேரம்.

இரண்டும் நம்மை விழுங்கிக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு நாள் நமக்குக் கழிந்தால், யமனுடைய வீட்டுக்குப் போக தயார் ஆகிறோம் என்று பொருள்.

அதர்வண வேதத்தில் ( அ. வே)   சூரியனுடன் சவாரி செய்யும் முனிவர்கள் பற்றிய குறிப்பு வருகிறது . வியாக்கியனக்காரர்கள் அங்கு வாலகில்யர் என்னும் குள்ள முனிவர்கள் பற்றி ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் புறநானூற்று வரி அப்படியே உள்ளது.

சுடரொடு திரிதரும் முனிவரும்” என்பது சிலப்பதிகார வரி. “சுடரொடு கொட்கும் அவிர்சடை   முனிவரும்” என்பது புறநானூற்று வரி . (பாடல் 43) இதை எழுதியவர் பெயர் நரசிம்மன். அதாவது தாமப்பல் கண்ணன்

ஓம்  வஜ்ர நகாய வித்மஹே தீஷ்ண தம்ஷ்ட்ராய தீமஹி

தன்னோ நரசிம்ஹ ப்ரசோதயாத் — என்பது நரசிம்ம காயத்ரி  மந்திரம்

இதில் தீக்ஷ்ண தம்ஷ்ட்ர  என்பதன் தமிழ் ஆக்கமே “தாமப்பல் “. கண்ணன் என்பது அவர் பெயர் அல்லது குடும்பப் பெயர் என்றும் கொள்ளலாம் .

அ .வே. முதல் துதி சூரியனை போற்றுகிறது. இதில் சூரிய ஒளியில் காணப்படும் 7 வண்ணங்கள் 7 குதிரைகளாக வருணிக்கப்படுகின்றன. இதை நாம் வானவில் ஏற்படுகையில் காண்கிறோம். சூரிய ஒளியை  PRISM  பிரிஸம் என்னும் முப்பட்டைக் கண்ணாடி வழியே பாய்ச்சினாலும் தெரியும் .

முதல் துதியின் முதல் மந்திரத்தில் அறிஞர்களான கவிகள் அவனில் ஏறுகிறார்கள் ; எல்லா புவனங்களும் அவனுடைய சக்கரங்கள் “– என்ற வரிகள் வருகின்றன. ஏனைய ஒன்பது மந்திரங்களில் இன்னும் பல அறிவியல் தகவல்கள் உள்ளன..

அ .வே. மந்திரங்களை இந்திய விஞ்ஞானிகள் உட்கார்ந்து ஆராய்ந்தால் அமெரிக்க, ரஷ்ய விஞ்ஞானிகள் சொல்லுவதற்கு முன்னரே நாம் பல உண்மைகளை சொல்ல முடியும்

பத்து ஆண்டுகளுக்கு முன்னர் நான் எழுதிய வாலகில்யர் கட்டுரையில் அவர்கள் அல்ட்ரா வயலெட் கிரணங்களைத் தடுத்து நிறுத்தும் ஓசோன் வளி மண்டலம (OZONE LAYER, Ultra Violet Rays)  போன்றவர்களாக இருக்கலாம் என்று எழுதி இருந்தேன். இப்பொழுது அவர்கள் “காலத்தில் பயணம் செய்யும் முனிவர்கள்” என்ற பொருளும் தொனிப்பதை TIME TRAVELLERS உணர்கிறேன் .

கால யந்திரம் – டைம் மிஷின் TIME MACHINE NOVEL BY H G WELLS  — என்ற கதையை சுமார்  நூறு ஆண்டுகளுக்கு முன்னரே எழுதினார். அது முதற்கொண்டு மனிதன், பழைய காலத்துக்குப் பயணம் செய்ய முடியுமா? வருங்காலத்துக்குப் பயணம் செய்து எதிர்காலத்தைப் பார்க்க முடியுமா ?என்றெல்லாம் விவாதித்து வருகிறான். இதில் இந்துக்களுக்குத் தெளிவான கருத்து உள்ளது.

கடந்த காலத்தில் நடந்தவற்றைப் பார்க்க முடியும் ; குறிப்பாக நம் உடலுக்குள் நம் PREVIOUS BIRTH STORIES முன்பிறவிக் கதைகள் ஒரு பிலிம் சுருள் FILM ROLL போல சுருட்டி வைக்கப்பட்டுள்ள்ளது என்று சுவாமி விவேகானந்தர் கூறுகிறார். நம் புராணக் கதைகளும் இதையே புகலும் . சிலப்பதிகாரத்தில் கூட சாமி வந்து ஆடும் பெண்மணி, கண்ணகி, கோவலன் ஆகியோரின் முற்பிறப்பு வரலாறுகளைக் கூறுவதைக் காண்கிறோம்.

சுந்தரரும் அப்பரும் “காலத்தில் பயணம்” TIME TRAVEL  செய்து இறந்த பையனையும் பெண்ணையும் மீட்டு  வந்ததையும் எழுதியுள்ளேன். அவர்கள் இப்போது என்ன வயதுடன் இருப்பார்களோ அப்படி வளர்ந்த நிலையில் திரும்பி வந்தார்கள் என்று சேக்கிழார் பாடுகிறார்; 1000 ஆண்டுகளுக்கு முன்னர் பாடியது. ஆக இந்துக்கள் சொல்லுவது காலம் என்பது வட்டவடிவமானது CYCLICAL. அதில் முதலும் இல்லை முடிவும் இல்லை. ஆனால் ஐன்ஸ்டைன் EINSTEIN போன்ற விஞ்ஞானிகள் காலம் என்பது நேர்கோட்டில் பயணம் செய்கிறது என்கிறார்கள். நாம் சொல்லுவதே சரி என்பதை அவர்கள் விரைவில் ஒப்புக் கொள்ளுவர். மேலும் தேவர்கள் ஒளி வடிவில் (DEVA= LIGHT) இருப்பதால் ஒளியின் வேகத்தில் செல்வதோடு மனோ வேகத்திலும் (Speed of Thought) செல்ல முடியும் என்பது இந்துக்களின் கண்டு பிடிப்பு.

ஒளியின் வேகத்தில் ஒருவர் பயணம் செய்தால் அவர்களுக்கு என்றும் 16 வயது; அதாவது நித்திய மார்க்கண்டேயன் என்று ஐன்ஸ்டைன் சொல்கிறார். ஆனால் அந்த வேகத்தில் பயணம் செய்ய முடியாது என்பதும் அதை மிஞ்சவே முடியாதென்பதும் அவர்தம் துணிபு. ஆனால் நாம்,  அதை மிஞ்ச முடியும் எதிர்காலத்தைச் சென்று பார்ப்பதோடு அதில் தலையிடவும் முடியும் என்கிறோம்.

பகவத் கீதையின்   விஸ்வரூப தரிசனக் காட்சியைப் படித்தவர்களுக்கு இது தெள்ளிதின் விளங்கும். அர்ஜுனன், தனது எதிரிகளைக் கொல்லுவதற்கு முன்னமே, அவர்கள் கொல்லப்பட்டு கிருஷ்ணனின் வாயில் புகுவதைக் கிருஷ்ணன் காட்டுகிறார். ஆக எதிர்காலத்தில் நடக்கப்போவதைக் காணலாம்.

காஞ்சி பரமாசார்ய சுவாமிகள்,  அரியலூரில் காவிரி வெள்ளத்தில் முழு ரயிலும் அடித்துச் செல்லப்பபோவதை அறிந்து,  எம் எஸ் சுப்புலட்சுமி அந்த ரயிலில் போகவேண்டாம் என்று தடுத்ததை   உலகமே அறியும் . மைக்கேல் ஜாக்சன் தற்கொலை, பிரேமதாச  குண்டு வெடியிப்பில் உடல் சிதறி அழிதல் — இவற்றை முன்னரே அறிந்த சத்ய சாய்பாபா — அவர்களை பார்க்க மறுத்ததையும் பத்திரிக்கைகளில் நாம் படிக்கிறோம்.

இந்திரா காந்தியின் துர் மரணத்தை அறிந்த காஞ்சி பரமாசார்ய சுவாமிகள், அவரைப்      பார்க்க மறுத்தார். ஆனால் சுவாமிகளின்  பரம சீடரான இந்திய ராஷ்ட்ரபதி ஆர். வெங்கடராமன் வேண்டியதன் பொருட்டு சந்தித்தார். அப்போதும் அவர் போக்கு சரியில்லை என்றே சுவாமிகள் எச்சரித்தார் ; காஞ்சி மடத்துக்கு கொடுமை இழைத்த ஜெயலலிதாவின்  பயங்கர, பரிதாபச் சாவினை முன்னரே அறிந்த சங்கராச்சார்யார் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள்  , ஜெயலலிதாவுக்கு எதிரான ஆபிசார யக்ஞத்தை (தீயில் மிளகாய் போட்டு மந்திரம் சொல்லி எதிரியை ஒழிக்கும் வேள்வி) தடுத்து நிறுத்தினார்.

அவர்களுக்கு எதிர்காலத்தில் நடக்கப்போவது தெரியும். ஆனால் பெரும்பாலும் அதைத் தடுத்து நிறுத்த மாட்டார்கள் . ஏசுவுக்கு தான் அகால மரணம் அடையப்போவது தெரிந்து 13-ஆவது ஆள் காட்டிக் கொடுப்பான் என்கிறார். ஆயினும் “ஏ தேவனே, ஏ தேவனே என்னை ஏன் கைவிட்டீர் (ஏலி, ஏலி லாமா சபக்தானி ) என்று சாதாரண மனிதன் போல சிலுவையில் கதறினார்.

இந்த பிளாக்கில் வெளியான பல நூறு அற்புதங்கள் சாது,  சந்யாசிகள் காலப் பயணம்  TIME TRAVEL செய்ய முடியும் என்பதையும் மிகவும் அரிதாகவே சாதுக்கள் அதில் தலை இடுவர் என்பதையும் காட்டுகின்றன.

நாரத மகரிஷி பற்றிய குறிப்புகள் தமிழில் முதல் தடவையாக சிலப்பதிகாரத்திலும், சம்ஸ்க்ருதத்தில் அதர்வண வேதத்திலும் வருகிறது. த்ரி லோக சஞ்சாரியான அவர் மனோ வேகத்தில் பல உலகங்களுக்குச் சென்று வந்ததை இந்துக்கள் எல்லோரும் அறிவர் .

கட்டுரையின் இரண்டாவது பகுதியில் , இந்த இரண்டு அ.வே . துதிகளில் உள்ள வேறு சில அறிவியல்  கருத்துக்களையும் எடுத்துக் காட்டுகிறேன்.

MY 2011 ARTICLES ON VALAKHILYAS:–

சூரியனுடன் சுற்றி வரும் குள்ள முனிவர்கள் யார்

https://tamilandvedas.files.wordpress.com › 2011/12

PDF

(Short but smart Valakhilyas: Ozone layer and Gulliver’s Travel). “நிலமிசை வாழ்நர் அலமரல் தீரத்.

Valakhilyas: 60000 thumb-sized ascetics who protect Humanity

https://tamilandvedas.com › 2011/12/31

31 Dec 2011 — Tamil and Vedas · Valakhilyas: 60,000 thumb-sized ascetics who protect Humanity.

To be continued……………………….

Tags —  வாலகில்யர், குள்ள முனிவர், சூரியன், அதர்வண வேதம் , காலப் பயணம்

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: