கம்பன் பாட்டில் ஏழு கடல்கள் (Post No.5655)

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 12 November 2018

GMT Time uploaded in London –11-20 am
Post No. 5655

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

இந்துக்கள்  இயற்கைப் பொருட்களையும் செயற்கைப் பொருட்களயும் கடவுளரையும் ஏழு ஏழாகப் பிரித்து இருப்பதை நாம் அறிவோம்.

பழங்கால சிறுவர் கதைகளிலும் இதனால் ‘ஏழு கடல் தாண்டி, ஏழு மலை தாண்டி, ஏழு குகை தாண்டி’ என்றெல்லாம் எழுதினர்.

நாம் உலகை ஏழு த்வீபங்களாக (பெருநிலப்பரப்பு) பிரித்தோம். கடல்களை ஏழாகப் பிரித்தோம்.

உதிரம் = இரத்தம்

1000 ஆண்டுகளுக்கு முன்னர், கம்பன் காலத்தில், மக்களுக்கு இவை நன்கு தெரிந்து இருந்ததால்  கம்பன் இது பற்றி ஒரு பாடலில் பாடுகிறான்.

உப்புதேன் மதுஒண் தயிர் பால் கரும்பு

அப்புத்தான் என்று உரைத்தன ஆழிகள்

துப்புப்போல் குருதிப் புனல் சுற்றலால்

தப்பிற்று  அவ் உரை இன்று ஓர் தனிவினால்

-யுத்த காண்டம், மூல பல வதைப்படலம்

பொருள்

பவழம் போன்று சிவந்த உதிர நீர், எங்கும் சூழ்ந்ததால், உப்பு, தேன், நெய், தயிர், பால், கரும்புச் சாறு,சுத்த நீர் என்று பிரிந்து ஏழு கடல்கள் என்று கூறப்படும் பெயர் மறைந்து, எல்லாக் கடல்களுமே உதிரக் கடல் என்று கூறும்படி ஆயின.

ஸம்ஸ்க்ருதத்தில்  இவற்றை லவண (உப்பு), க்ஷீர (பால்), க்ருத (நெய்), ததி (தயிர்),  சுரா (மது), இக்ஷு (கரும்புச் சாறு), ஜல (தண்ணீர்) சாகரங்கள் என்பர்

TAGS–

-subham–

மலர்கள் குறுக்கெழுத்துப் போட்டி (Post No.5649)

 

Written  by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 10 November 2018

GMT Time uploaded in London –18-43
Post No. 5649

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

இந்தக் கட்டத்தில்  குறைந்தது 23 மலர்கள் உள்ளன.

கண்டுபிடியுங்கள்.

விடைகளைக் கீழே சரி பாருங்கள்

தா மு ளி ல் லி தி
ல் லி கை ஜா ரோ சா ந் தி
ரை லை றை ன் கொ க் சி வ ணி
ரு க் கு பூ ம் தா
செ ம் ரு த் தி கு ளை ரு
ண் சி ம் சி ஞ் னோ
ங் ச் ரு சி ச் வா ரு
கி பி ரை தா ந் தி ந்
ம் மு கு பை ம் து த் சி கா

 

மல்லிகை ,தாமரை, முல்லை, அரளி , அல்லி, சாமந்தி ,கொன்றை, ரோஜா,  மருதா ணி, பிச்சி,  எருக்கு, சம்பங்கி, செம்பருத்தி, சிவந்தி, செண்பகம், குவளை, மனோரஞ்சிதம் , காசித் தும்பை,  இரு வாச்சி, அந்தி மந்தாரை, குமுதம், தாழம் பூ,  மரு

TAGS– மலர்கள், குறுக்கெழுத்துப் போட்டி

—சுபம்—

தாமரைக்கு தமிழில் எத்தனை பெயர்கள்? (Post No.5640)

 

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 8 November 2018

GMT Time uploaded in London –16-26
Post No. 5640

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

தமிழ் நிகண்டுகளில் தாமரைக்கான பெயர்களைத் தருகையில் ஸம்ஸ்க்ருதப் பெயர்களையும் சேர்த்தே தருவர். ஏனெனில் சங்க காலம் முதல் இன்று வரை எல்லா அகராதிகளிலும் நிகண்டுகளிலும் ‘தமிழ்’ என்ற பெயர் இருந்தாலும் பாதி ஸம்ஸ்க்ருத்ப் பெயர்களே!!! அதை நினைவில் வைத்துக்கொண்டு கட்டத்தில் உள்ள 19 தாமரை மலரின் பெயர்களைக் கண்டு பிடியுங்கள். மலர் என்று மட்டும் பார்த்தால், இந்துப் பெண்களின் பெயர்களில் அதிகம் இடம் பெறுவதும் தாமரை மலரின் பெயர்களே.

 

கீழ்கண்ட பெயர்கள் உள்ளன:-

தாமரை, மலர், வாரிஜம், அம்புஜம், ஜலஜம்

அம்போருகம், கமலம், அரவிந்தம், இண்டை,

புண்டரீகம், முளரி, பங்கஜம், சதபத்ரி, பதுமம்

சரோஜம், நளினம், அரும்பு, முண்டகம், ராஜீவ.

சரோஜா, நளினி, பத்மா, அம்புஜம், ஜலஜா, கமலா முதலிய பெயர்கள் தாமரையின் பெயர்கள் என்று பலருக்குத் தெரியாது.

மலர் என்றால் தாமரை; இந்தியாவின் தேசீய மலரும் தாமரை.

Tags– தாமரை,  பெயர்கள்

தாமரை வாழ்க; தாமரை வெல்க

16 வகை தானியப் புதிர் (Post No.5617)

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 2 November 2018

GMT Time uploaded in London – 21-27

Post No. 5617

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

கூலம் எட்டு என்றும் 16 என்றும் பகர்வர். இந்தக் கட்டத்திலுள்ள

16 வகைத் தானியங்களையும் கண்டு பிடியுங்கள். கீழேயே விடையும் உளது.

16 types of grains

லை ழு ந் து
சா ரா கி கு மொ
மை நெ ங் ச்
பு ல் று சை
ள் ரை
று ளு ள் கொ தோ தி னை

 

கடலை, சா மை , ப ய று, நெல், புல் , ராகி, வரகு, இறுங்கு, தினை, உழுந்து, எள்ளு, கொள்ளு, மொச்சை, அ வரை, தோரை, துவரை,

புல் என்பதைப் புல்லரிசி என்று கொள்ளலாம்.

 

–subham–

எறும்பு போல சிறுகச் சிறுகச் சேர்- மநு புத்திமதி (Post No.5551)

WRITTEN by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 17 October 2018

 

Time uploaded in London – 7-42 AM

(British Summer Time)

 

Post No. 5551

 

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

மநு நீதி நூல்- PART 30

 

(ஸ்லோகங்கள் 4-205 முதல் காண்போம்.)

 

நாலாவதுஅத்யாயம் முதல் பகுதியில் பல இடங்களில் பூனையைக் குறிப்பிபீட்டார். பசு போல உடனேபலன் தராவிட்டாலும் அதர்மம் மெதுவாகப் பலன் தந்து ப்ரம்பரையையே அழித்துவிடும் என்று சொன்னார். உர்த்ராக்ஷ பூனை போல இராதே, பஞ்சதந்திரக் கதை கொக்கு போல இராதே என்று சொன்னதையும் மநு நூல்- பகுதி 29ல் கண்டோம். இந்தப் பகுதியில் எறும்பு போல வாழ் என்கிறார்!!

4-205-228 எங்கு சாப்பிடக்கூடாது, என்ன சாப்பிடக் கூடாது என்று அவர் சொல்லுவதைப் பார்த்தால் ஏன் ஹோட்டல்களில் சாப்பிடக்கூடாது என்று தெளிவு பிறக்கும்; ஒருவர் எங்கு சாப்பிடுகிறார், என்ன சாப்பிடுகிறார் என்பதில் கவனம் தேவை. ‘நீ அதுவாக ஆகிவிடுவாய்’ (YOU ARE WHAT YOU EAT, YOU ARE WHERE YOU EAT- YOU ARE THAT) என்பார் .

 

4-229,233 எது நல்ல தானம் என்று சொல்கையில் தண்ணீர் தானம் முதல் வேதம் கற்பிக்கும் தானம் வரை சொல்லி வேத தானமே சிறந்தது என்கிறது

 

4-235-தானம் கொடுப்பவர், தானம்    வாங் குபவர் புண்ணியம் பற்றி செப்பும்

4-238 எறும்பு போல புண்ணியம் சேர்; சிறுகச் சிறுக சேர் என்று புகல்கிறது

யா காவாராயினும் நா காக்க!!!

4-256 சொல்,பேச்சின் முக்கியத்தைக் கூறும். பேச்சுதான் எல்லாவற்றுக்கும் மூலம், ஆணிவே ர் என்று பகரும்.

வள்ளுவன் சொன்ன எல்லாம் நினைவுக்கு வரும்.

 

 

 

நாலாவது அத்யாயம் நிறைவு பெற்றது.

 

–சுபம்-

தமிழன் ஏமாந்த கதை! ஏமாற்றிய கதை! அதிசய தோரியம்!! (Post No.5525)

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 10 October 2018

 

Time uploaded in London –9-05 am (British Summer Time)

 

Post No. 5525

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

தமிழன் ஏமாந்த கதை! ஏமாற்றிய கதை!

 

தோரியம் என்பது இந்தப் பிரபஞ்சத்துக்கு ஆதாரமான 118 மூலகங்களில் ஒன்று; இந்தியாவுக்குக் கடவுள் கொடுத்த அருள் பிரஸாதங்கள் அநேகம்; ஆனால் பொருள் பிரஸாதங்கள் குறைவு. ஆயினும் கன்யாகுமரி,கேரளத்தின் கடலோரமாகக் கொட்டிக் கிடக்கும் தாதுவில் இருக்கும் தோரியம், அணுசக்தி எரிபொருள் ஆகும். அதை வைத்து ஜெர்மானியர்களை ஏமாற்ற நினைத்த தமிழர்கள் ஏமாந்து போன சுவையான நிகழ்ச்சியுடன் தோரியத்தின் கதையைத் துவக்குவேன்

ஜெர்மனிக்கு  கயிறு ஏற்றுமதி

ஏமாறாதே, ஏமாற்றாதே என்பது ஆன்றோர் பொன்மொழி.

 

‘கள்ளனுக்கும் குள்ளன் உண்டு’ ‘ நீ பாய்க்கு அடியில் புகுந்தால் நான் கோலத்துக்கு அடியில் புகுவேன்’ என்ற பழமொழிகளை நிரூபிக்கும் சுவையான விஷயம்.

 

உலக யுத்த காலத்தில் ஜெர்மானியர்கள் அணு ஆயுதங்களையும், சக்தி வாய்ந்த புது வகை ஆயுதங்களையும் செய்வதில் முனைப்பு காட்டினர். அப்பொழுது ‘கும்பிடப் போனவனுக்கு தெய்வம் குறுக்கே வந்தது போல’ தமிழர்களும் மலையாளிகளும் உதவினர்.

 

ஜெர்மனி நாடு இந்தியாவிலிருந்து கயிறு இறக்குமதி செய்து வந்த காலம் அது. கப்பலில் செல்லும் ஏற்றுமதிக் கயிற்றுக்கு எடையின் பேரில் ஜெர்மனி பணம் கொடுத்து வந்ததது. கன்யாகுமரி முதல் கேரளத்தின் தென்பகுதி வரை இந்தக் கயிறு ஏற்றுமதியில் ஈடுபட்டது.

கயிற்றின் எடையைக் கூட்டிக் காண்பித்துக் கூடுதல் பணம் பெறுவதற்கு நம் ஊர் ஆட்கள், அந்தக் கயிற்றைத் தண்ணீரில் நனைத்து மணலில் புரட்டி எடை போட்டனர். ஈரத்தினாலும் மணலினாலும் எடை கூடவே மக்களுக்கு மகிழ்ச்சி. கூடுதல் பணம் கிடைத்தது.

 

இறக்குமதி செய்த ஜெர்மானியர்கள், கயிற்றுடன் வரும் மணல், ‘ஒரு மாதிரியாக’ இருந்தவுடன் அதை ஆராய்ச்சி செய்தனர்; அற்புதமான தோரியம் எனும் அணு சக்திப் பொருள் அது என்று தெரிந்தது. பின்னர் அவர்கள், கயிறு ஏற்றுமதி செய்யும் இந்தியர்களுக்கு கடிதம் எழுதினர்.  ‘அன்புடையீர், தாங்கள் கயிற்றுடன் நிறைய மணலைச் சேர்க்கிறீர்கள். அந்த மணலையும் எங்களுக்கு அனுப்புங்கள்; கயிற்றைவிடக் கூடுதல் பணம் தருகிறோம் என்று!!! பின்னர்தான் தெரிந்தது. நாம்தான் ஏமாளிகள் என்று!

 

கன்யாகுமரி முதல் கேரளத்தின் கடலோரம் வரை, கிழக்கில் விசாகப் பட்டிணம் வரை மோனசைட் என்னும் கலர் மணல்- வண்ண மணல் கிடைக்கிறது. இதில் தோரியம் (THORIUM) எனப்படும் மூலகம் உள்ளது. இது அணுசக்தியை உண்டாக்கப் பயன்படும் மூலகம். கடவுள் நமக்குக் கொடுத்த பொருட் பிரசாதம். உலகிலேயே அதிகம் தோரியம் உடைய நாடுகள் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் தான்.

 

 

 

அணு உலைகளில் தோரியத்தைப் பயன்படுத்தினால் செலவும் குறைவு. ஆயுதம் செய்யக்கூடிய தரத்துக்கு துணைப்பொருள் கிடைக்காததால்   அணு ஆயுத உற்பத்தி வாய்ப்பும், ஆபத்தும் குறைவு.

இது ஒரு கதிரியக்கம் உடைய வெள்ளி போன்ற உலோகம் (RADIO ACTIVE, SILVERY METAL) ஆனால் காற்றுப் பட்டவுடன் கருத்துப் போய் தோரியம் டைஆக்ஸைடாக மாறி விடுகிறது

கடவுள் பெயர் சூட்டப்பட்ட மூலகங்கள் மிகவும் குறைவு. தோரியத்துக்கு தோர் (THOR) என்னும் நார்வீஜிய கடவுளின் பெயர் சூட்டப்பட்டது. அவர் இடி மின்னல் ஆகியவற்றுக்கான அதி தேவதை. நம்முடைய இந்திரனுக்கு இணையானவர். வியாழக் கிழமையும் அவர் பெயரில் தர்ஸ்டே (THURSDAY= THOR’S DAY) என்று பெயரிடப்பட்டுள்ளது.

 

தோரியத்தின் மற்றொரு சிறப்பு- 70 சதவிகிதம் குறைவான விஷக் கழிவுப் பொருட்களை வெளியிடுகிறது

 

யுரேனியம் போன்ற கதிரியக்க மூலகங்களைப் பயன்படுத்துகையில் அபாயகரமான கதிரியக்கக் கழிவுப் பொருட்கள் வருகின்றன. தோரியத்தில் அது குறைவு.

 

தோரியம் கலந்த கண்ணாடிகள் காமெரா லென்ஸுகளாகவும் விஞ்ஞானக் கருவிகளாகவும் பயன்படுகின்றன. இதற்குக் காரணம் தோரியத்தின் உருகு நிலை மிக அதிகம்.

 

உலகெங்கிலும் தோரிய அணு உலை ஆராய்ச்சிகள் நடை பெறுகின்றன. சோதனை முறையில் வெற்றியும் கிட்டின. தோரியத்தைப் பயன்படுத்தினால் உலகில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மின்சாரத்துக்குப் பஞ்சமில்லையாம். அதுவும் உலகில் அதிக அளவு தோரிய         இந்தியாவில் இருப்பதால் நமக்கு ‘இன்பமே எந்நாளும் துன்பமில்லை’.

சுவீடன் நாட்டைச் சேர்ந்த பெர்ஸீலியஸ் என்பவர் முதலில் இதைத் தனியாகப் பிரித்தெடுத்து இது ஒரு புது மூலகம் என்று உலகிற்கு  அறிவித்தார்.

 

தோரியத்தின் அணு எண் 90

உருகு நிலை 1750 டிகிரி சி

கொதி நிலை 4800 டிகிரி

சிம்பல் Th

 

 

25 ஐசடோப்புகள் (ISOTOPES)

 

கதிர் வீச்சு மூலகங்கள் காலப்போக்கில் கதிர்வீச்சு காரணமாக அழியும்.

தோரியம் 25 அவதாரங்கங்ளை எடுக்கும்.

அதில் அதிக காலம் வாழும் அவதாரம்–தோரியம் 232 என்னும் ஐசடோப்பு;

பாதி அழிவதற்கு (HALF LIFE) ஆகும் காலம் 14 பில்லியன் ஆண்டுகள் (பில்லியன்= நூறு கோடி)

தோரியம்-230. அதில் பாதி அழிவதற்கு ஆகும் காலம் 75,000 ஆண்டுகள்.

தோரியம் யுரேனியத்தை விட அதிகமாக இயற்கையில் கிடைத்தாலும் அதுபோலப் பிரியும் (NOT FISSILE) மூலகம் இல்லை. ஆகையால் இதை நேரடியாக அணுசக்தி உண்டாக்கப் பயன்படுத்த முடியாது. ஏனைய பிரியும் அல்லது கதிர் வீசும் மூலகங்களை அருகில் வைத்தால் அதி

லிருந்து வரும் நியூற்றான்கள் இதையும் பிளக்கும் பொருளாக்க மாற்றி பிரம்மாண்டமான சக்தியை உண்டாக்கும்.

துவக்கத்தில் தோரியம் ஆக்ஸைட் கரைசலைக் குடிக்கச் செய்து எக்ஸ்ரே எடுத்தனர். இதன் மூலம் இரத்தக் குழாய்களைப் பார்க்க முடிந்தது. ஆனால் இப்படிக் கொடுக்கப்பட்டவர்களில் பெரும்பாலோருக்கு இரத்தப் புற்று நோய் வந்தவுடன் நிறுத்தப்பட்டது.

 

ஒரு காலத்தில் பற்பசையிலும் கூட ஜெர்மானிய கம்பெனி இதைப் பயன்படுத்தியது. இப்பொழுது மனிதர்கள் உடலில் பயன்படுத்தப்படும் எதிலும் தோரிய உப்புகளைச் சேர்ப்பதில்லை. ஆயினும் அறிவியல் கருவிகளில் தோரியம் ஆக்ஸைட் முதலியன உண்டு.

 

தோரியமும் சூரிய ஒளியும் இறைவன் இந்தியாவுக்குக் கொடுத்த இரண்டு வரங்கள் – வளங்கள். அவற்றை நன்கு பயன்படுதுவோமானால் பெற்றோல் என்பதே நமக்குத் தேவை இல்லை.

XXX

இரசாயன/ வேதி இயல் மாணவர்களுக்கு மட்டும்:–

தோரியம்-232 இயற்கையில் கிடைக்கிறது.

இதன் மீது யுரேனியம் மூலம் நியூற்றான் (NEUTRON) தாக்குதல் நிகழும்.

உடனே தோரியம் 233 உருவாகும். அதன் அரை வாழ்வு 22 நிமிடம் மட்டுமே

அது யுரேனியம் 233 ஆக அவதாரம் எடுக்கும்.

பின்னர் அந்த யுரேனியம் 233  விஸ்வருபம் எடுத்து,

யுரேனியம் 235 போல பிரம்மாண்டமான சக்தியை வெளியிடும்.

அதைக் கட்டுப்படுத்தப்பட்ட சக்தியாக வைத்து அந்த வெப்பத்தில்

மின்சாரத்தை உருவாக்கலாம்.

 

-சுபம்–

 

 

 

ஒப்பற்ற தமிழின் உயர்வு! பூமிக்கு 62 சொற்கள் (Post No.5524)

 

WRITTEN BY S NAGARAJAN

Date: 10 October 2018

 

Time uploaded in London – 6-53 AM (British Summer Time)

 

Post No. 5524

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

பூமிக்கு தமிழில் 62 சொற்கள்

ஒப்பற்ற தமிழின் உயர்வு!

 

ச.நாகராஜன்

தமிழின் உயர்வுக்குப் பல காரணங்கள் உண்டு. இறைவன் அருளிய மொழி என்பதிலிருந்து காரணங்களை ஆரம்பித்து, அடுக்கிக் கொண்டே போனால் அது ஒரு கலைக்களஞ்சியம் அளவுக்கு விரிந்து விடும்.

சுயநலமுடைய அரசியல் சார்ந்த திராவிடக் கும்பல்களின் அரசியல் அடிப்படையிலான “பற்றினால் இதை விளக்கி விட முடியாது.

பல மொழி கற்ற அறிவு, புராண, இதிஹாஸ அறிவு, பண்டைய தமிழ் இலக்கிய அறிவு, சொற்களின் வேர் பற்றிய அறிவு உள்ளிட்ட பல்துறை வித்தகம் இதற்கு வேண்டும்.

தமிழில் உள்ள சொற்களை ஆய்ந்து உற்றுக் கவனித்தால் அதன் வேர் பலமானது எனத் தெரிய வரும்.

ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு ஆழ்ந்த பொருள் உண்டு. வேர்ச் சொற்கள் வழியே சென்றால் பல சொற்களைப் பெற முடியும்.

உதாரணத்திற்கு ஒரே ஒரு சொல்லை இங்கு பார்க்கலாம்.

பூமி உருண்டை என்று சொன்னதற்காக கத்தோலிக்க குருவான போப்பாண்டவரிடம் பிரபல விஞ்ஞானி பட்ட பாடும் மரணமடைந்ததும் நமக்குத் தெரியும்.

ஆனால் தமிழனின் விஞ்ஞான அறிவு தமிழ்ச் சொல்லிலேயே வடிக்கப்பட்டிருப்பதை பூமி என்ற சொல்லிலிருந்தே காண முடியும்.

நம் முன்னோர் பூமி தட்டை என்று மேலை நாட்டினர் கொண்ட கருத்தைக் கொண்டிருக்கவில்லை.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பேயே இதை அண்டம் என்ற சொல்லால் அழைத்தனர்.

அண்டம் அல்லது முட்டை நீள் உருண்டை வடிவம் கொண்டது  பூமி.

 

அண்டம் என்பதால் உயிர்ப் பொருள்கள் தோன்ற ஆதாரமானதும் கூட என்பதும் பெறப்படுகிறது.

ஞால் என்ற வேரின் அடிப்படையாகப் பிறந்தது ஞாலம். ஞால் என்றால் தொங்குவது என்று பொருள் படும். பூமி பேரண்டத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் ஒரு சிறு வடிவம் என்பது இதனால் பெறப்படுகிறது.

இது தொங்கிக் கொண்டிருந்தாலும் இதில் வைக்கப்படும் பொருள்கள் பாதுகாப்பாக உள்ளன. அவை விழாது என்பதால் இது வையகம் என அழைக்கப்படுகிறது.

காசியப முனிவர் தானமாகப் பெற்றதால் இது காசினி என அழைக்கப்படுகிறது.

இப்படி ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு பின்னணியும் ஆழ்ந்த அர்த்தமும் கொண்டிருப்பதைக் காணலாம். அதுவே தமிழ் வார்த்தைகளின் மகிமை.

 

முக்கியமான ஒரு விஷயத்தை இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். சில சொற்கள் சம்ஸ்கிருதத்தை அடிப்படையாகக் கொண்டு தோன்றியவை. ஆனால் அவற்றைத் தமிழ் அறிஞர்கள் தமிழ்ச் சொற்களாகவே கொண்டனர்; கையாண்டனர்.  சம்ஸ்கிருதம் இதுதமிழ் இது என்று அவர்கள் பாகுபாடு செய்ததில்லை. தமிழ் மற்றும் சம்ஸ்கிருதச் சொற்களை இரு கண்கள் என அவர்கள் கொண்டிருந்த பான்மையை உற்று நோக்குங்கால் மொழி பற்றிய காழ்ப்புணர்ச்சி தமிழகத்தில் ஒரு போதும் இருந்ததில்லை என்பதே தெரிய வரும். இந்தச் சொற்களை அன்றாட பேச்சு வழக்கில் அறிஞர்கள் மட்டுமின்றி சாமான்யரும் பயன்படுத்தி வந்தனர். இன்றும் இப்படிப்பட்ட ஆயிரக் கணக்கான சொற்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

 

சரி, பூமியைக் குறிக்க மட்டும் எத்தனை சொற்கள் தமிழில் உள்ளன?

 

பூமி, பிருதுவி, பார், பூ,அகலிடம்,தரணி, கோ, மகி, அளக்கர், பொறை,கு, அசலை, நேமி, படி, பாரி, அகிலம், குவலயம், காசினி, அவனி, தாரணி, வசுந்தரை, தலம்

 

தாத்திரி, தரை, தரித்திரி, பணாதரி, மண், கோத்திரி, கிடக்கை, சதுக்கோணி, தறை, பாத்திபம், சக்கரம், நிலம், புவி, சலாம்பரி, மாதிரம், விமலை, வசுதை

 

தாலம், உலகு, இம்பர், வையம், சாந்தை, விசுவம், புடவி, ஞாலம், வசுமதி, நகம், ப்வளம், பாலம், உகம், பூதியம், ஏமாங்கி, வையகம், பொழில், இகம், பவனி,மேதினி, சகம், புவனம்

ஆக இப்படி 62 பெயர்களை நாமதீப நிகண்டு குறிப்பிடுகிறது.

நிகண்டின் பூமிக்கு உரித்தான சொற்களைச் சொல்லும் பாடல்கள் இதோ:

பூமி பிருதுவிபார் பூவகலி பந்தரணி                    கோமகிய ளக்கர்பொறை குவ்வசலை – நேமிபடி

பாரியகி லங்குவல யங்கா சினியவனி

தாரணிவ சுந்தரைத லம்

 

தாத்திரி யேதரைத ரித்திரிப ணாதரிமண்

கோத்திரிகி டக்கை சதுக்  கோணிதறை – பாத்திபம்

சக்கரநி லம்புவிச லாம்பரியே மாதிரமே

தக்க விபுலைவசு தை

 

தாலமுல கிம்பர்வையஞ் சாந்தைவிசு வம்புடவி

ஞாலம் வசுமதிந கம்பவளம் – பாலமுகம்

பூதியமே மாங்கிவைய கம்பொழிலி கம்புவனி

மேதினிச கம்புவன மே

 

இன்னும் சில நிகண்டுகளைப் பார்த்தால் இன்னும் பல பெயர்கள் கிடைக்கும்.

ஒவ்வொரு சொல்லையும் ஊன்றிக் கவனித்தால் அந்தப் பெயரால் பூமி அழைக்கப்படுவதன் காரணத்தையும் உணர முடியும்.

இப்படித் தமிழ்ச் சொற்கள் பல்லாயிரத்திற்கும் அர்த்தம் காண எத்தனை நாட்கள் வேண்டும்!

தமிழனாக வாழ்வதில் பெருமைப் படுவதோடு தமிழ்ச் சொற்களின் ஆழம் கண்டு ஆனந்திப்போம்; அதை உலகறியச் செய்வோம்!

***

கடற் கொள்ளையர் பற்றிக் கம்பன் தகவல் (Post No.5521)

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 9 October 2018

 

Time uploaded in London –7-39 am (British Summer Time)

 

Post No. 5521

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

கடற் கொள்ளையர்கள் பற்றி சங்க இலக்கியத்திலும் கம்ப ராமாயணத்திலும் வரும் தகவல்கள் தமிழர்களின் கடல் ஆதிக்கத்தைக் காட்டுகிறது. கம்பனுக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த காளிதாசனும் கடலில் கப்பலுடைந்த காட்சி பற்றிப் பேசுகிறான். அதற்கும் ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் வந்த ரிக் வேதத்தில் கடலில் கப்பல் உடைந்து தத்தளித்த ஒருவனை அஸ்வினி தேவர்கள் காப்பாற்றிய செய்தி பல ரிஷி முனிவர்களால் பாராட்டப் படுகிறது. சிந்து-ஸரஸ்வதி நதி தீர நாகரீகத்தில் கப்பல் திசை காணும் பறவை உட்கார்ந்து இருக்கும் முத்திரை கிடைத்துள்ளது. இந்தோநேஷியாவில் போரோபுதூர் சிற்பங்களில் தமிழ்க் கப்பல் காட்சி தருகிறது.

சாதவஹனர் நாணயங்களில் கப்பல் படம் பொறிக்கப்பட்டுள்ளது. அராபியக் கடல்களில் அட்டூழியம் செய்த யவன (ரோமானிய) கடற் கொள்ளையர்களை இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் பிடித்து வந்து, தலையை மொட்டை அடித்து, எண்ணையைத் தலையில் ஊற்றித் தண்டித்த காட்சி சங்கத் தமிழ் இலக்கியத்தில் இருக்கிறது. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், கடம்பர் என்னும் கடற் கொள்ளையர்களை அழித்து அவர்களுடைய காவல் மரத்தை வெட்டி வீழ்த்தியது சூரபன்மனின் காவல் மரத்தை முருகன் அறுத்தைப் போன்றது என்றும் சங்கநூலான பதிற்றுப்பத்து பாடும்.

 

கம்பனோ போகிற போக்கில் ஒரு பாடலில் கடற் கொள்ளையர்களை உவமையாகப் பயன்படுத்துவது, அந்தக் காலத்தில் கடல் பயணம் எவ்வளவு நிகழ்ந்தது, என்ன என்ன பேரிடர்களை  அவர்கள் சந்த்தித்தனர் என்று காட்டுகிறது.

 

இதோ கம்ப  ராமாயண யுத்த காண்டப் பாடல்:-

 

மீயவர் யாவரும் விளிய வெங்கரி

சேயிருங் குருதியில் திரிவ சோர்வு இல

நாயகர் ஆள் எலாம் அவிய அம்பிகள்

பாயொடும் வேலையில் திரியும் பண்பு என

–படைத் தலைவர் வதைப் படலம்

பொருள்

யானை மீது இருந்த அனைவரும், வில்லால் தாக்குண்டு இறந்தனர். அப்பொழுது யானைகள் மட்டும் கொடிகளுடன் ரத்த வெள்ளத்தில் அங்கும் இங்கும் திரிந்தன; வெளியேற வழியில்லாமல் திகைத்தன; இது எப்படி இருந்தது என்றால் மாலுமிகள் உள்பட அனைவரும் கடற் கொள்ளையர்கள் தாக்குதலில் இறந்து போனபின்னர் பாய்மரத்துடன் கடலில் திரியும் கப்பல்கள் போலக் காட்சி தந்தன.

 

என்ன அருமையான ‘கடல்- கப்பல்’ காட்சியை கம்பன் நம் கண் முன் நிறுத்துகிறான் பாருங்கள்.

 

ஒரு விஷயத்தை உவமையாகப் பயன்படுத்த வேண்டுமானால், அது எல்லோருக்கும் ஸர்வ சாதாரணமாகத் தெரிந்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் அதை உவமையாகப் பயன்படுத்த முடியும். அந்தக் காலத்தில் வங்கக் கடலில் நடந்த கடல் தாக்குதல் இது. அதையும் சமாளித்து ராஜ ராஜ சோழனும் ராஜேந்திரனும் மாநக்கவாரம், மாயிருடிங்கம், மாபூப்பாளம்,சாவகம், புட்பகம்,சிங்களம் எனப் பல தீவுகளை வென்றனன்.

வாழ்க தமிழ்!!  வளர்க தமிழன் பெருமை!!

 

–subham–

 

மன்மதைனையும் மயங்க வைக்கும் கொல்லிப்பாவை! (Post No.5510)

WRITTEN BY S NAGARAJAN

Date: 6 October 2018

 

Time uploaded in London – 6-14 AM (British Summer Time)

 

Post No. 5510

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

மன்மதைனையும்  மயங்க வைக்கும் கொல்லிப்பாவை!

 

ச.நாகராஜன்

 

    பழ வகைகள், தேன் முதலிய உணவுப் பொருள்கள் நிரம்பிய மலை கொல்லி மலை. ஆகவே தவம் செய்ய விரும்பிய முனிவர்களும் தேவர்களும் இங்கு வந்து தங்கி இருக்கப் பெரிதும் விரும்புவர். இந்த மலையின் பெருமையைக் கேட்ட இராக்கதர்களும் அசுரர்களும் இங்கு வரத் தொடங்கினர். இதனால் தவம் புரிந்து வந்த முனிவர்களுக்குப் பெரிதும் இடையூறு ஏற்பட்டது.

 

ஆகவே அவர்கள் காற்று, மழை, இடி ஆகிய எதனாலும் கேடு கொள்ளாத ஒரு பாவையை விசுவகன்மாவைக் கொண்டு நிர்மாணிக்கச் செய்து அதை அம்மலையின் மேற்குப் பாகத்தில் நட்டு வைத்தனர். பல்வகை சக்தி அதில் ஊட்டப்பட்டிருந்ததால் அசுரர் முதலானோரின் காற்று வாடை பட்டால் கூட அந்தப் பாவை இளஞ்சிரிப்பைச் சிந்தும். கண்டவரது உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் கண் பார்வையையும் கொள்ளும். இதனால் பார்த்தவர்கள் பெரும் காம வேட்கையைக் கொள்வர். இறுதியில் உயிர்போக்க வல்ல மோகினி வடிவத்தையும் அது கொள்ளும். இந்தக் கொல்லிப்பாவை நகைப்பதையும் இயங்குவதையும் கண்டு அது ஒரு அழகிய மடந்தை என்று எண்ணி மயங்கிக் காம நோய் கொண்டு இறுதியில் அசுரர் முதலானோர் மடிவர்.

இப்படிப்பட்ட கொல்லிப்பாவையைக் கொண்டுள்ள கொல்லி மலை உடைய மண்டலம் கொங்கு மண்டலமே என கொங்கு மண்டல சதகத்தின் 25ஆம் பாடல் வெகுவாகப் புகழ்ந்துரைக்கிறது.

 

பாடல் வருமாறு:

 

“தாணு முலகிற் கடன்முர சார்ப்பத் தரந்தரமாய்ப்

பூணு முலைமட வார்சேனை கொண்டு பொருதுமலர்ப்

பாணன் முதலெவ ரானாலுங் கொல்லியம் பாவைமுல்லை

வாணகை யாலுள் ளுருக்குவ துங்கொங்கு மண்டலமே

 

பாடலின் திரண்ட பொருள் : மன்மதனும் மயங்கத் தக்க இளஞ்சிரிப்புச் செய்யும் கொல்லிப் பாவை விளங்கும் கொல்லி மலையும் கொங்கு மண்டலத்தில் இருப்பதேயாகும்.

 

கொல்லிமலையில் எழுந்தருளியுள்ள அரப்பளீசுரர் ஆலயத்துக்கு மேற்குப் பக்கத்தில் இப்பாவை இருப்பதாக கொல்லி மலை அகராதி என்ற சுவடியில் எழுதப்பட்டுள்ளது.

ஆனால் இக்காலத்தில் இது எங்கிருக்கிறது என்பது தெரியவில்லை; இதைக் காணவும் முடியவில்லை.

 

சித்திரமடல் என்னும் நூலில் இது பற்றிய குறிப்பைக் காண்கிறோம்:

 

     “ …. திரிபுரத்தைச் –

செற்றவனுங் கொல்லிச் செழும்பாவையு நகைக்கக்

கற்றதெலா மிந்தநகை கண்டாயோ    (சித்திர மடல்)

 

நற்றிணையும் கொல்லிப்பாவை பற்றிக் குறிப்பிடுகிறது:

 

‘செவ்வேர்ப் பலவின் பயங்கெழு கொல்லித்

தெய்வங் காக்குந் தீதுதீர் நெடுங்கோட்

டவ்வெள் ளருவிக் குடவரை யகத்துக்

கால்பொரு திடிப்பினுங் கதழுறை கடுகினு

முருமுடன் றெரியினு மூறுபல தோன்றினும்

பெருநலங் கிளரினுந் திருநல வுருவின்

மாயா வியற்கைப் பாவை  …

         ….   கொல்லிக் குடவரைப்

பூதம் புணர்ந்த புத்தியல் பாவை     (நற்றிணை)

 

இதுமட்டுமின்றி குறுந்தொகையும் கொல்லிப்பாவை பற்றிக் கூறுகிறது:

 

“பெரும்பூட் பொறையன் பேஎமுதிர் கொல்லிக்

கருகட் டெய்வங் குடவரை யெழுதிய

நல்லியற் பாவை                  (குறுந்தொகை)

 

இப்படி குடவரை எழுதிய கருங்கல் தெய்வமான நல்லியல் கொல்லிப் பாவையின் நகையும் இயக்கமும் மயக்க வைக்கும் மோகன உருவமும் அசுரரை மயக்கி அழித்து தவம் செய்யும் நல் முனிவர்களைக் காத்து வருகிறது என்பது பல நூல்களின்  முடிந்த முடிபுரை.

 

அப்படிப்பட்ட கொல்லிப்பாவையைத் தன்னகத்தே கொண்டு தென்னகத்தே இலங்கும் கொல்லி மலை இருப்பது கொங்கு மண்டலத்தில் என்பதால் கொங்கு மண்டலம் தனிப் பெருமை பெறுகிறது.

 

இத்துடன் கொங்குமண்டல சதகத்தின் அடுத்த பாடலும் (பாடல் 26) கொல்லி மலையில் உள்ள தேன் பற்றிப் புகழ்ந்துரைக்கிறது.

 

“முத்தீட்டு வாரிதி சூழுல கத்தினின் மோகமுறத்

தொத்தீட்டு தேவர்க்கு மற்றுமுள் ளோர்க்குஞ் சுவைமதுரத்

கொத்தீட் டியபுதுப் பூத்தேனு மூறுங் குறிஞ்சியின்றேன்

வைத்தீட் டியகொல்லி மாமலை யுங்கொங்கு மண்டலமே

பொருள் : தேவர் முதலிய அனைவரும் ஆசை கொள்ளத் தக்க சுவை மதுரப் பூந்தேன் ஊறும் கொல்லி மலையைக் கொண்டுள்ளதும் கொங்கு  மண்டலமே ஆகும்.

கொல்லிமலையின் தேன் பற்றிக் கம்பரின் தனிப்பாடல் ஒன்று, “கொல்லிமலைத் தேன் சொரியுங் கொற்றவா என்று குறிப்பிடுகிறது.

 

அடுத்து நற்றிணையும் கொல்லி மலைத் தேனைப் பற்றிக் கூறுகிறது:

 

“உயர்சா லுயர்வரைக் கொல்லிக் குடவயி

னகவிலைக் காந்த ளங்குகுலைப் பாய்ந்து

பறவை யிழைத்த பல்க ணிறாஅற்

றேனுடை நெடுவரை

 

இப்படிப்பட்ட தேவரையும் மயங்க வைக்கும் தேன் உடை நெடு வரை கொல்லி மலை என்பதால் கொங்கு மண்டலத்தின் பெருமை இன்னும் கூடுகிறது, இல்லையா!

***

முள்ளங்கிப் பிள்ளையாரும் ஒட்டக அனுமனும் (Post No.5430)

 

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 14 September 2018

 

Time uploaded in London – 10-23 am (British Summer Time)

 

Post No. 5430

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

 

உலகிலேயே பழமையன மதம் – இந்து மதம். பாரசீகர்களும் கிரேக்கர்களும் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் சிந்து நதிக்கரையில் வசித்தவர்களை இந்து என்று அழைத்தனர். அதற்கு முன்னரும்– அநாதி காலமாக விளங்கும், இம்மதத்தை ‘சநாதன தர்மம்’ என்ற அழகிய பெயரால் அழைத்தனர். எகிப்திய, சீன, கிரேக்க, ரோமானிய கடவுளர்கள் எல்லாம் மியூஸியங்களில் ஒடுங்கிவிட்ட நேரத்தில், இந்து மதம் மட்டும் ஒரு லட்சம் கோவில்களில் இன்றும் வழிபடப்படுவதன் ரஹஸியம் என்ன? இந்து மதம் மட்டும் என்றும் மார்க்கண்டேயனாக வாழ்வது எப்படி?

 

இதற்குப் பதில் முள்ளங்கி கணபதி சிலையிலும் ஒட்டக வாஹன ஆஞ்சநேயர் சிலையிலும் உள்ளது. அடிப்படைக் கொள்கைகள் மாறாமல் நிற்க, அதை விளக்க வந்த அடையாளங்கள் மட்டும் இந்து மதத்தில் மாறிக்கொண்டே வ ருவதைக் காணலாம் இதனால் இது என்றும் புதுமைப் பொலிவோடு திகழ்கிறது.

 

 

ஒட்டகம் என்பது பாலைவனப் பிராணி. இந்தியாவின் வடமேற்கு மாநிலமான ராஜஸ்தானில் காணப்படுகிறது; ஆனால் ஒரு பக்தனைக் காப்பாற்றிய பெருமை காரணமாக அதையும் கூட ஆஞ்சநேய ஸ்வாமிக்கு வாஹனம் ஆக்கிவிட்டனர் ஹிந்துக்கள்! அதுவும் குறிப்பாக தென்னிந்தியக் கோவில்களில்!

 

அனுமன், தமிழ் நாட்டில் பிரம்மச்சாரி; ஆனால் வடநாட்டில் மனைவியருடன் தோன்றுவார். பிள்ளையார் தமிழ்நாட்டில் பிரம்மச்சாரி; ஆனால் பல இடங்களில் சித்தி, புத்தி என்ற இரு மனைவியருடன் காட்சி தருவார்; படியாதோருக்கு இவை விநோதமாகத் தோன்றும். ஆனால் ஆய்ந்து அவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோருக்கு அவற்றின் பின்னுள்ள தத்துவங்கள் விளங்கும்.

‘மரத்தை மறைத்தது மாமத யானை; மரத்தில் மறைந்தது மாமத யானை’– என்னும் திருமூலர் வாக்கு நினைவுக்கு வரும்.

 

 

தென் கிழக்காசிய நாடுகளில் பிள்ளையரின் ஒரு கையில் முள்ளங்கி இருக்கும். யானைக்கு மிகவும் பிடித்தது முள்ளங்கி.  விநாயகரை அறிவின் சின்னமாக, ஞானத்தின் சின்னமாக, முழு முதற்கடவுளாகப் பார்க்கும் அதே நேரத்தில் அவரை இயற்கையின் தெய்வமாகவும் பார்க்கிறோம். அதனால்தான் மாட மாளிகைகள் கூட கோபுரங்கள் எதுவுமின்றி குகைகளிலும், மரத்துக்கு அடியிலும் கணபதியைக் காண்கிறோம். தென் கிழக்காசிய நாடுகளில் 1500 ஆண்டுகளுக்கு இந்து மதம் கொடிகட்டிப் பறந்தது. தாய்லாந்து, லாவோஸ், இந்தோநேஷ்யா, வியட்நாம், பர்மா முதலிய பல நாடுகளில் கணபதி சிலைகள் உள. ஜப்பான் வரையிலும் கணபதி இருக்கிறார். ரோம் முதலிய பிரதேசங்களில் கணேஷ் என்பதை ஜனேஷ் என்ற இரு முகக் கடவுளாக அழைத்ததால் ஜனவரி என்ற மாதம் அவர் பெயரில் தோற்றுவிக்கப்பட்டது.

 

 

 

முள்ளங்கியை கணபதி கையில் கொடுத்தது ஏன்?

அவர் விவசாயிகளை தெய்வம்; ஆகையால் யானைக்குப் பிடித்த முள்ளங்கியை அவர் கையில் கொடுத்ததாக வியட்நாமியர் பகர்வர். வியட்நாமில் மைஸன் (Myson) என்ற இடத்தில் கிடைத்த கணேசர் கையில் முள்ளங்கி இருந்தது. ஆறு முதல் எட்டு நூற்றாண்டு வரையான சில இந்திய கணபதி சிற்பங்களிலும் முள்ளங்கி உண்டு.

 

எலி என்னும் சிறிய பிராணியை பூதாஹாரமான உடல் படைத்த பிள்ளையாருக்கு வாஹனமாக்கியது ஏன்? என்பதற்கும் வியட்நாமியர் விடை விளம்புவர். பயிர்களை அழிப்பது எலி; அதையும் கட்டுக்குள் வைத்து அடக்கி ஆள்வதால் அவ ருக்கு எலி வாஹனமாயிற்று என்பது வியட்நாமியரின் விடை.

‘தலைவனை நம்பாதே ; தத்துவத்தை நம்பு’ என்பது ஆன்றோர் வாக்கு; இதையே சிறிது மாற்றி ‘சிலைகளை நம்பாதே அதன் பின்னுள்ள சிம்பலிஸத்தை (சிம்பல்= அடையாள,சின்னம்) நம்பு’ -என்பது இந்து சந்யாஸிகளின் அறிவுரை!

ஆக, காலத்தின் தேவைக்கேற்ப, மக்களின் ரசனைக்கு ஏற்ப, பா மரர்களுக்கு மஹத்தான தத்துவங்களைப் புரிய வைக்க, அவ்வப்போது ஆன்றோர்களும், சான்றோர்களும், பல புதிய வடிவங்களைக் கடவுளருக்கு கொடுப்பர். ஆனால் அடிப்படையான ஸத்தியம், கருணை, அன்பு, லோகாஸ் சமஸ்தோ சுகினோ பவந்து ( யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்) என்ற கொள்கைகள் மாறுபடாது. வந்த கொள்கைகளை எல்லாம் ஏற்று, அதைத் தன் மயமாக்கி, ஜீரணம் செய்து புது சக்தியாக வடித்துக் கொ டுக்கும் அபூர்வ சக்தி இந்து மதத்தின் தனிச் சிறப்பு. இதனால்தான் ‘என்றுமுள தென் தமிழ்’ போல், என்று முள மதமாக – ஆதி அந்தமற்ற சநாதன சமயமாக இந்து மதம் நிற்கிறது. ‘ஆல் போல் தழைத்து அருகு போல் வேரூன்றிய’ இந்த சமயம் அழியாது நிற்கும்.

 

முள்ளங்கி கணபதியும் ஒட்டக மாருதியும் வாழ்க!

 

–subham–