கழுதை, நாய், புழு, பூச்சி– ஆகப் பிறக்கும் மாணவர் யார்? மநு பதில் (Post No.4971)

Guru Puja by Good Students

கழுதை, நாய், புழு, பூச்சி– ஆகப் பிறக்கும் மாணவர் யார்? மநு பதில் (Post No.4971)

 

Written by London Swaminathan 

 

Date: 2 May 2018

 

Time uploaded in London – 21-49 (British Summer Time)

 

Post No. 4971

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

மநு நீதி நூல்- Part 16 (Post No 4972)

 

மநு தர்ம ஸ்ம்ருதியின் இரண்டாவது பாகத் தொடர்ச்சி……

 

குரு பக்தி (Chapter Two)

Guru Puja by Vedic Pundits

 

2-175 குரு குல வாசத்தில் புலனடக்கி மறுமைப் பயன்களை அடைய பின்வரும் நோன்புகளைக் கடைப்பிடிக்க வேண்டும்

 

2-176.அதி கலையில் எழுந்திருக்க வேண்டும்; குளித்துவிட்டு காலையிலும் மாலையிலும் ஹோமம் வளர்க்கவேண்டும். முன்னோர்களுக்கு நீர்க்கடன் செலுத்த வேண்டும்; இஷ்ட தெய்வத்தை வழிபட வேண்டும்

 

177,178,179. குருகுல வாசத்தில் தவிர்க்கப்பட வேண்டியவை: தேன், சந்தனம், பூ, இனிப்பு, தயிர், பால், நெய், மோர், எண்ணை தேய்த்துக் குளித்தல், கண்ணுக்கு மை இடல், செருப்பு, குடை, காமம், கோபம், கூத்து, பாட்டு, சூதாட்டம், வம்பளத்தல், கோள் சொல்லுதல், பெண்களை காமத்துடன் பார்த்தல், பொய் சொல்லுதல்,துரோகம் செய்தல், கொலை,  (இவை அனைத்தும் தவிர்க்கப்ப டவேண்டியவை. யாரையும் அடிக்கக் கூடாது; வாசனைப் பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது

 

2-180. நோன்புக் காலத்தில் காம இச்சையால் விந்துவை வெளியேற்றக் கூடாது. பிரம்மசர்யத்தைக் காத்தல் வேண்டும்.தனியாகப் படுத்துறங்க வேண்டும்.

2-181.காம எண்ணம் இல்லாமலேயே விந்து வெளியேறினால் அதிகாலையில் குளித்துவிட்டு மூன்று முறை சூரியனை நோக்கி, எனக்கு என் புலன்களை அதன் கட்டுப்பாட்டுக்குள் வரச் செய் என்று பிரார்த்தனை செய்ய வேண்டும்.

 

2-182.குருவுக்குத் தேவையான நீர், தருப்பை, சாணம், மலர் ஆகியவற்றைக் கொண்டு தரவேண்டும்; பிக்ஷை எடுத்து உண்ண வேண்டும்.

 

2-183.வேதம், ஹோமம், சந்தியாவந்தனம் செய்யும் கிரஹஸ்தன் வீட்டில் பிக்ஷை எடுத்து சாப்பிட வேண்டும்.

 

2-184.குருவின் இல்லத்திலோ அவரது உறவினர் இல்லங்களிலோ பிக்ஷை எடுக்கக் கூடாது. வேறு எவரும் இல்லாத காலத்தே குரு அல்லது தாயாதி அல்லது அவரது உறவினர் இல்லங்களில் பிக்ஷை  எடுக்கலாம்

 

2-185. நல்ல அற ஒழுக்கம் இல்லாத ஊர்களில் மௌனமாகத் திரிந்து, பெரும் பாவிகள் அல்லாத அந்தணர் வீடுகளில் பிக்ஷை எடுக்கலாம்.

 

2-186.காட்டில் தேடிக் கொணர்ந்த சமித்துக் குச்சிக்ளை வெயிலில் அல்லது வீட்டுத் தாழ்வாரத்தில் உலர்த்தி சமிதாதானம் செய்ய வேண்டும்.

2-187.நோய் காரணமாக ஏழு நாட்கள் சமிதாதானம் முதலியவற்றைச் செய்ய முடியாவிட்டால்,  பிக்ஷை எடுக்க முடியாவிட்டால், நோன்பு முறிந்ததாக அர்த்தம்; அத்தகையோர் 11-ஆம் அத்தியாயத்தில் சொல்லப்பட்ட அவகீர்ணி நோன்பை நோற்க வேண்டும்.

 Salute to Gurus by good students

  1. பிக்ஷை எடுக்காமல் பிரம்மச்சாரிகள் பிறருடைய உணவை உண்ணக்கூடாது; அது நோன்பை முறிப்பதாகும்.

189.வேள்வி, திவசம் ஆகியவற்றுக்கு அழைத்தால் கள், மாமிசம் தவிர்த்த உணவுகளை முனிவர்கள் போல சாப்பிடலாம். அது நோன்பை முறித்ததாகாது.

 

  1. பிரம்மசாரிகள் தவிர வேறு யாருக்கும் இப்படிச் செய்ய அனுமதி இல்லை.

 

191.குரு கட்டளை இட்டாலும் இடாவிட்டாலும் வேதம் ஓதுதலும், குருவை வணங்குதலும் பிரம்மச்சாரிகளின் கடமை ஆகும்.

 

192.குருவை நோக்கி கை கூப்பி நிற்க வேண்டும்; அப்போது மனம் மொழி மெய் ஆகிய மூன்றும் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.

193.மேலாடைக்கு வெளியே வலக்கரம் தெரியுமாறு மேலாடை அணிய வேண்டும். குரு கட்டளையிட்டால் ம றைக்க வேண்டிய உறுப்புகளை மறைத்து அடக்கத்துடன் அமர வேண்டும்.

 

  1. குருகுல வாசத்தில் சுவையான உணவை நாடி ஓடக்கூடாது. அலங்காரம் செய்து கொள்ளக் கூடாது. குருவுக்குப் பின் தூங்கி முன் எழுதல் வேண்டும்.

 

195.குருவின் கட்டளைகளை நடந்து கொண்டோ, உட்கார்ந்து கொண்டோ, படுத்துக் கொண்டோ,  கவனக் குறைவாகவோ கேட்கக் கூடாது. பதில் பேசக் கூடாது.

196.குரு உட்கார்ந்து இருக்கையில் மாணவன் நின்று கொண்டும், அவர் நிற்கும் போது அருகில் நின்றும்,   அவர் அருகில் வந்தால் அவரை நோக்கியும், அவர் நடந்தால் அவர் பின்னால் ஓடியும்,

  1. அவர் வேறு சிந்தனையில் இருந்தால் அவர் அருகில் சென்றும், அவர் படுத்துக் கொண்டிருந்தால் அவரை வணங்கி நின்றும், தொலைவில் இருந்து பேசினால் அருகே சென்றும் கட்டளையைக் கேட்டு பதில் தர வேண்டும்.

Guru’s Blessings

198.குருவின் படுக்கை, ஆசனம் ஆகியவற்றை விடத் தாழ்வாக இருக்குமாறு அமர வேண்டும். அவர் பார்வையில் படுமாறு விருப்பப்படி உட்காரக்  கூடாது.

199.அவர் இல்லாத போது அவர் பெயரை சொல்லுதலோ, மரியாதைக்கான அடைமொழி இன்றி வாத்தியார் என்று இளப்பமாகவும் பேசுதல் கூடாது; அவரைப் போல நடந்தும் பேசியும் பரிஹாசம் செய்யக் கூடாது.

200.குருவைக் கண்டிக்கும் இடத்திலும் குறை கூறும் இடத்திலும் காதுகளை மூடிக்கொள்ள வேண்டும் அல்லது அவ்விடத்தில் இருந்து அகல வேண்டும்.

201.குருவிடம் உண்மையாகவே பிழை இருந்தாலும் அதை விமர்சித்துக் கண்டிப்பவன் கழுதையாகவும், வேண்டுமென்றே தவறு கற்பிப்பவன் நாயாகவும், குருவின் உடமைகளை அனுபவிப்பவன் புழுவாகவும், அவர்  மீது பொறாமைப்படுபவன் பூச்சியாகவும் பிறப்பான்.

202.தான் ஒதுங்கிக்கொண்டு பிறரை ஏவி குருவுக்குப் பணிவிடை செய்யப் பணித்தல் கூடாது. தான் வாஹனத்தில் இருந்தால் இறங்கி அவருக்கு மரியாதை செலுத்த வேண்டும். அவர் மனைவியுடன் இருந்தால் அவரை அணுகக்கூடாது; தனக்கு கோபம் இருந்தால் குருவை அணுகக் கூடாது

 

எதிர்க் காற்றிலோ பின்னால் இருந்து வரும் காற்றிலோ குருவுக்கு முன்னர்  அமரக் கூடாது. அவர் கேளாத விஷயங்களை எடுத்துச் சொல்லக் கூடாது.

204.மாடு, குதிரை, பூட்டிய வண்டிகள், ஒட்டகம், படகு ஆகியவற்றில் செல்லுகையில் குருவுடன் அமரலாம்.

  1. குருவுக்கும் குருவானவர் வருகையில் அவரையும் குருபோலக் கருதல் வேண்டும்

தாய் தந்தையரே வந்தாலும் குருவின் அனுமதியின்றி பெற்றோர்களை வணங்குதல்  கூடாது.

 

Great Guru Swami Vivekananda

எனது கருத்து:

 

கழுதை, நாய், புழு, பூச்சியாகப் பிறப்பவன் யார்?

 

குருகுலத்தில் வசிக்கையில்  என்ன செய்யக்கூடாது?

 

குருவிடம் எவ்வளவு மரியாதை, பணிவு காட்ட வேண்டும்?

 

என்பன உலகில் வேறெங்கும் காணாத விஷயங்கள் ஆகும்.

 

திருப்பாவையில் நோன்புக் காலத்தில் பெண்கள் என்ன செய்ய மாட்டார்களோ அதை ஆண் மாணவர்களுக்கும் சொல்லியிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Vedic Guru and Sishyas (disciples)

வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத்துயின்ற பரமன் அடிபாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம்

ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.

திருப்பாவை 2

 

அந்தக்காலத்தில் மாணவர்களும் அலங்காரப் பிரியர்களாக இருந்தது கண்ணுக்கு மை இட்டுக்கொண்டது, சென்ட், perfume ‘பெர்ப்யும்’ பயன்படுத்தியது தெரிகிறது

தொடரும்……………

 

–Subham–

 

கம்ப ராமாயண யுத்த காண்டப் பொன்மொழிகள் (POST No.4956)

கம்ப ராமாயண யுத்த காண்டப் பொன்மொழிகள் (POST No.4956)

 

மே 2018 நற்சிந்தனை காலண்டர்

 

 

COMPILED by London Swaminathan 

 

Date: 28 APRIL 2018

 

Time uploaded in London – 8-43 am (British Summer Time)

 

Post No. 4956

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

மே 2018 காலண்டர்

(2018 சித்திரைவைகாசி மாத நற்சிந்தனை காலண்டர்;

விளம்பி காலண்டர்)

 

முக்கிய விழாக்கள் – 28-  வைகாசி விசாகம்; அக்னி நட்சத்திரம் ஆரம்பம் -4 முடிவு– 28; 10-ஹனுமான் ஜயந்தி (தெலுங்கு தேசம்); பாங்கு விடுமுறை திங்கள்-7 AND 28. 

பௌர்ணமி– – 29; அமாவாசை– –  15; ஏகாதஸி விரதம்—11, 15

சுப முகூர்த்த தினங்கள்:- 2, 4, 6, 7, 13, 20, 25, 27

 

 

 

 

மே 1 செவ்வாய்க்கிழமை

 

ஒன்றெ என்னின் ஒன்றேயாம்

பல என்று உரைக்கின் பலவேயாம்

அன்றே என்னின் அன்றேயாம்

ஆமே என்னின் ஆமேயாம் (கடவுள் பற்றி கம்பன்)

 

மே 2 புதன்கிழமை

கங்குல் பொழுதும் துயிலாத

கண்ணன் கடலைக் கண்ணுற்றான் ( இரவிலும் கூட தூங்காத ராமன் கடலைக் கண்டான்.)

 

மே 3 வியாழக்கிழமை

முழுப்பெருந்தனி முதல் உலகின் முந்தையோன் (படைப்புக் கடவுளான பிரம்மா பற்றி கம்பன்)

 

மே 4 வெள்ளிக்கிழமை

பண்டிதர் பழையவர் கிழவர் பண்பினர்

தண்டலில் மந்திரத் தலைவர் சார்க (அறிஞர், நீண்ட நாள் பழகியவர், சுற்றத்தார், பண்புடையோர், நல்ல ஆலோசனை கூறும் அமைச்சர்கள் வருக என ராவணன் ஆணையிட்டான்)

 

 

மே 5 சனிக்கிழமை

உலங்கும் நம்மேல் வரின் ஒழிக்கற்பாலதோ (எதிரிகளை ஒழிக்காவிட்டால் கொசு வந்தால் கூட நம்மால் அதை விரட்ட முடியாது)

 

மே 6 ஞாயிற்றுக் கிழமை

வெள்ளியம் கிரியினை விடையின் பாகனோடு (சிவன் பற்றிக் கம்பன்; வெள்ளிமலை- கயிலை, விடை-ரிஷப வாஹனம்)

 

மே 7 திங்கட்கிழமை

மண்ணியல் மனிசரும் குரங்கும் மற்றவும்

உண்ணிய மைந்தன உணவுக்கு (மனிதர்கள், குரங்கு, ஏனைய விலங்குகள் எல்லாம் நாம் சாப்பிட அல்லவா படைக்கப்பட்டுள்ளது; அரக்கர் சொல்லுவது)

 

மே 8 செவ்வாய்க்கிழமை

 

நீ அயன் முதல் குலம் இதற்கு ஒருவன் நின்றாய்

ஆயிரம் மறைப்பொருள் உணர்ந்தறிவு அமைந்தாய்

(ராவணா! நீ பிராமணன்; பிரம்மன் முதல் தோன்றிய நம் குலத்தில் நீ ஒப்பற்றவன்; ஆயிரம் கிளைகள் (ஷாகா) கொண்ட சாம வேதத்தை அறிந்தவன்)

 

மே 9 புதன்கிழமை

ஆசில் பரதாரம் அவை அம் சிறை அடைப்பேம்

மாசில்புகழ் காதலுறுவேம் வளமை கூரப்

பேசுவது மானம் இடை பேணுவதும் காமம்

கூசுவது மானுடரை நன்று நம் கொற்றம்

(மாற்றான் மனைவியை சிறை வைப்போம்; புகழை விரும்புவோம்;வீ ரம் பேசுவோம்; காமத்துடன் உலவுவோம்; ஆனால் வலிமை அற்ற மனிதரைக் கண்டு பயப்படுகிறோம்!நன்றாக இருக்கிறதப்பா!)

 

மே 10 வியாழக்கிழமை

யானை இலர் தேர் புரவி யாதும் இலர் ஏவும்

தானை இலர் நின்ற தவம் ஒன்றும் இலர் தாமோ

கூனல் முதுகின் சிறு குரங்கு கொடு வெல்வார்

ஆனவரும் மானுடர் நம் ஆண்மை இனிது அன்றோ

 

யானை, தேர், குதிரைப்படையோ, ஆயுதங்களோ இல்லாமல் கூன்முது கொண்ட குரங்கின் மேல் ஏறி வரும் மனிதர்கள் நமக்கு உணவாக வேண்டியவர் ஆவர். இவர்கள் ஜெயிப்பார் என்று சொல்வது நல்ல அழகப்பா!!)

 

மே 11 வெள்ளிக்கிழமை

கோநகர் முழுவதும் நினது கொற்றமும்

சானகி எனும் பெயர் உலகின் தம்மனை

ஆனவள் கற்பினால் வெந்தது (ராவணா, குரங்கு சுட்டதால் இலங்கை தீப்பற்றியது என்று எண்ணாதே; சீதையின் கற்புதான் எரித்தது – வீடணன் கூற்று)

 

மே 11 வெள்ளிக்கிழமை

உயர்வு மீட்சியும்

பெண்பொருட்டு அன்றியும் பிறிது உண்டாம் எனின்

மண்பொருட்டு அன்றியும் ,வரவும் வல்லவோ (பெண்ணினால் வீழ்ச்சி வராவிடில் மண்ணினால்  அழிவு வரும்; வேறு காரணம் உண்டா? வீடணன் கேள்வி))

 

மே 12 சனிக்கிழமை

 

நாலு தோள் நந்திதான் நவின்ற சாபத்தால்

கூல வான்குரங்கினால் குறுகும் கோள் அது

வாலிபால் கண்டனம் (நந்தி இட்ட சாபத்தால் குரங்கினால் உனக்கு அழிவு வரும் என்பதை வாலி யிட்ட சண்டையால்தால் அறிந்தாம்)

 

மே 13 ஞாயிற்றுக் கிழமை

தீயிடைக்குளித்தவத் தெய்வக் கற்பினாள்

வாயிடை மொழிந்த சொல் மறுக்க வல்லமோ (தீக்குளித்த வேதவதி இட்ட சாபத்தை தடுக்கும் வல்லமை நமக்கு உண்டா? வீடணன் கேள்வி))

 

 

மே 14 திங்கட்கிழமை

அடல்படைத்து அவனியை பெருவளம்தருக என்றருளினானும்

கடல்படைத்தவரொடும் கங்கை

தந்தவன் வழிக்கடவுள் மன்னன் ( பூமியை வென்று வளம் கொடு என்று கட்டளையிட்ட பிருதுவும், கடலை உண்டாக்கிய சகரரும், கங்கையைக் கொடுணர்ந்த பகீரதனும் உதித்த சூரிய குலத்தில் வந்தவன் தசரதன்)

 

 

மே 15 செவ்வாய்க்கிழமை

ஈசனின் பெறு படைக்கலம்

இமைப்பு அளவில் எவ்வுலகில் யாவும்

நாசம் உற்றிட நடப்பன

கொடுத்தன பிடித்துடையர் நம்ப ( நொடிப் பொழுதில் எல்லாவற்றையும் அழிக்கும் ஆயுதங்களைக் கோசிகன் சிவனிடம் இருந்து பெற்று அவர்களுக்கு  அளித்தான்.)

 

மே 16 புதன்கிழமை

தெறு சினத்தவர்கள் முப்புரம்

நெருப்புற உருத்து எய்த அம்பும்

குறுமுனிப்பெயரினான் நிறைதவர்க்கு

இறைதரக் கொண்டு நின்றார் (ராமன் கையில் உள்ள ஆயுதங்கள் சிவன் கொடுத்த அம்பு, திருமாலின் வில்;அகத்தியவர் கொடுத்தவை)

 

மே 17 வியாழக்கிழமை

குலத்த கால் வயநெடுங் குதிரையும்

அதிர் குரல் குன்றும் இன்று

வலத்த கால் முந்துறத் தந்து நம்

மனையிடைப் புகுவ மன்னோ (குதிரைகளும் யானைகளும் வலது காலை வைத்து வீட்டிற்குள் வருகின்றன; தீய சகுனம்; அதாவது வீரர்கள் கைவிட்ட மிருகங்கள் மட்டும் திரும்பி வருகின்றன)

 

மே 18 வெள்ளிக்கிழமை

அசைவில் கற்பின் அவ் அணங்கை விட்டருளுதி இதன் மேல்

விசையம் இல் எனச் சொல்லினன் அறிஞரின் மிக்கான் (மாறாத கற்புடைய தெய்வப் பெண்ணாகிய சீதையை ராமனிடம் திருப்பி அனுப்பு; அதுவே வெற்றிதரும்– வீடணன் புத்திமதி)

 

மே 19 சனிக்கிழமை

 

வந்த போர்தொறும் துரந்த நாள் வானவர் உலகை

சிந்தவென்ற நாள் சிறியன் கொல் நீ சொன்ன தேவன் (ராமன் பற்றி ராவணன் கிண்டல்: இந்திரன், விஷ்ணு, தேவர்கள் ஆகியோரை ஒவ்வொரு போரிலும் ஓட ஓட விரட்டினேன்; அப்போதெல்லாம் நீ புகழும் ராமன் சின்னப் பயலாக இருந்தானோ?)

 

மே 20 ஞாயிற்றுக் கிழமை

 

ஒற்றை அண்டத்தின் அளவினோ அதன் புறத்து உலவா

மற்றை அண்டத்தும் தன் பெயரே சொல வாழ்ந்தான் (இரணியன் பெயர் இந்த அண்டத்தில் மட்டும் இன்றி பிற அண்டங்களிலும் பரவியது;தமிழர்களின் வானியல் அறிவினைக் காட்டும் பாடல்)

 

 

மே 21 திங்கட்கிழமை

வேதத்தின் உச்சியின் மெய்ப்பொருட் பெயரினை விரித்தான் (வேதத்தின் உச்சியான உபநிடதத்தில் கூறப்படும் உண்மைக் கடவுளின் பெயரினை (பிரகலாதன்) கூறினான்

 

 

மே 22 செவ்வாய்க்கிழமை

என்னை உய்வித்தேன் எந்தையை யுய்வித்தேன் இனைய

உன்னை உய்வித்து இவ்வுலகையும் உய்விப்பான் அமைந்து

முன்னை வேதத்தின் முதற் பெயர் மொழிவது மொழிந்தேன்

என்னை குற்றம் நான் இயம்பியது இயம்புதி என்றான் (ஆசிரியரிடம் பிரகலாதன் சொன்னது: என்னையும், என் தந்தையையும், உங்களையும் ,உலகில் உள்ள எல்லோரையும் ஈடேறச் செய்யும், ஓம் எனும் வேதத்தின் முதல் எழுத்து உணர்த்தும் ஒருவன் பெயரைத்தானே- ஓம் நமோ நாராயணாய- நான் சொன்னேன்; இது ஒரு குற்றமா? சொல்லுங்கள்)

 

மே 23 புதன்கிழமை

 

காடு பற்றியும் கனவரை பற்றியும் கலைத்தோல்

மூடி பற்றியும் முண்டித்தும் நீட்டியும் முறையால்

வீடு பெற்றவர் பெற்றதின் விழுமிது என்றுரைக்கும்

மாடு பெற்றெனென் மற்று இனி என் பெற வருந்தி (முனிவர் தோற்றம்: காடு,மலையில் வாழ்வர்-மான் தோல் அணிவர்-முடியை மழிப்பர், வளர்ப்பர்- மோட்சத்தை அடைவர்- அதைவிடப் பெரிய செல்வம் எனக்குக் கிடைத்தது-பிரகலாதன் செப்பியது)

 

மே 24 வியாழக்கிழமை

காமம் யாவையும் தருவதும் அப்பதம் கடந்தால்

சேம வீடுறச் செய்வதும் செந்தழல் முகந்த

ஓம வேள்வியின் உறுபதம் உய்ப்பதும் ஒருவன்

நாமம் அன்னது கேள் நமோ நாராயணாய (கேட்டதை எல்லாம் கொடுப்பான்; அது அலுத்துப் போய் மோட்சம் வேண்டின் அதையும் தருவான்; யார் அவன்? சுவர்க்கம் போக ஹோமம் செய்யும்போது சொல்லும் பெயர் இருக்கிறதே! அதுதான்– நமோ நாராயணாய)

 

மே 25 வெள்ளிக்கிழமை

அரவின் நாமத்தை எலி இருந்து ஓதினால் அதற்கு

விரவு நன்மை என் துன்மதி விளம்பு என வெகுண்டான்( பிரகலாதனிடம் இரணியன் விளம்பியது: பாம்பின் பெயரை எலி இடைவிடாது ஓதினால் அதற்கு என்ன நன்மை கிடைக்கும்? சொல்)

 

 

மே 26 சனிக்கிழமை

வித்து இன்றி விளைவது ஒன்றில்லை வேந்த நின்

பித்து இன்றி உணர்தியேல் அளவைப் பெய்குவேன் (பிரகலாதன் மொழிவது: அரசனே, விதை இல்லாமல் மரம் முளைக்காது; நீ பைத்தியம் தெளிந்து கேட்பாயின் தத்துவப் பொருளை அறியும் வழியைச் சொல்வேன்)

 

மே 27 ஞாயிற்றுக் கிழமை

உபநிடதங்கள் ஓதுவ

கிளவிஆர் பொருள்களான் கிளக்குறாதவன்

களவை யார் அறிகுவார் மெய்ம்மை கண்டிலார் ( உபநிடதச் சொற்களால் விளக்கமுடியாதவன்; அவன் தன்மையை யார் அறிவார்? யாரும் கண்டதில்லை)

மே 28 திங்கட்கிழமை

 

முந்தை ஓரெழுத்து என வந்து மும்முறைச்

சந்தியும் பதமுமாய்த் தழைத்த தன்மையான் (ஓம் அவன்; அ, உ, ம சந்தி அவன்)

மே 29 செவ்வாய்க்கிழமை

ஆலமும் வித்தும் ஒத்து அடங்கும் தன்மையான் -(ஆலமரத்தையும் அதைத் தன் சிறிய விதைக்குள் அடக்கியது போல பிரபஞ்சத்தை அன்னுள் கொண்டவன்)

 

மே 30 புதன்கிழமை

ஓம் எனும் எழுத்து அதனின் உள் உயிர்

ஆம் அவன் அறிவினுக்கு அறிவும் ஆயினான் (ஓம் எனும் எழுத்தும், அதிலுள்ள அ,உ, ம, வில், அகார உயிராக உள்ளான்)

 

மே 31 வியாழக்கிழமை

கன்று புல்லிய கோள் அரிக்குழு எனக்

கனக்கின்ற தறுகண்ணார் ( குட்டி யானையை சிங்கக் கூட்டம் சூழ்ந்துகொண்டது போல, அரக்கர்கள் பிரகலாதனைச் சுற்றி வளைத்தனர்)

 

–SUBHAM–

ஞானிகள், முனிவர்கள், மஹான்கள் எங்கே பிறப்பார்கள்? (Post No.4954)

ஞானிகள், முனிவர்கள், மஹான்கள் எங்கே பிறப்பார்கள்? (Post No.4954)

Research Article Written by London Swaminathan 

 

Date: 27 April 2018

 

Time uploaded in London – 15-33

 

 

Post No. 4954

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

உலகப் புகழ்பெற்ற காஷ்மீரப் புலவன் கல்ஹணனன் செப்புகிறான்

 

“The reputation of the great does not by any means conform to their birth place”. Rajatarangini 4-41

 

ஒருவர் பிறந்த இடத்தினால் பெரியோரின் புகழ் குறையாது; மங்காது.:

 

இது எவ்வளவு பெரிய உண்மை என்பதை சித்தர்களும் முனிவர்களும் ஞானிகளும் சாது சந்யாசிகளும் மஹான்களும் பிறக்கும் இடத்தைப் பட்டியலிட்டுப் பார்த்தால் விளங்கிவிடும்.

 

அவர்கள் எந்த இனத்திலும் எந்த நாட்டிலும், எந்த   இ டத்திலும், எவருக்கும் பிறப்பார்கள். உலகப் புகழ்பெற்ற இந்திய ஞானிகளில் பெரும்பாலோர் எவருக்கும் தெரியாத தொலைதூர கிராமங்களில் பிறக்கிறார்கள். கீழேயுள்ள சுவையான  பட்டியலைப் பாருங்கள்; நேரம், காலம், இடம் என்று தேர்ந்தெடுக்காமல் பிறப்பது தெரியும். அவர்களை யாரும் தனிச் சொத்தாகக்  கருதுவதில்லை

 

அவர்கள் உலகிற்கே சொந்தம்; கல்ஹணர் சொல்லுவது சரியே

 

கீழேயுள்ள பட்டியல் விரிவானது அல்ல. ஊருக்கு ஒரு ஞானி இருப்பதால் சேர்த்துக் கொண்டே போகலாம் இதோ ஒரு சின்னப்பட்டியல்:-

 

A

அருணகிரிநாதர்- திருவண்ணாமலை

ஆதிசங்கரர்- காலடி, கேரளம்

அன்னமாசார்யா- தல்லபாக, ஆந்திரம்

அரவிந்தர்- கல்கத்தா

ஆனந்தமயீ மா- கியோரா, வங்கதேசம்

ஆழ்வார்கள் 12

ஆண்டாள் – திருவில்லிப்புத்தூர்

பெரியாழ்வார்-திருவில்லிப்புத்தூர்

நம்மாழ்வார்- திருக்குருகூர்

பொய்கை ஆழ்வார்- திருவெஃகா

பேயாழ்வார்- மயிலை

பூதத்தாழ்வார்- மஹாபலிபுரம்

திருமழிசை ஆழ்வார்- திருமழிசை

தொண்டரடிப்பொடி ஆழ்வார்- மண்டன்குடி

மதுரகவி- திருக்கோளூர்

திருப்பாணாழ்வார்- உறையூர்

குலசேகராழ்வார்- திரு வஞ்சிக்களம்

திருமங் கை ஆழ்வார்- குறையலூர்

B

பாஸ்கராச்சார்யா- பீஜப்பூர்

பக்தி வேதந்த ப்ரபுபாத (ISKCON)- டாலிகஞ்ச்

புத்தர்- கபிலவஸ்து

 

E

ஏகநாத்- பைதான்,மஹாராஷ்டிரம்

 

G

குருநானக்- நான்கானா சாஹிப் (பாகிஸ்தான்)

கேசவ பலிராம் ஹெட்கேவார் (RSS)- நாகபுரி

 

J

ஞானதேவ்- அபேகான்  , மஹாராஷ்டிரம்

 

K

காஞ்சி மஹா ஸ்வாமிகள்- விழுப்புரம்

கபீர்தாஸ்- காசி

குழந்தையானந்த சுவாமிகள்- சமயபுரம், மதுரை

கனகதாசர்- பாட கிராமம், கர்நாடகம்

கம்பன் – தேரழுந்தூர்

 

M

மஹா வீரர்- குண்டக்ராம- பீஹார்

 

மாதவ ஸதாசிவ கோல்வல்கர்  (RSS)- ராம்டெக்

மஹாத்மா காந்தி- போர்பந்தர்- குஜராத்

மத்வர்- பாஜக ,உடுப்பி

முத்து ஸ்வாமி தீக்ஷிதர்- திருவாரூர்

மாணிக்கவாசகர்- திருவாதவூர்

 

மீராபாய்- சௌகரி, ராஜஸ்தான்

முக்தாபாய்- அபேகாவ்ன்

 

N

நாராயணகுரு – செம்பழந்தை, கேரளம்

 

நரசிம்ம மேதா- டாலஜ , குஜராத்

நாயன்மார் 63- பெரும்பாலோர் தமிழ்நாட்டு கிராமங்கள்

நிவ்ருத்தி- அபேகாவ்ன்

நாம்தேவ்- தண்ணீரில் மிதந்துவந்தார்

 

P

புரந்தரதாஸர்- தீர்த்தஹல்லி,கர்நாடகம்

பரமஹம்ச யோகானந்தர்- கோரக்பூர், உ.பி

R

ராமகிருஷ்ண பரமஹம்சர்- கமார்புகூர், மேற்கு வங்கம்

ரமண மஹரிஷி – திருச்சுழி

ராமனுஜர்- ஸ்ரீ பெரும்புதூர்

ராகவேந்திரர்- புவனகிரி, தமிழ்நாடு

சமர்த்த ராமதாஸர்- ஜாம்ப்

பத்ராஜலம் ராமதாஸர்- நலகொண்டபள்ளி

ராமதீர்த்தர்- முரளிவாலா, பஞ்சாப்

வள்ளலார் ராமலிங்க ஸ்வாமிகள் – மருதூர்

 

ராம்தாஸ் சுவாமி- காஞ்சன்காடு, கேரளம்

ரவிதாஸர்- கோவத்தன்பூர், உ.பி.

S

சாரதாதேவி- ஜய்ராம்பாடி, மேற்கு வங்கம்

சத்ய சாய்பாபா- புட்டபர்த்தி, ஆந்திரம்

ஷீர்டி சாய்பாபா- சீர்டிக்கு அருகில்

சேஷாத்ரி ஸ்மாமிகள் – திருவண்ணாமலை, ஊஞ்சலூர் தொடர்பு

ஷியாமா சாஸ்திரி- திருவாரூர்

 

சோபான-  அபேகாவ்ன்

சுப்ரமண்ய பாரதி- எட்டயபுரம்

சுவாமி சிவானந்தர்- பத்தமடை, தமிழ்நாடு

 

சுந்தரர்- திருநாவலூர்

ஸ்வாமிநாராயண்- சாபைய- உ.பி

சூர்தாஸ்- சிரி, டில்லிக்கு அருகில்

 

சித்தர் 18 – சமாதிகள் மட்டுமே பிரஸித்தம்

 

திருஞான சம்பந்தர்- சீர்காழி

திருமூலர்- காஷ்மீர்

திருவள்ளுவர்- மயிலை-சென்னை

துளசிதாசர்-சூகர் க்ஷேத்ர சோரன்

திருநாவுக்கரசர்–திருவாமூர்

தியாகராஜர்- திருவாரூர்

துக்காராம்- டேஹு

 

வல்லபாசார்யா- வாரணாசி/காசி

ஸ்ரீவல்லப- பீதாபுரம், ஆந்திரம்

ஸ்வாமி விவேகாநந்தர்- கல்கத்தா

வியாசர்- கங்கை நதித் தீவு

வால்மீகி- காட்டின் நடுவில்

இந்தப் பட்டியல் முழுப் பட்டியல் அல்ல- நேரம் கிடைக்கும்போது இரண்டாம் பட்டியலும் வரும்; மூன்றாம் பட்டியலும் வரலாம்!

 

–சுபம்–

ஒரு குட்டிக்கதை–குரு எதற்கு? கோவில் எதற்கு? (Post No.4949)

ஒரு குட்டிக்கதைகுரு எதற்கு? கோவில் எதற்கு? (Post No.4949)

 

Written by London Swaminathan 

 

Date: 25 April 2018

 

Time uploaded in London –  21-49

 

Post No. 4949

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

உலகம் முழுதும் உள்ள மியூசியங்களுக்குப் போனால் அங்கே பெரிய மனிதர்கள், மஹான்கள், தலைவர்கள் பயன்படுத்திய பேனாக்கள், செருப்புகள், அவர்கள் சாப்பிட்ட தட்டுகள், படுத்த பாய்கள், படித்த புத்தகங்கள் இவைகளை எல்லாம் காட்சிக்கு வைத்துள்ளனர். அதைப் பலரும் தொட்டுக் கும்பிடுகின்றனர். வணங்கிச் செல்லுகின்றனர். கல்லில் பொறித்த பாதங்களை இது ராமர் பாதம், இது புத்தர் பாதம், இது சமண தீர்த்தங்கர பாதம் என்று சொன்னால்    அதையும் கும்பிட்டுச் செல்கின்றனர். இது ஏசு மீது போர்த்திய துணி என்றால் அதைப் பார்க்கவும் டூரின் (Turin) நகருக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் வருகின்றனர். இதில் எந்த மதமும் விலக்கு அல்ல. எல்லா மதங்களிலும் இது போல நம்பிக்கை உள்ளது.

 

பெரிய புராணத்தில் பல கதைகளில் வெள்ளை நிறத்தைப் பார்த்தாலேயே விபூதி என்று கருதி வண்ணான் முதலியோரையும் வணங்கிய செய்தி வருகிறது. ஏன் இப்படி?

 

இது பற்றி ராமகிருஷ்ண பரமஹம்சர் ஒரு கதை சொல்கிறார்; அதைப் படித்தால் நாம் குருவுக்கு எதற்கு வணக்கம் சொல்கிறோம், கோவிலுக்குச் சென்று ஏன் வணங்குகிறோம் என்பது விளங்கும்; அவைகளைப் பார்த்த மாத்திரத்திலேயே நமக்கு ஊற்றுணர்ச்சி கிடைக்கிறது கடவுளை எண்ணுகிறோம்; குருவை நினைக்கிறோம்; அவரது உபதேசங்களில் மெய் மறக்கிறோம்

 

 

இதோ  ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்ன கதையைச் சுருக்கித் தருகிறேன்:

 

ஒரு முறை சைதன்ய மஹாப்ரபு ஒரு ஊர் வழியாகச் சென்று கொண்டிருந்தார். பேச்சு வாக்கில் சிலர் இந்த ஊர்க்காரர்கள்தான் மண்ணினால் கடம் மிருதங்கம் முதலிய இசைக் கருவிகளைச் செய்கிறார்கள் என்று சொல்லி வைத்தனர். உடனே அதை எண்ணி எண்ணி சைதன்யர் சமாதி நிலைக்குப் போய்விட்டார்.

 

ஓ கடவுளே: இவர்கள் செய்யும் இசைக் கருவிகள அல்லவா பஜனைகளில் வாசிக்கப்படுகிறது. அதன் மூலம்தானே நாமிறைவனை நினைக்கிறோம்; அந்த இறைவன் ஆன்மாக்களில் எல்லாம் அந்தராத்மாவாக உறைகிறானே; அழகுக்குக் எல்லாம் அழகானவன் அவன் அன்றோ என்று எண்ணிக்கொண்டே சமாதி நிலைக்கு போய்விட்டார்.

இதே போல குருவின் மீது அபார பக்தி கொண்டவர்கள், அவர் வாழும் ஊரிலிருந்து வந்தவர்களைப் பார்த்தவுடன் குருவின் ஞாபகம் வந்து, அவர்களை உபசரித்து, அன்னம் இட்டு காலில் விழுந்து வணங்குகின்றனர். அவர்கள் மிதித்த இடத்தில் இருந்து பாத தூளிகளை எடுத்து தலையில் தரிக்கின்றனர். குருவிடத்தில் குறைகள் இருந்தாலும் கூட அதைக் காண முடியாத வாறு பக்தி வெள்ளம் வருகிறது.

 

இந்தக் கதையிலிருந்து நாம் அறிவது என்ன?

கண்ணுக்கு முன் உதாரண புருஷராக விளங்கும் குரு அவசியம்; அவரைப் பார்க்கும் போதெல்லாம், அவருடைய சினங்களைப் பார்க்கும் போதெல்லாம் நமக்கு அந்தப் புனிதரின் நினைவு வருகிறது.

இதே போலக் கோவிலுக்குச் சென்றால் சிறுவர்களும் பெரியவர்களும் உள்ளம் உருகிக் கண்ணீர் விடும் காட்சியைக் கண்டவுடன் நமக்கும் உத்வேகம் பெருகுகிறது.

ஒருவன் வேண்டாத படங்களைப் பார்த்தால் தீய எண்ணங்கள் வரும் என்பதைச் சொல்லத் தேவையே இல்லை. தற்காலத்தில் வரும் திரைப்படங்களும் டெலிவிஷன் சீரியல்களும் மனதில் தீய மன வெழுச்சிச்சிகளை உண்டாக்குகின்றன. இதற்கு நேர் மாறாக மடங்களுக்கும் கோவில்களுக்கும் சென்று பக்தர்களைப் பார்க்கையில் நம் மனதில் நல்ல எண்ணங்களும் மன அமைதியும் உண்டாகின்றன. ஆகவே கோவில்களுக்குச் செல்லுவது அவசியம்; குருநாதரையோ அவர்களின் சீடர்களையோ காண்பதும் அவசியம்.

 

–SUBHAM–

பயணம் பற்றி வேதத்தில் சுவையான செய்திகள்! (Post No. 4946)

பயணம் பற்றி வேதத்தில் சுவையான செய்திகள்! (Post No4946)

 

RESEARCH ARTICLE WRITTEN by London Swaminathan 

 

Date: 24 April 2018

 

Time uploaded in London –  21-04  (British Summer Time)

 

Post No. 4946

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

உலகிலேயே மிகவும் பழைய பயணச் செய்திகள் இந்து மத நூல்களில்தான் உள்ளன. எனது ஆங்கில ஆய்வுக் கட்டுரையின் சுருக்கத்தை மட்டும் முன்வைக்கிறேன்.

 

ராமன் கால் நடையாக உத்தர பிரதேசத்தில் இருந்து இலங்கை வரை சென்றதை நாம் அறிவோம்.

ராமனுக்குப் பிறகு, மஹாபாரதப் போரில் நடு நிலை வகித்த பலராமன் பாரத யாத்திரை (தீர்த்த யாத்திரை) என்றதை உலக மஹா இதிஹாசம் மஹாபாரதம் இயம்பும்.

 

தமிழில் சிலப்பதிகாரத்தில் தீர்த்த யாத்திரை பற்றி மிகத் தெளிவான விஷயங்கள் இருக்கின்றன.

 

ஆதிசங்கரர், போக்கு வரத்து வசதி இல்லாத காலத்தில் அடர்ந்த காடுகளையும் உயர்ந்த மலைகளையும் தாண்டி இமயம் வரை சென்று ஐந்து இடங்களில் மடங்கள் நிறுவியதையும் படித்திருப்பீர்கள்.

ராமனுஜர், குருநானக் போன்ற மஹான்கள் பாரதம் முழுதும் பயணம் செய்து புனிதத் தலங்களை தரிசித்தனர். புத்தர் வட இந்தியா முழுதும் பிரசாரம் செய்தார். மாமன்னன் அசோகனோ கப்பல் மூலம் தன் மகனையும் மகளையும் இலங்கை முதலிய இடங்களுக்கு அனுப்பி தர்மப் பிரசாரம் செய்தான்.

அவ்வையார் சுந்தரமூர்த்தி சுவாமிகள் முதலியோர் கைலாஷ் வரை சென்றனர். இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.

ஆயினும் இவைகளுக்கு எல்லாம் முன்னர் தோன்றிய ஐதரேய பிராஹ்மணத்தில் உள்ள செய்தி மிகவும் சுவையானது.

ஹரிசந்திரன் கதையை எல்லோரும் அறிவர்; உண்மையே பேசி, மிகவும் இக்கட்டுள்ளாகி, இறுதியில் உலகப் புகழ்பெற்ற சூரியகுல மன்னன். இக்க்ஷ்வாகு சூரியகுல முதல் மன்னன். அவ்வரிசையில் 28ஆவது மன்னன் ஹரிச்சந்திரன். அவனுடைய மகன் ரோஹிதன்  காட்டுக்குள் ஆறு ஆண்டுகள் இருந்தான். அவன் ஒவ்வொரு முறை கிராமத்துக்குத் திரும்பி வந்த போதும் இந்திரன் பிராமணன் வடிவில் வந்து அவனைப் பயணம் செய்து கொண்டே இரு, அதனால் பல நன்மைகள் விளையும் என்கிறான்.

 

உலகின் மிகப்பழைய பிரயாணப் பொன்மொழிகள் இவைகள்தாம். இதோ அந்தப் பயணப் பொன்மொழிகள்:-

இந்து சந்யாசிகள் ஓரிடத்தில் ஓரிரவுக்கு மேல் தங்கக்கூடாது என்றும் விதி உள்ளது. ம ழைக்காலத்தில் மட்டும், ஒரே இடத்தில் தங்கி நான்கு மாத (சாதுர்மாஸ்ய வ்ரதம்) நோன்பு அனுஷ்டிக்க வேண்டும்

 

ரோஹித, காட்டிற்குச் சென்றான். ஓராண்டுக்குப் பின்னர் கிராமத்துக்குத் திரும்பி வந்தான்; அங்கு இந்திரன், பிராமணன் உருவத்தில் சென்றான். அவனிடம் சொன்னான்:” பயணம் செய்யாதவனுக்கு இன்பம் இல்லை, ரோஹித! இதை நாம் அறிவோம். நாம் மனித சமுதாயத்தில் வாழ்கையில், நல்லவனும் கூட கெட்டுப்போக வாய்ப்பு உண்டு. இதை மனிதர்களே இல்லாத இடங்களுக்குப் பயணம் செய்தால் தவிர்க்க முடியும்; பயணம் செய்வோரின் நண்பன் இந்திரன்; ஆகையால் அலைந்துகொண்டே இரு.

-ஐதரேய பிராஹ்மணம் 7-3-15

மீண்டும் ஓராண்டுக்குப் பின்னர் ரோஹித, கிராமத்து குத் திரும்பி வந்தான்; மீண்டும் இந்திரன் அவனிடம் சென்று சொன்னான்: “அலைந்து திரியும் ஒருவனுடைய கால்கள், மலருக்குச் சமமானவை. அவனுடைய ஆன்மா வளர்ந்து பழங்களை அனுபவிக்கும். மேலும் ஒருவன் பிரயாணம் செய்யும்போது ஏற்படும் துன்பங்களால் அவனது பாவங்கள் நஸித்துப் போகும்; ஆகையால் அலைந்து கொண்டே இரு.

 

ஒரு பிராமணன் இப்படிச் சொல்வதைக் கேட்டு அவனும் காட்டுக்குள் அலைந்தான்.

மீண்டும் ரோஹித, கிராமத்துக்கு வந்த போது, மாறு வேடத்தில் சென்ற இந்திரன் சொன்னான்:

யார் ஒருவன் உடகார்ந்து இருக்கிறானோ அவனது அதிர்ஷ்டமும் உட்கார்ந்து விடும்

அவன் எழுந்திருந்தால் அதிர்ஷ்டமும் எழுந்து நிற்கும்;

அவன் தூங்கினால் அதிர்ஷ்டமும் தூங்கிவிடும்;

அவன் நகர்ந்தால், அதுவும் நகரும்; ஆகவே அலைந்து திரி.

 

இதைத் தமிழில் உள்ள பழமொழிகளுடன் ஒப்பிடலாம்:

குந்தித் தின்றால் குன்றும் (அதிக அளவுள்ள செல்வமும்) கரையும்;

திரை கடலோடி திரவியம் தேடு.

 

உழைப்பவனுக்கு செல்வம் கிடைக்கும், தங்கும் என்பதே இதன் பொருள்

இப்படிச் சொன்னவுடன் ரோஹித காட்டுக்குச் சென்று விட்டு ஓராண்டுக்குப் பின்னர் திரும்பி வந்தான்.

 

கலி (யுகம்) கீழே இருக்கிறது; த்வாபர யுகம் மேலே சுற்றிக் கொண்டிருக்கிறது; த்ரேதா (யுகம்) எழுந்து நிற்கிறது, கிருத யுகம் நடந்து செல்கிறது; ஆகவே, ரோஹித நீயும் நட.

 

இதை இப்படியும் சொல்லலாம்: தூங்கும் மனிதன் கலியுகம் போன்றவன்;

விழித்துக் கொள்பவன் த்வாபர யுகம் போன்றவன்;

எழுந்து நிற்பவன் த்ரேதா யுகம் போன்றவன்;

பயணம் செய்பவன் கிருதயுகம் போன்றவன்.

 

இதைக் கேட்டு ரோஹிதன் மேலும் ஓராண்டு காட்டுக்குச் சென்றான்.

 

சூதாட்டத்திலும் காயுருட்டும் போது நான்கு என்பது கிருத யுகத்தைக் குறிக்கும்; இதுதான் மிகவும் அதிக மதிப்பு உடையது.

அவன் திரும்பி கிராமத்துக்கு வந்தபோது, மாறுவேடம் தரித்த இந்திரன் சொன்னான்.

யார் ஒருவன் பயணம் செய்கிறானோ அவனுக்கு தேனும், அத்திப் பழமும் கிடை க்கும். சூரியனின் அழகைப் பார். தினமும் அலைந்து திரிந்தும் அவன் பொலிவுதான் குறைந்ததா? ஆகையால் தொடர்ந்து நட.

 

மேலும் சில மேற்கோள்கள்

வெளிநாடு செல்லாமல், ஒருவனுக்குப் புகழ் கிட்டாது; அறிவோ சாதனைகளோ வராது – கதா கோசம்

 

நமக்கும் தாய், தந்தை,  சஹோதரன்,நண்பன் ஆகியோருக்கும் உள்ள தொடர்பு, பந்தம் எல்லாம் அன்ன சத்திரத்தில் சந்திக்கும் பயணிகளின் உறவைப் போன்றது தாந் மஹா பாரதம், சாந்தி பர்வம்.

 

 

பயணத்தின் முக்கியத்துவத்தை உலகிலேயே பழைய நூலான ரிக்வேதத்தின் துணை நூலான ஐதரேய பிராஹ்மணம் வலியுறுத்துவது போல வேறு எங்கும் காண முடியாது!

 

பிராமணர்களுக்கும் பெண்களுக்கும் தடை

 

பிராமணர்கள் கடல் கடந்து வெளி நாடு செல்லக்கூடாது என்று மநுஸ்ம்ருதி தடை போடுகிறது.

 

பெண்கள் வெளிநாடு செல்லக்கூடாது என்று தொல்காப்பியம் தடை போடுகிறது. (இவை இரண்டும் பற்றி முன்னரே விரிவான கட்டுரை த, ந்துள்ளேன்)

 

–சுபம்

சங்க இலக்கியத்தில், ரிக் வேதத்தில் யூப நெடுந்தூண் (Post No.4943)

 

Yupa is on seen in the right.

சங்க இலக்கியத்தில், ரிக் வேதத்தில் யூப நெடுந்தூண் (Post No.4943)

 

 

RESEARCH ARTICLE WRITTEN by London Swaminathan 

 

Date: 23 April 2018

 

Time uploaded in London –  22-20 (British Summer Time)

 

Post No. 4943

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

 

உலகின் மிகப் பழைய நூலான ரிக் வேத்திலுள்ள சொற்களை நாம் இன்று வரை பன்படுத்துவது, இமயம் முதல் குமரி வரை ஒரே கலாசாரம் இருந்ததற்குச் சான்றாக விளங்கி வருகிறது.

 

யூபம் என்னும் தூண் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரை இது. இந்த யூப ஸ்தம்பம் ரிக்வேதத்திலும் உள்ளது. அதற்குச் சில ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் தோன்றிய சங்கத் தமிழ் இலக்கியத்திலும் உளது. ஹரப்பா என்பதே ஹரி யூப என்ற சொல்லின் மருவு என்று நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை எழுதினேன்.

Pandya coin

நாலாம் நூற்றாண்டைச் சேர்ந்த மூலவர்மனின் ஏழு யூப ஸ்தம்பங்கள் போர்னியோ தீவின் அடர்ந்த காட்டுக்குள் இருந்ததை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்ததை காஞ்சி பரமாசார்ய ஸ்வாமிகள் (1894-1994) பல ஆண்டுகளுக்கு முன்னரே சொற்பொழிவில் குறிப்பிட்டதையும் எழுதினேன்.

 

புற நானூற்றின் மிகப்பழைய பாட்டிலும் பெரும்பாணாற்றுப் படையிலும் யூபம் பற்றிய குறிப்புகள் உளதையும் சுட்டிக்காட்டினேன். தமிழ் மன்னர்கள் வேத கால யாக யக்ஞங்களில் பேரார்வம் கொண்டவர்கள் என்பதை ராஜசூய யாகம் வேட்ட பெருநற்கி ள்ளி பற்றிய கட்டுரையிலும், பருந்து வடிவில் யாக குண்டம் அமைத்த கரிகாற் பெருவள த்தான் செய்த யாகம் பற்றிய கட்டுரையிலும் எழுதினேன்.

 

 

அகஸ்தியரையும் பாண்டியரையும்

தொடர்புப் படுத்திப் பேசிய முதல் காவியம் உலகப் புகழ்பெற்ற காளிதாசனின் ரகுவம்சம் என்பதையும், பாண்டிய மன்னர்கள் சதாசர்வ காலமும் அவப்ருத ஸ்நானத்தில் நனைந்திருப்பதே அவர்களின் பெருமை என்று காளிதாசன் பாண்டிய மன்னனை இந்துமதி ஸ்வயம்வரத்தில் அறிமுகப்படுத்தியதை எழுதி இது பலயாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியின் அஸ்வமேத யாகம் பற்றிய குறிப்பாக இருக்கலாம் என்பதையும் குதிரை பொறித்த பெருவழுதி நாணயம் கிடைத்திருப்பதையும் எழுதினேன். இதன் மூலம் காளிதாசனின் காலம் சங்கத் தமிழ் இலக்கியத்தை ஒட்டியோ முன்னரோ இருக்கலாம் என்றும் சொன்னேன்.

(இவை அனைத்தையும் எனது ஐந்து ஆண்டுக் கட்டுரைகளில் கண்டு மகிழ்க. இப்பொழுது புதிய விஷயங்களைக் காண்போம்).

 

Yupa is shown.

வேள்வி நெடுந்தூண்

 

யூபம் என்ற ரிக்வேதச் சொல்லை மிகப் பழைய புலவரான நெட்டிமையார் அப்படியே குறிப்பிடுவதும் மற்றொரு புலவர் வேள்வி நெடுந்தூண் என்று குறிப்பிடுவதையும் காண்போம்.

 

பாண்டியன் பல் யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை நெட்டிமையார் பாடியது (புறம்.15)

 

நால்வேதத்து

அருஞ் சீர்த்திப்பெருங்கண்ணுறை

நெய்மமலி ஆவுதி பொங்க, பல் மாண்

வீயாச்சிறப்பின் வேள்வி முற்றி

யூபம் நட்ட வியன் களம் பல கொல்?

யா பல கொல்லோ?

 

பொருள்

உன்னால் தோற்கடிக்கப்பட்ட பகைவர்கள் எண்ணிக்கை அதிகமா? அல்லது நான்கு வேதங்களில் சொன்னபடி நெய்யும் பொரியும் போட்டு யூப ஸ்தம்பங்கள் நட்டு நீ செய்த யாககங்கள்  அதிகமா?என்று பாண்டிய மன்னரைக் கேட்கிறார் நெட்டிமையார்.

 

சோழன் கரிகால் பெருவளத்தானைப் பாடிய கருங்குளவாதனார் பாடிய (புறம்.224) பாட்டில்,

எருவை நுகர்ச்சி யூப நெடுந்தூண்

வேத வேள்வித் தொழில் முடித்ததூஉம்

என்கிறார்.

 

அதாவது பருந்து வடிவ யாக குண்டத்தில் அந்தணர் சொற்படி செய்யப்பட்ட யாகத்தில் யூப நெடுந்தூண் நட்டவன் நீ…

 

இவ்வாறு பதிற்றுப் பத்து,  பெரும்பாணாற்றுப்படையிலும் வருகிறது

 

கேள்வியந்தணர் ரருங்கடனிறுத்த

வேள்வித்தூணத் தசைஇ யவன

ரோதிம விளக்கின்………

–பெரும்பாணாற்றுப்படை வரி 315, 316

 

யூபம் பற்றி அக்காலத் தமிழ் அறிஞர்களுக்கு நன்கு தெரியுமாதலால் உரைகாரர்கள் அதிகம் விளக்கவில்லை. இதற்கு நாம் ஸம்ஸ்க்ருத நூல்களையே நாட வேண்டியுள்ளது.

 

யூபக் கம்பங்களில் வேள்வியில் ‘பலியிடும்’ மனிதர்கள், மிருகங்களைக் கட்டுவார்கள். பின்னர் அவைகளை அவிழ்த்து விட்டு விடுவார்கள்.

 

ஐதரேய பிராஹ்மணம் என்னும் நூல் ரிக் வேதத்தின் துணை நூல். அதில் ராஜ சூய யாகம் பற்றி வருகிறது; எந்த யாகம் செய்தாலும் அதில் மன்னர்கள் சுநஸ்சேபன் கதையைக் கேட்க வேண்டும்.

உயிர்ப்பலி இல்லை

 

சுநஸ்சேபன் என்பவன் யாகத்தில் பலியிடக் கட்டியிருந்த போது அவனை விஸ்வாமித்ரர் விடுவித்த கதை இது. இது சூர்ய வம்சத்தின் 28ஆவது மன்னரான ஹரிச்சந்திரன் காலத்தில் நடந்தது.

 

இதிலிருந்து நமக்குத் தெரிவது என்னவென்றால் ஹரிசந்திரன் காலத்துக்கு முன்னாலோ பின்னாலோ இப்படி நடந்ததாக எங்கும் எந்தக் குறிப்பும் இல்லை. ஆக அந்த ஒரே சம்பவத்திலும் சுனஸ்சேபனை விஸ்வாமித்ர மஹரிஷி காப்பாற்றி விடுகிறார்.

 

மேலும் நால் வேதத்துக்கும் உரை எழுதிய பலருள் மிக முக்கியமானவர் சாயனர். அவரே சொல்கிறார்: ‘யாகத்தில் உயிர்கள் பலியிடப்படுவதில்லை. யூப ஸ்தம்பத்தைச் சுற்றி தீ எடுத்துச் செல்லப்பட்டவுடன் அவை  விடுதலை செய்யப்பட்டுவிடும்’.

சாயனர் சொல்லுவதை எல்லோரும் ஏற்றுக் கொள்வர்.

 

அகநானூற்றில் ஒரு ஆமை மர்மம் இருந்தது. அது எப்படி வெளியே வந்தது என்ற மர்மத்தைத் துலக்கி நான் எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரையிலும் ஆமை பலியிடப்படவில்லை என்பதைக் காட்டி இருக்கிறேன் (கட்டுரையில் மேல் விவரம் காண்க)

 

 

ரிக் வேதத்தில் இரண்டு இடங்களிலும் அதர்வ வேதத்தில் சில இடங்களிலும் பிற்கால பிராமண நூல்களில் ஏராளமான இடங்களிலும் யூபம் என்ற சொல் நேரடியாகப் பயிலப்படுகிறது. குறிப்பால் உணர்த்தும் இடங்கள் மிகப் பல.

 

யூப ஸ்தம்பம் கடிர மரத்தால் (கருங்காலி வகை மரம்) செய்யப்படும், அதன் மேல் பகுதி த்ரிசூலம் போல இருக்கும்; யக சாலைக்கு கிழக்கே வைப்பர். அதில் நெய் தடவி தோரணங்கள் கட்டுவர். அந்தக்கால இளைஞர்களின் அலங்காரம் போல இது விளங்குவதால் யுவ (இளைஞர்) என்ற சொல்லே இப்படி மருவியதாச் சிலர் பகர்வர்.

 

மனிதர்களுக்கு யாக யக்ஞங்க்ள் பற்றிய அறிவு வருவதைக் கடவுளர் விரும்பாமல் தடுத்ததால் (யோயுபயன்) யூபம் என்பப் எயர் வந்ததாக ஐதரேய பிராஹ்மணம் செப்பும். சதபதப் பிராமணத்தில் வேறு விளக்கம் உண்டு.

 

யாகத்தில் பலியிடப்படும் விலங்குகளோ மனிதர்களோ சம்மதம் தெரிவித்தால்தான் அவைகளைப் பலியிடலாம். ம்ருகங்களுக்கு, தான் சாகப்போகிறோம் என்று தெரிந்தவுடன் தயங்கும் என்றும் அப்போது கடவுளர் அவைகளிடம் நான் உன்னை சுவர்க்கத்துக்கு அழைத்துச் செல்கிறேன் என்று சொன்னவுடன் அவை இசைவு தெரிவிக்கும் என்றும் நூல்கள் இயம்பும்.

இன்னும் சிலர் மந்திரத்தைக் கேட்டவுடன் அதன் சக்தியில் மிருகங்களே செயல் இழந்து விடும் என்பர். எது எப்படியாகிலும் யாகத்தில் பலி என்பதே இல்லை அதற்குப் பதிலாக நெய்யே விடப்படும் என்று 700 ஆண்டுகளுக்கு முன்னர் சாயனர் எழுதி வைத்ததே சரி யென்று தோன்றுகிறது.

 

மாபாரதக் கதை

 

 

இசைவு தெரிவிக்கும் விஷயம் பற்றி மஹாபாரத்ததில் ஒரு சுவையான சம்பவம் உண்டு. அஸ்வமேத பர்வத்தில் அந்தக் கதை வருகிறது

 

கிருஷ்ணரும் அர்ஜுனரும் பிராமணர் வேடத்தில் மேவரத்வஜன் என்ற மன்னரிடம் சென்றனர். கிருஷ்ணனின் மகனை புலி தூக்கிக்கொண்டு போய்விட்டதென்றும் அரசனின் மகனின் உடலில் பாதி கிடைத்தால்தான் புலி அவனை விடும் என்றும் சொன்னார்கள். உடனே மன்னன், தன்னையே பலி கொடுப்பதாகச் சொல்லி மகனையும் மனைவியையும் கூப்பிட்டு அறுக்கச் சொன்னான். அவர்களும் அப்படியே செய்ய முன்வந்தார்கள். அப்பொழுது அந்த மன்னரின் இடது கண்ணில் ஒரு சொட்டுக் கண்ணீர் வந்தவுடன் கிருஷ்ணன் வேண்டாம் என்று சொல்லிவிட்டார். முழு சம்மதம் இருந்தால்தான் யாகத்தில் பலியிடலாம், கண்ணீர்த் துளியானது முழு மனது இல்லை என்பதைக் காட்டுகிறது என்று சொல்லி நிறுத்திவிட்டனர். இந்தக் கதையானது எதையும் அனுமதி இன்றி செய்யக்கூடாது என்பதை விளக்குவதோடு அக்காலத்தில் சிறந்த ஜனநாயகம் இருந்ததைக் காட்டுகிறது.

 

இதுவரை சொன்ன விஷயங்கள்:

 

இமயம் முதல் குமரி வரை ஒரே கலாசாரம்  இருந்ததை பாண்டிய மன்னர்கள் சோழ மன்னர்கள், சேர மன்னர்கள் யாகம் செய்ததை சங்கத் தமிழ் இலக்கியம் செப்புவதால் அறிகிறோம்.

 

யாகத்தில் உயிர்ப்பலி இல்லாமல் அது அடையாள         பூர்வமாக செய்யப்பட்டதையும் சாயனர் உரை மூலம் அறிகிறோம்.

 

 

கருங்காலி வகை மரம் பல மருத்துவ குணம் உடைய மரம். அதை யூப ஸ்தம்பத்துக் பயன்படுத்தியது, அதன் தோற்றம் மற்றும் மருத்துவ குணமுள்ள ஒரு மரத்தைப் பயன்படுத்தியது ஆகியவற்றையும் கண்டோம்.

 

 

யூப தூண் | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/யூப-தூண்/

Translate this page

ஆகவே யூபம் என்பது சிந்து சமவெளி நாகரீக ஹரியூப்பியவில் மட்டும் இன்றி 2000 ஆண்டுகளாக ஆசியா முழுதும் பரவிவிட்டது தெரிகிறது. யூப ஸ்தம்பம் என்பது வேதத்தில் ஆகுதியாக்கப்படும் யாகப் பசு கட்டப்படும் இடம் அல்லது வேதச் சடங்கின் வெற்றியின் நினைவாக எழுப்பபடும் …

ராவணன் – பாண்டியர் சமாதான …

swamiindology.blogspot.com/2014/06/blog-post_24.html?view=sidebar#!

24 Jun 2014 – வேறு எங்கும் கிடைக்காத இந்தச் செய்திகாளிதாசன் மூலமே கிடைக்கிறது அதுமட்டுமல்ல யாகத்திற்காக செய்த அவப்ருத ஸ்நானத்தில் ( குளியல்)பாண்டிய மன்னர்கள் எந்நேரமும் இருப்பதையும் சொல்கிறார். புற நானூற்றில் பெரிதும் போற்றப்படும் பலயாகசாலை முது …

புலிக் கொடி | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/புலிக்-கொடி/

Translate this page

தமிழ் நாட்டை ஆண்ட சேர, சோழ, பாண்டியர்கள் ஆகிய மூவேந்தர்களும் குறைந்தது 2500 ஆண்டுகளாக வரலாற்றில் இடம்பெறுகிறார்கள். போதாயனர், காத்யாயனர், வால்மீகி, வியாசர், அர்த்தசாஸ்திரம் எழுதிய சாணக்கியர், மாமன்னன் அசோகன், கலிங்க மன்னன் காரவேலன், இலங்கையின் …

பாண்டியர் | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/பாண்டியர்/

Translate this page

அதில் முக்கியமான செய்தி – அகத்தியர் – பாண்டியர் – இராவணன் தொடர்பு ஆகும். வேறு எங்கும் கிடைக்காத இந்தச் செய்தி காளிதாசன் மூலமே கிடைக்கிறது அதுமட்டுமல்ல யாகத்திற்காக செய்த அவப்ருத ஸ்நானத்தில் ( குளியல்)பாண்டிய மன்னர்கள் எந்நேரமும் இருப்பதையும் …

–சுபம்–

 

அல்லா உபநிஷத்தும் கிறிஸ்து கீதையும்! (Post No.4941)

அல்லா உபநிஷத்தும் கிறிஸ்து கீதையும்! (Post No.4941)

 

 

WRITTEN by S NAGARAJAN

 

Date: 23 April 2018

 

Time uploaded in London –  7-49  AM  (British Summer Time)

 

Post No. 4941

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

ச.நாகராஜன்

 

தலைப்பைப் பார்த்து மலைத்துப் போனால் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

அல்லா உபநிஷத்!

கிறிஸ்து கீதை!!

ஆனால் இவை தோன்றியது உண்மை.

 

குறைந்த பட்சமாக வைத்துக் கொண்டாலும் கூட ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கும் மேலாக வெறி பிடித்த காட்டுமிராண்டிகளாலும், முகலாயர்களாலும், ஆங்கிலேயர்களாலும் பல வித கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்ட ஹிந்துக்களின் சரித்திரம் இன்னும் சரியான முறையில் வெளி உலகிற்கு, குறிப்பாக ஹிந்துக்களுக்கே கூடத் தெரியாது.

மதமாற்றத்திற்கு எத்தனை முயற்சிகள்!

பாரதத்தின் செல்வத்தைக் கொள்ளை அடிக்க எத்தனை முயற்சிகள்!!

ஒரு உண்மையை இங்கு பதிவு செய்கிறேன்.

உலகின் வரலாற்று ஆரம்பத்திலிருந்து இன்று வரை ஆகப் பெரும் மிகப் பெரிய பணக்காரன் ஒரு பாண்டிய மன்னன் தான் என்று சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள். இந்த மன்னனைப் பற்றித் தனியே கட்டுரை எழுத இருப்பதால் மேலும் இங்கு விவரிக்கவில்லை.

கொலை மிரட்டல் முதலாக பெண்ணாசை, பதவியாசை, மண்ணாசை என பல்வேறு ஆசைகள் காட்டி மதமாற்றத்திற்கு முகலாயர்களும் ஆங்கிலேயர்களும் செய்த அக்கிரமச் செயல்களுக்கு ஒரு எல்லையே இல்லை!

ஹிந்து மதம் தனது அகண்டாகாரமான உள்ளீட்டாலும், எதையும் எதிர்கொண்டு வெல்லும் சக்தியாலும் இன்று வரை பொலிவு குன்றாது விளங்குகிறது.

இதை மட்டும் அனைவரும் சொல்லி வருகின்றனர். இது உண்மை தான்! ஆனால் இன்னொரு மகத்தான காரணமும் உண்டு.

 

ஏராளமானோர் -மன்னர்கள்,வீரர்கள், சாமானியர்கள் உள்ளிட்டோர் – தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்து முகலாயர்கள், ஆங்கிலேயர்கள் மற்றும் இதர அன்னிய படையெடுப்பாளர்களின் ஆசையைத் தடுத்தனர்.

இவர்களின் வரலாறு தனியே தொகுக்கப்பட வேண்டும்.

 

இந்த நிலையில் தான் ஹிந்துக்களின் உயிர்நாடியான வேதம், உபநிஷத்துக்களையும் ராமாயண மஹாபாரத இதிஹாஸங்களையும் அப்படியே காப்பி அடித்தாவது அவர்களை மதமாற்றம் செய்ய முடியாதா என்ற முயற்சி நடந்தது.

ராபர்ட் டி நொபிலி என்று ஒரு அக்கிரமப் பாதிரியார்.

பிராமணராக தன்னைச் சித்தரித்துக் கொண்டார். சமூகத்தில் தன்னலமற்றுச் சிறந்து விளங்கிய அக்கால பிராமணர்களை இப்படியாவது கவர முடியுமா என்று பார்த்தார்.

அவர் செய்த அக்கிரமங்களைச் சொல்லத் தனி நூல் தான் வேண்டும்.

கீதையின் பால் உலகெங்கும் இருக்கும் மதிப்பும் கிறிஸ்தவ மதமாற்ற வெறியர்களைக் கவர்ந்தது.

ஆகவே எழுந்தது தான் கிறிஸ்து கீதை!

இன்னொன்று டேவிட் கீதை!

கிறிஸ்து கீதை

பைபிளின் 14 அத்தியாயங்களைத் தமிழில் மொழி பெயர்த்து கீதையின் பெயரால் பைபிளை உலவ விடச் செய்த முயற்சி தான் கிறிஸ்து கீதை! இது வெற்றி பெறவில்லை. காலப்போக்கில் அழிந்தொழிந்தது!

டேவிட் கீதா

இது டேவிட்டின் உபதேசங்களை சம்ஸ்கிருதத்தில் மொழிபெயர்த்துத் தரப்பட்ட கீதை!

(Sanskrit Translation of Psalams of David by W.Yates – Published from Calcutta in 1844)

இதுவும் வெற்றி பெறவில்லை.

அல்லா உபநிஷத்

அக்பருக்கு ஒரு ஆசை. எல்லோரும் இஸ்லாமியராக வேண்டும் என்று!

உபநிஷத் பெயரைச் சொன்னாலாவது ஹிந்துக்கள் இஸ்லாம் மதத்தைத் தழுவ மாட்டார்களா என்று அவர் எண்ணவே,

அக்பரை மகிழ்விக்க எண்ணிய ஒரு பண்டிதர் அல்லாவின் உபநிஷத் வேதத்திலேயே இருக்கிறது என்றார்.

எங்கே அது  என்று கேட்ட போது அவர் அல்லா உபநிஷத்தைத் “தயாரித்து” அக்பரிடம் காட்டினார்.

ஆனால் இதுவும் வெற்றி பெறவில்லை.

பொய்க்குக் கால்களே கிடையாது! ஆக அது எப்படி நடக்க முடியும், ஓட முடியும்?!

அனாவசிய விளம்பரம் அல்லா உபநிஷத்திற்குத் தந்து விடக் கூடாது என்பதனால் அதை இங்கு முழுவதுமாகத் தரவில்லை.

என்றாலும் இங்கு சொல்லப்படுவது உண்மை தான் என்பதை எடுத்துக்காட்ட அதன் போட்டோ காப்பியை இங்கு இணைக்கிறோம்.

‘ஓம்! அஸ்மல்லம் இல்லா – மித்ரா வருணோ – திவ்யநிதத்த, இலில்லாவருணோ’ என்று அல்லா உபநிஷத் ஆரம்பிக்கிறது.

‘அல்லோ அல்லம் இல்லல்லாதி இல்லல்லாஹ்’ என்று அது முடிகிறது.

 

ஆக ஹிந்து மதத்தை அழிக்க நடந்த முயற்சிகள் ஏராளம். அதில் போலி உபநிஷத்துகளையும் போலி கீதைகளையும் உலவ விட்டனர் மத வெறியர்கள்.

உபநிஷத், கீதை என்ற பெயருக்கு உள்ள மகத்துவத்தை  இதனால் உணரமுடிகிறது.

நமது அரிய செல்வத்தைக் காத்து அதை நம் சந்ததியினருக்குத் தர வேண்டியது நமது கடமை அல்லவா!

எழுமின்! விழிமின்! மதமாற்றத்தில் ஈடுபடாத ஹிந்து தர்மத்தை உலகெங்கும் பரப்புமின்!

 

****                                                    இணைப்பு : அல்லா உபநிஷத்தின் போட்டோ காப்பி! படிப்பதற்கும் அல்ல; பரப்புவதற்கும் அல்ல; சும்மா பார்ப்பதற்கு மட்டுமே!!

 

 

இந்து அரசர்களின் பட்டாபிஷேகக் காட்சிகள் (Post No.4936)

இந்து அரசர்களின் பட்டாபிஷேகக் காட்சிகள் (Post No.4936)


WRITTEN by London Swaminathan 

 

Date: 21 April 2018

 

Time uploaded in London –  21-20 (British Summer Time)

 

Post No. 4936

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இந்து அரசர்கள் எப்படிப் பட்டாபிஷேகம் செய்து கொண்டனர் என்பதை ரிக் வேதத்துக்குருரிய பிராஹ்மண நூலான ஐதரேய பிராஹ்மணமும் மஹாபாரதமும் ராமாயணமும் படம் பிடித்துக் காட்டுகின்றன. சில சுவையான விஷயங்களை மட்டும் காண்போம்.

 

உலகின்  மிகப்பழைய நூல் ரிக் வேதம் என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமில்லை. ஒவ்வொரு வேதத்துக்கும் யாக யக்ஞ முறைகளை விரிவாவக் கூறும் பிராஹ்மணம் என்ற துணை நூலும் உண்டு. ரிக் வேதத்தின் சாகல ஷாகாவின் நூல் ஐதரேய பிராஹ்மணம். அது ராஜசூய யக்ஞம் எப்படிச் செய்யப்படுகிறது என்று விளக்குகிறது.

 

 

அத்தி மர அற்புதம் புலித்தோல் மஹிமை, புனித நீர் அபிஷேகம் , பெண்கள் மாடி வீட்டு ஜன்னல்களின் வழியாகக் காணும் காட்சி முதலியன பட்டாபிஷேக வர்ணனையில் அடிபடுகின்றன.

 

பட்டாபிஷேகத்துக்கான ஆசனத்தை அத்தி மரம் கொண்டு செய்தனர். இதை உடும்பரா என்று ஸம்ஸ்க்ருத நூல்களும் விஷ்ணு சஹஸ்ர நாமமும் அழைக்கும். மூன்று புனித மரங்கள் — ஆல், அரசு, அத்தி– ஆகிய மூன்றும் விஷ்ணுவின் பெயர்களாக சஹஸ்ரநாமத்தில் வருகின்றன. பெரிய அற்புதம் என்னவென்றால் மூன்றும் FICUS பைகஸ் வகை மரங்கள் என்றும் அவை மூன்றும் மோரேஸி (Moraceae)  என்னும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை என்றும் இன்றைய தாவரவியல் நூல்கள் இயம்பும். இதைப் பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னரே கண்டுபிடித்த இந்துக்கள் அவைகளை தெய்வப்  பட்டியலில் சேர்த்துவிட்டனர். அதர்வ வேதத்திலேயே அத்தி மரத்தின் (உடும்பர) அற்புத சக்திகள் வருணிக்கப்படுகின்றன.

ஐதரேய பிராஹ்மணம் செப்புவதாவது:

 

உடும்பர மரத்தைக் கொண்டு  ஒன்பது அங்குல உயரத்துக்கு ஒரு ஆசனம் செய்ய வேண்டும்; அதற்கு நான்கு கால்கள் இருக்க வேண்டும் . அதன் மீது பல பலகைகள் அடுக்கப்படும். மூன்று புறமும் பலகைகள் அடிக்கப்படும் ஆசனத்தின் பல பகுதிகள் புனித மூஞ்சைப் புல்லினால் கட்டப்படும்; அதில் புலியின் தலைப் பகுதி கிழக்கு நோக்கிய வண்ணம் புலித்தோல் வைக்கப்படும்; அதில் மன்னன் மண்டியிட்டு ஏறுவார. அப்போது கடவுளரையும் அந்த ஆசனத்தில் ஏறும் படி பிரார்த்திப்பார்.

 

பின்னர் மன்னர் மீது தங்க சல்லடை வழியாக அபிஷேக நீர் ஊற்றப்படும்; இந்த நீர் புனித நீர் நிலைகளில் இருந்தும் நாற்கடல்களில் இருந்தும் கொணரப்படும்; மந்திர உரு ஏற்றப்பட்ட தண்ணீரை மன்னர் தலையில் அபிஷேகம் செய்வர். மன்னருக்கு மேலும் கீழும் தங்கத்தகடு வைக்கப்படும், இந்த தங்கத் தகடு அவருக்கு அழியாத் தன்மையை அளிக்கும் என்று மந்திரங்கள் சொல்லுகின்றன.

 

சிந்து சமவெளி- வேதகால நாகரீகம்

மன்னரின் தலை மீது உடும்பர மரக்கிளை வைக்கப்படும்; அது ஒரு தங்க வட்டத்தில் பொருத்தப்படும். சிந்து சமவெளி முத்திரைகளில் இப்படிக் கடவுளர்/ மன்னர் தலையில் கிளையைப் பார்க்கலாம்.

 

மன்னரின் ராஜ சூய யக்ஜம் என்பது அவர் முடிசூட்டப்பட்ட காலத்தில் நடத்தப்பட்ட சடங்குகள் அனைத்தையும் மீண்டும் செய்வதாகும். சோழ மன்னன் பெருநற்கிள்ளியும் ராஜ சூய யாகம் செய்தான்; அதற்கு சேர- பாண்டிய மன்னர்கள் வந்தனர். மூவேந்தரும் அமர்ந்த அரிய காட்சியைக் கண்ட அவ்வையார் அசந்தே போனார். ஆயிரக் கணக்கான ஆண்டுகளாகச் சண்டைபோட்டே அழியும் தமிழ் மன்னர் மூவரும் அமர்ந்த காட்சியைக் கண்டு இன்று போல் என்றும் வாழ்க என்று பாடியது புறநானூற்றில் உளது.

 

யுதிஷ்டிரன் என்னும் தர்மர் செய்த ராஜசூயம் மஹாபாரதத்தில் மிகவும் விரிவாகக் காணப்படுகிறது. அப்போது பிற நாட்டு மன்னர்கள் வந்து பரிசுப் பொருள்களைக் குவிப்பர். இதன் பொருள் என்ன வென்றால் அந்த மன்னரின் இறையாண்மையை தாங்கள் ஏற்றுக் கொள்வதாகச் சொல்லுவதாகும்.

 

இந்த ராஜசூய யாகத்தில் முக்கியச் சடங்கு வேள்வியாகும். அதில் சோம பானம் பருகுதலும் உண்டு; சோமபானம் என்பது காப்பி போல, ஹெர்பல் டீ/ மூலிகை தேநீர் போல உற்சாகம் தரும் ஒரு மூலிகை பானம்; சுரா பானம் என்பது சாராயம். அது பற்றியும் வேதத்தில் உளது. சோமபானத்தைப் புகழும் வேதங்கள் சுரா பானத்தைக் கண்டிக்கின்றன.

 

மன்னரின் பட்டாபிஷேகத்தைக் காண பல நாட்டு மன்னர்களும் ரிஷி முனிவர்களும் பொது மக்களும் அலைகடல் எனத் திரளுவதால் பிரம்மாண்டமான பந்தல்கள் எழுப்பப்படும். அதுவும் வேள்விக்கூடமும், யாகம் முடிந்தவுடன் எரித்து அழிக்கப்படும்

 

ராஜசூய யாகத்தில் சுனஸ்சேபன் கதை வாசிக்கப்படும். சுனஸ்சேபன் என்பவன் புருஷமேதம் என்ப்படும் நரபலி யாகம் போல பலி கொடுக்கக் கட்டப்பட்டவன் அவனை விஸ்வாமித்ரர் மீட்ட கதையை ஒவ்வொரு சடங்கிலும் படிக்க வேண்டும் என்று வேதம் கட்டாயப்படுத்துகிறது; .ஆனால் மனிதனோ மிருகங்களோ பலியிடப்படாமல் விடுவிக்கப்பட்டதாகவும் வேதமே விளம்பும்; ஆகவே பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த வழக்கத்தை நினைவுபடுத்த மட்டுமே இச்சடங்குகள்- உண்மைப் பலி அல்ல என்பதும் தெளிவாகிறது.

 

பெண்கள் பார்வை

ராமாயணத்தில் முதலில் பட்டாபிஷேக ஆயத்தக் காட்சிகளும் கடைசி காண்டத்தில் உண்மையில் நடந்த ராமர் பட்டாபிஷேகக் காட்சிகளும் வருணிக்கப்படுகின்றன. மஹாபரதத்தில் யுதிஷ்டிரனின் பட்டாபிஷேகக் காட்சிகள் உள. அவனுக்குக் கிடைத்த நீண்ட பரிசுப் பட்டியலையும் காணலாம்

 

மனைவி இல்லாமல் ஒரு இந்து, எந்த வேதச் சடங்கையோ பூஜையையோ செய்ய முடியாது; பெண்களுக்கு அவ்வளவு முக்கியம் கொடுக்கும் மதம் இந்து மதம்; ராம பட்டாபிஷேகத்தில் வசிட்ட முனிவன் ராமனையும் சீதையையும் ஆசனத்தில் அமர்த்திய காட்சியை வால்மீகி பாடுகிறார்.

பட்டாபிஷேகத்துக்கு அருகில் வரமுடியாத பெண்கள் மாடிப் பலகணியின் வழியாகக் கண்டதை ராமாயணம் முதலியன காட்டும். சூழ்ச்சிமிக்க மந்தரை அதை மாடியில் இருந்து பார்த்தவுடன் சூழ்ச்சியில் இறங்கியதாக ராமாயணம் சொல்லும். சங்கத் தமிழ் இலக்கியத்திலும் ஏழு மாடி கட்டிடம் பற்றிய குறிப்புகள் வருகின்றன.

 

ஆக தங்கம், புலித்தோல், புனித நீர் அபிஷேகம், உடும்பர மர ஆசனம், ரிஷி முனிவர், அயல் மன்னர்கள் வருகை, மக்களின் பெருங்கூட்டம், பெண்களின் ஜன்னல் வழிப்பார்வை பற்றிய சுவையான செய்திகளை சம்ஸ்க்ருத நூல்கள் சுவைபட  உரைக்கின்றன.

 

–சுபம்-

 

ஆரோக்கிய மேம்பாட்டிற்கான மந்திரங்கள்! (Post No.4934)

WRITTEN by S NAGARAJAN

 

Date: 21 April 2018

 

Time uploaded in London –  7-29  AM  (British Summer Time)

 

Post No. 4934

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

திருநெல்வேலியிலிருந்து மாதந்தோறும் வெளிவரும் ஹெல்த்கேர் பத்திரிகையில் ஏப்ரல் 2018 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

 

லலிதா சஹஸ்ரநாமத்தில் ஆரோக்கிய மேம்பாட்டிற்கான மந்திரங்கள்!

 

.நாகராஜன்

 

1

நம்முடைய நுல்கள் எல்லாம் உலகினரின் ஒட்டு மொத்த நன்மைக்காக எழுதப்பட்டிருப்பது ஹிந்துத்வத்தின் தனிச் சிறப்பாகும். எந்த சாஸ்திரத்தை எடுத்துக் கொண்டாலும் அந்த சாஸ்திரத்தின் ஆரம்பத்தில் ம்ங்களாசாஸன ஸ்லோகம் ஒன்று இருக்கும். அது அனைவருக்கும் பொதுவானதாக அமைந்திருக்கும்.

வாக்படர் எழுதிய அஷ்டாங்க ஹிருதயம் என்னும் நூலில் உள்ள் மங்களாசாஸன ஸ்லோகம் ராகாதி ரோகான்’ என்று ஆரம்பிக்கிறது.

ஆசை முதலிய ரோகங்கள் சதாகாலமும் சரீரமெங்கும் வியாபித்துள்ள்ன. விஷய விருப்பம்,, அறிவின்மை, ஆறுதலற்ற நிலை ஆகிய விசாரங்களை உண்டு பண்ணுகின்றன.

இத்தையகையவற்றை எந்த ஒரு அபூர்வ வைத்தியர் அடியோடு அழிக்கின்றாரோ அவரை வணங்குவேனாக!

(அந்த வைத்தியரது  குணங்கள் ந்மக்கும் வரும் படி பிரார்த்திப்போம்)

 

இதே போல் சரக சம்ஹிதையில் ஆரம்ப ஸ்லோகங்கள் பாரத்வாஜ ரிஷியிடமிருந்து தோன்றிய அற்புத உண்மைகள் அக்னிவேசர் வாயிலாக மனித குல நன்மைக்காகத் தரப்படுவதைச் சுட்டிக் காட்டுகின்றன.

 

2

லலிதா சஹஸ்ரநாமத்தில் பல நாமாக்கள் ஆகாரத்தைப் பற்றிக் காணப்படுகின்றன.

  • புஷ்டி (444வது நாமம்) தேகத்திற்குப் புஷ்டி தருவன
  • ருதிர ஸம்ஸ்திதா (420வது நாமம்) ரக்த தாதுவில் உறைபவள்.
  • ஸ்நிக்தௌன ப்ரியா (492வது நாமம்) தைலம், கிருதம், வாஸா, மஜ்ஜா இவை க்லந்த அன்னத்தில் பிரியமானவள்
  • மாம்ஸ நிஷ்டா ( 500வது நாமம்) மாம்ஸ தாதுவில் இருப்பவள்.
  • மேதா நிஷ்டா (507வது நாமம்) மேதா தாதுவில் இருப்பவள்
  • மதுப்ரீதா (510வது நாமம்) மதுவில் பிரியம் கொண்டவள்
  • த்த்யன்னாஸக்த ஹ்ருதய: (512வது நாமம்) தயிர்சாதத்தில் பிரியமானவள்.
  • அஸ்திஸம்ஸ்திதா (516வது நாமம்) அஸ்தி தாதுவில் இருப்பவள்
  • முத்கௌதனா ஸக்தசித்தா (517வது நாமம்) அரிசி, புயத்தம் பருப்பு, வெல்லம், தேங்காய், சீரகம், நெய், பால், முதலியவை சேர்த்துச் சமைத்த முக்தாச அன்னத்தில் மனம் கொண்டவள்.
  • மஜ்ஜா ஸம்ஸ்தா ( 524வது நாமம்) மஜ்ஜா தாதுவில் இருப்பவள்.
  • ஹரித்ரான்னைகரஸிகா (526வது நாமம்) மஞ்சள் பொங்கலை ரஸிப்பவள்
  • சுக்ல ஸம்ஸ்திதா ( 531வது நாமம்) சுக்ல தாதுவில் இருப்பவள்.
  • ஸர்வௌ தன ப்ரீத ஸித்தா ( 533வது நாமம்) எல்லா அன்ன வகைகளிலும் விருப்பமுடையவள்.
  • தாம்பூல பூரித முகி ( 557வது நாமம்) தாம்பூலம் நிறைந்த வாயினள்.
  • அன்னதா (667வது நாமம்) அன்னத்தை அளிப்பவள்
  • ம்ஹாக்ராஸா ( 752வது நாமம்) பெருங் கவளம் கொள்பவள்

17)  மஹாசனா ( 753வது நாமம்) பெருந்தீனி உள்ளவள்

 18) த்ன தான்ய விவர்த்தனீ (886வது நாமம்) தனத்தையும் தான்யத்தையும் விருத்தி செய்பவள்.

 

4

தேவதைகளுக்கு நிவேதனம் செய்யும் போது வெற்றிலை, பாக்கு, தேங்காய், பழம் ஆகியவற்றுடன் அந்த தேவதைக்கு உரிய பிரியப்பட்ட தனிப்பட்ட வஸ்துக்களையும் படைப்பதால் நமது உடலில் புஷ்டி ஏற்படும்.

இதர ஆரோக்கிய நலங்கள் அனைத்தும் தோன்றும்.

தொன்று தொட்டு லலிதா ஸஹஸ்ர நாமத்தை இல்லந்தோறும் வெள்ளிக்கிழமைகள், பௌர்ணமியில் ( சிலர் அன்றாடம்)  சொல்லி வருவது மரபாக இருந்து வருகிறது.

இதனால் சகல சௌபாக்கியங்களையும் காலம் காலமாக ஹிந்து குடும்பங்கள் அடைந்து வருவது கண்கூடு.

இதோ போல விஷ்ணு சஹஸ்ர நாமத்திலும் ஆரோக்கியத்திற்கு அடிப்படையான ஏராளமான நாமங்கள் உள்ளன. அன்றாடம் ஒதும் போது அடிப்படையான ஆரோக்கியத்தையும், தீர்க்க ஆயுளையும் இது தருவது அனுபவத்தால் உணரப்படும் ஒன்று!

ஓதுவோம்; உய்ர்வோம்.

*****

 

 

குரானில் உள்ள எழுத்துக்கள் 323015 அல்லது 330113! (Post No.4919)

WRITTEN by S NAGARAJAN

 

Date: 16 April 2018

 

Time uploaded in London –  8-07 AM  (British Summer Time)

 

Post No. 4919

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

குரான் சிறப்பு

 

குரானில் உள்ள எழுத்துக்கள் 323015 அல்லது 330113!

 

ச.நாகராஜன்

 

இஸ்லாமியர்களுக்கு புனிதமான நூல் திருமறையான குரான். அதன் சிறப்பை முற்றிலுமாகச் சொல்ல முடியாது என்பதே இஸ்லாமிய அறிஞர்களின் ஏகோபித்த முடிவு.

 

சர் இ.ஏ.வாலிஸ் பட்ஜ் (Sir E.A.Wallis Budge, Kr) என்னும் அறிஞர் கேம்பிரிட்ஜில் பணியாற்றிய அறிஞர்.

அவர் குரானைப் பற்றித் தொகுத்துத் தரும் உண்மைகள் அதன் சிறப்பை விளக்குவனவாக அமைகின்றன.

அவரது ஆங்கில மூலத்தை இணைப்பாகத் தருகிறோம். அவர் கூறியுள்ளவற்றில் சில முக்கிய கருத்துக்கள் தமிழில் இதோ:

நன்கு கற்றறிந்த இஸ்லாமியர்கள் குரான் சுவர்க்கத்தில் எப்போதும் உள்ள ஒரு நூல் என்றும் அதுவே எல்லா நூல்களுக்கும் தாய் என்றும் கூறுகின்றனர்.

அது படைத்த கடவுளின் எஸன்ஸ் எனப்படும் சாரத்தில் ஒரு பகுதி.

இதனுடைய ஒரு பிரதி பேப்பரில் சுவர்க்கத்தில் உள்ளது. பட்டுத் துணியினால் பைண்ட் செய்யப்பட்டு தங்கம் மற்றும் இதர சுவர்க்கத்தில் உள்ள விலைமதிப்பரிய மணிகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது.

இது ஆர்ச் ஏஞ்சல் காப்ரியலின் (Prophet Archangel Gabriel) பாதுகாப்பில் உள்ளது. இதை ப்ராபெட் பீஸ்மீலுக்கு (Prophet Piecemeal) அவர் தெரிவித்தார். வருடத்திற்கு ஒரு முறை அவர் முழு நூலையும் பார்க்க அவருக்கு அனுமதி உண்டு.

குரான் 114 பகுதிகளைக் கொண்டது.

ஒவ்வொரு பகுதியும் சுரா (Surah) என அழைக்கப்படுகிறது.

சில மக்காவில் வெளிப்படுத்தப்பட்டன.

சில மக்காவில் பகுதியாகவும் மதினாவில் பகுதியாகவும் வெளிப்படுத்தப்பட்டன.

குரானில் உள்ள மொத்த செய்யுள்களின் எண்ணிக்கை 6000 அல்லது 6214 அல்லது 6219 அல்லது 6225 அல்லது 6226 அல்லது 6236.

அதில் உள்ள வார்த்தைகளின் எண்ணிக்கை 77639 அல்லது 99464.

அதில் உள்ள எழுத்துக்களின் எண்ணிக்கை 323015 அல்லது 330115.

ஒவ்வொரு பகுதியும் In the Name of Allah , the Merciful, The Compassionate

கருணை வாய்ந்த, இரக்கமுள்ள அல்லாவின் பெயரால் – என்று ஆரம்பிக்கப்படுகிறது.

அராபியர்கள் எல்லா அறிவும் எல்லா ஞானமும் குரானிலிருந்தே வருகின்றன என்று நம்புகின்றனர்.

உலகில் அதில் உள்ள மொழியே சுத்தமான அராபிய மொழி, அது அழகிய மொழி, அதன் வார்த்தைத் திறன் எதனுடன் ஒப்பிட முடியாத ஒன்று என்று அவர்கள் கருதுகின்றனர்.

அதை மிகவும் பாதுகாப்பாக அராபியர்கள் பாதுகாத்து வந்தார்கள் என்றாலும் கூட சில சிறிய மாற்றங்கள் அதில் உள்ளன.

இது எதனால் என்றால் ஏழு தனித்தனியான பேச்சு வழக்கு மொழிகளில் அது தீர்க்கதரிசிக்கு வெளிப்படுத்தப்பட்டதால் தான் என்று காரணம் கூறப்படுகிறது.

ஒரு காலத்தில் எந்தப் பெண்களும் அதன் பிரதியை வைத்திருக்க அனுமதி இல்லாமல் இருந்தது. ஒரு ஆண் இறந்து விட்டால அவனுடன் அவன் வைத்திருந்த குரானும் புதைக்கப்பட்டது.

ஆனால் நான் பெர்ஸியன் எல்லையில் டியாரோ மாவட்டத்தில் இருந்தபோது  மண்ணுடன் கூடிய லினனால் சுற்றப்பட்டு சற்று ஈரமாகவும் இருந்த பல பிரதிகளை வாங்கினேன்.

பசியினால் வாடும் விதவைகள் தங்கள் கணவன்மாரின் கல்லறைகளைத் தோண்டி அதிலிருந்த குரான் பிரதிகளை அதை வாங்க முன்வருவோரிடம் விற்றனர்.

அராபியர்கள் குரான் முழுவதையும் ஒரு சக்தி வாய்ந்த தாயத்தாகக் கருதுகின்றனர்.

அதில்லாமல் பலர் வெளியூர் பயணம் மேற்கொள்வதில்லை.

சமீப வருடங்களில் அதன் சிறிய அளவு பிரதிகள் போட்டோ லிதோகிராபி மூலம் எடுக்கப்பட்டு ஒரு சிறிய உலோகப் பெட்டியில் வைக்கப்பட்டு மோதிரம், நெக்லேஸ் ஆகியவை இணைக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டு தயாரிக்கப்படுகின்றன.

அதன் ஒரு புறம் சிறிய பூதக்கண்ணாடியாகப் பயன்படும் லென்ஸ்களும் வைக்கப்பட்டுள்ளன.

முழு நூலும் ஒரு அங்குலம் உயரம் முக்கால் அங்குல அகலம் 7/16 அளவு கனமும் கொண்டதாக உள்ளது!

பயணிகள் கூடாரம் அடித்து தங்கும் போது இரவில் தங்களுக்கு விருப்பமான அத்தியாயங்களைப் படிக்கலாம்.

அதன் ஒரு போட்டோவை படத்தில் காணலாம்.

 

 

(இது 1930ஆம் ஆண்டு எழுதப்பட்டது)

***