குரானில் உள்ள எழுத்துக்கள் 323015 அல்லது 330113! (Post No.4919)

WRITTEN by S NAGARAJAN

 

Date: 16 April 2018

 

Time uploaded in London –  8-07 AM  (British Summer Time)

 

Post No. 4919

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

குரான் சிறப்பு

 

குரானில் உள்ள எழுத்துக்கள் 323015 அல்லது 330113!

 

ச.நாகராஜன்

 

இஸ்லாமியர்களுக்கு புனிதமான நூல் திருமறையான குரான். அதன் சிறப்பை முற்றிலுமாகச் சொல்ல முடியாது என்பதே இஸ்லாமிய அறிஞர்களின் ஏகோபித்த முடிவு.

 

சர் இ.ஏ.வாலிஸ் பட்ஜ் (Sir E.A.Wallis Budge, Kr) என்னும் அறிஞர் கேம்பிரிட்ஜில் பணியாற்றிய அறிஞர்.

அவர் குரானைப் பற்றித் தொகுத்துத் தரும் உண்மைகள் அதன் சிறப்பை விளக்குவனவாக அமைகின்றன.

அவரது ஆங்கில மூலத்தை இணைப்பாகத் தருகிறோம். அவர் கூறியுள்ளவற்றில் சில முக்கிய கருத்துக்கள் தமிழில் இதோ:

நன்கு கற்றறிந்த இஸ்லாமியர்கள் குரான் சுவர்க்கத்தில் எப்போதும் உள்ள ஒரு நூல் என்றும் அதுவே எல்லா நூல்களுக்கும் தாய் என்றும் கூறுகின்றனர்.

அது படைத்த கடவுளின் எஸன்ஸ் எனப்படும் சாரத்தில் ஒரு பகுதி.

இதனுடைய ஒரு பிரதி பேப்பரில் சுவர்க்கத்தில் உள்ளது. பட்டுத் துணியினால் பைண்ட் செய்யப்பட்டு தங்கம் மற்றும் இதர சுவர்க்கத்தில் உள்ள விலைமதிப்பரிய மணிகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது.

இது ஆர்ச் ஏஞ்சல் காப்ரியலின் (Prophet Archangel Gabriel) பாதுகாப்பில் உள்ளது. இதை ப்ராபெட் பீஸ்மீலுக்கு (Prophet Piecemeal) அவர் தெரிவித்தார். வருடத்திற்கு ஒரு முறை அவர் முழு நூலையும் பார்க்க அவருக்கு அனுமதி உண்டு.

குரான் 114 பகுதிகளைக் கொண்டது.

ஒவ்வொரு பகுதியும் சுரா (Surah) என அழைக்கப்படுகிறது.

சில மக்காவில் வெளிப்படுத்தப்பட்டன.

சில மக்காவில் பகுதியாகவும் மதினாவில் பகுதியாகவும் வெளிப்படுத்தப்பட்டன.

குரானில் உள்ள மொத்த செய்யுள்களின் எண்ணிக்கை 6000 அல்லது 6214 அல்லது 6219 அல்லது 6225 அல்லது 6226 அல்லது 6236.

அதில் உள்ள வார்த்தைகளின் எண்ணிக்கை 77639 அல்லது 99464.

அதில் உள்ள எழுத்துக்களின் எண்ணிக்கை 323015 அல்லது 330115.

ஒவ்வொரு பகுதியும் In the Name of Allah , the Merciful, The Compassionate

கருணை வாய்ந்த, இரக்கமுள்ள அல்லாவின் பெயரால் – என்று ஆரம்பிக்கப்படுகிறது.

அராபியர்கள் எல்லா அறிவும் எல்லா ஞானமும் குரானிலிருந்தே வருகின்றன என்று நம்புகின்றனர்.

உலகில் அதில் உள்ள மொழியே சுத்தமான அராபிய மொழி, அது அழகிய மொழி, அதன் வார்த்தைத் திறன் எதனுடன் ஒப்பிட முடியாத ஒன்று என்று அவர்கள் கருதுகின்றனர்.

அதை மிகவும் பாதுகாப்பாக அராபியர்கள் பாதுகாத்து வந்தார்கள் என்றாலும் கூட சில சிறிய மாற்றங்கள் அதில் உள்ளன.

இது எதனால் என்றால் ஏழு தனித்தனியான பேச்சு வழக்கு மொழிகளில் அது தீர்க்கதரிசிக்கு வெளிப்படுத்தப்பட்டதால் தான் என்று காரணம் கூறப்படுகிறது.

ஒரு காலத்தில் எந்தப் பெண்களும் அதன் பிரதியை வைத்திருக்க அனுமதி இல்லாமல் இருந்தது. ஒரு ஆண் இறந்து விட்டால அவனுடன் அவன் வைத்திருந்த குரானும் புதைக்கப்பட்டது.

ஆனால் நான் பெர்ஸியன் எல்லையில் டியாரோ மாவட்டத்தில் இருந்தபோது  மண்ணுடன் கூடிய லினனால் சுற்றப்பட்டு சற்று ஈரமாகவும் இருந்த பல பிரதிகளை வாங்கினேன்.

பசியினால் வாடும் விதவைகள் தங்கள் கணவன்மாரின் கல்லறைகளைத் தோண்டி அதிலிருந்த குரான் பிரதிகளை அதை வாங்க முன்வருவோரிடம் விற்றனர்.

அராபியர்கள் குரான் முழுவதையும் ஒரு சக்தி வாய்ந்த தாயத்தாகக் கருதுகின்றனர்.

அதில்லாமல் பலர் வெளியூர் பயணம் மேற்கொள்வதில்லை.

சமீப வருடங்களில் அதன் சிறிய அளவு பிரதிகள் போட்டோ லிதோகிராபி மூலம் எடுக்கப்பட்டு ஒரு சிறிய உலோகப் பெட்டியில் வைக்கப்பட்டு மோதிரம், நெக்லேஸ் ஆகியவை இணைக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டு தயாரிக்கப்படுகின்றன.

அதன் ஒரு புறம் சிறிய பூதக்கண்ணாடியாகப் பயன்படும் லென்ஸ்களும் வைக்கப்பட்டுள்ளன.

முழு நூலும் ஒரு அங்குலம் உயரம் முக்கால் அங்குல அகலம் 7/16 அளவு கனமும் கொண்டதாக உள்ளது!

பயணிகள் கூடாரம் அடித்து தங்கும் போது இரவில் தங்களுக்கு விருப்பமான அத்தியாயங்களைப் படிக்கலாம்.

அதன் ஒரு போட்டோவை படத்தில் காணலாம்.

 

 

(இது 1930ஆம் ஆண்டு எழுதப்பட்டது)

***