உலகம் முழுதும் உமா தேவி வழிபாடு! (Post No.3711)

Written by London swaminathan

 

Date: 10 March 2017

 

Time uploaded in London:- 10-22 am

 

Post No. 3711

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

(Source:- Vedic and Indo-European Studies by Nicholas Kazanas, Aditya Prakashan, New Delhi, year 2015)

 

இந்துக்கள் 8000 ஆண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பாவுக்குள் குடியேறியது, ரிக்வேதத்தின் காலம் கி.மு.3500, பத்தாம் பசலி ஆரிய-திராவிடக் கொள்கையின் மறைவு ஆகியன குறித்து கிரேக்க நாட்டு அறிஞர் நிகலஸ் கஜானா எழுதிய பல வியப்பான விஷயங்களை நேற்று தந்தேன். இன்று அவரது புத்தகத்திலுள்ள மேலும் சில அதிசய விஷயங்களை சுருக்கி வரைவேன்.

 

 

 

உமாதேவி வழிபாடும், துர்ர்கா தேவி வழிபாடும் உலகம் முழுதும் இருந்தது என்பதை சக்தி வழிபாடு என்ற தலைப்பில் கே.க்ளோஸ்டர்மெய்ர் (K.Klostermaier) எழுதியிருப்பதைப் புத்தகத்தில் தந்துள்ளார்;

 

 

மத்தியதரைக் கடலைச் சுற்றியுள்ள நாடுகளில் 6000 ஆண்டுகளுக்கு முன்பு (கி.மு.4000) ,பெருமளவுக்கு தாய் தெய்வ (Mother Goddess) வழிபாடு இருந்தது. சிந்து சமவெளி நாகரீகத்திலும் தாய் தெய்வ வழிபாடு இருந்ததை அங்கு கிடைத்த சுட்ட களிமண் (terra cotta) வடிவ உருவங்கள் காட்டுகின்றன. நிர்வாணமான ஒரு பெண்ணின் மர்மஸ்தானத்திருந்து ஒரு செடி வெளியே வரும் உருவம் சிந்துவெளியில் கிடைத்துள்ளது– அதன் பின்புறத்தில் ஒரு ஆண் அரிவாளைக் கையில் ஓங்கிய காட்சியுடன் காட்சி தருகிறான். இது, பூமாதேவிக்கு  நரபலி கொடுக்கும் காட்சி ஆகும்.

 

மத்தியதரைக் கடல் நாடுகள் — சிந்து சமவெளி நாகரீக தாய் வழிபாடு தொடர்பு வேறு சில விஷயங்களிலும் உறுதியாகிறது. இந்துக்கள் உமா தேவியை, மலைமகள் (பர்வத= பார்வதி) என்றும் சிம்ம வாஹினி என்றும் வருணிப்பர். பாபிலோனியாவி,,,,ம் உம்மு, உம்மா (ummu, Umma) என்ற தெய்வமும்,

 

ஆர்கேடிய (கிரீஸின் பகுதி) உம்மி (Ummi)    தெய்வமும், சிதியன் (காஸ்பியன், கருங்கடல் பகுதி= ரஷ்யா) உம்மோ (Ommo) தெய்வமும் உமா தேவி வழிபாடே.

இதே போல துர்கா தேவியை ஆசியாமைனரில் (துருக்கி) (Truqas) ற்றுகாஸ் என்று லிடியன் (Lydian Inscriptions)  கல்வெட்டுகளில் குறிப்பிடுகின்றனர். சில இடங்களில் அவளுக்கு ஒரு மகன் பிறந்ததும் காட்டப்படுகிறது. இதை நியுமன் (Neumann) என்பவர் எழுதியுள்ளார். அதை க்ளோஸ்டர் மெய்ர் குறிப்பிட்டுள்ளார். அதை நிகலஸ் தனது புத்தகத்தில் எழுதி பல தெய்வ வழிபாடு உலகெங்கிலும் இருந்தது என்பார். மேலும் ஆண்   தெய்வம்தான் முதலில் உலகில் இருந்த்து என்பது தவறு என்றும் சொல்லுகிறார்

 

 

கஜானாஸ் மேலும் கூறுவதாவது:–

வேத கால தெய்வமான அக்னி,  (Hittite) ஹிட்டைக் கலாசாரத்தில் அக்னிஸ் Agnis என்றும் ஸ்லாவிக் பண்பாட்டில் Oghen அகன் என்றும் லத்தீன் மொழி பகுதிகளில் Ignis இக்னிஸ் என்றும் லிதுவேனியா நாட்டில் Ugnis உக்னிஸ் என்றும் வழங்கியது

 

(இக்னைட் IGNITE = தீ உண்டாக்கு என்பது இன்றும் ஆங்கிலத்தில் உள்ளது)

 

மழை/புயல் தெய்வமான பர்ஜன்ய (Parjanya) ஸ்லாஇயவில் Perunju பருண்ணு என்றும் பால்டிக் நாடுகளில் பெர்குனஸ் Perkunas என்றும் ஜெர்மானிய மொழிகளில் ப்யீர்ஜின் Fjorgyn என்றும் வழங்குகிறது

 

உதய தெய்வமான உஷஸ் ( Ushas) உஷா  கிரேக்க மொழியில் ஈயோஸ் (Eos) என்றும் லத்தீன் மூல மொழிகளில் ஓஷோரா (Ausrora) என்றும் ஜெர்மானிய மொழிகளில் இயச் த்ரே(Eos-tre)  என்றும் வழங்குகிறது.

த்யௌஸ் பிதா (Dyaus) என்னும் வேத கால வானம்/ஆகாயம் (Sky God) தொடர்பான கடவுள் ஹிட்டைட் பண்பாட்டில்  ட்- சியு-ஸ் (D-siu-s) என்றும் கிரேக்க மொழி யில் ஸ்யூஸ் (Zeus) என்றும் லதீனில் ய்யுஸ்பிடர் (ஜூபிடர்) ( Ju-s- piter )என்றும் ஜெர்மானிய மொழிகளில் டீவஸ் என்றும் மாறுகிறது

(வருணன்’ உரேனஸ், இந்திரன் முதலிய தெய்வங்களை எல்லோரும் பிரஸ்தாபித்து இருப்பதால் தான் “அரைத்த மாவையே அரைக்க”  விரும்ப வில்லை என்று நூலின் ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டார்)

மேலு ரிக் வேதத்தில்தான் ஒரே கடவுள் கொள்கை தோன்றியது என்று கருதிவிடக்கூடது என்றும் நிகலஸ் வாதாடுகிறார். ரிக் வேதம் கி.மு 3500-க்கு முன் தோன்றியபோதும் அதற்குப் பின் வந்த பாபிலோனிய, எகிப்திய தெய்வங்களிலும் இதைக் காணமுடிகிறது என்கிறார்.

ரிக் வேதத்தில் உள்ள “ஏகம் சத் விப்ராஹா பஹூதா வதந்தி” என்ற மந்திரம் உலக அறிஞர்களால் அடிக்கடி மேற்கோள் காட்டப்படுகிறது

 

“உண்மை ஒன்றே; அதை அறிஞர்கள் பலவாறு அழைப்பர்” என்பது இதன் பொருள். இந்த  ஒரே கடவுள்  கருத்து பிற்காலத்தில் யூதர்களாலும், கிறிஸ்தவர்களாலும் முஸ்லீம்களாலும் பரப்பப்பட்டது.

 

எகிப்தில் கூட அதம் ( ATUM முழுமையான) அல்லது நன் ( NUN ஆதிகால நீர்) என்பதிலிருந்தே எல்லா தெய்வங்களும் உண்டானதாக பிரமிடுகளின் சுவர்களில் எழுதப்பட்டுள்ளது.

 

(Atum = Sat=Satyam; Nun= Narayana)

 

யூதர்கள், கிறிஸ்தவர்களின் பைபிள் பழைய ஏற்பாட்டிலும் கடவுளைப் பன்மையில் (Plural; Elohim) பேசிவிட்டு பால் (Baal) என்ற தெய்வங்களை எல்லாம் பேசிவிட்டுப் பின்னர்தான் யஹோவா என்ற ஒரு தெய்வம் வருகி றது( Psalms 81, 82)

 

வேதத்தில் உள்ளது போல பிரம்மன் (ஆண் அல்லன், பெண் அல்ல, அலியுமல்லன்— தேவாரம்) பால் வேறுபாடற்ற “தத் ஏகம்” (அந்த ஒன்று) முன்னர் மேலை நாடுகளிலும் இருந்துள்ளது.

 

(இது பற்றி நிகலஸ் விரிவாக எழுதியுள்ளதை மிகச் சுருக்கமாகக் குறிப்பிட்டுள்ளேன். நூலை முழுதும் படித்தால் மேலும் பல விஷயங்கள் தெரியும்)

 

400 சொற்கள் ஆராய்ச்சி

நிகலஸின் புத்தகத்தில் இரண்டாவது அத்தியாயம் 400 சொற்கள் ஆராய்ச்சி பற்றிய சுவையான (coherence and preservation in Sanskrit) ஆராய்ச்சியாகும். சம்ஸ்கிருதத்துக்கு மூல மொழி (PIE= Proto Indo European) ஒன்று இருந்ததாகவும் அந்த இந்தோ-ஐரோப்பிய (I.E) குடும்பத்திலிருந்து கிரேக்க, ஜெர்மானிய, லத்தீனீய, அவஸ்தன், டொசாரியன் (Tocharian) மொழிகள் எல்லாம் கிளைத்தன என்றும் பத்தாம்பசலி “அறிஞர்கள்” எழுதுவதுண்டு. நிகலஸ்,இவற்றையெல்லாம் தூக்கிக் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு புதிய அணுகுமுறையைப் பின்பற்ற வேண்டும் என்கிறார். அவர் இந்திய ஐரோப்பிய (Indo- European) மொழிக் குடும்பத்திற்குப் பொதுவான 400 சொற்களை ஒப்பிட்டு ஆராய்ந்தார். இதில் வினைச் சொற்கள், பெயர்சொற்கள் (Verbs and Nouns) இரண்டையும் ஆராய்ந்தார். குணங்கள், செயல்பாடுகள், உணர்வுகள் (அன்பு, கோபம்), உடல் உறுப்புகள் (கை, கால்) உணவுப் பொ ருட்கள்  முதலிய பலவகைச் சொற்களை தேர்வு செய்தார்.

 

மூலச்சொற்களில் இருந்து, ஆனால் சம்ஸ்கிருதத்தில் காணப்படாத சொற்கள் 53 மட்டும்தான்; மற்ற எல்லாம் சம்ஸ்கிருதத்தில் உள்ளன!

ஜெர்மானிய மொழிகளில் (ஜெர்மன், ஆங்கிலம்) 145 சொற்களைக் காணோம்!

கிரேக்கத்தில் 149 சொற்களைக் காணோம்!

 

பால்டிக் மொழிகளில் 185 சொற்களைக் காணோம்!

 

லதீனில் (போர்ச்சுகீஸ், ஸ்பானிஷ், பிரெஞ்சு, இதாலிய மொழிகளின் தாய்) 207 சொற்களைக் காணோம்!

 

கெல்திக் (CELTIC) (ஐரிஷ்) க்கில் 210 சொற்களைக் காணோம்!

 

ஸ்லாவிய மொழிகளில் 215 சொற்களைக் காணோம்!

 

இதிலிருந்து என்ன தெரிகிறதென்றால் சம்ஸ்கிருதம்தான் இந்திய ஐரோப்பிய மொழிக் குடும்பத்தில் மிகப் பழைய மொழி, தூய்மையை அப்படியே பராமரித்துப் பாதுகாக்கும் மொழி!!

 

மேலே குறிப்பிட்ட மொழிகளில், “மூலமே இல்லாத அனாதைச் சொற்கள்” அதிகம் காணப்படுகின்றன. ஆனால் சம்ஸ்கிருதத்திலோ அதற்கான வேர்ச் சொல்லை, மூலத்தை, தாதுவை எளிதில் காணமுடிகிறது. அற்புதமான ஒருமை- இணைப்பு- தொடர்ச்சி (organic coherence) உளது.

இதன் மூலம் நாம் அறிவது யாதெனில் மூல இந்திய ஐரோப்பிய தாய்மொழிக்கு மிக அருகிலுள்ளது சம்ஸ்கிருதம், மிகப் பழமையானது (Most archaic and most faithful to PIE) சம்ஸ்கிருதம் என்பதாகும்.

 

சுருங்கச் சொன்னால் சம்ஸ்கிருதம்தான் அந்தக் குடும்பத்திலேயே மிகப் பழமையானது, மிகத் தூய்மையானது.

 

இது நிகலஸின் ஒரிஜினல் ஆராய்ச்சி!

 

வேத மொழிகளையும் அவெஸ்தன் மொழிகளையும் ஒப்பிட்டு, பழைய கொள்கைகளை தகர்த்தெரிகிறார் நிகலஸ். இதைப் புரிந்து கொள்ள வேதங்களிலும் பாரசீக மொழிகளிலும் கொஞ்சம் பரிச்சயம் தேவை. ஆனால் வெளி நாட்டு “அறிஞர்கள்” வேதங்களுக்கும் முந்தையது இந்திய-ஈரானிய மொழிகள் ( Indo- Iranian அவெஸ்தன் Avestan=பாரசீக); அங்கே இருந்துவிட்டுத்தான் ஆரியர்கள் இந்தியாவுக்குள் நுழைந்தனர் என்றெல்லாம் ‘புருடா’ (blatant lies) விட்டுக் கொண்டிருந்தனர். அதாவது ஆரிய-திராவிடர் என்ற பிரிவினையை 400 வருடங்களாக முன்வைத்து, அதற்கேற்ப எல்லாவற்றையும் புழுகியும் மெழுகியும் ஒழுகியும்  வந்தனர்.

 

(ஆனால் காஞ்சி பரமாசார்ய ஸ்வாமிகள், ஜொராஸ்டர் என்பவர், குஜராத்திலுள்ள சௌராஷ்டிரர் தேசத்தவர் என்று முன்னரே பேசியதை எனது கட்டுரையில் விரிவாகக் கொடுத்துள்ளேன். ஆயினும் நிகலஸ் கஜனஸ் மொழியியல் ரீதியில் ஆப்பு வைப்பது படித்து இன்புதற்கிரியது.)

 

முன்னரே சொன்னது போல மொழியியல் மற்றும் சம்ஸ்கிருதம், கிரேக்கம், அவெஸ்தன் ஆகியவற்றில் ஓரளவு அறிவுள்ளவர் களுக்கான புத்தகம் இது. ஆகையால் அடுத்த கட்டுரையில் அவர் ரிக் வேத மண்டல கால வரிசைக் (Chronology of 10 Rig Vedic Mandalas) கிரமம், ரிபு (Vedic God Rbhu) பற்றிய ஆராய்ச்சி, ரிக்வேத மொழிபெயர்ப்பு பற்றிச் சொல்லும் சில கருத்துகளை செப்புவேன்.

 

–தொடரும்

அதிசய புத்த துறவி ஸு யுன்! – 32 (Post No.3702)

Written by S NAGARAJAN

 

Date: 8 March 2017

 

Time uploaded in London:-  6-52 am

 

 

Post No.3702

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

 

 

 

100 வயது வாழ்ந்த பெரியோர்

 

120 வயது வாழ்ந்த அதிசய புத்த துறவி ஸு யுன்! – 32

by ச.நாகராஜன்

 

 

111ஆம் வயது (1950-1951)

 

ஸு யுன்னுக்கு இப்போது வ்யது 111. வசந்த காலத்தில் ஸு யுன்,  நான் ஹுவா ம்டாலயம் சென்று சூத்ரங்களை இசைத்தார். ஒரு வார கால ‘சான்’ தியானப் பயிற்சியும் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சிலருக்கு ஆன்மீக விழிப்புணர்வு ஏற்பட்டது.

யுன் மென் ம்டாலயத்திற்கு வந்த பின்னர் ஸு யுன் தனது கையெழுத்துப் பிர்திகளையெல்லாம் ஒழுங்கு படுத்த் ஆரம்பித்தார். இது சுலபமான வேலையாக இல்லை. ஏனெனில் அவர் எழுதியதெல்லாம் பல ஆண்டுகளுக்கு முன்ன்ர் எழுதிய்தாகும்.

 

 

112ஆம் வயது (1951-1952)

 

ஸு யுன்னுக்கு இப்போது வ்யது 112. வசந்த காலத்தில் சூத்ரங்களை இசைக்கும் போது யுன் மென் மடாலயத்தில் ஒரு பெரும் துர்பாக்கியமான நிலை நேரிட்டது.

 

 

குறிப்பு : இது வரை தான் மாஸ்டர் ஸு யுன் தனது நாட்குறிப்பை எழுதி வைத்துள்ளார். மீதியுள்ள எட்டு வருடங்களில் நடந்தவற்றை அவரது சீடர்களே தொகுத்து எழுதியிருக்கின்றனர்.

 

 

இந்த ஆண்டு கம்யூனிஸ்டுகளின் புரட்சி ஏற்பட்டது. சூத்ரங்களை இசைத்த போது ஆண் பெண் உள்ளிட்ட 120க்கும் மேற்பட்டோர் குழுமியிருந்தனர். இரண்டாம்  மாதத்தின் 24ஆம் நாளன்று. திடீரென்று நூறு கம்யூனிஸ்ட் குண்டர்கள் மடாலயத்தைச் சூழ்ந்து கொண்டு நின்றனர். யாரையும் வெளியில் செல்ல அவர்கள் அனுமதிக்கவில்லை.

 

மாஸ்டரையும் இதர அனைவரையும் அவரவர் இடத்தில் அப்படியே இருக்குமாறு கூறிய் அந்த குண்டர்கள் கூரையிலிருந்து தரை வரை ஒவ்வொரு இடமாக் ஆராய்ந்தனர். இரண்டு நாள் இந்த தேடுதல் வேட்டை தொடர்ந்தது. ஆனால் சட்டத்திற்குப் புறம்பானதாக ஒன்றைக் கூட அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.

 

இறுதியில் பிக்ஷு மிங் காங் உள்ளிட்ட ஐந்து பேரை இழுத்துச் சென்றனர்.

 

அநியாயமான புகார்களை மடாலயம் மீது சுமத்தினர். மடாலயத்தில் அபாயகரமான் வெடிகுண்டுகள், ஆயுதங்கள் தங்கக் கட்டிகள், வெள்ளிக் கட்டிகள் ஒளித்து வைக்கப்பட்டிருப்பதாக் அபாண்டமான புகார்களை அவர்கள் அள்ளி வீசினர்.

26 பிக்ஷுக்கள் கைது செய்யப்பட்டனர். பயங்கரமாக் அவர்கள் அடித்து நொறுக்கப்பட்டனர்.

 

 

பிக்ஷு மியாவோ யுன் அடித்தே கொல்லப்பட்டார்.  பிக்ஷு வு யுன் மற்றும் டி ழி ஆகியோர் அடிக்கப்பட்டு கைகள் உடைக்க்ப்பட்டனர். இன்னும் சிலரைக் காணவே காணோம்.

ஸு யுன்னை மூன்றாம் மாதம் இன்னொரு அறைக்கு கூட்டிச் சென்றனர். அங்கு அறைக்கதவுகளும் ஜன்னல்களும் மூடப்பட்டன. குடிக்கவோ சாப்பிடவோ ஒன்றும் அவருக்கு வழங்கப்படவில்லை.

 

 

மூன்றாம் நாள் உள்ளே வந்த சில பத்து குண்டர்கள் மாஸ்டரிடம் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் தங்கம், வெள்ளி முதலானவற்றை உடனே கொடுக்குமாறு மிரட்டினர்.

 

தன்னிடம் ஒன்றும் இல்லை என்று மாஸ்டர் ஸு யுன் சொல்லவே அவரை உருட்டுத் தடிகளால் அடிக்க ஆரம்பித்தனர். பின்னர் இரும்புத் தடிகளால் அடிக்கவே அவரது தலையிலிருந்தும் முகத்திலிருந்தும் ரத்தம் பெருகியது. அவரது விலா எலும்புகள் உடைந்து நொறுங்கின.

 

 

ஸு யுன் ஆழ்ந்த ச்மாதியில் ஆழ்ந்தார். நான்கு முறைகள் இப்படி அடித்த பின்னர் அவரைத் தரை மீது அந்த குண்டர்கள் தூக்கிப் போட்டனர்.

அவர்கள் ஸு யுன் இறந்து விட்டார் என்று நினைத்து வெளியில் சென்றனர்.

 

 

சிறிது நேரம் கழித்து சீடர்கள் அவரை தூக்கிக் கொண்டு இன்னொறு அறைக்குக் கொண்டு சென்றனர்.  அங்கு ஸு யுன் தியான நிலையில் அமர்ந்தார்,

 

ஐந்தாம் நாள்  மாஸ்டர் இன்னும் உயிருடன் தான் இருக்கிறார் என்று கேள்விப்பட்ட் குண்டர் பட்டாளம் மீண்டும் திரும்பியது. அவரை அடி அடி என்று அடித்து தரையில் போட்டு உருட்டி லெதர் பூட்ஸால் மிதித்து நொறுக்கினர்.

 

அவர் தலையிலிருந்து ஆறாகப் பெருகிய ரத்தத்தைக் கண்டு சந்தோஷம் அடைந்த அவர்கள் ஸு யுன் இறந்து விட்டார் என்று சிரித்துக் கொண்டே கூறி விட்டு வெளியேறினர்.

 

 

இரவு நேரத்தில் சீடர்கள் மீண்டும் ஸு யுன்னை தூக்கிக் கொண்டு சென்று படுக்கையில் கிடத்தினர். பின்னர் தியான நிலையில் அவர் அமர உதவினர்.ஒரு நாள் முழுவதும் அவர் புத்தரைப் போல இதே நிலையில் இருந்தார்.

மறு நாள் சீடரில் ஒருவர் ஒரு நூல் திரியை எடுத்து அவர் நாசித் துவாரங்களில் வைத்துப் பார்த்தார். மூச்சே இல்லை. அவர் இறந்து விட்டா என்றே முடிவு செய்யப்பட்டது.

 

 

ஆனால் அவரது உடலோ வெப்பம் குறையாமல் இருந்தது. அடுத்த நாள் காலை மாஸ்டர் மெல்லிய குரலில் முனகுவது போலக் கேட்டது.

 

உடனே சீடர்கள் அவரை ந்னகு உட்கார வைத்தனர். மெல்லிய குரலில் ஸு யுன், “சில நிமிடங்கள் தான் க்ழிந்திருக்கிறது என்று நினைத்தேன். ஒரு பேனாவையும் பேப்பரையும் கொண்டு வந்து நான் சொல்வதை எழுதுங்கள். யாரிடமும் இதைச் சொல்ல வேண்டாம். தெரிந்தால் அவர்கள் உங்களைச் சும்மா விட மாட்டார்கள்” என்றார்.

 

அவர் சொல்வதை சீடர்கள் உன்னிப்பாகக் கேட்டு எழுத ஆரம்பித்தனர். ஸு யுன் மெதுவாகக் கூறலானார்:-

தொடரும்

***

 

இலங்கையைப் பாதுகாக்கும் “பஞ்சவர்ணக் கிளி!” (Post No.3700)

Written by London swaminathan

 

Date: 7 March 2017

 

Time uploaded in London:- 6-46 am

 

Post No. 3700

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

கம்ப ராமாயணத்தை எந்தப் பக்கம் புரட்டினாலும் சுவையான செய்தி கிடைக்கும். அல்லது இலக்கியத் தேன் சொட்டும் பாடல் கிடைக்கும்; அதுவும் இல்லாவிடில் தொடர்ச்சியான ராமாயணக் கதை கிடைக்கும்.

 

அனுமன், தமிழ்நாட்டிலுள்ள மயேந்திர மலையிலிருந்து இலங்கைக்குத் தாவுகிறான் அங்கே ஒரு பவளக் குன்றின் மீது காலூன்றி ஒரு பறவை பார்ப்பது போல இலங்காபுரி நகரத்தைக் காண்கிறான். அப்பொழுது அவன்

இலங்காதேவியை எதிர்கொள்கிறான். அந்தக் காட்சி சுவைமிக்கது.

 

இலங்காதேவி ஐந்து வர்ண (பஞ்ச வர்ண) உடை அணிந்திருந்தாளாம்; வானவில் போலக் காட்சி தந்திருப்பாள்!!

 

அனுமனை நோக்கி யாரடா நீ? என்று ஏக வசனத்தில் கேட்கிறாள். அதற்கு அனுமன் நான் ஒரு டூரிஸ்ட்! இலங்கையைச் சுற்றிப் பார்க்க வந்தேன் என்கிறான்! அவளோ நகைக்கிறாள்.; இதை சொல்லும்போது கம்பன் இன்னொரு வ ரியையும் சேர்க்கிறான். அவள் வெடி சிரிப்பு சிரிக்கிறாள். அனுமனோ மநதுக்குள் சிரித்தானாம்!

 

இதோ சுவையான பாடல்களும் காட்சிகளும்:-

 

 

நான் ஒரு டூரிஸ்ட்!

 

சுந்தர காண்டம், ஊர் தேடு படலப் பாடல்கள்

 

யார் நீ? ஏன் இங்கு வந்தாய்?

அனுமன் பதில்:

அளியால் இவ் வூர் காணும் நலத்தால் அணைகின்றேன்

எளியேன் உற்றால் யாவது உனக்கு இங்கு இழவு? என்றான்

 

ஊரைக் காண வேண்டும் (tour) என்ற ஆசையால் வந்தேன். எளியவனாகிய நான் இவ்வூருக்குள் வந்தால் உனக்கு என்ன நஷ்டம்? (இழவு=இழப்பு=நஷ்டம்) என்று கேட்டான்.

 

 

நக்கானைக் கண்டு ஐயன் மனத்து ஓர் நகை கொண்டான்

அக்கால் நீதான் ஆர் சொல வந்தாய் உனது ஆவி

உக்கால் ஏது ஆம் ஓடலை என்றாள்……..

 

இலங்கா தேவி வெளிப்பட சிரித்தாள்; அனுமன் மனதுக்குள் சிரித்தான். அதையும் உணர்ந்த லங்காதேவி, ” சிரிக்கிறாயா? நீ யார்? யார் உன்னை இங்கு ஏவினார்? உன் உயிரே போய்விடுமே! உனக்கு என்ன கிடைக்கப்போகிறது? இவ்வளவு நான் சொல்லியும் ஓடாமல் நிற்கிறாயே? என்றாள்.

 

 

இலங்காதேவியின் தோற்றம்

எட்டுத் தோளாள் நாலு முகத்தாள் உலகு ஏழும்

தொட்டுப் பேரும் சோதி நிறத்தாள் சுழல் கண்ணாள்

முடிப் போரில், மூவுலகத்தை முதலோடும்

கட்டிச் சீறும் கலன் வலத்தாள் சுமை இல்லாள்

 

இலங்காதேவிக்கு எட்டுத் தோள்கள்; நான்கு முகம். ஏழு உலகங்களையும் தொட்டு மீண்டுவரும் ஒளிபெற்றவள்; சுழலும் கண் கொண்டவள். பகைத்து மோதினால் மூவுலகத்தவரையும் கட்டிச் சீறும் வலிமை பெற்றவள்; ஆனால் பொறுமை என்பது கிடையாது.

 

வேல் வாள் சூலம் வெங்கதை பாகம் விளி சங்கம்

கோல்வாள் சாபம் கொண்ட கரத்தாள் வடகுன்றம்

போல்வள் திங்கள் போழின் எயிற்றாள் புகை வாயில்

கால்வாள் காணின் காலனும் உட்கும் கதம் மிக்காள்

 

அவள் வேல், வாள், சூலம், கதை, பாசம், சங்கம், கோல்,  குந்தம் ஆகிய எட்டுக்கருவிகளைக் எட்டுக் கைகளில் ஏந்தியவள். வடக்கிலுள்ள மேரு மலை போன்றவள்; சந்திரனைப் பிளந்தது போல பற்களை உடையவள். வாயிலே புகை கக்குபவள்; எமனையும் கலங்கச் செய்யும் கடும் கோபம் உடையவள்.

 

 

அஞ்சு வர்ணத்தின் ஆடை உடுத்தாள் அரவு எல்லாம்

அஞ்சு உவணத்தின் வேகம் மிகுந்தாள் அருள் இல்லாள்

அம்சுவர்ணத்தின் உத்தரியத்தாள் அலை ஆரும்

அம்சும்ச்வள் நத்தின் முத்து ஒளிர் ஆரத்து அணி கொண்டாள்

 

அவள் பஞ்ச வர்ண ஆடை உடுத்தவள்; பாம்புகள் அஞ்சும் கருடன் போல வேகம் மிக்கவள்; கருணை அற்றவள்; பொன்னாடையை மேலாடையா கப் போட்டிருப்பவள் கடலிலுள்ள அழகிய பெரிய நத்தைகள் ஈன்ற முத்தூக்களால் செய்யப்பட்ட மாலையை அணிந்தவள்.

(இதற்குப் பின் அனுமன் அவளை ஒரு குத்துக் குத்தி விழுத்தாட்டுகிறான் என்று கதை தொடர்கிறது. பெண் என்பதால் கொல்லக்கூடாது என்று ஒரு தட்டு தட்டினான்!)

 

–Subham–

 

பெரிய பிரமிடு– எகிப்திய அதிசயங்கள் -பகுதி 11

கீஸா  பிரமிடு

Written by London swaminathan

 

Date: 27 FEBRUARY 2017

 

Time uploaded in London:- 6-18 am

 

Post No. 3674

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

 

நாலாவது வம்சம்

 

நாலாவது வம்சாவளியின் சிறப்பு மாபெரும் பிரமிடுகளைக் கட்டியதாகும்.

மூன்றாவது வம்சத்தின் கடைசி அரசர் ஹூனீ (Huni). அவருடைய புதல்வி ஹெதபரிஸ் ((Hetepheres I)  நாலாவது வம்சத்தைத் தொடங்கி வைத்தார். ஸ்நெபரு (Sneferu) என்பவரை மணந்தார். அவரும் பிரம்மாண்டமான கட்டிடங்களை எழுப்பினார். ஆனால் அவருடைய மகனான குனம் கூஃபு (Khnum Khufu) என்பவர் கட்டிய பிரமிடுதான் கீஸாவின் பெரிய பிரமிடு ( Great Pyramid at Giza) என்று அழைக்கப்படுகிறது. ஸ்நெபெருதான் அதிகம் பிரமிடுகளை — மூன்று அல்லது நான்கு பிரமிடுகளைக் கட்டினார். 90 லட்சம் டன் கற்களை வெட்டிச் செதுக்கி இவைகளை அமைத்தார். இருந்தபோதிலும் கூஃபுவின் பிரமிட் மிகப்பெரியதாகையால், அதற்கே பெருமை முழுதும்!

 

பெரிய பிரமிடின் சிறப்புகள்

 

இது கீஸாவில் (Giza near Cairo) உள்ளது எகிப்தின் தலைநகரான கெய்ரோவைச் சுற்றித்தான் பிரமிடுகள் உள்ளன. பெரிய பிரமிடுதான் மிகப்பழைய பிரமிடு. இதன் காலம் கி.மு.2560.

 

இதன் உயரம் 481 அடி. மதுரை மீனாட்சி கோவிலைப் போல மூன்று மடங்கு உயரம்! இது ஆக்ரமிக்கும் பரப்பு 14 ஏக்கர். அதுவும் மீனாட்சி கோவிலின் பரப்புக்குச் சமமானதே. இந்த பிரமிடு உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்று.

 

4500 ஆண்டுகளுக்கு முன்னர் இதைக் கட்டியபோது வெள்ளைச் சுண்ணாம்புக் கறகள் பள பளவென்று சூரிய ஒளியைப் பிரதிபலித்தது. காலை சூரிய உதயத்தின்போது பிரமிடின் ஒருபக்கம் ஒளிமயமாக ஜொலித்திருக்கும். மாலையில் சூரியன் மறையும் போது வானவில்லின் ஏழு நிறங்களும் ஒவ்வொன்றாகத் தோன்றி மறைந்திக்க வேண்டும். இமய ,மலையிலுள்ள கயிலை மலையை இத்தோடு ஒப்பிடலாம். அதுவூம் சூரிய ஒளி படப்பட நிறம் மாறிக்கொண்டே இருக்கும்!

இந்தப் பிரமிடின் பெயர் கூஃபு தொடுவானத்துக்குச் சொந்ததமானவர் (Khufu is belonging to the Horizon).

Ivory Statue of Khufu, கூஃபு மன்னரின் தந்தச் சிலை

 

பௌர்ணமி நிலவு உதித்த காலங்களில் இந்தப் பிரமாண்டமான பிரமிடு நிலவு ஒளியி வெள்ளை நிறத்தில் ஜொலித்திருக்கும். இதனால்தான் இது உலக அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்பட்டது. மேலும் ஏழு அதிசயங்களில் காலாத்தால் அழியாதது பிரமிடு ஒன்றுதான்.

 

காலப்போக்கில் கீசா வட்டாரம் முழுதும் பிரமிடுகளால் நிரம்பி வழியத் தொடங்கியது. மன்னர்களின் கல்லறைகளை இவ்வாறு பாலிஷ் செய்யப்பட்ட வெள்ளைக் கற்களாலும், கடவுளரின் கோவில்களை கருங்கற்களாலும் கட்டினர். அருகிலேயே அதிகாரிகளின் மஸ்தபா (Mastaba)  கல்லறைகளும், மஹாராணியார், குழந்தைகளின் சிறிய கல்லறைகளும் இருக்கின்றன.

 

கூபூ பிரமிடு முதலியன, 4000 ஆண்டுகளுக்கு முன்னர் பூமாதேவியின் கிரீடம் போலத் தோன்றியிருக்க வேண்டும்.

 

வரலாற்றின் தந்தை என்று மேலை நாட்டினர் புகழும் ஹெரதாத்தஸ் (Herodotus)  ஒரு விநோதமான செய்தியை எழுதி வைத்துள்ளார்

கூஃபு என்ற மன்னரின் கிரேக்க மொழிப் பெயர் கீயாப்ஸ் (Cheops). கீயாப்ஸ் மன்னரின் கல்லறை ஒரு தீவு போன்ற இடத்தில் இருந்ததாகவும் அதற்கான தண்ணீர், நைல் நதியிலிருந்து கால்வாய் மூலம் கொண்டுவரப்பட்டதாகவும் எழுதி வைத்துள்ளார். அப்படி ஒரு நிலத்தடித் தீவு இல்லை. தண்ணீர் இருந்ததற்கான அறிகுறிகளும் இல்லை. காலம்தான் இந்தப் புதிருக்கு விடை காணும்.

மன்னர் கல்லறை உள்ள அறை சிவப்புக் கற்களால் (Red Granite) ஆனது. வேறு எந்தப் பிரமிடிலும் இல்லாதவாறு இங்கு மூன்று அறைகளுள்ளன. இவைகளை இணைக்க வழியும் இருக்கிறது. முதலில் வரைபடத்திட்டங்கள் மாற்றப் பட்டதால் மூன்று அறைகள் என்று நினைத்தனர்.

 

கீழ்மட்ட அறை பூமிக்கு 100 அடி ஆழத்தில் உள்ளது. இது பாதாள உலகம் எப்படி இருக்கும் என்பதைக் காட்ட இப்படி இருட்டாக கரடு முரடாக விட்டிருக்கலாம் என்று இப்போது நினைக்கின்றனர். மேல் அறையில் மன்னர் கல்லறை உள்ளது. அதிருந்து செல்லும் சாளரம் மூலமாக நேரடியாக நட்சத்திரத்தைக் காணலாம். முதலில் காற்று வருவதற்காக இப்படி இரண்டு திறந்தவெளிப் பாதைகள் வைத்ததாகக் கருதினர். இப்போது அவைகளுக்கு வேறு விளக்கம் கொடுக்கப்படுகிறது. இறந்த மன்னரின் ஆவி நேரடியாக நடசத்திரங்களை அடையவே இந்த அமைப்பு.

 

இது எப்படித் தெரிய வந்ததென்றால் ஐந்தாவது வம்சம் உருவாக்கிய பிரமிடுகளில் மன்னன் (எகிப்திய பாரோ) வானுலகத்துக்குப் போவது பற்றி எழுத்திலேயே எழுதி வைத்துள்ளனர். மேலும் கூஃபு பிரமிடின் அமைப்பும் ஒரு குறிப்பிட்ட சித்திர எழுத்தின் வடிவில் (Hieroglyph) அமைந்திருப்பது இப்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த எழுத்தின் பொருள்: உயரே போதல் (Ascension), அதாவது வானுலகப் பயணம் (Ascending to the Stars!)

 

எகிப்து முழுதும் அதிசயங்கள்தாம்; மேலும் மேலும் புதிய விளக்கங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. எகிப்தியல் பற்றி மாதம்தோறும் வெளிவரும் பத்திரிக்கைகள் முத்லியன, இங்கே எங்கள் லண்டன் முதலான நகரங்களில் கிடைக்கின்றன. எப்போது திறன்ந்து பாரத்தாலும் புதிய அகழ்வாராய்ச்சி, புதிய கண்டுபிடிப்பு, புதிய விளக்கம் என்று பேழுதிக்கொண்டே இருக்கிறார்கள்!

இந்த அதிசயமான விஷயம் ஏற்கனவே வியாசர் சொன்னதுதான்!

 

இதோ நான் மூன்றாண்டுகளுக்கு முன் எழுதிய கட்டுரை:

நாம் எல்லோரும் நட்சத்திரங்கள் !!

 

ஆராய்ச்சிக் கட்டுரை:– லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:– 1242: தேதி 19 ஆகஸ்ட் 2014.

நாம் அனைவரும் ஒரு காலத்தில் நட்சத்திரங்களின் துகள்களாக இருந்தோம். இது ஒரு விஞ்ஞானச் செய்தி. ஆனால் புண்யம் செய்தவர்கள் எல்லோரும் நட்சத்திரங்கள் ஆவார்கள் என்பது மஹபாரதம் தரும் அதிசயச் செய்தி. நட்சத்திரங்கள் எல்லாம் கடவுள் என்பது எகிப்திய, மாயா நாகரீக வரலாறு தரும் செய்தி; அனைத்தையும் சுருக்கமாகச் சொல்வதே இந்த ஆய்வுக் கட்டுரையின் நோக்கம்.

 

பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது மஹாபாரத வனபர்வத்தில் வரும் அர்ஜுனனின் விண்வெளிப் பயணத்தைப் படித்து அதிசயித்துப் போனேன். ஆனால் அது ‘’சிம்பாலிக்’’க்காக (அடையாளபூர்வமாக) சொன்ன செய்தி என்று விட்டு விட்டேன். லண்டனுக்கு வந்த பின்னர் ராஜாங்க ஆஸ்தான விண்வெளி விஞ்ஞானி பாட்ரிக் மூர் (Patrick Moore’s Sky at Night)  நடத்தும் “இரவு நேரத்தில் வானக் காட்சி” என்ற கிரகங்கள்—நட்சத்திரங்கள் நிகழ்ச்சியைப் பார்த்து வந்தேன். ஒரு நாள் அவர் சொன்னார், “ நாம் எல்லோரும் ஒரு காலத்தில் நட்சத்திரங்களின் துகள்களாக இருந்தோ என்று! மஹாபாரத வன பர்வ செய்தியை ஒப்பிட்டுப் பார்த்தபோது புல்லரித்தது.

 

அர்ஜுனனின் விண்வெளிப் பயணம்
அதாவது அர்ஜுனனை மாதலி என்ற சாரதி விண்வெளி ரதத்தில் ஐந்தாண்டுகளுக்கு சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்லும் வர்ணனை மஹா பாரத வன பர்வத்தில் உள்ளது. அர்ஜுனன் ஒளிமிகுந்த ஆயிரக் கணக்கான ரதங்களைப் பார்த்து இவர்கள் யார் என்று கேட்கிறான். இந்த ஒளிமிகுந்த மக்கள் எல்லாம் புண்யம் செய்தவர்கள், இவர்களைத்தான் நீங்கள் நட்சத்திரங்களாக பூமியில் பார்க்கிறீர்கள் என்று மாதலி விளக்கம் தருகிறான். இதை பாட்ரிக் மூர் என்ற வானியல் அறிஞர் சொன்னதோடு ஒப்பிடுகிறேன்:

கோடி கோடி வருடங்களுக்கு முன் மாபெரும் வெடிப்பு (பிக் பேங் Big Bang) ஏற்பட்டது. அப்போது விரிவடையத் துவங்கிய பிரபஞ்சம் இன்னும் பலூன் போல விரிவடைந்து கொண்டே இருக்கிறது. இதில் தோன்றிய ஒரு சின்னத் துகள் சூரிய மண்டலம். அதிலுள்ள ஒரு இம்மி அளவான பூமியில் அந்த நட்சத்திரத் துகள்கள் இறுகி மனித இனம் தோன்றியது என்பர் விஞ்ஞானிகள்.

அவர்கள் கணக்குப் படி நட்சத்திரங்கள் என்பது கோள உருவத்தில் சுற்றும் வாயுக் கோளங்கள். அதில் ஹைட்ரஜனும் ஹீலியமும் பிரதானமாக இருக்கின்றன. ஒவ்வொரு வினாடியிலும் கோடிக் கணக்கான ஹைட்ரஜன் குண்டுகள் வெடிப்பதால் அவை வெப்பத்தையும் ஒளியையும் உமிழ்கின்றன. சூரியனும் ஒரு சின்ன வகை நட்சத்திரம்தான்.

இதை எல்லாம் விஞ்ஞானம் சொன்னாலும் மாபெரும் வெடிப்பு BIG BANG  ஏன் நிகழ்ந்தது? அதன் முடிவு என்ன? என்பதை விஞ்ஞானத்தால் விளக்க முடியவில்லை. பாட்ரிக் மூர் சொன்னது போல நாம் எல்லோரும் நட்சத்திரத் தூசியாக இருந்ததை ஒப்புக் கொண்டாலும் அதற்குள் ஆத்மா ஒன்று இருப்பதை விஞ்ஞானம் ஒத்துக் கொள்வதில்லை. அங்குதான் மதம் வந்து கை கொடுக்கிறது!

வியாசர் எழுதிய மஹாபாரத வனபர்வத்தைப் படிப்பவர்கள் இன்றும் வியப்படைவார்கள். அவர் சொன்ன பல விஷயங்களுக்கு இப்போது விஞ்ஞான விளக்கம் கிடைக்கிறது. அவரை ஒரு விஞ்ஞானி என்று அறிஞர்கள் ஒப்புக் கொள்ள மறுத்தாலும், 5000 ஆண்டுகளுக்கு முன்னரே விஞ்ஞான புனைக் கதை (OLDEST SCIENCE FICTION WRITER) எழுதிய முதல் மனிதன் என்ற பட்டத்தையாவது கொடுக்க வேண்டும். நீண்ட விண்வெளிப் பயண வர்னணையை வன பர்வத்தில் படிக்கலாம். அது பற்றி தனியாக எழுதுவேன்.

சிவன் எனும் திருவாதிரை நட்சத்திரம்

 

இந்துக்களின் நட்சத்திர வழிபாடு
நாமும் அருந்ததி (Algol) , அதை ஒட்டியுள்ள சப்தரிஷி (Ursa Major)  மண்டலம், அகத்திய (Canopus) நட்சத்திரம், துருவ நட்சத்திரம் (Pole Star) , திரிசங்கு (Southern Cross) நட்சத்திரம் ஆகியவற்றை புனிதர்களாகவே வழிபடுகிறாம். வானில் தெரியும் ஏழு நட்சத்திரங்களான சப்த ரிஷி மண்டலத்தை “கை தொழு எழுவர்” என்று சங்கப் புலவர் புகழ்கிறார். கார்த்திகை (Pleiades) நட்சத்திரம், ரோகிணி (Aldebaran) நட்சத்திரம் ஆகியனவும் நம்மால் வழிபடப் படுகின்றன. சங்க காலத் தமிழர்கள் ரோகிணி நட்சத்திரத்தில் மட்டும் கல்யாணம் செய்ததை சிலப்பதிகாரமும் அகநானூறும் பாடுகின்றன.

இதே போல எகிப்தியர்களும் மாயா நாகரீக மக்களும், மன்னர்கள் இறந்த பின்னர் நட்சத்திரங்களாக மாறுகின்றனர் என்று எழுதி வைத்துள்ளனர். அண்மைக்கால ஆரய்ச்சியில் கியாப்ஸ்-குபு பிரமிட்டில் நட்சத்திரப் படங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் 90 பிரமிடுகளில் மூன்று பெரிய, பழைய பிரமிடுகள் ‘’ஓரியன்’’ நட்சத்திர மண்டலத்திலுள்ள மூன்று நட்சத்திரங்களை நோக்கி அமைந்துள்ளதும் தெரியவந்துள்ளது. அதாவது காற்றுப் போவதற்கான மூன்று ஓட்டைகள், அந்த மூன்று நட்சத்திரங்களை நோக்கி அமைந்துள்ளன. 1994 பிப்ரவரியில் பி.பி.சி. ஒளிபரப்பிய ஓரியன் மிஸ்ட்ரி (The Orion Mystery) என்ற டாகுமெண்டரியில் இது பற்றி விரிவாகக் காட்டினார்கள். அப்போது நான் எழுதி வைத்த ஆராய்ச்சிக் குறிப்புகளை இப்பொழுது சொல்வதற்குக் காரணம் உண்டு.

சிவன் என்னும் வேடன்

ஓரியன் நட்சத்திரக் கூட்டத்தில் உள்ள ஆருத்ரா (Betelgeuse)  நட்சத்திரம் சிவனுக்கு உரிய நட்சத்திரம். சிவ பெருமானை வேடனாக நாம் உடைகள் போட்டுக் காட்டுவதோடு அல்லாமல் ருத்ரம் என்னும் யஜூர்வேத மந்திரம் அவரை வேடனாகவே வருணிக்கிறது. இதே கதை சிறிது மாற்றத்தோடு கிரேக்க புராணத்திலும் இருக்கிறது. கிரேக்கர்களின் புராணக் கதைகள் சிதைந்து போன வடிவத்தில் இயற்றப்பட்ட இந்து புராணக் கதைகள் (Distorted version of Hindu Mythology)  என்று மாக்ஸ்முல்லர் கூறுவார். ஆக்வே நம்மிடம் காப்பி அடித்த கதைதான் ஓரியன் வேடன் கதை என்பதாகும்.

 

ஐதரேய பிராமணம் என்னும் வேதப் பகுதியில் ம்ருக வ்யாத (வேடன்) என்ற பெயரில் ஓரியன் நட்சத்திரம் வருணிக்கப்படுகிறது. அவர் பிரஜாபதி என்றும் அவர் மகள் ரோகிணியை துரத்திச் செல்கிறார் என்றும் பிராமணங்களில் எழுதப்பட்டுள்ளது. அப்போது சிரியஸ் (Sirius) வேடன் வடிவத்தில் அம்பு எய்ததாகவும் உள்ளது. அதர்வ வேதம் 27 நட்சத்திரங்களையும் பட்டியல் இடுகிறது. கிரேக்கர்கள் நூல்களை எழுதுவதற்கு ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே வேதகால கீதங்கள் சரஸ்வதி நதிதீரத்தில் ஒலிக்கத் துவங்கி விட்டன. ஆக வேடன் கதை இந்தியாவில் இருந்தே ஏற்றுமதி செய்யப்பட்டிருக்க வேண்டும்.

ஜனவரி மாதத்தில் தெரியும்கார்த்திகை, ரோகிணி, திருவாதிரை, மிருகசீர்ஷம், சிரியஸ் ஆகிய நட்சத்திரங்கள்

உதவிய நூல்கள்:
Page 308, Mahabharata, The Book of the Forest (Vana Parva), Translated by A B Van Buitenen
Page 141 of Fingerprints of the Gods by Graham Hancock
Page 174, Volume 2 of Vedic Index by A A MacDonnell and A B Keith.
Page 160, An Illustrated Dictionary of Classical Mythology by Gilbert Meadows.

 

தொடரும்……………

அதிசய புத்த துறவி ஸு யுன்! – Part 30 (Post No.3673)

Picture sent by Dr Devaraj: Buddha statue in Dambulla, Sri Lanka

Written by S NAGARAJAN

 

Date: 27 February 2017

 

Time uploaded in London:-  4-41 am

 

 

Post No.3673

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

 

100 வயது வாழ்ந்த பெரியோர்

 

120 வயது வாழ்ந்த அதிசய புத்த துறவி ஸு யுன்! – 30

by ச.நாகராஜன்

 

 

104ஆம் வயது (1943-1944)

ஸு யுன்னுக்கு இப்போது வ்யது 104. முதல் மாதத்தில் நாட்டின் நலனுக்காக சடங்குகளை ஸு யுன் ஆரம்பித்தார். அது 26ஆம் நாளன்று முடிவடைந்தது. ஜனாதிபதி லின் ஷென், ஜெனரல் சியாங் கே ஷேக், மந்திரி டால், ஜெனரல் ஹோ மற்றும் முக்கிய அதிகாரிகள் ஒருவர் பின் ஒருவராக ஸு யுன்னை சைவ விருந்துக்கு அழைத்தனர். சியாங் கே ஷேக் தர்மம் பற்றி விரிவாக அறிந்து கொண்டார். பொருளியல் வாதம் என்றால் என்ன, இலட்சிய வாதம் என்றால் என்ன என்பது பற்றியும் கிறிஸ்தவ மதம் பற்றியும் அவர் கேட்டு அறிந்து கொண்டார். அவருக்கு ஒரு கடிதம் மூலமாக விரிவான பதிலை ஸு யுன் அனுப்பினார்.

 

 

பிறகு ஸி யுன் மற்றும் ஹுவா யான் ஆலயங்களில் விரிவுரை ஆற்றிய பின்னர் ஸு யுன் நான் ஹூவா மடாலயம் திரும்பினார். இறந்த சீடர்களுக்காக அங்கு ஒரு ஸ்தூபத்தை எழுப்புவதற்காக பூமி தோண்டப்பட்ட போது அங்கு காலியாக இருந்த ச்வப்பெட்டிகள் காணப்பட்டன ஒவ்வொன்றும் 16 அடி நீளம் இருந்தது. எட்டு அங்குல சதுரத்தில் கறுப்பு ஓடுகள் வேறு கிடைத்தன. அதில் பல்வேறு பறவைகள், மிருகங்கள், ஜோதிட அடையாளங்கள் இருந்தன. ஆனால் தேதி ஒன்றும் பொறிக்கபப்டவில்லை.

 

 

ஆறாம் மாதம் வினய பள்ளி திறக்கப் பட்டது. அங்கு உள்ளூரில் இருந்த ஏழைகளுக்கு இலவச கல்வி வழங்கப்பட்டது. குளிர்காலத்தில் ஸ்தூபம் கட்டி முடிக்கப்பட்டது.

 

 

105ஆம் வயது (1944-1945)

 

ஸு யுன்னுக்கு இப்போது வ்யது 105. 1940ஆம் ஆண்டில் ஆறாம் வமிச அரசரின் மடாலயம் திருப்பிக் கட்டப்பட்டவுடன் பிக்ஷு ஃபு கோவுடன் க்விஜியாங்கிற்கு ஸு யுன் சென்றார். லிங் ஷு வின புராதன மடாலயத்தை அவர் தேடினார். ஆனால் அது காணப்படவில்லை. மவுண்ட் யுன் மென்னுக்கு வந்த போது அங்கிருந்த அடர்ந்த காட்டில் யுன் மென் பள்ளியை நிறுவிய சிதிலமடைந்து கிடந்த ஆலயத்தை அவ்ர் பார்த்தார்.

அருமையான் அந்தப் புனிதத் தலத்தின் இன்றைய நிலையைக் கண்டு ஸு யுன்னுக்கு கன்ணீஈ ததும்பியது. 1938 ஆம் ஆண்டிலிருந்து மிங் காங் என்ற துறவி தனியே அங்கு வாழ்ந்து வந்தார். அந்தப் பிரிவை நிறுவியவரின் நினைவைப் போற்றும் வ்கையில் பல்வேறு துன்பங்களையும் ஏற்று அவர் அங்கு வாழ்ந்தார். அந்த மடாலயம் உடனடியாகக் கட்டப்படாவிடில் அது முற்றிலுமாக அழிந்து படும்.

 

 

நான் ஹூவா மடாலயம் திரும்பினார் ஸு யுன். ஒரு நாள் சேர்மன் லி ஹான் யுன்னும் மார்ஷல் லி ஜி ஷென்னும் அவரைப் பார்க்க வந்த போது தான் பார்த்த காட்சியை ஸு யுன் அவர்களிடம் தெரிவித்தார். அவர்கள் தங்களது பயணத்தின் போது அங்கு சென்று நிலைமையை நேரில் கண்டறிந்தனர். உடனடியாக சங்கத்தைச் சேர்ந்த அனைவரையும் அவர்கள் அழைத்தனர். ஸு யுன்னிடம் அந்த ம்டாலயத்தை புனரமைக்கும் பணி வழங்கபப்ட்டது. நான் ஹுவாவுக்கு யுத்தம் வருவது நிச்ச்யம் என்ற நிலையில் ஸு யுன் ஆறாம் வமிச அரசர் மற்றும் மாஸ்டர் ஹான் ஷான் ஆகியோரின் உடல்களை இரகசியமாக யுன் மென்னுக்கு கொண்டு வந்தார் ஸு யுன்.

 

யுன் மென்னில் இடிந்து விழும் நிலையில் இருந்த ம்டாலயத்தைப் பார்த்த ஸு யுன் அங்கு ஒரு சிறிய அறையில் தங்கி புனித தலத்தை மீண்டும் அமைக்கும் பணியை ஆரம்பித்தார். குளிர் காலத்தில் நான் ஹுவா திரும்பிய அவர் நீரிலும் நிலத்திலும் இறந்தோரின் ஆன்மா சாந்தியடைய வழிபாடு நடத்தினார்.

 

 

106ஆம் வயது (1945-1946)

 

ஸு யுன்னுக்கு இப்போது வ்யது 106. வசந்த காலத்திற்கும் கோடை காலத்திற்கும் இடையே வடக்கு குவாங் டாங் பகுதியை ஜப்பானிய படைகள் ஆக்கிரமித்தன. ரு யான் பகுதியில் இருந்த அகதிகள் யுன் மென்னிற்கு தப்பியோடினர். அங்கு அவர்களுக்கு அரிசிக் கஞ்சி யாம் மாவு உள்ளிட்டவை தரப்பட்டன. அந்த அகதிகளுள் தச்சர்கள், கொத்தனார்கள் கட்டிடக் கட்டுமானப் பணியார்கள் உள்ளிட்டோர் இருந்தனர். மடாலயத்தைப் புனரமைக்க அவர்கள் கூலி இன்றி தங்கள் உழைப்பைத் தர முன் வந்தனர்.

 

 

கோடை காலத்தில் சீனத் துருப்புகள் வேறு ஒரு இடத்திற்கு விரைந்த போது கொள்ளைக்காரர்கள் அதை அவர்கள் பின் வாங்குவதாகப் புரிந்து கொண்டு அவர்களைத் தாக்கிப் பெருமளவில் ரேஷன் பொருள்களைக் கைப்பற்றினர்.

விரைந்து உதவித் துருப்புகள் வரவே நாற்பது கிராமங்களில் உள்ள கொள்ளைக்காரர்களைத் தாக்க துருப்புகள் திட்டமிட்டன.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண், பெண் உள்ளிட்ட அனைவரும் ம்டாலயம் வந்து ஸு யுன்னிடம் ஏதேனும் செய்யுமாறு வேண்டிக் கொண்டனர். ஸு யுன் உடனடியாக யுத்த கமாண்டரைச் சந்தித்தார். மூன்று நாட்களுக்குப் பிறகு கொள்ளையடிக்கப்பட்ட் பொருள்கள் திருப்பி ஒப்படைக்கப்பட்டன,

ஒரு ஒப்பந்தமும் செய்யப்பட்டது. ச்கஜ நிலை மீண்டது.

அன்றிலிருந்து அந்தக் கிராமங்களின் மக்கள் ஸு யுன்னை அன்புத் தாயாக உருவகித்து அவரை வணங்கலாயினர். ஜப்பானிய படைகள் நகரை ஆக்ரமித்த போதிலும் கூட அவர்கள் யுன் மென்னுக்கு வரவில்லை.

-தொட்ரும்

***

 

 

 

அழுதால் அவனைப் பெறலாமே : ராமகிருஷ்ண பரமஹம்சர் (Post No.3666)

Written by London swaminathan

 

Date: 24 FEBRUARY 2017

 

Time uploaded in London:- 18-29

 

Post No. 3666

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

அழுதால் உன்னைப் பெறலாமே என்று மாணிக்கவாசகர், திருவாசகத்தில் சொன்னார். ராமகிருஷ்ண பரமஹம்சரும் பிற்காலத்தில் இதையே சொன்னார். இதற்கு அவர் சில சுவையான எடுத்துக்காட்டுகளையும் தருகிறார்.

 

ஒரு பக்தர் பரமஹம்சரிடம் கேள்வி கேட்டார்: கடவுள் தரிசனத்தை எப்படிப் பெறுவது?

ராமகிருஷ்ண பரமஹம்சர்:

உருகிய உள்ளத்துடன் உன்னால் அழமுடியுமா? மனைவி, மக்கள், பணம் இவற்றுக்காக மக்கள் குடம் குடமாகக் கண்ணீர் விடுகிறார்கள். ஆனால் கடவுளைக் காணவேண்டும் என்று அழுபவர் யார்? குழந்தை, விளையாட்டுப் பொருட்களோடு விளையாடும் வரை தாயார், சமையல் முதலிய வேலைகளைச் செய்கிறாள். இதர அலுவல்களையும் கவனிக்கிறாள். விளையாட்டு பொம்மைகள், குழந்தையின் பசியைப் போக்குவதில்லை; எனவே அவைகளைத் தூக்கி எறிந்துவிட்டுக் குழந்தை கோவென்று கத்தி அழுகின்றது. உடனே தாய் என்ன வேலை செய்து கொண்டிருந்தாலும், சாதம் பாதி வடித்துக் கொண்டிருந்தாலும் கூட அதை அப்படியே விட்டுவிட்டு ஓடிவந்து குழந்தையை எடுத்து தன் மார்போடு அணைத்துக் கொள்கிறாள்”.

இத்தகைய அன்பு, இறைவனிடத்திலும் இருக்கவேண்டும் என்பார் பரமஹம்சர். அப்படியிருந்தால், அழும் குழந்தையிடம் தாயார் ஓடிவருவதுபோல இறைவனும் ஓடிவருவார் என்கிறார்.

 

 

அன்பு இருந்தால் அழுகை வரும் என்று வள்ளுவனும் கூறுவான்:

 

அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் ஆர்வலர்

புன்கண்நீர் பூசல் தரும் (குறள் 71)

பொருள்:

அன்பை பிறர் பார்க்கமுடியாமல் அடைத்து வைக்கும் தாழ்ப்பாள் ஏதேனும் உலகில் உண்டா? அன்புள்ளவரி ன் கண்களிலிருந்து மளமளவென்று பெருகும் கண்ணீர்த் துளிகளே, அந்த அன்பை பிறருக்குப் பறைசாற்றிவிடும்.

 

ராமகிருஷ்ண பரமஹம்சர் மேலும் சொல்கிறார்:

 

கண்ணபிரானின் சரித்திரத்தையும் லீலைகளையும் நடித்துக்காட்டும் நாடகசாலைகளில், நாடகம் துவங்கும்போது, மேளத்தைக் கொட்டி, ஏ! கிருஷ்ணா! ஓடிவாடா! என்ற பாட்டை உரத்த குரலில் பாடி ஆரம்பிக்கிறார்கள். கிருஷ்ண வேஷத்தைப் போட்டுக்கொண்ட ஆளோ, இதையெல்லாம் கொஞ்சமும் கவனியாது, திரைக்குப் பின்னே வம்பளந்துகொண்டும், சுருட்டு பிடித்துக்கொண்டும் இருக்கிறான். ஆனால் இந்தச் சப்தம் நின்றுபோய், இனிமையான குரலில், மிருதுவான இசையுடன் நாரதர் , நாடக மேடையில் பிரவேசித்து, பக்திப் பரவசராய், கிருஷ்ணனை அழைக்கும்போது, கிருஷ்ண வேஷதாரி, இனிமேலும் தாமதிக்கக் கூடாது என்று, அவசரமாக நாடக மேடையில் பிரவேசிக்கிறான். ஈஸ்வரா, ஈஸ்வரா! என்று வாயால் மட்டும் கூவும் பக்தர்களிடம் அவன் வருவதில்லை. அவன் வரும்போது, பக்தனுடைய இதயம் திவ்வியப் பிரேமையினால் இளகிப் போகும்; பேச்சு அடங்கிவிடும். மிகுந்த பக்தியோடும் உள்ளன்போடும் அழைக்கும் பக்தர்களிடம் வருவதற்கு ஈஸ்வரன் ஒருபோதும் கால தாமதம் செய்வதில்லை.

 

 

இதோ மாணிக்கவாசகரின் கதறல்:–

 

யானே பொய் என் நெஞ்சும்

பொய் என் அன்பும் பொய்

யானால் வினையேன் அழுதால்

உன்னைப் பெறலாமே

தேனே அமுதே கரும்பின்

தெளிவே தித்திக்கும்

மானே அருளாய் அடியேன்

உனைவந்துறுமாறே

 

பொருள்:-

தேனும் அமுதமும் கருப்பஞ்சாறும் போலட் தித்திக்கும் பெருமானே! அடியேன் உன்னை வந்து அடையும் உபாயத்தினை அறிவித்து அருள்வாயாக. யானும், என் நெஞ்சும், அன்பும் பொய். ஆனாலும் வினையேனாகிய யான் அழுதால் உன்னை அடையலாமா?”

இந்தப் பாட்டில் கேள்வி கேட்பது போல உரை எழுதப்படிருந்தாலும், அழுதால் உன்னைப் பெறலாம் என்றே பொருள் கொள்ளவேஎண்டும் ஏனெனில் இரண்டு பாடல்களுக்கு முந்தியுள்ள பாட்டில்

 

அழுதேன் நின்பால் அன்பாய்

மனமாய் அழல் சேர்ந்த

மெழுகேயன்னார்  – என்ற வரிகளில் தான் தனித்து நின்று அழுவதாய்ப் பாடுகின்றார்.

 

 

எனது பழைய கட்டுரை

அழுதால் உன்னைப் பெறலாமே – மாணிக்க வாசகர் (Post No.3491)

Posted on 28 December 2016

 

 

–subham-

 

 

சிவபக்தன் சேரன் செங்குட்டுவன்! (Post No.3662)

Written by London swaminathan

 

Date: 23 FEBRUARY 2017

 

Time uploaded in London:- 6-27 am

 

Post No. 3662

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

சிலப்பதிகாரத்தில் பெரிதும் புகழப்படும் சேரன் செங்குட்டுவன், பெரிய சிவபக்தன். கண்ணகிக்கு சிலை எழுப்புவதற்கு இமயமலை நோக்கி அவன் புறப்பட்டபோது என்ன நடந்தது என்பதை சேரன் தம்பி இசைத்த சிலப்பதிகாரம் செப்புவதைக் காண்போம்:-

 

ஞாலங்காவலர் நாள்திறை பயிரும்

காலைமுரசம் கடைமுகத்து எழுதலும்

நிலவுக் கதிர் முடித்த நீளிருஞ் சென்னி,

உலகுபொதி உருவத்து, உயர்ந்தோன் சேவடி

மறஞ்சேர் வஞ்சி மாலையொடு புனைந்து

இறைஞ்சாச் சென்னி இறைஞ்சி வலங் கொண்டு,

மறையோர் ஏந்திய ஆவுதி நறும்புகை

நறைகெழு மாலையின் நல்லகம் வருத்த,

கடக்களி யானை பிடர்த்தலை ஏறினன்

–கால்கோட்காதை, சிலப்பதிகாரம்

 

பொருள்:-

நாட்டினைக் காவல் செய்யும் பிற மன்னர்கள் கப்பம் (திறை) செலுத்த வருக என்று காலை முரசம் வஞ்சி மாநகரின் கடை வாசலில்  ஒலித்தது. நிலவுக் கதிரினை முடித்த நீண்ட பெரிய சடை முடியும், உலகனைத்தும் ஒருங்கே தன் கைப்படுத்தும் உருவமும் உடைய உயர்ந்தோனான சிவபெருமானின், செவ்வையான திருவடிகளை (காலணி) வெற்றி பொருந்திய வஞ்சி மாலையுடன் தன் தலையில் சூட்டிக்கொண்டான். யாருக்கும் வணங்காத தன் தலையில் சிவன் திருவடிகளை வைத்து வலம் வந்தான் பிராமணர்கள் , அப்போது கொண்டுவந்த ஆகுதிப் புகையானது தேன் நிறைந்த செங்குட்டுவன் மலர்மாலையை வாடுமாறு செய்தது. மதக் களிப்பினுடைய யானையின் தலையில் செங்குட்டுவன் அமர்ந்தான்.

 

அந்த நேரத்தில் ஆடக மாடத்திலுள்ள (திருவனந்ததபுரம்) பெருமாள் கோவில் பிரசாதத்தை  அர்ச்சகர்கள் கொடுத்தனர்.  தலை மீது சிவன் பிரசாதத்தை வைத்திருப்பதனால், திருமால் பிரசாதத்தை தோள்மீது வைத்துக்கொண்டான்.

 

செங்குட்டுவன் சிவபக்தன் என்பதை மாடல மரையோன் என்ற பிராமணனும் சுட்டிக்காட்டுகிறான்:-

 

நற்றிறம் புரிந்தோர் பொற்படி எய்தலும்

அற்புளம் சிறந்தோர் பற்றுவழிச் சேறலும்

அறப்பயன் விளைதலும், மறப்பயன் விளைதலும்,

பிறந்தவர் இறத்தலும், இறந்தவர் பிறத்தலும்,

புதுவதன்றே; தொன்றியல் வாழ்க்கை

ஆன் ஏறு ஊர்ந்தோன் அருளில் தோன்றி

மாநிலம் விலக்கிய மன்னவன் ஆதலின்

செய்தவப் பயன்களும், சிறந்தோர் படிவமும்

கையகத்தன்போற், கண்டனையன்றே!

ஊழிதோறு ஊழி உலகங்காத்து

நீடுவாழியரோ நெடுந்தகை! என்ற

மாடல மறையோன் தன்னொடு மகிழ்ந்து

–வரந்தரு காதை

 

பொருள்:-

நல்ல செயல்களைச் செய்தோர் சுவர்க்கத்துக்குச் செல்லுதலும் அன்புள்ளம் மிக்கவர், பற்றின் காரணமாக மீண்டும் பிறத்தலும் அறத்துக்கான பயன் தப்பாது சம்பவித்தலும், பிறந்தவர் இறப்பதும், இறந்தவர் பிறப்பதும் புதுமையானவை அல்ல. தொன்றுதொட்டு நடந்துவரும் வாழ்க்கை நியதி இது. ரிஷப வாஹனத்தில் பவனிவரும் சிவனின் அருளினால் வஞ்சியிலே தோன்றி,  உலகம் சிறப்புறுமாறு செய்த மன்னன் நீயாதலின், செய்த தவப் பயன்களையும் உயர்ந்தோரின் உருவையும் நின் கைஅகத்தே உள்ளது போலத் தெளிவாகக் கண்டனை. ஊழிதோறு ஊழி உலகம் காத்து நீ நீடூழி வாழ்வாயாக! நெடுந்தகையே, நீ வாழ்வாயாக.

 

இவ்வாறு மாடல மறையோன்  வாழ்த்திய பிறகு செங்குட்டுவனும் அவன்பால பெரிதும் மகிழ்ச்சியுடைவன் ஆனான்.

 

முந்தைய காதைகளில் கோவில்கள் பற்றிச் சொல்லும்போது சிவபெருமானின் கோவிலை பிறவா யாக்கைப் பெரியோன் கோவில் என்று பாராட்டியுள்ளார் இளங்கோ அடிகள்.

என்னுடைய பழைய கட்டுரைகள்:—

 

சிலப்பதிகார கோவில்கள் | Tamil and Vedas

https://tamilandvedas.com/…/சிலப்பதிகார-கோவி…

Translate this page

சிலப்பதிகாரக் கோவில்கள். ஆராய்ச்சிக் கட்டுரை: லண்டன் சுவாமிநாதன் கட்டுரை எண்: 1215; தேதி 5 ஆகஸ்ட் 2014.சிலப்பதிகாரம் என்னும் தமிழ் …

2.சீனா, ஜப்பான், தமிழ் சிலப்பதிகாரம் அதிசய ஒற்றுமை! (ஆராய்ச்சிக் கட்டுரை எண்:-1318; தேதி:– 30 September 2014.)

3. கோவில்கள் பற்றி அப்பர் தரும் அதிசயத் தகவல் (Research Article No.1765;  Dated 1April 2015.)

The Wonder that is Madurai Meenakshi Temple | Swami’s Indology Blog

swamiindology.blogspot.com/2011/…/wonder-that-is-madurai-meenakshi-temple.htm…

14 Oct 2011 – How did the Houston (USA) Meenakshi temple receive a Madurai idol even after the … Madurai Meenakshi Temple is an architectural wonder.

 

 

—SUBHAM—

 

 

 

 

 

நடிகர்களின் பூர்வ ஜன்மம்! அதிசய தகவல்கள்!! (Post No.3661)

Written by S NAGARAJAN

 

Date: 23 February 2017

 

Time uploaded in London:-  5-58 am

 

 

Post No.3661

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

10-2-2017 பாக்யா இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

 

சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் போன ஜென்மத்தில் எந்த நடிகராக இருந்தார்?

 

 

ச.நாகராஜன்

 

அதிர்ஷடவசமாக எதிர்பாராத நல்ல காரியங்கள் நம்க்கு நடக்கும் போது பூரித்துப் போகிறோம். ஆனால் தொடர்ந்து கஷ்டங்கள் அடுத்தடுத்து வந்தால் எனக்கு மட்டும் ஏன் இப்படி வருகிறது என்று வ்ருத்தமும் மனச்சோர்வும் அடைகிறோம்.

இதற்கெல்லாம் கர்ம பலனே காரணம் என்கினறன நமது அற நூல்கள்.

 

 

மேலை நாட்டிலும் கூட இப்போது கர்ம பலன் கொள்கைக்கு ஆதரவு பெருகி வருகிறது. அங்கு கடுமையான வியாதியால் அவஸ்தைப் படுவோரும், கணவன், மனைவி உறவில் விரிசல் ஏற்படும் போது மனம் வருந்துவோரும்  பாஸ்ட் லைஃப் ரிக்ரெஷன் (Past Life Regression) எனப்படும் சென்ற ஜென்ம நிகழ்வுகளைத் தெரிந்து கொள்ள ஆர்வம் கொள்கின்றனர்; அவர்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது.

 

 

இதைத் தெர்ந்து கொள்வதற்காக. இதற்கென உள்ள ஹிப்நாடிஸ மையங்களில் உள்ள சைக்கிக் நிபுணர்களிடம் செல்கின்றனர் அவர்கள்.

சென்ற ஜென்மத்தில் என்ன செய்ததால் இப்படித் தமக்கு  இன்றைய நிலை ஏற்பட்டிருக்கிறது என்பதை அவர்கள் ஆழ் உறக்க நிலையில் கூறி விடுகின்றனர்.

 

 

நமது முந்தைய ஜென்ம நினைவு விமானத்தின் ப்ளாக் பாக்ஸ் போல நம்மிடமே இருக்கிறது. அதை ரீ-வைண்ட் செய்து பார்க்க வேண்டியது தான் பாக்கி என்கின்றனர் நிபுணர்கள்.

இதனால் கணவன், மனைவி உறவு சீராகிறது. ஆஸ்த்மா போன்ற வியாதிகளுக்கு உடனடியாக தகுந்த சிகிச்சை   மேற்கொள்ளப்படுகிறது.

 

 

உலகெங்குமுள்ள மக்களில் ஏராளமானோருக்கு பூர்வ ஜென்ம நம்பிக்கை உண்டு. மாவீரன் நெப்போலிய்ன தன்னை ரோம சாம்ராஜ்ய சக்ரவர்த்தியான சார்லிமக்னே என்று நம்பினார். ரோமானிய நாகரிகத்தில் என்னவெல்லாம் இருந்ததோ அதையெல்லாம் தன் வாழ்வில் அவர் அமைத்துக் கொண்டார். தனது அரண்மனையைக் கூட அவர் ரோமானிய நாகரிகப் படி ‘செட்-அப்’ செய்து கொண்டார்.

 

 

அமெரிக்க இராணுவ தளபதியான பேட்டனுக்கு  முன் ஜென்மத்தில்  மிகுந்த நம்பிக்கை உண்டு. தான் பலமுறை கிரேக்க போர்களில் ஈடுபட்டுள்ளதாக அவர் ந்மபினார். அவர் ஒரு  கவிஞரும் கூட. Through a Glass Darkly  என்ற கவிதையில் அவர் தன்னைப் பற்றிச் சொல்லிக் கொள்ளும் விவரங்கள் சுவையானவை.

 

பிரபல ஹாலிவுட் நடிக்ரான ஸில்வஸ்டர் ஸ்டெல்லோனுக்கும் பூர்வ ஜென்ம நம்பிக்கை உண்டு. அவர் தனது முந்தைய நான்கு பிறவிகள் தனக்குத் தெரியும் என்கிறார். சென்ற பிறவிகளில் ஒன்றில் பிரெஞ்சு புரட்சியின் போது அவரது தலை துண்டிக்கப்பட்டதாம்.

பிரபல ஆக் ஷன் ஹீரோவான ஸ்டீவன் சீகல் தான் புத்த மதத்தைச் சேர்ந்த லாமாவாக போன ஜென்மத்தில் இருந்ததாகக் குறிப்பிடுகிறார்.

 

 

அது சரி, ந்மது பாலிவுட்டிற்கு வருவோம், அமிதாப் பச்சன்  எட்வின் பூத் என்ற நடிகராக 1860இல் விக்டோரியன் காலத்தில் இருந்தாராம், இதை முந்தைய ஜென்மங்களைக் கண்டுபிடித்துக் கூறும் டாக்டர் வால்டர் செம்கிவ் கூறுகிறார். அமிதாப் பச்சனின் புகழோங்கிய காலத்தில் அவருடன் கிசுகிசுக்கப்பட்டவர் பிரபல் நடிகை ரேகா. அவர் சென்ற ஜென்மத்தில் அவரது  முதல் மனைவியாக மேரி டெவ்லின் என்ற பெயருடன் இருந்தாராம். இப்போது அமிதாப் பச்சனின் மனைவியாக் உள்ள ஜயா பச்சன் அப்போது அவருக்கு இரண்டாவது மனைவியாக மேரி  மக்விக்கர்ஸ் என்ற பெயருடன் இருந்தாராம்.

 

 

டாக்டர் வால்ட்ர் செம்கிவ் ‘பார்ன் அகெய்ன்’ (Born Again) என்ற தனது புத்தகத்தில் இவ்வாறு எழுதியுள்ளார்.

 

அமெரிக்காவில் பிரப்லமாக உள்ள இன்னொரு முந்தைய ஜென்ம கண்டுபிடிப்பு நிபுணரின் பெயர் ப்ரையன் லெஸ்லி வெய்ஸ் (Brian Leslie Weiss). இவர் மருத்துவராக வாழ்க்கையைத் தொடங்கினார். ஆயிரத்தி தொள்ளாயிரத்து எண்பதுகளில் ஒரு நாள் அவரிடம் ஹிப்நாடிஸ சிகிச்சை பெற்று வந்த ஒரு நோயாளியான காத்ரீன் என்பவர் அவரிடம் தனது பழைய ஜென்ம நிகழ்வுகளைக் கூற ஆரம்பித்தார். முதலில் அதை நம்பாத வெய்ஸ்  எல்லா ரிகார்டுகளையும்  தானே  சென்று சரி பார்த்த போது காத்ரீன் சொன்ன அனைத்துமே உண்மை என்பதைக் க்ண்டு ஆச்சரியப்பட்டார். விளைவு, தன் பாதையை மாற்றிக் கொண்டு முழுநேர பாஸ்ட் லைஃப் ரிக்ரெஷன் நிபுணராக் மாறி விட்டார். சுமார் 4000 பேர்களுக்கு  முந்தைய ஜென்மத்தைக் கண்டுபிடித்து இந்தப் பிறவியில் உரிய சிகிச்சை அளித்ததாக அவர் கூறுகிறார். பிரபலமான அவரது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளோ ஏராளம். 2012இல் வெளியான ‘மிராக்கிள்ஸ் ஹாப்பன்’ என்ற அவரது நூலும் ‘தி ட்ரான்ஸ்ஃபர்மேஷனல் ஹீலிங் பவர் ஆஃப் பாஸ்ட் லைஃப்  மெமரீஸ்’ என்ற அவரது இன்னொரு  நூலும் பிரபலமானவை!

 

 

அட, நமது வைத்தீஸ்வரன் கோவில் உள்ளிட்ட ஊர்களில் நாடி ஜோதிடத்தில் இல்லாத விஷயமா என்ன, என்று தமிழர்களாகிய நாம் கேட்டால அதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை.

 

 

நிஜமான நல்ல நாடிஜோதிடர் ஒருவரிடம் சென்று ந்ம் கையைக் காண்பித்தால் உரிய ரேகையின் பெயரைச்  சொல்லி  அத்ற்கான சுவடியை அவர் எடுக்கிறார்; படிக்கிறார். அதில் முதல் பகுதியே நமது முந்தைய ஜென்மத்தில் நாம் என்னவாக இருந்தோம் என்பது பற்றி விரிவாகச் சொல்லப்படும் பகுதி தான்!

பின்னரே இந்தப் பிறவியில் என்ன தேதி என்ன நட்சத்திரத்தில் பிறந்தோம், ஜாதக அமைப்பு எப்படி உள்ளது என்பது பற்றியும் எதிர்காலம் பற்றியும் வரும். நம்மை முன் பின் பார்த்திராத ஒரு நபர் நமது நட்சத்திரத்தையும் பிறந்த தேதியையும் கூறுவது ஆச்சரியப்படவைக்கும் ஒரு விஷயம் தானே! ஆனால் உண்மையான நாடி ஜோதிட சுவடிகளை வைத்திருப்போர் மட்டுமே துல்லியமாகக் கூற முடியும்!

 

 

தமிழ் நாட்டில் பலகாலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நாடி ஜோதிடத்தின் ஒரு பகுதிக்கு இப்போது மேலை உலகத்தில் மவுசு  கூடி விட்டது. அதை ஹிப்நாடிஸ்த்தின் வாயிலாக அவர்கள் சொல்கின்றனர்.

டெல்லி, பம்பாய், பங்களூர் போன்ற நகரங்களில் சென்ற ஜென்மங்களை அறிந்து சொல்லும் ஹிப்நாடிஸ மையங்கள் இப்போது பெருகி வருகின்றன.

 

 

என்ன ஆவல் மனதில் ஊறுகிறதா,, போன ஜென்மத்தில் நாம் என்னவாக இருந்தோம் என்று தெரிந்து கொள்ளத்தான்!

********

 

 

 

பாவங்களும் அஜீரணமும்: மஹாபாரதத்தில் விசித்திர உவமை (Post No.3659)

2fc99-hell2b3

நரகக் காட்சிகள்

Written by London swaminathan

 

Date: 22 FEBRUARY 2017

 

Time uploaded in London:- 9-02  am

 

Post No. 3659

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

புறநானூற்றில் பாபம்

 

ஆன்முலை அறுத்த அறனிலோர்க்கும்

மாண் இழை மகளிர் கருச் சிதைத்தோர்க்கும்

பார்ப்பார்த் தப்பிய கொடுமையோர்க்கும்

வழுவாய் மருங்கில் கழுவாயும் உள என

நிலம் புடை பெயர்வது ஆயினும், ஒருவன்

செய்தி கொன்றோர்க்கு உய்தி இல் என

அறம் பாடின்றே — ஆயிழை கணவ!

புறநானூறு 34, ஆலத்துர்ர் கிழார் பாடியது

 

 

இது வால்மீகி சொன்ன விஷயம் (4-34-12); தமிழில் ஆலத்தூர் கிழார் தந்துள்ளார்.

 

இதன் பொருள்:

ஆராய்ந்து எடுத்த அணிகளை அணிந்த மஹாராணியின் கணவனான சோழன் ((குளமுற்றத்துத் துஞ்சிய)) கிள்ளிவளவனே!

பசுவில் பாலைப் பெறாதபடி அதைக் கொன்று தின்பது பாவம்;

பெண்கணிளின் கருவை அழித்தல் பாவம்;

அந்தணர்களுக்குத் தீங்கு செய்வது பாவம்;

இதற்கெல்லாம் கூட பரிகாரம் உண்டு; நீ தப்பிக்கலாம்;

ஆனால் பெரிய பூகம்பமே ஏற்பட்டு உன் சோழ நாடே அழிந்தாலும்

ஒருவன் செய்த உதவியை மறந்து அவனுக்குத் தீங்கு செய்தால் அதற்குப் பரிகாரமே இல்லை; கட்டாயம் நரகத்தில் விழுவாய் என்று தர்ம சாஸ்திரங்கள் சொல்லுகின்றன (புறம்.34)

வள்ளுவனும் இதையே சொன்னான்:

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை

செய்நன்றி கொன்ற மகற்கு ( திருக்குறள் 110)

 

பிராமணர்களுக்குத் தீங்கு செய்யாதே ; உன் முன்னோர்கள் யாரும் செய்ததில்லை என்று சோழன் நலங்கிள்ளி தம்பி மாவளத்தானை தாமப்பல் கண்ணனாரும் (புறம்.43) எச்சரிக்கிறார்.

c6295-hell2b2

நரகக் காட்சிகள்

பாவமும் அஜீர்ணமும்

ஒரு பாவத்தின் பலன், பசுவின் பால் போல உடனே கிடைக்காது; ஒருவன் வாழ்க்கையிலேயே அது தெரியும்; அப்படியில்லாவிடில் அது அவனுடைய பிள்ளைகள், பேரக்குழந்தைகளிடம் காணப்படும்; அதிகம் சாப்பிட்டவனின் வயிற்றில் உணவு அஜீரணமாகாமல் உட்கார்ந்துகொண்டு, எப்படித் தொல்லை கொடுக்குமோ அப்படி அதன் விளைவுகள் கட்டாயமாகத் தெரியும் (மஹாபாரதம் 1-75-2)

 

நா தர்மஸ் சரிதோ ராஜன் சத்ய: பலதி கௌர் இவ

புத்ரேஷு வா நப்த்ர்ஷு வா ந சேத் ஆத்மனி பஸ்யதி

பலதி ஏவ த்ருவம் பாபம் குருபுக்தம் இவோதரே

 

திருக்குறளில் பாபம்

 

திருவள்ளுவர் பாப, புண்ணியத்துக்காக ஒரு அதிகாரமே (வினைத் தூய்மை) ஒதுக்கிவிட்டார். அதிலிருந்து சில குறள்கள்:

 

ஈன்றாள் பசி காண்பான் ஆயினும் செய்யற்க

சான்றோர் பழிக்கும் வினை (குறள் 656)

 

அம்மாவே பசிக்கொடுமையில் வாடினாலும் பணம் சேர்க்க பாபத் தொழில்களைச் செய்யாதே

 

அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்

பிற்பயன் நற்பாலவை (659)

 

பிறரை அழவைத்து பிடுங்கிய பணம் எல்லாம், உன்னை அழ அழச் செய்துவிட்டு ஓடிப்போகும். உனக்கு பொருளே நஷ்டமானாலும், புண்ணியம் செய்தால் அது பிற்காலத்தில் பலன் தரும்

 

இடுக்கட் படினும் இளிவந்த செய்யார்

நடுக்கற்ற காட்சியவர் (654)

 

தனக்குத் துன்பமே வந்தாலும், அறிவுள்ளவர்கள், பாப காரியங்களைச் செய்யமாட்டார்கள்

 

எற்றென்று இரங்குவ செய்யற்க  செய்வானேல்

மற்றன்ன செய்யாமை நன்று (655)

ஐயோ, இப்படிச் செய்துவிட்டேனே என்று பின்னர் வருத்தப்படும் செயல்களைச் செய்யாதே; அப்படியே செய்துவிட்டாலும் மீண்டும் அதே பாபத்தைச் செய்யாதே

 

கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு அவைதாம்

முடிந்தாலும் பீழை தரும் (658)

 

பெரியோர்கள், செய்யக்கூடாது என்று ஒதுக்கிய செயல்களைச் செய்யக்கூடாது; அப்படியே செய்தாலும் அது முடிவு பெறாது; முடிந்தாலும் துன்பத்தையே தரும்.

03f2f-hell2band2bheaven2b1

சுவர்க்கக் காட்சிகள்

பகவத் கீதையில் பாபம்

பகவத் கீதையில் பாபம் பற்றி பல இடங்களில் கண்ணன் கூறுகிறார். வால்மீகி ராமாயணத்திலும் வால்மீகி பேசுகிறார். அவற்றைத் தனியாகக் காண்போம்.

 

பொதுவாகப், பெண்களைக் கொல்லுதல் பாபம்; புறமுதுகு காட்டுபவனைக் கொல்வது பாவம்; செய்நன்றி மறப்பது பாவம் என்ற கருத்துக்கள் இமயம் முதல் குமரி வரை உள்ளன.

 

 

from my earlier post of 5 March 2016:—

 

பஞ்ச மாபாதகம்

 

அக்னிதோ கரதஸ்சைவ சஸ்த்ரபாணி: தனாபஹ:

க்ஷேத்ரதாராபர்ஹதா ச பஞ்சைதே ஆததாயின:

 

அக்னிதா- மற்றவன் சொத்துக்கு தீ வைப்பவன்

கரத-மற்றவர்களுக்கு விஷம் வைப்பவன்

சஸ்த்ரபாணி- ஆயுதமில்லாதவனைக் கொல்பவன்

தனாபஹ:- மற்றவன் பணத்தைத் திருடுபவன்

க்ஷேத்ரதராபஹர்தா- மற்றவன் மனைவியை அபஹரிப்பவன்

 

மனுவும் (11-54) இது பற்றிக் கூறுகிறார்:-

பிரமஹத்யா சுராபானம் அஸ்தேயம் குர்வங்கனாகம:

மஹந்தி பாதகான்யாஹுஸ்த சம்சர்கி ச பஞ்சம:

பிரம்மஹத்ய- பிராமணனைக் கொல்லுதல்

சுராபானம்- மது பானம் அருந்தல்

ஸ்தேயம்- திருடல்

குர்வங்க நாகம:- குருவின் மனையிடம் தவறாக நடத்தல்

சம்சர்கி- மெற்கண்ட நாலு பேருடன் சஹவாசம்

 

பஞ்ச கர்ம சண்டாளர்கள்

 

(செய்கையினால் சண்டாளன் நிலையை அடைபவன்)

நாஸ்திக: பிசுனஸ்சைவ க்ருதக்னோ தீர்கதோஷ:

சத்வார:கர்மசண்டாளா ஜன்மஸ்சாபி பஞ்சம:

 

 

நாஸ்திக: – கடவுள் நம்பிக்கையற்றவன்

பிசுன: – பிசிநாரி/கெட்டவன்

க்ருதக்ன: – நன்றிகெட்டவன்

தீர்க தோஷக: -பாபி (பாவாத்மா)

ஜன்மத: – பிறப்பினால் சண்டாளன்

 

–subham–

 

மெசபொடோமியாவில்,எகிப்தில் நாய் தெய்வம்! 1000 நாய்கள் கல்லறை! (Post No.3644)

Written by London swaminathan

 

Date: 17 FEBRUARY 2017

 

Time uploaded in London:- 6-24 am

 

Post No. 3644

 

 

Pictures are taken from various sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

 

ஒருவன் நாய் போல அலைந்து திரிந்து, கண்டவர்களிடம் எல்லாம் உணவை பிச்சை எடுப்பதைவிட கேவலம் ஏதேனும் உண்டா? — மஹாபாரதம் 1-147-17

யாசமானா: பராத் அன்னம் பரிதாவே மஹீஸ்வவத்?

 

நாய்களைத்தான் மனிதன் முதல் முதலில் வீட்டு மிருகமாகப் பயன்படுத்தினான்; பழக்கப்படுத்தினான். ஓநாயிருந்து வந்தது நாய்!

 

இதற்குப் பின்னர் ஆடுகளையும், மாடுகளையும், குதிரைகளையும் பழக்கப்படுத்தி, பயன்படுத்தினான்.

b8ece-hachiko

டோக்கியோவில் ஹசிகோவுக்கு சிலை

 

உலகில் நாய்களை இலக்கியத்தில் ஏற்றிய முதல் நாடு இந்தியா! உலகின் மிகப் பழைய நூலான ரிக்வேதத்தில் சரமா என்ற நாயின் கதை உள்ளது. அதை கிரேக்கர்கள் ‘திருடி’ ஹெர்மிஸ் HERMES என்று கதை செய்துள்ளனர். கிரேக்கர்களுக்கும், பாரசீகர்களுக்கும் ஸ் (S) சப்தம் வராது ஸ என்பதை ஹ (H) என்று மாற்றிவிடுவார்கள். அதனால்தான் நமக்கு ஹிந்துக்கள் என்றும், இந்த நாட்டுக்கு இந்துஸ்தான், இந்தியா என்றும் பெயர் வந்தது. சிந்து நதிப் பிரதேசம் என்பதை ஹிந்து (S=H) என்று மாற்றி உச்சரித்தனர்.

 

இது தவிர 5000 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த மஹாபாரதத்தின் 18-ஆவது பர்வத்தில் தருமரின் (யுதிஷ்டிரரின்) பின்னால் சென்ற நாயின் கதை உள்ளது.

 

ராமாயண உத்தர காண்டத்திலும் ஒரு நாயின் கதை வருகிறது.

 

இதுபற்றியும், டோக்கியோ நகரில் ஹசிகோ (HACHIKO) என்ற நன்றியுள்ள நாய்க்கு சிலை வைத்திருப்பது பற்றியும், தமிழர்கள் 1300 ஆண்டுகளுக்கு முன்னரே ஊரைக் காப்பாற்றிய கோவிதன் என்ற நாய்க்கு நடுகல் வைத்தது பற்றியும் அலெக்ஸாண்டரின் நாய், குதிரை பற்றியும், காஞ்சி சங்கராசார்யார் மடத்தின் நாய் பற்றியும் ஏற்கனவே எழுதிவிட்டேன். இன்று எகிப்திய சுமேரிய நாய்களைக் காண்போம்.

 

இஸ்ரேலின் தலைநகரான டெல் அவீவுக்கு 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அஷ்கெலான் (ASHKELON)  என்ற நகரில் 1000 நாய்கள் புதைக்கப்பட்டதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது பாரசீக ஆட்சிக் காலத்தைச் சேர்ந்தது. இன்னொரு நகரான இசின் (ISIN) என்னுமிடத்தில் ஒரு கல்லறையும் கண்டுபிடிக்கப்பட்டது. இவை எல்லாம் ஆதிகால மெசபொடோமியா பிரதேசத்துக்கு உள்ள்டங்கிய பகுதி

 

எகிப்து நாட்டில் சேத் (SET), அனுபிஸ் (ANUBIS) நன்ற தெய்வங்கள் நாய் முகம் உடைய கடவுள் என்றும் நரிமுகம் உள்ள கடவுள் என்றும் இருவிதமாகப் பகர்வர்.

 c1190-horus_hieroglyphs

இறந்தவர்களின் இதயத்தை எடைபோடும் அனுபிஸ்.

92491-weighing_of_the_heart3

நாய்களின் கண்களுக்கு எமன் தெரியுமாம்!

 

எப்படி ரிக்வேத சரமா கதையை கிரேக்கர்கள் திருடி ஹெரமா என்று மற்றினரோ அப்படியே எமன் – நாய் தொடர்பையும் இந்துமதத்திலிருந்து உலகத்தினர் எடுத்துக் கொண்டனர்!

 

உலகம் முழுவதும் ஒரு நம்பிக்கை இருக்கிறது. நாய்களின் கண்களுக்கு எமன் தெரியும் என்று! உண்மையில் இக்கதை இந்துக்களின் கதை. மஹாபாரதத்தில் தருமனைப் பின்தொடர்ந்த நாய், தரும தேவதையின் மறு அவதாரம். இந்தியாவிலும் நாய்-எமன் தொடர்பு பற்றிய கதைகள் உண்டு. நாய்கள் ஊளையிட்டால் யாராவது இறப்பார்கள் என்று சொல்லுவர். இதற்கு விஞ்சான பூர்வ விளக்கமும் உண்டு.

 

நாய்களுக்கு 3000 மடங்கு மோப்ப சக்தி இருப்பதால், துப்புத் துலக்குவதோடு, சுனாமி, பூகம்பம் ஆகியவற்றின் நுண்ணலைகளை உணரும் சக்தியும் பெற்றுவிடுகிறது. இதனால் முன்கூட்டியே ஊளை இடும். இதனால்தான் நாயை யமனுடன் தொடர்பு படுத்துகின்றனர்.

 

சீன ராசிச் சக்கரத்தில் ஒரு மாதம் நாயின் மாதமாகும். இதே போல தென் அமெரிக்க அஸ்டெக் (AZTEC) நாகரீகத்திலும் இருபது நாள் (TWENTY DAYS A MONTH CALENDAR)  மாதத்தில் ஒரு நாளுக்கு நாயின் பெயர்.

நாய்களுக்கு நோயைக் குணப்படுத்தும் சக்தி உண்டு என்றும் மெசபொடோமியாவில் நம்பிக்கை இருந்தது.

fee5c-tutanhkamun_jackal

எகிப்தில்

 

அனுபிஸ், சேத் முதலிய கடவுளரின் முகம் நாய் போல இருக்கும். இதை சிலர் நாய் என்றும், மற்றும் சிலர் நரி என்றும் பகர்வர்.

 

ஆனால் நாய் என்பதே சரி. ஏனெனில் பிற பண்பாடு போலவே இறந்த மனிதனைக் கடைத்தேற்றும் பணியைச் செய்வது அனுபிஸ் என்ற கடவுள்தான். இது போல எல்லாக் கலாசாக்ரங்களிலும் இறந்த பின் நடக்கும் வாழ்வில் நாய்தான்  அணுசரணையாக உள்ளது.

 

எகிப்தில் முதல் அரச வம்ச மஹாராணியின் Queen Herneith of First Dynasty கல்லறையில் ஒரு நாயின் உடல் புதைக்கப் பட்டிருந்தது.. இன்னொரு அதிகாரி நாய்க்கு நீண்ட அடைமொழி கொடுத்து (One owner of such a dog, Senbi the Governor of Cusae in Upper Egypt (2000 BCE), named his hound ‘Breath of Life of Senbi”)   கல்வெட்டில் பொருத்தினார். இரண்டு பெரிய அதிகாரிகளின் நாற்காலிகளுக்கு கீழே நாய் அமர்ந்திருப்பது போல சித்திரம், சிலைகள் உள்ளன.

 

இடைக் காலத்தில் கல்லறைகளில் நாயின் வடிவத்தைச் செதுக்கினர். போர் வீரர்கள் தங்களின் பிரபுக்களிடம் விசுவாசமாக இருந்ததாலோ, கணவனிடத்தில் மனைவி விசுவாசமாக இருந்ததாலோ இந்த வழக்கம் ஏற்பட்டது.

 

இந்தியாவில் பைரவருக்கு நாய் வாஹனம். தத்தாத்ரேயர் அவதாரம் எப்போதும் நாய்களுடன் காணப்படுவார். இது போல கிறிஸ்தவ மத புனிதர்களில் மூன்று. (St Francis of Assisi, St.Hubert, St Eustace and St Roch) நான்கு பேர், எப்போதும் நாயுடனே சித்தரிக்கப்படுவர்.

Anubis

நாயின் விசுவாசமும், அன்பும் அறிவும் பற்றி நாள்தோறும் பத்திரிக்கை  செய்திகள்  வருகின்றன.

போலீஸ் துறையிலும் ராணுவத் சிறந்த சேவை ஆற்றிய நாய்களுக்கு பெரிய பரிசுகள் கொடுக்கப்பட்டன. நாய்கள் எதையும் விரைவாக கற்கும். அதனால் அதற்கு புதிய கட்டளைகளையும் பணிகளையும் கற்றுத் தருகின்றனர்.

 

எகிப்தியர் நாய் பற்றி சொல்லும் வசனம்: கடவுளும் நாயும் ஒருங்கே இருந்தனர். அம்புகளை விட வேகமாகப் பாய்வது நாய்கள்தான்” ( the dog was ‘one with the Gods, more swift than the arrows’).

 

–Subham–