
WRITTEN BY London swaminathan
swami_48@yahoo.com
Date: 19 SEPTEMBER 2019
British Summer Time uploaded in London – 16-25
Post No. 6988
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 11,000.

பாகிஸ்தானில் பிறந்தவர் பாணினி
உலகமே வியக்கும் வண்ணம் உலகின் முதல் இலக்கண புஸ்தகத்தை எழுதியவர் பகவான் பாணினி. இவர் எழுதிய சம்ஸ்க்ருத இலக்கண நூலைக் கண்டு உலகமே வியக்கிறது. காரணம் என்னவெனில் ரத்தினச் சுருக்கமான சூத்திரங்கள்! ஒரு எழுத்து கூட வீணாகப் பயன்படுத்தாத நூல். இதை எழுதிய பாணினி 2700 ஆண்டுகளுக்கு முன்னர் பாகிஸ்தானில் பிறந்தார். அவர் பிறந்த சாலாதுரா இப்போது பாகிஸ்தானில் ராவல்பிண்டிக்கு அருகில் இருக்கிறது 2700 ஆண்டுகளுக்கு முன்னர் அது இந்து பூமியாக இருந்தது. அவர் எழுதிய நூலின் பெயர் அஷ்டாத்யாயி (எட்டு அத்தியாயம்). அவருக்கு 300 ஆண்டுகளுக்குப் பின்னர் தோன்றிய காத்யாயனர் , பாணினி இலக்கண நூலுக்கு ஒரு உரைநூல் எழுதினார். அதுவும் ரத்தினச் சுருக்கமான நூல்! அதை வ்யாகரண வார்த்திகா என்று அழைப்பர்.
அந்த உரைகாரர் தென்னாட்டைச் சேர்ந்தவர்.ஏதோ வெள்ளைக்காரன்தான் இந்த நாட்டை ஒற்றுமைப் படுத்தினான் என்று உளறுவோருக்கு இது செமை அடி கொடுக்கும். பாகிஸ்தான் பகுதியில் நூல் எழூதியவருக்கு தென்னாட்டுக் காரர் உரை. அதுவும் 2400 ஆண்டுகளுக்கு முன்னர்!.
இதைவிட அதிசயம்- இந்த இரு நூல்களுக்கும் மாபெரும் உரை கண்டார் பதஞ்சலி. அந்த நூலுக்குப் பெயர் மஹா பாஷ்யம். உலகிலேயே மிகப்பெரிய உரைநூல்! அவர் பிறந்தது பாட்னா (பீஹார்) என்றும் தென்னாடு என்றும் கருத்து உளது. அவர் வாழ்ந்ததோ 2200 ஆண்டுகளுக்கு முன்னர்.

ஆக எங்கோ ஒருவர் எழுதிய இலக்கண நூலுக்கு பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் வசித்தவர்கள் 2200 ஆண்டுகளுக்கு முன்னரே உரை கண்டனர் என்றால் ‘ஏக பாரதம்’ என்னும் கொள்கைக்கு மேலும் ஒரு சான்று தேவையா?
2200 ஆண்டுகளுக்கு முன்னர் ஸம்ஸ்க்ருத மொழி பாகிஸ்தான் உள்ள வடமேற்கு இந்தியா முதல் தென் குமரி வரை பரவி இருந்தது (கோவலன் ஸம்ஸ்க்ருதச் சுவடியைப் படித்து ஒரு பார்ப்பனிக்கு உதவிய செய்தி சிலப்பதிகாரத்தில் உள்ளது.)
பேரழகி தமயந்தியை மணக்கப் போட்டா போட்டி!

இன்னும் ஒரு அதிசயச் செய்தி இதோ! நள தமயந்தி கதையைக் கூறும் நூல் நைஷதீய சரித்ரம். அதை 1100 ஆண்டுகளுக்கு முன்னர் புலவர் ஸ்ரீஹர்ஷ எழுதினார். அதில் பத்தாவது காண்டத்தில் ஒரு அழகான பாடல் வருகிறது. தமயந்தியின் ஸ்வயம்வரத்தை அவரது தந்தை பீமன், தலைநகரான குண்டினபுரத்தில் ஏற்பாடு செய்து 56 தேச ராஜாக்களுக்கும் செய்தி அனுப்பி இருந்தார். மன்னர்கள் மட்டுமின்றி தேவலோக நாயகர்களான இந்திரன் மித்திரன் வருணன், வாயு, அக்னி, யமன் ஆகிய அனைவரும் பேரழகி தமயந்தியை மணக்க ஆசைப்பட்டு மாற்றுருவில் வந்தனர். அவர்களுக்கு மன்னர் பீமன் மாபெரும் வரவேற்பு அளித்தார்.
அப்போது எல்லா மன்னர்களும் ஒருமனதான ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினர். நாம் எல்லோரும் ஸம்ஸ்க்ருதத்தில்தான் பேச வேண்டும்; நம்முடைய வட்டார மொழியில் பேசினால், தமயந்தி நாம் யார், எந்த தேசம் என்று கண்டு பிடித்துவிடுவாள். அவள் கவிதை எழுதும் அளவுக்குப் புலமை பெற்ற பெரிய அறிவாளி. ஆகையால் நாம் ஸம்க்ருதத்தில் பேசுவோம்.”
அக்காலத்தில் நாடு முழுதும் ஸம்ஸ்க்ருதம்தான் பொது மொழி என்பதை இது காட்டுகிறது. வட இமயம் முதல் தென் குமரி வரை ஸம்ஸ்க்ருதம் பரவி இருந்தது. மன்னர்கள் அதைப் பேசினர். ஸம்ஸ்க்ருதம் பேச்சு மொழி இல்லை என்று உளறிக்கொட்டிக் கிளறி மூடும் அறிவிலிகளுக்கு நெத்தியடி, சுத்தியடி, செமை அடி கொடுக்கிறார் புலவர் ஹர்ஷ. இதோ பத்தாம் காண்டம் 34ம் ஸ்லோகம்–
அந்யோன்ய பாஷாணாவபோத பிதே ஸம்ஸ்க்ருத்ரிமாபிர் வ்யவஹாரவஸ்து
திக்ப்யஹ சமதேஷு ந்ருபேஷு வாக்பிஹி சௌவர்க வர்கோ ந ஜனைர் அசிஹ்னி.
இந்த ஸ்லோகம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்கூட 56 தேச மன்னர்களும் ஸம்ஸ்க்ருதத்தில் பேசியதைக் காட்டுகிறது.
இந்த இரண்டு அற்புதச் செய்திகளை நான் அடையாறு நூலக டைரக்டர் டாக்டர் ஆர். சங்கர நாராயணன் எழுதிய ஆங்கிலக் கட்டுரையில் படித்தேன்.

–subham–















































































































