மாக்ஸ்முல்லர் மர்மம்! – 3 (Post No.4248)

Written by S.NAGARAJAN

 

 

Date: 27 September 2017

 

Time uploaded in London- 4-41 am

 

Post No. 4248

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

நண்பரா, கைக்கூலியா!

மாக்ஸ்முல்லர் மர்மம்! – 3

ச.நாகராஜன்

4

 

மாக்ஸ்முல்லரின் முழுப் பெயர் ஃப்ரெடெரிக் மாக்ஸிமில்லன் மாக்ஸ்முல்லர் (Friedrich Maximillan Max Muller)

 

பெரும்பாலானோர் நினைப்பது போல அவர் ஒரு பிரிட்டிஷ்காரர் அல்ல. அவர் ஒரு ஜெர்மானியர். பின்னால் பிரிட்டிஷ் பிரஜா உரிமை பெற்றார். 50 தொகுதிகள் அடங்கிய The Sacred Books of the East என்ற நூல் தொகுதியை அவர் பதிப்பித்தார்.

 

அவருக்கு ஜெர்மனியில் வேலை கிடைக்கவில்லை. ஈஸ்ட் இந்தியா கம்பெனியில் அவருக்கு ஒரு வேலை கிடைத்தது.

ஆகவே அவர் லண்டனில் குடியேற நேர்ந்தது.

 

உயர்நிலைப் பள்ளிப் படிப்பு முடித்த பின்னர் அவர் எந்த ஒரு தேர்வையும் எழுதவில்லை என்று டாக்டர் ப்ரொதோஷ் ஐச் (Dr Prodosh Aich)  அடித்துக் கூறுகிறார்.

 

Lies with Long Legs என்ற அவரது ஆய்வு நூல் படித்துச் சிந்திக்க வேண்டிய ஒன்று.

 

“தன்னை அவரே மாஸ்டர் ஆஃப் ஆர்ட்ஸ் (Master of Arts) என்று சொல்லிக் கொண்டார்.அவரது மனைவி அவரை டாக்டர் ஆஃப் பிலாஸபி என்று கூறிக் கொண்டார். அவரது மனைவி அவரை லெய்ப்ஜிக் பல்கலைக்கழகத்தில் (leipzig University) படித்ததாகக் கூறுகிறார். ஆனால் அதற்கான ஆதாரமாக எந்த ஒரு ஆவணமும் கிடைக்கவில்லை” என்கிறார் ஐச்.

 

அவர் ஒரு பொழுதும் இந்தியா வந்ததில்லை என்பது உண்மை.

ஆகவே அவர் சம்ஸ்கிருதத்தை இந்தியாவில் கற்கவில்லை என்பது தெளிவாகிறது. அப்பொது அவர் சம்ஸ்கிருதத்தை ஐரோப்பாவில் தான் கற்றிருக்க வேண்டும். அப்படியானால் அவருக்கு அதைச் சொல்லிக் கொடுத்தது யார்? எந்தப் பண்டிதர்?

எந்தப் பண்டிதருமில்லை.

 

ஒரு 18 வயதுப் பையன் இந்தியாவைச் சுற்றிக் கொண்டிருந்தான்.

அவனுக்கு சம்ஸ்கிருத அகரவரிசை அதாவது 51 எழுத்துக்கள் தெரியும்

 

அவனது பெயர் அலெக்ஸாண்டர் ஹாமில்டன் (Alexander Hamilton0. தனக்குத் தெரிந்த எழுத்துக்களை அவன் தான் மாக்ஸ்முல்லருக்குக் கற்றுக் கொடுத்தான்.

 

ஏராளமான பணம் கொடுத்து இந்தியாவில் பல பண்டிதர்களை நியமித்து வேதத்தை மொழி பெயர்த்தார் மாக்ஸ்முல்லர்.

பணம் கிடைத்ததால் தங்களுத் தெரிந்த வரை தெரிந்ததை அவர்கள் மொழி பெயர்த்தனர்.

 

இது தான் வேத மொழிபெயர்ப்பின் உண்மை வரலாறு.

 

5

லார்ட் மெக்காலே இந்திய நாட்டை கிறிஸ்தவ மயமாக்க வேண்டும் என்று திட்டம் போட்டான்.

 

அவன் போட்ட திட்டப்படி ரிக் வேதத்தை ஹிந்து மதத்திற்கு இழிவு உண்டாகும் வகையில் மொழி பெயர்க்க ஆரம்பித்தார் மாக்ஸ்முல்லர்.

 

மெக்காலே திட்டத்திற்கு இரையானவர்களில் கல்கத்தா சான்ஸ்கிரீட் காலேஜை செற்ந்த சான்ஸ்கிரீட் புரபஸரான பண்டிட் தாராநாத்  முக்கியமானவர்.

அவர் வாசஸ்பத்யம் என்ற ஒரு சம்ஸ்கிருத அகராதியைத் தொகுத்தார்.

 

அதில் வேண்டுமென்றே பல வார்த்தைகள் தவறாக மொழி பெயர்க்கப்பட்டன. 1863ஆம் ஆண்டு செய்யப்பட்ட அந்தப் பணி முக்கியமான ஹிந்து மத – வேத மத எதிர்ப்பு அகராதியாக அமைந்தது.

 

லார்ட் மெக்காலேயின் வேத மத ஒழிப்புத் திட்டம் மிக ஆழமான ஒன்று.

 

அவன் எழுதிய வார்த்தைகள் இவை:

 

We must at present do our best to form a class who may be interpreters between us and the millions whom we govern: a class of persons, Indian in blood and colour, but English in taste, in opinions, in morals, and in intellect.

 

“I have no knowledge of either Sanskrit or Arabic. But I have done what I could to form a correct estimate of their value….. I have never found one among them (Sanskrit or Arabic Scholars) who could deny that a single shelf of a good European library was worth the whole native literature of India and Arabia.”

 

லார்ட் மெக்காலேயின் உண்மை முகம் இது தான். ஒரு குருடன் விழி இருக்கும் அனைவரையும் குருடனாக்கத் திட்டமிட்டதைப் போல பழம் பெரும் நாகரிகமான ஹிந்து நாகரிகத்தை அதற்கு அருகில் கூட வர முடியாத கிறிஸ்தவத்தால் அழிக்க அவன் திட்டமிட்டான்.

 

இந்தத் திட்டத்தின் ஒரு அங்கமாக ஆனார் மாக்ஸ்முல்லர்.

அது எப்படி? அதற்கு ஆதாரம் இருக்கிறதா?

அடுத்துப் பார்ப்போம்.

***

 

 

 

 

 

 

 

 

 

சரஸ்வதி நதி பற்றிய சுவையான விஷயங்கள்! (Post No.4211)

Written by London Swaminathan

 

Date: 14 September 2017

 

Time uploaded in London- 10-47

 

Post No. 4211

 

Pictures are taken from various sources; thanks.

 

 

வேத காலத்தில் ஒரு பிரம்மாண்டமான நதி ஓடியது; அதன் பெயர் சரஸ்வதி; உலகின் மிகப் பழைய நூலான ரிக் வேதம் இதன் புகழ் பாடுகிறது. ஆனால் மஹா பாரத காலத்திலேயே (கி.மு.3100) இது வற்றிச் சுருங்கி விட்டது. இப்பொழுதும் மனிதர்கள் நம்புவது என்னவென்றால் இந்த நதி அந்தர்வாஹினியாக த்ரிவேணி சங்கமத்தில் (அலஹாபாத், உத்திரப் பிரதேசம்) கலக்கிறது என்பதாகும்

 

சரஸ்வதி நதி பற்றி பாபா அணுசக்தி ஆராய்ச்சி (B A R C) நிலையம் கொடுத்த தகவல்கள் இந்திய வரலா ற்றையே மாற்றிவிட்டது. நாம் இது வரை சிந்துவெளி நாகரீகம் என்று அழைத்தது எல்லாம் தவறு அது, வேத கால சரஸ்வதி நதி நாகரீகம் என்று விஞ்ஞான ஆராய்ச்சி நிரூபித்துவிட்டது!

 

ரிக் வேதம் 50 க்கும் மேலான இடங்களில் சரஸ்வதி நதியைக் குறிப்பிடுகிறது. அந்த வற்றாத ஜீவ நதிக்கு நம் நாவில் வெள்ளமெனப் பொழியும் சரஸ்வதி தேவியின் பெயரை வைத்தது என்ன பொருத்தம்!

 

நாகரீகத்தின் உச்சானிக் கொம்பில் நின்ற வேத கால இந்துக்கள் நதிகளுக்குப் பெண்களின் பெயர்களைச் சூட்டினர். தாய்மார்களின் கருணையும் அளவற்றதன்றோ!

 

ரிக்வேதம் போற்றும் சரஸ்வதி!

 

நீயே சிறந்த தாய்

நீயே தலைசிறந்த நதி

நீயே கடவுள்

 

ரிக்வேதத்தில் நதி ஸ்துதி என்று ஆறுகளை போற்றித் துதிக்கும் அற்புதமான பாடல் ஒன்று உண்டு! இதில் கங்கா, யமுனா, சரஸ்வதி, சுதோத்ரி (சட்லெஜ்) ஆகியன போற்றப்படுகின்றன. ஆரிய-திராவிட வாதம் பேசும் அறிவிலிகளுக்கு செமை அடி கொடுக்கும் பாடல் இது! ஏனெனில் இந்திய நதிகளைக் கிழக்கிலிருந்து மேற்காக வருணிக்கின்றன இந்த நதி ஸ்துதி. ஆக வேத காலத்திலேயே கிழக்கில்- கங்கைச் சமவெளியில் – பெரிய நாகரீகம் நிலவியது. மேலும் ரிக் வேதத்தில் அதிகப் பாடல்களில் பாடப்படும் இந்திரனின் திசை கிழக்கு! ஆகவே இந்துக்கள் மண்ணின் மைந்தர்கள்! வந்தேறு குடியேறிகள் அல்ல!

இந்த துதிப்பாடல் சரஸ்வதி நதியை சட்லெஜ்-யமுனை நதிகளுக்கு இடையே வைக்கிறது

 

நதிகளில் எல்லாம் புனித மான சரஸ்வதி உயிர்த்துடிப்புள்ள நதி; மலையிலிருந்து கடல் நோக்கிச் செல்லும் இந்த நதி அபரிமிதமான வளத்த்தைச் சுரக்கிறது

 

இப்பேற்பட்ட சரஸ்வதி பாலைவனத்தில் மறைவது பற்றி மஹாபாரதமும் ஐதரேய, சதபத பிராமணங்களும் பேசுகின்றன.

 

1872ம் ஆண்டில் சி.எF ஓல்தமும் ( C F Oldham and R D Oldham) ஆர்.டி. ஓல்தமும் நடத்திய சர்வேயில் சரஸ்வதியும் அதன் உபநதிகளும் ஒரு காலத்தில் ஓடியதை உலகிற்கு அறிவித்தனர். சரஸ்வதி நதிக்கு யமுனையும் சட்லெஜ் நதியும் தண்ணீர் கொண்டுவந்தன என்றும் புவியியல் மாற்றங்களால் அவை விலகிச் செல்லவே சரஸ்வதியின் ஒளி மங்கியது என்றும் அவர்கள் எழுதிவைத்தனர்.

விஞ்ஞானிகள் என்ன கண்டார்கள்?

 

வி.எம்.கே.புரி, பி.சி.வர்மா தலைமையிலான விஞ்ஞானிகள் குழு நடத்திய ஆய்வில் இந்த நதி அப்பர் ப்ளைச்டோசின் (UPPER PLEISTOCENE ) காலத்தில் இருந்தது,

கார்வால் இமயமலைப் பகுதியில் இருந்த பனிக்கட்டி ஆறுகள் உருகி இதற்கு தண்ணீர் அளித்தது. பின்னர் பனிக்கட்டி யுகத்தில் கதை மாறியது என்று சொன்னார்கள்.

 

(இந்தியாவின் முதல் அணுகுண்டு 1974லும் இரண்டாவது அணுகுண்டு 1998லும் வெடிக்கப்பட்டன)

1998 மே 11ல் பொக்ரானில் நாம் அணுகுண்டு வெடித்துச் சோதித்து உலகையே வியப்பில் ஆழ்த்திய போது, அந்த அணுகுண்டு வெடிப்பினால் நிலத்தடி நீருக்கு என்ன நேர்ந்தது என்பதை ஆராய்வதில் பாபா அணுசக்தி ஆராய்ச்சி நிலையம் ஈடுபட்டது. அபோது அது குடி நீருக்குப் பயன்படுத்தக்கூடியது என்பதும் கீழேயுள்ள தண்ணீர் 8000 முதல் 14000 ஆண்டுப் பழமையானது என்றும் தெரியவந்தது.

 

இது தவிர மத்திய நிலத்தடி நீர் கமிஷன் 24 கிணறுகளை வெவ்வேறு இடத்தில் தோண்டி ஆராய்ந்ததில் 23 கிணறுகளின் நீர் தூய குடிநீர் என்றும் கண்டது.

 

இதிலிருந்து வரலாற்று நிபுணர்கள் கண்ட முடிவு:

கி.மு.6500 முதல் கி.மு3100க்கு இடைப்பட்ட காலத்தில் ஹரப்பா நாகரீகத்துக்கு முந்தைய சரஸ்வதி நதிதீர நாகரீகம் இருந்தது . அப்போதுதான் ரிக்வேதப் பாடல்கள் எழுந்தன. பின்னர் கி.மு3100 முதல் கி.மு 1900 வரை சிந்துவெளி/ஹரப்பன் நாகரீகம் இருந்தது.

கிமு 1900 முதல் கிமு 1000 வரை சரஸ்வதி-சிந்து நாகரீகம் படிப்படியாக அழிவு நிலை க்கு வந்து சரஸ்வதி நதி அடியோடு மறைந்தது. இதனால் மக்கள் அங்கேயிருந்து கங்கைச் சமவெளிக்குக் குடியேறினார்கள்.

 

இந்த தேதிகள், வரலாற்று ரீதியில் சில சிக்கல்களை ஏற்படுத்தும். ஆயினும் விரிவான ஆய்வுகள் மூலம் புதிர்களை விடுவிக்கலாம்.

 

1995 ஆம் ஆண்டு ஆய்வுகள்

 

ராஜஸ்தானிலுள்ள ஜைசால்மர் மாவட்ட விண்கல புகைப்படங்களை ஆராய்ந்தபோது சரஸ்வதி நதியின் மறைந்த தடயங்களில் சில பகுதிகள் தென்பட்டன. இது பற்றி பாபா அணுசக்தி விஞ்ஞானிகள் CURRENT SCIENCE கரண்ட் சயன்ஸ் என்ற சஞ்சிகையில் எழுதினர். 1995ல் டாக்டர் எஸ்.எம் ராவ், டாக்டர் கே.எம்.குல்கர்னி ஆகியோர் ஐசடோப் பிரிவைச் (ISOTOPE DIVISION) சேர்ந்தவர்கள் . அவர்கள் நிலத்தடி  நீரின் ஹைட்ரஜன், ஆக்ஸிஜன், கார்பன்  ஐசடோப்புகளை ஆராய்ந்தனர். ரிக்வேதத்தில் சரஸ்வதி நதி பற்றிச் சொல்லப்பட்ட விஷயங்கள் உண்மை என்று அவர்கள் ஆய்வு முடிவுகள் காட்டின. இப்போது கங்கா நகர் மாவட்டத்திலுள்ள கக்கர் நதியின் வறண்ட நிலப்படுகைகள், பாகிஸ்தானிலுள்ள ஹக்ரா, நரா நதிகள் ஆகியன சரஸ்வதியின் ஒரு சில பகுதிகள். இன்னும் நிலத்தடியில் சரஸ்வதியின் நீர் உள்ளது கோடைகாலத்திலும் இந்த நீர், பயிர்கள் வளர உதவுகின்றன. ஜைசாலமர் பகுதியில் மிகக்குறைந்த அளவு மழை பெய்தாலும் நிலத்துக்கு 50-60 மீட்டர் ஆழத்தில் தண்ணீர் கிடைக்கிறது. இவை எல்லாம் சரஸ்வதி நதியின் மிச்ச சொச்சங்களே என்றும் கண்டனர்.

 

நிலத்தடி நீர் சில ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்பதை ரேடியோ கார்பன் தேதிகள் நிர்ணயிக்கின்றன.

 

 

1910 ஆம் ஆண்டில் ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை வெளியிட்ட ஜி.இ. பில்க்ரிம் ( G E PILGRIM) என்பவரும் மிகப் பழங்கால வண்டல் மண் படுகைகள் காணப்படுவதாகவும் இமயத்தின் அடிவாரத்திலிருந்து சிந்து வளைகுடா வரை காணப்படும் இப்படுகைகள் சிவாலிக் என்ற நதியாக இருக்கலாம் என்றும் எழுதினார்.

ரிக்வேத சரஸ்வதி பற்றி அவருக்குத் தெரியாது.

ரிக்வேதம் இந்த நதியை நதிகளுக்கு எல்லாம் தலையாயது என்று பாராட்டியதை அவர் அறியார்.

அம்பிதமே நதிதமே தேவிதமே சரஸ்வதி (ரிக்.2-41-16) புகழ்கிறது

 

(சிறந்த தாய், சிறந்த நதி,  சிறந்த தேவி சரஸ்வதி)

 

மஹோ ஆர்ணா சரஸ்வதி ப்ரசேதயதி கேதுன தியோ விஸ்வ  விரஜதி 1-3-12

 

சரஸ்வதி கடல் போன்றது; அவள் ஒளிவீசுகிறாள்; எல்லோருக்கும் ஊற்றுணர்ச்சி ஊட்டுபவள் அவளே

 

நி த்வததே வர அப்ருதிவ்ய இளைஸ்பதே சுதிநத்வே அஹ்னம்; த்ருஷத்வயம் மானுஷே அபயயாம் சரஸ்த்வயாம் ரெவத் அக்னே திதி (3-23-4)

 

ஓ அக்னியே நாங்கள் உன்னை பூமியின் புனிதமான இடத்தில் — இலா பூமியில்-  ஒளிமிகு நாட்களில் ஏற் றியுள்ளோம். த்ருஷத்வதி, அபயா, சரஸ்வதி ஆறுகளின் கரை மீது மானுடர்களுக்காகப் பிரகாசிப்பாயாக.

சித்ர இத் ராக ராஜக இத் அன்யகே சரஸ்வதீம் அனு: பர்ஜன்ய இவ ததநதி வர்ஷ்த்ய சஹஸ்ரம் அயுத ததாத் 8-21-18

 

சரஸ்வதி தீரத்தில் வசிக்கும்  புகழ்மிகு அரசன், மற்ற எல்லாரும் இளவரசர்கள். மழைக்கடவுள் மழையைப் பொழிந்து தள்ளுவது போல, அவன் பத்தாயிரம் பசுமாடுகளை ஆயிரம் தடவை தருகிறான்

அயஸி புரஹ; விஸ்வ ஆபோ மஹின: சிந்துர் அன்ய: சுசிர் யதி கிர்ப்ப்ய அ ஆ சம்த்ராத் 7-95-1/2

 

சரஸ்வதி ஒரு வெண்கல நகரம்; எல்லா நதித் தீரங்களைளையும் , நீர் நிலலைகளையும் விஞ்சி நிற்கிறது. மலையிலிருந்து சமுத்ரம் வரை தூய நீராக ஓடுகிறாள்

 

இப்படி எல்லா மண்டலங்களிலும் சரஸ்வதி புகழ்ப்படுவதால் ரிக் வேதம் என்பது கி.மு.3000க்கும் முன்னதாகவே சரஸ்வதி நதிக்கரைகளில் ஒலித்திருக்க வேண்டும்!

 

இந்தியாவிலிருந்து பாரசீக நாட்டுக்கு (ஈரான்) குடியேறிய ஜொராஸ்டரும் சரஸ்வதியைப் போற்றுகிறார்.

மனு தர்ம சாஸ்திரமும் இந்த நதியைப் புகழ்கிறது

சரஸ்வதிக்கும் த்ருஷத்வதிக்கும் இடைப்பட்ட பூமியே கடவுளால் உண்டாக்கப்பட்டது. இதுவே பிராமணர்கள் வாழுமிடம் (மனு 2-17-8)

 

ஆனால் வேத காலம் முடிவதற்கு முன்னரே சரஸ்வதி மறையத் துவங்கியதை பஞ்சவம்ச பிராமணம் தெளிவாகக் குறிப்பிடுகிறது

 

 

ராஜஸ்தானிலும் பாகிஸ்தானிலும் ஓடிய சரஸ்வதி பூகர்ப்ப மாற்றங்களால் நான்கு முறை திசை மாறி ஓடியது.

 

டெக்கான் காலேஜ் பட்டமேற்படிப்பு ஆராய்ச்சிக் கழகம் சரஸ்வதி நதியின் பாதை எப்படி எல்லாம் மாறியது என்று ஆராய்ந்து வெளியிட்டுள்ளது. கிமு4000 ஆம் வாக்கில் இமயமலையில் தோன்றிய சரஸ்வதி, மதுரா, கட்சிலுள்ள பஞ்சபத்ரா வழியாக ஓடியது. நாலாவது முறை திசை மாறியபோது அது சிந்து நதியில் இணைந்து தனது பெயரையும் புகழையும் இழந்தது. யமுனையும் சட்லெஜ்ஜும் தண்ணிரைக் கொணந்து கொட்டிவிட்டு யமுனை நதி திசை மாறிக் கங்கையில் கலந்தவுடன் சரஸ்வதியின் வளம் குறைந்தது

 

ஹரப்பன் நாகரீக நகரங்களான லோதல் காலிபங்கன் ஆகியன சரஸ்வதி நதிப் ப டுகையிலேயே அமைந்துள்ளன.

 

5000 ஆண்டுகளுக்கு முன் இமயமலையின் சிவாலிக்  குன்றுகளில் உதயமாகி ஹிமாசல் பிரதேஷ், பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் வழியாக ஓடி அரபிக் கடலில் கலந்த சரஸ்வதியின் கதை இது!

 

பேராசிரியர் வைத்யா போன்றவர்கள் சரஸ்வதி நதியின் கதையை புத்தகமாக வெளியிட்டுள்ளனர். தமிழிலும் சரஸ்வதியின் கதை வெளியாகியுள்ளது. நான் கொடுத்தது எல்லாம் பத்திரிக்கை செய்திகளின் தொகுப்பகும்.

 

இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் அடிக்கடி நில அதிர்ச்சிகள் ஏற்பட்டதே சரஸ்வதின் மறைவுக்குக் காரணம்.

 

சரஸ்வதி நதி பற்றிய வேத, இதிஹாச, பிராமன நூல்கள் தகவல்களை வரிசைப் படுத்தினால் வேத காலம், சிந்துவெளி, சரஸ்வதி நாகரீக காலங்களை உறுதிப்படுத்திவிடலாம்.

 

Geo Morphologist Dr Amal Kar ஜியோ மார்ப்பாலஜிஸ்ட டாக்டர் அமல் கர் சில சுவையான விஷயங்களைச் சொல்லுகிறார்:

 

பத்து லட்சம் ஆண்டுகளுக்கும் 40,000 ஆண்டுகளுக்கும் இடையே சரஸ்வதி நதி தார்ப் பாலைவனம் வழியே ஓடியது

லோக்பட் என்னும் துறைமுக நகரம் கல்விக்கும் வணிகத்துக்கும் பெயர்பெற்ற இடம்.  இந்த நதிக்கரையில் இருந்தது.

மஹாபாரதம் குறிப்பிடும் நாராயண சரோவர் இதன் கரையில் இருந்தது

 

ஹரப்பன் நாகரீகத்துக்கும் முந்தைய அலிபங்கன், கலிபங்கன் நாகரீகம் இதன் கரையில் செழித்தோங்கியது.

சதத்ரு (சட்லெஜ்) என வேதம் குறிப்பிடும் நதி இதன் உபநதியாகும்.

 

மஹாபாரதம் சப்த சரஸ்வதி என்னும் நதி பினாசன் (விநாசன்) என்னும் இடத்தில் மறைவதைக் குறிப்பிடுகிறது.

 

TAGS: சரஸ்வதி, கக்கர், வேத நதி, நதி துதி

 

–SUBHAM–

 

 

 

இலங்கை பற்றி சம்பந்தர் தகவல் (Post No.4194)

Written by London Swaminathan

 

Date: 8 September 2017

 

Time uploaded in London- 18-28

 

Post No. 4194

 

Pictures are taken from various sources; thanks.

 

 

குன்றினுச்சி மேல் விளங்கும் கொடி மதில் சூழ் இலங்கை

அன்றிநின்ற அரக்கர்கோனை யருவரைக்கீழ் அடர்த்தாய்

என்றுநல்ல வாய்மொழியா லேத்திராப் பகலும்

நின்றுநைவா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே

 

–திருநெடுங்களம், சம்பந்தர் தேவரம் முதல் திருமுறை

 

பொருள்

உச்சிமேல் விளங்கும் இலங்கைக் குன்று; அதைக் கொடிய மதில் சூழ்ந்துள்ளது அன்று உன்னை எதிர்த்த இராவணனை அடர்த்தாய் – என்று துதித்து, இராப்பகலாக உருகித் தொழுகின்ற அடியார்களின்  இடரினைக் களைவாயாக. திரு நெடுங்களத்து இறைவா!

அன்றி= கோபித்து, பகைத்து

வாய்மொழி= தோத்திரம், துதி

நைவார் = மனங்கனிவார்

 

ஒரு காலத்தில்,  மேரு மலையிலிருந்து, வாயு தேவனால் பெயர்த்து வீழ்த்தப்பெற்ற மூன்று சிகரங்களுல் ஒன்றாகிய இலங்கைக் குன்று.

இந்தப் பாட்டிலிருந்து கிடைக்கும் புவியியல் செய்திகள்

 

1.ஒரு காலத்தில் பெரிய சுனாமி அல்லது கடலடி பூகம்ப வெடிப்பில் இலங்கைக் குன்று. தோன்றியது.

 

2.அதன் உச்சியில் இலங்கை இருந்தது

 

 

  1. 1400 ஆண்டுகளுக்கு முன்னர், சம்பந்தர் காலத்தில் கூட, இலங்கை பற்றி தெளிவான தகவல் மக்களுக்குத் தெரிந்திருந்தது.

 

  1. நூற்றுக் கணக்கான தேவாரப் படல்களில் கடல் சூழ் இலங்கை என்று வருவதால், அது ஆதி காலம் முதல் தீவு நாடாக இருந்தது.

 

  1. அந்த எழில் மிகு, பொன்னால் வேயபட்ட குன்று மேல் இருந்த இலங்கை, எப்படித் தோன்றியதோ அப்படியே கடலுக்குள் மறைந்திருக்க வேண்டும்

 

  1. கடலடி ஆராய்ச்சி மூலம், இந்த அழிவு ஏற்பட்ட காலத்தைக் கணக்கிடுவது, ராமாயண காலத்தை அறிய உதவும்

 

7.நமக்குத் தெரிந்தவரை கி.மு1600ல் கிரேக்க Santorini/ Theraசான்தொரினி (தேரா) யில் ஏற்பட்ட வெடிப்பு உலக மஹா நில- கடல் மாற்றங்களை ஏற்படுத்தியது.

 

–subham–

 

பாஹுபலி வாழ்க! கோமடேஸ்வர் வெல்க! (Post No.4158)

Written by London Swaminathan

Date: 24 August 2017

Time uploaded in London- 17-16

Post No. 4158

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google, Wikipedia and newspapers; thanks.

சமண மதம் அஹிம்சையை போதிக்கும் மதம். ஆனால் இலங்கையில்  புத்த துறவிகள் (பிட்சுக்கள்) எப்படி அரசியலில் தலையிட்டு குழப்பம் விளைவித் தார்களோ அப்படி 1500 ஆண்டுகளுக்கு முன்னர் சமண துறவிகள் தமிழ்நாட்டு அரசியலில் தலையிட்டு குழப்பம் விளைவித்தனர்.

இதை விளக்க ஒரு சிறிய சம்பவம் போதும்; பாண்டிய நாட்டில் சைவம் தழைத்தோங்க அருள் புரியுங்கள் என்று வளவர்கோன் பாவை மங்கையற்கரசியும் முதல் அமைச்சர் குலச்சிறையாரும் விடுத்த வேண்டுகோளின் பேரில் மதுரைக்கு எழுந்தருளினான் ஒரு சிறிய பிராமணப் பையன். அவன் பெயர் சம்பந்தன். அவன் தங்கியிருந்த மடத்துக்குத் தீ வைக்க சமணர்கள் முயன்றனர். உடனே அந்த தீயைப் “பையவே சென்று பாண்டியர்க்கு ஆகவே” என்று அவர் கட்டளையிட அக்கினிதேவன் பாண்டிய மன்னன் வயிற்றில் புகுந்து சூலை நோயை உண்டாகினான். அதைத் தீர்த் வைக்க திரு ஞான சம்பந்தர் முயன்று,  அனல்வாதம், புனல் வாதம் போட்டிகளில் வென்று உலகப் புகழ் பெற்றார். அழிவு நிலையில் இருந்த சைவ சமயத்தை தழைத்தோங்க வைத்தார். சுப்பிரமணியரின் மறு அவதாரம் சமபந்தப் பெருமான் என்பதை உலகம் உணர்ந்தது. அஹிம்சையைப் பின்பற்ற வேண்டிய சமணர்கள் ஹிம்சை செய்ததால் பாண்டிய மன்னர் அவர்களைக் கழுவில் ஏற்றினான்.

மத மாற்றம் செய்ய முயல்பவர்கள் உலகெங்கும் என்ன அட்டூழியங்களை செய்தார்களோ அதையே புத்த, சமண அரசியல்வாதிகள் செய்தனர்.

இவ்வளவு தெரிந்தும் சமணர்கள் மீது எனக்கு அபார அன்பு உண்டு. அவர்கள் இலக்கணப் புலிகள்;    மொழியியல் வல்லுநர்கள்! தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் அரிய பெரிய நிகண்டுகளையும், இலக்கண நூல்களை யும் யாத்த பெருமை அவர்க ளையே சாரும்.

லண்டனிலிருந்து நான் என் குடும்பத்துடன் சென்னைக்குப் பயணம் செய்து கொண்டிருந்தேன். எங்கள் அருகில் இரு இளைஞர்கள் அமர்ந்திருந்தனர். எங்களுக்கு விமானப் பணிப்பெண்கள் உணவு தந்த போது இவ்விரு இளைஞர்களும் அதை வேண்டாம் என்று சொல்லிவிட்டு அவர்கள் கொண்டுவந்த உணவுப் பொட்டலங்களை அவிழ்த்துச் சாப்பிட்டனர். பின்னர் நான் மெதுவாகப் பேச் கொடுத்து காரணம் என்ன என்று கேட்ட போதுதான் தெரிந்தது அவர்கள் சமண (ஜைன) மதத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கிழங்கு, வெங்காயம், பூண்டு, மாமிச வகையறாக்களை அறவே வெறுப்பவர்கள் என்றும், சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு சாப்பிட மாட்டார்கள் என்றும் அறிந்தேன். பின்னர் கொடுக்கப்பட்ட உணவுகளையும் மறுத்து பட்டினியுடன் இந்தியாவரை பயணம் செய்தனர் அந்த இளைஞர்கள். என்னுடன் வேலை பார்த்த ஒரு சமணரும் இப்படித்தான். மேலும் லண்டன் வாழ் ஜைனர்கள், இந்துக்களின் கோவில்களுக்கும் வருவர். தீபாவளியைக் கொண்டாடுவர். ஏனெனில் கர்ம வினைக் கொள்கைகளில் அவர்கள் நம்முடைய கொள்கை ஏற்கின்றனர்.

இன்ன பிற காரணங்களால் சமண மத சின்னங்கள் உள்ள இடங்களுக்குத் தவறாமல் போய் வருவேன். மதுரையைச் சுற்றி நாகமலை யானை மலை, திருப்பறங்குன்ற மலைகளில் உள்ள சமன குகைகளுக்கு விஜயம் செய்ததை இங்கு படங்களுடன் வெளியிட்டும் உள்ளேன்.

இந்த முறை எனது  இந்திய விஜயத்தில் மிகக் குறுகிய காலம் இருந்த போதும், கர்நாடகத்தில் உள்ள சிரவண பெலகோலா செல்ல வாய்ப்பு கிடைத்ததை நழுவவிட விரும்பவில்லை. மழைத் தூறலுக்கு இடையே 2300 ஆண்டுப் பெருமை வாய்ந்த விந்திய கிரி- சந்திர கிரி குன்றின் அடிவாரத்தை அடைந்தோம். இங்குதான் மௌரியப் பேரரசன் — அலெக்ஸாண்டரை நடுநடுங்க வைத்த பிரம்மாண்ட இந்தியப் படை கொண்ட— சந்திர குப்த மௌரியன்  துறவி போல வாழ்ந்து உயிர்நீத்தான் என்பது ஐதீகம்- செவிவழிச் செய்தி.

அந்த மலையின் மீது பிரமாண்டமான ஒற்றைக் கல் சிலையாக நிற்கும் பாஹுபலி — கோமடேஸ்வர் — ஆயிரம் ஆண்டுப் பழமையுடையவர். உலக அதிசயங்களில் ஒன்று. இது பற்றி 12 ஆண்டுக்கு ஒரு முறை அவருக்கு நடக்கும் மஸ்தகாபிஷேகம் பற்றி தினமணியில் விரிவாக எழுதியுள்ளேன். மேலும் அவரது தபால் தலை வெளியான போது ஒரு ஷீட் (sheet) வாங்கி வைத்துக் கொண்டேன் .  நேரில் பார்க்க வாய்ப்பு கிடைத்த போது புளகாங்கிதம் ஏற்பட்டது.

57 அடி உயரம் உடைய கோமடேஸ்வர் (பாஹுபலி) நிற்கும் மலை 2000 அடி உயரம். அதுவும் செங்குத்தான படிகளில் ஏற வேண்டும். எல்லோரும் மூச்சு இளைக்க மெதுவாக ஓய்வு எடுத்துதான் ஏற முடியும்.

மேலே ஏறுவதற்கு 45 நிமிடம்! இறங்குவதற்கும் 45 நிமிடம்! மேலே சென்றவுடன் செலவழிக்கும் நேரம் நம் இஷ்டத்தைப் பொறுத்தது. ஆனால் செருப்பு போட்டுக் கொள்ள அனுமதி இல்லை. இது சமணர்களின் கோவில். அங்கே ஒரு அர்ச்சகர் தேங்காய் பழம் நைவேத்தியம் செய்கிறார். ஆகவே இரண்டு மணி நேரத்துக்கு பாத அணிகள் இல்லாமல் சென்று தரிசனத்தை முடித்தோம்.

சிரவண பெலகோலா , கர்நாடக மாநிலத்தில், பெங்களூரில் இருந்து சுமார் 160 கிலோ மீட்டர் தொலைவில், ஹாசன் மாவட்டத்தில் உள்ளது. இந்த சிலை கி.பி.980-ஐ ஒட்டி, கங்க வம்ச மன்னர் ராஜமல்லனின் தளபதி சவுண்டராயன் என்பவரால் உருவாக்கப்பட்டது.

கோமடேஸ்வர் என்பவர் முதல் தீர்த்தங்கர ரிஷபதேவரின் புதல்வர். ஒரு சமண துறவி. ஒரு யோகி, புலன்களை வென்ற நிலையில், தவம் செய்யும் காட்சி இது. அவர் மீது, செடி கொடிகள் வளரும்; பாம்புப் புற்றுகள் தோன்றும். வால்மீகி முனிவரைப் போல!! அதைத் தத்ரூபமாகச் சித்தரித்துள்ளார்கள் சிற்பிகள்  இங்கே. மாபெரும் சிலை மீது செடிகொடிகள் படருவது போல சிற்பம். கீழே பாம்புகள்; அதில் ஒரு பாம்பு பொந்துக்குள் நுழைந்து வால் மற்றும் தெரியும் காட்சி. அதைச் சுற்றிலும் சமண தீர்த்தங்கரர், சமண துறவிகளின் அற்புதமான சிலைகள். யோகம் என்றல் என்ன என்பதை விளக்கும் சிலைகள். இது போல, ஆனால் தலையில்லாத நெடிய சிலைகள் சிந்து-சரஸ்வதி நாகரீக இடங்களில் இருந்தும் கிடைத்துள்ளன.

பெல  கோலா என்பது தூய தமிழ்ச் சொற்கள் – சமண முனிவரின் ‘வெள்ளைக் குளம்’ என்பது சிரவண ‘பெல குலா’ என்று திரிந்து விட்டது!

இங்கு 800-க்கும் மேலான கல்வெட்டுகள் உள்ளன. கோமடேஸ்வர்– பாஹு பலியின் காலடியில் பிராக்ருத, தேவநாகரி லிபி கல்வெட்டு உள்ளது. கி.பி. 600 முதலான கல்வெட்டுகள் உள்ளன. ஆனால் மௌரியத் தொடர்பைக் காட்டும் கல்வெட்டுகள் கிடைக்கவில்லை. செவிவழிச் செய்தி, இலக்கியம் மூலம் மௌரியர் தொடர்பு பற்றி அறிகிறோம். சமண தீர்த்தங்கர சிலைகள் இருட்டு அறைகளில் உள்ளதால் அதன் முழு அழகையும் காண இயலவில்லை. சிலை அருகில் அன்ன தானத்துக்கு பணம் செலுத்தலாம். நன்கொடைக்கு ரசீதும் கொடுக்கிறார்கள்.

 

கர்நாடகத்தில் ஒரு அதிசயம்!

நாங்கள் சென்ற பேலூர், ஹலபேடு, சிரவணபெலகோலா — எங்குமே நுழைவுக் கட்டணம் கிடையாது; காலணிகளைப் பாதுகாக்க மட்டுமே கட்டணம் கொடுத்தோம்; அதற்கும் தொல்பொருட் துறைக்கும் தொடர்பு இல்லை.

இந்தச் சிலைகளைக் காணும் போது அச்சமும் பயபக்தியும் ஏற்படுகிறது. அங்கங்கள் அனைத்தும் பரிபூரண அழகில், கன கச்சித அளவுகளில் அளவில் செதுக்கப்பட்டுள்ளன.

(2017 ஆகஸ்ட் 21-ஆம் தேதி சிரவண பெலகோலா சென்ற பின்னர் எழுதிய கட்டுரை.)

சுபம்–

கிரேக்க நாட்டில் இந்துச் சடங்கு! (Post No.4131)

Written by London Swaminathan

Date: 5 August 2017

Time uploaded in London- 13-14

Post No. 4131

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

சங்கரன் கோவில் கொடுங்கலூர் பகவதி கோவில், மதுரை மாரியம்மன் கோவில் முதலிய நூற்றுக் கணக்கான கோவில்களில் பக்தர்கள் ஒரு விநோத காணிக்கை செலுத்துவதுண்டு. உடல் உறுப்புகளில் ஏதாவது நோய் வந்தால் அது குணமாக அல்லது குணம் அடைந்ததற்கு நன்றி தெரிவிக்க அந்த உறுப்பின் உருவத்தை வாங்கி கடவுளுக்குப் படைப்பர். பொதுவாக வெள்ளியிலோ பித்தளையிலோ கண், காது, கால், கை உருவங்கள் இருக்கும். இதே போல குழந்தை பிறக்காதவர்கள் ஒரு குழந்தை உருவத்துடன் தொட்டில் வாங்கி மரத்தில் கட்டும் வழக்கமும் உண்டு. இந்த வழக்கம் சுமேரிய நாகரீகத்திலும் இருந்தது பற்றி எனது ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றில் எழுதியிருந்தேன்.

 

ஜூலை மாதக்  கடைசியில் (2017) குடும்பத்துடன் ஏதென்ஸ் நகரத்துக்குச் சென்று இருந்தேன். உலகப் புகழ்பெற்ற பார்த்தினான் (Parthenon) கட்டிடம் (அதீனா தேவியின் கோவில்) இருக்கும் குன்றுக்கு கீழே புகழ்பெற்ற ஆக்ரோபோலிஸ் மியூசியம் (Acropolis Museum) உள்ளது. அங்கு அரிய கலைப் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. முதல் மாடிவரையுள்ள முக்கியப் பொருட்களைப் புகைப்படம் எடுக்கக்கூடாது என்று தடுத்துவிட்டனர். ஆகையால் மியூசியம் கடைக்குச் சென்று பட அட்டைகளையும் (Picture Cards)  பிரிட்ஜில் (Fridge) ஒட்டுவதற்கான மாக்னெட்/ காந்தங்களையும் வாங்கினேன். எந்த நாட்டுக்குப் போனாலும் அந்த நாட்டின் நினைவாக அந்த நாட்டின் சின்னம் உள்ள பிரிட்ஜ் காந்தம் (Fridge Magnet) வாங்குவது என் வழக்கம். போட்டோ எடுக்கக் கூடாது என்று தடுத்ததால் பட அட்டைகளையும் வாங்கும் நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அதுவும் நல்லதாகப் போயிற்று.

‘கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது போல’ நான் தேடிய ஆராய்ச்சி விஷயங்கள் கிடைத்தன. இந்துக்களைப் போலவே அவர்களும் ஒரு தேவதைக்கு செலுத்திய காணிக்கையின் படம் கிடைத்தது. அதில் கல்யாணம் ஆவதற்காக கன்னிப் பெண்கள் (கன்யா ஸ்த்ரீகள்) செலுத்திய நூற்கும் (Spinning Whorls) சுழல்கள் இருந்தன. நிம்ப் (Nymphe) என்னும் தேவிக்கு செலுத்தப்பட்ட காணிக்கை அவை.

 

தமிழர்கள் அணங்கு என்றும் சம்ஸ்கிருதத்தில் நங்கை (அங்கண், சுராங்கனி) என்றும் இளம் தேவதைகளை அழைப்பர். இந்தச் சொல் கிரேக்க மொழியில் நைம்ப், நிம்ப் (Nymphe, Nymph) என்று திரிந்துள்ளது. நீர் நிலைகள், மலைகள், காடுகள், மரங்களில் அணங்கு  இருப்பதாக சங்க இலக்கியங்களும் சம்ஸ்கிருத இலக்கியங்களும் செப்புகின்றன. கிரேக்கர்களும் இப்படி நம்பினர். கல்யாணம் ஆகாத பெண்கள் நம்மூரில் திருமணஞ்சேரி போன்ற தலங்களுக்குச் சென்று காணிக்கை, வேண்டுதல் செய்வது போல கிரேக்கத்திலும் (Greece) நடந்தது தெரிகிறது.

 

புதிய ஐடியாக்கள் (New Ideas)

 

ஒவ்வொரு நாட்டிற்குச் சென்று வந்த பின்னரும் நான் சில பிஸினஸ் ஐடியாக்(Business Ideas)  களை எழுதி வருகிறேன். இப்போது மனதில் தோன்றும் விஷயங்களை எழுதுகிறேன்:

1.ஏதென்ஸில் ஒரு கடையில் கிரேக்க தத்துவ அறிஞர் படங்களுடன் சீட்டுக் கட்டு ( Greek Philosophers Playing Cards) வைத்திருந்தனர். பிரித்துக் காட்டுங்கள் நான் வாங்கிக் கொள்கிறேன் என்றேன். சாக்ரடீஸ், பிளாட்டோ, அரிஸ்டாடில், பிதகோரஸ், ஹோமர் என்று பல அறிஞர் படங்களையும் பல பொன் மொழிகளையும் பார்த்தவுடன் அதை இரண்டரை யூரோ கொடுத்து  வாங்கினேன். ஆனால் சாக்ரடீஸ் படத்தை ஜோக்கர் (Joker Card) கார்டில் போட்டது எனக்கு சிரிப்பை வரவழைத்தது. கிரேக்கர்களுக்கு சாக்ரடீஸ் மீது அவ்வளவு மதிப்பு!!

 

நாமும் இதே போல பல நல்ல விசயங்களுடன் சீட்டுக்கட்டுகள் தயாரிக்கலாமே. கோவில்கள், தலங்கள், அறிஞர்கள், பொன் மொழிகளுடன் சீட்டுக் கட்டுகள் (ஆங்கலத்தில்) தயாரித்தால் வெளி நாட்டினரும் வாங்குவர்.

 

ஐடியா 2

இன்னொரு கடை வாசலில் பொன்மொழிகள் அடங்கிய புக் மார்க்குகள்  (Book Marks) இருந்தன. இத் போல ராமகிருஷ்ண மடத்தில் விவேகாநந்தர் முதலியோரின் புக் மார்க் வாங்கி இருக்கிறேன். ஆனால் ஏதென்ஸில் நல்ல தரமான, வலுவான பிளாஸ்டிக் அட்டையில் 12 கிரேக்க அறிஞர்களின் படங்களுடன் அவர்களுடைய பொன்மொழிகள் கிடைத்தன. அதைப் பல மொழிகளில் மொழி பெயர்த்தும் தந்திருப்பதால் பல நாட்டினரும் வாங்குவர். நாமும் இப்படி பொன் மொழி அட்டைகளை ‘புக் மார்க்’ ஆக விற்கலாமே!

 

தரம் மிகவும் முக்கியம் இல்லாவிடில் வெளிநாட்டினர் வாங்க மாட்டார்கள். மூன்று புக் மார்க் ஒரு யூரோ வீதம் வாங்கினேன்.

 

ஐடியா 3

நான் எந்த நாட்டிற்குப் போனாலும் அந்த ஊரின் முக்கியப் படமுள்ள பிரிட்ஜ் மாக்னெட் (Fridge Magnets) வாங்கி, வீட்டில் பிரிட்ஜில் ஒட்டி வைப்பேன். இது போல பார்த்தினான் படமுள்ள மாக்னெட்டுகளை வாங்கினேன். இது நல்ல பிஸினஸ். வெளி நாட்டு மியூசியங்களில் காபிக் கடைக்கு அருகில் இப்படி கடை வைத்து அதில் பட அட்டைகள், பேனாக்கள், கீ செயின்கள், குழந்தைகளுக்கான டிராயிங் புத்தகங்கள், அறிவூட்டும் நூல்கள் என விற்கிறார்கள். நல்ல வியாபாரம் நடக்கிறது. நாமும் ஒவ்வொரு கோவிலிலும் நல்ல தரமான பொருட்களை விற்றால் நல்ல பணம் கிடைக்கும்.

முன்னொரு காலத்தில் நானும் இந்தியாவில் தொல்பொருட் துறை அலுவலத்துக்குச் சென்று கருப்பு வெள்ளைப் (Black And white) படங்களை வாங்கி இருக்கிறேன். அவைகளை எல்லாம் இப்போது பார்த்தால் அழுகையும் சிரிப்பும் வருகிறது. வெளிநாடுகளைவிட மிகவும் நல்ல கலைப் பொக்கிஷங்களை வைத்துக்கொண்டு அவைகளை விற்பனை செய்யும் திறன் இல்லையே என்று அழுகை. இப்படித் தரக் குறைவான படங்களை அவர்கள் விற்றதையும் அதை நான் வாங்கி பொக்கிஷம் போல வைத்திருந்ததையும் நினைத்து ஒரே சிரிப்பு.

 

ஏதென்ஸ் அக்ரோபொலிஸ் (Acropolis Museum in Athens) மியூசியத்தில் ஒரு யூரோவுக்கு இரண்டு (Picture Cards) அட்டைகள் வாங்கினாலும் அவைகளைக் கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம்; அப்படி நல்ல தரம்.

 

சுருக்கமாகச் சொல்லப் போனால், எல்லா சுற்றுலாத் தலங்களிலும் அங்கீகரிக்கப்பட்ட கடைகளும் காப்பிக் கடைகளும் இருக்க வேண்டும் அங்கே அந்தந்த ஊருக்கு ஏற்ற படங்களுடன் நூற்றுக்கணக்கான கலைப் பொருட்கள், படங்கள், பிரிட்ஜ் மாக்னெட், ஸ்டிக்கர்களை விற்க வேண்டும்.

 

–subham–

 

அதீனா தேவி தோன்றிய கதை (Post No.4128)

Written by London Swaminathan

Date: 4 August 2017

Time uploaded in London- 12-14

Post No. 4128

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

அதீனா என்னும் தேவதை (Goddess Athena) இந்துமதக் கடவுளரான துர்கா சரஸ்வதி, லெட்சுமி ஆகிய மூவரின் பிம்பம் என்று சொல்லலாம். நாம் எப்படி ஒரே சக்தியை மூன்று துறைகள் கொடுத்து மூன்று தேவிகளாக வழிபடுகிறோமோ அதே போல கிரேக்கர்களும் கல்வி, வீரம், வெற்றி ஆகியவற்றுக்கு அதிதேவதையாக அதீனாவைத் தேந்தெடுத்தனர். இந்துமதத்துக்கும் கிரேக்க கலாசாரத்துக்கும் உள்ள தொடர்புகளை ஏற்கனவே சில கட்டுரைகளில் விளக்கியுள்ளேன். அதீனாவின் சின்னம் ஆந்தை. பறவைகளில் மிகவும் புத்திசாலி ஆந்தை என்பதால் இந்த தெரிவு. இந்துக்   கடவுளான லெட்சுமிக்கும் உலூக என்றால் வடமொழியில் ஆந்தை. தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் அந்த பெயர்களுடன் புலவர்களும் அறிஞர்களும் உண்டு (ஓதலாந்தை, பிசிர் ஆந்தை)

 

அதீனா பற்றிய குறிப்புகள் கி.மு.800 முதல் கிடைக்கின்றன. அதாவது வேத காலக் கடவுளருக்கு மிகவும் பின் வந்தவள். வேத காலக் கடவுளரான த்யவ் (Dyaus Pitr) பிதர் என்பவரை கிரேக்கர்கள் ஸூஸ் (Zeus) என்பர். அவருடைய தலையிலிருந்து அதீனா தோன்றியதாக ஒரு கதை உண்டு. அவளுடைய தாயார் மேதிஸ் METIS (ஞானம்). இதுவும் மதி (மூளை, அறிவு) என்ற சம்ஸ்கிருதச் சொல்லுடன் தொடர்புடையதே. வேதகால தேவதையான அதிதி போலவும் இவரை சிறப்பிப்பர். அதாவது எல்லா நல்ல குணங்களுக்கும் அதி தேவதை.

ஏதென்ஸ் நகரத்துக்கு யாரை தேவதையாக நியமிப்பது என்று கருத்து வாக்கெடுப்பு நடந்தது. பொசைடான் (Poseidon)  என்னும் கடல் தேவதைக்கும் அதீனாவுக்கும் நடந்த போட்டியில் பொசைடான் உப்பு நீர்க்கடலைக் காட்டினார். ஆகையால் மக்கள் அவரை ஒதுக்கிவிட்டனர். அதீனா புனித மரமான ஆலிவ் (Olive Tree)  (ஒலிவ) மரக் கிளையைக் காட்டியதால் அவளையே மக்கள் தேர்ந்தெடுத்தனர். அந்த மரக் கிளையே சமாதானத்தின் சின்னம் ஆகும்.

இந்த தருணத்தில் இன்னொரு விஷயத்தை நினைவு கூறுதல் பொருத்தமாகும். உலகில் முதலில் சமாதானம் வேண்டிப் பாடிய பாடல் ரிக் வேதத்தின் கடைசி பாடலாகும்.

 

சூஸ் என்னும் கடவுளுக்கு நிகரான அறிவுடைய ஒரு தேவதை தோன்றப் போகிறாள் என்று ஆரூடம்(prophesy) சொல்லப்பட்டது. அப்படித் தனக்குப் போட்டியாக யாரும் வந்துவிடக்கூடாது என்பதற்காக சூஸ் தனது மனைவியான மேதிஸ் (மதி= அறிவு) என்பவரை விழுங்கி விடுகிறார். ஆனால் சூஸுக்கு ஒரு நாள் பொறுக்கமுடியாத தலைவலி ஏற்பட்டது. உடனே தச்சர்களுக்கு அதிதேவதையான   (Hephaistos) ஹெபஸ்டோசை அழைத்து தலையைப் பிளக்கச் சொன்னார். அவர் கோடாரியைக் கொண்டு பிளக்கவே அதீனா உதயமானாள்.

 

இது ஒரு அடையாள பூர்வ கதை. இதுபோல வேதத்திலும் குறிப்பாக பிராமண நூல்களிலும் நிறைய சங்கேத மொழிக் கதைகள் உண்டு. இதற்கு அர்த்தம் புரியாத மேலை நாட்டினர் தத்துப் பித்து என்று உளறியுள்ளனர்.

 

 

எங்களுக்குச் சுற்றுலா கைடு (guide) ஆக அந்த பெண்மணி இந்தக் கதையைச் சொல்லி முடித்த பின்னர் இதை சிவன் தலையில் கங்கை புகுந்த கதையுடன் ஒப்பிட்டாள். ஆகாயத்திலிருந்து பாய்ந்த கங்கா தேவியின் வேகத்தைக் கட்டுப்படுத்த சிவன் அவளைத் தன் தலையில் தாங்கி பின்னே வெளியே விட்டார் என்பது புராணக் கதை. இதற்கு இரண்டு விதப் பொருள் உள்ளது.

ஒன்று கங்கா நதி சிவ பெருமான் உறையும் கயிலை மலைப் பகுதியிலிருந்து தோன்றுவதைக் குறிப்பது.

இரண்டாவது அறிவு/ ஞானம் என்பதைக் கட்டுக்குள் வைக்கவேண்டும். அதன் பிரவாஹம் ஒருவரை அகந்தையிலோ, தவறான வழியிலோ செலுத்தி விடக்கூடாது.

 

இந்தக் கருத்துகளை விளக்குவதே அதீனா/ கங்கா  தேவி பிறந்த கதை.

 

கிரேக்க நாட்டு வரலாறு எல்லாம் மிக மிக உருச் சிதவுற்ற வேதகாலக் கதைகள் ஆகும். Hermes ஹெர்மிஸ்= சரமா, த்யௌ பிதர்= சூஸ் , Nereids நெரைட்ஸ் = நீர்த் தேவதைகள் போன்ற நூற்றுக் கணக்கான ஒற்றுமைகள் இருந்தாலும் கதையின் போக்கு முழுவதையும் காண்கையில் நம்முடன் ஒப்பிட இயலாது. அதாவது வேத கால இந்துக்கள் — பாமர மக்கள் — அங்கு குடியேறி இருக்கலாம். அவர்கள் நம் கதையைத் திரித்திருக்கலாம். இப்போதும்கூட தமிழ்நாட்டின் கிரா    மப்புறக் கதைகளிலும், தல புராணக் கதைகளிலும் இந்துமதக் கதைகள் எவ்வளவு திரிபு அடைந்துள்ளன என்பதை ஆரய்வோருக்கு இது தெள்ளிதின் புலப்படும்

 

–subham–

அதீனா சிலையும் மத வெறியர்கள் அதை அழித்த கதையும் (Post.4127)

Picture of London Swaminathan

 

Written by London Swaminathan

Date: 4 August 2017

Time uploaded in London- 8-13 am

Post No. 4127

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

pictures by Natarajan Krishnan of Sydney (my Sambandhi)

 

ஜூலை மாதக் கடைசியில் நாங்கள் ஏதென்ஸ் நகருக்கும் சாண்டோரினி என்ற வரலாற்றுச் சிறப்பும் இயற்கை வனப்பும் கொண்ட தீவுகளுக்கும் சென்று வந்தோம். இது பற்றிய எனது முந்தைய கட்டுரைகளைப் படித்துவிட்டு இதைப் படிக்கவும்.

 

கிரேக்க நாட்டின் தலை நகரான ஏதென்ஸ் நகரில் ஆக்ரோபொலிஸ் என்னும் இடத்தில் பார்த்தினான் கோவில் (Athena Temple in Parthenon at Acropolis in Athens, Greece) உள்ளது இதில் இருந்த அழகிய அதீனா தேவியின் சிலையை கிறிஸ்தவ மத வெறியர்களும் முஸ்லீம் மத வெறியர்களும் அழித்த கதை மிகவும் வருந்தத்தக்க கதை.

எப்படி சோமநாத புர சிவன் கோவிலை உடைத்து கஜினி முகமது டன் கணக்கில் தங்கம் கொண்டு சென்றானோ, எப்படி போர்ச்சுகீசியர்கள் யாழ்ப்பாண இந்துக் கோவில்களை நாசப்படுத்தினரோ, எப்படி மாலிக்காபூர் மதுரை திருவரங்கம் பகுதி கோவில்களைக் கொள்ளை அடித்து கோவில்களை இடித்தானோ, எப்படி மாயா, அஸ்டெக், இன்கா, ஒல்மெக் நாகரீகங்களை ஸ்பானிய கிறிஸ்தவ வெறியர்கள் அழித்து தங்கத்தை எல்லாம் ஸ்பெயின் நாட்டுக்குக் கொண்டு சென்றார்களோ, எப்படி அவுரங்க சீப் அயோத்யா ராமர் கோவிலையும் மதுரா நகர கிருஷ்ணன் கோவிலையும் இடித்து மசூதி கட்டினானோ—– அப்படி அதீனா தேவி சிலையை முஸ்லீம்களும் கிறிஸ்தவர்களும் மாறி மாறி உடைத்து

2000 ஆண்டுகளுக்கு மசூதியாகவும் சர்ச்சாகவும் பயன்படுத்தினர் (விக்கிபீடியா ஆங்கிலப் பகுதியில் முழு விவரம் காண்க)

சுருக்கத்தை மட்டும் தமிழில் தருகிறேன்:-

 

‘போதாக்குறைக்கு பொன்னியும் வந்தாளாம்’ என்பது போல மிச்சம் மீதி இருந்த தூண்களை பிரிட்டிஷ்காரர்களும் , பிரெஞ்சுக்காரர்களும் கொள்ளை அடித்து அவரவர் மியூசியங்களில் வைத்துக் கொண்டனர். மதுரை மீனாட்சி அம்மனின் நீலக்கல்லையும் கோஹினூர் வைரத்தையும்  விக்டோரியா ராணி “திருடியது போல”, இவைகளைத் திருடினர் வெள்ளைக்கார்கள். இதில் ஒரே ஒரு நன்மை உண்டு. நம்மூர் திராவிட அரசியல்வாதிகளின்   கைகளில் கிடைத்திருந்தால் போன இடமே தெரிந்திருக்காது. இவர்கள் காட்சி சாலையிலாவது (Museum) வைத்து இருக்கிறார்கள். நம்மூர் பிராமணப் பெண்கள் கையிலோ, செட்டியார் கைகளிலோ சிக்கி இருந்தால் உருக்கி புது நகை செய்து அதில் ரத்தினக் கற்களைப் பொருத்தி இருப்பர். வெள்ளைக்கார, கொள்ளைக்காரன் காட்சிப் பொருளாகவாது பாதுகாத்து வைத்திருக்கிறான்.

 

பார்த்தினான் கோவில் இருந்த இடத்தில், அதற்கு முன்னதாக ஒரு நூறு கால் மண்டபம் இருந்தது. இப்படி 100 கால் , 1000 கால் மண்டபங்கள் கட்டுவது இந்துக்களின் வழக்கம். இதுவும் நமது இந்து சமய  செல்வாக்கைக் காட்டுகிறது. 2500 ஆண்டுகளாக இருந்த இந்தக் கோவில் முதலில் பாரசீகப் படை எடுப்பில் சேதமானது.

 

இரண்டாம் தியோடோசியஸ் கி.பி.435ல் கிறிஸ்தவ சமயமல்லாத கோவில்கள் (Pagan Temples) அனைத்தும் மூடப்படவேண்டும் என்று உத்தரவிட்டான். கான்ஸ்டாண்டிநோபிள் கிறிஸ்தவ மன்னன் ஒருவன் அதீனா சிலையைக் கொள்ளை அடித்து அந்த நகருக்குக் கொண்டு சென்றான். பின்னர் அது அழிக்கபட்டது. ஆறாம் நூற்றாண்டில் அதை கிறிஸ்தவ சர்ச்சாக மாற்றி வர்ஜின் மேரி VIRGIN MARY (கன்னி மேரி) சிலையை வைத்தனர். (சமணர்களும், பௌத்தர்களும், முஸ்லீம்களும், கிறிஸ்தவர்களும் இந்தியாவில் இந்து சிலைகளை அகற்றி தங்கள் சிலைகளை வைத்தது போல)

அவர்கள் மற்ற கடவுளர் சிலைகளை உடைத்தனர். மேலும் சிலவற்றை கிறிஸ்தவ சிலைகள் என்று புனைக் கதைகளை எட்டுக்கட்டினர். முடிந்தவரை கிறிஸ்தவ ஓவியங்களை சுவர்களில் வரைந்தனர்.

 

கிறிஸ்தவர்கள் கட்டிட அமைப்பைச் சிறிது மாற்றி வாசலை கிழக்கு நோக்கி வைத்தனர். பின்னர் ரோமன் கதோலிக்க சர்ச்சாக 200 வருடம் நீடித்தது.

 

1456ல் ஏதென்ஸ் மீது படை எடுத்து வெற்றி பெற்ற ஆட்டோமான் துருக்கியர்கள் அக்கட்டிடத்தை கிரேக்க ஆர்த்தடக்ஸ் கிறிஸ்தவர் கைகளில் முதலில் ஒப்படைத்தனர். பின்னர் அதை மசூதியாக மாற்றினர்.

1687ல் ஏற்பட்ட துருக்கிய யுத்தத்தில் அதைத் துப்பாக்கி மருத்து சாலையாகப் பயன் படுத்தினர். அபோது ஏற்பட வெடிப்பில் பெருமளவு பகுதி சேதமானது. கிறிஸ்தவப் படைகள் வீசிய பீரங்கிக் குண்டுகள் கோவில் பகுதிகளைத் தகர்த்துதது. இப்போது கிரேக்க அரசு, பார்த்தினான் கோவிலுக்கு விரிவான திருப்பணி செய்து வருகிறது.

 

பார்த்தினான் அதிசயம்

பார்த்தினான் கட்டிடம் எட்டு தூண்களையும் நீளவாக்கில் 17 தூண்களையும் உடையது. இதை ஏ 4 சைஸ் (A 4 Size Paper) பேப்பருடன் ஒப்பிடலாம் என்று எங்களுக்கு விளக்கம் தந்த (Tourist Guide)  கைடு சொன்னாள். மேலும் இது சம-மட்டமான தரையில் அன்றி சிறிது வளைந்து இருப்பதால் இந்த தூண்களிலிருந்து கோடு கிழித்தால் அவை ஐந்து கிலோமீட்டர் உயரத்தில் சந்திக்கும் என்றும் அப்பொழுது பிரமிடு வடிவம் உருவாகும் என்றும் சொன்னாள்.

அடுத்த கட்டுரையில் அதீனா தேவியின் தோற்றம் பற்றிய கதை இந்து மதத்துடன் எப்படித் தொடர்புடையது என்பதைக் காண்போம்.

 

–Subham–

எதென்ஸ் நகரமும் இந்துசமயத் தொடர்பும் (Post No. 4124)

Written by London Swaminathan
Date: 3 August 2017
Time uploaded in London- 17-44
Post No. 4124
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

pictures by london swaminathan.

 

 

கிரேக்க நாட்டின்   தலைநகரான ஏதென்ஸ் நகரத்துக்கு ஜூலை மாதக் கடைசியில் (2017) போய் வந்தேன்— 9000 ஆண்டுப் பழமையுடையது என்று பெருமை பேசும் நகரில் நின்றது மகிழ்ச்சி தந்தது. இந்த நகரம் பற்றிய விஷயங்கள் இந்து மதத்துடன் நெருங்கிய தொடர்புடையது. எங்களுக்கு வரலாற்றுப் பெருமைகளை விளக்குவதற்கு ஒரு பெண்மணி முன்வந்தார். அவருக்கு 100 யூரோ கொடுத்தோம். அதற்கு முன் ஒவ்வொருவரும் ( 11 பேர்) 30 யூரோ கொடுத்து டிக்கெட்டும் வாங்கினோம்.

எங்களுக்கு கிரேக்க நாட்டின் சரித்திரத்தை விளக்கிய பெண்மணி நாங்கள் இந்தியர்களா என்று கேட்டுவிட்டு சிவபெருமான் முடியில் தாங்கிய கங்காதேவியையும் அதீனா தேவியையும் ஒப்பிட்டார். அதற்கு முன் சில விஷயங்களைச் சொல்லுகிறேன்.

அதீனா தேவியின் பெயரில் உருவான நகரம் ஏதென்ஸ். இது போல நகரங்களைப் பெண்களாகக் கருதும் வழக்கமும், நகரங்களுக்கு பெண் தெய்வங்களின் பெயரை இடும் வழக்கமும் இந்து வழக்கம். மும்பயி, கல்கத்தா, மதுரை, கன்யாகுமரி முதலிய நூற்றுக் கணக்கான நகரங்கள் பெண் தெய்வங்களின் பெயர்களை உடையன. மதுரையின்   பெண் தெய்வம் பற்றி சிலப்பதிகாரம் பேசுகிறது. மணிமேகலை, தெய்வம் அயோத்யா தேவி முதலியன பற்றி மணிமேகலை, ரகுவம்சம் ஆகியன பேசுகிறது. நகரங்களைப் பெண்களாகக் கருதுவதை தமிழ், சம்ஸ்கிருத இலக்கியங்களில் காணலாம்.

 

அதீனா தேவி ஒரு கன்னிப் பெண்; இதனால் அவளை அதீனா பார்தினோஸ் (Athena Parthenos) என்பர்; நாம் கன்யாகுமரி என்று சொல்லுவதற்கு இணையானது அதீனா பார்த்தினோஸ். கன்னிகள் மூலம் பிறந்த பலர் இந்து மதத்தில் உண்டு. பஞ்ச பாண்டவர்கள், சீதா தேவி, ஆண்டாள், திரவுபதி போன்றோர் சில எடுத்துக்காட்டுகள்.

 

அதீனா தேவி கோவில், ஏதென்ஸில் ஆக்ரோபொலிஸ்(Acropolis) என்னுமிடத்தில் உயர்ந்த குன்றில் உள்ளது. அந்தச் சிலை இருந்த கோவிலை பார்த்தினான் (Parthenon) என்பர். அது கிரேக்க நாட்டின் முக்கியச் சின்னம். அதிலிருந்த அதீனா தேவியின் சிலையை கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும் சேர்ந்து அ ழித்தனர். சமீப காலத்தில் முஸ்லீம் பயங்கரவாதிகள் எப்படி பாமியன் புத்தர் சிலைகளையும், சிரியாவிலுள்ள பல்மைரா கட்டிடங்களையும் அழித்தனரோ அப்படி வெள்ளையர்களும் முஸ்லீம்களும் திட்டமிட்டு அழித்தனர். பார்த்தினான் கோவிலை சர்ச்சாகவும் மசூதியாவும் மாற்றினர். இந்தக் கதைகள் எல்லாம் விக்கிபீடியாவில் விரிவாக உள்ளது நானும் கட்டுரையின் இரண்டாவது பகுதியில் தருவேன்.

பார்த்தினான் கோவிலைக் கட்டிய சிற்பி பிடியாஸ் (Phidias). அதீனாவின் சிலை மிக உயரமான சிலை. தங்கத்தினாலும் தந்தத்தினாலும் ஆனது. அதை குண்டுவைத்து தகர்த்துவிட்டனர். பார்த்தினான் கோவிலின் சலவைக் கற்களை வெள்ளையர்கள் கொள்ளை அடித்தனர். பெரிய கொள்ளைக்காரன் வெள்ளைகாரன்தான்- அதாவது பிரிட்டிஷ்காரனான எல்ஜின்.  எல்ஜின் மார்பிள் என்ற பெயரில் பல துண்டுகள் பிரிட்டிஷ் மியூசியத்தில் உள்ளன. மற்ற துண்டுகள் நியூயார்க் ரோம், ஏதென்ஸ் முதலிய மியூசியங்களில் இருக்கின்றன.

 

எங்களுக்கு விளக்க வந்த கைடு, எல்ஜின் மார்பிள் என்ற பெயரில் அவை இருப்பதை ஆட்சேபித்தார். அதை பிடியாஸ் மார்பிள் அல்லது பார்த்தினான் மார்பிள் என்றல்லவா சொல்லவேண்டும். கொள்ளை அடித்த எல்ஜின் பெயரில் எப்படி அழைக்கலாம்?என்றார்.

 

பார்த்தினான் கோவில், கி.மு 440 வாக்கில் கட்டப்பட்டது. அதற்கு முன்னரும் ஒரு கோவில் இருந்ததாக ஐதீகம்.

 

— subham—

தமிழர்களின் குமரிக் கண்டம் அழிந்தது எப்படி? (Post No.4121)

 

 

Written by London Swaminathan
Date: 2 August 2017
Time uploaded in London- 15-54
Post No. 4121
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

pictures by london swaminathan.

 

 

சிந்து சமவெளி நாகரீக அழிவுக்கும்  , குமரிக்  கண்ட மறைவுக்கும்   கிரேக்க எரிமலை வெடிப்புக்கும் தொடர்பு?

 

கிரேக்க நாட்டுத் தீவில் இன்பச் சுற்றுலா – பகுதி 2 (முதல் பகுதி நேற்று வெளியானது)

 

 

 

சான்டோரினி (Santorini Islands) தீவு அழகான பிரமிப்பூட்டும் காட்சிக்கு மட்டும் பெயர்போன இடம் என்று எண்ணிவிடக்கூடாது. அந்த மண்ணில் நின்றபோது எனக்கு ஏற்பட்ட ஆனந்தத்துக்கு அளவே இல்லை. ஏன் என்றால் நான் சிந்து/ சரஸ்வதி நதிச் சமவெளி நாகரீகம் பற்றி எழுதிய 20, 25 கட்டுரைகளுக்கும், ஆரிய- திராவிட ‘புருடா’, ‘கப்ஸா’, ‘பொய் பித்தலாட்டம்’ பற்றி எழுதிய 20, 30 கட்டுரைகளுக்கும் எனது தேரா (Thera/ Santorini சாண்டோரினி) தீவு விஜயத்துக்கும் தொடர்பு உண்டு.

வரலாற்றையே மாற்றிய ஒரு மிகப் பெரிய எரிமலை வெடிப்பு கி.மு 1630ல் ஏற்பட்ட எரிமலை வெடிப்பாகும். அதற்கு முன்னரும் பின்னரும் இந்த தேரா/ சாண்டோரினி எரிமலை பல முறை சீறி இருக்கிறது.

 

எரிமலை வெடித்து அதற்குள் ஏற்படும் பள்ளங்களில்  நீர் நிரம்பி ஏற்படும் சமுத்திரப் பகுதிகளை கால்டெரா எனபர். அப்படிப்பட்ட கால்டெரா (Caldera) வில்தான் நான் நின்றேன்.

 

இந்த பிரம்மாண்ட தேரா வெடிப்பு பற்றி பல மர்மங்கள் உள்ளன. தமிழர்களாகிய நாம் குமரிக் கண்டம் மறைந்தது பற்றி எப்படி அங்கலாய்க்கிறோமோ அதே போல கிரேக்க நாட்டு எழுத்தாளர்களும் புலவர்களும் அட்லாண்டீஸ் (Atlantis) என்னும் மர்ம கண்டம் முழுகியது பற்றி நிறைய எழுதி வைத்துள்ளனர். அதை ஏற்காதோரும் இந்த எரிமலை வெடிப்பால் மினோவன் (Minoan Civilization) நாகரீகம் அழிந்ததை ஒப்புக் கொள்வர். இந்த எரிமலை சீற்றத்துக்கும் 3600 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட சீன ஆட்சிக் குழப்பத்துக்கும், எகிப்திய ஆட்சிக் குழப்பத்துக்கும் (கி.மு.1600) இதுவே காரணம் என்பது வரலாற்றாய்வா ளர்களின் ஊகம். இதை எல்லாம் பார்க்கும் போது நமது குமரிக் கண்டம் மறைந்ததற்கும் சிந்து / சரஸ்வதி நதி தீர நாகரீகம் க்ஷீணம் அடைந்து படிப்படியாக மறைந்ததற்கும் தொடர்பு இருக்கிறது என்பது என் கணிப்பு. ஆகையால்தான் நான் இந்த மண்ணில் நின்றபோது ஒரு பிரமிப்பு, ஆனந்தக் களிப்பு!

2000 தீவுகள் உடைய நாடு!!

 

கிரேக்க நாட்டுக்குச் சொந்தமாக 2000க்கும் மேலான தீவுகள் உள்ளன.

கடலிடையே உள்ள சிறிய குன்றுகளையும் கணக்கில் சேர்த்தால் 6000 தீவுகள் என்றும் சொல்லுவர்.

 

இவ்வளவு தீவுகள் இருந்தாலும் (Crete) க்ரீட் எனப்படும் மினோவன் நாகரீக தலைமையிடமும் இந்த சாண்டோரினி தீவும்தான் முக்கியமானவை.

 

சாண்டோரினி தீவின் தலை நகர் Fபிரா. (Fira)–இயா என்னும் கிராமத்தில் (Oia) சூரிய அஸ்தமனத்தைக் காண ஏராளமானோர் வருவர். கழுதையில் சுற்றிப் பார்க்கவும் வசதி உண்டு. எல்லாவற்றுக்கும் கட்டணம்தான். ஏதன்ஸ் நகரை விட உணவும் உறைவிடமும் அதிக செலவு பிடிக்கும் இடங்கள்.

 

இந்த இடம் ஒரு குறிப்பிட்ட வகை ஒயின் (Wine) செய்வதற்கும் பெயர் பெற்ற இடம். ஆகையால் பழங்காலத்தில் எப்படி ஒயின் செய்தனர் என்பதைக் காட்டும் மியூசியமும் (Winery Museum)  உள்ளது.

அக்ரோதிரி (Akrotiri) என்னும் இடத்தில் தொல்பொருட் துறையினர் மினோவன் நாகரீக தடயங்களைக் கண்டு எடுத்துள்ளனர். அங்கு ஒரு காட்சி சாலையும் இருக்கிறது.

கருப்பு நிற மணல் கடற்கரையும் சிவப்பு மணல் கடற்கரையும் ஒரே தீவில் இருப்பது இயற்கை அதிசயமே.

 

நாங்கள் இயா (oia) கிராமத்தில் கடைத் தெருவில் நின்றபோது நம் ஊரில் மார்கழி மாத பஜனை கோஷ்டி வருவது போல ஒரு கோஷ்டி இசை முழக்கத்துடன் சென்றது. தினமும் நடக்கும் கிரேக்க இசை நடன ஷோவுக்கு விளம்பரம் தேடி துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்துச் சென்றனர்.

 

ஒரு பழங்கால மொனாஸ்ட்ரிக்கும் (Monastery) சென்று வந்தோம். கிரேக்க நாட்டில் கிரேக்க ஆர்த்தடாக்ஸ் சர்ச் வகுப்பினர் (Greek Orthodox) அதிகம். இது பிராடெஸ்டண்ட், கதோலிக்கத்திலிருந்து வேறுபட்டது.

 

சுற்றுலா வரும்படியை நம்பியே மக்கள் வாழ்கின்றனர். கிரேக்க நாடு சலவைக் கல் எனப்படும் மார்பிள் (marble) கற்களை அதிகம் உற்பத்தி செய்கிறது. உலக உற்பத்தியில் ஏழு சதவிகிதம் இவர்களுடையதே. கிரேக்கர்களுக்கு என்று சில விசேஷ உணவு வகைகளும் உண்டு. நாங்கள் கிரீக் சாலட் (Greek salad) முதலிய வெஜிட்டேரியன் வகைகளை மட்டும் சுவைத்தோம்.

 

அடுத்த கட்டுரையில் ஏதென்ஸ் அதிசயங்களை எழுதுகிறேன்.

TAGS:- தேரா மினோவன், சிந்துவெளி, குமரிக்கண்டம்

–சுபம்–

கஜினியும் ஹிட்லரும்: ரஷியர்களும் ஹிந்துக்களும்! (Post No.4117)

Written by S NAGARAJAN

 

Date: 1 August 2017

 

Time uploaded in London:- 4-51am

 

 

Post No.4117

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks. 

 

 

இரண்டு கோர ராட்ஸசர்கள் : எதிர் விளைவு பற்றிய ஒரு ஒப்பீடு

 

 

கஜினியும் ஹிட்லரும்: ரஷியர்களும் ஹிந்துக்களும்! விசித்திரமான எதிரெதிர் மனப்போக்கு!!

 

by ச.நாகராஜன்

 

நம் கண் முன்னே வரலாறு கண்ட இரு மாபெரும் பாவிகள் கஜினியும், ஹிட்லரும்!

ஹிட்லரை சமீப காலத்திலேயே அனைவரும் பார்த்து விக்கித்து விட்டனர்.

இப்படி ஒருவன் தோன்ற முடியுமா என்ற திகைப்பும், மலைப்பும் அனைவருக்கும் உண்டு.

அரவிந்தர் அவனுக்கு ஆன்மாவே கிடையாது என்று கூறி இருக்கிறார்.

 

அப்படி ஒரு கோரமான படைப்பு; படைப்பு விசித்திரம்!

இதே அளவு கோரமான கொடூரன் கஜினி முகமது.

அவனுக்கும் ஆன்மா இருந்திருக்காது; கோரமான படைப்பு.

ஹிட்லரால் பாதிக்கப்பட்டவர்கள் ரஷியர்கள்.

அவர்களால் இந்த கோர ராட்ஸசனின் கொடுமைகளைத் தாளவே முடியவில்லை.

ஆகவே ரத்தத்திற்கு ரத்தம்; சாவுக்கு சாவு என்று சபதம் எடுத்தனர் அவர்கள்.

BLOOD FOR BLOOD; DEATH FOR DEATH என்பதே அவர்கள் முழக்கமாகவும் சபதமாகவும் அமைந்தது.

 

ரஷியாவிலிருந்து வெளிவரும் கம்யூனிஸ்ட் பத்திரிகையான பிராவ்தாவைப் பற்றி அனைவரும் அறிவர். அதில் 22-8-1941 மாஸ்கோ ரேடியோவில் ஒலிபரப்பான ஒலிப்ரப்பு பற்றிய தலையங்கம் ஒன்று வெளியானது.

 

 

ஆங்கிலத்தில் அதை அப்படியே கீழே பார்க்கலாம்:

“BLOOD FOR BLOOD; DEATH FOR DEATH ‘ is the title of an editorial in the ‘Pravda’, the organ of the Communist party quoted by the Moscow radio on 22-8-1941. The article which gives details of atrocities perpetrated by the Nazis of Soviet citizen says, “no words can express the intensity of feeling and the wrath which prevails in the hearts of Soviet men and women on hearing the news of the atrocities carried out by the German hordes on their bloody way.

 

 

Intense hatred which knows no pity and which knows no mercy is the only rule of fighting against biped animals which constitute the German Fascist armies.

 

(இந்த வரியை அப்படியே கஜினி முகமதுவிற்கும் பாதிக்கப்பட்ட ஹிந்துக்களும் கூடச் சொல்லலாம்)

 

 

Wherever its armies pass they leave behing hem a morbid trail fo muder and robbery. The HITLER DOGS  have covered with shame not only German army but also all  GERMAN PEOPLE. To redeem its shame, to resore to itself the place in the family of peoples the German nation must clear itself of the HITLER VERMIN. Every hour brings news of crimes carried out by the Fascists on Soviet soil.”

 

The article goes on to give details of almost unspeakable horrors carried out by the Nazis in search for military information citing such instances as men, women and children soaked in petrol in a village square and burned alive.

A nine year old boy shot in front of his mother who then joined the guerillas. The journal declares, “corpses, corpses and again corpses, all totured and killed people, the same scenes in every village, in every town where the Germans have passed.”

 

“What army ever committed such crimes?” asks the Pravda. “Does the Fascist gang of robbers deserve the name of army for these monstrosities, for all these crimes are not isolated cases, they are a mass phenomenon, a system taught by the German Fascist army command.”

After giving an extract from the note-book of a dead German soldier referring to mass exefutions of population it quotes an excerpt from the secret instruction of a German army commander. This instruction states, “It is necessary to emphasise once more the fundamental problems arising from conditions of warfare on the eastern front. Here more than on other front it is necessary to develop in the German soldier a feeling of mercilessness. A feeling of COMPASSION towards anybody irrespective of age or sex  CANNOT BE TOLERATED.

Every initiative of German soldiers likely to spread fear of the German army must be encouraged. It is necessary to inculcate in every German soldier a feeling of personal interest in this war.

 

The Soviet people will never forget nor will it forget these crimes. The blood calls for CRUEL AND MERCILESS VENGEANCE.

 

This Vengeance will come; it’s hour is near. The Soviet people have arisen in the Fatherland war and they will not lay down their arms until the enemy is crushed and annihilated.

“BLOOD FOR BLOOD , DEATH FOR DEATH.”

 

இந்த கட்டுரையில் உள்ள வார்த்தைகளில் ஹிட்லர் அல்லது நாஜி என்பதற்கு பதிலாக கஜினி முகமது அல்லது அவன் படை என்றும் சோவியத் மக்கள் என்பதற்கு பதிலாக ஹிந்து மக்கள் என்றும் போட்டுப் படித்துப் பார்த்தால அதிசயமாக அப்படியே கட்டுரை பொருத்தமாக இருக்கிறது அல்லவா?

ரஷியர்கள் தாங்கள் நினைத்தபடி ரத்தத்திற்கு ரத்தம்; சாவுக்கு சாவு என பழி வாங்கினார்கள்.

 

 

சரித்திரம் காட்டும் சித்திரவதை முகாம்களையும் ஸ்டாலினின் வன் கொடுமைகளையும் படித்தவர்கள் இதை அறிவர்.

(உண்மையில் ஹிட்லரை விட அதிகமான பேரைக் கொன்று முதலிடத்தைப் பிடிப்பது ஸ்டாலின் என்பது அதிசயமான செய்தியாக இருக்கலாம்; ஆனால் அது உண்மை!)

இப்போது ஹிந்து தேசத்திற்கு வருவோம். ரஷியர்கள் போல ரத்தத்திற்கு ரத்தம் ;சாவுக்கு சாவு என்ற அணுகுமுறையில் ஹிந்துக்கள் ஒரு போதும் இருந்ததில்லை.

 

 

கஜினி முகமது தொட்டு ஔரங்கசீப் வரை, கிழக்கிந்த கம்பெனி வணிகன் முதல் இறுதியான மவுண்ட்பேட்டன் பிரபு வரை ஹிந்துக்களுக்குச் செய்த கொடுமைகள் எவ்வளவு?

ஒரே வரியில் பிரிட்டிஷாரைப் பார்த்து விவேகானந்தர் சொல்லி விட்டார்: “நீங்கள் எங்களுக்குச் செய்த கொடுமைகளுக்கு ஹிந்து மஹா சமுத்திரம் அடியில் உள்ள சேற்றை முழுதுமாக வாரி உங்கள் மீது இறைத்தாலும் நீங்கள் எங்களுக்குச் செய்த தீங்கிற்குத் தினையளவும் பதில் செய்ததாக ஆகாது.

 

 

உண்மை; இது கஜினிக்கும் பொருந்தும் தானே!

 

    ஆனால் வழிவழியாக வந்த உயர்ந்த சிந்தனா பாரம்பரியம் கொண்ட ஹிந்துக்கள், முஸ்லீம்களை ஒட்டு மொத்தமாக அழிக்க எண்ணம் கூடக் கொள்ளவில்லை. மதமாற்றவும் நினைக்கவில்லை!!      

    பிரிட்டிஷாரை ஒட்டு மொத்தமாக ரத்தத்திற்கு ரத்தம் சாவுக்கு சாவு என்று முழங்கி அழிக்க முற்படவில்லை.

 

இஸ்லாமியரை இன்று வரை வாழ வைத்து மதிப்புடன் நடத்தி வருகிறோம். அனைத்து இஸ்லாமிய நாடுகளுடன் தோழமை உறவு தொடர்கிறது.

 

பிரிட்டிஷாரை மிகவும் நேர்மையாகவும் நியாயமாகவும் கடைசி வரை நடத்தினோம் – சுதந்திரத்திற்குப் பின்னரும் கூட.

இது தான் ஹிந்து பாரம்பரியத்திற்கும் இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ பாரம்பரியத்திற்கும் உள்ள வேற்றுமை.

 

இஸ்லாம் தன்னை ஒப்புக்கொள்ளாதவனை ஒப்புக் கொள்ளாது. காபிர் காபிர் தான்!

கிறிஸ்தவமும் ஏசுவிடம் “ஓப்புக் கொடுக்காதவரை ஒப்புக் கொள்ளாது.

 

ஆனால் ஹிந்து மதமோ அப்படியில்லை; ஒரு ஹிந்துவானவன், “அனைவரும் வாழ வேண்டும்; கொள்கையில், வாழ்க்கை முறையில், மதத்தில், இனத்தில் வேறுபட்டிருந்தாலும் கூட என்று எப்போதும் எண்ணி வந்திருக்கிறான்; எண்ணி வருகிறான்; இனியும் எண்ணுவான்.

இதுவே ஒரே வித்தியாசம்.

 

இதே அணுகுமுறை இஸ்லாமியருக்கும் கிறிஸ்தவர்களுக்கும் வருமானால் அப்போது “உலகத்தில் கலி அழிந்தது; கிருத யுகம் எழுந்தது மாதோ என்று உரக்கக் கூறலாம்.

****