Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
கோகுலம்கதிர் மாத பத்திரிகையில் பிப்ரவரி 2020 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை
மாறப் போகும் உலகம்!
ச.நாகராஜன்
உலகில் மாறாதது மாற்றம் ஒன்று தான்! ஆம், நாளுக்கு நாள் உலகில் அறிமுகப்படுத்தப்படும் மாயாஜால சாதனங்கள் நம் வாழ்க்கையையே மாற்றி விடுவதைப் பார்த்துக் கொண்டே இருக்கிறோம். செல்போன், ஜி.பி.எஸ்., கணிணி, வித விதமான் ஆப்ஸ், வீடியோ கேம் என்று இப்படி நூற்றுக் கணக்கில் சிறுவர் முதல் பெரியோர் வரை அனைவரும் பயன்படுத்தும் சாதனங்கள் எத்தனை எத்தனையோ வந்து கொண்டே இருக்கின்றன; வாழ்க்கைப்போக்கை மாற்றிக் கொண்டே இருக்கின்றன!
இதோ இந்த வருடம் அறிமுகப்படுத்தப்படும் சாதனங்களில் சில :
சோலார் கார்கள்!
பெட்ரோல், டீஸல் ஆகிய படிம எரிபொருள்களின் விலை விண் அளவிற்கு உயர்ந்து கொண்டே போவதால் கறிகாய் விலை முதல் அனைத்துப் பொருள்களின் விலையும் ஏறிக் கொண்டே போகிறது. ஏன்?
இவை அனைத்தையும் கொண்டு வரும் போக்குவரத்துச் செலவு அதிகமாகவே சந்தையில் விற்பனை விலையும் அதிகமாகிறது. இதற்கு ஒரு முடிவு கட்ட ஏற்கனவே உலகின் தலை சிறந்த கார் கட்டுமான நிறுவனமான டெஸ்லா எலக்ட்ரிக் கார்களை அமெரிக்காவில் அறிமுகப்படுத்தி விட்டது. ஆனால் இதில் உள்ள ஒரு குறை என்னவெனில் இதிலுள்ள பேட்டரிகளை அவ்வப்பொழுது சார்ஜ் செய்து கொண்டே இருக்க வேண்டும்.
இதற்கு ஒரு முடிவு கட்ட லைட் இயர் (LightYear) என்ற புதிய எலக்ட்ரிக் கார்களை நெதர்லாந்து நிறுவனம் ஒன்று அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் பேட்டரிக்குப் பதிலாக காரின் மேல் சோலார் பேனல்கள் – சூரியத் தகடுகள் – பொருத்தப்பட்டிருக்கும். முதல் தடவையில் சார்ஜ் செய்தால் 450 மைல்கள் இது ஓடும். பின்னர் ஓடும் போது சூரிய ஒளியினால் மணிக்கு ஏழரை மைல் ஓடும் படி சார்ஜ் ஆகிக் கொண்டே இருக்கும். ஆக இனி எதிர்கால சோலார் கார் இது போலத் தான் இருக்கும்.
பறக்கும் கார்கள்!
சாலையில் டிராபிக் ஜாம் ஏற்பட்டு அலுவலகத்திற்கோ, ரயில் நிலையத்திற்கோ, விமான நிலையத்திற்கோ இன்னும் அவசரமான காரியங்களுக்கோ செல்ல முடியாமல் அவஸ்தைப் படும் நிலை இனி மாறி விடும். ஊபர் (Uber) நிறுவனம் பறக்கும் காரைத் தயார் செய்து சென்ற வருடம் லாஸ்வேகாஸ் கண்காட்சியில் அறிமுகப்படுத்தியுள்ளது. அடுத்த ஆண்டு முதல் அமெரிக்காவிலும் பின்னர் படிப்படியாக இதர நாடுகளிலும் இந்த பறக்கும் கார்கள் ஓட – இல்லை இல்லை – பறக்க ஆரம்பிக்கும். டிராபிக் ஜாமிற்கு குட் பை!
வீட்டிலேயே விவசாயம் செய்யலாம்!
இன்றைய உலகில் உணவுப் பற்றாக்குறை அதிகமாகி இருப்பதால் பல கோடி மனிதர்கள் உணவின்றித் தவிக்கின்றனர். உலக வெப்பமயமாதலால் இந்தத் தொகை இன்னும் அதிகமாகிக் கொண்டே போகும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் ஏரோஃபார்ம்ஸ் (Aerofarms)என்ற நிறுவனம் வீட்டிற்குள்ளேயே விவசாயம் செய்யும் ஒரு புதிய உத்தியைக் கண்டுபிடித்துள்ளது. இதில் மிகச் சிறப்பான அம்சம் என்னவெனில் நிலத்தில் விவசாயம் செய்யத் தேவைப்படும் நீரில் 95 சதவிகிதம் குறைவாகவே இந்த வீட்டு விவசாயத்திற்குத் தேவைப்படும் என்பது தான். பயிர்கள் நீர் பாய்ச்சி வளராமல் இந்த வீட்டு விவசாயத்தில் பயிர்கள் மீது இலேசான பனித்துகள்கள் படியும். இந்த உத்தி மூலம் கீரை போன்றவற்றை வளர்த்து அவற்றைப் பெரிய அளவில் பல்வேறு உணவு விடுதிகளுக்கு இந்த நிறுவனம் விமானம் மூலமாகக் கூட சப்ளை செய்து வருகிறது! இது போன்று விவசாயம் செய்யும் நிறுவனம் உலகில் எங்கள் நிறுவனம் ஒன்று தான் என்கிறது ஏரோஃபார்ம்ஸ். நாளைய விவசாயத்திற்கு வழிகாட்டும் இந்த உத்தி மூலம் இனி வீட்டிலேயே விவசாயம் தொடங்கலாம்.
சூட் கேஸ் போய் பேக்-பேக் வருகிறது டும் டும் டும்!
கணினி நிறுவனங்கள் பெருமளவில் வரத் தொடங்கிய நிலையில் முதுகில் சுமந்து செல்லும் பேக்-பேக் (BackPack)அனைவராலும் விரும்பி முதுகில் மாட்டி, கொண்டு செல்லும் பையாக மாறி விட்டது. அவே (Away)என்ற நிறுவனம் புதிய பேக்-பேக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. தண்ணீர் புகாத நைலானால் ஆன இதன் விலை 195 டாலர்கள் (ஒரு டாலரின் இந்திய மதிப்பு சுமார் 70 ரூபாய்) இதில் மூன்று பெரிய பைகள் பிரதானமாக உள்ளன. அது தவிர பல்வேறு உள் பைகளும் உள்ளன. தண்ணீர் பாட்டில் உட்பட்ட எதை வேண்டுமானாலும் சொல்லுங்கள், அதை வைக்க இதில் இடம் இருக்கும். நான்காவது பை ஒன்றில் 15 அங்குல லேப்-டாப் கணிணியை வைத்துக் கொள்ளலாம். விமான நிலையத்திலோ ரயில் நிலையத்திலோ இதை எளிதாக எடுத்துச் செல்ல இதன் பின்னால் இருக்கும் சுருள் பை ஒன்றைத் திறந்தால் போதும் அதிலிருந்து இதை உருட்டிச் செல்வதற்கான உருளைகள் வரும். இதை இழுத்துச் செல்ல வேண்டியது தான். இனி உலகெங்கும் சூட் கேஸுக்குப் பதிலாக உருண்டோடும் பேக்-பேக் தான் வலம் வரப் போகிறது.
கணிணியை நீங்களே தயார் செய்யலாம்!
இனி உங்களுக்குத் தேவையான கணிணியை நீங்களே தயார் செய்து கொள்ளலாம். கேனோ (Kano)என்ற நிறுவனம் Do It Yourself – நீங்களே தயார் செய்யும் சின்னப் பெட்டியை அறிமுகப்படுத்தியுள்ளது. கணிணியின் பல பாகங்களை அசெம்பிள் செய்து விண்டோஸ் 10ஐ நீங்களே நிறுவிக் கொள்ளலாம் இதில்.
பிரசித்தி பெற்ற கணிணி தயாரிப்பு நிறுவனமான லெனோவோ தனது பிரபலமான திங்க் பேட் மாடலில் (Lenova ThinkPad X1 Foldable Model)இரண்டாக மடித்துக் கொண்டு சுலபமாகக் கொண்டு செல்லும் மடிக் கணிணியை மடித்து வைத்துக் கொள்ளும் அமைப்பையும் சேர்த்து சந்தையில் உலவ விடுகிறது. சின்ன புத்தகம் போல உள்ள இதை எங்கு வேண்டுமானாலும் கொண்டு போகலாம்; இதில் புதிதாகப் பல விசேஷ அம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
ஆக ‘பைக்குள் கம்ப்யூட்டர்’ என்பது நிஜமாகும் காலம் வந்து விட்டது.
புதிய டி.வி.
தொல்லைக் காட்சிகள் தந்தாலும் கூட தொலைக்காட்சி இல்லாத வீடு ஒரு வீடா? இந்த டிவி பெட்டியிலும் எல்ஜி நிறுவனம் புதிய மாடலை அறிமுகப்படுத்துகிறது. 88 இஞ்ச் மாடல் என்று பெயர் பெற்ற இதன் கனம் 1.96 அங்குலம் தான். இருக்கின்ற சினிமாக்களை இதுவே புதிய 8K தொழில்நுட்பத்திற்கு மாயாஜாலமாக உயர்த்தி சினிமா பார்ப்பதை ஒரு சுகமான அனுபவமாக மாற்றி விடும். சிறிய அறையாக இருக்கும் போது அங்கு மிக அருகிலிருந்து பார்த்தாலும் பிரமாதமான பார்வை கிடைக்கும், கண்ணும் கெடாது என்கிறது இந்த நிறுவனம்.
கொஞ்சம் பெரிய விஷயங்கள்!
இதெல்லாம் சின்னச் சின்ன விஷயங்கள்; கொஞ்சம் ‘பெரிசாகச்’ சொல்லுங்கள் என்று கேட்போருக்கு இதோ பெரிய விஷயங்கள்;
விண்கலத்தில் சாமானியரும் ஏறி சந்திரனுக்குச் செல்லலாம்.
உசிலம்பட்டியில் உள்ள வீட்டில் என்ன நடக்கிறது என்பதை அமெரிக்காவில் சான்பிரான்ஸிஸ்கோவிலிருந்தே பார்க்கலாம். அட நம்ம குழந்தை விளையாடுது என்று சந்தோஷப் படலாம்.
ஜெனிடிக் உத்தி மூலமாக நல்ல குழந்தைகளைப் பெறலாம்.
செயற்கை அறிவு எனப்படும் ஆர்டிஃபிஷியல் இண்டெலிஜென்ஸ் செய்யப்போகும் மாயாஜாலங்கள் கோடிக் கோடியாக அமையப் போகிறது. புதிய நகர்களையே இந்த செயற்கை அறிவு தானே உருவாக்கப் போகிறது.
‘குறையொன்றுமில்லை கோவிந்தா’ என்று இந்த நகரிலிருந்து பாடினால் அது முற்றிலும் உண்மையாக இருக்கும்.
இப்படி நூற்றுக் கணக்கில் கண்டுபிடிப்புகளை அறிவியல் உலகம் அறிமுகப்படுத்திக் கொண்டே இருப்பதால் மாறப் போகுது உலகம்! மகிழ இருக்குது மனித குலம்!!
Museum curator Neil Mahrer sorting out the coinsTreasure hunters Mr Mead and Mr Miles with Metal Detector
Compiled by London Swaminathan
Post No.7534
Date uploaded in London – – 4 February 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
Detectorists’ £10m Iron Age coin stash is UK’s biggest ever
AS COIN finds go, this one took a lot of counting… almost eight years in fact!
A hoard of 69,347 silver and gold Iron Age coins — worth £10million — has just been officially recognised by Guinness World Records as the UK’s biggest ever.
The stash, which dates from around 50BC and weighs almost 1,700lb, was unearthed by metal detectorists Reg Mead and Richard Miles on Jersey in the Channel Islands in 2012.
It was hidden under a hedge in a clay mound and also included jewellery.
The pair began their search back in the 1980s after a woman told them she had seen what looked like ‘silver buttons’ in a field.
The hoard has been declared ‘treasure’, which means it officially belongs to the Queen. But the duo are entitled to a reward — which is expected to be ‘considerable’. Some of the finds are now on display at the island’s La Hougue Bie Museum. Olga Finch, curator of archaeology for Jersey Heritage, said: ‘We are delighted that such an impressive archaeological item was discovered, examined and displayed in Jersey.
‘Once again, it puts our island in the spotlight of international research into Iron Age coinage and demonstrates the world class heritage Jersey has to offer.’
The previous Guinness record for the largest collection of ancient coins found in Britain was 54,951, near Mildenhall, Wiltshire, in 1978.
The world record is 150,000 pennies from the 13th century, found in Brussels in 1908.
Mr Mead and Mr Miles described the moment they received their official record certificates as ‘lovely’.
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
லண்டனில் இருந்து வெளியாகும் மெட்ரோ பத்திரிகை அறிவியல் கேள்வி பதில் பகுதியில் தேன் ஏன் கெடுவதில்லை? என்ற கேள்விக்கு பதில் சொல்லகிறது.
மூடி வைக்கப்பட்ட பாண்டங்களில் தேன் (Honey) இருந்தால் பல ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் கெடுவதில்லை. எகிப்திய கல்லறைகளில் தேன் கண்டுபிடிக்கப்பட்டது. அது கெடவில்லை. Written by London swaminathan, tamilandvedas.com, swamiindology.blogspot.com
தேன் கெடாமல் இருப்பதற்குக் காரணம் தேநீக்கள் அதை செய்யும் முறையே.
தேனீக்களில் , பூக்களுக்குச் சென்று தேனை சேகரித்துக் கொண்டுவரும் ஒரு பிரிவு (Forager Bees) உண்டு. அவை .அதை தொழிலாளர் பிரிவு தேநீக்களிடம் (Worker Bees) அளிக்கும்
தொழிலாளர் பிரிவு தேனீக்கள் அதை குடிக்கும்; கொப்பளிக்கும் ; இவ்வாறு பலமுறை செய்து கொண்டே இருக்கும் . இதனால் அந்தத் தேனில் உள்ள நீர்சசத்து குறைந்துவிடும். இப்படி ச் செய்கையில் அவற்றின் வயிற்றில் உள்ள என்சைம் தேனில் இருக்கும் குளுக்கோஸ் என்னும் சர்க்கரைச் சத்தை குளுகோனிக் அமிலமாக (Gluconic Acid) மாற்றிவிடும் தென் இவ்வாறு அமில ச் சத்துடன் ஆக்கப்படும்போது ஹைட்ரஜன் பெராக்ஸைட் (Hydrogen Peroxide) என்ற வாயுவும் உற்பத்தியாகும் . அதுமட்டுமல்ல . தேன் அட்டைகளின் அறைகளில் தேனை வைத்து தனது சிறகுகளால் விசிரிக் கொண்டே இருக்கும். இதனால் தண்ணீர் சத்து மேலும் ஆவியாகும் .மொத்தத்தில் அமிலத் தன்மையும் நீரின்மையும் இதைக் கெடாமல் பாத்து காக்கிறது. உணவுப் பண்டங்களைக் கெட்டுப்போக ச் செய்யும் பாக்டீ ரியாக்கள் இந்த சூழ்நிலையில் வாழ முடியாது . ஹைட்ரஜன் பெராக் ஸைட் வாயுவுக்கும் பாக்டிரீயா (Anti bacterial) கிருமிகளைக் கொள்ளும் சக்தி உண்டு . ஆகையால் பாட்டில்களில் அடைக்கப்பட்ட தேன் , பல ஆண்டுகள் ஆனாலும் கெடுவதில்லை . Written by London swaminathan, tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxx
rock honey bees
எனது கருத்து
சமணர்கள் தேன் சாப்பிடமாட்டார்கள் இவ்வளவு கஷ்டப்பட்டு தேனீக்கள் உருவாக்கும் தேன் நமக்கானதல்ல . அவைகளுக்கானதே ;மேலும் இது பிராணிகளை வதை செய்வதாகும் என்பது அவர்கள் கருத்து. இந்துக்கள் வேத காலம் முதலே மது பர்க்கம் என்ற பெயரில் பாலையும் தேனையும் சேர்த்துக் கொடுத்து உபசரித்தனர்; பைபிளிலும் சரி, சம்ஸ்க்ருத -தமிழ் இலக்கியங்களிலும் சரி; ஒரு நாட்டின் செழிப்பை வருணித்துச் சொல்கையில் ‘அங்கு பாலும் தேனும் ஆறாக ஓடிற்று’ என்பர்.
ஆனால் சமணர்கள் பால் பொருட்களை பயன்படுத்துவர். கன்றுகளுக்கு எஞ்சியது போக மீதியுள்ள பாலை மட்டும் இந்துக்களும் சமணர்களும் பயன்படுத்துவர். Written by London swaminathan, tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஜாதிக்கொடுமை
Honey bottles in my kitchen in London.
ஜாதிகளைக் கண்டுபிடித்தது ஆரியரா திராவிடர்களா என்ற சர்சசையை வரலாற்று ஆசிரியர்கள் விவாதிப்பது உண்டு .உண்மையில் சொல்லப் போனால் அதைக் கண்டுபிடித்து இன்று வரை நடைமுறைப் படுத்துவது தேனீக்களே! ராஜா -ராணி வம்ச பரம்பரை ஆட்சிக்கும் அதுவே காரணம் போலும். தொழிலாள ர்களை வேலைக்கு வாங்கி சுக போகமாக வாழ்கிறது ராணித் தேனி . போகட்டும் . அவைகள் பின்பற்றும் ஜாதிக்கொடுமைக்கு கை மேல் கிடைத்த பலன்!! மனிதர்கள் அத்தனை தேனையும் திருடிக் குடித்து விடுகிறார்கள் ! Written by London swaminathan, tamilandvedas.com, swamiindology.blogspot.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
Treasure Hunters Mr Mead and Mr Miles
நேற்றைய தினம் (3-2-2020) பிரிட்டிஷ் பத்திரிகைகள் ஒரு சுவையான செய்தியை வெளியிட்டுள்ளன. அது பிரிட்டனின் மிகப்பெரிய புதையல் பற்றிய செய்தி .அதன் மதிப்பு பத்து மில்லியன் ஸ்டெர்லிங் பவுன்கள். இந்தியக்கணக்கில் சுமார் 100 கோடி ரூபாய். இவை இரும்புக் கால நாணயங்கள் (Iron Age Coins)
பிரிட்டனில் புதையல் கண்டுபிடிக்கும் கருவி விலைக்கு கிடைக்கிறது. குழந்தைகளுக்கான சிறு பொம்மைக் கருவி முதல் மிகவும் சக்தி வாய்ந்த கருவி வரை யாரும் வாங்கலாம். இதை மெட்டல் டிடெக்டர் (Metal Detector) என்பர். அதாவது பூமிக்கடியில் இருக்கும் உலோகப் பொருட்களைக் கண்டுபிடித்து ஒலி எழுப்பும்.
பிரிட்டிஷ் பத்திரிகைகளில் வாரம் தோறும் புதையல் செய்திகள் வருகின்றன. இதற்காக மாதப் பத்திரிக்கைகளும் உள . இந்தியாவிலும் நிலத்துக்கடியில் நிறைய புதையல் உளது. அதைக் கண்டு பிடிப்போர் அதன் மதிப்பு தெரியாமல் உருக்கி உலோகத்தை மட்டும், குறிப்பாக தங்கம் வெள்ளியை மட்டும் , எடுத்துக்கொள்வர். உண்மையில் அதிலுள்ள உலோகத்துக்குக் கிடைக்கும் விலையைப் போல பத்து முதல் 100 மடங்கு விலை கிடைக்கும் என்பதை பாமரர்கள் அறியார். விஷயம் தெரிந்தோர் அதை வெளிநாட்டுக்க்குக் கடத்தி விடுகின்றனர். தமிழ் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு காதலன் காதலி ரோமானிய மோதிர உருவம் பத்திரிகைகளில் வெளியான சில தினங்களில் மாயமாய் மறைந்து விட்டது. கரூரில் அமராவதி ஆற்றில் கிடைக்கும் புதையல்கள கள்ளத் தனமாய் வெளிநாட்டுக்கு அனுப்பப்படுகின்றன. கங்கை நதியில் நவநந்தர்கள் ( Nava Nandas of Nanda Dynasty, 5th century BCE) தங்கக் கட்டிகளை ஒளித்து வைத்த செய்தியை சங்க புலவர்கள் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே பாடியுள்ளனர் . நிற்க. Written by London swaminathan, tamilandvedas.com, swamiindology.blogspot.com
பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்ட புதையல்களில் (Treasure) இதுதான் மிகப்பெரியது என்று கின்னஸ் சாதனைப் புஸ்தகத்தில் இடம்பெற்ற இப் புதையலில் 69,347 தங்கம், வெள்ளி, இரும்பு நாணயங்கள் அடங்கும். இதன் எடை 1700 பவுண்டு.விலை மதிப்பு பத்து மில்லியன் ஸ்டெர்லிங் பவுன். இதில் பழைய காசு கி.மு. 50 காலத்தைச் சேர்ந்தது .
ரெக் மீட் மற்றும் ரிசர்ட் மைல்ஸ் (Reg Mead and Richard Miles) ஆகிய இருவர் இதை 2012ல் ஒரு வேலிக்கு அடியில் களிமண் மேட்டில் கண்டுபிடித்தனர் . ஆனால் இப்போதுதான் கின்னஸ் சாதனை நூல் இதை பெரும் புதையல் (Biggest Treasure) என்று அறிவித்துள்ளது. புதையலை யாராவது கண்டுபிடித்தால் அது மகாராணிக்குச் சொந்தம் என்பது பிரிட்டனில் உள்ள சட்டம். ஆயினும் கண்டுபிடித்தோருக்கு ஒரு பங்கு உண்டு.
‘கழுகுக்கு மூக்கில் வேர்க்கும்’ என்பது தமிழ்ப் பழமொழி. அதுபோல புதையல் தேடுவோருக்கு கையில் அரிக்கும். யாரோ ஒரு பெண்மணி இந்தப் பொட்டலில் ஒரு வெள்ளி பித்தா னை பார்த்தேன் என்றார். உடனே இவ்விருவரும் மம்மட்டி, கோடாரி , கத்தி, கபடா , மெ ட்டல் டிடெக்டர் சஹிதம் போய் வெற்றி கண்டனர்.
curator in the museum sorting out the coins
இவை கிடைத்த இடம் சானல் ஐலண்ட்ஸ் (Channel Islands) எனப்படும் ஜெர்சி, கேர்ன்சி ஆகும்.
ஜெர்சியில் உள்ள லா ஹோ க் பை மியூசியத்தில் (La Hogue Bie Museum, Grouville, Jersey) இவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
இதற்கு முன்னர் பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பெரிய புதையல் 1978ல் வில்ட்ஷைர் (Wiltshire) அருகில் கிடைத்த 54,951 நாணயங்கள் புதையல் ஆகும். Written by London swaminathan, tamilandvedas.com, swamiindology.blogspot.com
உலகில் கிடைத்த மிகப்பெரிய புதையல் 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த 1,50,000 பென்னி காசுகள் புதையல் ஆகும். அவை 1908ம் ஆண்டில் பிரஸ்ஸல்ஸ் (பெல்ஜியம்) நகரில் கண்டெடுக்கப்பட்டன.
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
உலகில் உள்ள அனைத்து நாடுகளையும் எடுத்துக் கொண்டு ஆங்காங்கு பல நாடுகளையும் ஆண்ட மன்னர்களில் அறிவாளிகளாக இருந்த மன்னர்களை ஒப்பிட்டுப் பார்த்தால் உயர்ந்த அறிவாளியாகவும் பல்வேறு துறைகளில் பல நூல்களை இயற்றிய அறிவாளியாகவும் மிளிரும் மன்னன் பாரதத்தைச் சேர்ந்த போஜ மஹாராஜனே! ( அரசாண்ட காலம் :கி.பி. 1010-1055)
போஜனின் பெயரால் வழங்கப்படும் நகரின் பெயர் போபால்.
போஜன் 84 நூல்களை இயற்றியதாகப் பலவேறு நூல்களின் அடிப்படையில் அறிகிறோம்.
இன்னும் சிலர் அவன் 104 நூல்களை இயற்றியதாகவும் 104 ஆலயங்களை அமைத்ததாகவும் கூறுகின்றனர்.
போஜன் சிறந்த சிவ பக்தன்.
வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் ஒவ்வொரு நாளையும் நன்கு அனுபவித்தவன்.
பெருத்த நீதிமான். ஏழைகளின் பால் இரக்கம் கொண்டவன்.
சிறந்த கவிஞன். பல் துறை நிபுணன். எப்போதும் அவனைச் சுற்றிப் பெரும் கவிஞர் கூட்டம் ஒன்று இருந்து கொண்டே இருக்கும்.
ஏராளமான நுட்பமான கேள்விகளை அவர்களிடம் அவன் கேட்டுக் கொண்டே இருப்பான்.
அவர்களில் தலை சிறந்த கவிஞனாக மிளிர்ந்த காளிதாஸன் மன்னனின் மனதில் ஊடுருவி இருக்கும் ரகசியத்தை அறிந்து பளீர் பளீரென்று கவிதையாலேயே பதில் கொடுப்பான்.
போஜனையும் காளிதாஸனையும் இணைத்து பாரதத்தில் உலவி வரும் சம்பவங்கள் ஏராளம்; கதைகள் ஏராளம்.
துரதிர்ஷ்டவசமாக போஜனைப் பற்றிய முழு வரலாறு எழுதப்படவில்லை.
ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் நூல்களில் உள்ள சம்பவங்கள் மட்டுமே கிடைத்துள்ளன.
அவனது 84 நூல்களில் இன்று கிடைத்திருப்பவை சொற்பமே. ஒரு வேளை முனைப்புடன் ஆராய்ந்தால் (4 லட்சம் சம்ஸ்கிருத சுவடிகள் திறந்து கூடப் பார்க்கப்படவில்லை என்பதை நினைத்துப் பார்த்தால்) அவனது நூல்கள் பல கிடைக்கக் கூடும்.
அவனது நூல்களின் பட்டியலை ஒருவாறாக இன்றைய நிலையில் தொகுத்துப் பார்த்தால் வருவது கீழ்க்கண்ட நூல்கள்:
வானவியல் மற்றும் ஜோதிடம்
ராஜமார்த்தாண்டா
ராஜம்ருகங்கா
இட்வஜ்ஜனவல்லபா (ப்ரஸ்ன ஞானம்)
ஆதித்ய பிரதாப சித்தாந்தா
மருத்துவம்
ஆயுர்வேத சாரஸ்வம்
விஸ்ராந்தவித்யா விநோதம்
சாலைஹோத்ரம் (விலங்கிய கையேடு)
சில்ப சாஸ்திரம்
சமராங்கதஹன சூத்ரதாரா
இலக்கணம்
சப்தானு ஞானம்
தத்துவம்
ராஜமார்த்தாண்டம் (வேதாந்தம்)
பதஞ்சலி யோக சூத்ரம்
தத்வ ப்ரகாசம் (சைவம்)
சித்தாந்த சங்க்ரஹம்
சிவதத்வ ரத்ன காலிகா
யுக்தி கல்பதரு
பரம சாஸ்த்ரம்
வியவஹார சமுச்சயம்
சாருசர்யா
அர்த்த சாஸ்திரம்
அய்ஜக்ய நீதி (தண்ட நீதி) மற்றும் புத்ரமார்த்தாண்டம்
அலங்காரம்
சரஸ்வதி கண்டாபரணம்
ச்ருங்கார ப்ரகாஸம்
கவிதை மற்றும் உரைநடை
ரத்னாயன சம்பு
வித்யாமோத காவ்யம்
இரு பிராக்ருத நூல்கள் (சமீப காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டவை)
மஹா காளி விஜயம் (ஸ்தோத்ர நூல்)
ச்ருங்கார மஞ்சரி (உரைநடையில் கதைகள்)
சுபாஷித ப்ரபந்தம்
அகராதி
நாமமாலிகா
மேலே கண்டவை அனைத்தும் பிரபாவ சரித்ரம் என்ற (1450ஆம் ஆண்டு) நூலில் தரப்பட்டவையாகும்.
வழக்கம் போல ஆங்கில “அறிஞர்களால்” முட்டாள்தனமாக வைக்கப்படும் ஒரு வாதம் – இவ்வளவு நூல்களையும் ஒரே மன்னன் எழுதி இருக்க முடியுமா? என்பது தான்!
உடனேயே இவர்களின் முடிவு “முடியாது” என்பது தான்.
பல்வேறு அறிஞர்களை எழுத வைத்துத் தன் பெயரைப் போட்டுக் கொண்டான் போஜன் என்று கூறி இவர்கள் சந்தோஷப்படுகின்றனர் – பாரத அறிஞன் ஒருவனை மட்டம் தட்டி, அதை அப்படியே காலம் காலமாகச் சொல்ல வித்திட்டு விட்டோமே என்பது இவர்களின் சந்தோஷம். ஆகவே தான் இவர்களின் பெயர்களைக் கூட இங்கே குறிப்பிடவில்லை. வெற்று விளம்பரத்தைத் தேடும் அறிஞர்களுக்கு நாம் ஏன் அதைத் தர வேண்டும்.
இன்றைய உலகை எடுத்துக் கொண்டால் பல அறிஞர்கள் ஏராளமான நூல்களை எழுதிதைப் பார்க்கிறோம்; எழுத்தாளர்கள் பல நாவல்களை எழுதியதைப் பார்க்கிறோம்.
அவர்களை எல்லாம் ஏன் இந்த அறிஞர்கள் மட்டம் தட்டவில்லை? சந்தேகப்படவில்லை?!
காரணம் போஜன் ஒரு பாரத தேசத்து மாமன்னன்; பேரறிஞன் – அவனை அப்படி ஒப்புக் கொள்ளாமல் மட்டம் தட்ட வேண்டும்; அவ்வளவு தான்!
• I. Astronomy and Astrology (1) Rajamarttanda (2) Rajamrganka (3) Yidvajjanavallabha (pra§najnana) (4) Adityapratapasiddbanta II. Medicine (5) Ayurveda Sarvasvam (6) Visrantavidyavinoda (7) Salihotra (a Veterinary Manual) III. Silpaidstra (8) SamaranganaSutradbara IV. Grammar (9) Sabdanu6a3anam V. Philosophy (10) Rajamarttanda (Vedanta) (11) „ (acorn, on Patanjali’s Yoga Sutras) (12) Tatvaprakasa (Saivaism). (13) Siddhantasangraha, „ ( 14 ) Sivatatvaratna Kalika „ (15) Yukti Kalpataru „ VI. Pharma Sastra (16) Vyavabarasamuccaya. (17) Carucarya. VII. Arthasaitra (18) Caijakyaniti (Dandaniti) and Putramartanda. VIII. Alankdra (19) Sarasvati Kantbabharana (20) jSrngaraprakasa. IX. Poetry and Prose. (21) Ratnayana campu. (22) Vidyavmodakavyam. (23, 24) Two Prakrt poems (lately discovered at Dbar). (25) Mabakalivijayam (a stotra) (26) Srngaramanjari (prose tales) (27) Subbasitaprabandha. X. Lexicography (28) Namamalika. A list in the Prabhavaka Garitra (c. 1450 A. D.)
*
போஜன் எழுதிய நூல்களாக விக்கிபீடியா தரும் பட்டியல் இது:
According to Ajada, who wrote a commentary titled Padaka-prakasha on Sarasvati-Kanthabharana, Bhoja wrote 84 books. The surviving works attributed to Bhoja include the following Sanskrit-language texts (IAST titles in bracket)
Bhujabala-bhima (Bhujabalabhīma), a work on astrology
Champu-Ramayana or Bhoja-Champu (Campūrāmāyaṇa), a re-telling of the Ramayana in mixture of prose and poetry, which characterises the champu genre. The first five kandas (chapters) are attributed to Bhoja. The sixth and seventh chapters were completed by Lakshmana and Venkatadhvarin respectively.
Charucharya (Cārucārya), a treatise on personal hygiene
Raja-Martaṅda (Rājamārtanḍa) or Patanjali-Yogasutra-Bhashya, a major commentary on the Yoga Sutras of Patanjali; includes an explanation of various forms of meditations
Raja-Mriganka-Karana (Rājamrigankakaraṅa), a treatise on chemistry, especially dealing with the extraction of metals from ores, and production of various drugs.
Samarangana-Sutradhara (Samarāṇgaṇasūtradhāra), a treatise on architecture and iconography. It details construction of buildings, forts, temples, idols of deities and mechanical devices including a so-called flying machine or glider.
Sarasvati-Kanthabharana (Sarasvatīkaṇṭhabharaṇa), a treatise on Sanskrit grammar for poetic and rhetorical compositions. Most of it is a compilation of works by other writers. Some of the poetic examples provided by him in this work are still appreciated as the highest cream of Sanskrit poetry.
Shalihotra (Śālihotra), a book on horses, their diseases and the remedies
Shringara-Prakasha (Śṛṅgāraprakāśa), treatise on poetics and dramaturgy
Sringara-Manjari-Katha (Śṛṅgāramanjarīkathā), a poem composed in akhyayika form
Tattva-Prakasha (Tattvaprākaśa), a treatise on Shaivite philosophy. It provides a synthesis of the voluminous literature of the siddhanta tantras
Vidvajjana-Vallabha, treatise on astronomy
Vyavahara-Manjari (Vyavahāramanjarī), a work on dharmaśāstra or Hindu law
Yukti-Kalpataru, a work dealing with several topics including statecraft, politics, city-building, jewel-testing, characteristics of books, ship-building etc.
The Prakrit language poems Kodanda-Kavya and Kurma-Sataka are also attributed to Bhoja.[79] The Kodanda-Kavya (Kodaṅḍakāvya) was found inscribed on stone slab fragments at Mandu.[80] The Kurma-Sataka (Avanikūrmaśataka), which praises the Kurma (tortoise) incarnation of Vishnu, was found inscribed at the Bhoj Shala in Dhar.[81]
Sangitaraja, attributed to Kalasena or Kumbha, names Bhoja as an authority on music, which suggests that Bhoja also compiled or wrote a work on musi
***
போஜனின் வாழ்க்கையில் நடந்த சுவையான சம்பவங்கள் சிலவற்றை அடுத்துப் பார்ப்போம்.
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
திருநெல்வேலியிலிருந்து வெளிவரும் ஹெல்த்கேர் தமிழ் மருத்துவ மாத இதழில் ஜனவரி 2020 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை (ஹெல்த்கேர் ஆசிரியர் R.C.ராஜா, 10, வையாபுரி நகர், திருநெல்வேலி டவுன் 627006, தமிழ்நாடு, இந்தியா)
புத்தகச் சுருக்கம் : Perfect Digestion by Deepak Chopra
நல்ல ஜீரணத்திற்கான அருமையான அறிவுரைகள்! – 1
(தீபக் சோப்ரா எழுதியுள்ள ‘பெர்ஃபெக்ட் டைஜெஸ்ஷன்”)
ச.நாகராஜன்
உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர், யோகா மாஸ்டர், வாழ்க்கை முறை நெறியாளர் தீபக் சோப்ரா அமெரிக்காவில் வாழ்ந்து வருகிறார்.
ஏராளமான நல்ல புத்தகங்களை எழுதியுள்ளவர் அவர்; அவரது புத்தகங்கள் உலகெங்கும் லட்சக் கணக்கில் விற்று சாதனை படைத்திருக்கின்றன.
நல்ல ஜீரணத்தை அடைவதற்கான வழிகள் என்ற அவரது புத்தகம் அருமையான புத்தகம். 127 பக்கங்கள் கொண்ட இந்த நூல் 10 அத்தியாயங்களைக் கொண்டுள்ளது.
மனிதன் ஆரோக்கியமாக வாழ அவன் எடுத்துக் கொள்ளும் உணவு மிக முக்கியமானது. குடல், இரைப்பை, குடல் நாளம் ஆகியவை எப்படிப்பட்ட உணவை ஏற்கும், எவற்றை எடுத்துக் கொண்டால் உடலில் பிரச்சினைகள் தோன்றும் என்ற அடிப்படை அறிவை அறியாததால் தான் உலகில் பெரும்பாலானோருக்கு ஜீரணம் சார்ந்த பிரச்சினைகள் உருவாகின்றன.
அந்த வகையில் நல்ல அறிவுரைகளைத் தந்து ஜீரணம் பற்றிய முழு விவரங்களைத் தொகுத்து விளக்கி ஆயுர்வேத அடிப்படையிலான ஆலோசனைகளை வழங்குகிறார் இந்தப் புத்தகத்தில் தீபக் சோப்ரா.
செரிமானக் குடல் தடம் சிக்கலான ஒரு உறுப்பு.
மாறிக் கொண்டே இருக்கும் உடல் அமைப்பில் 98 சதவிகிதம் அணுக்கள் சென்ற வருடம் உடலில் இல்லாதவை,
இந்த ஒரு உண்மையே உடல் அமைப்பு மாறிக் கொண்டே இருக்கிறது என்பதைக் காண்பிக்கிறது. இதை முதலில் உணர வேண்டும்.
ஒரு ஆச்சரியாமான உண்மை, உங்களின் உடல் எலும்புகள் ஒவ்வொரு மூன்று மாதமும் புதுப்பிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன என்பது தான்!
இர்ரிடபில் பவல் சிண்ட் ரோம் (Irritable Bowel Syndrome – IBS) எனப்படும் குடல் பதற்றப் பிணிக்கூட்டு நோய் ஒரு ‘வில்லங்கமான’ வியாதி.
எதையும் சாப்பிட விடாது; சாப்பிட்டவுடன் டாய்லெட்டை நோக்கி ஓட வேண்டும் போன்ற உணர்வை ஏற்படுத்தும் வியாதி.
வெளியில் சாப்பிட முடியாது; பயணம் போக முடியாது; விருந்தில் கலந்து கொள்ள முடியாது, ஏன் அண்டை அயலார் உறவினர் வீட்டிற்குக் கூட சகஜமாகப் போக முடியாது; எதையாவது கொடுத்துச் சாப்பிடச் சொன்னால்…” – என்ன செய்வது என்ற இடைவிடாது தொற்றிக் கொண்டிருக்கும் பயமே காரணம்!
இந்த வியாதி பற்றிய முழு விவரத்தையும் நோய்க்கான தீர்வையும் விளக்கமாகத் தருகிறது இந்த நூல்.
ஆயுர் வேத வைத்திய முறை உடலை வாதம், பித்தம், கபம் என மூன்று வகையாகப் பிரிக்கிறது.
முதலில் இந்த மூன்றில் நாம் எந்த வகை என்பதை அறிந்து கொள்ள வேண்டும். அதற்குத் தக்கபடி நமது உணவுப் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
இதற்காக மூன்று வினாத்தாள்கள் 20 கேள்விகளுடன் தரப்பட்டுள்ளன. அதற்கு விடையளித்த பின்னர் கொடுக்கப்பட்ட சரியான விடைகளுடன் ஒத்துப் பார்த்து நீங்கள் எந்த டைப் என்பதைக் கண்டுபிடித்து விடலாம்.
முதலாவது வகையினர்
வாத வகையினர் (Characteristics of Vada Type)
ஒல்லியான உடல்வாகு, எடை குறைவு
சுறுசுறுப்பாகச் செயல் புரிவர்
ஒழுங்கற்ற பசி எடுக்கும் தன்மையும் சீரற்ற ஜீரணமும்
விட்டு விட்டுத் தூங்குதல், இன்சோம்னியா நிலை போல இருத்தல்
சுறுசுறுப்பு, நல்ல கற்பனா திறன், குதூகலமான தன்மை
உணர்ச்சிவயப்படக்கூடியவர், அடிக்கடி மனநிலை மாறும் தன்மை (Changing moods)
ஒரு விஷயத்தை உடனே கிரஹிப்பவர், அதே போல மறந்தும் போய்விடுவர்
கவலைப்படும் சுபாவம்
மலச்சிக்கல் வரும் தன்மை
சுலபமாக களைப்படைவர், அதிக வேலை செய்வர்
மன மற்றும் உடல் ஆற்றல் பொங்கிப் பொங்கி வரும் (Mental and physical Energy comes in bursts)
இரண்டாவது வகையினர்
பித்த வகையினர் (Characteristics of Pitta Type)
நடுத்தர உடல் வாகு கொண்டவர்
நடுத்தர வலிமை அதே போன்ற தாங்கும் சக்தி கொண்டவர்
நல்ல பசியும் தாகமும் கொண்டவர், நல்ல ஜீரண சக்தி உண்டு.
கோபம் கொள்பவர், மன அழுத்தத்தில் எரிச்சல் அடைபவர்
சிவப்பான தோற்றம், மச்சம் உள்ளவர்
சூரிய வெளிச்சம் ஆகாது, வெப்பம் அதிகமாக இருப்பின் தாங்க மாட்டார்
ஊக்கமுடையவர், சவால்களை எதிர்கொண்டு சமாளிப்பவர்
கூரிய புத்தி
துல்லியமானவர், நல்ல குரலுடன் பேசுபவர்
அந்தந்த வேளை உணவை விட்டுக் கொடுக்கவே முடியாதவர்.
பொன் நிறம்/பழுப்பு/ சிவப்பு முடியினர்
மூன்றாவது வகையினர்
கப வகையினர் (Characteristics of Kapha Type)
திடமான உடல்வாகு கொண்டவர்,வலிமையானவார், நல்ல உடல் வலிமை, தாங்கும் சக்தி அதிகம் கொண்டவர்
சீரான சக்தி; மெதுவாகவும் நளினமாகவும் செயல் புரிபவர்
அமைதியானவர், பதற்றமில்லாத ஆளுமை கொண்டவர், கோபம் மெதுவாகத் தான் வரும்
அமைதியானவர், மிருதுவானவர், வெளுத்தவர், எண்ணெய்ப்பசை கொண்ட தோல் கொண்டவர்
புதிய விஷயங்களை மெதுவாகப் புரிந்து கொள்வர், ஆனால் தீர்க்கமான நினைவாற்றல் இருக்கும்
தன்னுடையது என்ற குணம் உண்டு,திருப்தியான சுபாவம் கொண்டவர்
ஒரு ஆயுர்வேத மருத்துவர் ஒருவரைப் பார்த்தவுடன் அவர் எந்த வகை என்பதைச் சுலபமாக நிர்ணயித்து விடுவார்.
சில அடிப்படை விதிகள்
நல்ல ஜீரண சக்தி அடைய சில அடிப்படையான விதிகள் உண்டு. அவையாவன:
நல்ல அமைதியான இடத்தில் உண்ணுதல் வேண்டும்.
உட்கார்ந்து உணவை உண்ண வேண்டும்.
மன அழுத்தம், சோர்வு,கவலையுடன் சாப்பிடக் கூடாது
அதிகமாக உண்ணக் கூடாது
ஃபிரிட்ஜில் வைக்கப்பட்ட குளிர்ந்த உணவை உண்ணக் கூடாது. ஐஸ் போட்ட திரவ வகைகளை உட்கொள்ளக் கூடாது
மென்று உண்ண வேண்டும்; பேசியவாறே சாப்பிடக் கூடாது
நிதானமாக உண்ண வேண்டும்.
உணவு உண்டபின் அது நன்கு ஜீரணமான பின்னரே அடுத்த வேளை உணவு உண்ணல் வேண்டும்.
அவ்வப்பொழுது சமைக்கப்பட்ட உணவு வகைகளை உண்ணுங்கள்.
எளிய நடைமுறைகள் தாம் இவை.
இவற்றைச் சரியாகக் கடைப்பிடிக்கவில்லையெனில் ஜீரண சக்தி குறைந்து சாப்பிட்ட உணவு வகைகள் அப்படியே இரைப்பையில் தங்கும்.
இதன் ஒரு விளைவாக ஏற்படுவது தான் ஆயுர்வேதம் குறிக்கும் ஆமா (Ama)
இதனால் ஏராளமான கோளாறுகள் உடலில் ஏற்படும். வாயில் வெள்ளைப் படலமாகத் தோன்றுவது இதன் ஒரு அறிகுறி.
இந்த அஜீரணக் கோளாறை நீக்க ஒரு எளிய சின்ன வழி உள்ளது.
முதல் வழி வாரத்தில் ஒரு நாள் எளிய கஞ்சி உணவு போன்ற திரவ உணவை மேற்கொள்வது.
அடுத்த இன்னும் ஒரு எளிய வழி.சாப்பிட்ட பின்னர் கொதிக்க வைத்த வெந்நீரை குடிக்கக் கூடிய பொறுக்கும் சூட்டுடன் அவ்வப்பொழுது நாள் முழுவதும் இரண்டு அல்லது மூன்று மடக்கு குடிக்க வேண்டியது தான்.
ஒரு பிளாஸ்கை வாங்கி வைத்துக் கொண்டு அவ்வப்பொழுது இந்த வெந்நீரை அருந்தி வந்தால் ஆமா போய் விடும்.
ஒரு முறை அல்லது இரண்டு முறை இப்படிச் செய்தால் போகாது; பல முறை இந்த வெந்நீர் குடிப்பதை மேற்கொள்ள வேண்டும்.
இதன் விளைவாக முதல் சில வாரங்கள் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டி வரும். ஏனெனில் உடலில் சேர்ந்துள்ள ‘ஆமாவை’ உடல் சிறுகச் சிறுக வெளியேற்றுவதால் இது ஏற்படும். சில வாரங்களில் பழையபடி சில முறை மட்டுமே சிறுநீர் கழிக்கும் நிலை திரும்பி விடும்.ஆனால் ஜீரணத்திற்கு தீங்கு பயக்கும் ‘ஆமா’ பொயே போய் விடும்.
ஜீரணத்திற்காக ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் சில மூலிகைகளும் உண்டு. இவற்றை அன்றாடம் உணவில் நாம் சேர்த்துக் கொள்ளலாம்.
நெல்லிக்காய்: இரைப்பையில் தோன்றும் எரிச்சலை நீக்குவது இது. இரத்தத்தில் உள்ள இனிப்பையும் இது சமனப்படுத்தும் (
கொத்துமல்லி : பித்த தோஷத்தை நீக்கும்.
லவங்கம் மற்றும் கிராம்பு : ஜீரணத்தை ஊக்குவிக்கும்.
(அடுத்த பகுதியுடன் இந்த புத்தகச் சுருக்கம் முடியும்)
You must be logged in to post a comment.