9 TYPES OF PLASTICS ENTER YOUR BODY! (Post No.5581)

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 23 October 2018

Time uploaded in London – 18-14

(British Summer Time)

Post No. 5581

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

BAD NEWS FOR NON-VEGETARIANS

London Newspapers have flashed a news item this morning which warns about micro plastics in our body.

There are nine types of micro plastics in the human body in western countries who eat fish and drink from bottles.

The plastics can be ingested by eating fish that has been exposed to wastes in the sea, while other risks include drinking beer or tap water and using cosmetics.

Sea fish is the main culprit. Also, city life is unhealthy.

In course of time, they may even recommend live in villages surrounded by trees and plants, Well water and vegetarian food. Most of the non -vegetarian foods come in plastic packings in western countries. That way eating vegetables are safe, that too eating vegetables grown organically is safer.

Vegetarians will feel better after reading the following news:

Toxic micro plastics are polluting people’s bodies according to a latest research by experts from Medical University in Vienna, Austria.

Volunteers from eight European countries took part in the study. All of them had potentially dangerous particles in their systems.

Dr Philip Schwabl, who led the research said, “This is the first study of its kind and confirms what we have long suspected—plastics ultimately reach the human gut. Smallest particles can even enter the blood stream., the lymphatic system and may even reach the liver. We need further research to find out how it would affect our health”.

How did they find it ?

The findings are based on analysis of the stools of eight volunteers from Austria, Britain, Finland, Italy, Japan, the Netherlands, Poland and Russia.

They had kept food diaries which showed the had all eaten products from plastic packaging or drunk from plastic bottles.

Six of the had eaten fish.

Nine types of MICRO PLASTICS were found and there were on average 20 particles per 10 gram of stool.

Full details were presented at United European Gastro enterology week in Vienna yesterday.

Previous research showed it plastic can be ingested through food, drink, cosmetics and even by breathing air in the city.

Plastics contaminates every aspect of our life!

–SUBHAM–

கண் துடிப்பது நல்லதா? கெட்டதா? (Post No.5535)

Research Article Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 13 October 2018

 

Time uploaded in London – 10-29 am (British Summer Time)

 

Post No. 5535

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

காளிதாஸன், கபிலன், ஷேக்ஸ்பியர் செப்புவது என்ன?

கண் துடிப்பதற்கு டாக்டர்கள் கொடுக்கும் விளக்கமும், ஸம்ஸ்க்ருத, தமிழ் இலக்கியம் கொடுக்கும் விளக்கமும் வேறு பட்டுள்ளன. ஆயினும் இந்துக்கள் சொன்ன விளக்கமே சரி என்பது போல புகழ் பெற்ற விஞ்ஞான சஞ்சிகைகளில் கட்டுரைகள் வெளியாகியுள்ளன. மேலும் காளிதாஸ மஹா கவி, சங்க இலக்கிய காலத்துக்கு முன்னர் வாழ்ந்தவர் என்பதற்கு மேலும் ஒரு சான்று கிடைத்துள்ளது. கொஞ்சம் ஆராய்ச்சி செய்வோம்; வாருங்கள்.

 

டாக்டர்கள் மொழிவது என்ன?

கண் துடிப்பது சர்வ சாதரணமாக நிகழும். இது சில நாட்களோ, வாரங்களோ, சில மாதங்களுக்கோ கூட நீடிக்கலாம். அதுவாக வரும்; அதுவாகப் போகும்; இதில் ஒரு தீங்கும் இல்லை. ஆயினும் நீண்ட காலத்துக்கு இது நீடித்தால் நரம்புக் கோளாறாக இருக்க வாய்ப்பு உளது; ஆகவே மருத்துவரைப் போய்ப் பாருங்கள்.

 

கண் துடிப்பது ஏன்?

களைப்பு, தூக்கமின்மை, கஃபைன் (caffeine) அதிகமுள்ள காப்பி முதலிய பானங்களை அதிகம் பருகுவது, சிரமப்பட்டு (strain) படிப்பது, தூக்கமின்மை முதலியன சில காரணங்கள் என்று மருத்துவ நூல்கள் புகல்கின்றன.

 

ஆனால் சங்கத் தமிழ் நூல்களும், அதற்கு முந்தைய ஸம்ஸ்க்ருத நூல்களும் செப்புவதோ வேறு!

 

மேலை நாடுகளில் கண் (twitching, throbbing) துடிப்பு பற்றிப் பேசாமல் கண் அரிப்பு (Itching) நமைச்சல் பற்றிப் பேசுகின்றனர்.

 

கிரேக்க நாட்டு அறிஞர் துவங்கி ஷேக்ஸ்பியர்,ஜோனதன் ஸ்விப்ட் வரை ஒரே குரலில் பேசுகின்றனர்.

 

உலகப் புகழ் பெற்ற விஞ்ஞான சஞ்சிகை ஸைன்டிபிஃக் அமெரிக்கனில் (Scientific American)  வெளியான கருத்து, நம்மவர் செப்புவதில் பசை இருப்பதாகக் காட்டுகிறது.

முதலில் கிரேக்க அறிஞர் செப்பியது என்ன?

 

தியோக்ரிட்டஸ் (கி.மு.275) என்ற கிரேக்க கவிஞர் சொல்கிறார்:

 

என் வலது கண் அரிக்கிறது, என் காதலியை நான் காணலாமா? (Idylls ஐடில்ஸ் என்னும் நூலில்).

 

உலக மஹா ஆங்கிலக் கவி ஷேக்ஸ்பியர் (1604ம் ஆண்டு) உரைப்பது:

என் கண்களும் அரிக்கின்றன; நான் அழப்போகின்றேன் என்பது இதன் பொருளோ! (ஒதெல்லோ Othello நாடகத்தில் காட்சி 4- டெஸ்டிமோனாவின் வசனம்)

 

டாக்டர் நதானியல் ஹோம்ஸ் (1650ஆம் ஆண்டு) பகர்கிறார்:

அவர்களின் வலது கண்ணீல் நமைச்சல் எடுத்தால் அவர்கள் விரைவில் அழப்போகிறார்கள் என்பது அர்த்தம்; இடது கண் அரிப்போ

எதிர்கால இன்பச் சிரிப்பை முன் அறிவிக்கிறது.

 

ஜோனதன் ஸ்விப்ட் (1738) சொல்கிறார்

என் வலது கண்ணில் அரிப்பு; நான் அழப்போகிறேன்

 

இதற்குப் பின்னரும் இப்படி வலது, இடது கண்களின் சோகம், சந்தோஷம் பற்றி எழுதியுள்ளனர். ஆக 2300 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கண்களின் மாற்றத்தை அறிந்துள்ளனர்.

 

ஆனால் இதற்கும் முன்னர் சங்கத் தமிழ் இலக்கியமும், ஸம்ஸ்க்ருத இலக்கியமும் கண் துடிப்பு பற்றி பேசுகின்றன.

 

உலக மஹா கவி, நாடக ஆசிரியன் காளிதாஸன் சொல்கிறான்:-

 

சாகுந்தலம், காட்சி 5-12

 

சகுந்தலை- ஏதோ அபசகுனம் போல் இருக்கிறதே! அடக்கடவுளே! என் வலது கண் துடிக்கிறதே. என்ன கஷ்டமோ

 

(பெண்களுக்கு வலக் கண் துடித்தல் கெட்டது. இடக் கண் துடித்தால் நல்லது நடை பெறும் என்பது இந்துக்களின் நம்பிக்கை; இதைத் தமிழிலும் காணலாம்)

 

மேகதூதம் 94

 

மேகமே! நீ அருகில் சென்றதும் அந்த மான் விழியாளின் கண் துடிக்கும் (இதற்கு உரைகாரர்கள் இடக் கண் துடிக்கும் என்று எழுதியுள்ளனர்- சகுன சாஸ்திரத்தின் அடிப்படையில்)

அதாவது கணவன் வரபோகிறான் என்ற நற்செய்தி கிடைக்கும்

 

ரகு வம்ஸம் 14-49

(ராம பிரானின் உத்தரவின் பேரில், சீதையை லக்ஷ்மணன் ஒன்றும் சொல்லாமல் காட்டில் விட்டபோது)

 

சீதையின் வலது கண்கள் துடித்தன (இனி வரப்போகும் துக்கத்தை முன் அறிவிக்கும் முகமாக)

 

இதே காளிதாஸன் ரகு வம்ஸத்திலும், விக்ரமோர்வஸீயத்திலும் ஆண்களின் வெற்றியைக் குறிக்க வலது தோள்கள் துடித்ததாக எழுதுகிறான்.

 

ஆக ஆண்களுக்கு வலது கண், வலது தோள்– சுப சகுனம். பெண்களுக்கு  அவ்வாறு இல்லை.

ஐங்குறு நூறு என்னும் சங்க நூலில் பிராஹ்மணப் புலவன் கபிலன் பாடுகிறான்:-

 

தோழி நன் நிமித்தம் பற்றிப் பாடுவது:–

நுண்ணேர் புருவத்த கண்ணும் ஆடும்

மயிர்வார் முன்கை வளையும் செறூ உம்

……….. (218)

 

தலைவியே! என் இடக் கண் துடிக்கிறது. கை வளையல்கள் விம்முகின்றன (ஆகையால் கவலைப் படாதே; தலைவன் வருவது உறுதி)

 

இங்கும் உரைகாரர்கள் இடது கண் என்று எழுதுவதைக் காணலாம். இதற்கு அடிப்படை சகுன சஸ்திரம்.

 

கபிலர்தான், அதிகமாக காளிதாசன் உவமைகளை சங்கத் தமிழ் நூல்களில் பயன்படுத்துகிறார். இந்த இரண்டு வரிகளில் கூட புருவம் என்னும் ஸம்ஸ்க்ருதச் சொல்லைக் காணலாம்.

 

கலித்தொகையில் பாலைபாடிய

பெருங் கடுங்கோவும் சோழன் நல்லுருத்திரனும் பாடுகின்றனர்:

 

மனைவயின் பல்லியும் பாங்கு ஒத்து இசைத்தன

நல் எழில் உன் கணும் ஆடுமால், இடனே

–பாலைக் கலி  10/20-23 (பெருங் கடுங்கோ)

 

பொருள்

பல்லியும் நான் சொல்லுவதை ஆமோதிப்பது போல ஒலி செய்கிறது. இடக்கண்ணும் துடிக்கிறது. ஆகவே மனம் தேறுவாயாக.

இங்கும் இடக் கண் துடிப்பு என்பது பழைய உரை.

 

 

முல்லைக் கலியிலும் இது போலக் காண்கிறோம். பிற்காலப் புலவர்கள் யாத்த நூல்களிலும் கண் துடிப்பைக் காண முடிகிறது.

 

எனது கருத்து

கண் துடிப்போ கண் நமைச்சலோ — எதுவானாலும் அது வருங்கால நிகழ்ச்சிகளை உணர்த்தும் சகுனம் என்று மேலை நாட்டினரும் கீழை நாட்டினரும் நம்பினர்.

 

மேலும் இடப்பக்கம் துடித்தல் பெண்களுக்கு நல்லது, வலப்பக்கம் துடித்தல் ஆண்களுக்கு நல்லது என்ற காளிதாசன் கருத்தைக் கபிலர் முதலானோர் கையாண்டது காளிதாஸனின் காலத்தை நான் சங்க காலத்துக்கு முன் வைக்கக் கிடைத்த இன்னும் ஒரு சான்று.

 

பாரதத்தில் இமயம் முதல் குமரி வரை ஒரே கருத்து, பண்பாடுதான் இருந்தது.ஆங்காங்கே சிறிய விஷயங்களில் வேறு பாடு  இருக்கலாம் என்பதற்கு இது இன்னும் ஒரு சான்று.

 

கடைசியாக இதில் விஞ்ஞானக் கருத்தும் இருக்கலாம் என்பது என் ஊகம். ஆயினும் ஆழமான ஆராய்ச்சி தேவை.

 

மூளையில் இரண்டு பகுதிகள் உள; அவற்றில் வலப்பக்க மூளை மனிதனின் இடது பகுதி உறுப்புகளையும், இடப்பக்க மூளை மனிதனின் வலது பகுதி உறுப்புகளையும் கட்டுப்படுத்துகின்றன என்பதெலாம் இப்பொழுது உறுதி செய்யப்பட்டுவிட்டன.

 

 

பெண்களுக்கு சில திறன்கள் அதிகம்; ஆண்களுக்கு சில திறன்கள் அதிகம் என்பதும் பென்ஸில்வேனியா பல்கலைக் கழகப் பேராசிரியர் ராகினி வர்மா செய்த ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. பெண்கள் உணர்ச்சிப்படுபவர்கள்; கலைகளில் வல்லவர்கள், கவனிப்பதில் வல்லவர்கள்.

ஆண்கள் அஹங்காரம் உள்ளவர்கள், நல்ல கணக்குப் போடுபவர்கள்; ஒளிமயமான முடிவுகளை எதிர்பர்ப்பவர்கள் என்று ஆராய்ச்சிகளில் தெரிய வருகிறது. இதை வைத்துப் பார்க்கையில் ஆண்களுக்கு ஏன் வலது பக்கத் துடிப்பு என்பது விளங்குகிறது. ஆயினும் இதை மெய்ப்பிக்க மேலும் ஆராய்ச்சி தேவை. ஒரு ஆளின் இடது கண்ணோ, வலது கண்ணோ துடிக்கையில் மூளையின் எந்தப் பகுதியில் என்ன நிகழ்கிறது என்பதை ஆராய்ந்தால் மட்டுமே உறுதிபடப் பேச முடியும். தற்போது இட, வல தொடர்புக்கு வாய்ப்பு இருப்பது மட்டும் ‘பட்டும் படாமலும்’ தெரிகிறது.

 

ஆராய்ச்சிகளைத் தொடர்வோம்.

 

–சுபம்–

ஆபரேஷன் ஃபைனல் – ஹாலிவுட் திரைப்படம்! – 1 (Post No.5534)

WRITTEN BY S NAGARAJAN

 

Date: 13 October 2018

 

Time uploaded in London – 7-47 AM (British Summer Time)

 

Post No. 5534

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

 

டைரக்டர் திரு கே.பாக்யராஜ் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் வார இதழ் பாக்யா. அதில் 12-10-2018 தேதியிட்ட இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (எட்டாம் ஆண்டு முப்பத்தி இரண்டாம்) கட்டுரை  

 

ஆபரேஷன் ஃபைனல் ஹாலிவுட் திரைப்படம்! – 1

 

.நாகராஜன்

 

2018ஆம் ஆண்டு  ஆகஸ்ட் 29ஆம் தேதி அமெரிக்காவில் திரையிடப்பட்ட வெற்றிப்படம் ஆபரேஷன் ஃபைனல். (Operation Finale)

கதையல்ல நிஜம், ஆபரேஷன் ஃபைனல். நாஜி ஜெர்மனியில் ஹிட்லருக்குக் கீழே பணி புரிந்த அடால்ஃப் எய்ச்மேன் (Adolf Eichmann) இஸ்ரேலிய உளவுப் பிரிவால் பிடிக்கப்பட்டு இஸ்ரேலுக்குக் கொண்டுவரப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு பின்னர் அவர் தூக்கிலிடப்பட்ட நிஜமான சம்பவத்தை திரையில் சித்தரிக்கும் படம் இது.

 

   இஸ்ரேலிய உளவுப் பிரிவான மகத்தான நவீன சாதனங்களைக் கொண்ட உலகின் அதி சிறந்த உளவுப் பிரிவான இஸ்ரேல் நாட்டின் மொஸாட் (Mossad) எப்படி எய்ச்மேனைப் பிடித்தது என்பதைக் காட்டும் இந்தப் படம் அமெரிக்காவில் உடனடி வெற்றியைப் பெற்றுள்ளது. இதர நாடுகளில் இது 2018 அக்டோபர் மாதம் மூன்றாம் தேதி வெளியிடப்படும்.

 

     இதன் டைரக்டர் க்ரிஸ் வெய்ட்ஸ். எய்ச்மேனாக நடித்திருப்பவர் பிரபல நடிகர் பென் கிங்க்ஸ்லி. உளவுப் பிரிவின் ஒற்றர் படையின் தலைவரான பீட்டர் மால்கினாக  நடித்திருப்பவர் ஆஸ்கார் ஐஸக். அர்ஜெண்டினாவில் 2017 அக்டோபரில் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டது. தத்ரூபமாக காட்சிகளைப் படம் பிடிக்க வேண்டும் என்பதற்காக ஒரு தனி ஆய்வுப் பிரிவு நிறுவப்பட்டு ஏராளமானோரை பேட்டி கண்டு உள்ளது உள்ளபடி காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கின்றன.

 

 

     ஹிட்லரின் ராணுவப் பிரிவான எஸ்.எஸ்ஸில் எய்ச்மேன் 1932இல் சேர்ந்தார். 1942இல் அனைத்து யூதர்களையும் மரண சேம்பருக்கு அனுப்பும் பொறுப்பைப் பெறும் அளவில் அந்தப் பிரிவில் உயர்ந்தார். சுமார் 30 லட்சத்திலிருந்து நாற்பது லட்சம் யூதர்களை மிக விரைவாகத் ‘திறம்பட மரண அறைக்குக் கொண்டு சென்றவர் அவர். இன்னும் இருபது முதல் முப்பது லட்சம் யூதர்கள் சித்திரவதை முகாமில் கொல்லப்பட்டனர்.

இரண்டாவது உலக மகாயுத்தம் முடிந்தவுடன் அமெரிக்கத் துருப்புகள் எய்ச்மேனைப் பிடித்தன. ஆனால் சிறையிலிருந்து தப்பிய எய்ச்மேன் நான்கு ஆண்டுகள் ஐரோப்பாவிலும் மத்திய கிழக்கிலும் மாறுவேடத்துடன் இன்னொரு பெயரில் உலவி வந்தார். கடைசியாக 1950இல் அர்ஜெண்டினாவில் வந்து வசிக்க ஆரம்பித்தார். நாஜிகளுக்கு ஒரு பாதுகாப்பான இடமாக அர்ஜெண்டினா திகழ்ந்தது.

 

 

    அதன் தலைநகரான ப்யூனெஸ் ஐரிஸில் (Buenos Aires)

 ரிசார்டோ க்ளெமெண்ட் என்ற ஒரு ஆசாமி சாதாரண மனிதன் போல வாழ்ந்து வந்தான். மெர்சிடெண்ஸ் பென்ஸ் தொழிற்சாலையில் போர்மேனாக அவன் வேலை பார்த்து வந்தான். தினசரி காலையில் பஸ்ஸைப் பிடித்து தொழிலகம் செல்வான்; மாலையில் மனைவி இரு மகன்கள் இருக்கும் தனது வீட்டிற்குத் திரும்புவான்.

 

 

   ஆனால் அந்த சாதாரண ஆசாமிக்கு வந்தது வினை 1960ஆம் ஆண்டு மே மாதம் 11ஆம் தேதி. அவர் வீடு திரும்பும் போது அவரை மடக்கிப் பிடித்தது இஸ்ரேலின் உளவுப் படை. கண்கள் கட்டப்பட்டு காரில் தூக்கிப் போடப்பட்டு  ஒரு அறையில் பத்திரமாக அவரைக் கொண்டு சென்று அவர் தான் தாங்கள் தேடிக் கொண்டிருந்த எய்ச்மேன் என்று உறுதிப் படுத்திக் கொண்டது மொஸாட். உலகின் அதி நவீன கருவிகளுடன் பல மாதங்களாக உளவுப் படையில் பல பேர்கள் இந்தத் தருணத்திற்காக வேலை பார்த்து வந்தனர்.

 

 

     அர்ஜெண்டினா நாஜிகளைப் பிடிக்க் ஆதரவு தராது என்று தீர்மானித்த இஸ்ரேல் தானாகவே எய்ச்மேனைப் பிடித்து இஸ்ரேலுக்குக் கொண்டு வந்தது. மொஸாடின் டைரக்டரான ஹேரலுக்கு எய்ச்மேன் இருக்குமிடம் பற்றிய தகவல் வந்தவுடன் அவர் பிரதம மந்திரிக்கு அதைத் தெரிவித்தார்.

இஸ்ரேலின் பிரதம மந்திரியாக இருந்த டேவிட் பென் -குரியன் (David Ben- Gurion) நாற்பது லட்சம் யூதர்களின் பெரும் பலிக்குக் காரணமான எய்ச்மேனை எப்பாடு பட்டாவது பிடித்துக் கொண்டு வந்து நீதிக்கு முன்னால் நிறுத்த உத்தரவிட்டார்.

எப்படி எய்ச்மேன் அர்ஜெண்டினாவில் இருப்பது மொஸாட்டிற்குத் தெரிய வந்தது?

 

 

மகத்தான கொலைகளைச் செய்த எய்ச்மேனை எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு இஸ்ரேலியர் பலர் இதே வேலையில் தீவிரமாக இருந்தனர். அவர்களின் ஒருவர் தான் சைமன் வைஸெந்தால். அவருக்கு ஒரு கடிதம் பற்றிய விவரம் தெரிய வந்தது. அதன்படி 1953இல் எய்ச்மேன் ப்யூனெஸ் ஐரிஸில் இருப்பதாக அவர் தெரிந்து கொண்டார்.  இதை அவர் வியன்னாவில் இருந்த இஸ்ரேலின் தூதருக்குத் தெரிவித்தார். அத்துடன் அவர் தனிப்பட்ட துப்பறிவாளர்களைத் தானே நியமித்து எய்ச்மேன் குடும்பத்தினரை போட்டோ பிடிக்க ஏற்பாடு செய்தார். எய்ச்மேனின் சகோதரரான ஆட்டோ என்பவர் அச்சு அசலாக எய்ச்மேன் போலவே இருப்பார். ஆகவே உண்மையான எய்ச்மேனைப் பிடிக்க நிறைய தகவல்களைச் சரிபார்க்க வேண்டி இருந்தது. தனக்குக் கிடைத்த போட்டோக்களை மொஸாட்டிற்கு சைமன் வழங்கினார்.

 

 

      இதே சமயம் லொதார் ஹெர்மன் என்பவரும் எய்ச்மேனைக் கண்டுபிடிப்பதில் தீவிரமாக இருந்தார். ஜெர்மனியிலிருந்து 1938ஆம் ஆண்டு அவர் அர்ஜெண்டினா வந்து அங்கு குடியேறினார். ஹெர்மெனின் மகளான சில்வியா க்ளாஸ் எய்ச்மேன் என்பவருடன் பழக ஆரம்பித்தார். இந்த டேடிங்கில் ஒரு நாள் க்ளாஸ் பேச்சு வாக்கில் எப்படி தன் தந்தை யூதர்களைக் கொன்று குவித்தார் என்று பெருமை அடித்துக் கொண்டார். சில்வியா இதை தந்தைக்குச் சொல்ல, அவர்  உண்மையை நன்கு அறிந்து கொள்ள தன் மகளை க்ளாஸின் வீட்டிற்கே செல்லச் சொன்னார். வீட்டின் கதவைத் திறந்தவர் எய்ச்மேன் தான். ஆனால் அவர் க்ளாஸின் மாமா. க்ளாஸ் அவரை அப்பா என்று அழைப்பது வழக்கம் என்பதையும் சில்வியா அறிந்து கொண்டார்.

 

 

   செய்தி உறுதிப் படுத்தப்பட்டது. மொஸாட் டைரக்டர் ஹேரல் தீவிரமாக இந்த வேட்டையில் இறங்கினார். உளவுப் பிரிவினரில் ஏராளமானோரைத் தொடர்ந்து எய்ச்மேனைக் கண்காணிக்க அவர் பணித்தார். அவர்களில் ஒருவர் எய்ச்மேனின் அடையாளங்களைக் கண்டு அவரே என உறுதிப்படுத்தினார்.. பின் மொஸாட் மின்னல் வேகத்தில் செயலில் இறங்கியது. பின்னர் நடந்ததைப் பார்ப்போம்.

 

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

பிரபல விஞ்ஞானியான ஐன்ஸ்டீனின் முதல் மனைவி மிலெவா மேரியின் வாழ்வு சற்று சோககரமானது.(பிறப்பு 29-12-1875 மறைவு 4-8-1948).

 

ஐன்ஸ்டீனின் ரிலேடிவிடி ஆய்விற்குப் பெரிதும் துணை புரிந்தவர் மிலெவா. இருவரும் மனமொத்து வாழ்ந்து வந்தனர். நிச்சயம் நோபல் பரிசு கிடைத்து விடும் என ஐன்ஸ்டீனும் மிலெவாவும் நம்பிக் கொண்டிருந்தனர். ஆய்வில் ஐன்ஸ்டீனின் பெயர் மட்டும் இருந்தது. மிலெவா என்ன நினைத்தார் எனில், ஐன்ஸ்டீன் வெற்றி பெற்றால் அது தனது வெற்றி தானே என்று கருதினார். ஆனால் பின்னால் ஐன்ஸ்டீன் பெர்லினில் சென்று தங்க வேண்டி இருந்த போது அது மிலெவாவுக்குப் பிடிக்கவில்லை. உறவில் விரிசல் ஏற்பட்டது. ஐன்ஸ்டீன் பெர்லின் வாசத்தில் திடமாக இருந்ததால் விவாகரத்து வரை செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. மிலெவாவும் இதற்கு இணங்கினார் – ஒரு நிபந்தனையின் பேரில். நோபல் பரிசு கிடைக்கும் பட்சத்தில் அந்தத் தொகையைத் தனக்குத் தர வேண்டும் என்றார் மிலெவா. ஐன்ஸ்டீன் ஒத்துக் கொண்டார், அந்தத் தொகையை முதலீடு செய்து அதில் வரும் வட்டியை அவர் எடுத்துக் கொள்ளலாம் என்றார் அவர். 1919இல் விவாகரத்து செய்யப்பட்டது. விவாகரத்து ஆன சில மாதங்களிலேயே ஐன்ஸ்டீன் தன் நெருங்கிய உறவுப் பெண்மணியான எல்சாவை மணம் செய்து கொண்டார்.

 

 

 1921இல் ஐன்ஸ்டீன் நோபல் பரிசு பெற்றார். நினைத்தபடியே நோபல் பரிசு பணம் வந்தது. அதை மிலெவா பெற்றுக் கொண்டு மூன்று வீடுகளை வாங்கினார். அவரது ஒரு மகன் நோய்வாய்ப்படவே மருத்துவச் செலவிற்காக இரு வீடுகளை விற்க நேரிட்டது. பாவம், ஏழ்மை வாழ்க்கையில் தான் அவர் காலம் தள்ள நேர்ந்தது. ஜூரிச்சில் 72ஆம் வயதில் அவர் காலமானார்.  2009ஆம் ஆண்டு அவரது கல்லறையில் ஒரு நினைவுச் சின்னம் பொறிக்கப்பட்டது. 2017ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட தொலைக்காட்சித் தொடரான ஜீனியஸ் தொடரின் முதல் பாகத்தில் அவர் வரலாறு இடம் பெற்றது. அவரைப் பற்றிய ஏராளமான புத்தகங்கள் இப்போது வெளியாகியுள்ளன.

***

                              

தமிழன் ஏமாந்த கதை! ஏமாற்றிய கதை! அதிசய தோரியம்!! (Post No.5525)

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 10 October 2018

 

Time uploaded in London –9-05 am (British Summer Time)

 

Post No. 5525

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

தமிழன் ஏமாந்த கதை! ஏமாற்றிய கதை!

 

தோரியம் என்பது இந்தப் பிரபஞ்சத்துக்கு ஆதாரமான 118 மூலகங்களில் ஒன்று; இந்தியாவுக்குக் கடவுள் கொடுத்த அருள் பிரஸாதங்கள் அநேகம்; ஆனால் பொருள் பிரஸாதங்கள் குறைவு. ஆயினும் கன்யாகுமரி,கேரளத்தின் கடலோரமாகக் கொட்டிக் கிடக்கும் தாதுவில் இருக்கும் தோரியம், அணுசக்தி எரிபொருள் ஆகும். அதை வைத்து ஜெர்மானியர்களை ஏமாற்ற நினைத்த தமிழர்கள் ஏமாந்து போன சுவையான நிகழ்ச்சியுடன் தோரியத்தின் கதையைத் துவக்குவேன்

ஜெர்மனிக்கு  கயிறு ஏற்றுமதி

ஏமாறாதே, ஏமாற்றாதே என்பது ஆன்றோர் பொன்மொழி.

 

‘கள்ளனுக்கும் குள்ளன் உண்டு’ ‘ நீ பாய்க்கு அடியில் புகுந்தால் நான் கோலத்துக்கு அடியில் புகுவேன்’ என்ற பழமொழிகளை நிரூபிக்கும் சுவையான விஷயம்.

 

உலக யுத்த காலத்தில் ஜெர்மானியர்கள் அணு ஆயுதங்களையும், சக்தி வாய்ந்த புது வகை ஆயுதங்களையும் செய்வதில் முனைப்பு காட்டினர். அப்பொழுது ‘கும்பிடப் போனவனுக்கு தெய்வம் குறுக்கே வந்தது போல’ தமிழர்களும் மலையாளிகளும் உதவினர்.

 

ஜெர்மனி நாடு இந்தியாவிலிருந்து கயிறு இறக்குமதி செய்து வந்த காலம் அது. கப்பலில் செல்லும் ஏற்றுமதிக் கயிற்றுக்கு எடையின் பேரில் ஜெர்மனி பணம் கொடுத்து வந்ததது. கன்யாகுமரி முதல் கேரளத்தின் தென்பகுதி வரை இந்தக் கயிறு ஏற்றுமதியில் ஈடுபட்டது.

கயிற்றின் எடையைக் கூட்டிக் காண்பித்துக் கூடுதல் பணம் பெறுவதற்கு நம் ஊர் ஆட்கள், அந்தக் கயிற்றைத் தண்ணீரில் நனைத்து மணலில் புரட்டி எடை போட்டனர். ஈரத்தினாலும் மணலினாலும் எடை கூடவே மக்களுக்கு மகிழ்ச்சி. கூடுதல் பணம் கிடைத்தது.

 

இறக்குமதி செய்த ஜெர்மானியர்கள், கயிற்றுடன் வரும் மணல், ‘ஒரு மாதிரியாக’ இருந்தவுடன் அதை ஆராய்ச்சி செய்தனர்; அற்புதமான தோரியம் எனும் அணு சக்திப் பொருள் அது என்று தெரிந்தது. பின்னர் அவர்கள், கயிறு ஏற்றுமதி செய்யும் இந்தியர்களுக்கு கடிதம் எழுதினர்.  ‘அன்புடையீர், தாங்கள் கயிற்றுடன் நிறைய மணலைச் சேர்க்கிறீர்கள். அந்த மணலையும் எங்களுக்கு அனுப்புங்கள்; கயிற்றைவிடக் கூடுதல் பணம் தருகிறோம் என்று!!! பின்னர்தான் தெரிந்தது. நாம்தான் ஏமாளிகள் என்று!

 

கன்யாகுமரி முதல் கேரளத்தின் கடலோரம் வரை, கிழக்கில் விசாகப் பட்டிணம் வரை மோனசைட் என்னும் கலர் மணல்- வண்ண மணல் கிடைக்கிறது. இதில் தோரியம் (THORIUM) எனப்படும் மூலகம் உள்ளது. இது அணுசக்தியை உண்டாக்கப் பயன்படும் மூலகம். கடவுள் நமக்குக் கொடுத்த பொருட் பிரசாதம். உலகிலேயே அதிகம் தோரியம் உடைய நாடுகள் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் தான்.

 

 

 

அணு உலைகளில் தோரியத்தைப் பயன்படுத்தினால் செலவும் குறைவு. ஆயுதம் செய்யக்கூடிய தரத்துக்கு துணைப்பொருள் கிடைக்காததால்   அணு ஆயுத உற்பத்தி வாய்ப்பும், ஆபத்தும் குறைவு.

இது ஒரு கதிரியக்கம் உடைய வெள்ளி போன்ற உலோகம் (RADIO ACTIVE, SILVERY METAL) ஆனால் காற்றுப் பட்டவுடன் கருத்துப் போய் தோரியம் டைஆக்ஸைடாக மாறி விடுகிறது

கடவுள் பெயர் சூட்டப்பட்ட மூலகங்கள் மிகவும் குறைவு. தோரியத்துக்கு தோர் (THOR) என்னும் நார்வீஜிய கடவுளின் பெயர் சூட்டப்பட்டது. அவர் இடி மின்னல் ஆகியவற்றுக்கான அதி தேவதை. நம்முடைய இந்திரனுக்கு இணையானவர். வியாழக் கிழமையும் அவர் பெயரில் தர்ஸ்டே (THURSDAY= THOR’S DAY) என்று பெயரிடப்பட்டுள்ளது.

 

தோரியத்தின் மற்றொரு சிறப்பு- 70 சதவிகிதம் குறைவான விஷக் கழிவுப் பொருட்களை வெளியிடுகிறது

 

யுரேனியம் போன்ற கதிரியக்க மூலகங்களைப் பயன்படுத்துகையில் அபாயகரமான கதிரியக்கக் கழிவுப் பொருட்கள் வருகின்றன. தோரியத்தில் அது குறைவு.

 

தோரியம் கலந்த கண்ணாடிகள் காமெரா லென்ஸுகளாகவும் விஞ்ஞானக் கருவிகளாகவும் பயன்படுகின்றன. இதற்குக் காரணம் தோரியத்தின் உருகு நிலை மிக அதிகம்.

 

உலகெங்கிலும் தோரிய அணு உலை ஆராய்ச்சிகள் நடை பெறுகின்றன. சோதனை முறையில் வெற்றியும் கிட்டின. தோரியத்தைப் பயன்படுத்தினால் உலகில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மின்சாரத்துக்குப் பஞ்சமில்லையாம். அதுவும் உலகில் அதிக அளவு தோரிய         இந்தியாவில் இருப்பதால் நமக்கு ‘இன்பமே எந்நாளும் துன்பமில்லை’.

சுவீடன் நாட்டைச் சேர்ந்த பெர்ஸீலியஸ் என்பவர் முதலில் இதைத் தனியாகப் பிரித்தெடுத்து இது ஒரு புது மூலகம் என்று உலகிற்கு  அறிவித்தார்.

 

தோரியத்தின் அணு எண் 90

உருகு நிலை 1750 டிகிரி சி

கொதி நிலை 4800 டிகிரி

சிம்பல் Th

 

 

25 ஐசடோப்புகள் (ISOTOPES)

 

கதிர் வீச்சு மூலகங்கள் காலப்போக்கில் கதிர்வீச்சு காரணமாக அழியும்.

தோரியம் 25 அவதாரங்கங்ளை எடுக்கும்.

அதில் அதிக காலம் வாழும் அவதாரம்–தோரியம் 232 என்னும் ஐசடோப்பு;

பாதி அழிவதற்கு (HALF LIFE) ஆகும் காலம் 14 பில்லியன் ஆண்டுகள் (பில்லியன்= நூறு கோடி)

தோரியம்-230. அதில் பாதி அழிவதற்கு ஆகும் காலம் 75,000 ஆண்டுகள்.

தோரியம் யுரேனியத்தை விட அதிகமாக இயற்கையில் கிடைத்தாலும் அதுபோலப் பிரியும் (NOT FISSILE) மூலகம் இல்லை. ஆகையால் இதை நேரடியாக அணுசக்தி உண்டாக்கப் பயன்படுத்த முடியாது. ஏனைய பிரியும் அல்லது கதிர் வீசும் மூலகங்களை அருகில் வைத்தால் அதி

லிருந்து வரும் நியூற்றான்கள் இதையும் பிளக்கும் பொருளாக்க மாற்றி பிரம்மாண்டமான சக்தியை உண்டாக்கும்.

துவக்கத்தில் தோரியம் ஆக்ஸைட் கரைசலைக் குடிக்கச் செய்து எக்ஸ்ரே எடுத்தனர். இதன் மூலம் இரத்தக் குழாய்களைப் பார்க்க முடிந்தது. ஆனால் இப்படிக் கொடுக்கப்பட்டவர்களில் பெரும்பாலோருக்கு இரத்தப் புற்று நோய் வந்தவுடன் நிறுத்தப்பட்டது.

 

ஒரு காலத்தில் பற்பசையிலும் கூட ஜெர்மானிய கம்பெனி இதைப் பயன்படுத்தியது. இப்பொழுது மனிதர்கள் உடலில் பயன்படுத்தப்படும் எதிலும் தோரிய உப்புகளைச் சேர்ப்பதில்லை. ஆயினும் அறிவியல் கருவிகளில் தோரியம் ஆக்ஸைட் முதலியன உண்டு.

 

தோரியமும் சூரிய ஒளியும் இறைவன் இந்தியாவுக்குக் கொடுத்த இரண்டு வரங்கள் – வளங்கள். அவற்றை நன்கு பயன்படுதுவோமானால் பெற்றோல் என்பதே நமக்குத் தேவை இல்லை.

XXX

இரசாயன/ வேதி இயல் மாணவர்களுக்கு மட்டும்:–

தோரியம்-232 இயற்கையில் கிடைக்கிறது.

இதன் மீது யுரேனியம் மூலம் நியூற்றான் (NEUTRON) தாக்குதல் நிகழும்.

உடனே தோரியம் 233 உருவாகும். அதன் அரை வாழ்வு 22 நிமிடம் மட்டுமே

அது யுரேனியம் 233 ஆக அவதாரம் எடுக்கும்.

பின்னர் அந்த யுரேனியம் 233  விஸ்வருபம் எடுத்து,

யுரேனியம் 235 போல பிரம்மாண்டமான சக்தியை வெளியிடும்.

அதைக் கட்டுப்படுத்தப்பட்ட சக்தியாக வைத்து அந்த வெப்பத்தில்

மின்சாரத்தை உருவாக்கலாம்.

 

-சுபம்–

 

 

 

ஒப்பற்ற தமிழின் உயர்வு! பூமிக்கு 62 சொற்கள் (Post No.5524)

 

WRITTEN BY S NAGARAJAN

Date: 10 October 2018

 

Time uploaded in London – 6-53 AM (British Summer Time)

 

Post No. 5524

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

பூமிக்கு தமிழில் 62 சொற்கள்

ஒப்பற்ற தமிழின் உயர்வு!

 

ச.நாகராஜன்

தமிழின் உயர்வுக்குப் பல காரணங்கள் உண்டு. இறைவன் அருளிய மொழி என்பதிலிருந்து காரணங்களை ஆரம்பித்து, அடுக்கிக் கொண்டே போனால் அது ஒரு கலைக்களஞ்சியம் அளவுக்கு விரிந்து விடும்.

சுயநலமுடைய அரசியல் சார்ந்த திராவிடக் கும்பல்களின் அரசியல் அடிப்படையிலான “பற்றினால் இதை விளக்கி விட முடியாது.

பல மொழி கற்ற அறிவு, புராண, இதிஹாஸ அறிவு, பண்டைய தமிழ் இலக்கிய அறிவு, சொற்களின் வேர் பற்றிய அறிவு உள்ளிட்ட பல்துறை வித்தகம் இதற்கு வேண்டும்.

தமிழில் உள்ள சொற்களை ஆய்ந்து உற்றுக் கவனித்தால் அதன் வேர் பலமானது எனத் தெரிய வரும்.

ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு ஆழ்ந்த பொருள் உண்டு. வேர்ச் சொற்கள் வழியே சென்றால் பல சொற்களைப் பெற முடியும்.

உதாரணத்திற்கு ஒரே ஒரு சொல்லை இங்கு பார்க்கலாம்.

பூமி உருண்டை என்று சொன்னதற்காக கத்தோலிக்க குருவான போப்பாண்டவரிடம் பிரபல விஞ்ஞானி பட்ட பாடும் மரணமடைந்ததும் நமக்குத் தெரியும்.

ஆனால் தமிழனின் விஞ்ஞான அறிவு தமிழ்ச் சொல்லிலேயே வடிக்கப்பட்டிருப்பதை பூமி என்ற சொல்லிலிருந்தே காண முடியும்.

நம் முன்னோர் பூமி தட்டை என்று மேலை நாட்டினர் கொண்ட கருத்தைக் கொண்டிருக்கவில்லை.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பேயே இதை அண்டம் என்ற சொல்லால் அழைத்தனர்.

அண்டம் அல்லது முட்டை நீள் உருண்டை வடிவம் கொண்டது  பூமி.

 

அண்டம் என்பதால் உயிர்ப் பொருள்கள் தோன்ற ஆதாரமானதும் கூட என்பதும் பெறப்படுகிறது.

ஞால் என்ற வேரின் அடிப்படையாகப் பிறந்தது ஞாலம். ஞால் என்றால் தொங்குவது என்று பொருள் படும். பூமி பேரண்டத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் ஒரு சிறு வடிவம் என்பது இதனால் பெறப்படுகிறது.

இது தொங்கிக் கொண்டிருந்தாலும் இதில் வைக்கப்படும் பொருள்கள் பாதுகாப்பாக உள்ளன. அவை விழாது என்பதால் இது வையகம் என அழைக்கப்படுகிறது.

காசியப முனிவர் தானமாகப் பெற்றதால் இது காசினி என அழைக்கப்படுகிறது.

இப்படி ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு பின்னணியும் ஆழ்ந்த அர்த்தமும் கொண்டிருப்பதைக் காணலாம். அதுவே தமிழ் வார்த்தைகளின் மகிமை.

 

முக்கியமான ஒரு விஷயத்தை இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். சில சொற்கள் சம்ஸ்கிருதத்தை அடிப்படையாகக் கொண்டு தோன்றியவை. ஆனால் அவற்றைத் தமிழ் அறிஞர்கள் தமிழ்ச் சொற்களாகவே கொண்டனர்; கையாண்டனர்.  சம்ஸ்கிருதம் இதுதமிழ் இது என்று அவர்கள் பாகுபாடு செய்ததில்லை. தமிழ் மற்றும் சம்ஸ்கிருதச் சொற்களை இரு கண்கள் என அவர்கள் கொண்டிருந்த பான்மையை உற்று நோக்குங்கால் மொழி பற்றிய காழ்ப்புணர்ச்சி தமிழகத்தில் ஒரு போதும் இருந்ததில்லை என்பதே தெரிய வரும். இந்தச் சொற்களை அன்றாட பேச்சு வழக்கில் அறிஞர்கள் மட்டுமின்றி சாமான்யரும் பயன்படுத்தி வந்தனர். இன்றும் இப்படிப்பட்ட ஆயிரக் கணக்கான சொற்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

 

சரி, பூமியைக் குறிக்க மட்டும் எத்தனை சொற்கள் தமிழில் உள்ளன?

 

பூமி, பிருதுவி, பார், பூ,அகலிடம்,தரணி, கோ, மகி, அளக்கர், பொறை,கு, அசலை, நேமி, படி, பாரி, அகிலம், குவலயம், காசினி, அவனி, தாரணி, வசுந்தரை, தலம்

 

தாத்திரி, தரை, தரித்திரி, பணாதரி, மண், கோத்திரி, கிடக்கை, சதுக்கோணி, தறை, பாத்திபம், சக்கரம், நிலம், புவி, சலாம்பரி, மாதிரம், விமலை, வசுதை

 

தாலம், உலகு, இம்பர், வையம், சாந்தை, விசுவம், புடவி, ஞாலம், வசுமதி, நகம், ப்வளம், பாலம், உகம், பூதியம், ஏமாங்கி, வையகம், பொழில், இகம், பவனி,மேதினி, சகம், புவனம்

ஆக இப்படி 62 பெயர்களை நாமதீப நிகண்டு குறிப்பிடுகிறது.

நிகண்டின் பூமிக்கு உரித்தான சொற்களைச் சொல்லும் பாடல்கள் இதோ:

பூமி பிருதுவிபார் பூவகலி பந்தரணி                    கோமகிய ளக்கர்பொறை குவ்வசலை – நேமிபடி

பாரியகி லங்குவல யங்கா சினியவனி

தாரணிவ சுந்தரைத லம்

 

தாத்திரி யேதரைத ரித்திரிப ணாதரிமண்

கோத்திரிகி டக்கை சதுக்  கோணிதறை – பாத்திபம்

சக்கரநி லம்புவிச லாம்பரியே மாதிரமே

தக்க விபுலைவசு தை

 

தாலமுல கிம்பர்வையஞ் சாந்தைவிசு வம்புடவி

ஞாலம் வசுமதிந கம்பவளம் – பாலமுகம்

பூதியமே மாங்கிவைய கம்பொழிலி கம்புவனி

மேதினிச கம்புவன மே

 

இன்னும் சில நிகண்டுகளைப் பார்த்தால் இன்னும் பல பெயர்கள் கிடைக்கும்.

ஒவ்வொரு சொல்லையும் ஊன்றிக் கவனித்தால் அந்தப் பெயரால் பூமி அழைக்கப்படுவதன் காரணத்தையும் உணர முடியும்.

இப்படித் தமிழ்ச் சொற்கள் பல்லாயிரத்திற்கும் அர்த்தம் காண எத்தனை நாட்கள் வேண்டும்!

தமிழனாக வாழ்வதில் பெருமைப் படுவதோடு தமிழ்ச் சொற்களின் ஆழம் கண்டு ஆனந்திப்போம்; அதை உலகறியச் செய்வோம்!

***

கடற் கொள்ளையர் பற்றிக் கம்பன் தகவல் (Post No.5521)

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 9 October 2018

 

Time uploaded in London –7-39 am (British Summer Time)

 

Post No. 5521

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

கடற் கொள்ளையர்கள் பற்றி சங்க இலக்கியத்திலும் கம்ப ராமாயணத்திலும் வரும் தகவல்கள் தமிழர்களின் கடல் ஆதிக்கத்தைக் காட்டுகிறது. கம்பனுக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த காளிதாசனும் கடலில் கப்பலுடைந்த காட்சி பற்றிப் பேசுகிறான். அதற்கும் ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் வந்த ரிக் வேதத்தில் கடலில் கப்பல் உடைந்து தத்தளித்த ஒருவனை அஸ்வினி தேவர்கள் காப்பாற்றிய செய்தி பல ரிஷி முனிவர்களால் பாராட்டப் படுகிறது. சிந்து-ஸரஸ்வதி நதி தீர நாகரீகத்தில் கப்பல் திசை காணும் பறவை உட்கார்ந்து இருக்கும் முத்திரை கிடைத்துள்ளது. இந்தோநேஷியாவில் போரோபுதூர் சிற்பங்களில் தமிழ்க் கப்பல் காட்சி தருகிறது.

சாதவஹனர் நாணயங்களில் கப்பல் படம் பொறிக்கப்பட்டுள்ளது. அராபியக் கடல்களில் அட்டூழியம் செய்த யவன (ரோமானிய) கடற் கொள்ளையர்களை இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் பிடித்து வந்து, தலையை மொட்டை அடித்து, எண்ணையைத் தலையில் ஊற்றித் தண்டித்த காட்சி சங்கத் தமிழ் இலக்கியத்தில் இருக்கிறது. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், கடம்பர் என்னும் கடற் கொள்ளையர்களை அழித்து அவர்களுடைய காவல் மரத்தை வெட்டி வீழ்த்தியது சூரபன்மனின் காவல் மரத்தை முருகன் அறுத்தைப் போன்றது என்றும் சங்கநூலான பதிற்றுப்பத்து பாடும்.

 

கம்பனோ போகிற போக்கில் ஒரு பாடலில் கடற் கொள்ளையர்களை உவமையாகப் பயன்படுத்துவது, அந்தக் காலத்தில் கடல் பயணம் எவ்வளவு நிகழ்ந்தது, என்ன என்ன பேரிடர்களை  அவர்கள் சந்த்தித்தனர் என்று காட்டுகிறது.

 

இதோ கம்ப  ராமாயண யுத்த காண்டப் பாடல்:-

 

மீயவர் யாவரும் விளிய வெங்கரி

சேயிருங் குருதியில் திரிவ சோர்வு இல

நாயகர் ஆள் எலாம் அவிய அம்பிகள்

பாயொடும் வேலையில் திரியும் பண்பு என

–படைத் தலைவர் வதைப் படலம்

பொருள்

யானை மீது இருந்த அனைவரும், வில்லால் தாக்குண்டு இறந்தனர். அப்பொழுது யானைகள் மட்டும் கொடிகளுடன் ரத்த வெள்ளத்தில் அங்கும் இங்கும் திரிந்தன; வெளியேற வழியில்லாமல் திகைத்தன; இது எப்படி இருந்தது என்றால் மாலுமிகள் உள்பட அனைவரும் கடற் கொள்ளையர்கள் தாக்குதலில் இறந்து போனபின்னர் பாய்மரத்துடன் கடலில் திரியும் கப்பல்கள் போலக் காட்சி தந்தன.

 

என்ன அருமையான ‘கடல்- கப்பல்’ காட்சியை கம்பன் நம் கண் முன் நிறுத்துகிறான் பாருங்கள்.

 

ஒரு விஷயத்தை உவமையாகப் பயன்படுத்த வேண்டுமானால், அது எல்லோருக்கும் ஸர்வ சாதாரணமாகத் தெரிந்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் அதை உவமையாகப் பயன்படுத்த முடியும். அந்தக் காலத்தில் வங்கக் கடலில் நடந்த கடல் தாக்குதல் இது. அதையும் சமாளித்து ராஜ ராஜ சோழனும் ராஜேந்திரனும் மாநக்கவாரம், மாயிருடிங்கம், மாபூப்பாளம்,சாவகம், புட்பகம்,சிங்களம் எனப் பல தீவுகளை வென்றனன்.

வாழ்க தமிழ்!!  வளர்க தமிழன் பெருமை!!

 

–subham–

 

இன்கா நாகரீக அதிசய முடிச்சு மொழி – பகுதி 2 (Post No.5501)

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 3 October 2018

 

Time uploaded in London –7-27 am  (British Summer Time)

 

Post No. 5501

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

நேற்று வெளியான முதல் பகுதியில் தென் அமெரிக்காவின் பெரு, சிலி நாடுகளில் உள்ள, சூரிய தேவனை வழிபடும், இன்கா நாகரீகத்தின் (Inca Civilization) அற்புதமான நிர்வகத் திறன் பற்றியும் முடிச்சு மொழி இந்தியாவின் ஸரஸ்வதி- ஸிந்து சமவெளி நாகரீகத்தின் புரியாத எழுத்தின் புதிரை விடுவிக்க எப்படி உதவலாம் என்றும் விளக்கினேன்.

இன்கா இளவரசிக்கும் ஸ்பெயின் நாட்டு ஆக்ரமிப்பாளனுக்கும் பிறந்த கவிஞர் கார்ஸிலாஸோ டெ லா வேகா 1609-ம் ஆண்டில் முடிச்சு மொழியின் மூலம் அவர்கள் என்ன என்ன எழுதினர் என்று விளக்கியிருந்தார். அவர் ஒரு துப்புத் தகவல் கொடுத்திருந்தார். இன்காக்கள் கயிற்றில் போடும் முடிச்சு மூலம், அவர்கள் போட்ட சண்டைகள், வாதப் பிரதிவாதங்கள், சம்பாஷணைகள், வரி விதிப்பு வசூல், நிலுவை விவரம், யார் யார் வந்து மன்னர்களைப் பார்த்தனர் என்றும் எழுதிவைத்ததாக 400 ஆண்டுகளுக்கு முன் சொல்லியிருந்தார். முடிச்சுகளில் எண்களைக் காண்பது எளிதாக இருந்தது. ஆனால் வரலாற்றைக் காண்பது இதுவரை புதிராக இருந்தது.

 

இப்பொழுது ‘கிணற்றில் கல் விழுந்துவிட்டது’- புதிரும் குதிருக்குள் இருந்து வெளியே வந்துவிட்டது!

அவர் பல முரணான தகவல்களைக் கூறியிருந்ததால் இதுவும் ஒரு ‘கப்ஸா’வோ என்று கருதியோரும் உண்டு. ஆயினும் கிடைத்த முடிச்சுக் கயிறுகளில் மூன்றில் ஒரு பகுதி முடிச்சுக் கயிறுகள் வித்தியாசமாக இருந்தன.

 

1920ம் ஆண்டில் நியூயார்க்கிலுள்ள அமெரிக்க இயற்கை வரலாற்றுக் காட்சியகத்தில் உள்ள முடிச்சுகளை ஒரு மானுடவியல் வல்லுநர் ஆராயத் தொடங்கியதிலிருந்து ஆர்வம் பிறந்தது. ஒரு கயிற்றில் ஒரு முடிச்சு இருக்கும் உயரம் அது 10 அல்லது 100 அல்லது 1000 என்று காட்டுவதை (ரிக் வேதத்தில் உள்ள டெஸிமல் ஸிஸ்டம்/ தஸாம்ச முறை) அவர் கண்டுபிடித்தார்.

 

அது சரி, 76 என்று இருப்பதாக வைத்துக்கொள்வோம். அது என்ன 76? என்று தெரியவில்லையே என்று ஹர்வர்ட் பல்கலைக்கழக காரி உர்டன் (Gary Urton) 25 ஆண்டுகளாக ஆராய்ந்தார்.

 

அவர் உலகம் முழுதும் மியூஸியங்கள், தனியார்களிடம் உள்ள 900 கீ பூ (Khipu) முடிச்சுக் கயிறுகளைப் படம் பிடித்தார்; பட்டியலிட்டார்; நுணுகி ஆராய்ந்தார். அப்போது அவருக்கு ஒரு விஷயம் புரிந்தது. முடிச்சுப் போடும் திசை, முடிச்சின் தன்மை, என்ன வண்ன நூலில் முடிச்சு போடப்பட்டிருக்கிறது என்பதெல்லாம் முக்கியம் என்று தெரிந்தது. 2012ஆம் ஆண்டு அவருக்கு ஞானோதயம் பிறந்தது. ஒரு முடிச்சு இருக்கும் திசையை வைத்து அந்தப் பணம் வசூலிக்கப்பட்டதா இல்லையா என்று அவர்கள் ‘எழுதி’ இருந்தது விளங்கியது. இடது பக்கம் முடிச்சு முடிகிறதா, வலது பக்கம் முடிச்சு முடிகிறதா என்பதெல்லாம் ஒரு செய்தி! ஆக 201ம் ஆண்டில், இதில் கொடுத்தவரின் தகுதி  அந்தஸ்து, அவர் பெயர் எல்லாம் இருப்பதை உணர்ந்தார்.

2016 ஆம் ஆண்டில் மேலும் புதியன கண்டார். அவருடைய அதிர்ஷ்டம். 400 ஆண்டுகளுக்கு முன்னர் ஆறு இன/ஜதி மக்களிடையே வசூலித்த பணம் பற்றிய விவரமும் (ஸ்பானிய மொழியில்) ஆறு முடிச்சுக் கயிறுகளும் இருந்தன. அதன் பின் 132 கயிறுகளை ஆரய்ந்ததில் அக்காலத்தில் ஸ்பானிய ஆக்ரமிப்பாளர் எழுதிய விஷயங்களும் முடிச்சுகளும்  ஒரே விஷயத்தைச் செப்பின. 132 பேர் செலுத்திய வரிப்பணம் பற்றிய தகவல் அவை.

 

அவரிடம் ஒரு மாணவர் படித்து வந்தார். அவர் பெயர் மான்னி மேற்றானோ. அவர் இன்கா ஜாதி. ஆனால் ஆக்ரமிப்பாளரின் ஸ்பானிய மொழி பேசுபவர். ஆக இன்னும் நன்றாக விளங்கியது. அவர் பெரிய முடிச்சவிக்கி!

 

அந்தக் கயிறுகளில் உள்ள பாணி (ஸ்டைல்/ பேட்டர்ன்) என்ன இனம் என்று காட்டுவதைக் காண்பித்தார்.  இதை வாஷிங்டன் பல்கலைக் கழக கீ பூ முடிச்சு ஆராய்ச்சியளார் பிடித்துக் கொண்டு, இதில் கதை, வரலாறுகளும் இருக்க முடியும் என்ற கோணத்தில் ஆராய்ந்தார். அவரைப் போலவே பிரிட்டனிலுள்ள செயின்ட் ஆன்றூஸ் பல்கலைக் கழக  ஸபீன் ஹைலண்டும் ஆராய்கிறார். அவர் தொலை தூர தென் அமெரிக்க கிராமங்களுக்குச் சென்று படம் எடுத்தார். கீ பூ பயன்படுத்துவோரைப் பேட்டி கண்டார். பெரு நாட்டின் லிமா நகரிலுள்ள ஒரு பெண்மணி தொலைதூர கிராமத்தில் ஒரு சர்ச்சில் பாதாள அறையில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள கீ பூ – கயிறுகள் பற்றித் தகவல் கொடுத்தார்.

பல மாதங்களுக்கு நடந்த பேச்சு வார்த்தையின் முடிவில் அந்த கீ பூ முடிச்சுக் கயிறுகளை தரிசிக்கும் பாக்கியம் அவருக்குக் கிட்டியது. ஆனால் அந்த இனத்தின் தலைவர் ஒரு சமூக விழாவில் கலந்துகொள்ள வேறு ஒரு ஊருக்குப் போவதால் இரண்டு நாட்களுக்குள் என்ன செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யலாம என்ற ஆணை பிறந்தது.

ஹைலண்டும் விடாப்பிடியாக அதைப் பல கோணங்களில் படம் பிடித்தார். ஒவ்வொரு பிரதானக் கயிற்றிலிருன்டுந்து பல சின்னக் கயிறுகள் தொங்குவதையும் அவைகளில் முப்பரிமாணத்தில் தகவல் கோர்க்கப்பட்டிருப்பதையும் அறிந்தார். வண்ணங்கள் வெவ்வேறு; முடிச்சின் சிக்கல்கள் வெவ்வேறு; பலவிதப் பிராணிகளின் ரோமமங்கள் வேறு.

 

அந்தக் கிராம மக்கள் கீ பூ என்பது ‘பிராணிகளின் மொழி’ என்று கூறியதற்கு அவருக்கு விளக்கமும் கிடைத்தது. 95 வகைகளைக் கண்டவுடன் அவற்றில் சில எழுத்துக்களையோ சொற்களையோ

குறிக்கின்றன என்று அறிந்தார். இரண்டு கலர் ரிப்பன்கள் கட்டப்பட்ட கயிறு இரு குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்தது என்றவுடன் இவர் ஊகத்தில் அதன் பெயரைக் கண்டுபிடித்தார். கிராம மக்களுடன் பேசியபோது அப்படி ஒரு இனம் இருப்பது உண்மையே என்றும் அறிந்தார்.

சில பட எழுத்துகள் போன்றவை; சில அசைச் சொற்கள் (Ideographic, syllbic) உடையவை; சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் வண்ணங்களும் பின்னப்பட்ட பாணிகளும், முடிச்சின் கன பரிமாணமும் பல எழுத்துக்களையும் சொற்களையும் காட்டின. இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு பெரு நாட்டில் தங்கி ஆராயப் போகிறார். ஸ்பானியப் படை எடுப்பாளர் அந்தக் காலத்திலேயே (1530ம் ஆண்டு) கீ பூ மொழியைக் கற்றுக்கொள்ளத் துவங்கியதால் அவர்கள் ஸ்பானிய மொழியில் எழுதியதையும் முடிச்சு மொழியையும் ஒப்பிட்டுப் பார்க்க முடிகிறது. மேலும் பல புதிய விஷயங்கள் கிடைக்க வாய்ப்புகள் உளது.

இது போல இந்தியர்களும் ஆரிய-திராவிட வாதத்தைக் குப்பைத் தொட்டியில் தூக்கி எறிந்து விட்டு புதிய கண்ணோட்டத்தில் ஸரஸ்வதி- சிந்து சமவெளி நாகரீகத்தை ஆராய்தல் அவசியத் தேவை ஆகும்.

 

நியூ ஸைன்டிஸ்ட் New Scientist வார இதழில் ஆங்கில மூலத்தில் முழு விவரமும் உளது; கண்டு மகிழ்க.

 

–சுபம்–

THOUGHT POWER- யத் பாவம் தத் பவதி! (Post No.5500)

 

 

WRITTEN BY S NAGARAJAN

Date: 3 October 2018

 

Time uploaded in London – 6-49 AM (British Summer Time)

 

Post No. 5500

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

யத் பாவம் தத் பவதி!

ச.நாகராஜன்

!

ஹிந்து மதமும் புத்த மதமும் வலியுறுத்தும் அற்புதமான ஒரு உண்மை : யத் பாவம் தத் பவதி

நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே நீ ஆகிறாய்!

புத்தரின் நேரடி உபதேசங்கள் தொகுக்கப்பட்ட அதிகாரபூர்வமான புத்த மத நூல் தம்ம பதம்.

அதில் யமகவக்கோ என்ற பகுதியில் வரும் உண்மை இது:

 

All that we are is the result of what we have thought it is founded on our thoughts, it is made up of our thoughts. If a man speaks or acts with an evil thought, pain follows him,  as the wheel follows the foot of the ox that draws the carriage.

 

நாம் எதுவாக இருக்கிறோமோ அது நாம் நினைத்ததன் படியே தான்! அது நமது எண்ணங்களின் அடிப்படையில் அமைகிறது; அது எண்ணங்களால் உருவாக்கப்படுகிறது. ஒரு மனிதன் தீய எண்ணங்களைப் பேசினாலோ அல்லது அதன் படி நடந்தாலோ வண்டி எப்படி அதை இழுக்கும் காளைமாடுகளைத் தொடர்கிறதோ அது போல அவனைத் துன்பம் தொடர்கிறது.

 

2

எண்ணியர எண்ணியாங்கு எய்து எண்ணியார்

திண்ணியர் ஆகப் பெறின்    (குறள் 666)

என்பது வள்ளுவர் வாக்கு.

 

3

 

யோக வாசிஷ்டம் பல ஸ்லோகங்களில் இதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறது. எடுத்துக்காட்டாக முக்கிய ஸ்லோகம் ஒன்றின் கருத்தை இங்கு பார்க்கலாம்:

 

The thought that one entertains repeatedly issues forth in the branches of impulses and actions. (IV – 21 -20)

 

ஒரு மனிதன் திருப்பித் திருப்பி எண்ணும் எண்ணங்கள் அவனைத் தூண்டி விட்டு அவனைச் செயல்பட வைக்கிறது.

 

மனதையும் எண்ணங்களையும் பற்றி யோக வாசிஷ்டம் நன்கு விளக்குவதோடு அதன் விளைவையும் கூட அற்புதமாகச் சொல்கிறது.

 

4

 

புத்த மத உரைகளில் இடம் பெறும் நகைச்சுவை கதை ஒன்று உண்டு.

 

ஒரு இளம் புத்த பிக்ஷு மடாலய வாழ்க்கை பிடிக்காமல் அதிலிருந்து விடுபட்டு உலகியல் வாழ்க்கையைத் தொடர விரும்பினார்.

அடுத்த மாதத்திலிருந்து நான் உலக வாழ்க்கைக்குத் திரும்பி விடுவேன் என்று அவர் எண்ணலானார்.

அந்தச் சமயம் பார்த்து தலைமை பிக்ஷு அவரை அழைத்தார்.

 

அப்பா! எனக்குத் தலைவலியாயிருக்கிறது. கொஞ்சம் எண்ணெய் தேய்த்து தலையை மசாஜ் பண்ணி விடேன் என்றார்.

 

கையில் எண்ணெயை எடுத்துக் கொண்ட இளம் பிக்ஷு தலைமை பிக்ஷுவின் தலையில் தடவினார். பின்னர் மசாஜ் செய்ய ஆரம்பித்தார். அவரது எண்ணங்கள் சிறகடித்துப் பறக்க ஆரம்பித்தன.

முதலில் இங்கிருந்து வெளியேறி விடுவேன். வெளியேறியவுடன் இந்தக் காவி உடையைத் தூக்கி எறிந்து விடுவேன். பின்னர் நல்ல ஒரு வேலையைப் பார்த்து அதில் அமர்வேன். அதன் மூலம் நிறைய பணம் சம்பாதிப்பேன். பணம் வந்தவுடன் ஒரு அழகிய பெண்ணைப் பார்த்து திருமணம் செய்து கொள்வேன். ஆனால் இந்தப் பெண்களை நம்பவே முடியாது. நாம் சொன்னபடி கேட்க மாட்டார்கள். அப்படிச் சொன்னபடி கேட்காவிட்டால் அடிக்க வேண்டியது தான்! எப்படி அடிப்பேன்? இதோ இப்படி அடிப்பேன்! இவ்வாறு நினைத்த அவர் தலைமை பிக்ஷுவின் தலையில் மடேர் மடேர் என்று அடித்தார்.

வலி தாங்க முடியாத தலைமை பிக்ஷு எழுந்து ஓடினார்.

 

பின்னர் என்ன நடந்தது என்று நாம் சொல்லத் தேவையில்லை!

 

நகைச்சுவை கதையாக இருந்தாலும் இது தான் நமது வாழ்க்கையில் உண்மையில் ஏற்படுகிறது.

 

எண்ணங்கள் சாதாரணமாக சிறிய அளவில் முளை விட்டு ஆரம்பித்து பெரிய மரமாக ஆகும் போது விளைவு பெரிதாகிறது.

ஆகவே தான் எண்ணத்தைக் கவனி என்கின்றன நமது அறநூல்கள்.

 

இதையே புத்த மதமும் ஜைன மதமும் கூறுகிறது!

எண்ணத்தைக் கட்டுப்படுத்த முடியாதவர்களுக்காகவே பல்வேறு சடங்குகளை ஹிந்து மதம் உருவாக்கியுள்ளது. இவை மனதைப் பண்படுத்தி ஒரு லயத்தை உருவாக்கி அதன் மூலம் பண்பட்ட மனிதனாக வாழ வழி வகுக்கிறது.

 

தம்மபதமோ, திருக்குறளோ, யோக வாசிஷ்டமோ எதுவாக இருந்தாலும் அறநூல்கள் வலியுறுத்துவது ஒரே உண்மையைத் தான் : யத் பாவம் தத் பவதி

நீ எதுவாக நினைக்கிறாயோ அதுவாகவே நீ ஆகிறாய்

***

 

இன்கா நாகரீக அதிசய மொழி: விஞ்ஞானிகள் வியப்பு (Post No.5498)

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 2 October 2018

 

Time uploaded in London – 8-40 am (British Summer Time)

 

Post No. 5498

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

இன்கா (INCA CIVILIZATION) என்றால் என்ன?

தென் அமெரிக்காவின் பெரு நாட்டில் குஸ்கோ (CUSCO) என்னும் நகரில் இருந்து 5000 கிலோமீட்டர் தூரம் வரை இருந்த பகுதிகளை ஆண்ட நாகரீகம் இன்கா நாகரீகம் என்று அழைக்கப்படும். சுமார் எட்டு லட்சம் சதுரமைல் பரப்பை 1400 முதல் 1600 வரை ஆண்டனர். ஸ்பெயின் நாட்டிலிருந்து வந்த படையெடுப்பாளர்கள் இந்த நாகரீகத்தை முற்றிலும் அழித்து தங்கம் முதலிய செல்வங்களை வெளி நாட்டுக்குக் கொண்டு சென்றனர்

 

புதிதாக என்ன கண்டு பிடித்தார்கள்?

 

இன்கா நாகரீக மக்கள் கயிற்றில் முடிச்சுகளைப் போட்டு கணக்கு எழுதினர். முடிச்சுகள் மூலம் வேறு பல விஷயங்களையும் பதிவு செய்தனர். இது பற்றிய புதிய கண்டு பிடிப்புகள் புகழ்பெற்ற விஞ்ஞான சஞ்சிகை நியூ ஸைன்டிஸ்டில் (NEW SCIENTIST) வெளியாகியுள்ளது. அதை படித்தவுடன் எனக்கு நினைவுக்கு வந்த திரு மந்திரப் பாடல்

 

 

தன்னை அறிந்திடும் தத்துவ ஞானிகள்

 

முன்னை வினையின் முடிச்சை அவிழ்ப்பர்கள்

 

பின்னை வினையைப் பிடித்துப் பிசைவர்கள்

 

சென்னியில் வைத்த சிவன் அருளாலன்றே

 

— திருமந்திரத்தில் திருமூலர்

 

 

 

பொருள்:

 

தன்னை உணர்ந்து அறிந்தவர்கள் தத்துவ ஞானிகள். இந்த மெய்ஞானிகள், பூர்வ ஜன்ம தீவினைப் பயனை தவிர்ப்பர். இனி வரும் வினைகளையும் தகர்த்து விடுவர்; அதாவது வினைக்கான கர்மங்களைச் செய்ய மாட்டார்கள். இவை அனைத்தும் சிவன் அருளாலே கிட்டுவதாகும். அதாவது இறைவன் அருள் இருந்தால் விதியை வெல்லலாம்.

 

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ‘முடிச்சு’ என்னும் மொழி பற்றித் திருமூலரும் பாடியுள்ளார்!!!

காஞ்சி பரமாசார்ய சுவாமிகள்  75 ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்த்திய சொற்பொழிவிலேயே இன்கா நாகரீகம் பற்றிச் சொல்லிவிட்டு ‘இனன்’ என்பது சூரியனின் பெயர் என்று சுட்டிக் காட்டினார். இன்கா நாகரீகத்தின் தங்க சூரிய  கோவில் மிகவும் பிரஸித்தம்.

 

மேலும் இந்துக்களின் டெஸிமல்  / தஸாம்ச (DECIMAL SYSTEM) முறை கணக்கீட்டை இன்கா பயன்படுத்தியது முடிச்சு ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

 

இன்காவுக்கு முன்னர் மத்திய அமெரிக்க நாடுகளிலும், தென் அமெரிக்க நாடுகளிலும் 2000 ஆண்டுகளுக்குக் கொடி கட்டிப் பறந்த அஸ்டெக் (ஆஸ்தீக), ஒல்மெக் (ஒளியன்= நாகர்), மாயன் (மயன்=சிற்பி) ஆகியனவும் இந்து நாகரீகங்களே என்று ஆதாரங்ளுடன் நான் கட்டுரை எழுதியுள்ளேன். எனது எட்டு ஆண்டுக் கட்டுரைகளைப் படித்து இன்புறுக.

 

 

பதினைந்தாம் நூற்றாண்டில் அமெரிக்காவின் மிகப் பெரிய சாம்ராஜ்யம்- ஈக்வடார் நாடு முதல் சிலி நாடு வரை பரந்த, தொழிநுட்ப அறிவுமிக்க நாகரீகம்– இன்கா என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமே இல்லை. மச்சு பிச்சு என்னும் வான்முகட்டைத் தொடும் அரண்மனையையும், நாடு முழுதும் நல்ல நவீன சாலைகளையும், இடையிடையே புல்லினால் ஆன, வலுவான பாலங்களையும்  அமைத்தவர்கள் இன்காக்கள் என்பதிலும் ஐயப்பாடு எழாது. ஆனால் அதிசயத்திலும் அதிசயம் அவர்களுக்கு எழுதத் தெரியாது!!!!

 

உண்மைதானா????

எழுதிய காகிதங்கள் எதையும் அவர்கள் விட்டுச் செல்லவில்லை என்பது உண்மையே. ஆயினும் அவர்கள் வித விதமான முடிச்சுகள் உள்ள வண்ண, வண்ண கயிறுகளை விட்டுச் சென்றுள்ளனர். இதை கீ பூ (KHIPU) என்று அழைப்பர். இதில் சீன அபெக்கஸ் (ABACUS) (கணக்கீட்டுப் பலகை) போல கணக்கு வழக்குகளை எழுதியது முன்னரே தெரியும். ஒருவேளை இந்த கயிற்று முடிச்சுகள் பழங்கால கதைகளையும் சொல்லுமோ என்ற சம்சயம் ஆராய்ச்சியாளர் இடையே எழுந்தது. அதை மேலும்  ஆராய, ஆராய இவை வெறும் முடிச்சுகள் அல்ல– கதை சொல்லும் முடிச்சுகள்– பாடல் பாடும் முடிச்சுகள்– என்பது தெரிய வந்தது. அதனால்தான் நியூ ஸைண்டிஸ்ட் போன்ற புகழ் மிகு அறிவியல் வார இதழும் கூட 5 பக்கக் கட்டுரையை படங்கள் சஹிதம் வெளியிட்டது..

 

 

நூற்றாண்டுக் கணக்கில் முடிச்சு ஆராய்ச்சி நடந்தபோதும் ஐரோப்பியர்கள் சொன்ன அசிங்கமான முடிவுகளே இதுவரை நிலவின. ஆனால் இப்பொழுது ரோஸட்டா (ROSETTA STONE) கற்பலகை போல நமக்கு புதிய கருவிகள் கிடைத்துவிட்டது.

 

(ரோஸட்டா பலகை என்றால் என்ன? இது லண்டனில் பிரிட்டிஷ் மியூஸியத்தில் இருக்கிறது. இதைக் கண்டுபிடிப்பதற்கு முன்னால், எகிப்து நாட்டின் சித்திர எழுத்துக்கள் பற்றி நிறைய பேர் ஆராய்ச்சி என்ற முறையில் உளறிக்கொட்டி கிளறி மூடினர். அதாவது நாம் சிந்து- ஸரஸ்வதி சமவெளி நாகரீக எழுத்துக்கள் பற்றி இப்பொழுது பிதற்றுவது போல குதறி வந்தனர். மூன்று மொழி லிபிகளில் ஒரே விஷயத்தை எழுதிய ரோஸட்டா கல்வெட்டு கிடைத்த பின்னர் எகிப்து பற்றிய எல்லா உளறல்களையும் பிதற்றல்களையும் இந்து மஹா சமுத்திரத்தில் தூக்கிப் போட்டனர்).

 

இந்த முடிச்சு ஆராய்ச்சி ஒருவேளை இந்தியாவின் மிகப் பழமையான ஸிந்து-ஸரஸ்வதி நாகரீக ரஹஸியங்களை- முடிச்சு அவிழ்க்க- உதவும். முடிச்சவுக்கிகள் வாழ்க!!!

 

மேலும் காண்போம்……..

1530 ஆம் ஆண்டை ஒட்டி மஹா கிராதகனான ஸ்பானிய மனிதன் பிரான்ஸிஸ்கோ பிசாரோ (FRANSISCO  PIAZARO) இன்காக்களை எதிர்கொண்டான். பிரம்மாண்டமான கற்சிலைகளையும், கொட்டிக் கிடக்கும் தங்கக் குவியலையும் பார்த்து வாயைப் பிளந்தான் அந்தக் கொள்ளைக்காரன். அவர்களும் இந்துக்களைப் போலவே இளிச்சவாயர்கள். ஸ்பானிய கும்பலை நம்பி மோஸம் போனார்கள். ஆட்சியைப் பிடித்தான் வெள்ளைக்கார கொள்ளைக் காரன். சரி, நாகரீகமற்ற இந்த ‘ஜந்து’க்களுக்கு கொஞ்சம் கிறிஸ்தவ மதம் மூலம் நாகரீகம் புகட்டுவோம் என்று எண்ணி ஸ்பானிய முறைகளை அமல்படுத்த முன்வந்தபோது ஸ்பெயின் நாட்டை விட அற்புதமான வரி வசூல் முறை, சாலை அமைப்பு, தகவல் தொடர்பு முறை இருந்ததைக் கண்டான். வியந்து மூக்கில் விரலை வைத்தான்.

 

இப்பொழுது பெரு நாட்டில் உள்ள குஸ்கோ என்ற ஒரு தலை நகரில் இருந்து பல லட்சம் சதுரமைல் பரப்பை நிர்வகித்தனர் இன்காக்கள்.

பல மாகாண நிர்வாக சபைகள் அனைத்தும் ஒரு மஹா இணைப்பில் அடங்கும் பெடெரல் முறை அங்கே இருந்தது. ஸ்பெயின் ஜனத்தொகையை விடக் கூடுதலான ஒரு கோடிப் பேரை சுண்டுவிரல் அசைவில் ஆண்டனர் இன்கா மன்னர்கள்!

 

பணம் ,காசு, நாணயங்கள் இல்லாத மார்க்கெட் பொருளாதாரம். மத்திய நிர்வாகத்தின் கீழ் அனைவருக்கும் உணவு விநியோகம். உழைப்பின் பலன் கிடைக்க அவரவர்களுக்கு நில புலன்களும் இருந்தன. இது ஒரு சோஸலிஸ சமுதாயமா அல்லது எதேச்சாதிகார முடியாட்சியா என்று ஆரய்ச்சியாளர்கள் இன்னும் வாதப் பிரதிவாதங்களில் மண்டையை உடைத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆயினும் இன்கா அமைப்பு அற்புத அமைப்பு, கன கச்சித அமைப்பு என்பததை அனைவரும் ஏற்பர்.

 

இதுபற்றி கருத்து தெரிவித்த ஹார்வர்ட் பல்கலைக் கழக மானுடவியல் வல்லுனர் கார்ரி உர்டன் (GARY URTON) செப்பினார்:

நிர்வாக முறையில் இவர்கள் சிறப்பின் காரணம் மக்கத்தொகை கணக்கெடுப்பு, வரி/  கப்பம் கட்டுதல், ஸ்டோர்ஹவுஸ்/ கிடங்கு பொருள்  அட்டவணை, கையிருப்புக் கணக்குகள் ஆகிய அனைத்தையும் கீபூ என்னும் கயிறு முடிச்சு முறையில் குறித்து வைத்தனர். இதற்காக ஒரு தனி ஜாதி அங்கே இருந்தது. அவர்கள் இதில் விசேஷ பயிற்சி பெற்றனர்.

கீபூ எப்படி இருக்கும்?

ஒரு பென்ஸில் அளவு கனமுள்ள கயிறும் அதிலிருந்து தொங்கும் பல சிறிய கயிறுகளும் இருக்கும். இதை அவர்கள் எப்படிப் பயன்படுத்தினர் என்பதை ஸ்பானிய ஆட்கள் எழுதி வைத்தனர். அதற்குக் காரணம் காதல் திருமணம்!

 

ஒரு இன்கா இளவரசியும் ஸ்பானிய படை எடுப்பாளனும் திருமணம் புரிந்ததால் அவர்களின் வரி விதிப்பு வசூல்,  இதுவரை வந்தது எவ்வளவு, யார் எவ்வளவு பாக்கி வைத்துள்ளனர் என்பதெல்லாம் ஸ்பானிய மொழியிலும் எழுதப்பட்டது.

 

இதற்கு மேல் இப்போது நடந்த ஆராய்ச்சியில் தெரிய வந்த அதிசயங்க ளை அடுத்த கட்டுரையில் காண்போம்.

 

தொடரும்………….

 

-சுபம்–

 

பைத்தியத்துக்கும் லிதியம்; பாட்டரிக்கும் லிதியம்! (Post No.5494)

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 1 October 2018

 

Time uploaded in London – 8-38 am (British Summer Time)

 

Post No. 5494

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

பைத்தியத்துக்கும் லிதியம்; பாட்டரிக்கும் லிதியம்! (Post No.5494)

 

மூலக அட்டவணையில் 118 மூலகங்கள் (118 elements in Periodic Table) உள்ளன. நம் எல்லோருக்கும் தெரிந்த மூலகம் தங்கம் இரும்பு, வெள்ளி, ஆக்ஸிஜன், ஹைட்ரஜன்.

 

இதற்கு முன் நெப்போலியனைக் கொன்ற ஆர்ஸெனிக், ஈயத்தைத் தங்கமாக்கும் என்று நம்பவைத்த பாதரஸம், செலீனியம், தால்லியம் குறித்து சுவையான விஷயங்களைப் பகிர்ந்தேன். மூலக அட்டவணயில் மேலும் ஒரு மூலகத்தை இன்று காண்போம்.

 

 

லிதியம் (Lithium)என்னும் உலோகம் மூன்று இடங்களில் மிகவும் பயன்படுகிறது.

 

மன நோய் உள்ளவர்களுக்கான மருந்தில்;

ஹைட்ரஜன் குண்டுகளில் (Hydrogen Bombs);

நாம் உபயோகிக்கும் கைக் கடிகாரம் முதலிய கருவிகளில் பாட்டரிகளாக (Lithium Battery).

 

லிதியம் பற்றிய சுவையான விஷயங்களை முதலில் சொல்கிறேன்.

 

ஸ்வீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் நகரில் 1817ல் இதை ஒரு விஞ்ஞானி johan August Arfvedson கண்டு பிடித்தார்.

லிதியம் கார்பனேட் (Lithium Carbonate) என்னும் உப்பு மன நோயாளிகளுக்கு மிகவும் சொற்ப அளவில் கொடுக்கப்படுகிறது. இதைக் கண்டுபிடித்த கதை சுவையான கதை.

ஒரு காலத்தில் கீல்வாத நோய்க்கு இதை மருந்தாகப் பயன்படுத்தினர். இப்பொழுது மனநோய் மருந்துகளில் பயன்படுகிறது. யூரிக் அமிலம் (Uric Acid) உடலில் அதிகமாகும் போது மூட்டு வலியை உண்டாக்கும் நோய் வருகிறது. ஆஸ்திரேலிய டாக்டர் ஜான் கேட் (John Cade) என்பவருக்கு திடீறென்று ஒரு ஐடியா தோன்றியது மன நோயும் ஒரு மனிதனின் ரத்தத்திலுள்ள அதிக இரசாயனப் பொருள்களால்தான் உண்டாக வேண்டும் என்று நம்பினார். கடுமையான மன நோயுள்ளவர்களின் சிறு நீரை கினி பிக்  (Ginea Pigs) எனப்படும் பிராணிகளுக்குக் கொடுத்தார். அவை இறந்துவிட்டன. பிறகு லிதியம் உப்பு கலந்த கரைசலை அவைகளுக்குக் கொடுத்தபோது அவை மந்த (lethargic) கதியில் செயல்பட்டன. ஆனால் பின்னர் நல்ல நிலைக்கு வந்து துள்ளி ஓடின. இதையே லிதியம் கார்பனேட் என்ற உப்பாக மன நோயாளிகளுக்குக் கொடுத்தபோது பலன் கிடைத்தது.

 

ஐந்தாண்டுகளுக்கு மன நோயாளி என்று அடைத்து வைக்கப்பட்ட ஒரு நோயாளிக்குக் கொடுத்தபோது அந்தப் பைத்தியத்தின் ஆட்ட பாட்டங்கள் எல்லாம் ஓய்ந்து போயின. இரண்டே மாதங்களில் சாதாரண ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். பின்னர் வீடு திரும்பி ஒரு வேலையில் சேர்ந்தார். அது முதல் உலகம் முழுதும் லிதியம் மருந்து உபயோகத்தில் வந்தது.

 

ஆனால் எந்த ஒரு மருந்துக்கும் பக்க விளைவுகள் உண்டு. மக்களை மந்த கதியில் இயங்க வைக்கும் . மேலூம் ஆளுக்கு ஏற்ற, நோய்க்கு ஏற்ற அளவு இதை உடலில் ஏற்ற வேண்டும். மன நோய் மருத்துவர்களைக் கலந்தாலோசித்தே இதைப் பயன்படுத்தலாம்.

ஹைட்ரஜன் குண்டு

 

இதைவிட சுவையான விஷயம் ஹை ட் ரஜன் குண்டுகளில் லிதியம் ஹைட்ரைட் (Lithium Hydride) பயன்படுவதாகும். அணுகுண்டுகளை விட பல்லாயிரம் மடங்கு வலிமை வாய்ந்தது ஹைட்ரஜன் குண்டு. அணு குண்டு என்பது அணுவைப் பிளப்பதால்(fission) ஏற்படும் ஆற்றல். ஹை ட் ரஜன் குண்டு என்பது அணுவை இணைப்பதால் (fusion) உண்டாகும் ஆற்றல். நாம் தினமும் பார்க்கும் சூரியனில் ஒவ்வொரு வினாடியும் பல்லாயிரம் கோடி ஹைட்ரஜன்  அணுக்கள் இணைந்து ஹீலியம் உண்டாகும் போது கிடைக்கும் ஆற்றலே சூரிய சக்தி.

 

செயற்கை முறையில் ஹை ட்ரஜன்  அணுக்களை இணைக்க ஹை ட்ரஜன்  குண்டுகளில் லிதியம் ஐஸடோப் (Isotope) பயன்படுகிறது.

 

கீழேயுள்ள பாரா (paragraph) வை இரசாயன மாணவர்கள் மட்டும் படிக்கவும்:-

 

 

ஹைட்ரஜன் குண்டுகளில் லிதியம்-6 ஐஸடோப் பயன்படுகிறது ஹைட் ரஜனின் மற்ற ஒரு ஐஸடோப் டெடூரியம் (Deuterium) . மேற்கண்ட இரண்டும் சேர்ந்து டெடூரியம் ஹைட்ரைட்

ஆகிறது. இது பயங்கரமான சக்தியை வெளிப்படுத்த வல்லது.

எப்போது?

 

இதை ஒரு அணுகுண்டைச் சுற்றிவைத்துவிட்டால், அதை வெடிக்கும்போது அணுகுண்டில் பயன்படுத்தப்படும் யுரேனியம்-235 ஐஸடோப் பிரம்மாண்டமான வெப்பத்தை வெளிப்படுத்தும். உடனே அதை லிதியம்-6 உள்ளே வாங்கி ஹைட் ர ஜநை  ஹீலியம் என்னும் மூலகமாக மாற்றி மேலும் நியூட்ரான்களை வெளிவிடும் . அவை வெளிக்கூ ட்டில் வைக்கப்பட்ட யுரேனியம்-235ஐத் தாக்கி ப்லூடோனியம்-239 (Uranium, Plutonium)  ஆக மாற்றும் — இப்போது மூன்றாவது வெடிப்பு நிகழும் இவ்வாறு நடக்கையில் கோடி கோடி டன் வெடி மருந்தை ஒரே நேரத்தில் வெடித்தால் என்ன சக்தி கிடைக்குமோ அவ்வளவு சக்தி கிட்டும்.

இது ஹைட்ரஜன் குண்டு

லிதியம் பாட்டரி

மூலகம் என்பது திட, திரவ, வாயு நிலையில் உள்ளன. லிதியம் ஒரு உலோகம் (alkali metal) – திட நிலையில் இருந்தாலும் இரும்பு போல கனமாக இல்லாமல் மிக லேசான , எடை குறைந்த நிலையில் உள்ளது ஆகையால் இதைக் கலந்து உருவாக்கும் கலப்பு உலோகங்களும் (alloys) லேஸாக இருக்கும். இதை அலுமினியத்தோடு கலந்து விமானம் கட்டுகிறார்கள். ஆனால் எடை குறைந்தாலும் வலு அதிகம்.

 

காமெரா, கால்குலேட்டர், கை கடிகாரங்களில் மூன்று வோல்ட் (3 volt lithium batteries)  லிதியம் பாட்டரிகளைப் பயன்படுத்துவதன் காரணமும் இந்த எடைக் குறைவுதான். செயற்கை இருதயக் கருவிகளிலும் இவை பத்து ஆண்டு வரை இயங்குகின்றன.

 

லிதியத்துடன் ஒரு இரும்பு உப்பைச் சேர்த்து பொம்

மைகள், ஸ்டீரியோ, காஸெட், சி டி ப்ளேயர்களையும் இயக்குகிறார்கள்.

வானவியலில் லிதியம்

 

இந்த பிரபஞ்சம் மாபெரும் (Big Bang)  வெடிப்பிற்குப் பின்னர் உருவானது அப்பொழுது ஹைட்ரஜன், ஹீலியத்துடன் லிதியமும் உருவானது. அதாவது முதல் மூவர் – மூன்று முதல் ஆழ்வார்கள்–என்றும் சொல்லலாம. ஆகையால் சூரியனுக்கும் தம்பியான — ஜூனியர் ஆன– பழுப்புக் குள்ளன், சிவப்புக் குள்ள நட்சத்திரம் (Brown and Red Dwarfs) , ஆரஞ்சு வண்ண நட்சத்திரங்களை (Orange Stars) இதன் அளவை வைத்து இனம் காணுகிறார்கள்.

 

ஒவ்வொருவர் உடலிலிலும் 7 மில்லி கிராம் லிதியம் இருக்கிறது. பல வெப்ப நீரூற்றுகளில் இருக்கிறது. அமெரிக்கா, ரஷ்யா,  சீனா, ஜிம்பாப்வேயில் அதிகம் கிடைக்கிறது. கண்ணாடித் தொழிற்சாலைகளிலும் லிதியம் பயன்படுகிறது ஹைட்ரஜன் வாயுவைச் சேமித்து வைக்க லிதியம் ஹை ட்ரைட் பயன்படுகிறது

 

மனிதனுடைய சிறு நீரில் லிதியம் இருக்கிறது. திராட்சை, புகையிலை, பால், கடல் பாசியில் இருக்கிறது. ஒரு லிட்டர் ரத்ததில் பத்து மில்லி கிராம் லிதியம் இருந்தால் அது விஷம். 15 மில்லி இருந்தால் கெடுதி; 20 மில்லி இருந்தால் நாக்கு குளறும்; மரணமும் சம்பவிக்கும்.

 

லிதியத்தின் அணு எண் 3,

உருகு நிலை 181 டிகிரி சி;

கொதி நிலை 1347 டிகிரி சி.

 

வாழ்க லிதியம்; வளர்க லிதியம் பாட்டரி; தணிக பைத்தியம்.

 

வைத்தியத்தில் உதவும் லிதியம்; பைத்தியத்தில் உதவும் லிதியம் வாழ்க .

 

–சுபம்–