ஹென்றி ஃபோர்டின் வெற்றிக்குக் காரணம் (Post No.5486)

WRITTEN BY S NAGARAJAN

Date: 29 September 2018

 

Time uploaded in London – 6-11 AM (British Summer Time)

 

Post No. 5486

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

ஹென்றி ஃபோர்டின் வெற்றிக்குக் காரணம் மறுபிறப்பு நம்பிக்கையே!

ச.நாகராஜன்

1

எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை; இந்தியாவில் மதமாற்றத்தில் தீவிரமாக ஈடுபடவேண்டும் என்று கிறிஸ்தவ பாதிரிகள் மும்முரமாக ஈடுபட்டு கோடிக் கணக்கில் டாலர்களைத் திரட்டுவதற்கான காரணம் அவர்களின் முதலுக்கே மோசம் வந்ததால் தான்!

 

மேலை நாடுகளில் இன்று ஏராளமானோர் மறுபிறப்பு நம்பிக்கை கொண்டு மறுபிறப்பு கொள்கை பற்றி அறிய மிகுந்த ஆவல் கொண்டு ஹிந்து மதத்தின் பக்கம் பார்வையைத் திருப்பியுள்ளனர்.

 

இது அடிப்படையையே ஆட்டம் காண வைப்பதால் ஹிந்து மதத்தின் மீது  ஒரு மோசமான வெறுப்பை கிறிஸ்தவ பாதிரிகள் கொண்டுள்ளனர்.

 

ஆனால் மறுபிறப்பு நம்பிக்கையை நூறாண்டுகளுக்கு முன்பேயே  மேலை நாட்டில் பல பிரபலங்கள் உட்பட ஏராளமானோர் கொண்டிருந்தனர் என்பதை ஆதாரபூர்வமாக  வரலாறு நிரூபிக்கிறது.

மறுபிறப்பு நம்பிக்கையே தனது வெற்றிக்குக் காரணம் என்று அழகுறச் சொன்னவர் ஹென்றி போர்ட். மோட்டார் மன்னன் என்ற பெயரால் செல்லமாக அழைக்கப்படும் போர்ட் வாழ்க்கை சுவை தரும் ஒன்று.

 

 

2

 

ஹென்றி போர்ட் (பிறப்பு 30-7-1863 மறைவு 7-4-1947) தனது 26ஆம் வயது முதலே மறுபிறப்பில் நம்பிக்கை கொண்டிருந்தார் என்பதை அவரே San Francisco Examiner என்ற பத்திரிகைக்கு 1928ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் தேதி அளித்த பேட்டியில் குறிப்பிடுகிறார் இப்படி:

 

I adopted the theory of Reincarnation when I was twenty six. Religion offered nothing to the point. Even work could not give me complete satisfaction. Work is futile if we cannot utilise the experience we collect in one life in the next. When I discovered Reincarnation it was as if I had found a universal plan I realised that there was a chance to work out my ideas. Time was no longer limited. I was no longer a slave to the hands of the clock. Genius is experience. Some seem to think that it is a gift or talent, but it is the fruit of long experience in many lives. Some are older souls than others, and so they know more. The discovery of Reincarnation put my mind at ease. If you preserve a record of this conversation, write it so that it puts men’s minds at ease. I would like to communicate to others the calmness that the long view of life gives to us.

 

 

“26ஆம் வயதில் மறுபிறப்பு பற்றிய நம்பிக்கையைக் கொள்ள ஆரம்பித்தேன். மதம் ஒன்றும் தர முன்வரவில்லை. வேலை கூட பூரண திருப்தியைத் தரவில்லை. ஒரு பிறப்பில் நாம் பெற்ற அனுபவத்தை இன்னொரு பிறவியில் நாம் பயன்படுத்த முடியவில்லை எனில் அது மிக மோசம். மறுபிறப்பு பற்றி நான் கண்டுபிடித்த போது ஒரு பிரபஞ்ச திட்டத்தை கண்டுகொண்டது போல இருந்தது. எனது கருத்துக்களை நிறைவேற்ற ஒரு வாய்ப்பு உள்ளது என்பதை உணர்ந்தேன். காலம் என்பது இனி ஒரு எல்லைக்குட்பட்டதாக இல்லை. கடிகாரத்தின் முள்களுக்கு நான் இனி அடிமை இல்லை. மேதைத் தனம் என்பது அனுபவம். சிலர் அதை ஒரு பரிசு என்றோ அல்லது ஒரு திறமை என்றோ நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் அது பல ஜென்மங்களில் ஏற்பட்ட அனுபவங்களின் விளைவே. சிலர்  மற்ற ஆன்மாக்களை விட முதியவர்கள். ஆகவே அவர்களுக்கு அதிகம் தெரியும். மறுபிறப்பைக் கண்டுபிடித்ததிலிருந்து எனது மனம் தெளிவாக இருக்கிறது. இந்த உரையாடலை நீங்கள் பாதுகாத்தீர்கள் என்றால் இது மனித மனங்களை தெளிவாக இருக்கச் செய்கிறது என்று எழுதுங்கள். நான் மற்றவர்களுக்குச் சொல்ல விரும்புவது வாழ்க்கை பற்றிய நீண்ட நோக்கு நமக்குத் தரும் அமைதியைப் பற்றியே

போர்ட் கூறியதில் ஒரு சிறிய பகுதியையே மேலே நாம் படித்தோம்.

 

இன்னும் ஏராளமாக அவர் மறுபிறப்பு பற்றிக் கூறியிருக்கிறார்.

மனித வாழ்வில் ஒரு ஆறுதலையும் அர்த்தத்தையும் தரும் மறுபிறப்பு நம்பிக்கையே தன் வெற்றிக்குக் காரணம் என்று அவர் கூறியிருப்பது பொருள் பொதிந்த ஒன்று.

 

3

அமெரிக்காவின் 25வது ஜனாதிபதியான வில்லியம் மக் கென்லி (William McKinley) (பிறப்பு : 29-1-1843 சுடப்பட்டு மரணமடைந்த தேதி 14-9-1901) 1901ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி 50000 பேர் அடங்கிய ஒரு கூட்டத்தில் பங்கு கொண்டார். அவரைக் கொலை செய்ய முயன்ற ஜொல்காஸ் (Czolcosz) அது முடியாமல் போகவே மறுநாள் அவர் டெம்பிள் ஆஃப் மியூசிக் மைதானத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கு கொள்ள வந்த போது அவர் அருகில் வந்து அவரது அடிவயிற்றில் இரு முறை சுட்டான். மரண காயமடைந்த மக்கென்லி செப்டம்பர் 14ஆம் தேதி மரணம்டைந்தார்.

அவரது இறுதிச் ச்டங்கில் கலந்து கொள்ள வந்தார் போர்ட். அப்போது அவரது நண்பரான ஆலிவர் பார்தெல் (Oliver Barthel) என்பவர் அவரிடம் ஆர்லாண்டோ ஸ்மித் (Orlando Smith)  எழுதிய “A Short view of the Great Questions and Eternalism : A Theory of Infinite Justica”  என்ற புத்தகத்தை அளித்தார். இரு தொகுதிகள் அடங்கிய அந்த நூல் மறுபிறப்பு பற்றி நன்கு விளக்கும் ஒரு நூல். அதை நன்கு ஊன்றிப் படித்தார் போர்ட். அவரது மறுபிறப்பு பற்றிய நம்பிக்கை இன்னும் ஆழமானது. இதை போர்டின் வாழ்க்கை வரலாறை எழுதிய வின்செண்ட் கர்சியோ (Vincent Curcio) ‘ஹென்றி போர்ட்’ என்ற நூலில் எழுதியுள்ளார்.

 

4

இது போல ஏராளமான மேலை நாட்டு அறிஞர்களும், விஞ்ஞானிகளும், தொழிலதிபர்களும், சாமானியர்களும் மறுபிறப்பு பற்றிய நம்பிக்கை கொண்டிருந்ததை நாம் பார்க்கலாம்.

நாளுக்கு நாள் ஏராளமானோர் அறிவுக்கு இணக்கமான, அறிவியலால் நிரூபிக்கப்பட்ட இந்த நம்பிக்கையைக் கொள்வதில் ஆச்சரியம் இல்லை!

 

இது கிறிஸ்தவ மதத்தின் ஆணி வேர் கொள்கையான, ‘பிறப்பு ஒன்றே; பின்னர் மீளாத் துயில் தான்’ என்பதை ஆட்டம் காணச் செய்வதால் பாதிரிகள் என்ன செய்வதென்று தெரியாமல் விழிப்பதிலும் ஆச்சரியம் இல்லை!!

***

 

விண்வெளி ஆயுதங்கள் – 2 (Post No.5481)

WRITTEN BY S NAGARAJAN

Date: 28 September 2018

 

Time uploaded in London – 5-35 AM (British Summer Time)

 

Post No. 5481

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

டைரக்டர் திரு கே.பாக்யராஜ் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் வார இதழ் பாக்யா. அதில் 28-9-2018 தேதியிட்ட இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (எட்டாம் ஆண்டு தாம்) கட்டுரை

விண்வெளி ஆயுதங்கள் – 2

ச.நாகராஜன்

 

 

விண்வெளியில் உள்ள அபாயகரமான ஆயுதங்களில் சிலவற்றைப் பார்த்தோம். மேலும் சில:

 

கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகள்

 

என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா தரும் தகவலின் படி கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகள் (Intercontinental Ballistic Missiles) தரையிலிருந்து ஏவி விடப்படுபவை. 3500 மைல்களுக்கும் அப்பால் பறந்து குறித்த இலக்கைத் தாக்கக் கூடியவை. முதலில் சோவியத் யூனியன் 1958இல் இதை வானில் செலுத்தியது. உடனே 1959இல் அமெரிக்கா தனது பங்கிற்கு ஒன்றை வானில் செலுத்தியது. இந்தியா, இஸ்ரேல், சீனா ஆகிய நாடுகளும் இந்த வகை ஏவுகணைகளை செய்து வருகின்றன. இது கணிணி மூலமாகவோ அல்லது சாடலைட் மூலமாகவே ஏவப்படக்கூடியது. ஒரு குறிப்பிட்ட நகரைத் தாக்கித் தரைமட்டமாக்க வேண்டுமா, இது தயாராக இருந்து அந்தப் பணியைச் செய்து விடும். இவை அணுகுண்டுகளை மட்டுமல்ல, அபாயகரமான கெமிக்கல் மற்றும் உயிரியல் ஆயுதங்களையும் கூட ஏந்திச் செல்லக் கூடியவை. 1991இல் ஏற்பட்ட உடன்படிக்கையின் படி அமெரிக்காவும் ரஷியாவும் இந்த வகை ஏவுகணைகளைக் குறைத்துக் கொள்வது என்று பரஸ்பரம் ஒப்புக்கொண்டன.

 

அமெரிக்க விமானப்படையின் எக்ஸ் – 37 பி கலம்

அமெரிக்காவின் இந்த விண்கல ஆயுதம் பற்றி சரியான தகவல் வெளிவரவில்லை. இது ஒரு விமானப்படை ஆயுதம் என்ற அளவில் மட்டும் விவரம் அறியப்படுகிறது.

 

நாஸா அமைக்கின்ற விண்கலம் போலக் காணப்படும் இது ரொபாட்டினால் இயக்கப்படும் ஒன்றாகும். ஒரு வருடத்திற்கும் மேலாக இது விண்ணில் நிலை கொண்டிருக்கும் வடிவமைப்பைக் கொண்டது. 2015ஆம் ஆண்டு வெளியான ஒரு தொழில்நுட்பத் தகவல் ஏடு இது பற்றிச் சில தகவல்களைத் தந்துள்ளது. இது விண்ணிலிருந்தவாறே குண்டு மழை பெய்யும் வல்லமை கொண்டது. எதிரி விண்கலங்களைத் தாக்கி அழிக்கக் கூடியது. ஆனால் அமெரிக்க இராணுவம் இதையெல்லாம் மறுத்து, இந்த விண்கலம் எதிர்கால தொழில்நுட்பங்களுக்கான ஒரு சோதனைக் கலம் தான் என்று கூறி வருகிறது.

 

 

சாடலைட்டுகளை அழிக்கும் அமைப்புகள்

Anti- Satellite Systems எனப்படும் இவற்றில் ஒன்றை 1985ஆம் ஆண்டு அமெரிக்கா தனது F-15A ஜெட் விமானம் ஒன்றிலிருந்து ஏவிப் பார்த்தது. ஆனால் இதில் உள்ள சாதனங்கள் சரிவர இயங்காததால் இது அழிக்கப்பட்டது. சோல்விண்ட் பி 78 -1 என்ற இந்த விண்ணிலிருந்து ஏவப்படும் சிறிய கலம் சோதனைக் காலத்தில் 250 துண்டுகளை விண்ணில் சிதற அடித்தது. அமெரிக்க காங்கிரஸ் இந்தச் சோதனையை நிறுத்தச் சொல்லி உத்தரவிடவே இந்தத் திட்டம் 1987இல் நிறுத்தப்பட்டது.

 

இதை உருவாக்குவதில் அமெரிக்காவின் நோக்கம் என்னவெனில் எந்த வித உடன்படிக்கையையும் மீறாமல் ஆனால் அதே சமயம் எதிரி சாடலைட்டுகளை எப்படி அழிப்பது என்பதை சோதனை செய்து பார்ப்பது தான். இது பற்றி ஏராளமான சோதனைகள் நடந்து வருகின்றன.

எதிரி சாடலைட்டுகளை அழிக்கும் அமைப்புகள் பற்றி சோவியத் யூனியன், சீனா, இந்தியா ஆகிய நாடுகளும் ஆராய்ந்து அவற்றை உருவாக்கி வருகின்றன. சீனா 2007ஆம் ஆண்டு ஏவிய ஒரு கலம் விண்வெளியில் பெரிய விண்வெளிக் குப்பையை உருவாக்கி விட்டது. 2013இல் விண்வெளிக் குப்பை கூளங்களில் ஒன்று ஒரு ரஷிய விண்கலத்தின் மீது மோத ரஷிய விண்கலம் சுக்கு நூறாகி உடைந்தது.

 

 

விண்கல்லை ஆயுதமாக்கிப் பயன்படுத்துவது

 

விஞ்ஞானிகள் அனைவரும் விண்ணில் உலவும் விண்கற்கள் அபாயகரமான நாசத்தை விளைவிப்பவை என்பதை அறிவர். ஆறு மைல் அகலமுள்ள விண்கல் ஒன்று 660 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் பூமியிலிருந்த அனைத்து டைனோஸர்களையும் அழித்து ஒழித்ததை அனைவரும் அறிவோம். இந்த விண்கற்களால் மனித குலம் படும் பாட்டை மெடார் (1979), டீப் இம்பாக்ட் (1998) ஆர்மெகடான் (1998) ஆகிய ஹாலிவுட் படங்கள் சித்தரிக்கின்றன. சின்னச் சின்ன விண்கல் கூட பேரழிவை ஏற்படுத்தும். பயங்கர வேகத்தில் பறப்பவை இவை. இவற்றில் சிறிதான ஒன்று ரஷிய நகரான செல்யாபின்ஸ்க் மீது 2013ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் படவே ஆயிரக்கணக்கான ஜன்னல்கள் துண்டு துண்டாய்ச் சிதறின. 1200 பேர்கள் பறந்து வந்த கண்ணாடித் துண்டுகளால் காயமடைந்தனர். இந்தக் கல் சுமார் 66 அடி அகலம் கொண்ட ஒரு சிறிய துண்டு தான்.

 

நாஸா பூமிக்கு அருகில் பறக்கும் ஒரு விண்கல்லைச் சோதனைக்காக எடுத்துக் கொண்டு ஆய்வது என்று திட்டமிட்டது. இப்போது திட்டத்தைச் சிறிது மாற்றியுள்ளது. இன்னும் இரு ஆண்டுகளில் இந்தத் திட்டம் சரியாக உருவாகலாம்.

 

ஆனால் விஞ்ஞானிகளில் பலரும் விண்கற்கள் பல ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் பூமிக்கு அருகில் பறந்து வரும் என்பதைச் சுட்டிக் காட்டுகின்றனர். ஆகவே இதைப் பெரிய அபாயகரமான ஆயுதமாகப் பயன்படுத்த வாய்ப்பில்லை என்கின்றனர்.

 

இருந்தாலும் 1997இல் வெளியான ஸ்டார்ஷிப் ட்டரூப்பர்ஸ் என்ற ஹாலிவுட் படம், அயல்கிரகவாசிகள் போனஸ் அயர்ஸை அழித்துத் துடைத்து விடுவதைக் காண்பிக்கிறது. இதை நினைத்தாலே நடுக்கம் ஏற்படுகிறது, விண்கற்கள் செவ்வாய் கிரகத்தின் மீதும் கூட மோதி நாசகரமான விளைவுகளை ஏற்படுத்தி உள்ளன.

 

 

நமக்குத் தெரிந்த அளவில் உள்ளவை மேலே நாம் பார்த்த இந்த விண்வெளி ஆயுதங்களே. தெரியாமல் ரகசியமாக உருவாகி வருபவை எத்தனையோ!

 

தரை, கப்பல், விமானம் ஆகிய முப்படைகளை நினைத்து நடுங்கும் மனித நெஞ்சம் இனிமேல் விண்வெளிப் படை பற்றியும் நினைத்து பயப்பட வேண்டும். காலத்தின் கட்டாயம் இது!!

 

 

Paul Dirac

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

 

பெல்ஜியத்தைச் சேர்ந்த தொழிலதிபர் எர்னஸ்ட் சால்வே இயற்பியல் கொள்கைகளை விவாதிப்பதற்காக மாநாடு அமைப்பு ஒன்றை நிறுவினார். 1927இல் நடைபெற்ற ஐந்தாம் மாநாடானது, க்வாண்டம் தியரி பற்றி  விவாதிக்கப்பட்டதாலும், ஐன்ஸ்டீன் உள்ளிட்ட ஏராளமான மேதைகள் பங்கு பெற்றதாலும்  உலக பிரசித்தி பெற்ற மாநாடாகக் கருதப் படுகிறது..

 

இதில் கலந்து கொள்ள வந்த பிரிட்டனைச் சேர்ந்த பால் டிராக் சிறந்த இயற்பியல் விஞ்ஞானி. பெரிய நாத்திகவாதி.  கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது பற்றிய சூடான சர்ச்சை ஒன்று ஆரம்பிக்க உரத்த குரலில் வாத பிரதிவாதங்கள் கிளம்பின.

பால் டிராக் கடவுள் நம்பிக்கையை எதிர்த்துப் பேசி தூள் கிளப்பினார்.

 

 

அதே மாநாட்டில் கலந்து கொள்ள வந்த பிரபல மேதையும், பின்னால் நோபல் பரிசு பெற்றவருமான இயற்பியல் விஞ்ஞானி உல்ப்கேங் பாலி விவாதத்தில் கலந்து கொள்ளாமல் அமைதியாக ஒரு மேஜையருகில் அமர்ந்திருந்தார். ஒரு வார்த்தை கூடப் பேசாமல் இருந்த அவரை நோக்கிக் கூட்டத்தினர், “இதில் உங்கள் கருத்து என்ன? விவாதத்தைக் கேட்டீர்களா? என்று கேட்டனர்.

அதற்கு பாலி, “ எனக்குப் புரிந்த மட்டில் நான் இப்போது அறிந்து கொண்டது கடவுள் இல்லவே இல்லை; பால் டிராக் தான் அவரால் நியமிக்கப்பட்ட தீர்க்கதரிசி என்பதைத் தான்” (“As I understand it: there is no God and Dirac is his prophet”) என்றார்.

அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தனர்.

 

 

மிக சூடான விவாதத்தையும் கூட ஒன்றுமில்லாமல் செய்ததோடு அனைவரின் மனமும் நோகாமல் நகைச்சுவை ததும்ப தன் கருத்தை எடுத்துக் கூறிய பாலியை அனைவரும் பாராட்டினர்; இன்றும் அனைவராலும் மேற்கோள் காட்டப்படும் சம்பவமாக இது பிரபலமாகி விட்டது!

***

 

MY VISIT TO LONDON SCIENCE EXHIBITION! (Post No.5457)

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 22  September 2018

 

Time uploaded in London – 9-49 am (British Summer Time)

 

Post No. 5457

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

NEW SCIENTIST magazine has organised a Science Exhibition in London Excel center for four days from september 20, 2018. I visited the exhibition on second day. There was a big and enthusiastic crowd mostly students with their teachers or parents.

Over 100 stalls were there from University departments, government departments, book publishers and private business selling from meteorites to robotic toys. Some of the talks were well attended.

As soon as I entered the site I saw the big stall by European Space Agency. They displayed the models of their future space probes.

What surprised me was a person buying two meteorites for 140 pounds. Such stones from space are available in plenty in India but without any scientific details. Meteorite business is a big business here. The stones that fell from the sky are scientifically analysed, recorded and documented. From tiny samples to big stones are displayed in two or three stalls. Two authors were selling their science books personally signing the copies. Freebies such as brain caps were given to school students in some stalls.

 

140 speakers are lined up for four day talks.

 

All of us emit radiation to some extent. Even bananas emit radiation. But all of us know the radiation from nuclear materials are harmful. Even smoke alarms at homes have radiation. A stall explained all these things and allowed us to measure the radiation from different objects. It was interesting and educating.

 

Geology stall explained all about earth quakes and the man warned me that India is due for a big earth quake (not political!) in the Himalayan range, so do California. But no one could predict or forecast when it is going to happen. Ganges, Sarasvati and other rivers changed their course during such past big earth quakes.

 

Most interesting was a robot which laughs when you tickle it in its head or cheeks.

 

Harvard Univesity Press displayed their latest science books. New Scientist is selling their books and magazine at a discounted price. I have taken some pictures which would explain more than words.

 

EUROPEAN SPACE AGENCY FUTURE PROBES

 

 

BOOK AND THE AUTHOR

 

RADIATION MONITORING

 

EARTHQUAKE BELT

 

 

 

 

 

TICKLE ME ROBOT

 

–SUBHAM–

நெப்போலியனைக் கொன்றது எப்படி? (Post No.5456)

 

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 22  September 2018

 

Time uploaded in London – 7-13 am (British Summer Time)

 

Post No. 5456

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

பிரிட்டிஷாருக்கு நெப்போலியன் என்றால் சிம்ம சொப்பனம். நெப்போலியன் பிரெஞ்சுப் பேரரசர். ஏறத்தாழ ஐரோப்பா முழுதையும் வென்றவர். ஆனால் ஒரு தோல்வி ஏற்பட்டவுடன் எல்பா (Elba island )தீவில் சிறை வைக்கப்பட்டார். பின்னர் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சிக் கட்டிலில் ஏறிய போது பிரிட்டிஷ்- பிரஷ்ய சூழ்ச்சிக்கு இரையாகி, வாட்டர்லூ என்னுமிடத்தில் தோல்வியைத் தழுவினார். மாவீரனாகிய நெப்போலியன் யாரும் அணுகமுடியாத செய்ன்ட் ஹெலினா (St Helena) தீவில் சிறை வைக்கப்பட்டார். அவரை மெதுவாகக் கொல்லும் ஆர்ஸெனிக் உப்புகளைக் கொடுத்து பிரிரிட்டிஷார் கொன்று விட்டனர். நீண்ட காலத்துக்குப்பின்னர் அவர் சடலம் பாரீஸ் மாநகருக்குக் கொண்டுவரப்பட்டு (Hotel des Invalides in Paris) அடக்கம் செய்யப்பட்டது.

 

 

இதை எப்படி கண்டுபிடித்தனர்?

ஆர்ஸெனிக் (Arsenic) என்பது 118-க்கும் மேலான மூலகங்களில் ஒன்று. இது மனிதனுக்குத் தேவைதான். ஆனால் மிக, மிகக் குறைவாகவே தேவை. இது அதிகமாகப் பயன்படுத்தப்பட்டால் தலை முடியில் சேரும். இறந்த பின்னரும் ஒருவர் தலை மயிரை ஆராய்ந்து இதைக் கண்டு பிடித்துவிடலாம். நெப்போலியனின் சடலத்திலிருந்து எடுக்கப்பட்ட முடியை ஆராய்ந்ததில் இது அளவுக்கு அதிகமாக இருந்தது எல்லாப் பத்திரிக்கைகளிலும் வெளியானது.

 

ஆனால் ஒருவரின் தலை மயிரில் ஆர்ஸெனிக் மூலக உப்புகள் சேர வேறு சில வழிகளும் உண்டு. அந்தக் காலத்தில் சுவரில் ஒட்டும் வால் பேப்பர் (Wall Papers)களில் வர்ணம் உண்டாக்க ஆர்செனிக் பயன்படுத்தப்பட்டது. ஈரமான சூழ்நிலையில் இதன் மீது பூஞ்சக் காளான்(fungal gowth) வளர்ந்தால் அது ஆர்ஸெனிக் விஷத்தைக் காற்றில் கலக்கச் செய்யும். இது போல நெப்போலியன் இருந்த அறையிலும் சுவர்களில் பேப்பர் இருந்தது. திட்டமிட்டு நெப்போலியனை அந்த அறையில் அடைத்து சுவாஸிக்கச் செய்தனரா? அல்லது விதியின் வசமா? ஆண்டவனே அறிவான்.

வாரிசுப் பொடி மர்மம்!

 

கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தின் தலைமை குருவான போப்பாண்டவர்களில் பலர் மர்மமான முறையில் இறந்தனர். இது போல பல பிரபுக்கள், அரசர்களும் மேலை நாடுகளில் இறந்தனர் அல்லது கொல்லப்பட்டனர். இதற்கெல்லாம் காரணம் ஆர்ஸெனிக் உள்ள சில விஷ உப்புகளே. இதனால் இவைகளுக்கு ‘வாரிசுப் பொடி’ (Succession Powder) என்ற கெட்ட பெயர் ஏற்பட்டது. அதாவது அடுத்த வாரிசு யார் என்பதைத் தீர்மானிக்கும் கொலைகாரப் பொடியானது.

 

ஆனால் ஆர்ஸெனிக்குக்கு எவ்வளவு கெட்ட பெயர் உண்டோ அவ்வளவு நல்ல பெயர்களும் உண்டு. சிறிய அளவில் இது  உடலுக்குத் தேவை. இன்றும் சீன மருந்துகளில் வெகுவாகப் பயன்படுகிறது, குறிப்பிட்ட வகை ரத்த புற்று நோய்க்கு இதை மருந்தாகப் பயன்படுத்த அமெரிக்க உணவு மருந்து இலாகாவும் அனுமதிக்கிறது. ஒரு காலத்தில் இதற்கு ஸகல ரோக நிவாரணி (Cure all) என்ற பெயரும் உண்டு. காரணம் என்னவென்றால் இதை சர்க்கரை வியாதி, க்ஷய ரோகமெனப்படும் காச நோய், நரம்புத் தளர்ச்சி ஆகியவற்றுக்கும் கொடுத்தனர். காரணம் என்ன வென்றால் இதை மிக சொற்ப அளவில் உட்கொண்டால் ரத்தத்தில் சிவப்பு நிற செல்கள் (red Blood Corpuscles) பெருகி உத்வேகத்தைக் கொடுக்கும். இதை டாக்டர் பௌளர் என்பவர் கண்டு பிடித்ததால் அந்தக் காலத்தில் டாக்டர் பௌளர் திரவம் (Dr Fowlers Solution) மிகவும் பிரஸித்தம்.

 

 

பிரபல  ஆங்கிலக் கதாசிரியர் சார்ல்ஸ் டிக்கன்ஸ் முதலியோரும் சாப்பிட்ட டானிக் அது.

 

சில இடங்களில் பூமியில் ஆர்ஸெனிக் அதிகம். அப்படிப்பட்ட ஓரிடம் மேறு வங்கம். அங்கே நிலத்தடி நீரில் இது அதிகம் இருந்ததால் அரசாங்கம் க்ளோரிம் மாத்திரைகளைக் கொடுத்தது. இது தண்ணீரில் கலக்கும் போது ஆர்ஸெனிக் விஷ உப்புகள் கீழே கசடாகப் படிந்து விடும்.

 

நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இங்கிலாந்தில் மான்செஸ்டர் நகரில் 6000 குடிகாரர்கள் இந்த மூலகத்தால் பாதிக்கப்பட்டனர். பீயர் குடிகாரர்களில் 70 பேர் இறந்தனர். இப்பொழுதும் பெயிண்ட், (weed killers) களைக் கொல்லி திரவங்களில் இது பயன்படுகிறது.

ஆர்ஸெனிக் 5000 ஆண்டு வரலாறு உடைய மூலகம். ரோமானிய சக்ரவர்த்தி காலிகுலா (Roman Emperor Caligula) இதைப் பயன்படுத்தி தங்கம் எடுக்கும் திட்டத்தைத் துவக்கினார் என்றும் ஆனால் மிகவும் சொற்ப அளவில் தங்கம் கிடைத்ததால் லாபமில்லை என்று அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டதாகவும் ரோமானிய எழுத்தர் ப்ளினி (Pliny) சொல்கிறார்.

 

ஆர்செனிக் என்பது உலோகவகை மூலகம். இதன் அணு எண் 33.

 

இயற்கையில் எரிமலை வாயு முதலியவற்றின் மூலம் இது காற்றில் கலக்கிறது. பந்தயக் குதிரைகளைப் பழக்குவோர் ஆர்ஸெனிக் கலந்த உணவை அவைகளுக்குக் கொடுப்பதால் அவை ‘சிட்’டாகப் பறந்தன. ஆல்ப்ஸ் மலையில் உள்ளோர் இதை தோலில் நல்ல நிறத்தை உண்டாக்கும் என்றும் மலை உயரத்தில் வேலை செய்ய சக்தி கொடுக்கும் என்றும் நம்பினர். உடலில் 100 மில்லிகிராம் ஆர்ஸெனிக் இருந்தால் விஷம் என்று கருதப்படும் . ஆனால் ஆல்ப்ஸ் மலைவாசிகள் வாரத்துக்கு இரு முறை 250 மில்லிகிராம் சேர்த்தனர். இதை முதலில் விஞ்ஞானிகள் நம்பவில்லை. பின்னர் ஆராய்ச்சியாளர் முன்னிலையில் ஒரு குடியானவர் 400 மில்லி கிராம் ஆர்செனிக் உண்டும் பாதிக்கப்படாமல் இருந்ததைக் காட்டியவுடன் விஞ்ஞானிகள் கதையை மாற்றி எழுதினர்.

 

 

இந்தியாவில் கிராமப் புறங்களில் ஒரு சொல் உண்டு. தேள் விஷத்தையோ பாம்பு விஷத்தையோ உடலில் சிறுகச் சிறுக ஏற்றினால் , பின்னர் பாம்பு கடித்தாலும் அவரை பாதிக்காது என்று.

 

இதை ருசுப்பிக்கும் வகையில் மேலும் ஒரு செய்தி. ஆர்ஸெனிக் சாப்பிட்டு பழக்கப்பட்டவர்களை அது அதிகம் பாதிப்பத்தில்லை. தென் அமெரிக்காவில் உள்ள சிலி நாட்டு கிராம மக்கள் 600 மில்லிகிராம் ஆர்ஸெனிக் சாப்பிட்டும் அது தொடர்பான விளைவுகள் எதுவுமின்றி சுகமாக வசிக்கின்றனர்!

 

படம்- நெப்போலியன் அடக்கம் செய்யப்பட்ட இடம், பாரீஸ்

ஆர்செனிக் அதிகம் உள்ள நிலங்களில் ஒரு வகை சீன தாவரத்தை வளர்த்தால் அவை ஆர்ஸெனிக்கை உறிஞ்சி அந்த நிலத்தைப் பாதுகாப்பானதாகச் செய்து விடும் என்பதும் ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.

 

வாழ்க வாரிசுப் பொடி!

 

–சுபம் —

 

விண்வெளி ஆயுதங்கள் – 1 (Post No.5452)

Written by S NAGARAJAN

Date: 21 SEPTEMBER 2018

 

Time uploaded in London – 8-32 AM (British Summer Time)

 

Post No. 5452

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

டைரக்டர் திரு கே.பாக்யராஜ் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் வார இதழ் பாக்யா. அதில் 21-9-2018 தேதியிட்ட இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (எட்டாம் ஆண்டு இருபத்திஒன்பதாம்) கட்டுரை

 

விண்வெளி ஆயுதங்கள் – 1

ச.நாகராஜன்

 

தரைப் படை, கப்பல் படை, விமானப் படை என்ற மூன்று படைகளைப் பற்றியும் அந்தப் படைகள் கொண்டிருக்கும் அபாயகரமான ஆயுதங்களையும் பற்றியும் தான் நாம் இது வரை கேள்விப் பட்டிருக்கிறோம்.

 

புதிதாகத் தோன்றிக் கொண்டிருக்கும் விண்வெளிப் படை எத்தகைய ஆயுதங்களைக் கொண்டிருக்கின்றன என்பதை அறிந்தால் வியப்பினால் பிரமிப்போம்.

சில ஆயுதங்களை இங்கு பார்க்கலாம்.

 

ஏவுகணைகள்

முதன் முதலில் ராக்கெட்டை ஏவுகணையைதயாரித்தது சீனா தான் என்று சொல்வது வழக்கம். ஆனால் உலோக சிலிண்டர் ராக்கட் இந்தியாவில் தான் முதன் முதலாக பதினெட்டாம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்டது என்பதை ஆதார பூர்வமாக வரலாறு கூறுகிறது. ஆக ஏவுகணையின் தாயகம் இந்தியாவே.

மெக்ஸிகோஅமெரிக்கா போரிலும், அமெரிக்க உள்நாட்டுப் போரிலும், முதல் உலக மகா யுத்தத்திலும் ராக்கெட்டுகள் ஆயுதங்களாகப் பயன்படுத்தப்பட்டன. ஆனால் இதை பயங்கரமான ஆயுதமாக உருவாக்கிக் காட்டியவர் ஹிட்லரே. ஜெர்மனியின்  வி– 2 ராக்கெட் உலகையே நடுநடுங்க வைத்தது. இந்த ராக்கெட்டுகளில் ஆயிரம் ராக்கெட்டுகளை பிரிட்டன் மீது வீசினார் ஹிடலர்.

 

 

போரில் ஜெர்மனி தோற்றவுடன் அந்த ராக்கெட் விஞ்ஞானிகளை சோவியத் யூனியனும் அமெரிக்காவும் அழைத்தன. ராக்கெட் தொழில்நுட்பம் விரிவடைந்தது.

டர்பாவின் உருக்கப்பட்ட உலோகக் குழம்பு ஆயுதம்

அமெரிக்காவின் ராணுவத் தற்காப்பு நிறுவனத்தின் பெயர் டிஃபென்ஸ் அட்வான்ஸ்ட் ரிஸர்ச் ப்ராஜெக்ட்ஸ் ஏஜன்ஸி (Defence Advanced ResearchProjects Agency – DARPA) என்பதாகும். இது டர்பா என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறது. அறிவியல் புனைகதை எழுத்தாளரான ஆர்தர் சி.க்ளார்க் 1955இல் எழுதிய எர்த்லைட் என்ற நாவலில் உருக்கப்பட்ட உலோகக் குழம்பு பீச்சி அடிக்கப்படுவதை சித்தரித்துள்ளார். அதையே மேஹம் (MAHEM) என்ற பெயரில் மாக்னெடோ ஹைட்ரோடைனமிக் எக்ஸ்ப்ளோஸிவ் ம்யூனிஷன் என்பதன் சுருக்கம் மேஹம்  –  ஒரு திட்டத்தை அமெரிக்கா 2008ஆம் ஆண்டு தொடங்கி வைத்தது. குறிபார்த்து இது இலக்கை நோக்கி வீசப்பட்டால் நச்சை ஏவினால் என்ன நடக்குமோ அது தான் நடக்கும். நினைத்தாலே நடுங்க வைப்பது தான் மேஹம்.

 

விண்ணில் பறப்பதை அழிக்கும் டெல்

 

டாக்டிகல் ஹை எனர்ஜி லேஸர் என்ற ஆயுதத்தின் சுருக்கமே டெல் (THEL). 1996இலிருந்து 2005ஆம் ஆண்டு வரை இத்திட்டம் செயல்பட்டதுஇப்போது இது வேறு மாதிரியான ஆயுதமாக உருவாக்கப் பட்டு வருகிறது. அமெரிக்காவும் இஸ்ரேலும் கூட்டாகச் செய்த இந்த ஆயுதம் தரையிலிருந்து ஏவப்பட்டவுடன், விண்ணில் பறந்த 46 ராக்கெட்டுகள் உள்ளிட்டவற்றை அழித்து தன் வல்லமையைக் காட்டியது. இப்போது நியூ மெக்ஸிகோவில் திருத்தப்பட்ட வடிவமைப்புடன் இது சோதனை செய்யப்பட்டு வருகிறது.

 

ஆயுதம் ஏந்திய விண்கலங்கள்

 

பூமியைச் சுற்றி இப்போது ஏராளமான விண்கலங்கள் வலம் வருகின்றனஆயுதம் ஏந்திய ஒரு விண்கலம் மூலம் மற்ற விண்கலங்களை அழிக்கவும், பூமியை நோக்கி ஆயுதங்களை வீசவும் ஒரு திட்டம் உள்ளது. இது விண்வெளி ஒப்பந்தம் என்னும் சர்வதேச உடன்படிக்கையை மீறிய செயல் தான். விண்வெளியை ஆயுதக் கிடங்காக ஆக்கக் கூடாது என்பது சர்வதேச ஒப்பந்தத்தின் ஒரு ஷரத்து. கடவுளின் தடி எனப்படும் Rods from God என்ற திட்டம் மூலம் சிறிய சாடலைட்டுகளை வைத்து பூமியில் உள்ள இலக்குகளைத் தகர்க்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. சர்வதேச ஒப்பந்தத்தை மீற முடியவில்லை என்பதால், செயல் அளவில்  இந்தத் திட்டங்கள் முன்னேறாமல் உள்ளன என்பது நல்ல செய்தி!

சோவியத் யூனியனின் அல்மாஸ் விண்வெளி நிலையம்

 

 அல்மாஸ் (Almaz)  என்ற விண்வெளி நிலையம் பற்றிய திட்டம் ஆயிரத்தி தொள்ளாயிரத்து அறுபதுகளில் சோவியத் யூனியனால் உருவாக்கப்பட்டது. கடலில் செல்லும் கப்பல்களை அழிக்க இந்த நிலையத்தைப் பயன்படுத்தலாம் என நினைத்தது சோவியத் யூனியன்.

 

சந்திரனுக்கு  மனிதனை அனுப்புவதில் அது முனைந்ததால் அல்மாஸ் திட்டம் 1973 வரை சற்று கிடப்பில் போடப்பட்டது. இதையே சற்று மாற்றி சல்யுட் -2 என அறிமுகப்படுத்தியது அது.

   

ஆனால் துரதிர்ஷ்டவசமாக சல்யுட் -2 தோல்வி அடைந்தது. பின்னால் சல்யுட் -3, சல்யுட் -5 ஆகியவை வீரர்களைத் தங்கள் கலங்களில் ஏந்திச் சென்றன. ஆனால் தொழில்நுட்பப் பிரச்சினைகளால் இது அதிகம் முன்னேறவில்லை.

எதிர்காலத்தில் விண்வெளியில் போர் என்று ஒன்று வந்தால் அதற்கு ஆயத்தமாக இருக்க வேண்டும் என்று ரஷியா நினைப்பதால் விண்வெளி நிலையத் திட்டத்தை அது இன்னும் கை விடவில்லை.

 

 

அமெரிக்காவின் விண்வெளி லாபரட்டரி

மனிதனுடன் கூடிய விண்வெளி லாபரட்டரி – Manned Orbiting Laboratory – MOL – அமெரிக்க விமானப்படையின் திட்டமாகும். 1963லிருந்து 1969 வரை வேகமாக இயங்கிய இந்தத் திட்டத்திற்கென 17 விண்வெளி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.  ப்ராஜெக்ட் டோரியன் என்று பெயரிடப்பட்ட இந்தத் திட்டத்தின் நோக்கம் சோவியத் யூனியனின் பிரதேசங்களை போட்டோ பிடிப்பதுதான். இது ஏவுகணை ஆயுதங்களையும் ஏந்திச் செல்ல வல்லது.  இதைப் பற்றிய பெரிய ஆவணம் ஒன்று – 20000 பக்கங்கள் கொண்டது – 2015இல் வெளியிடப்பட்டது. ஆனால் இதற்கு ஆகும் செலவு முன்னூறு கோடி டாலர் என்பதால் இதை கிடப்பில் போட்டது அமெரிக்கா. ஏற்கனவே 130 கோடி டாலர் செலவழிக்கப்பட்டு விட்டது. இதற்காக தேர்வு செய்யப்பட்ட விண்வெளி வீரர்களை வேறு விண்கலங்களில் அமெரிக்கா அனுப்பியது.

 

இன்னும் சில விண்வெளி ஆயுதங்களைப் பார்ப்போம்…

 

 

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் ..

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாஸாவில் பணி புரிந்த பிரபல பெண்மணியான கணித மேதை காதரீன் ஜான்ஸன் (Katherine Johnson) 2018 ஆகஸ்ட் 26ஆம் தேதி நூறாவது வயதை எட்டியதை ஒட்டி விண்வெளி ஆர்வலர்கள் அனைவரும் அவருக்குத் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து மகிழ்கின்றனர். நாஸா ஏவிய விண்கலங்களை ஏவுவதில் உள்ள சிக்கலான கணக்குகளை அவர் மிக வேகமாகப் போடுவார். அவரை மனித கம்ப்யூட்டர் என்றே அனைவரும் அழைப்பர். ஆப்பிரிக்க அமெரிக்க பெண்மணியான அவர் இன பேதத்தையும் ஒழித்து நாஸாவில் வெற்றிக் கொடி நாட்டியதால் பின்னால் வந்த பெண்மணிகள் அனைவரும் அவரிடமிருந்து தாங்கள் உத்வேகம் பெற்றதாகக் கூறுவர். “Hidden Figuresஎன்ற திரைப்படத்திலும் அவர் நடித்துள்ளது குறிப்பிடத்தகுந்தது. இந்தப் படம், 1962ஆம் ஆண்டு விண்ணில் ஜான் க்ளெனை ஏந்திச் சென்ற விண்கலத்தில் ஏவுவதில் உள்ள அனைத்து சிக்கலான கணிதங்களையும் அவர் செய்து முடித்ததை முக்கியமான ஒன்றாகச் சித்தரிக்கிறது. ஜான் க்ளென், ‘அந்தப் பெண் கணக்கைச் சரி பார்த்து விட்டாரா என்று கேட்டு விட்டுத் தான் கலத்தில் ஏறினார். கம்ப்யூட்டர் செய்து முடித்த கணக்கை கையால் போட்டு அவர் சரி பார்ப்பது வழக்கம்.அவர் கணக்கெல்லாம் சரி என்று சொல்லி விட்டால் நான் விண்வெளியில் பறக்கத் தயார்! என்று ஜான் க்ளென் சொன்னது அவரது கணிதத் திறமையில் அனைவரும் வைத்திருந்த மதிப்பைப் பறை சாற்றுகிறது. 1953இலிருந்து 1986 முடிய நாஸாவில் வேலை பார்த்த இந்தப் பெண்மணியின் நூறாவது பிறந்த நாளுக்கு உலக விண்வெளி ஆர்வலர்கள் வாழ்த்து தெரிவிக்கின்றனர்.

 

***

 

மந்திரம் கற்கப்போன டாக்டர்! (Post No.5440)

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 17  September 2018

 

Time uploaded in London – 13-37 (British Summer Time)

 

Post No. 5440

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

ஒரு சாமியாரிடம் ஊரிலுள்ள பிரபல டாக்டர் வந்தார். வழக்கமான நமஸ்காரங்கள், பிரஸாத விநியோகம் முடிந்தது. பெரிய டாக்டர் என்பதால் அவர் விருப்பப்படி ஒரு இன்டெர்வியூ(INTERVIEW) ஏற்பாடாகி இருந்தது.

இதோ பேட்டி

டாக்டர்:

சுவமிகளே; நமஸ்காரம்; நாங்கள் டாக்டர்கள்; மிகவும் ‘பிஸி’யான ஆட்கள்; ஆகையினால் ஒரு கேள்வி. நிறைய இணைய தளங்கள், ‘பேஸ்புக்’, ‘வாட்ஸ் அப்’பிலும் ‘யூ ட்யூபி’லும் நிறைய மந்திரங்கள் வருகின்றன. அவற்றை நாங்களும் கற்கலாமா?

சாமியார்:–

கூடவே கூடாது

(டாக்டர் முகத்தில் கொஞ்சம் ஏமாற்றம்)

 

எல்லா மந்திரங்களையும் எல்லோரும் கற்கலாமா?

 

கூடவே கூடாது

 

(டாக்டருக்கு மேலும் ஏமாற்றம்!)

இந்த சாமியாரிடமிருந்து ஒரு (YES) யெஸ் பதிலாவாது வாங்கி விடலாம் என்று கருதி டாக்டர் கேட்டார்:

 

அது சரி, ஏற்கனவே ஒருவர் முறையாகக் கற்ற மந்திரங்களையாவது அவர், ஏனையோருக்குச் சொல்லித்தரலாமா?

 

‘கட்டாயம் கூடாது’

 

டாக்டருக்குப் பெருத்த ஏமாற்றம்.

என்ன சுவாமிகளே, எதுவுமே கூடாது என்றால் என்ன அர்த்தம்? நீங்கள் எல்லாம் மக்களுக்கு  நல்ல விஷயங்களைப் பரப்பவே கூடாது என்று முடிவு செய்து விட்டீர்களா?

சரி, நாளைக்கு நானும் உங்களைப் போல ஒரு காவித் துண்டைப் போர்த்திக்கொண்டு மேலே சொன்ன எல்லா விஷயங்களையும் செய்யலாமா?

சாமியார் பதில்-

கூடாது (அழுத்தம் திருத்தமாக)

சாமியார் ஒரு அருமையான புன் சிரிப்புடன்  இடைமறித்தார்,

‘சரி, நான் சில கேள்விகளைக் கேட்கிறேன். பதில் சொல்லுங்கள்’:

 

டாக்டருக்கு மஹா சந்தோஷம். அப்பாடா! இப்போதுதான் இந்த மனிதர் நம்மையும் ஒரு பொருட்டாக நினைத்திருக்கிறார் என்ற குதூகலத்துடன் காதுகளைத் தீட்டினார்; வெகு அருகில் நீட்டினார்.

 

சாமியார்:–

நான் ‘கூகிள்’ (GOOGLE) செய்து பார்த்தேன்; அதை எல்லாம் படித்துவிட்டு, நான் எங்கள் மடத்திலுள்ள நோயாளிகளுக்கு மருந்துச் சீட்டு எழுதிக் கொடுக்கலாமா?

 

டாக்டர் அதிர்ச்சியுடன் பதில் தந்தார்:

‘ஐயய்யோ! கூடவே கூடாது.

சுவாமிஜி, இது ஆபத்தானது; அது மட்டுமல்ல சட்ட விரோதமானது’–என்றார் டாக்டர்.

 

அட! நீங்கள் சொன்ன சமூக ஊடகங்களில் வரும் எல்லாவற்றையும் படித்துவிட்டு நான் எங்கள் மடத்திலுள்ள நோய்வாய்ப்பட்டோருக்கு மருந்து தரலாமா?

 

‘மருத்துவப் படிப்பு படித்த ஒருவர் எழுதிக் கொடுக்கும் மருந்தை வேண்டுமானால் நீங்கள் வாங்கி, டாக்டர் சொன்னபடி சாப்பிடச் செய்யலாம். வேறு எதுவும் செய்யும் தகுதி யாருக்கும் இல்லை. நீங்கள் சொல்லும்படி செய்ய முடியுமானால் தோழான், துருத்தி எல்லாம் டாக்டர் ஆய் விடலாமே!’–என்றார் டாக்டர்.

 

சாமியார் விடவில்லை. அடுத்த கொக்கி போட்டார்.

 

ஏன்? சொல்லுங்கள் பார்ப்போம்.

டாக்டர் அதி பயங்கரப் பெருமிதத்துடன் பேசலானார்;

‘நாங்கள் எல்லோரும் முறையாக ஐந்து ஆண்டு மருத்துவப் படிப்பு படிக்க வேண்டும்; அதில் ‘பாஸ்’ ஆக வேண்டும். பின்னர் ‘ஹவுஸ் சர்ஜன்கள் முதலிய பயிற்சிகளையும் செய்கிறோம். அது மட்டுமல்ல; முறையான ஸீனியர் டாக்டர்களின் கண்காணிப்பில் வேலை செய்வோம்; பெரிய தவறுகள் நடக்காமல் பார்த்துக்கொள்வது அவர்கள் பொறுப்பு.

இவ்வளவு தெரிந்த பின்னரும் ஒவ்வொரு நோயாளியும் வெவ்வேறு உடல்வாகு கொண்டவர்கள்;

ஒரு நோயாளியின் வயது, உயரம், ஆணா, பெண்ணா, பெண்ணாக இருந்தால் அவர் கர்ப்பவதியா, மற்றும் நோயாளிக்கு பென்ஸிலின் முதலிய மருந்து அலர்ஜி ஏதேனும் உண்டா, அந்தக் குடும்பத்தில் ஏதேனும் பரம்பரை நோய் உண்டா? அவருடைய தற்போதைய நோயின் ஸிம்ப்டம் (SYMPTOMS) என்ன, அவர் தற்போது வேறு என்ன மருத்து சாப்பிடுகிறார். இது போன்ற ஏராளமான விஷயங்களைக் கணக்கிற் கொண்டு ஒரு டாக்டர் சிகிச்சை தருகிறார். இதெல்லாம் சுவாமிகளுக்குத் தெரியாதா? இப்படி அசட்டுத் தனமாக கேள்விகளைக் கேட்கிறீர்களே! என்று டாக்டர் ஒரு நீண்ட லெக்சர் (LECTURE) கொடுத்தார்.

 

இப்போது சாமியாருக்கு மஹா மகிழ்ச்சி; ‘மெகா’ மகிழ்ச்சி.

 

தான் சொல்ல வேண்டிய எல்லா விஷயங்களையும் டாக்டரே கக்கி விட்டதால் ஒரே குதூகலம்.

 

‘அன்பரே! நீங்கள் சொன்ன எல்லா விஷயங்களும் ஒரு சந்யாசிக்கும் பொருந்தும். ஒரு தனி மனிதன் டாக்டர் போல நடித்தாலும், அவர் போல உடை அணிந்தாலும், டாக்டர் ஆகிவிட முடியாது. நீங்கள் சொன்னபடியே ஒருவனின் குடும்ப வரலாறு, நோயாளி வரலாறு அறிந்து, தகுதி பெற்ற ஒருவர் மருந்து கொடுப்பது போல நாங்களும் ஆளின் பக்குவத்தைப் பார்த்து மந்திரம் தருகிறோம்.

மருந்து டப்பாக்களிலும் பாட்டில்களிலும் ஒரு சீட்டில் நிறைய விசயங்கள் அச்சடிக்கப்பட்டது போலவே மந்திரங்களுக்கும் கட்டு திட்டங்கள் உண்டு; இரண்டு பேருக்கு சர்க்கரை வியாதியோ இருதய நோயோ இருந்தால் இருவருக்கும் நீங்கள் ஒரே மருந்தை, ஒரே அளவைக் கொடுப்பதில்லை; இது போலவே மந்திரங்களும் ஆளுக்கும் தேவைக்கும் ஏற்ப மாறுபடும்

 

சில மருந்துகளுக்கு பத்தியம் சொல்லுவது போல சில மந்திரங்களுக்கு ஆசார அனுஷ்டானங்கள் உண்டு என்று சொல்லி முடித்தார்.

 

இதைக் கேட்ட டாக்டருக்கு புத்தருக்குப் போதி மரத்து அடியில் கிடைத்தது போல ஞானோதயம் எற்பட்டது. ஒரு பெரிய கும்பிடு போட்டுவிட்டு  நைஸாக நழுவினார்.

–சுபம்–

 

2022-இல் விண்வெளியில் இந்திய வீரர்! (Post No.5428)

Written by S NAGARAJAN

Date: 14 SEPTEMBER 2018

 

Time uploaded in London – 7-23 AM (British Summer Time)

 

Post No. 5428

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

டைரக்டர் திரு கே.பாக்யராஜ் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் வார இதழ் பாக்யா. அதில் 14-9-2018 தேதியிட்ட இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (எட்டாம் ஆண்டு இருபத்தியெட்டாம்) கட்டுரை

 

2022-இல் விண்வெளியில் இந்திய வீரர்!

 

ச.நாகராஜன்

 

இந்தியாவின் 72வது சுதந்திர தின விழாவில் 15-8-2018 அன்று நமது பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவிற்குப் பெருமை தரும் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். 2022ஆம் ஆண்டில் நமது விண்வெளி வீரர் ஒருவர் நமது கலத்தில் விண்வெளியில் பறப்பார் என்ற வியத்தகும் செய்தியே அது.

நாம் சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன விழாவைக் கொண்டாடப் போகும் ஆண்டில் நமக்கு விண்வெளி வெற்றி எப்படிப்பட்ட புகழைத் தரும்!

உலக அரங்கில் மற்ற நாடுகளின் தலைவர்களும் விஞ்ஞானிகளும் புருவதை உயர்த்தி ஆச்சரியத்துடன் இந்தியாவைப் பார்க்க வைக்கும் அறிவிப்பு இது.

இது நம்மால் முடியுமா? முடியும்!

இதை முடிக்கச் செய்ய பிரதமர் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள தலையாய விஞ்ஞானிகளின் கூட்டம் ஒன்றைக் கூட்டினார்.

 

1961ஆம் ஆண்டு ஏப்ரல் 12ஆம் தேதியன்று சோவியத் வீரர் யூரி ககாரின் முதன் முதலில் பூமியைச் சுற்றி விண்வெளியில் வலம் வந்தார். புதிய சகாப்தம் தொடங்கியது.

 

இதுவரை மூன்று நாடுகளே தங்கள் விண்வெளி வீரர்களை விண்வெளியில் அனுப்பியுள்ளது என்பது குறிப்பிடத் தகுந்தது.

முதலில் பறந்த சோவியத் வீரரைத் தொடர்ந்து 1961 மே மாதம் 5ஆம் தேதி அமெரிக்கா தனது வீரரை விண்வெளிக்கு அனுப்பியது. 2003ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16ஆம் தேதி சீனா தனது வீரரை விண்வெளிக்கு அனுப்பியது.

பல்வேறு நாடுகளும் விண்வெளியில் ராக்கட்டை அல்லது கலங்களை ஏவ இந்தியாவின் துணையை சமீப காலத்தில் நாடி வருவதும் இந்தியாவிலிருந்து அவர்களின் கலங்கள் விண்ணுக்கு ஏவப்படுவதும் சாதாரண நிகழ்வுகளாக ஆகி விட்டன.

நமது இந்திய வீரரான ராகேஷ் சர்மா  சோயுஸ் டி -11 கலத்தில் 1984ஆம் ஆண்டு ஏப்ரல் 2ஆம் தேதி விண்ணில் பறந்தார்.

என்றாலும் நமது கலத்தில் நமது தொழில்நுப்டத்தில் ஒரு வீரர் விண்ணுக்குச் செல்கிறார் என்பது ஒரு அர்த்தமுள்ள விஷயம் தானே!

இதற்காக ஆகும் உத்தேச செலவு மலைக்க வைக்கும் தொகையான 14000 கோடி ரூபாய் ஆகும்! இந்த விண்வெளிப் பயணத்தால் ஏதேனும் ஆதாயம் உண்டா? நிச்சயம் உண்டு. விண்வெளித் தொழில்நுட்பத்தில் நாம் முன்னேற முன்னேற ஏராளமான நவீன தொழில்நுட்ப ஆதாயங்கள் உண்டு. இவை புதிய விஞ்ஞான இந்தியாவை உருவாக்கும். உலகை வியக்க வைக்கும்.

 

மனிதனுக்கு பதிலாக ரொபாட்டை அனுப்புவது ஒரு வழி. என்றாலும் கூட சந்திரனுக்கும் செவ்வாய்க்கும் இந்தியப் பயணம் என்று சொல்லி வரும் இந்த நாட்களில் விண்வெளியில் ஒரு இந்திய வீரரின் பயணம் என்பது முதல் படியாக அமையும்.

இப்படி ஒரு திட்டத்தை திடீரென்று அறிவிக்க முடியாது.

2004ஆம் ஆண்டிலிருந்தே இது பற்றிய ஏற்பாடுகள் நடை பெற்று வருகின்றன. 2006ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் தேதி இந்தியாவின் தலைமை விஞ்ஞானிகள் 80 பேர் இது பற்றி விவாதித்தனர். என்னென்ன தொழில்நுட்பங்கள் தேவை என்பது தீர்மானிக்கப்பட்டது. தேவையான தொழில்நுட்பங்களில் பலவும் ஏற்கனவே இந்தியாவில் இருப்பதை விஞ்ஞானிகள் சுட்டிக் காட்டினர். பிறகென்ன? திட்டத்திற்குப் பச்சைக் கொடி காட்டப்பட்டது.

 

இதற்கென இந்திய விண்வெளி ஆய்வு மையம் (ஐ எஸ் ஆர் ஓ) சுமார் 12500 கோடி ரூபாய் பட்ஜெட்டைச் சமரிப்பித்தது.

2016ஆம் ஆண்டு மே மாதம் 23ஆம் தேதி மறுசுழற்சி ஏவு கலம் (RLV-TD)  ஒன்றை இந்தியா விண்ணில் ஏவியது. 65 கிலோமீட்டர் உயரம் சென்ற அது பல்வேறு உஷ்ணநிலைகளையும் தாங்கி விண்ணில் வலம் வந்தது. இதன் மூலம் விண்ணில் ஏவுவது, அங்கு பறப்பது, வழிகாட்டுவது, கட்டுப்பாட்டிற்குள் இருப்பது உள்ளிட்ட பல தொழில்நுட்பங்களை இந்தியா கொண்டுள்ளதை உலகம் அறிந்து வியந்தது.

 

 

2018ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் தேதி விண்கலத்திலிருந்து தப்பும் அமைப்புக்கான சோதனை ஒன்றையும் இந்தியா வெற்றிகரமாக நடத்தி முடித்தது. இந்த சோதனையில் விண்கலம் 2.7 கிலோமீட்டர் உயரம் சென்றது. இரண்டு பாராசூட்டுகள் அதிலி

ருந்து வெளி வந்து பறக்க,  கடலில் குறிப்பிட்ட் இடத்தில் அவை இறங்கின.

 

ஒருவேளை கலத்தை ஏவும் போது பிரச்சினை என்றால் விண்வெளி வீரர் எப்படித் தப்புவது என்பதையும் வெற்றிகரமாகச் செய்து முடித்து விட்ட நிலையில் இனி முழு அளவில் களத்தில் இறங்க வேண்டியது தான்!

 

இன்னொரு தொழில் நுட்பமான விண்வெளி வீரரின் உடை தயாரிப்பு பற்றியும் நமது விண்வெளி மையம் வெற்றிகரமாகச் செய்து முடித்து விட்டது.

 

கலத்தை இணைப்பது, விடுவிப்பது போன்றவற்றையும் கூட தரையிலேயே விண்வெளி சூழ்நிலையை ஏற்படுத்தி செய்து பார்த்து விட்டது.

இனி விண்வெளி வீரரைத் தயார் படுத்த வேண்டியது தான் பாக்கி.

 

இன்னொரு முக்கிய விஷயமும் உண்டு. சீனா ஐக்கிய நாட்டு சபையின் உறுப்பினர்கள் அனைவருக்கும், தான் அமைக்கவிருக்கும் விண்வெளி ஸ்பேஸ் ஸ்டேஷனில் இணைந்து பணியாற்றும் வாய்ப்பைத் தருவதாகக் கூறியுள்ளது.

இந்த நிலையில் நமது தொழில்நுட்பமும் வலிமை வாய்ந்த ஒன்றாக இருப்பதை உலகத்திற்குக் காட்ட வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது. அதை ஒரு இந்திய வீரரின் விண்வெளிப் பயணம் பறை சாற்றும்.

ஆக விண்கலம் தயாரிக்கும் பணி ஆரம்பமாகி விட்டது.

கலம் ரெடி என்றால் இந்திய வெற்றி உறுதி!

அந்த நாளை நாடே எதிர்பார்க்கிறது! ஜெய் ஹிந்த்!

 

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

இன்று உலகிலேயே விஞ்ஞானிகளில் அதிக பணக்காரர் ஜேம்ஸ் வாட்ஸன்  (James Watson  பிறப்பு: ஏப்ரல் 6, 1928) தான். 1,10,600 கோடி ரூபாய்க்குச் சொந்தக்காரர் இவர்.

டி என் ஏ அமைப்பு பற்றிய கண்டுபிடிப்புக்காக 1962ஆம் ஆண்டு இவருக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டது. ‘தி டபிள் ஹெலிக்ஸ் என்ற இவரது நூல் 1968இல் வெளியாகி உலகினரின் கவனத்தை ஈர்த்து பிரபலமானது. ஆனால் ஆப்பிரிக்க கறுப்பு இனத்தவர் அவ்வளவாக நுண்ணறிவு கொண்டவர்கள் இல்லை என்ற இவரது கூற்றால் இவரது பெயருக்கு களங்கம் ஏற்பட்டது. ‘சந்தேகம் இருந்தால் பெரிய கம்பெனி உரிமையாளர்களைக் கேட்டுப் பாருங்கள். கறுப்பர்களை பணியில் அமர்த்தும் அவர்களும் இதைத் தான் சொல்வார்கள் என்று அவர் கூறியது எரியும் நெருப்பில் எண்ணெயை வார்த்தது போல் ஆகி விட்டது.

 

கோல்ட் ஸ்பிரிங் ஹார்பர் லாபரட்டரியின் தலமைப் பதவியிலிருந்து இதற்காக அவர் தூக்கப்பட்டார். இன வாதம் பேசுபவர் என்ற பெயரையும் பெற்றார்.

ஆனால் இதற்காக எல்லாம் மனிதர் அசரவில்லை. செல்வத்தைச் சேர்த்துக் குவித்தார். விஞ்ஞானிகளில் நம்பர் ஒன் பணக்காரர் ஆனார்!

***

 

 

பைத்தியக்கார பாதரஸ சோதனை! (Post No.5401)

written by  London Swaminathan

 

swami_48@yahoo.com

Date: 7 September 2018

 

Time uploaded in London – 6-47 am (British Summer Time)

 

Post No. 5401

 

 

பிரியாடிக் டேபிள் (periodic table) எனப்படும் மூலக     அட்டவணையில் 80-ஆவது இடத்தைப் பிடித்த மூலகம் பாதரஸம். இது ஒரு விநோதமான மூலகம். திரவ ரூபத்தில் இருக்கும். கண்ணாடி முதலியவற்றில் ஒட்டாது. சிறிய வெப்பம் இருந்தாலும் விரிவடையும். இதனால் உடலில் உள்ள சூட்டை அளக்க இதை தெர்மாமீட்டரில் பயன்படுத்தினர். இதன் விநோதத் தன்மையால் இதைக் கொண்டு ஈயத்தையும் இரும்பையும் தங்கம் ஆக்கலாம் (alchemy) என்று உலகம் முழுதும் நம்பிக்கை இருந்தது. ஒருவர் தலை முடியில் பாதரஸம் இருக்கும் அளவைக் கொண்டு அவர் இவ்வித (alchemy or transmutation of metals) ஆராய்ச்சியில் ஈடுபட்டாரா அல்லது காம சம்பந்தமான (syphilis) நோய்களுக்கு மருந்து சாப்பிட்டாரா என்று இறந்த பின்னரும் தலை முடி காட்டிவிடும். இது அந்தக்காலம். இப்பொழுது மெர்க்யுரி எனப்படும் பாதரஸம் (Mercury) விஷம் என அறிந்ததால் அதை உள்ளுக்கு சாப்பிடும் மருத்துகளில் கலப்பது இல்லை.

 

 

நமது ரிஷி முனிவர்கள் ஈயம், இரும்பு தாமிரம் ஆகியவற்றிலிருந்து தங்கத்தை உண்டாக்கியது உண் மையாக இருக்கலாம். ஆனால் மேலை நாட்டில் எந்த ஒரு ரஸவாத ஆராய்ச்சியும் இதை நிரூபிக்கவில்லை. விஞ்ஞானம் இன்று வரை நம்பாத அஷ்டமா சித்திகள் , இந்துமத முனிவர்களுக்கும் சித்தர்களுக்கும் உண்டு. ஆகையால் அவர்கள் இப்படி ஒரு சித்தியைப் பெற்றதில் வியப்பில்லை.

 

பாதரஸம் எப்பொழுதுமே திரவ நிலையில் (liquid state) இருக்கும் ஒரு உலோகம் என்ற நம்பிக்கை தகர்ந்து போன ஒரு சம்பவம் எல்லோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 1759-ஆம் ஆண்டில் இரண்டு ரஷ்ய விஞ்ஞானிகள் சைபீரியாவில் வேறு ஒரு சோதனைக்காக சென்றனர். ஏ. பிரவுனும் எம்.வி. லோமோனோசோவும் உப்பையும் பனிக்கட்டியையும் கலந்து வெப்பத்தைத் தாழ்த்தும் சோதனை செய்தனர். அமிலத்தையும் பனிக்கட்டியையும் கொண்டு மேலும் வெப்பநிலையைக் குறைக்கலாமா என்றும் ஆரய்ந்தனர். வெப்பத்தை அளக்க முயன்றபோது தெர்மாமீட்டரில் (வெப்பமானி) பாதரஸம் நகரவில்லை! கண்ணாடிக்குள் அது கட்டியாக நின்றவுடன் அதை உடைத்து வெளியே எடுத்தால் கம்பி போல வந்தது. மற்ற உலோகக் கம்பிகளை வளைப்பது போல வளைக்கவும் முடிந்தது. அப்பொழுது முதல் பாதரஸ  மும் ஒரு சாதாரண மூலகமே என்று உலகம் உணர்ந்தது.

கலோமல் (calomel) எனப்பட்டும் மெ ர்க்யுரிக் குளோரைடு (Mercuric chloride) பேதி மருத்தாகவும் நோய்க்கிருமிகளைக் கொல்லும் மருந்தாகவும் இந்தியா உள்பட பல நாடுகளில் உபயோகத்தில் இருந்தது. சீன மருந்துகளில் இப்பொழுதும் பாதரஸ கூட்டுப்பொருட்கள் கலக்கப்படுகின்றன. மேலை நாடுகளில்  தோல் நோய்களுக்கு வெளியே (Skin Ointments) பூசும் களிம்புகளில் மட்டும் இருக்கும். இது விரைவில் ஆவியாகக் கூடியதால் சோதனைச் சாலைகளில் சுவாசிப்பதன் மூலம் நுரையீரலில் புகுந்து பலவிதக் கேடுகளைத் தந்தது.

கடல் மீன்களைச் சாப்பிடுவோர் (tuna, Sword fish) இந்தக் கேடுகளுக்கு அதிகம் ஆட்படுவர். நாம் சாப்பிடும் பல உணவுப் பொருட்களில் இது இருந்தாலும் மிக மிகக்குறைவே. அதனால் ஆபத்து ஏற்படாது. கர்ப்பிணிப் பெண்களை மேலை நாடுகளில் சில வகை மீன்களைச் சாப்பிட வேண்டாம் என்று எச்சரிப்பர்.

 

பாதரஸத்தை இப்பொழுதும் மின்சாரக் கருவிகளில் பயன்படுத்துவர். ஆனால் புறச் சூழல் மாசு பற்றி விழிப்புணர்வு ஏற்பட்டவுடன் பாட்டரிகளில் அதைப் பயன்படுத்துவது குறைந்து விட்டது.

 

எகிப்தியர், கிரேக்கர், இந்தியர் ஆகியோருக்கு ஆதிகாலம் முதல் தெரிந்த ஒரு உலோகம் இது. எகிப்திய கல்லறையில் தேங்காய் வடிவ குடுவை கிடைத்தது. இது கி.மு 1600 ஆண்டில் செய்யப்பட்டது.

 

ஸ்பெயின் நாட்டில் பழங்கால குகை ஓவியங்களில் சின்னபார் (cinnabar) எனப்படும் மெக்யுரி சல்பைடை (Mercuric sulfide) பயன்படுத்தினர். இது 30,000 ஆண்டு பழமையுடைத்து.

தென் அமெரிக்க இன்கா நாகரீக மக்களும் இதை அறிந்து இருந்தனர். ஆகவே தங்கம் தாமிரம் இரும்பு போல பழங்கால மக்கள் அறிந்த உலோகம் பாதரஸம். ஆனால் இதை வைத்து தங்கம் உண்டாக்கும் முயற்சிகள் பொய்யாய்ப் பழங்கதையாய்ப் போயினவே!

 

-சுபம்-

ஹிட்லரின் சித்திரவதை முகாமில் புதிய உளவியல் சிகிச்சை முறை (Post No.5400)

WRITTEN BY S NAGARAJAN

Date: 7 SEPTEMBER 2018

 

Time uploaded in London – 6-04 AM (British Summer Time)

 

Post No. 5400

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

டைரக்டர் திரு கே.பாக்யராஜ் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் வார இதழ் பாக்யா. அதில் 7-9-2018 தேதியிட்ட இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (எட்டாம் ஆண்டு இருபத்தியேழாம்) கட்டுரை

 

ஹிட்லரின் சித்திரவதை முகாமில் புதிய உளவியல் சிகிச்சை முறையைக் கண்டுபிடித்தவர்!

ச.நாகராஜன்

 

 

வாழ்க்கையின் அர்த்தம் என்ன என்பதைக் கண்டு பிடிக்க முயன்று அதைப் பற்றிய உளவியல் ஆய்வில் ஈடுபட்டு பிரபலமான புத்தகத்தை எழுதியவர் விஞ்ஞானி விக்டர் ஃப்ராங்க். (Viktor Emil Frankl பிறப்பு 26-3-1905 மறைவு 2-9-1997) ஆஸ்திரியாவைச் சேர்ந்த யூதர் இவர்

ஆனால் அநியாயமாக ஹிட்லரின் சித்திரவதை முகாமிற்கு அனுப்பப்பட்ட லட்சக்கணக்கானோருள் இவரும் ஒருவர்.

இரண்டாம் உலக மகாயுத்தத்தின் போது போலந்தை திடீரென்று ஆக்கிரமித்த ஹிட்லர் அங்கு சித்திரவதை முகாம் ஒன்றை ஏற்பாடு செய்தான். இந்த முகாம் அஸ்விட்ஸ் சித்திரவதை முகாம் (Auschwitx Concentration Camp) என அழைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இரண்டாம் முகாம் ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டது. இதற்கு 45 துணை முகாம்கள் இருந்தன.

 

 

இந்த முகாம்களுக்கு சுமார் 13 லட்சம் பேர்கள் அனுப்பப்பட்டனர். அதில் 11 லட்சம் பேர்கள் கொல்லப்பட்டனர். 1940இல் மே மாதம் கைதிகள் இங்கு கொண்டு வருவது ஆரம்பிக்கப்பட்டது. ஏராளமான புகைவண்டிகள் இவர்களை ஏற்றி வந்தன. இவர்களில் 90 சதவிகிதம் பேர் யூதர்கள். செப்டம்பர் 1941இல் ஆரம்பித்து கூட்டம் கூட்டமாக கைதிகள் விஷவாயு சேம்பருக்குள் அனுப்பப்பட்டு கொல்லப்பட்டனர்.

 

 

செங்கல்லினால் ஆன கட்டிடம் ஒன்றில் அவர்களை அடைத்து காற்றுப் புகாதபடி ஜன்னலை மூடி விட்டு, சயனைடை அடிப்படையாகக் கொண்ட ஜிக்லான் பி (Zyklon B)  என்ற விஷ வாயுவை நிரப்பி இவர்கள் கொல்லப்பட்டனர். இது தவிர, பல்லாயிரம் பேர்கள் உணவின்றி வாடி இறந்தனர். பலர் முகாம்களின் மோசமான நிலையால் வியாதிகளால் பீடிக்கப்பட்டு இறந்தனர். இங்கிருந்து 802 கைதிகள் தப்ப முயன்றனர். ஆனால் வெற்றிகரமாகத் தப்பியவர்கள் 144 பேர்களே.

 

 

அவர்கள் மூலமாகத் தான் இந்தக் கொடூரமான சித்திரவதை முகாம் பற்றி உலகம் முழுமையாக அறிந்தது.

 

உலகப் போரின் இறுதிக் கட்டத்தில் சோவியத் படைகள் அஸ்விட்ஸை நெருங்கவே கைதிகளை போலந்தின் மேற்கே அனுப்பி அவர்களின் கடைசி யாத்திரையைத் தொடங்கி வைத்தது நாஜி ஜெர்மனி. எஞ்சி இருந்தோர் 1945 ஜனவரி 27ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டனர்.

இப்படி விடுதலையானவர்களில் ஒருவர் தான் விஞ்ஞானி விக்டர் ஃப்ராங்க்.

 

 

முதலில் வியன்னாவில் மன நல  மருத்துவராக ஒரு யூத ஆஸ்பத்திரியில் பணியாற்றி வந்தார் அவர். போர் மேகம் ஆஸ்திரியாவைச் சூழவே அமெரிக்கா தனது விசாவை வழங்கி அவரை அமெரிக்கா வருமாறு அழைத்தது. ஆனால் தனது வயதான பெற்றோரைக் கருத்தில் கொண்டு வியன்னாவிலேயே வசித்து வந்தார் அவர். திடீரென்று அவரையும் குடும்பத்தினரையும் கைது செய்தது நாஜிப் படை. குடும்பத்தினர் கொல்லப்பட்டனர்.

 

 

அவர் நான்கு சித்திரவதை முகாம்களுக்கு அனுப்பப்பட்டார். அவரது திறமையைக் கருத்தில் கொண்ட முகாம் அதிகாரிகள் அவரை கைதிகளுக்கு உளவியல் ரீதியாக ஆலோசனை சொல்லப் பணித்தனர். அங்கு ஏற்பட்ட அனுபவங்களின் விளைவாக அவர் பல புதிய உண்மைகளைக் கண்டார். அந்த உண்மைகளை இருபதாம் நூற்றாண்டின் பிரபலமான உளவியல் புத்தகமான ‘மேன்ஸ் செர்ச் ஃபார் மீனிங் (Man’ s Search for Meaning) என்ற புத்தகத்தில் வெளியிட்டார்.

முக்கியமாக தற்கொலைக்கு முயன்றவர்களை அழைத்து அவர்களுக்கு ஆலோசனை வழங்கி வாழ்க்கையின் அர்த்தத்தை உணர்த்துவதில அவர் வல்லவரானார்.

 

 

சித்திரவதை முகாமில் அவருக்கு அடுத்தாற்போல உட்கார்ந்திருந்த ஒரு கைதி வேடிக்கையாக அவரிடம், “இந்த நிலையில் நமது மனைவிமார் நம்மைப் பார்த்தால் என்ன ஆகும்? என்று சொல்லிச் சிரித்தார்.

உடனே ஃப்ராங்க் வானத்தை அண்ணாந்து பார்த்தார். அங்கு மேகக் கூட்டத்தில் அவரது அன்பு மனைவியின் முகம் கள்ளங்கபடமற்றுத் தெரியவே அவரது மனதில் ஒரு புது உத்வேகம் எழும்பியது.

‘உங்கள் அன்புக்குரிய மனைவியை அதிகம் நேசியுங்கள்; உங்களுக்கு வாழ்க்கையின் அர்த்தம் புரியும் என்கிறார் அவர்.

 

 

சித்திரவதை முகாம்களுக்கு வருவோர் பொதுவாக முதலில் எப்படியாவது யாராவது தம்மைக் காப்பாற்றி விடுவார்கள் என்ற நம்பிக்கையைக் கொண்டிருப்பர்.அடுத்த நிலையில் அது நடக்காது என்று தெரியும் போது உணர்ச்சி பூர்வமான மரணத்தை அடைகின்றனர். எப்படியோ உயிரோடிருந்தால் போதும் என்ற நிலை அது.நாளைக்கு மரணம் என்ற நிலையிலும் ஒரு துண்டு ரொட்டி இன்றைக்கு வேண்டும் என்ற அந்த நிலையைக் கடந்து மூன்றாம் நிலையில் விடுதலை என்ற நிலை ஏற்படும்.

 

 

இந்த மூன்று நிலைகளைக் கொண்ட முகாம் வாழ்வில் ஏற்படும் துன்பம் சொல்லவொண்ணாதது. அந்த துன்பத்தில் தான் தனது ஆராய்ச்சிக்கான விடையைக் கண்டார் ஃப்ராங்க்.

எவ்வளவு மோசமான நிலையிலும் கூட, சொல்லவொண்ணாத துன்பம் இருந்த போதும் கூட, உங்கள் அணுகு முறையை யாராலும் அடக்க முடியாது; அந்த அணுகுமுறை உங்களுக்குள்ள சுதந்திரம்; அதன் மூலம் வாழ்க்கையை முழுதுமாகப் புரிந்து கொள்ளலாம் என்கிறார் அவர்.

 

 

வாழ்க்கையின் அர்த்தம் என்ன என்று கேட்பதை விட வாழ்க்கை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணியும் நம்மை என்ன கேள்வி கேட்கிறது என்பதைச் சிந்தித்தாலேயே போதும் நம்முடைய வாழ்விற்கான அர்த்தம் புரிந்து விடும் என்பது அவரது சித்தாந்தம்.

சித்திரவதை முகாமிலிருந்து விடுதலை செய்யப்பட்ட பின்னர் வெற்றிகரமான உளவியல் நிபுணராக அவர் பல்லாண்டுகள் பணி புரிந்தார். லோகோதெராபி  (Logotherapy) என்ற புதிய உளவியல் சிகிச்சை முறையை அவர் கண்டுபிடித்தார்.

 

 

வாழ்வில் ஏற்படும் துன்பங்களால் மனம் கலங்க வேண்டாம். அந்தத் துன்பமான வாழ்க்கை உங்களை என்ன கேட்கிறது என்பதை சிந்தியுங்கள்; பிரச்சினைகளிலிருந்து உங்களின் அணுகுமுறையால் மீளலாம் என்பது தான் அவர் உலகினருக்குத் தரும் புதிய சித்தாந்தம்.

உலகின் மகா கொடூரமான சித்திரவதை முகாமில் என்னென்ன நடந்தது என்பதை நேரடியாகப் பார்த்து அனுபவித்த விஞ்ஞானி என்ற முறையில் ஃப்ராங்க் உளவியல் சிகிச்சை உலகில் தனி இடத்தைப் பெறுகிறார்.

 

 

துன்பம் கண்டு கலங்க வேண்டாம்; வாழ்வின் அர்த்தத்தை அதிலிருந்து பெற்று சீராக வாலாம் என்பது அனைவருக்கும் ஒரு ஆறுதலான செய்தி தானே!

 

 

 அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

ஆலிவர் சாக்ஸ் (Oliver Wolf Sacks பிறப்பு 9-6-1933 மறைவு 30-8-2015)    பிரிட்டனைச் சேர்ந்த பிரபலமான மூளை இயல் நிபுணர். அறிவியல் வரலாற்று ஆசிரியர். அவரது ‘அவேகனிங்ஸ் (Awakenings) என்ற புத்தகம் சுவையான சம்பவங்களை உள்ளடக்கிய நூல்.இதனால் உத்வேகம் பெற்ற பென்னி மார்ஷல் என்ற அமெரிக்க டைரக்டர் இதே பெயரில் இதை 1990இல் இதை திரைப்படமாகப் பிடித்தார்.

கதை இது தான்:-

முதல் உலக மகா யுத்தத்தைத் தொடர்ந்து ஒரு புது விதமான வியாதி ஆரம்பித்தது. உயிருடன் இருந்த போதும்  தங்களின் பிரக்ஞையை இழந்து தூங்கிக் கொண்டே பல ஆண்டுகள் நடைப்பிணமாக பலர் வாழ்ந்துவந்தனர். இதைப் போக்க எந்த மருந்தும் இல்லாத நிலையில் சாக்ஸ் எல் டோபா (L Dopa) என்ற மருந்தைக் கொடுத்து அவர்களின் வியாதியைப் போக்கினார். தூக்கத்திலிருந்து விழித்த அவர்கள் முழு சுய நினைவுடன் வாழ ஆரம்பித்தனர்.

இவரது பல புத்தகங்கள் நிஜ வாழ்க்கையில் நடந்த மிக மிகச் சுவையான சம்பவங்களை சித்தரிப்பதால் அவற்றில் பல திரைப்படங்களாகவும் குறும் படங்களாகவும், நாடகங்களாகவும் ஆக்கப்பட்டு பிரபலமடைந்துள்ளன. அவேகனிங்ஸ் மூன்று அகாடமி விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

‘விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியவர் என்று பல பேர்களைச் சொன்னாலும் இவருக்கு அது விசேஷமாகப் பொருந்துகிறது!

***

 

 

 

நியூட்டன், நெப்போலியன் தலை முடியில் (மயிரில்) பாதரஸம்! (Post No.5396)

Written by London Swaminathan

 

swami_48@yahoo.com

Date: 5 September 2018

 

Time uploaded in London – 10-15 am (British Summer Time)

 

Post No. 5396

 

நியூட்டன், நெப்போலியன் தலை முடியில் (மயிரில்) பாதரஸம்! (Post No.5396)

 

பாதரஸம் (Mercury) போல மனிதர்களைப் பைத்தியமாக்கிய ஒரு மூலகம் உலகில் இல்லை. ரஸவாத (alchemy) வித்தையில் மிகவும் பயன்பட்ட மூலகம். இரும்பையும் ஈயத்தையும் தங்கமாக்காலாம் என்று உலகம் முழுதும் ஆராயப்பட்ட மூலகம்.

 

இந்தப் பாதரஸம், மனிதன் இறந்த பின்னரும் முடியில், மயிரில் அப்படியே இருக்கும். அதன் மூலம் நாம் என்ன கண்டுபிடிக்கலாம்?

 

அவருக்கு காம சம்பந்தமான நோய்கள் இருந்து சிகிச்சை பெற்றது தெரியும்.

அல்லது

அல்லது அவர்கள் ஏதோ ரஸவாத (alchemy) ஆராய்ச்சியில் ஈடுபட்டனர் என்பது தெரியும்.

 

இதோ சுவையான ஆராய்ச்சியில் கிடைக்கும் சோகமான தகவல்கள்:-

 

மனிதனின் தலை முடியில் கந்தகம் இருக்கும் அமீனோ அமிலங்கள் உள. அவை மெர்குரி எனப்படும் பாதரஸத்தை ஈர்த்துக் கொள்ளும். இதனால் ஒருவர் எந்த அளவுக்கு மெர்க்யுரி (பாதரஸ) விஷத்தால் பாதிக்கப்பட்டார் என்று நிரந்தர ரிகார்ட் (பதிவுப் புஸ்தகம்) உண்டாகிவிடும்!

 

முன் காலத்தில் யாரேனும் ஒருவர் இறந்தால் அவர்களுடைய மயிர்க் கற்றையை எடுத்து பாதுகாத்து வைப்பர்.

 

(காஷ்மீரில் உள்ள பிரபல மசூதியில் முகமது நபியின் மயிர், காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளதையும் அதைத் தரிசிக்க ஆண்டுதோறும் பல்லாயிரக் கணக்கில் மக்கள் வருவதையும் முன்னரே ஒரு கட்டுரையில் எழுதி இருக்கிறேன்)

 

தற்காலக் கருவிகளைக் கொண்டு பிரபல தலைவர்கள், விஞ்ஞானிகளின் முடியை ஆராய்ந்ததில் பல முக்கிய விஷயங்கள் கிடைக்கின்றன. இதை மயிர் ‘விஷயம்’ என்று ஒதுக்கிவிடாமல் மயிர் ‘விஷம்’ என்று அதிசயிக்க வேண்டியுள்ளது.

காம சம்பந்தமான நோய்கள் ஜனன உறுப்புகளைத் தாக்கும் . அப்படித் தாக்கினால் கலோமெல் (calomel) என்ற  மருந்தைக் கொடுத்தனர் அந்தக் காலத்தில். இந்தப் பொடியில் மெர்குரி க்ளோரைட் முதலியன இருக்கும் . இது பூஞ்சக் காளான் முதலியவற்றை ஒழிக்கும்; நல்ல பேதி மருந்து.

 

மயிரிலுள்ள மெக்யுரி எனப்படும் பாதரஸம் இதன் காரணமாகவோ, அல்லது ஆராய்ச்சிசாலையில் பாத ரஸப் புகையை சுவாசித்ததாலோ வந்திருக்க வேண்டும்.

 

ஐஸக் நியூட்டன் (1642-1727) என்ற பிரபல பௌதீக (இயற்பியல்) விஞ்ஞானியின் முடியை ஆராய்ந்தனர். அவர் ஒரு பிரம்மாச்சாரி. ஆகவே அவர் செய்த ஆராய்ச்சியின் போது பாதரஸ ஆவி அவர் தலை முடிக்கு ஏறியிருக்கலாம் என்பது அறிஞர் பெருமக்களின் ஏகோபித்த கருத்து.

 

ராபர்ட் பர்ன்ஸ் (Robert Burns 1759- 1796) என்ற ஸ்காட்டிஷ் (ஸ்காட்லாந்து) புலவரின் முடியிலும் இப்படி பாதரஸம் இருந்தது. அவரது வாழ்வை ஆராய்ந்தோர், அவர் சிபிலிஸ் (syphilis) போன்ற காம நோக்கு சிகிச்சை பெற்றதால் மெர்க்யுரி தலைக்கு ஏறி விட்டது என்பது விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு.

 

 

நெப்போலியனை பிரிட்டிஷ்கார ர் கள் செயின்ட் ஹெலினா தீவில் சிறை வைத்த போது அவருக்கும் கலோமல் கொடுத்தது அவர் முடியிலிருந்து தெரிந்தது. ஆனால் அவர் இறந்ததற்குக் காரணம் ஆர்செனிக் (arsenic) விஷமாகும். பிரிட்டிஷார் அவரை விஷம் வைத்துக் கொன்றனர். அது தனிக் கதை.

 

அந்தக் காலத்தில் வேறு சில நோய்களுக்கும் பாதரஸ உப்புக்கள் கலந்த மருந்துகளைக் கொடுத்தனர். இதனால் நல்லோரும் கூட உயிர் இழந்தனர். டென்மார்க் நாட்டைச் சேர்ந்த புகழ் மிகு வானவியல் நிபுணர் டைகோ ப்ராஹியின் ((Tycho Brahe 1546-1601) கதை சோகக் கதை. அவருக்கு மூத்திரக் காயில் நோய். இதற்காக மருந்து கொடுத்து இருந்தனர். அவர் மறுநாளன்று பிராக் நகரில் ஒரு பெரிய விருந்து ஒன்றில் கலந்து கொள்ள வந்தார். அபோது சிறிநீர் கழிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. மன்னர் கொடுக்கும் விருந்திலிருந்து பாதியில் வெளியேறுவது முறையல்ல என்று கருதி மூத்திரத்தை அடக்கினார். இதனால் அவரது சிறுநீர்ப்பை பிய்ந்து போய் சில நாட்களில் உயிரிழந்தார். அவரது முடியை ஆராய்ந்தபோது அவருடைய உயிரைக் காப்பாற்ற அவருக்கு மெர்குரி கலந்த மருந்தது கொடுக்கப்பட்டது தெரிந்தது. ஆகவே முடியில் மெர்க்யுரி இருந்த எல்லோரும் காம நோயாளிகள் என்றும் கணக்குப் போட்டுவிடக்கூடாது.

 

இங்கிலாந்தின் மன்னர்களில் அபகீர்த்தி வாய்ந்தர் எட்டாம் ஹென்றி (1491-1547) மன்னர் ஆவார். அவருக்கு நிறைய மனைவிகள்; பிடிக்காத மனைவியருக்கு எல்லாம் மரண தண்டனை விதித்தவர். அவர் முடியிலும், ரஷ்யாவின் ஐவான் தி டெர்ரிபில் (Ivan the Terrible) முடியிலும் பாதரஸ அளவு அதிகம் இருப்பது அவர்களைக் காம நோயாளிகளின் பட்டியலில் சேர்க்கத் தூ ண்டுகிறது. இரண்டாவது சார்ல்ஸ் மெர்க்யுரி விஷத்தால் இறந்தது உறுதி செய்யப்பட்ட செய்தி! அவர் காமக் களியாட்டங்களிலும் ரஸவாத வித்தை ஆராய்ச்சிகளிலும் ஈடுபட்டவர். இந்த இரண்டில் ஏதோ ஒன்று அவர் முடியில் பாதரஸத்தை ஏற்றி இருக்கலாம் என்பது அறிஞர் பெருமக்களின் துணிபு.

-சுபம்–