உலகம் அழியுமா? அணு ஆயுதப் போர் மூளுமா? (Post No.3314)

WRITTEN BY S NAGARAJAN

 

Date: 3  November 2016

 

Time uploaded in London: 6-00 AM

 

Post No.3314

 

 

Pictures are taken from various sources; thanks.

 

 

28-10-2016 பாக்யா இதழில் வெளி வந்துள்ள கட்டுரை

உலக நடப்பு

 

உலகம் அழியுமா? அணு ஆயுதப் போர் மூளுமா?

ச.நாகராஜன்

சிரியாவில் நடக்கும் யுத்தம் காரணமாக அமெரிக்காவும் ரஷியாவும் ஒரு நிழல் யுத்தத்திற்குத் தயாராக ஆகிறதா?

 

இந்த சந்தேகத்தை எழுப்பும் விதமாக 2016 அக்டோபரில் ரஷிய ராணுவத்தின் அறிவிப்பையும் அதைத் தொடர்ந்து நடந்த பாதுகாப்பு ஒத்திகையையும் உலகப்  பத்திரிகைகள் சுட்டிக் காட்டுகின்றன.

 

 

40 மில்லியன் – 4 கோடி ரஷியர்கள் இந்த போர்க்கால்த் தற்காப்பு ஒத்திகையில் பங்கேற்றனர். அவசர நிலையைச் சமாளிக்கும் இரண்டு லட்சம் நிபுணர்களும்  ஐம்பதினாயிரம் தற்காப்புச் சாதனங்களை ஏந்தும் பிரிவுகளும் இந்த் அணு ஆயுதப் போர் தற்காப்பு ஒத்திகையில் பங்கேற்கும் என்றும் இது நான்கு நாட்கள் நீடிக்கும் என்றும் ரஷிய ராணுவ்ம் அறிவித்திருக்கிறது.

 

 

இது ஒரு ஒத்திகை தான் என்றும் ஜனங்கள் அவசரநிலைக்கு எப்படி ஈடு கொடுக்கிறார்கள் என்பதைக் கணிக்கவே இது நடைபெறுகிறது என்று சிவில் டிஃபன்ஸ் மினிஸ்ட்ரி டைரக்டர்  ஓலக் மனுலாவ் (Olec Manuilov) கூறி இருக்கிறார்.

 

அணு ஆயுதப் போர் ஒன்று மூண்டால் என்ன நடக்கும்?

உலகெங்கும் புகை மண்டலம் சூழும்.

புழுதியும் இடிபாடுகளும் பூமியின் ஸ்ட்ராடோஸ்பியரை மாசு படுத்தும்.

 

சூரிய ஒளியை பல மாதங்களுக்கு, ஏன் பல வருஷங்களுக்கு பூமியில் பார்க்க முடியாது. இந்த நிலைக்கு ந்யூக்ளியர் விண்டர் – அணுக் குளிர்காலம் –என்று பெயர்.

50 அணு ஆயுதங்கள் ஏவி விடப்பட்டாலே போதும், உலகம் அவ்வளவு தான்!

 

ஒரு கிலோ டன் அணு வெடிப்பு என்பது ஆயிரம் டன்கள் டிஎன் டி வெடிப்புக்குச் சமம். ஹிரோஷிமா நாகசாகியில் ஏற்பட்ட அழிவை வைத்துக் கணக்கிட்டுப் பார்க்கையில் பல கோடி மனிதர்கள் அழிய நேரிடும்.

 

 

முதலில் அனைவருக்கும் பார்வை போய் விடும். மிருகங்கள் பறவைகள் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களும் பார்வையை இழக்க நேரிடும்.இது அணு ஆயுத வெடிப்பினால் உருவாகும் நைட்ரஜன் ஆக்ஸைடினால் ஏற்படும்.

 

தாவரங்கள் அழுகி விடும். உணவு நாசமடையும்.

உயிரோடிருப்பவர்கள் கறுப்புக் கண்ணாடியை அணிந்து கொண்டும் விசேஷ தடுப்பு உடைகளை அணிந்து கொண்டும் தான் பல வருடங்கள் உயிர் வாழ வேண்டியிருக்கும்! ஆனால் உயிரோடிருப்பது என்பதே பெரிய கொடுமையாக இருக்கும்

 

 

100 மெகா டன் பயன்படுத்தப்பட்டாலோ பூமியே உறைந்து போகும். மொத்த உயிரினமும் முடிவுக்கு வரும்!

இதெல்லாம் அனைவருக்கும் தெரியும்.

1982இல் நடந்த சம்பவம் இது!

 

அமெரிக்காவைக் கண்காணித்துக் கொண்டிருந்த ரஷியர் ஒருவர் திகைத்து விட்டார்.

ஏனெனில் ஐந்து அணு ஆயுதங்கள் அமெரிக்காவினால் ஏவப்பட்டிருப்பதாக அவர் முன்னால் இருந்த் கண்காணிப்புத் திரை காண்பித்தது,

 

பதிலுக்கு உடனுக்குடன் அவரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆனால் அவர் சற்றுத் தயங்கினார். இது சரிதானா என்று சரிபார்க்க வேண்டும் என்று ஒரு கணம் அவர் நினைத்தார்.

உலகமே பிழைத்தது. மெக்கானிகல் எர்ரர் எனப்படும் இயந்திரக் கோளாறு தான் அப்படி ஒரு தவறான தகவலைத் திரையில் காட்டி இருந்தது.

 

ஒவ்வொரு கணமும் மனித குலம் செத்துப் பிழைக்கும் நிலைக்குக் காரண்மான அணு ஆயுதங்களை அறவே ஒழிக்க உலகத் தலைவர்கள்  ஒன்று கூடி நடவடிக்கை எடுத்தால் இப்படிப் பயப்பட வேண்டிய அவசியம் இருக்காது.

இன்னொரு மஹாத்மா பிறப்பாரா? அஹிம்சை வழியை மீண்டும் காண்பிப்பாரா?

 

வருவார் காந்திஜி! எதிர்பார்ப்போம், பிரார்த்திப்போம்!!

************

 

இக்நோபல் பரிசு பெற்ற மேதைகள்! – 3 (Post No.3308)

Written by S. NAGARAJAN

 

Date: 1 November 2016

 

Time uploaded in London: 6-29 AM

 

Post No.3308

 

Pictures are taken from various sources; thanks. Pictures are representational; may not have direct connection to the article below.

 

Contact :– swami_48@yahoo.com

 

பாக்யா இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை

இந்த ஆண்டு இக்நோபல் பரிசு பெற்ற மேதைகள்! – 3

 

பேச்சினால் பிரமிக்க வைக்கும் அமைதிப் புறாக்கள்

அமைதிக்கான இந்த ஆண்டின் இக்நோபல் பரிசு ஐந்து பேருக்குப் பகிர்ந்து அளிக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் செய்த ஆராய்ச்சி? அர்த்தமற்ற பிரம்மாண்டமான சிக்கலான வார்த்தைகளைத் தொகுத்துப் பேசி கேட்பவர்களை பிரமிப்பில் ஆழ்த்துவதற்காக இந்தப் பரிசு தரப்பட்டுள்ளது. உண்மையில் ஆராயப் போனால் அந்த வார்த்தைகளுக்கு அர்த்தேமே இருக்காது. (என்னங்க, அப்ப நம்ம அரசியல்வாதிகள் அனைவருக்குமே இந்தப் பரிசைத் தந்துடலாமே என்று கமெண்ட் அடிக்காதீங்க, ப்ளீஸ்!)

“Wholeness quiets infinite phenomena” என்பது கேட்க நன்றாக இருக்கிறது. ஆனால் இதன் அர்த்தம் என்ன? யாருக்கும் புரியாது.

இந்தப் பரிசைப் பெற்றவர்கள் கார்டன் பென்னிகுக், ஜேம்ஸ் ஆலன் செய்ன், நதானியேல் பார், டெரக் கோஹ்லர் மற்றும் ஜொனாதன் ஃப்யூஜெட்சாங். ஆகியோர்!

அமைதிப் புறாக்களே வாழ்த்துக்கள்!

 

 

ஈக்களை ஆராய்ந்து மகிழ்ந்தவர்

இலக்கியத்திற்கான இந்த ஆண்டின் இக்நோபல் பரிசு ஃப்ரெடெரிக் ஜோபெர்க்கிற்கு அளிக்கப்படுகிறது. அவரது இலக்கிய சாதனை?

செத்துப் போன ஈக்களையும் உயிருடன் இருக்கும் ஈக்களையும் ஆராய்ந்து மூன்று தொகுதிகள் அடங்கிய ஒரு சுயசரிதத்தை அவர் வெளியிட்டுள்ளார்! ‘தி ஃப்ளை ட்ராப் என்ற முதல் தொகுதியுடன் அடுத்த இரு இரு தொகுதிகளும் ஆங்கிலத்தில் வரவுள்ளன.

 

மறக்காமல் படியுங்கள்!

2016க்கான பரிசு மேதைகளைப் பற்றி அறியும் போது அதில் இந்தியர் பெயர் ஒருவரையும் காணோமே என்று வருத்தப்பட வேண்டாம்.

இதோ ஏற்கனவே இக்நோபல் பெற்ற இந்திய மேதைகளில் சிலர்:

பொருளாதார அழிவிலிருந்து உலகத்தைக் காப்பது எப்படி? இதற்கான பரிசைப் பெற்றவர் ரவி  பத்ரா. அவரது ‘க்ரேட் டெப்ரஷன் ஆஃப் இந்தியா இன் 1990 என்ற புத்தகத்திற்காக இந்தப் பரிசு வழங்கப்பட்டது. பின்னால் தான் 1990இல் இந்தியாவில் பெரும் பொருளாதார வீழ்ச்சி ஏற்படவில்லை என்பது தெரிந்தது!

 

கணிதத்திற்கான 2002ஆம் ஆண்டு பரிசைப் பெற்றவர்கள் கேரள பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த  கேபி ஸ்ரீகுமார் மற்றும் ஜி.நிர்மலன். இவர்களது அரிய கணித சாதனை? ஒரு யானையின் மேல்பரப்பை துல்லியமாக எப்படி அளப்பது என்பது தான்!இதற்காக ஆய்வாளர்கள் யானைகளின் எல்லா சைஸ்களையும் தேடிக் கண்டுபிடித்து ஆராய்ந்தனர். காட்டில் ஆரம்பித்து ஜெமினி சர்க்கஸ் வரை பல்வேறு  இடங்களுக்கும் அவர்கள் சென்றனர். பின்னர் பிரமாதமான ஸ்ரீகுமார்  நிர்மலன் சூத்திரத்தை அவர்கள் கண்டு பிடித்தனர்.

ஃபார்முலா இது தான்: .8245+ 6.807H + 7.073FFC

 

மயிர்க்கூச்செறியும் ஆபத்திலிருந்து அவர்கள் பிழைத்த சம்பவமும் உண்டு. ஒரு யானைக்குக் கோபம் வந்து ஆய்வாளரின் காலை மிதிக்க தான் காலைத் தூக்கியது. தக்க சமயத்தில் ஆய்வாளர் காலை இழுத்துக் கொள்ளவே அவர் காலின்  முன்பக்கத்தில் மட்டும் யானையின் கால் பதிந்தது. ஷூவை அவிழ்த்துப் போட்டு ஓடிப் போனார் அவர். உயிர் பிழைத்தது பிள்ளையாரின் அருள்! எல்லாம் யானை சூத்திரத்தின் மஹிமையே!

 

கௌரி நந்தா எம் ஐ டியில் படிக்கும் மாணவர்.2005ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான இக்நோபல் பரிசை இவர் பெற்றார்.

காரணம் காலையில் நீங்கள் எழுந்திருக்க வேண்டிய நேரத்தில் அலாரத்தை செட் செய்து விட்டு நீங்கள் படுக்கப் போய் விடுவீர்கள். இவர் கண்டு பிடித்த கடிகாரம் சரியான நேரத்தில் உரக்க அலாரம் சப்தத்தை அலறச் செய்தவாறே ஓடி ஒளிந்து கொள்ளும். வேறு வழியே இல்லை, அலாரத்தைத் தேடிக் கண்டுபிடித்து அதை ஆஃப் செய்ய வேண்டும். அதற்குள் தூக்கம் கலைந்து விடும், இல்லையா! அடடா, எத்தனை ஆயிரம் மணித்துளிகள் இதனால் உலகில் சேமிக்கப்பட்டிருக்கிறது தெரியுமா! பெண்மணியின் மணியான  மணி காட்டும் கடிகாரத்திற்கு ஒரு டிர்ரிங்ங்ங்ங்…..

 

கால்களுக்கு இடையே பார்ப்பவர்

அட்சுகி ஹிகஷியாமா மற்றும் கோஹெல் அடாச்சி ஒரு பொருளை நீங்கள் வளைந்து நின்று உங்கள் கால்களுக்கு இடையே அதைப் பார்த்தால் அது வேறு விதமாகத் தோன்றுகிறதா என்பதை ஆராய்ந்தனர். விஷன் ரிஸர்ச் என்ற இதழில் 2006இல் இவர்களது ஆய்வு பிரசுரிக்கப்பட்டிருந்தது.

தலை வளைந்து பார்க்கும் போது பார்க்கும் காட்சிகள் அனைத்தும் தெளிவாகவும் பிரகாசமாகவும் தெரிகின்றன என்பது இவர்களின் ஆய்வு முடிவு! ஆகவே அடுத்த முறை யாரையாவது அல்லது எந்தக் காட்சியையாவது நீங்கள் பார்க்கும் போது….!!

 

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். இதைப் படித்து உத்வேகம் பெறும் நேயர்களே, இனி நீங்கள் பெறப் போகும் உங்களது இக்நோபல் பரிசுக்கு எங்கள் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

பிரபல இத்தாலிய மேதையான பிபனோசி தன் பெயரால் பிபனோசி எண் தொடர் என்ற மாபெரும் கண்டுபிடிப்பைச் செயதவர். கணிதத்தில் அவர் பெரிய மேதை என்பதை வாழ்நாள் முழுவதும் அவர் நிரூபித்துக் கொண்டே இருந்தார். அவர் போட்ட புதிர் கணிதம் இது.

மிகக் கஷ்டமான இந்தப் புதிரை விடுவிப்பது எளிதில்லை.

கணிதப் புதிர் இது தான்:

ஏழு வாசல் கதவுகள் கொண்ட ஒரு ஆப்பிள் தோட்டத்திற்குள் சென்ற ஒருவன் நிறைய ஆப்பிள்களைப் பறித்தான். அவன் தோட்டத்தை விட்டு வெளியே வரும் போது முதல் வாசலில் இருந்த காவலாளிக்கு ஆப்பிள்களில் பாதியையும் கூட கொசுறாக இன்னும் ஒரு ஆப்பிளையும் தந்தான். அடுத்த வாசலில் இருந்த காவலாளிக்கு தன் கையில் மீதமிருந்த ஆப்பிள்களில் பாதியையும் கொசுறாக கூட ஒரு ஆப்பிளையும் தந்தான். அடுத்த வாசலில் இருந்த காவலாளிக்கு மீதம் தன் கையிலிருந்த ஆப்பிள்களில் பாதியையும் கொசுறாக இன்னும் ஒரு ஆப்பிளையும் தந்தான். இதே போல மீதமிருந்த வாசல்களிலும் தன் கையில் இருந்தவற்றில் பாதியையும் கூட் ஒரு ஆப்பிளையும் தந்து  கொண்டே வந்தான். ஏழாவது வாசலிலிருந்து அவன் தோட்டத்தை விட்டு வெளியேறிய போது மீதமாக அவன் கையில் இருந்தது ஒரே ஒரு ஆப்பிள் தான்.

 

இப்போது கேள்வி இது தான்:- அவன் பறித்த மொத்த ஆப்பிள்கள் எவ்வளவு?

விடை : – 382 (அவன் ஒவ்வொரு வாசலிலும் கொடுத்த  ஆப்பிள்கள் முறையே 192,96,48,24,12,6,3. கையில் மீதம் இருந்தது ஒன்று. (இதில் உள்ள எண் விசித்திரங்களை கவனித்தால் ஒவ்வொன்றும் முன் கொடுத்ததில் பாதியாக் இருப்பது புலப்படும்!)

************

 

இந்த ஆண்டு இக்நோபல் பரிசு பெற்ற மேதைகள்! –2 (Post No.3283)

2016ignobelprize-fea-685x349

Written by S. NAGARAJAN

Date: 24 October 2016

Time uploaded in London: 9-34 AM

Post No.3283

Pictures are taken from various sources; thanks.

 

Contact :– swami_48@yahoo.com

 

 

பாக்யா 21-10-2016 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் 299வது அத்தியாயமாகப் பிரசுரிக்கப்பட்டுள்ள கட்டுரை

இந்த ஆண்டு இக்நோபல் பரிசு பெற்ற மேதைகள்! – 2

 

கார்களிலிருந்து வெளியேறும் புகையைச் சமாளித்தல்

இரசாயனத்திற்கான இந்த ஆண்டின் இக்நோபல் பரிசு பிரபல கார் உற்பத்தி நிறுவனமான வோல்ஸ்வேகனுக்கு அளிக்கப்படுகிறது. இது  காரிலிருந்து வெளியேறும் புகையைக் குறைத்த விதமே அலாதி தான்! கார்கள் சோதனை செய்யப்படும் போது ஆடோமேடிக்காக குறைந்த புகையே வெளியேறுவது போலக் காட்டும் வண்ணம் அது கார்களை வடிவமைத்தது! இந்த அபாரமான சாதனைக்காகத் தான் அதற்கு இந்தப்  பரிசு. இந்த மோசடியில் வோல்ஸ்வாகன் 14.7 பில்லியன் டாலர்களை (அதாவது 1470 கோடி டாலர்கள்) நஷ்ட ஈட்டுத் தொகையாக இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தருவதாக ஒத்துக் கொண்டதால் மனம மகிழ்ந்து இக்நோப்ல பரிசு வழங்கப்படுகிறது! ஒரு மென்பொருளை காரினுள் நிறுவி இந்த மோசடியை வோல்ஸ்வேகன் நிறுவனம் செய்திருந்தது. சட்டம் அனுமதிக்கப்படும் புகை அளவையே அந்த  மென்பொருள் சோதனையின் போது காட்டும். இதை நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை வெளிச்சம் போட்டுக் காட்டி விட்டது. இதனால் அபராதத் தொகையை வேறு வோல்ஸ்வேகன் கட்ட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.

 itch

சொறிதலுக்கு ஒரு பரிசு

மருத்துவத்திற்கான இக்நோபல பரிசு ஜெர்மனியில் உள்ள ஐந்து விஞ்ஞானிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது. அரிப்பு ஏற்பட்ட போது சொறிதலுக்கான் அதிசய ஆராய்ச்சிக்காக அவர்களுக்கு இந்தப் பரிசு வழங்கப்படுகிறது. PLOS ONE – ப்ளாஸ் ஒன் என்ற பத்திரிகையில் 2013ஆம் ஆண்டு அவர்கள் தங்கள் ஆராய்ச்சி முடிவை வெளியிட்டிருந்தனர். ஒரு மனிதனுக்கு இடது கையில் முன் பக்கம் அரிப்பு ஏற்பட்டால அவர் கண்ணாடி முன்னே நின்று கொண்டு தங்களது வலது கை  முன் பக்கத்தில் அதே இடத்தில் சொறிந்து கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட “கண்ணாடி பிரதிபலிப்பு சொறிதலானது; சில தோல் வியாதிகள் கொண்டவர்களுக்கு சொறிய வேண்டும் என்ற அரிப்பு உணர்ச்சியை அறவே நீக்குமாம். இது தான் அவர்களது கண்டு பிடிப்பு! இந்த அபாரமான ஆராய்ச்சிக்காக இக்நோபல் பரிசைப் பெற்ற விஞ்ஞானிகள் கிறிஸ்தோப் ஹெல்ம்சென், கரினா பால்மெர், தாமஸ் எஃப் முண்டே, சில்க் ஆண்டர்ஸ் மற்றும் ஆண்ட்ரியாஸ் ஸொரெஞ்சர் ஆவர். (Christoph Helmchen, Carina Palzer, Thomas F.Munte, Silke Anders, Andreas Sprenger)

 

பொய் சொல்வதில் நிபுணத்வம்

உளவியலுக்கான பரிசு ஐந்து ஆய்வாளர்களுக்கு – எவ்லீன் டெப்பி, மார்டென் டி ஷ்ரிவெர், கார்டன் லோகன், க்ரிஸ்டினா சுஷோட்ஸ்கி மற்றும் ப்ரூனோ வெர்ஷுர் (Evelyne Debey, Maarten De Schryver, Gordon Logan, Kristina Suchotzki, Bruno Verschuere)  ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆறிலிருந்து 77 வயதான ஆயிரம் பொய்யர்களை எவ்வளவு அதிகம் அவர்கள் பொய் சொன்னார்கள் என்று இவர்கள் ஆராய்ந்தனர். அவர்களின் பதிலைக் கேட்டறிந்த ஆய்வாளர்கள் இதில் உண்மையைத் தான் அவர்கள் சொல்கிறார்களா என்று முதலில் ஆராய வேண்டியிருந்தது.

 

எவ்வளவு அடிக்கடி பொய் சொல்கிறார்கள், அதில் அவர்களது நிபுணத்வம் எப்படி இருக்கிறது என்பதை ஆராய்வதே ஆய்வின் நோக்கம். இதிலிருந்து அவர்களின் பொய் சொல்லும் நடத்தையையும் வயது மாற மாற இதில் எற்படும் மாறுபாட்டையும் ஆய்வு செய்ய வேண்டியிருந்தது. குழந்தையாக இருந்த போது ஆரம்பித்த பொய் சொல்லும் பழக்கம் வளர்ச்சி அடைந்து இளவயதில் அபாரமாக முன்னேறிப் பின்னர்  மிகவும் மோசமடைந்தது. அதே போல பொய் சொல்லும் எண்ணிக்கை அளவும் குழந்தையாக இருந்த போது ஆர்ம்பித்து வளர்ச்சி அடைந்து இள வயதில் முன்னேறி பின்னர் சற்று குறைந்தது.

இதை 2015ஆம் ஆண்டில் அவர்கள் ஆக்டா சைகோலாஜிகா (Acta Psychologica) என்ற பத்திரிகையில் வெளியிட்டனர்.

இந்த அரிய ஆராய்ச்சிக்காக அவர்களுக்கு உளவியல் பரிசு வழங்கியது பொருத்தம் தானே!

 ig-nobels-jpg-size-custom-crop-850x546

மிருகங்களாக மாறி ஆராய்ந்தவர்கள்!

 உயிரியலில் இக்நோபல் பரிசைப் பெறுவபர்கள் சார்லஸ் ஃபாஸ்டர் (Charles Foster) மற்றும் தாமஸ் த்வைட்ஸ் (Thomas Thwaites) ஆகிய இரு விஞ்ஞானிகள் ஆவர். இவர்களில் சார்லஸ் காடுகளில் வெவ்வேறு கால கட்டங்களில்  பூமியில் வாழும் பாலூட்டி இனங்களில் ஒன்றான பேட்ஜர், மான், நரி, பறவை போல எல்லாம் தானே மாறி அவைகளுடன் வாழ்ந்து ஆராய்ந்தவர். தாமஸ் ஒரு வெள்ளாடு போல செயற்கை அவயவங்களுடன் வெள்ளாடாக மாறி ஆல்ப்ஸ் மலையில் வெள்ளாட்டுக் கூட்டத்தில் வாழ்ந்து பார்த்தவர். ஆடுகள் எப்படி மலைகளில் மேய்ந்து உணவைத் தின்னுமோ அது போலவே ஒரு செயற்கை வயிறை உருவாக்கிக் கட்டிக் கொண்டு அதில் புல் போன்ற உணவு வகைகளை உண்டு ஆராய்ந்தார். ‘கோட் மேன் – ஹௌ ஐ டுக் எ ஹாலிடே ஃப்ரம் பீயிங் ஹ்யூமன் (Goat Man – How I Took a Holiday from Being Human)  என்ற புத்தகத்தில் தனது அனுபவங்களை இவர் விவரித்துள்ளார்.

 

சார்லஸும், ‘பீயிங் எ பீஸ்ட் (Being a Beast)  என்ற புத்தகத்தில் தனது அனுபவங்களை விவரித்துள்ளார்.பேட்ஜர் மிருகமாக மாறி வெல்ஷ் மலையில் புழுக்களை உண்டு தான் வாழ்ந்த விதத்தையும்  நீரில் நீந்தி மீன்களை லபக்கென்று வாயால் கவ்வியதையும்  அவர் விவரிக்கும் விதம் ருசிகரமானது.

ஆக வித்தியாசமான இந்த மிருகங்களுக்கு – மன்னிக்கவும் – மிருக ஆராய்ச்சியாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது நியாயம் தானே!

 

 a-graham-bell

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

பிரபல விஞ்ஞானியான அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் (AlexanderGrahamBell) த்னது 29ஆம்  வயதிலேயே டெலிபோனைக் கண்டு பிடித்தார். அதனால் மிகவும் புகழ பெற்றதோடு பெரிய பணக்காரராகவும் ஆனார். புதுப் புது யோசனைகள் தோன்றவே வாழ்நாள் இறுதி வரை எதையாவது கண்டு பிடித்த வண்ணம் இருந்தார். அவருக்கு வானில் பறக்கும் விமானம் ஒன்றைக் கட்ட வேண்டும் என்ற ஆசை தோன்றவே அயிரத்தி எண்ணூற்று எண்பதுகளில் சிலரின் துணையோடு ஒரு விமானத்தைக் கட்டலானார். பெரிய பட்டம் போன்ற அமைப்பை உடைய அவரது விமானம் ஒரு மோட்டார் மற்றும் ஒரு பைலட்டைத் தாங்கிச் செல்லக் கூடிய வகையில் வடிவமைப்பைக் கொண்டிருந்தது. ஒரு மலை உச்சியில் தன் ‘பட்ட விமானத்தை வைத்துக் கொண்டு நல்ல காற்றுக்காகக் காத்திருப்பது அவர் வழக்கம். பல வாரங்கள் இப்படிக் காத்திருக்க வேண்டியிருக்கும் மலையின் அடிவாரத்தில் ஒரு கோபுரம் ஒன்றை அவர் கட்டினார். அவரது தந்தையார் அதில் அமர்ந்து தனது மகன் விமானத்தில் பறப்பதைப் பார்க்க வசதியாக இருக்கும் படி அது கட்டப்பட்டது.

 

1907ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் க்ரஹாம் பெல்லின் பட்டம் போன்ற விமானம் ஒன்று 168 அடி உயரம் பறந்தது. பின்னர் கடலில் விழுந்தது. அதில் இருந்த  பைலட் நீந்தி ஒருவாறு க்ரை சேர்ந்தார். பெல்லினால் விமானத்தை நீடித்துப் பறக்கச் செய்ய முடியவில்லை என்றாலும் அமெரிக்க விமான இயல் துறைக்கு அவரது பங்களிப்பு மகத்தானது. 1922ஆம் ஆண்டு அவர் இறந்த போது அவர் கட்டிய கோபுரத்தின் அடியிலேயே அவர் உடல் புதைக்கப்பட்டது.

*****

 

 

நூலகத்தின் மாண்பு (Post No.3272)

 

dave-isay

Picture: Dave Isay and his book

Written by S. NAGARAJAN

Date: 21 October 2016

Time uploaded in London: 5-02 AM

Post No.3272

Pictures are taken from various sources; thanks

 

Contact :– swami_48@yahoo.com 

 

பாக்யா 21-10-2016 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

நூலகத்தின் மாண்பு

 

By ச.நாகராஜன்

இணைய தளத்தில் ஆயிரக்கணக்கான ப்ளாக்குகள் மற்றும் தளங்கள்! ‘Brain pickings.org’ – ‘ப்ரெய்ன் பிக்கிங்ஸ்.ஓஆர்ஜி என்ற தளத்தில் அருமையான புத்தகங்களைப் பற்றிய அரிய தகவல்கள் தரப்படுகிறது. சற்று வித்தியாசமான புத்தகங்கள்! அறிவுஜீவிகள் விரும்பக்கூடியவை. இணையதள இணணப்பு இருந்தால் வாராவாரம் உங்கள் இல்லம் தேடி வரும்.. சந்தா இலவசம். 2016, அக்டோபர் 6 தேதியிட்ட இதழில் வந்துள்ள புத்தகங்களில் ஒன்றே ஒன்றை (Callings : The Purpose and Passion of Work  என்ற நூல்) இங்கு பார்ப்போம்:

 

 

அமெரிக்காவின் பூர்வ குடிகளில் ஒரு எளிய விவசாயியின் குடும்பத்தைச் சேர்ந்த சிறுமி தான் ஸ்டார்ம் ரேயஸ். வயலில் கடுமையாக இடையறாது உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும். வாழ்வே அது தான்! தாயும் தகப்பனும் சாராயத்தில் திளைப்பவர்கள். வீட்டில் அடி, உதை, திட்டு, ஆவேசமான சண்டைகள்.. ரேயஸ் சைக்கிளை ஓட்டக் கற்றுக் கொள்ளும் முன்னரே கத்தியைக் கையில் பிடித்துக் கொண்டு சண்டை போடக் கற்றுக் கொண்டாள்.

 

purpose-passion-of-work

வயிறு பசித்தால் உணவு, வயல்வெளியில் வேலை, நடுநடுவே சண்டைகள்… இது தான் வாழ்க்கையா?!

 

அவளுக்கு பன்னிரெண்டு வயது ஆன போது புத்தகங்களைச் சுமந்து கொண்டு வரும் வேன் ஒன்று – புக் மொபைல் – அவள் இருக்குமிடம் வந்து ஒரு போர்வையையும் கொஞ்சம் உணவையும் தந்தது.

 

ரேயஸ் நைஸாக வேனுக்குள் எட்டிப் பார்த்தாள். புத்தகம், புத்தகம், புத்தகம்!

 

கனமான புத்தகத்தை எடுத்துச் செல்ல அவள் அனுமதிக்கப்பட்டதே இல்லை. தூக்கிச் செல்ல நிறைய இருக்கும் போது படிக்க புத்தகம் ஒரு கேடா?

 

ரேயஸ் மெதுவாக் விரக்தியுடன் நகர்ந்தாள். வேனில் இருந்த ஒருவர் அவளைக் கைதட்டி அழைத்தார்.

 

“இதோ, புத்தகங்கள். இதில் எது வேண்டுமானாலும் நீ எடுத்துக் கொண்டு போகலாம்”

 

ரேயஸுக்கு சந்தேகம். இதில் ஏதோ இருக்கிறது. சும்மா புத்தகத்தைத் தருவார்களா, என்ன!

 

“இதை எடுத்துக் கொண்டு போக நான் என்ன தர வேண்டும்?”

“ஒன்றும் தர வேண்டாம். பதினைந்து நாட்கள் கழித்து புத்தகத்தைப் பத்திரமாகத் திருப்பித் தர வேண்டும்.அவ்வளவு தான்”

 

 

ரேயஸால் நம்பமுடியவில்லை. அருகிலுள்ள மவுண்ட் ரெய்னர் என்ற எரிமலை வெடிக்கப் போகிறது என்று அடிக்கடி பேச்சு எழும்பும்.

 

ரேயஸ் கேட்டாள்: “எனக்கு எரிமலையைப் பற்றித் தெரிந்து கொள்ள ஆசை. புத்தகம் இருக்கிறதா?”

“ஓ, இதோ எரிமலையைப் பற்றிய புத்தகம். எந்த ஒரு விஷயத்தைப் பற்றி மிக நன்கு அறிந்து கொண்டாலும் பயம் போய்விடும், தெரியுமா” – புத்தகத்தைத் தந்தவர் சொன்னார்.

டைனோஸரைப் பற்றிய புத்தக்ம் ஒன்றையும் சேர்த்து எடுத்துக் கொண்டாள் ரேயஸ்.

 

அவளுக்குப் பதினைந்து வயது ஆன போது அவள் படித்த புத்தகங்கள் ஏராள்மாகி விட்டன.

 

தன் வயல்வெளி, வீடு தவிர அற்புதமான வெளி உலகம் ஒன்று இருக்கிறது என்பதை ரேயஸ் நன்கு உணர்ந்து கொண்டாள். பள்ளிப் படிப்பு முடிந்தவுடன் ரேயஸ் ஸ்டெனோகிராபர் டிகிரியும் வாங்கினாள்.  பியர்ஸ் கண்ட் லைபரரியில் ஒரு நூலகர் வேலை காலியாக இருக்கிறது என்று அவள் கேள்விப்பட்டாள். அதற்கு விண்ணப்பிக்க வேலை கிடைத்தது.

 

அடுத்த 32 ஆண்டுகள் நூலகத்தில் பணியாற்றிய ரேயஸ் ஆயிரக்கணக்கானோரைப் படிப்பதற்கு ஊக்கப்படுத்தினாள். அவர்களின் வாழ்வையே மாற்றினாள்.

 

ஆமாம், அவள் கண்டு கொண்ட புதிய உண்மை, நூலகம் வாழ்க்கையைக் காப்பாற்றுகிறது.

 

ரேயஸ் தன் அற்புதமான வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் அனிமேஷன் படம் ஒன்றும் தயாரிக்கப்பட்டுள்ளது.

 

ஆம், Libraries Save Lives!!

 

–SUBHAM–

 

 

பருப்பு இல்லாத கல்யாணமா? பட்டாசு இல்லாத தீபாவளியா? (Post No.3270)

bob-diwali

Written by London Swaminathan

 

Date: 20 October 2016

 

Time uploaded in London: 6-21

 

Post No.3270

 

Pictures are taken from Wikipedia and other sources; thanks. (Picture is used only for representational purpose; no connection with the current article.)

 

Contact swami_48@yahoo.com

deepavali-israel

காலையில் பத்திரிக்கையில் ஒரு புகைப்படம் பார்த்தேன். சில அப்பாவிப் பள்ளிக்கூட பெண்கள் கைகளில் சில அட்டைகள். அதில் “பட்டாசு வேண்டாம், புறச்சூழலைப் பாதுகாக்கும் தீபாவளியைக் கொண்டாடுவோம்! பச்சை நிற தீபாவளியைக் கொண்டாடுங்கள் “என்றெல்லாம் எழுதப் பட்டிருந்தது. உடனே சில எண்ணங்கள் மனதில் எழுந்தன. இது சரியான அணுகு முறை அல்ல. பருப்பு இல்லாத கல்யாண சாப்பாடு எப்படி இல்லையோ அப்படி பட்டாசு இல்லாத தீபாவளி சோபிக்காது!

 

காரணம் ?

தீபாவளிப் பட்டாசு தொழிலில் முன்னனியில் நிற்கும் மாநிலம் தமிழ் நாடு. வறண்ட சிவகாசி, ராமநாதபுரம் கோவில்பட்டி பகுதிகளில் மிளகாய் வற்றல் காயப்போடுதல், பட்டாசு செய்தல், தீப்பெட்டி செய்தல் முதலிய தொழில்கள் மட்டுமே செய்ய முடியும். தண்ணீர் என்பது அபூர்வமான பொருள். சூரிய ஒளிதான் செல்வம். அவர்கள் வயிற்றில் அடிக்கக்கூடாது. மேலும் எதிர்காலத்தில், நா ம் பட்டாசு செய்யாமல் போனால் அந்த இடத்தை சீனப் பட்டாசுகள் நிறைவு செய்யும் அபாயம் உள்ளது.

 

ஒருகாலத்தில் களி மண்ணில் பிள்ளையார் செய்து ஆற்றில் கரைத்தோம்; இப்பொழுது கலர் பிள்ளையார், பெரிய பிள்ளையார் செய்யக்கூடாதென்றால் அதில் நியாயம் இருக்கலாம். ஆனால் பட்டாசே இல்லாமல் தீபாவளி வேண்டும் என்பதற்குப் பதிலாக நிதானத்தைக் கடைப்பிடிக்கும் விழிப்புணர்வை உண்டாக்கலாம். இரவு 11 மணிக்கு மேலாக சத்தம் கொடுக்கும் வெடிகளை வெடிக்காதீர்கள் என்று கேட்கலாம். அதுவும் இந்துக்களே முடிவு செய்ய வேண்டும். கோர்ட்டோ அரசாங்கமோ இதில் தலை இடக்கூடாது.

 

சர்ச்சுகளில் மெழுகுவர்த்திகள் ஏற்றுகின்றனர். பலருடைய

பகுத்தறிவுச் சமாதிகளில் ஜோதி எரிகிறது. இதெல்லாம் கூட புறச்சூழலைப் பாதிக்கக்கூடியதே. மரக்கறி உணவைவிட மாமிசம் உண்ணூவோரால் புறச்சூழல் பாதிப்படைவதாக விஞ்ஞான சஞ்சிகைகள் எழுதுகின்றன.

diwali-crackers

சிகரெட்டையும் பீடியையும் தடை செய்!

உலகில் ஒவ்வோரு நிமிடமும் பல கோடி சிகரெட்டுகளும் பீடிகளும் புகைக்கப்படுகின்றன. இவற்றால் புறச்சூழல் பாதிப்பதோடு புற்றுநோயும் பரவுகிறது. ஆகையால பீடிகளையும் சிகரெட்டுகளையும் தடை செய்க! மாமிச உணவுகளைத் தடை செய்க! என்றெல்லாம் கோஷம் எழுப்பினால் அதில் பசை இருக்கிறது. வருடத்தில் ஒரே ஒரு நாளோ, இரண்டே இரண்டு நாளோ வெடிக்கும் பட்டாசுகளுக்கு ‘நோ’ NO சொல்லுங்கள் என்பது மடமையிலும் மடமை.

 

ஒலிம்பிக் போட்டியின்போது வெடிக்கும் பட்டாசுகள், புத்தாண்டின்போது உலகெங்கிலும் வெடிக்கும் பட்டாசுகள் , அமெரிக்க சுதந்திர தினத்தின் போது வெடிக்கும் பட்டாசுகள் இவையெல்லாம் கோடிக்கணக்கான பணத்தைக் கொட்டி வெடிக்கிறார்கள். நாம் ஒரு நாள் வெடிப்பதை விட இவை எல்லாம் நூறு மடங்கு அதிகம்!

ஆகையால் குடிசைத் தொழிலான பட்டாசுத் தொழிலாளர்களின் வயிற்றிலும் வாயிலும் அடிக்காமல், பட்டாசு வாங்கிக் கொளுத்துங்கள் நிதானத்தைக் கடைப் பிடியுங்கள். காசைக் கரியாக்குவதிலும் அர்த்தம் இருக்கட்டும். நாங்கள் எல்லோரும் சிறுவயதில் அனுபவித்த பட்டாசு மத்தாப்புகளை எதிர்கால சந்ததியும் அனுபவிக்கட்டும்.

diwali_in_mumbai_3498310k

நான், சிறுவயதில் ரசித்த பட்டாசுகளை, லண்டனில் வாழும் என் பிள்ளைகள் அனுபவிக்க முடியவில்லையே என்று வருந்தி ஒவ்வொரு முறை இந்தியா வருகையிலும் எங்கேயாவது பட்டாசுகளைத் தேடிப்பிடித்தது வெடித்திருக்கிறோம் அதாவது தீபாவளி கழிந்து ஆறு மாதங்களுக்குப் பின்னர்!

 

இனிமேல் கல்யாணங்களில் 10,000 வாலா சீனி பட்டாசு வேண்டாம் என்று சொல்லுங்கள் அது நியாயமே. இனிமேல் தேர்தல் வெற்றிக்கு பட்டாசு வெடிக்காதீர்கள் என்று சொல்லுங்கள் அது நியாயமே.. பீடி, சிகரெட் குடிப்போரின் தலையில் அடித்து அதைப் பிடுங்கி எறியுங்கள் அது நியாயமே. பக்ரீத் பண்டிகயின்போது ஆயிரக்கணகான மிருகங்களைப் பலி கொடுப்பதை நிறுத்துங்கள் அது நியாயமே; எல்லாக் கசாப்புக் கடை வாசல்களிலும் ம,றியல் செய்யுங்கள் அது நியாயமே: பட்டாசு வெடிப்பதைவிட மாமிச உணவு, புறச்சுழலை அதிகம் பாதிக்கும் ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிடுங்கள் அது நியாமே.

 

முகமது நபி இஸ்லாமிய மத்ததைத் தோற்றுவித்தபோது ஒலிபெருக்கி ‘மைக்’ எதுவும் கிடையாது. அப்படி இருக்கையில் தினமும் 5 முறை கூப்பாடு போடுவதை —- ஒலிபெருக்கிகளால் கூச்சல் போடுவதை —-அனுமதிக்கிறோம் அதுபோல நரகாசுரனை கிருஷ்ணன் வதை செய்தபோது பட்டாசு இருந்ததோ இல்லையோ கவலை வேண்டாம். மக்களுக்கு மகிழ்ச்சி தருவதை வரவேற்போம்.

 

மாமிசம் சாப்பிடுவோரும் சிகரெட் குடிப்போரும் புறச்சூழல் பாதிப்பு பற்றிப் பேச என்ன நியாயம் இருக்கிறது?

diwali-sparklers

பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடுங்கள்; சிறு தொழில்கள் சிறக்கட்டும்.

 

–SUBHAM—

பாம்பு மந்திரம்: அதர்வண வேதமும், கம்பனும் காளிதாசனும் (Post No.3264)

snake-nandhu-fb

Research Article by London Swaminathan

 

Date: 18 October 2016

 

Time uploaded in London: 14-59

 

Post No.3264

 

Pictures are taken from various sources; thanks. (Picture is used only for representational purpose; no connection with the current article.)

 

Contact swami_48@yahoo.com

 

snakes-banded-egyptian-cobra

பாம்புகள் மணி மந்திர ஔஷதத்துக்குக் கட்டுப்படும் என்ற நம்பிக்கை வேத காலத்திலிருந்து இருந்து வருகிறது (மணி= இரத்தினக் கற்கள், மந்திரம்= மந்திர உச்சாடனம், ஔஷதம்= மூலிகை, மருந்துகள்).

 

இதைப் புலவர்களும் அடிக்கடி உவமையாகப் பயன் படுத்துவர். கம்பனும் காளிதாசனும் பயன்படுத்தியதால் மக்களிடையே இந்த நம்பிக்கை வேரூன்றி இருக்கிறது.

குயவர் ஜாதியினர், கோயமுத்தூர் பகுதியில் பாம்பு கடித்த ஒருவனைக் காப்பாற்றிய செய்தியை ஆர்தர் மைல்ஸ் என்பவர் குறிப்பிடுகிறார். அந்த ஜாதியைச் சேர்ந்த ஒருவர் ஒரு பழுப்பு நிற பொடியைப் பாம்பு கடித்த இடத்தில் தூவி, விஷத்தை உடம்பிலிருந்து இறக்குவது போல பலவித சைகைகளைச் செய்த சிறிது நேரத்தில் அந்தப் பையன் பாம்பு கடிக்காத மாதிரி நடந்து சென்றான். அதற்கு முன் அவன் கைகள் எல்லாம் மரத்துப் போயிருந்தன் என்கிறார்.

 

 

துர் ஜனங்கள் (Bad people) பற்றி நீதி வெண்பா என்ற நூலில் வரும் பாடல்:

 

துர்ச்சனரும் பாம்புந்  துலையொக்கினும் பாம்பு

துர்ச்சனரையொக்குமோ தோகையே — துர்ச்சனர்தாம்

எந்தவிதத்தாலும் இணங்காரே பாம்புமணி

மந்திரத்தாலே வசம்

 

பொருள்:- மயில் போன்ற பெண்ணே! கீழ் மக்களும் பாம்பும் தீங்கு செய்வதில் தராசுத்தட்டில் சமமாக இருப்பினும், பாம்பானது கீழ் மக்களுக்குச் சமமாகுமோ! ஆகாது ஏனெனில் கீழ் மக்களை என்ன சொன்னாலும் திருத்த முடிவதில்லை. ஆனால் பாம்போ இரத்தினக் கல், மந்திர உச்சாடனங்களுக்கும் கட்டுப்படும்.

snakes-blessed

Christian Priest blesses Snakes

கந்த சஷ்டிக் கவசம் போன்ற கவசங்களைப் படிப்போருக்குத் தெரியும் அதை பக்தியுடன் சொல்லுவோரை விஷமும் ஒன்றும் செய்யாது. இதைக் கவச வரிகளிலேயே காணலாம்.

தேளும் பாம்பும் செய்யான் பூரான்

கடிவிட விஷங்கள் கடித்துயர் அங்கம்

ஏறிய விஷங்கள் எளிதினில் இறங்க……. (கந்த சஷ்டி கவசம்)

 

அதர்வவேதம் அருளும் ஆனந்த வாழ்வு என்னும் நூலில் கவிமாமணி தமிழ்மாறன் பின்வரும் செய்தியை எழுதியுள்ளார்:

 

“கம்பநாடர் நாகபாசப்பாடலைப் பாடி (கம்ப ராமாயணம்) , பாம்புக்கடி விஷத்தை இறக்கி, தில்லை மூவாயிரர் மகனை உயிர்ப்பித்தார். வைத்தீஸ்வரன் கோயில் ஸ்டேஷன் மாஸ்டர் ஒருவர் பாம்புக்கடி விஷத்தை ஜபம் செய்தே போக்கி வந்துள்ளார்.”

 

கம்பர், வேளாளர்கள் பெருமையைப் பாடும் ஏர்ழுபது நூல் அரங்கேற்றத்துக்கு வந்திருந்த  புதுவைச் சேதிராயன் என்பவன் காலில் பாம்பு கடித்தது. உடனே கம்பர் ஒரு பாட்டுப் பாடவே ஒரு பாம்பு வந்து கடிபட்ட இடத்திலிருந்த விஷத்தை உறிஞ்சியது. அவரும் உயிர்தப்பினார்.

 

தேவாரம் பாடிய மூவரும் இப்படி விஷம் தீர்க்கும் பாடல்களைப் பாடி,  அற்புதங்களைச் செய்ததை நாம் அறிவோம்.

 

 

garuda-snake

அப்பூதி அடிகளாரின் மகனை அரவம் தீண்டியபோது அப்பர் பெருமான் பதிகம் பாடி உயிர்ப்பித்தார்.

 

திருமருகலில் வணிகர் குல மகனைப் பாம்பு தீண்டவே ஞான சம்பந்தர் பதிகம் பாடி உயிர்கொடுத்தார்

 

இப்படி புனித நூல்கள் முழுதும் உயிர்பெற்ற அதிர்ஷ்டசாலிகளின் கதைகளைப் படித்தறியலாம்.

 

பண்டரீபுரத்தில் வாழ்ந்த சுமதி-கமலாகர் என்ற பக்தர்களின் மகனான பத்மாகரை பாம்பு தீண்டி இறந்தபோது, நாமதேவர் துதி பாடி அவனை எழுப்பித்தார்.

 

 

விஷத்தை நீக்கும் இரத்தினக் கற்கள்

மனு தம சாத்திரமும் விஷம் பாதிக்காமல் இருக்க அதற்கான ரத்தினக் கற்களை அணிய வேண்டும் என்கிறது (மனு 7-218)

 

காளிதாசன் சொல்லுகிறான்:- ரகுவம்சம் 2-32

 

திலீபன் மேய்த்த தெய்வீகப் பசுவை சிங்கம் தாக்கியது. உடனே கோபமடைந்த திலீபன் தனது அம்பை எடுக்க கையை பின்னே கொண்டு சென்றான். ஆனால் அக்கை செயலிழந்து மரத்துப் போனது. எப்படி மரத்துப் போனது என்றால் மந்திரத்தாலும் மூலிகை மருந்துகளாலும் கட்டப்பட்டுச் செயலற்றுப் போகும் பாம்பு போல அவனுடைய கைகள் செயலிழந்தன என்கிறான் காளிதாசன் (ரகு வம்சம் 2-32)

 

கம்பன் பாட்டு

ஆரண்ய காண்டம், அயோமுகிப் படலம்

 

நல் மதியார் புகல் மந்திர நாமச்

சொல் மதியா அரவின் கடுகிற்பாள்

தன் மதனோடு தன் வெம்மை தணிந்தாள்

மன்மதன் ஆம் இவன் என்னும் மனத்தாள்

 

பொருள்:-

அந்த அரக்கி அயோமுகி, நல்லறிவு உள்ளவர்கள் சொல்லும் மந்திரங்களுக்கும் தெய்வீகச் சொற்களுக்கும் அடங்காத பாம்பைப் போல, இலக்குமணனைத் தொடந்து வந்தாள். அவன் அழகில் மயங்கி அவன் மன்மதனே என்று எண்ணினாள். அவனை அடைய வேண்டும் என்ற ஆசையால் தனது செருக்கையும் கொடுமையையும் குறைத்துக்கொண்டாள்.

 

(அதாவது பாம்பு கூட மந்திரம் , கவசம் போன்ற பாடல்களுக்கு அடங்கி விடும். ஆனால் அயோமுகியின் காம வெறியில் அவள் அடங்கவில்லை)

3-snakes

சுபாஷித ரத்ன பாண்டாகாரம் என்னும் சம்ஸ்கிருத தனிப்பாடல் தொகுப்பிலும் இவ்விஷயம் உள்ளது:-

 

க்வசித் சர்போபி மித்ரத்வமாயாத் நைவ கல: க்வசித்

 

 

அதர்வண வேத ரகசியங்கள்

 

அதர்வண வேதத்தின் ஆறாவது காண்டத்தில் பாம்பு விஷத்தை இறக்கும் மந்திரம் உள்ளது:-

 

“சூரியனுக்கு பிரபஞ்சத்தின் ரஹசியங்கள் தெரியும். அது போல எனக்கு பாம்புகள் தோன்றிய கதைகள் தெரியும். சூரியன் இருளை விலக்குவது போல  நான் உனது உடலில் இருந்து விஷத்தை அகற்றுகிறேன்

 

முனிவர்களுக்கும் கடவுளருக்கும் பிராமணர்களுக்கும் பாம்பு விஷத்தை நீக்கும் உபாயம் தெரியும். அது எங்களுக்குக் கடந்த காலத்திலிருந்து வந்தது. இனி எதிர்காலத்திலும் இதை உபயோகிப்போம். அந்த அறிவைக் கொண்டு உனது உடலிலுள்ள விஷத்தை நீக்குகிறேன்.

 

இதோ மலைகளில் இருந்தும் ஆறுகளில் இருந்தும் கொண்டுவந்த நீரை உன் மீது தெளிக்கிறேன். பாருஷ்ணி, சிப்லா நதிகளின் நீரை உன் மீது தெளிக்கிறேன்.  . உனது முகத்தில் சாந்தம் தவழட்டும். உனது இருதயத்தில் அமைதி நிலவட்டும்.

 

(பாருஷ்ணி நதியின் தற்போதைய பெயர் ரவி, சிபலா நதி எது என்பது உறுதியாகத் தெரியவில்லை. ஒருவேளை ஷைவல என்னும் நீர்த் தாவரம் வளர்ந்த நதியாக இருக்கலாம்)

 

 

எனது முந்தைய (Snake Vs Mongoose Fight) கட்டுரை:

அருகம் புல் ரகசியங்கள், ஜூலை 12, 2013

 

–subahm–

 

 

விண்வெளி பேனா பற்றிய ஜோக்கும் உண்மையும்! (Post No.3252)

ag-7_space_pen

Written by S. NAGARAJAN

Date: 15 October 2016

Time uploaded in London: 5-43 AM

Post No.3252

Pictures are taken from various sources; thanks

 

Contact :– swami_48@yahoo.com

 

பாக்யா 7-10-2016 இதழில் அறிவியல் துளிகள் பகுதியில் (அத்தியாயம் 296) வெளியாகியுள்ள கட்டுரை

 

விண்வெளி பேனா பற்றிய ஜோக்கும் உண்மையும்!

.நாகராஜன்

 

 fisher-space-pen

சந்திரனில் இருக்கும் ஒரு மனிதன் தன் நினைவுக் குறிப்புகளை எழுத விரும்பினால் அவன் ஃபிஷர் பேனாவைத் தான் எடுத்து எழுத ஆரம்பிப்பான்!                                                                                 

                                     – ஃபிஷர் பென் கம்பெனி 

 

 

விண்வெளியில் விண்வெளி வீரர் எழுதுவதற்கான பேனா ஒன்றை உருவாக்க நாஸா பல லட்சம் டாலர்கள் செலவழித்ததாகவும் இந்தப் பிரச்சினையை ரஷியா, விண்வெளி வீரருக்கு ஒரு பென்சிலைக் கொடுத்து எழுத வைத்து செலவே இல்லாமல் சமாளித்ததாகவும் ஒரு ஜோக் உண்டு.

 

(பாக்யாவில் ‘விண்வெளியில் மனித சாதனைகள் தொடரில் 85   மற்றும் 86ஆம் அத்தியாயங்களில் 23-6-2006, 30-6-2006 இதழ்களில் இது பற்றிப் படித்ததையும் இந்தச் சம்பவம் புகழ் பெற்ற ஒரு தமிழ் திரைப்படத்திலும் இடம் பெற்று விட்டதையும் இங்கு வாசகர்கள் நினைவு கூரலாம்!)

 

காலம் காலமாகச் சொல்லப்பட்டு வரும் இந்த ஜோக் பற்றிய உண்மை என்ன? இதற்கு ஒரு ஆய்வே நடந்து விட்டது!

ஆரம்ப காலத்தில் விண்வெளியில் வீரர்கள் பயணப்பட்ட போது ஜீரோ கிராவிடியில் பால் பாயிண்ட் பேனாவை வைத்து அவர்களால் எழுத முடியவில்லை. இந்தப் பிரச்சினையைத் தீர்க்க நாஸா விஞ்ஞானிகள் பத்தாண்டுகள் தீவிர ஆராய்ச்சியில் இறங்கினர். சுமார் 12 பில்லியன் டாலர்கள் (1200 கோடி டாலர்கள்) செலவழித்து, தலைகீழாக இருந்த போதிலும் எழுதக் கூடிய பேனா கண்டு பிடிக்கப்பட்டது. இந்தப் பேனா கண்ணாடி உட்பட்ட எந்த பரப்பிலும் எழுத வல்லது!

 

 

உறைபனி என்ற நிலையிலிருந்து மிக மிக வெப்பமான 300 டிகிரி செல்ஸியஸ் என்ற உஷ்ணநிலையிலும் இது எழுத வல்லது.

ரஷியர்களோ விண்கலங்களில் பென்சிலை உபயோகித்தனர்.

அமெரிக்கர்களின் வரிப் பணம் தண்டமாகச் செலவழிக்கப்படுகிறது என்பதைச் சுட்டிக் காட்டும் விதமாக ஜோக் எழுந்தது – உங்கள் வரியைத் தவறாமல் கட்டி விடுங்கள். அதைச் செலுத்துவதில் சந்தோஷப்படுங்கள் என்று!

 

உண்மையில் ரஷிய மற்றும் அமெரிக்க விண்வெளிவீரர்கள் முதலில் பென்சிலையே உபயோகப்படுத்தி வந்தனர்.

ஆனால் பென்சில்கள் தீப்பிடித்து எரியக் கூடிய தனமை வாய்ந்தது. பாதுகாப்பானது அல்ல. அத்தோடு அதன் முனை உடைந்தால் அது விண்வெளி வீரர்களுக்கு பேராபத்தை விண்கலத்தில் ஏற்படக் கூடும்.  மேலும் 1967இல் அபல்லோ 1 விண்கலம் தீ விபத்துக்குள்ளானது ஆகவே நாஸா இப்படிப்பட்ட ஆபத்தான தீப்பிடிக்கக் கூடிய தன்மை வாய்ந்த பென்சிலைத் தவிர்க்க எண்ணியது.

 

ஆனால் இந்தப் பேனாவை நாஸா உருவாக்கவில்லை. இதைத் தாமாகவே ஃபிஷர் பென் கம்பெனியைச் சேர்ந்த பால் சி.ஃபிஷர்  தனது சொந்தப் பணத்தைச் செலவழித்து உருவாக்க முன் வந்தார். ஆண்டி கிராவிடி ஸ்பேஸ் பென் எனப்படும் ஏ.ஜி 7 பேனாவை அவர் உருவாக்கினார்.

 

இந்தப் பேனா உலோகத்தினால் உருவாக்கப்பட்டது 200 டிகிரி செல்ஸியஸ் வரை தாக்குப் பிடிக்கக் கூடியது. அது வரை பேனாவில் உள்ள மை எரியாது.

 bg4-s_nix_box_stylus_front_700

இந்தப் பேனாவை நாஸா விண்வெளியில் பயன்படுத்தி சோதனை செய்த சில பேனாக்களை வாங்கியது. அபல்லோ 1 தீ விபத்தில் மூன்று விண்வெளி வீரர்கள் இறந்ததால், நூறு சதவிகித ஆக்ஸிஜன் இருக்கும் சூழ்நிலையிலும் கூட எரியாத பேனா ஒன்றை நாஸா விரும்பியது

அப்படிப்பட்ட ஸ்பேஸ் பேனா காற்றில்லாத வெற்றிட சூழ்நிலையிலும் எழுத வேண்டும், ஈர்ப்பு விசை இல்லாத நிலையில் எழுதவும் வேண்டும், ப்ளஸ் 150 டிகிரியிலிருந்து மைனஸ் 120 டிகிரி செல்ஸியஸ் வரை வெப்ப நிலை மாறுபாட்டிலும் அது செயல்பட வேண்டும்.

 

பத்து லட்சம் டாலர்கள் செலவழித்து முதல் பேனா உருவாக்கப்பட்டது. அதை ஃபிஷர் நாஸாவில் ஹூஸ்டன் ஸ்பேஸ் மையத்தில் இருந்த மேலாளரான டாக்டர் ராபர்ட் கில்ருத்துக்கு அனுப்பினார். அவர் அதைச் சோதனை செய்த பின்னர் நாஸா 400 பேனாக்களை பேனா ஒன்றுக்கு  4 டாலர் என்ற விலையை நிர்ணயித்து வாங்கியது. இந்தப் பேனாவிற்கு அது டேடா ரிகார்டிங் பென் (data recording pen)  என்ற பெயரைத் தந்தது..

 

சாதாரண காரீய பென்சில்கள் மெர்குரி மற்றும் ஜெமினி விண்கலங்களில் பயன்படுத்தப்பட்டு வந்தன. அதே போல ரஷியர்கள் தங்கள் விண்கலங்களிலும் இதே பென்சிலையே பயன்படுத்தி வந்தனர். ஆனால் விண்வெளிப் பயணங்கள் விரிவு பட்டு பாதுகாப்பு முதலிடத்தைப் பெற்று உறுதி செய்யப்பட வேண்டிய நிலையில் ஃபிஷர் பேனாக்கள் பயன்பாட்டிற்கு வந்தன.

 

இந்தப் பேனாக்களே சந்திரனுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. ஃபிஷர் விண்கலப் பேனாக்களை உருவாக்குவதற்காகவே தனியாக ‘ஸ்பேஸ் பென் கம்பெனி என்ற நிறுவனத்தை ஆரம்பித்தார். அதில் இன்றும் விண்கலப் பேனாக்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

 

 

ஃபிஷர் பேனா பற்றிய உண்மை டிவி காட்சிகளில் சொல்லப்பட்டாலும் விண்வெளி பேனா ஜோக் சொல்வதற்கு அருமையான ஒன்றாக அமைந்து விட்டது. மாற்றி யோசிப்பதற்கு நாடகபாணியில் உதாரணமாகச் சொல்ல  நல்ல ஜோக்காக இது இன்றும் சொல்லப்பட்டு வருகிறது. நாமும் கேட்டு மகிழ்கிறோம்.

 rw-wood

அறிவியல் அறிஞர் வாழ்வில் ..  

ஆர்.டபிள்யூ. உட் (R.W.Wood)  அமெரிக்காவைச் சேர்ந்த பிரபலமான இயற்பியல் விஞ்ஞானி. (தோற்றம் 2-5-1868 மறைவு 11-8-1965) அவர் புதுப் புதுக் கருவிகளைச் செய்து மகிழ்வது வழக்கம். ஒரு  முறை அவர் பிரம்மாண்டமான ஸ்பெக்ட்ரோஸ்கோபிக் கேமரா ஒன்றைச் செய்ய விரும்பினார். அப்படியே 42 அடி நீளமும் ஆறு அங்குல குறுக்குளவும் கொண்ட ஒரு குழாய் அமைப்பை வைத்து பெரிய கேமராவை வடிவமைத்துச் செய்தார். அதில் ஒரு பக்கம் சிறியதாக ஒரு பிளவும் இன்னொரு பக்கம் ஒளிவிலகல் கொண்ட அமைப்பையும் செய்தார். லாங் ஐலேண்டில் இருந்த கோடை காலப் பண்ணை வீட்டில் அவரது பசு மாட்டுத் தொழுவத்தில் அதை நிறுவினார். வசந்த காலம் வந்தது. ஒரு நாள் தன் வீட்டிற்கு வந்து ஸ்பெக்ட்ரோஸ்கோபிக் கேமராவைப் பார்த்த அவர் திடுக்கிட்டார். நிண்ட நாட்கள் பயன்படுத்தப்படாமல் அப்படியே விடப்பட்டிருந்ததால் குழாய் முழுவதும் சிலந்திகள் வலைகளைப் பின்னியிருந்தன. இதை எப்படி சுத்தப்படுத்துவது என்றே அவருக்குப் புரியவில்லை. கடைசியாக அவருக்கு  ஒரு யோசனை உதித்தது. குழாயைத் தன் வீட்டின் முற்றத்திற்குக் கொண்டு போனார். அங்கு அவரது செல்லமான குட்டிப் பூனை இருந்தது. அதை அரட்டி உருட்டி அந்தக் குழாயின் ஒரு பக்கத்தில் நுழைய வைத்தார். இன்னொரு முனையில் பூனைக்கு மிகவும் பிடித்தமான மீனை மாட்டி வைத்தார். அவ்வளவு தான், சில வினாடிகளிலேயே பூனை அடுத்த பக்கம் வந்து மீனைக் கவ்வியது. குழாய் நெடுகிலும் இருந்த சிலந்தி வலைகள் சுத்தப்படுத்தப்பட்டிருந்தன.

தனது யோசனை பலித்ததைக் கண்டு அவர் மிகவும் மகிழ்ந்தார்.

பூனையும் தான் மகிழ்ந்தது. கஷ்டப்பட்டு குழாய்க்குள் ‘பயணப்பட்டாலும்’ மீன் கிடைத்ததே!

********

ஆரோக்கியமாக நீடித்து வாழ எட்டு எளிய வழிகள்! (Post No.3249)

 

time-health

Written by S. NAGARAJAN


Date: 14 October 2016

Time uploaded in London: 6-16 AM

Post No.3249

Pictures are taken from various sources; thanks

 

Contact :– swami_48@yahoo.com

 

 

 

திருநெல்வேலியிருந்து மாதந்தோறும் வெளிவரும் ஹெல்த்கேர் அக்டோபர்,2016  இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

 

ஆரோக்கியமாக நீடித்து வாழ எட்டு எளிய வழிகள்!

BY ச.நாகராஜன்

healthy-living-1

 

அமெரிக்காவில் மட்டுமல்ல, பொதுவாக உலகில் எல்லா நாடுகளிலுமே இப்போது நீடித்த ஆயுளைக் கொண்டு வாழ்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது!

என்றாலும் கூட வயதான போது நீடித்த வியாதிகளினால் பலரும் அவஸ்தைப் படுகின்றனர்.

 

இதைப் போக்க முடியுமா? முடியும் என்கிறது அறிவியல்.

ஆரோக்கியமாக, நீடித்த நாட்கள் வாழ எட்டு எளிய வழிகள் உள்ளன.

 

 

அவையாவன:

  • அறுபது வயது ஆயிற்றே, எழுபது வயது ஆயிற்றே என்று நினைக்காமல் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஆரம்பிக்க இன்றைய நாளும் நல்ல நாள் தான் என்று நினைக்க வேண்டும். தாமதப்படுத்த வேண்டாம். உடனே ஆரம்பிக்கலாம் நல்ல வாழ்க்கை முறையை! வயதாகும் போது உடல் ரீதியாக சில மாற்றங்கள் ஏற்படுவது சகஜம் தான். ஆனால் அவை வியாதியைத் தருபவை என்று அர்த்தமுமில்லை, உடல் இயக்கத்தைத் தடுப்பவை என்றும் அர்த்தமில்லை. ஆக வாழ்க்கை முறை மாற்றத்தை இன்றிலிருந்தே தொடங்கலாம்.

 

  • உடல் ஆரோக்கியத்தைச் சீராகப் பராமரிக்க வேண்டுமெனில் உலகெங்குமுள்ள அனைத்து நிபுணர்களும் ஒரே குரலில் ஓங்கிச் சொல்வது உடற்பயிற்சி செய்யுங்கள் என்பதைத் தான்! ஹூஸ்டனில் உள்ள டெக்ஸாஸ் பல்கலைக்கழக மெடிகல் ஸ்கூலில் பணியாற்றும் கார்மல் பி.டையர்,” எனக்குத் தெரிந்து எழுபது வயதானவர்களில் ஏராளமானோர் உடற்பயிற்சியை மேற்கொண்டு அற்புதமான ஆரோக்கியத்தை அனுபவித்து வருகின்றனர்” என்கிறார். மஸில் மாஸ் (Muscle Mass ) கூடும் போது மருந்துகள் ஒரு இளவயதுக்காரரின் உடலில் என்ன வேலை செய்கிறதோ அதைச் செய்கிறது. அதாவது மருந்துகள் உரிய முறையில் உடலிலிருந்து எளிதாக அகற்றப்படுகின்றன. அத்துடன மட்டுமின்றி உடல் இயக்கம் மறதி நோயை வராமல் தடுக்கிறது. நடைப்பயிற்சி, தோட்ட வேலை செய்தல், அல்லது உடல் இயக்கத்தைத் தூண்டும் எதை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்துச் செய்யலாம்.

 

  • .தினமும் ஸ்ட்ரெட்சிங் எனப்படும் நீட்சி (Stretching) தேவை என்கிறார் டையர். செயலற்ற நிலையில் உங்கள் தசைகள் சுருங்குவதோடு விரைத்தும் போகின்றன. யோகா போன்றவற்றை மேற்கொண்டால் அது நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கின்றது.

“ஐந்து நிமிடம் தானே, என்ன செய்யப் போகிறது என்று நினைக்காமல் செய்தால், அது வயதான காலத்தில் நம்ப முடியாத அளவு நன்மையைத் தருகிறது” என்கிறார் டையர்.

மூட்டுவலி போன்ற எண்ணற்ற நோய்களுக்கு நிவாரணம் யோகா தான்! தியானம், சுவாச முறை, சமச்சீரையும் வலிமையையும் தரும் ஆசனங்கள் என யோகா தரும் அனைத்துமே உடலுக்கு ந்ன்மை பயப்பவையே

healthy-living-3

 

  • உடலின் எடையைச் சீராகப் பராமரிப்பது மிகவும் முக்கியமான ஒன்று.உடல் பயிற்சி, சரியான திட்டமிட்ட உணவு முறையை மேற்கொள்வது, ஆகியவை பல்வேறு நன்மைகளைத் தருவதை ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன.

“உங்கள் எடையைக் குறைவாகவே வைத்துக் கொண்டால் டயாபடீஸ் வரும் அபாயம் தவிர்க்கப்படுகிறது. மூட்டுவலியும் வராது. ஒரு நாளைக்கு ஐந்து கோப்பை அளவு பழச்சாறு அல்லது கறிகாய்கள் சாப்பிடும் ஒருவருக்கு இரத்த அழுத்தம் சீராக இருக்கிறது. இதய நோய்கள் வருவதில்லை. கான்ஸர் அபாயம் மிகவும் குறைவாகவே இருக்கிறது. நோய் எதிர்க்கும் சக்தியை உடல் அதிகமாகக் கொள்கிறது” என்கிறார் வாஷிங்டனில் உள்ள உணவுத் திட்ட நிபுணரான டெய்ல்மெட்ஜ்

 

 

  • நோய் வராமல் இருக்கச் செய்யும் தடுப்பு முறைகள் பல உண்டு. ஆண்டொன்றுக்கு ஒரு முறை மார்பகத்தை சோதனை செய்து கொள்வது பெண்களுக்கு நல்லது. ஃப்ளூ தடுப்ப்பூசி போன்றவற்றைப் போட்டுக் கொள்ளலாம். கான்ஸர், இதய நோய் வராமல் இருக்கிறதா என்பதற்கான டெஸ்டுகளையும் செய்து கொள்ளலாம். நோய்களின் அறிகுறிகளான அதிக இரத்த அழுத்தம், டயாபடீஸின் ஆரம்ப நிலைகள் ஆகியவற்றின் மீது ஒரு கண் இருக்க வேண்டும். உடல் இயக்கம் சீராக இருந்தால் மூட்டுவலி போன்றவை வராது என்பதை உணர்ந்து இயக்கங்கள் சரியாக உள்ளனவா என்பதையும் கண்காணிக்க வேண்டும்

 

 

  • மத உணர்வு நல்ல ஒரு சூழ்நிலையை ஏற்படுத்துகிறது. ஆலயத்திற்குச் செல்வது நிம்மதியையும் நீண்ட ஆயுளையும் தருவதை ஒரு ஆய்வு உறுதி செய்துள்ளது. மன அழுத்தத்தைப் போக்குவதற்கு மத சம்பந்தமான நிகழ்ச்சிகளில் ஈடுபடுவது முக்கியம். மதச் சடங்குகள், விழாக்கள் வாழ்வை தைரியத்துடன் எதிர்நோக்க உதவி செய்கிறது.

2004ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வு ஆண்கள், பெண்கள் உள்ளிட்ட ஆயிரம் பேரை ஆராய்ந்தது. அதில் தைரியத்துடன் வாழ்வை எதிர்நோக்கியோர் 55 சதவிகிதம் இறப்பைத் தள்ளிப் போடுகின்றனர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அத்தோடு 23 சதவிகிதம் இதய நோய்த் தாக்குதல் குறைவாக அவர்களுக்கு இருப்பதும் தெரிய வந்தது!

 

%e0%ae%a4%e0%af%87%e0%ae%b3%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d

  • மற்றவர்களுக்கு உதவும் சேவை மனப்பான்மை பற்றி மிச்சிகன் பல்கலைக் கழகம் 10317 பேர்கள் கலந்து கொண்ட ஒரு ஆய்வை நடத்தியது.1957லிருந்து 2004ஆம் ஆண்டு முடிய தன்னார்வத் தொண்டு செய்து வருபவர்கள் இவர்கள்.

அவர்களில் பலர் சேவை செய்யும் போது சொந்தத் துன்பங்கள் மறைந்து போகின்றன என்பதைத் தெரிவித்தனர். பலனை எதிர்பார்க்காமல் உதவும் தன்னார்வத் தொண்டர்களின் வாழ்வு நீடிப்பதையும் ஆய்வு உறுதி செய்தது.

 

 

  • நடுத்தர வயது உள்ள பெண்மணிகள் ஆல்கஹால் அருந்துவதைப் பற்றி ஆராய்ந்ததில் எப்போதேனும் ஒரு முறை ஆல்கஹாலை உட்கொள்பவர்கள் சீரான உடல்நிலை கொண்டிருப்பதை நர்ஸஸ் ஹெல்த் ஸ்டடி ஒன்று தெரிவிக்கிறது. தேவையற்ற தீய பழக்கங்களை மன உறுதியுடன் வெட்டி விடுங்கள்!

ஒரு நல்ல ஆரோக்கியமான வாழ்வு என்பது தான் என்ன? நீடித்த வியாதிகள் எதுவும் இருக்கக் கூடாது. முக்கியமாக இதய நோய்கள், டயாபடீஸ், கான்ஸர் போன்றவை வரக் கூடாது. மனத்தளவில் ஆரோக்கியமாக இருத்தல் வேண்டும். இவையே வெற்றிகரமாக முதுமை அடைவதைக் குறிக்கிறது.

%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b2%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d

************ நன்றி: ஹெல்த் ஸயின்ஸ்

 

மௌனத்தில் எத்தனை வகை?! (Post No.3237)

42285-wise-souls-speak-loudly-in-silence

Written by S. NAGARAJAN

Date: 10 October 2016

Time uploaded in London: 5-23 AM

Post No.3237

Pictures are taken from various sources; thanks

 

Contact :– swami_48@yahoo.com

 

 

சரஸ்வதி பூஜை சிறப்புக் கட்டுரை 

மௌனத்தில் எத்தனை வகை?!

ச.நாகராஜன்

 

“ஒருவனுக்கு துரோகமிழைக்காத உண்மை நண்பன் மௌனமே                                                                                 

                                     – கன்ஃப்யூஷியஸ்

 ramana

 

வாயை மூடிக் கொண்டு பேசாமல் இருந்தால் அது தான் மௌனம்! இது சரியா? இந்த ஒரு நிலை தான் மௌனத்தின் ஒரே வகையா?

சீனாவில் மௌனத்தில் நூறு வகை உண்டு என்று வலியுறுத்தப்படுகிறது. ஜென் பிரிவு மௌனத்தின் அபாரமான வலிமையையும் அதன் ஆழத்தையும் பல விதமாக விளக்குகிறது.

உண்மையான மௌன நிலையில் ஒருவர் எவ்வளவு காலம் இருக்க முடியும்?

 

அறிவியல் ஆராயப் புகுந்தது. உண்மையான அறிவியல் ரீதியிலான மௌன நிலையில் ஒருவர் 15 நிமிடம் இருந்தாலே அதிகம் தான். அதற்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாது!

ஒரு செல் போன் ஒலிக்கும் போதோ அல்லது ஒரு டிஷ் வாஷர் அல்லது வாஷிங் மெஷின் இயக்கப் படும் போதோ அது எவ்வளவு ஓசையை எழுப்புகிறது?

 

மைக்ரோசாஃப்ட், ஆப்பிள் மற்றும் அமெரிக்க ராணுவப் பிரிவு இது போன்ற ஓசைகளின் அளவைக் கண்டு பிடிக்க சத்தமே இல்லாத ஒரு சேம்பரை – மௌன அறையை அமைப்பது வழக்கம்.

இதை அனெகோயிக் அறை என்று அழைப்பர். (unechoic ; un-echoic –எதிரொலி இல்லாத என்று பொருள்)

 rumi-on-silence

மின்னஸோட்டாவில் உள்ள மின்னபோலிஸில் ஆரிஃபீல்ட் லாபரட்டரிஸிலும் (orifield laboratories) இப்படி ஒரு அறை உண்டு. இந்த அறை, தங்கள் தயாரிப்புகளைச் சோதனை செய்ய கட்டண அடிப்படையில் தேவைப்பட்டோருக்கு தரப்படுவதும் உண்டு.

 

உண்மையில் ஒரு அமைதியான அறை என்பதன் விளக்கம் தான் என்ன? மின்னஸோட்டா பப்ளிக் ரேடியோ 30 டெசிபல் உள்ள அறையே அமைதியான அறை என்ற இலக்கணத்தை வகுக்கிறது. அமைதியான இரவு நேரத்தில் ஏர்கண்டிஷனரின் ஓசை, தாள்களைப் புரட்டும் ஓசை போன்றவை மெலிதாகக் கேட்கும். அது பொதுவாக அமைதியான அறை எனப்படும்.

 

ஆனால் அனெகோயிக் அறை மைனஸ் ஒன்பது டெசிபல் என்ற அளவு அமைதியாக இருக்கும். ஆம், சாதாரண மௌன நிலைக்கும் கீழாக எதிர்மறையில் ஒன்பது டெசிபல்! 

 

கின்னஸ் வோர்ல்ட் ரிகார்டின் படி உலகின் மிக மிக அமைதியான அறை இது ஒன்று தான்!

இந்த அறை விசேஷமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. எந்த சத்தமும் இதனுள் புக முடியாது. சுவரிலிருந்து ஒரு மீட்டர் நீளம் ஊடுருவியிருக்கும் விசேஷ அமைப்புகள் எந்த எதிரொலியையும் சத்தத்தையும் உள் வாங்கி கிரகித்து விடும்.

 

இதன் சிறப்புத் தன்மையைப் பற்றி இந்த சோதனைச்சாலையின் தலைவர் ஸ்டீவ் ஆரிஃபீல்ட், “சாதாரணமாக ஒரு அமைதியான அறையில் உட்காரும் ஒருவர் ஒலியையும் அதன் பிரதிபலிப்புகளையும் கேட்கிறார். ஆனால் அனெகோயிக் அறையில் எந்த ஒரு சத்தமும் அதன் பிரதிபலிப்பும் இருக்காது.அங்கு ஜீரோ ரிஃபளக் ஷன் இருக்கும். நான் பேசும்போது நீங்கள் எனது குரலை உள்ளது உள்ளபடியே அப்படியே கேட்க முடியும். பேசும் போது நான் தலையைத் திருப்பினால் ஒலியும் தலை திருப்பிய திசையில் வளையும். என்கிறார்.

 

இப்படிப்பட்ட சைலன்ஸ் சேம்பரில் ஒருவர் உட்கார்ந்த போது அவர் இடி இடிப்பது போன்ற ஓசையையும் ஆறு பாய்வது அல்லது அருவி நீர் கொட்டுவது போன்ற ஒசையையும் கேட்டார். பத்து நிமிடங்களில் அவர் மண்டை வெடித்துச் சிதறி விடுவது போல இருந்தது. உடனே அறையை விட்டு வெளியே வந்து நடந்ததைச் சொன்னார்.

 silence-speaks-79426-500-550

ஆய்வு நடத்திய விஞ்ஞானிகள், “நீங்கள் கேட்டது இடைவிடாத இதயத் துடிப்பு தான். உங்கள் உடலில் உள்ள ரத்த ஓட்டமே உடலில் பாய்வது ஆறு பாய்வது போன்ற ஓசையை எழுப்புகிறது. அதைத் தான் நீங்கள் கேட்டீர்கள் என்றனர். உடலின் அற்புதமான ஓசை விந்தை இது!

 

மைனஸ் டெசிபல் நிலையில் இப்படித் தான் உடல் நிகழ்வில் ஏற்படும் சத்தத்தையே நம்மால் தாங்க முடியாமல் போய் விடும் நிலை ஏற்படுகிறது.

 

மாஸன் அண்ட் ப்ராடி (Mason and Brady) ஆய்வு என்பது பிரபலமான ஆய்வாகும். இந்த ஆய்வில் மௌன சேம்பரில் சிலரை இருட்டாக இருந்த நிலையில் 15 நிமிடம் இருக்க வைத்த போது அவர்கள் மாயத் தோற்றங்களைக் கண்டு அலறினர். அதிலிருந்து தெரிய வருவது ஒருவர் 15 நிமிடம் ஆழ்ந்த மௌனத்தைத் தாக்குப் பிடித்தால அதுவே அதிகம் என்பது தான்!

 

இனி உலகாயத ரீதியாக, மௌனம் என்பது வெற்றிக்கான வழி என்பது நிலை நிறுத்தப்பட்ட சித்தாந்தம்.

பல்வேறு ஆராய்ச்சிகள் பல மௌன நிலைகளைச் சுட்டிக் காட்டுகின்றன.

 

ஒரு விவாதத்தில் எதிராளியைக் கிறுக்குப் பிடிக்கும் நிலைக்குத் தள்ள வேண்டுமெனில் ஒரு சுலபமான வழி இருக்கிறது. சொல்லால் அவர் தாக்கும் போது எதிரிலிருப்பவர் ஒவ்வொரு முறையும் நான்கு விநாடிகள் பதிலளிக்கக் கூடாது. ஹாலந்தில் நடந்த ஒரு ஆய்வின் படி ஒரு மனித மூளை நான்கு விநாடிகள் ஒருவர் மௌனமாக இருந்தால் அவரது கூற்றை நிராகரிப்பதாகப் பதிவு செய்து  கொள்கிறது. எரிச்சல் கொப்பளிக்கும் எதிராளிக்கு.

 

பிரபல சிந்தனையாளரான தோரோ, “நான் இரவின் மௌனத்தைக் ‘கேட்க விரும்புகிறேன். ஏனெனில் அந்த மௌனம் பாஸிடிவ் ஆனது. கேட்க வேண்டிய ஒன்று என்கிறார்.

 

பகவான் ரமண மஹரிஷி மௌனமாக சும்மாவே இருக்கிறாரே என்று சிலர் கூறிய போது, “நான் மௌன நிலையில் சும்மா இருக்கிறேன் என்பது எப்படி உங்களுக்குத் தெரியும்? என்று கூறி நிறுத்தி விட்டார். மௌன நிலையில் இயற்கை சக்திகளைப் பயன்படுத்தி ஏராளமான அரும் செயல்களைச் செய்ய முடியும். இதை அரவிந்தரும் வலியுறுத்தியுள்ளார்.

 ramana-2

ரமண மஹரிஷியின் முன் ஏராளமான கேள்விகளைக் கேட்பதற்காக வந்த பிரபல ஆங்கில எழுத்தாளர் சாமர்செட் மாம் அவர் முன் அமர்ந்த போது கேள்விகள் ஒன்றன் பின் ஒன்றாக மனதில் எழ, அதற்குப் பதிலும் தானாகவே வந்தது. நெடு நேரம் அமர்ந்திருந்த அவ்ரால் ஒரு கேள்வியையும் கேட்க முடியவில்லை. பதில் தான் உடனுக்குடன் வருகிறதே

 

ஆக மௌன நிலையில் பல ஆழ்நிலைகள் உண்டு.பால் குட்மேன் எழுதியநைன் கைண்ட்ஸ் ஆஃப் சைலன்ஸ் (Nine kinds of  silence) என்ற நூலில், அவர், ‘செழிப்பான மௌனம் ஆன்மாவிற்கான சிறந்த மேய்ச்சல் நிலம் என்கிறார்.

 

மௌனத்தை நாம் ‘கேட்டால் அது நமது அனுபவங்களை ஆழமாக்கும் என்கிறார் கவிஞர் பில்லி காலின்ஸ். அவர் எழுதிய கவிதை நூலின் பெயர் ‘தி ஹண்ட்ரட் கைண்ட்ஸ் ஆஃப் சைலன்ஸ் (The hundred kinds of Silence : Billy Collins).  தனது தாயின் கல்லறைக்குச் சென்று இறந்த தனது தாயுடன் பேசி தான் புதிதாக அணிந்திருக்கும் கண்ணாடி எப்படி இருக்கிறது என்பது பற்றி அவரிடம் கேட்க முடிகிறது என்கிறார் அவர், தனது கவிதை வாயிலாக!

 

ஆக மௌனங்கள் நூறு வகை! ஒவ்வொன்றும் ஒரு வகை!

எல்லையற்ற முடிவிலா மோனம் உரைக்க ஒண்ணா அற்புதம். அறிவியலும் ஆன்மீகமும் உளவியலும் ஒன்று சேரும் இடம் மௌனமே!

 

******

 

 

 

பருப்பை நான்காம் தமிழுக்கு ரிஸர்வ் செய்த தீர்க்கதரிசி ஔவையார்! (Post No.3190)

milk-and-honey

Written by S NAGARAJAN

Date: 26 September 2016

Time uploaded in London:5-40

Post No.3190

Pictures are taken from various sources; thanks.

 

 

 

பிள்ளையாரைத் தமிழர்கள் கும்பிடவில்லையா??!! என்ற கட்டுரையை முதலில் படித்து விட்டு இந்தக் கட்டுரையைப் படியுங்கள்.

 

பருப்பை நான்காம் தமிழுக்கு ரிஸர்வ் செய்த தீர்க்கதரிசி ஔவையார்!

ச.நாகராஜன்

 

பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும் இவை                            

நாலும் கலந்துனக்கு நான் தருவேன்  – கோலஞ்செய்                                 

துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்கு                           

 சங்கத் தமிழ் மூன்றும் தா!”

 

 

ஔவையாரின் இந்த பாடலைப் பல முறை படித்தால் பல விஷயங்கள் தெரிய வரும்.

 

நான்கு தந்து மூன்று கேட்ட ஔவையாரைப் பற்றிச் சற்று யோசித்த போது ஔவையார் ஒரு தீர்க்கதரிசி என்பது புலனாகிறது.

 

 

இயல், இசை, நாடகத் தமிழ் என முத்தமிழை பால், தெளி தேன், பாகு, பருப்பு ஆகிய நான்கைத் தந்து கேட்ட ஔவையாரின் வணிக பேர நேர்த்தியைக் கண்டு மனம் மகிழும் போதே எதற்கு அவர் பருப்பையும் சேர்த்து விநாயகருக்குப் படைத்தார் என்பது முதலில் புலனாகாது தான்!

 

 

ஆனால் ஔவையாரின் காலத்திற்குப் பின்னர் பல நூற்றாண்டுகள் கடந்து வந்த பின்னர் இன்று தமிழில் புதிய சேர்க்கையாக அறிவியல் தமிழ் இணைந்து விட்டது.

இயல், இசை, நாடகம் ஆகியவற்றோடு அறிவியல் தமிழும் சேர்ந்து விட்டதால் இப்போது முத்தமிழ், நாற்றமிழ் – அதாவது – நான்கு தமிழாகி விட்டது!

 

 

தமிழர்கள் விநாயகரை நான்கு தமிழைக் கேட்க வழி வகை செய்யும் வகையில் பருப்பையும் சேர்த்துப் படைத்து விட்டார் போலும் ஔவையார். அறிவியல் தமிழுக்காக அவர் பருப்பை ரிஸர்வ் செய்த அதிசயத்தை நினைத்து வியக்க வேண்டியதாக இருக்கிறது.

 

இனி என்ன கவலை?

 

 

பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும் இவை                            

நாலும் கலந்துனக்கு நான் தருவேன்  – கோலஞ்செய்                                  

துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்கு                            

சங்கத் தமிழ் மூன்றும் தா!” 

 

என்பதைச் சற்றே மாற்றி

 

பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும் இவை                            

நாலும் கலந்துனக்கு நான் தருவேன்  – கோலஞ்செய்                                  

துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்கு                            

தங்கத் தமிழ் நான்கையும் தா

 

என்று இனிமேல் பாடி வேண்டலாம்!

 

இயல் – பால்

இசை – தெளி தேன்

நாடகம் – பாகு

அறிவியல் – பருப்பு

 

ஆக அறிவியல் தமிழ் உருவாவதைக் கண்ட தீர்க்கதரிசி ஔவையாருக்கு நன்றி சொல்லி அதை விக்னமின்றி நமக்கு அருளும் விநாயகருக்கும் நம் பயபக்தியுடன் கூடிய வணங்குதலைச் செய்து வேண்டுவோம்.

 

 

வாழ்க ஔவையார்! வளர்க அறிவியல் தமிழ்!!

                   **********