அற்புத அறிவியல் எழுத்தாளர் ஐஸக் அஸிமாவ்! – 2 (Post No.3179)

foudationempiretwmflat

WRITTEN BY S NAGARAJAN

Date: 23 September 2016

Time uploaded in London:5-05 AM

Post No.3179

Pictures are taken from various sources; thanks.

 

 அறிவியல் துளிகள் தொடரில் பாக்யா 16-9-2016 இதழில் 293ஆம் அத்தியாயமாக வெளியாகியுள்ள கட்டுரை

அற்புத அறிவியல் எழுத்தாளர் ஐஸக் அஸிமாவ்! – 2

ச.நாகராஜன்

 

 

isaacasimov-225x300

வாழ்க்கையைப் பற்றிய ஒரு சோகமான விஷயம் இப்போது என்னவெனில் ,சமுதாயம் விவேகத்தைச் சேகரிப்பதை விட  விஞ்ஞானம் அதிவேகமாக அறிவைச் சேகரிக்கிறது” – ஐஸக் அஸிமாவ்

 அஸிமாவ் தினமும் எழுதும் விதம் சற்று  விசித்திரமானது. ஜன்னலே இல்லாத சிறிய அறையில் எழுதுவது அவருக்கு மிகவும் பிடிக்கும். இதற்கு ஒரு காரணமும் உண்டு. சூரிய வெளிச்சத்தில் பத்து நிமிடம் இருந்தாலும் போதும், அவரது தோல் எரிச்சலடைந்து வேதனையைத் தரும். அப்படி ஒரு உடல் வாகு அவருக்கு இருந்தது!

 

 

காலையில் ஏழரை மணிக்கு டைப்ரட்டரின் முன்னால் அமர்ந்தார் என்றால் இரவு பத்து மணி வரை அவரது எழுத்துப் பணி தொடரும்!

விமானத்தில் பறப்பது அவருக்குப் பிடிக்காது. கார் அல்லது சொகுசுக் கப்பலில் தான் பெரும்பாலும் அவர் பயணங்களை மேற்கொள்வார். மிக அவசியமான நேரங்களில் மட்டும் விமானத்தில் பயணமாவார். இராணுவத்தில் அவர் பணியாற்றிய போது விமானப் பயணம் கட்டாயமாக மேற்கொள்ள வேண்டிய ஒன்றாக ஆனது. ஏராளமான விண்வெளிப் பயணங்கள், நட்சத்திரப் பயணங்கள் என்பதையெல்லாம் எழுத்தில் வடித்துக் கொட்டிய அந்த அதிசய மனிதர் வாழ்நாளில் இரண்டே இரண்டு  முறை மட்டுமே விமானப் பயணம் மேற்கொண்டார் என்பது ஒரு அதிசயமான செய்தி!

Limericks எனப்படும் ஆங்கிலக் குட்டிக் கவிதைகளை எழுதுவதில் அவருக்கு அலாதி பிரியம் உண்டு. ஆனால் அவை கொஞ்சம் அசிங்கமாகவே இருக்கும்.

 

 

கடவுள் நம்பிக்கை இல்லை என்றாலும் கூட ஒழுக்க நெறிகளை அவர் வலியுறுத்தினார். பகுத்தறிவே துணை என்றார் அவர்.

அவரைத் தேடி பல விருதுகள் வந்தன. அவரைப் போற்றி ஒரு விண்கல்லிற்கு ஆஸ்ட்ராய்ட் 5020 அஸிமாவ் என்று பெயரிடப்பட்டது.

பைபிளைப் பற்றி இரண்டு தொகுதிகளாக 1300 பக்கங்களில், ‘அஸிமாவ் கைட் டு தி பைபிள் (பைபிளுக்கு அஸிமாவின் வழிகாட்டி) என்ற நூலை அவர் எழுதினார். இதில் பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாடில் உள்ள அனைத்தும் சொல்லப்பட்டது.

 

 

அவரது மரணமோ  சோகமாக நிகழ்ந்தது. 1983இல் இதய அறுவை சிகிச்சை ஒன்றின் போது உடலில் செலுத்தப்படக் கூடாத தடை செய்யப்பட்ட இரத்தம் அவர் உடலில் செலுத்தப்பட்டது. இதனால் ஹெச் ஐ வி தொற்றால் அவர் பாதிக்கப்பட்டார். ஆகவே 1992இல் மரணமடைந்தார். இப்படி ஒரு நோய் அவரைத் துன்புறுத்தியது பத்து வருடங்கள் ரகசிய்மாகவே இருந்தது.

 prelude-to-foundation

தனது சுயசரிதத்தை மூன்று  முறை அவர் எழுதியுள்ளார். மூன்றாவது நூல் மட்டும் அவர் இறந்த பின்னர் வெளி வந்தது. அவரது மனைவி ஜேனட் அஸிமாவ் இந்த மூன்று சரிதங்களையும் சுருக்கி ஒரு நூலை வெளியிட்டார். அதில் தான் அவர் இறந்தது எதனால் என்பது தெரிய வந்தது.

கடைசியாக அஸிமாவின் எழுத்து நடையைப் பற்றிச் சொல்லியாக வேண்டுமே! ஒரு சிறிய எடுத்துக்காட்டின் மூலமாக நகைச்சுவை கலந்த அவரது நடையை உணர முடியும்

 

அஸிமாவின் எழுத்துக்கு ஒரு சாம்பிள் இதோ:

நுண்ணறிவு என்பது தான் என்ன?

 

நான் இராணுவத்தில் பணியாற்றிய போது ராணுவ வீரர்களுக்கான சோதனையில் நூற்றுக்கு நான் 160 மார்க்குகள் பெற்றேன்! யாருமே அப்படி ஒரு மதிப்பெண்ணைப் பெற்றதில்லை என்பதால் இரண்டு மணி நேரம் என்னைச் சுற்றி ஒரே கூத்தும் கும்மாளமுமாக இருந்தது.

 

வாழ்க்கை முழுவதுமே இதே போன்ற மதிப்பெண்ணையே பெற்று வந்ததால் எனது அறிவைப் பற்றிய ஒரு உயர் அபிப்ராயம் எனக்கு இருந்தது.  மற்றவர்களும் என்னை அறிவாளி என்றே நினைக்க வேண்டும் என்றும் நினைத்து வந்தேன்.

 

இந்த மதிப்பெண்கள் என்னைக் கேள்வி கேட்பவர்களின் சாதாரணமான் கேள்விகளுக்கு நான் நல்ல பதிலைச் சொல்ல வேண்டும் என்ற அவசியத்தைத் தரும் என்று எதிர்பார்க்கக் கூடாது தான்!

 

 

உதாரணமாக ஒரு ஆட்டோ மெக்கானிக்கை நான் சந்தித்த விஷயத்தைச் சொல்லலாம். அவருக்கும் இண்டெலிஜெண்ட் டெஸ்டுக்கும் சம்பந்தமே இல்லை. ஆகவே அவரை விட நான் பிரமாதமான அறிவாளி என்றே என்னைப் பற்றி நான் எண்ணிக் கொண்டிருந்தேன்.

அந்த மெக்கானிக்கை நான் சந்தித்த போதெல்லாம் அவர் ஜோக்குகளைச் சொல்லி மகிழ்வது வழக்கம்.

 

 asimov

ஒரு நாள் காரின் அடியிலிருந்து தலையை மட்டும் நீட்டினார் அவர்.

“டாக்டர், ஒரு செவிட்டு ஊமை ஒரு நாள் ஆணி வாங்க கடைக்குப் போனார்.ஒரு கையில் இருந்த விரலை ஊன்றிக் காண்பித்து இன்னொரு கையால் சுத்தியலால் அடிப்பதைப் போல அந்த விரலின் மீது அடித்துக் காண்பித்தார். கடைக்காரர் ஆணிகளைக் கொண்டு வந்தார் அதில் தனக்குத் தேவையான சைஸை அவர் எடுத்துக் கொண்டு சென்றார்.

 

டாக்டர், அடுத்தாற்ப் போல அந்தக் கடைக்கு வந்தவர் கண் பார்வையற்ற குருடர். அவர் கத்தரிக்கோலை வாங்க வந்தார். அவர் எப்படி கத்தரிக்கோலை வாங்கினார்?என்று கேட்டார் மெக்கானிக்.

மிக்க அறிவுத் திறமையுடன் நான் இரு விரல்களாலும் கத்தரிக்கோல் அசைவது போல அசைத்துக் காட்டினேன்.

உடனே அந்த மெக்கானிக் கலகலவென்று சிரித்து, “ அட, மக்கு டாக்டரே, அவர் தனது வாயைத் திறந்து கத்தரிக்கோல் வேண்டும் என்று கேட்டார் என்றார்.

 

 

தொடர்ந்த அவர், “இன்று முழுவதும் எனது வாடிக்கையாளர்களிடம் இந்தக் கேள்வியைத் தான் கேட்டேன் என்றார்

“நிறைய ஆள்களைப் பிடித்து விட்டீர்களோ – நான் கேட்டேன்.

“ஆமாமாம் நிறைய பேரை. ஆனால் நிச்சயம் உங்களைப் பிடித்து விடுவேன் என்று எனக்குத் தெரியும்!

“அது எப்படி என்னைப் பிடிப்பது பற்றி அவ்வளவு நிச்சயம்? – நான் கேட்டேன்..

 

“ஏனென்றால் மெத்தப் படித்த மேதாவியாயிற்றே நீங்கள். அவ்வளவாக ஸ்மார்ட்டாக உங்களால் இருக்க முடியாதே!

சற்று அசடு வழிந்தேன் நான்!

அஸிமாவ் எழுதாத பொருளே இல்லை என்பதால் அவரை யார் வேண்டுமானாலும் படிக்கலாம்! மாபெரும் மேதை அவர்!

 r-storymusgrave-large570

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் ..  

பிரபல அமெரிக்க விண்வெளி வீரரான ஸ்டோரி மஸ்க்ரேவ்   (Story Musgrave)  ஒரு விஞ்ஞானி. எலக்ட்ரீஷியனாக வேலை பார்த்தவர். ஒரு கணித மேதை. ஒரு கம்ப்யூட்டர் ப்ரோக்ராமர். ஒரு மெக்கானிக் ஒரு பைலட். ஒரு சர்ஜனும் கூட.

 

இப்படிப் பன்முகத் திறமை கொண்ட அபூர்வமான இந்த மனிதர் நாஸாவில் 30 ஆண்டுகள் பணி புரிந்தார். 1983ஆம் ஆண்டிலிருந்து ஆறு முறை அவர் விண்ணில் பறந்தார். ஸ்பேஸ் ஷட்டில் திட்டத்தில் முனைப்புடன் அவர் ஈடுபட்டார். 1983இல் ஸ்பேஸ் ஷட்டில் சாலஞ்ஜரில் ஆரம்பித்த விண்வெளி வாழ்க்கை 1996இல் ஸ்பேஸ் ஷட்டில் கொலம்பியாவில் முடிவுற்று 61ஆம் வயதில் பணி ஓய்வு பெற்றார். அமெரிக்காவின் ஐந்து ஸ்பேஸ் ஷட்டில்களிலும் பறந்த ஒரே வீரர் இவர் தான்! விண்ணில் பறந்ததால் வாழ்க்கை பற்றிய தன் கருத்தில் எந்த ஒரு மாற்றமும் ஏற்படவில்லை என்கிறார் அவர்!

மற்ற விண்வெளி வீரர்கள் எல்லோரும் விண்ணில் பறந்தவுடன் ஒரு ஓவர் வியூ எஃபக்ட் (Overview effect) ஏற்பட்டு விட்டதாகக் கூறுவது வழக்கம். பிரக்ஞை பற்றிய உணர்வில் ஒரு பெரும் மாற்றம் ஏற்படுவதை ஓவர்வியூ எஃபக்ட் என்பர். ஆனால் இது தனக்கு ஏற்படவில்லை என்று கூறினார் அவர். இந்த ‘விண்வெளி பிரக்ஞை விளைவு தனிப்பட்ட நபராகவோ அல்லது அரிய உயிரின வகைக்கு ஏற்படும் ஒன்றாகவோ எந்த விதத்திலும் தனக்கு நிகழவில்லை என்றும் எப்போதும் போலத் தான் இருப்பதாகவும் அவர் கூறி அனைவரையும் பிரமிக்க வைத்தார்.

 

ஏனைய வீரர்களோ உலகைப் பற்றிய பார்வையில் தங்கள் உணர்வில் பெரிய மாற்றம் ஏற்பட்டு விட்டதாகக் கூறினர்.

எளிமையாக இருந்து விண்வெளிப் பயணத்தை அனுபவித்த பல்துறை மேதாவி என்று அவரைக் கூறலாமோ!

story_musgrave_2005

 

*********

 

 

சாளக்ராமம் பற்றிய சுவையான தகவல்கள் (Post No.3177)

fossil-puja

Translated by London swaminathan

Date: 22 September 2016

Time uploaded in London: 7-48 AM

Post No.3177

Pictures are taken from various sources; thanks.

 

From Arthur Miles’ book The Land of the Lingam 

 

ammonites

Ammonite Fossils

1933-ஆம் ஆண்டில் இந்து மதத்தையும், குறிப்பாக சிவ லிங்க வழிபாட்டையும் குறைகூறி ஆர்தர் மைல்ஸ் என்பவர் ஒரு புத்தகம் வெளியிட்டார். பக்கத்திற்குப் பக்கம் இந்து மத பழக்க வழக்கங்களை  “பகுத்தறிவுப் பகலவன்கள்”(?!?!) குறைகூறுவது போல எழுதினாலும் நிறைய விவரங்களைத் தருகிறார். அதில் ஒன்று சாலக்ராமம் பற்றியது.

ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்தவர் லண்டன் சுவாமிநாதன்:-

 

சாளக்கிராமம் என்பது வெழுமூன இருக்கும் ஒரு கல். அதற்குள் விஷ்ணு சக்கரம் போல அச்சு இருக்கும். இது உண்மையில் உயிரியல் அறிஞர்கள் சோதனைக் கூடங்களில் சேர்த்து வைக்கும் படிம அச்சுகளாகும் FOSSILS. அதாவது மில்லியன் அல்லது கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உரியினங்களின் கல் அச்சு.

 

இந்துக்களுக்கு இந்த படிம அச்சுகள் மிகவும் புனிதமானவை. சங்கு சக்கரம் போலப் பதிவான சித்திரம், விஷ்ணுவின் அடையாளம் என்று இந்துக்கள் கருதுவதால் அதற்கு தினமும் அபிஷேகம் ஆராதனை செய்து பூஜிப்பர்.

 

இது குறித்து ஆர்தர் மைல்ஸ் எழுதிய விஷயங்களை ஆங்கிலத்தில் அப்படியே வெளியிட்டேன். அதன் சுருக்கத்தைக் காண்போம்:

 

1.சாளக்ராமம் தோன்றிய கதை:

ஒரு நாட்டியம் ஆடும் பெண்மணி பேரழகி. அவளுக்கு ஈடு இணையான

அழகுள்ள ஒரு ஆண்மகனும் கிடைக்கவில்லை. ஆகை யால் இமய மலைக்குப் போய்த் தவம் செய்வோம் என்று புறப்பாட்டாள். அங்கு விஷ்ணு வந்தார். அவருடைய பேரழகைக் கண்டவுடன் இந்தப் பெண் தவத்தை எல்லாம் விட்டுவிட்டு அவரிடம் சென்று என்னைத் திருமண ம் செய்து கொள்ளுங்கள் என்றார். அவரோ மானுடனாகப் பிறந்த நடன மாதுவைக் கைப்பிடிக்க விரும்பவில்லை. இருந்த போதிலும் இப்படிப்பட்ட பேரழகியை விடக்கூடாதென்று ஒரு வழி கண்டுபிடித்தார். பெண்ணே நீ கண்டகி நதியாகப் (GANDAKI RIVER) பிற ந்து வா. நான் அங்கே கிடக்கும் சாலக்ராமமாக அவதரிக்கிறேன். நீ என்னை எப்போதும் தழுவிச் செல்லலாம் என்றார்.

 

இந்தக்தையின் உண்மைப் பொருள்: நேபாள நாட்டிலுள்ள கண்டகி நதியில்தான் அதிகமாக இவ்வகை படிம அச்சுகள் FOSSILS கிடைக்கின்றன. அது விஷ்ணுவின் அம்சம். அதை உணர்த்த இந்தப் புனைக்கதை உருவாக்கப்பட்டது. இந்துக்கள் எதையுமே நேரடியாகச் சொல்லாமல் அடையாள க் குறி யீட்டுகளால் (symbolic story) காட்டுவர் அப்படிப்பட்ட ஒரு கதை இது.

sripadarajamatha_saligramas

  1. சாளக்ராம மகிமை:-

 

நேபாள நாட்டைச் சேர்ந்த ஒரு வீரன் (க்ஷத்ரியன்) எதேச்சையாக ஒரு சாளக்ராம கல்லை வாயில் வைத்து கொண்டு நீந்தி வந்தார். அவருக்கு அதிர்ஷ்டத்துக்கு மேல் அதிர்ஷ்டம் அடித்தது. அவருக்கு அரச பதவியும் கிடைத்தது. பின்னர் விஷ்ணுவே வந்து மேக ரூபமாக அவரை சுவர்க்க லோகத்துக்கு அழைத்துச் சென்றார். அதற்குப் பிறகு கண்டகி நகர சாளக்கிராம கற்களின் மகிமை உலகிற்குத் தெரிந்தது. இப்பொழுது அது பஞ்ச்சாயதன பூஜையின் ஒரு பகுதியாக இந்துக்களின் வீட்டின் பூஜை அறையில் உள்ளது!

 

3.சாளக்கிராம கல்லை மதிப்பிடுவது எப்படி?

சாளக்கிராம கற்களை எடுக்கும் உரிமை அந்தக் காலத்தில் நேபாள மன்னர்களிடம் மட்டுமே இருந்தது. அவர்கள் அந்த உரிமையைக் குத்தகைக்கு விடுவர். ஆனால் யார் அவற்றைக் கண்டுபிடித்தாலும் அதை அரசரிடம் கொடுக்க வேண்டும். அவர்கள் அதிலுள்ள சக்கரம், குறிப்பிட இடத்திலுள்ள ஓட்டை இவற்றைக் கொண்டு மதிப்பிடுவர். அதற்குப் பின் அதைச் சுத்தம் செய்துவிட்டு ஒரு தராசின் ஒரு தட்டில் வைப்பர். ஒவ்வொரு கல்லுக்கும் சமமான அரிசியை மற்றொரு தராசுத் தட்டில் வைப்பர். மறு நாள் (24 மணி நேரத்தில்) அரிசியின் எடை அதிகரித்து அந்தத் தட்டு கீழே தாழ்ந்திருந்தால் அதன் மதிப்பு அதிகம். அரிசியின் அளவு இரு மடங்கு கூட ஆனதுண்டாம். அரிசியின் அளவு அதே மாதிரி நீடித்தாலோ அல்லது குறைந்தாலோ சாளக்கிராமத்துக்கு மதிப்பில்லை.

 

4.அதர்வ வேதத்தில் சாளக்ராமக் கல்

சாளக்ராமக் கல் இல்லாத வீடு சுடுகாட்டுக்குச் சமம் என்றும் அங்கே சமைக்கப்பட்ட உணவு நாயின் விட்டைக்குச் சமம் என்றும் அதர்வண வேதம் கூறுவதாக ஆர்தர் மைல்ஸ் எழுதுகிறார். சாளக்ராமக் கல்லின் அபிஷேக நீர்  மகிழ்ச்சியை அளிக்கும் என்றும் அதை அபிஷேகம் செய்து ஆராதிப்போர் வீ ட்டில் லட்சுமி நிரந்தரமாகக் குடியிருப்பதால் செல்வம் தழைக்கும் என்றும் இந்துக்கள நம்புகின்றனர்.

ஒரு காலத்தில் 4000 பவுண்டு கொடுத்து கூட அதை வாங்கினராம்.

 shaligram-sila

5.கந்த புராணத் தகவல்

 

கந்த புராணத்தில்தான் சாளக்ராம மகிமை கூறப்பட்டிருக்கிறது. இதை வீட்டில் வைத்திருந்து பூஜை செய்யாமல் இருந்தால் துரதிருஷ்டம் பீடிக்கும். சாளக்ராமத்தில் உக்ர சக்ர சாளக்ராமங்கள் என்பன தீய விளைவுகளை ஏற்படுத்துமாம். அப்படி தீய விளைவை உண்டாக்கும் கற்கள் இருந்தால் அவைகளை க் கோவில்களில் கொடுத்து  விட்டால் ஒரு கஷ்டமும் வராது. கோவிலிலுள்ள மகத்தான சக்தி, பூஜைகளால் அவை உக்ரம் இழந்துவிடும்.

இறுதியாக சாலக்கிராமத்தில் போலி கற்களும் உண்டு. அதாவது மோசடி செய்வோர் அதன் மீது கருவிகளால் கோடு, ஓட்டைகளைப் போட்டு அவறறை சாளக்ராமம் என்று விற்பர். இவைகளைக் கண்டுபிடிப்பது எளிதல்ல. (ஆகையால் போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள்).

 

-subham-

 

எல்லோரும் அறிஞர்கள் ஆன காலம்! (Post No.3152)

advice

Written by S NAGARAJAN

Date: 14 September 2016

Time uploaded in London: 6-28 AM

Post No.3152

Pictures are taken from various sources; thanks.

 

நடைச் சித்திரம்

எல்லோரும் அறிஞர்கள் ஆன காலம்!

.நாகராஜன்

 

 

காலம் கலிகாலம் என்று யார் சொன்னது?

பொய்.

வடிகட்டிய பொய்!

எல்லோரும் அறிஞர்கள்! எல்லோரும் விஞ்ஞானிகள்! எல்லோரும் டாக்டர்கள்! எல்லோரும் பேராசிரியர்கள்!

எந்த ஒரு சப்ஜெக்டிலும் யார் வேண்டுமானாலும் எப்போதும் வயது, அந்தசஸ்து, பால்,மதம், மொழி என்ற வேறுபாட்டையெல்லாம் கடந்து ‘அட்வைஸ்’ செய்யலாம்!

பொற்காலம் ஐயா இது, பொற்காலம்!!

 

 

காலையில் எழுந்து இத்யாதி காரியங்களை முடித்து விட்டு டிபன் சாப்பிட உட்கார்ந்தேன்.இட்லிக்கு சட்னி என்ற பெயரில் தேங்காயை மிக்ஸியில் ஒரு அலசு அலசி உப்பு போடாமல், கடுகு தாளிக்காமல் வந்தது ஒரு வஸ்து.

முழித்தேன்.

 

கடுகு சேர்த்தால் எட்டு கலோரி கூடி விடும்! உப்பு எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவு குறைக்க வேண்டும்!

அப்பாவியாக நான், “வாட்ஸ் ஆப்பா? க்ரூப் அட்வைஸா’ என்று சகதர்மிணியை நோக்கிக் கேட்க தன் வாட்ஸ் ஆப் தகவலை அமுல் படுத்தியதை தோழிகளுக்குப் பெருமிதத்துடன் தெரிவிக்க அவள் விரைந்தாள்.

 

கடைக்குப் போக வேண்டும். ஸ்கூட்டர் சாவியைத் தேடினேன். மகன் ஓடி வந்தான் கையில் லாப் டாப்புடன், ஏதோ ஒரு சைட்டைப் பார்த்தவாறே

‘சாவி என் கையில் இருக்கிறது. தினமும் காலையிலும் மாலையிலும் நடக்க வேண்டும். நடப்பதே நல்லது. இன்னிக்கு ஒரு பத்தாயிரம் ஸ்டெப் போட்டால் போதும்’ கையில் ஒரு வாட்சைக் கட்டி விட்டான். அது நடக்கும் போது எத்தனை ஸ்டெப் போட்டோம் என்பதைக் காண்பிக்கும் வாட்ச் போன்ற ஒரு வஸ்து. விஞ்ஞான  விபரீதம்!

 

 

ஆமாம் என்றேன். நடக்க முடியாமல் நடக்க ஆரம்பித்தேன். ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தாயிற்று.

அப்பாடா, நிம்மதியாக நியூஸ் சானலை ஆன் செய்தேன். பேரன் ஓடி வந்தான்.

அதை மாற்றி டிஸ்கவரி சானலுக்குப் போனான்.

‘தாத்தா, ரொம்ப பார்க்கக் கூடாது. கண் கெட்டு விடும். என் மிஸ் சொன்னாள்.’

ஓஹோ, அப்படியா?!

advice-2

காலிங் பெல் அடித்தது. ஆஹா, பேப்பர் வந்து விட்டது!

சரி , கதவைத் திறந்து பேப்பரை வாங்கப் போனேன். இதை யாரும் தடை செய்து விட முடியாதல்லவா! நிம்மதியாகப் படிக்கலாம்!

அடுத்தவீட்டுக்காரர் பணிவுடன் ஒரு குட் மார்னிங் போட்டார்.

பேப்பர்காரரை நோக்கி அதட்டல் உருட்டலான பார்வையுடன், ‘நாளையிலிருந்து இங்கு பேப்பர் போடாதே!’ என்றார்.

பதறிப் போன நான், ‘ஏன்’ என்று பார்வையாலேயே கேட்டேன். பேச முடியவில்லை. அதனால்!!

 

 

‘ஸார் யார் தெரியுமா? ஆல் இந்தியா ரேடியோவில்  காலையில் சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தை காலை மலர் நிகழ்ச்சியில் தினமும் பெசி வருபவர். ஒரு பேப்பரைத் தயாரிக்க எவ்வளவு மரங்கள் காடுகளில் அழிக்கப்படுகிறது, உனக்குத் தெரியுமா? பேசாமல் நீ கூட வேறு ஒரு வேலையைத் தேடிக் கொள்ளலாம். உனக்கும் நல்லது, நாட்டின் சுற்றுப்புறச் சூழலுக்கும் நல்லது!’

 

அவன் அரண்டு போய் ஓட ஆரம்பித்தான்.

நானோ! – ஙே என்று முழித்தேன்.

வேர்க்க விறுவிறுக்க வீட்டினுள் நுழைந்தேன்.

 

 

என் மருமகள், ‘ இந்த ஆல் இந்தியா ரேடியோவிற்குக் ஸ்கிரிப்ட், பாக்யாவிற்குத் தொடர்  எழுதுவது என்ற வேலை எல்லாம் வேண்டாம். இப்ப தான் என் ஃபிரண்ட் – அதான், பிஸியோதெராபிஸ்ட் பிரேமா ஸ்கைப்பிலே கூப்பிட்டு டெமோ செய்து காண்பித்தாள். நூறே நூறு பயிற்சிகள் தான். முதல் ஐந்தை இன்று ஆரம்பிக்கலாம். உடம்புக்கு ரொம்ப நல்லது!’

 

அடடா! என்ன அக்கறை!!

உலகத்திற்குத் தான் நம் மீது எத்தனை அக்கறை!!

சும்மாவா சொன்னார்கள் இரத்த பாசம் என்று!

எல்லோரும் அறிஞர்களே!

இப்போது சொல்லுங்கள், காலம் கலிகாலம் என்று யார் சொன்னது?

பொற்காலம் ஐயா இது, பொற்காலம்!!

 

***********

 

 

 

அற்புத அறிவியல் எழுத்தாளர் ஐஸக் அஸிமாவ்! – 1 (Post No.3147)

isaac-asimov

Written by S NAGARAJAN

Date: 12 September 2016

Time uploaded in London: 8-56 AM

Post No.3147

Pictures are taken from various sources; thanks.

 

பாக்யா வார இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை

அற்புத அறிவியல் எழுத்தாளர் ஐஸக் அஸிமாவ்! – 1

ச.நாகராஜன்

 

asimov-robots

 

நாத்திகத்திற்கு பதிலாக பகுத்தறிவிற்கே நான் முன்னுரிமை அளிக்கிறேன்” – ஐஸக் அஸிமாவ்

 

 

ஆங்கில இலக்கியத்தில் ஸயின்ஸ் ஃபிக் ஷன் எனப்படும் அறிவியல் புனைகதைகளுக்குத் தனி ஒரு இடம் உண்டு.

 

அறிவியல் புனைகதைகளுக்கான என்சைக்ளோபீடியாவில் சுமார் 96 அறிவியல் பகுதிகள் இடம் பெற்றுள்ளன. ஆயிரக் கணக்கான கதைகள் மற்றும் நாவல்கள் அறிவியலில் நாம் நினைத்தும் பார்க்க முடியாத அற்புதங்களை கதைகள் வாயிலாகச் சுட்டிக் காட்டுகின்றன. குறைந்த பட்சம் பிரபலமான எழுத்தாளர்கள் 108 பேரின் பட்டியலை அறிவியல் ஃபிக் ஷன் என்சைக்ளோபீடியா பட்டியலிட்டுத் தருகிறது.

 

இந்த எழுத்தாளர்களின் எழுத்தைப் படிப்பது ஒரு சுகம் என்றால் இவர்களைப் பற்றி அறிவது  இன்னும் சுகமான அனுபவம்.

குறிப்பிடத்தகுந்த பலரில் ஒருவர் ஐஸக் அஸிமாவ். (தோற்றம் 2-1-1920 மறைவு 6-4-1992) அஸிமாவ் பற்றி இந்தத் தொடரில் பாக்யா 13-7-2012 இதழில் 72ஆம் அத்தியாயத்தில் சில விவரங்களைப் படித்திருக்கிறோம். அதில் சொல்லப்படாத ஏராளமான சுவையான செய்திகளை இனி காண்போம்.

 

பிரபல எழுத்தாளரான இவரின் படைப்புகள் பிரம்மாண்டம் என்ற அளவில் உலகினரால் பேசப்படுகின்றன.

500 அறிவியல் தொகுதிகளை அவர் எழுதியும் தொகுத்தும் இருக்கிறார். 90000 கடிதங்களையும் அஞ்சல் அட்டைகளையும் எழுதியுள்ளார். தனது வாழ்நாளில் வருடத்திற்கு குறைந்தபட்சமாக பத்து புத்தகங்களையாவது எழுதுவதை அவர் பழக்கமாகக் கொண்டிருந்தார். தொடாத துறை இல்லை என்பது போல தத்துவத்தைத் தவிர அனைத்துத் துறைகளிலும் அவர் தன் படைப்பாற்றலைக் காட்டினார். அவரது தனிப்பட்ட சொத்தாக இருக்கும் கையெழுத்துப் பிரதிகள் பாஸ்டன் பல்கலைக் கழகத்தில் முகர் நினைவு நூலகத்தில் இன்றும் பாதுகாக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. அந்தப் படைப்புகள் 464 பெட்டிகளில் 232 அடி நீளமுள்ள அலமாரிகளில் வைக்கப்பட்டுள்ளன.

 asimove-aliens

இவரது படைப்புகளில் 40 நாவல்களும் 382  சிறுகதைகளும் 280க்கும் மேலான கட்டுரைகள் அடங்கியுள்ள நூல்களும் அடங்கியுள்ளன.

எதிர்காலம் தன்னைப் பற்றி எப்படிக் கணிக்க வேண்டும் என்றும் அவர் தன் விருப்பத்தைத் தெரிவித்துள்ளார்.

 

ஒரு புத்தகம் எழுதிய எழுத்தாளராகவோ அல்லது பல புத்தகங்களைப் படைத்த படைப்பாளியாகவோ தன்னை  மதிப்பிடக் கூடாது என்றும் தனது மொத்தப் படைப்புகளுக்காகவும் அவற்றில் எண்ணிக்கைக்காகவும், தரத்திற்காகவும், அத்துடன் கூட அவற்றில் சொல்லப்பட்ட ஏராளமான விதவிதமான பொருள்களை வைத்துமே தன்னை நினைவு கொள்ள வேண்டும் என்றும் அவரே கூறியிருக்கிறார். அத்தோடு இது போல இன்னொருவர் இப்படிச் செய்யவே முடியாது என்பதும் அவரது நம்பிக்கை.

 

ரஷியாவில் உள்ள பெட்ரோவிச்சி என்னுமிடத்தில் ரஷிய தம்பதிகளான அன்னா ராக்கேல் பெர்மன் அஸிமாவுக்கும் ஜுடா அஸிமாவுக்கும் மகனாகப் பிறந்தார் ஐஸக் அஸிமாவ் . இவரது பிறந்த தேதி என்னவென்று யாருக்கும் தெரியாது. 1919ஆம் ஆண்டு அக்டோபார் 4ஆம் தேதியிலிருந்து 1920 ஜனவரி 2க்குள் ஏதோ ஒரு நாளில் இவர் பிறந்திருக்க வேண்டும். ஆனால் ஜனவரி 2ஆம் தேதியைத் தனது பிறந்த நாளாக அவரே தேர்ந்தெடுத்துக் கொண்டார்.

 

ஸ்டான்லி என்ற ஒரு தம்பியும் மான்யா என்ற ஒரு தங்கையும் ஐஸக்கின் உடன் பிறப்புகள். அவருக்கு மூன்று வயதாகும் போது அவரது பெற்றோர் அமெரிக்காவிற்குக் குடியேறினர். நியூ யார்க்கில் ப்ரூக்ளினில் வசித்த போது ஐந்து வயதிலேயே ஐஸக் நன்கு எழுதவும் படிக்கவும் கற்றார். அஸிமாவின் பெற்றோர்கள் ஒரு மிட்டாய் கடையையும் புத்தகக் கடையையும் நடத்தி வந்தனர். அங்கு தான் தனக்குப் படிக்கவும் எழுதவும் ஆர்வம் பிறந்தது என்று பின்னாளில் ஐஸக் குறிப்பிட்டார்.

 

பள்ளியில் அவரது அபாரமான அறிவைக் கண்ட கடைசி பெஞ்சுக்காரர்களுக்கு அவரைக் கண்டால் பிடிக்கவில்லை. அவருக்கு அடிக்கடி தொல்லை கொடுக்க ஆரம்பித்த அவர்களைத் தன் புத்தி சாதுரியத்தால் வெகு எளிதாக சமாளித்தார். நல்ல உடல் வலுவுடன் படிப்பதில் பின் தங்கியுள்ள ஒருவனுக்கு அவர் உதவி செய்ய ஆரம்பிக்கவே அந்தப் பையன் அஸிமாவின் மெய்காப்பாளராக மாறினான். அதிலிருந்து அவருக்கு யாரும் தொந்தரவு கொடுக்கவில்லை!

எட்டு வயதாகும் போது அமெரிக்க குடியுரிமையை அவர் பெற்றார். பதினோராம் வயதில் தனது முதல் கதையை எழுதினார். 19ஆம் வயதிலேயே தனது படைப்புகளுக்கு பெருத்த சன்மானம் பெற ஆரம்பித்தார்.

 

அஸிமாவின் தந்தைக்கு அவர் இப்படி கதைகள் எழுதுவது பிடிக்கவில்லை. ஆனால் அறிவியல் புனைகதைகளில், அறிவியல் அதாவது ஸயின்ஸ் இருக்கிறது என்று அஸிமாவ் சொல்லவே அவர் அதை ஆதரித்து கதை எழுதுவதைத் தடை செய்யவில்லை!

மரூன்ட் ஆஃப் வெஸ்டா’ (Marooned Off Vesta -1939)  என்ற முதல் கதையிலிருந்து எழுத ஆரம்பித்த அஸிமாவ் இரண்டு வருடங்களுக்குள் 32 கதைகளை எழுதி பிரபலமாகி விட்டார். அவரது நைட் ஃபால் (Night Fall) என்ற 32வது கதை அறிவியல் புனைகதைகளில் சிறந்த கதைகளுள் ஒன்றாக இன்றும் போற்றப்படுகிறது. (இந்தக் கதையின் சுருக்கம்     பாக்யா   13-7-2012 இதழில் இந்தத் தொடரின் 72ஆம் அத்தியாயத்தில் சுருக்கமாகத் தரப்பட்டுள்ளது.)

 

கொலம்பியா பல்கலைக்கழகத்தில் இரசாயனத்தில் பி.ஹெச்டி பட்டத்தைப் பெற்ற அவர் பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியாகப் பணிபுரிய ஆரம்பித்தார். இறுதிக்காலம் வரை அவர் அந்தப் பல்கலைக்கழகத்துடனான தொடர்பை விடவே இல்லை.

 

ஸயின்ஸ் அண்ட் ஸயின்ஸ் ஃபிக் ஷன் என்ற மாதப் பத்திரிகையில் ஒரு தொடரை அவர் 1958 நவம்பரிலிருந்து எழுத ஆரம்பித்தார். இந்தத் தொடரில் கதைகள் அல்லாத இதர விஷயங்களே இடம் பெற்றன. எதைப் பற்றி வேண்டுமானாலும் எழுதலாம் என்ற சுதந்திரத்தை ஆசிரியர் தந்து விட்டதால் தான் இறக்கும் வரையில் தொடர்ந்து அவர் பல விஷயங்கலைப் பற்றியும் இதில் எழுதி வந்தார். இந்தத் தொடர் மிகவும் பிரபலமானது. 399 இதழ்களில் தொடர்ந்து இந்தப் படைப்புகள் வெளி வந்தன.

அறிவியலுக்கான நுண்ணறிவுக் வழிகாட்டிஎன்று பொருள்படும் ‘தி இண்டெலிஜெண்ட் கைட் டு ஸயின்ஸ்என்ற  ஒரு களஞ்சியத்தை அவர் எழுதி வெளியிட்டார். இது மிகவும் பிரபலமாகி இவருக்குப் பெரும் புகழைப் பெற்றுத் தந்தது. இதனால் தனது பல்கலைக்கழகப் பொறுப்பிலிருந்து விலகி முழு நேர எழுத்தாளராக மாறி படைப்பாற்றலில் முழுதுமாக கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

 sentinel_space_telescope_illustration

அறிவியல் அறிஞர் வாழ்வில் ..

பிரபல அமெரிக்க விண்வெளி வீரரான எட் லூ பணி ஓய்வு பெற்று விட்டபின் செய்ய முயன்றிருக்கும் பணி வானளாவிய உயர்ந்த பணி!

   ஆமாம், அவர் செய்யப் போகும் பணி பூமியைக் காப்பது தான். அயல்கிரகவாசிகளிடமிருந்து அவர் பூமியைக் காக்க முனையவில்லை. மாறாக, பூமியை நோக்கி மோத வரும் விண்கற்களிலிருந்து பூமியைக் காப்பதே அவர் திட்டம். இதற்காக பி- 612 என்ற ஒரு அமைப்பை அவர் அமைத்துள்ளார்இந்த அமைப்பின் மூலமாக் செண்டினல் (Sentinel) தஎன்ற ஒரு விண்வெளி டெலஸ்கோப்பை விண்வெளியில் அவர் அமைக்கப் போகிறார். நன்கொடையாளர்கள் மனமுவந்து பல லட்சம் டாலர்களை அவரிடம் தந்துள்ளனர்.2018ஆம் ஆண்டு வாக்கில் இந்த டெலஸ்கோப் விண்ணில் நிறுவப்படும். இதன் மூலம் விண்கற்கள் கண்காணிக்கப்படும்.

 

2000ஆம் ஆண்டிலிருந்து எட்டு முறை ஹிரோஷிமாவில் போடப்பட்ட அணுகுண்டிற்குச் சமமான அளவுக்கு மோதல்கள் பூமியில் ஏற்பட்டுள்ளன. ஒரு விண்கல் மோதலினால் தான் டைனோஸர் இனமே பூமியில் அழிந்து பட்டது. ஆகவே எதிர்காலத்தில் நமது பூமியில் வாழ் மக்களைக் காக்கவும் அரும் நகரங்களைக் காக்கவும் இந்தத் திட்டம்  உதவும்

 

வானளாவிய பணியை வானளாவிய உயரத்தில் செய்ய இருக்கும் எட் லூ போற்றப்பட வேண்டியவர் தானே!

*************

 

 

சாமுத்ரிகா லட்சணம்: கம்பன் தரும் தகவல் (Post No.3142)

sangu-chakra-reka

Written by London Swaminathan

 

Date: 11 September 2016

 

Time uploaded in London: 7-03 AM

 

 

Post No.3142

 

Pictures are taken from various sources; thanks.

 

 

உடலில் ஒவ்வொரு அங்கமும் எப்படி இருந்தால் அதனால் என்ன பலன் என்று கூறும் சாத்திரம் சாமுத்ரிகா லக்ஷண சாத்திரம் ஆகும். இது குறித்து வராஹ மிஹிரர் சொன்ன விஷயங்களை ஏற்கனவே எழுதினேன்.

 

கம்பனும் ராமாயணத்தில் இது பற்றி பல குறிப்புகளைக் கொடுக்கிறான். சம்ஸ்கிருதத்தில் ஆஜானு பாஹு என்பர். அதை அவன் நீண்ட நெடுந்தோள், தாள்தோய் தடக்கை என்றெல்லாம் வருணிப்பான்.

woman

இதோ ஒரு பாடல்:

 

சங்கு சக்கரக்குறி உள தடக்கையில் தாளில்

எங்கும் இத்தனை இலக்கணம் யாவர்க்கும் இல்லை

செங்கண் விற்கரத்து இராமன் அத் திரு நெடுமாலே

இங்கு உதித்தனன் ஈண்டு அறம் நிறுத்துதற்கு இன்னும்.

-நட்பு கோட் படலம், கிஷ்கிந்தா காண்டம், கம்ப ராமாயணம்

 

பொருள்:–

சுக்ரீவனிடம் அனுமன் சொல்லுகிறான்

 

இராமனுக்கு பெரிய கைகளிலும் கால்களிலும் சங்கு, சக்கர அடையாளங்கள் உள்ளன. இததகைய உயர்ந்த இலக்கணங்கள் எந்த உலகத்திலும் எவர்க்கும் இல்லை. ஆகையால் சிவ ந்த கண்களையும் வில்லை ஏந்திய கைகளையும் உடைய இராமன் இப்போது அறத்தை நிலை நிறுத்துவதற்கா க உலகில் அவதரிக்கும் திருமாலே ஆவான். மேலும்……………..

 

கைகளில் மட்டும் சங்கு ச்க்கர ரேகை இருப்பதே ஆபூர்வம்; இவனுக்கோ கைகளிலும் கால்களிலும் இப்படி சங்கும் சக்கரமும் காணப்படுகின்றன.

 

(எனக்கு ஒரு சிந்தனை: இப்படிக் கை, கால்களில் சாமுத்ரிகா லட்சண ரேகைகள் இருந்ததைத் தான் பிற்காலத்தில் உண்மையிலேயே கைகளில் சக்கரமும் சங்கும் இருப்பது போல உருவம் செய்துவிட்டார்களோ? ஆராய்ச்சிக்குரிய விஷயம்!)

 

ஐந்து உறுப்புகள் நீண்டதாக இருப்பது நல்லது என்று சம்ஸ்கிருத நூல்களும் மொழியும்:

 

பாஹூ நேத்ரத்வயம் குக்க்ஷிர்த்த்வே து நாசே ததைவ ச

ஸ்தனயோரந்தரம் சைவ பஞ்ச தீர்கம் ப்ரசக்ஷதே

 

பொருள்:-

நீண்ட கைகள், நீண்ட கண்கள், மூக்கு, வயிறு, முலைகள் இருக்க வேண்டும் என்று சொல்லப்படும்.

 

My earlier post:

Scientific proof for Samudrika Lakshanam

Posted by Santhanam Swaminathan on 18 Mar 2013

 

 

–Subahm–

 

விண்வெளியிலிருந்து விழுந்த வீரர்கள்! (Post No. 3126)

Fallen_Astronaut

Written by S NAGARAJAN

 

Date: 6 September 2016

 

Time uploaded in London: 5-47 AM

 

 

Post No.3126

 

Pictures are taken from various sources; thanks.

  

2-9-2016  பாக்யா இதழில் அறிவியல் துளிகள்  தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை

விண்வெளியிலிருந்து விழுந்த வீரர்கள்!

.நாகராஜன்

 

book

அபாயம் என்பது விண்வெளிப் பயணத்தின் ஒரு பகுதி! விண்வெளிப் பயணத்தில் உள்ள சவால்களைத் துணிச்சலாக எதிர்கொண்ட விண்வெளி வீரர்களை நாம் நினைவில் இருத்திப் போற்றுகிறோம்      – நினைவு நாளின் போது விண்வெளி வீராங்கனை ஐலீன் காலின்ஸ்

 

விண்வெளி சரித்திரம் விந்தையான தியாகங்கள் நிறைந்த ஒன்று.

சுமார் 45 ஆண்டுகளூக்கு முன்பு 1971ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இரண்டாம் தேதி அபல்லோ விண்கலத்தில் சந்திரனுக்குச் சென்ற டேவ் ஸ்காட் மற்றும் ஜிம் இர்வின் ஆகியோர் தரை நிலையத்திலிருந்து  தங்களுக்குக் கட்டளை இடப்படாத ஒரு சிறிய சடங்கை சந்திரனிலிருந்து கிளம்பும் முன்னர்  தாங்களாகவே செய்து முடித்தனர். எந்த ஒரு காமராவின் கண்ணிலும் படாமல் அவர்கள் இதைச் செய்து முடித்தனர்.

 

சந்திரனின் மேற்பரப்பில்விழுந்த வீரர்கள்என்ற பொருள் படும்  ‘FALLEN ASTRONAUTS’ என்ற வாசகங்களை எழுதி ஒரு நினைவுச் சின்னத்தை வைத்தனர். இந்தச் சின்னத்த்தில் அமெரிக்க மற்றும் ரஷிய விண்வெளி வீரர்களின் 14 பெயர்கள் பொறிக்கப்பட்டிருந்தன.மனித வரலாற்றில் விண்வெளிப் பயணம் தொடங்கியதிலிருந்து விண்வெளி வெற்றிக்காகத் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த விண்வெளி வீரர்களின் பெயர்கள் தாம்  வை எட்டரை செண்டிமீட்டரில் ஒரு அலுமினிய சிற்பமானது பால் வான் ஹோய்டொன்க் என்பவரால் செய்யப்பட்ட்து. அபல்லோ 15 பயணத்திற்கு முன்னர் இந்த சிற்பியை விண்வெளி வீரர் ஸ்காட் ஒரு இரவு விருந்தில் சந்தித்தார். அங்கு தான் அந்தச் சிற்பி ஒரு சிறிய நினைவுச் சின்னத்தைச் செய்ய ஒப்புக் கொண்டார். அதில் ஒரு விண்வெளி வீரர் விண்வெளி உடையில் இருப்பது போல சித்தரிக்கப்பட்டது. சிறபம் இலேசாக எடை அதிகமின்றி செய்யப்பட்டது. ஆனால் சந்திரனில் ஏற்படும் மிக அதிக உஷ்ணநிலையையும் தாங்கும் படி வடிவமைக்கப்பட்டது. இதை பயணம் வெற்றிகரமாக முடியும் வரை ரகசிய்மாக வைத்திருப்பதாக இருவரும் முடிவு செய்தனர். பயணம் வெற்றிகரமாக முடிந்த பின்னர் பூமிக்குத் திரும்பிய பின்னர் தான் ஸ்காட் ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தில் இதை வெளிப்படுத்தினார்.

 

நினைவுச் சின்னத்தையும் அதில் பொறிக்கப்பட்ட பெயர்களையும் கொண்ட ஒரே ஒரு போட்டோ மட்டும் எடுக்கப்பட்டிருந்தது.

 

இந்தச் சிறிய சடங்கு, அந்தச் சின்னத்தில் பொறிக்கப்பட்ட பெயர்கள் ஆகியவற்றால் உத்வேகம் பெற்று FALLEN ASTRONAUTS என்ற புத்தகத்தை விண்வெளி சரித்திரத்தை எழுதி வரும் எழுத்தாளர்களான காலின் பர்கெஸ், கேட் டூலன் மற்றும் பெர்ட் விஸ் ஆகியோர் எழுதி இப்போது வெளியிட்டுள்ளனர்.

 

Fallen Astronauts Memorial

Fallen Astronauts Memorial

இந்த 14 வீரர்களின் வரலாறையும் இந்தப் புத்தகம் விரிவாகச் சொல்கிறது. இவர்கள் எப்படி இன்னுயிரைத் தியாகம் செய்ய நேர்ந்தது என்பதை நூல் உருக்கமாக விளக்குகிறது இவர்களில்  பலர் விண்ணில் பறக்கும் போது இறக்கவில்லை.

 

விளாடிமிர் கொமாரோவ் தனது சோயுஸ் 1 கலம் பிரதான பாராசூட் சரியாக வேலை செய்யாததால் விபத்துக்குள்ளாகி பூமியில் மோதி மரணமடைந்தார்.

சோயுஸ் 11 கலமானது சல்யுட் என்ற விண்வெளி ஸ்டெஷனிலிருந்து விடுபட்டு வெளி வரும் போது ஒரு கசிவினால் காபினில் அழுத்தம் குறைந்து போகவே மூச்சுத் திணறி மரணமடைந்தனர்.

 

அபல்லோ 1 விண்கலப் பயணத்தை மேற்கொள்ளவிருந்த கஸ் க்ரிஸாம், எட் ஒய்ட், ரோஜர் காஃபீ ஆகியோர் பறப்பதரற்கு முன்னாலேயே தரை சோதனை ஒன்றின் போது விபத்துக்குள்ளாகி இறந்தனர்.

 

மற்ற அனைவரும் விமான விபத்து, நோய்வாய்ப்படல், கார் விபத்து ஆகியவற்றால் மரணமடைந்தனர். இதில் முதன் முதலாக விண்ணீல் பறந்த யூரி ககாரின் விமான விபத்து ஒன்றில் இறந்ததாக அறிவிக்கப்பட்டது.

 

இது தவிர இன்னும் பல வீரர்களும் உயிர்த் தியாகம் செய்துள்ளனர். ஆனால் அவர்கள் பெயர்கள் சந்திரனில் உள்ள நினைவுப் பலகையில் இல்லை.

 

உதாரணமாக ரஷிய வீரர் க்ரிகோர் நெல்யுபோவ் என்ற ரஷிய வீரரைக் கூறலாம். 1963இல் இராணுவ பாதுகாப்பு ரோந்துப் படையுடன் ஏற்பட்ட மோதலால் இவர் விண்வெளித் திட்டத்திலிருந்து நீக்கப்பட்டார். 1966இல் ரயில் முன் குதித்ததாலோ அல்லது தற்செயலாக ரயிலின் முன்னால்  வீழ்ந்ததாலோ மரணமடைந்தார். 1986ஆம் ஆண்டு வரை இவரை ரஷியா விண்வெளி வீரராக அங்கீகரிக்கவில்லை.

 

 newton apple

இப்படி பல சுவையான விஷயங்களை ஃபாலன் அஸ்ட்ரானட்ஸ் நூல் தருகிறது. நூலின் விலை 2300 ரூபாய்!

ஆண்டு தோறும் நினைவு நாள் என்று ஒரு நாளை அமெரிக்கா அனுசரித்து வருகிறது. அன்று விண்வெளிப் பயணத்திற்காக தங்களின் இன்னுயிரைத் தியாகம் செய்தோரை நினைவு கூர்ந்து அஞ்சலி செய்கிறது.  இதில் நாஸாவில் பணிபுரியும் அனைவரும் கலந்து  கொள்வது வழக்கம்.

 

இந்த விண்வெளி வீரர்களின் நினைவைப் போற்றி நாமும் கூட அஞ்சலி செய்வோமே!

 

 

அறீவியல் அறிஞர் வாழ்வில் .. . 

பிரபல விஞ்ஞானியான ஐஸக் நியூட்டன் வாழ்வில் ஏராளமான சுவையான சம்ப்வங்கள் உண்டு. அவற்றில் சில:

ஐஸக் நியூட்டனின் இளம் வயதில் நடந்தது இது. மற்ற சிறுவர்கள் எல்லோரும் விளையாடிக் கொண்டிருக்கும் போது அவர்களுடன் விளையாடாமல் ஐஸக் நியூட்டன் மரத்தால் பல்வேறு  மாடல்களில் கட்டிடங்களைக் கட்டிக் கொண்டிருந்தார். இந்த மாடலில் ஒரு காற்றாலை  (windmill) மாடலும் அடக்கம். இதை வீட்டின் கூரையில் பொருத்திப் பார்த்த போது அற்புதமாக அது வேலை செய்தது!

 

சிறுவனாக இருந்த போதே அவர் ஒரு ஒரிஜினல் டார்ச் லைட்டைத் தானாகவே செய்தார். பேப்பரினால் ஆன இது மடக்கி வைத்துக் கொள்ளக் கூடியது. அதைத் தன் பாக்கெட்டில் மடித்து வைத்துக் கொள்வார் அவர். பள்ளிக்குச் செல்லும் போது காலையில் இருள் சூழந்த குளிர்காலத்தில் அவர் இதை உபயோகிப்பது வழக்கம்!

 newton 3

சின்ன வயதிலேயே ‘சன் டயல் என்ப்படும் சூரிய கடிகாரத்தில் அபார மோகம் நியூட்டனுக்கு! அவர் அறை முழுவதும் சூரிய ஒளியால் நேரத்தைக் காட்டும் அடையாளங்கள் ஆங்காங்கே குறிக்கப்பட்டிருக்கும். இதனால் மணி, அரை மணி, கால் மணி உட்பட குறித்த நேரத்தை அவரால் சரியாக அறிய முடிந்தது. இதனால் சூரிய கணநிலை நேரம், சம இரவு நாள் உள்ளிட்ட அனனத்தையும் அவர் அறிந்தார்.

 

விஞ்ஞானியாக இருந்த போதே அரசாங்கத்தின் நாணயசாலைக்கு அவர் பெரிதும் உதவினார். போலி நாணயங்கள் பிரிட்டனில் உலவி வந்ததை நீக்க வழிமுறைகளைக் கண்டு கண்காணிப்பாளராக இருந்ததோடு தீவிரமான சீர்திருத்த  முறைகளை அமுல் படுத்தி கள்ள நாணயங்களை அவர் அறவே ஒழித்தார்.

 newton 1

அவர் வாழ்வில் சுவையான் சம்பவங்கள் இது போல இன்னும் ஏராளம் உண்டு!

**********************

 

விண்வெளியில் ஒரு சிறைச்சாலை?! (Post No.3116)

space-court

Written by S NAGARAJAN

 

Date: 3 September 2016

 

Time uploaded in London: 5-28 AM

 

Post No.3116

 

Pictures are taken from various sources; thanks.

 

 

26-8-16 பாக்யா இழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை

 

 

விண்வெளியில் ஒரு சிறைச்சாலை?!

.நாகராஜன்

 

 

        குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டே ஆக வேண்டும்  -லெமனி ஸ்னிக்கட்

 

 space-law-

விண்வெளியில் சுற்றுலாப் பயணம் என்பது நிச்சயமாகி விட்ட நிலையில் பல்வேறு விஷயங்களைப் பற்றி இப்போதே கவலைப் படுகின்றனர் விண்வெளி ஆர்வலர்கள்.

குறிப்பான ஒன்று விண்வெளிச் சட்டம் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி!

 

 

அறிவியல் புனைகதை என்றே வைத்துக் கொண்டாலும் கூட, விண்வெளியில் பறக்கும் போது விண்கலத்தில் இருக்கும் ஒருவர் பணத்திற்காகவோ அல்லது புகழுக்காகவோ தன்னுடன் கூடப் பறக்கும் ஒருவருக்குத் தீங்கை இழைத்து விட்டால்? குற்றவாளி எப்படி எந்த நாட்டுச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுவார், தண்டிக்கப்படுவார்?

 

கிறிஸ்டோபர் ஜே நியூமேன் என்பவர் இந்த விஷயத்தைக் குறித்து மிகத் தீவிரமாக ஆராய்ந்து தனது யோசனைகளைத் தெரிவித்துள்ளார். இவர் பிரிட்டனில் உள்ள சண்டர்லேண்ட் பல்கலைக்கழகத்தில்  பொதுச் சட்டம் பற்றிப் போதிக்கும் பேராசிரியர்.

 

 

விண்வெளிச் சுற்றுலா பெரிய அளவில் நடக்கும் போது அனைவருமே நல்லவர்களாகத் தான் இருப்பார்கள் என்று சொல்ல முடியாதல்லவா என்பது அவரது கேள்வி.

விண்வெளி வீரர்களைத் தேர்ந்தெடுக்கும் போது பின்பற்றப்படும் கடுமையான விதிகளை சுற்றுலாப் பயணிகளின் மீது பின்பற்ற முடியாதல்லவா?

வர்ஜின் காலக்டிக் என்ற  நிறுவனம் இப்போதே பயணிகளை விண்வெளிக்கு அழைத்துச் செல்லும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட ஆரம்பித்து விட்டது.

 

 

இப்படிப்பட நிறுவனங்கள் பெருகி விடும் போது தங்களின் லாபத்திற்காக அனைத்துத் தரப்பு மக்களையும் அதிகமாக ஈர்த்து விண்வெளிப் பயணத்தில் ஈடுபட வைப்பதிலே தான் அவைகள் குறியாக இருக்கும்.

சட்டம் ஒழுங்கை யார் விண்வெளியில் பராமரிப்பது?

 

ஐக்கிய நாடுகள் சபையின் மூலமாக ஆயிரத்தி தொள்ளாயிரத்து அறுபதுகளில் அவுடர் ஸ்பேஸ் ட்ரியடி (Outer Space Treaty)   என்ற ஒரு ஒப்பந்தத்தில் நூறு நாடுகள் கையெழுத்திட்டன. இதன்படி விண்வெளியில் அணு ஆயுதத்தைப் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டது. அத்துடன் அந்தந்த நாட்டின் விண்கலம் சேதம் அடைந்தால் அதுவே மக்களின் உயிருக்கும் உடமைக்கும் பொறுப்பேற்க வேண்டும் என்பதும் வலியுறுத்தப்பட்டது.

 

 space_law

     இத்துடன் சரி.  குற்றங்களைப் பற்றி அந்த ஒப்பந்தத்தில் ஒன்றுமே இல்லை. 1991இல் மனிதனால் இயக்கப்படும் விண்கலத்தில் பின்பற்றப்பட வேண்டிய விதிகள் என்று ஒரு வரைவு விதிமுறை உருவாக்கப்பட்டது,

அதில் விண்கலத்தின் காப்டன் யாரோ அவருக்கு அதில் பயணிக்கும் அனைவரும் கட்டுப்பட்டவர்கள் என்பது நிர்ணயிக்கப்பட்டது. விண்கலத்தின் இதர பணியாளர்கள் விண்பயண பணிகளைக் கண்காணிக்கும் டைரக்டருக்கு கீழ்ப்படிய வேண்டும் என்பதும் நிர்ணயிக்கப்படது.

 

 

1963ஆம் ஆண்டு டோக்கியோ கன்வென்ஷன் விதிமுறைகள் என்ற சட்டம் விமானத்தின் பைலட் அதில் பயணம் செய்யும் பயணிகளின் மீது அவர்கள் ஒழுங்காக நடக்காத பட்சத்தில் எந்த ஒரு நடவடிக்கையையும் உசிதம் போல எடுக்கலாம் என்று அனுமதி தந்துள்ளது.

 

 

ஆனால் இந்த விமானப் பயணச் சட்ட விதிகள் மட்டும் விண்வெளியில் பறக்கும் போது போதாது என்கிறார் நியூமேன்.

 

 

ஒரு விண்கலத்தில் பல தேசத்து பயணிகள் பறக்கிறார்கள். அந்தக் கலம் ரஷிய கலம் என்று வைத்துக் கொள்வோம். அதில் பறக்கும் ஜெர்மானியர் ஒருவர் ஒரு இத்தாலியரின் மீது ஒரு குற்றத்தை இழைத்து விட்டார் என்று வைத்துக் கொள்வோம். இப்போது ஜெர்மானிய தேசத்தின் சட்டமே பொருந்தும் – இப்போதுள்ள பன்னாட்டு விமானப் பயண சட்ட விதிகளின் படி!

 

 

இந்தச் சட்டம் போதாது, விண்வெளியில் இழைக்கப்படும் குற்றங்கள் பற்றி பன்னாட்டு விண்வெளி நிலையம் ஒரு வழிகாட்டுதலைத் தரலாம் என்பது நியூமேனின் யோசனை.

பன்னாட்டு விண்வெளி நிலையக் கமாண்டரே அவரது கலத்தில் உள்ள அனைவருக்கும் பொறுப்பு. அவரில் ஆரம்பித்து ஒரு சங்கிலித் தொடர் போல ஆணைத் தொடர் நிர்ணயிக்கப்பட வேண்டும். விண்வெளிப் பயணிகளுக்கென ஒரு தனியான சட்டம் உடனடியாக இயற்றப்பட வேண்டும். இவை போன்ற யோசனைகளை நியூமேன் முன் வைக்கிறார்

குறுகிய காலப் பயணத்திற்கு இந்தச் சட்டங்கள் பொருந்தலாம். ஆனால் மிக நீண்ட காலப் பயணங்களுக்கு?

குற்றம் இழைத்தவர்களை என்ன செய்வது. இதற்கும் நியூமேன் ஒரு தீர்வை முன் வைக்கிறார்.

 

 

விண்வெளியில் ஒரு சிறைச்சாலை அமைக்கப்பட வேண்டும். குற்றம் இழைத்தவரை அதில் அடைத்து விட வேண்டும். அனைவரும் ஒப்புக் கொள்ளும் வகையில் அவருக்குத் தண்டனை விதிக்கப்பட வேண்டும்.

 

 

ஆனால் இந்த நெடுந்தொலைவுப் பயணங்கள் எல்லாம் சமீபத்தில் நடைபெற வாய்ப்புகள் இருக்கிறதா? இல்லை. அப்படிப்பட்ட பயணங்களை மேற்கொள்ளப் போகிறவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட மிகவும் அரிதான சில வீரர்களே

ஆகவே குறுகிய காலப் பயணங்களுக்கான குற்றச் சட்ட விதிகளை உடனே உருவாக்க வேண்டும் என்பது தான் இன்றைய பரபரப்பான வேண்டுகோள்!

 

 

பூமியில் சிறைச்சாலைகள் இருப்பது போதாது என்று விண்வெளியில் ஒரு சிறைச்சாலையா?! விண்வெளி க்ரைம், விண்வெளி சிறைச்சாலை என்பதெல்லாம் கேட்பதற்கே வியப்பாக இருக்கிறதல்லவா?

 gazzaniga

 Picture of Michael S.Gazzaniga, Split Brain Research

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ,,

 

மைக்கேல் எஸ் கஜானிகா (Michael S. Gazzaniga தோற்றம் 12-12-1939)) என்பவர் சாண்டா பார்பாராவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் பணியாற்றும் உளவியல் பேராசிரியர்.  உலகின் முதல் நம்பர் மூளையியல் நிபுணர். பெரிய விஞ்ஞானியும் கூட. அங்கு அவர் மனம் பற்றிய ஆராய்ச்சிக்கு ஒரு ஆய்வு மையத்தை ஏற்படுத்தியுள்ளார்.அவர் தான் முதல் முதலில் ஸ்பிளிட் ப்ரெய்ன் எனப்படும் மூளையின் இருவித செயல்பாடுகளைக் கண்டறிந்தார். இதற்காக ஏராளமான பரிசோதனைகளை அவர் நோயாளிகளின் மீது மேற்கொண்டார்.

ஏராளமான விசித்திரமான சோதனை முடிவுகளை அவர் கண்டு உலகிற்குக் கூறினார் அது அனைவரையும் பிரமிக்க வைத்தது டபிள்யூ. ஜே என்ற ஒருவர் இரண்டாம் உலக மகா யுத்தத்தின் போது தலையில் துப்பாக்கியின் முனையினால் அடிக்கப்பட்டு காயம் அடைந்தார். அதிலிருந்து அவருக்கு அடிக்கடி வலிப்பு  வர ஆரம்பித்தது. அவருக்கு ஒரு ஆபரேஷன் செய்ய வேண்டியிருந்தது.     

 

 

     அதைச் செய்வதற்கு முன்னால் கஜானிகா  அவரது மூளை செயல்பாட்டை ஆராய விரும்பினார்.  அவர் கண்களால் காண முடியாதபடி அவர் கையில் பல பொருள்கள் கொடுக்கப்பட்டன. இடது மற்றும் வலது பக்க பார்க்கும் தளங்களை கஜானிகா சோதித்தார். அவர் மிகவும் சரியாகப் பொருள்களை இனம் கண்டார். ஆபரேஷன் பின்னர் நடத்தப்பட்டது. ஆபரேஷனுக்குப் பின்னால் அவர் மீண்டும் சோதனைக்கு அழைத்து வரப்பட்டார். அவருக்குப் பல விதமான எழுத்துக்கள் மற்றும் வர்ணங்கள் இடது பக்க மற்றும் வலது பக்க பார்க்கும் தளங்களில் காண்பிக்கப்பட்டன.    

rightleftbrain-mine

        ஆச்சரியப்படும் விதமாக இடது பக்க பார்க்கும் தளமானது வலது பக்க மூளையால் செய்முறைப் படுத்தப்பட்டது. அதே போல வலது பக்க பார்க்கும் தளமானது இடது பக்க மூளையால் செய்முறைப்படுத்தப்பட்டது. இடது பக்க மூளையே மொழி பற்றிய அறிவை நல்குகிறது!

 

 

     சோதனைக்கு உட்பட்டவரின் மூளைப் பகுதியான கார்பஸ் கலோஸம் பல்வேறு விதமான முரண்பாடுகளை அவரை அடையச் செய்து விட்டது. உதாரணமாக அவரது வலது கையை இடது பக்க மூளையும் இடது கையை வலது பக்க மூளையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. இந்த இரு மூளைகளுக்கு இடையே ஒரு வித தகவல் தொடர்பும் இல்லை.

 

 

       இதனால் அவர் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல.காரின் கதவை அவரது இடது கை திறக்க முனைந்த போது அவரது வலது கையோ அதைத் தடுத்தது.

 

      இப்படிப்பட்ட சோதனைகளின் அடிப்படையில் தான் ஸ்பிளிட் ப்ரெய்ன் (Split Brain) பற்றிய கண்டு பிடிப்பையும் இடது மற்றும் வலது பக்க மூளையின் செயல்பாட்டையும் கஜானிகா உலகிற்கு அறிவித்தார். மூளை பற்றிய புதிய கண்டுபிடிப்பை உலகம் அறிந்து பிரமித்தது.

TalesfromBoth hc c (2)

 

**********

 

விடுமுறையைக் கண்டுபிடித்தது யார்? (Post No.3096)

swaminatha
படம்:- லண்டன் துர்கை கோவிலில் திரு. சுவாமிநாத சிவாச்ச்சாரியார்

Compiled by London Swaminathan

 

Date: 27 August 2016

 

Time uploaded in London: 10-49 AM

 

Post No.3096

 

Pictures are taken from various sources; thanks for the pictures.

 

 

லண்டனுக்கு வருகை புரிந்த மாயூரம் சுவாமிநாத சிவாச்சாரியார் அவர்களைச் சந்தித்து 45 நிமிடங்கள் பேட்டி கண்டேன் (வீடியோவை தனியாக வெளியிடுகிறேன்). பல புதிய விஷயங்களை அவர் கூறியது வியப்பளித்தது.

 

விடுமுறைகளைக் கண்டுபிடித்து உலகிற்கு அறிமுகப் படுத்தியது இந்துக்களே!

அதுவும் மாதத்துக்குக் குறைந்தது எட்டு நாள் விடுமுறையை அமல் படுத்தியதும் இந்துக்களே!!

 

கணக்கிடு கருவி (கால்குலேட்டர்) இல்லாமலே எளிதில் 1000 வரை எண்ணும் முறையைக் கற்பித்ததும் இந்துக்களே.

 

படித்த பாடங்களை முறையாக ரிவிஷன் REVISION செய்ய கற்றுக் கொடுத்ததும் இந்துக்களே!

new-moon-january

படம்:– அமாவாசை, அஷ்டமி, பௌர்ணமி நிலவு

நான் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் “இந்துக்கள் சந்திரனை வழிபடுவது ஏன்? “ — என்று பிறை வழிபாடு பற்றி எழுதிய கட்டுரையில்

 

அஷ்டமி மற்றும் அமாவாசை பௌர்ணமி போன்ற நாட்களில் கடல் பொங்குவது, நாள் தோறும் அலைகள் ஏறி, இறங்குவது பற்றிக் குறிப்பிட்டேன். அதில் பூமியைப் போலவே உடலிலும் 70 சதவிகிதம் தண்ணீர் இருப்பதால் இந்துக்கள் சில நாட்களை விடுமுறையாக அறிவித்ததைக் குறிப்பிட்டிருந்தேன் அது பற்றி சுவாமிநாத சிவாசாரியாரிடம் கேட்டேன்:–

 

 

இதோ அவரது கருத்துக்களின் சுருக்கம்.

 

“வெளிநாட்டினர்தான் நமக்கு வாராந்திர விடுமுறையைச் சொல்லிக் கொடுத்தனர் என்ற ஒரு கருத்து நிலவுகிறது அது சரியல்ல. மாதத்துக்குக் குறைந்து எட்டு நாட்கள் விடுமுறை மிகப் பழங்காலத்திலிருந்தே வேத பாடசாலைகளில் பின்பற்றப்படுகிறது. அந்த நாட்களை “அனத்யயன” நாட்கள் என்பர். அதாவது அத்யயனம் (வேதக் கல்வி) செய்யக்கூடாத நாட்கள். அவையாவன:-

அஷ்டமி (எட்டாவது நாள்)

பிரதமை (முதல் நாள்)

சதுர்தசி (14 ஆவது நாள்)

பௌர்ணமி

அமாவாசை

hightides

இவைகளில் அஷ்டமி (எட்டாவது நாள்), பிரதமை (முதல் நாள்), சதுர்தசி (14 ஆவது நாள்) என்பன மாதம் இரு முறை வரும். அதாவது அமாவாசைக்குப் பின்னும் பௌர்ணமிக்குப் பின்னும் வரும்.

 

 

அது சரி விடுமுறை நாட்களில் வேத பாட சாலை மாணவர்கள் என்ன செய்வார்கள்? என்று கேட்டேன்.

 

சிவாசாரியார் சொன்னதாவது:–

 

“விடுமுறை என்றால் அவர்கள் சும்மா இருக்க முடியாது. வேத பாட சாலை என்பது அங்கேயே தங்கிப் படிக்கும் வசதியுடையது. ஆகையால துணி துவைத்தல், தங்கும் இடத்தை சுத்தம் செய்தல், வேத பாடசாலைக்கோ தனி உபயோகத்துக்கோ தேவையான பொருட்களை வாங்குதல், அம்மா, அப்பா , சகோதர சகோதரிகளைச் சந்தித்து அளவளாவுதல் முதலியன நடைபெறும்.

எல்லாவற்றிற்கும் மேலாக படித்த பாடத்தை சொல்லி நினைவு கூறுதல் நடக்கும். இந்தக் காலத்தில் ரிவிஷன் REVISION செய்வது என்று சொல்லுகிறோமே, அதை முறையாகச் செயல்படுத்தியது நாம்தான்.

 

இப்படி ரிவிஷன் செய்வதை திருவை சொல்லுதல் என்பர். மீண்டும் மீண்டும் திருப்பிச் சொல்லுதலிலும் ஒரு முறை இருக்கிறது. பதம் பதமாக (சொற்களாக), இரண்டிரண்டாக, ஒரு ஐந்து வரிகளாக (பஞ்சாதி) என்றெல்லாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக வேதத்தை , புத்தகம் இல்லாமல், வாய்மொழியாகக் கற்பிப்பர். இதை அனத்யயன தினங்களில் சொல்லிப் பார்ப்பதும், அதை ஆச்சார்யார் (ஆசிரியர்) மேற்பார்வை செய்வதும் “விடுமுறை” நாட்களில் நடக்கும்.

 

ஒவ்வொரு முறை சொல்லும் போதும் பூணூலை ஒரு விரலில் சுற்றி இப்படி ஐந்து விரகளையும் பயன்படுத்தி ஐந்து முர்றையும், பின்னர் திரும்பிவருகையில் மேலும் ஒரு சுற்று வாரியாகச் சுற்றியும் பத்து எண்ணிக்கையை முடிப்பர். இது கால்குலேட்டர் CALCULATOR இல்லாமலே கணக்கிடும் முறையாகும்.

two_tidal_bulges_earth

எனது கருத்து:

 

 

(இது போல கைவிரல்களில் உள்ள கோடுகளைக் கொண்டு வலது கையில் 100 எண்ணிக்கை வரை எண்ண முடியும். இடது கையைப் பயன்படுத்தி ஒவ்வொரு விரல் கோடுக்கும் 100 வீதம் ஆயிரம் வரை எண்ண முடியும். மூன்று வருணத்தினரும் பூணுல் போட்ட பின்னர் தினமும் மூன்று முறை 1008 அல்லது 108 தடவை காயத்ரீ மந்திரத்தை ஜபிக்க வேண்டியிருப்பதால் இப்படி நூதன கணக்கிடும்  முறைகளை இந்துக்கள் பயன்படுத்தினர்.

 

உலகிற்கே இன்று நாம் பயன்படுத்தும் எண் முறையையும், தசாம்ச முறையையும் (டெசிமல் சிஸ்டம்) கற்றுக் கொடுத்தது இந்துக்கள் என்பதைப் பார்க்கையில் இந்த கணக்கிடும் முறை வியப்பளிக்காது.

 

கடவுள் ஆறு நாட்களில் உலகைப் படைத்துவிட்டு ஏ ழாவது நாளான ஞாயிற்றுக்கிழமை ஓய்வு எடுத்ததால் ஞாயீற்றுக் கிழமை விடுமுறை என்று கிறிஸ்தவர்கள் பகர்வர்.

 

வெள்ளிக்கிழமை சூரிய அஸ்த்மனம் முதல் சனிக்கிழமை மூன்று நட்சத்திரங்கள் தெரியு ம் வரை ‘சப்பத்’ விடுமுறை என்று யூதர்கள் செப்புவர்.

பிரார்த்தனைக்கு உகந்த நாள்  வெள்ளிக்கிழமை என்று முஸ்லீம்கள் புகல்வர். இவர்கள் எல்லோருக்கும் வாரத்துக்கு ஒரு நாள் வீதம், மாதத்துக்கு 4 நாட்கள்தான் விடுமுறை.

ஆனால் இந்துக்களோ மாதத்துக்குக் குறைந்தது  எட்டு நாட்கள் என்று எப்போதோ அறிவித்தனர். இன்று உலகம் முழுதும் எட்டு நாள் விடுமுறையைப் பின்பற்றுகிறது.

 

 

பெரியவர் கூறிய விஷயங்களைப் பார்க்கையில், உலகமே நம்முடைய விடுமுறையைப் பார்த்து சிறிது மாற்றி வைத்ததை அறிய முடிகிறது.

புத்த மதத்தினர் இந்துக்களின் முறைகளை மேலை உலகத்திற்குக் கொண்டு சென்றனர். அதை ரோமன் கதோலிக்கர்கள் கன்னி மடங்களில் பயன்படுத்தினர். அதை மற்றவர்கள் பின்பற்றினர். நாம் என்றோ பயன்படுத்திய மாதம் எட்டு நாள் விடுமுறையை உலகம் சமீப காலத்தில்தான் பின்பற்றத் துவங்கியுள்ளது.

moon-7day-1838

படம்:– அஷ்டமி சந்திரன்

இப்போது பள்ளிக்கூடங்களில் பின்பற்றப்படும் ரிவிஷன் முறையை நாம் முதலில் பின்பற்றி, உலகம் முழுதும் பரப்பியுள்ளோம்.

 

இந்துக்களின் மனன சக்தி MEMORY POWER அபாரமானது எதையும் நெட்டுருப்போட்டு அதை வாய் மொழியாக ஆயிரக் கணக்கான ஆண்டுகளாகப் பரப்புரை செய்து வந்துள்ளனர்.

பூமியிலுள்ள கடல் மீதும்,  மனித உடல் மீதும் நிலவின் தாக்கத்தை அவர்கள் முன்பே அறிந்திருந்தனர்.

 

–subham–

எவரெஸ்ட் வெற்றியும் உயிர் தியாகங்களும்! (Post No.3087)

everestroutemap

Article Written S NAGARAJAN

Date: 24th  August 2016

Post No. 3087

Time uploaded in London :– 5-29 AM

 

(Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

பாக்யா 19-8-16 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை

 

 

எவரெஸ்ட் வெற்றியும் உயிர் தியாகங்களும்!

.நாகராஜன்

Mt._Everest_from_Gokyo_Ri_November_5,_2012

மேலை நாட்டினரின் மலையேறும் நோக்கமும் நமது மலையேறும் நோக்கமும் முற்றிலும்  மாறுபட்டது” –ஜம்லிங் டென்சிங் (எவரெஸ்டை வெற்றி கொண்ட டென்சிங்கின் மகன்)

 

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி வெற்றி கண்ட முதல் மனிதர் டென்சிங் நார்கே. (தோற்றம் 29-5-1914 மறைவு 9-5-1986) இருபதாம் நூற்றாண்டின் செல்வாக்குள்ள போற்றப்படும் நூறு பேர்களில் அவரையும் சேர்த்துக் கொண்டாடியது டைம் பத்திரிகை.

1953ஆம் ஆண்டு மே மாதம் 29ஆம் தேதி எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியில் சர் எட்மண்ட் ஹிலாரியுடன் அவர் ஏறினார்.

 

மேலை நாட்டினருக்கு  மலை ஏறுவது என்பது ஒரு விளையாட்டான பொழுது போக்கு. ஆனால் இந்தியா, திபத் மற்றும் நேபாளத்தில் உள்ள ஷெர்பாக்களுக்கோ அது ஒரு வழிபாடு போல. எவரெஸ்ட் அருகில் உள்ள இடத்தை அவர்கள் புனிதத் தாய் என்று போற்றி வழிபட்டு வருகின்றனர்.

 

எவரெஸ்ட் வெற்றியைப் பற்றி டென்சிங் கூறுகையில், “நான் முயன்றேன். ஏழு  முறை முயன்றேன். தாயின்  மீது தவழத் துடிக்கும் சேயைப் போல. முடிவாக அவள் வெற்றியை அருளினாள் என்று கூறினார்.

 

எவரெஸ்ட் சிகரத்தில் ஏற முயன்று பலியானோர் எண்ணிலடங்காத பேர்கள்.

 

1996ஆம் ஆண்டு மே மாதம் 10 மற்றும் 11ஆம் தேதிகளில் பனிப்புயலில் சிக்கி எட்டு பேர் உயிரிழந்தனர். கோரமான விபத்து என்ற பெயரை இது பெற்றது. எவரெஸ்ட்  மீது ஏறுவதில் வருடா வருடம் பலர் உயிரிழப்பது வழக்கமாக ஆனது.

 

1924 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 4ஆம் தேதி பிரிட்டனைச் சேர்ந்த மலையேறும் வீரர்களான ஜார்ஜ் மல்லாரி மற்றும் ஆண்ட்ரூ இர்வின் ஆகியோர் எவரெஸ்ட் சிகரத்தின் மிக உயரத்தில் உள்ள முகாமிற்குச் சென்று தங்கினர்.

 

நான்கு நாட்கள் கழித்த பின்னர் அவர்கள் வடகிழக்கே சிகரத்தின் கீழ் செங்குத்தாக 800 அடிக்குக் கீழாக இருப்பதைக் கண்டதாக சிலர் பின்னர் கூறினர். ஆனால் அப்போது பிரம்மாண்டமான மேகக் கூட்டம் அவர்களை மூடியது.

பின்னர் அவர்கள்  இருவரையும் யாரும் காணவே இல்லை.

அவர்கள் என்ன ஆனார்கள்? புரியாத புதிராக இருந்தது.

அறிவியல் ஆய்வாளர்கள் அந்த இருவரும் 29029 அடி உயரத்தில் மலை உச்சியை அடைந்து கீழே இறங்கி வரும் போது ஜூன் 9ஆம் தேதி இறந்திருக்கலாம் என்று கருத்துத் தெரிவித்தனர்.

 

1933ஆம் ஆண்டு இர்வினின் ஐஸ் கோடரி 28907 அடியில் கண்டு பிடிக்கப்பட்டது. 1999ஆம் ஆண்டு மலாரியின்  உடலை எவரெஸ்டின் வடக்குப் பகுதியில் ஒரு மலையேறும் குழு கண்டது. சில நாட்களில் அதே பகுதியில் இன்னொரு உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அது இர்வினா என்ற சந்தேகமும் எழுந்தது.

 

ஆனால் அவர்கள் எவரெஸ்ட் உச்சியை அடைந்தனரா என்பதை யாராலும் உறுதி செய்ய முடியவில்லை.

எவரெஸ்டில் டென்சிங்கின் வெற்றியைக் கொண்டாட வெற்றி கண்ட 50ஆண்டு விழாவின் போது டென்சிங்கின் மூன்றாவது  மனைவிக்குப் பிறந்த டென்சிங்கின்  மகன், ஜம்லிங் டென்சிங் (Jamling Tenzing) எவரெஸ்ட் மீது ஏறினார். அவருக்குத் துணையாக சர் எட்மண்ட் ஹிலாரியின் மகனும் கூடச் சென்றார். தன்னை ஒரு நாளும் மலை ஏறுவதை தன் தந்தை ஊக்குவிக்கவில்லை என்று கூறிய ஜம்லிங், “ஆனால் அவன் ஒரு நாள் நிச்சயம் எவரெஸ்ட் மீது ஏறி விடுவான் என்று மற்ற அனைவரிடமும் டென்சிங் தன்னைப் பற்றிக் கூறியதாகத் தெரிவித்தார்.

 

 india-1953-conquest-of-mount-everest-set-fine-mint-20096-p

டென்சிங் பற்றிய ‘எவரெஸ்ட் என்ற ஆங்கிலத் திரைப்படம் இமேஜ் மேக்ஸிமம் என்பதன் சுருக்கமான ஐமேக்ஸ் உத்தியில் 1998ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டது. இதைத் தயாரிக்க ஜம்லிங் எவரெஸ்ட் பெரிதும் உதவினார். அவருக்கு 25000 டாலர்கள் தரப்பட்டது. ‘பணம் பெரிதல்ல, ஷெர்பாக்களைப் பற்றி உலக மக்கள் அறிய அது உதவியதே, அதைத் தான் பெரிதாக நினைக்கிறேன், என்று கூறி மகிழ்ந்தார் ஜம்லிங்.

45 நிமிடமே ஓடும் எவரெஸ்ட் படம் ஐமேக்ஸ் உத்தியில் தயாரிக்கப்பட்ட படங்களிலேயே அதிக வசூலை அள்ளிக் குவித்தது.

 

 

‘டச்சிங் மை ஃபாதர்ஸ் சோல் (Touching  my Father’s Soul) என்ற புத்தகத்தை அவர் எழுதி 2001 ஆம் ஆண்டில் வெளியிட்டார். புத்தகம் அமோகமாக விற்பனையைக் கண்டது, 18 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. ஜம்லிங் இப்போது மலையேறும் வீரர்களுக்கான பயிற்சியைத் தருவதற்கான ஒரு மையத்தை அமெரிக்காவில் நடத்தி வருகிறார்.

அத்துடன் உத்வேகம் ஊட்டும் சிறந்த மோடிவேஷனல் பேச்சாளராகவும் திகழ்கிறார்.

 

 

தந்தைக்கு ஏற்ற பிள்ளை என்று உலகம் அவரை பாராட்டுகிறது.

 

புனிதமான அன்னை எனக்கு வெற்றியை அருளினாள் என்று ஜம்லிங்கும் இமய மாதாவைத் தொழுது போற்றி வணங்குகிறார்!

 

rod2

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ,,

 

தென் துருவத்தில், அண்டார்டிகா குளிர் என்பது பயங்கரமான குளிர்! வான்பௌதிக இயலாளரான ரோட்னி  மார்க்ஸ் (astro physicist – Rodney Marks) என்பவர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர். அண்டார்டிகாவில் உள்ள அமெரிக்க ஆய்வு மையமான அமுண்ட்ஸென் ஸ்காட் நிலையத்தில் தென் துருவ ஆய்வுப் பணிக்காகச் சென்றார்.

 

2000ஆம் ஆண்டு மே மாதம் 12ஆம் தேதியன்று திடீரென்று அவர் மரணமடைந்தார். யாருக்கும் ஒன்றும் புரியவில்லை.

 

குளிரோ கடும் குளிர். விமானம் பறப்பது என்பது எளிதான காரியமல்ல.ஆகவே அவரது உடல் வசந்த காலம் வரும் வரை அங்கேயே பாதுகாப்பாக வைக்கப்பட்டு பின்னர் நியூஜிலாந்திற்கு பருவநிலை சீரடைந்த பிறகு கொண்டு வரப்பட்டது. பிரேத பரிசோதனையில் அவர் மெதனால் விஷத்தால் மரணமடைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

 

 

 உடனடியாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அந்த நிலையத்தில் இருந்த 49 பேரிடம் நியூஜிலாந்து போலீஸ் விசாரணையை மேற்கொண்டது. அவர் நிச்சயம் தற்கொலையும் செய்து கொள்ளவில்லை, யாரும் அவருக்கு மெதனால் கொடுக்கவும் இல்லை என்றும் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் தனக்குத் தெரியாமலேயே தற்செயலாக மெதனாலை சாப்பிட்டிருக்கலாம் என்று  முடிவு செய்யப்பட்டது. 2008ஆம் ஆண்டு மீண்டும் ஒரு அறிவியல் ஆய்வை பிரேத பரிசோதனை நிபுணர் ஒருவர் மேற்கொண்டு முந்தைய முடிவை உறுதி செய்தார்.

 rodney marks

 

அறிவியல் அறிஞர் ஒருவரின் முடிவு தென் துருவத்தின் முதல் கொலை கேஸாக அமைந்து பிரபலமானது.

********************

 

 

 

கம்பனின் அதிசய உவமை! புறச்சூழல் உண்மை!!(Post No.3065)

Dead fish floated in the green waste water.

Written by London swaminathan

Date : 15th August 2016

Time uploaded in London: 17-56

Post No.3065

Pictures are taken from various sources; thanks for the pictures.

 

கம்பராமாயணம் ஒரு தேன் கூடு;  பிழியப் பிழிய தேன் வரும். ஆனால் என் போன்றோர் இலக்கிய நயத்துக்காக நூல்களைப் படிப்பதில்லை. அதிலுள்ள விஞ்ஞான உண்மைகளையும் தத்துவ உண்மைகளையும் ஆழத் துருவி ஆராய்வதே நோக்கம். ஆரணிய காண்டத்தில் மாரீசன் வதை படலத்தில் கம்பன் ஒரு அசாதாரண உவமையைக் கையாளுகிறான். இதைப் பார்க்கும் போது 1200 ஆண்டுகளுக்கு முன்னரே புறச் சூழல் அறிவு இருந்திருப்பது புலனாகிறது.

 

இதோ பாட்டும் அதன் பொருளும்:–

 

வெஞ்சுற்றம் நினைந்து உகும் வீரரை வேறு

அஞ்சுற்று மறுக்குறும் ஆழ் குழி நீர்

நஞ்சு உற்றுழி மீனின் நடுக்குறுவான்

நெஞ்சு உற்றது ஓர் பெற்றி நினைப்பு அரிதால்

 

பொருள்:

மாயமான் வடிவத்தில் சென்று சீதையை ஏமாற்று — என்று ராவணன் ஏவியபோது மாரீசன் மன நிலை பற்றிய பாடல் இது:–

 

“இராவணன் செயலால தனக்கும் தன்னைச் சார்ந்தோருக்கும் அழிவு வரும் என்பதை மாரீசன் உணர்ந்தான். தனது அன்பிற்குரிய சுற்றத்தாரை நினைத்து வருந்தினான். மானிட வீரர்களான இராம இலக்குவரை எண்ணி மனதில் குழப்பம் அடைந்தான். இது எப்படி இருந்ததென்றால்….

ஆழமான பள்ளத்தில் உள்ள நீர் நச்சுத் தனமை அடையும் போது, அதில் வாழும் மீன் அந்த நீரில் இருந்தாலும் சரி, நிலத்தில் இருந்தாலும் சரி இறப்பது உறுதி. அந்த மீன்கள் எப்படி நடுங்குமோ அப்படி மாரீசன் நடுங்கினான். அந்த மாரீசனின் மன நிலையை நம்மால் முடியாத அளவுக்கு அவன் பயப்பட்டான்”

இந்தப் பாட்டில் இரண்டு விஷயங்கள் உள்ளன. முதலாவது இலக்கிய நயம்: விஷ நீரில் மீன் இருந்தாலும் சாகும். வெளியே போனாலும் சாகும். அது போல மாரீசன் மாய மான் வேடம் போடாமல் சென்றால் ராவணன் கொன்றுவிடுவான். மாய மான் வேடம் போட்டாலோ ராமன் கொன்று விடுவான்! இருதலைக் கொள்ளி எறும்பின் நிலை!

fishes 2

இரண்டாவது அறிவியல் விஷயம்:

 

ஒரு விஷயத்தை உவமையாகப் பயன்படுத்த வேண்டுமானால் அது மக்களுக்குப் புரிய வேண்டும்; தெரிந்திருக்க வேண்டும்.

 

நீர் நிலைகள், குறிப்பாக ஆழமான கிணறுகள், அசுத்தமடைவதும், அதனால் மீன்கள் இறப்பதும் மக்களுக்குத் தெரிந்திருந்தது. ஒரு வேளை நீரை அசுத்தம் செய்யாதீர்கள்! நடுக்குறும் மீனின் கதி , உங்களுக்கும் வரும் என்று கம்பன் அறிவுரை பகர்கிறான் போலும்.

 

எது எப்படியாகிலும் இப்பேற்பட்ட உவமை அரிதிலும் அரிது. கம்பன் கையாளும் உவமைகளைப் பட்டியலிட்டுப் பார்த்தால் அவன் மேதா விலாசமும் நமக்கு வெள்ளிடை மலையென விளங்கும்.

 

–SUBHAM–