தூயவராக உங்களை நீங்கள் மாற்றிக் கொள்ளுங்கள்! – 4 (Post No.7258)

Written by S NAGARAJAN

swami_48@yahoo.com

Date: 25 NOVEMBER 2019

Time  in London – 5-55 AM

Post No. 7258

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

நவம்பர் 23. பகவான் ஸ்ரீ சத்ய சாயிபாபா பிறந்த தினம். அவரை வழிபட்டுத் துதிப்போம்!

உரையின் முற்பகுதி : கட்டுரை எண் 7241; வெளியான தேதி 21-11-2019 இரண்டாம் பகுதி கட்டுரை எண் 7245 வெளியான தேதி 22-11-2019 மூன்றாம் பகுதி கட்டுரை எண் 7250 வெளியான தேதி 23-11-2019 பார்க்கவும்.

ஸ்ரீ சத்ய சாயிபாபா பிறந்த நாள் செய்தி : தூயவராக உங்களை நீங்கள் மாற்றிக் கொள்ளுங்கள்! – 4

ச.நாகராஜன்

அன்புத் திருவுருவங்களே!

இதயத் தூய்மையை அடைய முயலுங்கள். இதுவே உங்களது முக்கியமான முயற்சியாக இருக்கட்டும். இதய சுத்தியுடன் நீங்கள் எதையும் சாதிக்க முடியும். இதய சுத்தியை அடைய நீங்கள் புனிதமான உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். யார் சமைக்கிறாரோ அவருக்குப் புனிதமான உணர்வுகள் இருக்க வேண்டும்.பண்டைய காலத்தில் ஆசாரமான பிராமணர்கள் தங்கள் மனைவி சமைத்த உணவைச் சாப்பிடுவதையே வலியுறுத்துவர். இதற்குக் காரணம் என்னவெனில் இல்லத்தரசிகள் தங்கள் குடும்பம் முழுவதும் நலமாக இருக்க வேண்டுமெனபதற்காகவே உணவைச் சமைப்பர். இதற்கு மாறாக நீங்கள் சமையற்காரரை நியமித்தால், கடவுளுக்குத் தான் தெரியும் என்ன உணர்வுகளுடன் உணவை அவர்கள் சமைத்தார்கள் என்று! சமைப்பவரின் புனிதமற்ற எண்ணங்கள் உணவுக்குள் புகும், அது உங்கள் மனதை விஷமாக்கும்.

அன்னம் பிரம்மா.ஆகவே அது புனிதமான உணர்வுகளுடன் தயாரிக்கப்பட வேண்டும். உடல் சுத்தம் மட்டும் போதாது. மனதும் சுத்தமாக இருக்க வேண்டும். நீங்கள் தயாரிக்கும் உணவிற்கான காய்கறிகள் தர்மமான வழியில் வாங்கப்பட்டதாக இருக்க வேண்டும். உதாரணமாக கணவன் காய்கறிகளைச் சந்தையிலிருந்து கொண்டு வருகிறான். அவன் தனது பதவி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து பணம் தராமல் அதைக் கொண்டு வந்திருக்கலாம் அல்லது விற்பனை செய்பவர்களே தவறான வழியில் அதைப் பெற்று வந்திருக்கலாம். அப்படிப்பட்ட கறிகாய்களைச் சாப்பிடும் போது உங்கள் மனம் தூய்மையை இழக்கிறது. நீங்கள் செய்யும் காரியங்களுக்கு உங்களது உணவு தான் காரணம் என்பதை நீங்கள் உணர்வதில்லை. புனிதமற்ற உணவு உங்களைப் புனிதமற்ற செயல்களைச் செய்ய வைக்கிறது.

அன்புத் திருவுருவங்களே!

 உங்களது உணவை இறைவனுக்குச் சமர்ப்பித்த பின்னரே அதை நீங்கள் உண்ணுங்கள். அப்போது தான் உணவு புனிதமாகிறது. உங்கள் புத்தியைப் பிரகாசிக்க வைக்கிறது. ஒருசமயம் சிவானந்த ஆசிரமத்தின் அருகில் ஒரு ஆசிரமத்தில் ஒரு சந்யாசி வாழ்ந்து வந்தார். அவர் ஒரு பக்தியுள்ள ஆத்மா.ஒரு நாள் வயதான ஒரு வியாபாரி அவரது இளம் மனைவி இறந்த பதினோராம் நாள், அவரிடம் ஆசிரமத்தில் உள்ளவர்களின் உணவைத் தயாரிப்பதற்காக நன்கொடை அளித்தார்.

வியாபாரி பணக்காரர் என்பதால் பெண்ணின் தந்தையை பணம் காட்டி மயக்கி பெண்ணை மணந்து கொண்டார். தனது விதியை நொந்தவாறே அந்தப் பெண் அந்த வியாபாரியின் வீட்டில் வாழ்ந்து வந்தாள். ஒரு நாள் தான் வாழ்ந்து வரும் வாழ்க்கையின் மீது வெறுப்புற்று அவள் கங்கையில் குதித்துத் தன் உயிரை விட்டாள். வியாபாரி அவளது ஈமச் சடங்கைச் செய்வதற்காக பதினோராம் நாள் அதைச் செய்து கொண்டிருந்தார்.

ஆசிரமத்தில் சமைக்கப்பட்ட உணவை ஏற்கக்கூடாது என்ற பழக்கம் இருந்தது.ஆகவே அந்த வியாபாரி சமைப்பதற்கு ஆகும் செலவைக் கொடுத்தார்.ஆசிரமத்தின் இதர சகாக்களுடன் அந்த சந்யாசியும் உணவை உண்டார். அன்று அவருக்கு உறக்கம் சரியாக வரவில்லை. ஒரு இளம் பெண் அவரது கனவில் வந்தாள்.

அவர் தனக்குத் தானே சொல்லிக் கொண்டார் இப்படி: “ புலனின்பத்திற்காக நான் ஒருபோதும் ஏங்கியதில்லை, அப்படிப்பட்ட எண்ணமும் எனக்கு வந்ததில்லை. அப்படியிருக்க எனக்கு ஏன் கெட்ட கனவு வரவேண்டும்?”

அவரது தியானத்திலும் அதே காட்சியை அவர் கண்டார்.

ஆகவே சச்சிதானந்தம் என்ற பெயர் கொண்ட தன் குருவிடம் சென்று தனது பிரச்சினையைச் சொன்னார்.

“ஸ்வாமி! நான் ஏன் அப்படிப்பட்ட புனிதமற்ற காட்சிகளைக் கண்டேன்?”அவரது குரு அவரைக் கவலைப்பட வேண்டாம் என்று கூறினார்.

அவர் வியாபாரிக்குச் செய்தி அனுப்பி அவரை வரச் சொன்னார். அவரிடம் பேசினார். அவரது மனைவியின் அகால மரணத்திற்கான காரணத்தை அறிந்தார். ஈமச்சடங்கிற்காக சமைத்த உணவை அந்த சந்யாசி உண்டதாலேயே அவள் அவரது காட்சியில் தோன்றுகிறாள் என்பதை அவர் தெரிந்து கொண்டார்.

அன்றைய தினத்திலிருந்து அந்த சந்யாசி சமைத்த உணவைச் சாப்பிடுவதை நிறுத்தி விட்டு பழம் மற்றும் பாலை மட்டும் உண்டு வாழ ஆரம்பித்தார்.

பிக்ஷான்னம் தேஹ ரக்ஷணார்த்தம்!

( தேஹ ரக்ஷணத்திற்கு உணவு அவசியம்)

ஒரு கார் ஓடுவதற்கு பெட்ரோல் தேவை. அதே போல உடல் நன்கு இருக்க உணவு தேவை. சில சமயம் நீங்கள் கெட்ட கனவைக் காண்கிறீர்கள், தியானத்தின் போது கெட்ட காட்சியைக் காண்கிறீர்கள். இது புனிதமற்ற உணவின் விளைவு.

ஆகவே சமைப்பதற்கு முன்னர், அதற்கான சாமான்கள் நல்ல வழியில் பெறப்பட்டதா என்று விசாரிக்க வேண்டும்.

பின்னரே உணவு உண்ணத் தக்கதாக ஆகிறது.

உணவை உட்கொள்ளும் முன்னர் நீங்கள் பிரார்த்திக்க வேண்டும்.

ப்ரஹ்மார்ப்பணம் ப்ரஹ்மஹவிர்

ப்ரஹ்மாக்னௌ ப்ரஹ்மணாஹுதம்

ப்ரஹ்மைவ தேன கந்தவ்யம்

ப்ரஹ்ம கர்ம சமாதினா

புனிதமான உணர்வுகளுடன் நீங்கள் பிரார்த்தித்தால் உணவு தூய்மையாகிறது.

ஒரு சமயம் விக்ரமாதித்த  மஹாராஜா ஒரு பெரிய சபையைக் கூட்டினார். அவர் ஒரு கேள்வியைக் கேட்டார்: “ புத்தி பெரிதா, மேதஸ் பெரிதா?”

சபையில் பங்கு கொண்டோர் மேதஸ் தான் பெரிது என்று கூறினர்.

 ஆனால் அவர்களின் கருத்தை விக்ரமாதித்தன் ஏற்கவில்லை. அவர் கூறினார், “புத்தியே பெரிது, ஏனெனில் அது ஆத்ம ஞானத்தைக் கொண்டிருப்பதால் அதுவே பெரிது.”

புத்திக்ரஹ்யமதிந்திரியம் (புத்தி மனத்தையும் புலனையும் கடந்திருப்பதாகும்)

***

உரை தொடரும்

திருத்தலங்களில் வேடுபறி நிகழ்ச்சி நடக்கக் காரணம் என்ன? (Post No.7254)

picture by Lalgudi Veda

Written by S Nagarajan

swami_48@yahoo.com

Date: 24 NOVEMBER 2019

Time  in London – 7-39 am

Post No. 7254

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

ச.நாகராஜன்

ஆண்டுதோறும் பல தலங்களிலும் திருவிழாக் காலத்தில் வேடுபறி என்று ஒரு நிகழ்ச்சி நடக்கிறது. அதற்குக் காரணம் என்ன?

சுந்தரமூர்த்தி நாயனார் வரலாறைப் படித்தால் அதற்கான காரணம் நன்கு விளங்கும்.

பரவையார் மீது காதல் கொண்டார் சுந்தரமூர்த்தி நாயனார். ஆகவே நிறையப் பொருள் சம்பாதிக்க விரும்பினார்.

கொடுங்கோளூருக்குச் சென்று அங்கு சேரமான் பெருமாள் நாயனார் கொடுத்த நிதிக்குவைகளைச் சுமந்து கொண்டு அடியவர்கள்  முன் நடக்க சுந்தரர் திருமுருகன்பூண்டித் தலத்திற்கு வந்தார்.

திருமுருகன்பூண்டி என்ற திருத்தலம் இன்றைய திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. அவிநாசி-திருப்பூர் சாலையில் அவிநாசியிலிருந்து 6.5 கிலோமீட்டர் தொலைவில் இத்திருத்தலம் உள்ளது.

இங்குள்ள ஆலயம் முருகநாதேசுவரர் ஆலயமாகும்.

சுந்தரரிடமிருந்து தமிழ்ப்பாடல் பெற விரும்பிய முருகாவுடையார்,  சிவகணங்களை வேடுவர் உருவத்தில் அனுப்பி சுந்தரரிடமிருந்து வழிப்பறி செய்து வருமாறு தூண்ட அவர்கள் அவ்வாறே செய்தனர்.

இதனை அறிந்த நாயனார் முருகன்பூண்டி ஆலயத்தை அடைந்து ஒரு திருப்பதிகம் பாடி இறைவனின் அருளை வேண்டினார்.

சிவபிரான்  பறித்த பொருளைத் திருப்பித் தருமாறு கட்டளையிட கோபுரவாயிலில் கணநாதர்கள் குழுமி பறித்த பொருளைத் திருப்பித் தந்தனர்.

ஒவ்வொரு தலத்திலும் திருவிழாக் காலத்தில் இந்த நிகழ்ச்சி தான் வேடுபறி என்ற பெயரில் இன்றளவும் நடைபெற்று வருகிறது.

இந்த நிகழ்ச்சியை கொங்குமண்டல சதகம் தனது பதினைந்தாம் பாடலில் போற்றிப் புகழ்கிறது.

பாடல் :

கனத்த வடிக்கொண் முலையாள் பரவைதன் காதலினாற்

சொனத்தி லடிக்கொளும் பேராசைச் சுந்தரர் சொற்றமிழ்க்கா

அனத்தி னடையுடை யாள்பாகன் றென்முரு காபுரிசூழ்

வனத்தி லடித்துப் பறித்தது வுங்கொங்கு மண்டலமே

பாடலின் பொருள் : பரவையாரின் மீது கொண்ட அளவற்ற காதலினால் பொருளாசை கொண்ட சுந்தர மூர்த்தி நாயனாரிடம் பதிகம் கேட்க விரும்பிய திருமுருகன்பூண்டித் திருத்தலம் உறையும் எம்பெருமான், நாயனாரின் திருவடிகூட்டத்தார்கள் சுமந்து வந்த பொன்முடிப்புகளைப் பறித்துக் கொண்டதும் கொங்கு மண்டலமே என்பதாம்.

இந்த நிகழ்ச்சியை திரு அவிநாசிப் புராணம் இப்படிக் கூறுகிறது:

மூடியசெஞ் சடைவுடையீர் முருகவனம் பதியுடையீர்

கூடிவெகு மூர்க்கருடன் கொள்ளைகொண்ட பொருளல்ல

தேடுமலை வளநாடு புரந்தருளுச் சேரலர்கோன்

பாடுபெற வளித்தபொருள் பறிகொண்டீ ரெனப் பகர்ந்தார்

சுந்தரமூர்த்தி நாயனார் இத்திருத்தலத்தில் ஒரு பதிகம் பாடினார். அதில் ஒரு பதிகத்தின் முதல் பாடல் இது:

கொடுகு வெஞ்சிலை வடுகவேடுவர் விரவலாமைச் சொல்லித்

திடுகு மொட்டெனக்குத்திக் கூறைகொண்டு ஆறலைக்குமிடம்

முடுகுநாறிய வடுகர் வாழ் முருகன்பூண்டி மாநகர்வாய்

இடுகு நுண்ணிடை மங்கைதன்னொடும் எத்துக்கு இங்கிருந்திர் எம்பிரானீரே.

பிரசித்தி பெற்ற திருமுருகன்பூண்டித் தலத்தில் தான் துர்வாச மஹரிஷி கற்பகவுலகிலிருந்து மாதவி மரத்தைக் கொண்டு வந்தார் என்பதும் ஒரு குறிப்பிடத் தகுந்த விஷயம்.

***

சத்ய சாயிபாபா பிறந்த நாள் செய்தி (Post No.7250)

Written by S NAGARAJAN

swami_48@yahoo.com

Date: 23 NOVEMBER 2019

Time  in London – 6-48 AM

Post No. 7250

நவம்பர் 23. பகவான் ஸ்ரீ சத்ய சாயிபாபா பிறந்த தினம். அவரை வழிபட்டுத் துதிப்போம்!

உரையின் முற்பகுதி : கட்டுரை எண் 7241; வெளியான தேதி 21-11-2019 இரண்டாம் பகுதி கட்டுரை எண் 7245 வெளியான தேதி 22-11-2019 பார்க்கவும்.

ஸ்ரீ சத்ய சாயிபாபா பிறந்த நாள் செய்தி : தூயவராக உங்களை நீங்கள் மாற்றிக் கொள்ளுங்கள்! – 3

ச.நாகராஜன்

சாயி நாமம் மதுரம் மதுரம்

சாயி ரூபம் திவ்யம் திவ்யம்

சாயி மஹிமா அற்புத சரிதம்

சதா நினைப்போம் சாயி நாமம் – ச.நாகராஜன்

ஸ்ரீ சத்ய சாயிபாபா பிரசாந்தி நிலையம், புட்டபர்த்தியில், பிறந்த நாளையொட்டி 23-11-2002 அன்று ஆற்றிய அருளுரையின் தொடர்ச்சி …

பெண்களும் வெளியில் சென்று பணம் சம்பாதித்தால் பணப் பிரச்சினையை தீர்க்க முடியும் ஆனால் வீட்டை எடுத்துக் கொண்டால் அங்கு பல பிரச்சினைகள் இருக்கும். தைரியத்திற்கும் உறுதிக்கும் பெண்களே உருவகங்கள்.  மனத்திட்பத்துடன் அனைத்துக் கஷ்டங்களையும் எதிர்கொண்டு குடும்பத்தின் கௌரவத்தை அவர்கள் காக்கின்றனர். க்ரிஹிணி என்ற சொல்லின் கௌரவத்திற்கேற்ப அவர்கள் வாழ்கின்றனர்.

ஞானத்தை அடைய மனிதன் சத்தியத்தின் வழியைக் கடைப்பிடிக்க வேண்டும்.

சத்யம் ப்ரூயாத்

ப்ரியம் ப்ரூயாத்

ந ப்ரூயாத் அஸத்யம் அப்ரியம் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

(உண்மையைப் பேசுங்கள், இனிமையாகப் பேசுங்கள்; விரும்பத்தகாத அஸத்தியத்தைப் பேசாதீர்கள்)

இந்த மூன்றும் ஒழுக்கம், தர்மம், ஆன்மீக மதிப்புகளை முறையே குறிக்கிறது.

அனைத்துமே சத்தியத்தில் அடங்கியிருக்கிறது.

நீங்கள் கடவுளைத் தேடி கோவில்களுக்குச் செல்ல வேண்டியதில்லை.

ஸத்தியமே கடவுள்.

எங்கும் பரந்திருப்பது அது. அது எல்லோருக்கும் அளவில்லாத வளத்தை அளிக்கிறது. ஆகவே ஸத்தியத்தின் வழியில் நடப்பீர்களாக. தர்மத்தை கைக்கொண்டு நடப்பீர்களாக. ஞானத்தைப் பெறுங்கள்.

இந்த சாதனைக்கு சரியான உணவை எடுத்துக் கொள்வதே முதல் படியாகும்.

அன்னம் ப்ரம்மம்.

அன்னமே ப்ரம்மத்தின் வடிவம் என்பதை நினவில் கொள்ளுங்கள்.

ரஸோ விஷ்ணு.

உடலெங்கும் பரவுகின்ற அன்னத்தின் சாரமே விஷ்ணு சொரூபம்.

போக்தா தேவோ மஹேஸ்வர:

உணவை எடுத்துக் கொள்பவரே சிவன் – அதுவே சிவ தத்துவம் ஆகும்.

இந்தப் புனிதமான உணர்வுகளை மனிதன் கொள்ளும் போது அவன் சிவனாகவே ஆகிறான்.

துறவுக்கே சிவன்

சிவன் முழு தியாகத்திற்கும் துறவுக்கும் அடையாளச் சின்னமாகிறார்.

இந்த உலகில் ஒவ்வொருவரும் தேஹாபிமானம் கொண்டிருக்கிறார். ஆனால் சிவனுக்கோ தேஹாபிமானம் இல்லை. அவருக்கு ஆத்மாபிமானம் ஒன்றே இருக்கிறது (ஆத்மாபிமானம் – அனைவர் மீதும் அன்பு)

(இங்கு பாபா ஒரு தெலுங்குப் பாடலைப் பாடுகிறார்)

தெலுங்குப் பாடல் :

ஜடாமகுடத்துடன் சந்திரனை அவர் தலையில் கொண்டிருக்கிறார்.

ஜடாமகுடத்தினிடையே கங்கை பாய்ந்தோடுகிறது.

அவரது ஒளி பொருந்திய ஞானக் கண் நெற்றியின் நடுவில் இருக்கிறது.

அவரது இளஞ்சிவப்பான கழுத்து நீல வண்ணம் பொருந்திய மலராக இருக்கிறது.

அவரது உடல் முழுவதும் விபூதி பரவியிருக்கிறது.

அவரது நெற்றி ஒரு குங்குமப் பொட்டுடன் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது.

அவரது சிவப்பு உதடுகள் வெற்றிலைச் சாரால் ஒளி விடுகிறது. வைரம் பதிக்கப்பட்ட தங்கத் தோடுகள் அவரது காதுகளில் அசைந்தாடுகின்றன. அவரது முழு உடலும் தெய்வீக் ஒளியுடன் பிரகாசிக்கிறது.

(தெலுங்குப் பாடல் முடிகிறது)

ஒரு முறை பார்வதி சிவபிரானை அணுகி தமக்கென ஒரு இல்லம் வேண்டுமென்ற தனது ஆசையைக் கூறினார். பார்வதி கூறினார் :” எம்பிரானே! திருவோடேந்தி வீடுதோறும் பிக்ஷைக்காக அலைகிறீர்கள்.  நமக்கென ஒரு இல்லம் வேண்டும் என்பதைப் பற்றி யோசிப்பதே இல்லை. இருக்க ஒரு சரியான உறைவிடம் இல்லாமல் நாம் எப்படி வாழ்வது?”

சிவபிரான் அவரை சமாதானப் படுத்தினார் இப்படி :” பாரவதி! வீட்டைக் கட்டுவதால் என்ன பிரயோஜனம்?  நாம் அதற்குள் நுழைவதற்கு முன்பேயே எலிகள் அதைத் தமது வீடாக ஆக்கிக் கொள்ளும். எலிகளைக் கட்டுப்படுத்த ஒரு பூனை தேவைப்படும்.  பூனைக்குப் பால் கொடுக்க ஒரு பசு தேவைப்படும். இப்படியாக நமது தேவைகள் பெருகிக் கொண்டே போகும். நமக்கு மன அமைதி போய்விடும். ஆகவே அப்படிப்பட்ட ஆசைகளைக் கொள்ள வேண்டாம்.”

அவர் துறவின் திருவுருவம். முழுத் துறவு ஒருவரை ஞானத்திற்கு அழைத்துச் செல்லும். இதுவே மனித குலத்திற்கு சிவன் தரும் உபதேசம்.

ஞானம் என்பது என்ன? சிந்தனை, சொல், செயல் இந்த மூன்றிலும் தூய்மையாக இருப்பதே ஞானம். உங்கள் உடல், மனம், செயல் தூய்மையானதாக இருக்க வேண்டும்.

இதன் அடிப்படையில் தான், ‘மனித குலத்தைச் சரியாகப் படிக்க மனிதனைப் படிக்க வேண்டும்’ என்று சொல்லப்படுகிறது.

இதன் அர்த்தம் எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றும் ஒன்றாக இணைந்திருப்பதே மனிதத்வம் என்பதாகும்.

இது மிக எளிமையானது. பின்பற்றுவதற்கு சுலபமானது.

ஆனால் யாருமே இந்த வழியில் நடக்க முயற்சியை எடுப்பதில்லை.

கங்கை அருகிலே பாய்ந்து கொண்டிருந்தாலும் யாருமே அதில் குளித்து உடலைச் சுத்தம் செய்து கொள்வதில்லை.

மக்கள் தங்களுக்குள்ள வசதிகளைப் பயன்படுத்திக் கொள்வதில்லை.

இது முழு சோம்பேறித்தனம்; தமோ குணத்தின் அடையாளம்.

இந்த விலங்குத் தன்மையிலிருந்து நீங்கள் விடுபட வேண்டும், மனிதத்வத்தை அபிவிருத்தி செய்து தெய்வீக அளவிற்கு உயர வேண்டும்.

  (உரை தொடர்கிறது)

***

அவன் கண்ட உண்மை! (Post 7246)

Written by S NAGARAJAN

swami_48@yahoo.com

Date: 22 NOVEMBER 2019

Time  in London – 6-37 AM

Post No. 7246

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

by ச.நாகராஜன்

அவன் ஒரு பிராமணன்.

வேதம் படித்தவன்.

உபநிஷதம் படித்தவன்.

இதிஹாஸ புராணம் படித்தவன்.

கை நிறையக் காசுள்ளவன்.

தங்கக் காசுகளும் வெள்ளிக் காசுகளும் கை நிறையப் புரண்டன.

ஆனால் அவன் வேதத்தை மதித்தானில்லை.

ஓம்கார நாதத்தை ஓதினானில்லை.

சங்கீதத்தை ரசித்தானில்லை.

மனைவி மீது எரிந்து விழுந்தான்.

மகன் மகளைத் திட்டினான்.

அண்டை அயலாரை விரட்டினான்.

எதிர்ப்பட்டவரிடம் சண்டை போட்டான்.

அனைவரும் அயர்ந்து போயினர்.

அவனிடம் வெறுப்பு. காழ்ப்பு.எரிச்சல்.

இந்த சூழ்நிலையில் அவன் கைப்பணம் கரைந்தது.

வெள்ளியும் தங்கமும் போன இடம் தெரியவில்லை.

சாப்பாட்டுக்கு வழியில்லை.

சண்டையிட ஆளில்லை.

மனைவி மக்கள் ஒதுங்கினர்.

பசி, தாகம்!

அந்த அந்தணன் நடந்தான்.

மலைப் பாதை ஆரம்பம்.

அதுவரை நடந்தான்.

களைப்போ களைப்பு.

அங்கிருந்த வழிகாட்டிக் கல்லைப் பார்த்தான்.

 மேலே போக வழி என்பது போல

அம்புக்குறி ஒன்று அதில் பொறித்திருந்தது.

பொறி தட்டியது அவனுக்கு.

அந்தக் கல் சுமைதாங்கிக் கல் போலத் தோன்ற

அதன் மீது அவன் அமர்ந்தான்.

இளைப்பாறினான்.

களைப்பாறினான்.

மெல்ல எழுந்தான்.

மேலே போகும் பாதை.

வனாந்தரம் தான்.

பறவைகள் கீச்சிட்டன.

அதன் ஒலி அமர கானமாக இருந்தது.

அவன் உற்றுக் கேட்டான்.

என்ன அருமையான கீத ஒலி.

அவன் சுற்றும் முற்றும் பார்த்தான்.

அடடா,என்ன அழகு!

என்ன ஒரு பசுமை!

அருகில் இருந்த வனத்தோட்டம்

அருகில் சென்றான்.

மாம்பழங்கள்.

பழுத்த வாழைப்பழங்கள்.

வா வா என்று அழைத்தன.

உண்டான், மகிழ்ந்தான்.

அட என்ன ஒரு ருசி!

அருகில் ஒரு தடாகம்.

மானச சரோவர் போலத் தோற்றம்.

பளிங்கு போன்ற நீர்.

கையால் அள்ளிக் குடித்தான்.

அமிர்தமும் தோற்றது.

மேலே நடந்தான்.

யோசித்தான்.

என்ன காரணம், இதற்கெல்லாம்?

கர்மா? ஊஹூம்!

தர்மம் ? ஊஹூம்!

அவனே தான் இவன்!

இவனே தான் அவன்!

என்ன மாற்றம்?

ஆஹா! ஞானம் உதித்தது.

உபநிடதம் கை கொடுத்தது!

மனம்! மனமாற்றம்!

ஏமாற்றம் போனது.

பார்வையில் மாற்றம்!

பழுதெலாம் போச்சு!

ஆனந்தம் உதித்தாச்சு!

பல நாட்கள் சுற்றினான்.

அங்கு புத்துணர்வு கொண்டான்.

புதிய உறவு கொண்டான்.

மலை, அணில், குயில், தோட்டம்,

துரவு, தடாகம், தாமரை .. ஆனந்தம்.

ஒரு நாள் ஊர் நோக்கி நடந்தான்.

அனைவரும் பயந்தனர்.

வந்துட்டான்…டா!!

ஆனால் அவன் சிரித்தான்.

அவனை நோக்கி எள்ளி நகையாடினர்.

அவன் அவர்களைப் பார்த்து நகைத்தான்.

அவனை ஏசினர். அவன் சிரித்தான். ரசித்தான்.

மனைவி உறுமினாள். மக்கள் பொருமினர்.

அவன் இலேசாகச் சிரித்தான்.

மனம்… மனம்.. இலேசாக இருந்தது.

மன ஏவ மனுஷ்யானாம்!

காரணம் பந்த மோக்ஷயோ:

மனமே மனிதன்! அவனது உறவுக்கும்

துறவுக்கும் அதுவே காரணம்!

உண்டென்றால் உண்டு!

இல்லையென்றால் இல்லை!

உறவென்றால் உறவு!

துறவென்றால் துறவு!

ஆனந்தம் பரமானந்தம்.

பிரம்மானந்தம்!

அனைவரும் அவனைப் பார்த்தனர்.

அதிசயம் கொண்டனர்.

அந்த அந்தணனா இவன்?

இவனா அவன்!

எப்படி இப்படி ஒரு மாற்றம்?

உங்களிடம் நல்ல ஒரு தோற்றம்!

சொல்லுங்கள்!

அவன் சிரித்தான்; மெல்லச் சொன்னான்.

மனமே எல்லாம்! மனமே மார்க்கம்!

மனமே சொர்க்கம்; மனமே நரகம்!

மனம்.. மனம்.. மனம்.

பாடியவாறே தன் வழி போனான்.

மேலே போகும் வழியை நோக்கி

அவன் ந.. ட.. ந்.. தா…ஆ..ஆ..ன்!

***

QUEEN ANUPAMA INSPIRED FAMOUS DELWARA TEMPLE AT Mt. ABU (Post No.7248)

Delwara (Dilwara) Jain Temple at Mt Abu in Rajasthan

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 22 NOVEMBER 2019

Time  in London – 15-31

Post No. 7248

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

Queens and Princesses- Part 2


1.Mayanalla or Minaladevi was the daughter of Jeyakeshin, King of Kadamba Dynasty in Karnataka. Her son was Siddharaja Jayasimha, 1094-1143 CE. She is known from records as a ruler.


2.Naikidevi
She was the mother of Bala Mularaha. When Ghuri Mohammed invaded Gujarat, Mularaja was a child . Keeping him on her lap Naikidevi fought and defeated the invaders.

3.Anupama of Gujarat


Like Kuntavai inspired Rajaraja to build the grandest temple in Thanjavur in Tamil Nadu, Anupama inspired her husband Tejapaala to build the famous Delaware temple on Mt Abu (Rajasthan). Tejapaala and Vastupala were brothers and shrewd politicians. Many famous temples of Gujarat were built by the Pala brothers. Anupama advised them in running the administration.

(Wikipedia add:–Vastupala was married to Lalita and Vayajalladevi (or Sokhuka or Saukhyalata). Tejapala was married to Anupama and Suhavadevi (also spelled Suhadadevi). Anupama was a daughter of Dharaniga, a counselor to the brothers, and his wife Tribhuvanadevi)

Gupta Queen


Prabhavati Gupta was the daughter of Chandragupta Vikramaditya. She was the Chief Queen of Rudrasena of Vakataka dynasty, 376 CE

Queens of Orissa


Bhaumakaras ruled the lower parts of Orissa between the ninth and eleventh centuries. We know at least six queens in their regime.


Queen Tribhuvana Mahadevi


King Lalitahara’s wife and daughter of Rajamalla, a southern Naga Chief. She ruled the country for several years because her son was a little boy when her husband died.


Queen Tribhuvana Mahadevi II
Wife of King Shubakara IV. Her real name was Prithvi Mahadevi. Daughter of King of Kosala.

Queen Gauri Mahadevi
and

Dandi Mahadevi

After the death of King Shubakara, four queens occupied the Bhaumakara throne. They ruled between 1011 and 1018

Queen Bakula Mahadevi

And

Dharma Mahadevi – She is the last known ruler of Bhumakaras in Orissa

Xxx

Heroic queens of Kashmir

Didda of Kashmir ruled between 958 and 1003 CE. She was daughter of King Simharaja. She was married to Kshemagupta. Diidda dominated over him and so he was called Diddakhsema.

Centuries later another lady Kotadevi (1338 CE) adorned the throne of Kashmir.

Silla was another heroic woman of Kashmir who led the defeated forces of her king to safety. But she was killed later in a fighting.

Alexander the great killed the king of Swat region. His name was Asakenos (Aswaka?) according to Greek writers. When he died in battle his wife or mother Kleopis (Kripi in Sanskrit) defended the fort and died in the ensuing battle according to Curtius, Greek writer.

–to be continued

தூயவராக உங்களை மாற்றிக் கொள்ளுங்கள்! – 2 பாபா பிறந்த நாள் செய்தி (Post No.7245)

Written by S Nagarajan

swami_48@yahoo.com

Date: 22 NOVEMBER 2019

Time  in London – 5-18 AM

Post No. 7245

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

நவம்பர் 23. பகவான் ஸ்ரீ சத்ய சாயிபாபா பிறந்த தினம். அவரை வழிபட்டுத் துதிப்போம்!

உரையின் முற்பகுதி : கட்டுரை எண் 7241; வெளியான தேதி 21-11-2019 -பார்க்கவும்.

ஸ்ரீ சத்ய சாயிபாபா பிறந்த நாள் செய்தி : தூயவராக உங்களை நீங்கள் மாற்றிக் கொள்ளுங்கள்! – 2

ச.நாகராஜன்

ஸ்ரீ சத்ய சாயிபாபா பிரசாந்தி நிலையம், புட்டபர்த்தியில், பிறந்த நாளையொட்டி 23-11-2002 அன்று ஆற்றிய அருளுரையின் தொடர்ச்சி …

அன்னம் பிரம்மா; ரஸோ விஷ்ணு: போக்தா தேவோ மஹேஸ்வர: (அன்னம் பிரம்மா; சாரம் விஷ்ணு; அதை எடுத்துக் கொள்பவர் மஹேஸ்வரன்)  என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இந்த மூன்றும் உடல், மனம், செயல் ஆகிய மூன்றையும் முறையே குறிக்கிறது.

மனஸ்யேகம் வாசஸ்யேகம் கர்மண்யேகம் மஹாத்மன:

(எவருடைய எண்ணங்கள், வார்த்தைகள் மற்றும் செயல்கள் ஒன்றாக இருக்கிறதோ அவர்களே மஹாத்மாக்கள்)

சிந்தனை, சொல், செயல் ஆகிய மூன்றும் ஒன்றாக இருப்பதே ரிதம்.

இவை பிரம்மா, விஷ்ணு, மஹேஸ்வரன் ஆகியோரை பிரதிநிதித்வம் செய்கின்றன.

ஆகவே ஒவ்வொருவரும் இந்த மூன்றில் தூய்மையை அடைய முயற்சிக்க வேண்டும்.

உதாரணத்திற்கு சிம்னி கண்ணாடியை எடுத்துக் கொள்வோம்.

அதை ஒரு விளக்கின் மேல் பொருத்தும் போது, சிறிது நேரம் கழித்துப் பார்த்தால் ஒரு மெல்லிய கரும் புகைப் படலம் கண்ணாடியில் படிந்திருபப்தைப் பார்க்கிறோம்.

இதன் பயானாக வெளிச்சம மங்கலாக ஆகிறது.

கண்ணாடியை நன்கு சுத்தம் செய்யும் போது தான், வெளிச்சத்தைத் தெளிவாகப் பார்க்க முடிகிறது.

நீங்கள் செய்ய வேண்டியது இதைத் தான்!

கண்ணாடியில் படிந்திருக்கும் மெல்லிய கரும்புகைப் படலத்தை உங்கள் மனதில் உருவாகும் அகங்காரத்துடன் ஒப்பிடலாம்.

உங்கள் மனதில் உள்ள அகங்காரத்தினால் திவ்ய ஞான ஜோதியை உங்களால் பார்க்க முடியவில்லை.

அகங்காரம் உங்கள் மனதில் எப்படி நுழைகிறது?

உண்மையின் வழியை நீங்கள் விடும் போது அது நுழைகிறது.

உங்களுடைய உண்மையான சொரூபத்தை நீங்கள் உணராமல் இருக்கும் போது நீங்கள் அகங்காரம் கொண்டவராக ஆகிறீர்கள்; உலகியல் சிந்தனைகளையும் உணர்ச்சிகளையும் உருவாக்குகிறீர்கள். அகங்காரத்தை விரட்ட, உலகியல் சிந்தனைகளையும், உணர்ச்சிகளையும் நீங்கள் கட்டுப்படுத்த வேண்டும். அகங்காரத்தை அகற்றாமல் ஞானத்தைப் பெறுதல் இயலாது.

ஆத்மாவின் ஒளி பொருந்திய பிரகாசத்தின் காட்சியை அடைய அகங்காரம் என்னும் கரும்புகைப் படலத்தை உங்கள் மனதிலிருந்து அகற்ற வேண்டும்.  இதுவே உபயபாரதியின் உபதேசம்.

பெண்களுக்கு  ஆன்மீக அறிவைக் கொடுத்தவாறே அவர் கங்கை நதிக்கரையோரம் ஒரு ஆசிரமத்தில் வசித்து வந்தார். பல பெண்மணிகள் அவரது சிஷ்யைகள் ஆயினர். ஒவ்வொரு நாள் காலையும் அவர்கள் கங்கை நதிக்குச் சென்று நீராடுவர்.

செல்லும் வழியில் பிரம்ம ஞானி என்று மக்களால் அழைக்கப்படும் ஒரு சந்யாசி வாழ்ந்து வந்தார்.

ஒரு சின்ன மண்குடத்தின் மீது அவருக்கு மிகுந்த ஒட்டுதல் இருந்தது, அதில் தான் அவர் நீரை நிரப்பி வைத்திருப்பார்.

ஒரு நாள் அந்த மண்குடத்தைத் தலையணையாக வைத்து அவர் படுத்திருந்தார்.

தனது சிஷ்யைகளுடன் அந்த வழியே சென்ற உபயபாரதி அந்தக் காட்சியைப் பார்த்து, “ஞானம் அடைந்தவராக இருந்த போதிலும் அவரிடம் ஒரு சிறிய குறை இருக்கிறது. உலகைத் துறந்து விட்ட போதிலும் தலையணையாக உபயோகித்து தன்னுடைய மண்குடத்தின் மீது அவர் ஒட்டுதலுடன் இருக்கிறார்.” என்று குறிப்பிட்டார்.

இதைக் கேட்ட சந்யாசி கோபம் கொண்டார். உபயபாரதியும் அவரது சிஷ்யைகளும் கங்கையிலிருந்து திரும்பி வரும் போது தான் அந்த மண்குடத்தின் மீது ஒட்டுதலாக இருக்கவில்லை என்பதைக் காண்பிக்க

 அந்த மண்குடத்தைச் சாலையில் தூக்கி எறிந்தார்.

இதைப் பார்த்த உபயபாரதி சொன்னார்; “ நான் அவரிடம் அபிமானம் என்ற ஒரு குறை தான் இருக்கிறது என்று நினைத்தேன். இப்போது அவரிடம் இன்னொரு குறையும் இருப்பதை உணர்கிறேன். அகங்காரமும் அவரிடம் இருக்கிறது. அபிமானத்துடன் அகங்காரமும் இருக்கும் ஒருவர் எப்படி ஞானியாக முடியும்?”

அவரது கூற்று சந்யாசியின் கண்ணைத் திறந்தது.

உபயபாரதி நாடெங்கும் பயணித்து ஞான மார்க்கத்தை உபதேசித்தார்;  பரப்பினார்.

பெண்கள் இயல்பாகவே விஞ்ஞானம், சுஞ்ஞானம், ப்ரஜ்ஞானம் ஆகியவற்றின் திருவுருவங்கள். அவர்கள் அனைத்து நற்குணங்களின் பெட்டகங்கள். ஆனால் கலியுகத்தின் தாக்கம் காரணமாக, பெண்கள் இழிவாகப் பார்க்கப்படுகின்றனர். இது ஒரு மகத்தான தவறு.  அவர்களுக்குரிய மரியாதையுடன் அவர்கள் நடத்தப்பட வேண்டும். இன்று பெண்கள் ஆண்களுக்கு ஈடாக வேலைகளைச் செய்யப் போட்டி போடுகிறார்கள். என்றாலும் அப்படிச் செய்வதற்கு முன், அவர்கள் தங்கள் இல்லத்தின் தேவைகளைச் சரியாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

தெலுங்குப் பாடல்

“எல்லாப் பெண்மணிகளும் வேலை பார்க்கச் சென்று விட்டால், இல்லங்களை யார் பார்த்துக் கொள்வார்கள்?

கணவனும் மனைவியும் இருவரும் அலுவலகம் சென்று விட்டால், வீட்டை யார் பராமரிப்பார்கள்?

பெண்கள் இதர குழந்தைகளுக்குக் கல்வி கற்றுக் கொடுக்கச் சென்று விட்டால், அவர்கள் குழந்தைகளுக்கு யார் கற்றுக் கொடுப்பார்கள்?

ஆண்களைப் போலப் பெண்களும் தங்கள் கையில் புத்தகத்தை எடுத்துக் கொண்டு சென்றால், சமையலறையில் யார் வேலை பார்ப்பார்கள்?

சம்பாதிப்பது சில பணப்பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும், ஆனால் அது எப்படி வீட்டுப் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும்?

நீங்கள் தீவிரமாக இதைச் சிந்தனை செய்து பார்த்தால் அலுவலகம் செல்லும் பெண்மணிகளுக்கு சந்தோஷமே இல்லை.”

   தெலுங்குப் பாடலை பாபா பாடினார்.

            பாபாவின் உரை தொடரும்

****

தூயவராக உங்களை நீங்கள் மாற்றிக் கொள்ளுங்கள்! – 1 (Post No.7241)

Written by S Nagarajan

swami_48@yahoo.com

Date: 21 NOVEMBER 2019

Time  in London – 8-31 am

Post No. 7241

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

நவம்பர் 23. பகவான் ஸ்ரீ சத்ய சாயிபாபா பிறந்த தினம். அவரை வழிபட்டுத் துதிப்போம்!

ஸ்ரீ சத்ய சாயிபாபா பிறந்த நாள் செய்தி : தூயவராக உங்களை நீங்கள் மாற்றிக் கொள்ளுங்கள்! – 1

 ச.நாகராஜன்

ஸ்ரீ சத்ய சாயிபாபா பிரசாந்தி நிலையம், புட்டபர்த்தியில் பிறந்த நாளையொட்டி 23-11-2002 அன்று ஆற்றிய அருளுரை.

உரையின் முற்பகுதி சுருக்கமாகத் தரப்படுகிறது.

யார் சூரியனை தினமும் காலையில் உதிக்கச் செய்கிறார்?

யார் தினமும் சூரியனை மாலையில் அஸ்தமிக்க வைக்கிறார்?

இரவில் மட்டும் தாரகைகள் ஏன் கண்ணைச் சிமிட்டுகின்றன?

பகலில்  ஏன் அவைகள் ஒளிந்து கொள்கின்றன?

ஒரு கணமும் ஓய்வெடுக்காமல் இடைவிடாது காற்று ஏன் வீசிக் கொண்டே இருக்கிறது, உயிர்களை வாழ வைக்கிறது!

யார் நதியை இடைவிடாது இன்பம் தரும் ஓசைகளுடனும், குமிழ்களுடனும், சலசலப்புடனும் ஓட வைக்கிறார்?

மாயையையும், படைப்பையும் உருவாக்கியது யார்?

பணம், மதம், சமூகம், தேசம் ஆகியவற்றின் அடிப்படையில் எப்படி நீங்கள் வித்தியாசத்தைப் பார்க்கிறீர்கள்?

யார் இதற்கெல்லாம் எஜமானன்?  யாருடைய ஆளுகையில் இந்த அற்புதங்களெல்லாம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது?

அவரது வார்த்தைகளைக் கேளுங்கள்!

அவரது ஆணைக்குக் கட்டுப்பட்டு நடந்து கொள்வீராக!

(தெலுங்குக் கவிதையைப் பாபா பாடி தன் உரையைத் தொடங்குகிறார்)

அன்புத் திருவுருவங்களே!

ஒவ்வொரு மனிதனும் சந்தோஷமாக இருக்கவே நினைக்கிறான். ஒவ்வொருவரும் வாழ்க்கையின் லட்சியத்தை அறியவே விரும்புகிறார்.

பத்து லட்சத்தில் ஒருவரே தன் குறிக்கோளை விடாமல் தொடர்ந்து கடைப்பிடித்து தன் லட்சியம் அடையும் வரை செல்கின்றார்.

சாமான்யரோ இந்த வழியில் தீவிரமாக முயற்சி எடுப்பதில்லை; தங்களுக்கு அப்பாற்பட்ட விஷயம் இது என்று அவர்கள் நினைக்கின்றனர். அவர்கள் உடல் ரீதியான இன்பங்களை அனுபவிப்பதிலேயே தங்கள் வாழ்க்கையைச் செலவிடுகின்றனர். உணவு, உடை, இருப்பிடம் ஆகிய மூன்று மட்டுமே வாழ்க்கையின் அம்சங்கள் என்று அவர்கள் நினைக்கின்றனர். இதை விட உயரிய குறிக்கோள் பற்றி அறிய அவர்கள் தவறி விடுகின்றனர்.

அத்வைத அனுபவமே ஞானம்

என்றும் உள்ள ஆனந்தத்தை அடைய மக்கள் பல்வேறு பாதைகளைக் கடைப்பிடிக்கின்றனர். தைத்திரீய உபநிடதம் இது பற்றி பறவையை உவமையாகக் கொண்டு கூறுகிறது. பறவையின் தலையே சிரத்தை.

இடது மற்றும் வலது பக்க இறக்கைகளே ரிதம் மற்றும் சத்யம் ஆகும்.

உடலே மஹாதத்வத்தைக் குறிக்கிறது. வால் யோகத்தைக் குறிக்கிறது.      ரிதம் என்றால் என்ன?

த்ரிகாலபத்யம் ரிதம்!

நிகழ்காலம், இறந்தகாலம், எதிர்காலம் ஆகிய மூன்று காலங்களிலும் மாறாதிருப்பதுவே ரிதம்.

சிரத்தை மிகவும் முக்கியமானது.

ச்ரத்தாவான் லபதே ஞானம்!

பகவத்கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர், “சிரத்தையுடன் இருக்கும் ஒருவர் என்னை என்னை அடைய முடியும் என்கிறார். மேலும் அவர், “நான் சிரத்தையின் உருவமாக இருக்கிறேன்” என்கிறார்.

சிரத்தை இல்லாமல் இருக்கும் ஒருவன் ஒரு சிறிய விஷ்யத்தைக் கூட அடைய முடியாது.

முக்கியமாக ஆன்மீகத்தில் சிரத்தை என்பது மிகவும் முக்கியமானது. சஞ்சலமில்லாத வலிமையான நம்பிக்கையே சிரத்தையை அடையச் செய்கிறது.

உபநிடதங்கள் சிரத்தை பற்றிய கொள்கையைப் பலவிதமாக விளக்குகின்றன.

சிரத்தை மூலமாக அடையும் ஞானமே தாரகம். (முக்தி)

சிரத்தை இல்லையேல் அது மாரகம். (தளை)

என்றுமுள்ள கொள்கையான தாரகம் பற்றி அறிந்து கொள்ள வேண்டும், பயிற்சியில் கொண்டு வரவேண்டும், பரப்பப்பட வேண்டும்.

இதுவே தைத்திரீய உபநிடதத்தின் அடிப்படை உபதேசம்.

அன்புத் திருவுருவங்களே!

தைத்திரீய உபநிடதம் வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் சிரத்தை கைக்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

ஆன்மீகத்தில் சிரத்தையே தாரக மந்திரம்.

அது சிரஞ்சீவித்வம் கொண்டது; அழியாதது.

மனிதன் ஐந்து அம்சங்களான சிரத்தா, சத்யம், ரிதம், யோகம், மஹாதத்வம் ஆகியவற்றின் மூலமாக இதயத்தைச் சுத்தப்படுத்தினால் மட்டுமே ஞானத்தை அடைய முடியும்.

ஞானம் என்பது புத்தகப் படிப்பல்ல.

அத்வைத தர்சனம் ஞானம்.

பார்க்கின்றபோது (உலகில்) இரண்டாக இருக்கின்றவற்றில் அத்வைதம் அடிநாதமாக இருக்கிறது.

இந்த அடிப்படை உண்மையைத் தான் தைத்திரீய உபநிடதம் போதிக்கிறது.

 ஆதிசங்கரர் ஜய யாத்திரை செய்த போது வட இந்தியாவில் மண்டனமிஸரர் என்ற பெரும் அறிவாளியைக் கண்டார். அவருடன் சங்கரர் ஒரு அறிவுபூர்வமான  விவாதத்தை மேற்கொண்டார்.

மண்டனமிஸ்ரரின் மனைவி உபயபாரதியும் கூட சிறந்த பண்டிதை.

ரிதம், சத்யம், மஹாதத்வம் பற்றி அவர் நன்கு அறிந்தவர்.

மண்டனமிஸ்ரர் வாதத்தில் தோற்றுவிட்டால் சந்யாசியாக வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. சங்கரர் உபயபாரதியையே மத்தியஸ்தராக இருக்கும் படி கேட்டுக்கொண்டார்.

வாதம் நடைபெறும்போது உபயபாரதி வாதத்தையும் பிரதிவாதத்தையும் நன்கு உன்னிப்பாகக் கேட்டு வந்தார். நீதியில் ஒரு தலைப்பட்சமாக இராத அவர், சங்கரர் வெற்றி பெற்றதாக அறிவித்தார்.

தனது கணவர் வாதத்தில் தோற்றதைப் பற்றி அவர் கவலை கொள்ளவில்லை.

மண்டனமிஸ்ரர் சந்யாசத்தை மேற்கொண்டார். மனைவியானதால் அவரில் பாதி என்பதற்கேற்ப – அர்தாங்கியாக இருப்பதால் – அவரும் சந்யாசத்தை மேற்கொண்டார்.

இருவரும் உலகத்தைத் துறந்து ஞானப் பாதையை போதிக்கலாயினர்.

ஞானம் அடையாத மனித வாழ்க்கைக்கு மதிப்பே இல்லை!

                            – உரை தொடரும்

மன்னர்களை வசப்படுத்திய பேரழகி (Post No.7239)

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 20 NOVEMBER 2019

Time  in London – 18-28

Post No. 7239

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

வந்திருந்த மன்னர் அனைவர்க்கும் ஆலமரத்தடி தட்சிணா மூர்த்தி போல முகம் தேஜோமயமாகியது. புளியமரத்தடி நம்மாழ்வார், அரச மரத்தடி புத்த பகவான் போல ஞான உதயம் ஏற்பட்டது. அனவவரும் அவளை வணங்கினர். அவரவர் நாட்டிற்குச் சிட்டாகப் பறந்து சென்றனர். ராஜ்ய பாரத்தை அவரவர் மகன், மகள்கள் மீது சுமத்தினர்; காடேகி துறவி ஆகி நல் வழியில் நடை போட்டனர்.

இதனால்தான் பட்டினத்தார்,

சீறும் வினையது பெண்ணுருவாகித் திரண்டுருண்டு

கூறும் முலையும் இறைச்சியுமாகிக் கொடுமையினால்

பீறும் மலமும் உதிரமும் சாயும் பெருங்குழிவிட்

டேறும் கரைகண்டிலேன் இறைவா கச்சி ஏகம்பனே – என்றார்

மந்திரங்களின் மகிமை! – 3 (Post No.7227)

Written by S NAGARAJAN

swami_48@yahoo.com

Date: 18 NOVEMBER 2019

Time  in London – 6-38 AM

Post No. 7227

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

மனிதன் வாழ்வில் பெறுவதற்கு அரிய முக்தி அடைவதற்கான மந்திரங்களும் உண்டு.

இந்த மந்திரங்களைச் சொல்வதற்கான ஏராளமான விதிகள் உண்டு.

அவற்றை நிச்சயமாக குரு மூலமாகத் தெரிந்து கொண்ட பின்னரே ஓத வேண்டும்.

மஹா ம்ருத்யுஞ்சய மந்திரம் என்பது தீர்க்க ஆயுளைப் பெறுவதற்கான மந்திரம். தீர்க்க முடியாத வியாதிகளையும் தீர்க்கும் மந்திரம் இது.

ஓம்

த்ரயம்பகம் யஜாமஹே சுகந்திம் புஷ்டிவர்த்தனம் |

உருவாருகமிவ பந்தனாத் மிருத்யோர் முக்ஷீயமாம்ருதாத் ||

மநுவை வள்ளுவர் காப்பி அடித்தாரா? (Post No.7221)

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 16 NOVEMBER 2019

Time  in London – 19-25

Post No. 7221

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

மநு நீதி நூல் – Part 45

ரெவரண்ட் ஜி.யூ. போப் முதல் அண்மையில் பேரரறிஞர் டாக்டர் இரா.நாகசாமி வரை பலரும் திர்வள்ளுவர் எழுதிய திருக்குறளில் மநுவின் கருத்துக்களும் உவமைகளும் அப்படியே இருப்பது பற்றி சுட்டிக்காட்டி வந்துள்ளனர். இமயம் முதல் குமரி வரை பாரதீய சிந்தனை ஒன்றே  

என்பதை இது காட்டுகிறது. யாரும் யாரையும் காப்பி அடிக்கவில்லாஇ; இன்னும் ஆழமாகப் போனால் மஹாபாரதத்திலும் இக்கருத்துக்கள் இருப்பதைக் காணலாம். ஆனால் அதுவோ மஹாசமுத்திரம் ஒரு லட்சம் ஸ்லோகங்கள்; இரண்டு லட்சம் வரிகள்; பத்து லட்சம் சொற்கள். யாரே அதன் கரை காண்பார்?

மநு ஸ்மிருதியின் ஒன்பதாவது அத்தியாயத்தைத் தொடர்ந்து காண்போம். முந்தைய பகுதியில் 9-220 வரை கண்டோம். இதோ தொடர்ச்சி. முதலில் புல்லட் பாயிண்ட்ஸ்- ரத்தினச் சுருக்கம்—

வள்ளுவர், நாற்பது குறட்பாக்களில் நாலு அதிகாரங்களில் (சூது, கள்ளூண்ணாமை, கயமை, ஒற்றாடல் ) சொன்ன விஷயங்களை இந்த ஸ்லோகங்களில் மநுவும் குறிப்பிடுகிறார்  . அந்த  தீமைகளை கண்டிக்கிறார். அதாவது வள்ளுவரும் மநுவும் ஒரே கருத்தைச் சொல்கின்றனர். மநுவில் இடையிடையே ஜாதிகள் பற்றி வரும். வள்ளுவத்தில் அது இல்லை. காரணம்?

மநு எழுதியது சட்டப் புத்தகம்; வள்ளுவர் எழுதியது நீதி நூல்

வள்ளுவர் எழுதியது நமக்கு 1500 ஆண்டுகளுக்கு முன்னர்; மநு எழுதியதோ அதற்கும் குறைந்தது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்! (வள்ளுவர் மற்றும் மநுவின் காலம் பற்றி முன்னரே எழுதியதைக் காணவும்)

மேலும் சில சுவையான ஸ்லோகங்கள்:-

9-221- சூதாட்டத்துக்கும், பெட்டிங் (BETTING AND GAMBLING)  எனப்படும் பந்தயம் கட்டும் போட்டிக்கும் தடை விதிக்கவும்

9-235- பஞ்ச மஹா பாதகங்கள் எவை?

9-237 முதல் — நெற்றியில் சூடு போட்டு, பச்சை குத்தி அவமானப்படுத்தல்; ஜாதியிலிருந்தும், ஊரிலிருந்தும் விலக்கி வைத்தல்

9-244- பறிமுதல் செய்த சொத்துக்களை கடலில் எறி

9-245- வருணன் நம்மைக் கவனிக்கிறான் (தொல்காப்பியத்தில் வரும் வருணன்)

9-247- நல்ல மன்னன் நாட்டில் நிலங்கள் தானாக விளையும் .(வள்ளுவனும் குறளில் 545, 559, 560 சொல்லும் அதிசயம்; காளிதாசனும் இந்த அதிசயத்தை விளம்புவான்

9-249- அப்பாவிகளைத் தண்டித்து விடாதே

9-250-  18 வகைக் காரணங்கள் (எட்டாம் அத்தியாயத்தில் 4-7 முதல் உள்ள ஸ்லோகங்களில் 18 வகைக் காரணங்கள் உள.)

9-256 – ஒப்பிடுக- குறளில் வரும் ஒற்றாடல் அதிகாரம்.

9-288- சிறைச் சாலைகளை` சாலையின் இரு புறமும் அமைக்கவேண்டும்; எல்லோரும் கைதிகளையும் அவர்கள் படும் கஷ்டங்களையும் காணட்டும்

9-258- ஜோதிடர் பற்றி

9-286, 9-329 –ரத்தினக் கற்கள் பற்றி

9-301– யுகங்களும் மன்னர்களும் பற்றிய சுவையான செய்தி

9-303- மன்னர்கள் இந்திரன், யமன் முதலிய திக் பாலகர் போல;

இதுவும் காலத்தைக் காட்டும். புறநானூறு முதலிய நூல்களில் மன்னரை சிவன், முருகன் மற்றும் இந்திரன் அக்னி, யமனுக்கு ஒப்பிடுவர். ஆனால் மநுவில் பிரம்ம, விஷ்ணு, சிவனை விட வருணன் இந்திரன், அக்னியே ஒப்புமைக்கு வரும்; மநு, காலத்தால் மிகவும் முந்தையவர். கிருஷ்ணன், பலராமன் போன்று என்று புறநானூறு சொல்லும் உவமைகள் மநுவில் இரா.)

9-313 – சான்றோரைப் பகைக்காதே; அரசு தவிடு பொடியாகிவிடும்; திருவள்ளுவரும் இதைச் சொல்லுவார்- குறள் 898, 899

9-264, 265- எந்த எந்த இடங்களை அரசன் கண்காணிக்க வேண்டும் என்ற பட்டியல்

9-270- திருடர்களுக்கு மரண தண்டனை; வள்ளுவரும் மரண தண்டனையை ஆதரிக்கும் புலவர் (குறள் 550, 1224, 1077, 1078))

9-276- திருடர்களின் கைகளை வெட்டு ( வள்ளுவர் கஞ்சர்களின் கையை முறுக்கி மூஞ்சியில் குத்தி முகவாக்கட்டைடையை நொறுக்கு என்கிறார் (குறள் 1224, 1077)

9-290- மாயா ஜால மந்திரவாதிகள், சூன்யக்காரிகளுக்கு 200 பணம் அபராதம் ( மேலை நாடுகளில் ஜோன் ஆப் ஆர்க்கை எரித்தது போல பல்லாயிரம் பெண்களை கிறிஸ்தவப் பாதிரிகள் உயிருடன் கொளுத்தி விட்டனர்)

9-292- பொற்கொல்லர்களுக்கு கடும் தண்டனை

9-294 – அரசின் ஏழு அங்கங்கள்

9-311 – குறள் (151) உவமை — அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல பொறுமை வேண்டும்; பூமாதேவியின் பொறை பற்றி சம்ஸ்கிருத நூல்கள் எல்லாவற்றிலும் உவமைகள் வரும்

9-313 முதல் – ஐந்து ஸ்லோகங்களில் பிராமணர்களின் புகழ்; புத்தரும் தம்ம பதத்தில் 26ஆவது அத்தியாயத்தில் பிராமணர்களின் புகழ் பாடுகிறார்.

9-320- க்ஷத்ரியர்கள் பிராமணர்களிடமிருந்து தோன்றினர்.

TAGS

மநு, வள்ளுவர், காப்பி அடி, ஜோதிடர் பற்றி, ரத்தினக் கற்கள், திருட்டு, மரணதண்டனை

Valluvar and Vasuki