Pictures are taken from various sources; beware of copyright rules; don’t
use them without permission; this is a non- commercial, educational blog;
posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously.
Average hits per day for both the blogs 12,000.
நவராத்திரி பிரார்த்தனை
தீமையை ஒழிக்க யுகம் தோறும்
அவதரிப்பேன்!
ச.நாகராஜன்
அறம் வெல்லும்; பாவம் தோற்கும் – கம்பர்
சத்யமேவ ஜயதே; நாந்ருதம்
– வேதம்
தர்மத்திற்கு எப்பொழுதெல்லாம்
ஊறு நேர்கிறதோ, அதர்மம் எப்போதெல்லாம் எழுச்சியுறுகிறதோ அப்போதெல்லாம் என்னை நான் சிருஷ்டித்துக்
கொள்கிறேன் – கீதையில் கண்ணபிரான்
இது தான் மொத்த ஹிந்து மதத்தின் சாரம்.
அதர்மம் மேலோங்கி இருந்ததையும்
அது தலைவிரித்தாடிய விதத்தையும் புராணங்கள் கூறுகின்றன.
தெய்வீக சக்தி எப்படி தர்மத்தை
நிலைநாட்டியது என்பதையும் அவை விரிவாக விளக்குகின்றன.
சிவன் திரிபுராசுரனை வதம் செய்தான்.
பார்வதி தேவி மஹிஷாசுரனை வதம்
செய்தாள்.
விஷ்ணு மது கைடபரை வதம் செய்தார்
இந்திரன் விருத்திராசுரனை வதம்
செய்தான்.
ராமர் விராதனை வதம் செய்தார்.
துர்கா தேவி ரக்தபீஜனை வதம்
செய்தாள்.
துர்கா தேவி சும்பன் மற்றும்
நிசும்பனை வதம் செய்தாள்.
சண்டமுண்டனை வதம் செய்ததால்
தேவி சாமுண்டி என்ற பெயரைப் பெற்றாள்.
இந்திரன் புலோமாசுரனை வதம் செய்தான்.
தேவி தூம்ராக்ஷ ராக்ஷசனை வதம்
செய்தாள்.
கார்த்திகேயன் தான் அவதரித்த
ஆறாம் நாளிலேயே தாரகாசுரனை வதம் செய்தார்.
ராமர் வாலி, ராவணன், கர, தூஷணன்
ஆகியோரை வதம் செய்தார்.
கிருஷ்ணர் கம்ஸனை வதம் செய்தார்.
பூதனையை வதம் செய்தார்.
சால்வ தேச ராஜா ப்ரஹ்மதத்த்னை
கிருஷ்ணர் வதம் செய்தார்.
கிருஷ்ணர் மது என்ற அரக்கனை
வதம் செய்தார்.
கிருஷ்ணர் பகாசுரன் மற்றும் காகாசுரனை பால்ய வயதிலேயே வதம் செய்தார்.
கணேசர் லோமாசுரனை வதம் செய்தார்.
கிருஷ்ணர் கேசி என்ற அரக்கனை
வதம் செய்தார்.
கிருஷ்ணர் சிசுபாலனை வதம் செய்தார்.
சிவன் அந்தகாசுரனை வதம் செய்தார்.
கிருஷ்ணர் அகாசுரனை வதம் செய்தார்.
ராமர் சம்பூகனை வதம் செய்தார்.
இந்திரன் ஜம்பாசுரனை வதம் செய்தான்.
இந்திரன் விஸ்வரூபனை வதம் செய்தார்.
கிருஷ்ணர் சங்கடாசுரனை வதம்
செய்தார்.
பரசுராமர் சஹஸ்ரபாகுவை வதம்
செய்தார்.
மஹிஷாசுரனின் சேனாதிபதியான சிக்ஷுரனை, தேவி வதம் செய்தாள்.
விஷ்ணு க்ராஸன் என்ற அசுரனை
வதம் செய்தார்.
அகஸ்தியர் வாதாபி என்ற அசுரனை
வதம் செய்தார்.
வராஹ அவதாரத்தில் ஹிரண்யாக்ஷணை
விஷ்ணு வதம் செய்தார்.
மத்ஸ்யாவதாரத்தில் சங்காசுரனை
விஷ்ணு வதம் செய்தார்.
ஹனுமான் அக்ஷனை வதம் செய்தார்.
ராமர் துந்துபியை வதம் செய்தார்.
நரசிம்மாவதாரத்தில் ஹிரண்யகசிபுவை
விஷ்ணு வதம் செய்தார்.
பொய்க்கும் கலியில் ஏராளமான
ராக்ஷஸர்கள் உருவாகி விட்டனர்.
ஆகவே பாரதியார் பாடியது போல
“பொய்க்கும் கலியை நான் கொன்று
பூலோகத்தார் கண்முன்னே
மெய்க்கும் கிருத யுகத்தினையே
கொணர்வேன் தெய்வ விதி இஃதே”
என்று ஒவ்வொருவரும் தெய்வ சக்தி கொண்டு அதர்ம சக்திகளை அழிக்க முன்
வர வேண்டும்.
தெய்வீக சக்தி வளர அன்னை பராசக்தி
அருள் பாலிப்பாளாக!
WRITTEN BY LONDON SWAMINATHAN swami_48@yahoo.com Date: 4 OCTOBER 2019 British Summer Time uploaded in London – 8–08 AM Post No. 7053
Pictures are taken from various sources; beware of copyright rules;
don’t use them without permission; this is a non- commercial, educational blog;
posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously.
Average hits per day for both the blogs 12,000.
பெண்களுக்கும் சொத்து உரிமை உண்டு; மநு நீதி நூல் – பகுதி 43
இதுவரை 8 அத்தியாயங்களை முடித்து 9-ம் அத்தியாயத்தில் 54 ஸ்லோகம் வரை கண்டோம். மநு நீதி நூல் –43 ம் பகுதியில் மேலும் சில முக்கிய விஷயங்களை முதலில் புல்லட் (BULLET POINTS) பாயிண்டுகளில் தருகிறேன். பகுதி-42 ஜூலை 19–ம் தேதி இந்த பிளாக்கில் பதிவிடப்பட்டது
ஸ்லோகம் 9-54ல் சொல்கிறார்– வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் விதை எந்த நிலத்தில் தங்கி விளைகிறதொ அந்த நிலச் சொந்தக்காரருக்கே அந்த மரமோ செடியோ சொந்தம் ஆகும். அதே போல ஒரு பெண் யார் மூலமாகக் கர்ப்பம் அடைந்தாலும் அந்தக் குழந்தை அவளுக்கே சொந்தம். இதை மிருகங்களின் வாழ்க்கையில் கூடக் காண்கிறோம் (ஸ்லோகம் 9-56)
மஹாபாரதத்தில் விசித்ரியவீர்யனுக்குக்கு குழந்தைகள் பிறக்கவில்லை. அவன் இறந்தபின்னர் அம்பா, அம்பாலிகா மூலம் வேறு ஒரு ஆண்மகன் மூலம் குழந்தைகள் பெறப்பட்டன. செக்ஸ் திருப்திக்காக இல்லாதபடி, வம்ச வ்ருத்திக்கு மட்டும் பயன்படும் இம்முறை மஹபாரத காலத்தில் இருந்தது. இதற்கு ‘நியோகம்’ என்று பெயர். இது பற்றி மநு நீதி நூலில் எதிரும் புதிருமான கருத்துக்கள் உள்ளன. (இது இடைச் செருகல்களைக் INTERPOLATIONS IN MANU SMRTI காட்டுவதாக நான் நினைக்கிறேன்)
ஸ்லோகம் 9-58 முதல் நியோக முறை பற்றிப் பாடுகிறார். ஒரு பெண்ணோ ஆணோ குழந்தைகள் இல்லாதபோது மற்றொரு ஆண் மூலம் ஒரே ஒரு முறை மட்டும் குழந்தைக்காக முயற்சிக்கலாம். (தற்கால சட்டம் இதற்கு வழிவகை செய்யவில்லை)
9-64 முதல் முரண்பாடான கருத்துகள் உள. அதாவது மநு, நியோக முறையையும், விதவை மறுமணத்தையும் எதிர்க்கிறார்.
9-65க்கு வியாக்கியானம் எழுதிய ஒருவர் ரிக்வேதம் 10-40-2ல் இம்முறை வருகிறது என்கிறார். 9-66ல் இவை எல்லாம் வேனன் என்ற கொடுங்கோல் மன்னன் காலத்தில் வந்த மிருக நீதிகள் என்று மநு பழிக்கிறார். வேனனை ரிஷிகள் கடைந்து —PARTHOGENIC METHODS — செயற்கை முறை கர்ப்பம்- திசுக்கள் மூலம் TISSUE CULTURE ஆண் உடலில் இருந்து குழந்தை உருவாக்கும் அதி நவீன முறை –CLONING TECHNIQUES — மூலம் பிருது உண்டாக்கப்பட்டான் என்று புராணங்கள் பகரும். இதனால்தான் பூமியை ‘பிருதுவி’ என்று அழைக்கிறோம். அவன் உத்தமோத்தமன்; ஸத்தியவான்)
(இங்கே என் கருத்துக்கு மேலும் ஒரு ஆதாரம் கிடைக்கிறது. வேனன், சுமுகன் போன்ற பழங்கால மன்னர்களை மட்டுமே மநு குறிக்கிறார். ராமன் கிருஷ்ணன் பற்றிக் கதைப்பது இல்லை. இவர் மிகவும் பழங்காலத்தவர். பாபிலோனிய ஹமுராபிக்கும் முந்தையவர்- உலகின் முதல் சட்ட நிபுணர்- உலகின் முதல் சட்ட நூல் மனு ஸ்ம்ருதிதா ன் – என்ற எனது வாதம் மேலும் வலுப்பெறுகிறது. வேறு சில முக்கிய ஆதாரங்களை முன்னமே காட்டிவிட்டேன்)
9-74 ல் மிக முக்கியமான உளவியல் விஷயத்தைச் செப்புகிறார். ஒருவன் திரைகடல் ஓடித் திரவியம் தேட நீண்ட காலம் மனைவியைப் பிரிந்து சென்றால் அவளது வாழ்க்கைக்கு வழி செய்துவிட்டுப் போக வேண்டும் அல்லது அவள் வேறு ஒருவனுடன் ஓடிப்போய் விடுவாள் என்கிறார்.
தொல்காப்பியமும் கூடத்தமிழ்ப் பெண்கள் கடல் கடந்து வெளிநாடு போகக் கூடாது என்று தடை போடுகிறது (எனது பழைய கட்டுரையில் முழு விவரம் காண்க)
XXX
விவாகரத்து
9-77 மனைவி அடங்காப் பிடாரியாக – சினிமாவில் வரும் நீலாம்பரியாக இருந்தால்- அவளை ஓராண்டுக்குப் பின்னர் வெளியே தள்ளு என்கிறார்.
9-78 மனைவி குடிகாரியாகவோ, ஊதாரியாகவோ இருந்தால் நகைகளைப் பிடுங்கி 3 மாதம் தனியே வை என்கிறார். (ஆக அந்தக் காலத்திலும் வீட்டுக்குள் சூர்ப்பநகைகள், தாடகைகள் இருந்தனர் போலும்).
ஸ்லோகம் 9-80 முதல் சுவையான செய்திகள் உள. சோரம் போகும் பெண்களை விலக்கலாம், எட்டு ஆண்டுகளுக்கு மலடியாக உள்ளவளை விலக்கலாம். பெண் குழந்தைகளை மட்டுமே பெற்றால், அவளைப் புறக்கணித்து வேறு ஒருவருடன் வாழலாம் என்பன 9-85 வரை உள்ளன.
குடிகாரிக்கு 6 தங்க குந்துமணி அபராதம் போடு என்ற வாசகம் அந்தக் காலத்தில் நாணய முறை இருந்ததைக் காட்டும் (9-84)
XXXX
கல்யாண வயது
கோவலன் 16, கண்ணகி 12 வயதானபோது கல்யாணம் கட்டியதாக தமிழ் காவியம் சிலப்பதிகாரம் செப்பும். தமிழ்ப் பெண்கள் பருவம் எய்திய உடனே ஓடிப்போன செய்திகளை சங்க காலப் பாடல்களில் காண்கிறோம். இதே போல மநுவும் மிக இளம் வயதில் கல்யாணம் செய்வது பற்றிப் பேசுகிறார்- ஸ்லோகம் 9-94
XXX
மனைவி அமைவது எல்லாம் இறைவன் கொடுத்த வரம்!
ஒரு சினிமா பாட்டு கேட்டு இருப்பீர்கள்; அது மநு சொன்ன வாசகம்.
ஸ்லோகம் 9-95ல் சொல்கிறார்- கடவுள் கொடுத்த பரிசுதான் மனைவி. ஆகையால் குணமுள்ள பெண்களைப் போற்றிக் காப்பாற்றினால் இறைவன் அருள் மழை பொழிவான்.
(இதுவரை எவ்வளவோ நூல்கள் படித்து விட்டேன். மநு போல பெண்களுக்கு ஆதரவாகக் கதைத்தவர் எவரும் இலர். பெண்கள் நோய்வாய்ப்பட்டிருந்தால், அவர்களுக்குக் குழந்தையே இல்லாவிடினும், அவர் அனுமதியின்றி வெளியேற முடியாது என்கிறார். பெண்களை அழவிட்டால், குடும்பம் வேறோடு சாய்ந்து அழியும் என்கிறார். சகோதரிகளுக்கு சகோதரர்கள் ஆடை ஆபரணங்களை அளித்து கமகிழ்ச்சிக் டலில் மிதக்க விட வேண்டும் என்கிறார்.
இந்த ஒன்பதாம் அத்தியாயத்தில் பெண்களுக்கு சொத்து உரிமை உண்டு என்கிறார். இத்தனையும் 3000 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதியது.
XXX
பாரதியார் சொன்ன மநு பாட்டு
பெண்களுக்கு மட்டும்தானா கற்பு?‘கற்பு நிலை என்று சொல்ல வந்தால் அதை ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவில் வைப்போம்’ என்கிறார் உலக மஹா கவி சுப்ரமண்ய பாரதியார். இது மநு 9-101ல் சொல்லும் வாசகம்.
சாகும் வரை இருவரிடத்திலும் கற்பின்மை வரக்கூடாது. இதுதான் ஆண்-பெண் உறவில் தலையாய கடமை- ஸ்லோகம் 9-101
XXX
ஸ்லோகம் 9-103- ஆண்-பெண் செக்ஸ் உறவு முறைகள் பற்றியும் குழந்தைகள் பெறாவிடில் அபூர்வமாகக் கையாள வேண்டிய விதிகளையும் இதுவரை சொன்னேன்; இனிமேல் பாகப் பிரிவினை பற்றிக் கதைப்பேன்
9-129 தக்ஷப் பிரஜாபதி என்ன செய்தார்? அவருக்கு 50 பெண்கள்தான் பிறந்தனர். அவர் 10 பேரை தர்மருக்கும், 13 பேரை காஸ்யபருக்கும், 27 பேரை சந்திரனுக்கும் (27 நட்சத்திரங்கள்) கொடுத்தார்
9-130- ஒரு மகன் என்பவன் தந்தையைப் போன்றவன்; மகள் என்பவளோ அந்த மகனுக்குச் சமம் ஆனவள்; இப்படி இருக்கையில் மகன் இடத்தை நிரப்ப வந்த பெண்ணின் சொத்தை வேறு யார் எடுக்க முடியும்?
10-131 அம்மாவின் முழுச் சொத்தும் மகளுக்கே; அவள் இறந்துவிட்டால் அது மகளின் மகனுக்கே!!
மற்ற விஷயங்களை ஒரிஜினல் ஸ்லாகங்களில் படியுங்கள்; இதோ ஸ்லோகங்கள்:–
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
திருமாலின்
எட்டு வகை சயனங்கள்–
வடபத்ர
சயனம் – திருவில்லிப்புத்தூர்
வீர
சயனம் – திரு இந்தளூர்
தல சயனம்
– கடல் மல்லை (மஹாபலிபுரம்)
உத்தான
சயனம் –
குடந்தை
புஜங்க
சயனம் – திருப்புல்லாணி
போக
சயனம் – தில்லை திரு சித்திர கூட
மாணிக்க
சயனம் –திருநீர்மலை
Xxx
சுயம்
வியக்த விஷ்ணு கோவில்கள் (தானாகத் தோன்றிய மூலவர்கள்)–
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 11,000.
அக்டோபர்
2019
நற்சிந்தனை காலண்டர்
கர்ம
வினை, செயல்பாடு
பற்றி 31
பொன்மொழிகள்
பண்டிகை
நாட்கள்-அக்.2- காந்தி ஜயந்தி; 7- சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை; 8-விஜயதசமி; 26-தந்வந்திரி ஜயந்தி27-தீபாவளி, லக்ஷ்மி-குபேர பூஜை; 28-ஸ்கந்த சஷ்டி விரதம் ஆரம்பம்
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use
them without permission; this is a non- commercial, educational blog; posted in
swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits
per day for both the blogs 11,000.
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use
them without permission; this is a non- commercial, educational blog; posted in
swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits
per day for both the blogs 11,000.
On 6th
September 2019, I visited Sri Skandashramam Temple in Selaiyur, Chennai-73
The
temple is situated near busy roads of East Tambaram. But inside the temple one
could see a serene atmosphere. When I went there, ladies were reciting slokas in the
Bhuvaneshwari shrine. Since photography inside the temple is prohibited, I bought
two books and reproduce some pictures here from the books. For some reason Sri
Shanthanantha of Pudukkottai installed unusual and huge idols in two or three
places in Tamil Nadu. He installed peaceful Bhuvaneswari idol along with the
ferocious Ugra Prathyankara Devi and Sri Sarabeswarar. The reason for this, I believe,
is to protect Hinduism and India from ‘adharmic’ (anti social, anti religious) forces.
Because he used to tell us that he was doing all the Yajnas for the welfare of
the society. Since Swamiji Krishna of Ayakkudi (Tenkasi), told us that he had
seen him doing Tapas deep inside forest we believed in him completely.
Our family
was associated with Sri Santhanantha from his early pubic appearance. When he
organised Sahasra Chandi Mahayajnam in Pudukkottai, for the welfare of the world
in 1963, my father and News Editor Sri V Santanam gave huge publicity in
Dinamani News paper. I and my brother were students at the time and we ran the
book shop at Adi Vethi of Sri Meenakshi Sundareswara Temple, Madurai where Sri
Anantha Rama Deekshitar was doing Ramayana Upanyasa/discourse to raise funds
for the Yajna. If I remember correct it was done for 40 days.
Whenever
Sri Santhananda Swamigal visited Madurai, he used to visit my father and had
Bikshai at our house. He was very tall and had rolling matted locks. He looked
like a Vedic Rishi. His hair used to touch the ground. His cheeks were rosy
like a young woman. He had Tejas (divine light, fire and brightness) in his face. I have met so many matted lock
swamijis, but I have never seen any one with such Tejas.
In his
early days, he took three handful of food only. When my mother cooked all sorts
of delicious dishes he just asked her to mix all together and give only three handful
of food. When my mother did thi,s tears rolled down her cheeks. When she came
out of the kitchen she told us that in spite of her serious , laborious,
careful cooking, he just had thee handfuls only. He did mantra Upadesa to us. I
met him again when I went to India in 2000 or 2001. Since he was very ill at
that time he came out for a minute and accepted my pranams and offerings.
Since I visited Bhuvaneswari temple then, I made it a point to visit Skandashramam Temple in Chennai this time.
Following
pictures will show what he established in Pudukkottai and Selaiyur, Chennai.
Pictures are taken from various sources;
beware of copyright rules; don’t use them without permission; this is a non-
commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com
simultaneously. Average hits per day for both the blogs 11,000.
உலகில்
ஸம்ஸ்க்ருத மொழி பரவிய அளவுக்கு வேறு எந்த மொழியும் பரவியதில்லை என்பதற்கு
கல்வெட்டுகளே சான்று பகர்கின்றன. அலெக்ஸாண்டர் படையெடுப்பால் பரவிய கிரேக்க மொழியையும்
விட சம்ஸ்க்ருத மொழியின் தாக்கம் அதிகம். ஏனெனில் துருக்கியில் உள்ள பொகைஸ்கான்
களிமண் படிவக் கல்வெட்டுகள் முதல் வியட்நாம் கம்போடியா, இந்தோநேஷியா வரை சம்ஸ்க்ருதக்
கல்வெட்டுகளும் இலக்கியங்களும் உள்ளன. துருக்கி கல்வெட்டு முழுதும் சம்ஸ்க்ருதம்
இல்லாவிடினும் 3400 ஆண்டுகளுக்கு முன்னர் வேத கால
தெய்வங்களின் பெயரில் கைச்சாத்திட்ட களிமண் கல்வெட்டு உளது. கிக்குலி எழுதிய
குதிரை சாஸ்திரம் ஸம்ஸ்க்ருத எண்களுடன் உள்ளது.
ஆகையால் காலத்தால் முந்தியவை. அளவிலும் ஸம்ஸ்க்ருத்தைத் தோற்கடிக்க எந்தக்
கல்வெட்டும் இல்லை. சம்பா எனப்படும் வியட்நாம், காம்போஜம்
எனப்படும் கம்போடியா, சாவகம் எனப்படும் இந்தோநேஷியாவில்
சுமார் 1000 ஸம்ஸ்க்ருதக் கல்வெட்டுகள் உள்ளன.
உப்பு, புளி, எண்ணைக் கணக்கு எழுதிய சுமேரிய கல்வெட்டுகள் எண்ணிக்கையில் அதிகம்
எனினும் அவை ஒரே இடத்தில் குவிந்துள்ளன. மேலும் இலக்கிய நயமற்றவை.
கல்வெட்டுகளில் உள்ள 800 ஸம்ஸ்க்ருத புலவர்களின் பெயர்கள் அடங்கிய புஸ்தகம் பற்றி சென்ற மாதம் எழுதினேன். இப்போது கம்போடியக் கல்வெட்டுகளில் இருந்து வடித்தெடுத்த அழகிய கவிதைகளைக் காண்போம். இவை சென்னை பல்கலைக்கழக ஸம்ஸ்க்ருதத் துறை ரீடர் சி.எஸ். சுந்தரம் எழுதிய ஆங்கிலக் கட்டுரையின் தமிழ் வடிவம்.
இவை
வழக்கமாகக் கல்வெட்டுகள் தரும் தகவலுடன் வேறு பல புராண இதிஹாசக் கதைகளையும் உவமைகளையும்
தருகின்றன. மேலும் சில ஆயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள கம்போடியாவில்
ஸம்ஸ்க்ருதம் புழங்கியதையும் புலமை பரவியதையும் காட்டும். காம்போஜ கல்வெட்டுகள்
என்ற பெயரில் ஆர்.சி.மஜூம்தார் எழுதிய நூலிலிருந்து சுந்தரம் எடுத்தாண்டுள்ளார். ஆகையால் பக்க
எண்கள் அந்தப் புஸ்தத்தைக் குறிக்கும். செம்மையான ஸம்ஸ்க்ருதத்தில் அமைந்த
அற்புதக் கவிதைகள் அவை-
1.கம்போடிய மன்னர்களின் மேதாவிலாசம்
மன்னரின்
மனதில் ஒரு பெட்டிக்குள் பொக்கிஷம் போல அறிவு பாதுகாக்கப்பட்டதாம். அதைக்
காப்பாற்றும் பொருட்டு ஸரஸ்வதி தேவி வாயிலில் ( அம்மன்னரின் வாயில்) காத்து
நிற்கிறாளாம். அதாவது மன்னர் கற்ற விஷயம் எல்லாம் தொலைந்து போகாமல் இருக்க சரஸ்வதி
தேவி அருள் பாலிக்கிறாள்.
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use
them without permission; this is a non- commercial, educational blog; posted in
swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits
per day for both the blogs 11,000.
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 11,000.
இந்த
ஆண்டு மூன்றாவது முறையாக இந்தியா செல்ல நேரிட்டது. கல்யாணம், கார்த்திகை என்று வந்தால் விட்டுக்
கொடுக்கலாமா? அப்போது நல்ல திருமண விருந்துடன் சிருங்கேரி ஸ்ரீ சாரதாம்பாள், சிருங்கேரி ஸ்ரீ சங்கராசார்யார், கொல்லூர் மூகாம்பிகை, உடுப்பி கிருஷ்ணன், குக்கே சுப்ரமண்யர் ஆகிய அனைவரின் தரிசனமும்
தமிழ்நாட்டில் சமயபுரம் மாரியம்மன், திருச்சி
தாயுமானவர், அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புகேஸ்வரர், திருவரங்கம் ரெங்கநாதன், சேலையூர் புவனேஸ்வரி/ பிரத்யங்கரா தேவி
ஆகியோரின் தரிசனமும் கிடைத்தது. வழக்கம்போல தமிழ்நாட்டிலும் கர்நாடகத்திலும்
சூறாவளி சுற்றுப் பயணம்தான். இயற்கை எழில் மிக்க ஆகும்பே, பெங்களூரு விஸ்வேரய்யா மியூஸியம்
ஆகியவற்றையும் பார்க்கத் தவறவில்லை.
உங்களில்
பலரும் அறிந்த விஷயம் என்பதால் சுருக்கி வரைகிறேன்.
உடுப்பி எங்கே உள்ளது?
அரபிக்
கடல் ஓரமாக அமைந்த கோவில் நகரம் இது. மங்களூரிலிருந்து 60 கிலோமீட்டர்; பெங்களூரிலிருந்து 381 கிலோமீட்டர்.
உடுப்பியில்
என்ன பிரசித்தமானது?
த்வைத
மத ஸ்தாபகரான மத்வரால் உருவாக்கப்பட்ட ஸ்ரீ கிருஷ்ணன்
கோவில் 800 ஆண்டுகளாக அருள் மழை பெய்து வருகிறது.
நான் இரவு நேரத்தில் உடுப்பியை அடைந்தேன். சமன்வய என்ற ஹோட்டலில் தங்கினேன். 3 நட்சத்திர அந்தஸ்து உடைய இந்த ஹோட்டல், லண்டன் நகர ஹோட்டல்களுக்கு இணையான தரம் உடையது. ஹோட்டலில் ஒரு உணவு விடுதியும் உள்ளது.
கோவிலுக்குச்
சென்றேன். மங்களகரமான மஞ்சள் புடவைகள் அணிந்த மாதர்கள் கோவிலுக்கு வெளியேயுள்ள
மண்டபத்தில், கிருஷ்ண கானம் இசைத்துக்
கொண்டிருந்தனர். மறு நாள் காலையில் மீண்டும் கோவிலுக்கு ஓடினேன். அப்போதும் மஞ்சள்
புடவை அழகிகள் கிருஷ்ணனின் புகழ்பாடிய வண்ணம் இருந்தனர். இரு முறையும் நான் எடுத்த
புகைப் படங்களைப் பார்த்தபோதுதான் இரண்டும் வெவ்வேறு கோஷ்டிகள் என்பது
தெரியவந்தது. ‘ரிலே
ரேஸ்’ (relay race)
போல ஒரு கோஷ்டிக்கு அடுத்ததாக இன்னுமொரு கோஷ்டிவீதம் பாடிக்கொண்டே இருப்பர்
போலும்.
கோவிலுக்குள்
போனால், கிருபானந்த வாரியார் போல உரத்த குரலில் ஒரு பெண்மணி
உபந்யாசம் செய்து கொண்டிருந்தார். அங்கும், சுமாரான
கூட்டம்.
15 நிமிடங்களுக்குள் தரிசனம் கிட்டியது.
என்ன
விநோதம்?
ஒவ்வொரு
கோவிலிலும் பல விநோதச் செய்திகள், விக்ரஹங்கள்,
பழக்க
வழக்கங்கள், பிரசாதங்கள் இருக்கும். உடுப்பியிலும்
அது உண்டு.
உடுப்பியில்
ஒரு ஜன்னல் வழியாகத்தான் கண்ணபிரானைத் தரிசிக்கவேண்டும். அற்புதமான நகைகளை அணிந்த கிருஷ்ணன், ஒரு அறைக்குள் ஏன் இப்படி ஒளிந்து
கொண்டு இருக்கிறார்? ஏன் என்றால், கனக தாசர் என்ற கீழ் ஜாதி பக்தர்
கோவிலுக்கு வந்தபோது அக்கால வழக்கப்படி அவருக்கு உள்ளே செல்ல அனுமதி
மறுக்கப்பட்டது. இறைவனுக்குத்தான் ஜாதிகள் கிடையாதே? உடனே கனகதாசர் இருந்த திசையை நோக்கித் திரும்பி ஜன்னல் வழியே காட்சிதந்தார். இன்று நாம் போனாலும் கூட அதே
கனகதாசர் ஜன்னல் வாயில் வழியாகத்தான் கிருஷ்ணனைத் தரிசிக்க வேண்டும். கோவிலுக்குள்
எப்போதும் நல்ல கூட்டம். மழை பெய்தாலும் கூட்டம் வருவது நிற்பதில்லை.
இரண்டாவது அதிசயச் செய்தி மத்வர் காலத்தில் நடந்தது. அவர் கடற்கரையில் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது தொலைவில் வந்துகொண்டிருந்த ஒரு கப்பல், பாறையுள்ள பகுதியை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அதைக் கண்ட மத்வர், பெரும் ஆபத்தைத் தடுப்பதற்காக, தன் மேல் துண்டை ஆட்டி எச்சரித்தார். கப்பலும் பிழைத்தது.
கப்பல்
கேப்டன் வந்து அவரிடம் நன்றி சொன்னான். தங்களைக் காப்பாற்றியதற்காக கப்பலில் உள்ள
விலையுயர்ந்த எந்த ஒரு பொருளையும் எடுத்துக் கொள்ளுமாறு வேண்டினான். சந்யாசியான
மத்வர் எந்த விலையுயர்ந்த பொருளையும் தொட மறுத்துவிட்டார். ஆனால் அந்தக் கப்பல், புனிதத் தலமான துவாரகையில் இருந்து
கல்லையும் மண்ணையும் ஏற்றி வருவதை அறிந்தவுடன் மஞ்சள் நிற களி மண் பாறை ஒன்றை
மட்டும் எடுத்துக்கொண்டார். அதை நாமம் போடவும் உடல் முழுதும் சமயச் சின்னங்களை
அணியவும் பக்தர்கள் பயன்படுத்தினர். காலப் போக்கில் அந்தப் பாறையை சிறு துண்டுகளாக
உடைத்தபோது, அதில் கிருஷ்ணன் சிலையும், பலராமன் சிலையும் இருப்பது
தெரியவந்தது. பலராமனை கடலோரக் கோவிலில் பிரதிஷ்டை செய்துவிட்டு, கிருஷ்ணன் சிலையை உடுப்பிக்குக் கொண்டு
வந்தார். அபோது எழுப்பப்பட்ட கோவில் இன்று வரை மக்களை இழுக்கும் ஆகர்ஷண சக்தியாக
விளங்குகிறது..
மூன்றாவது முக்கியச் செய்தி என்னவென்றால் உடுப்பி கோவிலைச் சுற்றி எட்டு புனித மடங்கள் இருக்கின்றன. அவற்றின் தலைவர்கள் இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை கோவில் பொறுப்பை சுழற்சி முறையில் ஏற்கின்றனர்.
உடுப்பியைச்
சுற்றி மனம் கவரும் இயற்கைக் காட்சிகளும், மணல்
நிறைந்த கடற்கரையும் பல கோவில்களும் உண்டு. மத்வாச்சார்யார் பிறந்த பஜக கிராமம்
உடுப்பியிலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது.
இந்த வட்டாரத்தில் பல கோவில்கள் இருப்பதால் ஓரிரு நாட்கள் தங்கி எல்லாவற்றையும்
பார்ப்பது நல்லது. இயற்கை அன்பர்களுக்கு கடற்கரை விடுதிகளும் அருகாமைத் தீவுகளும்
விருந்து அளிக்கும்.
கடைசியாக
உடுப்பி ஹோட்டல்களைப் பற்றியும் ஒருவார்த்தை. தென்னிந்தியா முழுதும் ‘உடுப்பி ஹோட்டல்’ என்ற போர்டுகளைப் பார்க்கலாம். சுவை
மிகு உணவுகளுக்கு பெயர்போன இடம் உடுப்பி என்பதைச் சொல்லத் தேவை இல்லை.
கண்ணனின்
நாமத்துக்கு எவ்வளவு ருசியோ அவ்வளவு ருசி
உடுப்பி ஹோட்டல்களின் உணவுக்கும் இருக்கிறது!
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 11,000.
மாலைமலர் 7-9-19 இதழில் வெளியாகியுள்ள
கட்டுரை
அனைத்து தெய்வங்களும் ஐக்கியம் : கேட்பதைக் கொடுக்கும் காமதேனு!
ச.நாகராஜன்
மனித வாழ்வில், மனிதர்கள், யாரானாலும்
சரி, தமக்கு வேண்டிய பலவற்றை அடைய விரும்புகின்றனர்.
செல்வம் சேர வேண்டும், நல்ல
உத்யோகம் வேண்டும், பதவி உயர்வு வேண்டும், புத்திர பாக்கியம் வேண்டும், சொந்த வீடு
ஒன்று வேண்டும், நல்லறிவு மேலோங்க வேண்டும், நல்லோர் இணக்கம் வேண்டும், சுற்றம் சூழ
சிறப்பாக இருக்க வேண்டும், என்று இப்படிப் பல விதமான மானுடத் தேவைகள் உண்டு.
அதை அடைய உள்ள பல வழிகளில் ஈடுபாட்டுடனும்
சிரத்தையுடனும் செய்யும் காமதேனு வழிபாடு சிறந்த ஒன்று. எளிதில் செய்யக் கூடியதும்
கூட!
காமதேனு தெய்வீகப் பசு. வேண்டியதைத்
தரும் அற்புதமான தேவதை!
அதைப் பற்றிய ஏராளமான வரலாறுகளை
வேதங்கள், ராமாயண மஹாபாரத இதிஹாசங்கள், புராணங்கள், பல மொழிகளில் உள்ள இலக்கியங்கள்
ஆகியவற்றின் வாயிலாகக் காண்கிறோம்.
காமதேனுவில் அனைத்து தெய்வங்களும்
குடி கொண்டிருப்பதால் காமதேனுவை வழிபடும் போது அனைத்து தெய்வங்களையும் ஒருசேர வணங்கிய
பெரும் பேறை அடைகிறோம்.
காமதேனுவிற்கு சுரபி என்றும்
நந்தினி என்றும் வேறு இரு பெயர்களும் உண்டு.
முன்னொரு காலத்தில் கைலாஸத்திற்குச்
சென்ற சுரபி, நெடுங்காலம் பிரம்மாவை நோக்கித் தவம் புரிய, மனம் மகிழ்ந்த பிரம்மா சுரபிக்கு
வேண்டுவதைக் கொடுத்தருளும் சக்தியைக் கொடுத்து மூவுலகுக்கும் மேலான கோலோகத்தில் தேவதையாக
இருப்பாய் என்று கூறி அருளினார்.
பல காமதேனுக்களைப் பற்றிய ஏராளமான குறிப்புகள்
புராண இலக்கியத்தில் இருப்பதால் காமதேனு மூலம் உருவாகிய இன்னும் பல காமதேனுக்கள் இருப்பதை
அறிய முடிகிறது.
சுரபி கிழக்கு திசையிலும் ஹம்ஸிகா
தெற்கு திசையிலும் சுபத்ரா மேற்கு திசையிலும் தேனு வட திசையிலும் இருந்து அருள் பாலித்து
வருகின்றன.
வசிஷ்டர் ஆசிரமத்திற்கு ஒரு முறை தன் பெரும்படையுடன் வந்த விசுவாமித்திர மஹராஜா அங்கிருந்த காமதேனு எது கேட்டாலும் அனைவரும் திருப்தியுறும் வகையில் தருவதைக் கண்டு ஆச்சரியமுற்றார். அதை வசிஷ்டரிடம் கேட்ட போது அவர் தர மறுத்தார்.
உடனே விசுவாமித்திரர் அதைக் கவர்ந்து செல்ல முயன்று
தன் படையை ஏவினார். பிரம்மாண்டமான சேனையை எதிர் கொண்ட வசிஷ்டர் காமதேனுவைக் குறிப்பால்
நோக்க, அதுவே ஒரு பெரும்படையை உருவாக்கி விசுவாமித்திரரையும் அவர் சேனையையும் துரத்தி
அடித்தது. அரும் தவசக்தியின் பலனை உணர்ந்து அதைப் பெற விரும்பிய விசுவாமித்திரர் தன்
ராஜ்யத்தைத் துறந்து தவம் மேற் கொண்டு ரிஷியானார்.
அப்படிக் காமதேனுவை கவர முயல்கையில் அவருக்கு
உதவி செய்தவரே மறு ஜன்மத்தில் தேவ விரதனாகப் பிறந்து தன் அரிய சபதத்தால் பீஷ்மர் என்ற
பெயரைப் பெற்றார். தன் சாபத்தை நிவர்த்தி செய்தார்.
காமதேனுவின் அம்சமாகவே பசுக்கள் விளங்குவதால்
அவற்றிற்கும் இயல்பான தெய்வீகத் தன்மை அமைந்து விடுவதால் அவற்றை பிரத்யட்சமாக நேரில்
கண்டு வணங்கும் வாய்ப்பு மக்களுக்குக் கிடைக்கிறது.
பசுவைப் பற்றி வாயு புராணம் இப்படி விவரிக்கிறது
:
பசுவின் பற்களில் (புயல், மின்னல்
ஆகியவற்றிற்கான தேவதையான) மருத்தும், நாக்கில்
சரஸ்வதியும்,குளம்பில் கந்தர்வர்களும், குல சர்ப்பங்கள் குளம்பின் முன்புறமும், சத்வ ரிஷிகள் மூட்டுகளிலும், சூரிய
சந்திரர் இரு கண்களிலும் உள்ளனர்.
நட்சத்திரங்கள் திமிலிலும், யமன் வாலிலும், தீர்த்தங்கள்
அது நடக்கும் போது உராய்ந்து செல்லும் காற்றிலும், கங்கையும் சப்த தீவுகளுடன் கூடிய
நான்கு சமுத்திரங்களும் அதன் கோமியத்திலும், ரிஷிகள் அதன் உடல் முழுவதுமும், லட்சுமி அதன் சாணத்திலும் உள்ளனர்.
எல்லா வித்தைகளும் அதன் மயிர்க்கால்களிலும், உத்தராயணமும்
தட்சிணாயனமும் அதன் உடலின் தோல் மற்றும் மயிர்க்கால்களிலும் உள்ளன.
அது நடக்கும் போது அதைச் சூழ்ந்து தைரியம், பொறுமை,
மன்னித்தல், புஷ்டி,புத்தி, நினைவாற்றல், மேதை, பரம சந்ததி ஆகியவற்றிற்கு உரிய தேவதைகள்
வந்து கொண்டே இருக்கின்றன. அனைத்து தேவர்களும் அதற்கு முன்னால் சென்று கொண்டே இருக்கின்றனர்.
அது மாங்கல்ய தேவதை.”
பசுவின் நான்கு கால்களும் நான்கு
வேதங்கள் எனக் கூறப்படுகிறது.
பசுவைத் துன்புறுத்தவே கூடாது
என்று வேதங்கள் சுமார் நூறு இடங்களில் கட்டளை இடுகின்றன.
குமரேச சதகம் “காலியின் கூட்டத்திலும்” (பசு மந்தை) என்றும், அறப்பளீசுர சதகம், “பால் குடத்திடையிலே” என்றும் கூறி, லட்சுமி வாசம் செய்யும் இடங்களில் ஒன்றாக பசுவைச் சுட்டிக்காட்டிச் சிறப்பித்துக் கூறுகின்றன.
காமதேனுவின் ஆலயங்கள் பல.
நேபாளத்தில் உள்ள பசுபதிநாதர்
ஆலயம் பற்றிய சுவையான வரலாறை லிங்க புராணம் கூறுகிறது.
ஒரு முறை இமயமலையில் மான் போல
வலம் வந்து கொண்டிருந்த சிவபிரான் தன் இயல்பான உருவத்தைக் கொள்ள, ஒரு ஒளிப்பிழம்பு
பிரபஞ்சத்தை மேலும் கீழுமாக ஊடுருவிப் பரந்தது.
பிரம்மா அதன் உச்சியைப் பார்க்க
மேலே சென்றார். அதன் அடியைப் பார்க்க விஷ்ணு கீழே சென்றார். மேலே சென்ற பிரம்மா தான்
ஒளியின் உச்சியை மட்டுமல்ல, அதற்கு அப்பாலும் சென்று விட்டதாகக் கூறினார்.
இதைக் கேட்ட விஷ்ணு தெய்வீகப்
பசுவான காமதேனுவிடம் இது உண்மை தானா என்று கேட்டார்.
காமதேனுவோ அது உண்மை இல்லை என்பதை
தன் வாலை மறுக்கும் விதமாக ஆட்டிக் கூறியது. ஆகவே காமதேனு புனிதமானதாகக் கருதப்படுவதோடு
அனைத்துக் கோவில்களிலும் வழிப்பாட்டுக்குரிய இடத்தைப் பெறுகிறது.
அதன் வாலும் புனிதமானதே என்பதால்
பசுவின் வாலைத் தொட்டுத் பக்தர்கள் தம் பாவங்களைப் போக்கிக் கொள்கின்றனர்.
பசுபதி தலங்கள் மொத்தம் ஐந்து.
ஆவூர், நேபாளம், திருக்கொண்டீசுரம், பந்தணைநல்லூர் மற்றும் கருவூர் ஆகியவையே அந்தத்
தலங்களாகும்.
கும்பகோணம் அருகில் உள்ள பட்டீச்சுரம்
பராசக்தியினால் ஏற்படுத்தப்பட்ட சக்திவனத்தில் அமைந்துள்ள ஒரு தலமாகும்.. அம்பிகையின்
பெருந்தவத்தின் போது அவருக்குப் பணிவிடை செய்ய காமதேனு தன் மூத்த பெண்ணான பட்டியை அங்கு
அனுப்பியது.
பட்டி தானும் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து அங்கு
ஒரு தீர்த்தத்தையும் உருவாக்கி பூஜை செய்து வந்தாள். இதனால் அந்த இடத்திற்கு பட்டீச்சுரம்
என்ற பெயரும் அந்த லிங்கத்திற்குப் பட்டி லிங்கம் என்ற பெயரும் ஏற்பட்டன.
எல்லையற்ற மகிமை கொண்ட இந்தத் தலத்தைப் பற்றி பட்டீச்சுர மகாத்மியம் விளக்குவதைப் படிப்போர் பிரமிப்பை அடைவர்.
விசுவாமித்திரர் இங்கு தான்
பிரம்ம ரிஷியாகத் தவம் புரிந்தார்.
ராவணனைக் கொன்றதால் ராமருக்கு
ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் (பிராமணனைக் கொன்றதால் ஏற்பட்ட தோஷம்) ராமேஸ்வரத்திலும்,வீரஹத்தி
தோஷம் வேதாரண்யத்திலும் சாயாஹத்தி தோஷம் பட்டீச்சுரத்திலும் அவரது வழிபாட்டால் போயின.
கொங்கு நாட்டு சிவஸ்தலமான கருவூர்
எனப்படும் கரூரில் அமைந்துள்ள பசுபதீஸ்வரர் கோவில் பிரம்மாவும் காமதேனுவும் வழிபட்ட
தலமாகும்.
இங்குள்ள சிவலிங்கத்தைக் காமதேனு வழிபடும் போது
ஏற்பட்ட குளம்பின் தழும்பை இன்றும் லிங்கத்தின் மீது காணலாம்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆவூர் பசுபதீஸ்வரர்
கோவில் காமதேனு வழிபட்ட தலமாகும். சம்பந்தர் பாடல் பெற்ற தலம் இது.
காமதேனு
வழிபட்ட இன்னொரு தலம் தூங்கானை மாடம் என்று பழைய காலத்தில் அழைக்கப்பட்ட இன்றைய பெண்ணாகடம்
ஆகும். விருத்தாசலம் அருகே உள்ள இது தேவ கன்னியரும்,
காமதேனுவும் இந்திரனின் யானையான ஐராவதமும் (பெண்+ஆ+கடம்) வழிபட்ட தலமாகும்.
இப்படி காமதேனு வழிபட்ட தலங்கள் என திருவீழிமலை
உள்ளிட்ட இன்னும் பல தலங்கள் உள்ளன.
இந்தத் திருத்தலங்களின் வரலாறுகள் மிக்க சுவையானவை.
இவற்றை விரிப்பின் பெருகும்.
இந்தத் தலங்களில் சென்று வழிபடுவோர் அடையும் அற்புதமான
ஆன்மீக சக்தி உள்ளிட்ட நலன்களை எளிதில் உணரலாம்.
வாஸ்து சாஸ்திரம் உள்ளிட்ட பல்வேறு சாஸ்திரங்களும்
காமதேனுவை இல்லத்தில் வைப்பதே அனைத்து நலங்களையும் அருளும் என எடுத்துரைக்கின்றன.
அழகிய தெய்வீகப் பெண் முகத்துடனும் உடல் முழுவதும்
தேவதைகள் இருக்கவும் உள்ள காமதேனுவின் படத்தை வீட்டில் வைத்து வழிபடுவதால் அனைத்துத்
தடைகளும் நீங்கும்; செல்வம் பெருகும்.
கன்றுடன் கூடிய காமதேனுவின் விக்ரஹம் வெள்ளி உள்ளிட்ட
உலோகங்களிலும் கிடைக்கிறது. வசதிக்கும் இஷ்டத்திற்கும் தக அதையும் பூஜை அறையில் வைக்கலாம்.
அனைத்துப் பேறுகளையும் இவை அருள்கின்றன; ஜாதகத்தில்
உள்ள கிரக தோஷங்களும் காமதேனுவின் அருளினால் நீங்கும்.
இந்திய இயலில் நிபுணரான மாடெலெய்ன் பயார்டெ (Madeleine
Biardeau) காமதேனு என்பது புனிதப் பசுவின்
அடையாளப் பெயராகும் என்று கூறுகிறார்.
காமதேனுவின் ஓவியத்தைப் பார்த்து வியந்த ஃப்ரெடெரிக் எம்.ஸ்மித் (Frederick M. Smith), காமதேனு, “பிரசித்தமான என்றுமுள்ள இந்தியக் கலையின் சித்திரம்” என்று புகழ்கிறார்.
இன்றைய அறிவியல் உலகில் பொருளாதாரம் செழிக்க பசுச்
செல்வம் இன்றியமையாத ஒன்று என்பதை பொருளாதார நிபுணர்கள் விளக்குகின்றனர். நிலத்தின்
இயற்கைத் தன்மையைக் காக்க வல்லது பசுவே.
பஞ்சகவ்வியம் எனப்படும் பசும்பால், கோமியம், சாணம்.
நெய், தயிர் ஆகியவை கலந்த கலவை கோவிலில் அபிஷேகப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.
பஞ்சகவ்யத்தைப் பயிர்களுக்குச் சோதனையாகக் கொடுத்து
பயன்பெறலாம் என்பதை அறிவியல் பூர்வமாக அறிந்த இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் அதை இயற்கை
விவசாயத்தில் ஒரு இடு பொருளாக ஆக்கியதையும் நாம் அறிவோம்.
பசுவின் சாணம் ரேடியேஷன் எனப்படும் கதிரியக்கத்
தீமைகளைத் தடுக்கும் ஒன்று. அலஹாபாத்தைச் சேர்ந்த இயற்பியல் பேராசிரியர் கே.என். உத்தம்
பசுஞ்சாணமானது காமா, பீட்டா, ஆல்பா ஆகிய மூன்று கதிர் வீச்சையும் தடுக்க வல்லது என்று
குறிப்பிடுகிறார். இவற்றில் காமா கதிர்கள் தாம் ரேடியேஷன் எனப்படும் தீங்கு பயக்கும்
கதிரியக்கத்தை உண்டாக்குபவை.
ரஷியாவில் செர்னோபிலில் ஏற்பட்ட தீங்கு பயக்கும்
கதிரியக்க விபத்தைப் பற்றி உலகினர் அனைவரும் நன்கு அறிவர்.
ஆக அறிவியல் ரீதியாகவும் பசு உலகினரைக் காக்கும்
தெய்வ மாதாவாக இலங்குவதைப் புரிந்து கொள்ளலாம்.
பசுவிற்கு அகத்திக்கீரை கொடுப்பது (யாவர்க்குமாம்
பசுவிற்கு ஒரு வாயுறை – திருமூலர்) எல்லாவற்றிலும் சிறந்த புண்ணியம் என அறநூல்கள் கூறுகின்றன.
காமதேனுவை உளமார வழிபட்டால் செல்வம் செழிக்கும்,
தடைகள் நீங்கும், வளம் ஓங்கும், புது வீடு அமையும், திருமணம் வெற்றி பெறும், புத்திரப்
பேறு உண்டாகும், எல்லா நலன்களும் அமையும் என்று உணர்ந்து அதை வழிபடுவோமாக!