14 கோடிக்கு மேல் ஒரு பைஸா கூட வேண்டாம்!!! (Post No.5308)

Written by London swaminathan

Date: 10 August 2018

 

Time uploaded in London – 12-50 am (British Summer Time)

 

Post No. 53078

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

14 கோடிக்கு மேல் ஒரு பைஸாகூட வேண்டாம்- முனிவர்

கண்டிப்பு! காளிதாசன் தரும் சுவைமிகு தகவல்

உலகப் புகழ்பெற்ற ஸம்ஸ்க்ருதக் கவிஞன் காளிதாசன் ஒரு சுவையான சம்பவத்தை பாடுகிறான். கௌத்ஸ முனிவர் என்பவர் மன்னனிடம் 14 கோடிப் பொன் கேட்டார். மன்னன் ரகுவோ தயாள குணம் கொண்டவர். முனிவர் கேட்டதற்கு மேல் மூட்டை மூட்டையாக கொண்டுவந்து இறக்கினார். முனிவரோ ‘கறார் பேர்வழி’ இதோ பார் நான்    கேட்டதற்கு மேல் ஒரு பொன் கூட எடுக்க மாட்டேன். அதை மட்டும் எண்ணி வை என்றார்.

 

மன்னன் ரகு வாரி வழங்கும் பாரி வள்ளல்; வலது கை கொடுப்பதை இடது கை அறியாது வழங்குவான்; முனிவரோ கொஞ்சமும் பேராசை இல்லாதவர். கூடக் கொடுத்தாலும் வேண்டாம் என்று சொல்லும் பெருந்தகை. நாம் எல்லோரும் பின்பற்ற வேண்டிய இரு உதாரண புருஷர்கள்!

 

 

காளிதாசனின் ரகு வம்ச காவியத்தில் ஐந்தாவது சர்கத்தில் வரதந்து- கௌத்ச முனிவர்களின் கதை வருகிறது.

 

மன்னன் ரகுவை கௌத்சர் சந்திக்கிறார்.

 

இதில் அருமையான விஞ்ஞான விஷயங்கள் வருகின்றன

உலகம் சூர்யனிடமிருந்து உயிர் பெறுகிறது (5-4): சூரியன் இல்லாவிடில் உயிர்கள் இல்லை. வரதந்து முனிவர் ஞான சூரியன்; அவருடைய ஒளியைப் பெற்றவர் கௌத்சர்.

 

மரங்கள், பிள்ளைகளைப் போன்றவர்கள்! ஆஸ்ரமத்திலுள்ள புத்திரர்களைப் போன்ற மரங்கள் காட்டுத் தீயினாலோ காற்றாலோ சேதமடையாமல் இருக்கின்றனவா?. என்று கௌத்ஸரிடம் ரகு குசலம் விசாரிக்கிறான். இது புற சூழல் விஞ்ஞானம்.

 

ஆஸ்ரமத்திலுள்ள மான்கள் அபாயமில்லாமல் வாழ்கின்ற்னவா? ரகுவின் கேள்வி; வனவிலங்குப் பாதுகாப்பு அறிவியல்.

 

 

இது போன்ற பல கேள்விகளைக் கேட்டுவிட்டு உமது வரவினால் எனக்கு மகிழ்ச்சி. ஆனாலும் எனக்கு இன்னும் திருப்தி ஏற்படவில்லை. உங்கள் குரு ஏதேனும் சொல்லி அனுப்பி இருந்தால் அதை நிறைவேற்ற ஆசை என்றான் ரகு.

 

கௌத்சர் சொன்னார்

நீங்கள் தானம் கொடுத்தே வறுமைக்கு வந்து விட்டீர்; பொன் குடத்தால் என்னை வரவேற்காமல் மண்குடத்தை வைத்து என்னை வரவேற்றதிலிருந்தே அது தெரிகிறது ஆகையால் நான் வேறு ஒருவரிடம் செல்கிறேன் என்றார். ரகு அவரைத் தடுத்து உமது குருவுக்குத் தரவேண்டிய தக்ஷிணை என்ன? என்று கேட்டான்.

 

குரு எனது பணிவிடையையே குருதக்ஷிணை என்று சொன்னார்;

நான் வற்புறுத்தவே கோபத்தில் 14 கோடிப் பொன் கொண்டுவரச் சொல்லிவிட்டார் என்றார் கௌத்ஸர்.

 

என்னிடம் ஒருவர் யாசகம் கேட்டுத் திரும்பிப் போன அபவாதம் எனக்கு வேண்டாம் எனது யாக சானை  லையில் சில தினங்கள் இருங்கள் பணம் கொண்டு வருகிறேன் என்றான் ரகு.

 

அவன் ஆயுதங்களின் ரதத்தில் ஏறிப் படுத்த இரவில் குபேரன் அவரது அரண்மனை கஜானாவில் பொன் மழை பெய்தான். ரகு படை எடுத்து வரப்போகிறானே என்று அஞ்சி குபேரனே வந்து கொட்டிவிட்டான்.

தங்கம் முழுதும் ஆகாஸத்திலிருந்து விழுந்தது.

அந்த தங்கத்தை அப்படியே கௌத்ஸரிடம் கொடுத்தான் ரகு. ஆனால் 14 கோடிக்கு மேல் ஒரு பொன் கூட இருந்தாலும் அதைத் தான் ஏற்கமாட்டேன் என்று கௌத்ஸர் சொல்ல, இல்லை முழுதும் உங்களுக்குத்தான் என்று ரகு சொல்ல இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது; இதைக் கண்டு அயோத்தி நகரமே வியப்பில் ஆழ்ந்தது.

 

பிறகு கௌத்ஸர் நூற்றுக் கணக்கான குதிரைகள் ஒட்டகங்களின் மீது பணத்தை ஏற்றிச் சென்றார். நல்லாட்சி நடத்தும் அரசனுக்கு பூமி விரும்பியதை எல்லாம் தரும். உனக்கு பூமி மாத்திரமின்றி ஆகாசமும் கொடுத்து விட்டது; உன்னைப் போலவே உனக்கு ஒரு மகன் பிறப்பான் என்று ஆஸீர்வதித்து விட்டுச் சென்றார்.

 

இதில் கவனிக்க வேண்டிய விஷயம்- கேட்டதை விட கூடத் தரும் மனிதன் ரகு.

தேவைக்கு மேல் ஒரு பைஸா கூட எடுக்க மாட்டேன் என்ற கௌத்ஸ முனிவர்.

 

இதுதான் க்ருத யுகத்தின் அடையாளம்! ஒருவர் பொருளை மற்றொருவர் விரும்பார்; எடுக்கவும் மாட்டார்.

 

-SUBHAM

ஹிந்து ராஷ்ட்ரத்தில் கிறிஸ்துவை வழிபட விடுவீ ர்களா? – 1 (Post No.5301)

Date: 9 August 2018

 

Time uploaded in London – 6-46 AM  (British Summer Time)

 

Post No. 5301

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

ஹிந்து ராஷ்ட்ரத்தில் எங்களை நாங்கள் விரும்பும் கிறிஸ்துவை வழிபட விடுவீ ர்களா? – 1

 

ச.நாகராஜன்

1

 

டெல்லியின் ஆர்ச்பிஷப் அனில் கௌடோ (Anil Couto, Archbishop of Delhi) எல்லா சர்ச்சுகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதன் சாரம் ஒரே வரியில் இது தான்; செகுலரிஸம் ஆபத்துக்குள்ளாயிருக்கிறது. (Secularism fabric under threat : Archbishop)

 

இதன் முழு அர்த்தமும் நமக்குப் புரிய வேண்டும். அதாவது இனிமேல் நம்மால் நினைத்தபடி மதம் மாற்ற முடியாது; ஏமாற்ற முடியாது.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் உண்ணாவிரதம் இருந்து பிரார்த்தனை செய்ய வேண்டும் என்கிறார் இந்த பிஷப்! எது வரை? 2019 பொதுத் தேர்தல் வரை!

‘எங்கப்பன் குதிருக்குள் இல்லை’ என்ற பழமொழி போல ‘2019 பொதுத் தேர்தல் வரை’ என்பதிலிருந்தே மறைமுகமாக இந்த பிஷப்,  மோடிக்கு ஓட்டுப் போடாதீர்கள்; போட்டால் நமது தொழில் இங்கே சரிவர நடக்காது! என்கிறார்.

இந்த கெட்ட எண்ணப் பிரார்த்தனை வேண்டுகோள் ஒரு புறம் இருக்க இதை ஆதரித்து ஜூலியோ ரிபரோ  என்ற போலீஸ் அதிகாரி (Julio Riberio – The Times of India dated 28-5- 2018 – A prayer for secularism: Hindu Rashtra, which would make my country a saffron Pakistan, is profoundly anti-national May 28, 2018, 2:02 AM IST Julio Ribeiro ) எழுதியுள்ள கட்டுரையில் இந்தியா காவி பாகிஸ்தான் ஆகி விடக்கூடும்; ஹிந்து ராஷ்ட்ரத்தில் நான் விரும்பும் வழிபாட்டைச் செய்ய முடியுமா? என்று ஆதங்கப்பட்டுக் கேட்டிருக்கிறார்.

ஆக, ஆர்ச்பிஷப்பின் விஷமத்தனமான தூண்டுதல் வேலை செய்ய ஆரம்பித்திருக்கிறது என்பது தெரிகிறது.

ஜூலியோவிற்கு நாம் சொல்ல வேண்டியது ஏராளம் இருக்கிறது. இருந்தாலும் கூட “கிறிஸ்து வழிபாட்டைத் தடுத்து நிறுத்த மாட்டீர்களே என்று கேட்கும் நீங்கள் தயவு செய்து கிறிஸ்தவ மதம் பரப்பப்பட்ட வரலாறைச் சற்று தெரிந்து கொள்ளுங்கள்” என்று சொல்லி விடலாம். அத்துடன் இந்தியாவைப் பற்றி ஒன்றுமே நீங்கள் அறிந்திருக்கவில்லை; அறிந்திருந்தால் இப்படி ஒரு அபத்தமான எண்ணத்தை வெளியிட்டிருக்க மாட்டீர்கள் என்றும் கூறலாம்.

 

2

அமெரிக்காவின் மூன்றாவது ஜனாதிபதியாக இருந்த தாமஸ் ஜெஃபர்ஸன் என்ன சொன்னார் என்று பார்ப்போமா?

“Millions of innocent men, women and children, since the introduction of Christianity, have been burnt, tortured, fined, imprisoned, (and molested) : yet we have not advanced one inch towards humanity. What has been the effect of coercion? To make one half of the world fools, and the other half hypocrites. To support error  and roguery all over the earch.” – Thomas Jefferson, The Third President of United States.

 

கிறிஸ்துவ மதத்தை அறிமுகப்படுத்துவதில் லட்சக்கணக்கான அப்பாவிகளும், பெண்களும், குழந்தைகளும் எரிக்கப்பட்டனர், சித்திரவதை செய்யப்பட்டனர், அபராதம் விதிக்கப்பட்டனர், சிறைக்கு அனுப்பப்பட்டனர். பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டனர். இருந்த போதிலும் ஒரு அங்குலம் கூட மனிதத்வத்தை நோக்கி நாம் முன்னேறவில்லை. இப்படிக் கட்டாயப்படுத்தப்பட்டதன் விளைவு என்ன? உலகின் ஒரு பாதியை முட்டாளாக்கியது. இன்னொரு பாதியை கபடதாரிகளாக்கியது. தவறுக்கும் அயோக்கியத்தனத்திற்கும் துணை செய்தது. – தாமஸ் ஜெஃபர்ஸன், யுனைடெட் ஸ்டேட்ஸின் மூன்றாவது ஜனாதிபதி.

3

பற்பல நூற்றாண்டுகளாக இந்தியா தான் எல்லா மதத்தினருக்கும் சுதந்திரமாக வழிபடுவதற்கான சொர்க்க பூமியாக அமைந்திருக்கிறது. எல்லா இனத்தினரும் அமைதியாக வாழக்கூடிய சொர்க்க பூமி இது ஒன்றே தான்! தங்கள் நாடுகளை விட்டு அகதிகளாகத் துரத்தப்பட்டவர்களுக்கும், மதமாற்றக் கொடுமைகளிலிருந்து தப்பித்து ஓடி வந்தவர்களுக்கும், தங்கள் பண்பாட்டையும் வழிபாட்டுமுறைகளையும் தக்க வைத்துக் கொள்ள விரும்பி ஓடி வந்தவர்களுக்கும் அடைக்கலம்  கொடுத்த புண்ய பூமி இது.

கிறிஸ்துவத்தில் உருவ வழிபாட்டை ஏற்று அதன்படி வழிபாடு நடத்திய சிரியன் கிறிஸ்தவர்கள் கேரளாவில் அடைக்கலம் புகுந்தனர்.

தீயை நித்தம் வழிபடும் பார்ஸிகள் மஹராஷ்டிரத்திலும் குஜராத்திலும் அடைக்கலம் கோரி வந்து வசித்தனர்.

யூதர்களில் சிலர் மத மாற்றக் கொடுமைக்கு அஞ்சி இங்கு வந்து குடியேறினர்.

முஸ்லீம்களில் பஹாய் மார்க்கத்தினர் 50 இஸ்லாமிய நாடுகளில் வாழ முடியாமல் அங்கு வர அனுமதிக்கப்படாமல் இறுதியில் இந்தியாவில் வந்து குடியேறினர்;தங்கள் வழிபாடுகளை இன்றளவும் தடையின்றி நடத்துகின்றனர்.

சீன கம்யூனிஸ ராட்சஸர்களால் துரத்தப்பட்ட தலாய்லாமா – புத்த மதத் தலைவர் – அடைக்கலம் தேடி இந்தியா வந்தார். இன்றளவும் தர்மஸ்தலாவில் தங்கி தன் வழிபாட்டைத் தொடர்கிறார்.

இப்படி ஒரு நாட்டை – இன்னும் ஒரே ஒரு நாட்டை உலகில் காட்ட முடியுமா? முடியாது.

தன் மதத்தைச் சேராமல் இருப்பவர்களுக்கு – அடிதடி, வெட்டு, குத்து, கொலை – இவை தான் இதர மதங்கள் காட்டும் வழி; செய்த செயல் முறை.

ஆக இப்படிப்பட்ட நாட்டை நோக்கி- அதன் மக்களை நோக்கி – என் வழிபாட்டை இங்கு தொடர முடியுமா என்று கேள்வி கேட்கும் ஜூலியா போன்றவர்களை என்ன சொல்லி அழைப்பது?

அப்பாவித்தனமாக கேள்வி கேட்பவர் என்றா?

விஷமிகளில் ஒருவர் என்றா? வரலாறு தெரியாதவர் என்றா?

 

நல்ல மனம் கொண்ட, இந்திய வரலாறைத் தெரிந்த எவரும் இந்திய வாழ்க்கை முறை ஒன்றே தான் எந்த மதத்தையும் சம்மதம் என்று ஏற்றுக் கொள்ளும் ஒரே வாழ்க்கை முறை என்பதை உணர்வர்.

இஸ்லாமோ, கிறிஸ்தவமோ ஏனைய பிற மதங்கள் இருக்கக் கூடாது என்று கூறுபவை.  பிற மதத்தின் வழிபாட்டைச் செய்வோர் பாவிகள்; அவர்கள் திருத்தப்பட வேண்டும் என்று கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் தொடர்ந்து முழங்கி வருபவர்கள்.

ஆகவே ஜூலியா இப்படிப்பட்ட கேள்வியை இஸ்லாமிய நாடுகளிலும் கிறிஸ்தவ நாடுகளிலும் கேட்கலாம். அங்கு இதர மதத்தினருக்கு வழிபாட்டுச் சுதந்திரம் உண்டா என்று கேட்கலாம்.

 

விஷமத்தனமான கேள்விகளைக் கேட்பவர்களுக்காக – அவர்கள் இப்படிக் கேட்டு இந்தியாவில் வகுப்புக் கலவரத்தைத் தூண்ட விரும்புவதால் – சில உண்மைகளை எடுத்துக் காட்ட வேண்டியிருக்கிறது.

அதைத் தொடர்ந்து காண்போம்.

  • தொடரும்

***

 

தலையில் குட்டிக் கொண்டு விநாயகரை வணங்குவது ஏன்? (Post No.5295)

Written by S NAGARAJAN

Date: 7 August 2018

 

Time uploaded in London – 7-35 AM  (British Summer Time)

 

Post No. 5295

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

தலையில் குட்டிக் கொண்டு விநாயகரை வணங்குவது ஏன்?

 

ச.நாகராஜன்

 

தலையிலே குட்டிக் கொண்டு விநாயகரை வழிபடுவது ஏன்?

இதற்கான சுவையான வரலாறு ஒன்று உண்டு.

 

அகத்தியர் காவிரியை ஒரு கலசத்தில் அடக்கிக் கொண்டு வந்தார். அப்போது அந்த காவிரி நீர் அடங்கிய கலசத்தைக் கவிழ்த்து ஒரு காகம் பறந்தோடியது. இதனால் வெகுண்டார் அகத்திய முனிவர். யார் அந்தக் காக்கை என்று அறியப் பின் தொடர்ந்தார். காக்கை ஒரு சிறுவனாக உரு மாறியது. அந்தச் சிறுவன் யார் எனப் பார்த்த அகத்தியர் விநாயகரே அப்படி காக்கை உருக் கொண்டு வந்துள்ளார் என்பதை அறிந்தார். சிறுவனைக் குட்டுவதற்காகப் பின் தொடர்ந்த அகத்தியர் விநாயகரை நோக்கி, “ அறியாமல் உங்களைக் குட்டுவதற்காகப் பின் தொடர்ந்த என்னை மன்னிக்க வேண்டும்” என்று இறைஞ்சி வேண்டினார். அத்தோடு, “அந்தக் குட்டு எனக்கே ஆகுக” என்று கூறி இரு கைகளையும் சேர்த்து அகத்தியர் குட்டிக் கொண்டார். ‘இது போலக் குட்டிக் கொண்டு வணங்குவோரின் வணக்கத்திற்குப் பெரிதும் மகிழ்ந்து அருள் புரிதல் வேண்டும்’ என்றும் அகத்தியர் விநாயகப் பெருமானை வேண்டிக்கொண்டார். “அவ்வாறே அருள் புரிகின்றோம்” என்று விநாயகர் வரத்தைத் தந்தார். அது முதல் குட்டிக் கொண்டு விநாயகரை வழங்கும் பழக்கம் தோன்றியது. இந்தச் சம்பவம் நடந்த இடம் கொங்கு நாடு. ஆக இப்படிக் குட்டிக் கொண்டு வழிபடும் முறை கொங்கு நாட்டிலேயே முதலில் தோன்றியது.

அந்தப் பெருமை உடைத்து கொங்கு மண்டலம் என்று கொங்கு மண்டல சதகம் ஒன்பதாம் பாடல் பெருமை படக் கூறுகிறது.

பாடலைப் பார்ப்போம்:

 

ஐங்கைப்புத் தேளைத் தொழுகின்ற பேர்க ளகங்கசிந்து    செங்கைத் துணைமுட்டி யாய்த்தலை யிற்குட்டிச் சீர்பெறுநற் றுங்கப் பணிவிடை முற்றோன்று தானஞ் சுரர்மகிழு       மங்குற் பொழிறிகழ் காவேரி சேர்கொங்கு மண்டலமே

 

பொருள் : விநாயகக் கடவுளை வணங்குவோர், தலையிற் குட்டிக் கொள்ளும் பழக்கமானது, முதலில் உண்டான இடம் கொங்கு மண்டலம் என்பதாம்.

 

(ஸ்)காந்தம் காவிரி நீங்கு படலத்தில் வரும் ஒரு பாடல் இதைக் கூறுகிறது :

என்னே தமியே னெனவே யினிநின்

முன்னே நுதலின் முறையா லிருகை

கொன்னே கொடுதாக் குனர்தங் குறைதீர்த்

தன்னே யெனவந் தருள்செய் யெனவே

 

தலையில் குட்டிக் கொண்டு விநாயகரை வழிபடும் பழக்கத்திற்கான காரணம் இது தான்!

***

இந்துக்கள் பாம்புகளை கும்பிடுவது ஏன்? விஞ்ஞான விளக்கம் (Post No.5293)

Written by London swaminathan

Date: 6 August 2018

 

Time uploaded in London – 9-51 AM  (British Summer Time)

 

Post No. 5293

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

இந்த ஆண்டு (2018) ஆகஸ்ட் 15ம் தேதி நாக பஞ்சமி வருகிறது. நாடு முழுதும் இந்துக்கள் பாம்புகளைக் கும்பிடுவார்கள்.

நாக பஞ்சமி என்றால் என்ன?

எப்போது?

ஏன் பாம்புகளை வழிபட வேண்டும்?

இது பற்றிய இரண்டு கதைகள் என்ன?

கொஞ்சம் ஆராய்சி செய்வோமா?

 

சில பகுதிகளில் நாக பஞ்சமியை ஒரு மாதம் வரை கொண்டாடுகிறார்கள். ஆடி மாத பஞ்சமியிலிருந்து ஆவணி சுக்ல பக்ஷ பஞ்சமி வரை கொண்டாடுகிறார்கள்.

 

நாக பஞ்சமி தினத்தன்று என்ன செய்வார்கள்?

பாம்புகளை வழிபடுவார்கள்;

 

பாம்புப் புற்றுகளில் பால் வார்ப்பார்கள்

 

பாம்பு, பறவைகளின் படங்களை சுவர்களிலும் கோலங்களிலும் வரைவார்கள்.

 

பருப்பு, கோதுமைகளை அரைத்து அதில் புல்லை முக்கி பாம்பு போல செய்வார்கள். அத்தோடு இனிப்புகளைப் பாம்புப் புற்றுகளில் இடுவார்கள்.

 

மானஸா தேவி என்னும் நாக தேவதையை வழிபடுவார்கள்

 

நாட்டில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு வழக்கம் இருக்கிறது

 

இது பற்றி இரண்டு கதைகள் உண்டு

ஒரு பிராஹ்மணப் பையனை பாம்பு கடித்து விட்டது. அவனைக் காப்பாற்ற அவனது இரண்டு சஹோதரிகளும் மானஸாதேவியை வழிபட்டனர். அந்தப் பையனுக்கு மீண்டும் உயிர் வந்தது. அவனும் சஹோதரிகளுக்கு விருந்து வைத்தான் ஆகையால் இது சஹோதர-சஹோதரி விருந்து நாளாகவும் அனுஷ்டிக்கப்படுகிறது.

 

இரண்டாவது சம்பவம்

 

சந்த் என்ற வணிகனுக்கு மானஸா தேவி மேல் கொஞ்சமும் நம்பிக்கை இல்லை. அவனது ஒவ்வொரு குழந்தையும் பாம்பு கடித்து இறந்தபோதும் அவன் வழிபட மறுத்தான். மீண்டும் ஒரு மகன் பிறந்தான்.

அந்த மகனுக்கு கல்யாண நாள் நிச்சயிக்கப்பட்டது. அந்த தினத்தில் மானஸா தேவி அந்த வணிகனுக்குப் பாடம் கற்பிக்க அந்த மணமகனைக் கடித்தாள்; அதாவது பாம்பு கடித்து அந்த மணமகன் இறந்தான்.

 

ஆனால் புது மணப்பெண், அந்த சடலத்தை எரிக்க வேண்டாம் என்று சொல்லி விரதம் இருந்தாள். அவளும் உடல் இளைத்து எலும்புக்கூடாகும் தருணத்தில் மானஸா தேவி மனம் இறங்கி அருள் பாலித்தாள். பிண மகன் மீண்டும் மணமகன் ஆனான். வணிகன் பெயர் சந்த். மணமகனை மீட்ட கற்புக்கரஸியின் பெயர் வெஹுலா.

 

இப்படி நாடு முழுதும் பாம்புக்கடி மரணங்களும் அவர்கள் மீண்டு வந்த அற்புதங்களும் உண்டு. நாயன்மார் ஆழ்வார் கதைகளிலும் பாம்புக் கதைகள் இருக்கின்றன. இவற்றைத் தனியே எழுதியுள்ளேன்.

 

நாக பஞ்சமி மூலம் இந்துக்கள் எப்படி இயற்கையைப் பாதுகாக்கிறார்கள், போற்றுகிறார்கள் என்று இப்பொழுது வெளிநாட்டினரும் புகழத் துவங்கி விட்டார்கள்; அறிவியல் ரீதியில் பார்த்தால் பெரும்பாலான பாம்புகள் விஷமற்றவை. மக்களின் பயமும் பீதியும் வெளியாட்களின் பிரச்சனையும் தான் சிக்கலை உருவாக்குகிறது. மேலும் பாம்புகள் மனிதனின் எதிரிகள் அல்ல;  தானாக வந்து எவரையும் தாக்குவதில்லை. அதைத் தாக்கும்போதோ மிதிக்கும்போதோ அவை தற்காப்புக்காகத் திருப்பித் தாக்குகின்றன. குழந்தைகளும் பாம்புகளும் விளையாடும் படங்களைப் பார்க்கிறோம்; ஏனெனில் அவை நண்பனுக்கு நண்பன்; எதிரிக்கு எதிரி.

 

150 ஆண்டுகளுக்கு முன் வெளியான வெள்ளைக்காரர் புஸ்தகங்களில் சில படங்கள் இருக்கும்;

 

காளி கோவிலில் குழந்தைகளைப் பலி கொடுக்கும் படம்

பெண்களை, கணவனின் சிதையில் தூக்கி எறியும் படம்

மரங்களையும் பாம்புகளையும் பெண்கள் வழிபடும் படம்

 

இப்பொழுதும் இவைகள் பழைய புஸ்தகங்களிலும் பத்திரிக்கைகளிலும் உள. நான் அடிக்கடி லண்டனில் பிரிட்டிஷ் லைப்ரரியிலும் லண்டன் யுனிவெர்ஸிட்டி லைப்ரரியிலும் பார்த்துப் பார்த்துச் சிரிப்பேன்;

 

இவை எல்லாம் உண்மையில் நடந்திருந்தால் இன்று இந்துக்களே உலகில் இருந்திருக்க மாட்டார்கள். கோடியில் ஒன்று நடந்தது உண்மைதான். இன்று மேலை நாடுகளில் இதைவிடக் கூடுதல் கொடுமைகள் நடப்பதை லண்டனில் பத்திரிக்கைகளில் தினமும் படிக்கிறோம்.

 

ஏனைய விஷயங்களை புறத்தே ஒதுக்கி வைத்து விட்டு பாம்பு வழிபாடு பற்றி மட்டும் பார்ப்போம்.

 

உலகில்  அறிவியல் அடிப்படையில் அமைந்த மதம் இந்து மதம்; எல்லாப் பண்டிகைகளுக்கும் அறிவியல் விளக்கம் உண்டு.

இந்தியா ஒரு விவசாய நாடு. மக்களின் மிகப்பெரிய தொழில் விவசாயம்.

உழுதுண்டூ வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்

தொழுதுண்டு பின் செல்பவர் (குறள் 1033)

உழவர்களே  தன்னுரிமையோடு வாழ்வார்கள்; மற்றெல்லோரும் பிறர் முன்னால் கைகட்டி, வாய் புதைத்து வாழ்பவர்கள்; இயல்பாகவே உழவர் பின்னால் செல்பவர்கள்.

 

விவசாய உற்பத்தி குறைந்தால் பஞ்சம் வெடிக்கும்; அராஜகம் பிறக்கும் ஆகையால் விவசாய உற்பத்தியைப் பாதுகாப்பது அவசியம்.

எலிகள் மூலம் ஏற்படும் சேதம் மிக மிக அதிகம். அதோடு பூச்சிகளும் சேதம் விளைவிக்கும். இவைகளைக் கட்டுப்பாட்டிற்குள் வைப்பது பாம்புகளே (Vital link in the food production chain) .

 

ஆதிகாலத்தில் வீட்டுக்குள் பாம்புகளைக் கண்டாலும் கூட அவைகளைக் கொல்ல மாட்டார்கள். பானைக்குள் அல்லது பெ ட் டிக்குள் பிடித்து வயற்காட்டில் விட்டு விடுவார்கள் அல்லது பாம்புப் பிடாரனை அழைத்து அவன் கையில் அந்தப் பணியை ஒப்படைப்பர்.

வயல் வெளிக்குள் நடந்து செல்வோரும் இரவில் ஒத்தையடிப் பாதையில் வருவோரும் கைகளைத் தட்டிக்கொண்டே வருவர் பாம்புகள் விலகி ஓடி விடும்! (பாம்புகளுக்கு காதுகள் உண்டா? அவைகளால் கேட்க முடியுமா என்பதை வேறு ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையில் விளக்கிவிட்டேன்; அதன் விஞ்ஞான விளக்கத்தை கட்செவி (கண்ணே செவி/காது) என்னும் ஆய்வுக் கட்டுரையில் காண்க)

ஆக எலிகளைக் கொல்ல பாம்புகள் உரிய அளவில் இருக்க வேண்டும் என்பது இந்துக்கள் அறிந்த உண்மை.

 

பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்பது பழமொழி; ஆனால் நல்லோர் அவையில் புகுந்த பாம்புகளையும் அவர்கள் கொல்ல மாட்டார்கள் என்று ஸம்ஸ்க்ருத, தமிழ்ப் பாடல்கள் சொல்லும். ஆக பாம்புகளின் மீதுள்ள பயத்தை எப்படிப் போக்குவது?

குறிப்பாக பெண்களும் சிறுவர்களும் பயப்படுவர். ஆண்டு தோறும் பண்டிகை நடத்தி நாக பஞ்சமி கொண்டாடுவதன் மூலமும் வெள்ளிக் கிழமைதோறும் புற்றிலுள்ள பாம்புகளுக்குப் பால் வார்ப்பதன் மூலமும், நாக பஞ்சமி தினத்தன்று பாம்பு படங்களைக் கோலம் வரைபடம் ஆகியவற்றில் வரைவதன் மூலமும், கோவில் தோறும் நாகர் சிலைகளை வைப்பதன் மூலமும் மக்களை உளவியல் ரீதியில் (psychologically prepared)  இந்துக்கள் தயார்படுத்த்தினர்.

பாம்புகளைக் கட்டித் தழுவுங்கள்; கொஞ்சிக் குலவுங்கள் என்று நான் சொல்ல வரவில்லை; அதை அவஸியமின்றி அடித்துக் கொன்று அழிக்காதீர்கள்; அவைகளையும் இயற்கை எனும் சங்கிலியில் ஒரு வளையம் என்பதை உணருங்கள்.

 

பாம்புகளை அழித்தால் வயல் வெளியில் எலிகள் பெருகும்; எலிகள் பெருகினால் உணவு உற்பத்தி குறையும்.

 

வாழ்க நாக பஞ்சமி; வளர்க நாகங்கள் (புற்றுக்குள் மட்டும்)!!!

–subham–

 

சூரி நாகம்மா! (Post No.5292)

Written by S NAGARAJAN

Date: 6 August 2018

 

Time uploaded in London – 6-09 AM  (British Summer Time)

 

Post No. 5292

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

சூரி நாகம்மா!

 

ச.நாகராஜன்

 

ஒரு பெரிய அவதாரம் நிகழும் போது அது ஆற்ற வேண்டிய பணிக்காக கூடவே சீடர்களும் பல்வேறு விதங்களில் பிறக்கின்றனர்.

 

மஹரிஷி ரமணர் திருவண்ணாமலையில் இருந்த போது அவரது வாழ்க்கை நிகழ்வுகளையும் உபதேசங்களையும் பல பக்தர்கள் பதிவு செய்தனர்.

அவர்களில் மிக முக்கியமானவர் சூரி நாகம்மா.

தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட அவர் குண்டூர் மாவட்டத்தில் மங்களகிரிக்கு அருகில் இருக்கும் கொலனுகொண்டா என்ற கிராமத்தில் 1902 ஆகஸ்ட் மாதம் பிறந்தார். நான்கு வயதில் அவரது தகப்பனாரும் பத்து வயதில் அவரது தாயாரும் காலமாகி விட்டார்கள். அந்தக் கால வழக்கப்படி அவருக்கு பதினொன்றாம் வயதில் கல்யாணம் நடந்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக ஒரே வருடத்தில் அவர் கணவனை இழந்தார்.

 

வாழ்நாள் முழுவ்தும் விதவையாக வாழ வேண்டிய துர்ப்பாக்கியம். அதை இறை நினைப்பில் ஈடுபடுத்தி தன்னை அதில் அர்ப்பணித்து வாழ்வை சிறக்க வைத்துக் கொண்டார் அவர்.

 

தனக்கான குருவாக ரமணரை வரித்தார். ஆசிரமத்திலேயே வசிக்க ஆரம்பித்தார். அவரது அண்ணன் சாஸ்திரி அவரை ஆசிரமத்தில் நிகழும் நிகழ்வுகளையும் மஹரிஷியின் உபதேசங்களையும் எழுதுமாறு கூறினார்.

 

இயல்பாகவே தெலுங்கில் கவிதை எழுதும் ஆற்றல் அவருக்கு இருந்தது. ஆனால் ஆசிரம நிகழ்வுகளை எழுதலாமா என்ற தயக்கம் அவருக்கு இருந்தது. அந்த நிகழ்வுகளைத் தனக்குக் கடிதமாக எழுதி அனுப்பலாமே என்ற சிறிய சகோதரரின் யோசனை அவருக்குப் பிடிக்கவே அவர் கடிதங்களை எழுதலானார்.

 

 

இன்று நமக்கு பொக்கிஷமாக கிடைத்திருக்கும் ‘லெட்டர்ஸ் ஃப்ரம் ரமணாச்ரமம்’ இப்படிப் பிறந்தது தான்!

சூரி நாகம்மா ஆசிரமத்திற்கு வருவதற்கு முன்னர் முனகால வெங்கடராமய்யா ஆங்கிலத்தில் ஆசிரமத்தில் நடப்பனவற்றை டைரியாக எழுதத் தொடங்கினார். சில காலம் எழுதிய பின்னர் டைரி நின்று விட்டது.

 

 

இன்னொரு அணுக்க பக்தரான தேவராஜ முதலியாரும் ஆசிரம நிகழ்வுகளைப் பதிவு செய்துள்ளார்.

இன்று நமக்கு ரமண உபதேசமாக கிடைப்பவை இவர்களது அரும் பதிவுகளினால் தான்.

 

1945ஆம் வருடம் நவம்பர் மாதம் 21ஆம் தேதி தனது கடிதம் எழுதும் பணியை சூரி நாகம்மா தொடங்கினார்.

எந்த நல்ல காரியமும் விக்கினம் இல்லாமல் முன்னேறாது என்பது உலக நியதி போலும்!

 

ஆசிரமத்திலும் கூட பொறாமை பிடித்தவர்கள் இருப்பார்கள் என்பதற்கு உதாரணமாக ஒரு சம்பவம் நடைபெற்றது.

ஆசிரமம் அமைந்தவுடன் அதன் நிர்வாகப் பொறுப்பை சர்வாதிகாரியாக ஏற்றார் ரமண மஹரிஷியின் பூர்வாசிரம சகோதரர். நிரஞ்ஜனானந்த ஸ்வாமி என்ற பெயருடன் அவர் நிர்வாகத்தை நடத்தி வந்தார். சின்ன ஸ்வாமிகள் என்று அவரை அனைவரும் அழைப்பது வழக்கம்.

 

ஒரு நாள் அவர் சூரி நாகம்மாவை அழைத்து . “ இனி இத்துடன் நிறுத்து’ என்றார். அப்போது அவரது கடிதங்கள் புத்தகமாக அச்சிடப்பட்டு வந்ததை ரமணரின் முன்னால் படித்து வர ஏராளமான பக்தர்கள் அதைக் கேட்டு மகிழ்ந்து வந்தனர்.

நாகம்மா படிப்பதை நிறுத்தினார். ஏன் என்று மஹரிஷி கேட்க சின்ன ஸ்வாமி கூடாது என்று சொல்லி விட்டார் என்றார் அவர்.

அப்படியா என்ற அவர் அருகிலிருந்த ராஜகோபாலய்யங்கார் என்பவரைப் பார்த்து, “நாம் படிக்கச் சொல்லுவது.அவர் கூடாதென்கிறது. இதெல்லாம் நன்றாயிருக்கு. இனி நாம் யாரையும் படிக்கச் சொல்லக் கூடாது போல இருக்கிறது! என்றார்.

 

 

இதை ராஜகோபாலய்யங்கார் அலுவலகத்தில் சொல்ல, படிக்க வேண்டாம் என்று நான் சொல்லவில்லை. எழுதுவதைத் தான் நிறுத்தச் சொன்னேன்” என்றார் சின்ன ஸ்வாமி.

மறுபடியும் படிக்கத் தொடங்கிய நாகம்மா மூன்று நாட்களில் கடிதங்களைப் படித்து முடித்தார்.

 

சின்ன ஸ்வாமியின் சொல்படி தனது கடிதங்களை ஆசிரமத்தின் வசம் ஒப்படைத்தார்.

 

சில நாட்கள் கடிதங்கள் எழுதுவதை நிறுத்திய அவர் பின்னர் மீண்டும் எழுதத் தொடங்கினார்.

 

 

அவை பின்னால் ரமணாசிரமக் கடிதங்கள் என்ற பெயரில் ஆசிரமத்திலிருந்தே அச்சிடப்பட்டு வெளி வந்தன.

கடிதங்கள் படிப்பதற்குச் சுவையாக இருப்பதுடன் ஆசிரம நிகழ்வுகளையும் பகவானின் பல உபதேசங்களையும் தருவதாக அமைந்துள்ளன.

 

இன்று ரமணரைப் பற்றி அதன் மூலம் அறிந்து கொள்வோர் அவருக்கு நன்றி பாராட்டாமல் இருக்க முடியாது.

சிறு வயதில் சொந்த வாழ்க்கையில் நேர்ந்த சொல்லவொண்ணா துக்கத்தைச் சுமந்தாலும், பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு ரமண உபதேசங்களை வழங்கிய பெறும் பேற்றைப் பெற்றார் அவர்.

 

சூரி நாகம்மாவின் கடிதங்கள் ரமண பக்தர்களுக்கு ஒரு பொக்கிஷம்!

***

 

சிஷ்யனை நக்கல் செய்த குருநாதர் (Post No.5285)

Compiled by London swaminathan

Date: 3 August 2018

 

Time uploaded in London – 13-20  (British Summer Time)

 

Post No. 5285

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் குருநாதரின் பெயர் தோதாபுரி, அவர் பரமஹம்சரை கிண்டல் செய்த ஒரு சம்பவம் இதோ:

 

ராமகிருஷ்ணர் சிறு வயதிலிருந்தே விடியற்காலையிலும் மாலையிலும் கைகளைத் தட்டிக்கொண்டும், சில நேரங்களில் நடனமாடிக்கொண்டும் இறைவனின் பல்வேறு திருநாமங்களைச் சொல்லிப்பாடுவார்.

 

‘ஹரி போல், ஹரி போல்’ (ஹரியின் பெயரைச் சொல்) ‘ஹரியே குரு’, ‘குருவே ஹரி’, ‘ஓ என் உயிரே கோவிந்தா’, பிராணனே கோவிந்த, அறிவே கோவிந்தா, உணர்வே கோவிந்தா’ ‘நீவீர் உலகம்’ ‘நான் இயந்திரம், நீ என்னை இயக்குபவன்’ என்றெல்லாம் பாடுவார்.

 

அத்வைத சாதனை செய்து கடவுளை உருவமும் குணமும் இல்லாதவராக- எங்கும் நிறைந்த எல்லாமான பிரம்மமாகக் கண்ட பிறகும் கூட அவரிடம் இந்தப் பழக்கம் நிற்கவில்லை.

 

ஒருநாள் மாலை தோதாபுரியும் ராமகிருஷ்ணரும் உடகார்ந்து வழக்கம்போல ஆன்மீகம் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள்.

 

வெளிச்சம் மறைந்து இருள் சூழத் துவங்கியது. சந்தியாகால நேரம்; ராமகிருஷ்ணர் வழக்கம்போலக் கைகளைத் தட்டிக்கொண்டு கடவுளின் திருநாமங்களைச் சொல்லிக்கொண்டு பாட ஆரம்பித்தார். இதைக் கண்டு தோதாபுரி ஆச்சர்யமடைந்தார். ஏனென்றால் ஆன்மீகத்தின் ஆரம்ப நிலையில் இருப்பவர்கள் செய்யக்கூடிய காரியம் இது. ராமகிருஷ்ணரோ ஆன்மீக சாம்ராஜ்யத்தின் உச்சகட்டத்தை எட்டியவர்; அத்வைத சாதனையில் வெற்றி பெற்றதால் அதற்கு மேல் எதுவும்தேவை இல்லை.

அவர் இப்படி சாதாரண மனிதன் போல ஆடுவதும் பாடுவதும் கை தட்டுவதும் குருநாதரான தோதாபுரிக்கு வியப்பைத் தந்தது. மேலும் அவர் புன்சிரிப்போடு, குரு நாதரைப் பார்த்துக்கொண்டு கைகளைத் தட்டி ஆடினார். அவர் கைகளை ஒன்றோடு ஒன்று தட்டி ஆடியதைப் பார்த்த தோதாபுரி, “என்ன பூரி செய்ய மாவு தட்டுகிறாயா?” என்று  கேட்டார்.

 

இதைக்கேட்டதும் ராமகிருஷ்ணர், ” என்ன அர்த்தமில்லாமல் பேசுகிறீர்கள்? நான் இறைவனின் புனிதமான பெயரைப் பாடுகிறேன். அதைப் போய் பூரி தட்டும் வேலையோடு ஒப்பிடுகிறீர்களே. இது மிகவும் மோசம்” என்றார்.

 

தோதாபுரி புன்சிரிப்போடு பதில் ஒன்றும் பேசாமல் இருந்துவிட்டார்.

 

ஆதாரம்—‘பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர்’, ராமகிருஷ்ண மடம், மயிலாப்பூர், சென்னை.

 

 

‘சித்தன் போக்கு சிவம் போக்கு ஆண்டி போக்கு அதே போக்கு’– என்று தமிழில் பழமொழி உண்டு. ஒவ்வொரு பெரியோரின் வாழ்விலும் இது போல சில விநோதச் செயல்கள் இருக்கும்; அதை வைத்து நாம் அவர்களை எடை போட்டால் நாம் மதியீனர்கள் ஆவோம்.

Picture shows Muralidhara Swamikal with his devotees

காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் (1894- 1994) கூட அத்வைதம் பேசும் தாங்கள் ‘’ஏன் உத்துரணி தட்டும் வேலை’’யைச் செய்து கொண்டிருக்கிறோம் என்று அருமையான சொற்பொழிவு ஆற்றியுள்ளார்.

 

கீழ்நிலயில் உள்ள நம்மைப் போன்றவர்களும் அவர்களிடம் வரவேண்டும் என்பதற்காவே அவர்கள் இப்படிப் பூஜை புனஸ்காரங்களைச் செய்துகொண்டு இருக்கிறார்கள்.

அவர்களைப் போன்ற பெரியோர்கள் மலைக் குகைகளில் உடகார்ந்து தவம் செய்யத் துவங்கினால் நமக்கு வாய்ப்பே இல்லாமல் போய்விடுமல்லவா?

 

–சுபம்–

கீழ்ஜாதிக்காரனை மேல் ஜாதியாக்கும் அதிசய மந்திரம்! (Post No.5283)

Written by London swaminathan

Date: 3 August 2018

 

Time uploaded in London – 6-52 AM   (British Summer Time)

 

Post No. 5283

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

கீழ்ஜாதிக்காரனை மேல் ஜாதியாக்கும் அதிசய மந்திரம்! (Post No.5283)

 

சிவ சிவ என்கிலர் தீவினையாளர்

 

சிவ சிவ என்றிடத் தீவினை மாளும்

 

சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவர்

 

சிவ சிவ என்னச் சிவகதி தானே

திருமூலரின் திருமந்திரம்

 

பொருள்

 

பாவிகள், சிவன் (கடவுள்) நாமத்தை உச்சரிக்க மாட்டார்கள்; பாவம் செய்தவர்களும் சிவ, சிவ என்ற நாமத்தை உள்ளன்போடு உச்சரித்தால் பாவங்கள் போகும். சிவன் நாமத்தை உச்சரித்தால் மனிதனும் தேவர் ஆகிவிடுவான். தொடர்ந்து சிவன் நாமத்தை உச்சரிப்பவர்கள் சிவனுடன் ஒன்றிவிடுவார்கள்.

 

‘நாவுக்கு அருங்கலம் நமச்சிவாயவே’ என்று அப்பர் பெருமான் சொன்னதும் இதனால்தான்.

 

இதை விளக்க ஒரு கதை உண்டு

ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் சந்தித்த பெரிய பக்தர்களில் ஒருவர் கிருஷ்ண கிஷோர். அவர் ராம பிரானை வழிபடுபவர். அரியதாகா என்னுமிடத்தில் வாழ்ந்தார்.அவரைப் பற்றி ராமகிருஷ்ணர்  சொன்னதாவது:

 

“எனக்கு முதலில் தெய்வீகப் பரவச நிலை ஏற்பட்டு அதிலேயே  ஆழ்ந்து கிடந்தபோது  , என்னால் உலக ஆசை பிடித்த சாதாரண மக்களோடு இருக்கவே முடியாது. நான் கடவுள் வெறி பிடித்து , கடவுள் பற்றிய விஷயங்களையே கேட்க விரும்பினேன். மஹாபாரதம் எங்கே நடக்கும்? பாகவதம் எங்கே நடக்கும்?

அத்யாத்ம ராமாயணம் எங்கே நடக்கும்? என்று அலைந்தேன். சில நேரங்களில் கிருஷ்ண கிஷோரிடம் செல்வேன். அவருக்குக் கடவுளிடம் அற்புதமான நம்பிக்கை இருந்தது.

 

ஒருமுறை கிருஷ்ண குமார் பிருந்தாவனத்துக்குச் சென்றிருந்தார். அவருக்கு மிகவும் தாகம் எடுத்தது. போகும் வழியில் இருந்த ஒரு கிணற்றடிக்குச் சென்றார். அங்கே ஒருவன் தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்தான். கிஷோர் அவனிடம் சென்று தமக்குக் குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் தரும்படி கேட்டார். அவனோ தான் மிகவும் தாழ்ந்த குலத்தைச் சேர்ந்தவன் என்றும் அவருக்குத் தண்ணீர் எடுத்துத் தருவது பாவம் என்றும் கூறினான்.

 

உடனே கிருஷ்ண கிஷோர் அவனிடம் ‘ சிவ, சிவா’ என்று சொல்லச் சொன்னார். அவன் சொன்னதும் நீ உயர்குலத்தவன் ஆகிவிட்டாய், உன் கையாலேயே தண்ணீர் இறைத்துக் கொடு’ என்றார். அவனும் தந்தான். கடவுளின் திருநாமத்தில் அவருக்கு அவ்வளவு நம்பிக்கை.

 

சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவர்என்று திருமூலர் சொன்னது எவ்வளவு உண்மை! நாடு முழுதும் இந்த நம்பிக்கை உண்டு!

 

அஜாமிளன் கதை புராணத்தில் வருகிறது எவ்வளவு பாபம் செய்த போதிலும் சாகும் நேரத்தில் மகன் பெயரான நாராயணன் பெயரைச் சொல்லி அழைத்த ஒரே காரணத்தினால் அவன் எல்லா பாபமும் நீங்கப் பெற்றான்.

 

விஷ்ணு ஸஹஸ்ர நாமத்தின் பலஸ்ருதியிலும் சங்கீர்த்ய நாராயண சப்த மாத்ரம் விமுக்த துக்காஸ் சுகினோ பவந்து” என்று சொல்லப்படுகிறது. நாராயண என்ற சப்தமும் சிவன் என்ற சப்தமும் எல்லாப் பாவங்களையும் போக்கி எல்லோரையும் உயர் நிலைக்கு இட்டுச் சென்று விடுகிறது. இதை அப்பர் சுவாமிகள் , திருமூலர், சம்பந்தர் முதலியோரும் ஆழ்வார்களும் நமக்கு பாடல்களால் உணர்த்தியுள்ளனர்.

 

சிவ, சிவ!                                          நாராயண, நாராயண!!

 

–சுபம்–

STORY BEHIND ‘BHAJA GOVINDAM’ HYMN (Post No.5277)

Written by London swaminathan

Date: 1 August 2018

 

Time uploaded in London – 6- 52 am    (British Summer Time)

 

Post No. 5277

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

What is Bhaja Govindam?

Bhaja Govindam is a hymn in Sanskrit. Adi Shankara wrote part of it i.e. first 12 stanzas.

Bhaja Govindam teaches the fundamentals of Vedanta in simple, musical verses. Children can easily learn the Advaita philosophy of Shankara through these verses. Young men can remove all his delusions, and so the poem is also called as ‘Moha Mudgara’ (it means the hammer that strikes at delusion).

 

A popular story describes the circumstances in which this great poem broke out from the inspiring heart of the Teacher Shankara. It is said that once in Benares (Varanasi/ Kasi)  Shankara along with his fourteen disciples (followers) was going , he overheard an old pundit (scholar) repeating to himself grammar rules. Shankara realised that it is a mere intellectual accomplishment and thus wasting his time in life.  Immediately he burst forth into these stanzas, known as Moha Mudghara, now popularly known as Bhaja Govindam.

 

“Grammar rules will never help anyone at the time of death. While living, strive to realise the deathless state of purity and perfection.”

The opening stanza is repeated as a refrain or chorus, at the end of the each of the following verses. First twelve stanzas were given out by Shankara himself. They go under the name of the Dwadasaha- Manjarika- Stotram (A hymn which is a bunch of twelve verse-blossoms) . Shankara’s followers, inspired by the Guru, added one each and those fourteen are called Caturdasa Manjarika Stotra ( a hymn which is a bunch of fourteen verse-blossoms). At the end Shankara concluded it with a few more stanzas totalling 31 stanzas.

 

I am giving below the first stanza:

Bhaja Govindam, Bhaja Govindam,

Govindam Bhaja Mudamathe

Samprapte sannihite Kale

Na Hi Na Hi  Rakshati Dukurunckarane

 

Meaning:

“Seek Govind (god), Seek Govind (god), Oh Fool!

When the appointed time comes (death), grammar rules surely will not save you”.

 

The grammar-rule that has been indicated here stands for “all secular knowledge and possessions”. The grammatical formula mentioned here in DUKRUNCKARANE is from the Dhatupada of Panini’s grammar treatise Sidhanta Kaumudi.

 

Tiru Valluvar in his Tamil Veda ‘Tirukkural’ also emphasise this point:

 

‘Learning and scholarship are of no avail if they do not lead

One to worship at the wise one’s divine feet’- Kural 2

In fact we can compare every stanza of Bhaja Govindam with Tamil Couplets in Tirukkural!

 

Source book- Bhajagovindam by Chinmaya mission with my inputs on Tirukkural.

–Subham–

 

 

கண்ணதாசனின் ‘போனால் போகட்டும் போடா’! (Post No.5273)

Written by S NAGARAJAN

Date: 31 JULY 2018

 

Time uploaded in London – 5-48 AM   (British Summer Time)

 

Post No. 5273

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

கண்ணதாசனின்போனால் போகட்டும் போடா! (Post No.5273)

 

.நாகராஜன்

 

உலக வாழ்க்கை நிலையில்லை என்பதை வள்ளுவர் முதல் பட்டினத்தார் வரை பிரமாதமாகச் சொல்லி இருக்கிறார்கள்.   (12-9-2015இல் வெளியான எனது கட்டுரை எண்  2149 –‘டொண்டொண்டொடென்னும் பறை என்ற கட்டுரையில் இவர்கள் கூறியவை பற்றி நிறைய விவரங்கள் உள்ளன)

 

முக்கியமாக பட்டினத்தார், எவ்வளவு செல்வம் படைத்தவனாக இருந்தாலும் கூடகாதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே என்று சொல்லி இருக்கிறார்.

 

 

முழுப்பாடல் :

வாதுற்ற திண்புயர் அண்ணாமலையர் மலர்ப் பதத்தைப் போதுற்ற எப்போதும் புகலுநெஞ் சே! இந்தப் பூதலத்தில்   தீதுற்ற செல்வமென்? தேடிப் புதைத்த திரவியமென்?      காதற்ற ஊசியும் வாராது காணுங் கடைவழிக்கே!

இத்தோடு நிற்கவில்லை அவர்.

 

செத்த பிணத்தைச் சுற்றி அழுது புலம்புபவர்கள் யார் தெரியுமா? இனி சாகப்போகும் பிணங்கள் என்கிறார்.

 

பத்தும் புகுந்து பிறந்து வளர்ந்து பட்டாடை சுற்றி         முத்தும் பவளமும் பூண்டோடி ஆடி முடிந்த பின்பு             செத்துக் கிடக்கும் பிணத்தருகே இனி சாம் பிணங்கள்     கத்தும் கணக்கென்ன காண் கயிலா புரிக் காளத்தியே!

 

செத்தவரைச் சுற்றிச் சுற்றமும் நட்பும் அழுது புலம்புவது இயற்கை. ஆனால் அதை தத்துவ நோக்கில் பார்த்து மனதைத் தேற்றிக் கொள்பவர் எத்தனை பேர்?

*

 

 

இந்த வகையில் தான் கண்ணதாசனின் போனால் போகட்டும் போடா பாடல் மாறு படுகிறது.

இந்தப் பாடல் பிறந்த கதை பற்றி வேறுபட்ட கருத்துக்களைப் பார்க்க முடிகிறது.

*

 

மெல்லிசை மன்னர் விசுவநாதன் கண்ணதாசனின் அத்யந்த நண்பர். அவருடன் நெடுங்காலம் பழகியவர்.

அவர் கூறுவது இது:

 

ஒரு சமயம் ஒரு படத்திற்காகப் பாடல்ரிகார்டிங் செய்து கொண்டிருந்த போது, ஒரு துக்கமான செய்தி வந்தது. என் இசைக் குழுவிலிருந்த ஒருவரை நாய் கடித்திருந்தது. அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நாய் விஷம் ஏறி  நாய் போலவே ஊளையிட்டு அன்றைய தினம் இறந்து விட்டார் என்பதே அந்த சோகச் செய்தி. அந்தப் பாடல் தான்பாலும் பழமும் படத்தில் வரும்போனால் போகட்டும் போடா, இந்தப் பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா!என்பது. அதிலிருந்து அடிக்கடி கவிஞரிடம் சொல்வது,அவச்சொல் வருகிற மாதிரிப் பாட்டே வேணாம்ணே! உங்க வாயிலிருந்து அந்த மாதிரி வார்த்தைகளே வரவேண்டாம்ணே!

*

 

 

கண்ணதாசனின் உடனிருந்த இராம.முத்தையா கூறும் செய்தியோ வேறு விதமானது. அவர் கூறுவது:-

ஒரு சமயம் கவிஞர்ஆஸ்டின்கார் ஒன்றை, 8000 ரூபாய்க்கு விலை பேசி, 1500 ரூபாய் முன்பணம் கொடுத்திருந்தார். அதை எடுத்து அன்றைய தினமே வட ஆற்காடு மாவட்டத்திலுள்ள திருப்பத்தூர்ப் பொதுக்கூட்டத்திற்குச் சென்றார். போகும் வழியில் டிரைவர் ஓட்டிய வழியில் கார் செல்லாமல், ஏதோ ஒரு பக்கம் இழுத்துக் கொண்டே சென்றிருக்கிறது. உடனே கவிஞர் பயந்து போய், டிரைவரை நிறுத்தச் சொல்லி விட்டு, இறங்கி விபரம் கேட்டார்.சேஸிஸ் பெண்டாகி இருக்கிறது என்றார் டிரைவர்.

 

காரை லாரியில் கட்டி இழுத்துக் கொண்டு, சென்னைக்குப் போ என்று டிரைவரிடம் சொல்லி விட்டு, அங்கிருந்து ஒரு டாக்ஸியில் ஏறிக் கூட்டத்திற்குப் போய்விட்டுத் திரும்பி வந்தார். மறுநாளே காரை வாங்கியவர்களிடம் திருப்பிக் கொடுத்து விடுஎன்றார் என்னிடம்.

 

நாம் கொடுத்த முன் பணத்தைத் திருப்பிக் கொடுக்க மாட்டார்களே! என்றேன் நான்.

போனால் போகட்டும் போடா! நான் பிழைத்து வந்ததே பெரிய காரியம்! என்றார்.

 

அன்றைய தினம் எழுதிய பாடல் தான், பாலும் பழமும் என்ற படத்தில் வருகிற போனால் போகட்டும் போடா!

அன்று மாலை என்னிடம் காரில் போன பணத்தை (1500 ரூபாய்) பாட்டு எழுதிச் சம்பாதித்து விட்டேன் என்று சொன்னார்.

 

இப்படி ஏற்படுகிற ஒவ்வொரு நிகழ்ச்சியும், சூழ்நிலையும் கவிஞருக்குப் பாடலுக்குக் கருத்தாக வந்தமையும்.

 

*

இனி கவிஞரின் பாடலை முழுதுமாகப் பார்ப்போம்:

 

போனால் போகட்டும் போடா; இந்த
பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?
போனால் போகட்டும் போடா.

ஓஹோஹோஓஹோஹோ


வந்தது தெரியும் போவது எங்கே
வாசல் நமக்கே தெரியாது!
வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் இந்த
மண்ணில் நமக்கே இடமேது?

வாழ்க்கை என்பது வியாபாரம்; வரும்
ஜனனம் என்பது வரவாகும்; அதில்
மரணம் என்பது செலவாகும்
போனால் போகட்டும் போடா.

இரவல் தந்தவன் கேட்கின்றான் ; அதை
இல்லை என்றால் அவன் விடுவானா?
உறவைச் சொல்லி அழுவதனாலே
உயிரை மீண்டும் தருவானா?

கூக்குரலாலே கிடைக்காது; இது
கோர்ட்டுக்கு போனால் ஜெயிக்காது; அந்த
கோட்டையில் நுழைந்தால் திரும்பாது
போனால் போகட்டும் போடா!

ஓஹோஹோ ஓஹோஹோ

எலும்புக்கும் சதைக்கும் மருத்துவம் கண்டேன்

இதற்கொரு மருத்துவம் கண்டேனா?

இருந்தால் அவளைத் தன்னந் தனியே

எரியும் நெருப்பில் விடுவேனா?

நமக்கும் மேலே ஒருவனடாஅவன்

நாலும் தெரிந்த தலைவனடா! –தினம்

நாடகமாடும் கலைஞனடா!

போனால் போகட்டும் போடா!

 

மிக அருமையான வரிகள்! பட்டினத்தார் இனி சாம் பிணங்கள் அழுவது போல என்று சொன்னாரே அது போல, கண்ணதாசன் அழவில்லை.

 

போனால் போகட்டும் போடா என்கிறார்இரவல் தந்தவன் கேட்கின்றான் அதை இல்லை என்றால் அவன் விடுவானா?கூக்குரலாலே கிடைக்காது; இது கோர்ட்டுக்கு போனால் ஜெயிக்காது; அந்தகோட்டையில் நுழைந்தால் திரும்பாது!


போனால் போகட்டும் போடா! என்கிறார். ஜனன மரணக் கணக்கை ஒரே பாராவில் தந்து விடுகிறார். வாழ்க்கை என்பது வியாபாரம்; வரும் ஜனனம் என்பது வரவாகும்; அதில் மரணம் என்பது செலவாகும்அவ்வளவு தான்! போனால் போகட்டும் போடா!!

பாட்டில் வரும் தலைவன் டாக்டர். அவனால் உயிரை போகாமல் இருப்பதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை. நமக்கும் மேலே ஒருவனடா, அவன் நாலும் தெரிந்த தலைவனடா, தினம் நாடகமாடும் கலைஞனடா என்று தன்னைத் தானே சமாதானம் செய்து கொள்கிறான். இறை தத்துவம் இப்படி விளக்கப்படுகிறது!

 

அருமையான வரிகளில் பெரும் தத்துவத்தை அனாயாசமாக அள்ளித் தந்து விட்டார் கவிஞர்.

 

அந்த வகையில்  இந்தப் பாடல் புகழ் பெற்றதோடு அடிக்கடி அனைவரும் உபயோகப்படுத்தும் போனால் போகட்டும் போடா சொற்றொடரையும் கொண்டிருக்கிறது.

 

டி.எம்.சௌந்தரராஜன் குரலில் சிவாஜிகணேசனின் நடிப்பில் விசுவநாதன் ராமமூர்த்தி இசையமைப்பில் பீம்சிங் இயக்கத்தில் 1961ஆம் ஆண்டு வெளி வந்த பாடல்!

 

கண்ணதாசனின் வைர வரிகளால் அழியாது நிற்கிறது.

***

 

ராமனின் அதிசயப் பயணம்-3 (Post No.5262)

Written by London swaminathan

Date: 27 JULY 2018

 

Time uploaded in London – 8-31 am  (British Summer Time)

 

Post No. 5262

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

ராமன் 5113 நாட்களில் செய்த பயணத்தில் பல அதிசயங்கள் நிறைந்துள்ளன.

 

உலகிலேயே முதல் வெளிநாட்டு அரசை வேறு ஒரு நாட்டில் அமைத்தது ராமபிரான். இந்திய மண்ணிலேயே இலங்கை அரசை ஏற்படுத்தி, விபீஷணனை இலங்கை மன்னனாக அறிவித்து, முடி சூட்டி விடுகிறான்.

 

அதே போல பிடித்த நாடுகளை அவரவர் கையிலேயே (சுக்ரீவன், விபீஷணன்) கொடுத்து விடுகிறான். நாடு பிடிக்கும் ஆசையோ, ஆட்சியைக் கலைக்கும் ஆசையோ இல்லாதவன்

 

பொது மக்கள் அபிப்ராயத்துக்கு மதிப்பு கொடுத்தவனும் அவன்தான். யாரோ ஒரு வண்ணான் சொன்னதற்காக தன் மனைவியைக் காட்டுக்கு அனுப்பினான்.

 

 

  1. சுதீக்ஷண ஆஸ்ரமம்

ராமன் கைகளை உயர்த்தி சபதம் செய்கிறான் அசுர சக்திகளை அழிப்பேன் என்று.

 

42.அக்னிஜிஹ்வ ஆஸ்ரமம்

அகஸ்த்ய முனிவரின் சஹோதரர் ஆஸ்ரமம் இது; இங்கே ராமன் எழுந்தருளினார்.

43.அகஸ்த்ய ஆஸ்ரமம் (சாலேஹ)

சித்த பாபா ஆஸ்ரமம் இருக்கிறது

 

44.ராம் கோவில் (மைஹர் சாதனா)

இங்குள்ள கோவிலில் ராமர், சிவனை வழிபட்டார்

 

சகுஜா மாவட்டத்தில் நுழைகிறார்

 

45.சந்தன் மித்தி

ராமரும் லக்ஷ்மணனும் சந்தனக் குழம்பால்

தங்கள்  தலை முடியைக் கழுவினர்

 

ராஜ்கர் மாவட்டத்தில்

 

46.சிவ மந்திர் (பகீச்சா)

வனவாசிகளை குளிர்க் காய்ச்சலில் இருந்து காப்பாற்ற சீதா தேவி இங்கு துளசி செடிகளை நட்டார்.

 

குமலா மாவட்டம்

  1. ராம ரேகா தாம்

அடர்ந்த காட்டில் ராமர் தனது அம்பால் எல்லைகளை வரைந்தார்/குறித்தார்

 

48.ராம மந்திர் (ஜஸ்பூர்)

மூங்கில் குச்சிகளில் இருந்து கூடை முடைவது எப்படி என்பதை வன வாசிகளுக்கு ஸீதை கற்பித்த இடம்

 

49.ராம ஜாரன (சிங்பூர்)

இங்குள்ள ஊற்றில் எப்போதும் நீர் மட்டம் ஒரே மாதிரி இருக்கும்; அங்கு அனைவரும் குளித்தனர்.

 

பிலாஸ்பூர் மாவட்டம

Rama and Sita on Stamps

50.ராம தேக்ரி மந்திர் (ரதன்பூர்)

மலை உச்சியில் ராமர் சிறிது காலம் தங்கி இருந்தார்

 

51.ஷிப்ரி நாராயண் மந்திர் ((ஷிப்ரி)

 

சாது சந்யாசிகளை ராமன் தரிசித்தார்

ராய்பூர் வட்டம்

 

52.விஷ்ரம் வட் (ஷிப்ரி நாராயண்)

மஹாநதிக் கரையில் வட வ்ருக்ஷத்தின் கீழ் (ஆலமரம்) ராம, லக்ஷ்மணர் ஓய்வு எடுத்தனர்

பிலாஸ்பூர் மாவட்டம்

53.லக்ஷ்மணேஸ்வர் மந்திர்

சிவ பிரானுக்காக லஷ்மணன் கட்டிய சிவன் கோவில்

ராய்பூர் மாவட்டம

54.வால்மீகி ஆஸ்ரமம்

பல வால்மீகி ஆஸ்ரமங்கள் உள்ளன. அதில்

இதுவும் ஒன்று.

 

55.ராம திவாலா (சிர்பூர்)

ராமர் ஓய்வு எடுத்த இடம்

56.பாகேஸ்வர் மந்திர்

மஹாநதிக் கரையில் ராமர்  அமைத்த சிவன் கோவில்

 

  1. ஷிவ் மந்திர்

ராமர் தாபித்த மற்றொரு சிவன் கோவில்.

 

58.குலேஸ்வர்நாத் ராஜிவ் லோசன்

ஸீதாதேவி- குலேஸ்வர் நாத் கோவிலை நிர்மாணித்தார்.

 

59.ஷ்ரங்கி ஆஸ்ரமம்

ஷ்ரங்கி ரிஷியைக் காண ராமர் வந்தார்.

60.விஷ்ணு மந்திர்

ராமாபூர் ஜுன்வனி பகுதியில் நிறைய ரிஷிகள் ஆஸ்ரமங்கள் இருக்கின்றன. ராம லக்ஷ்மணர் கோவில் இங்கு உள்ளது. உள்ளே நான்கு கைகளுடன் கூடிய அழகான விஷ்ணு சிலை உள்ளது

 

61, 62, 64, 65, 67- சிவன் கோவில்கள்

ஜோகி குகையில் ராமர் கனக ரிஷியைச் சந்தித்த பின்னர் அமைத்த சிவன் கோவில் காங்கேரில் உள்ளது.

ராமர் ஓய்வு எடுத்த சிவன் கோவில், கேஷ்கர் கட்டியில் இருக்கிறது.

டோடமாவில், இஞ்சராம கொண்டா முதலிய இடங்களில்

ராமர் கட்டிய சிவன் கோவிலைக் காணலாம்.

சித்ரகூடத்தில் ராமரும் சீதையும் கட்டிய சிவன் கோவிலை தரிசிக்கலாம்.

சபரி ஆற்றின் கரையில் ராமன் வழிபட்ட சிவன் இருக்கிறார்.

 

இவை அனைத்தும் இரண்டு விஷயங்களைக் காட்டுகின்றன.

1.ராமர் காலத்தில் சிவன் வழிபாடு பெருகி இருந்தது

2.சைவ- வைஷ்ணவ பேதம் வட நாட்டில் இல்லை

 

இது தவிர நாம் இன்னொரு விஷயத்தை ஊகிக்கலாம். மக்களின் பெருத்த ஆதரவு பெற்ற ஒரு மாமன்னன் 5113 நாட்களும் சும்மா இருந்திருக்க முடியாது. போகும் இடம் எல்லாம் தாம் வழிபட்ட தெய்வங்களை கோவில் கட்டுமாறு மக்களை ஊக்குவித்திருக்கலாம்.

 

தொட்டதெல்லாம் பொன்னாகும் வரம் வாய்ந்த கைகள் ராம பிரான் கரங்கள்!! அவர் நடந்த இடமெல்லாம் புனிதமாக்கப்பட்டதால் இன்றும் மக்கள் எல்லா இடங்களையும் அவர் பெயரால் அழைக்கின்றனர். இது மஹத்தான உண்மை!!!

 

63.ரக்ஷா டோங்ரி

நாராயண்பூரில் ஒரு குகை இருக்கிறது.  அரக்கர்களுடன் ராமர் போர் புரிந்த காலையில் இந்த குகைக்குள் பாதுகாப்பாக இருக்குமாறு ராமர் ஸீதையைத் தங்க வைத்தாராம்.

 

66.ராம்ராம் சித்மித்தன் (சுகாமா) அன்னை பூமியை (தாத்ரி மா) ராமர் வழிபட்ட இடம் ( பூமி ஸூக்தம் எனப்படும் அதர்வண வேத மந்திரத்திலும் பூமி வழிபாடு உள்ளது. உலகிலேயே முதல் முதலில் பூமியையும் புறச் சூழலையும் வழிபட்டவர்கள் இந்துக்கள்; இதை நம்மிடமிருந்து பெற்ற கிரேக்கர்கள் கையா (Gaia) என்ர பெயரில் அதை உலகெங்கும் பரப்பினர். ஜய (Jaya= Gaia) என்ற ஸம்ஸ்கிருதச் சொல்லை ஆங்கிலேயர்கள் கையா என்று உச்சரித்தனர்.

 

காம்ரான் மாவட்டத்துக்குள் பிரவேஸம்

 

 

  1. பர்ணகுடி (பத்ராசலம்)

 

ஆந்திரத்தில் பத்ராசலம் ; இங்கு கோதாவரிக் கரையில் ராமர் தங்கினார்

 

69.ராம்டெக்

அசுரர்களைக் கொல்ல ராமன் மீண்டும் உறுதி மொழி எடுத்த இடம்

 

70.சரபங்க ஆஸ்ரமம் (உங்கேஸ்வர்)

இங்கு ஒரு வெந்நீர் ஊற்று உளது; இது ராமரின் வில்லினால் உண்டாக்கப்பட்டது என்பது நம்பிக்கை; ரிஷியின் குஷ்ட நோயை இது போக்கியது.

நான்டெல் ஜில்லா

  1. ஜமதக்னி ஆஸ்ரமம்

ஜமதக்னி ஆஸ்ரமத்தில் ராமர் ஓய்வெடுத்தார்

 

பல்தானா ஜில்லா

72.பஞ்சபாசர (லௌனார்)

ஒரு குளத்திலிருந்து வரும் இசையை ராமர் ரஸித்தார்

 

  1. ராமேஷ்வர் (சிந்துகேர் ராஜா) சிவன் கோவில் கட்டிய இடம்
  2. ராமதீர்த் (ஜாலன குண்டலினி) மக்களுக்கு நிலத்தை உழுவதை ராமர் கற்பித்தார்.

 

(அரசர்கள் ஆண்டுதோறும் நிலத்தை உழும் சடங்குகளைத் துவக்கி வைப்பர்; இது தவிர யாக பூமியை உழுது பூமி பூஜை போடுவர்; இவை எல்லாம் வேத காலம் தொடக்கம் நடை பெற்று வருகிறது.)

 

ராமர் பயணத்தில் உள்ள 126+2 ஸ்டாப்புகளில் (126+2 STOPS) 74 மண்டகப்படிகளைக் கடந்து விட்டோம்.

 

தொடரும்……………