சீமந்தத்தின் விஞ்ஞான ரகசியம்! அக்கு பங்சர்!! (Post No.3197)

kumkum

Research article written by London Swaminathan

Date: 28 September 2016

Time uploaded in London: 17-51

Post No.3197

Pictures are taken from various sources; thanks.

சீமந்தத்தின் விஞ்ஞான ரகசியம்! அக்கு பங்சர்!! (Post No.3197)

“வேதத்தில் சிகை அலங்காரம்” பற்றி சென்ற ஆண்டு ஒரு ஆய்வுக்கட்டுரை எழுதி வெளியிட்டேன். அதைப் படித்துவிட்டு ஒரு ஆசிரியை த்ங்களுடைய பள்ளிக்கூடம் டில்லியில் உள்ளது என்றும் இவ்வாண்டு பெண்களுக்குப் பழங்கால இந்தியாவில் சிகை அலங்காரம் என்ற ப்ராஜெக்ட் PROJECT எடுக்கப்பட்டுள்ளதாகவும், மேற்கொண்டு விவரங்கள் கிடைத்தால் நல்லது என்றும் எழுதி இருந்தார். இப்பொழுது நமது இலக்கியங்களைத் தோண்டதோண்ட தொட்டனைத்தூறும் மணற்கேணி என நிறைய விஷயங்கள் ஊற்றெடுக்கின்றன.

 

சீமந்தம் என்பது கர்ப்பிணிப் பெண்களுக்குச் செய்யும் ஒரு சடங்கு. இந்துக்கள் பிறந்தது முதல் இறந்தது வரை செய்யும் 40 சம்ஸ்காரங்களில் — மதச் சடங்குகளில் — இதுவும் ஒன்று. இந்த சீமந்தம் அல்லது வளைகாப்பு கர்பத்தின் ஆறாவது அல்லது எட்டாவது மாதத்தில் நடைபெறும். சிலர் கர்ப்பம் பற்றிக் கணக்கு செய்யும் முறை காரணமாக இதை 3, 5, 7, 9 என்ற ஒற்றைப்படை எண்களிலும் சொல்வர்.

 

சீமந்தம் என்றால் வகிடு — தலை முடியில் பகுப்பு — எடுப்பது என்று பொருள். இந்தச் சடங்கின் பெயரையே “வகிடு எடுத்தல்” என்று அழைத்தால் அதில் ஏதோ முக்கியம் இருக்க வேண்டும் அல்லவா?

img_9979

முள்ளம்பன்றி முள் (Picture)

இந்தச் சடங்கு தென் இந்தியாவிலேயே சிறப்பாக நடை பெ xx  கிறது. 2000 ஆண்டுக் காலமாக வட இந்திய இந்துக்கள் பல்வேறு இனத்தினர், மதத் தினரின் படை எடுப்புக்குள்ளானதால் இந்தச் சடங்கு வழக்கொழிந்து போயிருக்கலாம்.

 

சீமந்தத்தின் போது பூரண கும்பம் வைத்து வேத மந்திரம் முழங்க நீர் எடுத்து கர்ப்பிணியைக் குளிப்பாட்டுவர். அத்தோடு இறைவழிபாடு, சீர், செட்டு, பரிசுகள், வளையல்கள், விரு ந்துகள் எல்லாம் நடக்கும் இது எல்லாம் பெண்ணின் மனதில் ஒரு பெரிய நம்பிக்கையை ஊட்டும். பெரும்பாலும் ஆண் குழந்தையை வேண்டி பிரார்த்தனை செய்தாலும் ஆரோக்கியமாகப் பிறக்கும் எந்தக் குழந்தையையும் இரு வீட்டாரும் மனமுவந்து வரவேற்கிறார்கள்.

 

இந்த சீமந்தத்தின் போது வகிடு எடுக்க ஒரு முள்ளம் பன்றியின் (Porcupine)  முள்ளை வைத்துக் கோடு போடுவர். இந்த அக்குபங்க்சர் அல்லது அக்கு பிரஸ்ஸரில் ( acupuncture or acupressure ) ஏதோ மர்மம் இருக்க வேண்டும். மதச் சடங்கில் முள்ளம் பன்றி முள்ளுக்கு என்ன வேலை? இதில் ஏதோ மர்ம இருக்கக்கண்டுதான் நம் முன்னோர்கள் இதை வைத்திருக்க வேண்டும்

 

பீஷ்மர் எப்படி அம்புப் படுக்கையில் படுத்து acupuncture or acupressure மருத்துவத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தினாரோ அது போல இதிலும் ரகசியம் உளது.

இந்துக்கள் குழந்தை பிறந்தவுடன் காது குத்துவது, பெண்களானால் காது,  மூக்கு இரண்டையும் குத்தி, தங்கம் அல்லது வெள்ளீ ஆபரணங்களை அணிவிப்பது எல்லாவற்றிலும் இதே ரகசியம் உளது. அக்குப்ரஸ்ஸர் என்பது அழுத்தம் மட்டும் கொடுக்கும் மருத்துவ சிகிச்சை; பல ஆசனங்கள் செய்யும்போதும் இது கிடைக்கும் அக்குபங்சர் என்பது ஓட்டை போடுவது (காது, மூக்கு குத்தல்)

 

மேலும் பெண்கள் அந்த தலை முடி வகிட்டில் குங்குமம் இடுவதும் வழக்கம். இது லெட்சுமி வசிக்கும் இடம் என்பதால் வீட்டில் வளம் கொழிக்க இது வகை செய்யும் அத்தோடு திருமணமான பெண் என்ற டையாளத்தையும் வெளிப்படுத்தும். காலில் மெட்டி, தலை வகிட்டில் குங்குமம இரண்டில் எது தென் பட்டாலும் அவர்களைத் தாய் போல நடத்த வேண்டு ம் என்பதற்காக இந்த அடையாளம். இது இந்து மதத்துக்கே உள்ள சிறப்பு.

 

ஆதி சங்கரர் இயற்றிய அற்புதமான சௌந்தர்ய லஹரியின் 100 ஸ்லோ   கங்களில் அம்பாளின் அழகு வருணிக்கப்படுகிறது. அதில் 44, 45 ஆவது ஸ்லோகங்கள் இந்த தலை முடி வகிடு, அதன் மங்கலத் தனமை, லெட்சுமீகரம் ஆகியவற்றை விளக்குகிறது.

kumkum-2

பொருள் (44ஆம் பாட்டு)

உன்னுடைய முக அழகின் வெள்ளப் பெருக்கு வழிந்தோடும் வாய்க்கால் போல இருக்கும்– தலை வகிட்டின் கோடானது — குங்குமத்தைத் தரித்து இருக்கிறது. அது எங்களுக்கு நன்மை அளிக்கட்டும். இருள் போன்ற உனது கூந்தல் அந்த குங்குமத்துடன் விளங்குவது சூரிய ஒளியிடம்  சிக்கிய இருள் (நீங்கி) போலப் பிரகாசிக்கிறது

 

பொருள் (45ஆம் பாட்டு)

மலர்ந்த புன்சிரிப்பு — பிரகாசிக்கும் பல்வரிசை – நறுமணத்துடன் கூடிய தாமரை போன்ற முகம் — (இவைகளைக் கண்டு) மன்மதனை எரித்த சிவனின் கண்கள் என்னும் வண்டுகள்  மயங்குகின்றன. உன்னுடைய நெற்றி இயற்கையாகவே சுருண்டு விழும் முன் நெற்றி மயிர்களால் அழகு பெறுகின்றது. இது வண்டுகள் நெற்றியை மொய்ப்பது போல உள்ளது. இது தாமரையை பரிகாசம் செய்வது போல இருக்கிறது.

 

 

 

ஆக சீமந்தம்,  தலை முடி வகிடு எடுத்தல், அதில் மங்களகரமான குங்குமத்தை வைத்தல், அதுவும் மருத்துவ முறையில் செய்யப்பட்ட மஞ்சள் குங்குமத்தை வைத்தல் ஆகிய அனைத்தும் விஞ்ஞான — அறிவியல் — அடிப்படையில் அமைந்தவையே. இதைப் பின்பற்றி எல்லா வளங்களும் பெறுவோமாக.

 

–சுபம்–

வேதங்களின் காலத்தைக் கண்டுபிடிப்பது எப்படி? (Post No.3188)

imgres

written by London swaminathan

Date: 25 September 2016

Time uploaded in London:12-35

Post No.3188

Pictures are taken from various sources; thanks.

 

 

ரிக் வேதம், யஜூர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் ஆகிய நான்கு வேதங்களின் காலம் பற்றி பல்வேறு கருத்துகள் உண்டு. ஆயினும் இதை முதல் முதலில் ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொண்டோர் வெளிநாட்டினர்தான். அவர்களில் எந்த இரண்டு ஆட்களும் ஒரே கருத்தைத் தெரிவிக்கவில்லை. ஆனால் எல்லோரும் மாக்ஸ்முல்லர் (Friedrich Max Muller 1823-1900)  சொன்ன ஒரு கருத்தை ஏற்றுக்கொண்டனர். யாரும் இதை கி.மு.1200–க்குக் குறைத்து மதிப்பிட முடியாது என்றார். பலர் இதிலுள்ள தவறுகளைச் சுட்டிக்காட்டியபோது இதற்கும் கீழே கொண்டுவர முடியாது என்றுதான் நான் சொன்னேன். அதற்கு முன்னாலும் இருக்கக் கூடும் என்றார்.

 

இந்துக்களைப் பொறுத்தமட்டில் வேதத்துக்கு காலம் என்பதே இல்லை. ஏனெனில் அது எப்போதுமே வானத்தில் உள்ளது. ஒவ்வொரு யுகத்திலும் ரிஷி முனிவர்கள் தங்கள் தவ வலிமையால் — நாம் ரேடியோ கேட்பது போல — கேட்டு அறிகிறரர்கள். அதனால் அதற்கு சுருதி (கேள்வி) என்று பெயர். மனிதனால் இயற்றப்படாததால் அதை ‘அபௌருஷேயம்’ என்றும் சொல்லுவார்கள்.

rigveda_0

ரிக் வேதத்திலேயே (10-90-9), யாகத்திலிருந்து வேதங்கள் தோன்றியதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது ஞான வேள்வி இயற்றுகையில் இந்த உண்மை அறிவு அவர்களுக்குப் புலப்பட்டது. வேதம் என்பதை அப்படியே மொழி பெயர்த்தால் “அறிவு” என்றே சொல்ல வேண்டும்.

தஸ்மாத் யக்ஞாத் சர்வ ஹுத: ருச: சாமானி யக்ஞிரே

சந்தாம்ஸி ஜக்ஞிரே தஸ்மாத் யஜுஸ் தஸ்மாத் அஜாயத

– ரிக் வேதம், புருஷசூக்தம், 10-90-9

 

ரிக்வேதத்துக்குள்ளேயே (1-1-2) முற்கால ரிஷிகள் பற்றிய குறிப்புகள் உளதால் அவைகளுக்கு 300 ஆண்டுக்கால வீச்சு கொடுத்து மிகப் பழைய மந்திரம் கி.மு.1500 வாக்கில் வந்திருக்கலாம் என்றும் ஊகிப்பர்.

தமிழில் சங்க இலக்கியத்திலும்  ரிக் வேதம் போலவே 400 புலவர்களுக்கு மேல் உள்ளனர். அவை அனைத்தும் உருவாக 300 ஆல்லது 400 ஆண்டுகள் வீச்சு கொடுக்கப்படுகிறது.

 

atharva-veda

மாக்ஸ்முல்லரது ஊகம் (hypotheses):

 

ஒரு மொழி 200 ஆண்டுக் காலத்துக்கு ஒரு முறை வேறு ‘நடை’ அல்லது

‘பாணி’யில் (literary Style) எழுதப்படும் என்பது மாக்ஸ்முல்லரது “கண்டுபிடிப்பு”.

 

வேதத்தின் “அந்த”ப் பகுதி (முடிவுப் பகுதி) உபநிஷத். இதை வேதாந்தம் (வேத+ அந்தம்) என்பர். இதில் புத்தமத தாக்கம் எதுவும் இல்லை. ஆகையால இது புத்தருக்கு முந்தியது என்று சொல்லி அவருக்கும் வேதாந்தத்துக்கும் இடையே 200 ஆண்டு இடைவெளி கொடுத்து, மாக்ஸ்முல்லரே தன்னிச்சையாக கி.மு.800 என்று முத்திரை குத்தினார். இந்திய வரலாற்றில் எல்லாவற்றையும் புத்தரின் காலத்தை (கி.மு. ஆறாம் நூற்றாண்டு) வைத்துதான் நிர்ணயித்துள்ளார்கள். உபநிஷத்துக்கு  முந்தைய ‘பிராமண’ங்களுக்கு கி.மு 1000 என்றும்  அவைகளுக்கும் முந்தைய சம்ஹிதை எனப்படும் மந்திரப் பகுதிகளுக்கு குறைந்தது கி.மு 1200 என்றும் மாக்ஸ்முல்லர் சொல்லிவிட்டார்.

 

உபநிஷத் காலம் – 600 முதல் 800 வரை

பிராமணங்களின் – 800 முதல் 1000 வரை

சம்ஹிதைகளின் காலம் – 1000 முதல் 1200 வரை

 

மாக்ஸ்முல்லர் கையாண்ட முறையை வேறு எந்த நாட்டு இலக்கியத்துக்கும் யாரும் பின்பற்றவில்லை. அது தவறு என்பதை நான் தமிழ் இலக்கியத்தைக் கொண்டு நிரூபிக்கிறேன்.

 

 

தமிழில் திருக்குறளுக்கு ‘கட்டைப் பஞ்சாயத்து’ முறையில் சில அறிஞர்கள் சண்டை போட்டு கி.மு. 31 என்று தன்னிச்சையாக முடிவு செய்தனர். சிலப்பதிகாரத்தில் “கடல் சூழ் இலங்கைக் கயவாகு வேந்தனை”  (C.E.132) செங்குட்டுவனின் சம காலத்தை சேர்ந்தவனாகக் காட்டுவதால் செங்குட்டுவன் இரண்டாம் நூற்றாண்டு என்று கொள்ளப்பட்டது. சங்க இலக்கியம் அனைத்தும் முதல் மூன்று நூற்றாண்டுகளை சேர்ந்தவை என்று எல்லோரும் ஒப்புக் கொள்கின்றனர். ஏனெனில் அதில் ரோமானிய சாம்ராஜ்யத் தொடர்பு பேசப்படுவதாலும் அக்காலக் காசுகள் தமிழ் நாடு முழுதும் கிடைப்பதாலும் அது ஐயம் திரிபற நிரூபிக்கப்பட்டுவிட்டது.

 

ஆனால் சங்க இலக்கிய நடை வேறு; சிலப்பதிகார நடை வேறு; திருக்குறள் நடை வேறு. நாமோ இவை அனைத்தையும் 200 ஆண்டுக்குள் வைக்கிறோம்! மாக்ஸ்முல்லர் விதிப்படி இவை ஒவ்வொன்றுக்கும் இடையே 200 ஆண்டுக் கால இடைவெளி இருக்க வேண்டும்.

 

yajur

வையாபுரிப் பிள்ளை போன்ற அறிஞர்கள் திருக்குறளின் காலத்தை மிகவும் பின்னுக்குத் தள்ளியதற்கு அதிலுள்ள வடமொழிச் சொற்களும், அதிலுள்ள புதிய இலக்கணப் பிரயோகங்களும் காரணம். சிலப்பதிகாரத்திலோ வடமொழி புராணங்களைப் போல அத்தியா யத்துக்கு அத்தியாயம் (காதைக்கு காதை) மாயாஜாலம், மந்திரம் கடவுள் வழிபாடு, கோவில்கள், பார்ப்பனர் புகழ்ச்சி முதைலியன உள்ளன. இதை ஏழாம் நூற்றாண்டுக் காவியம் என்பார் டாக்டர் எஸ். ராமகிருஷ்ணன் Dr S R K of Madurai). நானோ மொழி நடை முதலியனவற்றைக் கொண்டு தொல்காப்பியம், திருக்குறள், சிலப்பதிகாரம் ஆகிய மூன்றும் நாலு அல்லது ஐந்தாம் நூற்றாண்டை சேர்ந்தது என்று காட்டியுள்ளேன். சுருக்கமாகச் சொல்லப்போனால்  மாக்ஸ்முல்லரின் விதி உலகில் எந்த மொழிக்கும் பொருந்தியதாக இதுவரை நான் படித்ததில்லை.

 

 

காலப்போக்கில் “நடை” (Style and language) மாறும் என்பது உண்மையே. சொல்லப்போனால் மாறுதலுக்கு உள்ளாகாத விஷயம் (Change is inevitable) எதுவுமே இல்லை.

 

 

மேலும் நாங்கு வேதங்களும்  உலகில்  வேறு எந்த இடத்திலும் இல்லாத புதுமை உடைத்து. அதாவது மற்ற மொழிகள் எல்லாம் பேசப் பேச மாறும் ஆனால் வேதம் மட்டும் மாறாது. ஏனெனில் அதை கிளிப்பிள்ளை மாதிரி அப்படியே மனப்பாடம் பண்ணி ஒப்பிப்பதால் மாற முடியாது. மற்ற மொழியினரைப் போல பரப்பி இருந்தால் அதில் மாறுதலைத் தவிர்க்க முடியாது.

 

யாஸ்கர் என்பவர் ‘நிருக்தம்’ எழுதினார். அவருடைய காலம் கி.மு.800 என்று வெளிநாட்டினர் கணிக்கிறார்கள். அவரே வேதத்தின் பல சொற்களுக்கு பொருள் தெரியாமல் போய்விட்டது என்று சொல்லுகிறார். அப்படியானால் அவருக்கு 1000 ஆண்டுகளுக்கு முன்னராவது இந்த மந்திரங்கள் (சம்ஹிதை) சொல்லப்பட்டிருக்க வேண்டும். அவருக்குப் பின்னர் வந்த பாணினியோ புதிய சம்ஸ்கிருத அமைப்புக்கு இலக்கணம் எழுதியுள்ளார். அவர் எழுதிய சம்ஸ்கிருத மொழி இலக்கணம் வேத கால சம்ஸ்கிருத இலக்கணத்திலிருந்து மிகவும் வேறுபட்டது. ஆகையால் ஒரு ஆயிரம் ஆண்டு இடைவெளியாவது கொடுக்கவேண்டும்.

 

இவை அனைத்தும் உலகிலுள்ள சாதாரண மொழிகளுக்கு கொடுக்கப்படும் விதிகள். வேதமோ இன்று வரை மாறாத- மாற்ற முடியாத — அமைப்பு கொண்டது. அதாவது ஒரு சொல்லைக் கூட எழுத்தைக்கூட மாற்ற முடியாமல் மனப்பாடம் மூலம் — வாய்மொழி (அத்யயனம்) மூலம் பரப்பப்பட்டது. சங்கப் புலவர்கள் இதை “எழுதாக்கிளவி” என்று போற்றுகின்றனர். உலகில் எழுதாமல் காக்கப்பட்ட புத்தகம் இது ஒன்றே. ஆகையால மற்ற மொழிகளுக்குப் பொருந்தும் விதிகள் இதற்குப் பொருந்தா. அப்படியே பொருந்தும் என்று வாதாடினாலும் ஆயிரம் ஆண்டு இடைவெளி கொடுக்க வேண்டும் என்பதே மேலே கூறப்பட்டுள்ளது.

 

வானவியல் முறை பற்றி அடுத்த கட்டுரை யில் காண்போம்

தொடரும்…………………………………….

 

அதிசய புத்த துறவி ஸு யுன்! – Part 12 (Post No.3183)

buddha

WRITTEN BY S.NAGARAJAN

Date: 24 September 2016

Time uploaded in London: 5-13 AM

Post No.3183

Pictures are taken from various sources; thanks.

 

 

 

100 வயது வாழ்ந்த பெரியோர்

 

120 வயது வாழ்ந்த அதிசய புத்த துறவி ஸு யுன்! – 12

ச.நாகராஜன்

 

 

மலையிலே தனியாக க்வாரண்டைனில் விடப்பட்டிருந்த மக்களின் எண்ணிக்கை சுமார் ஆயிரத்திற்கும் மேலாகவே இருக்கும். அவர்களுக்கு தங்க சரியான இருப்பிடம் இல்லை. பகலில் வெயிலிலும் இரவில் கடும் குளிரிலும் மழையிலும் அவர்கள் கஷ்டப்பட்டனர்.

 

 

ஒவ்வொருவருக்கும் ரேஷன் அள்வாக சிறிது அரிசியும் இரண்டு காரட் துண்டங்களும் தரப்பட்டன, அவர்களே அதைச் சமைத்துக் கொள்ள வேண்டும்.

 

ஒரு நாளைக்கு இரு முறை ஒரு டாக்டர் வந்து அவர்களை சோதித்துக் கொண்டிருந்தார்.

ஏழு நாட்களுக்குள் அவர்களின் பாதிப் பேர் விடுவிக்கப்பட்டனர். ,ஸூ யுன்னைத் தவிர மற்றவர்கள் அனைவரும் ப்த்தாம் நாள் வெளியேற அனுமதிக்கப்பட்டனர்.

 

 

ஸு யுன் மட்டும் மலையிலே தனியாக் இருந்தார். அவருக்கோ உடல் நலம் சரியில்லாமல் இருந்தது. அவரால் எதையும் சாப்பிட முடியவில்லை.

பதினெட்டாம் நாளன்று ஒரு டாக்டர் வந்து அவரை காலியாக இருந்த ஒரு வீட்டிற்குச் செல்லுமாறு ஆணையிட்டார். ஸு யுன்னும் சந்தோஷமாக அந்த வீட்டில் புகுந்தார்.

 

 

அங்குள்ள வயதான காவலாளியிடம் அவர் பேச ஆரம்பித்தார். அந்த காவலாளி ஜுயான் ஜூ என்ற இடத்தைச் சேர்ந்தவர்.

அவர் பெருமூச்சு விட்டவாறே ஸு யுன்னிடம் கூறலானார்: “இந்த அறை இறக்கும் தருவாயில் இருப்பவர்களுக்கு ஒதுக்கப்படும் அறை! நீங்கள் இங்கு அனுப்பப்பட்டதற்கான காரணம் நீங்கள் இறந்த பிறகு பிரேத பரிசோதனை செய்ய வேண்டியது அவசியம் என்பதற்காகத் தான்!”

 

ஜி லூ மடாலயத்திற்கு வருகை புரிய வேண்டி தான் வந்ததை ஸு யுன் அவரிடம் தெரிவித்தார்.

அவர் நெகிழ்ந்து போனார்.

 

“நான் உங்களுக்கு ஒரு ம்ருந்தைத் தருகிறேன்” என்று சொன்ன அவர்  ஷென் கு என்ற மருந்தைத் தயார் செய்து அதை ஒரு கிண்ணத்தில் ஸு யுன்னிடம் கொடுத்தார்.

 

 

அதை இரண்டு வேளை சாப்பிட்ட பின்னர் ஸு யுன் சற்றுத் தெம்பாக இருப்பதாக உணர்ந்தார்.

 

காவலாளி அவரிடம் வந்து கூறலானார்: “இப்போது டாக்டர் வருவார். நான் இருமுவேன். உடனே மிகவும் நன்றாகத் தேறியது போல உற்சாகத்துடன் இருங்கள். அவர் எந்த மருந்தைக் கொடுத்தாலும் அதைச் சாப்பிடாதீர்கள்”

 

டாக்டர் வந்தார். காவலாளி சொன்ன படியே ஏதோ ஒரு மருந்துக் கலவையைத் தயார் செய்து அதை விழுங்குமாறு ஸு யுன்னிடம் கூறினார்.

buddha01

 

அவரது வார்த்தையை மறுக்க முடியாமல் ஸு யுன் அதைத் தயங்கித் தயங்கி அருந்தினார்.

 

டாக்டர் சென்ற பிறகு காவலாளி ஓடி ஸு யுன்னிடம் வந்தார்:” அடடா, அந்த மருந்தை ஏன் சாப்பிட்டீர்கள்? நீங்கள் இன்னும் கொஞ்ச நேரத்தில் இறந்து விடுவீர்கள். டாக்டர் உங்கள் உடலை அறுத்துப் பார்க்க மீண்டும் நாளை வருவார்.”

 

ஸு யுன்னுக்குக் கண்கள் திறந்திருந்த போதிலும் எதையும் பார்க்க முடியவில்லை. தரையெங்கும் இரத்தம்

அந்தக் காவலாளி மீண்டும் மருந்தை கொண்டு வந்து கொடுத்தார். ஸு யுன் அதை அருந்தினார்.

 

 

“இன்னொருவராக இருந்திருந்தால் இந்நேரம் செத்திருப்பார். ஆனால் நீங்கள் சாகும் வேளை வரவில்லை போலும். புத்தர் உங்களைக் காப்பாற்றுகிறார். டாக்டர் நாளை வரும் போது நான் இருமுவேன். நீங்கள் நல்ல திட்த்துடன் இருப்பது போலக் காண்பியுங்கள்.”

 

மறு நாள் டாக்டர் வந்தார். ஸு யுன் உயிருடன் இருப்பதைப் பார்த்தார்.

 

 

ஒரு விரலை அவர் முன் நீட்டியவாறே சிரித்தார்.  பின்ன்ர் சென்று விட்டார்.

‘ஏன் டாக்டர் அப்படிச் சிரித்தார்’ என்று கேட்ட ஸு யுன்னிடம், “ ஏனெனில் நீங்கள் சாகும் விதி இல்லை என்பதால் தான்!” என்றார் காவலாளி.

 

உபாசகர் காவ் கொஞ்சம் பணத்தை ஸு யுன்னிடம் கொடுத்திருந்தார். அவர் டாக்டரிடம் கொஞ்சம் டாலரைக் கொடுக்குமாறு காவலாளி மூலம் ஸு யுன்னிடம் சொல்லி அனுப்பி இருந்தார்.

 

ஸு யுன் நாற்பது டாலரை டாக்டருக்குத் தருமாறு கூறவே காவலாளி அதை வாங்கிக் கொண்டார். உதவி செய்ததற்காக இன்னொரு இருபது டாலரை ஸு யுன் காவலாளிக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார்.

 

“இன்று வரும் டாக்டர் ஐரோப்பிய் டாக்டர். அவர் பணத்தை வாங்க மாட்டார். நாளை வரும் டாக்டரிட்ம பணத்தைத் தருகிறேன். உங்கள் விடுதலை நிச்சயம்” காவலாளி கூறியது போலவே மறு நாள் ஸு யுன் விடுவிக்கப்பட்டார்.

அவருக்கென் காத்திருந்த படகில் ஏறி பயணப்பட்டு குவாங்-பு என்னுமிடத்தை அடைந்தார்.

 

அங்கு உபாசகர் காவ் அவரை வரவேற்க அனுப்பி இருந்த பிட்சு அவரை வரவேற்றார்.

அவருக்காக நெடு நாட்களாகக் காத்திருப்பதாக அந்த பிட்சு சொல்லவே ஸு யுன் தனக்கு நேர்ந்தது அனைத்தையும் விவரித்தார்.

 

 

அவர் மிகவும் வருத்தப்பட்டார். உடல் நலம் தேறிய பின்னர் அங்கு ஸு யுன் லோடஸ் சூதார்வை விவரித்துச் சொல்ல ஆரம்பித்தார். ஒரே கூட்டம்.

மலேசிய நகரங்களில் வரிசையாக அவர் சொன்ன சூத்திர விரிவுரைகளைக் கேட்க ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டனர்.

பத்தாயிரம் சிஷ்யர்கள் உருவாயினர்.

 

சீனாவுக்குத் திரும்பி வருமாறு தந்தி மேல் தந்தி வந்து கொண்டிருந்தது. குளிர்காலமும் தொடங்கியது.

வருடம் முடியப் போகிறது. புது வருடக் கொண்டாட்டத்தின்போது கோலாலம்பூரில் ஸு யுன் இருந்தார். நாட்கள் கழிந்து கொண்டிருந்தன..

 

*************

 

வேண்டிய பலன்களைத் தரும் ருத்ராக்ஷங்கள் (Post No.3173)

rudraksha

WRITTEN BY S NAGARAJAN

Date: 21 September 2016

Time uploaded in London:5-24 AM

Post No.3173

Pictures are taken from various sources; thanks.

 

 

ருத்ராக்ஷ மஹிமை

 

வேண்டிய பலன்களைத் தரும் ருத்ராக்ஷங்கள்

 

ச.நாகராஜன்

 

ஒவ்வொரு நட்சத்திரத்திலும் பிறந்தவர்கள் அணிய வேண்டியதற்கான ருத்ராக்ஷங்கள் பற்றிச் சென்ற கட்டுரையில் பார்த்தோம். இனி ஒவ்வொருவருக்கும் தேவையான பலனை அளிக்கும் ருத்ராக்ஷ்ங்களைப் பார்ப்போம்.

 

எந்தப் பலன் வேண்டுமோ அதற்குரிய ருத்ராக்ஷத்தை அணிய வேண்டும். அதற்கான பட்டியல்:

 

ஒரு முகம் :   இந்திரிய சுகம் பெற்று பர தத்துவத்தில் லயிப்பர்

இரு முகம் : அர்த்த நாரீஸ்வர சிவ ஸ்வரூபம். இதை அணிபவரிடம் அர்த்த நாரீஸ்வரர் அருள் இருக்கும்

மூன்று முகம் : மூன்று அக்னிகளின் ஸ்வரூபம். இதை அணிந்தால் அக்னி தேவனின் அருள் கிடைக்கும்.

நான்கு முகம் : பிரம்மாவின் வடிவம். இதை அணிந்தால் பிரம்ம  ப்ரீதி

 

ஐந்து முகம் : பஞ்ச பிரம்ம ஸ்வரூபம். பிரம்மஹத்தி பாவத்தைப் போக்க வல்லது.

 

ஆறு முகம் : கார்த்திகேயரை அதி தேவதையாக உடையது. இதை அணிந்தால் பெருஞ் செல்வமும், சிறந்த ஆரோக்கியமும் ஏற்படும். நல்ல புத்தி, சிறந்த ஞானம், ஸம்பத்து, தூய்மை அனைத்திற்கும் இடமானது. புத்திமான் இதைத் தரிக்க வேண்டும். விநாயகர் முதலிய தெய்வங்களும் அருள் புரிவர் என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.

 

 

ஏழு முகம் : சப்த மாதாக்களை அதி தெய்வமாகக் கொண்டது. இதைத் தரிப்பதால் செல்வ வளம், உடல் நலம், சிறந்த ஞானம் ஏற்படும்.

எட்டு முகம் : எட்டு மாத்ருகா தேவிகளின் உறைவிடம். இதைத் தரிப்பவர்கள் ஸ்த்தியவாதிகளாவர். அஷ்ட மாதாக்களின் ப்ரீதியையும் அஷ்ட வசுக்களின் ப்ரீதியையும் கங்கா தேவியின் அருளையும் பெறுவர்.

 

 

ந்வ முகம் : நவ சக்திகளின் உறைவிடம். இதை அணிவதால் நவ சக்திகளின் அருள் ஏற்படும்.

தச முகம் : யமனை அதி தேவதையாக உடையது. இதை அணிவதால் ந்வ கிரக தசைகளின் சாந்தி ஏற்படும்.

11 முகம் : ஏகாதச ருத்ரர்களை தெய்வமாக உடையது. எப்போதும் ஸௌபாக்கியத்தை வளர்க்கும்.

 

 

12 முகம் : மஹா விஷ்ணு ஸ்வரூபம். 12 ஆதித்யர்களையும் தன்னுள் கொண்டது.

13 முகம் : விரும்பிய சுப சித்திகளை அளிப்பது. இதை அணிவதால் காம தேவன் அருள் ஏற்படும்.

 

14 முகம் : ருதர நேத்திரத்திலிருந்து தோன்றியது. எல்லா வியாதிகளையும் போக்கி எப்போதும் ஆரோக்கியத்துடன் இருக்கச் செய்யும்.

இப்படி பலன்களைக் குறிப்பாகச் சொல்லி அருளுவது ருத்ர ஜாபால உபநிடதம் ஆகும்.

 

 

சிந்தடிக் ருத்ராக்ஷங்களை வாங்காமால் நிஜ ருத்ராக்ஷங்களை வாங்கி அணிதல் வேண்டும்.

*******

குறிப்பு : ருத்ராக்ஷ மஹிமை பற்றிய இந்தக் கட்டுரை ஆசிரியரின் ஞான ஆலயம், மங்கையர் மலர் கட்டுரைகளைப் படிப்பது மேலதிக விவரங்களைத் தரும்.

 

நட்சத்திரங்களுக்கான ருத்ராக்ஷங்கள் (Post No.3170)

rudraksah-mala-with-gold

WRITTEN BY S NAGARAJAN

Date: 20 September 2016

Time uploaded in London:5-42 AM

Post No.3170

Pictures are taken from various sources; thanks.

 

 

 

ருத்ராக்ஷ மஹிமை

நட்சத்திரங்களுக்கான ருத்ராக்ஷங்கள்

 

ச.நாகராஜன்

 stars4

ஒவ்வொரு நட்சத்திரத்திலும் பிறந்தவர்கள் அணிய வேண்டியதற்கான ருத்ராக்ஷங்கள் தனித்தனியே உண்டு.

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கான அதிதேவதையும் உண்டு.

அவற்றின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.

இதை அணிபவர்களுக்கான பலன்கள் மகத்தானவை.

 

எண்   நட்சத்திரம்         அதி தேவதை  அணிய வேண்டிய

                                          ருத்ராக்ஷம்

  • அசுவனி கேது           நவ முகம்
  • பரணி சுக்ரன்         ஷண்முகம்
  • கார்த்திகை சூர்யன்        ஏக முகம்,

த்வாதச முகம்

கௌரி சங்கர்

  • ரோஹிணி சந்திரன்  த்வி முகம்
  • மிருகசீர்ஷம் செவ்வாய் த்ரி முகம்
  • திருவாதிரை ராகு       அஷ்ட முகம்
  • புனர்பூசம் ப்ருஹஸ்பதி பஞ்ச முகம்
  • பூசம் சனி          சப்த முகம்
  • ஆயில்யம் புதன்         சதுர் முகம்
  • மகம் கேது        நவ முகம்
  • பூரம் சுக்ரன்       ஷண்முகம்
  • உத்தரம் சூர்யன்      ஏக முகம்,

த்வாதச முகம்

கௌரி சங்கர்

  • ஹஸ்தம் சந்திரன்    த்வி முகம்
  • சித்திரை செவ்வாய்  த்ரி முகம்
  • சுவாதி ராகு        அஷ்ட முகம்
  • விசாகம் ப்ருஹஸ்பதி  பஞ்ச முகம்
  • அனுஷ்ம் சனி          சப்த முகம்
  • கேட்டை புதன்          சதுர் முகம்
  • மூலம் கேது          நவ முகம்
  • பூராடம் சுகரன்         ஷண்முகம்
  • உத்தராடம் சூர்யன்        ஏக முகம்,

த்வாதச முகம்

கௌரி சங்கர்

  • திருவோணம் சந்திரன்    த்வி முகம்
  • அவிட்டம் செவ்வாய்   த்ரி முகம்
  • சதயம் ராகு         அஷ்ட முகம்
  • பூரட்டாதி ப்ருஹஸ்பதி  பஞ்ச முகம்
  • உத்தரட்டாதி சனி          சப்த முகம்
  • ரேவதி புதன்         சதுர் முகம்

 

ஒவ்வொரு முகத்திற்கான பலன்களையும் நமது நூல்கள் தந்துள்ளன. அவற்றை இனி காண்போம்.

*********

மதர் தெரஸா : மீடியா உருவாக்கிய செயிண்ட்! – 2 (Post No.3167)

theresa-oz

கட்டுரையின் முதல் பகுதியைப் படித்து விட்டுத் தொடரவும். 

Written by S NAGARAJAN

Date: 19 September 2016

Time uploaded in London: 6-54 AM

Post No.3167

Pictures are taken from various sources; thanks.

 

 

தெரஸா நடத்திய இல்லங்களுக்கு நூறு நாடுகளிலிருந்து எழைகளும் நோயாளிகளும் புகலிடம் கேட்டு வந்தனர்.

இதில் மூன்றில் இரண்டு பங்கு பேர்கள் தங்கள் நோய்களைத் தீர்க்க ஒரு டாக்டரை வேண்டி வந்தவர்கள். இதர ஒரு பங்கினர் இறக்கும் தருவாயிலிருந்த தங்களுக்கு ஆதரவு வேண்டி வந்தவர்கள்.

 

ஆய்வின் படி இங்கு வருகை புரிந்த டாக்டர்கள் சுகாதாரமற்ற நிலை இல்லங்களில் இருப்பதைக் கண்டனர். இங்கு வாழவே தகுதியில்லாதபடியான சூழ்நிலையும் இருந்தது. அவர்கள் மீது அக்கறை செலுத்துவதிலும் மிகுந்த குறைபாடு இருந்தது. உணவு இல்லை, வலியைக் குறைக்கும் நிவாரண மாத்திரைகள் இல்லை.

இவற்றை வாங்கவோ நிதிக்குக் குறைச்சலே இல்லை. ஏனெனில் லட்சோப லட்சம் டாலர்கள் இந்த இல்லங்களை நடத்துவதற்கென வந்து குவிந்து கொண்டிருந்தது!

அறக்கட்டளைகள் நிதியைத் திரட்டிக் கொண்டே இருந்தன.

 

மதர் தெரஸா தன் நோய்க்கான சிகிச்சைக்கு நவீன சிகிச்சையை அமெரிக்காவில் பெற்றார். ஆனால் இவர்களோ…!

மூன்று ஆய்வாளர்களும் ஆவணங்களில் பழைய ரிகார்டுகளைத் தோண்டி எடுத்தனர். அதில் ஒரு பிரதான விஷய்ம் அவர் 1968ஆம் ஆண்டு லண்டனில் உள்ள பிரப்ல பி.பி.சி நிலையத்தைச் சேர்ந்த மால்கம் மகரிட்ஜுடனான (Malcom Muggeridge) சந்திப்பு..

mother-teresa-souvenir-sheet

மால்கம் மகரிட்ஜ் அபார்ஷன் பற்றி கத்தோலிக்கர்களின் தீவிர கொள்கையைக் கொண்டவர். அபார்ஷன் கூடவே கூடாது என்பது அவரது தீவிரமான  கொள்கை. இதை மதர் தெரஸாவும் பிரதிபலித்ததை அவர் சந்தோஷ்மாக ஏற்றுக் கொண்டார்.

ஆக மகரிட்ஜ் தன் கொள்கைக்கு ஆதரவாளரான  மதர் தெரஸாவை முன்னிலைப் படுத்த – ப்ரொஜெக்ட் செய்ய கங்கணம் பூண்டார்.

1969இல் அவர் மதர் தெரஸாவைப் பற்றிய ஒரு படத்தை எடுத்தார். அதில் தான் மதர் தெரஸாவின் முதல் போட்டோகிராபிக் அற்புதம் பதிவு செய்யப்பட்டது.

இதை கோடக் நிறுவனம் சந்தைப்படுத்தியது.

மகரிட்ஜின் மீடியா ப்ரொஜெக் ஷன் வெற்றிகரமானது!

 

தெரஸா மறைந்த பிறகு ஒரு விசேஷ சலுகையைப் போல அவரை ‘beadutification’  செய்வதற்கான குறைந்த பட்ச காலமான ஐந்து ஆண்டுகளை அது விலக்கியது.

ஆய்வு கண்டுபிடித்த ஒரு மிராகிள் பற்றிய விவரம் சுவையானது.

 

மோனிகா பெஸ்ரா (Monica Besra) என்பவருக்கு கடுமையான அடி வயிற்று வலி இருந்தது. மதர் தெரஸாவினால் “ஆசீர்வதிக்கப்பட்ட”  ஒரு மெடால்லியன் (Medallion) ரஅவர் அடி வயிற்றில் வைக்கப்பட்டது.

அவ்வளவு தான், வலி போயே போச்சு!

ஆய்வாளர் லாரிவீ கூறுகிறார்: “ மோனிகாவின் டாக்டர்கள் இதை வேறு விதமாக (அற்புதம் இல்லை என்று) கருதுகிறார்கள். அவர் Ovarian cyst மற்றும் tuberculosis  வியாதியினால் அவஸ்தைப் பட்டுக் கொண்டிருந்தார். அதற்கான உரிய மருந்துகள் தரப்பட்டன. அந்த மருந்துகளினால் தான் அவர் குண்மானார் என்று டாக்டர்கள் கூறுகின்றனர்.”

ஆனால் வாடிகன் வேறு விதமான முடிவை ஏடுத்தது. அவரது அற்புதத்தால் தான் மோனிகா குணம்டைந்தார் என்று அது “அறிவித்தது.”.

லாரிவீ தன் ஆய்வின் முடிவை ஜாக்கிரதையாக்வே முடிக்கிறார்.

 

theres-satmp

ஒரு வேளை தெரஸாவின் எல்லையற்ற புகழும் ஆற்றலும் நோயாளியிடம் ஒரு பாஸிடிவான மாற்றத்தை ஏற்படுத்தி இருக்குமானால் அதற்காக நாங்களும் மகிழ்ச்சி அடைகிறோம்” என்கிறார் அவர்.

இது தவிர பின்னால் வந்த தகவல்கள் மதர் தெரஸா ஏழைகளை ஆதரித்து நோயாளிகளைக் குணப்படுத்த முன்வந்ததன் அடிப்படை மதமாற்றமே, இதை அவரே முன்னிலைப் படுத்தியுள்ளார் என்று அந்தத் தகவல்கள் ஆதாரங்களுடன் கூறுகின்றன..

எது எப்படியோ மதர் தெரஸா புனிதராக்கப்பட்டு விட்டார்.

 

இப்படி புனிதராக்கும் ஒரு வழக்கம் கிறிஸ்தவ மதத்தில் மட்டுமே உண்டு. ஹிந்து மதத்தில் நிச்சயமாக இல்லை.

ஞான சம்பந்தர், அப்பர், சுந்தரர், மணிவாசகரிலிருந்து ஆரம்பித்து சமீபத்தில் வாழ்ந்த வள்ளலார் வரை அற்புதங்களை நிகழ்த்துவது என்பது ஹிந்து ஞானிகள், யோகிகள், சித்தர்கள் ஆகியோருக்கு சர்வ சாதாரணம். ஹிந்துமதத்தில் சித்திகள் பெரிது படுத்தப்படுவதில்லை. இது சகஜம், இதற்கும அப்பாற்ப்ட்டு இறை நிலைக்கு உயர வேண்டும் என்பதே ஹிந்து மதம் சுட்டிக் காட்டும் இறைநெறி.

சரி, மதர் தெரஸா ஒரு புனிதர் தான், கிறிஸ்தவர்களுக்கு – ஆய்வாளர்கள் அப்படி இல்லை என்று சொன்ன போதிலும்!

இப்போது கட்டுரையின் முதல் பாராவைப் படியுங்கள்!

– முற்றும்

ஆதாரம்: டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில நாளேடு, 2-3-13 இதழ்

புதிய புராணம் பகுதி-3 வலஞ்சுழி,இடஞ்சுழிப் பிள்ளையார்கள் (Post No.3124)

ganesh dinamalar

Written by London swaminathan

 

Date: 5 September 2016

 

Time uploaded in London: 9-33 AM

 AM

 

Post No.3124

 

Pictures are taken from various sources; thanks.

 

pillayarpatti

Picture: Pillayarpatti Ganesh

முதல் இரண்டு பகுதிகளில் புகழ் மிகு பிள்ளையார்களையும் அவர்கள் பற்றிய ஸ்தல புராணக் கதைகளையும் அறிந்தோம். பிள்ளையார் சிலைகளை உற்று நோக்குவாருக்கு துதிக்கை வலமாகச் சுழிக்கப்பட்டுளதா அல்லது இடமாகச் சுழிக்கப்பட்டுளதா என்பதை யும் காண்பர். அதிலும் ஒரு தனி மகிமை உண்டு.

 

முதல் இரண்டு பகுதிகளில் புகழ் மிகு பிள்ளையார்களையும் அவர்கள் பற்றிய ஸ்தல புராணக் கதைகளையும் அறிந்தோம். பிள்ளையார் சிலைகளை உற்று நோக்குவாருக்கு துதிக்கை வலமாகச் சுழிக்கப்படுளதா அல்லது இடமாகச் சுழிக்கப்பட்டுளதா என்பஹையும் காண்பர். அதிலும் ஒரு தனி மகிமை உண்டு. பெரும்பாலும் இடமாகச் சுழிக்கப்பட்டிருக்கும்.

 

புகழ்பெற்ற, மிகப் பழமையான பிள்ளையார்பட்டிக் கோவிலில் விநாயகர் துதிக்கை வலமாகச் சுழித்திருப்பதைக் காணலாம். இது ஒன்பது நகரத்தார் கோவில்ல்களில் ஒன்று. சுமார் 1600 ஆண்டுப் பழமையுடையது. திருச் செங்காட்டங்குடி வாதாபிக் கணபதிக்கும் முந்தையவர் இவர் என்பதற்கு அங்கே இருக்கும் கல்வெட்டுகள் சான்று பகரும். இது பாண்டியர் காலக் குடைவரைக் கோவில்.

 

காரைக்குடி- திருப்புத்தூர் வழித்தடத்தில் குன்றக்குடிக்கு அருகில் அமைந்துள்ளது. ஏனைய சிவன் கோவிலகளில் பிள்ளையார் ஒரு துணைச் சந்நிதியில் அமர்ந்திருப்பார். ஆனால் இங்கோ பிள்ளையார்தான் முதலிடம். ஊரின் பெயரும் பிள்ளையாரின் பெயரில் அமைந்திருப்பது தனிச் சிறப்பு. இந்த ஊரின் பழைய பெயர் எருக்காட்டூர். பிள்ளையாரின் உயரம் ஆறு அடி.

 

பிள்ளையார்பட்டி குடைவரையில் உள்ள பெருபரணன் கல்வெட்டைக் கொண்டு ஆராய்ந்தால் இது பல்லவர் காலத்துக்கும் முன்னர் அமைந்த கோவில் என்பது விளங்கும் என்பார் கம்பன் அடிப்பொடி சா. கணேசன்.

 

இந்தப்பிள்ளையரை தேசி விநாயகப் பிள்ளையார் என்றும் கல்வெட்டுகள் குறிப்பிடும்.

 

இவர்தான் பழைய பிள்ளையார் என்பதற்கு ஆராய்ச்சியாளர்கள் காட்டும் சான்றுகள்:–

துதிக்கை வலம் சுழித்ததாக அமைந்தது

நான்கு கைகள் இல்லாமல் இரண்டு கரத்துடன் விளங்குவது

அங்குச பாசங்கள் காணப்படாமை

வயிறு ஆசனத்தில் படாமல் அர்த்தபத்ம ஆசனம் போலக் கால்கள் மடிந்திருப்பது.

வலக்கரத்தில் மோதகம் வைத்திருப்பது

இடக்கரத்தை கடிக ஹஸ்தமாக இடையில் நாட்டிப் பெருமிதக் கோலம் கொண்டிருப்பது.

வலது தந்தம் நீண்டும் இடது தந்தம் குறுகியும் காணப்படுவது.

 

வலஞ்சுழிப் பிள்ளையார்தான் ஓம்கார ஸ்வரூபமென்பதையும், சிலைகளாகப் பிள்ளையார் உருப்பெருமுன், ஓம்கார சொரூபமாக அவர் வணங்கப்பட்டார் என்பதற்கும் இது சான்று ஆகும்.

ganesh in drama

சேண்பாக்கம் ஏகாதச (11) ஸ்வயம்பு கணபதி மூர்த்தங்கள்

 

இங்குள்ள 11 கணேச மூர்த்திகளும் ஓம்கார வடிவில் அமைந்திருக்கின்றன. 1865 ஆம் ஆண்டு மந்திரி துக்கோஜி ராவ் வண்டியில் வந்துகொண்டிருந்தபோது, பூமியில் சிறு அளவில் வளர்ந்திருந்த பிள்ளையார் சிலை மீது இடித்தவுடன் ரத்தம் வந்ததாகவும் உடனே வண்டி நகரவில்லை என்றும் சொல்லுவர். துக்கோஜிராவ் அன்றிரவு முழுவதையும் அங்கேயே செலவிட நேரிட்டது. அவரது கனவில் தோன்றிய கணபதி தமக்குக் கோவில் எழுப்புமாறு சொன்னவுடன் அவர் ராஜ மான்யங்களோடு ஒரு கோவிலை எழுப்பினார்.

 

இதே போல காஞ்சிப் பெரியவர் அங்கு சென்றபோதும் ஒரு அற்புதம் நடந்தது. அவர் வேலூர் விஜயம் மேற்கொள்ள இருந்தபோது சேண்பாக்கம் கணபதிக்கு 108 சிதறு தேங்காய்கள் உடைக்கும்படி கூறி இருந்த போதும் சிஷ்யர்கள் அதை மற ந்துவிட்டனர். அவ்வழியே பெரியவர்களுக்குப் பின்னால் யானை மீது புதுப் பெரியவர் வந்து கொண்டிருந்தார். நெடுஞ்சாலையிலிருந்து சேண்பாக்கத்துக்கு பிரிந்து செல்லும் இடத்துக்கு யானை வந்தபோது, இருந்த இடத்திலேயே சுற்றத் துவங்கியது. இது ஏன் என்று மடத்து நிர்வாகிகள் யோசித்துக் கொண்டிருந்தபோது பெரியவர் 108 தேங்காய் உடைக்கச் சொன்னதும் அதைத் தாங்கள் மறந்ததும் மடத்து நிர்வாகிகளுக்குந் நினைவுக்கு வந்தது. உடனே 108 தேங்கய்களைக் கொண்டுவந்து சிதறுகாய் போட்டதும் யானை நகரத் துவ ங்கியது. பெரியவர்கள், அதையடுத்து சேண்பக்கத்துக்கு விஜயம் செய்து அங்கு ஒரு நாள் முழுதும் தங்கி அபிஷேக ஆராதனைகளை நடத்தினார்.

 

வடஆற்காடில் இது தவிர திருப்பத்தூர் மாயப்பிள்ளையார்,திருவலம் வந்த விநாயகர் ஆகியோரும் பிரபலமானவர்கள்.

திருப்பத்தூர் மாயப் பிள்ளையார் திடீரென்று பூமியிலிருந்து தோன்றியதாக பக்தர்கள் கூறுவர்.

திருவலம் என்னும் தலம் நம்பியாண்டார் நம்பியால் பாடப்பெற்ற இடம் ஆகும். பொன்னை நதிக்கரை யில் அமைந்த ஆலயத்தில் அம்மை அப்பனை வலம் வந்து மாங்கனி பெற்ற பிள்ளையாருக்கு தனி சந்நிதி ஒன்று உள்ளது.

GINGER GANAPATHY  ganesh pepper

Picture of Ganesh shaped vegetables

ஏனைய பிள்ளையார் கதைகளை 4-ஆவது பகுதில் பார்ப்போம்.

 

Source Books:

பிள்ளையார் பட்டி தல வரலாறு -சா.கணேசன், 1983

காணாபத்யம்- செந்தில் துறவி, 1968

 

 

 

 

 

 

பிள்ளையாரைத் தமிழர்கள் கும்பிடவில்லையா??!! (Post No.3123)

ganesh laddu

Written by S NAGARAJAN

 

Date: 5 September 2016

 

Time uploaded in London: 5-05 AM

 

Post No.3123

 

Pictures are taken from various sources; thanks.

 

ச.நாகராஜன்

 

ganapathy, mysore

இணைய தளம் வந்து விட்ட காலத்திலிருந்து எல்லோரும் அறிஞர்களே!

மனதில் தோன்றுவதையெல்லாம் எழுதி இணையத்தில் “போடுவதைக்” கருத்துச் சுதந்திரம் என்று எடுத்துக் கொண்டு விட்டு விடலாம்.

ஆனால் நச்சுக் கருத்துக்களைப் பரப்புவர்களை மன்னிக்க முடியாது!

 

 

தீய சக்திகளின் கொள்கை பரப்பாளர்களுக்கு இணைய தளம் ஒரு வேடிக்கையான விளையாட்டுக் களம்

ஆரியர், ஐயர் என்று திட்டுவது, பிள்ளையாரில் ஆரம்பித்து கிராமத்து ஐயனார் வரை எல்லாக் கடவுளரையும் (இயேசு அல்லா நீங்கலாக – இவர்களைத் திட்டினால் தீட்டி விடுவார்களே) திட்டுவது – இதுவே இவர்களுக்குப் பொழுது போக்கு.

 

 

இவர்களின் எழுத்துக்களில் கருத்துக்களை விட ஆபாசமான வார்த்தைகளுக்கே முதலிடம் தருவது வழக்கம்.

இப்போது விநாயக சதுர்த்தி வருவதை  முன்னிட்டு பிள்ளையார் தமிழர் தெய்வமே இல்லை, பிள்ளையார் வழிபாடு பிற்காலத்தில் புகுத்தப்பட்ட வழிபாடு என்று ஒரு புரளியை தீய சகதியின் ‘அறிஞர்’ ஒருவர் இணையதளத்தில் பதிய விட்டிருக்கிறார்.

 

 

ஆனால் அது பதிய விட்ட போதே வாடி வதங்கி விட்டது.அந்தக் கருத்து பதிய விட்ட போதே அதைத் தமிழர்கள் அபார்ஷன் செய்து விட்டார்கள்!

 

ஏனெனில் பிள்ளையார் தமிழரின் தெய்வம் இல்லை என்றால் வேறு யார் தான் தமிழர் தெய்வம்!

 

தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்பது தமிழர்களின் முழக்கம்.

 

சிவன் அமைத்த தமிழ்ச்சங்கத்தை இன்றும் மீனாட்சி அம்மன் கோவிலில் கண்டு மகிழலாம்.

 

புலவர்கள் புடை சூழ இறையனார் அமர்ந்திருக்கும் கம்பீரமே கம்பீரம். அங்கு முழக்கமிட்ட தமிழ் மொழியே உண்மையில் தெய்வ மொழி.

 

 ganapathy swastik

சிவனின் அருமை மகனான பிள்ளையார் அல்லவா சங்கத் தமிழ் மூன்றையும் தருபவர். அவரது தம்பியான முருகன் அல்லவா தமிழ் முருகன்! அப்பனுக்கு மந்திரத்தின் பொருள் விளக்கம் சொன்ன தகப்ப்ன் சாமி தமிழுக்கும் அல்லவா பொருளுக்கும் பொருளானவர்!

 

ஆக இந்தப் பிள்ளையாரை தமிழர்களாகிய நாம் கும்பிடவே இல்லை என்பது தீய சக்திகளின் இமாலயப் பொய்!

 

திருமுருகாற்றுப்படை என்பது சங்க இலக்கியத்தில் பழமையான நூல். இதன் காலம் குறைந்த பட்சம் 2000 ஆண்டுகளுக்கு  முந்தையது.இதில் கடைசியில் உள்ள பத்து வெண்பாக்களில் ஏழாம் வெண்பாவில் “ஒரு கை முகன் தம்பியே” என்று விநாயகர் குறிப்பிடப்படுகிறார்.

 

 

தமிழ் மூதாட்டியும் உலக அறிஞர்களில் ஒருவருமான ஔவையார் யாரிடம் சங்கத் தமிழைத் தனக்குத் தந்து அருளுமாறு வேண்டினார்?

 

பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும் இவை                            

நாலும் கலந்துனக்கு நான் தருவேன்  – கோலஞ்செய்                                 

துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்கு                            

சங்கத் தமிழ் மூன்றும் தா!”

 

 

அடடா, என்ன ஒரு வணிக நேர்த்தி!

 

நான்கு தருகிறாராம், ஆனால் மூன்று கொடுத்தால் போதுமாம்!

பாகும் தேனும் பாகும் பருப்பும் ஆகிய நான்கையும் பெற்ற பிள்ளையார் முத்தமிழையும் அள்ளித் தராமலா இருப்பார்!

அருளினார்! ஔவையைப் பாட வைத்தார்! இறவாப் புகழை அளித்தார்.

 

 

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்               

நோக்குண்டாம் மேனி நுடங்காது பூக்கொண்டு                       

துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம்                

தப்பாமல் சார்வார் தமக்கு!

 

 ganesa shrine,thailand

ஔவையின் வாக்கைக் கடைப்பிடித்து பூக்கொண்டு விநாயக சதுர்த்தி அன்று தப்பாமல் பிள்ளையாரை வணங்குவோம்!

தீய சக்திகள் அழிந்து தமிழ் நாடு நல்ல சக்திகளின் இருப்பிடமாக ஆக வேண்டுவோம்!

*********

ராமன் வியப்பு! யார் இந்தச் சொல்லின் செல்வன்? (Post No.3121)

96910-kkish1

Written by London swaminathan

 

Date: 4 September 2016

 

Time uploaded in London: 13-11

 

Post No.3121

 

Pictures are taken from various sources; thanks.

 

 

கம்ப ராமாயணம் கிஷ்கிந்தா காண்டத்தில்தான் அனுமன் என்னும் கதாபாத்திரம் அறிமுகமாகிறான். அதைத்தொடர்ந்து அனுமன்– ராமன் சந்திப்பும், சுக்ரீவன் — ராமன் சந்திப்பும் நடைபெறுகிறது. இதை சுவையாக வருணிக்கிறான் கம்பன்.

 

அஞ்சனைக்கு ஒரு சிறுவன் அஞ்சனக் கிரி அனைய

மஞ்சனைக் குறுகி ஒரு மாணவப் படிவமொடு

(அஞ்சனையின் மகனான அனுமன் ஒரு பிரம்மச்சாரி வடிவம் கொண்டு இராம, இலக்குவர் இருக்கும் இடம் செல்கிறான்).

 

இராம இலக்குவரை மறைவில் நின்று பார்த்து கருணையின் கடல் அனையர் என்று மதிப்பிடுகிறான். பின்னர் அவன் மனதில் தோன்றியதை கம்பன் வருணிக்கும் அழகே தனி:-

 

சதமன் அஞ்சுறு நிலையர்

தருமன்  அஞ்சுறு சரிதர்

மதனன்  அஞ்சுறு வடிவர்

மறலி அஞ்சுறு விறலர்

 

jaya hanuman

பொருள்:–

 

இந்திரனும் (சதமன்) அஞ்சும் தோற்றத்தை உடையவர்,

தருமதேவனும் கண்டு அஞ்சும் ஒழுக்கம் உடையவர்,

மன்மதனும் (மதனன்) இவர்கள் முன் நிற்க அஞ்சும் அழகர்கள்,

யமனும் (மறலி) அஞ்சும் வீரர்கள்.

 

என்ன அழகான வருணனை!

 

அடுத்த ஒரு பாடலில் வள்ளுவன், கடவுளுக்குத் தரும் ‘தனக்குவமை இலாதான் என்ற  அடைமொழியை கம்பன், அனுமனுக்குச் சூட்டி மகிழ்கிறான். அனுமனை ” தன் பெருங் குணத்தால் தன்னைத் தான் அலது ஒப்பு இலாதான் – என்கிறான் கம்பன் .

 

ராமனையும் லட்சுமணனையும்  நேரில் பார்த்த அநுமன்

 

“வெல்கம் டு கிஷ்கிந்தா” – என்கிறான். அதாவது “கவ்வை இன்றாக நுங்கள் வரவு (உங்கள் வரவு துன்பமில்லாத நல் வரவு ஆகுக) என்கிறான்

 

இப்படி ஒரு பிரம்மச்சாரிப் பையன் (அனுமன்) வரவேற்றவுடன் ராமலெட்சுமணருக்கு பெரு மகிழ்ச்சி. நீ யார் என்று ராமன் வினவுகிறான்..

 

உடனே அனுமன்,

யான் காற்றின் வேந்தற்கு

அஞ்சனை வயிற்றில் வந்தேன், நாமமும் அனுமன் என்பேன் ” என்று பதில் தருகிறான்.

உடனே ராமனும் அனுமனை எடை போட்டு விடுகிறான். அப்பொழுது ராமன் சொன்ன சொற்கள் அனுமனுக்குக் கிடைத்த மிகப் பெரிய பட்டம் ஆகும்!

 

 

இல்லாத உலகத்து எங்கும் இங்கு இவன் இசைகள் கூரக்

கல்லாத கலையும் வேதக் கடலுமே என்னும் காட்சி

சொல்லாலே தோன்றிற்று அன்றே யார்கொல் இச் சொல்லின் செல்வன்

வில்லாஆர் தோள் இளைய வீர விரிஞ்சனோ விடைவலானோ

 

இந்த உலகத்தில் எங்கும் புகழ் பரவும்படி (இசை=புகழ்),

இந்த அனுமன் கற்காத கலைகளும் கடல் போலப் பரந்த வேதங்களும், உலகில் எங்கும் இல்லை என்று கூறும் அளவுக்கு இவனுக்கு அறிவு இருக்கிறது. இது அவன் பேசிய சொற்களால் தெரிந்துவிட்டது அல்லவா?

வில்லையுடைய தோளுடைய வீரனே! இனிய சொற்களைச் செல்வமாக உடைய இவன் யாரோ? நான்முகனோ (விரிஞ்சன்)? அல்லது காளையை வாஹனமாக உடைய சிவனோ (விடைவலான்)?

 

இதன் காரணமாக அனுமனுக்குச் சொல்லின் செல்வன் என்ற பட்டம் கிடைத்தது. அதுவும் ராமன் வாயினால் கிடைத்த பட்டம்!

 

–subham–

 

 

புதிய பிள்ளையார் புராணம்- பகுதி-2; நம்பியின் உணவுண்ட பொல்லாப் பிள்ளையார்! (Post No 3119)

ganesh lanka

புதிய பிள்ளையார் புராணம்- பகுதி-2; நம்பியின் உணவுண்ட பொல்லாப் பிள்ளையார்! (Post No 3119)

 

Written by London swaminathan

 

Date: 4 September 2016

 

Time uploaded in London: 5-55 AM

 

Post No.3119

 

Pictures are taken from various sources; thanks.

 

 

பகுதி ஒன்றில் மதுரை முக்குறுணி விநாயகர், கும்பகோணம் கரும்பாயிரம் பிள்ளையார் கதைகளை  அறிந்தோம். நம்பியண்டார் நம்பியின் உணவை உண்டு அனைவரையும் அதிசயத்தில் ஆழ்த்திய பொல்லாப் பிள்ளையார் திருநாரையூரில் வெள்ளாற்றங்கரையிலே வீற்றிருக்கிறரர்.

ganapathy rangoli

அவர் கதையையும் கேளுங்கள்!

சிதம்பரத்திலிருந்து 10 மைல் தொலைவில் திருநாரையூர் இருக்கிறது. ஆனந்தேச சிவாச்சாரியார் இங்கு பூஜை செய்து வந்தார். ஒருநாள் அவரால் பூஜைக்குச் செல்ல முடியாததால், தனது மகன் நம்பியாண்டார் நம்பியை அழைத்து, கணபதிக்குப் பூஜை செய்துவிட்டு இறைவனுக்கு அமுதும் படைத்து வா என்று அனுப்பிவைத்தார். கள்ளமில்லா உள்ளம் படைத்த நம்பி, பூஜையை முறைப்படி செய்துவிட்டு, பிள்ளையாருக்கான நைவேத்தியத்தைப் படைத்துவிட்டு பிள்ளையார் உண்ட பின் வீடு திரும்புவோம் என்று காத்திருந்தான். நெடு நேரம் ஆகியும் கல்லுப் பிள்ளையார் கல்லாகவே காட்சிதந்தார். ஒரு அங்குலம் கூட நகரவில்லை; வாயையும் திறக்கவில்லை.

 

தான் செய்த பூஜையில் தவறு இருந்ததால்தான், கணேசன் வாய் திறக்கவில்லை என்று அருகிலுள்ள கருங்கல்லில் தலையை மோதிக்கொள்ளத் துவங்கினார். தனது “தவற்றுக்கு” தானே தண்டனை கொடுத்தபோது, பிள்ளையார் அவர் முன் தோன்றி உணவு வகைகளை வாங்கி வயிறு புடைக்கத் தின்றார். பொல்லாப் பிள்ளையார் அல்லவா!! அந்தப் பிள்ளையாரின் அருளால்தான் சிதம்பரத்தில் இருக்கும் தேவாரப் பதிக ரகசியமும் அவருக்குத் தெரிய வந்தது.

தேவாரத் திருமுறைகளைத் தமிழ்கூறு நல்லுலத்துக்குக் காப்பாற்றிக் கொடுத்த பிள்ளையாரை நல்ல பிள்ளையார் என்றே சொல்ல வேண்டும்.

உச்சிப் பிள்ளையார்

தமிழ்நாடு முழுவதும் குன்றுதோராடுவது குமாரக் கடவுள்தான். ஆனால் திருச்சியில் மட்டும் மலை உச்சிக்குப் போய்விட்டார் குமரனின் அண்ணனான பிள்ளையார். ஆகையால் அவர் உச்சிப் பிள்ளையார் ஆகிவிட்டார்.

 ganesh making2

பாரதியார் பாடிய மணக்குள விநாயகர்!

 

சொற்தேரின் சாரதியாம் பாரதியின் வாயினால் வாழ்த்தப் படாத தெய்வம் இல்லை. ஆனால் அவை எல்லாம் பொதுவான பிரார்த்தனைகள். புதுச்சேரியிலுள்ள மணக்குள விநாயகர் மட்டும் ஊர்ப்பெயருடன் பாடப் பெற்றார். அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை.

 

புதுவை கடற்கரையில் கோயில் கொண்டுள்ள இந்தப் பிள்ளையாரைத் தரிசிக்க வரும் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரிக்கவே, கோபம் கொண்ட அந்நிய ஆட்சியாளர்கள், விநாயகர் சிலையை அகற்றி கடலில் போட்டுவிட்டனராம். ஆனால் மறு நாளே பிள்ளையார், இருந்த இடத்துக்கே வந்துவிட்டார். இதைக் கண்டு வியந்த அந்நிய ஆட்சியாளர் அவருக்குக் கோயிலும் எழுப்பிச் சிறப்பித்தனரம்.

 

இதோ பாரதியின் பாடல்:-

 

வாழ்க புதுவை மணக்குளத்து

வள்ளல் பாத மணி மலரே;

ஆழ்க உள்ளஞ் சலனமிலா

தகண்ட வெளிக்கண் அன்பினையே

சூழ்க; துயர்கள் தொலைந்திடுக;

தொலையா (இன்பம் விளைந்திடுக)

வீழ்க! கலியின் வலியெல்லாம்!

கிருத யுகந்தான் மேவுகவே.

vinayaka girls

மாற்றுரைத்த பிள்ளையார்

விருத்தாசலம் (திரு முதுகுன்றம்) மாற்றுரைத்த பிள்ளையார், சுந்தரர்- பரவை நாச்சியார் வாழ்வுடன் தொடர்புடையவர். பரவை நாச்சியாருக்கென வேண்டி சுந்தரர், சிவ பெருமானிடமிருந்து பொற்காசுகளைப் பெற்றார். அவற்றை மணிமுத்தாற்றில் இடுவ்தற்கு முன் அப்பொன்னை மாற்றுரைத்து, அதற்கு இப்பிள்ளையாரைச் சாட்சியாக வைத்ததால், அவர் மாற்றுரைத்த பிள்ளையார் எனப் பெயர் பெற்றார்.

 

To be continued…………………………………………………….