Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000
ஒருவருடைய கையெழு த்து அவருடைய
குணாதிசயங்களைக் காட்டும் என்று கருதி
அவருடைய எதிர்காலத்தை நிர்ணயிப்பது, அதாவது வேலை தருவது,
பதவி உயர்வு தருவது அல்லது தர மறுப்பது இவை எல்லாம் அறிவியல் ரீதியிலானது அல்ல என்று பல விஞ்ஞான சஞ்சிகைகள் எழுதியுள்ளன .ஆகையால் கையெழுத்து இயல் (Graphology) பற்றி உறுதியாக ஒன்றும் சொல்வதற்கில்லை. இத்துடன் 1992ல் நான் தினமணியில் எழுதிய கட்டுரையை இணைத்துள்ளேன் .
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000
TAGS – மூல வர்மன் , கல்வெட்டு, 16 வகை தானம், தானங்கள்
Written by S Nagarajan swami_48@yahoo.com Date: 18 December 2019 Time in London – 9-45 am Post No. 7356 Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000
கோகுலம் கதிர் டிசம்பர் 2019 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை ரத்தினபுரி இலங்கை!
ச.நாகராஜன்
ஸ்வர்ண மயமான இலங்கை என இராமரால் வர்ணிக்கப்படும் இலங்கை உண்மையிலேயே இன்றும் தங்கம் போல ஜொலிக்கும் ஒரு நாடாகவே திகழ்கிறது. இந்தியாவிற்கும் இலங்கைக்கும் உள்ள தொடர்பு, கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே தோன்றிய ஒன்று. இராமாயணம் மூலமாக சேதுப் பாலம் அமைக்கப்பட்டு இந்தியாவும் இலங்கையும் சேதுவால் இணைக்கப்பட்டதை அறிய முடிகிறது.
சேது பாலம் அமைக்கப்பட்டதை நாஸாவின் விண்கலம் உறுதிப் படுத்தியதைத் தொடர்ந்து அந்தப் படம் உலகளாவிய விதத்தில் பிரபலமாகியுள்ளது. இது இராமாயண நிகழ்ச்சிகளை உறுதிப் படுத்துவதாக அமைந்துள்ளது.
1505ஆம் ஆண்டு இங்கு வந்த போர்ச்சுக்கீசியர் இதை ‘செல்லாவோ’ என அழைக்க அது மருவி சிலோன் ஆனது. 1948இல் சுதந்திரம் பெற்ற நாடு, 1972இல் அதிகாரபூர்வமாக ஸ்ரீ லங்கா என்ற பெயரைக் கொண்டது.
இலங்கையின் இன்னொரு பெயர் செரிந்திப். இதிலிருந்து தான் serendipity என்ற ஆங்கில வார்த்தை உருவானது. திடீரென்று தற்செயலாகக் கண்டுபிடிக்கப்படும் நவீன கண்டுபிடிப்புகளைக் குறிக்கும் வார்த்தை தான் செரிண்டிபிடி.
தமிழுக்கும் இலங்கைக்கும் உள்ள தொடர்பு பிரிக்க முடியாத ஒன்று.
பாண்டிய மன்னர்களும் இலங்கை மன்னர்களும் பெண் ‘கொடுத்தும் கொண்டும்’ உறவை ஏற்படுத்திக் கொண்டதை வரலாறுகள் குறிப்பிடுகின்றன. ‘தொன்மாவிலங்கை’ என சிறுபாணாற்றுப்படையும் ‘தொல் இலங்கை’ என சிலப்பதிகாரமும் குறிப்பதால் இலங்கை சங்க காலத்திற்கும் முற்பட்ட நாடு என்பதைத் தெளிவாக அறியலாம்.
ஈழத்துப் பூதன் தேவனார் என்ற புலவரின் ஏழு பாடல்கள் சங்க இலக்கியத் தொகுப்பில் உள்ளன. ஈழம் என்பது இலங்கையைக் குறிக்கும் பழம் பெயர் என்பதை இதனால் அறியலாம்.
சிறிய இந்த தேசத்தை இந்து மஹா சமுத்திரத்தின் முத்து என்று சொல்கின்றனர். இந்தியாவின் வரைபடத்தின் கீழ் சிறிதாகக் கண்ணீர்த் துளி போலத் தோன்றும் இதை ‘இந்தியாவின் கண்ணீர்த் துளி’ என்றும் அழைக்கின்றனர்.
ஒளி என்ற பொருளைத்தரும் இலங்கு என்ற வார்த்தையிலிருந்து இலங்கை என்ற பெயர் வந்ததாகக் கூறுவர்.
25332 சதுர மைல் பரப்பையே கொண்டுள்ள இலங்கையில் பார்ப்பதற்கு ஏராளமான இடங்கள் உள்ளன.
இலங்கையில் உள்ள சுற்றுலா இடங்கள் மிகவும் கவர்ச்சிகரமானவை. கடற்கரைகளும், வனப் பிரதேசங்களும், தேயிலைத் தோட்டம் அடர்ந்த மலைப் பகுதிகளும், பல மியூசியங்களும் உலக மக்களை வா வா என அறைகூவி அழைக்கின்றன.
கொழும்பை எடுத்துக் கொண்டால் அதன் அழகிய கடற்கரை உள்ளிட்ட இடங்களுக்குப் போகாமல் இருக்க முடியாது.
மலைப் பகுதிகளில் உள்ள தேயிலைத் தோட்டங்கள் மனதைக் கவர்பவை; டீயின் சுவையோ அமிர்தத்திற்கு நிகரானது. இங்குள்ள ஏலக்காயின் மணமும் சுவையும் வர்ணனைக்கு அப்பாற்பட்டவை. எகிப்தியர்கள் கிறிஸ்து பிறப்பதற்கு பல்லாண்டுகளுக்கு முன்பேயே இந்த ஏலக்காயின் மகிமையை உணர்ந்து இங்கிருந்து அதைக் கொண்டு செல்ல ஆரம்பித்தனர். உலகின் முதல் பெண் பிரதமரைக் கொண்ட நாடு இலங்கை. 1960 இல் சிரிமாவோ பண்டாரநாயகா இலங்கையின் பிரதம மந்திரி ஆகி இந்தப் பெருமையைப் பெற்றார்.
கேட்பதற்கு இனிய இசையைக் கொண்ட கீதம், இலங்கையின் தேசீய கீதம். அதன் கொடியோ உலகின் மிக மிகப் பழமையான கொடி. கிறிஸ்துவிற்கு முன் 162ஆம் ஆண்டில் பிறந்த சிங்கக் கொடி இன்றளவும் போற்றப்பட்டு அதன் தேசியக் கொடியாக இலங்குகிறது.
எல்லையில்லா மகிமையை இலங்கைக்குச் சேர்க்கும் புத்தரின் பல் இருக்கும் புத்த ஆலயம் கண்டியில் உள்ளது. புத்த ஆலயங்களுக்குள் செல்வோர் ஊதுபத்தி ஏற்றித் தொழுவதால் ஆலயங்கள் அனைத்துமே நறுமணத்தால் சூழப்பட்டிருக்கும். அனுராதபுரத்தில் காணும் மஹாபோதி மரம் உலகில் மனிதனால் நடப்பட்ட பழமையான மரம் என வரலாறு கூறுகிறது.
இலங்கையின் தெற்கே உள்ள ஆடம்ஸ் பீக் அனைத்து மதங்களும் போற்றும் ஒரு இடம். ஆதம் சுவர்க்கத்திற்குப் போகும் முன் தன் காலடியை இங்கு பதித்திருக்கிறார் எனக் கிறிஸ்தவர்கள் சொல்ல, இது புத்தரின் ஶ்ரீ பாதம் என்று புத்தர்கள் சொல்ல, சிவனின் திருப்பாதம் என ஹிந்துக்கள் சொல்கின்றனர். இலங்கையில் சிவன், திருமால், விநாயகர், முருகன் கோவில்கள் எனப் பல கோவில்கள் உள்ளன. திருகோணமலையில் அமைந்துள்ள திருக்கோணேச்சரம் சிவன் கோவில் பழமையான ஒன்று. திருஞானசம்பந்தர் தன் ஞானக்கண்ணால் இறைவனைத் தரிசித்து ஒரு பதிகம் பாடியருளியுள்ளார். அதுமட்டுமன்றி 51 சக்தி பீடங்களில் இது ஒன்றாகவும் கருதப்படுகிறது. தேவியின் இடுப்பு விழுந்த பகுதி இந்தத் தலம் எனக் கூறப்படுகிறது.
கேது வழிபட்ட தலமான கேதீஸ்வரம் இலங்கையின் மேற்குக் கடற்கரைப் பகுதியில் உள்ளது. இத்தலத்தின் மீது ஞானசம்பந்தரும், சுந்தரரும் பதிகம் பாடியுள்ளனர்.
கதிர்காமம் இலங்கையின் பிரசித்தி பெற்ற முருகனின் பாதயாத்திரைத் தலம். இங்குள்ள கருவறையினுள் யாரும் புக முடியாது. திரையிட்டு மூடப்பட்டிருக்கும். அருணகிரிநாதர் இத்தலத்து முருகனை வேண்டிப் பாடிய பாடல்கள் தேனினும் இனிக்கும் சுவை கொண்டவை.
‘உடுக்கத் துகில் வேணும் நீள்பசி அவிக்கக் கனபானம் வேணும் நல் ஒளிக்குப் புனலாடை வேணும்மெய் யுறுநோயை ஒழிக்கப் பரிகாரம் வேணும் உள் இருக்கச் சிறுநாரி வேணுமொர் படுக்கத் தனிவீடு வேணும் இவ் வகையாவும் கிடைத்துக் க்ருஹவாசி ஆகிய மயக்கக் கடல் ஆடி நீடிய கிளைக்குப் பரிபாலனாய் உயிர் அவமேபோம் க்ருபை சித்தமு ஞான போதமு மழைத்துத் தரவேணும்’
என்று இப்படி அருணகிரிநாதரின் திருப்புகழை மனமுருகப் பாடாதார் யாரும் இல்லை. ‘திருமகள் உலாவும் இருபுய முராரி’ என்ற திருப்புகழ்ப் பாடலும் தவறாது முருக பக்தர்களால் பாடப்படும் பிரசித்தமான பாடலாகும்.
இலங்கைக்குப் பெருமை சேர்க்கும் விஷயம் அங்கு 92 சதவிகித மக்கள் கல்வியறிவு படைத்தவர்கள். கலை உணர்வு மிக்கவரும் அரிய நூல்களை எழுதிவருமான ஆனந்த குமாரசாமி, நூற்றுக்கும் மேற்பட்ட அறிவியல் புதினங்களைப் படைத்த பிரபல எழுத்தாளர் ஆர்தர் கிளார்க், சைவத்திற்கும் தமிழுக்கும் தொண்டாற்றிய ஆறுமுக நாவலர் உள்ளிட்ட ஏராளமானோர் இலங்கைக்குப் புகழ் சேர்ப்பவர்கள்.
யானை உள்ளிட்ட 123 அரிய விலங்கினங்களும், 227 வகையான பறவை இனங்களும், 178 வகையான பாம்பு போன்ற ஊர்ந்து செல்லும் உயிரினங்களும் 122 வகையான நீர் மற்றும் நிலத்தில் வாழும் உயிரினங்களும் இங்கு உள்ளன.
இலங்கையின் தேசீய விளையாட்டு வாலிபால் எனலாம்.
ரத்தினங்களின் தலைநகரம் இலங்கை என்று கூறப்படுகிறது. மாணிக்கம், நீலம் உள்ளிட்ட ரத்தினக் கற்கள் அபரிமிதமாக இங்கு கிடைக்கின்றன. ரத்தினபுரி தான் இலங்கை!
அபூர்வ நாடாகிய இலங்கை இராமாயண காலத்திற்கு முற்பட்ட சரித்திரத்தைக் கொண்ட பழம்பெரு நாடாகும். இதை எப்படிச் சுருக்கமாக வர்ணிப்பது? OLD AND GOLD!
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000
ஜப்பானில் தீண்டாமை என்னும் கட்டுரை நான் தினமணியில் 1992ல் எழுதியது. 27 ஆண்டுகள் ஆகியும் இன்னும் அது ஜப்பானில் இருப்பதாக விக்கிபிடியா காட்டுகிறது.
இங்கிலாந்திலும் ஐரோப்பாவின் பிற தேசங்களிலும் ஜிப் சி எ ன்னு ம் நாடோ டிகளையும் இன்று வரை தீண்டாத வர்களாகவே நடத்து கின்றனர்
Burakumin (部落民, “hamlet people”/”village people”, “those who live in hamlets/villages”) is an outcast group at the bottom of the traditional Japanese social order that has historically been the victim of severe discrimination and ostracism. They were originally members of outcast communities in the Japanesefeudal era, composed of those with occupations considered impure or tainted by death (such as executioners, undertakers, workers in slaughterhouses, butchers, or tanners), which have severe social stigmas of kegare (穢れ or “defilement”) attached to them. Traditionally, the Burakumin lived in their own communities, hamlets, or ghettos.
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000
மநு நீதி நூல் – Part 46
ஒன்பதாவது அத்தியாயத்தை 16-11-2019-ல் முடித்தோம் . இன்று பத்தாவது அத்தியாயத்தைத் துவங்குவோம் இணைப்பில் முழு சுலோகங்களின் பொருள் உளது. முதலில் சுவையான செய்திகளை புல்லட் (BULLET POINTS) பாயிண்டுகளில் தருகிறேன்.
please go to swamiindology.blogspot.com for an old Manu Smriti Tamil Book.
இந்த அத்தியாயத்தில் மிக முக்கியமான பொன்மொழி ஸ்லோகம் 63-ல் வருகிறது .
அஹிம்ஸை, உண்மை, பிறர் பொருள் திருடாமை, தூய்மை , புலன் அடக்கம் ஆகியன நான்கு ஜாதிகளுக்கும் பொது என்று அறிவிக்கிறார்.
அதற்கு அடுத்த முக்கியத்துவம் வாய்ந்தது ஸ்லோகம் 62 ஆகும் . பிராமணன், கோ மாதா ,பெண்கள், குழந்தைகளைக் காக்க உயிர்விடுவோர் உயர்நிலையை அடைவர். இது சிலப்பதிகாரத்திலும் வருகிறது. மதுரையை எரிப்பதற்கு முன்னர் இவர்களை மட்டும் வருத்தாதே , தீண்டாதே என்று அக்கினி தேவனுக்கு கண்ணகி கட்டளை இடுகிறார். திருவள்ளுவரும் பிராமணர்களையும் பசுவையும் முதலில் வைக்கிறார். குறள் 560, 1066.
ஸ்லோகம் 65-ல் ஏழே தலைமுறையில் சூத்திரன் பிராமணன் ஆகிவிடுவான் என்கிறார்.
ஸ்லோகம் 69 முதல் 73 வரை மநு ஒரு சுவையான பட்டிமன்றம் நடத்துகிறார் விதை/ஆண் முக்கியமா , நிலம்/பெண் முக்கியமா என்று. இறுதியில் நல்ல நிலத்தில் நல்ல விதை விதைப்பதே சாலச்சிறந்தது என்று தீர்ப்பு வழங்குகிறார் .
இந்த அத்தியாயத்தில் முதல் 70 சுலோகங்களில் கலப்புத் திருமணம், அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் பற்றி நிறைய ‘வகை’கள் வருகின்றன. அதில் விராத்யர் , திராவிடர், தஸ்யூ , யவனர் காம்போஜர், சகர் முதலியோர் யார் என்று விளக்கப்படுகின்றனர் . ஆயினும் இவையனைத்தும் இன்று நாம் வழங்கும் பொருளில் பயன்படுத்தப்படவில்லை . ஏனெனில் வேறு பல தேச பெயர்களும் கலப்புத் திருமண வகைகளில் வருகிறது.
இரண்டு விஷயங்கள் தெளிவாகத் தெரிகின்றன.
1.மனு நீதி நூலின் இந்த அத்தியாயம் எழுதப்பட்ட அல்லது சேர்க்கப்பட்ட காலத்தில் கலப்புத் திருமணம் பெருவாரியாக நிகழ்ந்தது. இதை நாம் மகாபாரதத்திலும் காண்கிறோம்.
2.யவனர், திராவிடர், காம்போஜர், சகரர் ஆகியோரும் இந்துக்களே.
முதல் இரண்டு ஸ்லோகங்களில் மூன்று வர்ணத்தினரும் வேதம் படிக்க வேண்டுமென்பது எந்தக் காலம் வரை பின்பற்றப்பட்டது என்பதை ஆராய வேண்டும்.
சுலோகம் 20, 22 –திராவிடர், விராத்யர் பற்றிப் பேசுகிறது. தமிழ்ச் சங்கத்தில் நக்கீரர் முதலிய பிராமணர்கள் விராத்தியர் எனப்படுவர். அவர் சங்கு அறுத்து வளையல் செய்யும் தொழிலில் இருந்தார்.
ஸ்லோகம் 25 முதல் கலப்புத் திருமண தம்பதிகளுக்குப் பிறந்த குழந்தைகள் பற்றிப் பேசப்படுகிறது. இவையெல்லாம் இக்காலத்தில் பொருத்தம ற்றதாகிவிட்டன.
ஸ்லோகம் 47 முதல் அவர்கள் செய்யவேண்டிய தொழில்கள் பற்றி வருகிறது.
ஸ்லோகம் 58-ல் ஆர்யன் (ARYAN) அல்லாதான் குணம் பற்றி வருகிறது. இன்று இனப் பொருளில் பயன்படுத்தும் ஆர்யன் அல்ல இது . பண்பாடற்றவன் என்பதே பொருள்- அனார்யன் . என்றால் நாகரீகமற்றவன் என்று பொருள். கிரேக்கர்கள் மற்றவர்களை பார்பேரியன் (BARBARIAN) என்று அழைத்தது போல. இன்று அந்தச்சொல்லின் பொருள் காட்டுமிராண்டி
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000
14-12-2019 மாலைமலர் நாளிதழில் வெளியாகியுள்ள கட்டுரை
நீலம் செய்யும் ஜாலம்!
ச.நாகராஜன்
Princess Diana
சனி பயம் போக்கும் நீலம்
சனி பகவானை நினைத்தாலேயே பலருக்கும் பயம். ஏழரை நாட்டுச் சனி, அஷ்டமச் சனி, கண்டச் சனி (அர்த்தாஷ்டம சனி) என்றெல்லாம் பயப்பட்டு தங்கள் துன்பத்திற்கெல்லாம் சனியே காரணம் என்று நொந்து கொள்வர்.
ஆனால் உண்மையில் கிள்ளி எடுக்கும் சனி அள்ளிக் கொடுப்பவரும் கூட. கெடுக்கும் சனி என்று சொல்லப்படுபவரே கொடுக்கும் சனி என்பதையும் உணர வேண்டும்.
நளனும் பேரழகி தமயந்தியும் ஒருவரை ஒருவர் காதலித்து மணந்த கதையும் பின்னால் பிரிந்த கதையும் நாம் அறிந்ததே.
சனியின் பிடி நீங்கி இருவரும் மீண்டும் இணைந்ததைப் படிக்கும் போது மனம் பெரிதும் ஆறுதல் அடைகிறது. திரு நள்ளாற்றில் நளன் சனியை வணங்கி அவன் அருள் பெற்று இழந்த அனைத்தையும் மீண்டும் பெற்ற வரலாறை அறிவதால் நாமும் அங்கு சென்று வழிபட்டு பிரச்சினைகள் அனைத்தும் நீங்கப் பெறுகிறோம்.
அந்த நளன் பட்ட பாடை விட நான் படும் பாடு பெரும்பாடு என்று சொல்பவர் ஏராளம். அவர்களுக்கெல்லாம் அற்புத மணியாக, ஜாலம் செய்யும் மணியாக அமைகிறது நீலம்.
Princess Kate William
ஜோதிடம் பரிந்துரைக்கும் நீலம்
ஒரு ஜாதகத்தில் சனி தீய பலன்களைத் தரும் அம்சம் இருப்பின் நீலமே அந்த ஜாதகருக்கும் உதவும் மணியாகும்.
முதலில் ஏழரை நாட்டுச் சனி என்று அழைக்கப்படும், சனி ராசிக்கு 12ஆம் இடம், ஜன்ம ஸ்தானம், இரண்டாமிடம் ஆகிய இடங்களில் சஞ்சாரம் செய்யும் காலங்களில் ஏற்படும் தீய பலன்களை இந்திர நீலம் மட்டுப்படுத்தும். அடுத்து அஷ்டம சனி (எட்டாம் இடத்தில் சனியின் சஞ்சாரம்) மற்றும் கண்டச் சனியினால் (நான்காம் இடத்தில் சனி சஞ்சாரம் செய்யும் காலம்) ஏற்படும் தீய பலன்களும் கூட நீலம் செய்யும் ஜாலத்தால் மட்டுப்படுத்தப்படும்.
மகரம் மற்றும் கும்ப ராசிக்காரர்கள் அணிய உகந்த கல் நீலம்.
எண் கணிதத்தில் சனி பகவானுக்குரிய எண் 8. ஆகவே 8 எண்ணில் பிறந்தவர்களும் கூட்டு எண் 8ஆக உடையவர்களும் அணிய வேண்டிய கல் நீலமே.
ப்ளூ சபயர் (Blue Sapphire) என்று கூறப்படும் நீலத்தின் வரலாற்றை ஆராயப் போனால் பழங்காலத்திய அறிஞர்கள் எந்தக் கல்லுக்கு இந்தப் பெயரைத் தந்தார்கள் என்பது தெளிவாக விளங்கவில்லை. லெபிஸ் லஸூலி, டர்க்காய்ஸ், ஹயாசிந்த் (Lapis Lazuli, Turquoise, Hyacinth ) ஆகிய பல வண்ணக் கற்களையும் ஸபையர் என்றே கருதும் வகையில் பழைய நூல்களின் விளக்கங்கள் உள்ளன.
இந்தியாவிலும் அரேபியாவிலும் ஆரோக்கியம் நிலைப்பதற்கான தாயத்தாகவும் தீய திருஷ்டியைப் போக்கவும் நீலம் அணியப்பட்டு வந்தது. கடும் தொற்று நோய்களான பிளேக் உள்ளிட்ட மரண நோய்களை இது அண்ட விடாது என்பதும் இந்திய, அரேபியர்களின் நம்பிக்கை. ஆரோக்கியம் சிறப்பாக இருக்க இருக்க தீய திருஷ்டி ஒருவரை அண்டாது என அனைவரும் நம்பினர். அத்துடன் மனதை அலை பாய விடாது ஒரு நிலைப்படுத்தும் அரிய கல் இது என அனைவரும் போற்றி வந்துள்ளனர்.
சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார் நீல மணி பற்றிப் பல அரிய குறிப்புகளை பண்டைய நூலின் மேற்கோள்களுடன் தருகிறார். அதன்படி நீலத்தின் வகைகள் 4. குணங்கள் 11. குற்றங்கள் 8.(நீல மணி போன்ற நிறத்தை உடைய மயில்கள் உனது சாயலுக்குத் தோற்று காட்டில் போய் ஒளிகின்றன – ‘மாயிரும் பீலி மணி நிற மஞ்ஞை நின் சாயற்கு இடைந்து தண்கள் அடையவும்’ என்பன போன்ற பல மணியான வரிகள் சிலப்பதிகாரத்தில் உள்ளன.) இவை விரிப்பின் பெருகும்; ஆதலால் தக்க தமிழறிஞரை நாடி அறியலாம்.
ரஸ ஜல நிதி தரும் தகவல்கள்
நீலத்தைப் பற்றிப் பழம் பெரும் நூலான ரஸ ஜல நிதி தரும் சுவையான தகவல்கள் இவை:
நீலம் பழங்காலத்தில் கலிங்கத்திலிருந்து கிடைத்து வந்தது. (இப்போதைய ஒரிஸாவும் வங்காளத்தின் மேற்குப் பகுதியும் இணைந்த பிரதேசம் கலிங்கம் என அழைக்கப்பட்டது). ஸ்ரீ லங்காவிலும் தரமான நீலக் கற்கள் கிடைத்தன.
நீலம் இரு வகைப்படும். 1) ஜல நீலம் 2) இந்திர நீலம்.
இவற்றுள் இந்திர நீலமே சிறந்தது.
இரு வகைகளையும் ஒப்பிட்டுப் பார்க்கையில் சற்று லேசானதாகவும் வெள்ளை ஒளியைக் கக்குவதாகவும் இருப்பது ஜல நீலமாகும்.
இந்திர நீலமோ கனமாக இருக்கும். கறுப்பு ஒளியை உள்ளிருந்து வெளிப்படுத்தும்.
ஜல நீலத்தில் சிவப்பு ஒளி காணப்பட்டால் அது ரக்த-காந்தி அல்லது ரத்ன-முகி எனப்படும். ஜல நீல வகையில் இதுவே சிறந்தது.
இந்திர நீலத்தை எடுத்துக் கொண்டால் சிறந்த இந்திர நீலக் கல் சீரான ஒளியுடன் கூடி இருக்கும். கனமாக இருக்கும். மேல் பரப்பில் எண்ணெய் பூசினாற் போலக் காணப்படும்.அது ஒளி ஊடுருவும் தன்மையுடன், உருண்டையாக மிருதுவாக உள்ளிருந்து ஒளியைப் பிரகாசித்துக் கொண்டவாறே இருக்கும்.
ஜல நீலத்தில் ஏழு வகைகள் உண்டு 1) ஐந்து வண்ணங்களை இணைத்து உள்ளது 2) ஐந்து வண்ணங்களை ஒரு பாதியிலும் இன்னொரு பாதியில் ஒரே ஒரு வண்ணமும் இருப்பது 3) மேற்பரப்பில் எண்ணெய் பூச்சு கொண்டது போலத் தோற்றமளிக்காதது 4) மிக லேசானது 5) உள்ளே சிவப்பு ஒளியுடன் காணப்படுவது 6) தட்டை வடிவுடன் கூடியது (அல்லது இன்னும் சிலரின் கருத்துப்படி வெந்த அரிசியை தட்டினால் வரும் தட்டை வடிவத்துடன் கூடியது) 7) சிறிய அளவுடன் கூடியது (சிறியது)
தாமிர வண்ணத்தில் உள்ள நீலமானது ஒதுக்கப்பட வேண்டாம். இதே போல தாமிர வண்ணத்தில் உள்ள கரபீரம் மற்றும் உத்பலம் (Opal) ஆகிய கறகளையும் ஒதுக்கத் தேவையில்லை.
வானவில் நீலம் : வானவில் போல ஜொலிக்கும் கல்லின் மதிப்பைச் சொல்லவே முடியாது. பூமியில் காணுதற்கு மிகவும் அரிதானது இது.
மஹா நீலம் : நீல வண்ணம் அளப்பரியதாக இருக்கும் நீலக் கல் மஹா நீலம் எனப்படும் அல்லது பெரும் நீலம் என அழைக்கப்படும்.
நீலம் செய்யும் ஜாலம்
சனியினால் ஏற்படுகின்ற கிரக தோஷங்கள் நீங்கும்.
நரம்புத் தளர்ச்சி நீங்கும். நரம்பு சம்பந்தமான நோய்கள் விலகும்.
சிந்தனை சீராகும். பணம் செழிக்கும். பல்வேறு விதமான தொல்லைகள் தீரும்.
சனி நலம் பயக்கும் நிலையில் இருந்தால் அந்த நல்ல பலன்கள் கூடுதலாகும்.
இந்தக் கல்லின் இரசாயனச் சமன்பாடு அலுமினியம் ஆக்ஸைடு ஆகும். (Al2O3 )
மோவின் அலகுப் படி இதன் கடினத் தன்மை : 9
இதன் ஒப்படர்த்தி :- 3.98 – 4.06
நீலம், கொரண்டம் எனற கனிம வகையைச் சேர்ந்தது.
சாணக்கியர் கூறும் எட்டு வகை நீலங்கள்
சாணக்கியர் தனது அர்த்த சாஸ்திரம் மற்றும் சாணக்ய நீதியில் நவரத்னக் கற்களைப் பற்றிய ஏராளமான நல்ல குறிப்புகளைத் தருகிறார்.
இந்திரநீலம் : மயிலின் தோகை போல நீல நிறத்துடன் ஒளிர்வது.
கலாயவண்ணம் : கலாயம் என்னும் ஒரு வகை தானிய மலரைப் போன்ற வண்ணம் கொண்டு ஒளிர்வது.
மாநீலம் – பொன்வண்டின் நிறம் கொண்டு பிரகாசிப்பது
நாவல் வண்ணம் – நாவல் பழத்தைப் போன்ற நிறம் கொண்டு ஒளிர்வது.
முகில் வண்ணம் – முகில் என்றால் மேகம் என்று பொருள். மேகம் போன்ற நிறம் கொண்டு பிரகாசிப்பது.
நந்தகம் – தவளை போன்று உள்ளே வெண்மையும் வெளியே நீல நிறமும் கொண்டு ஒளிர்வது
நடுநீர்ப் பெருக்கு – நீர்ப் பெருக்குப் போல நடுவில் நீலத்துடன் பிரகாசிப்பது.
ஆக இந்த எட்டு வகையும் மனித குலத்திற்கு நன்மை பயப்பதே ஆகும்.
செயற்கை நீலம்
செயற்கை முறையில் சிந்தடிக் நீலக் கற்கள் தயாரிப்பதற்கான ஆராய்ச்சி 1902ஆம் ஆண்டு தொடங்கியது. இதில் பல்வேறு விதமான முறைகள் கையாளப்பட்டு ஒரு வழியாக செயற்கை நீலக் கல் உருவானது. என்றாலும் கூட இயற்கையில் இருக்கும் நீல ஒளி அதே போல அமையவில்லை.
அமெரிக்காவும் ரஷியாவும் இந்த செயற்கைக் கற்களைத் தயாரிப்பதில் முன்னணியில் உள்ளன. 2003ஆம் ஆண்டில் மட்டும் 250 டன்கள் செயற்கை நீலம் உருவாக்கப்பட்டுள்ளது; அவை தொழிலகப் பயன்பாட்டிற்கும் உதவ ஆரம்பித்தன. பல்வேறு அரிய தன்மைகள் உள்ள செயற்கை நீலக் கண்ணாடிகள் தயாரிக்கப்பட்டு ஜன்னல்களில் பதிக்கப்படலாயின.
அரிய நீலக் கற்கள்
உலகில் ஏராளமான அரிய வகை நீலக் கற்கள் உள்ளன.
அவற்றில் முக்கியமானவை 2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஸ்ரீ லங்காவில் ரத்னபுரம் என்னும் இடத்தில் வெட்டி எடுக்கப்பட்ட நீல மணியாகும். ரத்னபுரம் நவரத்தினங்களின் நகர் என்ற பெயர் பெற்ற நகராகும். இது 1404.49 கேரட் எடையுடன் கூடியது. அதாவது 280 கிராம் எடை கொண்டது.
இதன் விலை 1000 லட்சம் டாலர் என மதிப்பிடுகின்றனர். (ஒரு டாலர் சுமார் 70 இந்திய ரூபாய்க்குச் சமம்.) ஆனால் இதை 1750 லட்சம் டாலருக்குக் கூட விற்க முடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இதற்கு ‘தி ஸ்டார் ஆஃப் ஆடம்’ (The Star of Adam) என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஈடன் தோட்டத்திலிருந்து அனுப்பப்பட்ட ஆடம் நேராக ஸ்ரீ லங்கா வந்ததாகவும், ஆடம்ஸ் பீக் என்று இப்போது அழைக்கப்படும் மலையில் ஆடம் வாழ்ந்ததாகவும் ஒரு பெரும் நம்பிக்கை நிலவுகிறது. அதன் அடிப்படையில் இப்பெயர் இடப்பட்டிருக்கிறது.
கடந்த 2000 ஆண்டுகளாக ஸ்ரீ லங்காவில் பல அரிய வகை ரத்தினக்கற்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.
ஸ்டார் சபையர் என்று பெயரிடப்படும் நீல மணிகள் ஆறு முனை உள்ள நட்சத்திரம் போல ஒளி விடும் கற்களாகும்.
க்வீன்ஸ்லாந்தின் ப்ளாக் ஸ்டார் என்று அழைக்கப்படும் நீல மணி 733 கேரட் எடை கொண்டது. இது உலகின் இரண்டாவது பெரிய நீலமணியாகும். ஸ்டார் ஆப் இந்தியா என்று அழைக்கப்படும் மூன்றாவது பெரிய நீலக் கல் 563.4 கேரட் எடை கொண்டது. இது இப்போது வாஷிங்டன் மியூசியத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. ஸ்டார் ஆஃப் பாம்பே என்ற கல் 182 கேரட் எடை கொண்டது.
காஷ்மீர், பர்மா, ஸ்ரீ லங்கா ஆகிய இடங்களில் கிடைக்கும் நீலம் அனைவராலும் விரும்பி அணியப்படுகிறது. காஷ்மீர் கற்கள் பழைய காலத்தில் கிடைத்தவை. அவை மாறி மாறி விற்கப்பட்டு அணியப்படுகின்றன. கம்போடியா, தாய்லாந்து, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளிலும் நீலம் கிடைக்கிறது. இந்தியாவில் திருவனந்தபுரம் பகுதியில் நீலக் கற்கள் அபூர்வமாகக் கிடைக்கின்றன.
சுருக்கமாகச் சொல்லப் போனால் கிரஹ தோஷத்தினால் எதையெதை எல்லாம் இழந்தோமா அதையெல்லாம் மீண்டும் திரும்பப் பெற ஒருவர் அணிய வேண்டிய கல் நீலமே. அலங்கோலமாக இருக்கும் வாழ்க்கையை குதூகலமாக மாற்றுவதற்கான ஜாலத்தைச் செய்ய வல்லது நீலம்!
நல்ல வைரம் எப்படி உடனடியாக நற்பலனைக் காண்பிக்கிறதோ, தோஷமுள்ள வைரம் எப்படி உடனடியாகத் தீய பலன்களைக் காண்பிக்கிறதோ, அதே போல நீலமும் உடனேயே நற்பலன்களை அளிக்க வல்லது; தோஷமுள்ள நீலக் கல் உடனேயே தீய பலன்களைக் காண்பித்து விடும். ஆகவே இதைத் தேர்வு செய்பவர்கள் நிபுணரின் உதவியை நாடி நல்ல கல்லை மட்டுமே அணிய வேண்டும்.
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000
துப்பாக்கி கலாசாரம் என்பது நான் 1992ல் எழுதியது. இப்போது மிகவும் மோசமாகிவிட்டது .
இந்த 2019ஆம் ஆண்டில் லண்டனில் மட்டும் 134 பேர்
வன்முறைச் சம்பவங்களில் கொல்லப்பட்டுள்ளனர்.
அதாவது நான் 13-09-1992-ல் எழுதியது இப்போதும் நீடிக்கிறது.
Three young men have been murdered in little over 12 hours in London, as the death toll for this year nears the decade high seen in 2018.
With three weeks left until the end of 2019, 134 people have so far been killed including the victims of the London Bridge terror attack.
Last year, police recorded 141 homicides in the capital – the highest since 2008.
The last spate of bloodshed started at 2pm on Thursday, when 22-year-old Exauce Ngimbi was stabbed to death in Lower Clapton.
Scotland Yard has arrested four people, including a 14-year-old boy, over the murder.
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000
Kannaki and Kovalan
படிப்பது போல நிறுத்தாமல் படித்து முடிப்பர். அவ்வளவு சுவைமிக்கது.
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000
டிசம்பர் 2019 ஹெல்த்கேர் இதழில் பிரசுரமாகியுள்ள கட்டுரை
புத்தகச் சுருக்கம்
உங்கள் வாழ்க்கையை உயர்த்த வல்லஒரு புத்தகம்
ச.நாகராஜன்
LIFE PLAN
The Sunday Times – லண்டனிலிருந்து வெளி வரும் பிரபல பத்திரிகையான ‘தி சண்டே டைம்ஸ்’ வெளியிட்ட இந்தப் புத்தகம் உண்மையிலேயே ஒருவரின் வாழ்க்கையை உயர்த்த வல்ல ஒரு புத்தகம் தான்.
ரிச்சர்ட் கிர்லிங் (Richard Girling) என்பவர் தொகுத்த இந்தப் புத்தகத்திற்கு உளவியல் ஆலோசகராக அமைபவர் ஜான் நிக்கல்ஸன். (John Nicholson).
A 4 அளவில்148 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகத்தில் 46 அத்தியாயங்கள் உள்ளன.
அதில் உடல்நல மேம்பாடு குறித்து பல அத்தியாயங்கள் உள்ளன.
நல்ல ஆரோக்கியத்தை அனுபவியுங்கள் (Enjoy Better Health)
இந்த அத்தியாயத்தில் உங்களால் குனிந்து உங்கள் கால் விரல் நுனியைத் தொட முடிகிறதா, பஸ்ஸைப் பிடிக்க ஓடும் போது உங்களுக்கு மூச்சு வாங்குகிறதா என்ற கேள்விகள் எழுப்பப்பட்டு உடல்பயிற்சியின் அவசியம் விளக்கப்படுகிறது.
ஏன் உடல் பயிற்சி தேவை?
உடலின் எடையைக் குறைக்க; தசைகளை மேம்பத்த;வலிமையுடன் இளமையோடு இருக்க; மாரடைப்பு வரும் அபாயம் ஏற்படாமல் தடுக்க; சமூகத்தில் இணைந்து பழகி புதிய நண்பர்களை உருவாக்கிக் கொள்ள; மன அழுத்தம் தரும் காரணிகளைக் கண்டு பயப்படாமல் அவற்றை எதிர்கொண்டு சமாளிப்பதோடு, மன இறுக்கம் இல்லாமல் இருக்க; நல்ல ஆரோக்கியத்துடன் ஆனந்தமாக வாழ்க்கையை அனுபவிக்க ; – ஆம் இவ்வளவும் உடல்பயிற்சியால் அடையும் நல்ல பயன்கள்
உடல் பயிற்சி செய்வதை அன்றாடப் பழக்கம் ஆக்கிக் கொள்ளுங்கள்!
அதிக எடையுள்ளவராக இருந்தாலோ அல்லது 35 வயதிற்கு மேற்பட்டவராக இருந்தாலோ டாக்டரைக் கலந்தாலோசித்த பின்னர் உடல்பயிற்சியை ஆரம்பியுங்கள்.
சாப்பிட்ட பிறகு உடல்பயிற்சி செய்யாதீர்கள்.
சரியான உடை அணிந்து உடல்பயிற்சி செய்யுங்கள்.
ஜுரமாக இருக்கும் போது உடல்பயிற்சி செய்யாதீர்கள்.
மிகுந்த வெப்பம் உள்ள நாட்களில் உடல்பயிற்சி செய்ய வேண்டாம். (Dehydrate–இனால் பாதிக்கப்படலாம்)
உடல்பயிற்சி செய்வதற்கு முன்னர் Warm-upசெய்வது அவசியம்.
மெதுவாக முன்னேறுங்கள். ஒருநாள் விட்டு ஒரு நாளோ அல்லது வாரத்திற்கு மூன்று நாட்களோ உடல்பயிற்சி செய்ய ஆரம்பியுங்கள்.
வலி இருந்தால் உடல்பயிற்சியை உடனடியாக நிறுத்தி விடுங்கள்.
உடல்பயிற்சி முடிந்த பின்னர் சற்று இளைப்பாறுங்கள்.
பின்னர் குளியலில் ரிலாக்ஸாக இருங்கள்.
உங்களுக்குப் பிடித்தமான ஒரு விளையாட்டையோ, அல்லது ஓட்டத்தையோ, நீச்சலையோ, சைக்கிளில் செல்வதையோ பழக்கமாக ஆக்கிக் கொள்ளுங்கள்.
ஆரோக்கியமான உணவுப் பழக்கம் (Healthy Eating)
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திக்கிலிருந்தும் இதைச் சாப்பிட்டு இப்படிச் சாப்பிடு என்று ஆலோசனைகள் வந்த வண்ணம் இருக்கின்றன.
ஒருவருக்கொருவர் சொல்லிக் கொள்ளும் ஒரு பெரிய ஜோக்என்னவெனில் ஹெல்தி ஃபுட் என்பது சுவையானதாகவும் இருக்காது;பலனையும் தராது என்பது தான்!
ஆகவே, எதையெதைச் சாப்பிடுவது என்பதை எப்படி நிர்ணயிப்பது?
ஒரு சுலபமான வழி – வாரம் ஒரு முறை உங்கள் உடல் எடையை எடுத்துக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.
புரோட்டீன், விடமின்கள், உடலுக்குத் தேவையான சத்தான மினரல்கள் ஆகியவற்றை சரியானபடி நீங்கள் எடுத்துக் கொண்டால் அது போதும்.
கர்ப்பிணிகள் மட்டுமே துணை உணவுகளை சில சமயம் நாட வேண்டி வரும்.
கொழுப்பை எப்படிக் குறைப்பது எனில் அதைப்பற்றிய உணர்வுடன் எப்போதும் இருத்தல் அவசியம்.
ஒரு சாதாரண விதி என்னவெனில் அன்றாட மொத்த உணவில் மூன்றில் ஒரு பங்கு பால் மற்றும் நெய், தயிர் போன்றவையும், மூன்றில் இன்னொரு பங்கு அசைவமும் இன்னொரு பங்கு சமைத்து உண்ணும் ஏராளமான வகைகளும் எடுத்துக் கொள்ளலாம் என்பது தான்.
தூக்கம் எவ்வளவு தேவை? (Sleep : How Much You Need)
பொதுவான நம்பிக்கை என்னவெனில் ஒரு நாளைக்கு எட்டு மணி நேரத் தூக்கம் அவசியம் என்பது தான்.
இரவு நேரத்தில் தூக்கத்தின் முதல் பகுதி தான் மிகுந்த பயனுடையது. ஆழ்ந்த உறக்கம் என்பது இந்த நேரத்தில் தான் ஏற்படுகிறது.
ஒரு நாளைக்கு ஐந்து மணி நேரம் நல்ல முறையில் தூங்கினால் அதுவே ஆரோக்கியமான வாழ்விற்குப் போதும்.
மதிய உணவிற்குப் பின்னர் 30 நிமிட குட்டித் தூக்கம் நல்ல பலனை அளிக்கிறது என்பதைப் பல ஆய்வுகள் உறுதி செய்கின்றன.
அருமையான ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொள்ள ஏராளமான கேள்விகளுக்கு பதிலை நீங்கள் சொல்லி ஒரு நல்ல திட்டத்தை அந்த பதில்களின் அடிப்படையில் அமைத்துக் கொள்ள வேண்டும்.
வேலை – உங்களுக்குப் பிடிக்கிறதா? போர் அடிக்கிறதா?
வீடு – ஆரோக்கியமாக வாழ உதவுகிறதா?
தொழில்நுட்பங்கள் – புதிய தொழில்நுட்பங்கள் உங்களைப் பயமுறுத்துகிறதா அல்லது அவற்றை வரவேற்று அவற்றுடன் வாழப் பழகுகிறீர்களா?
ஒய்வுநாட்களில் என்ன திட்டம்? புத்தகம் படிப்பதா, இசை கேட்டு அனுபவிப்பதா? புதிய இடங்களுக்குப் பயணங்களா? அல்லது டி.வி.தானா?
குடும்பத்தினருடன் எப்படி, எவ்வளவு நேரம் செலவிடுகிறீர்கள்?
இவற்றிற்கான ஒரு நல்ல அடிப்படையை வகுத்துக் கொண்டால் நல்ல வாழ்க்கை அமையும் என்பதில் ஐயமே இல்லை.
வாழ்க்கை திட்டத்தைப் பற்றி அறிய முன் வந்த தன்னார்வத் தொண்டர்கள், இது மிகவும் பயனுள்ள ஒன்றாக இருக்கிறது என்பதை உறுதியாகச் சொல்கின்றனர்.
எடுத்துக்காட்டாக ஒரு கேஸை சொல்லலாம்.
ஆடம் என்ற இள வயது வாலிபன் ஒருவன் வீடியோவில் சூதாட்ட விளையாட்டு ஒன்றுக்கு அடிமையாக இருந்தான். அவனது தந்தை மிகவும் கவலைப்பட்டு வாழ்க்கைத் திட்டம் பற்றி அறிந்து ஆலோசகரை நாட, அவன் இந்த திட்டத்தின் யோசனைகளின் படி மாறி நலமுற்றான்.
ஆக இப்படி பிரச்சினைகள் வாழ்க்கையில் பல விதம்.
அவற்றிற்குத் தீர்வு சொல்லும் புத்தகம் தான் – Life Plan.
சுவாரசியமான இந்தப் புத்தகம் 1988இல் முதல் பதிப்பைக் கண்டது.
ஆனால் எத்தனை வருடமானாலும் இதில் சொல்லப்படும் உண்மைகளும் உத்திகளும் நிரந்தரமானவை; பயனளிக்க வல்லவை!
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000
Tags – ஹெர்குலீஸ் , கிருஷ்ணன், லீலைகள் , துணிகரச் செயல்கள், கிரேக்க
You must be logged in to post a comment.