பண்டம் ஓரிடத்தில் பழி ஓரிடத்தில்- பழ மொழிக் கதை (Post No.4767)

Date: 20 FEBRUARY 2018

 

Time uploaded in London- 12-27

 

Written by London swaminathan

 

Post No. 4767

 

PICTURES ARE TAKEN from various sources. They may not be directly related to the article. They are only representational.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

தமிழில் ஒவ்வொரு பழமொழிக்கும் ஒரு காரணமோ, ஒரு கதையோ உண்டு. பழமொழிகளே அழிந்து வரும் காலத்தில் கதைகள் மறைந்ததில் வியப்பில்லையே! மூன்று வெள்ளைக் காரர்கள் 20,000 தமிழ்ப் பழமொழிகளை வெளியிட்டனர். அதற்கும் மேலாக உள்ள பழமொழிகளையும், அவற்றின் பின்னுள்ள கதைகளையும் வெளியிடுவதும், அவைகளை விஷயம் (Subject wise)  வாரியாக வரிசைப்படுத்துவதும், பல்வேறு மொழிகளில் உள்ள பழமொழிகளுடன் அவைகளை ஒப்பிடுவதும், எல்லாத் தமிழ்ப் பழமொழிகளையும் உலக மொழிகளில் மொழிபெயர்ப்பதும் செய்ய வேண்டிய பணிகளாகும். இதற்கென தனித் துறையும் ஆராய்ச்சிக் களமும் தேவை. நிற்க.

மேலும் ஒரு பழமொழிக் கதையைக் காண்போம்.

 

‘எய்தவன் இருக்க அம்பு என்ன செய்யும்?’ ‘பண்டம் ஓரிடத்தில் பழி வேறு ஒரு இடத்தில்’ என்று தமிழில் பழமொழிகள் உள.

 

ஒரு ஊரில் ஒரு வணிகன் வாழ்ந்து வந்தான். அவன் கோடிக் கணக்கில் பணம் வைத்திருந்தான். காலப் போக்கில் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படவே அரண்மனை போன்ற வீட்டைப் பராமரிப்பதே கஷ்டமாக இருந்தது. ஒரு நாள் பெரிய மழை பெய்தபோது ஒரு சுவர் இடிந்து விழுந்தது. உடனே வேலையாட்களைக் கொண்டு புதிய சுவர் எழுப்பினான். அது ஈரப் பசையுடன், காயாமல் இருந்த காலத்தில் ஒரு திருடன் அந்த ஊருக்குள் புகுந்தான்.

 

 

இருட்டு நேரத்தில் அந்த வீட்டில் திருட வந்தான். காயாத சுவர் என்று தெரியாமல் அதில் கன்னம் வைத்தான் (ஓட்டை போட்டான்). அது முழுதும் இடிந்து அவன் மீது விழவே அவன் அப்படியே மூச்சுத் திணறி இறந்தான்.

 

அந்த நாட்டை ஆண்ட மன்னன் மஹா மூடன் என்பதால் எல்லோரும் அவனை ஏமாற்றிப் பிழைத்தனர். திருடர் கூட்டத்தில் ஒருவன் இதை அறிந்து, அந்த மன்னர் மீது வழக்கு தொடுத்தான். உனது நாட்டில் வீடுகளைச் சரியாகக் கட்டுவதில்லை. அதை நீங்கள் சரியாக மேற்பார்வை செய்யவில்லை எனது சகா ஒருவன் இறந்ததற்கு உங்கள் மோசமான ஆட்சியே காரணம்; எனக்கு நஷ்ட ஈடு தரவேண்டும்- என்றான்.

 

முட்டாள் அரசன் சொன்னான்,

கவலைப் படாதே, இப்பொழுதே வீட்டுச் சொந்தக் காரனை அழைத்துவர ஆணை இடுகிறேன் என்றான். அந்த வணிகனை உடனே சேவகர்கள் இழுத்து வந்தனர். ஏன் வீட்டை மோசமாகக் கட்டினாய்? ஒரு திருடனின் சாவுக்கு நீயே காரணம் என்றான்.

அந்த வணிகன் சொன்னான்,

நான் என்ன செய்ய? வீட்டில் சுவர் எழுப்பிய கொத்தனாரை அல்லவா தண்டிக்க வேண்டும்?- என்றான்

உடனே கொத்தனாரை இழுத்து வந்தனர். அடே! ஈரமான சுவரை எழுப்பி ஒருவனைக் கொன்றுவிட்டாயே! உனக்கு தொழில் சுத்தம் என்பதே கிடையாதா? என்றான் மன்னன்.

 

மன்னவா! என் மீது பிழை இல்லை. மண் மிதித்துக் கொடுத்த கூலியாள் கொடுத்ததை நான் அப்படியே வைத்து சுவர் எழுப்பினேன். அவனை அல்லவா விசாரிக்க வேண்டும்?- என்று சொன்னான்.

உடனே கூலியாளை அழைத்துவர மன்னன் பணி ஆட்களை ஏவினான்.

 

கூலியாள் வந்தவுடன் அதே கேள்வி.

அவன் செப்பினான்,

மஹாராஜா! நான் இளகலாக மண் கலந்து கொடுத்தது ஏன் என்றால், நான் பயன் படுத்திய மிடாவின் வாய், வழக்கத்தைவிடப் பெரிதாக இருந்தது. அதைச் செய்த குயவனை அல்லவா விசாரிக்க வேண்டும்? என்று உரைத்தான்

 

குயவனை இங்கே இழுத்து வாருங்கள் என்று அரசன் ஆணை  இட்டான்.

 

குயவனும் வந்தான்; அதே பல்லவி!

அவன் பதில் கொடுத்தான்,

மன்னவா! உண்மைதான்; மிடாவின் வாய் பெரிதுதான். அதற்குக் காரணம், அந்தப் பக்கம் வந்த ஒரு பேரழகிதான். அவளைப் பார்த்துகொண்டே மிடா செய்ததால் அது பெரிதாகிவிட்டது என்று நுவன்றான்.

 

அந்தப் பேரழகியை இழுத்துவாருங்கள் என்று உத்தரவிட்டான் மூட அரசன்

அவளும் மினுக்கி குலுக்கி வந்தாள்; அதே  கேள்வி.

அவள் பகர்ந்தாள்,

ஒரு நகை செய்யும்படி தட்டானிடம் சொல்லி இருந்தேன்; அவன் சொன்ன நேரத்தில் என் வீட்டுக்கு வராததால் நானே அவன் வீட்டுக்குச் சென்றேன். அப்போது குயவன் வீடு வழியாகப் போனது உண்மையே. ஆனால் இதற்குக் காரணமான தட்டானை அழைத்து விசாரிப்பதே முறை என்றாள்.

தட்டான் வந்து நகை விற்கும் செட்டியார் மீது பழியைப் போட்டான். அவரையும் அழைத்து வந்தனர் சேவகர்கள்.

 

அவருக்கு நிலைமை முழுதும் விளங்கி இருந்ததால் — பூர்வ கதை தெரிந்து இருந்ததால்– இரண்டு நண்பர்களையும் அழைத்து வந்திருந்தார்.

 

அந்த இரண்டு நண்பர்களும் அரண்மனைக்கு வெளியே மன்னருக்குக் கேட்கும் அளவுக்குப் பெரிய சண்டை போட்டனர்.  மன்னர், செட்டியாரை விசாரிப்பதற்குப்  பதிலாக அந்த இரண்டு பேரையும் உள்ளே அழைத்து என்ன சப்தம்? என்ன சண்டை? என்று கேட்டான்.

அவர்களில் ஒருவன் மொழிந்தான்:

மன்னா! பாருங்கள்! நீங்கள் தண்டிப்பவனைக்  கழுவில் ஏற்றிக் கொல்ல கழு மரம் தயாராக இருப்பதைப் பார்த்தவுடன் நான்தான் கழுவில் ஏறுவேன் என்கிறான். ஆனால் நான்தான் முதலில் வந்தேன். ஆகவே நான்தான் கழுவேறி இறக்க வேண்டும்; இதுதான் வாக்குவாதத்தில்  முடிந்தது- என்றான்.

மன்னன் கேட்டான், நீங்கள் எதற்காகக் கழுவில் ஏற வேண்டும்?

மன்னரே, உங்களுக்குத் தெரியாத விஷயமா? இந்தக் கழுமரத்தில் இந்த நன்னாளன்று யார் முதலில்  கழுவேறி இறக்கிறார்களோ அவர்தான் இந்த நாட்டின் அடுத்த அரசன் என்று ஜோதிடர்கள் சொல்லி இருக்கிறார்களே! விரைவில் இந்த நாட்டில் ஆட்சி மாறும் என்றும் பகர்ந்தார்களே? நான் இதோ தயார் என்றான்.

 

அதைக் கேட்ட அரசன் திடீரென்று ஆசனத்தில் இருந்து குதித்தான். எல்லோரும் விலகிப் போங்கள்; இந்த நாட்டை ஆளுவதற்கு என்னைவிட வேறு யாருக்கும் தகுதி கிடையாது என்று சொல்லிவிட்டு நேராகச் சென்று கழுவில் ஏறினான்; முட்டாள் மன்னவனின் ஆயுளும் பிரிந்தது. அனைவருக்கும் பெரு  மகிழ்ச்சி!

 

 

பழி ஓரிடத்தில் பாவம் ஓரிடத்தில், பண்டம் ஓரிடத்தில் என்ற பழி ஓரிடத்திலென்ற பழமொழிகளுக்கு எல்லாம் மூலக் கதை இதுவே.


(
நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்;  கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))

 

–சுபம்–

மகனை எந்த வயது வரை கொஞ்சலாம்? சாணக்கியன் அறிவுரை (Post No.4760)

Date: 18 FEBRUARY 2018

 

Time uploaded in London- 20-43

 

Written by London swaminathan

 

Post No. 4760

 

PICTURES ARE TAKEN from various sources. They may not be directly related to the article. They are only representational.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

மகனை எந்த வயது வரை கொஞ்சலாம்? சாணக்கியன் அறிவுரை (Post No.4760)

ஒரு தந்தை தனது மகனை எந்த வயது வரை கொஞ்சலாம்? எப்போது அவனை நண்பனாக நடத்த வேண்டும் என்று சாணக்கியன் சொல்கிறான்.

 

மிகவும் ஆச்சர்யம் என்னவென்றால் 2300 ஆண்டுகளுக்கு முன்னர் சாணக்கியன் பேசாத விஷயமே இல்லை. மாபெரும் மகத சாம்ராஜ்யத்தைத் ஸ்தாபித்த, மிகப் பெரிய பொருளாதார நிபுணன் , ராஜ தந்திரி மற்ற விஷயங்கள் பற்றிச் சொல்லுவது அற்புதமானது. அவருக்குப் பின்னர் தமிழகத்தில் தோன்றிய வள்ளுவன், திருக்குறளில் செப்பும் கருத்துகள் பல, சாணக்கியனின் கருத்துகளை எதி, ரொலிப்பதாக உள்ளது. இமயம் முதல் குமரி வரை பாரதீய சிந்தனை ஒன்றே என்பதற்கு இது மேலும் ஒரு சான்று.

 

ஒரு மகனை தந்தையானவர் ஐந்து வயது  வரை கொஞ்சலாம்; பத்து வயது வரை கட்டு திட்டங்களுடன் பராமரிக்கலாம். 16 வயதை அடைந்துவிட்டாலோ மகனை நண்பரைப் போல நடத்த வேண்டும்

லாலயேத் பஞ்ச வர்ஷாணி தச வர்ஷாணி தாடயேத்

ப்ராப்தே து ஷோடசே வர்ஷே புத்ரம் மித்ரவதாசரேத்

சாணக்கிய நீதி 3-18

xxxx

 

வரமேகோ குணீ புத்ரோ நிர்குணைஸ்ச சதைரபி

ஏகஸ்சந்த்ரஸ்தமோ ஹந்தி ந ச தாராகணைரபி

சாணக்கிய நீதி 4-6

குணமற்ற நூறு புதல்வர்களைவிட குணவானாகிய ஒரு பிள்ளை இருப்பது மேல்; இரவு நேரத்தில் ஒரு நிலவு இருளை எல்லாம் போக்கிவிடும்; நிறைய நட்சத்திரங்கள் போக்காது.

 

மூர்க்கஸ்சிராயுர்  ஜாதோபி தஸ்மாத்  ஜாதம்ருதோ வரஹ

ம்ருதஹ ச்ஸ சால்பதுக்காய யாவஜ்ஜீவம் ஜடோ தஹேத்

சாணக்கிய நீதி 4-7

xxx

ஒரு முட்டாள் குழந்தையைப் பெறுவதற்குப் பதிலாகக் குறைப் பிரசவம் ஆனாலும் சரியே. குறைப் பிரசவம் என்பது அந்த நேரத்தில் துக்கத்தைக் கொடுத்துவிட்டு மறைந்து விடும்; முட்டாள் பிள்ளையோ பெற்றோரின் வாழ்நாள் முழுதையும் வீணாக்கி விடும்.

 

 

ஏகோநாபி ஸுபுத்ரேண வித்யாயுக்தேன ஸாதுனா

ஆஹாலாதிதம் குலம் ஸர்வம் யதா சந்த்ரேண சர்வரீ

சாணக்கிய நீதி 3-16

 

ஒரு நல்ல மகன் இருந்தால் அவன் குடும்பம் முழுவதையும் புகழ் அடையச் செய்வான்; ஒரு சந்திரனால் இரவும் முழுதும் ஒளி பெறுவதைப் போல!

xxx

கிம் ஜாதைர்பஹுபிஹி புத்ரைஹி சோக  ஸந்தாபகாரகைஹி

வரமேகஹ குலாலம்பீ யத்ர விஸ்ராம்யதே குலம்

சாணக்கிய நீதி 3-17

 

துக்கத்தையும் கெட்ட பெயரையும் உண்டாக்கும் பல புதல்வர்கள் இருந்து என்ன பயன்? குடும்பம் முழுதும் பயன அடையக்கூடிய ஒரு மகன் போதும்.

xxx

 

இதை மக்கட்பேறு என்ற அதிகாரத்தில் வள்ளுவன் எழுதிய பத்து குறட்களுடன் ஒப்பிட்டால் இரு அறிஞர்களும் ஒரே விஷயத்தைச் சொல்லுவதைக் காணலாம்; இதோ சில குறட் பாக்கள்:

எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்

பண்புடை மக்கட் பெறின் 62

 

மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை

என்னோற்றான் கொல்லெனுஞ் சொல் –70

 

ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன் மகனைச்

சான்றோன் எனக் கேட்ட தாய் –69

 

தம்மின் தம் அறிவுடைமை மாநிலத்து

மன்னுயிர்க்கு எல்லாம் இனிது- 68

தந்தை மகற்கு ஆற்றும் நன்றி அவையத்து

முந்தியிருப்பச் செயல் –67

பொருள் எழுதத் தேவை இல்லாத, எளிமையான,எல்லோருக்கும் தெரிந்த குறள்கள்!

 

இந்து மத புராணங்களில் உலகில் வேறு எங்கும் இல்லாத அளவுக்குப் புகழ் பெற்ற சிறுவர்கள் உள்ளனர்:

 

 

நட்சத்திர நிலைக்கு உயர்ந்த துருவன்,

ஒரு அணையை கை விரலால் இரவு முழுதும் அடைத்த ஸ்வேதகேது,

யமனையே விரட்டிச் சென்று கேள்வி கேட்ட நஸிகேதஸ்,

புத்திசாலியான என்றும் 16 வயது வாழும் வரம் பெற்ற மார்கண்டேயன்,

இறைவன் பெயரைச் சொல்லி தந்தையின் ஆட்சியையே எதிர்த்த பிரகலாதன்,

16 வயத்துக்குள் பல்லாயிரம் பாடல் பாடிய ஞான சம்பந்தன்,

16 வயதுக்குள் பாவை பாடிய ஆண்டாள்,

இளம் வயதிலேயே நாட்டை வலம் வந்த ஆதிசங்கரர்!

 

போன்ற பல இளைஞர்கள் முன் உதாரணமாக விளங்கினர். உலகில் வேறு எந்த சமயத்திலும், கலாசாரத்திலும் இப்படி இல்லை என்பதால் பாரதீய கலாசாரமே பழமையான, முதன்மையான நாகரீகம் என்பது சொல்லாமலேயே விளங்கும்.

(நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்;  கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))

 

–Subaham–

 

ஸ்ரீ ராமரின் ஜோதிட அறிவு (Post No.4754)

Date: 17 FEBRUARY 2018

 

Time uploaded in London- 6-23 am

 

WRITTEN by S NAGARAJAN

 

Post No. 4754

 

PICTURES ARE TAKEN from various sources. PICTURES  MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

ஸ்ரீ ஜோஸியம் பிப்ரவரி 2018 இதழில்  வெளியாகியுள்ள கட்டுரை

 

 ஸ்ரீ ராமரின் ஜோதிட அறிவு

 

.நாகராஜன்

 

 

ஹிந்து வாழ்க்கை முறையில் ஜோதிடம் எவ்வளவு பழமையானது என்பதைச் சுட்டிக் காட்ட வால்மீகி ராமாயணம் ஒரு சரியான சான்று. ஆதி காவியம் என்று அறிஞர்களால் புகழப்படும்  உலகின் முதல் காவியமும் பெரும் காவியமுமான ராமாயணத்தில் வால்மீகி முனிவர் ஜோதிடக் குறிப்புகளைத் தவறாமல் முக்கியமான இடங்களில் சொல்லிக் கொண்டே போகிறார்.

சில முக்கியக் குறிப்புகளை மட்டும் இங்கு பார்ப்போம்.

ராமரின் ஜோதிட, ஹோரா அறிவு

முதலில் ராமர் ஒரு காரியத்தைத் தொடங்கும் முன்னர் நல்ல நேரத்தைத் தானே பார்த்துத் தொடங்குபவர் என்பதற்கு அவர் சீதையை நோக்கி இலங்கை செல்லப் புறப்பட நிர்ணயித்த தினமே ஒரு சான்று.

ஹனுமார் இலங்கையை நோக்கிச் செல்ல ராமரே ஒரு நல்ல வேளையைக் குறிப்பிட வேண்டும் என்று வேண்டிக் கொள்ள ராமர் கூறுவது:

“இப்போதே நல்ல வேளையாக இருக்கிறது. சூரியன் வானத்தின் நடுவில் வந்து விட்டார். இந்த விஜய முகூர்த்தமே சிலாக்கியமானது. இன்று உத்தர பல்குனி (உத்தரம்) நட்சத்திரம். நாளை ஹஸ்தம். (அது எனது நட்சத்திரமான புனர்வசுவிற்கு ஏழாம் நட்சத்திரமாக ஆவதால் சுபமில்லை. அதாவது ஜன்ம நட்சத்திரத்திற்கு வத தாரை; உத்தர நட்சத்திரம் சாதக தாராபலம்) என்று இவ்வாறு ராமர் சுக்ரீவனிடம் கூறுகிறார்.

பகலில் உள்ள 30 நாழிகைகளில் 20 நாழிகைக்கு மேல் 22 நாழிகை முடிய உள்ள நேரம் விஜய முகூர்த்தம் எனப்படும். வெற்றி பெறுவதற்கான சரியான வேளை அது என்று ராமர் நிர்ணயிக்கிறார்.

 

ஆக இப்படி ஜோதிடத்தின் துணை கொண்டு நல்ல வேளை நிர்ணயித்த ராமர் வெற்றி பெற்றதில் வியப்பேதும் இல்லை.

ராமரின் ஜாதகம்

அடுத்து ராமரின் ஜனனம் முதல் பட்டாபிஷேகம் வரை வால்மீகி முனிவர் தரும் ஜோதிடத் தகவல்கள் பிரமிக்க வைப்பவை.

ராமர் சித்திரை மாதம் நவமி திதி, புனர்வசு நட்சத்திரத்தில் அவதரிக்கிறார். சந்திரன், சூரியன்,குரு, சுக்ரன்,செவ்வாய், சனி ஆகிய ஐந்து கிரகங்கள் உச்சத்தில் இருக்க சந்திரனுடன் குரு சேர்ந்திருக்கும் போது கடக லக்னத்தில்  அவர் அவதரிப்பைதை பால காண்டம் சித்தரிக்கிறது.

 

பட்டாபிஷேக நாள்

ராவணனை வதம் செய்து அயோத்தி திரும்பிய ராமர் சுக்ல ஸப்தமி, புஷ்ய (பூசம்) நட்சத்திரத்தில் வசிஷ்டரால் சீதையுடன் ரத்ன சிம்மாசனத்தில் அமர வைக்கப்பட்டு பட்டாபிஷேகம் நடக்கிறது.

ராமர் காட்டிற்கு கிளம்பியது புஷ்ய  நட்சத்திரத்திலேயே. ஆக பதினான்கு வருடங்கள் முடிந்து அவர் மீண்டும் அயோத்திக்கு வருகிறார். அவர் சைத்ர (சித்திரை மாதம்) சுக்ல பக்ஷத்தில் கிளம்பியவர். பால்குன (பங்குனி மாதம்) கிருஷ்ண பட்சம் முடிந்த போதே வருடக் கணக்கில் 14 வருடங்கள் பூர்த்தியாகி விட்டன.

ஆகவே புஷ்பக விமானத்தில் ஏறிச் சென்றவர் பாரத்வாஜ ரிஷியின் உத்தரவின் பேரில் அவர் ஆசிரமத்தில் ஒரு இரவு கழிக்கிறார்.,முன்னதாக ஹனுமாரை அனுப்பித் தான் வரும் செய்தியை பரதனுக்குத் தெரிவிக்க உத்தரவிடுகிறார்.

பிறகென்ன! அயோத்தி மாநகரமே குதூகலத்துடன் தயாராகிறது.

 

சகுன சாஸ்திரம்

இங்கு நாம் பார்த்தவை ஒரு சில குறிப்புகளை மட்டும் தான்!

ராமாயணத்தை முழுவதுமாக ஜோதிட ரீதியில் படிக்க ஆரம்பித்தால் ஜோதிட சாஸ்திரம், சகுன சாஸ்திரம், ஹோரா சாஸ்திரம் ஆகியவை பற்றிய பல முக்கிய குறிப்புகளைப் பெறலாம். (சீதை பெற்ற சுப சகுனங்களை வால்மீகி ராமாயணம், சுந்தர காண்டம் 29ஆம் அத்தியாயம் விவரிக்கிறது.)

வேதாங்கங்களின், ஆறு அங்கங்களில் ஒன்றான ஜோதிடத்தின் பெருமை ஆதி காலத்திலிருந்தே ஹிந்துத்வ வாழ்க்கை முறையில் இருந்து வந்திருக்கிறது என்பதை அறிந்து மகிழலாம்!

***

 

குறிப்பு: வால்மீகி ராமாயணத்தில் வரும் விரிவான ஜோதிடக் குறிப்புகள் பலவற்றை  ஸ்ரீ ஞானானந்த பாரதி ஸ்வாமிகள் எழுதிய 432 பக்கங்கள் உள்ள  ஸ்ரீ வால்மீகி ஹ்ருதயம் என்ற நூலில் காணலாம்.

–Subham–

பேராசை பெரு நஷ்டம்-பழமொழிக் கதை (Post No.4751)

Date:16 FEBRUARY 2018

 

Time uploaded in London- 7-21 am

 

Written by London swaminathan

 

Post No. 4751

 

PICTURES ARE TAKEN from various sources.

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

ஆசை பற்றி தமிழில் நிறைய பாடல்களும் பழமொழிகளும் உண்டு; அவை எல்லாம், பேராசைப்பட்டால் வரும் தீமைகளை எடுத்துரைக்கும்.

 

ரிக்வேதம், மனு ஸ்ம்ருதி, திருக்குறள் ஆகிய அனனைத்தும் போதிப்பது இதுவே.

 

நாம் செல்வத்திற்காக நம் ஆசைகளை நிறைவேற்ற பல திட்டங்கள் போட்டு அவைகளை ஆடு மாடுகள் மேய்வது போலப் பின்பற்றுகிறோம் – ரிக் வேதம் 9-19

 

ஆசைகளைப் பூர்த்தி செய்து அனுபவிப்பது என்பது தீயில் நெய் ஊற்றுவதற்கு இணையானது; ஆசைகள் என்றும் அவியாது – மனு 2-94

 

அவா இல்லார்க்கில்லாகும் துன்பம்- குறள் 368

 

தூஉய்மை என்பது அவாவின்மை- குறள் 364

 

ஒருவனை வஞ்சிப்பதோரும் அவா – 366

 

அவா= ஆசை

(நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்;  கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))

 

 

குறள் கதை:–

 

தெலுங்கு மொழியில் வழங்கிவரும் ஒரு நாட்டுப்புற கதையைக் காண்போம்:

சித்ராபூர் என்ற கிராமத்தில் நான்கு இளைஞர்கள் இருந்தனர்; அவர்கள் வறுமையில் வாடினர்; வழி தெரியாது ஏங்கினர். ஒரு சாமியாரைக் கண்டனர். அவர் ஒரு மந்திரத்தைச் சொல்லிக் கொடுத்து காளி தேவியைப் பூஜியுங்கள் என்றார். அவர்களும் அவ்வாறே செய்தனர்.

 

 

காளி தேவி பிரசன்னமானாள்; அன்பர்களே! உங்கள் பக்தியை மெச்சுகிறேன். என்ன வேண்டும் ? என்று வினவினாள்.

 

அவர்கள் சொன்னார்கள்: இன்பமும் செல்வமும் வேண்டும் என்று. அவள் உடனே நான்கு தாயத்துகளைக் கொடுத்து இதை ஒவ்வொருவரும் தலையில் வைத்துக்கொள்ளுங்கள். வடக்கு நோக்கிச் செல்லுங்கள். ஒவ்வொருவர் தாயத்து பூமியில் விழும்போதும் அந்த இடத்தைத் தோண்டிப் பார்த்து கிடைப்பதை எடுத்துச் செல்லுங்கள் என்றாள்.

 

 

அவர்களும் அகம் மகிழ்ந்து உளம் குளிர்ந்து வட திசை நோக்கி ஏகினர். சிறிது தொலைவு சென்றவுடன் முதலில் ஒருவன் தாயத்து விழுந்தது. அவன் தோண்டிப் பார்த்தான். அங்கே தாமிர உலோகக் கட்டிகள் நிறைய இருந்தன. முடிந்த மட்டும் மூட்டை கட்டினான். நண்பர்களே! எனக்கு பரம திருப்தி; நான் கிராமத்துக்குத் திரும்பிச் சென்று புது வாழ்வு படைப்பேன் என்றான்; நண்பர்களும் ஆமோதித்தனர்.

இன்னும் கொஞ்சம் நடந்தனர் மற்ற மூன்று பேர்.

 

இரண்டாமவன் தலையில் இருந்த தாயத்து விழுந்தது. அவன் நிலத்தைத் தோண்டினான்; வெள்ளிக் கட்டிகள் கிடைத்தன. அவனுக்கு பரம சந்தோஷம்; நபண்பர்களிடம் விடை பெற்று சித்ராபூருக்குத் திரும்பி புது வாழ்வு வாழ்ந்தான்.

 

இதற்குள் மற்ற இருவருக்கும் களைப்பு மேலிட்டது; பொழுதும் சாய்ந்து கொண்டிருந்தது; இருந்தும் தலையில் தாயத்து இருந்ததால் முன்னேறினர்.

 

 

வெகு தொலைவு சென்றபின்னர் மூன்றாமவன் தாயத்து தரையில் விழுந்தது. அங்கே தோண்டினான். நிறைய தங்கக் கட்டிகள் இருந்தன. அவன் சொன்னான்

இதோ பார்! கொஞ்ச நேரத்தில் இருண்டு விடும்; சூரியன் மலை வாயில் விழுந்து கொண்டிருக்கிறான்; நீ முடிந்த மட்டும் உனக்கு வேண்டிய தங்கத்தை எடுத்துக் கொள்; நான் முடிந்தவரை எனக்கு வேண்டியதை எடுத்துக் கொள்கிறேன் என்றான். ஆனால் நான்காமவன் கேட்கவில்லை அவனுக்குப் பேராசை; இனியும் போனால் ஞ் வைரக் கட்டிகள் கிடைக்கும் என்று எண்ணினான்.

 

மூன்றாவது ஆள் வணக்கம் சொல்லி விடை பெறவே நான்காமவன் பயணத்தைத் தொடர்ந்தான். வெகு தொலைவு சென்ற பின் தாயத்தும் தலையில் இருந்து விழுந்தது. ஆசையோடு தோண்டினான்; வெறும் இரும்புக் கட்டிகளே இருந்தன; பொழுதும் சாய்ந்தது. இரும்பைத் தூக்கிக் கொண்டு இனியும் நடக்க முடியாது என்று வெறும் கைகளோடு வழீ தெரியாமல் தட்டுத் தடுமாறி கிராமத்தை நோக்கி நடை போட்டான்.

கிராம மக்களுக்கு பேராசை பெரு நஷ்டம் என்பதை விளக்கவும் அரசனை நம்பி புருஷனைக் கைவிடாதே; கிடைத்ததை வைத்து திருப்தியுடன் வாழக் கற்றுக்கொள் என்பதற்காக இக்கதைகயைச் சொல்லுவர்.

 

ஆசை பற்றிய தமிழ்ப் பழமொழிகள் இதோ:

 

மீசை நரைத்தாலும் ஆசை நரைப்பதில்லை

 

ஆசை காட்டி மோசம் செய்கிறதா?

ஆசை பெரிதோ, மலை பெரிதோ?

 

ஆசைப்பட்டு மோசம் போகாதே — தமிழ் பழமொழி

ஆசைப்பட்ட பண்டம் ஊசிப் போயிற்று –தமிழ் பழமொழி

My  Old Article

ஆசை பற்றி 30 பழமொழிகள்; செப்டம்பர் 2016 …

https://tamilandvedas.com/…/ஆசை-பற்றி-30-பழமொ…

Translate this page

29 Aug 2016 – ஆசை அறுபது நாட்கள், மோகம் முப்பது நாள், தொண்ணூறு நாளும் போனால் துடைப்பக் கட்டை அடி– தமிழ் பழமொழி. செப்டம்பர் 12 திங்கட்கிழமை. ஆசை அவள் மேலே, ஆதரவு பாய் மேலே –தமிழ் பழமொழி. செப்டம்பர் 13 செவ்வாய்க் கிழமை. ஆசை இருக்கிறது தாசில் பண்ண, அமிசை …

 

 

–subam–

 

 

பிராணாயாம ரஹஸியங்களும் அற்புதங்களும் (Post No.4743)

Muslim Yoga in Abu Dhabi

 

Date: 14 FEBRUARY 2018

 

Time uploaded in London- 20-15

 

Written by London swaminathan

 

Post No. 4743

 

PICTURES ARE TAKEN from various sources.

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 
(நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்;  கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))

 

Yoga picture from : sheela Govindaraj post

1915 ஆம் ஆண்டில் வெளியான சித்தர் களஞ்சியம் என்ற நூலில் மூச்சுப் பயிற்சி எனப்படும் பிராணாயாமம் பற்றியும் ஆறுவகையான ஷ்ட்கருமப் பயிற்சிகளும் எட்டுவகையான மூச்சடக்கப் பயிற்சிகளும் — அஷ்டவித கும்பகம்– விளக்கப்பட்டுள்ளன. அதை அப்படியே நூலில் இருந்து எடுத்துத் தருகிறேன். இதைச் செய்யாதவர்களும் இப்படியெல்லாம் செய்யும் சித்த புருஷர்கள் இந்த நாட்டில் தெருவுக்குத் தெரு இருந்த காலம் ஒன்று இருந்தது என்பதை அறிதல் நலம்.

 

ஷட் கருமங்கள்

 

 

Picture from Sandhya manoj post

 

 

அஷ்டவிதகும்பகங்கள்

Picture from Ma Nithya’s post

 

 

 

 

 

 

 

Picture from Ma Nithya post

— SUBHAM —

TAGS: பஸ்தி, தௌதி, கபாலபாதி, பிராணாயாமம், அஷ்டகும்பகம், ஷட்கருமம், சித்தர் ரகசியம், சூரியபேதி, உஜ்ஜாயினி.

இருந்தும் இறந்தவர் யார், யார்? -1 (Post No.4741)

Date:14 FEBRUARY 2018

 

Time uploaded in London- 6-41 am

 

Written by S NAGARAJAN

 

Post No. 4741

 

PICTURES ARE TAKEN from various sources.

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

(நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்;  கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))

 

ச.நாகராஜன்

 

1

இரண்டு கைகள், கால்கள், முகத்துடன் கூடி உயிருடன் உலவுகின்ற அனைவரும் மனிதர்கள் தானா?

இல்லை என்கின்றனர் மேலோர்.

 

இதற்கும் அப்பாற்பட்ட சில விஷயங்களைக் கொண்டு தான் மனிதன் தானா என்று நிச்சயிக்க வேண்டும் என்கின்றனர் அவர்கள்.

 

உயிரோடு இருந்தாலும் இறந்தவர்கள் போலத்தான் என்று பல அறிஞர்கள் கூறுகின்ற பட்டியலைப் பார்த்தால் மனிதனாக வாழ்வதற்கான இலக்கணம் நன்கு புரிய வரும்.

சில பெரியோர்கள் இது பற்றிக் கூறியதைப் பார்க்கலாம்.

 

 

2

முத்து மீனாட்சிக் கவிராயர் என்பவர் குமரேச சதகம் என்ற நூலை இயற்றியுள்ளார். சதகம் என்பது நூறு பாடல்களைக் கொண்ட நூலாகும். இவர் வேளாள குலத்தைச் சேர்ந்தவர். இவருக்கு குருபாத தாசன் என்ற பெயரும் உண்டு.

குமரேச சதகத்தில் வரும் அவரது பாடல் ஒன்று இருந்தும் இறந்தோர் யார் என்பதைத் தெளிவுறக் கூறுகிறது.

 

மாறத வறுமையோர் தீராத பிணியாளர்

வருவேட் டகத்திலுண்போர்

மனைவியை வழங்கியே சீவனம் செய்குவோர்

மன்னுமொரு ராசசபையில்

தூறாக நிந்தைசெய் துய்குவோர் சிவிகைகள்

சுமந்தே பிழைக்கின்றபேர்

தொலையா விசாரத் தழுந்துவோர் வார்த்தையில்

சோர்வுபட லுற்றபெரியோர்

வீ றாக மனையாள் தனக்கஞ்சி வந்திடு

விருந்தினை ஒழித்துவிடுவோர்

வீம்புடன் செல்லாத விவகாரம் அதுகொண்டு

மிக்கசபை ஏறும் அசடர்

மாறாக இவரெலாம் உயிருடன் செத்தசவம்

ஆகியொளி மாய்வர் கண்டாய்

மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு

மலைமேவு குமரேசனே

(குமரேச சதகம் – பாடல் எண் 32)

 

 

இதன் பொருள்: மயிலில் அமர்ந்து திருவிளையாடல் புரியும் குகனே! திருப்புல் வயலில் உயர்ந்த மலையின் மேல் எழுந்தருளியிருக்கும் குமரக் கடவுளே!

 

நீங்காத வறுமையில் உழல்வோர்

நோய் தீராத பிணியாளர்

மாமனார் வீட்டில் நீண்ட நாள் தங்கி உணவுண்போர்

மனைவியைத் தீய ஒழுக்கத்தில் அதில் வரும் வருமானத்தைக் கொண்டு ஜீவித்திருப்போர்

தாம் இருக்கும் அரச சபையில் வீணான பழியைக் கூறி அதனால் வாழ்வோர்

 

மனிதன் அமர்ந்திருக்க அந்தப் பல்லக்கைச் சுமந்து வாழ்வோர்

நீங்காத கவலையில் அழுந்தி இருப்போர்

சொன்ன சொல்லிலிருந்து வழுவும் பெரியோர்கள்

மனைவியின் அகம்பாவத்திற்குப் பயந்து வருகின்ற விருந்தினரை விலக்கி விடுவோர்

நடக்காத வழக்கை ஆதரவாகக் கொண்டு பெரிய நியாய ஸ்தலங்களிலே பிடிவாதமாகச் செல்லும் அசடர்கள்

இவர்கள் அனைவரும் உலகியலுக்கு எதிராக உயிரோடிருந்தும் செத்த பிணமாகிப் புகழ் குன்றுவர்!

 

3

திருவள்ளுவர் இருந்தும் இறந்தவர் பற்றி இரு குறள்களில் கூறுகிறார்.

 

ஒப்புரவு அறிதல் என்ற அதிகாரத்தில் வரும் குறள் இது;

ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்

செத்தாருள் வைக்கப் படும்   (குறள் 214)

உலக நடையினை அறிந்து வாழ்பவனே உயிரோடு வாழ்பவன் ஆவான். அப்படிச் செய்யாதவன் உயிரோடு இருந்தாலும் கூட செத்தவருள் ஒருவனாக வைக்கப்படும்.

உலக நடை என்பது வேத நடையைப் போல என்கிறார் பரிமேலழகர் தம் உரையில்.

 

நன்றியில் செல்வம் என்ற அதிகாரத்தில் வரும் குறள் இது:

 

வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃது உண்ணான்

செத்தான் செயக்கிடந்தது இல்       (குறள் 1001)

 

தன் வீடு முழுவதும் நிரம்பி வழியும் அளவு பெரும் பொருளை ஈட்டியும் கருமித்தனத்தால் அதனை அனுபவிக்காது இருக்கும் ஒருவன்  உயிர் வாழ்ந்தாலும் கூடச் செத்தவனே!

 

 

4

ஸ்வாமி விவேகானந்தர் மிக அழகுறக் கூறிய வார்த்தைகள் இவை:

 

THEY ALONE LIVE WHO LIVE FOR OTHERS

THE REST ARE MORE DEAD THAN ALIVE!

மற்றவருக்குச் சேவை புரிந்து வாழ்பவனே வாழ்பவன்;

மற்றவர்கள் உயிரோடிருந்தாலும் இறந்தவரே!

 

( அடுத்த கட்டுரையுடன் முடியும்)

***

சித்தர்கள் செய்த எட்டு வகை அற்புதங்கள் (Post No.4738)

Date: 13 FEBRUARY 2018

 

Time uploaded in London- 8-43 am

 

Compiled by London swaminathan

 

Post No. 4738

 

PICTURES ARE TAKEN from various sources.

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

1915 ஆம் ஆண்டில்    வெளியான சித்தர்   களஞ்சியத்தில் அஷ்ட  மா சித்திகளின் விளக்கம் நன்றாக உள்ளது; அதைக் கீழே காண்க.

 

 

 

 

 

 

–SUBHAM–

அன்னமிட்ட வீட்டில் கன்னமிடலாமா? பழமொழிக் கதை (Post No.4728)

Date:11 FEBRUARY 2018

 

Time uploaded in London- 9-42 am

 

WRITTEN by London swaminathan

 

Post No. 4728

 

PICTURES ARE TAKEN from various sources.

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

அன்னமிட்ட வீட்டில் கன்னமிடலாமா? உண்ட வீட்டுக்கு இரண்டகம் நினைக்கலாமா? பழமொழிக் கதை

 

இது ஒரு உண்மைக் கதை –பர்த்ருஹரி நீதிசதகம் பற்றி 1916ல்  கோபாலாச்சாரியார் என்பவர் எழுதிய புத்தகத்தில் உள்ளதைப் புதுக்கி வரைகிறேன்

 

தென்னாட்டில் ஒரு ஊரில் ஒரு பணக்கார பார்ப்பனி வாழ்ந்து வந்தாள்; அவள் கணவன் இல்லாமல் தனித்து வாழ்ந்து வந்தாள்; நிறைய செல்வத்துக்கு அதிபதி அந்தப் பிராஹ்மணப் பெண்மணி.

 

அந்தக் காலத்தில் கொள்ளையர்கள் இந்த வீட்டில் இன்ன நாளன்று திருடப் போகிறோம் என்று அறிவித்துவிட்டு வந்து திருடுவார்கள். இதனால் அனாவசிய வன்முறை தவிர்க்கப்படும்; கொள்ளையர்களும் எந்த சேதமும் இன்றி பணம், நகைகள் முதலியவற்றை எடுத்துச்செல்வர்.

 

பணக்கார பார்ப்பனிக்கும் கடிதம் வந்தது; அவளுக்கோ ஆண் துணை கிடையாது. வெறும் வேலையாட்கள் மட்டுமே; அவளுக்கு ஒரு யோஜனை பிறந்தது.கொள்ளையர்கள் கெடு வைத்த நாளன்று அறுசுவை உண்டி சமைத்தாள்; வடை பாயசம், அப்பளம் பொறியல் கூட்டு, லட்டு என கல்யாண சமையல் சாதம்! வாசனை தெரு முழுதும் பரவியது.

 

கொள்ளையர்களும் குறித்த நேரத்தில் தீவட்டி சஹிதம், தாரை தம்பட்டைகளை முழக்கிக் கொண்டு கும்பலாக வந்தனர். எல்லோரும் அவரவர் வீட்டைத் தாழிட்டுக்கொண்டு விளக்கை அணைத்துவிட்டு ‘கம்’ என்று இருந்தனர். இந்தப் பிராஹ்மணப் பெண்மட்டும் கொள்ளையர்களுக்காக கதவை லேஸாகத் திறந்து வைத்துக் கொண்டு காத்திருந்தாள்.

 

கொள்ளையர்கள் வீட்டுக்குள் நுழைந்தவுடன் அறு சுவை உணவின் வாசனை மூக்கைத் துளைத்தது. நாக்கில் ஜலம் ஊறியது. இந்த அம்மாளும் வாருங்கள், முதலில் சாப்பிட்டுவிட்டு நீங்கள் வந்த காரியத்தைச் செய்யுங்கள் என்று தலை வாழை இலை விரித்துப் பரிமாறினாள்.

 

அவர்கள் சாப்பிட்டு எழுவதற்கு முன்னார், ஒரு புடவையை தரையில் விரித்து நகை நட்டுகளைக் கழட்டி வைத்தாள்; வீட்டிலுள்ள விலை உயர்ந்த பட்டுப் புடவை, பட்டு வஸ்திரங்களையும் சமப்பித்தாள். கொள்ளையர்களுக்கு ஒரே ஆச்சர்யம்; அட, வந்த வேலை இவ்வளவு சுலபமாக முடிந்து விட்டதே என்று கீழ்மட்டக் கொள்ளையர்கள் நினைத்தனர்.

 

தலைவா! உத்தரவிடுங்கள்; கைவரிசையைக் காட்டுகிறோம் என்று அவர்கள் தலைவனை நோக்கினர். அவனோ, ”சீ, சீ, விலகிப் போங்கள். அன்னம் இட்ட வீட்டில் கன்னம் இடலாகாது என்பதை அறியீரோ; உண்ட வீட்டுக்கு இரண்டகம் நினைக்கலாகாது; உப்பிட்டவரை உள்ளளவும் நினை என்றெல்லாம் தமிழில்    சொல்வார்களே. அப்படி இருக்க நாம் இந்த அம்மணிக்கு ஒரு தீங்கும் செய்யலாகாது வாருங்கள் என்று அந்த அம்மையாருக்கு வந்தனம் கூறி விடை பெற்றனர்.

 

பின்னர் அவன் தன் கொள்ளைச் சொத்துகளை அந்த அம்மையார் பெயருக்கே  எழுதி வைத்தானாம்.

 

இந்தக் கதையை 1916ல் வெளியிட்ட கோபாலாச்சாரியார்,  இன்றும் அந்தக் குடும்பத்தினர் அந்த சொத்துகளை அனுபவித்து வருகின்றனர் என்று அடிக்குறிப்பு கொடுத்துள்ளார். ஆனால் பெயரோ ஊரோ குறிப்பிடவில்லை.

அன்னதானத்தின் மஹிமை அவ்வளவு பெரியது; திருடர்களையும் மனம் மாற வைத்துவிடும்; அது மட்டுமல்ல; ‘’அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்’’ — என்ற வள்ளுவன் வாக்கிற்கு இணங்க, அந்த அம்மையாரின் அன்பான உபசரிப்பும் அவர்களை நெகிழவைத்துவிட்டது எனலாம்!

 

 

கன்னம் இடல்:- வீட்டின் சுவரில்   ஓட்டை போடுதல்;  அதிலும் திருடர்கள் வெவ்வேறு வடிவத்தில் ஓட்டை போட்டு தன் கலைத் திறமையை வெளிப்படுத்துவர். சூத்ரகர் எழுதிய ‘ம்ருச்ச கடிகம்’ நாடகத்தில் இதன் விளக்கங்களைக் காணலாம்.

 

இரண்டகம் :— உண்ட வீட்டில் பிளவு ஏறபடுத்தல்; கருத்துப் பிளவு அல்லது வீட்டை உடைக்கும் பிளவு — இரண்டு அகம் = இரண்டு வீடுகள்/ துண்டுகள் ஆக்குதல்

 

–சுபம்–

நடைப்பயிற்சியே நல்ல மருந்து – 1 (Post No.4723)

DATE – 10 FEBRUARY 2018
Time uploaded in London- 7-37 am

 

Written by S NAGARAJAN

 

Post No. 4723

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

திருநெல்வேலியிருந்து மாதந்தோறும் வெளிவரும் ஆரோக்கிய மேம்பாட்டு இதழான ஹெல்த்கேர், பிப்ரவரி 2018 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

 

நடைப்பயிற்சியே நல்ல மருந்து – 1

 

ச.நாகராஜன்

 

Kolkata Street from Deccan Herald

“நடைப் பயிற்சியே நல்ல மருந்து” – ஹிப்போக்ரேடஸ்!

 

 

1

ஓடலாமா?

குதித்துக் குதித்துப் போகலாமா?

தாவித் தாவிப் பார்க்கலாமா?

சைக்கிளை எடுத்து ஓட்டலாமா?

ஸ்கேடிங் செய்யலாமா?

ஆயிரம் யோசனைகள் -ஆரோக்கிய மேம்பாடு அடைய என்ன செய்யலாம் என்று.

இவை அனைத்தையும் விட எளிமையான வழி ஒன்று உண்டு.

அது தான் நடைப் பயிற்சி.

மேலே கூறிய எதுவும் தராத அருமையான பலன்களைத் தருவது

நடைப் பயிற்சியே!

அப்படி நடந்தால் – நடைப் பயிற்சியை மேற்கொண்டால் – நாம் அடையும் நன்மைகள் என்னென்ன?

 

 

2

‘ஜாக்கிங்’ (Jogging) செய்வதன் மூலம் எவ்வளவு கலோரிகளை உடலிலிருந்து செலவழிக்க –  எரிக்க – முடிகிறதோ அவ்வளவு கலோரி எரிப்பை நடைப் பயிற்சியே தருகிறது.

முதுகு வலியைப் போக்குகிறது.

இடையளவைக் குறைக்கிறது. (பார்க்க அழகு தான்!)

இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.

கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கிறது.

மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கிறது.

உடல் வலுவையும், ஆற்றலையும் கூட்டுகிறது.

மன அழுத்தத்தையும் மன இறுக்கத்தையும் குறைக்கிறது.

சிந்தனை ஆற்றலைக் கூட்டுகிறது.

தசைகளை மேம்படுத்துகிறது.

மூட்டுகளை வலுவாக்குகிறது.

ஏதேனும் சாப்பிட வேண்டும் என்று அடிக்கடி ஏற்படும் உணர்வைக் கட்டுப்படுத்துகிறது.

ஏரோபிக் (Aerobic capacity) திறனை அதிகப்படுத்துகிறது.

சிறிது சிறிதான அளவில், அவ்வப்பொழுது நேரம் கொடுத்து நமது சௌகரியத்திற்கேற்ப செய்ய முடியக்கூடியது.

Osteoporosis bone loss – எலும்பு மெலிதலால் ஏற்படும் எலும்பு அடர்த்திக் குறைவைத் தவிர்க்கிறது.

அவ்வப்பொழுது பயணம் மேற்கொள்வோராலும் கூட, எங்கிருந்தாலும் சிறிது நேரத்தை ஒதுக்கிச் செய்ய முடிவது.

இவ்வளவு நன்மை போதுமா?

இன்னும் கொஞ்சம் வேண்டுமா?

இருக்கிறது இன்னும் பல நன்மைகள்.

 

 

3

பாதுகாப்பானது!

நடைப் பயிற்சியைப் போல பாதுகாப்பானது எதுவுமே இல்லை.

இதற்கு முன் அனுபவம் எதுவும் தேவையில்லை.

பயிற்சியாளரின் உதவியும் தேவையில்லை.

இப்படிப்பட்ட உடல் தகுதிகள் தேவை என்ற நிபந்தனைகள் எதுவும் இல்லை.

உடல் வலி மற்றும் இதர உபாதைகளோ அல்லது பக்க விளைவுகள் எதுவுமோ இல்லை.

எந்த சாதனத்தின் உதவியும் தேவை இல்லை.

செலவே இல்லை.

ஓடுவது, தாண்டுவது, குதிப்பது, புரள்வது போன்ற எந்த வித செய்கையையும் எடுத்துப் பார்த்தால் அதை விட மிக எளிதானது.

அதிர்ச்சி விளைவு எனப்படும் Shock Impact ஐ எடுத்துக் கொண்டு பார்த்தால் அது ஓடுகின்ற போது ஓடுபவரின் எடையை விட 3 அல்லது நான்கு மடங்கு கூட இருக்கிறது.

ஆனால் நடப்பவருக்கோ இந்த அதிர்ச்சி விளைவு ஒன்றரை மடங்கு மட்டுமே இருக்கிறது.

பேஸ்கட் பால் போன்ற இதர விளையாட்டுக்கள் உடல் எடையைப் போல ஏழு மடங்கு அதிகமாக இந்த ஷாக் இம்பேக்டைத் தருகிறது.

 

 

4

நடைப் பயிற்சி உங்கள் உடலுக்கு உகந்தது. எளிமையானது.

ஓடினால் ஏற்படக்கூடிய அதே எடைக் குறைவை இதுவும் நல்குகிறது!

ஒரு மணி நேரத்திற்கு ஐந்து மைல் என்ற வேகத்தில் நீங்கள் ஓடுவதாக வைத்துக் கொண்டால், 30 நிமிடங்களில் நீங்கள் 285 கலோரிகளை எரிக்க முடியும்.

ஒரு மணி நேரத்திற்கு நான்கு மைல் என்ற வேகத்தில் நீங்கள் நடப்பதாக வைத்துக் கொண்டால், அதே 30 நிமிடங்களில் நீங்கள் சமமான தரையில் (தளத்தில்) நடந்தால் 165 கலோரிகளை எரிக்க முடியும். சற்று சாய்வான தளத்தில் – அதாவது 5 % சாய்வில் – 225 கலோரிகளை எரிக்க முடியும்.

பத்து % சாய்வான தளத்தில் 360 கலோரிகளை எரிக்க முடியும்!

 

5

விலை உயர்ந்த வீடியோ சாதனங்களை வாங்க வேண்டாம்.

கம்ப்யூட்டர் புரோகிராம் எதுவும் தேவையில்லை.

தனி இடம் தேவை இல்லை.

ஆப்ஸ் எதுவும் தேவை இல்லை.

வழிகாட்டி – கையேடு – எதுவும் தேவையில்லை.

இயற்கையாக நடக்கலாம்.

சந்தோஷத்துடன் நடக்கலாம்.

உங்கள் விருப்பப்படி நடக்கலாம்.

உங்களுக்கு உகந்த நேரத்தில் நடக்கலாம்.

நடைப் பயிற்சியில் உங்களுக்கு உதவ, நன்மைகளை அதிகம் அடைய சில எளிய – அனுபவக் குறிப்புகள் உள்ளன.

அவை யாவை? இதோ பார்ப்போம்.

 

6

நடைப் பயிற்சியின் முழுப் பலனையும் அடைய Posture எனப்படும் தோற்ற அமைவு மிக முக்கியமானது.

தலையை நிமிர்த்தி வைத்துக் கொள்ளுங்கள்.

முதுகெலும்பை நேராக நிமிர்த்தி நடத்தல் வேண்டும்.

கைகளையும், தோளையும் சற்று தளர்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள்.

நேராகப் பார்வையைச் செலுத்துங்கள்.

அதற்காக எங்காவது குழியில் விழுந்து விடாதீர்கள். நமது சாலைகளைப் பற்றியும் பிளாட்பாரங்களில் ஆங்காங்கே இருக்கும் குழிகளையும் பற்றிச் சொல்லவே தேவையில்லை.

பள்ளங்களில் மாட்டிக் கொண்டு மருத்துவ  மனைகளுக்குச் சென்று விடக் கூடாது.

ஆகவே அவ்வப்பொழுது சாலை அல்லது பிளாட்பாரத்தின் கோலத்தை அல்லது அலங்கோலத்தையும் மதிப்பீடு செய்யத் தவறாதீர்கள்.

இது தவிர ஆங்காங்கே இருக்கும் சாலைத் தடைகள் – Road Blocks – பற்றியும் கவனம் கொள்ளுங்கள்.

*

ஆழ்ந்த மூச்சை சீரான இடைவெளியில் விடுங்கள்.

நடவுங்கள், ஓடாதீர்கள். அதாவது சுறுசுறுப்பான காலடிகளை எடுத்து வைக்க வேண்டும், அவ்வளவு தான்! வேகமான அடிகளை அல்ல!!

நீங்கள் தினமும் நடக்க ஆரம்பித்தவுடன் உங்களுக்கே நீங்கள் எப்படி நடக்கலாம் என்பது தெரிய வரும்.

மூச்சு விட சற்று சிரமமாக இருந்தால் மெதுவாக நடக்க ஆரம்பியுங்கள்.

 

*

உங்கள் உடல் தரும் செய்தியைக் கேளுங்கள்.

அட, பிரமாதமாக இருக்கிறதே, நடைப் பயிற்சி முடிந்தவுடன் ஒரு புதிய தென்பு, உற்சாகம் வந்து விட்டதே என்று நீங்கள் நினைத்தால் அது தான் நல்ல நடை!

சற்று வலியோ அல்லது அசதியோ அல்லது வசதிக் குறைவோ, உற்சாகமின்மையோ தோன்றினால் உங்கள் நடைப் பயிற்சியைச் சற்று மாற்றி அமையுங்கள்.

நீங்களே உங்களுக்கு நீதிபதி. அவ்வளவு தான்!

*

எப்படிப்பட்ட அடிகளை எடுத்து வைக்க வேண்டும்? சீரான, நீளமான காலடிகளை எடுத்து வையுங்கள். உங்கள் நடை பிரயத்தனமின்றி இயல்பான ஒன்றாக இருக்க வேண்டும்.

பகீரதப் பிரயத்னம் என்பது நடைப் பயிற்சியில் இல்லவே இல்லை.

கைகளை ஆட்டினால் அது உங்கள் உடல் பாலன்ஸை அனுசரித்து இருக்க வேண்டும்.

எதையும் வலியச் செய்ய வேண்டாம்.

 

அட, எளிய நடைப் பயிற்சியில் இவ்வளவு இருக்கிறதா, என்று நீங்கள் கேட்டால், இன்னும் நிறைய இருக்கிறது உபயோககரமான குறிப்புகள் என்ற பதில் தான் வரும்.

10000 காலடி நடைப் பயிற்சி என்று ஒன்று உண்டு.

பத்தாயிரம் காலடி நடைப் பயிற்சியா? அது என்ன?

அடுத்த இதழில் பார்க்கலாம்.

அது வரை, நடக்க ஆரம்பியுங்கள், குட் பை!

எல்லாவற்றிற்கும் மேலாக கட்டுரையின் ஆரம்ப வரி அற்புதமான ஒருவரின் அனுபவக் கூற்று.

ஆம், – ஹிப்போக்ரேடஸ் கூறியது அது: “நடைப் பயிற்சியே நல்ல மருந்து”

Rama walked for 14 years!

 

-தொடரும்

Address of Healthcare R.C.Raja, Editor  Healthcare, 10 Vaiyapuri nagar, Thirunelveli Town 627006 Yearly subscription Rs 120/

 

வள்ளலாரின் தமிழ்! (Post No.4711)

Date: 7 FEBRUARY 2018

 

Time uploaded in London- 7-51 am

 

WRITTEN  by S NAGARAJAN

 

Post No. 4711

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

 
(நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்; கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))

 

அருட்பா இரகசியம்

வள்ளலாரின் தமிழ்!

ச.நாகராஜன்

 

 

1

 

சமீப கால சரித்திரம் கண்ட ஒரு மாபெரும் மகான் வடலூர் வள்ளலார்.

தமிழை எனிய இனிய சொற்களால் எளிமைப் படுத்தி பழகும் தமிழில் ஞான தத்துவங்களையும் சாகாக் கலையையும், அனைவரும் உளமுருகத் துதிக்க வைக்கும் தோத்திரப் பாடல்களையும் அளித்து ஆச்சரியப்படுத்திய தமிழ்ச் சித்தர் அவர்!

முருகன் அவரை ஆட்கொண்டதால் அவன் அளித்த தமிழைக் கொண்ட தமிழாகரன் அவர்!

 

(உண்மையில் தமிழாகரன் என்ற பெயரை உடைய ஞானசம்பந்தரைத் தன் ஞான குருவாகக் கொண்டவர் ஆயிற்றே. அதனால் இவரும் தமிழாகரனைக் குருவாகக் கொண்ட தமிழாகரன் ஆகிவிட்டாரோ!)

 

அதாவது தமிழை உடலாகக் கொண்டவர்; உயிராகக் கொண்டவர்.

வள்ளலார்.

 

 

2

வள்ளலாரின் பாடல்களைத் தத்துவத்திற்காகவும், இனிமைக்காகவும், ஓசை நயத்திற்காகவும், வெவ்வெறு அணிகளுக்காகவும், பல உவமைகளுக்காகவும், பல ரகசியார்த்தங்களுக்காகவும், மருத்துவத்திற்காகவும், வாழ்முறை நெறிகளுக்காகவும், தமிழுக்காகவும் ஏன் சாகாக் கலையை அறியவும் பலமுறை படிக்கலாம்; படிக்க வேண்டும்.

அவரது வார்த்தை விளையாட்டுக்கள் மிகவும் சுவாரசியமானவை.

அதற்காகவும் ஒரு முறை படிக்கலாம்.

உதாரணத்திற்குச் சில பாடல்கள் இங்கே பார்க்கலாம்.

 

வெம்பு முயிருக் கோருறவாய்

வேளை நமனும் வருவானேல்

தம்பி தமையன் துணையாமோ

தனையர் மனைவி வருவாரோ

உம்பர் பரவுந் திருத்தணிகை

உயர்மா மலைமேல் இருப்பவர்க்குத்

தும்பக் குடலை யெடுக்காமல்

துக்க வுடலை எடுத்தேனே!

 

தொல்லைக் குடும்பத் துய்ரதனில்

தொலைத்தே னந்தோ காலமெலாம்

அல்ல லகற்றிப் பெரியோரை

யடுத்து மறியேன் அரும்பாவி

செல்வத் தணிகைத் திருமலை வாழ்

தேவா வுன்றன் சந்நிதிக்கு

வில்வக் குடலை யெடுக்காமல்

வீணுக் குடலை யெடுத்தேனே

 

அவல வயிற்றை வளர்ப்பதற்கே

அல்லும் பகலும் அதில் நினைவாய்க்

கவலைப் படுவ தின்றிசிவ

கனியைச் சேரக் கருதுகிலேன்

திவலை யொழிக்குந் திருத்தணிகைத்

திருமால் மருகன் திருத்தாட்குக்

குவளைக் குடலை யெடுக்காமல்

கொழுத்த வுடலை யெடுத்தேனே.

 

 

பாடலின் பொருள் நயம், ஓசை நயம், உருக வைக்கும் பக்தி நயம் பற்றி விளக்க உரையே வேண்டாம்,

வில்வக் குடலை எடுக்காமல் வீணுக்கு உடலை – வீணுக் குடலை எடுத்தேனே என்பதில் உள்ள நயம் அவர் தம் தமிழைக் காட்டும் இடம். தும்பைக் குடலை எடுக்காமல் துக்க உடலை எடுத்தேனே; குவளைக் குடலை எடுக்காமல் கொழுத்த உடலை எடுத்தேனே என்பதில் நாம் காணுவது வள்ளலாரை அல்ல; நம்மை நாமே காணும் இடமாக அமைகிறது.

 

3

இனி அவரது வார்த்தை விளையாட்டுக்கு இரு பாடல்களைப் பார்ப்போம்!

பகுதி தகுதி விகுதியெனும் பாட்டில்

இகலி லிடையே யிரட்டித் – தகவின்

அருச்சித் தான் முன்னா மதுகடையாங் கண்டீர்

திருச்சிற் சபையானைத் தேர்ந்து.

 

பாடலில் என்ன புரிகிறது? – திருச்சிற்சபையான் மட்டும் புரிகிறது.

மற்ற சீர்கள் சொல்லும் சிறப்பான செய்தி என்ன?

உதவிக்கு நாட வேண்டியவர் கிருபானந்தவாரியார் தான்!

அவரது உரை விளக்கம் படித்தால் உளமும் விளக்கம் அடைகிறது.

 

பகுதி, தகுதி, விகுதி

இந்த மூன்று வார்த்தைகளில் இடையெழுத்து – அதாவது நடுவில் வரும் எழுத்து எது? ‘கு’ ஆகும்.

இதை இரட்டியுங்கள் என்கிறார் அருளாளர்.

இரட்டித்தால் – அதாவது இருமுறை எழுதினால் வருவது

குகு, குகு, குகு!

அதாவது ஆறுமுறை ‘கு’ வருகிறது. அதாவது அறுகு (ஆறுமுறை ‘கு’வை அறுகு என்று தானே கூற வேண்டும். அதாவது அறுகம்புல்!)

 

முதலெழுத்துக்களைக் கூட்டினால் வருவது ப, த, வி.

பத முத்தி ஆகும்.

கடை எழுத்துக்களைக் கூட்டினால் தி, தி, தி. அதாவது மூன்று முறை ‘தி’ வருகிறது. முத்தி.

திருச்சிற்சபையானை அறுகம்புல்லால் அர்ச்சித்தால் பத முத்தியும் ஐக்கிய முத்தியும் சித்திக்கும் என்ற அரிய இரகசியத்தை இந்த புதிர்ப் பாடலில் அருளுகிறார் வள்ளலார்.

 

 

4

இன்னொரு பாடல்:

தாதாதா தாதாதா தாக் குறைக்கென் செய்குதும்யாந்

தாதாதா வென்றுலகிற் றானலைந்தோம் – போதாதா

நந்தா மணியே நமச்சிவா யபொருளே

யெந்தா யெனப் புகழவே.

 

என்ன பொருள், புரியவில்லையே!

கிருபானந்தவாரியார் சுவாமிகளை நாடுகிறோம்; பொருள் விளங்குகிறது.

ஏழு முறை தா வருகிறது; எழு முறை தா! அதாவது எழுதா!

எழுதாக் குறைக்கு என் செய்குதும்? தலையில் எழுதாக் குறைக்கு என்ன செய்வது?

 

தாதா – தாதா என்றால் தெரியுமே; ஆம் வள்ளல்!

மூன்று தா வருகிறது இரண்டாம் அடியில்!

தாதா, தா! வள்ளலே தா என்று அலைந்தோம். இப்படி அலைந்தது போதாதா?

இனியேனும் நந்தா மணியே, நமச்சிவாயப் பொருளே எந்தாய் எனப் புகழுங்கள்; வழிபடுங்கள்; வாழ்க்கையைச் சிறக்க அமையுங்கள்!

 

5

நமக்காகக் குறுகிய காலத்தில் ஆயிரக் கணக்கான பாடல்களை அருளியுள்ளார் வள்ளலார் பிரான் – அரிய இரகசியங்களை அடக்கி, இனிய தமிழில்!

 

கொஞ்ச நேரம் ஒதுக்குவோம்; அருட்பாவை ஓதுவோம்!.

என்னென்ன பயன்களைப் பெற முடியும் அருட்பாவைப் படித்தால்.

வாரியார் சுவாமிகளின் திருவருட்பா தொகுதி (1) -யைப் படித்தால் முதல் பக்கத்தில் முதல் பாடலிலேயே பதில் வருகிறது!

 

 

பத்தி வரும் பழவினைகள் பற்ந்தோடும்

மூல மலப் பகுதி மாயும்

புத்தி வரும் புலைகொலைகள் புறம்போகும்

ஆனந்தம் பொங்குஞ் சாந்த

முத்தி வரும் அழியாநன் மோக்கமுறு

முதுகடல்சூ ழுலகி லெல்லாச்

சித்தி வரும் இராமலிங்க தேசிகன்றன்

அருட்பாவைச் சிந்திப்போர்க்கே.

 

அருட்பெருஞ்ஜோதி தனிப் பெருங்கருணை!

***