

WRITTEN BY London swaminathan
swami_48@yahoo.com
Date: 2 OCTOBER 2019
British Summer Time uploaded in London – 18-15
Post No. 7046
Pictures are taken
from various sources; beware of copyright rules; don’t use them without
permission; this is a non- commercial, educational blog; posted in
swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits
per day for both the blogs 11,000.
எட்டாம் எண் விஷயங்களைத் தொடர்ந்து காண்போம்-
அஷ்டாங்க யோகம்
இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாஹாரம், தாரணை, யோகம், ஸமாதி
xxx
எட்டு வகை சிருஷ்டி
விபுதாஹா, பிதரஹ, அசுராஹா, கந்தர்வ அப்சரஸஹா,
யக்ஷ ரக்ஷாம்ஸி, பூதப்ரேத பிஸாஸாஹா, சித்த சாரண வித்யாதராஹா,
கின்னராதயஹ
xxx

எழுத்து பிறக்கும் எட்டு இடங்கள்-
மார்பு, நெஞ்சு, தலை, நாவின் அடிப்பாகம், ,பல், மூக்கு, உதடு, அண்ணம்.
இதைக் கூறும் சம்ஸ்கிருத ஸ்லோகம்–
அஷ்டௌ ஸ்தானானி வர்ணானாமுரஹ
கண்ட சிரசஸ்ததா ஜிஹ்வாமூலம் தந்தோஸ்ச
நாஸிகோஷ்டௌ ச தாலு ச
xxx

தமிழர்களின் ஆலோசனைக் குழு (சிலப்பதிகாரம் சொல்லும் எண்பேராயம்)
கரணத்தியலாவர்- கணக்கர்
கருமக்காரர்- செயலர்
கனகச் சுற்றம் – கருவூல ஆதிகாரி
கடைக் காப்பாளர்- அரண்மனைக் காவலர்
நகர மாந்தர் – முதியோர்
படைத்தலைவர் – காலாட்படைத் தளபதி
யானைவீரர் – யானைப்படையின் தலைவர்
இவுளி மறவர் – குதிரைப்படையின் தலைவர்
Xxx
செக்ஸ் SEX விஷயத்தில் எண் எட்டு
அஷ்டாங்க மைதுனம்
1.பெண்களை நினைத்தல்
2.பெண்கள் பற்றிப் பிதற்றல் (கனவிலும் நனவிலும்)
3.அவளுடன் விளையாடல்
4.அவளைச் சந்தித்தல்
5.அவளுடன் ரஹசியம் பேசுதல் (டெலிபோனிலோ, நேரிலோ),
6.அவளை அனுபவிப்பதாக நினைத்துப் பார்த்தல்,
7.அதற்காக முயற்சித்தல்,
8.ஏனைய கடமைகளை அறவே மறத்தல்
இதைச் சொல்லும் சம்ஸ்க்ருத ஸ்லோகம்–
ஸ்மரணம் கீர்த்தனம் கேலிஹி ப்ரேக்ஷணம் குஹ்ய பாஷணம்
சங்கல்போ அத்யவசாயஸ்ச க்ரியா நிஷ்பத்திரேவ ச
Xxx

எட்டுத் தொகை
சங்க கால இலக்கியம் 18 நூல்களைக் கொண்டது. சுமார் 30,000 வரிகள். இதில் இரண்டு தொகுப்புகள் உள. மிகப் பழைய படல்களின் தொகுப்பு எட்டுத் தொகை என்றும், பின்னர் வந்தவை பத்துப் பாட்டு என்றும் தொகுக்கப்பட்டுள்ளது.
அவற்றில் எட்டுத்தொகையில் உள்ள எட்டு நூல்கள்-
நற்றிணை – 175 புலவர்கள் பாடிய பாடல்கள்
குறுந்தொகை – 205 புலவர்கள் பாடிய பாடல்கள்
ஐங்குறுநூறு – 5 புலவர்கள் பாடிய பாடல்கள்
பதிற்றுப்பத்து – 10 புலவர்கள் பாடிய பாடல்கள்
பரிபாடல் – 13 புலவர்கள் பாடிய பாடல்கள்
கலித்தொகை – 5 புலவர்கள் பாடிய பாடல்கள்
அகநானூறு – 145 புலவர்கள் பாடிய பாடல்கள்
புற நானூறு – 165 புலவர்கள் பாடிய பாடல்கள்
ஒரே புலவர் பல நூல்களிலும் பல பாடல்களைப் பாடியிருக்கின்றனர்.
எட்டு நூல்களையும் எளிதில் நினவிற்கொள்ள ஒரு பாடல் உண்டு-
நற்றிணை நல்ல குறுந்தொகை யைங்குறுநூ
றொத்த பதிற்றுப்பத்தோங்கு பரிபாடல்
கற்றறிந்தார் சொல்லுங் கலியோடகம்புறமென்
றித்திறத்த வெட்டுத் தொகை
Xxx
அவையோர்க்கான பண்புகள் 8–
நற்குடிப்பிறப்பு, கல்வி, ஒழுக்கம், வாய்மை, தூய்மை, நடுவுநிலைமை, அழுக்காறாமை, தன்னலமின்மை.
—Subham —
























































































