இளம் பெண்களும், கிழட்டு கணவன்மார்களும்! (Post No.2752)

women9

Translated  by London swaminathan

Date: 24 April 2016

 

Post No. 2752

 

Time uploaded in London :– 12-15

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

woman mirror2
பெண்கள் பற்றிய 150 சம்ஸ்கிருதப் பழமொழிகள்- பகுதி 6

87.உயர்குலப் பெண்களின் மனது பூப்போல மென்மையானது

புரந்த்ரீணாம் சித்தம் குசும சுகுமார ஹி பவதி –உத்தம ராம சரிதம்

Xxx

88.காதல் வயப்பட்ட, உயர்குலப் பெண்களின் மனது, புரிந்து கொள்ளமுடியாதது.

புரந்த்ரீணாம் ப்ரேம  க்ரஹிலம் அவிசாரம் கலு மம: –கௌமுதீ மித்ரானந்த

Xxx

89.ஒரு பெண்ணுக்கு கணவனின் மரணம்தான் முதல் அடி.

ப்ரதமம் மரணம் நார்யா  பர்துர் வைகுண்யம் உச்யதே- வால்மீகி ராமாயணம்

Xxx

90.அடாவடியான பெண்களுக்கும் கூட, கணவன் மீது கோபம் கொள்ள சரியான காரணம் தேவைப்படுகிறது.

ப்ரபவந்த்யோபி ஹி பர்த்ருஷு காரண கோபா: குடும்பின்ய: — மாளவிகாக்னிமித்ரம் 1-18, காளிதாசன்

Xxx

91.மனைவியர் , கணவன்களைப் பின்பற்றுவதை முட்டாள்களும், அறிவர்.

ப்ரதமா: பதிவர்த்மகா இதி ப்ரதிபன்னம் ஹி விசேதனைரபி – குமார சம்பவம் 4-33, காளிதாசன்

Xxx

92.கணவனின் அன்பு குறையும்போது, பெண்கள் பெருமூச்சு விடுகிறார்கள்.

ப்ராணாஸ்தூர்ணம் ஹி நாரீணாம் ப்ரியப்ரணயதானவே – ப்ருஹத் கதா மஞ்சரி

Xxx

 

women23

93.வயதான கணவர்களை, அழகான இளம் பெண்கள், திறமையாக சமாளிக்கின்றனர்.

ப்ராய: ப்ராகல்ப்யம் ஆயாந்து தருண்ய: ஸ்தவிரே வரே- ராமாயண மஞ்சரி

Xxx

94.புதல்வியரின் விஷயங்களை மனைவியின் கண்கள் ஊடாகவே கணவர்கள் காண்கின்றனர்.

ப்ராயேண க்ருஹிணீ நேத்ரா: கன்யார்தேஷு குடும்பின: -– குமார சம்பவம், 6-85, காளிதாசன்

Xxx

 

95.காதல் வயப்பட்ட கணவனுக்கு, மனைவியின் கெட்டபுத்தியும் கண்ணுக்குத் தெரிவதில்லை.

ப்ராயேண பார்யாத் ஔசீல்யம்  ஸ்நேஹாந்தோ நேக்ஷதே ஜன: – கதாசரித் சாகரம்

Xxx

96.உயிரையும் விட மேலானவள் மனைவி.

பார்யா ப்ராணேப்யோ அபி அதிகப்ரியா– கதாசரித் சாகரம்

Xxxx

97.பார்யா ரூபவதீ சத்ரு: – சாணக்யநீதி 9-12

அழகான மனைவி – ஒரு எதிரி

Xxx

98.துன்பப்படும் அனவருக்கும் மூத்த சகோதரரின் மனைவி, தாயாராகி விடுகிறார்.

ப்ராத்ருஜாயா ஹி சர்வேஷாம்  தீனானாம்  வாமலோசனா – கஹாவத்ரத்னாகர்

Xxx

99.உங்கள் மனைவியைக் காப்பாற்றுவதுபோல, மாற்றார் மனைவியருக்கும் பாதுகாப்பு அவசியம்.

யதா தவ ததா அன்யேஷாம் தாரா ரக்ஷ்யா – வால்மீகீ ராமாயணம் 5-21-8

Xxx

100.மனைவியர் இருக்கும் வரை, வேலைகளும் இருக்கத்தான் செய்யும்

யாவத் க்ருஹிணீ, தாவத் கார்யம்- கஹாவத்ரத்னாகர்

Xxx

IMG_3350

101.சக்களத்தி என்பவள், துன்பத்தின் ஊற்று

சபத்னீ சர்வதா சிந்த்யா — கதாசரித் சாகரம்.

Xxx

102.காதல் நோய்க்கு அருமருந்து, காதலியின் – அமுதம் போன்ற அணைப்புதான்.

ஸ்மர ஜ்வர சிகித்சா ஹி தயித ஆலிங்கன அம்ருதை: – ப்ருஹத் கதா மஞ்சரி

Xxx

103.வெண்சாமரம் போன்ற ப்ரகாசமான, புன்னகை மிளிரும் அன்புள்ள மனைவியை யார்தான் போற்றமாட்டார்?

ஸ்மேர சாமர  ஹசின்ய: வல்லபா: கஸ்ய ந ப்ரியா:? – பாரத மஞ்சரி

–சுபம்–

 

மரியாதைக்குரிய ஐந்து(5): மனு அறிவுரை (Post No.2749)

IMG_5163 (2)

Translated  by London swaminathan

Date: 23 April 2016

 

Post No. 2749

 

Time uploaded in London :– 9-39 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

IMG_3259

1.வித்தம் பந்துர்வய: கர்மவித்யா பவதி பஞ்சமீ

ஏதானி மானஸ்தானானி கரீயோ யத்யதுத்தரம்

மனு ஸ்மிருதி 2-136

 

வித்தம் – பணம்/செல்வம்

பந்து- உறவினர்

வய: – வயது

கர்ம- ஒருவனுடைய தொழில்

வித்யா – கற்ற கல்வி/அறிவு

இந்த வரிசையைக் கவனியுங்கள். கடைசியில் மனு அழகாக முடிக்கிறார். முதலில் சொன்னதைவிட அடுத்தது மிகவும் முக்கியமானது. அதாவது பணத்தை விட உறவினர், உறவினரைவிட வயது, வயதைவிட ஒருவனுடைய கடமை/தொழில், அதைவிட ஒருவன் கற்ற கல்வி. அதாவது கல்விக்கும் அறிவுக்கும்தாம் முக்கியத்துவம்.

 

Xxx

 

IMG_3203

2.பூஜிக்கத் தக்க 5 பேர்

2.பஞ்சைவ பூஜயன்  லோகே யச:  ப்ராப்னோதி கேவலம்

தேவான் பித்ரூன் மனுஷ்யாஞ்ச  பிக்ஷூனதிதி பஞ்சமான்

–விதுரநீதி 1-80

 

தேவா: – கடவுள்

பித்ரு – முன்னோர்கள் (நீத்தார்)

மனுஷ்யா: – மனிதர் (மனிதனாக வாழும் மனிதன்; சிலர் மிருகம் போலவும் வாழ்கின்றனர்  அன்றோ!)

பிக்ஷு- சாது, சந்யாசிகள்

அதிதி – விருந்தினர்

Xxxx

 

3.யார் யாருக்கு விருது/பட்டம்/பரிசு கொடுத்து கௌரவிக்க வேண்டும்?

3.பூஜ்யா வித்யாபுத்திபௌருஷாபிஜனகர்மாதிசயதஸ்ச புருஷா:

–அர்த்தசாஸ்திரம் 3-20-23

வித்யா- கல்வியில் தேர்ச்சி பெற்றோர்

புத்தி- புதிய கண்டுபிடிப்புகள்; யோஜனைகள் சொன்ன புத்திமான்கள்

பௌருஷ – வீரதீரச் செயல் புரிந்தோர்

அபிஜன – உயர்குலத்தில் பிறந்தோர் (அறிஞர்கள், அரசர்களின் வாரிசுகள்)

கர்மாதிசய: – அற்புதப்பணியாற்றுவோர் (கின்னஸ் சாதனை போல சாதனை புரிவோர்)

Xxxx

IMG_4859 (2)

4.நன்கு கவனிக்கப்படவேண்டிய/உபசரிக்கப்பட வேண்டிய 5 பேர்

4.அதிதிர்பாலக: பத்னீஜனனீ ஜனகஸ்ததா

பஞ்சைதே க்ருஹிண: போஷ்யா இதரே ச  ஸ்வ சக்தித:

–சுபாஷித ரத்ன பாண்ட்காரம் 157/206

அதிதி – விருந்தினர்

பாலகா: – பாலர்கள் (சிறுவர், சிறுமியர்)

பத்னீ – மனைவி

ஜனனீ – தாயார்

ஜனக: – தந்தை

IMG_4545

–சுபம்–

 

 

சுவையான சுருட்டு சம்பவங்கள்: எடிசன், மாக்ஸ்முல்லர், டென்னிசன் (Post No. 2746)

1992-tennyson-present

Translated  by London swaminathan

Date: 22 April 2016

 

Post No. 2746

 

Time uploaded in London :–  9-39 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

610-Max-Mueller-India-Stamp-1974-225x300

புகழ்பெற்ற ஆங்கிலக் கவிஞர் ஆல்ப்ரெட் லார்ட் டென்னிசன் பற்றி பிரபல கீழ்திசை இயல் அறிஞர் மாக்ஸ்முல்லர், கீழ்கண்ட சுவையான சம்பவத்தைக் கூறுகிறார்:

“நான் நண்பர்கள் சிலருடன் டென்னிசன் வீட்டில் தங்கியிருந்தேன். டென்னிசன் எப்போதும் புகைபிடிப்பார். அவரால் புகைபிடிக்காமல் இருக்க முடியாது. ஒருநாள் சுருட்டு பிடிக்கும் பழக்கம் பற்றி காரசார விவாதம் நடந்தது. எல்லோரும் டென்னிசனை கிண்டல் செய்தனர்.

இந்த ஆள் கையில் சுருட்டு இல்லாமல் வாழவே முடியாது என்றனர்.

உடனே ‘யாராவது ஒருவர் எதையாவது நினைத்தால் அதைச் செய்ய முடியும்’ என்றார் புலவர்.

ஐயா, புலவர் டென்னிசன் அவர்களே! அதெல்லாம் உறுதியான ஆளுக்குதான். உம்மைபோல வழவழா கொழகொழா பேர்வழிகளால் அதெல்லாம் முடியவே முடியாது என்று நக்கல் செய்தனர்.

 

டென்னிசனுக்கு ஒரே கோபம். இதோ பார்! செய்து காட்டுகிறேன் என்று ஜன்னல் வழியாக புகையிலை பாக்கெட்டையும் அதை வைத்து ஊதும் குழாயையும் (பைப்) தோட்டத்தில் எறிந்தார். எல்லோரும் திகைத்து நின்றனர். ஒன்றும் பேசவில்லை.

மறுநாள் டென்னிசன் மிகவும் உற்சாகமக வேலைகளைச் செய்தார். இரண்டாம் நாள்,திடீரென் ‘மூட்’ அவுட்டானது; பிறகு வழக்கம்போலக் காணப்பட்டார்.

மூன்றாம் நாள் டென்னிசன் பித்துப் பிடித்தவர் போல இருந்தார். அடக் கடவுளே! டென்னிசனை இப்படி பகடி செய்திருக்க வேண்டாமே என்று எண்ணி நண்பர்கள் வருந்தினர். ஆனால் யாருக்கும் மீண்டும் இது பற்றிப் பேசவே அச்சம்.

 

அன்று காலையில் டென்னிசன் திடீரென்று தோட்டத்துக்குள் நுழைந்தார். தூக்கி எறிந்த புகையிலை பாக்கெட்டையும் பைப்பையும் (சிகார் குழாய்) சேகரித்தார். வழக்கம் போல புகைபிடித்தார்.

ஆனந்தம்; பரமானந்தம்.

எல்லோரும் கப்பு சிப்பென்று அவரவர் வேலையைப் பார்த்தனர். “சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்தானாம் ஆண்டி” – என்று எதையும் செய்ய விரும்பவில்லை.

“தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்” — என்ற பழமொழி சரியாய் போனது.

 

Xxx

Thomas-Alva-Edison

முட்டைக்கோசு இலை சுருட்டு!

பிரபல கண்டுபிடிப்பாளர் தாமஸ் ஆல்வா எடிசன் வாழ்வில நடந்த சுவையான சுருட்டு சம்பவம்:–

 

தாமஸ் ஆல்வா எடிசன் விலையுயர்ந்த, பிரபல ஹவானா (கியூபா புகையிலை) சுருட்டுகளைப் பிடிப்பது வழக்கம். அவர் அறைக்குள் வரும் நண்பர்கள் அனைவரும் அதைக் கைப்பிடி எடுத்து பாக்கெட்டுக்குள் திணித்துக் கொள்வர். அவருக்கோ சொல்லவும் முடியவில்லை; மெல்லவும் முடியவில்லை.

இது பற்றி அவருடைய நண்பர் கேரியுடன் அங்கலாய்த்தார்.

“அட! இது என்ன கஷ்டம்! எல்லாவற்றையும் ஒளித்து வையுங்கள்; அப்பத்தான் உங்கள் நண்பர்களுக்குப் புத்தி வரும்” என்றார் கேரி.

“அதுதானே முடியவில்லை. இதெல்லாம் எங்கே ஞாபகத்துக்கு வருகிறது? இன்னொரு சுவையான விஷயத்தைச் சொல்லுகிறேன் கேள்” என்று தொடர்ந்தார் எடிசன்

“என் செயலாளர் ஜான்சனை உனக்குத் தெரியுமில்லையா?அவர் அருமையான ஒரு தந்திரம் செய்தார். அவருக்கு சுருட்டு கம்பெனி நண்பர் ஒருவர் இருந்தார். அவரிடம் சொல்லி, என் நண்பர்களுக்குப் பாடம் கற்பிக்க, ஒரு விநோத சுருட்டு செய்யச் சொன்னார். நானும் இது பிரமாதமான ஐடியா என்று புகழ்ந்தேன். அதாவது, முட்டைக்கோசு இலையைக் காய வைத்து அதை பழுப்பு/ பிரவுன் காகிதத்தில் சுருட்டு போலச் செய்துவைப்பது. (அந்தக் கண்றாவியைச் சுவைத்துவிட்டால் மீண்டும் தன் நண்பர்கள் சுருட்டு பக்கமே வரமாட்டார்கள் என்று எடிசன் நம்பினார்.)

 

கொஞ்ச காலம் ஆயிற்று; வழக்கம்போல விலையுயர்ந்த சுருட்டுகள் காணாமற்போய்க் கொண்டேயிருந்தன. திடீரென்று முட்டைக்கோசு இலை சுருட்டு ஞாபகத்துக்கு வந்தது. உடனே அந்த நண்பரைத் தொடர்பு கொண்டு, “என்ன ஆயிற்று நம் திட்டம். எப்போது புதுவகை சிகரெட்டுகளை அனுப்பப் போகிறீர்கள்?” என்றேன்.

நாம் ரொம்ப நாளைக்கு முன்னரே அனுப்பிவிட்டேனே! என்றார் அவர்.

உடனே நான் என் மானேஜரைக் கூப்பிட்டு எங்கே அந்த சுருட்டுகள்? என்றேன்.

 

Thomas-Alva-Edison-

என் மானேஎஜர் சொன்னார்: ஒரு பார்சல் வந்தது. நீங்கள் கலிபோர்னியா செல்லுகையில் அதை உங்கள் கைப்பைக்குள் வைத்துவிட்டேனே என்றார்.

கேரி, என்ன நடந்தது தெரியுமா? அந்த சனியன் பிடித்த முட்டைக்கோசு சுருட்டுகள் முழுதையும் நானே குடித்துத் தீர்த்திருக்கிறேன்!!

(நண்பர்களை முட்டாளாக்க நினைத்த தாமஸ் ஆல்வா எடிசன் தானே முட்டாளானார்!)

–சுபம்–

 

‘வீரர்களின் மனைவியர் வருந்துவதே இல்லை’—வால்மீகி (Post No 2744)

IMG_4384

Compiled  by London swaminathan

Date: 21 April 2016

 

Post No. 2744

 

Time uploaded in London :– 13-51

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

மனைவி- பார்யா பற்றிய பொன்மொழிகள்

பெண்கள் பற்றிய 150 சம்ஸ்கிருதப் பழமொழிகள்- பகுதி 5

dance in shade

67.அடுத்தவன் மனைவி பற்றி விமர்சிப்பது பண்புடையாளர் செயலன்று

-சாகுந்தலம், காளிதாசன்

அநார்ய: பரதார வ்யவஹார:

Xxxx

68.மற்றவர் மனைவியை கூர்ந்து கவனிப்பது தவிர்க்கப்பட வேண்டியது

-சாகுந்தலம், காளிதாசன்

அநிர் வர்ணனீயம் பர  களத்ரம்

Xxxx

69.மனைவி என்பவள் அணுசரணையாக இருக்க வேண்டும்.

–க்ரந்தஸ்தகாதகாகு

அனுகூல ரசா பார்யா

Xxxx

70.மனைவி இல்லாத வீடு சூன்யமானது

(இல்லாள் இல்லாவிடில் அது வீடு இல்லை)

–கதா சரித் சாகரம் (கதைக்கடல்)

அபார்யம் ஹி சூன்யம் க்ருஹபதேர்க்ருஹம்

Xxxx

 

bob painting 5

71.கணவனின் அரைப்பகுதி மனைவி (ஆணில் பாதி பெண்)

அர்தம் பார்யா மனுஷ்யஸ்ய

Xxxx

72.மனைவி என்பவள் உலோகத்தால் செய்யப்படாத ஒரு தளை (கைவிலங்கு)

-சாணக்ய நீதி சாஸ்த்ரம்

அலோஹமயம்  நிகடம் களத்ரம்

Xxxx

73.கட்டுபடாத மனைவி  எதிரி

-சாணக்ய நீதி

அவிநீதா ரிபு: பார்யா

Xxxx

74.மனைவியின் காம வலையில் விழுந்த கணவன், சாவையும் பொருட்படுத்தான்

–பாரத மஞ்சரி

காந்தா கடாக்ஷ ஹ்ருஷ்டோ ஹி ந வேத்தி மரணம் ஜன:

Xxxx

75.க்ரியாணாம் கலு தர்ம்யாணாம் சத்பத்ன்யோ மூல காரணம்

–குமாரசம்பவம், காளிதாசன்

அறப்பணிகள் அனைத்துக்கும் வேர் போன்றவர் நல்ல மனைவிமார்களே.

Xxxx

 

IMG_4360

76.கணவனுடைய அன்பினால், உறவினர்களையும் விட்டுவிடுவர் பெண்கள்.

த்ருணம் பாந்தவபக்ஷோ ஹி பர்த்ருஸ்நேஹேன யோஷிதாம்

—-பாரத மஞ்சரி

Xxxx

77.இல்லாள் இருப்பதால்தான் அதை இல்லம் என்கிறோம்.

ந க்ருஹம் க்ருஹம் இதி ஆஹு: க்ருஹீணீ க்ருஹம் உச்யதே

–பஞ்சதந்திரம்

Xxxx

78.மனிதனுடைய மனைவி ராக்ஷசன் மனைவியாக இருக்க் வாய்ப்பில்லை

ந மானுஷீ ராக்ஷசஸ்ய பார்யா பவிதும் அர்ஹதி

–வால்மீகி ராமாயணம், 5-24-8

Xxxx

79.அடுத்தவன் மனைவியைப் பார்ப்பது (உற்று நோக்குவது) அறநெறியன்று.

–ம்ருச்சகடிக, சூத்ரகர்

ந யுக்தம் பர களத்ர தர்சனம்

Xxxx

80.காதலனைக் காணப் போகும் பெண்ணை யாரும் தடுத்து நிறுத்த முடியாது.

ந சக்யாஹி ஸ்த்ரியோ ரோத்தும் ப்ரஸ்திதா தயிதம் ப்ரதி

—-ம்ருச்சகடிக, சூத்ரகர்

 

Xxxx

 

 

81.வீரர்களின் மனைவியர் வருந்துவதே இல்லை

–வால்மீகி ராமாயணம் 4-24-43

ந சூர பத்ன்ய:பரிதேவயந்தி

Xxxx

82.சுயமரியாதையுள்ள பெண்கள், தனது கணவன், மற்ற பெண்களுடன் நெருக்கமாக இருப்பதை விரும்புவதில்லை

ந சஹந்தே ஹி மானின்ய: பத்யுர் அன்யா சமாகமம்

-ப்ருஹத் கதா மஞ்சரி

Xxxx

 

IMG_4508

83.கணவன் மீது பற்றுடைய பெண்கள், அவர்களின் கணவரின் அன்புவலைக்குள் வேறு யாரும் வருவதை சகிப்பதில்லை.

ந சஹந்தே ஹி  ராகிண்யோ பர்து: ப்ரேமபதம் ஜனம்

—ப்ருஹத் கதா மஞ்சரி

Xxxx

84.சக்களத்திகளுடன் பெண்கள் போட்டி போடுவது நிரூபிக்கப்பட்ட உண்மையே

–கதா சரித் சாகரம்

நிசர்கசித்தோ நாரீணாம் சபத்னீஷு ஹி மத்சர:

Xxxx

 

85.கணவன் இல்லாமல் ஒரு பெண் வாழ்வது மிகவும் கடினம்

–வால்மீகி ராமாயணம், 2-29-7

பதிஹீனா து யா நாரீ ந, சாசக்ஷ்யதி ஜீவிதும்.

Xxxx

86.கடும் கஷ்டத்திலும் மனைவியை யார் கைவிடுவான்?

பராபவே அபி டாராணாம் உபேக்ஷாம்க்ஷமதே நு க:?

–பாரத மஞ்சரி

IMG_4885 (2)

 

–சுபம்–

 

 

கவிதைச் சித்தன் கும்மாளம்! (Post No.2743)

IMG_3286

Compiled  BY S NAGARAJAN

Date: 21 April 2016

 

Post No. 2743

 

 

Time uploaded in London :–  9-15  AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

தமிழ் என்னும் விந்தை

கவிதைச் சித்தன் கும்மாளம்!

புலவர் குடந்தை வேலன்

.நாகராஜன் (எனது நோட்புக்கிலிருந்து)

 

கவிஞன் ஒருவனின் கும்மாளத்தைச் சித்தரிக்கும் கவிதை ஒன்று இது.
இது போன்றதொரு கவிதையை யாரும் பார்த்திருக்க முடியாது; படித்திருக்க முடியாது.

 

‘கவிஞராக’ என்ற புத்தகத்தில் அ.கி,பரந்தாமனார் எடுத்துக்காட்டாகத் தந்த இந்த ‘கவிதைச் சித்தன் கும்மாளம்’ என்ற கவிதை எனது நோட்டுப் புத்தகத்தில் பல ஆண்டுகளுக்கு முன்னால் குறித்து வைக்கப்பட்டிருந்தது. ஆனால் அது செல்லரித்துப் போன நிலையில் எனது சகோதரர் திரு சீனிவாசன் திடீரென்று அது கிடைத்து விட்டதாககக் கூறி தனது குறிப்பேட்டிலிருந்து அதை போட்டோ பிடித்து அனுப்பி இருந்தார்.

 

இதை எழுதியவர் குடந்தை வேலன். இவரைப் பற்றிய குறிப்புகள் எதுவும் இல்லை. ஆனால் அற்புதமான கவிஞர் இவர் என்பதில் ஐயமே இல்லை. கவிதையைப் படித்தோர் கும்மாளம் போட்டுச் சொல்லும் உண்மை இது.

நல்ல கவிதை கிடைத்து விட்ட மகிழ்ச்சியில் அதை இங்கு பகிர்கிறேன்.

 

கவிதைச் சித்தன் கும்மாளம்!

எழுதியவர் குடந்தை வேலன்

 

கல்லொடு கல்லினைத் தட்டிக் களைத்திடுங்

கற்றறி மூடர்களே – ஒரு

சொல்லொடு சொல்லினைத் தட்டி நெருப்பொடு

சூளை கிளப்பிடுவோம்

 

ஆனையைப் பானையில் மூடி வைப்போமந்த

அண்டப் பெருவெளியும் – மிகக்

கூனிக் குறுகியெம் சொல்லெனும் மாயக்

குடுக்கையில் நின்றாடும்

 

வெண்ணெயை வைத்திட்டு நெய்க்கு அலைந்திடு

வீணர்களே வாரும் – இந்த

மண்ணில் இருக்குது விண்ணுலகம் எங்கள்

மந்திரத்தில் பாரும்

 

சப்பி எறிந்திட்ட கொட்டையில் மாமரம்

சட்டென ஓங்குது பார் – எழில்

சிப்பியில் முத்தெனச் சொல்லினில் வையச்

சிலிர்ப்பு கிளம்புது பார்

 

ஐந்தலைப் பாம்பையும் ஆட்டிப் பிடித்தே

அடக்கி மடக்கிடுவோம் –கர்ம

சிந்தையில் சீறிடும் அஞ்சு புலன்களைச்

சிந்தில் ஒடுக்கிடுவோம்

 

வானத்தில் வில்லை வளைத்திடுவோம் அந்த

மண்ணைச் சுருட்டிடுவோம் பர

மோனத்தை ஞானத்தளையில் பிடித்தே

மூப்பில் ஆழ்த்திடுவோம்

IMG_4972

நச்சினைத் தேனென்று மாந்திடுவோம் இசை

ஞான நடம் புரி கொள்வோம் –அந்த

அச்சிவ சங்கரன் நச்சை அயின்றதும்

அற்புதம் அற்புதமோ

 

வேதக்குயவன் வனைந்திட்ட மட்குடம்

வீழ்ந்தே  உடைந்ததடா –யாம்

நாதக்குழம்பில் புனைந்திட்ட சொற்கடம்

ஞானம் முழங்குதடா

(சொற்கடம் என்பதை சொற்கள் தம் எனப் பிரிக்க வேண்டும்)

 

என்ன ஒரு அருமையான கவிதை! இது போலொரு கவிதையை நான் கவிக் கூற்றாக எந்த ஒரு மொழியிலும் படித்ததில்லை.

 

இதை இயற்றியவரைப் பற்றிய குறிப்புகள் இல்லையே என மனம் ஏங்குகிறது.

 

அவரது இதர கவிதைகள் எப்படிப்பட்டவையாக இருக்கும் என்பதையும் மனம் சிந்தித்து உவகை கொள்கிறது!

*****

 

 

‘கேக்’கில் சின்ன ‘s’ ஸும், பெரிய ‘S’ ஸும்! கஸ்டமர் கலாட்டா! (Post No.2739)

s cake

Compiled by London swaminathan

Date: 19 April 2016

 

Post No. 2739

 

Time uploaded in London :– 14-40

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

Eccentricity Anecdotes

 

கிறுக்குத்தனம், பைத்தியக்காரத்தனம் பற்றிய நிகழ்ச்சிகள்

 

தீ! தீ! — ஆங்கிலப் புலவர் வீட்டில் கூச்சல்

gray

தாமஸ் கிரே என்பவர் புகழ் பெற்ற ஆங்கிலக் கவிஞர்களில் ஒருவர். அவருக்கு தீ என்றால் பயம்—அதாவது பைரோ போபியா! யாராவது அந்த தீ, நெருப்பு என்ற வார்த்தைகளைச் சொன்னால் அந்த சொல்லே அவரைச் சுட்டது போல எண்ணுவார். இந்த புது வகை பயத்தினால் அந்த “முன் ஜாக்கிரதை முத்தண்ணா” தனது வீட்டில் தக்க ஏற்பாடுகளைச் செய்து வைத்திருந்தார்.

 

அவரது வீட்டு ஜன்னலில் இருந்து ஒரு ஏணி தொங்கும். அது  கயிற்றினாலான ஏணி. அதன் ஒரு முனை ஜன்னலில் துவங்கி மறு முனை ஒரு தண்ணீர்த் தொட்டியில் முடியும். ஒரு வேளை தனது துணிகளும் தீப்பற்றி, ஏணியும் தீப்பற்றினாலும் தண்ணீர்த் தொட்டிக்குள்தானே விழுவார்! அவ்வளவு கன கச்சிதமான ஏற்பாடு.

 

சில குறும்புக்கார இளைஞர்களுக்கு கிரே அவர்களின் பயம் குறித்து தெரியும். ஒரு நாள் இரவில் அவர் வீட்டு வாசலில் நின்று தீ! தீ! என்று கூச்சலிடவே, கவிஞர் கிரே, படுக்கையிலிருந்து தாவிக்குதித்து, கயிற்றேணியைப் பிடித்து, தர தரவென்று கீழே இறங்கி தண்ணீர்த் தொட்டியில் தொப்பென்று விழுந்தார்.

 

வீட்டுக் காவற்காரனும் கூச்சல் கேட்டெழுந்து யாரோ தண்ணீர்த் தொட்டியில் விழுந்த சப்தம் கேட்டதே என்று ஓடோடி வந்தார். நமது புலவர் பெருமகனார் கிரே, தொட்டிக்குள் மிதந்தவாறே, குளிரில் நடுநடுங்க தீ, தீ என்று கதறினார்.

 

காவற்காரருக்கு நிலைமை புரிந்தது. அவரை சமாதானப் படுத்தி, தீ விபத்து எதுவும் நடக்கவில்லை என்று சொல்லி, பத்திரமாக மாடிக்கு அழைத்துச் சென்று படுக்கை அறையில் கொண்டுவிட்டார்.

xxx

s

‘கேக்’கில் சின்ன ‘எஸ்’ஸும், பெரிய ‘எஸ்’ஸும்! கஸ்டமர் அலப்பறை!

 

பிறந்த நாள் ‘கேக்’ செய்துதரும் கடைக்குள் ஒருநாள், ஒரு வாடிக்கையாளர் நுழைந்தார். டிப், டாப்பாக உடைகள் அணிந்திருந்தார்.

 

“ஐயா ஒரு கேக் செய்ய வேண்டும் அதில் சின்னதாக ‘எஸ்’ என்று ஆங்கிலத்தில் பொறிக்க வேண்டும். இன்னின்ன அலங்கார பூ வேலைப்பாடுகள் செய்யவேண்டும்; நாளை மறுதினம் தயாராக இருக்க வேண்டும்” என்றார்.

கடை முதலாளி, “ஓ.கே. நாளை மறுதினம் வாருங்கள். எல்லாம் பிரமாதமாக செய்து வைத்திருக்கிறேன்” என்றார்.

ஆனால் ஒரு நாள் முன்னதாகவே, அந்த கஸ்டமர், மீண்டும் கேக் கடைக்குச் சென்று, நாளை வந்துவிடுகிறேன்; மறக்கமாட்டீர்களே? என்றார். உடனே கடைக்கார பையன், ஸார், உங்களுடைய ‘கேக்’கில் முக்கால் வாசி வேலை முடிந்துவிட்டது; இதோ பாருங்கள்” என்று கேக்கை எடுத்துக் காட்டினான்.

அந்த ஆள் கேக்கைப் பார்த்ததுதான் தாமதம்; உடனே கோபத்தில் சீறிப் பாய்ந்தார். ஆங்கிலத்தில் பெரிய ‘எஸ்’ பொறித்து விட்டீர்கள். நான் சின்ன ‘எஸ்’ அல்லவா பொறிக்கச் சொன்னேன்; காரியத்தைக் கெடுத்துவிட்டீர்களே! ஐயகோ!” என்று அலறினார். கடை முதலாளி ஓடிவந்தார்.

 

 

“ஐயா! மன்னித்துக்கொள்ளுங்கள். சின்னப் பிழை நடந்துவிட்டது. உங்களுக்கு டெலிவரி நாளைதானே வேண்டும்; கவலையே படாதீர்கள்; எல்லாம் கச்சிதமாக நீங்கள் சொன்னபடியே செய்துவைக்கிறேன்; நாளைக்கு வாருங்கள்” என்றார். அவ்வளவு ‘கஸ்டமர்’களுக்கும் முன்னால், இப்படிக் கத்திவிட்டுப் போனதால். முதலாளியே பக்கத்திலிருந்து ‘கேக்’கை அழகாக செய்து முடித்து அதன் மீது சின்ன ‘எஸ்’ பொறித்தார்.

 

 

மறு நாள், சொன்ன நேரத்தில் கஸ்டமர் (வாடிக்கையாளர்) வந்தார்; ‘கேக்’கைப் பார்த்தார். பிரமாதம் என்று சொல்லிவிட்டு பர்ஸிலிருந்து பணத்தை எடுத்துக் கொடுத்தார்.

முதலாளி கேட்டார்: இதை எங்கே டெலிவரி செய்ய வேண்டும்; முகவரியைக் கொடுங்கள் உடனே டெலிவரி செய்கிறேன்; அல்லது நீங்களே எடுத்துச் செல்வதானால், நல்ல பெட்டியில் வைத்து ‘பேக்’ செய்து தருகிறேன்” என்றார்.

அதற்கு அந்த கஸ்டமர் சொன்னார்;

“நோ! நோ! நான் இங்கேயே சாப்பிடத்தான், இந்த ஆர்டரைக் கொடுத்தேன்” என்று சொல்லிவிட்டு அங்குள்ள காப்பி டேபிளில் அமர்ந்து, கேக்கைச் சாப்பிடத் துவங்கினார்.

 

அடப் பாவிமகனே! இப்படி சாப்பிடுவதற்குத்தான் நேற்று சின்ன எஸ், பெரிய எஸ் என்று அலப்பறை செய்தாயா? என்று முதலாளியும் கடைப்பையன்களும் நினைத்தார்கள்; ஆனால் வெளியே சொல்லமுடியுமா?

Customer is always right — ‘கஸ்டமர் இஸ் ஆல்வேய்ஸ் ரைட்’ = வாடிக்கையாளரின் வாதம் எப்பொழுதும் பொருளுடைத்தே – என்பது மேல்நாட்டுக் கருத்து!

–சுபம்–

 

வீண் பகட்டும், டம்பமும், ஆடம்பரமும் பெண்களுக்கே அதிகம்? (Post No.2733)

girl in lotus pond

Translated by london swaminathan

Date: 17 April, 2016

 

Post No. 2733

 

Time uploaded in London :–14-36

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

நியூயார்க் நகர முனிசிபல் பெண்கள் லீக் தலைவி மிஸ் பிரான்ஸிஸ் கெல்லர், ஒரு விருந்துக்குச் சென்றிருந்தார். இவர், பெண்ணுரிமை இயக்கத்தவர் என்று தெரிந்து ஒருவர் ஒரு ‘காமெண்ட்’ அடித்தார். பெண்கள் வீண்பகட்டு, ஆடம்பரம், டம்பம் உடையவர்கள் என்று.

உடனே அவர் சொன்னார்: உண்மைதான் மறுப்பதற்கில்லை. பெண்கள் ஆடம்பரப் பிரியர்கள்தான். இதற்கு ஆயிரம் சாட்சியங்கள் உண்டு. அது சரி! இந்த அறையிலேயே மிகவும் அழகான ஒரு ஆண்மகன், ஏன் தனது ‘டை’ யை தப்பாக –முன் பின்னாக –அணிந்திருக்கிறார்? என்று ஒரு குண்டு போட்டார். அந்த அறையில் ஆறு ஆண்கள் இருந்தனர். அத்தனை பேரும் யாரும் பார்க்காதபடி, மெதுவாக, லாவகமாக, தன் கையை சட்டையின் காலருக்குப் பின்னால் நகர்த்தி தடவிப் பார்த்துக் கொண்டனர்.

 

அந்தப்பெண், ஒரு புன்னகையை நெளியவிட்டாள். (அத்தனை ஆண்களையும் ஒரு நிமிடத்தில் முட்டாளாக்கிவிட்டாள். யாரும் ‘டை’யை தப்பாக அணியவில்லை!)

Xxx

 

IMG_4507

டார்லிங்; அது பாவம் இல்லை; மிஸ்டேக்!

 

அயர்லாந்தின் தலைநகரான டப்ளினில் பாதிரியார் Fபாதர் ஹீலியிடம் ஒரு அழகான இளம் பெண் வந்தாள். பாவ மன்னிப்புக் கூண்டில் நின்றாள். அந்தப் பக்கம் பாதிரியார் அந்தப் பெண் செய்த பாவம் என்ன என்று அறிய காதை நீட்டினார்

“Fபாதர்! நான் பெரிய தப்பு செய்கிறேன். தினமும் கண்ணாடி முன் நின்று, நான்தான் மிக அழகான பெண் என்று நினைத்து கர்வமடைகிறேன். இந்தப் பாவத்தை மன்னியுங்கள்”.

பாதிரியார் சொன்னார்: இது பாவமில்லை. ஒரு தப்புக் கணக்கே!

(அந்தப் பெண்ணுக்கு ஏன்தான் கேட்டோம் என்று போய்விட்டது. அது வரை அழகி என்று எண்ணியிருந்தாள். பாதிரியாரோ பாவமில்லை.தப்பான அபிப்ராயமே/மிஸ்டேக் என்றார்)

Xxx

நான்தான் உலக மகா எழுத்தாளன்!

உலகப் புகழ் பெற்ற இதாலிய எழுத்தாளர் டி’அனன்சியோவுக்கு பிரான்ஸில் வசித்தபோது ஒரு கடிதம் வந்தது. “இதாலியின் புகழ்மிகு எழுத்தாளர்” என்று எழுதி அவர் பெயரை எழுதியிருந்தார் கடிதம் அனுப்பியவர்.

 

தபால்காரர், பெருமையாக, “பாருங்கள் உங்கள் விலாசத்தைக் கூட முழுக்க எழுதவில்லை. நீங்கள் அவ்வளவு புகழ் மிக்கவர். உங்களுக்கு கடித்தத்தைக் கொண்டுவந்துவிட்டேன்” என்றார்.

“அவர் நான் இதை வாங்க மாட்டேன். இது எனக்கல்ல” என்றார்.

தபால்காரருக்குப் புரியவில்லை.

“நான் உலக மகா எழுத்தாளன். இதில் இதாலியின் மிகப் புகழ்பெற்ற” — என்று மட்டுமே எழுதியிருக்கிறான். எடுத்துக் கொண்டு போ” – என்றார்.

(அத்தனை அகந்தை)

Xxx

 

rail station

நகர வாழ்வு!

அமெரிக்காவில் கிராமப்புறத்தில் வாழ்ந்த ஒரு ஏழை நன்கு படித்து நகரத்துக்குச் சென்று வங்கியில் சேர்ந்து மிகப் பெரிய பதவி பெற்று செய்திப் பத்திரிகையில் எல்லாம் படங்கள் வந்திருந்தன. சரி! நம் புகழ் திக்கெட்டும் பரவிவிட்டது நம் சொந்த கிராமத்துக்குச் சென்று எல்லோருக்கும் ‘ஹலோ’ சொல்லிவிட்டு வருவோம் என்று புறப்பட்டார். அவர் கிராமத்துக்கு ரயில் வசதி மட்டுமே உண்டு. விமானம் கிடையாது.

 

தன்னை வரவேற்க ஏராளமானோர் மாலை மரியாதைகளுடன் காத்திருப்பார்கள் என்று மனக்கோட்டை கட்டிக் கொண்டிருந்தார். ஊரும் வந்தது; ரயிலும் நின்றது. ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் ஈ, காகா இல்லை. அவருக்கு ஒரே ஆச்சரியம். சரி, ரயில் நேரத்தைத் தப்பாக நினைத்திருப்பாகள். கொஞ்சம் காத்திருப்போம் என்று காத்திருந்தார். பாவம்! யாரும் வரவில்லை. அந்த ரயில்வேஸ்டேஷன் போர்ட்டர் அவரிடம் வந்தான். உடனே அவன் ஏதேனும் வரவேற்பு பற்றி நல்ல செய்தி கொண்டுவந்திருப்பான் என்று ஆர்வத்துடன் அவனருகே போனார். அவன் கேட்டான்:

“என்ன ஸார், வெளியூருக்குக் கிளம்பிட்டீங்களா? எந்த ஊருக்குப் போறீங்க?”

 

–சுபம்–

 

பெண்களின் மனதும், ஆண்களின் அதிர்ஷ்டமும் கடவுளுக்கே தெரியாது! (Post No 2720)

viry 25

Translated by london swaminathan

Date: 13 April, 2016

 

Post No. 2720

 

Time uploaded in London :– 9-27 AM

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

பெண்கள் பற்றிய 150 சம்ஸ்கிருதப் பழமொழிகள்- பகுதி 4

viry 31

51.விஷம: ஸ்த்ரீணாம் ஈர்ஷ்யா விஷக்ருத: ஜ்வர: ——ப்ருஹத் கதா மஞ்சரி

பெண்களுக்குப் பொறாமையால் ஏற்படும் விஷ ஜுரம் அவர்களை கொடுமைப்படுத்தும்.

xxx

52.வ்ருத்தா நாரீ பதிவ்ரதா

–சாணக்யநீதி 7-17

வயதான பெண் பதிவிரதையே!

xxx

53.சைசவே பிது: ஆயத்தா: பரதந்த்ரய: சதா ஸ்த்ரிய:

–பாரத மஞ்சரி

குழந்தைப் பருவத்தில் தந்தை காப்பார்; பெண்கள் எப்போதும் பிறரால் காக்கப்படுவர்.

xxx

54.சகீஜன சித்த அனுவர்த்தி அபலா ஜன: பவதி –ம்ருச்சகடிகம்

தோழிகளின் மனதை ஒட்டியே பெண்கள் மந்து செல்லும்.

xxx

  1. ச அபராத் அபி ந இஹ ஸ்த்ரீ ஹந்தவ்யா சுத்த புத்திபி:

———ப்ருஹத் கதா கோச

ஒரு பெண் பயங்கரத் தவறு செய்திருந்தாலும், பெண்களைக் கொல்லவே கூடாது

xxxx

 

Viry Sy 6

56.ஸ்த்ரிய சரித்ரம் புருஷஸ்ய பாக்யம் தேவோ ந ஜானாதி குதோ மனுஸ்யா:

–சுபாஷித ரத்ன பாண்டாகார

பெண்களின் மனதையும், ஆண்களின் அதிர்ஷ்டத்தையும் கடவுளும்கூட அறிய முடியாது; மனிதர்கள் எம்மாத்திரம்?

xxx

57.ஸ்த்ரியோ ஹி ஸ்த்ரீஷு த்ருஸ்யந்தே சதா சம்பரிமார்கனே

–வால்மீகி ராமாயணம்

பெண்களையா தேடுகிறீர்கள்? கட்டாயம் ஒரு பெண்கள் கூட்டத்தில்தான் இருப்பாள் (அரட்டைக் கச்சேரி)

xxx

58.ஸ்த்ரீணாம் ந ச க்ஷண: யத்ர ந கதா  ஸ்வபராஸ்ரயா

–கதாசரித்சாகரம்

பெண்கள் தங்களைப் பற்றியோ, பிறரைப் பற்றியோ பேசாத நிமிடமே இல்லை.

xxx

59.ஸ்த்ரீணாம் பதி: ப்ராணா ந பாந்தவா:

–கதாசரித்சாகரம்

கணவனே கண்கண்ட தெய்வம்; உறவுகள் அல்ல

Xxx

 

  1. ஸ்த்ரீணாம் ப்ரியாலோகபலோ ஹி வேஷ: – குமாரசம்பவம்

தனது காதலனை மகிழ்விக்கவே ஒரு பெண், தன்னை அலங்கரித்துக் கொள்வாள்.

xxx

 

Viry Sy 21

  1. ஸ்த்ரீணாம் பர்த்தா ஹி தேவதா

–வால்மீகி ராமாயணம்

பெண்களுக்கு கணவனே கண்கண்ட தெய்வம்.

xxx

  1. ஸ்த்ரீணாம் யௌவனம் அத்ருவம்

–வால்மீகி ராமாயணம்

பெண்களின் இளமை (வனப்பு) அதிக காலம் நீடிக்காது.

xxx

63.ஸ்த்ரீணாம் ஹி சாஹசர்யாத் பவந்தி சேதாம்சி பர்த்ரு சத்ருசானி—வேணி சம்ஹார

கணவர் கூடவே இருப்பதால், பெண்களும் அவர்களைப் போலவே சிந்திப்பர்.

Xx

64.ஸ்த்ரீணாம் அலீகமுக்தம் ஹி வச: கோ மன்யதே ம்ருஷா – கதா சரித் சாகர

மயங்கவைக்கும் பேச்சுவன்மை உடைய பெண்களின் பேச்சை யார் சந்தேகிப்பர்?

Xxx

65.ஸ்த்ரீணாம் அசிக்ஷிதம் படுத்வம் அமானுசீஷு சத்ருஷ்யந்தே.

–சாகுந்தலம்

பெண்களின் திறமையை மற்ற பெண்ணின பிராணிகளிடத்தில் கூடக் காணலாம்.

Xxx

66.ஸ்த்ரீபி: கோ ந விடம்பித:

யார்தான் பெண்களால் முட்டாள்கள் ஆக்கப்படவில்லை?

 

Viry Sy 19

—தொடரும்…………………………………..

–சுபம்–

 

 

‘எங்கே பெண்கள் மதிக்கப்படுகிறார்களோ, அங்கே தெய்வங்கள் மகிழ்வார்கள்’ (Post No 2717)

IMG_3209

Written by london swaminathan

Date: 12 April, 2016

 

Post No. 2715

 

Time uploaded in London :– 14-48

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

பெண்கள் பற்றிய சம்ஸ்கிருத பழமொழிகள்–பகுதி 3

 

((முதல் இரண்டு பகுதிகள் மார்ச் 26, மார்ச் 28 தேதிகளில் வெளியிடப்பட்டன.))

IMG_3210

38.முக்தா: ஸ்வபாவாத் ப்ராயேன யோஷிதாஸ்தரல ஆசயா:

-ராமாயண மஞ்சரி

பெண்கள் இயற்கையிலேயே, இளகிய மனம் படைத்தவர்கள்

xxx

 

39.ய: ஸ்த்ரீணாம் குஹ்யம் ஆக்யாதி தத் அந்தம் தஸ்ய ஜீவிதம்

–ப்ருஹத் கதா கோச

பெண்களின் ரஹசியத்தை வெளியிடுபவன் கதி, சகதி!

(பெண்களின் ரகசியத்தை வெளியிடுபவர் வாழ்க்கையின் முடிவைக் காண்பர்)

xxx

40.யத்ர நார்யஸ்து பூஜ்யந்தே ரமந்தே தத்ர தேவதா:

–மனு ஸ்மிருதி 3-56

எங்கே பெண்களை கொண்டாடுகிறார்களோ, அங்கே தெய்வங்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.

xxx

 

 

IMG_3212

41.யோஷிதம் யத்யபி க்ருத்தா ந நிக்னந்தி இஹ வைரிண:

—-ப்ருஹத் கதா கோச

அதிபயங்கர கோபத்திலும் கூட, எவரும் பெண் கொலை புரியமாட்டார்கள் (பெண்களைக் கொல்லக் கூடாது)

xxx

42.யோஷிதாஞ்ச நதீனாம் ச புனராகமனம் குத:

—–ப்ருஹத் கதா மஞ்சரி

ஓடிப்போன நதியும், ஓடிப்போன பெண்ணும் திரும்புவது நடக்குமா? (சாத்தியமா?)

xxx

  1. ரஹஸ்யம் ச ந வக்தவ்யம் வந்னிதாசு

–கதாசரித் சாகரம்

பெண்களிடம் ரகசியத்தைச் சொல்லாதே

xxx

44.ரூப லுப்தா ஹி யோஷித:

——-ப்ருஹத் கதா மஞ்சரி

பெண்கள் மேக்-அப் போடுவதில்தான் அதிக உற்சாகம் காட்டுவர் ( பெண்கள்,தங்கள் தோற்றத்திலதிக கவனம் செலுத்துவர்)

xxxx

45.வஜ்ரலேபாத் அபித்ருடோ மானினீனாம் ஹி நிஸ்சய:

——-ப்ருஹத் கதா மஞ்சரி

பிடிவாதம்பிடித்த பெண்ணின் முடிவுகள், கான்க்ரீட்டைவிடக் கடினமானவை

(வஜ்ரலேபம் என்பது, கான்க்ரீட் போல கடினமானது)

xxx

 

 

IMG_3179

46.வாமசீலா ஹி நார்ய:

–தூர்த்தநர்த்தக

பெண்கள், இயற்கையிலேயே, குறுக்குபுத்தி உடையவர்கள்.

xxx

47.விதக்தா அபி வஞ்சயந்தே விடவர்ணனயா ஸ்த்ரிய: —-கதாசரித் சாகரம்

பெண்கள் புத்தி கூர்மையானதுதான்; ஆனால் ஆண்களின் புகழ்ச்சியில் அது மழுங்கிவிடுகிறது(அதாவது கள்ளக் காதலனின் புகழ்ச்சியில் ஏமாந்து போவார்கள்)

xxx

48.வித்யதே ஸ்த்ரீசு சாபல்யம் வித்யதே ஞாதிதோ பயம் –வால்மீகி ராமாயணம்

பெண்களின் சபல புத்தியால், சொந்தக்காரர்களிடத்தில் பயம்!

xxx

49.வித்யுதம் க:ஸ்திரீகுர்யாத்கோ ரக்ஷேச்சபலாம் ஸ்த்ரியம் —கதாசரித் சாகரம்

மின்னலை யாராவது அசையாமல் நிறுத்த முடியுமா? பெண்களின் யாராவது மனதை சலனமில்லாமல் செய்ய முடியுமா?

xxx

50.விபரீத அர்த்தவிதோ ஹி யோஷித:

பெண்கள் எளிதில் தப்பான, அர்த்தம் செய்துவிடுவார்கள்.

xxx

 

IMG_3184

to be continued………………………….

“மந்திரி பதவி விலகினால் விலகட்டுமே! ரொம்ப நல்லது” (Post No.2702)

lincoln speeches

Compiled by london swaminathan

Date: 7 April, 2016

 

Post No. 2702

 

Time uploaded in London :–  10-17 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

அடக்கம் அமரருள் உய்க்கும் – குறள் 121

அடக்கத்தின் சின்னம் ஆப்ரஹாம் லிங்கன்

ஆப்ரஹாம் லிங்கன் என்பவர் அமெரிக்க ஜனாதிபதிகளிலேயே மிகவும் புகழ்பெற்றவர்; நேர்மையானவர். சமத்துவத்துக்குப் போராடியவர். கறுப்பின மக்களையும் மதித்தவர். அவர் வாழ்நாள் முழுதும் பல சுவை மிகு சம்பவங்கள் நடந்தன. அவருடைய ஒவ்வொரு பேச்சும் மேற்கோள் காட்டக்கூடிய பொன் மொழிகள்!

லிங்கனின் அமைச்சரவையில் நிதித்துறை அமைச்சர் பதவியை சால்மன் சேஸ் என்பவர் வகித்து வந்தார். ஒரு முக்கிய விஷயத்தில் எல்லா அமைச்சர்களுடனும் இவர் கருத்து வேறுபட்டார். உடனே பதவியை ராஜினாமாச் செய்தார்.

லிங்கனின் ஆலோசகர்கள், “ஐயன்மீர்! சேஸ் அவர்களின் பதவி விலகல் கடிதத்தை ஏற்காதீர்கள். சேஸின் சேவை நாட்டுக்குத் தேவை” – என்று அறிவுரை வழங்கினர்.

உடனே ஆப்ரஹாம் லிங்கன் சொன்னார்:

“அடடா! என்ன தப்புக் கணக்கு இது! ஆனால் உங்களைச் சொல்லிக் குற்றமில்லை; நானும் ஒரு காலத்தில் இப்படித்தான் எண்ணியிருந்தேன்; இது சுத்த அபத்தம்.”

 

“நாம் எல்லோரும் நாளைய தினம் பதவியை விட்டு விலகினோம் என்று வைத்துக் கொள்வோம்; ஒரு வாரத்துக்குப் பின்னர் திரும்பி வருவோம்; நம்முடைய இடத்தில் புதியவர்கள் இருப்பார்கள்; நாம் என்ன செய்தோமோ அதையே அவர்களும் திறம்பட செய்வார்கள்; பல பதவிகளில், இப்போதைய மந்திரியைவிட, மேலும் திறமையானவர்கள் கூட இருப்பார்கள்”

“இதைச் சொல்லும்போது எனக்கு ஐரிஷ்காரர் சொன்னது நினைவுக்கு வருகிறது. அவருடைய முடிபு இதுதான்: ‘இந்த நாட்டில் ஒருவனைப் போலவே மற்றவனும் சிறந்தவன்தான். இன்னும் சொல்லப் போனால் ஒருவன் மற்றொருவனை விஞ்சுமளவுக்குத் திறமைசாலியும் கூட. இந்த அரசாங்கம், எந்த ஒரு தனி மனிதனையும் சார்ந்து நிற்கவில்லை”. ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்தவர் லண்டன் சுவாமிநாதன்.

 

Xxx

எல்லார்க்கும் நன்றாம் பணிதல் குறள் 121

ஒரு பிரமுகர் அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு வந்தார். அப்போது அமெரிக்க ஜானாதிபதி ஆப்ரஹாம் லிங்கன், தனது பூட்சுக்கு கறுப்பு வண்ணம் ஏற்றி பாலீஷ் போட்டுக் கொண்டிருந்தார்.

“அடக் கடவுளே! இது என்ன கஷ்டகாலம்; ஜனாதிபதியான நீங்கள் கையெல்லாம் கறுப்புச் சாயம் ஏற, உங்களுடைய பூட்சுகளுக்குப் பாலீஷ் போடுகிறீர்கள்!” – என்று எள்ளி நகையாடினார்.

லிங்கன் அவருக்கே உரித்தான அங்கத பதில்களை அள்ளி வீசினார். “பின்ன என்ன? நான், வேறு யார் பூட்சுகளுக்குப் பாலீஸ் போட வேண்டும் என்கிறீர்கள்?”

வந்தவர் வாயடைத்துப் போனார்.

அடக்கத்தின் சின்னம் ஆப்ரகாம் லிங்கன்.

பணிவின் இலக்கணம் ஆப்ரகாம் லிங்கன். ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்தவர் லண்டன் சுவாமிநாதன்.

–சுபம்–

xxx