Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திஜிக்கு மஹாத்மா காந்திஜியின் கொள்ளுப் பேரன் அனுப்பிய கடிதம்!
ச. நாகராஜன்
அன்புள்ள ராகுல் காந்திஜி,
மோஹன் தாஸ் கரம் சந்த் காந்தி எனது கொள்ளுத்தாத்தா. அவர் நாதுராம் கோட்ஸேயால் கொலை செய்யப்பட்டார். பல்வேறு கமிஷன்களும் புலனாய்வுகளும் இந்தக் கொலை பற்றிய ஆய்வுகளை நடத்தி உள்ளன.யாரும் இதில் ஆர் எஸ் எஸ். சம்பந்தப்பட்டதாகவோ அல்லது ஆர் எஸ் எஸ் தான் இதற்குப் பொறுப்பு என்றோ கூறவில்லை.
எனது தாத்தா காலஞ்சென்ற ராம்தாஸ் காந்தி மதிப்பிற்குரிய உள்துறைமந்திரி சர்தார் படேல்ஜிக்கு நாதுராஸ் கோட்ஸேயை மரணதண்டனையிலிருந்து விடுவிக்குமாறு கடிதம் ஒன்றை எழுதினார்.
உங்களது தகவலுக்காக, நான் சொல்ல விரும்புவது இது – 1969-ல் ராம்தாஸ் காந்தி மும்பையில் உயிரை விடும் தருணத்தில் நாதுராம் கோட்ஸேயின் தம்பி ஶ்ரீ கோபால் கோட்ஸே அவரைச் சந்தித்தார்.
இந்தப் பிரச்சினை கடந்த காலத்தியது. எனது குடும்பம் இதிலிருந்து மீண்டு சென்று விட்டது.
உங்களைப் போன்ற ஆட்களுக்கெல்லாம், எனது எளிமையான யோசனை என்னவெனில் காங்கிரஸ் நன்றாக இருக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் காந்தியின் பெயரைத் தங்கள் சுயலாபத்திற்காக பான்படுத்துவதை நிறுத்திவிட்டு முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்பது தான்.
வெவ்வேறு பல கமிஷன்களின் முடிவுகளை ஏற்றுக் கொண்டு தயவுசெய்து பெருந்தன்மையுடன் இருங்கள்.
ஆர் எஸ் எஸ் காந்தியைக் கொன்றது என்று சொல்வதானது சீக்கியர்கள் உங்கள் பாட்டியைக் கொன்றனர் என்று சொல்வது போலத் தான். அது பொய், ஏனெனில் எல்லா சீக்கியர்களும் அதில் ஈடுபட்டிருக்கவில்லை.
நீங்கள் காந்தி குடும்பத்தைச் சேர்ந்தவர் இல்லை. நீங்களும் உங்கள் குடும்பமும் இந்தியாவில் காந்தியின் பெயரை பயன்படுத்தி அனைவரையும் முட்டாளாக்குவது நெடுங்காலமாக நடை பெற்று வருகிறது. நாட்டை எழுபது ஆண்டுகள் முட்டாளாக்கிவிட்டீர்கள்.
உங்கள் குடும்பம் எனது கொள்ளுத்தாத்தாவின் குடும்பப் பெயரை தங்கள் சந்தர்ப்பவாத கொள்கைக்காக தவறாகப் பயன்படுத்தி வந்திருக்கிறது. இப்போது இந்த தேசத்திற்கு உங்களது உண்மையான ஸ்வரூபத்தைக் காண்பிக்க வேண்டும்; காந்தியின் பெயரைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்.
உங்களது தாத்தா காந்தி இல்லை. அவர் பெரோஸ் கான். அவர் குஜராத்திய பதானான ஜுனாகத்தைச் சேர்ந்த நவாப் கானின் மகன். நவாப் கானின் மனைவி ஒரு பார்ஸி. அவர் இஸ்லாமிற்கு மதம் மாற்றப்பட்டார்.
உங்கள் பாட்டி இந்திராஜியும் ஒரு முஸ்லீம் தான். ஏனெனில் அவர் இஸ்லாமுக்கு மதம் மாறியே பெரோஸ் கானை மணம் செய்து கொண்டார்.
நீங்கள் இஸ்லாமும் கிறிஸ்தவமும் கலந்த ஒரு கலவை. ஒரு சிறிதளவு கூட ராகுலோ அல்லது காந்தியோ உங்களிடத்தில் இல்லை.
ஹிந்துவாக கிஞ்சித்தும் கூட இருக்க முடியாதவர் நீங்கள். இஸ்லாம். கதோலிக்க டிஎன் ஏ-யின் ஒரு சேர்க்கை தான் நீங்கள்.
நான் இதை பொதுமக்கள் மத்தியில் கொண்டு செல்கிறேன். இதனால் எங்கள் உண்மையான காந்தி குடும்பத்தைச் சொல்லி யாரையும் இனி முட்டாளாக்க முடியாது.
எங்கள் குடும்பப் பெயரைப் பயன்படுத்துவதை நிறுத்திக் கொண்டு,
உங்களது உண்மையான மதம்/ ஜாதி அடையாளத்தை ஒப்புக் கொள்வீர்கள் என நான் நம்புகிறேன்.
தேசத்தை முட்டாளாக்குவதை நிறுத்தி விட்டு மன்னிப்புக் கேட்டு உங்கள் பெரிய மனதைக் காட்டுங்கள்.
ஜெய்ஹிந்த் வந்தே மாதரம் ஶ்ரீ கிருஷ்ணா குல்கர்ணி
நன்றி : ஆங்கில வார இதழ் TRUTH Vol 92 No 26. Dated 25th October 2024
Dreams in Kalidasa Kavyas and Sangam Tamil Literature- Part 1
Kalidasa is the greatest Indian poet. He became famous because of his 1500 similes and imageries. Sangam Tamil poets copied at least 200 similes from him and proved that he lived in first or second century BCE. The first ten stanzas of Kumara Sambhava of Kalidasa are used to describe Himalayas in Tamil literature.
Here is the comparison of dreams in both the literature.
We find dreams in Kalidasa in the following books:
Raghuvamsam 8-92 Momentary pleasure in dream
Ajan’s dream 10-61 to 10-64 ;Auspicious dreams in the dreams of Dasaratha’s wives.
12-76 It was like the difficulty that came in the dream
19-22 Saying names of women in the dream
These are only a few dreams from the above work. In his Meghadutam we find four more references to dreams.
Following slokas are taken from Sanskrit documents.org. Thanks
By him of true and courteous language eight years were made to roll with some difficulty especially) on account of the tender age of his son, by looking at the pictures and statues of his wife and by means of the pleasure derived from her momentary company in dreams. [8-92]
All of the queens respectively saw in their dreams that they were being protected by young lads adorning conch, sword, mace, bow and a disc in their hands. [10-60]
Because the queens have partaken in the Vaishnava dessert they dreamt of Vishnu’s arrival in their wombs.
हेमपक्षप्रभाजालम् गगने च वितन्वता। उह्यन्ते स्म सुपर्णेन वेगाकृष्टपयोमुचा॥ १०-६१
hemapakṣaprabhājālam gagane ca vitanvatā। uhyante sma suparṇena vegākṛṣṭapayomucā || 10-61
Further the queens dreamt that garuDa, the Divine Eagle, shedding multitudinous resplendence of his golden wings and strewing away thick masses of rainclouds owing to his speed, is carrying them aloft on skyway. [10-64]
बिभ्रत्या कौस्तुभन्यासम् स्तनान्तरविलम्बितम्। पर्युपास्यन्त लक्ष्म्या च पद्मव्यजनहस्तया॥ १०-६२
bibhratyā kaustubhanyāsam stanāntaravilambitam। paryupāsyanta lakṣmyā ca padmavyajanahastayā || 10-62
Further they dreamt that their daughter-in-law goddess Lakshmi wearing the Kaustubha jewel pendant on her cleavage is now fanning them with her handheld lotus, as is usual with any daughter-in-law. [10-62]
While coming to earth Vishnu kept the Kaustubha jewel with Lakshmi as a trust, hence she is wearing it now.
कृताभिषेकैर्दिव्यायाम् त्रिस्रोतसि च सप्तभिः। ब्रह्मर्षिभिः परम् ब्रह्म गृणद्भिरुपतस्थिरे॥ १०-६३
kṛtābhiṣekairdivyāyām trisrotasi ca saptabhiḥ। brahmarṣibhiḥ param brahma gṛṇadbhirupatasthire || 10-63
Further they dreamt that they were worshipped by the seven Brahma-sages who on taking bath in the heavenly tri-streamed river Ganga will start chanting the Vedantic hymns that quest after the Ultimate Being. [10-63]
ताभ्यस्तथाविधान्स्वप्नाञ्छ्रुत्वा प्रीतो हि पार्थिवः। मेने परार्ध्यमात्मानम् गुरुत्वेन जगद्गुरोः॥ १०-६४
tābhyastathāvidhānsvapnāñchrutvā prīto hi pārthivaḥ। mene parārdhyamātmānam gurutvena jagadguroḥ || 10-64
On learning the above said particulars of their dreams from the queens the king Dasharatha is highly gratified, and considered himself nonpareil on account of his being the sire of the sire of universe. [10-64]
The Lord though himself one, having his form diversely distributed, reposed in the wombs of three queens, as one moon manifoldly reflects in manifoldtranquil waters. [10-65]
These couplets/ slokas describe that all the three queens saw Garuda, Conch and Wheel, Kaustubha jewel, the Seven Holy Sages and Lakshmi. All these are associated with Lord Vishnu and shows Ramavatar is the incarnation of Vishnu.
The captivity with the serpent-missile hurled by meghanAda being loosened by the sudden swoop of the divine eagle garuDa, became to both the sons of Dasharatha a momentary painful event, as if, befallen in a dream. [12-76]
svapnakīrtitavipakṣamaṅganāḥ pratyabhaitsuravadantya eva tam | pracchadāntagalitāśrubindubhiḥ krodhabhinnavalayairvivartanaiḥ || 19-22
His mistresses even without uttering a word severely rebuked him who called out the names of their rivals in dream, by rolling away from him in the bed on which they shed tears on the coverlet, and smashed their bracelets in anger. [19-22]
****
when Queen Trishla conceived Bhagwan, she saw 14 auspicious dreams – 1) an elephant, 2) a bull 3) a lion, 4) Lakshmi, the goddess of wealth, 5) a garland of flowers, 6) the moon, 7) the sun, 8) a flag, 9) a jar filled with water, 10) a lotus-lake, 11) an ocean, 12) a celestial, aerial car, 13) a heap of jewels, 14) smokeless fire
Megadutam – Dreams
Thin with worry, Stretched out on her side in her bed of separation, Her body like the waning moon on the eastern horizon, She longs for sleep, But even this is interrupted by her flowing tears— “He cannot even join me in a dream!” She despairs.
*****
If my lover is engulfed in sleep upon your arrival, You should wait for only the length of the night-watch Attending her, Holding back your thunder. While my beloved is engrossed in dreams of me, Do not shake the tight embrace of her vine arms from my neck.
****
Teardrops as big as pearls Fall without fail on the roots of trees, From the local deities who see me, My arms stretched out into empty space As if reaching for a tight embrace, As I picture you in my dreams.
****
Once, having gone to sleep, Clinging to my neck in bed, You awoke. Crying loudly for some reason, I repeatedly asked you why. You said to me with a smirk— “You rascal! I saw you in my dream, loving another!”
To be continued……………………………
Tags- Dreams, Kalidasa, auspicious signs, Sangam literature, Raghuvamsam, Meghadutam , Kalidasa, part 1, Birth of Buddh, Mahavir
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
விலங்குகள் கனவு காணும்; தமிழர்கள் கண்டுபிடிப்பு
விலங்குகள் கனவு காணுமா ? என்று கூகுள் google செய்து பார்த்தீர்களானால் கடந்த ஐந்து ஆண்டுகளில் விஞ்ஞான சஞ்சிகைகளில் வெளியான பல கட்டுரைகளைக் காண்பீர்கள். அவர்கள் ஏதோ புதிதாகக் கண்டுபிடித்தது போல அதை எழுதி இருக்கிறார்கள். சம்ஸ்க்ருத நூல்களில் கூட இல்லாத விலங்குகளின் கனவுகள், சங்க கால இலக்கியத்தில் உளது; பிற்காலத்தில் இதை ஏனைய தமிழ் நூல்களிலும் காணலாம்.
கனவுகள் பற்றி பிராமணர் கண்டுபிடிப்பு
உலகில் கனவுகளின் உண்மை நிலையினைக் கண்டுபிடித்தவர்கள் வேத காலப் பிராமணர்கள்; மனிதர்களோ உயிரினங்களோ கனவு காணாமல் தூங்க முடியாது என்று கண்டு பிடித்ததால் இன்றும் கூட தினமும் முக்காலம் செய்யும் சந்தியாவந்தன கிரியையில் கெட்டகனவு வரக்கூடாது என்று மந்திரம் சொல்கிறார்கள். இப்போது விஞ்ஞானிகளும் எல்லோரும் தினமும் கனவு காண்பதை ஒப்புக்கொள்கிறார்கள்
கனவுகள் பற்றி கடந்த பத்து ஆண்டுகளில் எவ்வளவோ கட்டுரைகளை எழுதிவிட்டேன் (அடியிலுள்ள இணைப்புகளைக் காண்க)
வேதகால கனவுகள் முதல் கிரேக்கர், சுமேரியர், எகிப்தியர் கனவுகள் பற்றி இதுவரை கண்டுவிட்டோம். ஆயினும் ஒரு வியப்பான விஷயம், தமிழர்கள் மட்டுமே விலங்குகள் காணும் கனவுகள் பற்றி விரிவாகப் பாடியுள்ளனர்.
பழந்தமிழ் நூலான தொல்காப்பியத்தில் துவங்கும் மனிதர்களின் கனவுகள் திருக்குறள், சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, கம்பராமாயணம் பெரிய புராணம் ஆண்டாளின் நாச்சியார் திருமொழி, தேவாரம் என்று பல நூல்களில் பல்கிப் பெருகி பழமொழிகளையும் ஆக்ரமித்து ஆயிரத்துக்கு மேலான் இடங்களில் பரிணமிக்கிறது. சங்க இலக்கியங்களில் மட்டுமே நாற்பதுக்கும் மேலான கனவுகள் காணப்படுகின்றன.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் காளிதாசன் (Second Century BCE) பாடிய கவிதைகளிலும் கனவுகள் இருந்தாலும் அவன் கூட விலங்குகள், பறவைகள் கனவு கண்டதாகப் பாடவில்லை. ஆயினும் பஞ்சதந்திரக் கதைகளிலும் அதற்கு முன்னர் காளிதாசன் எழுதிய காவியங்களிலும் விலங்குகளும் பறவைகளும் நம்மைப் போன்ற உணர்ச்சியும் அறிவும் உடையன என்பதை தெளிவாகவே — மிகத் தெளிவாகவே – வருணித்துள்ளனர். காளிதாசனின் உலகப் புகழ்பெற்ற நாடகம்– சாகுந்தலம் — என்பதன் பொருளே பறவைப் பெண்; சகுந்தலாவை வளர்த்தது பறவைகள் என்பதால் இப்படி பெயரிட்டார் கவிஞர். அந்த சம்ஸ்க்ருத சொல்லில் இருந்துதான் சகுனம் / ஆரூடம் என்பனவற்றை நாம் பயன்படுத்துகிறோம் சகுன= பறவை;
ஷேக்ஸ்பியரும் கூட கானகப் பெண் சகுந்தலாவைப் பார்த்து Tempest டெம்ப்ஸ்ட் நாடகத்தில் மிராண்டா என்ற அப்பாவிப் பெண் கதாபாத்திரத்தைப் படைத்தார். இரண்டு நாடகங்களையும் படிப்போருக்கு ஒற்றுமைகள் உள்ளங்கை நெல்லிக்கனி என புலப்படும்.
முள் போன்ற பற்களையுடைய வௌவால் உயர்ந்த ஒரு கிளையில் தொங்கியபடி தூங்கும் பொழுதிலே, போர்களில் வெற்றி அடையும் சோழ மன்னனான ஆற்காட்டில் உள்ள அழிசியின் பெரிய காட்டில் உள்ள நெல்லிக்கனியின் இனிய புளிச்சுவையைத் தான் பெற்றதாகக் கனவு கண்டாற்போல்…….
****
2.யானையின் மதநீரை வண்டு/ தேனீ கனவு காண்டல்; அகநானூறு 132
கடற்காக்கைகள் அவற்றின் பெட்டைகளுடன் சுறாமீன் வழங்கும் கடலில் இறால் மீன்களை (ருசிக்காக) கனவு கண்டன.
****
4.கவரிமான் நரந்தம் புல்லைப் பற்றி கனவு காணல் – பதிற்றுப் பத்து 11
பொலன் அணி எருத்த மேல்கொண்டு பொலிந்த நின்
பலர் புகழ் செல்வம் இனிது கண்டிகுமே, 20
கவிர் ததை சிலம்பில் துஞ்சும் கவரி
பரந்து இலங்கு அருவியொடு நரந்தம் கனவும்,
ஆரியர் துவன்றிய பேரிசை இமயம்
தென்னங் குமரியொடு ஆயிடை
மன் மீக் கூறுநர் மறம் தபக் கடந்தே. 25
(ஆரியர் – கற்றுணர்ந்த ரிஷி முனிவர்கள் தவம் செய்யும் இமயமலை. காளிதாசன் எழுதிய குமார சம்பவத்தில் உள்ள இந்த வரிகள் புறநானூற்றின் இரண்டாவது பாடலிலும் உளது ).
கவரிமான்கள் நல்ல சுவையான நரந்தம் புல்லினை மேயும் கனவுடன் தூங்குகின்றன.
29 Dec 2011 — For instance, the Chandogya Upanishad (V 2-8-9) says seeing a woman in a dream means a previous sacrifice (fire ceremony) was successful. But it …
—subham—
Tags -விலங்குகள், கனவு, காணும், தமிழர்கள் கண்டுபிடிப்பு ,
10-11-24 அன்று நடந்த ஞானமயம் நிகழ்ச்சியில் ச.நாகராஜன் ஆற்றிய உரை
அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே! ஶ்ரீ கல்யாண்ஜி அவர்களே! லண்டன் திரு சுவாமிநாதன் அவர்களே, பெரியோர்களே
சந்தானம் நாகராஜன் அன்பு கனிந்த வணக்கம். நமஸ்காரம்.
தமிழ்நாட்டில் ஒரு முக்கியமான கால கட்டத்தில் அரசை வழிநடத்தி, கலை,இலக்கியம், இசை,, ஆன்மீகம் ஆகிய அனைத்தையும் உயரத்தில் கொண்டு சென்ற ஶ்ரீ கோவிந்த தீக்ஷிதர் அவர்களைப் பற்றி இன்று பார்க்கப் போகிறோம்.
வள்ளுவன் வாழ்ந்த தமிழ் நாட்டில் ஒரு நல்ல அமைச்சன் ஒரு அரசனுக்கு அமைந்தால் அரசு நல்ல முறையில் இயங்கும் என்பது நம்பிக்கை.
இந்த வகையில் பதினாறாவது நூற்றாண்டில் தஞ்சையைத் தலைநகராகக் கொண்டு அரசாண்டு வந்த சேவப்ப நாயக்கர், அச்சுதப்ப நாயக்கர், இரகுநாத நாயக்கர் முதலான மூன்று மன்னர்களின் காலங்களில் சிறந்த அமைச்சராகவும், கீர்த்தி பெற்ற ராஜதந்திரியாகவும் சுமார் 70 ஆண்டுகள் கோவிந்த தீக்ஷிதர் சேவை செய்து வந்தார். இவரது காலத்தில் பல துறைகளிலும் தமிழகம் மேம்பாடு அடைந்து பெருமையுற்றிருந்தது. அவர் அரசியலில் ஈடுபட்டிருந்த காலம் 1575-1634 முடிய என்று தெரிய வருகிறது.
கோவிந்த தீக்ஷிதர் ஒரு பேரறிஞர், தத்துவ விற்பன்னர், இராஜ தந்திரி, இசைப் பேரறிஞர்.
கலை, கல்வி, நீதி நெறி அவர் காலத்தில் ஓங்கியது. விவசாயம் அமோகமாகப் பெருகியது.
அவர் கன்னடம் பேசும் கன்னட அந்தணர். ஹொய்சாள கன்னட அந்தண வகுப்பைச் சேர்ந்தவர்.
பட்டீஸ்வரத்தில் அரண்மனை போன்ற வீட்டில் அவர் வசித்தார். பாவநாசத்திற்கு அருகில் உள்ள திருப்பலாய்துறையிலும் அவர் வசித்ததாகச் சொல்லப்படுகிறது.
சாஸ்திர விதிப்படி அக்னிஹோத்ரம், யாகங்கள் இவற்றை செய்து கொண்டு இராஜ காரியங்களையும் நெறி பிறழாமல் அவர் நடத்தி வந்தார். போக வஸ்துக்களின் மத்தியில் வசித்து வந்தாலும் தன்னலமற்றவராக பொது ஜன சேவையையே தியாகத்துடன் செய்து வந்தார்,
சாஸ்திர விதிப்படி பாடசாலைகள், கோவில்கள், குளங்கள், படித்துறைகள், ஏரிகள்,, கால்வாய்கள் ஆங்காங்கே சோழ தேசம் முழுவதும் ஏற்படுத்தப்பட்டன.
பட்டீஸ்வரத்தில் உள்ள கோவிலில் உள்ள லிங்கம் கோவிந்த தீக்ஷித லிங்கம் என்று அழைக்கப்படுகிறது. நகரைச் சுற்றியுள்ள கிராமங்கள் கோவிந்தபுரம், அய்யம்பேட்டை என்று பெயரிடப்பட்டுள்ளன.
உன்னதபுரீஸ்வரர் ஆலயத்தை புனருத்தாரணம் செய்து அதை விரிவாக்கி ஒரு குளத்தை முன்னால் இவர் அமைத்தார். பல அக்ரஹாரங்களையும் உருவாக்கினார். இந்தக் கோவில் குளம் அய்யன் குளம் என்று அழைக்கப்படுகிறது.
மஹாமகக் குளத்தின் வடகரையில் உள்ள மண்டபத்தில் ஶ்ரீ தீக்ஷிதர் அவர்களை ஓர் தராசில் வைத்து அவருடைய எடைக்கு எடை தங்க துலாபாரத்தை அரசன் அளித்தான். இதை கல் சித்திரத்தின் மூலமாக இன்றும் காணலாம்.
தஞ்சாவூர், கும்பகோணம், திருவிடைமருதூர், மாயவரம், திருவண்ணாமலை முதலிய இடங்களில் இவருடைய பெயரும் விளங்கும்படி சின்னங்களும் ஏற்படுத்தப்பட்டன. அரசனுடைய கீர்த்தி விளங்கும்படி கல்வெட்டுக்கள் பொறிக்கப்பட்டன.
இவரை ஜனங்கள் அன்புடன் அய்யன் என்றே அழைப்ப்ர். ஆகவே அய்யன் ஏரி, அய்யன் தெரு, அய்யன் கடை உள்ளிட்டவை இன்றும் விளங்குகின்றன.
இவர் கும்பேஸ்வரர் கோவில், பட்டீசுரம், திருவையாறு,, திருவண்ணாமலை உள்ளிட்ட கோவில்களில் திருப்பணி செய்துள்ளார்.
அரசருடைய சிலையுடன் இவரது சிலையும் இவர் மனைவி சிலையும் கற்றூண்களில் காணப்படுகின்ற்ன.
மந்த்ர பீடேஸ்வரி என்ற மங்களாம்பிகை அகத்தியரால் பூஜிக்கப்பட்ட தலம்.இங்குள்ள ஸ்வயம்புலிங்கம் கோவிந்த தீக்ஷிதரால் திருப்பணி செய்யப்பட்டது.
மங்களாம்பாள் சந்நிதியின் எதிரில் தம்பதிகளின் சிலைகள் உள்ளன.
பல சாஸ்திரங்க:ளில் அவர் நிபுணர். ஶ்ரீ ராஜ சூடாமணி தீக்ஷிதர் அவரை அத்வைத வித்யாசாரியார் என்று கூறிப் புகழ்கிறார்.
கும்பகோணம் ராமசாமி ஆலயத்தை தீக்ஷிதர் கட்டினார்.கும்பகோணம் சக்ரபாணி ஆலயத்தை விரிவாக்கினார். 1542ல் ராஜ வேத காவியபாடசாலை என்ற பாடசாலையை அவர் கும்பகோணத்தில் நிறுவினார். அது இன்றும் ஒரு கல்வி நிலையமாகத் திகழ்கிறது
தீக்ஷிதர் பெரும் இசைப் பேரறிஞர். ராமாமாத்யா, சோமநாதா, கோவிந்த தீக்ஷிதர் ஆகிய மூவரும் சமீப காலத்திய இசைப் பேரறிஞர்கள்.
நாயக்க மன்னர்கள் இசையை வளர்க்க 500 அந்தணக் குடும்பங்களுக்கு ஒரு கிராமத்தையே தானமாக அளித்தனர். இன்னும் பல கிராமங்கள் தெலுங்கு குடும்பங்களுக்கு இசை வளர்க்க அளிக்கப்பட்டன. மூவாநல்லூர், தெப்பருமணலூர், சூலமங்கலம், ஊத்துக்காடு மற்றும் சாலிய மங்கலம் போன்ற கிராமங்களைக் குறிப்பிட்டு சொல்லமாம்
தீக்ஷிதரின் இரு புதல்வர்களான யக்ஞ நாராயண தீக்ஷிதர் மற்றும் வேங்கட மகி தீக்ஷிதர் அவரைப் போலவே இசை மேதைகளாக விளங்கினர். அவரது மனைவியின் பெயர் நாகாம்பாள்.
வேங்கடமகி சதுர்தண்டப்ரகாசிகா என்ற நூலை இயற்றினார்.. இந்த நூலே மேளகர்த்தா அமைப்பை கர்நாடக சங்கீதத்தில் அமைக்க உதவுகிறது.
ஒருமுறை தீக்ஷிதர் தனது சீடர்களுடன் மத்யார்ஜுனம் நோக்கிப் பயணப்பட்டு கொண்டிருந்தார். அமலாந்தரின் கல்பதருவை போதிக்க ஆரம்பித்தார். அதில் சிக்கலான பல இடங்கள் உண்டு. தற்செயலாக அந்த வழியாக வந்த அப்பய்ய தீக்ஷிதர் அதை எளிமையாக அனைவருக்கும் எடுத்துரைத்தார்.
இதைப் பார்த்து நெகிழ்ந்து போன கோவிந்த தீக்ஷிதர், “மதிப்புக்குரிய அப்பய்ய தீக்ஷிதர் அவர்களே, உங்கள் பெருந்தன்மையை எங்ஙனம் போற்றுவேன்.கல்பதரு கூட அர்த்தமுள்ளதாக ஆக உங்களின் வார்த்தையைக் கேட்க வேண்டியது தான்” என்றார்.
“அர்த்த சித்தி” என்ற அவரது வார்த்தை பணத்தைப் பெறுதல் மற்றும் அர்த்தத்தைப் பெறுதல் ஆகிய அர்த்தங்ளை சிலேடையாகத் தந்தது.
இதனால் மகிழ்ந்த அப்பய்ய தீக்ஷிதர் தானே கல்பதருவிற்கு ஒரு வியாக்யானத்தை எழுதினார். இதன் பெயர் பரிமளம்.
அரிவம்ச சாராசரித்ரம், சங்கீத சுதா நிதா ஆகியவை அவர் இயற்றிய நூல்களாகும்.
கோவிந்த தீக்ஷிதரின் இசை பற்றிய மேதா விலாசம் அவர் இயற்றிய சங்கீத சுதா என்ற நூலில் வெளிப்படுகிறது. 1614-ம் ஆண்டில் அவர் இதை எழுதினார். நூலில் 7 அத்தியாயங்கள் உள்ளன. ஸ்வரம்,. ராகம்.ப்ரகீர்ணா ப்ரபந்தம், தாளம் வாத்யம் நர்த்தனம் ஆகிய ஏழு அத்தியாயங்களில் நமக்கு இன்று கிடைத்திருப்பவை முதல் நான்கு அத்தியாயங்களே.
தமிழ் மீது தீவிரப் பற்று கொண்டவர் தீக்ஷிதர்.
இவர் வடமொழியில் இருந்த பஞ்சநதீசுவர புராணத்தைத் –
திருவையாறு புராணத்தை தமிழில் கி.பி.1605இல் மொழிபெயர்த்ததை எடுத்துக்காட்டாகக் கூறலாம்.
லண்டன் மாநகரிலிருந்து செய்திகளைத் வாசித்து வழங்குபவர் வைஷ்ணவி ஆனந்த்
வணக்கம் இன்றைய நாள் நவம்பர் 10, 2024 ஞாயிற்றுக்கிழமை
****
திருச்செந்தூரில் சூரசம்ஹாரம்.. லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
நவம்பர் ஏழாம் தேதி தமிழ் நாட்டிலுள்ள எல்லா முருகன் கோவில்களிலும் கந்த சஷ்டி வெகு விமரிச கையாகக் கொண்டாடப்பட்டது இதே போல மலேசியா, சிங்கப்பூர், ஸ்ரீ லங்கா, மொரீஷியஸ் , சீஷெல்ஸ் தீவுகள் ஆகிய நாடுகளிலும் கந்த சஷ்டி விழா நடந்தது .
ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் உள்ள எல்லா கோவில்களிலும் முருகப் பெருமானை வணங்க பக்தர்கள் கூட்டம் திரண்டது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படைவீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் திகழ்கிறது. இங்கு முருகப்பெருமான் சுப்பிரமணிய சுவாமியாக காட்சி அளிக்கிறார்.
இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாக்களில் மிகவும் சிறப்பு மிக்கதாக கருதப்படுவது கந்தசஷ்டி திருவிழா ஆகும்
.
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் மாலையில் நடந்தது . முன்னதாக அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டு, 1:30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை நடந்தது. தொடர்ந்து 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனையும், தொடர்ந்து காலை 6:30 மணிக்கு யாகசாலை பூஜையும் நடந்தது. சஷ்டி மண்டபத்தில், சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி, அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன. மதியம் 2:30 மணிக்கு சிவன் கோவிலில் இருந்து, சூரபத்மன், படை, பரிவாரங்களோடு, கடற்கரைக்கு வந்து சேர்ந்தான். மாலை, 4:40 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர், பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து, கடற்கரைக்கு வந்தான்.
லட்சக்கணக்கான பக்தர்கள் கூடியிருக்க, முதலில் கஜமுகசூரன், சுவாமியுடன் போர் புரிந்தான். தொடர்ந்து, பல்வேறு அவதாரங்கள் எடுத்து, போரிட்டு வீழ்ந்தான். முடிவில், சூரபத்மனாக முருகப்பெருமானிடம் போரிட்டான். ஆணவத்தை அழித்து, அவதார மகிமையை உலகிற்கு உணர்த்தும் வகையில், செந்திலாண்டவர் வேலால் சூரபத்மனை வீழ்த்தினார். அவன், சேவலாகவும், மாமரமாகவும் மாறி, முருகனிடம் தஞ்சம் அடைந்தான். சூரனின் தலையை முருகன் கொய்ததும், விரதமிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி, விரதத்தை நிறைவு செய்தனர்
.****
அடுத்ததாக ஒரு மடச் செய்தி
பெண் பக்தையை திருமணம் செய்து கொண்ட சூரியனார் கோயில் ஆதீனம்; பக்தர்கள் அதிர்ச்சி
கும்பகோணம் சூரியனார் கோயில் ஆதீன மடாதிபதி மகாலிங்க சுவாமி பெண் பக்தையை திருமணம் செய்து கொண்ட சம்பவம் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது .
தமிழகத்தில் உள்ள பழமையான சைவ மடங்களில் ஒன்றான தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், திருவிடைமருதூர் அருகே உள்ள சூரியனார் கோயில் நவக்கிரங்களில் ஒன்றான பரிகார ஸ்தலமாக விளங்கி வருகிறது.
இந்த ஆதீனத்தின் 28வது மடாதிபதியாக மகாலிங்க சுவாமிகள் இருக்கிறார். மகாலிங்க சுவாமி கர்நாடகாவில் ஹேமாஸ்ரீ என்ற பெண்ணை பதிவு திருமணம் செய்து கொண்டார்
ஹேமா ஸ்ரீ என்ற பெண் பக்தை அடிக்கடி மடாதிபதி மகாலிங்க சுவாமியை சந்தித்து ஆசி வாங்கியுள்ளார். இந்த பழக்கம் இருவருக்கும் நெருக்கத்தை ஏற்படுத்தியதாக கூறப்படும் நிலையில் இருவரும் திருமணம் செய்துள்ளனர்.
இதையடுத்து மகாலிங்க சுவாமி – ஹேமா ஸ்ரீ ஆகியோர் பெங்களூர் சென்று அங்கு வைத்து பதிவு திருமணம் செய்துள்ளனர். இவர்களின் பதிவு திருமணம் என்பது அக்டோபர் மாதம் 10ம் தேதி நடந்துள்ளது.
திருமணம் செய்து கொண்டது தொடர்பாக மகாலிங்க சுவாமி விளக்கம் அளித்துள்ளார். அதில், ‘திருமணம் ஆனவர்களும் ஆதீன மடாதிபதியாக இருந்துள்ளனர். எனவே நான் யாரிடமும் எதையும் மறைக்க விரும்பவில்லை. நான் திருமணம் செய்து கொண்ட ஹேமா ஸ்ரீ, மடத்துக்கு பக்தராக வந்து சென்றவர் ஆவார். இனியும் அவர் மடத்திற்குப் பக்தராக மட்டுமே வந்து செல்வார்’ எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், கர்நாடகா மாநிலத்தில் சைவ மடம் அமைக்க ஹேமா ஸ்ரீ இடம் அளித்ததாகவும் அவரை அந்த மடத்தின் செயலாளராக நியமித்திருப்பதாகவும், பதிவு திருமணம் செய்திருப்பதாகவும் தெரிவித்தார். தமிழகத்தில் ஒரு சில ஆதீனங்கள் திருமணம் செய்து கொண்டு ஆதீன கர்த்தர்களாக இருப்பதாகவும் சூரியனார் கோவில் ஆதீனம் தெரிவித்தார். சூரியனார் கோவில் ஆதினம் மடாதிபதியாக தான் நீடிப்பதாகவும். கர்நாடக மாநிலத்தில் சைவ மடத்தின் செயலாளராக தனது மனைவி இருப்பார் எனவும் தெரிவித்தார்.
****
சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு ஆதார் அட்டை கட்டாயம்
மண்டல, மகரவிளக்கு சீசனையொட்டி சபரிமலையில் தினமும் 18 மணி நேர தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் பிரசாந்த் பத்தனம்திட்டாவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மண்டல, மகரவிளக்கு சீசனையொட்டி சசபரிமலை தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தினசரி 70,000 பக்தர்கள் அனுமதிக்கப் படுவார்கள். மேலும் உடனடி தரிசன முன்பதிவு அடிப்படையில் 10 ஆயிரம் பக்தர்களுக்கு தரிசன அனுமதி வழங்கப்படும்.
இதற்காக பம்பை, எருமேலி, வண்டிப் பெரியார் சத்ரம் ஆகிய இடங்களில் முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. சபரிமலை வரும் அனைத்து பக்தர்களுக்கும் ஆதார் அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
நடப்பு மண்டல சீசனையொட்டி தினசரி 18 மணி நேர தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதாவது, தினசரி அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்படும். தொடர்ந்து மதியம் 1 மணிக்கு அடைக்கப்படும். மீண்டும் மாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 11 மணிக்கு அரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும்.
சன்னிதானம்-பம்பை இடையேயான ரோப் கார் இணைப்பு திட்ட பணிகளை நடப்பு சீசனிலேயே தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.
****
அடுத்ததாக ‘அமெரிக்க தேர்தல் பற்றிய செய்தி
உஷா வான்ஸ் கிராமத்தில் கொண்டாட்டம்
அமெரிக்க துணை அதிபரின் மனைவி சொந்த ஊரான ஆந்திராவில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்.
‘அமெரிக்க அதிபர் தேர்தலில் 277 எல்க்டோரல் வாக்குகள் பெற்று அமெரிக்க அதிபர் பதவியை குடியரசு கட்சி வேட்பாளர் டொனல்டு டிரம்ப் வென்றார்.
வெற்றி உறுதியான பின்னர் புளோரிடா மாகாணத்தில் டிரம்ப் தனது குடும்பத்துடன் கலந்துகொண்டு வெற்றியுரை ஆற்றினார். அப்போது மேடையில் நின்றிருந்த ஜேடி வான்ஸ் மற்றும் அவரது மனைவி உஷா சிலுக்குரி வான்ஸ் ஆகியோரை நோக்கி கைகாட்டி இனி நான் உங்களை துணை அதிபர் என்று அழைக்கலாம் என்று பெருமிதமாக கூறினார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் துணை அதிபர் வேட்பாளராக ஜேடி வான்ஸ் முன்னர் அறிவிக்கப்பட்டபோது அவரது இந்திய வம்சாவளியை சேர்ந்த மனைவி உஷா இந்தியர்களின் கவனத்தைப் பெற்றார். உஷா வான்ஸ் தெலுஙகு பிராமண சாஸ்திரிகள் குடும்பத்தில் பிறந்தார் ; ஆனால் அவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் அமெரிக்காவில்தான்.
அமெரிக்காவின் துணை அதிபர் ஜேடி வான்ஸ் மனைவி உஷா சிலுக்குரி பிறந்த ஆந்திர மாநிலத்தின் வட்லூருவில் கிராம மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
****
அமெரிக்க தேர்தலில் வெற்றிபெற்ற இந்தியர்கள்
அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் சபைக்கான தேர்தலில் 6 இந்திய வம்சாவளியினர் வெற்றி பெற்றுள்ளனர். வழக்கறிஞர் சுஹாஸ் சுப்ரமணியம், விர்ஜினியா, கிழக்கு கடற்கரையில் மக்கள் பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய வம்சாவளி உறுப்பினர் ஆவார்.
இதே போல், ஏற்கனவே மக்கள் பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களாக பதவி வகித்து வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஸ்ரீ தானேதர், ராஜா கிருஷ்ணமூர்த்தி, ரோ கண்ணா,பிரமிலா ஜெயபால் மற்றும் அமி பேரா ஆகிய 5 பேரும் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று தங்கள் பதவியை தக்கவைத்துக் கொண்டனர்..
****
அடுத்ததாக கனடா பற்றிய செய்தி
கனடா கோயில் மீது தாக்குதல்: ‘கோழைத்தனம்’ – மோடி கடும் கண்டனம்
கனடாவின் பிராம்டன் நகரில் அமைந்துள்ள ஹிந்து மகாசபை கோவிலுக்கு வந்த பக்தர்கள் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிராம்டனில் உள்ள ஹிந்து மகா சபை கோவிலுக்கு வந்த பக்தர்கள் மீது அங்கு கூடிய காலிஸ்தான் ஆதரவாளர்கள் சிலர் குச்சியால் தாக்கியுள்ளனர்.
கையில் காலிஸ்தான் கொடியுடன் அவர்கள் பக்தர்களை தாக்கும் வீடியோ இணையத்தில் வெளியானது.
இந்த சம்பவத்துக்கு எதிர்க்கட்சி மற்றும் இந்திய வம்சாவளி அரசியல்வாதிகள் தரப்பில் இருந்தும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்திய தூதர்களை அச்சுறுத்துவதற்கு கோழைத்தனமான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை கனடாவின், ப்ராம்ப்டன் பகுதியில் அமைந்துள்ள சபா மந்திர் இந்து கோயிலுக்கு இந்திய தூதரக அதிகாரிகள் சென்றிருந்தனர். அப்போது, காலிஸ்தான் பிரிவினைவாதிகளால் கோயில் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, இந்து கோயில் மீது வேண்டுமென்றே தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இந்திய தூதரக அதிகாரிகளை அச்சுறுத்துவதற்காக கோழைத்தனமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்தார் .
காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில், இந்தியாவின் பங்களிப்பு இருந்ததாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் குற்றச்சாட்டு முன்வைத்தார். இதனால், கனடா மற்றும் இந்தியாவின் உறவில் விரிசல் ஏற்பட்ட நிலையில், முதன்முறையாக பிரதமர் மோடி தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் தேர் 59 அடி உயரமும், 200 டன் எடையும் கொண்டதாகும். அருணாசலேஸ்வரர் தேர் ரூ.70 லட்சம் மதிப்பில் புனரமைக்கப்பட்டு உள்ளது.
அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழாவும் ஒன்றாகும். இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா அடுத்த மாதம் (டிசம்பர்) 1-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
விழாவில் டிசம்பர் 4-ந்தேதியன்று கொடியேற்றமும், 10-ந்தேதி பஞ்சமூர்த்திகள் தேரோட்டமும், 13-ந்தேதி காலையில் கோவிலில் பரணி தீபமும், மாலை 6 மணி அளவில் கோவில் பின்புறம் உள்ள மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.
****
ஆந்திரா உள்துறை இலாகாவையும் எடுத்து கொள்வேன்: பவன் கல்யாண் அதிரடியால் பரபரப்பு
ஆந்திர மாநில உள்துறை அமைச்சர் அனிதா சரியாக செயல்படாவிட்டால், அந்த பொறுப்பை நானே ஏற்க வேண்டிய நிலை ஏற்படும் என அம்மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் கூறியுள்ளார். கூட்டணி கட்சியையே அவர் விமர்சித்து உள்ளது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு ஆந்திர முதல்வராக வகித்து வருகிறார். கூட்டணி கட்சியான ஜனசேனா கட்சியின் பவன் கல்யாண் துணை முதல்வராக உள்ளார். தற்போது உள்துறை அமைச்சரையே விமர்சித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
சென்ற வாரம் 3 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
தனது தொகுதியான பிதாபுரம் பகுதியில் நடந்த கூட்டத்தில் பவன் கல்யாண் பேசியதாவது: ஆந்திராவில் அமைதியும், பாதுகாப்பும் குறிப்பிடத்தக்க அளவில் மோசமடைந்துள்ளது. உ.பி.,யில் யோகி ஆதித்யநாத் கையாள்வதுபோல், இங்கும் சட்டம் ஒழுங்கை கையாள வேண்டும்.
யோகி ஆதித்யநாத் போல் உள்துறை அமைச்சர் அனிதா செயல்பட வேண்டும். இல்லை என்றால் குற்றவாளிகள் மாற மாட்டார்கள். எனவே நீங்கள் மாறுவீர்களா இல்லையா என்பதை முடிவு செய்யுங்கள். இவ்வாறு பவன் கல்யாண் பேசினார்.
யோகி ஆதித்யநாத் உத்தர பிரதேசத்தில் 130 ரவுடிகளை போலீஸ் என்கவுண்டரில் தீர்த்துக்கட்டி அம்மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டியதை எல்லோரும் புகழ்ந்துகொண்டு இருக்கிறார்கள்; இதையே அமைச்சர் குறிப்பிட்டார் போலும்.
****
கடைசியாக, ஒரு வருந்தத்தக்க செய்தி
கடந்த சில ஆண்டுகளில் நமது ஞானமயம் நிகழ்ச்சியில் பக்திப் பாடல்களை பாடி நம்மை மகிழ்வித்த, லண்டன் மாநகர திருமதி அன்னபூரணி பஞ்சநதம் அவர்கள், வாரத் துவக்கத்தில் இறைவடிவனடி சேர்ந்தார். சில மணி நேரங்களுக்கு முன்னர் நடந்த அவரது தகனக் கிரியையில் ஞானமயம் நேயர்கள் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது ஓம் சாந்தி.
****
உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;
லண்டன் மாநகரிலிருந்து செய்திகளை வாசித்து வழங்கியவர் வைஷ்ணவி ஆனந்த் .
அடுத்த ஒளிபரப்பு நவம்பர் 17-ம் தேதி லண்டன் நேரம் ஒருமணிக்கும் இந்திய நேரம் மாலை ஆறரை மணிக்கும் நடைபெறும்.
If you google Do Animals Dream? you will come across some science reports from the past four years. What these people have now “discovered” is already in 2000 year old Sangam Tamil Literature!
Kalidasa , the greatest poet of India of India, who lived 2200 years ago have described the feelings of animals and plants in his dramas and Kavyas. His world-famous play Sakuntalam means ‘Bird Girl’. Shakespeare copied it to some extent and created Miranda , the island girl in The Tempest. (we get the word Sakuna for omens and auguries from that Sanskrit word.) But Kaliadasa sang about human dreams only.
Birds and animals do dream according to Sangam Tamil books. When the Brahmin Vishnu Sarma wrote Panchatantra fables, he really believed that animals do talk. That is why his fables spread far and wide.
Though I have noted down many dreams from ancient Sanskrit books, I have never come across animal dreams in Sanskrit; so, all the credits go to Tamils!
The oldest book in Tamil is Tolkappiam ; we see dreams of human beings in it
I give below the references for animal dreams from Sangam Tamil poems; they not only show they do dream but also tell us what they dream about!
கனவு நற்றிணை பாடல் 87; வௌவால் கனவு
Natrinai is one of the Sangam books with 400 verses. In the verse No.87 , we see a bat dreaming about the sour taste of gooseberries (amla in Sanskrit; nellikkay in Tamil)
The sharp teethed bat is dreaming while it was sleeping on the high branch of a mango tree standing inside a village. The poet says it is dreaming about the sour taste of the nelli fruits of the forests of the patron Alici.
****
யானையின் மதநீரை வண்டு/ தேனீ கனவு காண்டல்; அகநானூறு 132
In another anthology with 400 verses called Akananuru, in verse 132, the poet describes a beetle or bee dreaming about the rut of the elephants. Many poets including Kalidasa sing about the flow of rut in elephants and the bees swarming around it.
****
கடற்காக்கை இறால் மீனை கனவு காண்டல்; அகநானூறு 170
A sea gull is dreaming about prawns – is in Akananuru verse 170
****
கவரிமான் நிரந்தம் புல்லைப் பற்றி கனவு காணல் – பதிற்றுப் பத்து 11
And in Pathitruppaththu verse 11, we see the deer dreaming about a particular type of grass
In the later post Sangam books also, we come across animal dreams. In general, human dreams are more than animal dreams in Tamil literature.
We have at least 50 references to dreams in ancient Tamil literature; later we have innumerable dream references in Tamil epics, and devotional literature.
29 Dec 2011 — For instance, the Chandogya Upanishad (V 2-8-9) says seeing a woman in a dream means a previous sacrifice (fire ceremony) was successful. But it …
31 Jul 2015 — Eating crocodile flesh, good; it means acting as an official among his people. Submerging in the river, good; it means purification of all evils.
–subham–
Tags- Animal dreams, Sangam literature, Tamil discovery
ஜஸ்டஸ் குண்டர் கிராஸ்மானுக்கு பன்னிரெண்டு குழந்தைகள் பிறந்தன; அவர்களில் மூன்றாவது குழந்தை ஹெர்மன் கிராஸ்மான்.
அப்பாவுக்குப் பிள்ளை தப்பாமல் பிறந்தான் என்ற ஆன்றோர் வாக்கின்படி ஹெர்மன் கிராஸ்மானுக்கும் 11 குழந்தைகள்!
கிராஸ்மான் கிறிஸ்தவ குருமார்கள் குடும்பத்தில் ஸ்டெட்டின் என்ற ஊரில் பிறந்தார் ப்ராட்டஸ்டண்ட் மதப்பிரிவின் கொள்கைகளை பயின்றார்; ஆனால் கணிதத்தில்தான் அதிக ஈடுபாடு.; சாகும்வரை கணித ஆசிரியராகவே பணியாற்றினார்; சம்ஸ்க்ருதத்தில் ஆர்வம் பிறக்கவே கணித மூளையைக் கொண்டு ரிக்வேதத்தைக் கணக்கிட்டார். அதை எளிய ஜெர்மன் மொழியில் மொழிபெயர்த்தார். தனக்காக ஒரு ரிக்வேத அகராதியைத் தயாரித்து வைத்துக்கொண்டார்; அதைப்பார்த்த அறிஞர்கள் இதை வெளியிடுங்கள் என்று வேண்டவே அதையும் அச்சிட்டார்.
ஒரு கணித மேதை எப்படி ஒரு விஷயத்தை அணுகுவாரோ அப்படி முறையாக அணுகித் தயாரித்த அகராதி அது; இவ்வளவுக்கும் அவர் சம்ஸ்க்ருத மொழியைப் பொழுதுபோக்குவதற்காகக் கற்றார். கடல் அலைகளின் ஏற்ற இறக்கம், கால்குலஸ் போன்ற அறிவியல், கணித விஷயங்களை புஸ்தகமாக எழுதி வெளியிட்டார். பின்னர்தான் சம்ஸ்க்ருத-கிரேக்க மொழிகளை ஒப்பிட்டு பழைய கொள்கைகளைத் தகர்த்தார் ; சம்ஸ்க்ருதம் பல மாறுதல்களை அடைந்த நிலையையே நாம் காண்கிறோம். இதை வைத்து இந்தோ- ஐரோப்பிய மொழி பற்றி முடிவு செய்யக்கூடாது என்பது கிராஸ்மானின் கொள்கை. ரிக்வேதத்தில் இடைச் செருகல்கள் என்று அவர் கருதிய விஷயங்களை பின்னுக்குத் தள்ளினார்.
மொழிகளின் மீது மட்டும் அவருடைய ஆர்வம் நிற்கவில்லை. பள்ளி மாணவர்களுக்காக தாவரங்களின் பெயர்கள் பற்றி புஸ்தகம் எழுதினார். நாட்டுப்புற பாடல்களையும் தொகுத்து வெளியிட்டார். பதினோரு பிள்ளைகளுக்கும் பாடம் சொல்லித் தருவதில் பெரும்பொழுதைச் செலவிட்டார்; இயற்பியல் பற்றியும் எழுதினார்.
இவருடைய நூல்கள் பற்றி பின்னர் ஸ்லகல் என்ற அறிஞர் எழுதினார். டியூபிங்கன் பல்கலைக் கழகம் அவருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியது .
இவருக்குப் புகழ் தேடித்தந்த கணித, மொழியியல் கண்டுபிடிப்புகள் :
Bivector
Color space
Grassmannian
Grassmann algebra
Grassmann number
Grassmann’s law
Grassmann’s laws
****
HERMANN GRASSMANN 1809-1877
ஹெர்மன் கிராஸ்மான்
பிறந்த தேதி – 15-4-1809
இறந்த தேதி – 26-9-1877
பிறந்த ஊர் – STETTIN ஸ்டெட்டின்
கல்வி கற்ற இடம் – BERLIN பெர்லின்
வேலைபார்த்த இடம் –பெர்லின் , ஸ்டெட்டின் கணித ஆசிரியர்
எழுதிய அல்லது மொழிபெயர்த்த நூல்கள்
Grassmann, Hermann (1844). Die Lineale Ausdehnungslehre (in German). Leipzig: Otto Wigand.
Grassmann, Hermann (1994). A New Branch of Mathematics. Translated by Kannenberg, Lloyd C. Open Court. pp. 9–297. ISBN 9780812692761.
Grassmann, Hermann (1847). Geometrische Analyse (in German). Leipzig: Weidmannsche Buchhandlung.
Grassmann, Hermann (1861). Lehrbuch der Mathematik für höhere Lehranstalten. Vol. 1: Arithmetik. Berlin: Adolph Enslin.
1862. Die Ausdehnungslehre. Vollständig und in strenger Form begründet.. Berlin: Enslin.
English translation, 2000, by Lloyd Kannenberg, Extension Theory, American Mathematical Society ISBN 0-8126-9275-6, ISBN 0-8126-9276-4
1873. Wörterbuch zum Rig-Veda. Leipzig: Brockhaus.
1876–1877. Rig-Veda. Leipzig: Brockhaus. Translation in two vols., vol. 1 published 1876, vol. 2 published 1877.
1894–1911. Gesammelte mathematische und physikalische Werke, in 3 vols. Friedrich Engel ed. Leipzig: B.G. Teubner.[11] Reprinted 1972, New York: Johnson.
ஜெர்மனியில் அப்பொழுது குழப்பமான அரசியல் நிலவியது; ஆகையால் சகோதரருடன் சேர்ந்து ஜெர்மனி ஜக்கியமாக வேண்டும் என்று எழுதினார்கள்; இதனால் அரசியல் விரோதத்தைச் சம்பாதித்தார்கள்.
கணிதத் துறையில் இவர் பல புதிய விதிகளைக் கண்டுபிடித்தார்; ஆனால் அதை உலகம் உணர்ந்து பாராட்டவே சில காலம் ஆயிற்று ; மொழிகள் விஷயத்தில் இவர் கண்டுபிடித்த விதி உடனே அங்கீகாரம் பெற்று கிராஸ்மான் விதி GRASSMAAN LAW என்று பெயர் சூட்டப்பட்டது.
—SUBAHM—
TAGS- GRASSMAAN LAW, HERMANN GRASSMANN , ஹெர்மன் கிராஸ்மான் கணித ஆசிரியர் , ரிக்வேதம், மொழிபெயர்ப்பு
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஹெல்த்கேர் அக்டோபர் 24 இதழ் கட்டுரை
மருத்துவத்தில் செயற்கை நுண்ணறிவு! வரமா, சாபமா?
ச.நாகராஜன்
வந்து விட்டது மருத்துவ ஏஐ!
நாளுக்கு நாள் வேகமாக முன்னேறி வரும் உலகில் இப்போது பரபரப்பை ஊட்டும் ஒரு புதிய நவீன தொழில்நுட்பம் செயற்கை நுண்ணறிவு எனப்படும் ARTIFICIAL INTELLIGENCE ஆகும் இதை சுருக்கமாக AI என்கிறோம். இது மருத்துவ உலகிலும் பயன்பாட்டிற்கு வந்து விட்டது. இதை HEALTHCARE AI என்கிறோம்.
ஹெல்த்கேர் ஏஐ என்றால் என்ன?
கணினியில் மனித அறிவுக்கு ஈடாக ஒரு விஷயத்தைப் பகுத்தாராய்ந்து ஏற்கனவே தனக்குக் கொடுக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் முடிவைத் தந்து சிகிச்சையை மேற்கொள்ள உதவும் ஒரு கணினி இயந்திர உத்தியே ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் எனலாம்.
இது சாபமா, அல்லது வரமா?
வரம் தான்!
வரம் தான் என்பதைக் கீழே உள்ள ஆதாயங்களால் அறிகிறோம்,
அதிகமான தரவுகள் கிடைக்கப்பெறுவதால் சிகிச்சை முறைகள் எளிமைப்படுத்தப் படுகின்றன.
நல்ல சிகிச்சை முறை நோயாளிக்குக் கிடைக்கிறது.
மருத்துவ செலவு கணிசமாகக் குறைகிறது.
ரேடியாலஜிஸ்டுகளுக்கு சமமாக சிகிச்சை சம்பந்தமான ஸ்க்ரீன் அறிக்கைகள் தயாராகின்றன.
திரும்பவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது வெகுவாகக் குறைகிறது.
ஆரம்ப சிகிச்சையில் அதிக கவனம் உண்டாகிறது.
இறப்பு விகிதம் குறைகிறது.
நோயாளிக்குத் தகுந்தபடி சிகிச்சைத் திட்டம் அவரது இருப்பிடத்தையே சென்றடைகிறது. மருத்துவமனைச் செலவுகள் குறைகின்றன.
பக்கவாத நோயால் தாக்குண்டவர்களுக்கு உணர்ச்சி போய் விடுகிறது. ஏஐ மூலம் அவர்களின் தொடு உணர்ச்சி மீட்கப்பட்டிருக்கிறது. ஆகவே இது போன்ற ஆக்கபூர்வமான வழிமுறைகளை உலகம் வரவேற்கிறது.
வெள்ளம் பூகம்பம் போன்ற பேரிடர் காலங்களில் விபத்தில் சிக்கியுள்ளோரை மீட்பது என்பது சுலபமான காரியம் இல்லை. ட்ரோன்கள் போன்ற நவீன சாதனங்கள் கூட இடிபாடுகளில் சிக்கியோரை பற்றிச் சரியாகக் கண்டுபிடிக்க முடிவதில்லை. ஆனால் ஏஐ இரண்டே இரண்டு மணி நேரத்தில் இடிபாடுகளின் அடியில் சிக்கி இருப்பவர்களைச் சுட்டிக் காட்டி விடுகிறது. உடனடியாக மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டு அவர்கள் காப்பாற்றப்படுகின்றனர்! ஆகவே ஏஐ பயன்பாடு ஒரு வரம் தான்!
சாபமா?
இது ஒரு சாபமாக ஆகி விடுமோ என்று பயப்படுபவர்கள் கீழ்க்கண்ட அபாயங்களைச் சுட்டிக் காட்டுகின்றனர்.
இன்ஷூரன்ஸ் கம்பெனிகள் தங்களது கட்டணத்தை வெகுவாக உயர்த்திவிடக் கூடும்.
ஏஐ மூலம் செயல்படும் உதவியாளர்கள் ஏஐ சாதனங்கள் தரும் தரவுகளை நம்பியே முற்றிலுமாகச் செயல்படுவர்.தரவுகள் சிறிது தப்பாக இருந்தாலும் நோயாளி அபாயத்தின் உச்சத்தை அடைவார்.
தனிப்பட்ட ஒவ்வொரு நோயாளிக்கும் சிகிச்சை அளிப்பது சிக்கலான ஒன்று. அந்த நோயாளி பற்றிய கடந்த கால, நிகழ்கால அறிவு முற்றிலும் இதற்கு அவசியம். அவை அனைத்தையும் அலசி ஆராய்ந்து முக்கிய முடிவை எடுக்க வேண்டும். இது ஏஐக்கு சாத்தியமானதா?
கண்ணுக்கு நேரே எதிரே இல்லாத ஒரு மருத்துவ அறிவுரையை மெஷின் தர, அதன் அடிப்படையில் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. ஏராளமான அன்றாட மேம்பாடுகள், மருத்துவ உத்திகள், மருந்துகள் இவை அனைத்தும் செயற்கை நுண்ணறிவு சாதனங்களில் அன்றாடம் அப்-டேட் செய்யப்பட வேண்டும்.
பிரம்மாண்டமான ஜனத்தொகை, மிகப் பெரிய அளவிலான தரவுகள் ஆகியவற்றை அவ்வப்பொழுது பெறப்படுவதன் அடிப்படையில் உதவியாளர்களுக்குப் பயிற்சி அவசியம்.
சைபர் கிரைம் உலகம்
இப்போதைய உலகம் பற்றி நாம் நன்கு அறிவோம். சைபர் க்ரைம் என்று ஒரு தனிப்பிரிவே உண்டாகி விட்டது. மருத்துவ தரவுகளைத் திருடுவது, அதன் அடிப்படையில் தவறான தகவல்களைக் காண்பித்து பயமுறுத்திப் பணம் பறிப்பது, தரவுகள் தவறான குற்றம் புரிவோரின் கையில் சிக்கி நோயாளி ஆபத்திற்குள்ளாவது போன்ற இன்ன பிற அபாயங்களைத் தடுக்க வழி வகை இதுவரை இல்லை.
இனி ஏற்படுத்த வேண்டுமானால் அது மிகப் பெரிய காரியம்.
இதில் சைபர் க்ரைம் என்ற அம்சம் மிக முக்கியமானதாக ஆகிறது.
இப்போது ஒவ்வொரு நோயாளியும் அவ்வப்பொழுது பல்வேறு சோதனைகளை மேற்கொள்கிறார். டாக்டர்கள் அந்த சோதனைகளின் அடிப்படையில் அன்றாட மருத்துவ ப்ரிஸ்கிரிப்ஷனைத் தருகிறார். நோயாளியின் அனைத்து சோதனைகளையும் ஏஐ கையாள வேண்டும்.
கம்ப்யூட்டர் அட்டாக் எனப்படும் கணினியின் மீதான தாக்குதல்கள் இப்போது அதிகமாகி வருகின்றன. பல்வேறு புரோகிராம்களில் தவறுகள் ஏற்படுகின்றன. பல மென்பொருள்கள் எனப்படும் சாஃப்ட்வேர்கள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன.
ஏஐ இந்தத் தவறுகளை பதினைந்தே நிமிடங்களில் இனம் கண்டு மருத்துவர்களுக்கு உதவி புரிகின்றன என்றாலும் இதையும் தவறாகப் பயன்படுத்துவோரை யார் கண்காணிப்பது?
சமீபத்திய திரைப்படத்தில் கூட ஒரு காட்சி இடம் பெறுகிறது. டாக்டர் ஒருவர் தனது பயிற்சியில்லாத நர்ஸிடம் கூகிளைப் பார்த்துக் கொண்டே ஆபரேஷன் செய் என்று சொல்லி விட்டு தனது ‘ஃபேவரைட் கேமை’ விளையாடப் போய்விடுகிறார். நர்ஸ் முழிக்கிறார்.
டாக்டர்களே முக்கியம்!
ஆக ஏஐ வரமா, சாபமா என்பதை நிர்ணயிக்க நோயாளிகளிடம் ஒரு சர்வே எடுக்கப்பட்டது.
அதில் பங்கு கொண்ட அனைவரும் ஏஐ ஒரு வரம் தான் என்று உறுதிபடச் சொல்கின்றனர். கூடவே அவர்கள் சொல்வது எது எப்படியானாலும் டாக்டரின் முடிவே இறுதியானது. அவரையே நாங்கள் நம்புகிறோம் என்கின்றனர்.
கூகிளின் ஒரு ஆய்வுத் திட்டத்தில் ரொபாட் ஒன்று தன்னிச்சையாக முடிவை எடுத்ததைக் கண்ட ஆய்வாளர்கள் திடுக்கிட்டனர். கொடுக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையைத் தாண்டி ஒரு ரொபாட் தானாகவே ஒரு முடிவை எடுத்தால் என்ன ஆகும்? கூகில் இந்த ஆய்வுத் திட்டத்தை அத்தோடு முடித்துக் கொண்டு விட்டது. எல்லா ரொபாட்டுகளும் செயற்கை நுண்ணறிவு மூலம் மனித குலத்திற்கு போட்டியாகி எதிரிகளாகி விட்டால், மனித குலம் என்ன ஆவது?
பிரபல விஞ்ஞானியான ஸ்டீபன் ஹாகிங், “ செயற்கை நுண்ணறிவு மனித குலத்தையே அழித்து விடும்” என்று பயங்கர எச்சரிக்கையை விடுத்திருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மருத்துவ உலகில் செயற்கை நுண்ணறிவை வெற்றிகரமான ஒன்றாக ஆக்குவது டாக்டர்கள் கையிலும் நோயாளிகள் கையிலுமே தான் இருக்கிறது என்பதே உண்மை.