Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxx
SNR Article Index : DECEMBER 2023
DECEMBER 2023
1-12-23 12785 கொங்குமண்டல சதகம் – பாடல்கள் 6 & 7
2-12-23 12789 SNR Article Index : NOVEMBER 2023 3-12-23 12792 நிறைகுடம் தளும்பாது! 4-12-23 12795 இரண்டாம் உலகப் போர் யுத்தத் துளிகள்! – அத் 18 – ஹிட்லர் அழைத்த விஸ்வநாத சாஸ்திரி! 5-12-23 12799 இரண்டாம் உலகப் போர் யுத்தத் துளிகள்! -அத் 19 தவறான
மொழிபெயர்ப்பால் போடப்பட்ட அணுகுண்டு! 6-12-23 12803 வாழ்க்கையே வாழ்க்கையின் சாரம்! – ஒரு வரி
சுபாஷிதங்கள் 7-12-23 12806 நடாஷா டெம்கினா – அதீத உளவியலும் அதிசயங்கள்
கண்ட அறிஞர்களும்! – 2 8-12-23 12812 சுந்தரருக்கு விருந்து கொடுத்த வரலாறு – கொங்குமண்டல
சதகம் பாடல் 21 9-12-23 12814 தமிழுக்காகக் கொதிநெய்யில் கையை விட்டு சத்தியம்
செய்த ஆணூர்ச் சர்க்கரை! -கொங்குமண்டல சதகம் பாடல் 52. 10-12-23 12817 பாலஸ்தீனம் என்று ஒரு இடமே கிடையாது! 11-12-23 12820 முதலிக் காமிண்டன் என்ற விருதுப் பெயர் பெற்ற வீரன் –
கொங்குமண்டல சதகம் பாடல் 74. 12-12-23 12825 லவ குசரின் ஜன்ம பூமி சீரமைக்கப்படும்! 13-12-23 12827 நோய், சிகிச்சை, வைத்தியர், நோயாளி பற்றி ஆயுர்வேதம்
தெரிவிக்கும் அடிப்படை உண்மைகள்! ஹெல்த்கேர்
டிசம்பர் 2023 இதழில் பிரசுரிக்கப்பட்டுள்ள கட்டுரை. 14-12-23 12831 அப்பர் கூறும் நரிவிருத்தக் கதை! – தேவாரச் செல்வம் 15-12-23 12836 ஆசார்யர், தந்தை, தாய், சகோதரன், சகோதரன் பெருமை! 16-12-23 12840 ஊக்கம் தர ஒரு புலவன் பாரதி அடா! 17-12-23 12843 பலரது பார்வையில் அரை கிளாஸ் நீர்! 25-12-23 12846 லட்சம் பேரை ஊக்குவித்தவர்; ஆயிரக்கணக்கானோர் வாழ்வு
வளம் பெற வழி வகுத்தவர்! – 1, 2 and 3 26-12-23 12848 நிகோலா டெஸ்லா – ஏழு அறிவுரைகள்! 27-12-23 12852 காளத்தீ கண்டத்தே, நெற்றியிலே, கரத்திலே, அங்கமெங்கும்
In part eleven, rare pictures of Mahabalipuram, Kanchipuram temples are shown. Ellora Cave sculptures are given below.
xxxx
There are over 200 pictures in this YEAR 1928 book. I am posting them batch by batch. I remember posting pictures from two other German books in the past. This is the third German book, I am using.
Title -Der Indische Kulturkreis
By H G VON
K DOHRING
Title – Heilige Statten Indiens
By H V GLASENAPP
YEAR 1928, MUNCHEN
River Ganga descending from sky
above images are from Mahabalipuram
xxxx
Indra in Ellora
Kanchipuram Temple
—subham—
Tags- rare pictures, Mahabalipuram, Ellora caves, Kanchipuram, part 11, 1928 German book
கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள்- PART 46
கோவில் எண்கள் –67,68,69,70
கேரள மாநிலத்தில், தென் திசையை நோக்கி வர வர , திருவனந்தபுரம் வரை ஆயிரக்கணக்கான இந்துக் கோவில்களைக் காணலாம் . மாநிலம் முழுதுமுள்ள முக்கியக் கோவில்களை முதல் 40 பகுதி கட்டுரைகளில் கண்டோம். ஏனையவை விழாக்கள் மூலம் நிறைய பக்தர்களை இழுக்கின்றன. பகவதி , ஐயப்பன் , சிவன் விஷ்ணு கோவில் இல்லாத இடம் இல்லை . பல இடங்களில் சுப்ரமண்யர், மாரியம்மன் , பேச்சியம்மன் கோவில்களும் இருப்பது தமிழ்நாட்டின் தாக்கத்தைக் காட்டுகிறது . காலடி, சோட்டாணிக்கரா , த்ரிபுனித்துரா , த்ரிகக்காரா , எர்ணாகுளம் கோவில்களைக் கண்டோம் .மாதிரிக்காக மேலும் சில கோவில்களைக் காண்போம்.
67.கக்கூர் காளவயல் மாட்டுவண்டி ரேஸ்
எர்ணாகுளத்திலிருந்து 45 கி.மீ., பிரவம் என்னும் ஊரிலிருந்து 10 கி.மீ தொலைவில் காளை வயல் என்னும் அறுவடைத் திருவிழா பிப்ரவரி மாதம் நடக்கும். இதன் சிறப்பு என்னெவென்றால் மாட்டுவண்டி பந்தயமும் இரண்டு கோவில் அம்மன்கள் சந்திப்பும் ஆகும்.
எடப்பாரா , அம்பசேரி என்னும் இரண்டு ஊர்களில் கோவில் கொண்டுள்ள தேவிகள் விழாவன்று
கக்கூர் காளவயலில் சந்திப்பார்கள்; அவர்கள் இருவரும் சகோதரிகள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
கும்ப மாதத்தில் 4 நாட்களுக்கு விழா நடக்கும்.. மூன்றாம் நாள் விழாவில் தேவியர் சந்திப்பு நடக்கும். இரண்டு அம்மன்களும் பஞ்சவாத்யம், நாகஸ்வரம் முழக்கத்துடன் யானை மீது பவனி வருவார்கள்.பின்னர் அம்பசேரி கோவிலில் எழுந்தருளுவார்கள் ; மறுநாள் இரவில் அவரவர் கோவிலுக்குத் திரும்பிப் போவார்கள்.
பிரவம் மாட்டுவண்டி ரேஸ்
இந்த விழாவினை ஒட்டி அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டி ரிஷப வாஹனம் என்ற பெயரில் ஊர்வலமாக வரும். நிறைய நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் இடம்பெறும் . முக்கியமாக 40 மாட்டு வண்டிகள் பங்கேற்கும் பந்தயம்/ ரேஸ் நடைபெறும் . அத்தோடு ஐந்து நாட்களுக்கு விவசாயக் கண்காட்சியும் நடக்கும்.
68.பேச்சியம்மன், மாரியம்மன் கோவில்கள்
எர்ணாகுளம் மத்திய பஸ் நிலையத்துக்கு அருகில் ..பேச்சியம்மன் கோவில் இருக்கிறது (மதுரையிலும் வைகை ஆற்றங்கரைக்குச் செல்லும் வழியில் .பேச்சியம்மன் கோவில் இருக்கிறது. அந்தப் படித்துறைக்கே அம்மனின் பெயர்தான் ).
ஆண்டுதோறும் எட்டுநாள் விழா நடக்கும் கடைசி நாள் விழாவில் வளஞ்சசம்பலம் தேவி கோவிலிலிருந்து நையாண்டி மேளம், உடுக்கு இசையுடன் ஊர்வலம் புறப்படும்; அதி காலையில் கோவிலை அடையும் தீ மிதித்தல் அல்லது பூக்குழி இறங்குதல் எனும் அக்கினிப்பிரவேசம் முக்கிய சடங்கு ஆகும் . நிறைய நாட்டுப்புற இசைக்கலைஞர்கள் பங்கேற்பது தனிச் சிறப்பு ஆகும்
எர்ணாகுளம் திவான் ரோடு மாரியம்மன்- பத்ர காளி கோவில் நகரின் முக்கியக் கோவில்களில் ஒன்று. ஒரே கருவறையில் மாரியம்மனும் பத்ரகாளியும் இருப்பது தனித்துவம் மிக்கது.
ஆண்டுதோறும் 5 நாள் விழா நடக்கிறது கடைசி நாளன்று இரண்டு அம்மன்களும் இரண்டு யானைகளில் இரவு முழுதும் பவனி வருவார்கள். நையாண்டி மேளம், நாகஸ்வரம், பஞ்ச்ச வாத்யம் வாசிப்போர் தம் திறமையைக் காட்டுவார்கள். இரவில் பெண்கள் தட்டுகளை ஏந்தி வரும் தாளம் வரவு நடக்கும் கதகளி, ஓட்டந்துள்ளல் நடனங்கள் இடம்பெறும்.
எடப்பள்ளி மாரியம்மன் கோவில் 8 கிமீ தொலைவில் இருக்கிறது எட்டு நாள் விழாவில் 7ஆவது நாள் நடக்கும் கனலாட்டம் குறிப்பிடத்தக்கது. விரதம் அனுஷ்டிக்கும் மாரியம்மன் பக்தர்கள் தீ மீது நடனம் ஆடுவார்கள் அவர்கள் ஆவேசத்துடன் நடனம் ஆடுவது பார்ப்போர் மனதில் அச் சத்தையும் பக்தியையும் உண்டாக்கும். மாலையில் நடக்கும் காவடியாட்டத்தில் அம்மன் குடம், கரகம் முதலியனவும் சேரும்.
69.சுப்ரமண்ய சுவாமி கோவில்கள்
எர்ணாகுளம் குமரேஸ்வர சுப்ரமண்ய சுவாமி கோவில், பஸ் நிலையம் அருகில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் நடக்கும் ஒரு நாள் விழாவில் காவடியாட்டம், கரகாட்டம் இடம்பெறும். யானைகள் பவனியும் உண்டு
எர்ணாகுளம் நகரிலிருந்து 4 கி.மீ. தொலைவிலுள்ள வைத்திலா .சுப்ரமண்ய சுவாமி கோவிலில் மூன்று கர்ப்பகிரகங்கள் இருக்கின்றன. ஆங்கு .சுப்ரமண்ய சுவாமி , சிவ பெருமான், ஐயப்பன் தரிசனம் தருகிறார்கள். எட்டு நாள் விழா ஆராட்டுடன் நிறைவுபெறும். அப்போது 2 யானைகள் ஜெண்டை மேளம், பஞ்சவாத்யம் முழக்கத்துடன் ஆற்றுக்குச் செல்லும் .
தைப்பூசம் நாளன்று முருகனுக்கு விழா எடுப்பார்கள்; .மாலை முதல் நள்ளிரவு வரை காவடி ஆட்டம் நடக்கும் .
எர்ணாகுளத்திலிருந்து 12 கி.மீ தொலைவில் கும்பலாவில் ஒரு சுப்ரமணிய சுவாமி கோவில் இருக்கிறது.
அதன் பெயர் குமராலயம் கோவில் ஆண்டுதோறும் நடக்கும் ஆறு நாள் விழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தோளில் காவடி சுமந்து ஆடும் ஆட்டம் கண்கொள்ளாக் காட்சி ஆகும். மூன்று யானைகள் புடை சூழ காவடி ஆட்டக்காரர்கள் ஊர்வலமாகச் செல்லுவார்கள். 24 மணி நேரத்துக்கு விரதம் அனுஷ்டிப்போர் மட்டுமே காவடிகளை சுமக்கலாம் என்ற விதி இருக்கிறது.
பொன்னாக்கரா சுப்ரமண்ய சுவாமி கோவில் எர்ணாகுளம் அருகில் இருக்கிறது. ஆறு நாள் விழாவில் முக்கிய அம்சம் சூலந் தூக்கல் ஆகும். முருக பக்தர்கள் நாவிலும், கன்னத்திலும் காதுகளிலும் வேல் வடிவிலான சூலத்தைக் குத்திக்கொள்ளுவார்கள் முதல் இரண்டு நாட்களில் களமெழுத்துப்பாட்டும் கடைசி 4 நாட்களில் ஓட்டந்துள்ளல் நடனமும் நடக்கும். கரகம் காவடியாட்டம் முதலியன இடம்பெறும்.
கொச்சி கோட்டை ஸ்ரீ கார்த்திகேய கோவில், எடகொச்சி பரமேஸ்வர குமாரமங்கலம் கோவில் , மூவாட்டுப்புழா குமார பஜன தேவஸ்வம், இளம்குன்னபுழா சுப்ரமண்ய சுவாமி கோவில்களிலும் காவடியாட்டம் முதலியன நடக்கின்றன .
70.கொத்தமங்கலம் த்ரிகாரியூர் மஹாதேவ கோவில்
கொத்தமங்கலத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் பழமையான சிவன் கோவில் அமைந்துள்ளது பரசுராமர் உண்டாக்கிய கேரள சாம்ராஜ்யத்தில் 64 பகுதிகள் இருந்தன. அவற்றில் ஒன்றான தளி வட்டாரம் கி.பி. 800 முதல் 1100 வரை கேரளத்தின் தலைநகராக இருந்தது . இந்தப் பழைய சிவன் கோவிலில் பத்து நாள் விழா நடக்கும்.. முதல் 3 நாட்களுக்கு குறத்தியாட்டம் நடக்கும்; சாக்யர் கூத்து, பாடகம் ஆகியவையும் விழாவில் உண்டு. கடைசி மூன்று நாட்களில் இன்னிசை வாத்ய முழக்கத்துடன் யானை மீது சிவன் வலம் வருவார் .
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
யானையைப் பரிசாகப் பெற்ற புலவர் வீரராகவ முதலியார்!
ச.நாகராஜன்
இராமன் என்றொரு வள்ளல் வாழ்ந்து வந்தார். அவரைச் சந்தித்தார் கவி வீரராகவ முதலியார்.
அவரைப் பாடிப் புகழ்ந்தவுடன் ராமன் அவருக்கு பரிசாக ஒரு யானையைக் கொடுத்தார்.
யானையை வீட்டிற்குக் கொண்டு வந்தார் புலவர்.
வீட்டில் பாணி (பாடினியானவள்) அவரை நோக்கி, “பாணரே! இராமன் என்ற வள்ளலைப் பார்க்கச் சென்றிருந்தீரே! அவர் என்ன கொடுத்தார்? என்ன கொண்டு வந்தீர்” என்று கேட்டாள்.
அதற்குப் புலவர் பிரான் தான் கொண்டு வந்தது யானை என்று சொல்லாமல் யானைக்கு பரியாயப் பெயர்களான மாற்றுப் பெயர்களைக் கூறினார்.
ஒவ்வொரு பெயருக்கும் அதன் உண்மைப் பொருள் புரியாத அவரது மனைவி அவரைக் கிண்டல் செய்தாள்.
அது தான் இந்தப் பாடல்:
இம்பர்வா நெல் லையிரா மனையே பாடி
என்கொணர்ந்தாய் பாணாநீ யென்றாள் பாணி
வம்பதாங் களபமென்றேன் பூசு மென்றாள்
மாதங்க மென்றேன்யாம் வாழ்ந்தே மென்றாள்
பம்புசீர் வேழமென்றேன் றின்னு மென்றாள்
பகடென்றே னுழுமென்றாள் பழனந் தன்னைக்
கம்பமா வென்றெனற் களியா மென்றாள்
கைம்மாவென் றேன்சும்மா கலங்கினாளே
பாடலின் பொருள் :
பாணி – பாடினியானவள் (புலவரின் மனைவியானவள்)
பாணா – பாணனே
இம்பர்வான் எல்லை இராமனையே பாடி – இவ்வுலகமும் அவ்வுலகமும் தன் புகழின் எல்லைகளாகக் கொண்டு விளங்கும் இராமன் என்பவனைப் பாடி
நீ என் கொணர்ந்தாய் – நீ என்ன பொருள் கொண்டு வந்தாய்?
என்றாள் – என்று என்னை நோக்கி வினவினாள்
(அதற்கு விடையாக நான்)
வம்பது ஆம் களபம் என்றேன் – புதுமையாகிய களபம் என்றேன்
அதற்கு அவள்
பூசும் என்றாள் – அதைப் பூசுவீர் என்றாள்.
மாதங்கம் என்றேன் – மாதங்கம் என்று சொன்னேன்
நாம் வாழ்ந்தோம் என்றாள் – நாம் வாழ்ந்தோம் என்றாள்
பம்புசீர் வேழம் என்றேன் – மிக்க சிறப்பினை உடைய வேழம் என்று சொன்னேன்
தின்னும் என்றாள் – அதைத் தின்னுவீர் என்றாள்
பகடு என்றேன் – பகடு என்று சொன்னேன்
பழனம் தன்னை உழும் என்றாள் – வயலை உழுவீர் என்று சொன்னாள்
கம்பமா என்றேன் – கம்பமா என்று சொன்னேன்
நல் களி ஆம் என்றாள் – நல்ல களியைக் கிளறலாம் என்றாள்
கைம்மா என்றேன் – கைம்மா என்று சொன்னேன்
அதன் பொருள் தெரியாததால்
சும்மா கலங்கினாள் – சும்மா கலங்கி நின்றாள்
பாடலில் வரும் சொற்களுக்கு இரு பொருள் உண்டு. வரிசையாகப் பார்ப்போம்.
களபம் என்றாள் யானை. ஆனால் பாடினி புரிந்து கொண்டதோ களபச் சந்தனம் என்று. ஆகவே இவ்வளவு தானா, அதை எடுத்துப் பூசும் என்றாள் அவள்.
உடனே புலவர் மாதங்கம் என்று யானையைச் சொன்னார். மா தங்கம் என்று புரிந்து கொண்ட பாடினி உயர்ந்த பொன்னையா கொண்டு வந்தீர் நாம் வாழ்ந்தோம் என்றாள்.
புலவர் வேழம் என்றார். வேழத்திற்குக் கரும்பு என்று பொருள் கொண்ட பாடினி அதைத் தின்னும் என்றாள்.
புலவர் பகடு என்று யானையைக் கூறினார். பகடுக்கு எருமை என்ற பொருள் கொண்ட பாடினி அதனால் வயலை நன்கு உழுவீர் என்றாள்.
புலவர் கம்பமா என்றார். கம்பமா என்பதற்கு கம்பை அரைத்துச் செய்த மா என்று பொருள் கொண்ட அதை வைத்து நன்கு களி கிளறலாம் என்றாள்.
கடைசியாக புலவர் கைம்மா என்று கூறினார்.
கைம்மாவிற்குப் பொருள் விளங்காத மனைவி சும்மா கலங்கி நின்றாள்.
பின்னர் புலவர் யானையைக் காண்பிக்க மனைவி மகிழ்ந்தாள்.
இன்னொரு வள்ளல் அவருக்குத் தானன் என்று பெயர். அவரும் புலவருக்கு ஒரு யானையைப் பரிசாகத் தந்தார்.
புலவர் பாடினார்:
இல்லெனுஞ் சொல் லறியாத சீகையில் வாழ் தானனைப் போயாழ்பாணன் யான்,
In part ten, rare pictures of Thanjavur, Srirangam temples, Trichy Rockfort, Jambukeswaram and Kumabakonam temples are shown. Chidambaram temple, tank and mandap are pictured
xxxx
There are over 200 pictures in this YEAR 1928 book. I am posting them batch by batch. I remember posting pictures from two other German books in the past. This is the third German book, I am using.
Title -Der Indische Kulturkreis
By H G VON
K DOHRING
Title – Heilige Statten Indiens
By H V GLASENAPP
YEAR 1928, MUNCHEN
above pictures are from Thanjavur temple
above are from Chidambaram Temple
above pictures are from Trichy, Srirangam and Jambukeswaram Temples
Tiruvannamalai towers
Kumbakonam Temple
—subham—
Tags- rare pictures, Thanjavur, Chidambaram, Trichy, Srirangam, Kumbakonam, part 10, 1928 German book
கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள்- PART 45
கோவில் எண்கள் –63,64,65, 66
63.அனந்த பத்மநாப சுவாமி கோவில் முதலை
காசர்கோடு மாவட்டம் கும்பளா பகுதியில் – அனந்தபுரத்தில் அனந்த பத்மநாபசுவாமி கோயில் உள்ளது.
அங்குள்ள குளத்தில் பபியா என்ற பெயருள்ள முதலை 75 ஆண்டுகளாக சைவ முதலையாக வசித்து இறந்தவுடன் உலகம் முழுதும் அந்தச் செய்தி பரவியது. ஏனெனில் சாதாரணமாக முதலைகள் மாமிச உணவையே உண்ணும். அந்த முதலையோ கோவிலில் அர்ச்சகர் தரும் பிரசாதத்தை மட்டுமே உண்டு வாழ்ந்தது. அதே குளத்தில் சரியாக ஓராண்டுக்குப் பின்னர் நவம்பர் 2023-ல் மேலும் ஒரு முதலை தோன்றியவுடன் மேலும் அதிசயச் செய்திகள் பரவின. ஏனெனில் சாதாரணமாக முதலைகள் வசிக்காத வட்டாரம் அது
கோவிலில் சயன கோலத்தில் பாம்பு மீது விஷ்ணு அறிதுயில் செய்வதைக் காணலாம் .
ஆண்டுதோறும் மார்ச்மாதம் தெப்பத் திருவிழா நடக்கும் ; இரவில் கர்நாடக யக்ஷகானம் நடைபெறும் .
கர்நாடக எல்லையில் உள்ள மாவட்டம் . காசர்கோடு
64.பார்த்தசாரதி-கிருஷ்ண தேவ கோவில்
கும்பலா நகரிலிருந்து 5 கி.மீ .தொலைவில் பார்த்தசாரதி கோவில் இருக்கிறது அர்ஜுனனுக்கு தேரோட்டிய கிருஷ்ணனை பார்த்த சாரதி= டிரைவர் கிருஷ்ணா என்கிறோம்.
இங்கு பிப்ரவரி மாததத்தில் 7 நாள் விழா நடக்கும். அப்போது கர்நாடக யக்ஷகான கலைஞர்கள் புராண இதிஹாஸக் காட்சிகளை நாட்டிய நாடகமாகக் காட்டுவார்கள் ஒவ்வொரு ஆண்டும் துலா மாதப்பிறப்பில் நடக்கும் விழாவுக்கு பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் வருகிறார்கள் ; இரவு முழுதும் யக்ஷகானத்தைக் கண்டு களிப்பார்கள் .
65.மதூர் விநாயகர் கோவில் Madhur Sree Madanantheshwara-Siddhivinayaka Temple i
காசர்கோடு நகரிலிருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் மதுவாகினி நதிக்கரையில் சிவன் கோவில் இருக்கிறது. கோவில் சிவனுக்குகானதாக இருந்தாலும் அங்குள்ள விநாயகர் மூலமே கோவில் பிரபலம் ஆகியுள்ளது
சிவ பெருமானின் பெயர் மதானந்தேஸ்வரர். அதாவது மதமாச்ச்ர்யங்களை வென்ற இறைவன்.
சிவபெருமானின் கருவறைக்குள், பார்வதி தேவியும் வீற்றிருக்கிறார். கருவறைக்கு தெற்கே அமைந்துள்ள சித்தி விநாயகர் மிகவும் வரப்பிரசாதம் உடையவர் ; நினைத்த வரங்களை அருளுவதால் அப்பாவை வீட பிள்ளைக்கு—பிள்ளையாருக்கு, பெருமை
குன்றுகளும் நெல் வயல்களும் தோப்பு துறவுகளும் நிறைந்த வட்டாரத்தில் கோபுரம் கம்பீரமாக உயர்ந்து நிற்கிறது கூரையை செப்புத தகடுகளால் வேய்ந்துள்ளனர்.
கேரள- கர்நாடக கட்டிடக்கலை பின்னிப் பிணைந்த அமைப்பினைக் கண்டு ரசிக்கலாம். இரண்டு அடுக்கு கோபுரம் கொண்ட கருவறையின் வெளிப்புறச் சுவர்களில் கண்கவரும் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. கேரள கோவிலுக்குப் புறம்பான சடங்குகளையே கோவிலில் பின்பற்றுகிறார்கள். ஏப்ரல் மாதத்தில் 5 நாள் விழா நடக்கும் . நாலாம் நாள் விழாவில் இறைவன் உருவம் கொண்ட திடம்பு ஒன்றரை மைல் தொலைவுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும் . பல்ல்லாயிரக் கணக்கான பக்தர்கள் பங்கேற்கும் விழாவில் அருகாமை மாநிலமான கர்நாடக யக்ஷகான இசைக்கலைஞர்கள் நாட்டிய நாடகங்களை நடித்துக் காட்டுவார்கள்.
ஆனந்தாசிரமம், என்னும் புகழ்பெற்ற ஆஸ்ரமம் 1931ம் ஆண்டில் சுவாமி பாப்பா ராமதாஸால் துவக்கப்பட்டது. காஞ்சங்காடு நகரிலிருந்து சுமார் 5 கி.மீ தொலைவில் தேசிய நெடுஞ்சாலையின் ஒரு சந்திப்பில் அமைந்துள்ளது. அவருடன் கிருஷ்ணாபாய் என்ற அன்னையும் இருந்து அருளுரை ஆற்றி வந்தனர் .காஞ்ஞங்காடு அல்லது காஞ்சங்காடு என்று அழைக்கப்படும் ஊர் கேரள- கர்நாடக எல்லையில் இருக்கிறது .
ஆசிரமத்தின் துவக்க விழாவின் போது, சுவாமி ராம்தாஸ் ஆசிரமத்தின் நோக்கத்தை விவரிக்கும் ஒரு சிற்றுரையை நிகழ்த்தினார்: “ஆசிரமத்தின் இலட்சியமானது உலகளாவிய அன்பும் சேவையுமே ஆகும். இது உலகின் அனைத்து உயிர்களிலும் தெய்வீகப் பார்வையை அடிப்படையாகக் கொண்டது . இங்கே ஆண், பெண், குழந்தை என அனைவரும் எந்த சமயத்தை சாதியையும் சேர்தவர்களாக இருந்தாலும் அனுமதிக்கபடுவர். பரஸ்பரம் அன்பு, சேவை உணர்வு போன்றவற்றை வளர்ப்பதற்கு முயலும் இடமாக இருக்கும், இதன் மூலம் இதன் எல்லைக்குள் உணரப்படுவது வெளி உலகில் மனித வாழ்க்கைக்கு சரியான ஒரு நடத்தைக்கு எடுத்துக்காட்டாக இருக்கும் (this para is from Wikipedia).
மடியன் கோவிலகம்
நகரில் மடியன் கோவிலகம் இருக்கிறது .அங்கு க்ஷேத்ர பாலகனும் காளராத்ரி அம்மா என்னும் பத்ரகாளியும் உறைகின்றனர்; பாட்டுற்சவம் என்ற 9 நாள் ஆண்டு உற்சவம் கலை நிகழ்ச்சிகளுடன் நடக்கும் . கோவிலில் மதியத்தில் பிராமணரும் மற்ற நேரங்களில் பிராமணர் அல்லாதோரும் பூஜிக்கும் வினோத வழக்கம் இங்கு பின்பற்றப்படுகிறது . 500 ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு உடைய கோவில் இது.
மண்டியோட்டு தேவாலயம்
ஊரிலிருந்து 2 கி.மீ தொலைவிலுள்ள மண்டியோட்டு தேவாலயத்தில் ஆண்டுதோறும் இரண்டு விழாக்கள் நடக்கின்றன. 4 நாள் விழாவில் 7 வகை தெய்யம் நடனங்களில் 7 தெய்வங்களைக் காட்டி ஆடுவது இந்தக் கோவிலில் சிறப்பு .
9 நாள் நடக்கும் விழாவில் பூரக்களி நடனம் நடக்கும். ஜனவரி, மார்ச் மாதங்களில் இவை நடக்கின்றன.
காசர்கோடு நகரில் இருக்கும் மல்லிகார்ஜுன சிவன் கோவிலும், காஞ்சன் காட்டு அணியல் தெரு பகவதி கோவிலும் இந்த வட்டாரத்திலுள்ள மேலும் இரண்டு முக்கியக் கோவில்கள்.
–SUBHAM—
Tags- அனந்த பத்மநாப சுவாமி கோவில், முதலை ,பார்த்தசாரதி, கிருஷ்ண தேவ கோவில் , மதூர் விநாயகர் கோவில் ,காஞ்சங்காடு, ஆஸ்ரமம், காசர்கோடு
There are over 200 pictures in this YEAR 1928 book. I am posting them batch by batch. I remember posting pictures from two other German books in the past. This is the third German book, I am using.
In part eight, rare pictures of Sringeri Shankaracharyas, Stone Chariot at Hampi, Drawings of Hindu Gods, and Madurai Nayak paintings are posted.
xxxx
Picture: Indra on Airavata
Title -Der Indische Kulturkreis
By H G VON
K DOHRING
Title – Heilige Statten Indiens
By H V GLASENAPP
YEAR 1928, MUNCHEN
Sringeri Shankaracharyas 100 years ago.
Sandstone idol from Prayag
MaduraiStone elephant
Madurai Temple Paintings from Nayak Period
Hampi Stone Ratha
Halabedu Sculptures
Hanuman in Bronze
—subham—
Tags- Rare Pictures, German bok 1928, Sringeri Acharyas, Halabedu, Hampi, Madurai, Nayak Paintings
கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள்- PART 44
கோவில் எண்கள் –59, 60, 61, 62
59. லோகாம்பிகை கோவில்
கேரள மாநில கோழிக்கோடு வட்டாரக் கோவில்களில் மிகவும் முக்கியமானது லோக மகாதேவி கோவில் . இந்தக் கோவில் பல வகைகளிலும் உன்னதமானது .
சங்க இலக்கிய புலவர்களில் ஒருவர் பெயர் சங்க வருணர் நாகரியர். அவர் வடநாட்டிலிருந்து வந்தவர் என்பதை அவர் பெயரே காட்டும். அந்த நாகரியர் வம்சத்தினர் கட்டிய கோவில் இது .அந்தப் புலவர் புறநானூற்றின் 360ஆவது பாடலை யாத்தார்; அது தத்துவப் பாடல்; உலக நிலையாமையை, தந்து மாறன் என்பவனுக்கு எடுத்துச் சொல்லி, அறம் செய்க என்று வலியுறுத்தும் பாடல் .
இதை மெய்ப்பிக்கும் மற்றோர் சான்று தெய்வத்தின் பெயர் லோக மஹா தேவி; தமிழின் புகழை தென் கிழக்கு ஆசியா முழுதும் பரப்பிய ராஜ ராஜனுக்குப் பல மனைவியர் உண்டு. அவர்களில் பட்டத்து அரசியின் பெயர் லோக மகா தேவி ; அது வடகரா கோவில் தெய்வத்தின் பெயர்; அவளுக்கு மற்றும் ஒரு பெயர் தந்தி சக்தி விடங்கி; உலகம் புகழும் தமிழ் அறிஞர் டாக்டர் இரா. நாகசாமி எழுதிய யாவரும் கேளிர் நூலில் சோழர் புகழ் உள்ளது
மூன்றாவது சான்று புறநானூற்றுப் புலவர் கருவூர் பெருஞ் சதுக்கத்துப் பூத நாதனார் பெயரில் உள்ளது அவர் 291ஆவது பாடலை இயற்றியவர். வடகரா கோவிலிலும் பூதத் தேவர் சந்நிதி இருக்கிறது; சேர நாட்டின் புகழ் பாடும் சிலப்பதிகார காவியத்தில் சதுக்க பூதம் பற்றிய சுவையான கதைகள் நிறைய உள்ளன. கருவூர் என்பது சேர நாட்டின் தலைநகர் என்பதும் குறிப்பிடத்தக்கது
ஆக தமிழ் இலக்கியத்துக்கு உரை எழுதியது போல வடகரா கோவில் தெய்வங்களின் பெயர்கள் உள்ளன.
கோவில் எங்கே இருக்கிறது?
வடகரா கோவில் இருக்கும் இடம் லோகனார் காவு ; இது வடகராவிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் மீமுண்டா என்னும் சிற்றூ ரில் அமைந்துள்ளது.
கோழிக்கோட்டிலிருந்து 48 கிலோ மீட்டர் தூரத்தில் வடகரை அமைந்துள்ளது. , கண்ணூர் நகரத்திலிருந்து 44 கி.மீ.
சுவையான கதைகள்
மூகாம்பிகை கோவில் வரலாற்றை அறிந்தோருக்கு ஒரு உண்மை விளங்கும் தேவி சொல்கிறாள்; நான் பின்னாலேயே வருவேன்; ஆனால் திரும்பிப் பார்க்கக்கூடாது ; அதாவது நம்பிக்கை இழக்கும்போது சந்தேகம் வரும்; அப்படி வந்தால் இறைவன் கண்ணுக்குத் தெரிய மாட்டான் . இதே கதைதான் துர்கா என்றும் பகவதி என்றும் பத்ரகாளி என்றும் (எல்லாமே பார்வதியின் பெயர்) வணங்கப்படும் லோகாம்பிகை அம்மன் கதையும் .
வடக்கிலிருந்து வந்த நாகரியர் மக்களின் குல தெய்வம் அவள் ; நான் பின்னால் வருவேன் திரும்பிப் பார்க்கக்கூடாது என்கிறாள் லோகாம்பிகை
போகும் வழியில் கிராம மக்கள் யார் அந்தப் பெண்? என்று வினவவே ஒருவன் திரும்பிப் பார்க்கிறான். தேவி லோகாம்பிகை மறைந்து விடுகிறாள் பின்னர் அந்த இனத் தலைவன் ஒரு அம்பு விட்டு அது விழும் இடத்தில் தேவிக்கு கோவிலை எழுப்பினான்.
சம்ஸ்க்ருத மொழியில் லோகாம்பிகை, ஜகதாம்பிகை , உலகமகா நாயகி என்பன ஒரே பொருளடைத்து .
அம்மன் சன்னிதிக்கு வடக்குப் பக்கம் சிவன், விஷ்ணு ஆகியோருக்குத் தனித்தனிச் சன்னிதிகள் உள .
கோவிலின் வடக்கு வாசலில் மேற்கூரையற்ற சன்னிதி ஒன்றில் கோவிலுக்குப் பாதுகாப்பு தரும் தெய்வமாகப் பூதத்தேவர் கோவில் இருக்கிறது
விருச்சிகம் (கார்த்திகை) மாதம் தொடங்கி 41 நாட்கள் வரை மண்டல விளக்குப் பெருவிழா (மண்டல உற்சவம்) நடைபெறும். பங்குனி என்னும் மீனம் மாதத்தில் எட்டு நாட்கள் மீனம் விழா நடைபெறுகிறது.
மேலும் ஒரு சிறப்பு களரிப்பயிற்று அல்லது களரிப்பயட்டு
சேர நாட்டுக்கே உரித்தான தற்காப்புக் கலையை களரிப்பயிற்று அல்லது களரிப்பயட்டு என்று சொல்லுவார்கள் மலையாள மொழி வழங்கும் பகுதிகளில் மட்டும் இக்கலை உள்ளது இந்தக் கலையைப் பயிலுவோர் அரங்கேற்றம் செய்ய வரும் கோவில் லோகனார் காவு ஆகும். தேவியின் அருள் பெற்றால்தான் வெற்றி கிட்டும் என்பது வீரர்களின் நம்பிக்கை.
வாள், கத்தி, சுருள்வாள், மான்கொம்பு, கண்டகோடாலி, மழு போன்ற ஆயுதங்களை களரி விளையாட்டில் பயன்படுத்துவர்.
XXXX
60. தச்சோளி ஒதேனன் மணிக்கோத் கோவில்
வடகராவிலிருந்து 2 கி.மீ தொலைவில் ஒரு மனிதனுக்கு , வீரனுக்கு அமைக்கப்பட்ட கோவில் இது.
களரிபயட்டுக் கலையில் மிகப்பெரும் வீரனாக விளங்கியவன்
தச்சோளி ஒதேனன்/ ஒதனன்; பல மோதல்களில் வெற்றி வாகை சூடியவன் . பல நூற்றாண்டுகளாக கிராம மக்கள் அவன் புகழை நாட்டுப்புறப் பாடல் வடிவில் பாடி வருகின்றனர் ; அவைகளை வடக்கன் பாட்டுக்கள் என்று சொல்லுவர் . பாடல் பாடுவதோடு நிறுத்தாமல் அவனுக்கு ஒரு கோவிலைக் கட்டி, அதில் அவனுடைய முழு உருவச் சிலையையும் வைத்துள்ளனர் .
ஆண்டுதோறும் இரண்டு நாள் விழா நடக்கும். முதல் நாளில் தீர என்னும் நடனம் நடக்கும் ; லோகநார்காவு கோவிலில்தான் ஒதனன் வழிபட்டதால் அங்கிருந்து ஒரு விளக்கு கொண்டுவரப்படும். நூற்றுக் கணக்கான களரி பயற்று வீரர்கள், கத்தி கேடயங்களுடன் வீரர் உடையில் அணிவகுத்து வருவார்கள்.
இரண்டாம் நாள் விழாவில் ஒதனன் பயன்படுத்திய வாள் , ஊர்வலமாக கோவிலுக்குக் கொண்டுவரப்படும். பின்னர் திரயாட்டம் நடக்கும். அதில் பல்வேரு வீரர்களும் சாகசச் செயல்களை செய்து மக்களை வியப்பில் ஆழ்த்துவார்கள். இரவில் தச்சோளி களி நடைபெறும்.
பகவதி கோவில் மூலமாகவும். களரிப் பயட்டு மூலமாகவும் தென் இந்தியா முழுதும் லோகார்க்காவு புகழ் பரப்பி வருகிறது .
61.கோழிக்கோடு தளி சிவன் கோவில்
கோழிக்கோட்டில் நகரின் நடுவேயுள்ள தளி சிவன் கோவில் பழமையும் , புனிதமும் உள்ள கோவில்; அதை சுவாமி திருமுலபாத் கட்டினார் . சுமார் 700 ஆண்டு வரலாறு நமக்கு கிடைக்கிறது .ரேவதி பட்டதானம் என்னும் சம்ஸ்க்ருத சொற்பொழிவு நடக்கும் இடம். ஏப்ரல் மாதத்தில் எட்டு நாள் விழா நடக்கும் .எல்லா நாட்களிலும் இறைவனை ஊர்வலமாக எடுத்துச் செல்லுவார்கள் .
62.கணபதி கோவில்கள்
வடகராவில் தெரு கணபதி கோவிலும், கோழிக்கோட்டிலிருந்து 18 கி.மீ. தொலைவில் திருவாங்கூர் கணபதி கோவிலும் இருக்கின்றன .விழாவில் தெய்யம் நடனம் நடக்கிறது. சிவராத்திரி உற்சவம் பெரிய அளவில் நடக்கிறது.
63.திருவாங்கூர் நரசிம்ம, பார்த்தசாரதி கோவில்
இந்த நரசிம்ம மூர்த்தியின் கோவிலின் ரதோத்ஸவம் மிகவும் புகழ்பெற்றது. இங்கு 7 நாள் உற்சவம் நடக்கிறது. . நாலாவது நாள் நடக்கும் தேர்த் திருவிழாவுக்கு பல்லாயிரக் கணக்கானோர் வருகிறார்கள் பார்த்தசாரதியும், நரசிம்ம மூர்த்தியும் தேரில் இடம்பெறுவார்கள்.
—subham—
Tags- தமிழ் ரகசியம், லோகார்க்காவு, லோகாம்பிகை, தளி , சிவன் கோவில், நாகரியர், களரிப்பயிற்று ,களரிப்பயட்டு, Kalaripayattu, Martial art