முருகனைப் பழித்தவர்கள் அழிவார்கள் ! திருத்தணி என்ற பெயர் எப்படி வந்தது ?- 17 (Post.15,413)

Written by London Swaminathan

Post No. 15,413

Date uploaded in Sydney, Australia –  11 February 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part 17

திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 17

***

திருத்தணி திருப்புகழ் பாடல்கள்

ஏது புத்திஐ யாஎனக்கு … எனக்கு புத்தி ஏது ஐயனே?

இனி யாரை நத்திடுவேன் … இனிமேல் நான் யாரைச் சென்று

விரும்பி நாடுவேன்?

அவத்தினிலே யிறத்தல்கொலோ … வீணாக இறப்பதுதான் என்

தலைவிதியோ?

எனக்குனி. தந்தைதாயென்றேயி ருக்கவு … எனக்கு நீயே தாயும்

தந்தையுமாக இருந்தும்

நானு மிப்படியே தவித்திடவோ … நான் இந்த விதமாகவே

தவித்திடலாமா?

சகத்தவரேசலிற்படவோ … உலகத்தவரின் இகழ்ச்சி மொழிக்கு நான்

ஆளாகலாமா?

நகைத்தவர் கண்கள்காணப் பாதம் வைத்திடு ஐயா … என்னை

இகழ்ந்து சிரிப்பவர்களின் கண்ணெதிரே என்னை உன் திருவடிகளில்

சேர்த்துக்கொள் ஐயனே*,

தெரித்தெனை தாளில் வைக்கநியேம றுத்திடில் … என் நிலை

தெரிந்தும் என்னை உன் திருவடிகளில் சேர்க்க நீயே மறுப்பாயாகில்,

பார்நகைக்குமையா … உலகோர் நகைப்பார்கள் ஐயனே,

தகப்பன்முன் மைந்தனோடி … தந்தையின் முன் குழந்தை

ஓடிச்சென்று,

பால்மொழிக் குரல் ஓல மிட்டிடில் … பால் மணம் மாறாத வாயால்

குரலெழுப்பி அழுதால்,

யாரெ டுப்பதெனாவெ றுத்தழ … இந்தக் குழந்தையை யார்

எடுப்பதென்று வெறுத்து, அழும்படியாக

பார்வி டுப்பர்களோ … இப்பூமியிலே விட்டு விடுவார்களோ?

எ னக்கிது சிந்தியாதோ … எனக்கு இந்த உண்மை சிந்தையிலே

தோன்றலாகாதோ?

அழுதால் அவனைப் பெறலாமே ;  மாணிக்க வாசகரும் இப்படிக்கு கதறுகிறார்

இதோ மாணிக்கவாசகரின் கதறல்:–

யானே பொய் என் நெஞ்சும்

பொய் என் அன்பும் பொய்

யானால் வினையேன் அழுதால்

உன்னைப் பெறலாமே

தேனே அமுதே கரும்பின்

தெளிவே தித்திக்கும்

மானே அருளாய் அடியேன்

உனைவந்துறுமாறே

பொருள்:-

“தேனும் அமுதமும் கருப்பஞ்சாறும் போலட் தித்திக்கும் பெருமானே! அடியேன் உன்னை வந்து அடையும் உபாயத்தினை அறிவித்து அருள்வாயாக. யானும், என் நெஞ்சும், அன்பும் பொய். ஆனாலும் வினையேனாகிய யான் அழுதால் உன்னை அடையலாமா?”

ஒரு பக்தர் பரமஹம்சரிடம் கேள்வி கேட்டார்: கடவுள் தரிசனத்தை எப்படிப் பெறுவது?

ராமகிருஷ்ண பரமஹம்சர்:

உருகிய உள்ளத்துடன் உன்னால் அழமுடியுமாமனைவிமக்கள்பணம் இவற்றுக்காக மக்கள் குடம் குடமாகக் கண்ணீர் விடுகிறார்கள். ஆனால் கடவுளைக் காணவேண்டும் என்று அழுபவர் யார்குழந்தைவிளையாட்டுப் பொருட்களோடு விளையாடும் வரை தாயார்சமையல் முதலிய வேலைகளைச் செய்கிறாள். இதர அலுவல்களையும் கவனிக்கிறாள். விளையாட்டு பொம்மைகள்குழந்தையின் பசியைப் போக்குவதில்லைஎனவே அவைகளைத் தூக்கி எறிந்துவிட்டுக் குழந்தை ‘கோவென்று கத்தி அழுகின்றது. உடனே தாய் என்ன வேலை செய்து கொண்டிருந்தாலும்சாதம் பாதி வடித்துக் கொண்டிருந்தாலும் கூட அதை அப்படியே விட்டுவிட்டு ஓடிவந்து குழந்தையை எடுத்து தன் மார்போடு அணைத்துக் கொள்கிறாள்”.

இத்தகைய அன்புஇறைவனிடத்திலும் இருக்கவேண்டும் என்பார் பரமஹம்சர். அப்படியிருந்தால்அழும் குழந்தையிடம் தாயார் ஓடிவருவதுபோல இறைவனும் ஓடிவருவார் என்கிறார்.

***

த்வமேவ மாதா ச பிதா த்வமேவ

சம்பந்தரும் சொன்னார் !

திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம்

தலம்    திருவலிவலம்

தாயும் நீயே தந்தை நீயே

    சங்கரனே அடியேன்

ஆயும் நின்பால் அன்பு செய்வான்

    ஆதரிக்கின்றது உள்ளம்

ஆயமாய காயம் தன்னுள் 

    ஐவர் நின்று ஒன்றலொட்டார்

மாயமே என்று அஞ்சுகின்றேன் 

    வலிவலம் மேயவனே.

ஆதி சங்கரரும் மாத்ரு பஞ்ச்கத்தில் தாயைப் புகழ்கிறார்

***

விபூதியின் மஹிமை


மெய் வேத லக்ஷுமியைச் சிறை விட்டு அருள் வீர

அச்சுதனுக்கு நல் அற்புத மருகோனே … சத்திய வேத

சொரூபியான லக்ஷ்மிதேவியாகிய சீதையை சிறையினின்றும்

விடுவித்து அருளிய வீரம் பொருந்திய ராமருக்குச் சிறந்த மருகனே.

நீலி நிட்களி நிர்க்குணி நித்தில வாரி முத்து நகைக் கொடி

சித்திர நீல ரத்தின மிக்க அறக் கிளி புதல்வோனே … கரு நிறம்

கொண்டவள், பரிசுத்தமானவள், குணம் கடந்தவள், கடலின்றும்

எடுத்த முத்து போன்ற தூயவள், ஒளி வீசும் பற்களை உடையவள்,

அழகிய நீல ரத்தின அணியைக் கொண்டவள், தருமக் கிளி ஆகிய

பார்வதியின் மகனே,

நீறு அது இட்டு நினைப்பவர் புத்தியில் நேச மெத்த அளித்து

அருள் சற்குரு … திருநீறு அணிந்து நினைக்கின்றவர்களின் மனதில் நிறைய அன்பை அளித்திடும் சற்குருநாதனே,

நீலம் உற்ற திருத்தணி வெற்பு உறை பெருமாளே. …

நீலோற்பல மலர்கள் நிறைந்த திருத்தணிகை மலையில் வீற்றிருக்கும் பெருமாளே.

***

சமயச் சண்டை வேண்டாம் !

கவடுற்ற சித்தர் … வஞ்சக எண்ணம் கொண்ட சித்தர்களும்,

சட் சமயப்ர மத்தர் … ஆறு* சமயங்களையும் மேற்கொண்டு வாதம் செய்யும்  பேர்வழிகளும்,

நற் கடவுட்ப்ர திஷ்டைபற்பலவாகக் கருதி … சிறந்த

கடவுளர்களின் பிரதிஷ்டை என்ற பெயரில் பலப்பல வகையாக யோசித்து,

பெயர்க்குறித்து … அந்தக் கடவுளருக்குப் பெயர்களைக் குறிப்பிட்டு வைத்து,

உருவர்க்கம் இட்டு … உருவ அமைப்புக்களை (சிலை, யந்திரம்

முதலியவற்றில் வடித்து) ஏற்படுத்தி,

இடர்க் கருவிற்புகப் பகுத்து உழல்வானேன் … துன்ப மயமான

கருவிலே புகுவதற்குக் காரணமான பிரிவினை மனப்பான்மையுடன் ஏன் அலைந்து திரிகிறார்கள்?

சவடிக்கு இலச்சினைக்கு இருகைச் சரிக்கும் … பொன் சரட்டில்

கோத்த சங்கிலிக்கும், முத்திரை மோதிரத்துக்கும், இரண்டு கைகளிலும் அணியும் வளையல்களுக்கும்,

மிக்க சரப்பளிக்கு எனப் பொருள்தேடி … மேலான வைர

அட்டிகைக்கும் என்று பெண்களுக்குத் தரும் நகைகளுக்காகப்

பொருளைத் தேடிய மக்கள்,

சகலத்தும் ஒற்றைபட்டு அயல்பட்டு நிற்குநின் … அனைத்திலும்

ஒன்றுபட்டுக் கலந்து, அதேசமயம் கலவாமல் வேறுபட்டு நிற்கும் உனது

சரணப்ரசித்தி சற்றுணராரோ … திருவடிகளின் பெருமையைச்

சற்றேனும் உணரமாட்டார்களோ?

ஆறு சமயங்கள்: காணாபத்யம்சைவம்வைஷ்ணவம்சாக்தம்செளரம்,கெளமாரம் என்பனவாம்.

***

திருத்தணி என்றால் என்ன பொருள் ?

பொறி உடைச் செழியன் வெப்பு ஒழிதரப் பறி தலைப் பொறி

இலச் சமணர் அத்தனை பேரும் பொடி பட … அறிவுள்ள (கூன்)

பாண்டியனுடைய வெப்ப நோய் நீங்கவும், மயிர் பறிபடும் தலையராகிய அறிவிலிகளாகிய சமணர்கள் அத்தனை பேரும் அழியவும்,

சிவ மணப் பொடி பரப்பிய திருப் புகலியில் கவுணியப்

புலவோனே … சிவ மணத் திருநீற்றை (மதுரையில்) பரப்பினவரும்,

புகலியில் (சீகாழியில்*) உதித்த கவுணியர் குலப் புலவருமாகிய

திருஞான சம்பந்தரே,

தறி வளைத்து உற நகைப் பொறி எழப் புரம் எரித்தவர் திருப்

புதல்வ … அழிவு உண்டாகும்படி புன்சிரிப்புப் பொறியை எழுப்பி,

திரி புரங்களை எரித்த சிவபெருமானுடைய நல்ல மகனே,

நல் சுனை மேவும் தனி மணக் குவளை நித்தமும் மலர் தரு …

சிறந்த சுனையில் உள்ள ஒப்பற்ற நறு மணம் வீசும் குவளை நாள்தோறும் பூவைத் தருகின்ற

செருத்தணியினில்** சரவணப் பெருமாளே. … திருத்தணிகையில்

(வீற்றிருக்கும்) சரவணப் பெருமாளே.

* ‘புகலி’ சீகாழிக்கு உரிய பெயர்களில் ஒன்று.

** செரு = போர். போர் முடிந்தும் கோபம் தணியாத முருகன் திருத்தணியில் தங்கியதும் கோபம் தணிந்தது. முதலில் செருத்தணி என்றிருந்த பெயர் திருத்தணியாக மாறியது.

***

மீண்டும் சம்பந்தர்

அமணர் உடல் கெட வசியில் அழுத்தி விண் அமரர்

கொடுத்திடும் அரிவை குறத்தியொடு … (திருஞான சம்பந்தராக

வந்து) சமணர்களின் உடல் அழிய அவர்களைக் கழுவில்

ஏறச்செய்தவனே, விண்ணுலகத்தில் உள்ள தேவர்கள் போற்றி வளர்த்த மங்கையாகிய தேவயானை, குற மகளாகிய வள்ளி இவர்களுடன்

அழகு திருத்தணி மலையில் நடித்து அருள் பெருமாளே. …

அழகு வாய்ந்த திருத்தணி மலையில் நடனம் புரிந்தருளும் பெருமாளே.

***

மன்மதனின் ஐந்து மலர் அம்புகள்

குவளைக் கணை தொட்ட அவனுக்கு முடிக் குடை இட்ட

குறைப் பிறையாலே … (ஐந்தாவது பாணமாகிய) நீலோற்பல

மலர்* அம்பைச் செலுத்திய மன்மதனுடைய முடியின் மீது குடையாக அமைத்த, களங்கத்தை உடைய சந்திரனுடைய (வெப்பத்துக்கும்),

மன்மதனுடைய ஐந்து கணைகளாவன:

முதற் கணை = தாமரை. நடுக் கணை = அசோகம்.

கடைக் கணை = நீலோற்பலமலர். இடை இடையாகும் கணைகள் = மாமுல்லை. அசோகமலருக்கு செயலை என்று பெயர் உண்டு.

***

சுக்ரீவனும் கற்பக விநாயகரும் (கணபதியும்)

காந்தள் மலர்த் தொடை இட்டு எதிர் விட்டு ஒரு வேந்து

குரக்கு அரணத்தொடு மட்டிடு காண்டிப அச்சுதன் உத்தம

சற்குணன் மருகோனே … (சுக்கிரீவனை) காந்தள் மலர் மாலையை

அணியச் செய்து (வாலியின்) எதிரே போருக்கு அனுப்பி, ஒப்பற்ற

அந்த வாலி என்னும் குரங்கு அரசை அவன் கவசத்துடன் அழியக்

கொன்ற காண்டீபம் என்னும் வில்லை ஏந்திய அச்சுதனும்,

உத்தமமான நற் குணம் வாய்ந்தவனும் ஆகிய (ராமபிரானுடைய)

மருகனே,

காங்கிசை மிக்க மறக் கொடி வெற்றியில் வாங்கிய முக்கனி

சர்க்கரை மொக்கிய கான் க(ன்)னி முற்கு இயல் கற்பக மைக்

கரி இளையோனே … (உன் மீது) விருப்பம் வைத்த வேட்டுவப்

பெண்ணை (அச்சுறுத்தி) வெற்றி பெற்று, ஏற்றுக் கொண்ட மா,

பலா, வாழை என்னும் மூன்று வகைப் பழங்களையும், சர்க்கரையையும்வாரி உண்பவரும், காட்டில் கன்னியாகிய வள்ளியின் முன்னர் வந்தவரும், வேண்டுவோர்க்கு வேண்டியதை அளிக்கும் கற்பக மரம் போன்றவரும், கரு நிறம் கொண்ட யானை முகத்தவருமான விநாயகருக்குத் தம்பியே,

***

முருகனைப் பழித்தவர்கள் அழிவார்கள் !

சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்குஞ்

     செகுத்தவர் ருயிர்க்குஞ் …… சினமாகச்

சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும்

     திருப்புகழ் நெருப்பென் …… றறிவோம்யாம்

நினைத்தது மளிக்கும் மனத்தையு முருக்கும்

     நிசிக்கரு வறுக்கும் …… பிறவாமல்

நெருப்பையு மெரிக்கும் பொருப்பையு மிடிக்கும்

     நிறைப்புக ழுரைக்குஞ் …… செயல்தாராய்

தனத்தன தனத்தந் திமித்திமி திமித்திந்

     தகுத்தகு தகுத்தந் …… தனபேரி

தடுட்டுடு டுடுட்டுண் டெனத்துடி முழக்குந்

     தளத்துட னடக்குங் …… கொடுசூரர்

சினத்தையு முடற்சங் கரித்தம லைமுற்றுஞ்

     சிரித்தெரி கொளுத்துங் …… கதிர்வேலா

தினைக்கிரி குறப்பெண் தனத்தினில் சுகித்தெண்

     திருத்தணி யிருக்கும் …… பெருமாளே.

……… சொல் விளக்கம் ………

சினத்தவர் முடிக்கும் … முருகன் அடியார்களை கோபிப்பவர்களது

தலைக்கும்,

பகைத்தவர் குடிக்கும் … அவர்களைப் பகை செய்தவர்களது

குடும்பத்திற்கும்,

செகுத்தவர் உயிர்க்கும் … அவர்களைக் கொன்றவர்களது உயிருக்கும்,

சினமாகச் சிரிப்பவர் தமக்கும் … அவர்களைக் கண்டு கோபமாகச்

சிரிப்பவர்கட்கும்,

பழிப்பவர் தமக்கும் … அவர்களைப் பழிக்கும் தன்மையினர்க்கும்,

திருப்புகழ் நெருப்பென்று … திருப்புகழே நெருப்பாகி (அடியோடு

அழிக்குமென)

அறிவோம்யாம் … யாம் நன்கு அறிவோம்.

நினைத்தது மளிக்கும் … (அடியார்களாகிய யாம்) எதை நினைக்கினும் அதனை நினைத்தவுடனேயே தரவல்லதும்,

மனத்தையு முருக்கும் … (பாடுவோர், கேட்போரின்) மனதையும்

உருக்குவதும்,

பிறவாமல் … மீண்டும் ஒரு தாய் வயிற்றில் பிறவாதவண்ணம்

நிசிக்கரு வறுக்கும் … இருள் நிறைந்த கருக்குழியில் விழும் துயரை

அறுப்பதும்,

நெருப்பையு மெரிக்கும் … அனைத்தையும் எரிக்கவல்ல நெருப்பையே எரிப்பதும்,

பொருப்பையு மிடிக்கும் … மலையையும் இடித்தெறிய வல்லதுமாகிய, நிறைப்புகழ் … எல்லாப் பொருள்களும் நிறைந்த திருப்புகழை உரைக்குஞ் செயல்தாராய் … பாடுகின்ற நற்பணியைத் தந்தருள்வாய்.

தனத்தன தனத்தந்

திமித்திமி திமித்திந் தகுத்தகு தகுத்தந்தன … (அதே ஒலியுடன்)

பேரி … பேரிகைகள் முழங்கவும்,

தடுட்டுடு டுடுட்டுண் டென … (அதே ஒலியுடன்)

துடி முழக்கும் … உடுக்கைகள் முழங்கவும்,

தளத்துட னடக்கும் … சேனைகளுடன் போருக்கு அணிவகுத்து வந்த

கொடுசூரர் சினத்தையும் … கொடிய சூராதி அசுரர்களின்

கோபத்தையும்,

உடற்சங் கரித்தம லைமுற்றும் … அறுத்தெறிந்த பிணமலைகள்

யாவையும்,

சிரித்தெரி கொளுத்தும் … புன்னகை புரிந்தே அதிலெழுந்த

அனற்பொறியால் எரித்துச் சாம்பலாக்கிய

கதிர்வேலா … ஒளிமிக்க வேற்படையுள்ள வீரனே,

தினைக்கிரி குறப்பெண் … தினைப்பயிர் விளையும் மலைக்

குறவள்ளியை

தனத்தினில் சுகித்து … மார்புற அணைத்து இன்புற்று,

எண் திருத்தணி யிருக்கும் பெருமாளே. … உயர்ந்தோர்

மதிக்கும் திருத்தணியில் வீற்றிருக்கும் பெருமாளே.

—subham—

Tags- அருணகிரிநாதர், அரிய செய்திகள் Part 17

 சொல் அழகும், பொருள் வளமும், திருத்தணி, திருப்புகழ், பாடல்கள், நெருப்பு, அழிக்கும், சினத்தவர் முடிக்கும்

கோடி காரியங்களை ஒதுக்கி விட்டு ஹரி பஜனை செய்க! (Post No.15,412)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,412

Date uploaded in London – 10 February 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

சுபாஷிதச் செல்வம்! 

கோடி காரியங்களை ஒதுக்கி விட்டு ஹரி பஜனை செய்க! 

ச. நாகராஜன்

 நல்லோர்களின் குணங்கள் கஸ்தூரி மணம் போல! 

சந்ஸ்வத ப்ரகாஷாந்தே குணா ந பரதோ ந்ருணாம் |

ஆமாதோ நஹி கஸ்தூர்யாம் சபதேன விபாவ்யதே ||

சந்த புருஷர்கள் (நல்லோர்) தனது சொந்த குணங்களினாலேயே பிரகாசிக்கின்றனர். பிறருடைய குணங்களினால் அல்ல. கஸ்தூரியின் மணம் சொந்தமாகவே உறுதிப்படுத்தப்படும்.

கெட்டவர்களுடன் சேராதே! 

யதி சத்ஸங்கவிரதோ பவிஷ்யஸி பவிஷ்யஸி |

அத: துர்ஜனசம்ஸர்கே பதிஷ்யஸி பதிஷ்யஸி ||

சத்புருஷர்களுடன் (நல்லோருடன்) ஒருவன் சேராவிட்டால், அவன் இன்னும் கூட தன்னால் வாழ்க்கையை நடத்த முடியும். ஆனால் ஒருவன் தீயோருடன் சேர்ந்தால் அவனும் தீயவனாகவே ஆகி விடுவான். 

சந்தனமரத்தைச் சுற்றிய பாம்புகளால் மரம் பாதிக்கப்படாது! 

விக்ருதிம் நைவ கச்சந்தி சங்கதோஷேன சாதவ: |

ஆவேஷ்டிதம் மஹாசர்ப்பைஸ்ஸந்தனம் ந விஷாயதே ||

மற்றவர்களுடன் சேர்ந்திருந்தாலும் கூட நல்லவர்கள் கெட்டுப் போக மாட்டார்கள். சந்தன மரத்தைச் சுற்றி பாம்புகள் இருந்தாலும் கூட அது சர்ப்பவிஷத்தால் பாதிக்கப்படமாட்டாது.

கோடி காரியங்களை ஒதுக்கி விட்டு ஹரி பஜனை செய்க!

சதம் விஹாய போக்தவ்யம் சஹஸ்ரம் ஸ்த்ரானமாசரேத் |

லக்ஷம் விஹாய தாதவ்யம் கோடி த்யக்த்வா ஹரி பஜேத்

|\

நூறு செயல்களை ஒதுக்கி விட்டு ஒருவன் உண்ண வேண்டும்.

ஆயிரம் காரியங்களை விட்டு விட்டு குளிக்க வேண்டும்.

லக்ஷம் காரியங்களை விட்டு விட்டு ஒருவன் தானம் வழங்க வேண்டும்.

கோடி செயல்களை ஒதுக்கி விட்டு ஒருவன் ஹரி பஜனை செய்ய வேண்டும். 

யாசிக்க விஷ்ணுவும் வாமனனாக ஆக வேண்டி இருந்தது!

யாசனா ஹி புருஷஸ்ய மஹத்வம் நாசயத்யரிவித்ரம்ரேவ ததாஹி|

சத்ய ஏவ பகவானபி விஷ்ணுர்வாமனோ பவதி யாசிதுமிச்சன் ||

பிறரிடம் யாசிப்பதானது மனிதர்களின் பெருமையை அழித்து விடும்.

பகவானான விஷ்ணு கூட பிச்சை எடுப்பதரற்காக வாமனனாக ஆக வேண்டி இருந்தது.

பூர்வத்தோரத்தை ஆராயக் கூடாத அறுவர்! 

ருஷீணாம் ச நதீனாம் ச குலானாம் ச மஹாத்மனாம் |

ப்ரபாவோ நாதிகந்தவ்ய: ஸ்த்ரீணாம் துஸ்சரிதஸ்ய ச ||

 ரிஷிகள், நதிகள்,குடும்பங்கள்,மஹான்கள்,பெண்கள், தூர்த்தர்கள் ஆகியோருடைய பூர்வோத்தரத்தை ஒருவன் அறிந்து உணர ஒருவன் முயற்சிக்கக் கூடாது.

**

Purananuru Wonders 10; Ancient Tamil Encyclopaedia – Part 50 (Post No.15,411)

Written by London Swaminathan

Post No. 15,411

Date uploaded in Sydney, Australia –  10 February 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Ancient Tamil Encyclopaedia -Part 50; One Thousand Interesting Facts -Part 50

Puranānūru 23, Poet Kallādanār sang to Pandiyan Thalaiyālankānathu Cheruvendra Nedunchezhiyan,

Item 346

Most celebrated battle in Sangam Tamil literature is Thalaliaalnkaanam battle. Pandya King Neduncheziyan defeated Chera, Choza and five chieftains. It is sung in over 13 poems.

Puranānūru 18, 19, 23, 24, 25, 26, 76, 77, 78, 79, 371 and 372 were written for this king, who wrote poem 72

பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் சேரனையும் சோழனையும் (சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறைசோழன் கிள்ளிவளவன்)ஐந்து வேளிர் குறுநில மன்னர்களையும் (திதியன்எழினிஎருமையூரன்இருங்கோ வேண்மான்பொருநன்) சோழ நாட்டில் உள்ள தலையாலங்கானத்தில் தோற்கடித்தான். 

347

There is a big difference in the wars fought in previous Yugas and Kaliyuga. Ramayana and Mahabharata show us Dharma Yuddha where people were not killed or villages, towns and houses were not targeted.

Tamils are very clear about the destructions that happened in wars. They cut down the Totem trees in every place and set fire to the houses. We may guess that people ran away and escaped.

348

Poet Kalladanar mentioned that happened in the forest where the male deer was killed by a tiger; probably tiger is compared to the Pandya king.

349

Lord Skanda (Murukan in Tamil) was the Head of Divine army and so he is called Deva Senapati (Commander).

Puranānūru 23, Poet Kallādanār sang to Pandiyan Thalaiyālankānathu Cheruvendra Nedunchezhiyan,

1

Like the warriors of Murukan who killed
Soor, who wear garlands with green kadampam leaves with

2


Protected trees in the groves have been
chopped with sharp axes in every town.  Fires have been set
and beautiful homes in large cities are consumed by flames.


3

You stood like
the god of death and ruined your enemies at Thalaiyālankānam.

4

 after her
mate with antlers was killed by a male tiger.

புறநானூறு 23பாடியவர்: கல்லாடனார்பாடப்பட்டோன்: பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்


வெளிறில் நோன் காழ்ப் பணை நிலை முனைஇக்
களிறு படிந்து உண்டெனக் கலங்கிய துறையும்,
கார் நறுங்கடம்பின் பாசிலைத் தெரியல்

1
சூர் நவை முருகன் சுற்றத்து அன்ன நின்
கூர் நல் அம்பின் கொடு வில் கூளியர்  5
கொள்வது கொண்டு, கொள்ளா மிச்சில்
கொள் பதம் ஒழிய வீசிய புலனும்,
வடி நவில் நவியம் பாய்தலின், ஊர்தொறும்
கடி மரம் துளங்கிய காவும், நெடுநகர்
வினை புனை நல் இல் வெவ்வெரி நைப்பக்  10
கனை எரி உரறிய மருங்கும், நோக்கி
நண்ணார் நாண நாள்தொறும் தலைச்சென்று,
இன்னும் இன்ன பல செய்குவன், யாவரும்
துன்னல் போகிய துணிவினோன் என,

2
ஞாலம் நெளிய ஈண்டிய வியன் படை  15
ஆலங்கானத்து அமர் கடந்து அட்ட
கால முன்ப நின் கண்டனென் வருவல்,

3
அறு மருப்பு எழிற் கலை புலிப்பால் பட்டெனச்
சிறுமறி தழீஇய தெறி நடை மடப்பிணை
பூளை நீடிய வெருவரு பறந்தலை  20
வேளை வெண்பூக் கறிக்கும்
ஆள் இல் அத்தம் ஆகிய காடே.

****

Item 350

Strange obsolete verbal forms

Mankudi Kizar used UNTHU for UM in three verbs. We don’t see such forms after Sangam age. But it is allowed by Tolkappiam

உந்து (பாயுந்துதூங்குந்துதரூஉந்து) – உம் உந்தாகும் இடனுமார் உண்டே (தொல்காப்பியம்இடையியல் 44).  

351

Bangles

Bangles worn by Tamil women are mentioned by the poet in many palves.

Puranānūru 24, Poet Mānkudi Kizhār sang to Thalaiyālankānathu Cheruvendra Nedunchezhiyan,

 …………………………..

flowers from trees with ocean sprays, embrace women donning
bright bangles, and in the cool, fragrant seashore groves
where bees swarm around flowers, women wearing shining bangles
and mundakam flower garlands mix the juices from young fruits
……………………………..

352 Astrology

May the stars of
your enemies not endure!
  Your efforts are praised by your
warriors who live by the sword and are long linked to your clan
as your long life is linked to your body. 

(Kings’ birth stars are celebrated on a grand scale; Sathayam Festival of Raja Raja Choza is celebrated even today; prisoners were released on such days)

Those who come to you
in need praise your generosity, and you drink cool, fragrant
liquor served in golden bowls by women with glittering bangles.

***

353 Swami Vivekananda


May you live with joy!  Scholars say that only those who have
lived like you have truly lived.  There are many in this ancient,
wide world who have not lived like you, and they are considered
as not living, but dead!

Swami Vivekananda’s Famous quote

They alone live who live for others, the rest are more dead than alive.

புறநானூறு 24, பாடியவர்: மாங்குடி கிழார், பாடப்பட்டோன்: பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், 

1

நெல் அரியும் இருந்தொழுவர்
செஞ்ஞாயிற்று வெயில் முனையின்,
தெண்கடல் திரை மிசைப் பாயுந்து,
திண் திமில் வன் பரதவர்
வெப்புடைய மட்டுண்டு  5
தண் குரவைச் சீர் தூங்குந்து,
தூவற் கலித்த தேம் பாய் புன்னை
மெல்லிணர்க் கண்ணி மிலைந்த மைந்தர்
எல் வளை மகளிர்த் தலைக்கை தரூஉந்து,


வண்டுபட மலர்ந்த தண்ணறுங் கானல்  10
முண்டகக் கோதை ஒண்தொடி மகளிர்
இரும் பனையின் குரும்பை நீரும்,
பூங்கரும்பின் தீஞ்சாறும்,
ஓங்கு மணல் குவவுத் தாழைத்
தீ நீரோடு உடன் விராஅய்,  15
முந்நீர் உண்டு முந்நீர்ப் பாயும்,
தாங்கா உறையுள் நல்லூர் கெழீஇய
ஒம்பா ஈகை மாவேள் எவ்வி
புனலம் புதவின் மிழலையொடு கழனிக்
கயல் ஆர் நாரை போர்வில் சேக்கும்,  20
பொன்னணி யானைத் தொன் முதிர் வேளிர்
குப்பை நெல்லின் முத்தூறு தந்த
கொற்ற நீள் குடைக் கொடித்தேர்ச் செழிய!

2
நின்று நிலைஇயர் நின் நாள்மீன்! நில்லாது
படாஅச் செலீஇயர் நின் பகைவர் மீனே!  25
நின்னொடு தொன்று மூத்த உயிரினும் உயிரொடு
நின்று மூத்த யாக்கையன்ன, நின்
ஆடு குடி மூத்த விழுத்திணைச் சிறந்த
வாளின் வாழ்நர் தாள் வலம் வாழ்த்த,
இரவன்மாக்கள் ஈகை நுவல 30
ஒண்தொடி மகளிர் பொலங்கலத்து ஏந்திய
தண் கமழ் தேறல் மடுப்ப மகிழ் சிறந்து,

3
ஆங்கு இனிது ஒழுகுமதி பெரும, ஆங்கது
வல்லுநர் வாழ்ந்தோர் என்ப, தொல் இசை
மலர்தலை உலகத்துத் தோன்றிப் 35
பலர் செலச் செல்லாது, நின்று விளிந்தோரே.

***

354

Sad condition of Tamil War Widows

What women did when they lost their beloved husbands is described by the poet of Pandya king  Nedunchezian’s victory

***

Puranānūru 25, Poet Kallādanār to Pandiyan Thalaiyālankānathu Cheruvendra Nedunchezhiyan,

………………………………….

In that fearless battlefield,
you crushed them and took their drums tied with straps.

But O Chezhiyan!  The joints of your spear were saved
from breaking and shattering being hurled at
enemies around you, when you saw the women with bright
brows, anguished widows, losing their senses and beating
their full breasts and making them warm, wailing endlessly,
cutting off their pretty, thick, dark hair as bright as sand!

(Vaidehi Herbert’s translation is used; thanks)

***

புறநானூறு 25, பாடியவர்: கல்லாடனார்பாடப்பட்டோன்: பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்

மீன் திகழ் விசும்பின் பாய் இருள் அகல
ஈண்டு செலல் மரபின் தன் இயல் வழாஅது,
உரவுச் சினம் திருகிய உருகெழு ஞாயிறு,
நிலவுத் திகழ் மதியமொடு நிலஞ் சேர்ந்தாஅங்கு,
உடலருந்துப்பின் ஒன்றுமொழி வேந்தரை  5
அணங்கரும் பறந்தலை உணங்கப் பண்ணிப்,
பிணியுறு முரசம் கொண்ட காலை
நிலை திரிபு எறியத் திண் மடை கலங்கிச்
சிதைதல் உய்ந்தன்றோ, நின் வேல் செழிய!
முலை பொலி ஆகம் உருப்ப நூறி,  10
மெய்ம் மறந்து பட்ட வரையாப் பூசல்
ஒண்ணுதல் மகளிர் கைம்மை கூர,
அவிர் அறல் கடுக்கும் அம் மென்
குவை இருங்கூந்தல் கொய்தல் கண்டே.

—Subham—-

Tags- Purananuru Wonders 10;  Ancient Tamil Encyclopaedia – Part 50 

One Thousand Interesting Facts -Part 50, Birth Star, Tamil War Widows, Arson, Vivekananda

திருப்புகழில் வாளை மீன் ! யாதவர்கள் அழிந்த கதை – Part 16 (Post.15,410)

Written by London Swaminathan

Post No. 15,410

Date uploaded in Sydney, Australia –  10 February 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part 16

திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 16

***

பாம்பு வழிபட்ட திருத்தணி கோவில்

அநுதின மனமகிழ் வுற … நாள்தோறும் மனம் மகிழ்ச்சி அடையுமாறு

அணி பணிதிகழ் … அழகியதும், வாசுகி என்ற நாகம் வழிபட்டதுமாகிய*

தணிகையில் உறைவோனே … திருத்தணிகைத் தலத்தில் வாழ்பவனே,

பகர்தரு குறமகள் … புகழ்வாய்ந்த குறப்பெண் வள்ளியும்,

தருவமை வநிதையும் … கற்பகத்தருவின் கீழே வளர்ந்த

தேவயானையும்,

இருபுடை யுறவரு பெருமாளே. … இருபுறமும் பொருந்த

வந்த பெருமாளே**.

பாற்கடல் கடைந்தபோது வாசுகி என்ற நாகம் கயிறாக உதவியது. அதனால் புண்பட்ட நோய் நீங்க, வாசுகி திருத்தணிகைக்கு வந்து முருகனைப் பூஜிக்க நோய் தணிந்த வரலாறு இங்கு கூறப்பட்டுள்ளது.

** வள்ளியும் தேவயானையும் வலமும் இடமுமாக விளங்க முருகன் திருத்தணியில் வீற்றிருக்கிறான். வள்ளி = இச்சாசக்தி, தேவயானை = ஞானசக்தி.

கஷ்டங்களை நீக்கும் திருப்புகழ்நான்கு வகைக் கவிதைகள்

இருப்பவல் திருப்புகழ் … உயிர் போகும் தொலையா வழிக்கு உற்ற துணையாய் இருக்கும் அவல் போன்ற திருப்புகழை

விருப்பொடு படிப்பவர் … ஆர்வத்தோடு படிப்பவர்களுடைய

இடுக்கினை யறுத்திடும் … சங்கடங்களை அறுத்தெறியும் என்ற

உண்மையை

எனவோதும் … எடுத்துச் சொல்கின்ற,

இசைத்தமிழ் நடத்தமிழென … இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்றும்,

துறை விருப்புடன் இலக்கண இலக்கிய … அகத்துறைப் பாக்கள்,

இலக்கணம், இலக்கியம் என்றும்,

கவிநாலும் … நால்வகைக் கவிகளையும்*

தரிப்பவ ருரைப்பவர் … உள்ளத்தில் தரிப்பவர்கள், உரைப்பவர்கள்,

நினைப்பவர் … நினைப்பவர்கள் ஆகிய உன் அடியார்களை

மிகச்சகதலத்தினில் நவிற்றுதல் அறியாதே … மிகவும் இவ்வுலகில் புகழாமல்,………………………

தமிழ்க் கவிதைகள் நான்கு வகைப்படும்:

ஆசு – எதுகை மோனையுடன் கூடியது,

மதுரம் – இனிமை வாய்ந்தது,

சித்திரம் – கற்பனையும் அழகும் மிக்கது,

வித்தாரம் – வர்ணனை மிக்கது.

***

நோய்களை குணமாக்கும் திருப்புகழ் !

இருமலு ரோக முயலகன் வாதம் … இருமல் என்ற நோய், முயலகன் என்ற வலிப்பு நோய், வாத நோய்,

எரிகுண நாசி விடமே நீரிழிவு … எரியும் குணமுள்ள மூக்கு நோய், விஷ நோய்கள், நீரிழிவு நோய்,

விடாத தலைவலி சோகை … நீங்காத தலைவலி, ரத்த சோகை,

எழுகள மாலை யிவையோடே … கழுத்தைச் சுற்றி உண்டாகும்

மாலை போன்ற புண் இவற்றுடன்,

பெருவயி றீளை யெரிகுலை சூலை … மகோதர நோய், நுரையீரலில் கோழை நோய், நெஞ்சு எரியும் நோய், தீராத வயிற்று வலி,

பெருவலி வேறுமுளநோய்கள் … ஆகிய பெரு வலியுடன் கூடிய பிற நோய்கள்

பிறவிகள் தோறு மெனைநலி யாதபடி … ஒவ்வொரு பிறவியிலும்

என்னைப் பீடிக்காதபடி,

உன தாள்கள் அருள்வாயே … உன்னுடைய திருவடிகளைத்

தந்தருள்வாயாக.

வருமொரு கோடி யசுரர்பதாதி … உன்னை எதிர்த்துவந்த

கோடிக்கணக்கான அசுரர்களின் காலாட்படை

மடியஅ நேக இசைபாடி வருமொரு கால வயிரவ ராட …

இறந்துபடவும், அனேக வீரப் பாட்டுக்களைப் பாடிக்கொண்டு வந்த

ஓர் காலபைரவர் (சிவ பெருமான்) போர்க்களத்தில் நடனமாடவும்,

வடிசுடர் வேலை விடுவோனே … கூரிய ஒளிவீசும் வேலைச்

செலுத்தியவனே,

தருநிழல் மீதிலுறைமுகிலூர்தி … கற்பக விருட்சங்களின் நிழலில் வசிக்கும் மேக வாகனன் இந்திரன்

தருதிரு மாதின் மணவாளா … வளர்த்த அழகிய பெண்

தேவயானையின் மணவாளனே,

சலமிடை பூவின்நடுவினில் வீறு … கடலால் சூழப்பட்ட இந்தப்

புவியின் மத்தியில் சிறப்போடு விளங்கும்

தணிமலை மேவு பெருமாளே. … திருத்தணிகை மலையில்

வீற்றிருக்கும் பெருமாளே.

இந்தப் பாடல் நோய் தீர்க்கும் திருமந்திரத் திருப்புகழ். பாராயணம் செய்வதற்கு உரியது.

***

எனையடைந்த குட்டம் வினைமிகுந்த பித்தம் … எனக்கு வந்த

குஷ்டநோய், வினைக்கு ஈடாக மிகுந்துவரும் பித்த நோய்,

எரிவழங்கு வெப்பு … கொதிப்பைத் தருகிற காய்ச்சல்,

வலிபேசா இகலி நின்றலைக்கு முயலகன் … சொல்ல முடியாத

வலியோடு, மாறுபட்டுத் துயர்தந்து வருத்தும் முயலகன் என்ற

வலிப்புநோய்,

குலைப்பொடு இருமலென்று உரைக்கும் இவையோடே …

நடுக்க நோயுடன், இருமல் எனச் சொல்லப்படும் இந்த

நோய்களுடனே தவித்து,

மனைகள் பெண்டிர் மக்கள் தமைநினைந்து … வீடுகள், பெண்டிர்,

மக்கள் என்ற இவர்களை நினைந்து வருந்தி,

சுத்த மதிம யங்கி விட்டு மடியாதே … நல்லறிவு மயங்கிப்போய்

அடியேன் இறக்காதவண்ணம்,

மருவியின்றெ னக்கு மரகதம் சிறக்கு மயிலில் … நீ இன்று

என்முன் தோன்றி, மரகத ஒளிவீசும் பச்சைமயில் வாகனத்தில்

வந்து முத்தி தரவேணும் … வந்து எனக்கு பேரின்ப முக்தியை

அருள்வாயாக.

***

வாளை மீன்கள் பற்றி அருணகிரிநாதர் !

உடலி னூடு போய்மீளும் உயிரி னூடு … உடலுக்கு உள்ளும்,

உடலில் சென்று மீளுகின்ற உயிருக்குள்ளும்,

மாயாத உணர்வினூடு வானூடு முதுதீயூடு … அழியாத

உணர்ச்சியுள்ளும், ஆகாயத்துள்ளும், முற்றிய தீக்குள்ளும்,

உலவையூடு நீரூடு புவியினூடு … காற்றினுள்ளும், நீரின் உள்ளும்,

மண்ணினுள்ளும்,

வாதாடும் ஒருவரோடு மேவாத … சமயவாதம் புரிகின்ற

எவரிடத்திலும் காணக்கிடைக்காத

தனிஞானச் சுடரினூடு … ஒப்பற்ற ஞான ஒளியினுக்குள்ளும்,

நால்வேத முடியினூடும் ஊடாடு … நான்கு வேத உச்சியிலும்

UPANISHADS ஊடாடுகின்றதும்,

துரிய ஆகுல அதீத சிவரூபம் … துரிய* நிலையில் இருப்பதும்,

துன்பங்கள் கடந்த நிலையில் உள்ளதுமாகிய சிவ ரூபத்தை,

தொலைவிலாத பேராசை துரிசு அறாத வோர்பேதை …

முடிவற்ற பேராசையும் குற்றமும் நீங்காத ஓர் மூடனாகிய அடியேன்

தொடுமுபாயம் ஏதோசொல் அருள்வாயே … அடைவதற்கு உரிய

வழி எதுவோ, அந்த உபதேச மொழியைச் சொல்லி வழிகாட்டி

அருள்வாயாக.

மடல் அறாத வாரீச அடவி சாடி … இதழ்கள் நீங்காத தாமரைப்

பூவின்காட்டை அழித்து,

மாறான வரி வரால் குவால் சாய அமராடி … தனக்குப் பகையான

வரிபடர்ந்த வரால் மீன்கள் தோற்றுப்போய் பின்வாங்கும்படி போர் புரிந்து,

மதகு தாவி மீதோடி … செல்லும் வழியில் இருந்த நீர்பாயும் மதகைத் தாண்டி மேலே ஓடி,

உழவரால் அடாது ஓடி … வயலில் உழும் உழவர்கள் தன்னை

வருத்தாதபடி தப்பி ஓடி,

மடையை மோதி யாறூடு தடமாக … வழியில் உள்ள நீர்

மடைகளைத் தாக்கி, ஆற்றின் வழியிலே சென்று,

கடல்புகா மகாமீனை முடுகி … கடலில் புகுந்து, அங்குள்ள பெரிய

மீனை விரட்டித் தாக்கி,

வாளை தான்மேவு கமல வாவி மேல்வீழு … வாளை மீன் தான்

இருந்த தாமரைக்குளத்தில் வந்து வீழும்

மலர்வாவி … (இத்தனை பெருமையை உடைய) மலர்ச் சுனையில்**

கடவுள் நீல மாறாத தணிகை காவலா வீர … தெய்வமணம்

உள்ள நீலோத்பல மலர் மலர்வது என்றும் தவறாத திருத்தணிகைக்குக் காவலனே, வீரனே,

கருணை மேருவே தேவர் பெருமாளே. … கருணையில் மேரு மலை

போன்றவனே, தேவர்களின் பெருமாளே.

* துரியை என்பது ஜாக்ரம் (விழிப்பு), சொப்பனம் (கனவு), சுழுத்தி (உறக்கம்) என்ற மூன்று நிலைகளையும் கடந்த நிலையாகும்.

** திருத்தணியின் தாமரைக்குளத்தில் இருக்கும் வாளை மீனின் ஆற்றல், ‘மடல் அறாத’ முதல் ‘மலர்வாவி’ வரை உள்ள ஆறு அடிகளில், கூறப்படுகிறது.

முருகனின் தம்பியும் தூதுவரும் ஆன வீரபாகுத் தேவர் தூதுசெல்லும் வழியில் அரக்கர்களைக் கொன்று, கடல்நடுவில் உள்ள வீரமஹேந்திரம் சென்று போர் புரிந்து வெற்றியுடன் மீண்டு வந்ததையும் இது குறிப்பால் காட்டுகின்றது.

– கந்த புராணம்.

வாளை மீன் என்பது உலகம் முழுவதும் உள்ள வெப்ப கடல்களில் காணப்படும் மீன் இனம் ஆகும். இது பார்ப்பதற்கு சற்று நீளமாக இருக்கும். தென் இந்திய கடற்கரையில் இது கிடைக்கும். உதாரணமாக, கன்னியாகுமரி பகுதிகளில் அதிகமாக காணப்படுகிறது. இதன் மீது ‘செள்’ என்று சொல்லப்படுகிற செதில்கள் கிடையாது. இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் மீன்களில் 30% வாளை மீன் ஆகும்

SCABBARD FISH, RIBBON FISH

The silver scabbardfish, also known as the frostfish or beltfish is a benthopelagic cutlassfish of the family Trichiuridae found throughout the temperate seas of the world. It grows to over 2 metres in length.

A long, thin fierce looking deep-sea fish found as far down as1,000 metres in both cold and warm waters. There are two main species of Scabbard – black and silver – and it is sometimes known as Sabre Fish (and incorrectly as Ribbon Fish or Cutlass Fish).

***

யாதவர்கள் அழிந்த கதை

உலக்கை ராவி நடுக்கடல் விட்டவன் மருகோனே … இரும்பு உலக்கையைப் பொடிப்பொடியாக்கி நடுக்கடலில் கரைத்தவனும்* ஆகிய திருமாலின் மருகனே,

வலிக்க வேதனை குட்டி … வலி உண்டாகும்படியாக வேதப் பிரமனை சிரங்களில் குட்டினவனே,

நடித்து ஒரு செகத்தை யீனவள் பச்சைநிறத்தியை … நடனம் செய்து ஒப்பற்ற உலகத்தை ஈன்ற தாயான பச்சை நிறப் பார்வதியை

மணத்த தாதைப ரப்ரம ருக்கருள் குருநாதா … மணந்த

தந்தையாகிய பரப்பிரம்மப் பொருளான சிவபிரானுக்கு உபதேசித்து அருளிய குருநாதனே,

வனத்தில் வாழுமயிற்குலம் ஒத்திடு … காட்டிலே வாழும் மயிலினம் போன்ற அழகியான

குறத்தியாரைம யக்கிய ணைத்து … குறத்தியாகிய வள்ளிதேவியை மயக்கி அணைத்து,

உள மகிழ்ச்சி யோடுதிருத்தணி பற்றிய பெருமாளே. …

மனமகிழ்ச்சியுடன் திருத்தணித்தலத்தில் பற்றுடன் வீற்றிருக்கும் பெருமாளே.

யாதவர்கள் தங்களுள் சாம்பன் என்பவனுக்கு கர்ப்பிணி வேஷமிட்டுதுர்வாச முனிவரை இவளுக்குப் பிறப்பது ஆணோ பெண்ணோ எனக் கேட்ககோபமடைந்த துர்வாசர் ஓர் இரும்பு உலக்கை பிறக்கும்அதுவே யாதவர் குலத்தை அழிக்கும் என்று சபித்தார். இதை அறிந்த கண்ணன்பிறந்த உலக்கையைப் பொடியாக்கி நடுக்கடலில் கரைக்கச் செய்தான். பின்னர் உலக்கைப் பொடி கரையிலே வந்து கோரைப்புல்லாக முளைக்கயாதவர் தம்முள் கலகம் மூண்டதும் அப்புல்லைப் பிடுங்கி ஒருவரை மற்றவர் குத்தி இறந்தனர். இரும்புத் துண்டு ஒன்று மீனின் வயிற்றில் வளரஅம்மீனைப் பிடித்த ஒரு வேடன் வயிற்றிலிருந்த துண்டைத் தன் அம்புநுனியில் வைத்தான். கண்ணனின் இறுதி நாளன்று தூக்கி வைத்திருந்த கண்ணனின்

பாதத்தைப் பறவையென எண்ணி வேடன் அந்த அம்பை எய்தான். யாதவகுலத்தில் கடைசியாக எஞ்சிய கண்ணனும் பரமபதம் அடைந்தான்.

பாரதியார் பாடல்

சிலுவையிலே அடியுண்டு யேசு செத்தான்;

தீயதொரு கணையாலே கண்ணன் மாண்டான்;

பலர்புகழும் இராமனுமே யாற்றில் வீழ்ந்தான்;

பார்மீது நான்சாகா திருப்பேன், காண்பீர்!

மலிவுகண்டீரிவ்வுண்மை, பொய்கூ றேன்யான்,

மடிந்தாலும் பொய்கூறேன் மானு டர்க்கே,

நலிவுமில்லை, சாவுமில்லை, கேளீர், கேளீர்.

நாணத்தைக் கவலையினைச் சினத்தைப் பொய்யை   6

அச்சத்தை வேட்கைதனை அழித்து விட்டால்

அப்போது சாவுமங்கே அழிந்து போகும்;

மிச்சத்தைப் பின்சொல்வேன், சினத்தை முன்னே

வென்றிடுவீர், மேதினியில் மரணமில்லை;

—Subham—

Tags– திருத்தணி ,திருப்புகழ் , வாளை மீன் , யாதவர்கள்  கதை – Part 16 , அருணகிரிநாதர் ,அரிய செய்திகள் , சொல் அழகு, பொருள் வளம்

ராமாயணத்தில் வரங்கள் (36) லங்கா தேவிக்கு பிரம்மா வரம் அருளியது! (Post.15,409)

  

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,409

Date uploaded in London – 9 February 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ராமாயணத்தில் வரங்கள் (36)   

ராமாயணத்தில் வரங்கள் (36) லங்கா தேவிக்கு பிரம்மா வரம் அருளியது!

ச. நாகராஜன்

அடுத்து சுந்தரகாண்டத்தில் லங்கா தேவியை ஜெயித்தல் என்ற மூன்றாம் அத்தியாயத்தில் லங்கா தேவிக்கு பிரம்மா வரம் அருளிய செய்தியைப் பார்க்கிறோம்.

ஹனுமான் இரவில் லங்கையில் புகுதலுற்றார்.அவர் மதில் சுவரின் மேல் வேகமாக ஏறினார்.

அப்போது லங்கா நகரைக் காக்கும் நகர தேவதை உள்ளே போகும் ஹனுமானைக் கண்டாள். கோரமான தோற்றத்துடன் வாயுகுமாரரின் எதிரில் வந்து நின்றாள்.

“யார் நீ? குரங்கே! உன்னால் இங்கு வர முடியாது” என்று சொல்ல ஹனுமான் இந்த நகரைப் பார்ப்பதற்கே வந்தேன் என்று பதிலிறுத்தார்.

உடனே அந்த நிசாசரி ஹனுமானைக் கையால் அறைந்தாள்.

உடனே ஹனுமான் தனது இடது கை முஷ்டியால் அவளை குத்தினார். பெண் என்பதால் அதிக வலிமையைக் காட்டவில்லை. அவளோ அந்த ஒரு குத்திலேயே நிலை குலைந்து கீழே விழுந்தாள். நாத்தழுதழுக்க ஹனுமானிடம் தன்னைக் காத்தருள வேண்டினாள்.

பின்னர் கீழ் வருமாறு கூற ஆரம்பித்தாள்; 

அஹம் து நகரீ லங்கா ஸ்வயமேவ ப்லவங்கம |

நிர்ஜிதாஹம் த்வயா வீர் விக்ரமேண மஹாபல ||

           சுந்தரகாண்டம், மூன்றாம் அத்தியாயம், ஸ்லோக எண் 46

மஹாபல – மிக வலிமையுடைய

ப்லவங்கம – வானரரே!

அஹம் து – நானோ

ஸ்வயம் லங்கா – ஸ்வயமான லங்கா என்ற

நகரீ – நகர தேவதை;

வீர் – வீரரே!

அஹம் – நான்

த்வயா ஏவ – உம்மாலே தான்

விக்ரமேண – பராக்கிரமத்தால்

நிர்ஜிதா – ஜெயிக்கப்பட்டேன்

இதம் து தத்யம் ஸ்ருணு வை ப்ருவந்த்யா மே ஹரீஸ்வர |

ஸ்வயம் ஸ்வயம்புவா தத்தம் வரதானம் யதா மம ||

           சுந்தரகாண்டம், மூன்றாம் அத்தியாயம், ஸ்லோக எண் 47

ஹரீஸ்வர – வானரேஸ்வரரே

ஸ்வயம்புவா – பிரம்மாவால்

மம – எனக்கு

ஸ்வயம் து – தானாகவே

தத்தம் – கொடுக்கப்பட்ட

வரதானம் – வரப்பிரதானம்

யதா வை – எப்படியோ அப்படியே

தத்யம் – உண்மையான

இதம் – பின் சொல்லும் விஷயத்தை

ப்ருவந்த்யா – சொல்லுகிற

மே – என்னிடத்திலிருந்து

ஸ்ருணு – கேளும்

யதா த்வாம் வானர: கஸ்சித்விக்ரமாத்ஷ்மானயேத் |

ததா த்வயா ஹி விக்ஞேயம் ரக்ஷஸாம் பயமாகதம் ||

            சுந்தரகாண்டம், மூன்றாம் அத்தியாயம், ஸ்லோக எண் 48

த்வாம் – உன்னை

கஸ்சித் வானர: – ஒரு வானரன்

விக்ரமாத் – பராக்ரமத்தால்

யதா – எப்பொழுது

வஷம் – வசமாக

ஆனயேத் – செய்து கொள்கிறானோ

ததா – அப்பொழுதே

ரக்ஷசாம்  – ராக்ஷஸர்களுக்கு

பயம் ஆகதம் – கேடு வந்தது என்று

த்வயா விக்ஞேயம் – உன்னால் அறிந்து கொள்ளப்பட வேண்டியது

ஹி – சந்தேகமில்லை

இப்படிக் கூறிய லங்கா தேவி ஹனுமானை லங்கைக்குள் புகுந்து கொள்ள அனுமதித்தாள். ஹனுமானும் லங்கைக்குள் புகுந்தார்.

பிரம்மாவிடம் லங்கா தேவி எப்போது எதற்காக வரம் பெற்றாள் என்ற விவரம் இங்கு தரப்படவில்லை.

பிரம்மாவிடமிருந்து லங்கா தேவி வரம் பெற்ற செய்தி மட்டும் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது.

**

கிரீன்லாந்து உருகுகிறது! உலகத்துக்கு ஆபத்து ! (Post No.15,408)

Written by London Swaminathan

Post No. 15,408

Date uploaded in Sydney, Australia –  9 February 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

கிரீன்லாந்து என்னும் மிகப்பெரிய தீவுப் பகுதி ஐரோப்பாவிலுள்ள டென்மார்க் நாட்டிற்குச் சொந்தமான பகுதி. கடந்த சில மாதங்களாக இந்தப் பெயர் செய்தியில் அடிபடுகிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இதற்குச் சொந்தம் கொண்டாடினார் ; எப்போதும் அமெரிக்காவுக்கு வால் பிடிக்கும் ஐரோப்பிய நாடுகளும் கூட அமெரிக்காவின் திட்டத்துக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ட்ரம்ப் பின்வாங்கியிருக்கிறார் ; குருட்டுப் பூனை விட்டத்தில் பாய்ந்த கதையாக முடிந்திருக்கிறது எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம் .

கிரீன்லாந்து, ஐஸ்லாந்து என்னும் பெயரே ஏமாற்று வேலை. பசுமைவளமே இல்லாத , பனிக்கட்டி மட்டுமே நிறைந்த மிகப்பெரிய பகுதிக்குத் தவறாக கிரீன்லாந்து என்று பெயர் சூட்டினார்கள். ஐஸ் கட்டியே இல்லாத எரிமலைகள் நிறைந்த வெந்நீர் ஊற்றுகள் நிரம்பிய நாட்டுக்கு ஐஸ்லாந்து என்று பெயர் சூட்டினார்கள். மக்களை இழுப்பதற்காக இப்படி ஒரு திட்டம் .

கிரீன்லாந்தின் மீது அமெரிக்கா ஆசைப்பட்டதற்குக் காரணம் அங்கே பனிக்கட்டிக்குக் கீழே நிறைய கனிம வளம் உள்ளது . அதுமட்டுமல்ல பல பாதுகாப்பு, ராணுவ திட்டங்களுக்கு உகந்த பகுதி அது.

அண்டார்ட்டிகா என்னும் பிரம்மாண்டமான பனிக்கட்டி கண்டம் பூமியின் தென் துருவத்தில் உள்ளது. அதற்கு அடுத்த பெரிய பனிக்கட்டி பரப்பு வட துருவத்திலுள்ள கிரீன்லாந்து ஆகும்.

இந்தப் பிரதேசத்திலுள்ள பனிக்கட்டி முழுதும் உருகினால் கடல் நீர்மட்டம் உலகம் முழுதும் 24  அடி உயரும். அவ்வளவும் ஒரே நேரத்தில் உருகாது ஆயினும் அவை இப்போது உருகும் வேகம் எல்லோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது கடந்த 27  ஆண்டுகளாக  தொடர்ந்து பல பகுதிகள் உருகி வருகின்றன. மேலும் அங்குள்ள பனிக்கட்டி ஆறுகளும் சிறிதாகி வருகின்றன

பனிக்கட்டி பாறைகளைக் குடையும் பெரிய எந்திரங்களுடன்  பல வாரங்களுக்கு ஆராய்ச்சி செய்த குழுவில் ஒன்பது பேர் இருந்தனர் அவர்கள் ஐஸ் பாறைகளைக் குடைந்து எடுத்த சாம்பிள்களை- மாதிரிகளை– உலகின் ஏனைய பகுதியில் எடுத்த பவளப்பாறைகள், மரங்களில் உள்ள வளையங்கள் ஆகியவற்றுடன் ஒப்பிட்டத்தில் பருவ நிலை வெப்பமாகி வருவது உறுதியாகியுள்ளது. வளி மண்டலத்திலுள்ள கார்பன் டை ஆக்சைட் அதிகரித்துள்ளது.

இந்தத் தீவு பற்றிய சுவையான விஷயங்களையும் காண்போம் .

உலகிலேயே பெரிய தீவு இது ; இதன்பரப்பளவு
2,166,086 km2 (836,330 sq mi)

மக்கட் தொகை 56,000

(இந்தியாவின் பரப்பளவு 3,287,263 square kilometers (1,269,219 sq mi)

இது டென்மார்க்கின் சுயாதிக்கப் பகுதி இதன் தலை நகர் நூக் . The capital and largest city is Nuuk.

பேசும் மொழி – கிரீன்லாந்திக்

இதன் உண்மைப்பெயர்–  கலாலித் நுனாத்  -Kalaallit Nunaat, ‘land of the Kalaallit.

இங்கு அடிக்கடி பனிப்புயல் வீசும் ; எப்போதும் உறைநிலைக்குக் கீழ்தான் வெப்பம்; அதாவது குளிர் SUB ZERO TEMPERATURE.

இதன் அருகிலுள்ள பெரிய நாடு கனடா ; ஒரு காலத்தில் நார்வே நாட்டுக்குச் சொந்தமான இப்பகுதி பின்னர் டென்மார்க்குக்குக் மாற்றப்பட்டது இங்குள்ள மக்கள் இனுயிட் Most residents of Greenland are Inuit. என்னும் எஸ்கிமோ மக்கள் ஆவர்.

இங்கு வசிக்கும் மிருகங்கள்

சடை எருமை MUSK OX , துருவ நாய்கள், துருவக் கரடிகள், ரெயின்டியர் எனப்படும் மான்கள், கடலில் திமிங்கிலங்கள்

இங்கு அபூர்வ தாதுக்கள் எனப்படும் உலோகங்கள், மூலகங்கள் இருப்பதாகச் சொல்லப்பட்டாலும் இதுவரை தோண்டி எடுக்கப்படவில்லை. இதுவரை சீனாவே 95 சதம் அபூர்வ தாதுக்களை சப்ளை செய்கிறது. சிவப்பு ரத்தினக் கல்லான மாணிக்கம் RUBY இங்கே அதிகம் கிடைக்கிறது. இரும்பு, செம்பு, தங்கம், பிளாட்டினம், யுரேனியம் அலுமினியம், டைட்டேனியம், நிக்கல், டங்ஸ்டன் கிடைக்கின்றன ; ஆயினும் முழு அளவில் தோண்டி எடுக்கப் படவில்லை; அமெரிக்கா, இதன் மீது கண் வைத்திருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.

–SUBHAM—

TAGS- கிரீன்லாந்து உருகுகிறது, உலகத்துக்கு ஆபத்து,

திருப்புகழில் பங்களாதேஷ் கோவில்;  காகத்துக்கு ஏன் ஒரு கண்? Part-15 (Post.15,407)

Written by London Swaminathan

Post No. 15,407

Date uploaded in Sydney, Australia –  9 February 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part 15

திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 15

***

அரவு அணையார் குழை பர சிவ ஆரண அரன் இட பாகமது

உறை சோதி … பாம்பைப் பொருந்திய குண்டலமாக உடைய பரம

சிவன், வேதம் போற்றும் அரன் (எனப்படும் பெருமானுடைய) இடப்

பாகத்தில் உறைகின்ற ஜோதி,

அமை உமை டாகினி* திரி புரை நாரணி அழகிய மாது

அருள் புதல்வோனே … அம்மை, உமாவாகிய பார்வதி, தேவி, திரி

புரத்தை எரித்தவள், துர்க்கை, அழகிய மாதாகிய பார்வதி அருளிய மகனே,

குரவு அணி பூஷண சரவண தேசிக குக கருணா நிதி

அமரேசா … குரா மலரை அணிகின்ற ஆபரணமாகக் கொண்டவனே,

சரவணனே, குரு மூர்த்தியே, குகனே, கருணை நிதியே, தேவர்களுக்கு

ஈசனே,

குற மகள் ஆனை மின் மருவிய பூரண குரு கிரி மேவிய

பெருமாளே. … குறப் பெண்ணாகிய வள்ளி, (ஐராவதம் என்ற)

யானையால் வளர்க்கப்பட்ட மின்னல் போன்ற தேவயானை (ஆகிய இருவரும்) சேர்ந்துள்ள முழுப் பொருளே, சுவாமி மலையில் வீற்றிருக்கும் பெருமாளே.

* டாகினி, காகினி, லாகினி, ஹாகினி, ராகினி, சாகினி என்பன தேவியைக் குறிப்பனவாகும்.

***

DACCA- Capital of Bangladesh – This name is derived from the goddess temple. Dhakeshwari Temple: The name is derived from the Dhakeshwari temple (Goddess of Dhaka) built by King Ballal Sena in the 12th century.

வங்கதேசத்தின் தலைநகர் டாக்கா. இது லலிதா சஹஸ்ரநாமத்தில் வரும் டாகினி, டாகேஷ்வரி  தேவியின் கோவிலால் ஏற்பட்ட பெயர்.

லலிதா சஹஸ்ரநாமத்தில் டாக்கா 

டாகினீஸ்வரி – டாக்கா -484; நாமத்தின் எண்

டாக்கா நகர டாகேஸ்வரி கோவில் படங்கள்

For more please read my article- லலிதா சஹஸ்ரநாமத்தில் வரும் புண்ணிய நகரங்கள் (Post.15,124)

***

காக்கைக்கு ஏன் ஒரு கண் ?

பாதி மதிநதி போதும் … பிறைச் சந்திரனையும், கங்கை நதியையும்,கொன்றை மலரையும்

அணிசடை நாத ரருளிய குமரேசா … அணிந்த சடைப் பெருமான் சிவபிரான் அருளிய குமரேசனே,

பாகு கனிமொழி மாது … சர்க்கரைப் பாகும், கனிகளும் போன்ற இனிய மொழியை உடைய மாதரசி,

குறமகள் … குறமகளாகிய வள்ளியின்

பாதம் வருடிய மணவாளா … பாதத்தைப் பிடித்துவிடும் மணவாளனே,

காது மொருவிழி காகமுற அருள் … பிரிக்கப்பட்ட ஒரு விழியை*

காகாசுரன் என்னும் காகம் அடையும்படி அருளிய

மாயன் அரி திரு மருகோனே … ஸ்ரீராமர் மாய ஹரிக்கும்,

லக்ஷ்மிக்கும் மருமகனே,

காலனெனை யணுகாமல் … யமன் என்னை அணுகாத வகைக்கு

உனதிரு காலில் வழிபட அருள்வாயே … உன் இரு திருவடிகளில்

வழிபடும் புத்தியை அருள்வாயாக.

ஆதி யயனொடு தேவர் … ஆதி பிரமனோடு அமரர்கள் அனைவரும்

சுரருலகு ஆளும் வகையுறு சிறைமீளா … தேவலோகத்தை

ஆளும்படி சிறையினின்று அவர்களை மீட்டவனே,

ஆடு மயிலினி லேறி … நடனம் ஆடும் மயில் மீது ஏறி

அமரர்கள் சூழ வர … தேவர்கள் உன்னைச் சூழ்ந்துவர

வரும் இளையோனே … வருகின்ற இளையவனே,

சூத மிகவளர் சோலை … மாமரங்கள் மிகுந்து வளர்ந்த சோலைகள்

மருவு சுவாமிமலைதனில் உறைவோனே … நிறைந்த

சுவாமிமலையில் வீற்றிருப்பவனே,

சூர னுடலற … சூரனின் உடல் வீழ,

வாரி சுவறிட … கடல் வற்றிப்போக,

வேலை விடவல பெருமாளே. … வேலினைச் செலுத்தவல்ல

பெருமாளே.

***

சீதையின் மார்பை தன் அலகால் கொத்தின காகத்தின் மீது புல்லையே படையாக்கி ஸ்ரீராமர் செலுத்த, அப்படைக்கு அஞ்சி, காப்பவர் யாருமின்றி,ஸ்ரீ ராமரையே காகம் சரணடைய, அவர் அக்காகத்திற்கு அருளி, காகத்தின் ஒரு கண்மணியைப் பிரித்து, கண்களிரண்டிற்கும் ஒரு மணியேயென தண்டித்தார். காகாசுரனாக சாபத்தினால் வந்தது தேவேந்திரனது குமாரன் ஜயந்தன் ஆகும்.

ராமாயணத்தில் சுந்தர  காண்டத்தில் காகாசுரன் கதை

ராமாயணத்தில், சித்திரகூடத்தில் சீதையின் மார்பில் காக உருவில் வந்து அம்பு எய்த இந்திரனின் மகன் ஜெயந்தன் (காகாசுரன்), சீதையைத் துன்புறுத்தியதற்காக ராமர் தன் புல்லில் பிரம்மாஸ்திரம் ஏவி துரத்தினார். மூன்று உலகங்களிலும் உதவி கிடைக்காத ஜெயந்தன், ராமரிடமே சரணடைந்தான். கருணை கொண்ட ராமர், பிரம்மாஸ்திரத்தின் மூலம் அவனது ஒரு கண்ணை மட்டும் குருடாக்கி, அவனது உயிரைக் காப்பாற்றினார்.

சம்பவம்: ராமர், சீதையின் மடியில் உறங்கிக் கொண்டிருந்தபோது, இந்திரனின் மகனான ஜெயந்தன் காக்கை உருவம் எடுத்து, சீதையின் மார்பில் கொத்தி, குருதி சிந்த வைத்தான்.

ராமரின் கோபம்: இதனால் கோபமடைந்த ராமர், தர்ப்பைப் புல்லில் பிரம்மாஸ்திரத்தை மந்திரித்து, காகாசுரனின் மீது ஏவினார்.

சரண்: அந்த அம்பு காகாசுரனைத் துரத்தியது, அவன் தன் தந்தை இந்திரன், முனிவர்கள், தேவர்கள் என யாரிடமும் அடைக்கலம் கிடைக்காமல், இறுதியில் ராமரிடமே வந்து மன்னிப்பு கேட்டு சரணடைந்தான்.

தண்டனை: ராமர் அவனது உயிரைக் காப்பாற்றினாலும், அவனுக்குத் தண்டனையாக ஒரு கண்ணைக் குருடாக்கினார்.

சீதையின் நம்பிக்கை: இந்த சம்பவத்தைச் சீதை, அனுமனிடம் கூறி, ராமரின் கருணைத் தன்மையை விளக்குகிறார்.

இந்தக் கதை, சரணடைந்தவர்களைக் காக்கும் ராமரின் கருணையையும், தவறு செய்தால் அதற்கான தண்டனை கிடைக்கும் என்பதையும் உணர்த்துகிறது.

***

மீண்டும் வியாதிகள் பட்டியல்

அருணகிரி நாதர் பல பாடல்களில் நோய்களின் பட்டியலைத் தருகிறார். இதோ சுவாமிமலை திருப்புகழ்

வாதமொடு சூலை கண்டமாலை குலை நோவு சந்து மா வலி

வியாதி குன்மமொடு காசம் … வாத நோய், வயிற்றுளைவு நோய்,

கழுத்தைச் சுற்றி வரும் புண் கட்டி, மார்பு எரிச்சல், எலும்புருக்கி நோய், பெரிய இழுப்பு நோய், மகோதரத்துடன், கோழை நோய்,

வாயுவுடனே பரந்த தாமரைகள் பீனசம் பின் மாதர் தரு

பூஷணங்கள் என ஆகும் … வாயுவினால் உண்டாகும் படர்தாமரை

போன்ற சொறி, படை, மூக்கடைப்பு, பின்னும் ஒழுக்கம் கெட்ட

விலைமாதர்களுடன் இணைவதால் கிடைக்கும் ஆபரணங்கள்

என்று சொல்லத்தக்க புண் வகைகள்,

பாதக வியாதி புண்கள் ஆனது உடனே தொடர்ந்து பாயலை

விடாது மங்க … பாவ நோய்ப் புண்கள் ஆகிய இவை உடனே

என்னைப் பீடிப்பதால், படுக்கையை விடாது கிடந்து, உடல்

நலம் குறைந்து, இவையால் நின் பாத மலரானதின் கண் நேயம் அறவே

மறந்து பாவ மதுபானம் உண்டு வெறி மூடி … இக்காரணத்தால்

உனது திருவடி மலர்களில் அன்பு என்பதை முற்றும் மறந்து, பாவம்

நிறைந்த கள்ளைக் குடித்து, அதனால் மயக்கம் மிகுந்து,

ஏதம் உறு பாச பந்தமான வலையோடு உழன்று ஈனம் மிகு

சாதியின் கண் அதிலே … குற்றம் தரும் பந்த பாசக் கட்டுகளான

வலையில் அகப்பட்டு அலைந்து, இழிவான என் ஜாதித்

தொழில்களிலே ஈடுபட்டு,

நான் ஈடு அழிதல் ஆனதின் பின் மூடன் என ஓது முன்பு

உன் ஈர அருள் கூர வந்து எனை ஆள்வாய் … நான் வலிமை

அற்று அழிந்த பின், இவன் ஒரு முட்டாள் எனப் பிறர் கூறுவர்.

(அங்ஙனம் பிறர்) சொல்லுவதற்கு முன்பு உனது கருணை நிறைந்த

திருவருள் மிக்கு வந்து என்னை ஆட் கொள்வாயாக.

****

திருமாலின் வராக அவதாரக் கதை

சூகரத்தொடு அம்பு தான் எடுத்து வந்த சூதனுக்கு

இசைந்த மருகோனே … பன்றியின் உருக்கொண்டு (வராக

அவதாரத்தில்)* அழகிய பூமியை மேலே எடுத்து வந்த தந்திரம்

வாய்ந்த திருமாலுக்கு உகந்த மருகனே,

ஏர் எதிர்த்து வந்து நீர்கள் கட்டி அன்று தான் இறைக்க

வந்தது ஒரு சாலியே மிகுத்து உயர்ந்த மா வயற்கள்

மிஞ்சும் ஏரகத்து அமர்ந்த பெருமாளே. … ஏர் எதிர்த்து வர

நீரைப் பாய்ச்சிக் கட்டி, அப்போதைக்கப்போது உழவர்கள்

இறைத்ததன் பயனால் விளைந்த ஒப்பற்ற செந்நெல் பயிர்களே

பெருகி உயர்ந்து வளர்ந்த சிறந்த வயல்கள் நிறைந்துள்ள

சுவாமி மலையில் வீற்றிருக்கும் பெருமாளே.

திருமால் வராகாவதாரம் எடுத்த வரலாறு:

இரணியாக்ஷன் என்னும் அசுரன் பூமியைப் பாய் போல் சுருட்டி எடுத்துக் கொண்டு பாதாளத்தில் மறைந்து கொண்டான். திருமால் பன்றி உருவம் கொண்டு, பாதாளத்திற்குச் சென்று, தன் கொம்பினால் அவனைக் கொன்று, பூமியைக் கொம்பினால் தாங்கி மேலே கொண்டு வந்தார்.

***

லட்சுமியின் குணம் – ராஜஸ குணம்

ஏர் அணி நல் குழலைக் ககனச் சசி மோகினியை புணர்ச்சி

சித்த ஒரு அற்புத வேட அமுதச் சொருபத்த குறத்தி மணம்

கொள்வோனே … அழகுள்ள சிறந்த கூந்தலை உடையவளும்

விண்ணுலகத்தில் உள்ள இந்திராணி பெற்ற பேரழகியுமாகிய

தேவயானையைச் சேர்ந்த சித்தனே*, ஒப்பற்ற அற்புதமான வேடர்

குலத்தில் உதித்த அமுத சொரூபியான குறமகள் வள்ளியை

மணம் கொண்டவனே,

ஏரக(ம்) வெற்பு எ(ன்)னும் அற்புத மிக்க சுவாமி மலைப்

பதி நிற்கும் இலக்ஷண … திருவேரக மலை என்னும் அற்புதம்

மிகுந்த சுவாமி மலைப் பதியாகிய தலத்தில் நிற்கும் அழகனே,

ராஜத லக்ஷண லக்ஷுமி பெற்று அருள் தம்பிரானே. …

லக்ஷ்மி போன்ற ராஜத** குணம் படைத்த பார்வதி பெற்றருளிய

தம்பிரானே.

சித்தன் முருகனுக்கு ஒரு பெயர் – மனத்தைக் கொள்ளை கொள்பவன்.

** ஸத்வம், ராஜஸம், தாமசம் என்ற முக்குணங்களில் லக்ஷ்மிக்கு ராஜஸ குணம் ஏற்பிக்கப்படுகிறது. லக்ஷ்மி அருள் மழை பொழிந்து செல்வங்களை வலியக் கொடுக்கும் தெய்வம்.

***

ராமனின் சாகசங்கள்

வடிவுடைய மானும் இகல் கரனும் திகழ் எழு வகை மரா

மரமும் நிகர் ஒன்றும் இல் வலிய திறல் வாலி உரமும் நெடும்

கடல் அவை ஏழும் மற நிருதர் சேனை முழுதும் … அழகுடைய

(மாரீசன் என்னும்) பொன்மானும், பகைத்து வந்த கரன் என்னும்

அரக்கனும், விளங்கிய ஏழு வகையான மரா மரங்களும், ஒப்பு

ஒன்றுமே இல்லாத வலிமை வாய்ந்த வாலி என்னும் குரங்கு

அரசனின் மார்பும், பெரிய ஏழு கடல்களும், வீரமுள்ள அசுரர்களின்

படைகள் முழுதும்,

இலங்கை மன் வகை இரவு போலும் அணியும் அலங்க்ருத

மணி மவுலியான ஒரு பதும் விஞ்சு இரு பது தோளும் அடை

வலமும் மாள … இலங்கை அரசன் ராவணனுடைய சிறப்புற்ற சூரியன் போல் ஒளி வீசி அணிந்த அலங்காரமான ரத்ன கிரீடம் விளங்கும் தலைகள் பத்தும், மேம்பட்டு விளங்கும் இருபது தோள்களும்,

அடைந்திருந்த வலிமையையும் (இவை எல்லாம்) மாண்டு ஒடுங்க,

விடு சர அம்பு உடை தசரத குமார ரகு குல புங்கவன் அருள்

புனை முராரி மருக … ஏவிய போர் அம்பைக் கொண்ட தசரத

மன்னனுடைய மகனும் ரகு குலத்தைச் சேர்ந்த மேலானவனும், அருள் mபாலிக்கும் (ராமனுமாகிய) திருமாலின் மருகனே,

(சுவாமி மலை திருப்புகழ் பாடல்களிலிருந்து எடுக்கப்பட்ட செய்திகள்)

–subham—

Tags- திருப்புகழ் , பங்களாதேஷ், டாக்கா கோவில்,   டாகினி காகத்துக்கு ஏன் ஒரு கண்?-  Part 15 ,  அருணகிரிநாதர் , அரிய செய்திகள். சொல் அழகு, பொருள் வளம், டாக்கா,டாகேஸ்வரி கோவில் படங்கள்

ராமாயணத்தில் வரங்கள் (35) சுரஸா தேவிக்கு பிரம்மா வரம் அருளியது! (Post.15,406)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,406

Date uploaded in London – 8 February 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

ராமாயணத்தில் வரங்கள் (35)    

ராமாயணத்தில் வரங்கள் (35) சுரஸா தேவிக்கு பிரம்மா வரம் அருளியது!

ச. நாகராஜன் 

அடுத்து சுந்தரகாண்டத்தில் முதல் அத்தியாயத்தில் இன்னொரு வரம் பற்றிய விவரத்தைப் பார்க்கிறோம்.

மைநாக மலையிடமிருந்து விடை பெற்ற ஹனுமார் வேகமாகப் பறந்து செல்லலானார்.

அப்போது தேவர்கள் சர்ப்பங்களுக்குத் தாயான சுரஸையைப் பார்த்து,

“நீ கோரமான ராக்ஷஸ உருவத்தை எடுத்துக் கொண்டு ஒரு முகூர்த்த நேரம் ஹனுமாருக்கு இடைஞ்சல் செய்; உன்னை அவர் உபாயத்தினால் வெல்கிறாரா அல்லது துன்பத்தை அடைகிறாரா என்று பார்க்க விரும்புகின்றோம். அவரது வலிமையையும் ஆண்மையையும் மறுபடியும் பார்க்க விரும்புகிறோம்” என்றனர். 

உடனே சுரஸா தேவி பயங்கரமான ராக்ஷஸ வடிவை எடுத்துக் கொண்டு ஹனுமார் முன்னால் தோன்றினாள்.

அவரைப் பார்த்துக் கூறலானாள். 

மம பக்ஷய: ப்ரதிஷ்டஸ்த்வமீ ஈஸ்வரைர்வானரர்ஷப:\

அஹம் த்வாம் பக்ஷயிஷ்யாமி ப்ரவிசேஷம் மமாநதம் || 

சுந்தரகாண்டம், முதல் அத்தியாயம், ஸ்லோக எண் 161

வானரர்ஷப: – ஓ! வானரோத்தம!

த்வம் ஈஸ்வரை: – நீ தேவர்களாலே

மம பக்ஷய: – எனக்கு இரையாக

ப்ரதிஷ்ட: – நியமிக்கப்பட்டாய்

அஹம் – நான்

த்வாம் – உன்னை

பக்ஷ்யிஷ்யாமி – தின்னப் போகிறேன்

மம – என்னுடைய

இதம் ஆனனம் – இந்த வாய்க்குள்

ப்ரவிஷ: – புகுவாயாக 

அப்ரவீன்னாதி வர்தேன்யாம் கஸ்சிதேஷ வரோ மம |

சுந்தரகாண்டம், முதல் அத்தியாயம், ஸ்லோக எண் 167

கஸ்சித் – ஒருவரும்

மாம் – என்னை

ந அதிவர்ததே – கடந்து செல்லக் கூடாது

ஏஷ – இது

மம – எனது

வர: – வரம்

அப்ரவீத் – என்று (சுரஸை) சொன்னாள் 

ப்ரவிஷ்ய வதனம் மேத்ய கந்தவ்யம் வானரோத்தம | 

வானரோத்தம – வானரோத்தம!

மே வதனம் – எனது வாயில்

ப்ரவிஷ்ய – புகுந்து விட்டு

அத்ய – இப்போது

கந்தவ்யம் – போக வேண்டும் 

வர ஏவ புரா தத்தோமம தாத்ரேதி சத்வரா |

வ்யாதாய வக்த்ரம் விபுலம் ஸ்திதா ஸா மாருதே: புர: || 

சுந்தரகாண்டம், முதல் அத்தியாயம், ஸ்லோக எண் 169

  ஏஷ – இது

புரா – முற்காலத்தில்

தாத்ரா – பிரம்மாவினால்

மம – எனக்கு

தத்த: வர: – கொடுக்கப்பட்ட வரம்

இதி – என்ற

வாக்யம் – சொல்லை

மாருதே: – ஹனுமாருக்கு

புர: – எதிரில்

ஸ்திதா – நின்று கொண்டு

ஸா – அவள் தனது

வக்த்ரம் – வாயை

சத்வரா – வேகமாக

விபுலம் – மிகப் பெரியதாய்

வ்யாதாய – திறந்து கொண்டு

அப்ரவீத் – சொன்னாள்

இதைக் கேட்ட ஹனுமார் கோபம் கொண்டார். எப்படி விழுங்க நினைக்கிறாயோ அப்படியே வாயைத் திறந்து கொள் என்றார். பிறகு அவர் பத்து யோஜனை அளவு வளர்ந்தார். சுரஸையோ தனது வாயை இருபது யோஜனை அகன்றதாகச் செய்தாள். ஹனுமார் உடனே முப்பது யோஜனை அளவு வளர்ந்தார். சுரஸையோ தனது வாயை நாற்பது யோஜனை அகன்றதாகச் செய்தாள். இருவரும் இப்படி மாறி மாறி பெரிய உருவை எடுக்க ஸுரஸை நூறு யோஜனையாக மாறிய அளவில் ஹனுமார் திடீரென்று சுருங்கி அங்குஷ்ட பிரமாண வடிவை எடுத்து அவள் வாயில் புகுந்து மீண்டு வெளியில் வந்தார்.

உடனே சுரஸா தேவி தன் சுய ரூபத்தை எடுத்து ஹனுமாரை வாழ்த்தி வழி அனுப்பி வைத்தாள்.

சுரஸா எப்படி எப்போது எதற்காக பிரம்மாவிடமிருந்து வரம்  பெற்றாள் என்ற விவரம் இங்கு சொல்லப்படவில்லை;

** 

Hinduism through 500 Pictures in Tamil and English 39; படங்கள் மூலம் இந்து மதம் கற்போம்-39 (Post.15,405)

 Written by London Swaminathan

Post No. 15,405

Date uploaded in Sydney, Australia –  8 February 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Symbols in Hinduism; Weapons of Gods; Symbols of Hindu Gods

6- Jatamandala (Plate II)

7-Jatabandha

9-Jatabhara

11-Jatamakuta with flames (Plate I)

5-Peacock feathers decorating them

7-Kiritamakuta (Plate I)

8-Karandamakuta (Plate II)

10-Vaasikaabandha (Plate I)

9- Not known hair styles (Plate I)

3, 4 -Bhringipada (Plate II)

6- ஜடாமண்டல  (Plate II)

7-ஜடாபாந்த

9-ஜடாபார

11-ஜடாமகுட தலையில் அனல்  (Plate I)

5-Peacock feathers decorating  மயில் தோகை

7-கிரீடமகுட  (Plate I)

8-கரண்டமகுட  (Plate II)

10-வாசிகாபந்த  (Plate I)

9- Not known hair styles பெயரில்லாத முடி அலங்காரம் (Plate I)

3, 4 பிரிங்கிப்பத  (Plate II)

***

Brahma- Lotus, Rosary (akshamala/ garland of beads), Swan, Veda/Book,

பிரம்மா – தாமரை ஜபமாலை (அக்ஷமாலா)அன்னம்வேத புஸ்தகம்

***

Vishnu- Shanka (conch), Chakra (wheel), Sesha (Snake), Gada (mace), Garuda (Eagle)

விஷ்ணு – சங்கு சக்ரம்சேஷ நாகம்கதைகருடன்

***

Shiva- Trisula, Linga, Nandhi (bull), Snake, Ganges River on head, Third Eye, Crecent moon on forehead, Rudraksha (rosary), Deer, Tiger skin, Vibhuti (holy ash)

சிவன் – திரிசூலம்நந்திலிங்கம்தலையில் பாம்புபிறைச் சந்திரன்கங்கை நதி முக்கண்மான்மழுஉடுக்கைவிபூதி

***

Saraswati- White lotus, Swan or peacock, Veena, Book or Plam leaves

சரஸ்வதி  – வெண் தாமரைஅன்னம் அல்லது மயில்வீணைகைகளில் புஸ்தகம் அல்லது ஏடு 

***

Lakshmi- Red Lotus, Elephant, Owl or Peacock feather

லெட்சுமி  – செந்தாமரையானைஆந்தை அல்லது மயில்

***

Parvati- Lion or Tiger, Trident, Chakra, Gada,  Mountain

பார்வதி – சிங்கம் அல்லது புலி மலைதிரிசூலம்,சக்ரம்கதாயுதம்

***

Indra- Thundebolt (Vajrayudha), Thrre or Four headed elephant (Airavata)

Varuna- Noose (pasa), Crocodile, or Shark, in Water

Agni- Flame on head, Goat

இந்திரன் – வஜ்ராயுதம் , ஐராவதம் என்னும் மூன்று அல்லது நான்கு தலை யானை

வருணன்- பாசக்கயிறுமுதலை அல்லது மகர/ சுறா மீன்கடல்

அக்கினி – தலை மீது அனல், ஆடு

Yama- Bufalo, Noose

யமன் – எருமைபாசக்கயிறு

***

Sun/ Surya- Chariot, Seven Horses, Rays in a circle

Chanra- Full Moon on Head

சூரியன் – ரத்தம்ஏழு குதிரைகள் வட்ட வடிவில் கிரணங்கள்

சந்திரன் – தலையில் வட்ட வடிவ பூரண சந்திரன்

***

SIVA AND VISHNU

Rama- Bow and Arrow

Krishna- Cow, Flute, Peacock feather, Sudarsana Chakra, Chanka

ராமன்- கையில் கோதண்டம் என்னும் வில்

கிருஷ்ணன் – புல்லாங்குழல்பசுக்கள்தலையில் மயில் தோகைசங்கு சுதர்சன சக்கரம் 

***

Ganesa- Elephant face, Ankusa, Modaka, Mouse

Murugan/ Skanda- Vel/Spear, Peacock, Rooster flag,

கணேசன் – யானை முகம்பாசக் கயிறு அங்குசம்மோதகம் என்னும் கொழுக்கட்டைமூஷிகம் என்னும் எலி.

முருகன்- ஸ்கந்தன் – வேல் மயில்சேவல் கொடி

***

Hanuman- Monkey face, Gada (Mace)

அனுமன் – கதாயுதம்குரங்கு முகம்

–subham—

Tags- Symbols, Hinduism, Gods, Goddesses, Weapons, Flags, Vahanas, இந்து மதம்சின்னங்கள்வாகனங்கள் ஆயுதங்கள்கடவுள்,

மூளையின் கலர் என்ன?  செட்டியார் வடிவில் முருகன்!- Part 14 (Post.15,404)

Written by London Swaminathan

Post No. 15,404

Date uploaded in Sydney, Australia –  8 February 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part 14

திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 14

***

மூளையின் கலர் என்ன?  செட்டியார் வடிவில் முருகன்!

சுத்திய நரப்புடன் எலுப்பு உறு தசை குடல் ஒடு …

சுற்றப்பட்டுள்ள நரம்புகளுடன் எலும்பு பொருந்திய மாமிசம், குடல்

இவற்றுடன்,

அப்புடன் நிணம் சளி வலிப்பு உடன் இரத்த குகை … நீர்,

கொழுப்பு, (மூக்குச்) சளி, இழுப்பு நோய்இருதயம்,

சுக்கிலம் விளை புழுவொடு அக்கையும் அழுக்கும் … இந்திரியம்,

விளைகின்ற கிருமிகள், எலும்புகள், அழுக்குகள்,

மயிர் சங்கு மூளை துக்கம் விளைவித்த பிணை … ரோமம், சங்கு

போல் வெளுத்த மூளை, துக்கத்தை விளைவிக்கின்ற சேர்க்கை நோய்,

அல் கறை முனை பெருகு குட்டமொடு … மாதவிடாய் முதலிய

மாசு, அவயவ நுனிகளில் விருத்தியாகும் குஷ்ட நோய்,

விப்புருதி புற்று எழுதல் முட்டு வலி … சிலந்தி, புண் புரை

வைத்தல், முட்டு வலி,

துச்சி பிளவை பொருமல் பித்தம் ஒடு உறக்கம் மிக … புசிக்கின்ற

ராஜப் புண், வயிறு உப்பும் நோய், பித்தம், தூக்கம் மிகுந்து வர,

அங்கம் ஊடே எத்தனை நினைப்பையும் விளைப்பையும்

மயக்கம் உறல் … உடலில் எத்தனை எண்ணங்கள், செய்கைகள்,

மயக்கங்கள்,

எத்தனை சலிப்பொடு கலிப்பையும் மிடற் பெருமை … எத்தனை

வெறுப்பும், பொலிவும், வலிமைப் பெருமையும்,

எத்தனை க(கா)சத்தையும் மலத்தையும் அடைத்த குடில்

பஞ்ச பூதம் … எத்தனை க்ஷய நோய், மலத்தையும் அடைத்துள்ள ஐந்து பூதத்தாலாகிய உடலிலே,

எத்தனை குலுக்கையும் மினுக்கையும் மன கவலை … எத்தனை

குலுக்கு, எத்தனை மினுக்கு, மனக் கவலை,

எத்தனை கவட்டையும் நடக்கையும் உயிர் குழுமல் … எத்தனை

கபடம், நடவடிக்கை, உயிரின் சேர்க்கை,

எத்தனை பிறப்பையும் இறப்பையும் எடுத்து உலகில்

மங்குவேனோ … எத்தனை பிறவிகளையும், மரணங்களையும் எடுத்து

(நான்) இவ்வுலகில் வாட்டமுற்று அழிவேனோ?

தத்தனத னத்தனத னத்தனவெ னத்திமிலை … தத்தனத

னத்தனத னத்தன என்று பறைகள் ஒலிக்கவும்,

ஒத்த முரச(ம்) துடி இடக்கை முழவு பறைகள் சத்தம் அறைய …

ஒரு வகைப் பறை, உடுக்கை, இடக் கையால் கொட்டும் தோல் கருவிகள் பேரொலி செய்யவும்,

தொகுதி ஒத்த செனி ரத்த வெ(ள்)ள மண்டி ஓட … கூட்டமாய்

வருவதை ஒத்துத் தோன்றிய இரத்த வெள்ளம் நெருங்கி ஓடவும்,

சக்கிரி நெளிப்ப அவுண பிணம் மிதப்ப … ஆதிசேஷனாகிய

பாம்பு நெளியவும், அசுர்களின் பிணங்கள் (ரத்த வெள்ளத்தில்) மிதக்கவும்,

அமரர் கைத் தலம் விரித்து அர ஹர சிவ பிழைத்தோம் என …

தேவர்கள் கைகளைத் தூக்கி, அரஹர சிவ, பிழைத்தோம் என்று

முழங்கவும்,

சக்கிரி கிரிச் சுவர்கள் அக்கணமே பக்கு விட வென்ற வேலா …

சக்ரவாளகிரியின் சுவர்கள் அந்தக் கணத்திலேயே பிளவுபடவும், வெற்றி கொண்ட வேலனே,

சித்தம் அதில் எத்தனை செகத்தலம் விதித்து உடன் அழித்து …

உனது திருவுள்ளத்தில், எத்தனை உலகங்களைப் படைத்து, உடனே

அழித்து,

கமலத்தனை மணிக் குடுமி பற்றி … தாமரையில் வீற்றிருக்கும்

பிரமனின் அழகிய குடுமியைப் பிடித்து

மலர்ச் சித்திர கர தலம் வலிப்ப பல குட்டி நடனம் கொள்

வேளே … (உனது) அழகிய திருக்கரம் வருந்த பல முறை அவனைக்

குட்டி நடனம் கொண்ட தலைவனே,

செட்டி வடிவை கொடு தினைப் புனம் அதில் சிறு குறப்

பெண் … செட்டி வேடம் பூண்டு, தினைப்புனத்தில் (வாழும்) சிறிய குறப் பெண்ணாகிய வள்ளியின்

அமளிக்குள் மகிழ் செட்டி … படுக்கையில் மகிழும் செட்டியே,

குரு வெற்பில் உறை சிற் பரமருக்கு … சுவாமி மலையில்

வீற்றிருக்கும் ஞானமயமான சிவ பெருமானுக்கு

ஒரு குருக்கள் என முத்தர் புகழ் தம்பிரானே. … ஒப்பற்ற

குருமூர்த்தி என்று முக்தி நிலை பெற்ற பெரியோர் புகழ்கின்ற தம்பிரானே.

முருகன் ஒரு வளையல் வியாபாரி!

chetti vadivaik kodu thinaippunam adhiR siRu kuRappeN: In the disguise of a bangle merchant, You went to the millet-field to woo the pretty little damsel of the KuRavAs, VaLLi,

amaLikkuL magizh chetti: and enjoyed her company in her bed, Oh Lord!

(TANSLATION BY SRI GOPALA SUNDARAM IN KAUMARAM.COM)

சங்கப் புலவர்  கலகம் தீர்த்த திருவிளையாடல் புராண நிகழ்ச்சியில் செட்டி வீட்டுப் பிள்ளை  ருத்திரசர்மனாக  முருகனே வந்தார் என்றும் அருணகிரி பாடியிருக்கிறார்

***

பறக்கும் மலைகள் = குட்டி கிரகங்கள்

GEOLOGY IN TIRUPPUGAZ

கோடிக்கணக்கான வருடங்களுக்கு முன்னால்பூமியை பெரிய விண்கற்களும் குட்டி கிரகங்களும் (METEORITES AND ASTEROIDS) தாக்கி பெரிய பள்ளங்களை உண்டாக்கின . ஆறு கோடி ஆண்டுகளுக்கு முன்னால்டைனோஸரஸ் என்னும் இராட்சத மிருகங்கள்  அழி ந்ததற்கும் இதுவே காரணம்; இந்தியாவிலும் இப்படி ஒரு பெரிய குட்டி கிரகம் மோதி புனே நகருக்கு அருகில் லோனார் ஏரியை உருவாக்கியது. இன்றும் சுற்றுலாப்பயணிகள் மொய்க்கும் இடம்  இது. இதையே இந்திரன் செய்கையாகப் புராணங்கள் வருணிக்கின்றன அனுமன் இலங்ககைக்குச் சென்றபோது சந்தித்த கடல் அடி  மலைகள் SUB MARINE MOUNTAINS  பற்றிய (மைநாக மலை) கதைகளும் இவைதான்.

Lonar Lake, located in Maharashtra’s Buldhana district, is a unique, 50,000-year-old saline and alkaline crater lake formed by a meteorite impact in basalt rock. It is a renowned eco-tourism spot featuring ancient temples (like Gomukh), diverse wildlife, and a 1.8 km diameter, making it a significant National Geo-heritage Monument.

சோலை மடல் கொண்டு சக்ர மால் வரை அரிந்த … கற்பகச் சோலையில் உள்ள பூ இதழால் சக்ரவாள கிரி ஆகிய பெரிய மலைகளின் (சிறகுகளை)* வெட்டித்தள்ளிய

வஜ்ரபாணியர் தொழும் திருக் கை வடி வேலா … வஜ்ராயுதம் கொண்ட கைகளை உடைய இந்திரன் வணங்கும் திருக்கை வடிவேலனே,

சூர் முதிர் க்ரவுஞ்ச வெற்பும் வேலை நிலமும் பகைத்த சூரன் உடலும் துணித்த பெருமாளே. … அச்சத்தை நிரம்பத் தரும் கிரெளஞ்ச மலையையும், கடலிடத்தையும், பகைத்து வந்த சூரனுடைய உடலையும் அழித்த பெருமாளே.

முன்பு ஒரு காலத்தில் மலைகள் எல்லாம் பறவைகள்போல் இறகுகள் உடையவவைகளாக இருந்தனவாம். எங்கும் பறந்து விழுந்துஉயிர்களுக்குத் தீங்கு செய்ததால்இந்திரன் கோபித்து அந்த மலைகளின் இறகுகளை அறுத்துத் தள்ளினான்.

***

முருகன் ஒரு புலவன்

அருமறை தமிழ்நூல் அடைவே … அருமையான வேதங்களையும் தமிழ் நூல்களையும் முழுமையாக

தெரிந்துரைக்கும் புலவோனே … கேட்பவரின் தரம் அறிந்து விரித்து உரைத்தருளும் ஞான பண்டிதா,

***

தாவரவியல்- ஆறு மரங்கள் Botany in Tiruppugaz

கீசகஞ் சுரர்தருவு மகிழுமா வத்தி சந்து புடைசூழும் … மூங்கில்,

கற்பக மரம், மகிழ மரம், மாமரம், அத்தி மரம், சந்தன மரம் இவையெல்லாம் சுற்றிலும் சூழ்ந்துள்ள, (சுவாமிமலை)

நானும் நீயும் ஒன்று ஆக வேண்டும் தத் தவம் அசி ;அஹம் பிரம்மம் அஸ்மி – அத்வைதம்

 நாவேறு பாம ணத்த பாதார மேநி னைத்து

     நாலாறு நாலு பற்று …… வகையான

நாலாரு மாக மத்தி னூலாய ஞான முத்தி

     நாடோறு நானு ரைத்த …… நெறியாக

நீவேறெ னாதி ருக்க நான்வேறெ னாதி ருக்க

     நேராக வாழ்வ தற்கு …… னருள்கூர

நீடார்ஷ டாத ரத்தின் மீதேப ராப ரத்தை

     நீகாணெ னாவ னைச்சொ …… லருள்வாயே

சேவேறு மீசர் சுற்ற மாஞான போத புத்தி

     சீராக வேயு ரைத்த …… குருநாதா

தேரார்கள் நாடு சுட்ட சூரார்கள் மாள வெட்டு

     தீராகு காகு றத்தி …… மணவாளா

காவேரி நேர்வ டக்கி லேவாவி பூம ணத்த

     காவார்சு வாமி வெற்பின் …… முருகோனே

கார்போலு மேனி பெற்ற மாகாளி வாலை சத்தி

     காமாரி வாமி பெற்ற …… பெருமாளே.

……… சொல் விளக்கம் ………

நாவேறு பாம ணத்த … நாவினில் இருந்து வெளிப்படும் பாமலர்களின் நறுமணம் கமழும்

பாதாரமே நினைத்து … பாதத் தாமரைகளையே நினைத்து,

நாலாறு நாலு பற்று வகையான … (4..ஐ 6..ஆல் பெருக்கி வந்த

24..ம் 4..ம் சேர்ந்த) 28* சிவ சம்பந்தத்தை உடையதும்,

நாலாரும் ஆகமத்தின் … சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற

நான்கு பாதங்கள்** பொருந்தினவாயும் உள்ள சிவாகம

நூலாய ஞான முத்தி … நூல்களில் கூறப்பட்டுள்ள ஞான முத்தி

நெறியே

நாடோறு நானு ரைத்த நெறியாக … நாள் தோறும் நான்

அனுஷ்டிக்கும் நெறியாகவும்,

நீவேறெ னாதிருக்க … நீ வேறு என்றில்லாமல்

நான்வேறெ னாதிருக்க … நான் வேறு என்றில்லாமல், ஜீவாத்மாவும்

பரமாத்மாவும் ஒன்றுபட்ட நிலையில்,(ADVAITA)

நேராக வாழ்வதற்குன் அருள்கூர … நேர்பட்டு வாழ்வதற்கு உன்

கிருபை பெருகி,

நீடு ஆர் ஷடாதரத்தின் மீதே … பெருமை பொருந்திய ஆறு

ஆதாரங்களையும் கடந்து ஹஸ்ராரத்தில்***

பராபரத்தை நீகாணென … பெரிய பொருள்கட்கெல்லாம் பெரிய

பொருளான சிவத்தை நீ காண்பாயாக என்று

ஆவனைச்சொல் அருள்வாயே … அந்த ஐக்கிய வசனத்தை

உபதேசித்து அருள்வாயாக.

சேவேறும் ஈசர் சுற்ற … நந்தியின் மீது ஏறுகின்ற ஈசராம் சிவனார்

உன்னை வலம் வர,

மாஞான போத புத்தி … சிறந்த ஞான உபதேசத்தை

சீராகவே உரைத்த குருநாதா … செம்மையாகவே சொன்ன

குருநாதனே,

தேரார்கள் நாடு சுட்ட சூரார்கள் மாள வெட்டு … பகைவர்களாம்

தேவர்களின் நாட்டைச் சுட்டழித்த அசுரர்கள் சாகும்படி வெட்டிய

தீரா குகா குறத்தி மணவாளா … தீரனே, குகனே, குறத்தி

வள்ளியின் மணவாளனே,

காவேரி நேர்வடக்கிலே வாவி பூம ணத்த … காவேரி ஆற்றின்

நேர் வடக்கில் தடாகங்களில் மலர்கள் மணக்கும்

கா ஆர் சுவாமி வெற்பின் முருகோனே … சோலைகள் சூழ்ந்த

சுவாமிமலையில் எழுந்தருளிய முருகக் கடவுளே,

கார்போலு மேனி பெற்ற மாகாளி வாலை சத்தி … கரு மேகத்து

நிற மேனியுடைய மகா காளி, என்றும் இளையாள், சக்தி,

காமாரி வாமி பெற்ற பெருமாளே. … காமனை எரித்தவரின்

இடதுபக்கம் உள்ள பார்வதி பெற்ற பெருமாளே.

***

* 28 சிவாகமங்கள் பின்வருமாறு:

காமிகம் யோசகம்,சிந்தியம்,காரணம்,அசிதம்,தீப்தம்,சூக்ஷ்மம்,சகச்சிரம், ,சுப்ரபேதம்,விஷயம்,நிச்வாசம்,ஸ்வயாம்புவம்,ஆக்னேயம்,வீரம்,ரெளரவம்,மகுடம்,விமலம்,சந்திரஞானம்,முகவிம்பம்,புரோற்கீதம்,லலிதம்,சித்தம்,சந்தானம்,சர்வோக்தம்,பாரமேஸ்வரம்,கிரணம்,வாதூளம்

***

நான்கு பக்தி மார்க்கங்கள் பின்வருமாறு:

1. சரியை: திருக்கோயிலில் அலகு இடுதல், மெழுகுதல், விளக்கு இடுதல், நந்தவனம்

வைத்தல், பூ எடுத்தல், மாலை அமைத்தல், இறைவனை வாழ்த்துதல், திருவேடம் கண்டுபணிதல். இது ‘தாத மார்க்கம் – சாலோகம்‘.

2. கிரியை: பூஜை உபகரணங்களை அமைத்து நித்தியக் காரியம் செய்தல். இது ‘புத்ர மார்க்கம் – சாமீபம்‘.

3. யோகம்: புலன்களை அடக்கிப் பிராண வாயுவைச் சலனம் அற நிறுத்தி ஆறு ஆதாரங்களின் பொருளை உணர்ந்து, சந்திர மண்டல அமிர்தத்தை உடல் முழுதும் நிரப்பி, முழு ஜோதியை நினைத்திருத்தல். இது ‘சக மார்க்கம் (தோழ நெறி) – சாரூபம்‘.

4. ஞானம்: புறத் தொழில் அகத் தொழில் இன்றி, அறிவு மாத்திரத்தாலே செய்யும் வழிபாடு ஞானம். இது ‘சன்மார்க்கம் – சாயுஜ்யம்‘.

. . . சிவஞான சித்தியார் சூத்திரம்.

***

ஆதாரங்களின் பெயர்களும், உடலில் இருக்கும் இடம், உரிய ஐம்பூதங்கள், அனுட்டிக்கும்போது மலர் வடிவங்களின் அமைப்பு, அக்ஷரக் குறிப்பு ஆகியவை கீழே தரப்பட்டுள்ளன. மேலும் இந்த ஆதாரங்களுக்கு உரிய தலங்கள், கடவுளர்கள் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

ஆதாரம்

மூலாதாரம்


சுவாதிஷ்டானம்



மணிபூரகம்



அநாகதம்



விசுத்தி



ஆக்ஞா


பிந்து சக்கரம்
(துவாதசாந்தம்,
ஸஹஸ்ராரம்,
பிரமரந்திரம்)
இடம்

குதம்


கொப்பூழ்



மேல்வயிறு



இருதயம்



கண்டம்



புருவத்தின் நடு


கபாலத்தின்
மேலே

பூதம்

மண்


அக்கினி



நீர்



காற்று



ஆகாயம்



மனம்





வடிவம்

4 இதழ் கமலம்
முக்கோணம்

6 இதழ் கமலம்
லிங்கபீடம்
நாற் சதுரம்

10 இதழ் கமலம்
பெட்டிப்பாம்பு
நடு வட்டம்

12 இதழ் கமலம்
முக்கோணம்
கமல வட்டம்

16 இதழ் கமலம்
ஆறு கோணம்
நடு வட்டம்

3 இதழ் கமலம்


1008
இதழ் கமலம்

அக்ஷரம்

ஓம்


ந(கரம்)



ம(கரம்)



சி(கரம்)



வ(கரம்)



ய(கரம்)





தலம்

திருவாரூர்


திருவானைக்கா



திரு(வ)
அண்ணாமலை


சிதம்பரம்



திருக்காளத்தி



காசி
(வாரணாசி)

திருக்கயிலை



கடவுள்

விநாயகர்


பிரமன்



திருமால்



ருத்திரன்



மகேசுரன்



சதாசிவன்


சிவ . சக்தி
ஐக்கியம்

—subham—

Tags- அருணகிரிநாதர் சொ, அரிய செய்திகள் , Part 14

திருப்புகழ் , சொல் அழகும், பொருள் வளமும், செட்டியார் , வளையல் வியாபாரி , மூளை