Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
லலிதா சஹஸ்ர நாமத்தில் பக்தி சம்பந்தமான நாமாக்கள்! – 2
ச. நாகராஜன்
பக்தி நாமாக்களின் மஹிமை தொடர்கிறது.
நாமம் 120 பக்தி வச்யா
பக்திக்குக் கட்டுப்பட்டவள் அல்லது பக்தியின் மூலமாக வசமாகக் கூடியவள்
உண்மையான பக்தி யாரிடம் இருக்கிறதோ அவரிடம் எந்தக் குறை இருந்தாலும் அதை கவனியாது அவருக்கு லலிதாம்பிகை அனுக்ரஹம் செய்வாள் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
நாமம் 117
பக்த சௌபாக்யதாயினி
பக்தர்களுக்கு சகல விதமான சௌபாக்கியத்தைக் கொடுப்பவள்.
சௌபாக்யம் பற்றி ஏற்கனவே ‘சௌபாக்யவதி பவ! என்ற எனது கட்டுரையில் விளக்கப்பட்டிருப்பதால் இங்கு மீண்டும் விரிவாக அது பற்றிக் குறிப்பிடப்படவில்லை.
நாமம் 118 பக்தி ப்ரியா
பக்தியில் பிரியமுள்ளவள்.
அதாவது பக்தி உபாஸனை செய்பவர்களிடம் ப்ரீதி உள்ளவள்.
பக்தி முக்யம், ஸாமான்யம் என இருவகைப்படும். முக்ய பக்தி என்பது ஈஸ்வரனிடத்தில் அனுராகம் என்ற சித்த விருத்தியோடு கூடியிருப்பதாகும். இதைப் பற்றி சிவானந்த லஹரியில் ஆதி சங்கரர் கூறுவது இது:
அழிஞ்சில் மரத்தின் விதையானது தாய் மரத்தையும், ஊசியானது காந்தத்தையும், பதிவிரதையானவள் தன் பதியையும், கொடியானது மரத்தையும், நதியானது சமுத்திரத்தையும் சுபாவமாகவே வந்தடைவது போல மனமானது பரமாத்மாவை அடைவது தான் பக்தி.
(அங்கோலம் நிஜ….. ஸா பக்திரித்யுச்யதே என்ற ஸ்லோகத்தைப் பார்க்கவும்)
ஸாமான்ய பக்தி என்பது சேவாரூபமான பக்தியாகும். இது ஸ்மரணம், கீர்த்தனம் முதலிய பலவகைப்பட்டது. எட்டு விதம் என்று கருட புராணத்திலும், ஒன்பது விதம் என்று பாகவதத்திலும், பத்து விதம் என்று ப்ருகன்னாரதீயத்திலும் இம்மாதிரியாக பலவகையாகச் சொல்லப்படும்.
நாரத பக்திசூத்ரத்தில் பக்தியைப் பற்றி விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
நாமம் 747
பக்த சித்த கேகி கனாகனா
பக்தர்களுடைய சித்தங்களாகிற மயில்களுக்கு உல்லாசத்தைக் கொடுக்கும் மேக ஸ்வரூபமாக இருப்பவள்
மயில்கள் நீருண்ட மேகத்தைப் பார்த்தால் ஆனந்தமடைந்து நடனமாடத் தொடங்கி விடும்.
கனம் என்பது மேகத்தின் பெயர். அம்பாளுடைய லீலா விசேஷங்கள் பக்தர்களின் மனதிற்கு உல்லாசத்தைக் கொடுப்பதால் அந்த சித்தங்களாகிற மயில்களுக்கு உல்லாசத்தைக் கொடுக்கும் மேகங்களாக இருக்கின்றன.
பக்த சித்த கேகி ககனா – இவ்விதமான சரித்திரங்களை (கனமாக) நிரம்ப உடையவளாகையால் அம்பாளுக்கு இந்தப் பெயர் ஏற்பட்டதாகவும் சொல்லலாம்.
நாமம் 647
லோபாமுத்ரார்ச்சிதா
லோபாமுத்ரையினால் பூஜிக்கப்பட்டவள்
லோபாமுத்ரை என்பவள் அகத்தியருடைய மனைவி. அம்பாளுடைய உபாஸகச்ரேஷ்டர்களில் ஒருவள் என்றும், ஶ்ரீ வித்யையின் பேதங்களில் ஒன்றான ஹாதி வித்யை என்பதன் ரிஷி (மந்த்ரத்ருஷ்டா) என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.
தனது பக்தர்களில் முக்கியமானவர் என்பதாக அம்பாளாலேயே சொல்லப்பட்டதாக ஶ்ரீ லலிதா
த்ரிசதியில் சொல்லப்பட்டிருக்கிறது. இதனால் அம்பாளுக்கே லோபாமுத்ரா என்ற பெயர் உண்டு என்பதாக த்ரிபுராஸித்தாந்தத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
ஆகவே இந்த நாமத்தை இந்த அர்த்தத்தில் லோபாமுத்ரா, அர்ச்சிதா என்று இரண்டாகப் பிரித்துச் சொல்வதும் பொருத்தமாகவே இருக்கிறது.
அல்லது லோபாமுத்ரை எனப்படும் வித்யையின் மூலமாக உபாஸிக்கப்படுபவள் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.
Pictures are taken from various sources for spreading knowledge.
This is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
It is great to know the names of scholars who spread the name and fame of Tiruvalluvar and his work Tirukkural around the world about 200 years ago. Later hundreds of Tamil scholars wrote in English and Tamil about Kural and Valluvar.
1.Translation of Tirukkural in Latin of books I and II by Father Constanticus Josephus Beschius; in India Office Library; first published by Dr G U Pope as an appendix to his edition. About 1730
2.F W Ellis, published in Dr G U Pope’s edition. A small portion only, with copious notes
3.Rev. W H Drew and Ramanuja Kavirayar . two vols. Madras 1852. Sixty three chapters only including the commentary of Primelalagar
4.T M Scott
5.A French edition in the Bibliothèque Nationale. Referred to by M Ariele, 1767
6.N E Kindersley, in Specimens of Hindoo Literature, 1794
7.The Divine Pariah by E J Robinson
8.P G de Dumast Nancy, 1854. French, portions only
9.Dr Graul, Leipzig,1856. German and Latin. Probably used by Beschi. Incomplete.
10.M Lamairresse, Pondicherry,1867, French . complete
11.Folk Songs of Southern India by C E Grover, Madras, 1871. Contains translations of a few chapters only.
12.Tamil Wisdom by E J Robinson, London, 1873. . Contains translations of 24 chapters only.
13.Extracts from the Kural, by Rev. P Percival
14.By M Ariele, portions only, French
15.Dr J Lazarus, madras, 1885. Tamil edition with English renderings
16.The Sacred Kural, Dr G U Pope , London 1886, complete translation
17.Le Livre de l’ Amour de Tirouvallouva by G. de Barrigue de Fontainieu, Paris, 1889, French translation of Part III only
18.A chapter from the Kural by J M Nallaswamy Pillai; translation and notes on chapter 36 in Tamil Antiquary Vol. II, pp52-72. Trichinopoly, 1913.
19.The Kural, by Dr J Lazarus; a short article in Tamil Antiquary, Vol.II, pp52-72, Trichinopoly, 1913.
20.A Gem for Each Day, by Mrs Ttirunavukkarasu, madras, 1915. Selected stanzas with English renderings
21.The Maxims of Tiruvalluvar, by V V S Aiyar, madras, 1916; complete translation
22.Rev. J S Hooper. A paper read before the Madras Missionary Conference and printed in the Madras Christian College Magazine, April 1918
23.K Vadivelu Chettiar, madras, 1919. Tamil edition with English renderings
24.Kural Nanuru by A Mathavaiyar, madras, 1925. Four hundred selected stanzas with English translations
25.Thiruvalluvar by S Somasundara Bharati, Madura, 1928. A little pamphlet on the legends about the poet.
26.Critical Studies in the Kural by M S Puranalingam Pillai, Biblotheca, Munnirpallam, 1928
This list not claimed to be complete, but simply contains those which the writer has come across
–subham—
Tags – tanslations , Tirukkural, Valluvar, Latin, French, German,200 years ago
Pictures are taken from various sources for spreading knowledge.
This is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
கம்ப ராமாயணத்தில் சுமார் 10,000 பாடல்கள் உள்ளன; அவ்வளவையும் படிப்பதற்கு எல்லோருக்கும் நேரம் கிடைக்காது; முழுக்க படிக்க வேண்டாம்; சுவையான பகுதிகளை மட்டும் தருகிறேன்; பால காண்டம்,அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டங்களை முடித்து இப்பொழுது கிஷ்கிந்தா காண்டத்தில் இருக்கிறோம் ; இதிலும் இதற்கடுத்த சுந்தர காண்டத்திலும் ஆஞ்சனேயரின் பெருமையைக் காண்கிறோம்; சுவையான பகுதிகள் என்பதைச் சொல்லத்தேவை இல்லை.
இதற்கு முன்னர் வெளியிட்ட 250 கேள்விகளும், விடைகளும் எனது பிளாக்குகளில் எப்போதும் கிடைக்கும். கம்ப ராமாயணம் பற்றி நான் எழுதிய இரண்டு நூல்களையும் வாங்கிப் படிக்க முடிந்தால் படியுங்கள்.
251
“அடுத்தவன் பொண்டாட்டி மீது வாலி கை வச்சான்”என்று அனுமன் சொன்னதைக் கேட்ட மாத்திரத்தில் ராமன் எப்படிச் சீறினான் ?
ஏழு மரங்களைத் துளைக்கும்படி ராமனை வேண்டுவோம் என்று அனுமன் யோசனை கூறியவுடன் நன்று நன்று ;குட் Goodவெரி குட் Very Goodஎன்று சொல்லி சுக்ரீவன்,அனுமன் வெட்கப்படும் படி ஒரு Big Hugஹக் கொடுத்தான் என்கிறான் கம்பன் ;பின்னர் நிறைய பாடல்களில் மராமரத்தை வருணிக்கிறான்;அதில் மரத்தை வேதத்துடன் ஒப்பிடுவது எப்படி?
256
All Number SEVENs got Scared!
ஏழு என்ற எண் உள்ள எல்லோரும் பயந்து நடுங்கியது ஏன் ?
257
ராமனின் வில்லாற்றலைக் கண்ட சுக்ரீவன் ராமபிரானை எப்படிப் புகழ்ந்து தள்ளினான் ?
258
துந்துபி என்ற பெரிய அரக்கனின் எலும்புக்கூட்டைக் கண்ட ராமன் என்ன சொல்லி ஆச்சரியப்பட்டான் ?
259
துந்துபியின் உடல் எவ்வளவு பெரியது என்று கம்பன் வருணனை செய்கிறான்?
260
Lakshman became Ronaldo playing Football!
கம்பன் வள வளவென்று பல பாடல்களில் வருணிக்கும் துந்துபியின் கதை என்ன?இறுதியில் லெட்சுமணன் துந்துபிஉடலை ரொனால்டோ புட் பாலை உதைப்பது போல,துந்துபியின் உடலை கால்பந்து விளையாடியது ஏன்?
வையம் நுங்கிய – பிரளய காலத்தில் எல்லா உலகங்களுக்கும்
அழிவில்லாதவாறு திருமால் தன் வயிற்றில் உலகங்களை வைத்துக் காத்தார் என்பது புராணக்கதை. இராமபிரான் வடிவு கொண்ட திருமால் ஆயிரம் பெயருடையவன் (விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் ஆயிரம் பெயர்கள் உள்ளன).
‘உலகம் ஏழினோடு ஏழும் வந்து
அவன் உயிர்க்கு உதவி
‘விலகும் என்னினும்,வில்லிடை
வாளியின் வீட்டி,
தலைமையோடு,நின் தாரமும்,
உனக்கு இன்று தருவென்;
புலமையோய்! அவன் உறைவிடம்
காட்டு’என்று புகன்றான்.
பதினான்கு உலகில் உள்ளோர் யாவரும் திரண்டு வந்து, வாலியின் உயிரைக் காப்பதற்கு உதவி புரிந்து என்னைத் தடுக்குமாயினும் என் வில்லில் பூட்டிய அம்பினால் அவனை அழித்து வானரங்களுக்குத் தலைவனாகும் அரசாட்சியோடு- உனது மனைவியையும் உனக்கு இப்பொழுதே மீட்டுத் தருவேன்; அறிவில் சிறந்தவனே! அவன் வசிக்கும் இடத்தைக் காண்பிப்பாய்! என்று (சுக்கிரீவனிடம் இராமன்) கூறினான்.
முன் தண்டக வனத்து முனிவர்களிடத்தும் ‘சூர் அறுத்தவனும், சுடர்நேமியும், ஊர் அறுத்த ஒருவனும் வந்தாலும் , ஆர் அறத்தினொடு அன்றி நின்றார் அவர், வேர் அறுப்பென், வெருவன்மின் நீர்’ (2652) என இராமன் கூறியுள்ளதை இங்கே நினைவு கூறுவது பொருத்தமாகும்.
************
252.சாமுத்ரிகா லட்சணம்
‘சங்கு சக்கரக் குறி உள,
தடக் கையில்,தாளில்;
எங்கும் இத்தனை இலக்கணம்
யாவர்க்கும் இல்லை;
செங் கண் விற் கரத்து
இராமன்,அத் திரு நெடு மாலே;
இங்கு உதித்தனன்,ஈண்டு அறம்
நிறுத்துதற்கு;இன்னும்,
செறுக்கும் வன்திறல் திரிபுரம்
தீ எழச் சினவிக்
கறுக்கும்,வெஞ் சினக் காலன்தன்
காலமும் காலால்
அறுக்கும் புங்கவன் ஆண்ட பேர்
ஆடகத் தனி வில்
இறுக்கும் தன்மை,அம்
மாயவற்கு அன்றியும் எளிதோ?
(இராமனது) பெரிய கைகளிலும், பாதங்களிலும், சங்கு சக்கரங்களின் ரேகைகள் உள்ளன; இத்தனைச் சிறந்த இலக்கணம் எவ்வுலகத்திலும் யார்க்கும் இருந்த தில்லை; சிவந்த கண்களையும், வில்லேந்திய கரத்தையும் உடைய இராமன் அப்பரம் பொருளாகிய திருமாலே ஆவன். இப்பொழுது அறத்தை நிலைநிறுத்துவதற்கு இவ்வுலகத்தில் அவதரித்துள்ளான்;
மேலும் . . . . யாவரையும் வருத்துகின்ற மிக்க வலிமை
உடைய முப்புரங்களும் நெருப்புப் பற்றி எரியும்படி சினங்கொண்டு, (மார்க்கண்டேயன் மீது) கொடிய யமனுடைய ஆயுள் காலத்தையும் காலினால் உதைத்து அழித்துவிட்ட மேலோனான சிவபிரான் கையாண்ட பெரிய பொன்மயமான ஒப்பற்ற வில்லை முறிக்கின்ற செயல் அத்திருமாலுக்கு அல்லாது பிறர்க்கு எளிதாமோ? (ஆகாது).
கம்பன் அடிக்கடி சிவபெருமானையும் குறிப்பிட்டுப் புகழ்வது குறிப்பிட்டது தக்கது . இது அவனது சைவ- வைணவப் பொது நோக்கினைக் காட்டுகிறது
****
253.கம்பன் சொல்லும் புதிய செய்தி?! ?!
‘என்னை ஈன்றவன், ”இவ்
உலகு யாவையும் ஈன்றான் –
தன்னை ஈன்றவற்கு அடிமை செய்;
தவம் உனக்கு அஃதே;
உன்னை ஈன்ற எற்கு உறு
பதம் உளது”என உரைத்தான்;
இன்ன தோன்றலே அவன்;
இதற்கு ஏது உண்டு; –இறையோய்!
தலைவனே! என்னைப் பெற்ற தந்தையாகிய வாயுதேவன் (என்னை நோக்கி) ”இவ்வுலகங்களையெல்லாம் படைத்த பிரமனை
(தன் உந்திக்கமலத்தில்) ஈன்றவனாகிய திருமாலுக்கு தொண்டு செய்வாயாக; அதுவே உனக்குத் தவமாகும்; உன்னைப் பெற்ற எனக்கும் சிறந்த பதவி கிடைப்பதாகும்”; என உரைத்தான் என்று
சொன்னான்; இந்த இராமனே; அவன் – அந்தத் திருமாலாகும். இவ்வாறு யான் கூறுவதற்கு வேறொரு காரணமும் உண்டு. உடனே அந்த விஷ்ணுவை நான் எப்படி அறிவது , என்ன அடையாளம்? என்று கேட்டேன் :
3862. ‘துன்பு தோன்றிய பொழுது,
உடன் தோன்றுவன்; ”எவர்க்கும்
முன்பு தோன்றலை அறிதற்கு முடிவு
என்?”என்று இயம்ப,
”அன்பு சான்று”என உரைத்தனன்;
ஐய! என் ஆக்கை,
என்பு தோன்றல உருகின
எனின்,பிறிது எவனோ?
அப்பெருமானை நான் அறிந்து கொள்வதற்கு உறுதியான வழி யாது?
என்று கேட்க ”யாவர்க்கும் துன்பம் ஏற்படும் காலத்தில்; உடனே அத்துன்பம் தீர்க்க எதிரில் வந்து தோன்றுவான்; அப்பரமனைக் கண்டதும் உனக்கு அவன்மாட்டு அன்பு உண்டாவதே தக்க சான்றாகும்” என உரைத்தனன் என்று சொன்னான்; (அதற்கேற்ப இப்பெருமானைக் கண்ட மாத்திரத்தில்) என் உடல் எலும்புகள் உருகின என்றால் இதற்கு மேல் வேறு சான்று எதற்கு?
*****
254.இராமனின் ஆற்றலைக் கண்டறிய அனுமன் சொன்ன ஐடியா / யோசனை
3863. ‘பிறிதும்,அன்னவன் பெரு
வலி ஆற்றலை,பெரியோய்!
அறிதி என்னின்,உண்டு உபாயமும்;
அஃது அரு மரங்கள்
நெறியில் நின்றன ஏழில்,ஒன்று
உருவ,இந் நெடியோன்
பொறி கொள் வெஞ் சரம் போவது
காண்!’எனப் புகன்றான்.
ராமனின் ஆற்றலைக் கண்டுபிடிக்க நான் ஒரு யோசனை சொல்கிறேன் ; இடைவெளி விட்டு ,ஒரே வரிசையில் நிற்கும் ஏழு மராமரங்களை ஒரே அம்பினால் துளைத்துக்காட்டு என்று சொல்லுவோம் என்று அனுமன் சொன்னான் .
****
255.சாகை என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லுக்கு இரண்டு பொருள் உண்டு;ஒன்று மரத்தின் கிளை ;இரண்டாவது வேதத்தின் கிளை/ பிரிவு;இதைக் கம்பன்,சிலேடைப் பொருளில் அழகாகப் பயன்படுத்துகிறான்:
3871. தீது அறும் பெருஞ்
சாகைகள் தழைக்கின்ற செயலால்
வேதம் என்னவும் தகுவன;
விசும்பினும் உயர்ந்த
ஆதி அண்டம் முன்பு அளித்தவன்
உலகின், அங்கு அவன் ஊர்
ஓதிமம், தனி பெடையொடும்
புடை இருந்து உறைவ.
(அம்மரங்கள்) அழிதல் இல்லாத
பெரிய கிளைகள்செழித்து வளர்கின்ற செயலால் வேதங்கள் என்று சொல்லவும் தகுதியுடையன; வான மண்டலத்தினும் உயர்ந்து விளங்குவன; பழமையான அண்டங்களை முன்னே படைத்தளித்த பிரமனுடைய சத்தியலோகத்தில் அவன் ஏறிச் செல்கின்ற அன்னப்பறவை தனது ஒப்பற்ற பெடை அன்னத்தோடு அம்மரங் களில் வாழ்கின்றன!
வேதங்களின் சாகைகள் அழிவற்றனவாயும், அளவற்றனவாயும் இருத்தல் போல மரங்களின் கிளைகளும் அழிவற்றும், அளவற்றும் விளங்குகின்றன என்றார். செம்மொழிச் சிலேடை அணி பொருந்தியது.
****
256.ஏழு மராமரங்களை ராமன் அம்பு துளைத்தவுடன் ஏழாம் நம்பர் அணியிலிலுள்ள எல்லோரும் பயந்து நடுங்கினர் என்று அழகுபட வருணிக்கிறான் கம்பன் !
ஏழு வேலையும்,உலகம்
மேல் உயர்ந்தன ஏழும்,
ஏழு குன்றமும்,இருடிகள்
எழுவரும்,புரவி
ஏழும்,மங்கையர் எழுவரும்,
நடுங்கினர் என்ப –
‘ஏழு பெற்றதோ இக் கணைக்கு
இலக்கம்?’என்று எண்ணி,
இப்பாடலில் ஏழு என்னும் எண்ணால் தொகுதியாய் உள்ள
பொருள்களை ஒன்று கூட்டிக் கூறியது ஒப்புமைக் கூட்ட அணி. ‘ஏழு’ என்ற ஒரே பொருளை உடைய சொல் மீண்டும் மீண்டும் வருவதால் சொற்பொருள் பின் வருநிலை அணியும் பொருந்தியது.
ஏழு கடல்களும் மேலே இருக்கும் உலகங்கள் ஏழும்ஏழு குல மலைகளும், ஏழு முனிவர்களும்,சூரியன் தேரை இழுத்துச் செல்லும் ஏழு குதிரைகளும், ஏழு கன்னியர்களும் இந்த அம்பிற்குக் குறி ஏழு என்னும் தொகைப் பொருள் அனைத்தையும் அழிக்குமோ என்று நினைத்து அஞ்சி நடுங்கினர்.
ஏழு கடல்: உவர்நீர், கருப்பஞ்சாறு, மது, நெய், தயிர், பால், நன்னீர் இவற்றை உடைய கடல்கள்; மேல் ஏழு உலகம் : பூலோகம், புவர்லோகம்,சுவர்லோகம் ஐநலோகம், மஹாலோகம், தபோலோகம், ச த்தியலோகம் என்பன; ஏழு குன்றம் : கயிலை, இமயம், மந்தரம், விந்தம், நிடதம், ஹேமகூடம்,கந்தமாதனம் என்பன. இருடிகள் எழுவர் – அத்திரி, பிருகு, குத்ஸவர்,வசிட்டர், கௌதமர், காசியபர், ஆங்கிரஸர் எனப்படுவோர்; புரவி ஏழு -காயத்ரீ, உஷ்ணிக், அநுஷ்டுப், ப்ருஹதீ, பங்க்தி, த்ரிஷ்டுப், ஜகதி என்னும் சந்தசுகள். ஏழு மங்கையர் – பிராஹ்மி, மாகேச்வரி, கௌமாரி,நாராயணி, வாராகி, இந்திராணி, சாமுண்டி எனப்படுபவர்.
****
257.சுக்கிரீவன் இராமனைப் புகழ்ந்துரைத்தல்
I AM A DOG; YOU ARE THE GOD!
3883. ‘வையம் நீ! வானும் நீ!
மற்றும் நீ! மலரின்மேல்
ஐயன் நீ! ஆழிமேல் ஆழி
வாழ் கையன் நீ!
செய்ய தீ அனைய அத்
தேவும் நீ! நாயினேன்,
உய்ய வந்து உதவினாய்,
உலகம் முந்து உதவினாய்!
நிலமும் நீயே! ஆகாயமும் நீயே! மற்றும் நீ பூதங்களாகிய நீர், காற்று, தீ என்பனவும் நீயே! தாமரை மலரின் மேல் விளங்கும் பிரமதேவனும் நீயே! பாற்கடல் மேல் பள்ளி கொண்ட சக்கரப்படை
தாங்கிய கையுடைய திருமாலும் நீயே! சிவந்த நெருப்பினை ஒத்த அந்த சிவபிரானும் நீயே! உலகங்களை எல்லாம் முற்காலத்தில் படைத்தருளினாய்; நாய் போன்றவனாகிய நான் நற்கதி அடையும்
பொருட்டு என்னை நாடி வந்து அருள் புரிந்தாய்.
இராமனின் வில்லாற்றலை நேரில் கண்ட சுக்கிரீவன் ‘இவன் அனுமன் கூறியாங்கு முழுமுதற் கடவுளாகிய திருமாலின் அவதாரமே’ எனத் தெளிந்து இராமனைப் பலவாறு போற்றலாயினன். இராமன் மும்மூர்த்தியாய் விளங்கும் பரம்பொருளே என்பதைத் தண்டகாரணியத்து முனிவர்கள், விராதன், இந்திரன், கவந்தன், சவரி, வாலி ஆகியோர் இராமனைப் போற்றும் பாடல்களில் காணலாம்.
***
258 .துந்துபி என்ற பெரிய அரக்கனின் எலும்புக்கூட்டைக் கண்ட ராமன் ஆச்சரியப்பட்டான்
3887. ‘தென் புலக் கிழவன் ஊர்
மயிடமோ?திசையின் வாழ்
வன்பு உலக் கரி
மடிந்தது கொலோ?மகரமீன்
என்பு உலப்புற உலர்ந்தது
கொலோ?இது எனா,
அன்பு உலப்பு அரிய நீ,
உரை செய்வாய்’என,அவன்,
இந்த வறண்ட உடல் தெற்குத் திசைக்குத் தலைவனான யமன் வாகனமான எருமைக் கடாவோ? அஷ்ட திக் கஜங்களில் ஒன்றான யானை மடிந்து கிடக்கிறதோ? கரை ஒதுங்கிய திமிங்கிலத்தின் எலும்பு உலர்ந்து கிடக்கின்றதோ? என்று வியந்து நீ சொல்வாய் என்று இராமன் கேட்டவுடன், சுக்கிரீவன் (நிறைய பாடல்களில்) துந்துபி என்ற அரக்கனை வாலி கொன்று வீழ்த்திய கதையைச் சொல்கிறான்
*******
259துந்துபியின் உடல் – கம்பன் வருணனை:
3886. அண்டமும்,அகிலமும் அடைய,
அன்று அனலிடைப்
பண்டு வெந்தன நெடும்
பசை வறந்திடினும்,வான்
மண்டலம் தொடுவது,அம்
மலையின்மேல் மலை எனக்
கண்டனன்,துந்துபி,கடல்
அனான்,உடல்அரோ!
ஊழிக்கால இறுதியில் அண்டங்களும் உலகங்களும் வெந்ததை ஒத்தும்,மலையின் மேல் மற்றொரு மலை இருப்பது போன்றும், வான மண்டலத்தைத் தொட்டும் கடல்போல் பரந்தும் துந்துபியின் உடலின் எலும்புக்கூடு கிடந்தது.
****
260.Lakshman became Ronaldo playing Football!
260.துந்துபி என்ற அரக்கன் விஷ்ணுவைப் போருக்கு அழைத்தான் ;அவர் சிவனுடன் போர் செய் என்று அனுப்பினார்;அவன் சிவ பெருமானைச் சந்தித்தபோது இந்திரனுடன் போர் புரிவாயாகுக என்று அனுப்பினார்;குரங்கு இனத்தலைவனான வாலியுடன் சண்டை போடு என்று இந்திரன் அனுப்பினான்; இறுதியில் வாலிக்கும் துந்துபிக்கும் இடையே நடந்த போரில் வாலி வெற்றிவாகை சூடி துந்துபியின் அசுர உடலைத் தூக்கி எறிந்தான் பிறகு என்ன நடந்தது ?
3899. ‘முட்டி,வான் முகடு சென்று
அளவி,இம் முடை உடற்
கட்டி,மால் வரையை
வந்து உறுதலும்,கருணையான்
இட்ட சாபமும்,எனக்கு
உதவும்’என்று இயல்பினின்,
பட்டவா முழுவதும்,
பரிவினால் உரைசெய்தான்.
முடை நாற்றமுடைய இவ்வுடற் பிண்டம் ஆகாயத்தின் உச்சியைத் தாக்கிச் சென்று பெரிய இந்த மலையைவந்து அடைந்ததால், கருணை மிக்கவரான மதங்க முனிவர் (வெகுண்டு வாலிக்குக்) கொடுத்த சாபமும் எனக்கு இப்பொழுது உதவியாக இருக்கின்றது’ என்று நடந்த வரலாறு முழுவதையும் சொன்னான் சுக்கிரீவன்.
வாலி எறிந்த துந்துபி உடல் ருசியமுகமலையில் மதங்க முனிவர் தவஞ்செய்து கொண்டிருந்த ஆசிரமத்தில் விழுந்து அதன் தூய்மையைக் கெடச் செய்ததால் முனிவர் வாலிமேல் சாபமிட்டார். வாலி இம்மலைப்பகுதிக்கு வரின் தலை வெடித்து இறக்கக்கடவன் என்பதும், அவனைச் சேர்ந்த நண்பர்கள் வரின் கல்வடிவமாகக் கடவர் என்பதும் அவரிட்ட சாபமாகும். தான் இம்மலையில் பயமில்லாமல் வாழும் காரணம் இதுதான் என்றும் சுக்கிரீவன் இராமனுக்கு உரைத்தான்.
இலக்குவன் தந்துபின் உடலை உந்துதல்
ராமன் ஒரு தந்திரம் செய்தான் ; லெட்சுமணன் எவ்வளவு பலசாலி என்று காட்ட ஒரு ஐடியா செய்தான் ; சுக்ரீவன் போன்றோர் கடல் போலப் பெரிது, மலை போலப் பெரிது என்று சொன்னதெல்லாம் என் தம்பிக்குக்கூட வெறும் கொசு தான் என்று காட்டுவதற்காக, “தம்பி இந்த எலும்புக்கூட்டினை ஒரு உதை கொடுத்து தூக்கி எறிந்து” கால் பந்து விளையாடு என்றான் ; லெட்சுமணும் ரொனால்டோ புட் பாலை உதைப்பது போல ஒரு அடி அடித்தான் ; எலும்புக்கூடு பறந்தது !
3900. கேட்டனன்,அமலனும்,
கிளந்தவாறு எலாம்,
வாள் தொழில் இளவலை,
‘இதனை,மைந்த! நீ
ஓட்டு’என,அவன்
கழல் விரலின் உந்தினான்;
மீட்டு,அது விரிஞ்சன்
நாடு உற்று மீண்டதே!
இராமனும் (சுக்கிரீவன்) சொன்ன வரலாறு முழுமையும் கேட்டு
வாளேந்திப் போர் செய்யும் தம்பி! ‘வீரனே! இந்த உடலை நீ அப்பால் தள்ளு’ என்று கூற, அந்த இலக்குவன் தன் கால் விரல்களால் தள்ளி எறிந்தான்; அவ்வெலும்புக்கூடு மறுபடியும் பிரமலோகத்தை அடைந்து திரும்பி வந்து வீழ்ந்தது!
மராமரத்தை எய்து தன் வலிமையைக் காட்டிய இராமன், தன் இளவலின் ஆற்றலைச் சுக்கிரீவனுக்குக் காட்டத் துந்துபியின் உடலைத் தூக்கி எறியுமாறு கூறினன். முன்பு வாலி தூக்கி எறிந்த போது ஒரு முறை, பிரமலோகம் வரை சென்று வந்ததால் இங்கு ‘மீட்டு’ என்றார். வாலி கையால் சுழற்றி எறிந்த உடல்எச்சத்தை இலக்குவன் கால் விரலால் எற்றி வலிமைப் பெருமிதத்தைப்
புலப்படுத்தினான் என்பதை உணர்க. இச்செய்கையால், இலக்குவனும் இராமன் போலவே வலியவன் என்பதை உணர்த்தியவாறு.
–சுபம்—
Tags- கம்பராமாயணம், 260 கேள்விகள்,சாமுத்ரிகா லட்சணங்கள், வாலி கதை, துந்துபி கதை , ஏழு மராமரம் , அனுமன் ஐடியா
மகிழ்ச்சிகரமான முடிவு! (27-9-26 தினமணி கட்டுரை) 4-10-26 16267 S Nagarajan Article Index September 2026 5-10-26 16271 க்ரியாடின் (Creatine) மனச்சோர்வை நீக்குமா (செப்டம்பர்
26 ஹெல்த்கேர் இதழில் வெளியான கட்டுரை) 6-10-26 16274 புத்தரின் பிரம்மாண்டமான சிலைகள் உணர்த்தும்
தத்துவம்! (தினமணி கதிர் 27-9-26 கட்டுரை) 7-10-26 16278 பெண்ணுரிமைக்காகக் கோடி கோடியாகப் பணத்தை
நன்கொடையாக அளிக்கும் அதிசயப் பெண்மணி!
(4–10-26தினமணி கொண்டாட்டம் பகுதி கட்டுரை)8-10-26 16282 எழுபது வயது (Septolescent)கோடீஸ்வரர்கள்!
9-10-26 16285ஊதியம் முதல் சுகாதாரம் வரை: இன்னும் தீராத பெண்களின்20பிரச்சினைகள்!(5-10-26 மங்கையர் மலர் கட்டுரை)10-10-26 16290 முஸ்லீம்கள் பற்றி அம்பேத்கர்! 11-10-26 16293 திருக்கோவலூர் உலகளந்த பெருமாள்! (5-10-26) மாலைமலர் கட்டுரை) 12-10-26 16297 மனிதன் இறைவனை அடைவதற்கான வழி – ஶ்ரீ சத்ய
சாயிபாபா அருளுரை (கல்கி 8-10-26 இதழ் கட்டுரை) 13-10-26 16300 லலிதா சஹஸ்ரநாமம்! 14-10-26 16304 ஆயுதம் வெட்டாது; தீ எரிக்காது; நீர் நனைக்காது; காற்று
அசைக்காது! அது என்ன? (சுபாஷிதம்)
15-10-26 16307 எல் நினோ தரும் எச்சரிக்கை! (14-10-26 மாலைமலர்
கட்டுரை) 16-10-26 16310 உங்கள் உடலில் எத்தனை பிரபஞ்சத் துகள்கள்
உள்ளன? (22-9-26 கல்க் –ஆன்லைன் கட்டுரை)
17-10-26 16314 டாக்ஸி டிரைவர்களும் ஆம்புலன்ஸ் டிரைவர்களும் ஆல்ஜமைர் வியாதியால் அதிகம் பாதிக்கப் படுவதில்லை! ஏன்? கல்கிஆன்லைன் 18-9-26 கட்டுரை) 18-10-26 16317 80 வயதில் இமயத்தை நான்காவது முறையாக வெற்றி கொண்ட வீரர் (14-9-26 கல்கி இதழில் வெளியான கட்டுரை) 19-10-26 16321 சர்வதேச விண்வெளி நிலையத்தின் ஆயுள் முடிவடைகிறது (கல்கி 16-10-26 கட்டுரை) 20-10-26 16324 பதினான்கு லோகங்களில் பாவம் செய்தாலும் அனைத்து பாவங்களையும் போக்கும் ஒரே ஒரு அபூர்வ நாமம்! 21-10-26 16327 ராகு கேது தோஷம் போக்கும் தலம் திருப்பாம்புரம் (மாலைமலர் 17-10-26 கட்டுரை) 22-10-26 16330 லலிதா சஹஸ்ர நாம பாராயணத்தால் ஏற்படும் பலன்கள் என்ன? – 1 23-10-26 16333 லலிதா சஹஸ்ர நாம பாராயணத்தால் ஏற்படும் பலன்கள் என்ன? – 2 24-10-26 16337 லலிதா சஹஸ்ர நாம பாராயணத்தால் ஏற்படும் பலன்கள் என்ன? – 3 25-10-26 16340 லலிதா சஹஸ்ர நாம பாராயணத்தால் ஏற்படும் பலன்கள் என்ன? – 4 26-10-26 16343 லலிதா சஹஸ்ர நாம பாராயணத்தால் ஏற்படும் பலன்கள் என்ன? – 5 27-10-26 16346 ஒரு பிஸ்கட்டின் கதை! (22-10-26 கல்கி ஆன் லைன் இதழில் வெளியான கட்டுரை) 28-10-26 16349 விண்வெளியில் நடக்கும் எலி-பூனைச் சண்டை! (24-10-26 கல்கி ஆன் லைன் இதழில் வெளியான கட்டுரை) 29-10-26 16352 ஆயிரம் பொன்மொழிகள் 221- 230 30-10-26 16356 மூளைத் திறனைக் குறைக்கும் குப்பை! பிரின்ஸ்டன் ஆய்வு சொல்வது என்ன? (24-10-26 கல்கிஆன்லைன் கட்டுரை) 31-10-26 16359 லலிதா சஹஸ்ர நாமத்தில் பக்தி சம்பந்தமான நாமாக்கள் – 1***
Pictures are taken from various sources for spreading knowledge.
This is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
கம்ப ராமாயணத்தில் சுமார் 10,000 பாடல்கள் உள்ளன; அவ்வளவையும் படிப்பதற்கு எல்லோருக்கும் நேரம் கிடைக்காது; முழுக்க படிக்க வேண்டாம்; சுவையான பகுதிகளை மட்டும் படியுங்க!! மேலும் கம்பன் ஒவ்வொரு விஷயத்துக்கும் 10 அல்லது 15 பாடல்களைச் சொல்வதால் அவைகளைப் படிக்கும் பொழுது தெவிட்டிவிடுகிறது ; ஆகையால்தான் முக்கிய பகுதிகளை மட்டும் கேள்வி – பதில் வடிவில் தருகிறேன்; பால காண்டம்,அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டங்களை முடித்து இப்பொழுது கிஷ்கிந்தா காண்டத்தில் இருக்கிறோம் ; இதிலும் இதற்கடுத்த சுந்தர காண்டத்திலும் ஆஞ்சனேயரின் பெருமையைக் காண்கிறோம்; சுவையான பகுதிகள் என்பதைச் சொல்லத்தேவை இல்லை.
இதற்கு முன்னர் வெளியிட்ட 240 கேள்விகளும், விடைகளும் எனது பிளாக்குகளில் எப்போதும் கிடைக்கும். கம்ப ராமாயணம் பற்றி நான் எழுதிய இரண்டு நூல்களையும் வாங்கிப் படிக்க முடிந்தால் படியுங்கள்.
241
கிருஷ்ண பரமாத்மா எடுத்த விஸ்வரூபத்தைக் கண்டு அர்ஜுனன் வியந்தான் ;இங்கு கிருஷ்ணனுக்கு முந்தைய அவதாரமான ராமன் வியக்கும் அளவுக்கு அனுமன் எடுத்த விஸ்வரூபம் எப்படிக் காட்சி அளித்தது ?
242
விஸ்வரூபத்தைக் கண்டு அதிசயித்த ராமன் ,தம்பி இலக்குவனிடம் என்ன விமர்சனம் செய்தான் ?
தாங்குதல் தருமம்’ –என்று சுக்ரீவன் சரணடைந்தது எவ்வாறு ?
246
Your Friend is My Friend; Your Enemy is my Enemy too!
ராமன்- சுக்ரீவன் நட்புறவு ஒப்பந்தத்தின் முக்கிய ஷரத்துக்கள் / விதிகள் என்ன ?
247
Long Live Rama, Long Live Sugreeva- Slogans!
நட்புறவு ஒப்பந்தம் கையெழுத்தானவுடன் ராமனுக்கு ஜே;சுக்ரீவனுக்கு ஜே; ராமா ஜிந்தாபாத்! சுக்ரீவன் ஜிந்தாபாத்! என்று அனுமன் டான்ஸ் ஆடிய பின்னர் என்ன நடந்தது?
Where is your wife, Sugreeva?சுக்ரீவன் அரண்மனையில் தட புடலான விருந்து நடந்தது ! உணவு பிரமாதம் !உன் மனைவி எங்கே ? –என்று ராமன் ஏன் கேட்டான்?
250
சுக்ரீவனுக்குப் பதிலாக அனுமன் சொன்ன பதில் என்ன ?
XXXXXXXXXXXXXXXX
விடைகள்
241.அனுமன் எடுத்த விஸ்வரூபம்
மின்உருக் கொண்ட வில்லோர்
வியப்புற,வேத நல் நூல்
பின் உருக்கொண்டது என்னும் பெருமை
ஆம் பொருளும் தாழ,
பொன் உருக் கொண்ட மேரு,
புயத்திற்கும் உவமை போதாத்
தன் உருக்கொண்டு நின்றான்,
தருமத்தின் தனிமை தீர்ப்பான்.
வில்லேந்திய இராமலக்குவர் வியப்படையுமாறு தருமத்தின் தனிமையைப் போக்க வந்தவனாகிய அனுமன் மின்னல் ஒளிவீசும் வடிவம் எடுத்தான் ;வேதம் முதலான சாத்திரங்களே ஒரு வடிவம் எடுத்து வந்தது என்று சொல்லும் பாராட்டுரையும் பொருந்தாது! பொன் மயமான வடிவங் கொண்டமேருமலையும் அனுமனின் தோள்களுக்கு உவமையில் ஒப்பாகாது! அப்பேற்பட்ட பேருருவத்தைக் கொண்டு நின்றான்.
(இராமலக்குவர்களின் தனிமை தீர்ப்பவன் ஆதலின், அனுமன் தருமத்தின் தனிமை தீர்ப்பான் ஆயினான். அனுமன் தருமத்திற்குத் துணையாவன் என்பதை ‘மெய்ம்மையின் வேலி போல்வான்” (3775),அறத்துக்கு ஆங்கொருதனித்துணையென நின்ற அனுமன். (5804) என்ற அடிகளாலும் உணரலாம். அவன் வேத நன்னூல்களே ஓர் உருக்கொண்டு வந்தது போன்றவன் என்றால், அவ்வுரை தாழ்வுடைத்து என்பதாம். இதனால் அவன் வேத சாத்திரங்களிலும் மேம்பட்ட ஞானி ஆவான் என்க. இவையெல்லாம் துளசிதாஸரின் ஹனுமான் சாலீஸாவிலும் வருகிறது!)
கண்டிலன்,உலகம் மூன்றும்
காலினால் கடந்து கொண்ட
புண்டரீகக் கண் ஆழிப் புரவலன்,
பொலன் கொள் சோதிக்
குண்டல வதனம் என்றால்,
கூறலாம் தகைமைத்து ஒன்றோ,
பண்டை நூல் கதிரோன் சொல்ல,
படித்தவன் படிவம்?அம்மா!
முன்பு திரிவிக்கிரமனாக வடிவங்கொண்ட திருமாலான இராமபிரானே அனுமானின் முகத்தைக் காண இயலவில்லை யெனில், அப்பேருருவத்தின் பெருமையைக் கூற எங்ஙனம் இயலும்? திரிவிக்கிரமனாக உலகளந்த திருமாலே இராமனாக வந்துள்ளமையால் ‘உலக மூன்றும் காலினால் கடந்து கொண்ட புண்டரிகக் கண் ஆழிப் புரவலன்’ என்றார். ”மூவுலகும்
ஈரடியால் முறை நிரம்பா வகை முடியத் தாவிய சேவடி” எனச் சிலப்பதிகாரம் (ஆய்ச்சியர் குரவை) உலகளந்த செய்தியைக் கூறுகிறது. கதிரவனின் மாணவனாய், அவனை நெருங்கிப் பாடம் கேட்கும் பெரும் வடிவுடையனாய் விளங்கிய தன்மை புலப்படக் ‘கதிரோன் சொல்லப் படித்தவன் படிமம்’ என்றார்.
அம்மா – வியப்பிடைச்சொல். அனுமனின் பேருருவ (விசுவரூப) வர்ணனையைச் சுந்தர காண்டத்தும் (5326 – 5332) காணலாம்.
*******
242.அனுமனைப் பற்றி இலக்குவனிடம் இராமன் வியந்து பேசுதல்!
தாள்படாக்கமலம் அன்ன தடங்
கணான்,தம்பிக்கு, ‘அம்மா!
கீழ்ப் படாநின்ற நீக்கி,கிளர்
படாது ஆகி,என்றும்
நாட்படா மறைகளாலும்,நவை
படா ஞானத்தாலும்,
கோட்படாப் பதமே,ஐய!
குரக்கு உருக்கொண்டது’என்றான்.
தாமரை மலர்போன்ற பெரிய கண்களை உடைய இராமன் தம்பியாகிய இலக்குவனிடம் ஐயனே! இராஜச, தாமச குணங்கள் நீங்கப் பெற்று ஞான ஒளி கெடாமல் எப்பொழுதும் காலவரையறைக்கு உட்படாத வேதங்களாலும், தத்துவ ஞானத்தாலும் கூட அறியப்படாத பரம்பொருள் தத்துவமே குரங்கின் வடிவத்தைக் கொண்டது என்றான்/
(நாட்படா மறைகள் என்றதற்கு – அழியாது நிலைத்து நிற்கும் வேதங்கள் என்பது பொருள். வேதங்களுக்கும்
‘மறைகளாலும் நவைபடா ஞானத்தாலும் கோட்படாப் பதம்’ என்றார். இதனால் பரம்பொருள் தத்துவமே குரங்கின் வடிவத்தைக் கொண்டது என, இராமனே அனுமனைப் பரம்பொருள் எனக் குறிப்பது ஆழ்ந்த கருத்துடையது.;தமிழச்சாதி அமரத்துவம் வாய்ந்தது என்றிருந்தேன் என்ற மகாகவி பாரதியார் கூற்றினை ஒப்பிட்டு ஆழம் உணர்க.
அடுத்த பாடலில் நல்ல சகுனம் இது; இனி துன்பம் இல்லை என்று முடிக்கிறான் ராமன்
(அனுமன்) ஆலகால நஞ்சு உண்ட சிவபெருமானைப்போல நடனம் ஆடிக்கொண்டே பேசினான்: வாசனை மிக்க மாலையை உடைய வாலி என்று சொல்லப்படும் அளவில்லாத வலிமை உடையவனின் உயிரை அழிக்க யமன் வந்துவிட்டான்; (ஆதலால்) நாம் துன்பக்கடலைக் கடந்து விட்டோம் என்று சூரியனின் மகனான சுக்கிரீவனுக்கு உரைத்தான்.
வாலியைக் கொல்லும் யமன் போன்று இராமலக்குவர் வந்துள்ள செய்தியை மகிழ்ச்சியால்ஆடிக் கொண்டே அனுமன் சொன்னான் . அவன் சிவபெருமான் அம்சமாய் அவதரித்தவன் ஆதலின் ‘ஆலம் உண்டவனின் நின்று’ என்றார். முன்னரும் அனுமனைத் ‘தனி அருளும் தாழ்சடைக் கடவுள்’ (3753) எனக் கூறியது காண்க.
வாலியின் பெருமை :–
வாலி இதுவரை போரில் வென்று வெற்றிமாலைக்கு உரியவன் ஆதலின் ‘விரை செய் தார் வாலி’ என்றான். சுக்கிரீவன் முதலானாரோடு போர்செய்யத் தும்பை சூடி வருதலின் ‘விரை செய் தார் வாலி’ எனவும் கொள்ளலாம். தன்னோடு போர்செய்வாரின் வலிமையில் பாதியைத் தன் வலிமையோடு பெற்றுவிடுவான் ஆதலின்‘அளவிலா வலியினான்’ எனப்பட்டான். வாலி பிறந்தபோது, இந்திரன் வந்து பொன்மாலையை அணிவித்து, யார் எதிர்த்தாலும் எதிர்த்தார். வலிமையில் பாதி வாலிக்கு வருவதாக என வரம் அளித்தான் .
****
244.Rama + Sugreeva = New moon Day!அமாவாசை சூரிய சந்திரன்
தவாவலி அரக்கர் என்னும்
தகா இருள் பகையைத் தள்ளி,
குவால் அறம் நிறுத்தற்கு ஏற்ற
காலத்தின் கூட்டம் ஒத்தார்;
அவா முதல் அறுத்த சிந்தை
அனகனும்,அரியின் வேந்தும்,
உவா உற வந்து கூடும்,
உடுபதி,இரவி,ஒத்தார்.
ஆசையை வேரோடு களைந்த மனத்தையுடைய இராமனும் குரங்கினத்து அரசனாகிய சுக்கிரீவனும் (ஒன்று கூடியவராய்), அழியாத வலிமையை உடைய அரக்கர் என்கின்ற தகுதியில்லாத இருளாகிய பகைவர்களை ஒழித்து தர்மத்தை நிலைபெறச் செய்வதற்கு வந்த காலத்தின் சேர்க்கையை ஒத்திருந்தார்கள்; அவர்கள் அமாவாசை நேர ஒன்றாக வந்து சேர்கின்ற சந்திரனையும் சூரியனையும் ஒத்து விளங்கினர்.
இங்கு இராமனுக்கு உவமை. ‘கரு நாயிறு போல்பவர்’ (1163) என்றனள் சீதை. ‘இருளுடைவைகலெம் இரவி தோன்றினாய்’ (2646) எனத் தண்டகவனத்து முனிவர் இராமனைச் சூரியனாகக் கூறினர். உடுபதி – சந்திரன். குரங்குகளை நட்சத்திரங்களாகவும், சுக்கிரீவனை நட்சத்திரக் கூட்டத் தலைவன் சந்திரனாகவும் கொள்க. தன் கலைகளை இழந்த சந்திரன் சூரியனை அடைந்து அவனால் கலைகளாகிய ஒளி வளரப்பெறுவது போல, சுக்கிரீவனும் இராமபிரானை அடைந்ததால் அரசியல் செல்வம் முதலிய நலன்கள் பெறுவது உறுதியாதலின் ‘உவா வுற வந்து கூடும் உடுபதிஇரவி ஒத்தார்’ என்றார்.
வெண்ணிறத்தாலும் சந்திரனுக்குச் சுக்கிரீவன் ஒப்பாவான். ‘அரியின் வேந்தும் அனகனும் உடுபதி இரவி ஒத்தார்’ என மாற்றிப் பொருள் காண்க.
இராம சுக்கிரீவர் நட்பைக் காலத்தின் சேர்க்கையாகத் தத்துவப்படுத்தியும், சூரிய சந்திர சேர்க்கையாகக் காட்சிப் பொருளாக்கியும் கம்பர் காட்டியுள்ள நயம் சிறப்புடையது. இஃது உவமை அணி பொருந்தியபாடல். முதல் இரண்டு அடிகளில், அரக்கரை இருளாக உருவகித்ததற்கு ஏற்ப, அறத்தை வெளிச்சமாக உருவகம் செய்கிறார்.
தம்பி என்ற உறவும் பாராது, வலிமை குறைந்தவன் என்ற போர் முறையையும் நோக்காது, அஞ்சி ஓடியவனைத் துரத்தி ஓடுதல்
போர்முறைக்குப் பழியாகும் என்பதையும் உணராது வாலி, சுக்கிரீவனை வருந்தினான் என அவ்வாலியின் முறையற்ற செயலைச் சுக்கிரீவன் உணர்த்தினான்.
மதங்க முனிவர் சாபத்தால் ருசியமுக மலையில் வாலி வந்தால்
அவன் தலை வெடித்து இறப்பான் ஆதலால் ‘இக்குன்று அரண் உடைத்து ஆகி உய்ந்தேன்’ என்றான்.
********************
246.IMPORTANT CLAUSES IN THE FRIENDSHIP TREATY
246 ‘மற்று,இனி உரைப்பது என்னே?
வானிடை, மண்ணில், நின்னைச்
செற்றவர் என்னைச் செற்றார்;
தீயரே எனினும்,உன்னோடு
உற்றவர் எனக்கும் உற்றார்;உன்
கிளை எனது;என் காதல்
சுற்றம்,உன்சுற்றம்;நீ என்
இன் உயிர்த் துணைவன்’என்றான்.
மேலும் நான் இனிச் சொல் லக்கூடியது யாது உளது? விண்ணுலகிலும், மண்ணுலகிலும் நின்னை என்னை வருத்தியவராவர்; தீயவராகவே இருந்தாலும் உன்னோடு நட்புக்
கொண்டவர்கள் எனக்கும் நண்பராவர்; உன் உறவினர்; என் உறவினராவர்; என் அன்புள்ள சுற்றத்தினர்; உன் சுற்றத்தினராவர்;நீ என் இன் உயிர்த்துணைவன் – நீ எனது இனிய உயிர் நண்பன்’ என்றான் இராமன்.
‘தீயரே எனினும் உன்னோடு உற்றவர் எனக்கும்
உற்றார்’என்று மேலும் தன் நட்பின் வலிமையை உரைத்தான்.
. ”என் உயிர் அனையாய் நீ; இளவல் உன் இளையான்’ என்று
இராமன் குகனிடம் கூறியதை (1994) ஒப்பு நோக்கலாம்.
**********
248குரங்குப் படையின் கொண்டாட்டம்
3813. ஆர்த்ததுகுரக்குச் சேனை;
அஞ்சனை சிறுவன் மேனி,
போர்த்தன,பொடித்து உரோமப்
புளகங்கள்;பூவின் மாரி
தூர்த்தனர்,விண்ணோர்,மேகம்
சொரிந்தென,அனகன் சொன்ன
வார்த்தை,எக் குலத்துளோர்க்கும்,மறையினும்
மெய் என்று உன்னா.
இராமன் சொன்ன சொல், எல்லாக் குலத்தில் தோன்றியவர்க்கும்
வேதவாக்கைக் காட்டிலும் உண்மையானதாகும் என்று எண்ணி குரங்குக் கூட்டம் ஆரவாரம் செய்தது; அஞ்சனையின்
புதல்வனான அனுமன் மேனியை அரும்பி மறைத்து விட்டன;
(தேவர்கள் மலர் மழையால் பூமியை நிரப்பினர்; மேகங்கள் மழையைப் பொழிந்தன. இந்த நட்பால் நல்ல பயன் என்பதற்கு நன்னிமித்தமாக மேகம் மழை பொழிந்தது).
சுக்ரீவன் அரண்மனையில் ராம இலக்குவர்க்குச் சுக்ரீவன் விருந்து அளித்தான்; இராமன் அவர்கள் விருந்து கொடுத்த போது (சுக்கிரீவன் மனைவியைக் காணாமையால்) மனம் வருந்தி, ஆலோசித்து,
(சுக்கிரீவனைப் பார்த்து) நல்ல இல்லற வாழ்க்கைக்கு உரிய பூவையை / மனைவியை நீயும் பிரிந்துள்ளாயோ என்று
வினவினான்.
விருந்தினனாகிய தன்னைச் சுக்கிரீவன் மனைவி இல்லாமல்
உபசரிப்பதைக் கண்டு ‘நன்மனைக்குரிய பூவையைப் பிரிந்துளாய் கொல்’ என இராமன் வினவினான். மனையாள் இல்லாத இடத்து விருந்தோம்புதல் சிறக்காது என்பர். மகளிரும் விருந்தோம்புதலைத் தலையாய கடனாகக் கொண்டனர் என்பதை ”விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை” (சிலம்பு – 2 – 16 – 73) என்ற கண்ணகியின் வருத்தமும் விருந்தோம்பலில் மகளிர் பங்கை உணர்த்தும்.
**************
250.சுக்ரீவன் பதில் சொல்வதற்குப் பதிலாக அனுமனை நீண்ட பதிலை அளித்தான் ;அதில் கண்ட முக்கியச் செய்திகள்
3825. ‘கிட்டுவார்பொரக் கிடைக்கின்,அன்னவர்
பட்ட நல் வலம் பாகம் எய்துவான்;
எட்டு மாதிரத்து இறுதி,நாளும் உற்று,
அட்ட மூர்த்தி தாள் பணியும் ஆற்றலான்;
சுக்ரீவனின் அண்ணனான வாலி , யாராவது போருக்கு வந்தால் அவர்களிடம் உள்ள நல்ல வலிமையில் பாதியைத் தான் அடைவான்;
“O son of Pṛthā, do not yield to this degrading cowardice/ impotence. It does not become you. Give up such petty weakness of heart and arise, O chastiser of the enemy.BG 2–3
**
Compare Kural 540 with Bhagavad Gita 6-5
उद्धरेदात्मनात्मानं नात्मानमवसादयेत् ।
आत्मैव ह्यात्मनो बन्धुरात्मैव रिपुरात्मन: ॥6-5
“One must elevate oneself by one’s own self, not degrade oneself. The self alone is the friend of the self, and the self alone is the enemy of the self.6-5
**
Note SEVEN BIRTHS in Kural 538. Valluvar repeatedly declare that he is a Hindutva person!
**
Note Kural 533 says Nuulor= Authors of Scriptures; this shows that Valluvar studied Smritis (Hindu Law Books) and repeat it.
**
Go to Project Madurai website for all Tamil books; it is free and trouble free. No advertisements; no cookies!
****
Following Translations are used:
1.A Aranganatha Mudaliyar – ANM+2 ( B.L. Aranganatha iyer and R. Srinivasa Desikan), Year 1933
2.S M Diaz, I G of Police- SMD, Year 2000
3.Rev.Dr.GU Pope – GUP, Year 1886
4.Suddhananda Bharathiyar- SB
5.EVS Publishers, Singapore- EVS, Year 1986
6.H A Popley – HAP (not full book; only selected couplets) Year 1931
7.Tamil Original
****
Part 72; Chapter 54 in Tirukkural Book:பொச்சாவாமை
CHAPTER 54. Against Forgetfulness; Vigilance; ON AVOIDING ARROGANT THOUGHTLESSNESS; Unforgetfulness;பொச்சாவாமை
531.Luxurious indolence, born of excessive self-complacency and forgetfulness, is worse than blind wrath –A Aranganatha Mudaliyar – ANM+2 ( B.L. Aranganatha iyer and R. Srinivasa Desikan), Year 1933
***
531.Worse than excessive rage is the arrogant unguardedness,
Arising from unbounded and inebriating pleasure- S M Diaz, I G of Police – SMD, Year 2000
***
531 ‘Tis greater ill, it rapture of o’erweening gladness to the soul Bring self-forgetfulness than if transcendent wrath control. More evil than excessive anger, is forgetfulness which springs from the intoxication of great joy.-Rev.Dr.GU Pope – GUP, Year 1886
***
531.Worse than wrath in excess is Forgetfulness in joy-excess. Suddhananda Bharathiyar – SB
*** 531.Worse than excessive wrath is neglect that arises from excessive self-complacency –EVS Publishers, Singapore- EVS, Year 1986
***
531. இறந்த வெகுளியின் தீதே சிறந்த உவகை மகிழ்ச்சியிற் சோர்வு.
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
532.Poverty freezes the genial current of the soul. Forgetfulness blights its glory– ANM+2
***
532.A false sense of security kills glory
Even as indigence crushes understanding– SMD
***
532 Perpetual, poverty is death to wisdom of the wise; When man forgets himself his glory dies! Forgetfulness will destroy fame, even as constant poverty destroys knowledge.– GUP
***
532.Negligence kills renown just as Ceaseless want wisdom destroys– SB ***
532.negligence of duty kills renown just as constant poverty destroys one’s wisdom- EVS, Year 1986
533.All the scriptures and the wisdom of the world have declared that the thoughtless know no fame– ANM+2
***
533.The people, who are not watchful, will earn no renown,
Which is the considered view of all schools of thought– SMD
***
533 ‘To self-oblivious men no praise’; this rule Decisive wisdom sums of every school. Thoughtlessness will never acquire fame; and this tenet is upheld by all treatises in the world.– GUP ***
533.Forgetful nature fails of fame All schools of thinkers say the same. – SB
***
533.Men of forgetful nature cannot mount to glory. All schools of thought assure this- EVS, Year 1986
***
533. பொச்சாப்பார்க்கு இல்லை புகழ்மை அதுவுலகத்து எப்பால்நூ லோர்க்கும் துணிவு.
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
534.Cowards quake with fear even in well-garrisoned fortresses. The heedless know no joy of wealth even in the abundance of their riches– ANM+2
***
534.Fortresses serve no purpose to those who are not brave so too nothing avails those who are not vigilant– SMD
*** 534 ‘To cowards is no fort’s defence’; e’en so The self-oblivious men no blessing know. Just as the coward has no defence (by whatever fortifications ha may be surrounded), so the thoughtless has no good (whatever advantages he may possess).– GUP ***
534.The fearful find no fortress here The forgetful find good never– SB
*** 534.Fortifications are of little use to cowards; resources are of little use to the forgetful- EVS, Year 1986
535.Remorse enters the heart which, in its forgetful ease, guards not against impending evils– ANM+2
***
535.A person who does not foresee and guard against untoward developments in future,
Will deplore his negligence, when surprised by disaster – SMD
***
535 To him who nought foresees, recks not of anything, The after woe shall sure repentance bring. The thoughtless man, who provides not against the calamities that may happen, will afterwards repent for his fault.– GUP ***
535.Failing foresight the guardless man Shall rue his folly later on– SB
***
535.He who is not forearmed against coming danger, shall repent his fault in the end – EVS, Year 1986
***
535. முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழை பின்னூறு இரங்கி விடும்.
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
536.There is nothing like ceaseless and searching vigilance to the king– ANM+2
***
536.If the king maintains constant watchfulness and thoughtfulness at all times,
About all persons around him, he needs nothing better– SMD
***
536 Towards all unswerving, ever watchfulness of soul retain, Where this is found there is no greater gain. There is nothing comparable with the possession of unfailing thoughtfulness at all times; and towards all persons.– GUP ***
536.Forget none; watch with wakeful care Miss none; the gain is sans compare. – SB
***
536.Watch wakefully always forgetting none; no gain can be compared to this vigilance- EVS, Year 1986
***
536. இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை வாயின் அதுவொப்பது இல்.
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
537.Nothing is impossible to the monarch who is all eyes and ears about the work– ANM+2
***
537.With constant watchfulness and full consideration given to the task on hand,
There is nothing difficult or impossible– SMD
***
537 Though things are arduous deemed, there’s nought may not be won, When work with mind’s unslumbering energy and thought is done. There is nothing too difficult to be accomplished, if a man set about it carefully, with unflinching endeavour.– GUP ***
537.With cautious care pursue a thing Impossible there is nothing– SB
***
537.Pursue a project with cautious care and there is nothing then impossible to achieve- EVS, Year 1986
538.Criminal neglect of what is praiseworthy, brings in its train countless ills through all our sevenfold births– ANM+2
***
538.The prince should devote himself wholeheartedly to words, commended by the wise,
By neglecting these, he will suffer in all seven births– SMD
***
538 Let things that merit praise thy watchful soul employ; Who these despise attain through sevenfold births no joy. Let (a man) observe and do these things which have been praised (by the wise); if he neglects and fails to perform them, for him there will be no (happiness) throughout the seven births.– GUP ***
538.Do what the wise commend as worth If not, for seven births no mirth– SB
***
538.Devote yourself to what wise commend worthy, else you will not find joy for many years – EVS, Year 1986
539.In your self-intoxication of joy, remember those monarchs, who, in their thoughtless mirth, have ruined themselves– ANM+2
***
539.When you revel in kingly pleasure and so, are inclined to be arrogant and negligent,
Think of the man, who have gone the same way before to ruin– SMD
***
539 Think on the men whom scornful mind hath brought to nought, When exultation overwhelms thy wildered thought. Let (a king) think of those who have been ruined by neglect, when his mind is elated with joy.– GUP ***
539.When joy deludes, their fate recall Whom negligence has made to fall. – SB
***
539.Whenever you are inclined to be proud and self-complacent, think of that came to grief though negligence- EVS, Year 1986
540.All the yearnings of a king become fulfilled, if he keeps them constantly in his mind– ANM+2
***
540.It is easy for a king to achieve his objective,
Provided he keeps it constantly in mind– SMD
***
540 ‘Tis easy what thou hast in mind to gain, If what thou hast in mind thy mind retain. It is easy for (one) to obtain whatever he may think of, if he can again think of it.– GUP
***
540.Easy it is a thing to get When the mind on it is set. – SB
***
540.Concentrate the mind upon what you want to achieve; it becomes easy then to attain- EVS, Year 1986
***
540.
It is easy achieve an aim,
If it be firmly kept in mind H A Popley – HAP (not full book; only selected couplets) Year 1931
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
லலிதா சஹஸ்ர நாமத்தில் பக்தி சம்பந்தமான நாமாக்கள்! – 1
ச. நாகராஜன்
லலிதா சஹஸ்ர நாமத்தை, வேத துல்யம் – வேதத்திற்கு சமமானது என்று மகான்கள் கூறி அருளியுள்ளனர்.
இது மந்திர சாஸ்திரம். தந்திர சாஸ்திரம். கர்மம், பக்தி, ஞானம் ஆகிய யோகங்களை விளக்கும் அற்புத நூல். இதில் ஏராளமான ரகசியங்கள் உள்ளன.
நூல் அமைப்பு, சப்தங்களின் அமைப்பு, பொருள் அமைப்பு உள்ளிட்ட ஏராளமான அமைப்புகளின் நுணுக்கங்கள் உள்ளன. லலிதா தேவியின் அருள் பெற்ற ஒருவரே இதன் மஹிமையைப் பற்றி ஒரு சிறிதளவு உணரக் கூடும்; உணர்ந்ததில் ஒரு சிறிதளவையே சொல்லக் கூடும்.
பாஸ்கர ராயர் இந்த வகை மகான்களில் ஒருவர். அவர் இதற்கு இயற்றி அருளியுள்ள பாஷ்யத்தின் வாயிலாகத் தான் நம்மால் நாமங்களின் அர்த்தத்தையும் மஹிமையையும் உணர முடிகிறது.
பக்தி சம்பந்தமாகவும் பக்தர்களுக்கு லலிதாம்பிகை அருள் புரிவது சம்பந்தமாகவும் உள்ள நாமங்களில் ஒரு சில நாமங்களை இங்கு பார்ப்போம். இந்த விளக்கம் பாஸ்கர ராயர் தரும் விளக்கமே.
நாமம் 119 பக்தி கம்யா
பக்தி மார்க்கத்தால் அடையக் கூடியவள். இன்னொரு அர்த்தம் பக்தியோடு உபாஸனை செய்வதால் பிரத்யக்ஷமாகிறவள்.
பரமாத்மாவை சாதாரணமாக நேரில் பார்ப்பது முடியாது என்று சொல்லப்பட்டிருந்தாலும் பக்தியின் தீவிரத்தால் பரமாத்வாவின் சொரூபத்தை பக்தர்கள் பார்க்க முடியும். இது கீதை உள்ளிட்ட பல நூல்களில் சொல்லப்பட்டிருக்கிறது.
பக்த்யாது அனன்யா சக்ய: அஹம் ஏவம் விதோ அர்ஜுன |
ஞாதும் த் ரஷ்டும் தத்வேன ப்ரவேஷ்டும் ச பரந்தப ||
கீதையில் 11வது அத்தியாயமான விஸ்வரூப தர்சன யோகத்தில் 54வது ஸ்லோகம் இது.
இதன் பொருள்:
“எதிரிகளை அடக்கும் பரந்தபனே, அர்ஜுனா! வேறு எதிலும் சிதறாத (அனன்ய) தூய பக்தியினால் மட்டுமே, என்னை இந்த விஸ்வரூபத்தில் உண்மையாக அறியவும், நேரடியாகக் காணவும், இறுதியாக என்னோடு கலந்திடவும் முடியும்.
இதுவே ச்ருதியிலும் கூறப்பட்டுள்ளது.
பக்தி என்பது அம்பாளை அடையக் கூடிய ஒரு வழியாகும். அந்த வழியில் போனால் அடையக் கூடிய – கம்யமான- இடமாகிற அம்பாளை பக்தி கம்யா என்று சொல்லப்பட்டிருக்கிறது.
இன்னொரு விதமாகவும் இதைப் பார்க்கலாம்.
பக்தி என்பதற்கு லக்ஷணம் என்று ஒரு அர்த்தம் உண்டு. இந்த விதத்தில் பார்த்தால் பக்தி கம்யா என்றால் உள்ளபடியாகத் தெரியாமல் இருந்தாலும் கூட லக்ஷணங்களினால் அறியக் கூடியவள் என்று பொருள் கொள்ளலாம்.
பிரம்மத்தைச் சொல்லும் போது ஸத்யம், ஞானம் உள்ளிட்ட சொற்கள் பிரம்மத்தின் லக்ஷணத்தைச் சொல்கின்றனவே தவிர, உண்மையான ரூபத்தை – உருவத்தைச்- சொல்லவில்லை. ஆகவே தான் லலிதா
த்ரிசதியில் கூட லக்ஷணா கம்யா – லக்ஷணத்தால் அறியக் கூடியவன் – அடையக் கூடியவள் – என்று சொல்லப்பட்டிருக்கிறது.
ஆகவே கம்யா என்ற சொல்லின் மூலமாக லலிதாம்பிகை பிரத்யக்ஷமாகிறவள், அடையப்படுகிறவள், அறியப்படுகிறவள் என்ற மூன்று வித அர்த்தங்களைப் பெறுகிறோம்.
இது பக்தியினால் சாத்தியமாகிறது.
அடுத்து இந்த ஸ்தோத்ரத்தில் உள்ள இன்னும் சில பக்தி சம்பந்தமான நாமங்களைப் பார்ப்போம். ** தொடரும்
london swaminathan picture taken from 100 year old book.
Written by London Swaminathan
Post No. 16,358
Date uploaded in London – 30 October 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
This is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
கம்ப ராமாயணத்தை முழுக்க படிக்க வேண்டாம்; சுவையான பகுதிகளை மட்டும் படியுங்க!! கம்பன் ஒவ்வொரு விஷயத்துக்கும் 10 அல்லது 15 பாடல்களைச் சொல்வதால் 10,000 பாடல்கள் கிடைக்கின்றன; அவைகளைப் படிக்க முடியாதோருக்கு சுவையான பகுதிகளை மட்டும் கேள்வி – பதில் வடிவில் தருகிறேன்; எப்போதும் என் பிளாக்குகளில் இலவசமாகக் கிடைக்கும் ; தொடர்ந்து படியுங்கள்: இதற்கு முன்னர் வெளியிட்ட 230 கேள்விகளும், விடைகளும் எனது பிளாக்குகளில் எப்போதும் கிடைக்கும்.
231
ராம லட்சுமணர்கள் தொலைவில் வருவதைப் பார்த்து வாலியின் ஆட்கள் என்று எண்ணி ஒடி ஒளிந்தான் சுக்ரீவன் ! பயப்படாதீர்! நான் போய் பார்த்தது வருகிறேன் என்று அனுமன் சென்றான் ;இதுதான் கம்பராமாயணத்தில் அனுமன் வரும் முதல் காட்சி ;அனுமன் எந்த வடிவத்தில் சென்றான்?
232
இருவரையும் கண்டவுடன் அனுமனின் மனதில் எழுந்த எண்ணங்கள் என்ன?எந்தக் காரணமும் இல்லாமல் அனுமன் உள்ளத்தில் அன்பு பீறிட்டெழுந்ததை கம்பன் எப்படிச் சொல்கிறான் ?
233
ராம,லெட்சுமணர்களுக்கு அருகில் புலி,சிங்கம்,பறவைகள் முதலியன செய்த அற்புதக் காட்சிகளைக் கண்டு அனுமன் வியந்தது எங்ஙனம் ?
234
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாள்?என்றான் வள்ளுவன் ;அன்பினுக்கு எல்லை இல்லை– என்று கம்பன் உதிர்த்த பொன்மொழியின் சிறப்பு என்ன?
235
ராம லெட்சுமணர்களை என்ன சொல்லி அனுமன் வரவேற்றான் ?
236
அனுமனைப் பார்த்த ராமன்,யார்கொல் இச்சொல்லின் செல்வன்?-என்று வியப்படைந்ததன் காரணம் என்ன?
237
இவன் சாதாரண பிரம்மச்சாரி அல்ல;உலகிற்கே அச்சாணி என்று தம்பியிடம் ராமன் விளம்பியது என்ன ?
238
அனுமனிடம் “சுக்ரீவனைக் காண வந்தோம் ;அவனைக் காட்டுவீராக” என்று ராமன் சொன்னவுடன் அனுமன் சொன்ன பதில் என்ன ?
239
வாலி- சுக்ரீவன் பகைமைபற்றி அனுமன் அளித்த செய்தி என்ன?
240
நீங்கள் யார் என்று ஆஞ்சனேயன் (அனுமன்) கேட்டவுடன் ரத்தினச் சுருக்கமாக மூன்றே பாடல்களில் லெட்சுமணன் தங்கள் யார் என்பதை எப்படி அழகாகச் சொன்னான் ?
XXXXXXXXXXXXXXX
விடைகள்
231.பிரம்மச்சாரி வடிவத்தில் அனுமன்!
3754. அஞ்சனைக்கு ஒரு சிறுவன்,
அஞ்சனக் கிரி அனைய
மஞ்சனைக் குறுகி,ஒரு
மாணவப் படிவமொடு,
‘வெஞ் சமத் தொழிலர்,தவ மெய்யர்,
கைச் சிலையர்’என,
நெஞ்சு அயிர்த்து,அயல் மறைய
நின்று,கற்பினின் நினைவும்:
அஞ்சனாதேவியின் ஒப்பற்ற மகனான அனுமன், ஒரு மாணாக்கன் (பிரம்மச்சாரி) வடிவம் தாங்கி, நீலமலையைப் போன்ற இராமனை நெருங்கி அருகில் மறைவாக நின்று, இவர்கள் கொடிய போர்த்தொழில் உடையர்; தவவேடம் தாங்கிய உடம்பினர்; கையில் வில்லேந்தியுள்ளனர்’ என்று சந்தேகத்தோடு சிந்தித்தான்.
***
232.இருவரையும் கண்டவுடன் அனுமனின் மனதில் எழுந்த எண்ணங்கள்:-
‘தேவருக்கு ஒரு தலைவர் ஆம்
முதல் தேவர் எனின்,
மூவர்;மற்று,இவர் இருவர்;
மூரி வில் கரர்;இவரை
யாவர் ஒப்பவர்,உலகில்?யாது,
இவர்க்கு அரிய பொருள்?
கேவலத்து இவர் நிலைமை தேர்வது
எக் கிழமை கொடு?
தேவர்களுக்கெல்லாம் ஒப்பற்ற தலைவர்களாகிய தேவர்களோ
என்றால் அவர்கள் மூவராவர்; இவர்கள் இருவராய் இருக்கின்றனர் (அவர்கள் சூலம், திகிரி, வேதம் ஏந்தியிருக்க) இவர்கள் வில்லைத் தாங்கினர்; இவர்களை போன்றவர்கள் உலகில் யாருளர்? இவர்களுக்குச் செய்தற்கு அரிய செயல்தான் யாது உளது? இவர்கள் நிலைமையை எந்தத் தகுதியைக் கொண்டு தெளிவது?
(மும்மூர்த்திகட்கும் இராமலக்குவர்க்கும் உள்ள வேற்றுமை கூறப்பட்டது. முத்தேவர் அல்லாதவராயினும் யாவர்க்கும் மேலானவர்களாகத் தோன்றியதால் ‘இவரை ஒப்பார் யார்? யாது இவர்க்கு அரிய பொருள்’ என வியக்கிறான்)
அனுமன் இவர்களே தருமம் என்று துணிதல்.
3759. என்பன பலவும் எண்ணி,
இருவரை எய்த நோக்கி,
அன்பினன்,உருகுகின்ற
உள்ளத்தன்,ஆர்வத்தோரை
முன்பிரிந்து,அனையர்தம்மை முன்னினான்
என்ன நின்றான் –
தன் பெருங்குணத்தால் தன்னைத்
தான்அலது ஒப்பு இலாதான்.
தனது சிறந்த குணங்களால் தனக்குத்தானே வேறு ஒப்புமை இல்லாதவனாகிய அனுமன், மேற்கூறியவாறு பலவற்றையும் எண்ணினான். அவ்விருவரையும் உற்றுப்பார்த்து அன்பால் உருகுகின்ற உள்ளம் கொண்டவனாய், முன்னர் ஒரு காலத்தில் விட்டுப்பிரிந்து அவர்களை மீண்டும் சந்தித்தது போல அன்புருக நின்றான்.
*************
233விலங்குகள் செய்த அற்புதங்கள்
3760. ‘தன்கன்று கண்ட அன்ன
தன்மைய,தறுகண் பேழ் வாய்
மின் கன்றும் எயிற்றுக் கோள்மா,
வேங்கை,என்று இனையவேயும்,
பின்சென்று,காதல் கூரப்
பேழ்கணித்து இரங்குகின்ற;
என்கன்றுகின்றது,எண்ணிப்
பற்பல இவரை?அம்மா!
கொடிய கண்ணையும், பெரிய வாயினையும் பளபளக்கும் பற்களையும் உடைய சிங்கம்,புலி போன்ற கொடிய விலங்குகளும் (இராமலக்குவரைக் கண்டு), தன் குட்டிகளை கண்டாற்போல
இவர்கள் பின்னால் சென்று அன்புகாட்டி உருகுகின்றன; (இங்ஙனம் இருக்க) இவர்களைப் பகைவர்களாகப் பலவாறு எண்ணி வருந்துவது ஏன்? (கொடிய விலங்குகளும் தம் கொடுமை நீங்கி, இராமலக்குவர் இடத்தில் அன்புகாட்டி உருகுமாயின், இவர்களைப் பகைவர்களாக எண்ணி அஞ்சுவதற்குக் காரணம் இல்லை; இவ்வாறு அனுமன் எண்ணினான்)
3761. ‘மயில் முதல் பறவை எல்லாம்,
மணி நிறத்து இவர்கள் மேனி
வெயில் உறற்கு இரங்கி,மீதா,
விரி சிறைப் பந்தர் வீசி,
எயில் வகுத்து எய்துகின்ற;இன
முகில் கணங்கள்,எங்கும்
பயில்வுற,திவலை சிந்தி,
பயப்பயத் தழுவும்,பாங்கர்.
மயில் முதலான பறவைகள் எல்லாம் இவர்கள் மேனியில் வெயில் படாமல் இருப்பதற்காக, விரிந்த சிறகுகளைப் பந்தலாகப் பரப்பி தொடர்ந்து வருகின்றன;மேகக் கூட்டங்கள் எல்லா இடங்களிலும் நீர்த்துளிகளைச் சிந்திக்கொண்டு இவர்கள் பக்கத்தில் மெல்ல மெல்லத் தொடர்ந்து வருகின்றன – என்ற அதிசயக் காட்சிகளை அனுமன் கண்டான்.
மயக்கத்தால் உண்டாகின்ற பழவினை தன்னைப் போக்கி, யமலோகத்தில் அல்லாமல் (சென்றவர்கள்) மீண்டு வருதலில்லா முத்திநெறியில்செலுத்துகின்ற கடவுளரோ இவர்கள்? என் எலும்பும் உருகுகின்றது; அளவு இல்லாத அன்பு மிகுகின்றது; அன்பினுக்கு அவதி இல்லை – (இவர்களிடம் எனக்குத் தோன்றும்) அன்பிற்கு எல்லை இல்லை; (அவ்வாறு ஆவதற்குக்) காரணம் யாதோ?; அறிய முடியவில்லையே!
இராமனால் சரபங்கனும் சபரியும் பிறப்புநீங்கி முக்தியடைந்தனர். இறைவனைக் காண்கையில் எலும்பு உருகும் என்பதை ‘இரும்பு மனத்தேனை ஈர்த்து ஈர்த்து என் என்புருக்கி‘ (திருவாசகம் 544) என்ற மணிவாசகர் வாக்கும் உணர்த்தும். அனுமன் உருகியதுபோல வீடணனும் ‘என்புறக் குளிரும் நெஞ்சுருகும் மேலவன்,புன்புலப் பிறவியின் பகைஞன் போலுமால்” (6384) என்று கூறுவதைக் காணலாம்.
****************
235.அனுமன் எதிர் சென்று வரவேற்றலும்’நீ யார்’என இராமன் வினாவுதலும்
3764. இவ் வகை எண்ணி,ஆண்டு,
அவ் இருவரும் எய்தலோடும்,
செவ் வழி உள்ளத்தானும்,தெரிவுற
எதிர் சென்று எய்தி,
‘கவ்வை இன்றாக,நுங்கள்
வரவு! ‘என,கருணையோனும்,
‘எவ் வழி நீங்கியோய்?நீ யார்’
என,விளம்பலுற்றான்:
இவ்வாறு ஆலோசித்து அனுமனும் அவ்விரண்டு பேரும் வந்தஅளவில்அவர்களுக்குத் தெரியுமாறு எதிரில்சென்று அடைந்து; ”உங்கள் வருகை துன்பம் இல்லாதது ஆகுக” என வரவேற்றான்.
இராமனும் நீஎவ்விடத்திலிருந்து வருகின்றாய்? நீ யார் என்று வினவ (அனுமன்) சொல்லத் தொடங்கினான். காற்றில் வேந்தற்கு –
வாயுதேவனுக்கு;அஞ்சனை வயிற்றில் – அஞ்சனாதேவியின் வயிற்றில்;வந்தேன் – பிறந்தேன்;நாமமும் – என் பெயரும்;அனுமன் என்பேன் –அனுமன் என்று அழைக்கப்பெறுவேன்– என்று சுருக்கமாகப் பேசினான் அனுமன்
********
236.சொல்லின் செல்வன்
3767. மாற்றம்அஃது உரைத்தலோடும்,
வரிசிலைக் குரிசில் மைந்தன்
தேற்றம் உற்று,இவனின் ஊங்கு
செவ்வியோர் இன்மை தேறி
‘ஆற்றலும்,நிறைவும்,கல்வி
அமைதியும்,அறிவும் என்னும்
வேற்றுமை இவனோடு இல்லையாம்’
என,விளம்பலுற்றான்.
அந்த மறுமொழியை அனுமன் சொன்ன அளவில் இராமன் தெளிவடைந்து இவ்வனுமனைக் காட்டிலும் செம்மைக் குணம் உடையோர் பிறர் இன்மையைத் தெளிந்து, திறமையும் நிறைந்த குணங்களும்,கல்வியால் வரும் அடக்கமும் அறிவும் இவனிடம் உள்ளது
3768. ”’இல்லாத உலகத்து எங்கும்,இங்கு
இவன் இசைகள் கூரக்
கல்லாத கலையும்,வேதக் கடலுமே”
என்னும் காட்சி
சொல்லாலே தோன்றிற்று அன்றே?
யார்கொல் இச் சொல்லின்செல்வன்? –
வில் ஆர்தோள் இளைய
வீர! – விரிஞ்சனோ?விடைவலானோ?
இளைய வீரனே (லெட்சுமணா!)! இவன் கற்றுக்கொள்ளாத கலைகளும், வேதமாகிய கடலும் உலகத்தில் எங்கும் இல்லை; (இவன்பெற்றிருக்கும்) அறிவு, இவன் பேசிய சொல்லாலேயே; வெளிப்பட்டதன்றோ? இத்தகைய சொல்லின் செல்வனாக விளங்கும் இவன் நான்முகனோ? விடை ஏறி வலம் வரும் சிவனோ? யாராக இருத்தல் கூடும்.
இவன் கல்லாத கலையும் வேதக்கடலும் உலகத்து இல்லாதனவே என்றதால் அனுமன் எல்லாக் கலைகளையும் எல்லா வேதங்களையும் நன்கு கற்றவன் என்பது புலனாம். பிரமனின் அம் சமாகவோ,உருத்திரனின் அம்சமாகவோ இருந்தாலன்றி இத்தகைய சொல்லின் செல்வம் பெற இயலாது. எனவே இச்செல்வம் பெற்ற அனுமன், அவ்விருவருள் யார் என்று வியந்து இராமன் பாராட்டினான்
*****************
237.இவன் சாதாரண பிரம்மச்சாரி இல்லை!
3769. ‘மாணிஆம் படிவம் அன்று,மற்று
இவன் வடிவம்;மைந்த!
ஆணி இவ் உலகுக்கு எல்லாம்
என்னலாம் ஆற்றற்கு ஏற்ற
சேண் உயர் பெருமைதன்னைச்
சிக்கு அறத் தெளிந்தேன்;பின்னர்க்
காணுதி மெய்ம்மை’என்று,
தம்பிக்குக் கழறி,கண்ணன்,
இலக்குவ! இவனது வடிவம்இப்போது காணப்பெறும் சாதாரண பிரமச்சாரி வடிவம் அன்று; இவ்வுலகுக்கு எல்லாம் அச்சாணி என்று சொல்லக்கூடிய மிகவும் மேம்பட்ட திறமை உடையவன் என்று ஐயமின்றித் தெரிந்து கொண்டேன்; அஃது உண்மையாதலை நீயும் பின்பு காண்பாய் என்று இராமபிரான் கூறினான் .
****************
238.அனுமன் விடை
3771. ‘மாதிரப் பொருப்போடு ஓங்கு வரம்பு
இலா உலகில்,மற்றுப்
பூதரப் புயத்து வீரர் நும்
ஒக்கும் புனிதர் யாரே?
ஆதரித்து அவனைக் காண்டற்கு அணுகினிர்
என்னின்,அன்னான்,
தீது அவித்து அமையச் செய்த,செய்
தவச் செல்வம் நன்றே!
திசைகளின் எல்லைகளில் உள்ள சக்கரவாளகிரி என்னும் மலையோடுஎல்லையில்லாமல் விரிந்து கிடக்கும் உலகத்தில்பூமியைத் தாங்கும் மலைபோன்ற (உலகத்தைத் தாங்கும்) தோள்களையுடைய வீரர்களாகிய உங்களுக்குத் சமமானவர் எவருமிலர். அச்சுக்கிரீவனிடத்து அன்பு காட்டி அவனைக் காண்பதற்க நீங்கள் இங்கு வந்தீர்கள் என்றால் சுக்கிரீவன் செய்த தவம் பெரிதே !
(பெருந்தவம் செய்திருந்தாலன்றி இராமபிரானைக் காணும் பேறு பெறாமையின் ‘தீது அவித்து அமையச் செய்த செய்தவச் செல்வம் நன்றே’என்றான்.)
*****************
239.வாலி- சுக்ரீவன் பகைமைப்பற்றி அனுமன் அளித்த செய்தி
3772. ‘இரவிதன் புதல்வன் தன்னை,
இந்திரன் புதல்வன் என்னும்
பரிவுஇலன் சீற,போந்து,
பருவரற்கு ஒருவன் ஆகி,
அருவிஅம் குன்றில்,என்னொடு
இருந்தனன்;அவன்பால் செல்வம்
வருவது ஓர் அமைவின் வந்தீர்;
வரையினும் வளர்ந்த தோளீர்!
மலையினும் பெரிதாக வளர்ந்த தோள்களை உடையவர்களே! சூரியன் மகனாகிய சுக்கிரீவனை இந்திரன் மகன் என்று கூறப்படும் இரக்கமற்றவனாகிய வாலி என்பவன் சினந்து துரத்தியதால் அஞ்சி வந்து தனியே அருவிகள் பாய்கின்ற ருசியமுகம் என்னும் இம் மலையில் என்னோடு தங்கியிருக்கிறான்; அவனிடத்து செல்வம் வருதற்குரிய நல்ல காலம் (நீங்கள் இங்கு) வந்தீர்கள்.
(இராமலக்குவர் வந்ததால் இனிச் சுக்கிரீவன் இழந்த செல்வத்தைப் பெறுவன் என்பதாம்).
****
240.லெட்சுமணன் தங்கள் யார் என்று சொல்லும் மூன்று பாடல்கள் இதோ :
3776. ‘சூரியன்மரபில் தோன்றி,
சுடர் நெடு நேமி ஆண்ட
ஆரியன்;அமரர்க்காக
அசுரரை ஆவி உண்ட
வீரியன்;வேள்வி செய்து
விண் உலகோடும் ஆண்ட
காரியன்;கருணை அன்ன
கண்ணன் அக் கவிகை மன்னன்;
அந்த வெண்கொற்றக் குடையை உடைய அரசன் (தயரதன்) சூரிய குலத்தில் தோன்றி, பெரிய ஆணைச் சக்கரத்தை உடையவனாய் உலக முழுவதும் ஆட்சி செலுத்திய உயர்ந்தோன்; தேவர்கள் பொருட்டு சம்பரன் முதலிய அசுரர்களை வென்று உயிரைப் பறித்த வீரம் உடையவன்;பல வேள்விகளைச் செய்து மண்ணுலகத்தோடு விண்ணுலகத்தையும் ஆட்சி புரிந்த செயல்திறம் படைத்தவன்; அருளே வடிவு எடுத்தாற் போன்ற குணம் உடையவன்;
3777. ‘புயல் தரு மதத் திண் கோட்டுப்
புகர் மலைக்கு இறையை ஊர்ந்து,
மயல் தரும் அவுணர் யாரும்
மடிதர,வரி வில் கொண்ட,
இயல் தரும் புலமைச் செங்கோல்
மனு முதல் யாரும் ஒவ்வாத்
தயரதன்;கனக மாடத் தட
மதில் அயோத்தி வேந்தன்;
மலைகள் போன்ற யானைகளுக்குத் தலைவனாகிய தயரதன், மதி மயக்கம் கொண்ட அசுரர்கள் எல்லாம் அழியும்படி வில்லைக் கொண்டு போர் செய்தான். அறிவினையும் செங்கோலையும் உடைய மனு முதலான எந்த அரசர்களும் தயரதனுக்கு நிகர் ஆகமாட்டார் பொன் மயமான மாளிகைகளையும்;, பெரிய மதிலையும் உடைய அயோத்தி நகரத்திற்கு வேந்தனாவான்.
3778. ‘அன்னவன்சிறுவனால்,இவ்
ஆண்தகை;அன்னை ஏவ,
தன்னுடைய உரிமைச் செல்வம்
தம்பிக்குத் தகவின் நல்கி,
நல் நெடுங் கானம் சேர்ந்தான்;
நாமமும் இராமன் என்பான்;
இந் நெடுஞ் சிலைவலானுக்கு ஏவல்
செய் அடியென் யானே.’
இந்த வீரர்களிற் சிறந்தவன் அந்தத் தயரத சக்கரவர்த்தியின் மகனாவான்; தன் சிற்றின்னையின் கட்டளையால் மூத்த மகனாகிய தனக்கு உரிமையுடைய ஆட்சிச் செல்வத்தை தன் தம்பியாகிய பரதனுக்குப் பெருந்தன்மையோடு கொடுத்து விட்டு, நெடிய காட்டை அடைந்தான்; அவன் பெயர் இராமன்; அப்பேற்பட்ட வில்லாற்றல் பொருந்தியவனுக்கு குற்றேவல் செய்கின்ற அடியவன் யான்’
இம்மூன்று பாடல்களால் தன் தமையனைப் பற்றியும் தன்னைப் பற்றியும் உணர்த்தினான் இலக்குவன்.
london swaminathan picture from 100 year old book.
WRITTEN BY R. SESHADRINATHAN
Post No. 16,357
Date uploaded in London – 30 October 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
This is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
கிஷ்கிந்தா காண்டம்-ஓர் ஆய்வு – 35
(ஆர், சேஷாத்ரிநாதன்)
சுக்ரீவனின் சந்தேகம்
-‘सखा सोच तोरे’ என்று சொல்வதன் மூலம் இராமன் சுக்ரீவனிடம் எனது புஜபலத்தின் மீது நம்பிக்கை வைத்து உனது கவலையை விடு. நான் உனக்கு எல்லா வகைகளிலும் உதவி செய்வேன் என்று ஆறுதலளித்தான். இங்குதான் சுக்ரீவனுக்குச் சந்தேகம் வருகிறது. இவர் வாலியின் பலத்தை அறியாமல் அவனைக் கொல்வேன் என்று வாக்களித்துள்ளாரே? இவரை எப்படி நம்புவது என்று குழப்பத்தில் ஆழ்ந்தான்.
* कह सुग्रीव सुनहु रघुबीरा। बालि महाबल अति रनधीरा॥
दुंदुभि अस्थि ताल देखराए। बिनु प्रयास रघुनाथ ढहाए॥6॥
அதைக் கேட்ட சுக்ரீவன் “இரகுநாதரே! வாலியைச் சாதரணமாக எண்ணி விடாதீர்கள் அவன் மிகவும் வலிமை உடையவன்; களத்தில் நிலைத்து நிற்க்கக் கூடிய போர் வீரன்; “ என்றான். பிறகு அவன் துந்துபி அரக்கனின் எலும்பு மலையையும், ஏழு மராமரங்களையும் இராமனுக்குக் காண்பித்து “இந்த மலையை ஒரே உதையால் சாய்த்துத் தள்ளக் கூடியவரும், இந்த ஏழு மராமரங்களையும் ஒரே அம்பால் துளைக்க வல்லவரும் தான் வாலியை வெல்ல முடியும்” என்று கூறினான்.
வால்மீகி இராமாயணத்தில் வாலி துந்துபியின் உடலை ஒரு யோசனை தூரம் தூக்கி எறிந்தான். िक्षेप वेगवान्वाली वेगेनेकेन योजनम्। என்றும் ஆனால் இப்போது அவனது எலும்புக் கூட்டைக் கூட யாராலும் தூக்க முடியாது என்றும் அதுபோல அங்கிருந்த ஏழு மரங்களை உலுக்கி அவைகளை இலைகள் அற்றவையாக ஆக்கிவிடுவான் என்றும் அந்த எலும்புக் கூட்டை அசைத்தாலோ அந்த மரங்களில் ஏதாவது ஒன்றையாவது பாணத்தினால் துளைத்தால் தங்களால் வாலியைக் கொல்ல முடியும் என்று நான் நம்புவேன் என்றான்,
ஆத்யாத்ம இராமாயணத்தில் सुग्रीवो5प्याह राजेन्द्र वाली बलवतां बली। कथं हनिष्यति भवान्देवैरपि दुरासदम्॥’ (अध्यात्म० १। ६०) என்று சொல்லப்பட்டுள்ளது. அதாவது சுக்ரீவன் கேட்கிறான் “இராகவா! ूरश्च शूरमानी च प्रख्यातबलपौरुष: । बलवान्वानरो वाली संयुगेष्वपराजित: ॥’ दृश्यन्ते चास्य कर्माणि दुष्कराणि सुरैरपि॥’ வாலி எல்லோரையும் விட சிறந்த பலசாலி, தேவர்கள் கூட அவனுடன் மோதுவதற்குத் தயங்குவாரகள். தாங்கள் எப்படி அவனை வெல்வீர்கள்?
சுக்ரீவன் இராமனுக்கு வைத்த தேர்வு
இலக்ஷ்மணன் சுக்ரீவனிடம் கேட்கிறான். “எதைச் செய்தால் உங்களுக்கு இராமனின் மீது நம்பிக்கை வரும் என்று. சுக்ரீவன் உடனே துந்துபியின் எலும்புக் கூட்டைக் காட்டி இந்த எலும்புக் கூட்டை காலால் இரு நூறு விற் கடை தூரம் ஏறிய வேண்டும் स्मिन्कर्मणि निर्व॑त्ते श्रद्ध्या वालिनो वधम्॥ हतस्य महिषस्यास्थि पादेनैकेन लक्ष्मण। उद्यम्य प्रक्षिपेच्चापि तरसा द्वे धनु:शते॥’ என்கிறான். ஆனால் துளசிதாசர் இது பற்றி விவரங்கள் ஏதும் எழுதவில்லை. துளசிதாசர் बिनु प्रयास என்ற பதத்தைப் போடுகிறார். அதாவது இராமன் எந்தவித சிரமமுமில்லாமல் தனது கால் கட்டை விரலால் பத்து யோசனை தூரம் துந்துபியின் எலும்புக்கூட்டை தூக்கி எறிந்தார் என்று சொல்கிறார் துளசிதாசர்.
அவன் இராமனிடம் “ சண்டையில் வாலி களைத்துப் போயிருந்தான். அப்போது அந்த எலும்புகூட்டில் மாமிசம் இருந்தது. அதனால் எடை அதிகமாக இருந்தது. ஆனால் தாங்கள் தூக்கி எறிந்தது மாமிசமற்ற வெறும் எலும்புக்கூடு. இதைவைத்து வாலியைவிட தாங்கள் பலசாலி என்று எவ்வாறு கருதுவது? ஆதலால் இந்தச் சால மரங்களில் ஒன்றையாவது தங்களது பாணத்தினால் துளைத்தால் தாங்கள் வாலியை விட பலசாலி என்று ஏற்றுக் கொள்வேன்” என்றான்.
இராமன் எந்தவித சிரமுமின்றித் தனது கால் கட்டை விரலால் அவ்வெலும்பு மலையைத் தூக்கி எறிந்துவிட்டு ஒரே பாணத்தால் ஏழு மராமரங்களையும் துளைத்தெடுத்தான். அந்த பாணம் மரங்களைத் துளைத்து எல்லா உலகங்களுக்கும் சென்று மீண்டும் இராமனின் அம்புறாத் துணிக்கு வந்து சேர்ந்தது. இங்கு ஒரு கதை சொல்லப்படுகிறது.
வாலி ஒரு முறை வனத்திற்குச் சென்றபோது அங்கு சால மரத்தில் பழுத்திருந்த ஏழு பழங்களைப் பறித்துக் குளத்தின் கரையில் வைத்துவிட்டு நீராடச் சென்றான். குளித்து விட்டு வெளி வந்தபோது அவன் கண்ட காட்சி அவனை திடுக்கிடச் செய்தது. ஒரு கொடிய பாம்பு அந்த பழங்களின் மீது அமர்ந்து அவற்றைச் சேதப்படுத்திக் கொண்டிருந்தது. இதைக் கண்ட வாலி கோபம் கொண்டு நீ மரங்களாகக் கடவாய். பின்னொரு நாள் ஒருவன் ஒரே பணத்தால் உன்னைச் சிதைப்பான் என்று சபித்தான். பாம்பின் தந்தையான தக்ஷன் சீற்றம் கொண்டு எவன் ஒரே பாணத்தால் அந்த மரத்தைச் சிதைக்கிரானோ அந்த பணத்தாலாயே நீ மரிப்பாய் என்று சபித்தது.
மற்றொரு வரலாறும் சொல்லப்படுகிறது.. அதாவது சால மரங்களுக்குப் பதில் ஏழு தென்னை மரங்கள் என்று சொல்லப்படுகிறது. அதாவது வாலி சந்தோஷப்படும் சமயம் தென்னை மரங்களை உலுக்குவது வழக்கமாம். அப்போது அந்த மரத்து காய்கள் கீழே இறந்து கிடக்கும் துந்துபியின் உடல் மீது வேகமாக வந்து விழுமாம். அப்படி விழுவதால் துந்துபியின் ஆன்மாவுக்கு கோபம் வந்தது, இதைக் கண்ட வனதேவதை எவனொருவன் தனது ஒரே பாணத்தால் இந்த ஏழு மரங்களைத் துளைக்கிரானோ அவனது ஒரே பாணத்தால் வாலி கொல்லப்படுவான் என்று சபித்தது.
இராமனைப் புகழும் சுக்ரீவன்
देखि अमित बल बाढ़ी प्रीती। बालि बधब इन्ह भइ परतीती॥
இராமனின் வலிமையைக் கண்டதும் சுக்ரீவனின் மனதில் இராமனிடம் மேலும் அன்பு அதிகரித்தது. அவர் வாலியை நிச்சயம் வதம் செய்து விடுவார் என்ற நம்பிக்கை அவனுக்குத் தோன்றியது.
இங்கு देखि अमित बल” என்கிற பதப் பிரயோகம் செய்கிறார் துளசிதாசர்.. இலக்ஷ்மணன் தாடகை, கர தூஷண, மாரீசன், விராதன் கபந்தன் ஆகியோர் இராமனின் மூலமாக கொல்லப்பட்ட வீர வரலாற்றை சொல்லக் கேட்டிருக்கிறான் लछिगमन रामचारित सब भ्राषा। பிறகு இராமன் தனது வாயால் தனது பலத்தைப் பற்றிச் சொல்வதையும் கேட்டுள்ளான் சுக்ரீவன். सुनु सुग्रीव मारिहों बालिहि एकाहि बान। ब्रह्म रुद्र सरनागत गए न उबारिहि प्रान. ஆனாலும் அவன் மனதில் ஒரு திருப்தி ஏற்படவில்லை. ஆனால் எப்பொழுது இராமன் துந்துபியின் சடலத்தை பத்து யோசனை தூரம், கால் கட்டை விரலால் எந்தவித சிரமும் இல்லாமல் வீசினானோ, எப்பொழுது ஏழு சால மரங்களையும் தனது ஒரே பாணத்தால் துளைத்தானோ, அப்பொழுது சுக்ரீவன் இராமனின் பலத்தை நோக்கினான். அவன் இராமனைப் புகழ்ந்து பேசுவதை வால்மீகி இவ்வாறு தெரிவிக்கிறார்.
स इन्द्रान् अपि सुरान् सर्वाम् त्वम् बाणैः पुरुषर्षभ |
बाणेन एकेन काकुत्स्थ स्थाता ते को रण अग्रतः || ४-१२-९
अद्य मे विगतः शोकः प्रीतिर् अद्य परा मम |
सुहृदम् त्वाम् समासाद्य महेन्द्र वरुणोपमम् || ४-१२-१०
இதற்கு முன் வாலியை மகா பலசாலி बालि महाबल अति रनधीरा। என்று சொன்னவன் இப்பொழுது இராமனை அதிபலசாலி अमित बल என்று அழைக்கிறான். இப்பொழுது இராமன் மீது இன்னும் மரியாதையும் அன்பும் ஏற்படுகிறது.
बार-बार नावइ पद सीसा। प्रभुहि जानि मन हरष कपीसा॥7॥
उपजा ग्यान बचन तब बोला। नाथ कृपाँ मन भयउ अलोला॥
அவன் மீண்டும் மீண்டும் இராமனது திருவடிகளை வணங்கினான். பகவானை அடையாளம் கண்டு கொண்ட சுக்ரீவனின் மனம் மகிழ்ச்சியால் நிரம்பியது. “ஐயனே! எனக்கு அறிவு பிறந்தது. தங்களின் கிருபையால் என் மனம் ஒரு நிலைக்கு வந்தது.” என்றான். இறைவனை அடையாளம் கண்டுகொண்ட பிறகு அவனை மீண்டும் மீண்டும் வணங்குவது சிறப்பானது. பரவசத்தின் உச்ச நிலையைக் காட்டுகிறது.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
24-10-26 கல்கி ஆன் லைன் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை!
மூளைத் திறனைக் குறைக்கும் குப்பை! பிரின்ஸ்டன் ஆய்வு சொல்வது என்ன?
ச. நாகராஜன்
வீட்டிலோ அல்லது ஒரு நிறுவனத்திலோ வேலை பார்க்கும் போது நம்மைச் சுற்றி குப்பை கூளம் அதிகமாக இருப்பதாக அடிக்கடி உணர்கிறோமல்லவா?
இந்த வேண்டாத பொருள்கள் நம் மன நிலையையும் பாதிக்கும் என்று இப்போதைய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
பிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்தில் உள்ள நியுரோஸயின்ஸ் இன்ஸ்டிடியூட்டில் fMRI ஸ்கானை வைத்து நடத்தப்பட்ட ஒரு ஆய்வு அதிசயமான முடிவுகளைத் தெரிவிக்கிறது. மனித மூளைக்கு எதிலும் ஒரு ஒழுங்கு, நேர்த்தி இருப்பது தான் பிடிக்குமாம். குப்பை கூளங்கள், வேண்டாத பொருள்கள் தேவையற்று நம்மைச் சுற்றி இருப்பதானது நமது மூளையை களைப்படையச் செய்து கவனமின்மையை ஏற்படுத்தி மூளைத் திறனைக் குறைக்கிறதாம். சோதனையில் பங்கேற்றவர்கள் தேவையற்ற பொருள்களைத் தூக்கி எறிந்துவிட்டு வேலை பார்க்க ஆரம்பித்த போது அவர்கள் மூளைத்திறன் கூடி அதிக கவனத்துடன் வேலை பார்க்க ஆரம்பித்தனர். அவர்களது உற்பத்தித் திறனும் கூடியது.
இப்படி தேவையற்ற பொருள்களின் “கூட்டமானது” ஒருவரை எந்த வேலையிலும் முழுமனதுடன் ஈடுபடச் செய்யாமல் “அப்புறம் செய்யலாம்” என்ற மன நிலையை உருவாக்குகிறது.
தேவையற்றதைத் தூக்கி எறி என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லி உலகினருக்கு ஒரு புது உத்வேகம் கொடுத்தவர் மேரி கோண்டோ.
9-10-1984ல் ஜப்பானில் ஒஸாகாவில் பிறந்த மேரி, ‘கோன்மாரி வழி’ என்ற புதிய வழியை உலகிற்கு அளித்தார். அதாவது தேவையற்ற பொருள்களை அகற்றும் விதத்தை இவர் நேரில் பல வீடுகளுக்கும் சென்று காண்பித்து அவர்கள் வாழ்வை மேம்பட வைத்தார். 2015ம் ஆண்டு டைம் தனது முக்கியமான நூறு பேர்கள் பட்டியலில் இவர் பெயரையும் சேர்த்தது.
நான்கு புத்தகங்களை இவர் எழுதியுள்ளார். ஒவ்வொன்றும் லட்சக்கணக்கில் விற்பனை ஆனது. இளம் வயதிலேயே மற்ற தோழிகள் விளையாடச் செல்லும் போது இவர் பள்ளியில் உள்ள அனைத்தையும் ஒழுங்குபடுத்தி வைப்பாராம். ஒருநாள் நரம்புகள் சுண்டி இழுக்க இவர் சுயநினைவை இழந்து கீழே விழுந்தார். சுமார் இரண்டு மணி நேரம் நினைவே இல்லை. திரும்பி சுயநினைவு வந்த போது ஒரு அசரீரி இவருக்குக் கேட்டது. அந்த அசரீரியின் படி தனக்கு அருகில் இருந்தவற்றை இவர் கூர்ந்து கவனித்தபோது தான் இவரது தவறு இவருக்குப் புலப்பட்டதாம். தேவையற்ற பொருள்களைத் தூக்கி எறிவதை விட மனமகிழ்ச்சி தரும் பொருள்களை அருகில் வைத்திருக்க வேண்டும் என்ற படிப்பினையை இவர் பெற்றாராம்.
ஆகவே மன நிம்மதியை வேண்டும் அனைவரும் முதலில் தாங்கள் வாழும் இடத்தை ஒழுங்கு படுத்த வேண்டும் என்பது தான் மேரி கோண்டா வழி.
மிக மிக தேவையான பொருள்களை அதனதன் தேவைக்கும் முக்கியத்திற்கும் தக்கபடி அடுக்கி வரிசையாக வைக்க வேண்டும்.
தேவையற்ற பொருள்களைத் தூக்கி எறிய வேண்டும்.
ஒரு எளிய வழி நமது புத்தகங்கள், துணிகள், சொந்த குறிப்புகள், போட்டோக்கள் உள்ளிட்ட அனைத்தையும் சேகரித்து அவற்றைத் தனித்தனியே அடுக்கி வைத்து அன்றைய தேதியையும் அந்தந்தப் பெட்டியின் மேல் குறிப்பிட வேண்டும். சரியாக ஒரு வருடத்திற்குப் பின்னர் அவற்றைப் பார்த்தால் எவை தேவையற்றவை என்பது நமக்குப் புரிந்து விடும். உடனே அவற்றைத் தூக்கி எறிந்து விடலாம். சிலர் அன்றாட பால் பாக்கட்டுகள், தினசரி செய்தித்தாள்கள் உள்ளிட்டவற்றை சேகரித்து வைப்பார்கள் – அதை வெளியில் விற்றால் கிடைக்கும் சொற்பத் தொகைக்காக. இது அவர்க:ளை எவ்வளவு பெரிய அளவில் பாதிக்கும் என்பது அவர்களுக்குத் தெரியாது.
ஒரு ரூபாயைச் சேர்க்கப் போய் நூறு ரூபாயை இழந்த கதை தான்.
சுத்தமான சுற்றுப்புறம் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். அன்றாட கழிவுப் பொருள்களை உரிய முறையில் அகற்றுவது சமூகத்தை மேம்படச் செய்ய நாம் செய்யும் உதவியும் ஆகும்.
இந்த மேரி கோண்டோ வழி ஒரு நாளையப் பயணம் அல்ல; இது நீண்ட பயணம்- வாழ்நாள் முழுதும் செல்லக்கூடிய பயணம்.
இதனால் கிடைக்கும் ஆதாயமோ சொல்லவொண்ணா மகிழ்ச்சி, திறம்பட்ட வேலை செய்யும் சுகம், மனமகிச்சி தரும் வீட்டுச் சூழ்நிலை உள்ளிட்டவையே.
செய்து பார்த்தால் பலன் தெரியும்; எப்போது ஆரம்பிக்கலாம்.