ராமாயணத்தில் வரங்கள் 75 –  பிரம்மஹத்திக்கு தேவதைகள் வரம் அளித்தது! (Post.16,250)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 16,250

Date uploaded in London – 29 September 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ராமாயணத்தில் வரங்கள் 75 –  பிரம்மஹத்திக்கு தேவதைகள் வரம் அளித்தது!

ச. நாகராஜன் 

உத்தரகாண்டத்தின் எண்பத்தாறாவது ஸர்க்கமாக அமைவது ‘இந்திரன் பிரம்மஹத்தியிலிருந்து விடுதலை பெறுவது ’ என்னும் ஸர்க்கமாகும்.

லக்ஷ்மணர் ஶ்ரீ ராமரிடம் அஸ்வமேத யாகத்தைச் செய்யுமாறு சொல்லி, ராமரிடம் விருத்ராசுரனின் சரிதத்தைக் கூறலானார்

விருத்ரன் என்ற அசுரன் தனது கடும் தவத்தினால் உலகை இன்புறச் செய்ய இதனால் இந்திரன் மிகுந்த பயத்தை அடைந்தான். அவன் விஷ்ணுவிடம் வேண்ட அவரும் விருத்ராசுரனை வதம் செய்ய உபாயம் கூ/றினார்.

விருத்ராசுரன் இந்திரனால் வதம் செய்யப்பட அவனை பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக் கொண்டது.

இந்திரனைப் புனிதனாக்கும் பொருட்டு தேவகணங்கள் அசுவமேதயாகத்தைத் தொடங்கினர். யாகத்திலிருந்து பிரம்மஹத்தி எழுந்தது. தேவர்களிடம் அது, “நீங்கள் எனக்கு இனி நான் இருக்குமிடத்தைச் சொல்ல வேண்டும்” என்று கேட்க தேவர்கள், “நீயாகவே உன்னை நான்கு பகுதியாகப் பிரித்துக் கொண்டு வசிக்கலாம்” என்றனர். உடனே பிரம்மஹத்தியானவள் தனக்குத் தானே தன் இடத்தை ஏற்படுத்திக் கொண்டாள்.

ஏகேநாம்ஷேன வத்ஸ்யாமி பூர்ணோதாசு நதீஷு வை |                 சதுரோ வார்ஷிகாந்மாஸாந்தர்பக்னீ காமசாரிணீ ||

சதுர: –  நான்கு                                                        வார்ஷிகான் – மழைகால                                              மாஸான் – மாதங்களில்                                                  பூர்ணோதாசு – வெள்ளப்பெருக்கெடுத்து வருகின்ற                             நதீஷு – நதிகளில்                                                          ஏகேன அம்சேன வை – ஒரு அம்சத்தினால்                                 தர்பக்னீ – கொட்டத்தை அடக்குகிறவளும்                                           காமசாரிணீ – எனக்கு இஷ்டமான இடத்தில் வசிக்க உரிமை உடையவளுமான நான் வசிப்பேன்

பூம்யாஹம் சர்வகாலமேகேனாம்சேன துர்வஸா |                         வஸிஷ்யாமி ந சந்தேஹ: சத்யேனைஹம்ப்ரவீமி  வ: ||

துர்வஸா – எங்கிருந்தாலும் அஸஹ்யமாக இருக்கும்                               அஹம் – நான்                                                        சர்வேகாலம் – எக்காலத்திலும்                                               ஏகேன அம்சேன – ஒரு அம்சத்தால்                                             பூம்யாம் – பூமியில்                                                         வஸிஷ்யாமி – வாசம் செய்வேன்                                               ந சந்தேஹ: – இதில் ஐயமில்லை                                          வ: – உங்களுக்கு                                                                  ஏதத்- இதை                                                                     சத்யேன – பிரமாணமாய்                                                     ப்ரவீமி – சொல்லுகிறேன்

யோயம்சமஸ்த்ருதீயோ மே ஸ்த்ரீஷு யௌவனசாலிஷு |                           த்ரிராத்ரம் தர்பபூர்ணாசு வஸிஷ்யே தர்பதாதினீ ||

மே – என்னுடைய                                                    த்ரூதீய – மூன்றாவது                                                   அம்ச: – அம்சமானது                                                     ய: – எதுவோ                                                               அயம் – இதுவும்                                                                தர்பதாதினீ – கொட்டத்தை அடக்குகிறவளுமான நான்                        யௌவனசாலிஷு – யௌவன பருவத்தில் இருக்கின்றவர்களும்      தர்பபூர்ணாஷு – பூப்படைந்திருக்கின்றவர்களுமான                       ஸ்த்ரீஷு – ஸ்த்ரீகளிடத்தில்                                                த்ரிராத்ரம் – மூன்று இரவுகள்                                    வஸிஷ்யே – வசிப்பேன்

ஹந்தாரோ ப்ராஹ்மணான்யே து ம்ருஷாபூர்வமதூஷகான் |       தாம்ஸ்சதுர்தேன பாகேன சம்ஸ்ரயிஷ்யே சுரர்ஷபா: ||

சுரர்ஷபா: – தேவோத்தமர்காள்!                                          சதுர்தேன – நான்காவது                                               பாகேன – அம்சத்தால்                                                          அதூஷகான் – தூஷணைக்கிடமாகாத                                           ப்ராஹ்மணான் – பிராமணர்களை                                         ம்ருஷாபூர்வ – நிஷ்காரணமாய்                                              ஹந்தார: – துன்புறுத்துகிறவர்கள்                                               யே ச – எவர்களோ                                                                   தான் து – அவர்களிடத்தில்                                                   சம்ஸ்ரயிஷ்யே – நான் குடிகொண்டு வசிப்பேன்

ப்ரயூசுஸ்தாம் ததோ தேவா யதா வதஸி துர்வஸே |                          ததா பவது தத்சர்வே சாதயஸ்வ யதீப்ஸிதம் |   

உத்தரகாண்டம், எண்பத்தாறாவது ஸர்க்கம், ஸ்லோக எண்கள் 13,14,15,16

தத: – அதன் மேல்                                                      தேவா: – தேவர்கள்                                                                     தாம் – அவளுக்கு                                                  ப்ரத்யுசு: – இப்படி பதில் அளித்தார்கள்                                         துர்வஸே – எங்கிருந்தாலும் அஸஹ்யமாயிருக்கும் மாதே!                         யதா – எப்படி                                                         வதஸி – சொன்னாயோ                                                             ததா – அப்படியே                                                                     பவது – இருக்கட்டும்                                                     ஈப்ஸிதம் – உத்தேசம்                                                         யத் – எதுவோ                                                           தத்சர்வ – அதெல்லாவற்றையும்                                                      சாதயஸ்வ – செய்து முடிப்பாயாக!

உத்தரகாண்டம், எண்பத்தாறாவது ஸர்க்கம், ஸ்லோக எண்கள் 17

இப்படியாக பிரம்மஹத்தியானவள் தான் வசிக்கும் நான்கு இடங்களைத் தானே தேர்ந்தெடுத்துச் சொல்ல அதை தேவர்கள் அப்படியே ஆமோதித்து அப்படியே ஆகட்டும் என்று கூறினார்கள்.

இது பிரம்மஹத்தி தானாகக் கேட்டுப் பெற்ற வரம்.

வரம் என்ற சொல் இங்கு வராவிட்டாலும் தேவர்களிடம் பிரம்மஹத்தி பெற்ற இதை, வரம் தான் என்று சொல்லலாம்.

**

அக்டோபர் 2026 காலண்டரில் கபீர்தாசர் பொன்மொழிகள் (Post.16,249)

Written by London Swaminathan

Post No. 16,249

Date uploaded in London – 28 September 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

கபீர்தாசர் (Kabir Das) 15-ஆம் நூற்றாண்டில் (கி.பி. 1440 – 1518) வாரணாசியில் வாழ்ந்த புகழ்பெற்ற இந்திய ஆன்மிகக் கவிஞரும், பக்தி இயக்கப் பெரியாரும் ஆவார்.இஸ்லாமிய நெசவாளர் குடும்பத்தில் வளர்க்கப்பட்டார்.குரு: ராமானந்தர்.சமய ஒற்றுமையை போதித்தார் .

கபீர்தாசர் பொன்மொழிகள்

பண்டிகை தினங்கள்

அக். 2-காந்தி ஜெயந்தி;10-மஹாளய அமாவாஸ்யை; 11- நவராத்ரி ஆரம்பம் ; 18-துர்கா பூஜை ; 19-சரஸ்வதி பூஜை,

20-விஜய தசமி /தசரா; 21- மத்வ ஜயந்தி, 28/29- கர்வா சவுத் .

அமாவாஸ்யை/- அக்.10; பூர்ணிமா/-25;

ஏகாதசி- ஹிந்து உண்ணாவிரத நாட்கள் – 6 & 22;

சுப முகூர்த்த தினங்கள் – அக்டோபர் 25 & 30, 2026.

***

அக்டோபர் 1 வியாழக் கிழமை  

உன் பாதையில் முள் விதைப்பவனுக்கு  நீ பூவை விதை;

உனக்கு முள் பூவாகும்; அவனுக்கு பூ சூலமாகும் .

***

அக்டோபர் 2 வெள்ளிக் கிழமை  

சலனமே இல்லாத மனதே சங்கீதம் ; அந்த மனதுக்கு அப்பால் வருவது தியானம்;  அது மூலத்துக்கு இழுத்துச் செல்லும்;

அதுதான் எல்லா ஒலிகளுக்கும் ஆதாரம்

***

அக்டோபர் 3 சனிக்கிழமை  

ஆ , ரகசிய சொல்லை எப்படி விளக்குவது என்று தெரியவில்லையே ; அவன் இது இல்லை, அவன் அது இல்லை என்று சொல்ல முடியுமா ? அவன் என்னுள்ளே இருக்கிறான் என்றால் உலகம் நம்பாது; அவன் என்னிடம் இல்லை என்று சொன்னால் அது பொய் ஆகும்; உள்ளுக்கும் வெளிக்கும் இடையே பிரிவுச் சுவர் இல்லை; அவன் உருவமுள்ளவன் ; உருவமில்லாதவன் ; அவனை வருணிக்க வார்த்தைகளே கிடைக்கவில்லை

***

அக்டோபர் 4 ஞாயிற்றுக் கிழமை  

என் பெயர் கபீர்  இதை உலகம் அறியும்

மூன்றுலகிலும் என் பெயர் உண்டு ;

என் வீடு ஆனந்த மயம்

***

அக்டோபர் 5 திங்கட் கிழமை   

ஓ கபீர்! பொய்யுரை பேசாதே,

ஓரிமைப்பொழுதில் நடப்பதை யார் அறிவார் ?

***

அக்டோபர் 6 செவ்வாய்க்கிழமை  

ஓ கபீர்!  நீர்த்துளி கடலில் கலந்ததை யாவரும் அறிவர்;

கடல், துளியில் கலந்ததை சிலரே அறிவர்!

***

அக்டோபர் 7 புதன் கிழமை

புறக் கண்கள் புதைந்தன, அகக் கண்களும் அழிந்தன

எல்லாம் போனபின் என்னதான் தெரியும்?

***

அக்டோபர் 8 வியாழக் கிழமை  

“விரலில் உருளுமே மணி அக்கு, நாவில் புரளுமே செம்மந்திரம்

வீணில் திரியுமே மனம் அங்கு, நவில்வரே இதனை செபமென்று”

***

அக்டோபர் 9 வெள்ளிக் கிழமை   

தண்ணீரில் ஓடும் மீனுக்கு தாகம் எடுக்கிறது என்று சொல்லும்போது நான் சிரிக்கிறேன்;

கடவுளைக் காண்பதற்காக யாத்திரை போகிறோம் என்று சொல்லும்போது நான் சிரிக்கிறேன்..

***

அக்டோபர் 10 சனிக்கிழமை  

“நான் எப்போது இருந்தேனோ, அப்போது இறைவன் இல்லை; இப்போது இறைவன் இருக்கிறான், அதனால் ‘நான்’ (அகங்காரம்) மறைந்துவிட்டேன்.”

• பொருள்: மனிதனின் மனதில் ‘நான்’ என்கிற அகங்காரமும் ஆணவமும் இருக்கும் வரை அங்கே இறை சிந்தனைக்கு இடமில்லை. அகந்தை அழியும் போதே இறைவனைக் காண முடியும்.

***

அக்டோபர் 11 ஞாயிற்றுக் கிழமை   

“நாளை செய்ய வேண்டியதை இன்று செய்; இன்று செய்ய வேண்டியதை இப்பொழுதே செய். அடுத்த கணத்தில் என்ன நடக்கும் என்று யாருக்குத் தெரியும்?”

***

அக்டோபர் 12 திங்கட் கிழமை   

“உன்னுடைய அகந்தையைத் தூர எறிந்துவிட்டு, பிறருக்குக் கேட்கும் போது இன்பம் தரும் இனிமையான சொற்களைப் பேசு. அது கேட்பவர்களுக்கும் மகிழ்ச்சியைத் தரும், உன்னுடைய மனதிற்கும் குளிர்ச்சியைத் தரும்.”

***

அக்டோபர் 13 செவ்வாய்க்கிழமை   

“பெரிய பெரிய புத்தகங்களைப் படித்து இந்த உலகத்தில் பலர் மடிந்துவிட்டனர். ஆனால் யாரும் உண்மையான பண்டிதர் (ஞானி) ஆகவில்லை. எவன் ஒருவன் ‘அன்பு’ என்ற இரண்டெழுத்து மந்திரத்தை முழுமையாக உணர்கிறானோ, அவனே உண்மையான ஞானி.”

***

அக்டோபர் 14 புதன் கிழமை

என்னுள்ளே சூரியன் இருக்கிறான்; சந்திரனும் கூடத்தான் !

***

அக்டோபர் 15 வியாழக் கிழமை   

கங்கையும் யமுனையும் சங்கமம் ஆவது போல அன்பும் பற்றின்மையும் கலக்கும் இதயம் உடையவனே உண்மையான பக்தன்

***

அக்டோபர் 16 வெள்ளிக் கிழமை

ஒவ்வொரு வீட்டிலும் கடலே இருக்கிறது ;

தண்ணீரைத் தேடி அலைவது ஏன் ?

தாகம் உள்ளவன் எப்படியாவது குடிப்பான்.

***

அக்டோபர் 17 சனிக்கிழமை  

நீ எங்கே இருக்கிறாயோ , அதுதான் ஆரம்பம் ; அதுதான் வாசல்

***

அக்டோபர் 18 ஞாயிற்றுக் கிழமை

நான் கெட்டவன் ஒருவனைக் கண்டுபிடிக்கப் புறப்பட்டேன் ; யாரும் கிடைக்கவில்லை !

என்னை நானே பார்த்துக்கொண்டபோது எல்லோரையும்விட கெட்டவன் நானே என்று அறிந்தேன் .

****

அக்டோபர் 19 திங்கட் கிழமை   

ஒரு யாத்திரை போக வேண்டமென்ற அவா உள்ளத்தில் பெருக்கெடுத்தது ;

 மூன்று நாள் சும்மா உடகார்ந்து இருந்தேன்; கடவுள் என்னிடம் வந்துவிட்டார்

xxxx

அக்டோபர் 20 செவ்வாய்க்கிழமை   

நான் கண்பார்வையற்ற குருடர்கள் ஊரில் கண்ணாடி விற்றுக்கொண்டு இருக்கிறேன்

xxxx

அக்டோபர் 21 புதன் கிழமை

மனதில் அமைதி நிலவட்டும்; புலன்களின் செயல்பாட்டில் அமைதி நிலவட்டும்; உடலின் செயல்பாட்டில் அமைதி நிலவட்டும்;

 ஒன்றுமே செய்யாதீர்கள் ; அப்போது உங்கள் உள்ளத்தில் உண்மை வெளிப்படும்.

xxxx

அக்டோபர் 22 வியாழக் கிழமை   

உங்கள் ஆத்மா பேசுவதைக் கேளுங்கள்; அதைக் கேட்டால் உண்மையைக் கண்டுபிடிப்பீர்கள்

***

அக்டோபர் 23 வெள்ளிக் கிழமை   

என் உள்ளத்தில் விளக்கு ஒளியைக் கண்டேன்; எல்லா இருளும் பறந்தோடிவிட்டது

***

அக்டோபர் 24 சனிக்கிழமை  

யார் புண்ய புருஷன் ? மற்றவர்களின் கஷ்டங்களை புரிந்துகொண்டவனே புனிதன் .

***

அக்டோபர் 25 ஞாயிற்றுக் கிழமை   

நாக்கின் மீது கட்டுப்பட்டு இல்லாவிட்டால் கற்றறிந்தவனின் அறிவு பயனற்றதே .

***

அக்டோபர் 26 திங்கட் கிழமை   

என் இதயத்தில் அன்பு என்னும் போதை ஏறிவிட்டது ; எனக்குப் பேசவே பிடிக்கவில்லை .

***

அக்டோபர் 27 செவ்வாய்க்கிழமை   

हिन्दू कहत,राम हमारा, मुसलमान रहमाना ।

आपस में दौऊ लड़ै मरत हैं, मरम कोई नहिं जाना ।

இந்துக்கள் ராமனைப் போற்றுகிறார்கள் ;

முஸ்லீம்கள் ரஹீமைப் போற்றுகிறார்கள் ;

பின்னர் இருவரும் ஒருவரை ஒருவர் கொல்கிறார்கள் ;

உண்மைப்பொருளை அறியவில்லையே !

 ***

அக்டோபர் 28 புதன் கிழமை

“साधो, देखो जग बौराना ।

साँची कही तो मारन धावै, झूठे जग पतियाना ।

சாதுக்களே !உலகம் பைத்திய மயமாயிருக்கிறது; நான் உண்மையைச் சொன்னால் என்னை அடித்து உதைக்கிறார்கள் ;

 பொய் சொன்னால் என்னை நம்புகிறார்கள்.

***

அக்டோபர் 29 வியாழக் கிழமை

 “உயிரோடு இருக்கும்போதுதான் ஆன்மீகச் செயல்களில் ஈடுபட முடியும், விழிப்புடன் இருக்க முடியும்; இறந்த பிறகு விடுதலை கிடைக்கும் என்பது வெறும் கனவு.”

***

அக்டோபர் 30 வெள்ளிக் கிழமை   

யார் உண்மை குரு ? உருவமற்ற இறைவனை அவன் உங்கள் கண்களுக்கு முன்னே காட்ட வேண்டும்   சடங்குகள் இல்லாத எளிய வழியைச் சொல்ல வேண்டும்; வீட்டின் கதவுகளை மூடிவிட்டு மூச்சைப் பிடித்து , உலகத்தையே துறந்துவிட்டு என்று சொல்லக் கூடாது; நீங்கள் செய்யும் வேலைகளுக்கு இடையே மனது அவனை நாடும்போது அவனைக் காணச் செய்ய வேண்டும் ; எப்போதும் ஆனந்த நிலையில் இருக்கச் செய்ய வேண்டும்

***

அக்டோபர் 31 சனிக்கிழமை  

நான் உண்மை கூறினால் ஒருவரும் கேட்கவில்லை ;

உலகம் பொய்யனை நம்புகிறது

இந்தத் துணியின் விலை 5 டகா

ஆனால் அவனுக்கு 7 டகா கிடைக்கிறது. 

–SUBHAM—

TAGS- அக்டோபர் 2026 காலண்டர் , கபீர்தாசர் பொன்மொழிகள்

மாணிக்கவாசகரின் சிவபுராணத்தில் 10 கேள்விகள் (Post.16,248)

Written by London Swaminathan

Post No. 16,248

Date uploaded in London – 28 September 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

திருவாசகத்தில் வரும் சிவபுராணம் மிகவும் பாடப்படும் பகுதி. அதே போல திருவாசகத்திலுள்ள திருவெம்பாவையும் பெண்கள் பயிலும் பாக்கள்; இலங்கையில் எல்லா சிறுவர் சிறுமியரும் சிவபுராணத்தை மனப்பாடமாக சொல்லும் காலம் இருந்தது . உள்நாட்டுப் போருக்குப் பின்னர் நிலைமை மாறியதா என்று எனக்குத் தெரியாது; ஏதோ ஒரு காரணத்தினால் இலங்கையரின் இறுதிச் சடங்கிலும், மயானத்தில், இதை மோகன ராகத்தில் இசைக்கிறார்கள் ; நமச் சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க ( நமச்சிவாய வாஅழ்க நாதன்றாள் வாழ்க) என்று துவங்கும் சிவபுராணத்தில் பத்து கேள்விகள் இதோ:

1

இந்தப்பாடலில் பிறப்பறுக்கும் என்பதை எத்தனை முறை சொல்கிறார் ? இவரைப் பார்த்து வள்ளுவரும் சம்பந்தரும் கூட பிறப்பறுக்கும் என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார்கள் (எனது ஆராய்ச்சிப்படி, இவர் சம்பந்தருக்கு முன்னர், வள்ளுவருக்கு கிட்டத்த ட்ட சமகாலத்தில் வாழ்ந்தவர்- அதாவது ஜந்தாம் நூற்றாண்டு )

2

சிவபுராணத்தை மாணிக்கவாசகர் எந்த ஊரில் பாடினார்? அதில் எத்தனை வரிகள் உள்ளன ?

3

சிவ பெருமானை மாணிக்கவாசகர் , அப்பர் போன்ற அடியார்கள் பல இடங்களில் ஆரியன் என்று அழைக்கிறார்கள் ; பாரதியாரும் நிறைய பாடல்களில் ஆரிய என்ற சொல்லிணைப் பாடிப் பரவியுள்ளார் ;இதன் பொருள் என்ன ?

4

பிஞ்ஞகன் என்று சிவ பெருமானை ஏன் அழைக்கிறார்? (பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள் வெல்க!)

5

கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க!- இதில் கோகழி என்பது எந்த ஊர் ?

6

எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்!- என்கிறாரே ! அவர் அடைந்த பிறப்புகளின் பட்டியல் என்ன ?

7

இந்தப் பிரபஞ்சமே ஓம் என்னும் பிரணவ ஒலியிலிருந்து பிறந்தது ; மாணிக்கவாசகரும் முதல் பாட்டிலேயே பிரணவத்தைக் கூறுகிறார் ; அந்த வரி என்ன ?

8

நிறங்கள் ஓர் ஐந்து உடையாய்! விண்ணோர்கள் ஏத்த!- என்று சொல்வதற்கு விளக்கம் என்ன ? ஐந்து நிறங்கள் என்ன?

9

மாணிக்கவாசகர், என்ன காரணத்துக்காகச் சிவபுராணத்தைப் பாடுவதாகக் கூறுகிறார்?  

10

சிவ புராணத்தை ஓதினால் சிவபுரத்துக்குச் செல்லலாம் என்று சொல்லிவிட்டு, ஒரு கண்டிஷனையும்/ நிபந்தனை போடுகிறார் ; அது என்ன நிபந்தனை?

****

விடைகள்

1.குறைந்தது நான்கு இடங்களில் இதைக் குறிப்பிடுகிறார்:

பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள் வெல்க!

மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி

பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்!

அல்லல் பிறவி அறுப்பானே! ஓ! என்று!

***

2.திருப்பெருந்துறையில் பாடினார்; சிவபுராணத்தில் 95 வரிகள் உள்ளன . 

***

3. பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே!

இதற்குதிருவாவடுதுறை பதிப்பில் ச தண்ட பாணி தேசிகர் ஆரியன்= பூசிக்கத்தக்கவன் என்றும் சித்பவானந்த சுவாமிகள் உரையில் நிறைமனிதன் என்றும் எழுதியுள்ளார்கள் ரெவரென்ட் ஜி யு போப் ஆங்கில உரையில் VENERATED ONE  என்று மொழிபெயர்த்துள்ளார் ; பொதுவான பொருள்- பண்பாடுமிக்கவன் . 

***

4.இதற்கு அழகிய தலைக்கோலம் – அதாவது சடை, அதில் கங்கை, பிறைச் சந்திரன் ஆகியன உடையவர் என்பது பொருள் ; இன்னுமொரு பொருள் மயில் பீலி அணிந்தவன்.

***

5.கோகழி என்பது திவாவடுதுறை என்பது ஒரு கருத்து; சிலர் இதைத் திருப்பெருந்துறை என்றும் கொள்வர்

***

6. புல்லாகிப் (1) பூடாய்ப் (2)புழுவாய் (3) மரமாகிப் (4)

பல்விருகமாகிப் (5) பறவையாய்ப் (6) பாம்பு (7) ஆகி

கல்லாய் (8), மனிதராய்ப் (9), பேயாய்க் (10) கணங்களாய் (11)

வல் அசுரர் (12) ஆகி முனிவராய்த் (13) தேவராய்,(14)

செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்,

14 சொற்களைப் பயன் படுத்துகிறார் ; விருகம்= மிருகம்;

ஸ்தாவர ஜங்கமம்  = அசையாத தாவரங்கள்; இடம்விட்டு இடம் செல்லும் விலங்குகள்

***

7.உய்ய, என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற

மெய்யா! விமலா! விடைப்பாகா! வேதங்கள்

ஐயா! என ஓங்கி, ஆழ்ந்து, அகன்று, நுண்ணியனே!

***

8.திருவாசக உரைக்கு திவாவடுதுறை தண்டபாணி தேசிகர் உரைதான் மிகச் சிறந்தது ; அதன் படி:

சதாசிவ மூர்த்தியின் ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்தியோஜாதம் என்ற ஐந்து முகங்களும் முறையே ஸ்படிகம், பொன் நிறம் (மஞ்சள்/ தங்க நிறம்), கருமை, செம்மை (சிவப்பு), வெண்மை நிறமுடையது எனச் சிவாகமங்கள் சதாசிவ மூர்த்தி தியானத்தில் கூறுகின்றன

***

9.சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால்,

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி,

சிந்தை மகிழச் சிவபுராணம் தன்னை,

முந்தை வினை முழுவதும் ஓய உரைப்பான் யான்

– முன் வினைகள் அனைத்தையும் அழிக்க சிவபுராணம் பாடுவதாகச் சொல்கிறார் 

***

10.சொல்லற்கு அரியானைச் சொல்லித், திருவடிக்கீழ்

சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்

செல்வர்! சிவபுரத்தின் உள்ளார்! சிவன் அடிக் கீழ்ப்

பல்லோரும் ஏத்தப் பணிந்து.

– திருச்சிற்றம்பலம்

–SUBHAM—

Tags- மாணிக்கவாசகர்,  சிவபுராணம், 10 கேள்விகள் ,திருவாசகம், முந்தை வினை, ஐந்து நிறங்கள் , ஆரியன், பிஞ்ஞகன்

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL-122; இந்து மத கலைச்சொல் அகராதி-122(Post.16,247)

Written by London Swaminathan

Post No. 16,247

Date uploaded in London – 28 September 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

English version posted already; Tamil version continued from yesterday

விஸ்வநாத /விசாலாக்ஷி

காசி என்னும் வாரணாசியில் உறையும் சிவபெருமானின் பெயர் விஸ்வநாதன்; உலகிற்கே இறைவன் என்பது பொருள்; அம்மனின்/தேவியின் பெயர் விசாலாக்ஷி; பக்தர்களுக்காக அகண்ட கண்களுடன் அருள்புரியும் அம்மை; இந்தத் தலத்திலுள்ள லிங்கம் 12 (துவாதச) ஜோதிர் லிங்கத் தலங்களில் ஒன்று ஆகும்; ஆயினும் எல்லாவற்றையும்  விட புனிதமானது ; ஏனெனில் ஒவ்வொரு  இந்துவும் வாழ்நாளில் ஒரு முறையாவது காசிக்குப் போக வேண்டும் என்பது இந்துக்களின் குறிக்கோள் ஆகும்.

மதுரையில் மீனாக்ஷி, காஞ்சியில் காமாக்ஷி, நாகப்பட்டினத்தில் நீலாயதாக்ஷி  என்று பல பெயர்களில் வணங்கப்படும் எல்லோரும் விசாலாக்ஷி என்னும் பார்வதியின் மறு வடிவங்களே ஆகும் ; பல தமிழ் நாட்டுக்கு கோவில்களில் காசி விஸ்வநாதர் என்றா பெயரில் லிங்கம் இருப்பதைக் காணலாம்; காசிக்குப் போக வேண்டும் என்பதை இது நினைவு படுத்தும்; அத்தோடு போக முடியாதவர்களுக்கு இதுவே காசி தரிசனம் செய்த பலனையும் தரும் என்பது நம்பிக்கை .

***

விட்டல

விட்டலாவின் இன்னொரு பெயர் விட்டோபா; பண்டரீபுரத்தில் குடி கொண்ட பாண்டுரங்கனை பக்தர்கள் இப்படி அழைத்து வழிபடுவார்கள்; ஹரே கிருஷ்ண ஹரே ராம என்பது போல விட்டல என்பதும் விஷ்ணுவின் நாமம்தான். மஹாராஷ்டிரத்திலும் அதை ஒட்டியுள்ள கர்நாடகப் பகுதிகளிலும் மிகவும் வணங்கப்படும் இறைவன்  இவர்; இரு கைகளையும் இடுப்பில் வைத்துக்கொண்டு செங்கற்களின் மீது நிற்கும் பாண்டுரங்கரின் பின்னால் ஒரு கதை உள்ளது; அவர் கருத்த நிறத்தில் இளைஞனாக ரகுமாயி என்னும் ருக்மிணி சகிதம் காட்சி தருகிறார்; புண்டரீகன் என்னும் பக்தன், தாய் தந்தையருக்குப் பணிவிடை செய்யும்  காலத்தில் விஷ்ணு வந்த போது சில செங்கற்களைக் கொடுத்து இதன் மேல் நில்; நான் தாய் தந்தையருக்கு சேவை செய்துவிட்டு வந்து உன்னைக் கவனிக்கிறேன் என்று அவன் சொன்னதாகவும் ஆகையால் இறைவன் செங்கற்களின் மீது நின்றவண்ணம் இருப்பதாகவும் பக்தர்கள் நம்புகிறார்கள்.

மஹாராஷ்டிர மாநிலத்தில் பண்டரீபுரத்தில் உள்ள விட்டல கோவில் தவிர கர்நாடகத்தில் ஹம்பி நகரிலும் விட்டலனுக்கு கோவில் இருக்கிறது.

மகாராஷ்டிரத்தில் பிறந்து விட்டலாவின் பக்தர்களான துக்காராம், நாமதேவ் முதலியோர் பாடிய அபங்கங்கள் என்னும் மராட்டிய மொழிப் பாடல்களில் விட்டலாவின் பெருமை பேசப்படுகிறது ; இந்தப் பாடல்களை பாரத ரத்னா பீம்சென் ஜோஷி பாடியதால் மிகவும் பரவியது. அபங்கங்கள் என்னும் மராட்டிய மொழி கீர்த்தனைகள் 5000 வரை உள்ளன .

ஆண்டு தோறும் ஆஷாட ஏகாதசியன்று பல லட்சக் கணக்கானோர் நாம சங்கீர்த்தனம் செய்தவாறே பண்டரீ புரத்தை நோக்கி பாதசாரிகளாக வருவார்கள் ; தோளில் பல்லக்குகளையும் சுமந்து வருவார்கள்; ஐயப்ப பக்தர்கள் கருப்பு உடை அணிவதுபோல இவர்கள் காவி உடை அணிவார்கள் ; இவர்கள் லட்சக் கணக்கில் நடந்து வருவதால் நடமாடும்  கும்பமேளா என்று அழைக்கிறார்கள் பண்டரீபுரம் அருகிலுள்ள சந்திர பாகா நதியில் குளித்த்துவிட்டு இறைவனை தரிசிப்பார்கள்

ஆஷாட ஏகாதசியன்று இரண்டு பெரிய ஊர்வலங்கள ஞானேஸ்வர் பிறந்த ஆலண்டியிலிருந்தும் துக்காராம் பிறந்த தேஹு நகரிலிருந்தும் புறப்பட்டு பண்டரீபுரத்தில் சந்திப்பார்கள்; வெவ்வேறு ஊர்களில் புறப்படும் பாதசாரி அணிகளும் இவர்களுடன் ஆங்காங்கே இணைவார்கள்; இவர்களை வர்க்காரிகள் என்பர்; இது போன்ற பல நூறு மைல் நடைப்பயணம் வேறு எங்கிலும் நடைபெறுவதில்லை. தமிழ்நாட்டில் முருக பக்தர்கள் செய்யும் பழனி  யாத்திரையில் சில நூறு பேர்தான் இருப்பார்கள். ஆனால் ஆஷாட ஏகாதசி காவி உடை ஊர்வலம் கடல் போல காட்சி தரும் ; கைகளில் காவிக்கொடிகளை ஏந்தி வருவார்கள்; நாள் முழுதும் ஏகாதசி பட்டினியை அனுசரிவித்துவிட்டு மறுநாள் துவாதசி யன்று விரதத்தை நிறைவு செய்வார்கள்.

***

வியாசர்

உலகத்தில் தோன்றிய எழுத்தாளர்களில் வியாசர் போன்ற அரிய பணியைச் செய்தவர் எவருமிலர் ; வியாசர் மஹாபாரத ஆசிரியர் , புராணங்களைத் தொகுத்து, மகன் சுகரிடம்  ஒப்படைத்தார் என்று எல்லோரும் அறிவர் ; இவர் செய்த அளவினைப் பார்த்தால் உலகில் இனிமேல் கூட எவரும் செய்ய முடியாது என்பது வீ ளங்கும்; மஹாபாரதத்தில் ஒரு லட்சம் ஸ்லோகங்கள்; புராணங்களில் நாலு லட்சம் ஸ்லோகங்கள்! கலியுகம் துவங்கிவிட்டதை அறிந்த அவர் சமுத்திரம் போலவுள்ள இந்து மத நூல்களைக் தொகுத்து வகையாகப் பிரிக்கவேண்டும்மென்று திட்டமிட்டு வெற்றியும் பெற்றார். இதைவிட இவர் செய்த அரிய பணி ஆயிரக்கணக்கில் இருந்த வேதங்களைப் பிரித்து நான்கு சீடர்களிடம் ஒப்படைத்தகாகும்; இதனால்தான் இவரை வேத வியாசர் என்று அழைக்கிறோம். இந்து மதத்திலுள்ள எல்லா பிரிவினரும் இவரை குருவாக ஏற்று வியாச பெளர்ணமி அன்று குரு புஜைசெய்கிறார்கள் வியாசரை விஷ்ணுவாகப் போற்றும் துதியை விஷ்ணு ஸஹஸ்ரநாம ஆரம்பத்தில் சொல்கிறார்கள்

இவர் கன்னங்கருத்தவர் ; கங்கை நதியின் தீவில் பிறந்தவர்; ஆகையால் இவரை க்ருஷ்ண த்வைபாயனர் என்பார்கள்; இதன் பொருள் கருத்தவன்- தீவுக்கரன் என்பதாகும் இவரால் நமக்கு கிடைத்த மாபெரும் பொக்கிஷம் வேதங்களும் மகாபாரதமும் அதிலுள்ள பகவத் கீதையும் ஆகும் . வியாச என்ற சொல்லுக்கு கட்டுரை என்றும் பொருள் ; 50 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் புஸ்தகங்களில் தென்னை மரம் பற்றி ஒரு வியாசம் எழுது என்று இருக்கும் ; பத்திரிகைகளுக்கு எழுதுவோரை காண்ட்ரிப்யூட்டர் அல்லது காலம்னிஸ்ட் என்பார்கள் . அது  போன்ற வேலையையும், காலத்தால் அழிந்துபோகாதவாறு தொகுப்பு பணியைச் செய்தவரும் ஆவார் ; இவை எல்லாம் 5000 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தது!  கிரேக்க, பாபிலோனிய, சுமேரிய, எகிப்திய நாகரீகங்களில் இது போன்ற பணியைச் செய்த எவரும் இல்லை; இந்துக்கள் காலையில் சொல்லும் பிராத ஸ்மரணத்தில் ஏழு சிரந்சீவிகளில் இவரையும் ஒருவராகச் சொல்லி வணங்குகிறார்கள்

இவருடைய வாழ்க்கை சுவையானதும் கசப்பானாந்தும் கூட !  

மீனவன் ஒருவனுடைய பெண்ணாகிய சத்யவதிக்கும், ஊர் ஊராக சஞ்சாரம் செய்த பராசர முனிவருக்கும் பிறந்தவர் இவர் ; ஜாதியிலும் குறைவு; நிறத்திலும் கருப்பு ; ஆயினும் இவருக்குள்ள இடம் இந்துமதத்தில் வேறு எவருக்கும் இல்லை ! அவ்வளவு சிறப்பு !

பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்கும் தாத்தா முறை;

பாண்டு , திருதராஷ்டிரன் , விதுரன் ஆகிய மூவருக்கும் தந்தை . விசித்ரவீர்யன் வாரிசு இல்லாமல் இறந்துவிட்டதால்  அந்தக் காலத்தில் முனிவர் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் (நியோகம்) வழக்கம் இருந்ததால் இந்த மூவரையும் பெற்றுக் கொடுத்தார்; அம்பிகா, அம்பாலிகா இருவரும் விசித்திர வீர்யனின் விதவை மனைவிகள் ; இவர்களைத் தவிர பராசரி என்னும் வேலைக்காரி மூலம் பிறந்தவர் விதுரன் .

இவர் நான்கு வேதங்களையும் சீடர்களான பைலர் (ரிக் வேதம் ), வைசம்பாயனர் (யஜுர்), ஜைமினி(சாம) , சுமந்து  (அதர்வண வேதம்)  ஆகியோருக்கு பிரித்தளித்தார்

இறுதியில் நாரத முனிவரைச் சந்தித்தபோது அவர் சொன்னப்படி சரஸ்வதி நதிக்கரைக்குச் சென்று தியானம் செய்து இறைவனைக் கண்டார் .

வியாச பூர்ணிமா –குருபூஜை தினம்

வியாசர் பிறந்த தினத்திலிருந்து நான்கு மாதங்களுக்கு இந்து புத்த, சமண மத சந்யாசிகள் 4 மாதங்களுக்கு சாதூர் மாஸ்ய விரதம் அனுஷ்டிப்பார்கள் ; அதாவது தேச சஞ்சாரம் செய்யாமல் ஒரே இடத்தில் தங்கி சமய பணிகளை செய்வார்கள் ; அப்பொழுது பக்தர்கள் அனைவரும் அவர்களை சந்திப்பது எளிதாகும் , புத்தர், முதல் சொற்பொழிவினை நிகழ்த்தியதும் மஹாவீரர் முதல் சிஷ்யயரை அறிவித்ததும் வியாச பெளர்ணமி தினம் ஆகும் .  வியாச பூர்ணிமாவை ஒட்டிய ஒரு ஏகாதசியிலிருந்து 4 மாதங்களுக்குப் பின்னர் வரும் ஏகாதசி வரை சதுர் மாஸ்யம் என்ற கணக்கு உண்டு.  அந்தக் காலத்தில் விஷ்ணு அரிதுயில் கொள்வதாக சொல்லுவார்கள்; உண்மையில் அது மழைக் காலம் ஆதலால் சந்யாசிகள் நடந்து செல்வதில்லை.   பொதுவாக சீடர்கள் தங்களுடைய குருக்களுக்கு சிறப்பு வழிபாடு செய்வதும் குரு பூஜா தினம்தான்.

***

விஜய தசமி (வெற்றி முழக்க நாள்)

வெற்றி கிட்டிய பத்தாவது நாள் என்பது இதன் பொருள் ; தேவி துர்க்கை வடிவத்தில் மகிஷாசுரனை வதம் செய்த தினம் இது . பத்தாவது நாள் என்ற அடைமொழிக்குக் காரணம் ஒன்பது நாள் நவராத்ரி முடிந்த அடுத்த நாள் இது நிகழ்ந்ததாக ஐதீகம்; தேவியின் வெற்றி போல எல்லோருக்கும் வெற்றி கிட்டும் என்பதால் புதிய கல்வி, புதிய கலைகள் புதிய பணிகளை இந்த நாளில் துவக்குவது வழக்கம்; கல்வி நிறுவனங்களுக்கு குழைந்தைகளை அழைத்துச் சென்று அக்ஷராப்யாஸம் (அரிச்சுவடியை கடவுள் பெயருடன் தானியத் தட்டில் எழுதுவது) செய்வார்கள் ; சங்கீதம், நாட்டியம் பயில்வோர் அவர்களுடைய குருமார்களை சந்தித்து மரியாதை செய்வார்கள்.

விஜய தசமிக்கு முன்னால் வரும் எட்டாவது /அஷ்டமி நாள் துர்காஷ்டமி; அதற்கு அடுத்த நாள் சரஸ்வதி பூஜை/ ஆயுத பூஜை ; துர்காஷ்டமி வங்காளத்தில் மிகப்பெரிய பண்டிகை; சரஸ்வதி பூஜையன்று புஸ்தகங்களையும் ஆயுதங்களையும் சங்கீத வாத்தியங்களையும் இறைவன் படங்கள் அல்லது சிலைகளுக்கு முன்னர் வைத்து வணங்குவார்கள் ; நவராத்திரியின் ஒன்பது நாட்கள் இரவிலும் சிறப்பு தேவி வழிபாட்டோடு,  சுண்டல் செய்து நைவேத்யம் செய்வார்கள்; விஜயதசமி அன்று இது நிறைவடையும்

பத்தாவது என்பதை தசரா என்றும் சொல்லுவார்கள்; அன்று கர்நாடக மாநில மைசூரில் மன்னர் மற்றும் சாமுண்டீஸ்வரி சிலையுடன் பெரிய யானைகளை வைத்து ஊர்வலம் நடத்துவார்கள் இதைக் காண லட்சக் கணக்கானோர் வருகிறார்கள் . இவை அனைத்தும் அக்டோபாபரில் (புரட்டாசியில்) நடைபெறும்  .

–subham—

Tags- விட்டல, விஜயதசமி, வியாசர், விஸ்வநாத ,விசாலாக்ஷி, HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL-122, இந்து மத கலைச்சொல் அகராதி-122

ராமாயணத்தில் வரங்கள் 74 –  சத்ருக்னனுக்கு தேவதைகள் வரம் அளித்தது!(Post.16,246)


WRITTEN BY S NAGARAJAN

Post No. 16,246

Date uploaded in London – 28 September 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

 ராமாயணத்தில் வரங்கள் 74 –  சத்ருக்னனுக்கு தேவதைகள் வரம் அளித்தது!

ச. நாகராஜன் 

உத்தரகாண்டத்தின் எழுபதாவது ஸர்க்கமாக அமைவது ‘மதுபுரியில் அரசாளுவது ’ என்னும் ஸர்க்கமாகும்.

லவணாசுரனை வதம் செய்து மூன்று லோகங்களையும் மகிழ்ச்சியுறச் செய்தான் சத்ருக்னன். அனைத்து தேவதைகளும், ரிஷிகளும், கந்தர்வர்களும், அப்ஸரஸ்களும் அவனுக்கு ஜய கோஷம் எழுப்பினர். இந்திரன், அக்னி உள்ளிட்டோர் சத்ருக்னனிடம் மிக இனிமையாகப் பேசினர்.

அவர்கள் சத்ருக்னனிடம், “பிரியமானவனே! லவணாசுரனை நீ வதம் செய்தது சௌபாக்யத்திற்குரிய ஒரு காரியம். மகத்தானே தோள்வலி உடையவனே! உனக்கு வரம் கொடுப்பதற்காக இங்கு வந்திருக்கிறோம். நாங்கள் உனது வெற்றியை விரும்பினோம். எங்கள் தரிசனத்தில் உனக்கு வேண்டிய வரத்தைக் கேள்” என்றனர்.

தேவதைகளின் இந்தச் சொற்களைக் கேட்டு கைகளைக் குவித்து சத்ருக்னன் கூறலானான்:

இயம் மதுபுரி ரம்யா மதுரா தேவநிர்மிதா |                               நிவேஷம் ப்ராப்னுயாச்சீக்ரமேஷ மேஸ்து வர: பர: ||

    உத்தரகாண்டம் எழுபதாவது ஸர்க்கம், ஸ்லோக எண் 5

மதுரா – மதுரை என்ற பெயரைக் கொண்டதும்                                 ரம்யா – ரமணீயமாய்                                                    தேவநிர்மிதா – தேவர்களால் நிர்மிக்கப்பட்டதுமான                            இயம் மதுபுரி – இந்த மதுபுரியானது                                            சீக்ரம் – இப்போதே                                                         நிர்வேஷம் – ஜன சஞ்சாரத்தை                                                 ப்ராப்னுயாத் – அடைய வேண்டும்                                              ஏஷ: – இந்த                                                                      வர: – வரமொன்றே                                                               மே – எனக்கு                                                                          பர: – சர்வமுமாக                                                                       அஸ்து – இருக்கட்டும்

“தேவதைகளே தேவர்களால் நிர்மாணிக்கப்பட்ட இந்த ரமணீயமான மதுபுரி வெகு சீக்கிரமாகவே மனம் கவரும் ராஜதானி ஆகட்டும். இதுவே நான் விரும்பும் வரமாகும்” என்றான் சத்ருக்னன்.

அப்படியே தேவதைகளும் வரத்தை அருளினர்.

தேவதைகளின் விருப்பத்தால் கொடுக்கப்பட்ட வரம் இது என்பதால் கேட்காமல் கொடுக்கப்பட்ட வரமாகும் இது.

More Quotations from Arthashastra of Kautilya in October 2026 Calendar (Post.16,245)

Written by London Swaminathan

Post No. 16,245

Date uploaded in London – 27 September 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

We have already published Chanakya’s quotations; here are 31 more quotes from his Arthashastra book; that is the world’s first book on Economics , Statecraft and Politics.

Oct.2-Gandhi Jayanthi;10-Mahalaya amavasyai; 11- Navaratri begins; 18-Durga puja ; 19-Sarasvati puja, 20-Vijaya dasami /Dasara; 21- Madhwa Jayanthi, 28/29-Karva Chauth (Women pray for their husband’s long life).

Amavasyai/New moon Day- Oct.10; Purnima/Full moon Day-25;

Ekadasi- Hindu Fasting Days- 6 and 22;

Auspicious Days- October 25 and 30, 2026.

***

MORE GOLDEN SAYINGS FROM ARTHASHASTRA OF CHANAKYA (KAUTILYA)

October 1 Thursday

A ruler should be approached like fire.

***

October 2 Friday

The lust ridden cannot perform his task.

***

October 3 Saturday

Even one with a fourfold army is destroyed if he is a slave of the senses.

***

October 4 Sunday

Prosperity abandons one who is satisfied with wealth.

***

October 5 Monday 

A little effort accomplishes the task.

***

October 6 Tuesday

A man is great by deeds, not by birth.

***

October 7 Wednesday

We should not fret for what is past, nor should we be anxious

about the future, men of discernment deal only with the present moment.

***

October 8 Thursday

Friendship and enmity results from some cause.

***

October 9 Friday

The one who is facing defeat should make peace.

***

October 10 Saturday

Power is the cause of alliances.

***

October 11 Sunday

One should not fight with a superior or equal.

***

October 12 Monday 

The fragrance of flowers spreads only in the direction of the wind.

But the goodness of a person spreads in all direction.

***

October 13 Tuesday

Never share your secrets with anybody. It will destroy it.

***

October 14 Wednesday

As soon as the fear approaches near, attack and destroy it.

***

October 15 Thursday

Righteousness is the root of happiness.

***

October 16 Friday

The prosperous one becomes the victorious one.

***

October 17 Saturday

Economic prosperity creates prosperity for the people.

***

October 18 Sunday

Wisdom results from the worship of elders.

***

October 19 Monday 

Worship of elders is the root of humility.

***

October 20 Tuesday

Humility is the root of sense control.

***

October 21 Wednesday

The state is the root of wealth.

***

October 22 Thursday

To be without a master is better than having an arrogant master.

***

October 23 Friday

There is some self-interest behind every friendship.

There is no Friendship without self-interests. This is a bitter truth.

***

October 24 Saturday

If the people are prosperous even a leaderless state can be governed.

***

October 25 Sunday

The weak should seek refuge in the strong.

***

October 26 Monday 

Getting what has not been got, guarding it, developing it and then distributing it-these four constitute state policy.

***

October 27 Tuesday

Refuge in the weak results in sorrow.

***

October 28 Wednesday

If the people are prosperous even a leaderless state can be governed.

***

October 29 Thursday

Ministerial advice should be kept secret from all quarters.

***

October 30 Friday

When two persons quarrel, one should maintain an attitude of duplicity.

***

October 31 Saturday

A person should not be too honest.

–Subham—

Tags- October 2026 calendar, Chanakya, Arthashastra, more quotations, Kautilya

திருக்குறளில் தெய்வங்கள் 10 கேள்விகள் (Post No.16,244)

Markaandeya in Tirukkural 620

Written by London Swaminathan

Post No. 16,244

Date uploaded in London – 27 September 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Indran Nahusha falling down in Tirukkural  899

1

திருக்குறளில்  இந்து   தெய்வங்கள் பற்றி மட்டும்தான் வள்ளுவர் கதைக்கிறார் ; கீழ்கண்ட கேள்விகளுக்குப் பதில் சொன்னால் நீங்களும் பக்கா ஹிந்துத்துவா பேர்வழி என்ற பட்டத்தைப் பெறுவீர்கள் !

வாமன / த்ரிவிக்ரம அவதாரம் பற்றி எந்தக் குறளில் பாடுகிறார் வள்ளுவர் ?

2

லெட்சுமியை வள்ளுவர் பல குறட்பாக்களில் பாடுகிறார் ; எந்த ஒரு குறளில் லெட்சுமியையும் அவளுடைய அக்காவையும் சேர்த்துப் பாடினார்?

3

வேத கால இந்திரன் தமிழ்க் கடவுள் என்று ஒல்காப் புகழ் தொல்காப்பியன் சொன்னான்; வள்ளுவனும் இந்திரனை வேந்தன் என்றும், இந்திரன் என்றும் பாடுகிறான் ; அது எந்தக் குறள் ?

4

யமன் என்பவனுக்கு வேதங்கள் தென் திசையை ஒதுக்கியுள்ளது ; பிராமணர்களும் தினமும் மூன்று வேளைகளில் தென் திசையை நோக்கி எமதர்மனை 11 பெயர்கள் சொல்லி போற்றுகிறார்கள் ; வள்ளுவனும் இறந்தவர்களிருப்பது தென்திசைதான் என்று பாடுகிறான் ; அந்தக் குறள் நினைவு இருக்கிறதா ?

5

பாற்கடலில் எழுந்த விஷத்தைக் குடித்து சிவபெருமான் தேவர்களையும் அசுரர்களையும் சாகாமல் காப்பாற்றியது எந்தக் குறளில் வருகிறது ?

6

ஒருவன் பட்டினி கிடக்க நேர்ந்தாலும் உலகத்தையே அழிப்போம் என்று பொங்கி எழுகிறான் பாரதி; வள்ளுவனோ  பிரம்மாவுக்கு சாபமே இடுகிறான் ; அந்தக் குறள் நினைவுக்கு வருகிறதா  ?

7

காதலியின் தோள் வைகுந்தத்தைவிட இன்பம் தரும் என்று வள்ளுவன் எங்கே செப்பினான்?

8

மார்க்கண்டேயன் கதையைக் குறிப்பால் உணர்த்தும் குறள் எது ?

9

பக்கா இந்துவைப் போல வள்ளுவர்உருவ வழிபாடு செய்யும் குறள்கள் எங்கே உள்ளன ? 

10

வேந்தன் என்ற சொல் இந்திரனைக் குறிப்பிடுவதைத் தொல்காப்பியத்தில் கண்டோம் ; அகஸ்தியர் சாபத்தால் இந்திரன்/நகுஷன்  பூமியில் மலைப் பாம்பாகப் பிறந்த கதையை வள்ளுவர் எப்படிப் பாடுகிறார் ?

************************

இந்திரன் நகுஷன் மலைப்பாம்பாக பூமியில்  விழுந்த கதை 

விடைகள்

1.மூன்று அடியால் உலகத்தை அளந்த கடவுள் தாவி, எவ்வளவு பூமியைப்பெற்றானோ  அவ்வளவு பரப்பளவு சோம்பல் இல்லாத அரசனுக்குக் கிடைக்கும்.

மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்

தாஅய தெல்லாம் ஒருங்கு.   (குறள் – 610)

இந்த அடியளந்த கதை ரிக்வேதத்தில் முதல் முதலில் பாடப்பட்டுள்ளது:

RV.7-100-4; 1-22-17;1-155-4

***

2.ஒருவனுடைய சோம்பலில் கரிய மூதேவி வாழ்கின்றாள், சோம்பல் இல்லாதவனுடைய முயற்சியிலே லெட்சுமி  வாழ்கின்றாள்.

மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்

தாளுளாள் தாமரையி னாள்-617

***

3.ஐந்தவித்தான் ஆற்றல் – ஐம்புலனையும் அடக்கின முனிவனது வலிமைக்கு; அகல் விசும்புளார் கோமான் இந்திரனே சாலும் கரி – அகன்ற வானத்துள்ள தேவர்க்கரசனாகிய வேந்தனே (இந்திரனே) போதிய சான்றாகும்:

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்

இந்திரனே சாலுங் கரி–குறள் 25

***

4.இறந்து தென்திசையில் வாழ்பவர், தேவர்கள், விருந்தினர், சுற்றத்தார், தான் என்னும் ஐந்து பேருக்கும் செய்ய வேண்டிய அறத்தைத் தவறாமல் செய்வது சிறந்த கடமையாகும்

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு

ஐம்புலத்தாறு ஓம்பல் தலை- 43

***

5.எவராலும் விரும்பத்தக்க நாகரிகமான கண்ணோட்டத்தை விரும்புகின்றவர், பழகியவர் தமக்கு நஞ்சு இடக்கண்டும் அதை உண்டு அமைவர்

பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க

நாகரிகம் வேண்டு பவர்-580

***

6.உலகத்தைப்படைத்தவன் (பிரம்மா), உலகில் சிலர் பிச்சை எடுத்து உயிர்வாழுமாறு ஏற்படுத்தியிருந்தால், அவன் பிச்சைக்காரனைப்போல எங்கும் அலைந்து திரியட்டும்.

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து

கெடுக உலகியற்றி யான்-1062

***

7.தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்

தாமரைக் கண்ணான் உலகு-குறள் 1103

தாம் விரும்பும் பெண்ணின்  மெல்லிய தோளைத் தழுவித் தூங்கும் உறக்கத்தைவிடத் தாமரைக் கண்ணனாகிய திருமாலின் உலகம்/ வைகுந்தம்  இனிமை ஆனதோ?

***

8. நமக்குக் கிடைத்த 5 பேருடைய  உரையில் ஒருவர் மார்க்கண்டேயனைக் குறிப்பிட்டு உரை எழுதியுள்ளார் . சோர்வு இல்லாமல் முயற்சியில் குறைவு இல்லாமல் முயல்கின்றவர்  ஒரு காலத்தில் விதியையும் தோல்வியுறச் செய்வர்

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்

தாழாது உஞற்று பவர்-620

***

9.கடவுள் வாழ்த்தில் ஏழு குறள்களில் அவர் பாத நமஸ்காரம் செய்கிறார் ; அடி , தாள் என்ற சொற்களால் இறைவனின் பாதத்தைக் குறிப்பிடுகிறார் ; இதனால் ஆப் ரஹாமிக் மதத்தினர் (JEW, CHRISTIAN MUSLIM) திருக்குறளை ஏற்கமாட்டார்கள்!

***

10.ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து

வேந்தனும் வேந்து கெடும்-899

பரிமேல் அழகர் இந்திரன் விழுந்த கதையைக் கூறுகிறார்: ஏந்திய கொள்கையார் சீறின் – காத்தற்கு அருமையான உயர்ந்த விரதங்களை உடையார் வெகுள்வராயின்; வேந்தனும் இடை வேந்த முரிந்து கெடும் – அவராற்றலான் இந்திரனும் (நகுஷன் ) இடைய தன் பதம் இழந்து கெடும்.

விளக்கம்:

(”வேந்தன் மேய தீம்புனல் உலகமும்” (தொல். பொருள். அகத்.5) என்றார் பிறரும். நகுடன் என்பான் இந்திரன் பதவி பெற்றுச் செல்கின்ற காலத்துப் பெற்ற கணிப்பு மிகுதியால் அகத்தியன் வெகுள்வதோர் பிழை செய், அதனால் சாபமெய்தி அப்பதம் இடையே இழந்தான் என்பதனை உட்கொண்டு இவ்வாறு கூறினார். இவை நான்கு பாட்டானும் முனிவரைப் பிழைத்தலின் குற்றம் கூறப்பட்டது.

–SUBHAM–

TAGS-திருக்குறளில், தெய்வங்கள், பத்து கேள்விகள், இந்திரன் மூதேவி, லெட்சுமி, மார்க்கண்டேயன், கிருஷணன் , வைகுந்தம்

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL-121; இந்து மத கலைச்சொல் அகராதி-121 (Post.16,243)

Written by London Swaminathan

Post No. 16,243

Date uploaded in London – 27 September 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

விந்திய மலை

தென் இந்தியாவையும் வட இந்தியாவையும் பிரிக்கும் நீண்ட மலைத் தொடருக்கு விந்திய மலை என்று பெயர் . இது இமய மலை போல தொடர்ச்சியாக இல்லாமல் விட்டு விட்டு 1200 கிலோமீட்டர் தூரம் செல்கிறது . குஜராத்தில் துவங்கி மத்தியப்பிரதேசம் வழியாக உத்தர பிரதேசம் பீஹார் மாநிலங்கள் வரை செல்கிறது . நர்மதை, தபதி நதிகளின் பிறப்பிடம் இது. விந்த்யாவாஸினி என்னும் தேவியின் உறைவிடம் இது . புராணங்களில் விந்திய மலையை அகஸ்திய மகரிஷி கர்வபங்கம் செய்த கதை வருகிறது ; பகீரதன் , பலராமன் போல அகஸ்தியர் மாபெரும் எஞ்சினீயர் GREAT CIVIL ENGINEER;பொறியியல் வல்லுநர். பகீரதன் கங்கை நதியை இன்றைய பாதையில் திருப்பிவிட்டதால் கங்கைக்கு பாகீரதி என்ற பெயர்; கிருஷ்ணனின் அண்ணன் பலராமன் , தனது கோடாரியால் யமுனை  நதியைத் திருப்பிவிட்டான். அகஸ்தியர் காவிரியை எந்தப் பக்கம் திருப்பிவிடுவது என்று மணலில் ப்ளுபிரிண்ட் BLUE PRINT வரைந்தபோது ஒரு காகம் வந்தது; அவருடைய கமண்டலத்தைத் தட்டிவிடவே அட! கடவுளே சொல்லிவிட்டார் ! என்று எண்ணி கமண்டல நீர் ஒடிய திசையில் காவிரி நதியைத் திருப்பிவிட்டார் ; அதே போல விந்திய மலை வழியாக சாலைப்பாதை அமைத்து பொதிய மலைக்கு வந்தார் ; அவருக்கு முன்னர் தென் இந்தியாவுக்கு வந்தோர் கடற்கரை வழியாக நடந்து வந்தனர். அகஸ்தியருக்குப் பிறகு எல்லோரும் மலைப் பாதையைப் பயன்படுத்தினார்கள்; இதை புராணங்கள் விந்திய மலை கர்வ பங்கம் என்று வருணிக்கிறது .

Vindhya (विन्ध्य).—விந்திய மலை, ஏழு குல பர்வதங்களில் ஒன்று; நாசிக் கல்வெட்டு, யசோதர்மனின் மாண்டாசூர கல்வெட்டு முதலிய எட்டு கல்வெட்டுகளில் விந்திய மலை குறிப்பிடப்படுகிறது. மனு ஸ்ம்ர்தி எழுதப்பட்ட காலத்திலேயே இந்துக்கள் மாபெரும் பூகோள / புவியியல் விற்பன்னர்களாக இருந்தார்கள் ; மத்திய தேசம் என்பது எது என்று விளக்கப்போந்த மனு (2-21),  விந்தியமலையை ஒரு எல்லையாகக் குறிப்பிடுகிறார்

हिमवद्विन्ध्ययोर्मध्यं यत् प्राग् विनशनादपि ।

प्रत्यगेव प्रयागाच्च मध्यदेशः प्रकीर्तितः ॥ 2-२१ ॥

himavadvindhyayormadhyaṃ yat prāg vinaśanādapi |

pratyageva prayāgācca madhyadeśaḥ prakīrtitaḥ ||2- 21 || MANU SMRITI

The country lying between the Himālaya and the Vindhya, to the east of Vinaśana and to the west of Prayāga, is called the ‘Madhyadeśa,’ the ‘Middle Country.’ (2-21)

Vinaśana= PLACE WHERE SARASVATI RIVER DISAPPEARED; SCHOLARS THINK THAT IS KURUKSHETRA.

***

விஷ்ணு

விஷ்ணு என்பவர் பிரம்மா -விஷ்ணு- சிவன் என்ற மும்மூர்த்திகளில் ஒருவர் ; உயிரினங்களைப் படைப்பது பிரம்மாவின் தொழில்; காப்பது விஷ்ணுவின் தொழில்; அவர்களைக் கடைத்தேற்றுவது சிவனின் தொழில்; விஷ்ணுவின் பெருமையை அறிய வேண்டுமானால் விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்தோத்திரத்துக்கு ஆதி சங்கரர் எழுதிய விஷ்ணு ஸஹஸ்ரநாம உரையை- பாஷ்யத்தைப்– படித்தால் போதும் . அவர் எடுத்த 24 அவதாரங்களில் தசாவதாரம் என்னும் பத்து அவதாரங்களை அறியாதோர் எவருமில்லை ; பிராமணர்கள்  தினமும் மூன்று முறை செய்யும் சந்தியாவந்தனத்தில் விஷ்ணுவின் 12 பெயர்களைச் சொல்லி உடலின் 12 பாகங்களை நீர்த்துளியால் தொட்டுக்கொள்வார்கள்; பலருக்கும் சங்க இலக்கிய புலவர்  பெயர்களில் விஷ்ணுவின் பெயர் இருப்பது தெரியாது; விண்ணந்தாயன் என்பது விஷ்ணுதாசன்; கண்ணந்தாயன் என்பது கண்ணதாசன் ; இது பலருக்கும் தெரியாது; ஆனால் சங்கப் புலவர் பெயர்களில் தாமோதரன், கேசவன் என்ற பெயர்கள் இருப்பதும் வால்மீகி, பிரம்மா, காமாட்சி (காமக்கண்ணி) என்ற பெயர்கள் இருப்பதும் பலருக்கும் தெரியும் . விஷ்ணு என்றால் விண்= எங்கும் வியாபித்தவர்  ; இதே பொருளில் தமிழிலும் சம்ஸ்க்ருதத்திலும் வருகிறது ; இவருடைய வாகனம் கருடன் ; கைகளில் வைத்திருப்பது சங்கு -சக்ரம்; இதுவும் சங்க இலக்கியத்தில் வருகிறது; மேலும் ஐம் படைத்தாலி என்னும் அரை ஞான் கயிறு அல்லது கழுத்து மாலையில் உள்ள பதக்கத்திலும் விஷ்ணுவின் ஐந்து சின்னங்கள் பொறிக்கப்பட்டிருக்கும் ; விஷ்ணு சஹஸ்ர நாம ஸ்தோத்திர வரிகள் அப்படியே நற்றிணை என்னும் சங்க இலக்கியப்பாடலின் கடவுள் வாழ்த்தாக வந்துள்ளது! தொல்காப்பியர் இவரை மாயோன் என்று கூறியுள்ளார்; அதன்பொருள்  இவர் காக்கா கருப்பு நிறமுடைய பேரழகன்  ! கல்வெட்டுகளில் அதிகம் குறிப்பிடப்படுகிறார் ; 2200 ஆண்டுகளுக்கு முன்னர் மத்தியபிரதேச பெஸ்நாகரில் கருட  ஸ்தூபி  வைத்த கிரேக்க நாட்டு ஹீலியோடோரஸ் கூட, தன்னை பரம பாகவதன் என்று அறிவிக்கிறான்; பாகவத என்பது விஷ்ணு பக்தர்கள் சூட்டிக்கொள்ளும் அடைமொழி ; பல பல்லவ மன்னர்களும் குப்தர்களும் தங்களை  பரம பாகவதர்கள் என்று அழைத்துக்கொள்கிறார்கள் ( என்னுடைய விஷ்ணு ஸஹஸ்ரநாம அதிசயங்கள் என்ற புஸ்தகத்திலும் இதே பிளாக்கில் வெளியான கட்டுரைத் தொடர்களிலும் அதிசயங்களை பட்டியலிட்டுள்ளேன்). The Ghosundi Inscription of the 2nd century B.C., சங்கர்ஷ்ண – பலராம- வாசுதேவ வழிபாட்டு மண்டபத்தைச் சுற்றி ஒரு சுவர் எழுப்பிய செய்தியை 2200 ஆண்டுகளுக்கு முந்தைய கொசுண்டி கல்வெட்டில் காண்கிறோம் ; குமரி முதல் இமயம் வரை கோவில்களில் வழி படப்பட்ட செய்தியை சாசனங்கள் மூலம் அறிய முடிகிறது; அதைவிட 2400 ஆண்டுகளுக்கு முன்னர் அர்த்த சாஸ்திரம் எழுதிய சாணக்கியனின் ஓரிஜினல் பெயர் விஷ்ணு குப்தன் என்பது முக்கியமானது ஆகும்.

கடவுள் வாழ்த்து பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார். இந்தக் காலத்தில் அவரை மிஸ்டர் மஹாதேவன் என்று அழைக்கலாம். மஹாதேவன் என்று சிவன் பெயரை வைத்துக் கொண்டு இவர் பாடியது மஹாபாரதம்! சரி போகட்டும்! என்று விட்டுவிட முடியவில்லை. இவர் நற்றிணையில் பாடிய கடவுள் வாழ்த்து விஷ்ணு சஹஸ்ர நாமம் என்னும் மஹாபாரதப் பகுதியாகும்! அதில் விஷ்ணுவின் புகழைப் பாடுகையில்

மாநிலம் சேவடி ஆக, தூநீர்
வளைநரல் பௌவம் உடுக்கை ஆக
விசும்பு மெய் ஆக, திசை கை ஆக
பசுங்கதிர் மதியமொடு சுடர் கண் ஆக
இயன்ற எல்லாம் பயின்று; அகத்து அடக்கிய
வேத முதல்வன் என்ப
தீது அற விளங்கிய திகிரியோனே (கடவுள் வாழ்த்து)

இது விஷ்ணு சஹஸ்ரநாமத்தில்,

க்ஷீரோதந்வத் ப்ரதேசே சுசிமணி விலஸத்ஸைகதே
என்று துவங்கும் தியான ஸ்லோகத்தில்
“
பூ: பாதௌ யஸ்ய நாபிர் வியதஸுர நில: சந்த்ர ஸூர்யௌ ச நேத்ரே
கர்ணா வாசாச் சிரோத் த்யௌர் முகமபி தஹனோ யஸ்ய வாஸ்தேயமப்தி:” — என்பதன் மொழி பெயர்ப்பாகும்.

***

விஷ்ணு குப்தன்

அர்த்தசாஸ்திரம் என்னும் உலகத்தின் முதல் பொருளாதார நூலை எழுதிய சாணக்கியரின் இயற்பெயர் விஷ்ணுகுப்தன்;

Vishnu gupta

Viṣṇugupta (विष्णुगुप्त).—Name of Chāṇakya.

Viṣṇugupta (विष्णुगुप्त):—astronomer. வானியல் ஆராய்ச்சியாளர் ஒருவரும் விஷ்ணுகுப்தர் என்ற பெயரில் வாழ்ந்ததை வராஹமிஹிரர் மேற்கோள் காட்டுகிறார் அப்படியானால் அவர் 1500 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்திருக்க வேண்டும் .

நேபாள நாட்டில் ஒரு மன்னனுக்கும் இதே பெயர் இருந்தது கல்வெட்டுகளில் எழுதப்பட்டுள்ளது. ஒரு வைஷ்ணவனின் பெயராக குப்தர் கல்வெட்டுகளில் வருகிறது

நேபாள நாட்டின் தலைநகரான காத்மாண்டு நகரிலிருந்து  20 கிலோமீட்டர் தொலைவிலுள்ள கோவிலுக்கும் விஷ்ணு குப்தர் பெயர்தான்!

Viṣṇugupta (विष्णुगुप्त) (=Viṣṇugun) is another name for Viśāṅkhunārāyaṇa—a shrine is located approximately 20 km southeast of Kathmandu on a hill in the foothills of Mount Phulcoki.

***

விஸ்வாமித்திரர்

க்ஷத்ரிய வம்சத்தில் பிறந்து பிராமண ஜாதிக்கு உயர்த்தப்பட்ட மாபெரும் மன்னன் ; மகரிஷி ; இவர் கண்டுபிடித்த காயத்ரீ மந்திரத்தைத்தான் பிராமணர்கள் மூன்று வேளை சந்தியாவந்தனத்தில் சொல்லிவருகிறார்கள் ! மக்களைத் தீய வழியில் திசை திருப்பிய மூன்று விஷயங்களை புத்தர் , ஏசு கதைகளிலும் படிக்கிறோம்; அந்த  3 தீய குணங்களை வென்றால் ஒருவர் பிராமணர் ஆகலாம் ; அப்படி ஆனவர் வசிஷ்ட மகரிஷி ; அவரை ஒருநாள் மன்னர் என்னும் படா ஜபர்தஸ்துடன், பட்டாளம் சகிதம் காணச் சென்றார் விசுவாமித்திரர். அவரும் இன்முகத்துடன் வரவேற்று பெரிய பட்டாளத்துக்கு பால் பாயசம் தந்தார் ; ஏனய்யா காட்டுக்குள் வசிக்கிறீர் ; உமக்கு இவ்வளவு லிட்டர் பாலை சப்ளை செய்தது எந்தக் கம்பெனி? என்று வினவவே அவர் விடை பகர்ந்தார் : என்னிடம் காம தேனு என்னும் விண்ணுலக அதிசயப்  பசு பெற்று எடுத்த நந்தினி என்னும் பசு இருக்கிறது; அது வேண்டுமளவுக்குப் பால்  கொடுக்கும் என்றார் ; ஓகே !ஓகே!  அது எனக்கு சொந்தமாக வேண்டும் என்று  ரெளவுடிகள் பாஷை யில் உத்தரவிட்டார் ; வசிஷ்டர் சிரித்துக்கொண்டே முடியாது அப்பனே!  என்றார் ; டேய் ! நான் மன்னன் டா ! என்று சொல்லிவிட்டு  ரெளவுடிகள் பாணியில் “ஏய் பிடிச்சு இழுங்கடா பசுவை” என்றார் ; வசிஷ்டாரோ மாபெரும் தபஸ்வி ; ஏய் நந்தினி உன் வேலையைக் காட்டு என்றார்; உடனே பசுவின் வாலில் இருந்து யவனர் மிலேச்சர் சஹர,ஹுஉணர் போன்ற எல்லா  கீழ்ஜாதிப் பட்டாளங்களும் புறப்பட்டு விசுவாமித்திரர் படையைத் துவம்சம் செய்த து  ; விசு.வுக்கு அவமானம் தாங்கவில்லை ; சரி! உம்மைப்போல சக்தி  பெற நான் என்ன செய்ய வேண்டும்? என்றார்; ரொம்ப ரொம்ப சிம்பிள் ; காம- க்ரோத- லோபம் என்னும் மூன்றையும் கடந்தால் பிராமணர் ஆகலாம் என்றார் ; அப்படியா உம்முடைய வாயால் என்னை பிரம்ம ரிஷி (பிராமணன்) என்று அழைக்கும் காலம் வரும்! பார்! என்று சவால் விட்டுவிட்டுப் புறப்பட்டார்.  வசிட்டனும் ததாஸ்து (அப்படியே ஆகட்டும் ) என்று ஆசீர்வதித்தார் .

விசு. மிகவும் கஷ்டப்பட்டு வசிட்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம் பெற்ற கதை ஏற்கனவே இந்தக் கட்டுரைத் தொடரில் வந்துள்ளது. ஆகையால் மிகவும் சுருக்கமாக :

தவம் செய்தார் ; செய்தார் ; செய்துகொண்டே இருந்தார் ; மேனகா என்ற பேரழகி வந்து நம்ம ஓர் காலேஜ் கேர்ள் போல  ட்ரஸ் போட்டுக்கொண்டு வந்து  டான்ஸ் ஆட , விசு. மயங்கிப்போய்  அவளோடு ஓடிப்போய் குடும்பம் நடத்தினார் ; ஒருநாளைக்குப்  புத்தி வந்தது !உடனே காட்டுக்கு ஓடினார் ; திரிசங்கு என்ற மன்னன் வந்தான் ; இந்தாப்பா ; உன் எதிரி வசிட்டன் என்னை உடலோடு சொர்க்கத்துக்கு அனுப்ப எந்த வழியும்  இல்லை என்கிறான்.

அப்படியா வசிட்டனை மட்டம் தட்டுகிறேன் என்று பெரிய யாகங்களை நடத்தி போ சொர்கத்ததுக்கு என்றவுடன் , திரிசங்கு உடல் விர் விர்ரென்று  ஹாட் ஏர் பலூன் HOT AIR BALLON போல மேலே சென்றது ஆனால் இந்திரன் , அப்பனே இந்த உடலுடன் நான் யாரையும் அனுமதிப்பதில்லை ; ஒளி LIGHT ரூபமாக வருவோருக்கே இங்கே அனுமதி என்று தள்ளிவிட்டான் ; திரிசங்கு அந்தரத்தில் தொங்கினான் ; விசு. சொன்னார்: அதனால் என்ன! உன்னைக் காலத்தால் அழியாத சதர்ன் க்ராஸ் SOUTHERN CROSS  / திரிசங்கு ந ட்சத்திரம் ஆக்கி விடுகிறேன் உன்னை தென் கோளார்த்த நாடுகள் எல்லாம் கொடியில் பொறிக்கட்டும் போ என்றார் (இன்றும் ஆஸ்திரேலியா நியூசிலாந்து பிரேசில் போன்ற ஐந்து நாட்டுக் கொடிகளிலும் அரசங்க சின்னத்திலும் திரிசங்கு நட் ச்சத்திரத்தைத்தான் பொறித்துள்ளார்கள் ; அவர்கள பாஷையில் தெற்குச் சிலுவை= சதர்ன் க்ராஸ் SOUTHERN CROSS  என்று பெயர்) 

அரிச்சந்திரன் உண்மை விளம்பிதானா என்று சோதிக்க அவனைப் படாத பாடு படுத்தினார் விசு. அவ்வளவு திமிர் ; இந்தக் கதையை அம்மா சொல்லிக் கேட்ட மஹாத்மா காந்தி, உண்மையே கடவுள்  என்றும் புஸ்தகம் எழுதினார்

விசு. மீண்டும் தவம் செய்தார் ; பிரம்மனைக் கன்னடர்; பிராமணன் ஆனார் ; வசிட்டரிடம் போனார் ; HELLO MR BRAHMANA ! WELCOME, WELCOME TO MY HUT! ஹலோ ; பிரம்மா ரிஷி வெல்கம் வெல்கம் டு மை குடிசை என்றார் ; விசுவுக்கு மகிழ்ச்சி பொங்கியது; உலகம் புகழும் நான்கு வேதங்களிலும் உள்ள காயத்ரீ மந்திரத்தை ரேடியோ அலை போல ரிஸீவ் செய்து மக்களுக்கு அளித்தார் ; இன்றும் கோடிக்கணக்கானோர் இந்தக் காயத்ரீ மந்திரத்தைச் சொல்கின்றனர்; இதை மூன்று வேளைகளில் சோளத்தவன் பிராமண இல்லை என்பதை மனு முதல் இப்போத்துள்ள சங்காராச்சார்யார்கள் வரை சொல்லிவருகின்றனர் விசு.வின் காயத்ரீ மந்திரத்தை பாரதியாரும் தமிழில் மொழி பெயர்த்துள்ளார் . விசு.வின் ஒரிஜினல் பெயர் ஆந்தை ; அதாவது அவருடைய சிம்பல்SYMBOL  ஆந்தை ; தமிழிலும் பிசிர் ஆந்தை பெயருடன் சங்க புலவர் உள்ளார் ஆந்தை என்றால் கெளசிக என்று சம்ஸ்க்ருதத்தில் பொருள்; பரத்வாஜ  என்றால் காக்கை / காகம் என்று பொருள்! ஒவ்வொரு மகரிஷிக்கும் ஒரு சிம்பல் உண்டு. விசுவாமித்திரரின் பொருள் = உலக நண்பன் ! FRIEND OF THE WORLD! சங்கத் தமிழில் யாவரும் கேளிர்!

பாரதியின் காயத்ரீ மந்திர மொழியாக்கம் :

“செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம்;

அவன் எங்கள் அறிவினைத் தூண்டி நடத்துக!”

இதை எல்லோரும் 108 முறை சொன்னால் பிராமணர் ஆகலாம் !மறந்து விடாதீர்கள் – மாணிக்க வாசகரின் கட்டளையை – “சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார்” என்ற பாடல் வரியின் பொருள் பின்வருமாறு:

பொருள்:

திருவாசகப் பாடல்களின் ஆழ்ந்த பொருளை முழுமையாக உணர்ந்து, மனமுருகிப் பாடுபவர்கள், சிவபெருமானின் இருப்பிடமாகிய சிவபுரத்தில் (முத்தி உலகில்) என்றும் அழியாத பேரின்பச் செல்வத்தைப் பெற்று வாழும் தகுதியைப் பெறுவார்கள்.இது காயத்ரீ மந்திரத்துக்கும் பொருந்தும்

To be continued…………………..

–subham—

TAGS- காயத்ரீ மந்திரம், விஸ்வாமித்திரர் , விந்திய மலை , HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL-121; இந்து மத கலைச்சொல் அகராதி-121

திருவாட்டாறு திவ்ய தேசம்! (Post.16,242)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 16,242

Date uploaded in London – 27 September 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

23-9-26 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை 

திருவாட்டாறு திவ்ய தேசம்!

 ச. நாகராஜன் 

108 வைணவ திவ்ய தலங்களில் 87வது திவ்ய தலமாக அமைந்திருப்பது கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள திருவாட்டாறு திருத்தலமாகும். இத்தலத்தில் நம்மாழ்வார் மங்களாசாஸனம் செய்துள்ளார்.

 வாட்டாற்றான் அடி வணங்கி மாஞாலப் பிறப்பறுப்பான்

கேட்டாயே மட நெஞ்சே! கேசவன் எம்பெருமானை

பாட்டாய பல பாடிப் பழவினைகள் பற்றறுத்து

நாட்டாரோடு இயல் ஒழிந்து நாரணனை நண்ணினமே   நம்மாழ்வார், திருவாய்மொழி, 10-6-2

 பாடலின் பொருள் : பரந்த உலகில் பிறப்புடனான பிணைப்பை நீக்குவதற்காக திருவாட்டாற்றில் உள்ளவனின் தெய்வீக திருவடியில் சரணமடைந்து, கேசியை நீக்கி, நமது தடைகளையும் நீக்கி, நம்மைத் தொண்டில் ஈடுபடுத்தி நம் பழவினைகளை அழித்தவருக்குப் பலவிதமான பாடல்களைப் பாடி நாராயணனை அணுகினோம். ஓ, எனது இதயமே! எம்பெருமானின் இந்த அருட்கொடைகளைப் பற்றி நீ கேட்டிருக்கிறாய்!

 இத்தலம் நாகர்கோவிலிலிருந்து  28 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. திருவனந்தபுரம் – கன்னியாகுமரி ரயில் பாதையில் இத்தலம் அமைந்துள்ளது. 

மூலவர்: ஆதிகேசவப் பெருமாள். புஜங்க சயனம்

தாயார்: மரகதவல்லித் தாயார்

தீர்த்தம்: கடல்வாய்த் தீர்த்தம், வாட்டாறு ராமதீர்த்தம்

 இத்தலத்தில் உள்ள பெருமாள் 22 அடி நீளம் கொண்டவராகக் காட்சி அளிக்கிறார். கர்பக்ருஹத்தில் மூன்று நிலை வாயில்கள் உள்ளன. திருமுகம்,

திருக்கரம், திருப்பாதம் என மூன்று பகுதிகளை ஒவ்வொரு நுழைவாயிலின் வழியாகக் கண்டு தரிசிக்கலாம்.

 இந்தக் கோவிலைப் பற்றிய சுவையான தல வரலாறு ஒன்று உண்டு.

முன்னொரு காலத்தில் கேசி என்ற அசுரன் தேவர்களைத் துன்புறுத்தி வந்தான். தேவர்கள் திருமாலிடம் சென்று முறையிட்டனர். உடனே அவர் கேசியுடன் மலியுத்தம் செய்து கேசியைத் தள்ளி மேலே படுத்துக் கொண்டார். கேசியின் மனைவியான ஆஸூரி என்பவள் உடனே கங்கையைப் பிரார்த்தித்தாள். கங்கை தாமிரபரணியுடன் வெள்ளப் பெருக்கெடுத்து ஓட, திருமாலின் ஆணயின் படி பூமாதேவி அவர் இருக்கும் இடத்தை மேடாக்கினாள். இதனால் கங்கையும் தாமிரபரணியும் பகவானை வணங்கி மாலை போல இரண்டாகப் பிரிந்து அவரைச் சுற்றி வட்டமாக ஓடின.

இதனால் இந்தத் தலம் திருவட்டாறு என்ற பெயரைப் பெற்றது.

 ஆதிகேசியை திருமால் வதை செய்ததால் இந்தத் தலத்தின் இறைவனுக்கு[s1]  ஆதிகேசர் என்ற திருநாமம் ஏற்பட்டது. கேசியை அழித்ததால் கேசவப் பெருமாள் என்று இவர் அழைக்கப்படலானார்.

இங்கு நதிகள் பிரியும் இடம் மூவாத்து முகம் என்றும் தோதை பிரளி என்றும் அழைக்கப்படுகிறது. நதிகளை அனுக்ரகிக்க இங்கு தீர்த்தவாரி நடக்கிறது.

சந்திரனும், பரசுராமரும் இங்கு திருமாலை வழிபட்டுத் தவமியற்றினர்.

 இங்கு மேற்கு பார்த்த நிலையில் இருக்கும் பெருமாளை தரிசிப்பவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்பது ஐதீகம். சட்டை அணியாமல் கேரள முறைப்படி பக்தர்கள் கோவிலுக்குள் சென்று தரிசனம் செய்வது மரபாகும்.

 இங்குள்ள ஒரு அதிசயம் என்னவெனில் கர்பக்ருஹத்தில் மூலவர் திருமுகத்தில் இயற்கையாக சூரிய ஒளி விழுகிறது. புரட்டாசி மற்றும் பங்குனி மாதங்களில் ஆறு நாட்கள் சூரிய கதிர்கள் நேராக கர்பக்ருஹத்தில் விழுவதைப் பார்க்கலாம்.

வைகுண்ட ஏகாதசி திருநாள் இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

 ஆலயம் தரையிலிருந்து 16 அடி உயரத்தில் உள்ளது. பல கட்டிடச் சிறப்புகளை இங்கு காணலாம். கோவிலில் உள்ள தூண்கள், கதவுகள், மேற்கூரைகள் ஆகிய அனைத்தும் மரத்தால் அமைக்கப்பட்டுள்ளன. கோவிலின் ஐந்து கலசங்கள் செம்பினால் செய்யப்பட்டு தங்க முலாம் பூசப்பட்டுள்ளது.

 கர்பக்ருஹத்திற்கு முன்னால் அமைந்துள்ள ஒற்றைக்கல் மண்டபம் 18 அடி சதுரமும் மூன்று அடி உயரமும் கொண்ட ஒற்றைக் கல்லால் அமைக்கப்பட்டுள்ளது.

 இங்குள்ள ஊர்த்துவ தாண்டவம், வேணுகோபாலர், ரதி, மன்மதன், லட்சுமணன், இந்திரஜித் உள்ளிட்ட சிலைகள் காண்பவரைக் கவரும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ள சிலைகளாகும்.

இங்குள்ள பெருமாளின் சிலை கடு சர்க்கரை யோகம் என்ற முறையில் விசேஷமாக அமைக்கப்பட்டுள்ள ஒன்றாகும். 16008 சாளகிராம கற்கள் இணைக்கப்பட்டு அமைக்கப்பட்டுள்ள சிலை மீது கடுசர்க்கரை என்ற சாந்து பூசப்பட்டுள்ளது. ஆகவே இது கடுசர்க்கரை யோகம் என்று  அழைக்கப்படுகிறது. இங்கு சிலைக்கு அபிஷேகம் கிடையாது. 

சுற்று பிரகாரத்தில் பாவை விளக்கு ஏந்திய மங்கையருடன் 224 தூண்கள் உள்ளன.

கோவிலில் உள்ள சுவரில் வண்ணச் சித்திரங்கள் கம்பீரமாகக் காட்சி அளிக்கின்றன. 

இக்கோவிலைப் பற்றிய இன்னொரு சுவையான செய்தியும் உண்டு.

கேசியின் மீது ஆதிகேசவப் பெருமாள் சயனித்த போது அவன் தனது 12 கைகளால் தப்ப முயற்சி செய்தான். திருமால் அவனது 12 கரங்களிலும் 12 ருத்ராட்சங்களை வைத்து அவன் தப்புவதைத் தடை செய்தார். இவையே திருவட்டாற்றைச் சுற்றி 12 சிவாலயங்களாக அமைந்தன. மஹாசிவராத்திரி நன்னாளன்று பக்தர்கள் ஓடியவாறு 12 சிவாலயங்களையும் தரிசித்து இறுதியாக ஆதிகேசவப் பெருமாளையும் அவர் பாதத்தின் கீழ் உள சிவனையும் தரிசிக்கின்றனர். முஞ்சிறை, திக்குறிச்சி, திற்பரப்பு, திருநந்திக்கரை, பொன்மனை, பந்நிப்பாகம், பத்மநாபபுரம் (கல்குளம், மேலாங்கோடு, திருவிடைக்கோடு, திருவிதாங்கோடு. திருப்பன்றிக்கோடு, திருநட்டாலம் ஆகியவையே 12 சிவாலயங்களாகும். 

வைணவ திவ்ய தலங்களில் சிறப்பான வரலாறைக் கொண்ட இந்தத் தலத்திற்கு பக்தர்கள் இடைவிடாது வந்து தரிசித்து திருமாலின் அருளைப் பெறுகின்றனர். 

**

YOUR FOREFATHERS VISITING YOU FOR 15 DAYS!

POSTED ON 27-9-2026 BY LONDON SWAMINATHAN.

MAALAYA PAKSHAM BEGINS TODAY 27-9-2026.

IT FINISHES ON 10TH OCTOBER 2026 AMAVASYAI/NEW MOON DAY.

ALL YOUR DEPARTED FOREFATHERS COME TO EARTH AND EAGERLY WAITING FOR YOUR BIG SALUTE.

JUST GARLAND THEIR PICTURES. IF U R A BRAHMIN JUST GIVE SESAME SEEDS AND WHITE RICE WITH WATER IN THE RIVERS OR SEA

THEY BLESS YOUR GENERATIONS.

Pitru Paksha: The deeper wisdom of shraddha, pinda daan and ancestral remembrance In the rush of modern life, Pitru Paksha offers a rare invitation to pause, remember and express gratitude to those wh…

Read more at: https://organiser.org/2026/09/27/382959/bharat/pitru-paksha-the-deeper-wisdom-of-shraddha-pinda-daan-and-ancestral-remembrance/

–SUBHAM—