Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
5-9-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை!
அமெரிக்க பெண்மணிகளின் ஆர்வம் – ஜெல் நெய்ல் பாலிஷ் ஆபத்தானதா, இல்லையா?
ச. நாகராஜன்
அமெரிக்கப் பெண்மணிகளுக்கு திடீரென இந்த வாரம் ஆர்வம் மேலிட்ட விஷயம் நெய்ல் பாலிஷ் பற்றியது.
ஜெல் நெய்ல் பாலிஷ் (GEL NAIL POLISH) ஆபத்தானதா அல்லது இல்லையா என்பது தான் இந்த வார டாபிக் அவர்களுக்கு! (இந்த வாரம் என்பது 2025 செப்டம்பர் முதல் வாரம்)
அவர்களுக்கு உடனடி விடை கிடைத்து விட்டது.
ஜெல் நெயில் பாலிஷ் (GEL NAIL POLIOSH) ஆபத்தானது தான்!
ஜெல் பாலிஷ் என்றால் என்ன?
சாதாரண நெயில் பாலிஷுக்கும் ஜெல் பாலிஷுக்கும் உள்ள வித்தியாசம் அதைப் போடும் போது தெரியும். சாதாரண நெயில் பாலிஷைப் போட்டவுடன் அது உலர்வதற்குக் குறைந்த பட்சம் அரை மணி நேரமாவது ஆகும். ஆனால் ஜெல் பாலிஷைப் போட்டால் ஒரு நிமிடம் அல்லது ஒன்றரை நிமிடத்தில் அது எல் ஈ டி பல்பின் வெளிச்சத்தில் உலர்ந்து விடும்.
அல்ட்ரா வயலட் ரே மூலம் உலர வைக்கப்படும் நெய்ல் பாலிஷ், சர்மத்தை சீக்கிரமாக மூப்படைய வைக்கிறது. அது மட்டுமல்ல, டிஎன்ஏ எனப்படும் மரபணுக்களை சேதமடையச் செய்வதோடு சீக்கிரமே கான்ஸர் வியாதியையும் தருகிறது.
உலர்வதற்கு நாங்கள் அல்ட்ரா வயலட் கதிர்களை உபயோகிப்பதில்லை என்று பல பெண்மணிகள் கூறுவார்கள். அப்படி இருந்தாலும் கூட ஜெல் நெயில் பாலிஷ் சரியான பொருத்தமான தேர்வு இல்லை. ஏன்?
ஜெல் பாலிஷில் அக்ரிலேட் மற்று மெதாக்ரைலேட் (Acrylate and Methacrylate) இருக்கிறது. இது ஒவ்வாமை எனப்படும் அலர்ஜியை ஏற்படுத்தி சொறி, சிரங்கை ஏற்படுத்துகிறது.
ஜெல் நெயில் பாலிஷை அடிக்கடிப் போட்டுக் கொள்ள பியூடி பார்லர்களுக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அழகு சாதன அறிவியல் நிபுணர்கள் கூறுவது இது தான் : அடிக்கடி போவதை நிறுத்தி விடுங்கள். முக்கியமான நாட்களுக்காக மட்டும் இதைப் போட்டுக் கொள்ளுங்கள். உங்கள் சருமம் அழகாகப் பாதுகாக்கப்பட வேண்டும் இல்லையா, சொல்லுங்கள்!”
ஜெல் நெயில் பாலிஷ் சாதாரணமாக இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கே நீடிக்கும். அந்த பாலிஷை நீக்குவதும் சரியாகச் செய்ய வேண்டிய ஒரு வேலையாகும். விரல்களை அசிடோனில் 15 நிமிட நேரம் வைத்திருக்க வேண்டும். அல்லது அசிடோனில் நனைக்கப்பட்ட சின்ன பஞ்சு உருண்டைகளை அலுமினியம் ஃபாயிலில் வைத்து விரல்களில் சுற்றி வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதை எடுத்து கைகளை நன்றாகக் கழுவ வேண்டும்.
நகங்களைப் பளபளப்பாக அனைவரையும் கவரும் விதத்தில் பாதுகாக்க முக்கியமான குறிப்புகள் உள்ளன. அவை இதோ:
நகங்களை சீரான இடைவெளியில் சுத்தம் செய்ய வேண்டும்.
நகங்களைச் சரியாக வெட்ட வேண்டும்.
வெட்டியவுடன் அதை சீராகத் தேய்த்து விட (ஃபைலிங்) வேண்டும்.
நீளமாக இருப்பதை விட சிறியதாக இருந்தால் அழுக்கும் சேராது; பாக்டீரியாக்களும் சேராது.
நகங்களின் மேல் புறத்தை ஃபைல் செய்யக் கூடாது.
சரியான சமச்சீர் உணவை எடுத்துக் கொள்வது அவசியம்.
பாத்திரங்களைத் துலக்கும் போது கையுறைகளைப் போட்டுக் கொள்ள வேண்டும்.
நகங்களைப் பற்களால் கடிப்பது கூடாது.
கடைசியாக ஒரு செய்தி.
TPO எனப்படும் Trimethylbenzoyl Diphenytphosphine Oxide சில ஜெல் நெயில் பாலிஷில் பயன்படுத்தப்படுகிறது. இது அல்ட்ரா வயலட் ஒளியில் பாலிஷ் கெட்டியாக உதவுகிறது. கான்ஸரை உருவாக்கும் அபாயம் இதில் இருப்பதால் ஐரோப்பாவில் இது தடை செய்யப்பட்டிருக்கிறது.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
பல திருப்புகழ் பாடல்களில் மனிதனின் கிழப்பருவம் பற்றி அருணகிரிநாதர் அழகுபட சந்தத் தமிழில் பாடியுள்ளார்; அதே போல பல பாடல்களில் மனிதனுக்கு வரும் நோய்களின் பட்டியலையும் அடுக்கியுள்ளார். ஆனால் மிகவும் அரிதாகவே மருந்துகள் என்ன என்று சொல்கிறார். தள்ளாத வயதினிலே நெஞ்சில் கபம் கட்டி, மருந்துகளைச் சாப்பிட்டு, வாய் குழறி முருகா என்ற நாமத்தைக் கூடச் சொல்ல முடியாத காலம் ஒன்று வரும். அதற்கு முன்னரே உனது நாமத்தைச் சொல்லி அருளைப்பெற வேண்டும் என்பது அவர் நமக்குச் சொல்லும் செய்தி. இந்த முக்கியச் செய்தியுடன் திரிபலா சூர்ணத்தின் மகிமையையும் நமக்குத் தெரிவிக்கிறார்.
இன்னும் ஒரு பாடலில் இக பர செளபாக்யம் அருள்வாயே என்கிறார் ஆக மனிதனுக்கு இகத்திலும்–அதாவது இந்தப் பூவுலகில் வாழும் போதும் , பரத்திலும்- அதாவது இறந்த பின்னர் நமக்கு ஏற்படப்போகும் நிலையிலும் நலமாக இருப்பது அவசியம் என்றும் வலியுறுத்துகிறார். ஆகவே நாம் திரிபலா சூரணத்தைத் தயாராக வைத்துக்கொள்ள வேண்டும். சளி, இருமல் கபம் முதலியன பாதிக்காத போதும் குளிர் காலத்தில் சாதத்துடன் கொஞ்சம் நெய்யில் இந்தச் சூர்ணப்பொடியைப் போட்டு ஒரு சிறிய கைப்பிடி சாப்பிடுவது நல்லது. ஏதோ திருப் புகழைப் படித்துவிட்டு எழுதுகிறேன் என்று நினைத்துவிட வேண்டாம் . எனது தந்தையார் மதுரைத் தினமணி பொறுப்பாசிரியர் (காலஞ்சென்ற) திரு வெங்கட்ராமன் சந்தானம் இவ்வாறு தினமும் சாப்பிடுவார். அதைப்பார்த்த எனக்கும் இதில் விருப்பம் ஏற்பட்டு லண்டனுக்கு திரிபலா சூர்ணப்பொடியை வாங்கி வந்து பல மாதங்களுக்குச் சாப்பிட்டேன். பின்னர் உடம்பில் நெய் சேர வேண்டாம் என்று விட்டுவிட்டேன் . நெய்யோடு சாப்பிடுவது நல்ல ருசியாகத்தான் இருந்தது; இந்தப் பொடியின் வாசனை பிடித்தவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்!
அருணகிரிநாதர் சொன்ன முக்கியமான விஷயம் இப்படியெல்லாம் மருந்துகள் சாப்பிடும் நிலை வருவதற்கு முன்னர் உன்னுடைய திருப்புகழைப் தினமும் பாடிப்பழக வேண்டும் என்பதேயாம் ; அதை மறந்து விடக்கூடாது.
***
திரிபலா சூர்ணம் என்றால் என்ன என்பதை அறியாதோர் என்னுடைய பழைய கட்டுரையைப் படியுங்கள்; கடைசியில் கொடுத்துள்ளேன்.
குலகிரி யிற்புக் குற்று … மேலான மலையிற் சென்று பொருந்தி
உறை யுக்ரப் பெருமாளே. … வீற்றிருக்கின்ற பெருஞ்சினத்துப்
பெருமாளே.
****
தமிழிலும் ஆங்கிலத்திலும்
பொருள் எழுதியது
ஸ்ரீ கோபால சுந்தரம்
Meanings in Tamil and English by
Sri Gopala Sundaramhttps://www.kaumaram.com/thiru/nnt1321_u.html#
***
QUIZ மருந்துப் பத்து QUIZ (Post No.12,171)
Post No. 12,171
Date uploaded in London – – 22 June , 2023
1. திரி கடுகம் என்று தமிழ் நூலுக்கு மருந்தின் பெயர் இட்டது ஏன்
2. சிறு பஞ்ச மூலம் என்ற நூலின் பெயரில் உள்ள 5 வேர்கள் என்ன ?
3. ஏலாதி என்பன என்ன?
4.அஷ்ட சூர்ணத்தில் உள்ள எட்டு மருந்துச் சரக்குகளை சொல்ல முடியுமா?
5. திரிபலா சூர்ணம் என்பது என்ன ?
6.ரோஜா இதழ்களை வைத்து தயாரிக்கும் சாப்பிடக்கூடிய பண்டம் எது?
7.நெல்லிக்காயை வைத்து தயாரிக்கப்படும் லேகியத்தின் பெயர் என்ன?
8.கரிசலாங்கண்ணி மூலிகை என்ன நோய்க்குச் சிறந்த மருந்து ?
9.பாம்பின் பெயருள்ள இருதய நோய் சிகிச்சை மூலிகையின் பெயர் என்ன ?
10.மருத்துவத்தின் தந்தை ஹிப்பாக்ரடீஸ் என்ற கிரேக்கர் என்பர் மேலை நாட்டினர். ஆனால் இந்துக்கள் சொல்லும் மருத்துவத் தந்தை யார் ?
****
Answers
1.திரி கடுகம் என்பது சுக்கு, மிளகு, திப்பிலி ஆகும்;அவை வியாதிகளைப் போக்குவது போல தீமைகளை அகற்ற , ஒவ்வொரு பாடலிலும் 3 வழி களைக் குருகிறது இந்த நீதி நூல்.. திரிகடுகம் நூலாசிரியர் நல்லதனார்
2. சிறு பஞ்ச மூலம் என்ற நூலில் உள்ள 5 வேர்கள் :கண்டங்கத்திரி, சிறுவழு துணை , சிறு மல்லி, பெரு மல்லி,நெருஞ்சில் செடிகளின் வேர்கள் ஆகும்.இவை எப்படி உடலுக்கு நன்மை செய்கின்றனவோ அது போல மனிதனுக்கு நன்மை செய்யும் நீதிகள் இந்த நூலில் உள்ளன . ஆசிரியர் காரியாசான்.
3. நீதிகளைக் கூறும் தமிழ் நூலுக்கு ஏலாதி என்று நூலாசிரியர் கணி மேதாவியார் பெயரிட்டார். ஈழம், சிறு நாவற் பூ, மிளகு, திப்பிலி, சுக்கு போன்றவை காலத்தை மருந்துபி போட்டிகள் எப்படி உடலுக்கு நன் மை பயக்குமோ அப்படி ஒவ்வொரு பாடலிலும் 6 நீதிகளை வழங்குகிறார்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
நம்மாழ்வார் பாசுரங்களில் உள்ள தமிழ்ச் சொற்களைக் கொஞ்சம் சுவைப்போம்.
3410 வைத்த மா நிதியாம் மதுசூதனையே அலற்றி
கொத்து அலர் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொன்ன
பத்து நூற்றுள் இப் பத்து அவன் சேர் திருக்கோளூர்க்கே
சித்தம் வைத்து உரைப்பார் திகழ் பொன் உலகு ஆள்வாரே
சேமித்து வைத்த சேமநிதிபோன்ற மதுசூதனையேபற்றி பூங்கொத்துக்கள் மலர்கின்ற சோலைகள் சூழ்ந்த திருக்குருகூரில் அவதரித்த ஸ்ரீசடகோபராலே அலற்றி அருளிச்செய்யப்பட்ட பத்து நூற்றுள் இந்தப் பத்துப் பாசுரங்களையும் அவன் சேர்ந்திருக்கின்ற திருக்கோளூரிலேயே சித்தத்தை வைத்து உரைப்பவர்கள் விளங்குகின்ற பரமபதத்தை ஆள்வார்கள் என்றபடி.
***
அருள்மிகு வைத்தமாநிதிப்பெருமாள் திருக்கோவில்
திருக்கோளூர், தூத்துக்குடி மாவட்டம்- த்திலுள்ளது . இது மதுர கவி ஆழ்வார் பிறந்த திருத்தலம் . குபேரன் தன் செல்வத்தை வைத்த இடம் அல்லது இன்வெஸ்ட் INVEST – முதலீடு செய்த இடமென்று சொல்லலாம்.
இந்தக் கட்டுரை இன்வெஸ்ட்மென்ட் – முதலீடு பற்றியது. வைத்த மாநிதி என்ற பெயர் மறக்க முடியாதது. நான் மதுரை தினமணிப் பத்திரிகையில் (1971-1986) சீனியர் சப் எடிட்டராகப் பணியாற்றியபோது ஒருநாள் தினமணி ஆசிரியர் ஏ என் சிவராமன் (ANS) சப் எடிட்டர் உள்ள மேஜைகள் அருகே வந்து “ஏய், வைத்த மாநி என்றால் ஆங்கிலத்தில் என்ன தெரியுமா ? ப்ராவிடென்ட் பண்ட் PROVIDENT FUND ( PF) என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். எங்கள் சப் எடிட்டர் குரூப்பில் ஒருவர் மட்டுமே அய்யங்கார் ; ஏனையோர் அய்யர், பிள்ளை, கோனார் (யாதவர்) ஜாதிகளை சேர்ந்தோர். அன்று அந்த அய்யங்கார் ‘ட்யூட்டி’யில் இல்லை என்று எண்ணுகிறேன். ஆகையால் திரு ஏ என் எஸ் சொன்னதன் பொருளை பாராட்டவோ மேலே விவாதிக்கவோ யாரும் இல்லை; அவரும் அதைச் சொல்லிவிட்டு அவர் உடகார்ந்துள்ள இடத்துக்குச் சென்றுவிட்டார். இப்போது நம்மாழ்வார் பாசுரத்தைப் படிக்கும்போது அவர் சொன்னதன் ஆழ்ந்த பொருள் விளங்குகிறது!
அவர் திருநெல்வேலி மாவட்ட ஆம்பூரைச் சேர்ந்தவர்;ஆகையால் அவருக்கு வைத்தமாநிதி திடீரென்று நினைவுக்கு வைத்தது போலும் .
இப்போது பிராவிடண்ட் பண்டு என்பதை ‘வருங்காலச் சேமிப்பு நிதி’ என்கிறார்கள். அதில் ஊழியர் எவ்வளவு பணம் போடுகிறாரோ அந்த அளவுக்கு முதலாளியும் போட வேண்டும்; முதலாளி கூடுதலாகவும் போட்டு தொழிலாளிக்கு உதவ முடியும். அதை ஒரு தொழிலாளி வீடு கட்டவோ, வீட்டில் நடக்கும் கல்யாணம் முதலியவற்றுக்கோ பாதியில் எடுத்துக்கொள்ளவும் வழி உண்டு. இதை கடவுள் பெயருக்கு வைத்து எண்ணி எண்ணி வியப்படைகிறேன். நீங்கள் எந்தளவுக்கு பக்தி செலுத்துகிறீர்களோ அந்த அளவுக்குப் பெருமாளும் உங்கள் மீது முதலீடு செய்வார் அதாவது அருள் மழை பொழிவார்; எப்படி பி எப் -பில் முதலாளி கூடுதலாக உங்கள் பெயரில் பணம் போட முடியுமோ அது போல இறைவனும் உங்கள் பெயரில் அதிகம் அருள் மழை பொழிய- கருணை காட்ட -வாய்ப்பும் உண்டு. அதனால்தான் மாணிக்க வாசகர் போன்ற மகான்கள் அவனருளாலே அவன் தாள் வணங்கி என்று பாடினார்கள் போலும்!இன்னும் கொஞ்சம் யோசித்துப்பார்ப்போம்; தொழிலாளி சம்பளத்தில் எவ்வளவு பணம் போடுகிறாரோ அந்த அளவுக்கு முதலாளி உங்கள் பி.எப் பில் பணம் போட்டாக வேண்டும் இது போலத்தான் இறைவனும்! சத்தியம் என்னும் விதிக்கு கட்டுப்பட்டவர். ராவணன் ஆனாலும் பஸ்மாசுரன் ஆனாலும் அவரவர் வேண்டுதலுக்கு ஏற்ற விகிதாசாரப்படி இறைவன் வரம் கொடுத்தே ஆக வேண்டும். எப்போது முதலாளி
நாம் செலுத்தும் பங்கினை விட நமது பெயரில் கூடுதல் பணம் போடுவார்? அவர்கள் கம்பெனி மீது நமக்கு நல்ல எண்ணமும் நல்ல ஈடு பாடும் இருந்தால் மனம் மகிழ்ந்து கூடுதல் பணத்தை நமது அக்கவுண்டில் செலுத்துவார். அதே போல நாமும் இறைவனிடத்தில் அவரது கம்பெனி/ கோவிலில் அதிக ஈடுபாடு காட்டினால் முதலீடு பெருகும். இந்த முதலீட்டுக்கு வட்டியும் கிடைக்கும். அந்த வட்டி, குட்டியும் போடும் என்பதை நினைவிற்கொண்டு வைத்த மாநிதியை வணங்குவோம்.
வைத்த மாநிதி- ஆழ்ந்த பொருள் உள்ள நாமம் !
–subham—
Tags- வைத்த மாநிதி, Provident Fund, ANS, Madurai Dinamani, Senior Sub Editor, நம்மாழ்வார்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
4-9-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை!
MOTIVATION
கான்பாரு!(GANBARU) முடிந்ததைச் செய்வோம்!
ச. நாகராஜன்
கான்பாரு! கான்பாரு! (GANBARU)
இந்த ஜப்பானிய வார்த்தைக்கு அர்த்தம் – நம்மால் முடிந்ததை செய்வோம்!
எவ்வளவு தடை நேர்ந்தாலும், எப்படிப்பட்ட கஷ்டங்கள் வந்தாலும் சளைக்க மாட்டோம், ஓய மாட்டோம், கான்பாரு – முடிந்ததைச் செய்வோம்!
ஒரு காரியத்தில் நமக்கு இருக்கும் மன உறுதியையும், விடாமுயற்சியையும் குறிக்கும் இந்தச் சொல் பல்லாயிரக்கணக்கானோருக்கு வெற்றியைக் காண்பித்த சொல்லாகும்.
உடனடி விளைவுகளையோ நலன்களையோ கருதாமல் எடுத்த காரியத்தில் இறுதிக் குறிக்கோளை அடையச் செய்வது கான்பாரு!
பிரம்மாண்டமான ஒரு திட்டத்தில் நாம் ஈடுபடும் போது இதை எப்படி முடிக்கப் போகிறோம் என்ற மலைப்பை விட்டு விட்டு ஒரு முனைப்பட்ட கவனத்துடன் கொஞ்சம் கொஞ்சமாக நமது குறிக்கோளை விடாமுயற்சியுடன் அடையச் செய்வது கான்பாரு.
ஒரு சின்ன உதாரணம் இதோ>
நடைப்பயணம் மேற்கொண்ட ஒரு பெண் பாலைவனத்தில் வழிதவறி எங்கெங்கோ அலைந்து கொண்டிருந்தாள். ஒரே தாகம். ஒரு சொட்டுத் தண்ணீர் கிடைக்காதா என்று அழுதவாறே மனம் கலங்கிப் போய்க் கொண்டிருந்த அவளுக்கு எதிரே திடீரென்று ஒரு பெரிய ஏரி தென்பட்டது.
ஓட்டமாக ஓடி அதன் அருகே சென்று அவள் நின்றாள். நிர்மலமான நீர்.
அவள் அதைப் பார்த்து மலைத்தாள். அவளது தாகம் அவளை வாட்டியது. அவளால் நீரை எடுக்க முடியவில்லை.
அப்போது அருகே ஒட்டகம் ஒன்றில் ஒரு மனிதன் வந்து நின்றான்.
“சகோதரி! ஏன் இப்படி மலைத்துப் போய் நிற்கிறாய்? தாகத்தினால் தவிப்பது போல் தெரிகிறதே. நீரை அள்ளிக் குடி” என்றான் அவன்.
கலங்கி நின்ற அவள்,”இவ்வளவு தண்ணீரையும் எப்படிக் குடிக்க முடியும்?’ என்றாள்.
“இதோ இப்படி” என்ற அந்த மனிதன் இரு கைகளாலும் நீரை வாரி எடுத்தான். அவள் கைகளை நீட்டச் சொன்னான். “குடி” என்றான்.
அவளும் குடித்தாள். “தாகம் தணிந்ததா! ஒரு மடக்கு போதும் உன் தாகத்தைத் தணிக்க. ஒவ்வொரு வாயாக கொஞ்சம் கொஞ்சமாக நீரைக் குடி” என்றான் அவன்.
அவள் மலைப்பதை விட்டாள்; காரியத்தில் இறங்கினாள். ஒவ்வொரு மடக்காக அவள் தாகம் முற்றிலுமாகத் தணியும் வரை நீரைக் குடித்தாள். அந்த சகோதரனுக்கு நன்றி கூறினாள்.
இது தான் வாழ்க்கை!
ஒவ்வொரு அடியாக நம்மால் முடிந்ததைச் சிறப்பாக கவனத்துடன் செய்து கொண்டே இருக்க வேண்டும்.
நீண்ட நெடிய பாதை, ஒரு சின்ன அடியில் தான் துவங்குகிறது.
ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்தால் நீண்ட பாதையும் ஒரு நாள் முடிந்தே விடும்.
இன்றைய நவீன உளவியல், ஒரு செயலின் ஆதாயத்தை விட அதில் ஈடுபடும் முயற்சியையே ஆதரிக்கிறது.
கான்பாருவுக்கு உதாரணமாக ஒரு நிஜமான சம்பவத்தைக் கூறலாம்.
இது நியூயார்க் டைம்ஸில் வெளிவந்த செய்தி.
இரண்டாம் உலக மகாயுத்தம் நடந்த சமயம்.
ஷோய்சி யோகோய் (பிறப்பு 31-3-1915 மறைவு 22-9-1997) என்பவன் ஜப்பானியப் படையில் ஒரு சார்ஜெண்ட். 1945ல் உலக மகா யுத்தம் முடிவுக்கு வந்தது. ஆனால் காம் என்ற இடத்திலுள்ள காடுகளில் மறைந்திருந்த அவனுக்கு போர் முடிந்ததே தெரியாது. காட்டில் தகவல் தொடர்பே இல்லை. அவன் போரைத் “தொடர்ந்து” நடத்திக் கொண்டிருந்தான். 28 வருடங்கள் கழித்து, 1972ம் ஆண்டு ஜனவரி மாதம் 24ம் தேதி அவனைக் காட்டில் கண்டுபிடித்தார்கள். காட்டின் அருகில் ஓடிக் கொண்டிருந்த நதியில் மீன் பிடிக்க வந்த இரண்டு உள்ளூர்க்காரர்கள் அவனைக் கண்டார்கள்.
சரணாகதி என்பதை என்னால் நினைத்துப் பார்க்கவும் முடியாது என்று கூறிய அவன் டிவி காட்சிகளில் பிரபலமானான். 2006ம் ஆண்டு அவன் பெயரில் நகோயா நகரில் ஒரு நினைவுக் கூடம் திறக்கப்பட்டது.
போரில் கடைசியாக கண்டுபிடிக்கப்பட்ட மூன்று ஜப்பானிய வீரர்களில் ஷோய்சியும் ஒருவர்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Mitra Seva UK organised Radha Madhava Kalyana Mahotsava for the sixth consecutive year in London on 21, 22 and 23rd of November 2025. The event took pace in the huge Sattavis Patidhar Hall in Wembley. The hall was overflowing with more than 1000 people on each day. They came from different places like Scotland in the north and Southampton in the South . Devotees donated liberally and all the three days prasad was served in the morning and evening.
In between Sri Udaiyalur’s Bhajan, cultural programmes were performed by young and old artistes. Dancers and Musicians from various fields took part in it.
Sri Rajagopalan and Mrs Uma Rajagopalan, Sri Raj and Mrs Meena Raj lead the big volunteer group who made the event a grand success. Damp weather did not dampen the enthusiasm of the devotes. They all sang and danced.
Dr Udaiylaur Kalyanarama Bhagavathar was accompanied by efficient singers and instrumentalists such as Bruga Balasubramaniam, Babu, Mukund, Vindod and others. Please see the invitation for more details.
I could attend only a few hours on all the three days. I am posting some pictures. For each Ashtapathi, the stage backdrop was changing. All the modern technology was used to make the show a colourful event. In addition to decorations, stalls selling various products also attracted the crowd.
–subham—
Tags- Radha Kalyanam, Udaiyalur, London, November 2025.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;
லண்டன் மாநகரிலிருந்து, வைஷ்ணவி ஆனந்த்தும் லதா யோகேஷும் வாசித்து வழங்கும் செய்தி மடல்.
அனைவருக்கும் வணக்கம். இன்று ஞாயிற்றுக்கிழமை நவம்பர் மாதம் 23- ம் தேதி , 2025-ம் ஆண்டு.
****
இன்று ஸ்ரீ சத்யசாயிபாபா பிறந்த தினம் .
முதலில் பாபா நூற்றாண்டு விழாச் செய்திகள் இதோ :
பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா நூற்றாண்டு விழா;
புட்டபர்த்தியில் பிரதமர் மோடி வழிபாடு:
புட்டபர்த்தி வந்த பிரதமர் மோடி, ஸ்ரீ சத்ய சாய்பாபா நுாற்றாண்டு விழாவில் பங்கேற்றர். முன்னதாக, பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் மகா சமாதியில் வழிபட்டு, தியானத்தில் ஈடுபட்டார்.
ஸ்ரீ சத்யசாய் பாபா, ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் 1926, நவ., 23ல் பிறந்தார். ஆன்மிக பணிகளுடன் ஸ்ரீசத்யசாய் அறக்கட்டளை மூலம் ஏழைகளுக்கு கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை இலவசமாக வழங்கத் துவங்கினார். புட்டபர்த்தியில் இவர் ஏற்படுத்திய ஸ்ரீ சத்யசாய் அறக்கட்டளை சார்பில் பிரமாண்ட இலவச மருத்துவமனை, கல்வி நிறுவனங்கள் இன்றும் மிகச் சிறப்பாக செயல்படுகின்றன.
புட்டபர்த்தியில் ஸ்ரீசத்ய சாய் பாபாவின் நுாற்றாண்டு பிறந்த நாள் கொண்டாட்டம் கடந்த நவ., 13ம் தேதி தொடங்கியது. வரும் நவ., 24 வரை கோலாகலமாக நடக்கிறது. உலகின் 140 நாடுகளை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று வருகின்றனர்.
இவ்விழாவில் பங்கேற்க, பிரதமர் மோடி நவ.,19 காலை புட்டபர்த்தி வந்தார். பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் பிரசாந்தி நிலையம் சென்று மகா சமாதியில் மரியாதை செய்தார். அங்கு வேத பண்டிதர்கள் மந்திரங்களை முழங்க, பிரதமர் மோடி சிறிது நேரம் தியானம் செய்தார். தொடர்ந்து, கோசாலையில் இருந்த பசுக்களுக்கு தீவனம் வழங்கினார்.
விழாவுக்கு ஸ்ரீ சத்யசாய் மத்திய அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ரத்னாகர் தலைமை வகித்தார். நடிகை ஐஸ்வர்யா ராய், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோர் சத்ய சாய்பாபாவின் போதனைகள், சேவையின் மகிமைகளை பற்றி பேசினர்.
தொடர்ந்து பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் வாழ்க்கை, போதனைகள் மற்றும் பாரம்பரியத்தை கவுரவிக்கும் விதமாக 100 ரூபாய் நாணயம் மற்றும் தபால் தலையை பிரதமர் மோடி வெளியிட்டார். தொடர்ந்து சத்ய சாய்பாபாவின் பெருமைகள் பற்றியும், அவரது சேவை குறித்தும் பிரதமர் மோடி உரையாற்றினார்.
சத்ய சாய்பாபா தற்போது தம்முடன் இல்லை என்றாலும், அவரது போதனைகள் மற்றும் அன்பு, சேவை மனப்பான்மை ஆகியவை உலகெங்கும் கோடிக்கணக்கானவர்களை வழிநடத்துவதாகவும், மனித வாழ்க்கையில் சேவை என்பதை இதயத்தில் கொண்டு இருக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
***
கோயில்களின் பழமை மற்றும் பாரம்பரியம் பாதுகாக்கப்பட வேண்டும் : நீதிபதிகள் கருத்து!
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சொத்துக்களை மீட்பது தொடர்பான வழக்கில், கோயில்களின் பழமை மற்றும் பாரம்பரியம் பாதுகாக்கப்பட வேண்டும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் அதன் உப கோயில் சொத்துக்களை மீட்டு பாதுகாக்கக் கோரி சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இது குறித்த விசாரணையில், இந்து சமய அறநிலையத்துறை மற்றும் வருவாய் துறை தரப்பில் மீனாட்சி அம்மன் கோயிலின் உப சொத்துக்கள் தொடர்பான விபரங்கள் அறிக்கையாகத் தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து, இந்து சமய அறநிலையத் துறையின் ஆணையர், இணை ஆணையர், வருவாய் துறை அலுவலர் இணைந்து கோயில் சொத்துக்களை ஆவணங்களின் அடிப்படையில் பொருத்தி, உறுதி செய்ய வேண்டும் எனவும், வரும் 22ஆம் தேதி அது தொடர்பான கூட்டத்தை நடத்தி எடுக்கப்பட்ட முடிவுகள்குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதனிடையே, மீனாட்சி அம்மன் கோயில் கிழக்கு ராஜகோபுரம் பகுதியில் கிரானைட் கற்கள் புதிதாகப் பதிக்கப்படுவதாகவும், கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு உணவு வழங்குவதற்காக யானை மண்டபம் பகுதியில் உணவு சமைக்கப்படுவதாகவும் மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
அதற்கு, கோயில்களின் பழமை மற்றும் பாரம்பரியம் பாதுகாக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், இது தொடர்பாகப் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை வரும் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
****
திருப்பதி பாலாஜி கோவிலில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சாமி தரிசனம்!
2 நாள் பயணமாகத் திருப்பதி சென்றுள்ள குடியரசுத் தலைவர் திரௌதி முர்மு, திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயாரை வழிபட்டார்.
இதனை தொடர்ந்து, திருப்பதியில் உள்ள பத்மாவதி தாயார் விருந்தினர் மாளிகையில் இரவு தங்கிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு காலை 9.30 மணி அளவில் வராகச் சாமியை வழிபட்டார்.அப்போது, தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவர் பி.ஆர்.நாயுடு, வரவேற்பு அளித்துக் குடியரசுத் தலைவரை ஏழுமலையான் கோயிலுக்குள் அழைத்துச் சென்றனர்.
இதனை அடுத்து, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு குடும்பத்தினருடன் ஏழுமலையானை தரிசனம் செய்தார்.
குடியரசுத் தலைவரின் வருகையையொட்டி திருப்பதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
***
சபரிமலை ஆவணங்களை மாற்றி எழுதினார் தேவசம் போர்டு ‘மாஜி‘ தலைவர்
சபரிமலை தங்கம் கொள்ளை வழக்கில் கைதான திருவிதாங்கூர் தேவசம் போர்டு முன்னாள் தலைவர் பத்மகுமார், தங்க முலாம் பூசப்பட்ட செப்புத் தகடுகளுக்கு பதிலாக செப்புத் தகடுகள் என ஆவணங்களில் மாற்றி எழுதியது, சிறப்பு புலனாய்வு குழு நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது
சபரிமலை அய்யப்பன் கோவில் சன்னிதான மூலஸ்தானத்தின் இருபுறமும் உள்ள துவார பாலகர் சிலையில் இருந்த தங்க தகடுகளில் இருந்து, தங்கம் திருடு போனது தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரித்து வருகின்றனர்.
திருவிதாங்கூர் தேவசம் போர்டின் முன்னாள் தலைவரும், மார்க்சிஸ்ட் கம்யூ., முன்னாள் எம்.எல்.ஏ.,வும், பத்தனம்திட்டா மாவட்ட மார்க்சிஸ்ட் முக்கிய நிர்வாகியுமான பத்மகுமாரை சிறப்பு புலனாய்வு குழு போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
அவரிடம் தீவிர விசாரணை நடத்தி, நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வு குழு தாக்கல் செய்த அறிக்கை:
கடந்த, 201 9 மார்ச் 19ல் பத்மகுமார் தலைமையில் நடந்த வாரிய கூட்டத்திற்கு பின், தங்க முலாம் பூசப்பட்ட கருவறை கதவுகளின் சட்டங்களை அகற்ற பத்ம குமார் உதவினார். அவற்றை தங்க முலாம் பூசவும் ஒப்படைத்துள்ளார்.
இந்த கதவுகளில், தங்க முலாம் பூசப்பட்டதை அறிந்தும், பதிவேடுகளில் செப்பு தகடுகள் என மாற்றி எழுதினார்.
இதன் மூலம், தங்க தகடுகளை, உன்னிகிருஷ்ணன் பெற வழிவகுக்கப்பட்டது. அதன்பின் சென்னைக்கு எடுத்து செல்லப்பட்டு, அக்கதவுகளில் இருந்து தங்கத்தை அகற்றி திருப்பி அனுப்பப்பட்டது. இவற்றை, மீண்டும் சரிபார்க்க பத்மகுமார் தவறியுள்ளார்.
****
சபரிமலையில் நெரிசல்: கேரள ஐகோர்ட் விளாசல்
திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலில் கூட்ட நெரிசல் அதிகரித்துள்ளதற்கு அதிருப்தி தெரிவித்த கேரள உயர் நீதிமன்றம், ‘கடந்த ஆறு மாதங்களாக பக்தர்கள் வசதிகளுக்காக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?’ என, கேள்வி எழுப்பியுள்ளது.
சபரிமலையில் மண்டல பூஜை துவங்கியது முதலே கூட்ட நெரிசல் அதிகரித்து வருவதை காணமுடிகிறது. இதற்கான ஏற்பாடுகளை திருவிதாங்கூர் தேவசம் போர்டு முன்பே செய்யாதது ஏன்? ஆறு மாதங்களுக்கு முன்பே, பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்திருந்தால் கூட்ட நெரிசலை தவிர்த்திருக்கலாம். இதற்கு, தேவசம் போர்டின் அதிகாரிகளிடையே போதிய ஒருங்கிணைப்பு இல்லாததே காரணம்..பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை ஏற்பாடு செய்வது குறித்து, ஏற்கனவே பிறப்பித்த உத்தரவுகளை தேவசம் போர்டு ஏன் பின்பற்றவில்லை. என்று கேள்விக்கணைகளைத் தொடுத்துள்ளது
கேரள உயர் நீதிமன்றத்தின் கவலையை கருத்தில் கொள்வதாகவும், உரிய ஏற்பாடுகளை தேவசம் போர்டு செய்யும் என்றும் புதிதாக நியமிக்கப்பட்ட திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, நெரிசலை சமாளிக்க அரக்கோணத்தில் இருந்து சென்ற தேசிய பேரிடர் மீட்புப் படையினர் சபரிமலைக்கு விரைந்தனர்.
****
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் நவம்பர் 30ல் கார்த்திகை தீபம் ஏற்ற ஹிந்து முன்னணி அழைப்பு
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் நவம்பர் 30ல் கார்த்திகை தீபம் ஏற்ற ஹிந்து முன்னணி அழைப்பு விடுத்துள்ளது.
மதுரை, திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள உச்சிப்பிள்ளையார் கோவில் மண்டபம் அருகிலுள்ள மண்டபத்தின் மேல் சுப்பிரமணிய சுவாமி கோவில் சார்பில் ஆண்டு தோறும் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படுகிறது.மலை உச்சியில் தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது காலங்காலமாக நடந்து வந்தது. இரண்டாம் உலகப்போரின் போது, பாதுகாப்பு காரணமாக, ஆங்கிலேய அரசு அதை தடை செய்தது.
அதனால், கோவில் முன்புறம் உள்ள துாணில் தீபம் ஏற்றப்பட்டது. அந்த நடைமுறை இதுவரை மாறவில்லை
தற்போது நீதிமன்ற உத்தரவின் படி வரும் நவம்பர் 30ம் தேதி மாலை 3 மணிக்கு, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட உள்ளது. மலை மீது கார்த்திகை தீபம் ஏற்ற வருமாறு, ஹிந்து முன்னணி அழைப்பு விடுத்துள்ளது.
ஆனால் பெரிய கார்த்திகை தீப விழா டிசம்பர் மூன்றாம் தேதிதான் நடைபெறுகிறது
****
இந்தியா ஒரு ஹிந்து நாடு என்பதற்கு எந்த அறிவிப்பும் தேவையில்லை; மோகன் பகவத்
இந்தியா ஒரு ஹிந்து நாடு என்பதற்கு எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் தேவையில்லை என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.அசாமின் கவுகாத்தியில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது; ஹிந்து என்பது ஒரு மதச் சொல் மட்டுமல்ல, ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் கலாசாரத் தொடர்ச்சியில் வேரூன்றிய ஒரு நாகரிக அடையாளம். முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும், தங்களது வழிபாடு முறைகளையும், பாரம்பரியங்களையும், விட்டுக்கொடுக்காமல், இந்திய கலாச்சாரத்தைப் பின்பற்றி, இந்திய முன்னோர்களை நினைத்து பெருமை கொண்டால், அவர்களும் இந்துக்கள்தான். பாரதத்தில் பெருமை கொள்பவர் அனைவருமே ஹிந்துக்கள் தான்.
பாரதம் மற்றும் ஹிந்து என்பது ஒரு அர்த்தம் கொண்டவை. இந்தியா ஒரு ஹிந்து நாடு என்பதற்கு எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் தேவையில்லை. அதன் நாகரிக மரபே அதனை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது. பிறருக்கு எதிராக ஆர்எஸ்எஸ் தொடங்கப்படவில்லை.
பண்பாட்டை வளர்ப்பதற்கும், உலகின் தலைசிறந்த நாடாக இந்தியாவை உருவாக்கும் முயற்சியில் பங்களிப்பை வழங்கவே ஆர்எஸ்எஸ் உருவாக்கப்பட்டது. பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவை ஒன்றுபடுத்துவதே ஆர்எஸ்எஸின் நோக்கம், இவ்வாறு அவர் கூறினார்.
***
ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் சிருங்கேரி சங்கராச்சாரியார்
டெல்லி ஜவகர்லால் நேரு யுனிவர்சிட்டி அதிக அளவில் இடதுசாரி மாணவர்கள் உள்ள யுனிவர்சிடி. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பிரதமர் மன்மோகன் சிங் J N U ஜேஎன்யூ யுனிவர்சிட்டிக்கு சென்ற பொழுது ஜேஎன்யூ மாணவர்கள் கருப்புக்கொடியை தூக்கிக்கொண்டு மன்மோகன் சிங்கே இங்கு நுழையாதே என்று பிரதமரையே மிரட்டியது
இப்போது நிலைமை அடியோடு மாறிவிட்டது
இந்து மத துறவி ஜேஎன்யூ யுனிவர்சிட்டியில் ஆன்மீக நிகழ்ச்சிகளை நடத்தி இருக்கிறார்.
சிருங்கேரி சாரதா பீடத்தின் மடாதிபதி ஜகத்குரு விதுசேகர பாரதி மகாஸ்வாமி ஜேஎன்யூ யுனிவர்சிட்டியில் சென்ற வாரம்,
12 ம் நூற்றாண்டில் அத்வைதம் தழைக்க அவதரித்து இந்துக்களின் முதல் அரசான விஜய நகர பேரரசு உருவாக காரணமாக இருந்த சாரதா பீடத்தின் ஜகத்குரு வித்யாரண்ய மகா ஸ்வாமிகளின் சிலையை நிறுவினார்; மேலும் ஜேஎன்யூ யுனிவர்சிட்டியில் விகாஸ் என்கிற பாடத்திட்டத்தையும் சிருங்கேரி சாரதா பீடத்தின் மடாதிபதி விது சேகர பாரதி ஸ்வாமிகள் அறிமுகப்படுத்தி இருக்கிறார்.
****
இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.
உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;
லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்தும் லதா யோகேஷும் வாசித்த செய்தி மடல் இது.
அடுத்த ஒளிபரப்பு தேதியில் ஒரு மாற்றம் .
அடுத்த வாரம் நமது ஒளிபரப்பு கிடையாது ; ஆகையால் டிசம்பர் ஏழாம் தேதி ஞாயிற்றுக்கிழமை சந்திப்போம்;
அதற்கு முன்னதாக டிசம்பர் மூன்றாம் தேதி நடைபெறும் கார்த்திகை விழாவுக்கு முன் கூ ட்டி வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.
எங்கும் தீப ஒளி பிரகாசிக்க ஞானமயம் குழு பிரார்த்திக்கிறது . வணக்கம்
—SUBHAM—-
Tags – World Hindu News, 23-1I-2025, ஞானமயம் ஒளிபரப்பு, வைஷ்ணவி,
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
22-11-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை!
பக்தியினால் திருப்பிக் கிடைத்த மோதிரம்: ஷீர்டி சாயியாக இருந்த போது நடந்த சம்பவத்தை ஶ்ரீ சத்ய சாயிபாபா விவரித்த ரகசியம்!
ச. நாகராஜன
ஶ்ரீ சத்யசாயிபாப பிறந்த நாள் விழாவில் 23-11-1962 அன்று பிரசாந்தி நிலையத்தில் ஆற்றிய உரை!
வேத பண்டிதர்கள் வேதத்தின் மீது முழு நம்பிக்கையோடு இருத்தல் வேண்டும். அப்படி இருந்தால் அவர்கள் மிகவும் சந்தோஷத்துடன் இருப்பார்கள். வேதங்கள் ஒரு மனிதனை சந்தோஷமாக இருக்க வைக்க முடியாவிடில் வேறு எது தான் சந்தோஷத்தைத் தரும்?
ஹோட்டல் வைத்து நடத்தும் ஒருவர் தனக்கு தலை வலிக்கும் போது மருந்துக் கடைக்குச் சென்று தலைவலி மாத்திரையை வாங்கிச் சாப்பிடுகிறார். மருந்துக் கடை வைத்து நடத்துபவரோ தனக்கு காப்பி வேண்டும் என்கின்ற போது அதே ஹோட்டலுக்குச் சென்று காப்பி அருந்துகிறார். மேலைநாடுகள் கீழை நாடுகளை நோக்கி மன அமைதிக்காக வருகின்றன; கிழக்கோ மன அமைதி என்று தாங்கள் நினைத்துக் கொள்வதை அடைய மேலை நாடுகளை நோக்கிச் செல்கின்றன.
உங்களுக்கு எனது முந்தைய பிறவியில் ஷீர்டி சாயியாக நான் இருந்த போது நடந்த ஒரு சம்பவத்தைச் சொல்கிறேன்.
எனது பக்தையான ஒரு எழுத்தறிவற்ற பெண்மணி பகல்ஹானில் வாழ்ந்து வந்தாள். அவள் தனது சமையலறையில் மூன்று பளபளக்கும் பித்தளைக் குடங்களில் நீரை நிரப்பி வைத்துக் கொள்வாள். அந்த மூன்று குடங்களுக்கும் அவள் கங்கை, யமுனை, சரஸ்வதி என்று பெயர் சூட்டியிருந்தாள். அவள் அந்தப் பெயரால் தான் அந்தக் குடங்களைக் குறிப்பிடுவது வழக்கம்.
யாரேனும் வழிப்போக்கர் ஒருவர் தாகமாக இருக்கிறது என்று அந்தப் பெண்மணியிடம் சொன்னால், அவள் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நீரையும் கலந்து திரிவேணி சங்கமமாக வந்த வழிப்போக்கருக்குத் தருவாள்.
அவளது இந்தச் செய்கையைக் கண்டு அண்டை அயலார் எள்ளி நகையாடுவது வழக்கம். ஆனால் அவளோ அந்த மூன்று குடங்களில் உள்ள தண்ணீர் நிலத்தடி வழியே கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய புனித நதிகளுடன் இணைந்திருப்பதாக நம்பினாள்.அவளது இந்த நம்பிக்கை அசைக்க முடியாததாக இருந்தது.
அவளது கணவன் ஒரு முறை காசி யாத்திரைக்குக் கிளம்பினான். அவனது தாயார் அவனிடம் தான் அணிந்திருந்த தங்க மோதிரத்தைத் தந்து அவனை அணிவிக்கச் சொன்னாள். அது அவனை நன்கு காக்கும் தாயத்தாக இருக்கும் என்று அவள் கூறினாள். அவனும் அதை அணிந்து கொண்டு காசிக்குக் கிளம்பினான். கங்கையில் மணிகர்ணிகா துறையில் அவன் நீராடும் போது அந்த மோதிரம் நழுவி நீரினில் விழுந்து விட்டது. தேடிப் பார்த்தும் அது கிடைக்கவில்லை.
அவன் திரும்பி வந்து நடந்ததைச் சொல்லி தாயாரிடம் ஆறுதலுக்காக, “கங்கை அது வேண்டுமென்று விரும்பினாள் போலும், எடுத்துக் கொண்டாள்” என்றான்.
ஆனால் அவனது மனைவி இதைக் கேட்ட போது, “கங்கை ஒரு நாளும் ஒரு எளிய வயதான பெண்மணியின் மோதிரத்தை வலிய எடுத்துக் கொள்ள மாட்டாள். அன்புடன் எதைத் தருகிறோமோ அதை மட்டுமே அவள் பெற்றுக் கொள்வாள். அதை அவள் நமக்குத் திருப்பித் தருவாள். இது நிச்சயம். அவள் நமது சமையலறையிலேயே தான் இருக்கிறாளே!” என்றாள்.
இதைச் சொல்லி விட்டு நேராக சமையலறைக்குச் சென்ற அவள் கங்கை என்று பெயரிட்டிருந்த குடத்தின் முன்னர் கூப்பிய கையுடன் மனதார பிரார்த்தனை செய்தாள். பின்னர் குடத்தில் தன் கையை விட்டுத் துழாவினாள்.
என்ன ஆச்சரியம்! கங்கையில் தொலைந்து போன அந்த மோதிரம் அவள் கையில் கிடைத்தது.
அவள் த்வாரகாமாயிக்கு தன் கணவனுடனும் மாமியாருடனும் வந்தாள்.
நம்பிக்கையே முக்கியம். பெயரும் வடிவமும் முக்கியம் அல்ல! ஏனெனில் எல்லா பெயர்களும் அவனுடையவையே! எல்லா வடிவங்களும் அவனுடையவையே!
நம்பிக்கை என்பது தர்ம பூமியிலே வேதம் என்ற செழிப்பான மணல் உள்ள பூமியிலேயே வளரும். ஆகவே தான் இங்கு பாடசாலை இன்று ஆரம்பிக்கப்பட்டது!
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
23-11-25 அன்று நடந்த ஞானமயம் நிகழ்ச்சி ஒளிபரப்பில் ஒளி பரப்பப்பட்ட உரை
ஆலயம் அறிவோம்
வழங்குவது ப்ரஹன்நாயகி சத்யநாராயணன்
ஞானமயம் நேயர்கள் அனைவருக்கும் நமஸ்காரம். வணக்கம்.
ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது பகவான் ஶ்ரீ சத்யசாயிபாபா அவதரித்த புட்டபர்த்தி திருத்தலமாகும். இது பிரசாந்தி நிலையம் என்ற பெயரில் பிரசித்தமாகியுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் அனந்தப்பூர் மாவட்டத்தில் தர்மாவரம் அருகே உள்ளது புட்டபர்த்தி என்னும் கிராமம்.
இந்த கிராமத்தில் 1926ம் ஆண்டு நவம்பர் மாதம் 23ம் தேதி காலை
மணி 5-06க்கு திருவாதிரை நட்சத்திரத்தில் ஶ்ரீ சாயிபாபா அவதரித்தார்.
அங்கு பெத்தவெங்கமராஜு என்பவருக்கும்
ஈஸ்வரம்மா என்ற புனிதவதிக்கும் மகனாகப் பிறந்தார் பாபா. குழந்தையைத் துணியிலே வைத்த போது அது அசைந்து ஆடியது. வியந்த அனைவரும் துணியை எடுக்கவே அதன் கீழிருந்த பாம்பு ஒன்று நெளிந்து ஓடியது.
பாம்புகள் நிறைந்த ஊர் புட்டபர்த்தி. ஆகவே ஆங்காங்கே பாம்புப் புற்றுகள் நிறைந்திருக்கும். புட்ட என்றால் புற்று என்று அர்த்தம். பர்த்தி என்றால் ஊர் என்று பொருள். ஆகவே புற்றுகள் நிறைந்த ஊரே புட்டபர்த்தி ஆயிற்று.இந்த ஊரின் அருகே ஊரை அரவணைத்து அழகிய சித்ராவதி என்னும் ஆறு ஒடுகிறது.
சத்யநாராயணன் என்று பெயரிடப்பட்ட குழந்தை இளம் வயதிலேயே பல அபூர்வ லீலைகளைக் காண்பிக்க ஆரம்பித்தது.
நாளுக்கு நாள் அவரை தரிசிக்க வரும் கூட்டம் அதிகமானது. ஆகவே அவர் பக்தர்களை சித்ராவதி நதிக் கரைக்கு அழைத்துச் செல்வார். மணலிலே கையை விட்டு அற்புதமான விக்ரங்களையும் பழங்களையும் இதர பொருள்களையும் எடுத்துத் தருவார்.
அங்கு அற்புதமான பஜனைப் பாடல்களை அனைவரையும் பாட வைத்தார்.
இடம் போதாத காரணத்தால் ஒரு கொட்டகை போட தீர்மானித்தது. அதுவும் போதவில்லை
பின்னர் பாதமந்திரம் என்ற இடத்தில் பக்தர்கள் கூட்டம் திரண்டது. ஶ்ரீ வேணு கோபால ஸ்வாமி கோவிலுக்கு அருகில் இது உருவானது. ஆனால் இதுவும் போதாது என்ற நிலையில் ஊருக்கு வெளியில் பிரசாந்தி நிலையம் என்ற ஒரு பெரும் கட்டிடம் அமைக்கப்பட்டது.
லட்சக்கணக்கானோர் இங்கு திரள்வது வழக்கமானது.
பகவானின் 25வது பிறந்த நாளான 23-11-1950 அன்று பாபா இங்கு குடியேறி அதைத் தன் தலைமை இடமாகக் கொண்டார்.
பிரதமர் அடல்பிஹாரி வாஜ்பாயி, பிரதமர் நரசிம்ம ராவ் உள்ளிட்ட, ஏராளமான அரசியல் தலைவர்களும் ஆகப் பெரும் விஞ்ஞானிகளும், இசை மேதைகளும், அறிஞர்களும், பல்துறை நிபுணர்களும், சாமானியர்களும் இங்கே குழுமலாயினர்; பாபாவின் ஆசிர்வாதத்தைப் பெறலாயினர்.
ஏராளமான அற்புத சம்பவங்களை நாள்தோறும் அவர் நிகழ்த்துவது வழக்கமானது.
சில சம்பவங்களை இங்கு பார்ப்போம்.
வால்டர் கோவான் என்பவர் அமெரிக்கவின் ஒரு பெரிய நிறுவனத்தின் நிர்வாகி. அவர் மனைவி பெயர் எல்ஸீ 1971ம் ஆண்டு டிசம்பர் மாதம் கடைசி வாரத்தில் அகில இந்திய ஶ்ரீ சத்ய சாயி சேவா நிறுவனங்களின் மாநாடு சென்னையில் நடைபெற ஏற்பாடானது
அப்போது இந்தியா, பாகிஸ்தான் இடையே யுத்தம் நடந்து கொண்டிருந்தது. பாபாவோ திட்டவட்டமாக நிகழ்ச்சிகள் நடைபெறும் என்றார். அதற்காக வால்டர் கோவானும் எல்ஸீயும் டிசம்பர் 23ம் தேதி சென்னைக்கு வந்தனர். கன்னிமாரா ஹோட்டலில் தங்கியிருந்த வால்டர் டிசம்பர் 25ம் தேதி காலையில் திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பால் காலமானார்.
ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்லப்பட்ட வால்டரைச் சோதித்த டாக்டர் அவர் இறந்து விட்டார் என்று அறிவித்தார். சவங்களை வைக்கும் சவ அறைக்கு அவர் உடல் அப்புறப்படுத்தப்பட்டது.
அலுவல் நிமித்தமாக வெளியே சென்றிருந்த டாக்டர் மீண்டும் திரும்பி வந்த போது வால்டர் உயிரோடு இருந்ததைக் கண்டார். அவர் காதுகளிலும் நாசித் துவாரங்களிலும் வைக்கப்பட்டிருந்த பஞ்சு அகற்றப்பட்டது. டாக்டர் அதிசயப்பட்டார். சிவப்பு உடை அணிந்திருந்த ஒருவர் நோயாளியைப் பார்க்க வந்தார் என்றும் அதன் பின்னர் அவர் உயிர் பிழைத்தார் என்றும் ஆஸ்பத்திரி பணியாளர்கள் கூறினர்.
வால்டர் பாபாவுடன் தான் உயரமான ஒரு இடத்திற்குச் சென்றதாகவும் அங்கிருந்த ஒரு தலைவரிடம் பாபா வால்டரைத் தன்னுடன் அனுப்ப வேண்டுமென்றும் அவருக்குச் சில வேலைகளை அளிக்க இருப்பதாகவும் கூற, அவர் சம்மதிக்க, இருவரும் கீழே வந்ததாக வால்டர் கூறினார்.
அமெரிக்காவில் சாண்டியாகோவில் பிரபல சைக்கியாட்ரிஸ்டாகத் திகழ்ந்த டாக்டர் சாமுவேல் சாண்ட்விஸ் 1972 மே மாதம் பங்களூர் வந்து பாபாவை தரிசித்தார். பல அனுபவங்களைப் பெற்றார்.
“ஆச்சரியம்! நம்பமுடியாதது! நினைத்துப் பார்க்கவே முடியாதது” என்றெல்லாம் கூறிய சாண்ட்விஸ் ,’இனி சைக்கியாட்ரியே இல்லை. இனி உலகை சாயி-கியாட்ரியே ஆளும்” என்று வியந்து கூறினார்.
CANCER IS CANCELLED என்று பலரின் கேன்ஸர் வியாதியை பாபா நீக்கி அருளியுள்ளார்.
ஒளிவட்டம் என்னும் அவ்ரா பற்றிய தலை சிறந்த நிபுணராகத் திகழ்ந்தார் அரிஜோனா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஃப்ராங்க் பாரனோஸ்கி. அவருக்கு ஒருவரின் ஒளிவட்டத்தை எந்த வித சாதனமும் இன்றி வெறும் கண்களாலேயே பார்க்கும் சக்தி உண்டு.
1978ம் ஆண்டு மே மாதம் பிருந்தாவன் அருகே கோடைகால பத்து நாள் வகுப்பு ஒன்று நடந்தது இதில் எட்டாம் நாளன்று பேசிய பாரனோஸ்கி தான் பாபாவிடம் கண்ட அதிசயம் ஒன்றை வெளியிட்டார். “நான் ஒரு விஞ்ஞானி. நான் ஆயிரத்திற்கும் மேற்பட்ட உரையாடல்களை இவ்வுலகத்தில் பல இடங்களில் நிகழ்த்தியுள்ளேன்” என்று தன்னைப் பற்றி அறிமுகம் செய்து கொண்ட அவர், “சுவாமியிடமிருந்து வெளி வரும் ஒளி வட்டம் வரம்பை மீறி எல்லையற்றதாக இருக்கிறது. அவரது இளஞ்சிவப்பு வண்ணம் எங்கும் ஊடுருவிச் செல்கிறது. அவர் நடந்து வரும் போது அது அனைவரின் மீதும் பாய்கிகிறது. அவரை “LOVE WALKING ON TWO FEET “என்றே கூறலாம் என்றார்.
பாபா தனது 65ம் நாள் பிறந்த நாளன்று உலகிலேயே மிகச் சிறந்த அறுவை சிகிச்சை வசதிகளுடன் கூடிய சூப்பர் – ஸ்பெஷாலிடி ஹாஸ்பிடலை நிறுவி தேவையானோருக்கு இலவச சிகிச்சை அளிக்க தீர்மானித்தார். 1991ம் ஆண்டு நவம்பர் 2ம் தேதி இது திறந்து வைக்கப்பட்டது. மூன்று லட்சம் சதுர அடியில் இது அமைந்துள்ளது.
லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டிருக்கும் கூட்டத்தில் பாபா தெலுங்கில் உரை ஆற்றுவது வழக்கம். அப்போது பஜனைப் பாடல்களை இசைக்க அனைவரும் சாயி பஜனில் கலந்து ஐக்கியமாவர்.
உலகிலுள்ள பல நாடுகளிலும் சாயி இயக்கம் பரவ ஆரம்பித்தது.
சேவா தள் என்னும் அமைப்பின் வழியாக சேவை ஆற்றும் தொண்டர்கள் ஆயிரக்கணக்கில் ஆங்காங்கே தொண்டு புரிய ஆரம்பித்தனர்.
தனது அவதார நோக்கத்தை நிறைவேற்றிய பாபா 2011ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24ம் தேதி மகா சமாதி அடைந்தார். ஐந்து லட்சம் மக்கள் அவரது இறுதி யாத்திரையில் கலந்து கொண்டனர். அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி, குஜராத் முதல் அமைச்சராக இருந்த நரேந்திர மோடி, கிரிக்கட் வீரர் சச்சின் தெண்டுல்கர் உள்ளிட்ட ஏராளமானோர் அங்கு திரண்டு தங்கள் இறுதி அஞ்சலியைச் செலுத்தினர். ஏப்ரல் 27ம் தேதி அவர் சமாதி புட்டபர்த்தியில் நிறுவப்பட்டது.ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு திரண்டு அவள் அருளை இன்றும் பெற்று வருகின்றனர்.
அவரது நூற்றாண்டு விழா கொண்டாடப்பட இருக்கும் இன்று நாம் மனப்பூர்வமாக அவரை வணங்கித் துதிப்போமாக!லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் ஶ்ரீ சத்யசாயிபாபா அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம். நன்றி! வணக்கம்!!